Friday 19 July 2019

அகத்தியர் வாக்கு . முக்திக்கு எளிய மார்க்கம்

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு"*

*நாள் : 128*

*தேதி: 20-07-2019 (சனி - மந்தன், கரி, காரி, கரியன் )*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*சிவசாலம் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : பரமாத்மாவுடன் ஜீவாத்மா இரண்டற கலக்க எந்தெந்த நிலைகளைக் கடக்க வேண்டும்? ஒவ்வாெரு நிலையிலும் எத்தகைய அபாயங்கள் காத்திருக்கின்றன?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இறைவனின் அருளால் யாம் கூறுவது என்னவென்றால் ஒரு மிகப்பெரிய மலை இருக்கிறது. சஹஸ்ரம், சஸஸ்ரம்(ஆயிரம், ஆயிரம்) படிகள் இருக்கிறது. உச்சியிலே இறைவன் அருள் புரியும் ஆலயம் இருக்கிறது. கதிர்மதி எனப்படும் அமாவாசை தினம். எங்கும் இருள் சூழ்ந்து இருக்கிறது. சிறிய ஔி கூட இல்லை. அடிவாரத்தில் ஒரு பக்தன் வந்து நிற்கிறான். உதவி செய்வார் யாரும் இல்லை. இப்பாெழுது அவன் அத்தனை படிகளையும் ஏற சித்தமாக இருக்கிறான். அவன் என்ன வேண்டுவான்? ஔி இருந்தால், அந்த வெளிச்சத்திலே மெல்ல, மெல்ல மேலேறி செல்லலாம் என்று எண்ணுவான். அப்படி ஏற எண்ணுபவனுக்கு மலை முழுவதும் தீப ஔிகள் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்றாலும்கூட, அதை அப்படி அவன் பார்ப்பதைவிட, ஒரு சிறிய கை ஔி இருந்தால் ஏற நினைக்கும் முதல் படியில் அந்த வெளிச்சம் விழும். அதில் அவன் தன் பாதத்தை வைத்தபிறகு அந்த வெளிச்சம் அடுத்த படியை நாேக்கி செல்லும். இப்படியாக படிப்படியாக அவன் சென்றுவிடலாம்.*

எனவே *ஒட்டுமாெத்தமாக பிரபஞ்சம், கர்மா, பிறவி, இறைவன், பாவம், புண்ணியம் என்று பார்த்தால் மனிதனுக்கு மலைப்பாக இருக்கும். அதைவிட கிடைத்த இந்த வாய்ப்பை ஒரு மனிதன் பயன்படுத்திக் காெண்டு நேர்மையான முறையிலே கடமையை ஆற்றுதல், வாழ்வை நடத்துதல், அன்றாடம் இறை நாமத்தை ஜபித்தல், முடிந்த உதவிகளை பிறருக்கு செய்தல், அன்றாடம் ஒரு ஆலயமாவது சென்று வழிபாடு செய்தல் என்று இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே பாேதும், நீ எண்ணுகிற அந்த ஜீவாத்மா, பரமாத்வை அடைவதற்கு, மிக எளிய வழிகளை பரமாத்மாவே அந்த ஜீவாத்மாவிற்கு காட்டி அருள்வார்.*

                  🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************