Friday 26 April 2024

மாலயவந்த ரகுநாதர் கோவில்

 

To English
தமிழில் தேடுங்கள்

Search Results

Translation result

English
Tamil
மால்யவத ரகுநாதர் கோவில் 🌺

ஹம்பியின் குறைவாகப் பார்க்கப்பட்ட பக்கத்தைத் தொடர்ந்து, நாங்கள் மால்யவந்த மலைக்குச் சென்றோம். ராமாயணக் கதைகளையும், குறிப்பாக பாலி - சுக்ரீவ சண்டையையும் படித்தவர்கள் இங்கே உயிர் பெறுவதைக் காணலாம்.
உயரமான கற்பாறைகள், ராமர் தியானம் செய்ததாகக் கூறப்படும் ஒரு இருண்ட குகை மற்றும் 24x7 இராமாயணத்தை ஒரு குருமார்கள் பாராயணம் செய்வது நீங்கள் கிஷ்கிந்தா சாம்ராஜ்யத்தில் இருக்கிறீர்கள் என்று நம்ப வைக்கிறது.
பூசாரிகளின் சத்தம் குறையும் வரை சிறிது தூரம் நடந்து, பாறைகளின் சரிவுகளில் மேலும் நடந்து ஹம்பி நகரம் முழுவதையும் பார்க்கவும்.
பிரமிக்க வைக்கும் காட்சிகளைக் கொண்ட மற்றொரு பார்வை இது. ஆனால் அதைவிட சுவாரசியமான ஒன்றை இங்கே பார்க்கிறீர்கள். வரலாறு தெரியாத டஜன் கணக்கான சிவலிங்கங்கள் மற்றும் நந்தி காளைகள் செதுக்கப்பட்டுள்ளன. இது விஜயநகரப் பேரரசுக்கு முன் இருந்ததாகச் சிலரும், விஜயநகர அரசர்களால் கட்டப்பட்டது என்றும் சிலர் கூறுகின்றனர்.

என்னைப் பொறுத்தவரை, இது மர்மங்கள் மற்றும் உங்களை பின்னோக்கிச் சென்று சகாப்தங்களை மீட்டெடுக்கும் ஆற்றலுடன் கூடிய ஒரு அற்புதமான இடம்.
https://maps.app.goo.gl/1ziuX952bhy9A4SH9

மழை வருவதை முன்கூட்டியே சொல்லும் அதிசய கோவில்

 *மழை வருவதை முன்கூட்டியே சொல்லும் அதிசய கோவில்🔥*

விஞ்ஞானத்திற்கே சவால் விடும் வகையில் பல அதிசய ஆச்சரிய நிகழ்வுகள் கும் கோவில் இது.

https://maps.app.goo.gl/gFYYHNKTJxeU4UcJ6







உத்திர பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் பென்தா என்ற கிராமத்திலருந்து 3 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது ஜெகந்நாதர் ஆலயம். இப்பகுதியில் மக்கள் மழை எப்போது வரும் என்பதை இந்த கோவிலை பார்த்தே சொல்லி விடுகிறார்கள். சுமார் 1000 வருடங்கள் பழமையான இக்கோவிலின் மேற்கூரையில் இருந்து திடீரென தண்ணீர் சொட்ட துவங்கும். சொட்டும் நீரின் அளவை பொருத்து அந்த ஆண்டு எவ்வளவு மழை பெய்யும் என அப்பகுதி மக்கள் கணக்கிட்டு விடுகிறார்கள்.


இந்த கோவிலில் நீர் சொட்ட துவங்கிய 7 நாட்களில் பருவமழை பெய்ய துவங்கி விடும். வெளியில் பருவமழை துவங்கியதும், கோவிலுக்குள் சொட்டிக் கொண்டிருந்த நீர் நின்று விடுகிறது. கோவிலை சுற்றிலும், மரங்களோ, மலையோ ஏதும் இல்லாத நிலையில் எங்கிருந்து நீர் சொட்டுகிறது, இதற்கு என்ன காரணம் என இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. 


பல விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் இங்கு வந்து ஆய்வு செய்து பார்த்தும் இதை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த அற்புதமான நிகழ்வினை ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கண்டு செல்கிறார்கள்.


அது மட்டுமல்ல, கோவிலின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள வட்ட வடிவ அமைப்பு எந்த உலோக கலவையால் உருவாக்கப்பட்டது என்பது இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

பகிர்வு



Wednesday 24 April 2024

ஸ்ரீ ஜோதி மவுன நிர்வாண சுவாமிகள்

 நம் விதியை மாற்றக்கூடிய சித்தர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚


26. ஸ்ரீ ஜோதி மவுன நிர்வாண சுவாமிகள்



[கசவனம்பட்டி, திண்டுக்கல்.]


நீங்களும், நானும் சிகரெட் புகைத்தால்தான் துன்பம் வரும். அதே சிகரெட்டை ஒரு மிகப்பெரிய மகான் புகைத்தால் அவர் விடும் சிகரெட் புகையானது துன்பங்களை கரைப்பதாக இருந்தது.


ஆம்.... அவர் சிகரெட்டை பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்து புகையை வெளியே விட்டார் என்றால், அந்த புகை எப்படி காற்றில் மிதந்து, பரவி, கலைந்து மாயமாகி விடுகிறதோ, அதுபோல சிகரெட் வாங்கிக் கொடுத்தவரின் தோஷங்கள், துன்பங்கள், பிரச்சினைகள், தொல்லைகள், துயரங்கள் எல்லாம் காற்றோடு, காற்றாக கரைந்து மறைந்தன.


ஸ்ரீ ஜோதி மவுன நிர்வாண சுவாமிகள் நம்புவதற்கும், ஜீரணித்துக் கொள்வதற்கும் இது கொஞ்சம் கஷ்டமாகத்தான் தெரியும். ஆனால் மகிமை கலந்த அந்த அதிசயம் தமிழ்நாட்டில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.


ஒருநாள், இருநாள் அல்ல தினந்தோறும் நடந்தது. இப்போதும் கூட அந்த அதிசயம் நடந்து வருகிறது.


அந்த அதிசயத்தை அனுபவப் பூர்வமாக உணர வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் கசவனம்பட்டி எனும் கிராமத்துக்குச் செல்ல வேண்டும். இந்த கிராமம் திண்டுக்கல் நகரில் இருந்து மேற்கு திசையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.


இந்த ஊரில்தான் சித்தர்களுக்கு எல்லாம் சித்தராக, மகான்களுக்கு எல்லாம் மகானாகத் திகழ்ந்த ஸ்ரீஜோதி மவுன நிர்வாண சுவாமிகள் வசித்து வந்தார். இவர்தான் சிகரெட் புகையால் பல்லாயிரக்கணக்கானவர்களின் துன்பங்களை. துயரங்களைத் துடைத்தெறிந்தார்.


இவர் பார்வைப்பட்டாலே போதும், தோஷங்கள் விலகி புத்துணர்ச்சி பெற்றதை பக்தர்கள் தம் வாழ்வில் கண்கூடாகக் கண்டனர். இந்த சித்தப்புருஷர் நிறைய பல்வேறு தனித்துவங்களுடன் காணப்பட்டார்.


இந்த புனித மகான், தனது துறவு வாழ்க்கைக்கு கசவனம் பட்டியை தேர்ந்து எடுத்துக் கொண்டார். அந்த ஊருக்கு அவர் வந்தபோது அவருக்கு 10 அல்லது 12 வயதுதான் இருக்கும்.


அவர் எங்கு பிறந்தார்? பெற்றோர் யார்? பள்ளி சென்றாரா? எப்படி

கசவனம்பட்டிக்கு வந்தார்?

இவை போன்ற எந்த கேள்விகளுக்கும் இதுவரை யாருக்கும் விடை தெரியாது.


கசவனம்பட்டிக்கு கிழக்கே குட்டத்து ஆவரம்பட்டி எனும் ஊர் உள்ளது. அந்த ஊர் பகுதியில் ஆடு, மாடுகளை மேய்க்க கசவனம்பட்டிக்காரர்கள் செல்வதுண்டு. அப்படி ஒரு நாள் அங்கு விவசாயம் செய்யவும், ஆடு மேய்க்கவும் சென்றவர்களின் கண்களில் மவுன நிர்வாண சுவாமிகள் தென்பட்டார்கள்.


அப்போதே சுவாமிகள் அவதூதராகத்தான் (நிர்வாண நிலை) இருந்தார். சில செடி, கொடிகளில் உள்ள இலைகளைப் பறித்து அவர் தின்று கொண்டிருந்தார்.


கசவனம்பட்டிக்காரர்கள் தினமும் அந்த சிறுவனைப் பார்த்தனர். செடி இலைகளைத் தின்ற சிறுவனைப் பார்த்ததும் அவர்களுக்கு இரக்கம் வந்து

விட்டது. தாங்கள் கொண்டு சென்ற உணவை எடுத்து சாப்பிடக் கொடுத்தனர். இப்படித்தான் கசவனம்பட்டிக் காரர்களுக்கும் சுவாமிகளுக்கும் தொடர்பு ஏற்பட்டது.


உணவு கொடுத்தவர்கள், உடையையும் கொடுத்தனர். ஆனால் சுவாமிகள் உடையை ஏற்றுக் கொள்ளவில்லை. உதறித்தள்ளினார். பல தடவை இது நடந்தது. அதன்பிறகே இந்த இளைஞன் சாதாரணமானவன் அல்ல, உயர்ந்த, தெய்வாம்சம் பொருந்திய சித்தர் புருஷர் என்றும் மும்மூர்த்திகளின் பிரதிபிம்பமான மகான் என்பதையும் புரிந்து கொண்டனர்.


சக்தி வாய்ந்த மகான் என்று தெரிந்த பிறகு அவரை காட்டுக்குள் விட்டு வைப்பார்களா? அவரை தங்கள் ஊருக்குள் வந்து த ங்கி இருக்கும்படி கசவனம்பட்டிக்காரர்கள் அழைத்துச் சென்றனர்.


முதலில் ஒரு இளைஞனை முழு நிர்வாணக் கோலத்தில் பார்த்ததும், கசவனம்பட்டிக்காரர்கள் முகம் சுளித்தனர். அதிருப்தி அடைந்தனர். அருவருப்புடன் பார்த்தனர். ஆனால் மிகக்குறுகிய காலத்துக்குள் கசவனம்பட்டி மக்கள் அந்த இளைஞனை அருவருப்பாகப் பார்க்கும் மனநிலையில் இருந்து மாறினார்கள். ஆண்டவனாகப் பார்க்கும் பக்குவத்தைப் பெற்றனர். கசவனம்பட்டி ஊருக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக இதைச் சொல்லலாம்.


என்றாலும் மவுன நிர்வாண சுவாமிகள் கசவனம்பட்டியில் தங்காமல் வேறு ஊர்களுக்கு சென்று விடுவதுண்டு. கசவனம்பட்டிக்காரர்கள் ஒவ்வொரு தடவையும் விடுவது இல்லை. தேடிக் கண்டுபிடித்து சுவாமிகளைத் தோளில் தூக்கி வைத்து தங்கள் ஊருக்கே கொண்டு வந்து விடுவார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு நிர்வாண சுவாமிகள் வேறு எங்கும் செல்லவில்லை. கசவனம்பட்டியே கதி என்று தங்கி விட்டார்.


யாரிடமும், எதுவும் பேசாமல் ஊரையே அவர் சுற்றி, சுற்றி வந்தார். பெயர் தெரியாததால் சுவாமிகளை அந்த ஊர்க்காரர்கள் முதலில் “பெருமாள் சாமி” என்று பெயர் சூட்டி அழைத்தனர். பிறகு நிர்வாண சாமி, மவுன சாமி என்றெல்லாம் அழைத்தனர்.


சிறுவன், இளைஞனாக மாறி நடுத்தர வயதைக் கடந்தார். ஆனாலும் அவதூதர் (நிர்வாணம்) நிலை மாறவில்லை. கசவனம்பட்டி தெருக்களில் இரவு-பகலாக அவர் நிர்வாணமாக சுற்றித்திரிந்தார்.


அந்த ஊர் மக்கள் அவரை பார்க்கும் பார்வையே நாளடைவில் மாறியது. அவரது நிர்வாணக் கோலத்தை கண்டு யாரும் கேலி-கிண்டல்

செய்யவில்லை. தங்கள் வீட்டு பாலகனாக நினைத்து உபசரித்தனர்.


சுவாமிகளும் ஏழை-பணக்காரர், சாதி, சமயம் வித்தியாசம் எதையும் பார்க்கவில்லை. அவர் விரும்பும் வீட்டுக்குள் சென்று கூழோ, கஞ்சியோ கொடுத்ததை வாங்கிச் சாப்பிட்டார். நீண்ட நாட்களுக்குப்பிறகுதான் அவர் வினை அறுக்க வந்த கண்கண்ட தெய்வம் என்பதை அந்த ஊர் மக்கள் முழுமையாக புரிந்து கொண்டனர். அதன்பிறகு அவர்கள் மவுன நிர்வாண சுவாமிகளின் பக்தர்களாக மாறினார்கள்.


மவுன சுவாமிகள் தவம் இருந்ததில்லை. மந்திரங்கள் முழங்கியது இல்லை.


புராணங்கள் படித்ததில்லை. ஆனால் உலகின் அத்தனை விஷயங்களும் அவருக்குத் தெரிந்திருந்தது. தமிழ் தவிர தெலுங்கு, கன்னட மொழிகளில் அவர் ஓரிரு வார்த்தைகள் பேசி ஆச்சரியப்படுத்தினார்.


ஒரு காலகட்டத்தில் மவுன நிர்வாண சுவாமிகள் தன்னிடம் வருபவர்களை அடித்தார். கல்லைத் தூக்கி எறிந்தார். தாம்பூலத்தில் பூ, பழம் வைத்துக் கொடுத்தால் எட்டி உதைத்தார்.


முதலில் பக்தர்கள் வருத்தப்பட்டனர். பிறகுதான் தெரிந்தது.... மவுன நிர்வாண

சுவாமிகள் கொடுக்கும் ஆசீர்வாதமே அதுதான் என்பது. எனவே தொடர்ந்து காபி, சிகரெட் கொடுத்து ஆசி பெற்றனர்.


ஒரு பக்தர் அவரிடம் சென்று விட்டால் உடனே சுவாமிகள் குச்சியை எடுத்து தரையில் ஏதேதோ கிறுக்கலாக எழுதுவார். என்ன எழுதுகிறார் என்பதே யாருக்கும் தெரியாது. நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் நிர்வாண சுவாமிகள் பக்தர்களின் தலையெழுத்தையே அதில் மாற்றி எழுதுகிறார் என்ற விஷயம் தெரியவந்தது.


அவ்வாறு எழுதும் குச்சிகளை சில சமயம் சுவாமிகள் பக்தர்க ளிடமே கொடுத்து விடுவதுண்டு. அந்த குச்சிகளை இப்போதும் சில பக்தர்கள் தங்கள் வீடுகளில் வைத்து பூஜித்து வருகிறார்கள். சுவாமிகள் புகை பிடிப்பதையும் முதலில் பக்தர்கள் சாதாரணமாகத் தான்

நினைத்தனர். ஆனால் சிகரெட் சாம்பலை எடுத்து விபூதியுடன் கலந்து பூசிக்கொள்ள, வெற்றி மீது வெற்றி வருவதை பக்தர்கள் உணர்ந்தனர். இதனால் நிர்வாண சுவாமிகளிடம் ஆசி பெற வரும் பக்தர்கள் சிகரெட்டுடன் வரத் தொடங்கினார்கள்.


மக்களின் பிரச்சினைகள், நோய்களை சுவாமிகள் மிக எளிதாக தீர்த்து வைக்கும் தகவல் மெல்ல மெல்ல மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் பரவியது. கசவனம்பட்டிக்கு சரியான வழித்தடம் இல்லாத நிலையிலும் மற்ற ஊர்களில் இருந்து மக்கள் வரத் தொடங்கினார்கள். பிரச்சினைகள் தீர்ந்து மனஅமைதி பெற்றுத் திரும்பிச் சென்றனர்.


சுவாமிகள் இரவில் தங்குவதற்கு முத்தாலம்மன் கோவிலில் படுக்கையுடன் வசதி செய்து கொடுத்தனர். முத்தாலம்மன் கருவறையில் அமரும் சுவாமிகள் சில சமயம் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். அது என்ன என்று யாருக்குமே தெரியவில்லை.


அவரது மவுனமும், நிர்வாணக் கோலமுமே உலக வாழ்வியலை மக்களுக்கு உணர்த்தியது. எல்லையற்ற பரம்பொருளின் வெளிப்பாடாக அவர் திகழ்ந்தார். கசவனம்பட்டியில் சாமியார் போல இருந்த ஒருவருக்கு நிர்வாண சுவாமிகள் மீது பொறாமை ஏற்பட்டது. "இவரைப் பேச வைத்து காட்டுகிறேன். பாருங்கள்" என்று கூறி வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று விநாயகர் கோவிலுக்குள் தள்ளி பூட்டி விட்டார். மறுநாள் விடிந்ததும் கோவிலைத் திறந்து பார்த்தால் உள்ளே சுவாமிகள் இல்லை.


வெளியில் தூரத்தில் நிர்வாண சுவாமிகள் சிகரெட் பிடித்தபடி சிரித்துக் கொண்டே வந்தார். ஊரே ஆச்சரியத்தில் மூழ்கியது. சுவாமிகளை கோவிலுக்குள் அடைத்த சாமியார் காணாமலே போய் விட்டார்.


இப்படி எத்தனையோ ஆச்சரியங்களை நிகழ்த்திய சுவாமிகள் பற்றி தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற மகான்கள் எல்லாம் தங்களைத் தரிசிக்க வரும் பக்தர்களிடம் கூறினார்கள். புரவிப்பாளையம் கோடி சுவாமிகள், "மகான்களுக்கு எல்லாம் மகான்" என்று நிர்வாண சுவாமிகளைப் புகழ்ந்தார். திருக்கோயிலூர் ஞானானந்தகிரி சுவாமிகள், ஜோதி என்றும், துருவ நட்சத்திரம் என்றும் சுவாமிகளை புகழ்ந்தார். திருவண்ணாமலை விசிறி சுவாமிகள் யோகிராம் சுரத்குமார் கூறுகையில், "நான் ஒரு அலை என்றால் கசவனம்பட்டி நிர்வாண சுவாமிகள் கடல்" என்றார்.


விசிறி சுவாமிகளை ஒரு தடவை சிவகாசியைச் சேர்ந்த ராஜதுரை நாடாரும், எஸ்எஸ்டி சண்முகமும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடம் விசிறி சுவாமிகள், "இன்றிரவு கசவனம்பட்டி சென்று நிர்வாண சுவாமிகளைப் பாருங்கள். உங்களுக்கு அங்கு ஒரு அற்புதம் காத்துக் கொண்டிருக்கிறது" என்றார். உடனே ராஜதுரை நாடாரும், சண்முகமும் கசவனம்பட்டிக்கு புறப்பட்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு நிர்வாண சுவாமிகள், பழனி பாலமுருகனாகக் காட்சி அளித்தார்.


வத்தலக்குண்டு அருகில் உள்ள கொண்டம நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராசாமணி அய்யர் தொழுநோயின் உச்சக்கட்ட கொடூர பிடியில் இருந்தார். அவரை நிர்வாண சுவாமிகள் ஒரே நாள் இரவில் குணமாக்கி எல்லாரையும் பிரமிக்க வைத்தார்.


நிறைய பக்தர்கள் கனவில் சென்று சுவாமிகள் அதிசயங்கள் நடத்தி உள்ளார். கன்னியாகுமரியில் ஆதிபராசக்தியின் அவதாரமாகத் திகழ்ந்த மாயம்மா ஒரு தடவை மவுன நிர்வாண சுவாமிகளைப் பார்த்து விட்டு, “இந்த மகான் சூரியன்" என்று புகழ்ந்தார்.


கசவனம்பட்டியைச் சேர்ந்த உடைச்சரத்தேவர் மனைவி பூங்கணியம்மாள் பிரசவ வலியில் துடித்தபோது குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது எங்கிருந்தோ வந்த நிர்வாண சுவாமிகள் பிரசவம் நடத்தப்பட்ட வீட்டுக்குள் சென்று கீழே தரையில் அமர்ந்தார்.


அடுத்த நிமிடம் சிக்கல்கள் விலகி அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மவுனகுரு என்று சுவாமி பெயரையே வைத்தனர்.


திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவராக இருந்த வரும், தற்போது பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குனராக உள்ள கா.பேச்சியம்மாள்

வாழ்வில், சுவாமிகள் நடத்திய அற்புதங்கள் ஏராளம். இந்த

அற்புதங்களையெல்லாம் மவுன நிர்வாண சுவாமிகள் டிரஸ்ட் செயலாளர் ஆனந்தன் தொகுத்து பெரிய புத்தகமாக வெளியிட்டுள்ளார். பழனி ஆண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து தற்போது கும்பகோணத்தில் வசித்து வரும் கண்ணன், பழனியில்

மளிகைக்கடை வைத்திருக்கும் ஜெயபால் இருவரும் தங்கள் நண்பர்களுடன் ஒரு தடவை காரில் சுவாமிகளை பார்க்க சென்றனர். வழியில் ஒரு சாக்கடைக்குள் சுவாமிகள் உட்கார்ந்து இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டு அங்கேயே ஓரமாக நின்றனர்.


அந்த சாக்கடை நாற்றம் தாங்க முடியாத அளவுக்கு இருந்ததாம். பேராசிரியர்

கண்ணனுக்கு வயிற்றை புரட்டுவது போல இருந்ததாம். ஆனால் சுவாமிகள்

சுமார் 1 மணி நேரம் மிகவும் சுகமாக சா க்கடைக்குள் மூழ்கி இருந்தாராம்.


பிறகு வெளியில் வந்த சுவாமிகள் ஒரு டம்ளரில் சாக்கடையை எடுத்து, வந்து முகர்ந்து பார்த்து விட்டு, ஜெயபாலிடம் கொடுத்து “ம்... குடிடா” என்றாராம். ஜெயபாலும் அதை வாங்கிக் குடிக்க அந்த சாக்கடை தண்ணீர் இளநீர் போல இனித்ததாம். நிர்வாண சுவாமிகளின் பாதத்தில் படிந்திருந்த விபூதியை பிரசாதமாக எடுத்துச்

சென்று பலர் பலன் அடைந்துள்ளனர். 1982-ம் ஆண்டு ஆண்டு அக்டோபர்

தொடக்கத்தில் சில பக்தர்களுக்கு சுவாமிகள் தமது ஒளிவடிவைக் காட்டி

அருள்பாலித்தார். அடுத்த சில தினங்களில் (22-10-1982) சுவாமிகள் மகாசமாதி அடைந்தார். அவர் உடல் மறுநாள் ஜீவசமாதி வைக்கப்படும் வரை ஆன்ம ஒளியாக மிளிர்ந்தது.


அவர் ஜீவசமாதி வைக்கப்பட்டபோது மேகக் கூட்டங்கள் திரண்டு வந்து குறிப்பிட்ட எல்லையில் மட்டும் முக்கோடி தேவர்கள் பூமாரி பொழிந்ததுபோல அடைமழை பெய்தது. 2 கருடன்கள் வட்டமிட்டுச் சென்றன.


கசவனம்பட்டியில் முத்தாலம்மன் கோவில் எதிரில் ஜீவசமாதி வைக்கப்பட்டுள்ள இடத்தில் காசியில் இருந்து லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து அங்கு ஜீவசமாதி ஆலயம் கட்டியுள்ளனர். அங்கு

சுவாமிகளின் பெரிய மூலவர் சிலை உள்ளது. ஐம்பொன்னால் செய்யப்பட்ட சிறு உற்சவர் சிலையும் உள்ளது.


பிரதோஷ நாட்களில் அந்த உற்சவர் சிலையை வெள்ளிப் பல்லக்கில் வைத்து பிரகார வீதியுலாவாக எடுத்து செல்கிறார்கள். பவுர்ணமி, அமாவாசை மற்றும் வியாழக்கிழமைகளிலும் சிறப்பு பூஜை செய்கிறார்கள். தினமும் 5 கால பூஜை நடக்கும் இந்த சமாதி ஆலயத்தில் ஐப்பசி மூல நட்சத்திர தினத்தன்று குரு பூஜை நடத்துகிறார்கள்.


ஜீவசமாதி கருவறை முகப்பில் சிவன், விஷ்ணு. பிரம்மா சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிர்வாண சுவாமிகள் மும்மூர்த்தியாக இருந்து அருள்வது போல அது உள்ளது. மூலவர் சிலையில் நிறைய பக்தர்கள் தங்கள் ஜாதக ஜெராக்சை வைத்து வேண்டுதல் செய்து செல்கிறார்கள். இந்த வழிபாடு ஜாதகத்தில் உள்ள குறைகளை, தோஷங்களை நீக்க உதவுகிறதாம். சுவாமிகளுக்கு தேங்காய் உடைத்தும் வழிபடுகிறார்கள்.


ஓம்! ஸ்ரீ ஜோதி மவுன நிர்வாண சுவாமியே போற்றி!


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


🕉️🙏ஓம் நமசிவாய🙏🕉️


🙏அற்புதன் காண்க

அநேகன் காண்க

சொற்பதம் கடந்த

தொல்லோன் காண்க

சித்தமும் செல்லாச்

சேட்சியன் காண்க

பக்தி வலையில்

படுவேன் காண்க

ஒருவன் என்னும்

ஒருவன் காண்க🙏


🕉️🙏திருச்சிற்றம்பலம்🙏🕉️


🦚நன்றி! நன்றி!! நன்றி!!!

நற்பவி! நற்பவி!! நற்பவி!!!


அவனருளால் வாழ்வோம் வளமுடன்!


அன்பே சிவம் மனமே குரு சிவாயநம நமசிவாய !🦚


https://www.facebook.com/share/QxmgCXSF39pJWxxR/?mibextid=oFDknk

Tuesday 23 April 2024

நாக சேஷன்

 உலகின் பிற பகுதிகள் காகிதத்தில் வரைய முயற்சித்தபோது, ​​​​நம் முன்னோர்கள் கடினமான பாறைகளில் ஒன்றில் அசாதாரணமான 3D வடிவமைப்புகளை செதுக்கினர், அதாவது கிரானைட்! 💓


1800+ ஆண்டுகள் பழமையான ஜம்புகேஸ்வரர் கோயிலில் 3D சிற்பம். 😍

தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளியில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோவில். 5 முக்கிய சிவன் கோவில்களில் ஒன்று அல்லது
பஞ்ச பூத ஸ்தலம் (5 இயற்கை கூறுகளை குறிக்கிறது- பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் விண்வெளி). இக்கோயில் நீரின் அங்கத்தை குறிக்கிறது.

மிகவும் கடினமான பாறையில் (கிரானைட்) ஷேஷா நாகத்தின் 3டி செதுக்கல் இது கிட்டத்தட்ட 1800 ஆண்டுகள் பழமையானது 🚩

தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி ஜம்புகேஸ்வரர் கோயிலில் இருந்து.

Sunday 21 April 2024

20 வகை பிரதோஷங்களும். அதன் வழிபாடு பலன்களும்

 20 வகை பிரதோஷங்களும். அதன் வழிபாடு பலன்களும்


மொத்தம் 20 வகை பிரதோஷங்கள்


1. தினசரி பிரதோஷம்

2. பட்சப் பிரதோஷம்

3. மாசப் பிரதோஷம்

4. நட்சத்திரப் பிரதோஷம்

5. பூரண பிரதோஷம்

6. திவ்யப் பிரதோஷம்

7. தீபப் பிரதோஷம்

8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்

9. மகா பிரதோஷம்

10. உத்தம மகா பிரதோஷம்

11. ஏகாட்சர பிரதோஷம்

12. அர்த்தநாரி பிரதோஷம்

13. திரிகரண பிரதோஷம்

14. பிரம்மப் பிரதோஷம்

15. அட்சரப் பிரதோஷம்

16. கந்தப் பிரதோஷம்

17. சட்ஜ பிரபா பிரதோஷம்

18. அஷ்ட திக் பிரதோஷம்

19. நவக்கிரகப் பிரதோஷம்

20. துத்தப் பிரதோஷம்


1.தினசரி பிரதோஷம்


தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.


2. பட்சப் பிரதோஷம்


அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.


*3. மாசப் பிரதோஷம்*


பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.


*4. நட்சத்திரப் பிரதோஷம்*

பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.


*5. பூரண பிரதோஷம்*


திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.


*6. திவ்யப் பிரதோஷம்*


பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.


*7. தீபப் பிரதோஷம்*

பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.


*8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்*


வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும்.


இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.


*9. மகா பிரதோஷம்*


ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.


குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.


*10. உத்தம மகா பிரதோஷம்*


சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.


*11. ஏகாட்சர பிரதோஷம்*


வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.


*12. அர்த்தநாரி பிரதோஷம்*


வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.


*13. திரிகரண பிரதோஷம்*


வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.


*14. பிரம்மப் பிரதோஷம்*


ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.


*15. அட்சரப் பிரதோஷம்*


வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.


*16. கந்தப் பிரதோஷம்*


சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.


*17. சட்ஜ பிரபா பிரதோஷம்*


ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.


*18. அஷ்ட திக் பிரதோஷம்*


ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.


*19. நவக்கிரகப் பிரதோஷம்*


ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.


*20. துத்தப் பிரதோஷம்*


அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.

ஜென்ம நட்சத்திர கோவில்கள்


நீங்கள் பிறந்த மாதத்தில் வரும் உங்களின் ஜென்ம ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற வஸ்திரத்தை சுவாமிக்கு அலங்காரப்படுத்தி புஷ்பம் மஞ்சள் குங்குமம் எண்னெய் கோவிலுக்கு வாங்கி கொடுத்து உங்கள் நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்)எண்ணிக்கை யின் படி அன்னாதானம் செய்து விட்டு வர உங்கள் நட்சத்திர தெய்வம் உங்களுக்கு முழு யோகத்தை அளிப்பார் .........தவறாமல் செய்யுங்கள் ......பின் நடப்பதை நீங்களே தெரிந்து கொள்விர்கள்.........................


உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோயில் எது? 


எப்படி செல்ல வேண்டும்? 


அங்கு சென்றால் கிடைக்கும்


பலன் என்ன! ...............


#அசுவினி:


கோயில்: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்

அம்மன்: பெரியநாயகி

தல வரலாறு: அரக்க குலப்பெண் ஜல்லிகை சிவபக்தையாக இருந்தாள். அவள் கணவன் விருபாட்சன் ஒரு அந்தணச் சிறுவனைக் கொன்று உணவாக்கினான். இந்த பாவத்தால் விருபாட்சனின் உயிர் பிரிந்தது. ஜல்லிகை பிறவிமருந்தீஸ்வரரை வணங்கி கணவன், சிறுவனை உயிர்ப்பித்தாள்.

சிறப்பு: நோய்களுக்கு நிவாரணம் தரும் அசுவினி நட்சத்திர தேவதையும், மருத்துவ தேவதைகளும் இங்கு வழிபடுவதாக ஐதீகம். அசுவினி நட்சத்திர நாளில் இங்கு தன்வந்திரி ஹோமம் செய்தால் ஆரோக்கியம் நிலைக்கும். 

இருப்பிடம்: திருவாரூரிலிருந்து 30 கி.மீ.,

திறக்கும்நேரம்: காலை 6-11, மாலை4- இரவு 8.

போன்: 94438 85316, 04369 222 392


#பரணி:


கோயில்: நல்லாடை அக்னீஸ்வரர் கோயில்

அம்மன்: சுந்தரநாயகி 

தல வரலாறு: இத்தலத்தில் மிருகண்ட மகரிஷி ஒரு யாகம் நடத்தினார். யாகத்தீயில் போட்ட பட்டு, சிவனை சென்று சேர்வது குறித்து சிலருக்கு சந்தேகம் எழுந்தது. கருவறைக்குச் சென்று காணும்படி மகரிஷி கூற, சிவன் மீது பட்டாடையைக் கண்டனர். பரணி என்ற அக்னி இருப்பதாகவும், அதுவே யாகப்பொருட்களை சிவனிடம் சேர்ப்பதாகவும் மகரிஷி விளக்கினார். இதனால் இது பரணித்தலமானது. 

சிறப்பு: பரணி நட்சத்திரத்தினர் ஹோமம் நடத்தலாம். கார்த்திகை மாத பரணி மிகவும் சிறப்பு. மேற்கு நோக்கி சுவாமி இருப்பதால் சக்தி அதிகம். 

இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து, நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கி.மீ., தூரத்தில் நல்லாடை. 

திறக்கும் நேரம்: காலை 8- மதியம்12, மாலை 5- இரவு 8.30.

போன்: 94866 31196, 04364 285 341


#கார்த்திகை:


கோயில்: கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர்

அம்மன்: துங்கபால ஸ்தனாம்பிகை

தல வரலாறு: தேவர்கள், பத்மாசுரனிடம் இருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அப்போது, சிவன் இங்கு நெருப்பு வடிவில் யோகத்தில் ஆழ்ந்திருந்தார். தவம் கலைந்த அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் பறந்தன. அதிலிருந்து கார்த்திகேயன் (முருகன்) அவதரித்தார். தீப்பொறி பொன்னிறமாக எழுந்ததால் "காஞ்சன நகரம்' எனப்பட்டது. அதுவே "கஞ்சாநகரம்'(பொன்நகரம்) என்றாகிவிட்டது. 

சிறப்பு: கார்த்திகையில் பிறந்தவர்கள் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாளில் தீபமேற்றி வழிபட வாழ்வு வளம் பெறும். கார்த்திகையில் பிறந்த கன்னிப்பெண்கள் அம்மனை வழிபட விரைவில் திருமணயோகம் கைகூடும்.

இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் சாலையில் 8 கி.மீ., 

திறக்கும்நேரம்: காலை10- 11, மாலை4-5

போன்: 94874 43351, 04364 282 853.


#ரோகிணி:


கோயில்: காஞ்சிபுரம் பாண்டவதூதப் பெருமாள் கோயில்

தல வரலாறு: வைசம்பாயனர் ரிஷியிடம், ஜன்மேஜய மகாராஜா, மகாபாரதக் கதை கேட்டார். கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனம் பற்றிக் கேட்ட போது, மன்னருக்கும் அந்த தரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் உண்டானது. ரிஷியின் வழிகாட்டுதல்படி காஞ்சிபுரத்தில் தவம் செய்து தரிசனம் பெற்றார். அவரே பாண்டவதூதப்பெருமாளாக கோயில் கொண்டிருக்கிறார்.

சிறப்பு: ரோகிணிதேவி, இத்தல பெருமாளை வழிபட்டு சந்திரனை அடையும் பேறு பெற்றாள். ரோகிணி நட்சத்திரத்தினர் புதன், சனிக்கிழமை, அஷ்டமிதிதி, 8ம் தேதிகளில் வழிபடுவது சிறப்பு. 

இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ.,. ஏகாம்பரேஸ்வரர் கோயில் எதிரிலுள்ள சாலை.

திறக்கும்நேரம்: காலை 7- 11, மாலை 4- இரவு 7.30.

போன்: 044- 2723 1899.


#மிருகசீரிஷம்:


கோயில்: எண்கண் ஆதிநாராயணப் பெருமாள் கோயில்

தல வரலாறு: பெருமாளை நோக்கி தவமிருந்த பிருகுமுனிவர், சிங்க வேட்டைக்கு வந்த சோழனின் ஆரவாரத்தால் தவம் கலைந்து எழுந்தார். கோபத்தில் அவனை சிங்கமுகத்தோடு பிறக்க சாபமிட்டார். விருத்தகாவிரி என்னும் வெற்றாற்றில் நீராடி, எண்கண் பெருமாளை வணங்கி மீண்டும் மனிதமுகத்தைப் பெற்றான். 

சிறப்பு: மிருகசீரிட நட்சத்திரத்தினர், மிருகசீரிட நாளில் இங்கு வந்து வழிபட்டால் வாழ்வில் பிரச்னை நீங்கி சந்தோஷம் கூடும். 

இருப்பிடம்: தஞ்சாவூர்- திருவாரூர் சாலையில் 50கி.மீ., தூரத்தில் முகூந்தனூர். அங்கிருந்து 1கி.மீ., தூரத்தில் எண்கண்.

திறக்கும்நேரம்: மாலை5- இரவு 7.

போன்: 94433 51528, 04366- 269 965.


#திருவாதிரை:


கோயில்: அதிராம்பட்டினம் அபயவரதீஸ்வரர்கோயில்

அம்மன்: சுந்தரநாயகி அம்மன்

தலவரலாறு: அசுரர்களுக்கு அஞ்சிய தேவர்கள், திருவாதிரை நட்சத்திர மண்டலத்தில் தஞ்சம் அடைந்து சிவனருள் பெற்றனர். அபயம் அளித்தவர் என்பதால், சிவனுக்கு "அபயவரதீஸ்வரர்' என பெயர் வந்தது. திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்த ரைவத மகரிஷி, பைரவ மகரிஷி ஆகியோர் அருவநிலையில் இக்கோயில் சிவனை வழிபடுவதாக ஐதீகம். 

சிறப்பு: திருவாதிரை நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் தீர்க்காயுள், தைரியம் கிடைக்கும். அதீவீரராம பாண்டியர் திருப்பணி செய்ததால், இத்தலம் "அதிவீரராமன்பட்டினம்' என வழங்கியது. தற்போது அதிராம்பட்டினமாகி விட்டது. 

இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை 70கி.மீ., அங்கிருந்து 12 கி.மீ., தூரத்தில் அதிராம்பட்டினம்.

திறக்கும்நேரம்: காலை 6.30- 12, மாலை4- இரவு 8.30.

போன்: 99440 82313, 94435 86451.


#புனர்பூசம்:


கோயில்: வாணியம்பாடி அதிதீஸ்வரர் கோயில்

அம்மன்: பெரியநாயகி

தலவரலாறு: பிரம்மாவைப் பிரிந்த சரஸ்வதி பூலோகம் வந்தாள். அவளை சிருங்கேரியில் கண்டு சமாதானப்படுத்தினார். இருவரும் பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டனர். அதிதீஸ்வரர் கோயிலில் தங்கிய கலைவாணியைப் பாடும்படி சிவபார்வதி வேண்ட, அவளும் இனிமையாகப் பாடினாள். அதனால் இத்தலம் வாணியம்பாடி என்றானது.

சிறப்பு: கஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி, வாணியம்பாடியில் புனர்பூச நட்சத்திர நாளில் விரதமிருந்து தேவர்களுக்குத் தாயாகும் பாக்கியம் பெற்றாள். மேற்கு நோக்கிய இத்தலத்தில் புனர்பூசம் நட்சத்திரத்தினர் வழிபட்டால் சிறப்பான வாழ்வு அமையும். 

இருப்பிடம்: வேலூர்- கிருஷ்ணகிரி சாலையில் 67கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி. அங்கிருந்து 3கி.மீ., தூரத்தில் கோயில்.

திறக்கும் நேரம்: காலை 6.30- 10.30, மாலை 5- இரவு 7.

போன்: 99941 07395, 04174 226 652


#பூசம்:


கோயில்: விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில் 

அம்மன்: அபிவிருத்தி நாயகி

தல வரலாறு: காலில் ஏற்பட்ட வாதநோயைப் போக்கும் விதத்தில் சனி, திருத்தல யாத்திரை புறப்பட்டார். விளங்குளத்தில் இருக்கும் அட்சயபுரீஸ்வரரை வழிபட்டபோது நோய் குணமானது. அன்று, பூசம் நட்சத்திரமாக இருந்தது. பித்ருக்களின் அம்சமான காகங்களின் குருவான "பித்ரசாய்' சித்தர் இங்கு தினமும் வழிபடுகிறார்.

சிறப்பு: இங்கு மந்தா, ஜேஷ்டா ஆகிய தேவியருடன் சனீஸ்வரர் மணக்கோலத்தில் வீற்றிருக் கிறார். பூச நட்சத்திரத்தினர் பூசம் மற்றும் திரிதியை நாளில் இவருக்கு அபிஷேகம் செய்து எட்டுமுறை சுற்றி வர நோய் நீங்கும். திருமணயோகம் கைகூடும். 

இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 30கி.மீ., தூரத்தில் விளநகர் விலக்கு. அங்கிருந்து தெற்கே 2கி.மீ, தூரத்தில் கோயில்.

திறக்கும்நேரம்: மாலை4- இரவு7. 

போன்: 97507 84944, 96266 85051.


#ஆயில்யம்:


கோயில்: திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்

அம்மன்: அருமருந்துநாயகி, அபூர்வநாயகி

தல வரலாறு: துர்வாசரின் சாபத்தால் நண்டு பிறப்பெடுத்த கந்தர்வன், சிவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றான். கற்கடகத்திற்கு (நண்டுக்கு) அருள்புரிந்தவர் என்பதால் சுவாமி "கற்கடேஸ்வரர்' என பெயர் பெற்றார். பிரகஸ்பதியின் வழிகாட்டுதலின்படி, இந்திரன் இங்குள்ள சிவனை1008 மலர்களால் வழிபட்டு ஆணவம் நீங்கப்பெற்றான். இந்திரன் திருந்திய தலம் என்பதால் "திருந்துதேவன்குடி' என்ற பெயர் வந்தது. "நண்டுக்கோயில்' என்றால் தான் தெரியும். 

சிறப்பு:ஆயில்யம், தேய்பிறை அஷ்டமிநாளில் கற்கடேஸ்வரருக்கு நல்லெண்ணெய் சாத்தி வழிபட நன்மை பெருகும். 

இருப்பிடம்: கும்பகோணம்- சூரியனார்கோயில் சாலையில் 11கி.மீ., தூரத்தில் திருவிசநல்லூர். அங்கிருந்து திருந்துதேவன்குடி 2கி.மீ., 

திறக்கும்நேரம்: காலை9- மதியம் 1.30, மாலை 4- இரவு7.

போன்: 99940 15871, 0435- 200 0240


#மகம்:


கோயில்: ஒடுக்கம் தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயில்

அம்மன்: மாணிக்கவல்லி, மரகதவல்லி

தல வரலாறு: மக நட்சத்திரத்தில் அவதரித்த பரத்வாஜர் தவமேடை அமைத்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்ட தலம் ஒடுக்கம் தவசிமேடை. கோயிலுக்கு வரும் அடியவர்களின் பாதம் தன்மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜரே இங்கு பீடமாக இருக்கிறார். 

சிறப்பு: மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, துவாதசி, பிரதோஷம், மாதசிவராத்திரி நாளில் மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபட வாழ்வு வளம் பெறும். இங்கு மாணிக்கவல்லி, மரகதவல்லி அம்மன் சந்நிதிகள் உள்ளன. சிவராத்திரியை ஒட்டி 30 நாட்கள் காலை நேரத்தில் மூலவர் மீது சூரியஒளி விழுவது சிறப்பு. 

இருப்பிடம்: திண்டுக்கல்- நத்தம் சாலையில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு. அங்கிருந்து 2கி.மீ. தூரத்தில் கோயில்.

திறக்கும் நேரம்: காலை6- மாலை6.

போன்: 95782 11659, 93624 05382.


#பூரம்:


கோயில்: திருவரங்குளம் ஹரிதீர்த்தேஸ்வரர் கோயில்

அம்மன்: பெரியநாயகி

தல வரலாறு: புத்திரப் பேறு வாய்க்காத சோழ மன்னன் கல்மாஷ பாதன் அகத்தியரின் உதவியை நாடினான். அவரின் வழிகாட்டுதலால், திருவரங்குளம் சிவனை வணங்கப் புறப்பட்டான். அந்தக் கோயில் புதைந்து போனது அறிந்து பூமியைத் தோண்டினான். லிங்கத்தில் கடப்பாறை பட்டு ரத்தம் பீறிட்டது. தோஷம் நேரும் என வருந்தி உயிர் விடத் துணிந்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து குறை தீர்த்தார். இந்த நிகழ்வு பூரம் நட்சத்திரத்தில் நடந்தது.

சிறப்பு: பூர நட்சத்திர லோகத்தில் சிவ,நாக, ஞானபிரம்ம, இந்திர, ஸ்ரீ, ஸ்கந்த, குரு தீர்த்தங்கள் உள்ளன. திருவரங்குளத்திலும் இவை ஏழும் உள்ளன. பூர நட்சத்திரத்தினர் தங்கள் பிறந்தநாளில் இங்கு வழிபட்டால் வாழ்வில் மேன்மை பெறுவர்.

இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் 7 கி.மீ.

திறக்கும்நேரம்: காலை7- மதியம்12, மாலை5- இரவு7.30

போன்: 98651 56430, 99652 11768


#உத்திரம்:


கோயில்: இடையாற்றுமங்கலம் மாங்கல்யேஸ்வரர் கோயில்

அம்மன்: மங்களாம்பிகை

தல வரலாறு: உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர் மாங்கல்ய மகரிஷி. இவர் அகத்தியர், வசிஷ்டர் ஆகியவர்களின் திருமணத்தில் மாங்கல்ய தாரண பூஜை நடத்தியவர். யாரும் அறியாமல் சூட்சும வடிவில் பூலோகத்தில் சிவனை வணங்கி தன் சக்தியை அதிகரித்துக் கொண்டார். சிவன் இவருக்கு அருள்புரிந்த தலமே இடையாற்று மங்கலம். 

சிறப்பு: மணவாழ்வுக்காக காத்திருப்பவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு. திருமணம் நிச்சயித்தபின், மாங்கல்ய மகரிஷிக்கு வெற்றிலைபாக்குடன் கல்யாண பத்திரிகை வைத்து வேண்டிக் கொள்கின்றனர். உத்திர நட்சத்திரத்தினர் வழிபட்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறுவர்.

இருப்பிடம்: திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 22கி.மீ., தூரத்தில் லால்குடி. அங்கிருந்து இடையாற்று மங்கலம் 5 கி.மீ., 

திறக்கும்நேரம்: காலை 8- மதியம்12, மாலை6- இரவு 8.

போன்: 98439 51363, 0431- 254 4070.


#அஸ்தம்:


கோயில்: கோமல் கிருபா கூபாரேஸ்வரர் கோயில்

அம்மன்: அன்னபூரணி

தல வரலாறு: சிவனின் கண்களைப் பார்வதி கைகளால் பொத்தினாள். உலகமே இருளில் மூழ்கியது. அப்போது, சிவனும் தன் கையில் இருந்த ஹஸ்தாவர்ண ஜோதியில் மறைந்தார். சிவனைத் தேடி, அம்பாள் பசுவடிவில் பூலோகம் புறப்பட்டாள். அஸ்த நட்சத்திரத்தன்று சிவனை ஜோதிவடிவில் தரிசித்து ஐக்கியமானாள். பக்தர்கள் மீது கருணை(கிருபை) கொண்டவர் என்பதால் "கிருபா கூபாரேஸ்வரர்' என்று பெயர் பெற்றார். 

சிறப்பு: அஸ்த நட்சத்திரத்தினர் திங்கள், புதன்கிழமையில் வழிபடுவது நல்லது. அன்னபூரணி அம்பிகை பசுவாக இங்கு வந்ததால் பசு,கன்று தானம் அளிப்பது சிறப்பு.

இருப்பிடம்: கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் குத்தாலத்திற்குப் பிரியும் இடத்தில் இருந்து 8கி.மீ., தூரத்தில் கோமல்.

திறக்கும்நேரம்: காலை7- மதியம்12, மாலை 5.30- இரவு 7.30.

போன்: 95002 84866


#சித்திரை:


கோயில்: குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள்

தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி 

தல வரலாறு: தேவகுரு பிரகஸ்பதியின் மகன் கசனை, அசுரகுரு சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானி திருமணம் செய்ய விரும்பினாள். கசனை அசுரலோகத்திலேயே கட்டாயப்படுத்தி இருக்கச் செய்தாள். மகனைக் காணாத பிரகஸ்பதி விஷ்ணுவை நோக்கி தவமிருந்தார். விஷ்ணு சக்கரத்தாழ்வார் மூலம் கசனை மீட்டார். இதையடுத்து சக்கரத்தாழ்வாரும், தேவ குருவும் ஒரே இடத்தில் அமர்ந்தனர். அதுவே குருவித்துறை தலம். 

சிறப்பு: பிரகஸ்பதிக்கு அருள்புரிய விஷ்ணு, சித்திர ரதத்தில், சித்திரை நட்சத்திரத்தன்று எழுந்தருளினார். எனவே, இக்கோயில் சித்திரைக்குரியதானது. வியாழன், பவுர்ணமி, சித்திரை நட்சத்திர நாட்களில் தரிசிப்பது சிறப்பு. 

இருப்பிடம்: மதுரையிலிருந்து 23 கி.மீ., 

திறக்கும்நேரம்: காலை 7.30- மதியம் 12, மாலை 3- 6.

போன்: 94439 61948, 97902 95795.


#சுவாதி:


கோயில்: சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோயில்

அம்மன்: பூங்குழலி

தல வரலாறு: படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா ஆகியோர் நெல்லிவனத்தில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டனர். சித்தர் தவமிருந்த பகுதியானதால் இப்பகுதி சித்தர்காடு, சித்துக்காடு என அழைக்கப்பட்டது. . நெல்லி மரத்தடியில் இருப்பதால் சிவனுக்கு "தாத்திரீஸ்வரர்' என்று பெயர். "தாத்திரீ' என்றால் "நெல்லி.

சிறப்பு: சுவாதி நட்சத்திரத்தினர் இங்கு சிவனை வழிபட்டால் செல்வ வளமிக்க வாழ்வு உண்டாகும். திருமணயோகம் விரைவில் கைகூடும். இங்கு குபேரருக்கு நெல்லிக்காய் ஊறுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து வழிபட்டால் யோகவாழ்வு அமையும். 

இருப்பிடம்: சென்னை பூந்தமல்லி- தண்டுரை வழியில் 8 கி.மீ., 

திறக்கும்நேரம்: காலை8- 10, மாலை 5-7

போன்: 93643 48700, 9382684485.


#விசாகம்:


கோயில்: பண்பொழி திருமலை குமாரசுவாமி கோயில்

தல வரலாறு: பூவன்பட்டர் என்ற அர்ச்சகரின் கனவில் முருகன் தோன்றி, புதையுண்டு கிடக்கும் சிலையை திருமலையில் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். அதன்படி, பந்தளமன்னர் கோயில் கட்டினார். மண்டபம் எழுப்புவதற்கான கற்களை, சிவகாமி பரதேசி என்ற முருக பக்தை, மலையடிவாரத்திலிருந்து வாழைமட்டை மூலம் இழுத்துச் சென்ற பெருமையுடையது. 

சிறப்பு: விசாகம் என்றால் "மேலான ஜோதி'. இந்த நட்சத்திரத்தின் ஒளிக்கிரணங்கள் இம்மலையில் படுவதால் விசாக நட்சத்திரத்தினர் வழிபட்டால் வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும். 

இருப்பிடம்: மதுரையிலிருந்து செங்கோட்டை 155 கி.மீ., அங்கிருந்து 7கி.மீ., தூரத்தில் கோயில். 

திறக்கும்நேரம்: காலை6- மதியம் 1, மாலை 5, இரவு 8.30.

போன்: 04633- 237 131, 237 343.


#அனுஷம்:


கோயில்: திருநின்றியூர் மகாலட்சுமிபுரீஸ்வரர் கோயில் 

அம்மன்: உலகநாயகி

தல வரலாறு: ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா கந்தர்வன் ஒருவனின் அழகை ரசித்தாள். இதை அறிந்த முனிவர் அவளது தலையை வெட்டும்படி மகன் பரசுராமனிடம் கூறினார். பரசுராமனும் அவ்வாறே செய்து, தந்தையின் உதவியோடு மீண்டும் தாயை உயிர்பெறச் செய்தார். இந்த பாவம் நீங்க தந்தையும் மகனுமாக திருநின்றியூர் சிவனை வழிபட்டனர். 

சிறப்பு: பூமியில் புதைந்துபோன சிவலிங்கம், சோழமன்னனால் கண்டறியப்பட்டு ஒரு அனுஷ நட்சத்திரத்தன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே இக்கோயில் அனுஷத்திற்கு உரியதானது. அனுஷ நட்சத்திர ஆண்கள் துவாதசி திதியன்றும், பெண்கள் வரலட்சுமி பூஜையன்றும் சிறப்பு வழிபாடு செய்தால் செல்வவளம் உண்டாகும். 

இருப்பிடம்: மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ., 

திறக்கும்நேரம்: காலை6- 11, மாலை 4- இரவு 8.

போன்: 04364- 320 520 


#கேட்டை:


கோயில்: பசுபதிகோயில் வரதராஜப்பெருமாள் கோயில்

தாயார்: பெருந்தேவி

தல வரலாறு: ராமானுஜரின் குருவான பெரியநம்பி, மார்கழி கேட்டையில் அவதரித்தவர். இவரது 105வது வயதில் சோழமன்னன் ஒருவன் ராமானுஜர் மீதிருந்த கோபத்தால் பெரியநம்பியின் கண்களைப் பறித்தான். அவர் பசுபதிகோயில் வரதராஜப் பெருமாளிடம் அடைக்கலம் புகுந்தார். அவரின் துன்பம் போக்கும் விதத்தில், பெருமாள் இங்கு மோட்சம் அளித்தார். 

சிறப்பு: பெரியநம்பியின் திருநட்சத்திர வைபவம் சிறப்பாக நடக்கும். கேட்டை நட்சத்திரத்தினர் வழிபட்டால் நல்வாழ்வு கிடைக்கும். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாயன்று வரும் கேட்டையில் வழிபடுவது சிறப்பு.

இருப்பிடம்: தஞ்சாவூர்- கும்பகோணம் வழியில் 13கி.மீ.,

திறக்கும்நேரம்: காலை7- 9, மாலை 5.30- 7.30.

போன்: 97903 42581, 94436 50920


#மூலம்:


கோயில்: மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்

அம்மன்: புஷ்பகுஜாம்பாள்

தல வரலாறு: சிவன் ஆனந்ததாண்டவம் ஆடியபோது மிருதங்கம் வாசித்தவர் சிங்கி என்ற நந்திதேவர். இசையில் ஆழ்ந்து கண்ணை மூடியபடி தாளம் போட்டதால், நடனத்தைப் பார்க்க முடியவில்லை. அதனால், மப்பேடு வந்து சிவபூஜை செய்து இறைவனின் நடனத்தைக் கண்டு களித்தார். மெய்ப்பேடு என்பதே மப்பேடு ஆகிவிட்டது. சிங்கி வழிபட்ட சிவன் என்பதால் சிங்கீஸ்வரர் எனப்பட்டார்.

சிறப்பு: மூலநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரதோஷத்தன்று இங்கு வழிபடுவது சிறப்பு. இங்குள்ள நவவியாகரண கல் மீது ஏறி, நந்தியையும், மூலவரையும் ஒரே சமயத்தில் தரிசித்தால் ஆரோக்கியம் மேம்படும். 

இருப்பிடம்: சென்னை கோயம்பேடு- தக்கோலம் வழியில் 45 கி.மீ., 

திறக்கும்நேரம்: காலை6- 10, மாலை 5.30-இரவு 7.30.

போன்: 94447 70579, 94432 25093


#பூராடம்:


கோயில்: கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் கோயில்

அம்மன்: மங்களாம்பிகை

தல வரலாறு: சிவதரிசனம் பெற விரும்பிய கடுவெளிச்சித்தர் அருள்பெற்ற தலம் கடுவெளி. "கடுவெளி' என்றால் "ஆகாசவெளி'. சோழமன்னன் ஒருவன் இங்கு கோயில் கட்டினான். ஆகாயத்திற்கு அதிபதியாக ஆகாசபுரீஸ்வரர் இங்கு வீற்றிருக்கிறார். 

சிறப்பு: இத்தலம் பூராடம் நட்சத்திரத்திற்குரியது. ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும் பூராடத்தன்று இங்கு வழிபடுவதாக ஐதீகம். அன்று சிவனுக்கு புனுகு சாத்தி வழிபட திருமண, தொழில்தடை நீங்கும்.

இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து திருவையாறு 13 கி.மீ., அங்கிருந்து கல்லணை வழியில் 4 கி.மீ., 

திறக்கும்நேரம்: காலை9-10, மாலை 5-6, பூராடத்தன்று: காலை 8- மதியம்1.

போன்: 94434 47826, 96267 65472


#உத்திராடம்:


கோயில்: கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் கோயில்

அம்மன்: மீனாட்சியம்மன்

தல வரலாறு: படைப்புத் தொழிலைச் செய்ததால், சிவனை விட தானே உயர்ந்தவன் என்று பிரம்மா கருதினார். இந்த மமதையை அடக்க, பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒருதலையைக் கொய்தார் சிவன். தனது பாவம் தீர பிரம்மா, பூலோகத்தில் சிவனை வழிபட்ட தலம் கீழப்பூங்குடி. பழைய கோயில் அழிந்து போனதால் புதிய கோயில் கட்டப்பட்டது. 

சிறப்பு: இங்குள்ள மீனாட்சி அம்மனின் நட்சத்திரம் உத்திராடம். இதில் பிறந்தவர்கள் பிரம்மபுரீஸ்வரரையும், மீனாட்சியையும் உத்திராடத்தன்று வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். பவுர்ணமியன்று சிவனுக்கு விசேஷ பூஜை நடக்கும். 

இருப்பிடம்: மதுரையிலிருந்து 45கி.மீ., சிவகங்கையிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் ஒக்கூர் 12கி.மீ., அங்கிருந்து கீழப்பூங்குடி 3 கி.மீ., 

திறக்கும் நேரம்: காலை7- 11, மாலை 5- இரவு8

போன்: 99436 59071, 99466 59072


#திருவோணம்:


கோயில்: திருப்பாற்கடல் பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் கோயில்

தாயார்: அலர்மேலுமங்கைத் தாயார்

தலவரலாறு: புண்டரீக மகரிஷியின் பக்திக்கு இணங்கி பெருமாள் பிரசன்னமான தலம் திருப்பாற்கடல். சந்திரன் ஒரு சாபத்தால் இருளடைந்தான். அவன் மனைவியரில் ஒருத்தியான திருவோணதேவி வருந்தினாள். இங்கு வந்து வழிபட்டு கணவரின் சாபம் நீங்கப் பெற்றாள். 

சிறப்பு: திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவோணம், மூன்றாம்பிறை ஆகிய நாட்களில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட நினைத்தது நிறைவேறும். 

இருப்பிடம்: வேலூர்- சென்னை வழியில் 20கி.மீ., தூரத்தில் காவேரிப்பாக்கம். இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் கோயில். 

திறக்கும்நேரம்: காலை 7.30- மதியம் 12, மாலை 4.30- இரவு 7.30

போன்: 94868 77896,04177 254 929


#அவிட்டம்:


கோயில்: கீழ்க்கொருக்கை பிரம்மஞானபுரீஸ்வரர் கோயில்

அம்மன்: புஷ்பவல்லி

தல வரலாறு: கோரக்கசித்தர் ஒரு மடத்தில் தங்கியிருந்தார். இரவில் விழித்தபோது, அவரருகில் ஒருத்தி படுத்திருந்தாள். முந்தானை சித்தர் மீது கிடந்தது. இதற்கு பரிகாரமாக தன் கைகளை வெட்டிக் கொண்டார். சிவனருளால் கைகள் வளர்ந்தன. கையை வெட்டியதால் "கோரக்கை' என்றும், குறுகிய கைகளால் வழிபட்டதால் "குறுக்கை' என்றும் ஊருக்குப் பெயர் வந்தது. தற்போது "கொருக்கை' எனப்படுகிறது.

சிறப்பு: அவிட்ட நட்சத்திரத்தன்று பிரம்மஞானபுரீஸ்வரர், பிரம்மாவுக்கு ஞானம் தந்ததால் இத்தலம் அவிட்டத்திற்கு உரியதானது. இந்த நட்சத்திரத்தினர் ஆவணி அவிட்டத்தன்று அடிப்பிரதட்சிணம் செய்து வழிபட்டால் யோக வாழ்வு அமையும்.

இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ., 

திறக்கும்நேரம்: காலை11- மதியம்1, மாலை5- மாலை 6

போன்: 98658 04862, 94436 78579


#சதயம்:


கோயில்: திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்

அம்மன்: கருந்தார் குழலி

தல வரலாறு: தவமிருந்த அக்னிதேவனுக்கு சந்திர சேகரராக சிவன் காட்சியளித்து அருள்புரிந்த தலம் திருப்புகலூர். "புகல்' என்றால் அடைக்கலம். அடைக்கலம் புகுந்தவர்களை ஆட்கொள் பவராக சுவாமி இங்கு வீற்றிருக்கிறார். வர்த்தமானேஸ்வரர், மனோன்மணி அம்பாளும் இங்கு வீற்றிருக்கின்றனர். 

சிறப்பு: திருநாவுக்கரசர் தன் 81ம் வயதில் சித்திரை சதய நாளில் இங்கு சிவனோடு இரண்டறக் கலந்தார். இதை ஒட்டி பத்து நாட்கள் திருவிழா நடக்கும். சதய நட்சத்திரத்தினர் இங்கு வழிபட்டால் ஆயுள், ஆரோக்கியம், செல்வவளம் உண்டாகும்.

இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம்- நாகப்பட்டினம் வழியில் 10கி.மீ., 

திறக்கும்நேரம்: காலை 6- மதியம்12, மாலை 4- இரவு9

போன்: 04366 236 970


#பூரட்டாதி:


கோயில்: ரங்கநாதபுரம் திருவானேஸ்வரர் கோயில் 

அம்மன்: காமாட்சி

தல வரலாறு: இந்திரனும், அவனது ஐராவத யானையும் பூரட்டாதிநாளில் திருவானேஸ்வரரை பூஜித்து நற்பலன் பெற்றனர். கோச்செங்கட்சோழன் கட்டிய முதல் மாடக்கோயில். இறைவன் இங்கிருந்தே காலச்சக்கரத்தைப் படைத்தார். கஜ கடாட்ச சக்தி விமானத்தின் கீழ் சுவாமி எழுந்தருளியிருக்கிறார். 

சிறப்பு: பூரட்டாதியன்று திருவானேஸ்வரரை வழிபட்டு ஏழு வண்ண ஆடைகளை ஏழைகளுக்கு தானம் அளித்தால் புத்திகூர்மை உண்டாகும். திருமணம், வேலைவாய்ப்பு தடையின்றி நடந்தேறும்.

இருப்பிடம்: தஞ்சாவூரிலிருந்து திருவையாறு 20 கி.மீ., இங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி 17கி.மீ., அங்கிருந்து அகரப்பேட்டை வழியில் 2கி.மீ., 

திறக்கும்நேரம்: காலை7-9, மாலை 5.30-இரவு 7

போன்: 94439 70397, 97150 37810


#உத்திரட்டாதி:


கோயில்: தீயத்தூர் சகஸ்ர லட்சுமீஸ்வரர் கோயில்

அம்மன்: பெரியநாயகி

தல வரலாறு: சிவதரிசனம் பெற விரும்பிய லட்சுமி, அகத்தியரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் வழிபட்ட தலம் தீயத்தூர். அவள், தினமும் ஆயிரம் தாமரை மலர்களால், சிவனை வழிபட்டதால் "சகஸ்ரலட்சுமீஸ்வரர்' என்று பெயர் வந்தது. "சகஸ்ர' என்றால் "ஆயிரம்'. 

சிறப்பு: உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அவதரித்த தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸர், அக்னி புராந்தக மகரிஷி ஆகியோர் அரூபவடிவில் சகஸ்ரலட்சுமீஸ்வரரை தரிசிக்க உத்திரட்டாதி நாளில் வருவதாக ஐதீகம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொங்கல் நைவேத்யம் செய்ய பணக்கஷ்டம் தீரும். செயல்பாடுகளில் தடை நீங்கும். 

இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து ஆவுடையார்கோயில் 40கி.மீ., அங்கிருந்து திருப்புனவாசல் செல்லும் வழியில் 21கி.மீ., 

திறக்கும்நேரம்: காலை6- மதியம் 12

போன்: 99652 11768, 04371-239 212


#ரேவதி:


கோயில்: காருகுடி கைலாசநாதர் கோயில்

அம்மன்: பெரியநாயகி

தல வரலாறு: சந்திரன் தன் மனைவியான ரேவதியுடன் சிவனருள் பெற்ற தலம் காருகுடி. "கார்' எனப்படும் ஏழுவகை மேகங்களும் சிவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு "காருகுடி' என்ற பெயர் உண்டானது. 1800 ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி கோயிலைக் கட்டினான். 

சிறப்பு: ரேவதி நட்சத்திர தேவதை அரூப வடிவத்தில் (உருவமின்றி) தினமும் சிவனை வழிபடுவதாக ஐதீகம். ரேவதி நட்சத்திரத்தினர் இங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட நினைத்தது விரைவில் நிறைவேறும். தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். 

இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி 40கி.மீ, இங்கிருந்து தாத்தய்யங்கார் பேட்டை 21கி.மீ., அங்கிருந்து காருகுடி 5கி.மீ.,

திறக்கும்நேரம்: காலை6- 11, மாலை


5- இரவு8

போன்: 97518 94339, 94423 58146