Thursday 17 November 2022

பந்தள அரச குடும்பத்தினர் காலம் காலமாக வைத்து வணங்கும் ஐயப்பனின் உண்மையான உருவபடம்

 மேலே அமர்ந்துள்ள நிலையில் இருக்கும் ஐயப்பன் புகைப்படம் பந்தள அரச குடும்பத்தினர் காலம் காலமாக வைத்து வணங்கும் ஐயப்பனின் உண்மையான உருவபடம்!!! அரச குடும்ப முன்னோர்கள் ஐயப்பனை எப்பொழுதும் கண்டு கொண்டே இருக்க வேண்டும் என்று வேண்டி வணங்கி அந்த ஐயப்பனே அருள் தந்து அருவுருவமாக வந்து அமர்ந்து தன்னை ஓவியமாக வரையச்சொல்லி அருள் தந்து ஓவியமாக வரையப்பட்டு பந்தள ஐயப்பன் வாரிசு அரண்மனை குடும்பத்தினர் அவர்கள் பொக்கிஷமாக வைத்து வணங்கி வரும் ஓவியம் இது!!! இந்த ஓவியத்தை ஒரு ஐயப்ப பக்தருக்கு பரிசாக தந்த பொழுது அவர் வெளியிட்ட புகைப்படம் இது!!!


பச்சிளம்பாலகனாய் கருணை வடிவாய் ஐயப்பன் அமர்ந்திருக்கும் கோலத்தைக் காண கண் கோடி வேண்டும்!!! சுவாமியே சரணம் ஐயப்பா!!!!


*ஓம் ஸ்ரீ  லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!*




Wednesday 16 November 2022

பீட்டர் பாண்டியன்

 மதுரையின் அரசி அன்னை மீனாட்சி செய்த அற்புதம்  


மதுரையில் மீனாட்சிக்கு நகைகள், பொக்கிஷங்கள், தான பட்டா நிலங்கள் என்று அளவிட முடியாத சொத்துக்கள் இருக்கின்றன. இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்தது, விரிவானது இந்த நகை கலெக்ஷன். இந்த நகைக்குவியலில் உள்ள ஒவ்வொரு நகைக்கும் ஒரு கதை இருக்கிறது.


அயல் தேசத்து மன்னர்கள், கொள்ளையர்களின் படையெடுப்பு காலங்களில், அம்மனின் நகைகள் ராமேஸ்வரம் போன்ற தூரதேச கோயில் லாக்கர்களில் டெபாசிட் பண்ண பட்டிருக்கிறது.


1837 முதல் இந்தியாவை ஆண்ட விக்டோரியா மகாராணிக்கு வைர நகைகள் என்றாலே தனி காதல். தனது கணவரிடம் சொல்லி உலகில் உள்ள பிரபல வைர நகைகளை கைப்பற்றி தனது அலமாரியில் சேர்த்து வைப்பார்.


அப்படி எந்த நகையையாவது விலைக்கு வாங்க முடியாவிட்டால், அதை இரவல் வாங்கி தனது கழுத்தில் போட்டு அழகு பார்க்கும் வினோத ஆசை அவருக்கு இருந்தது.


மீனாட்சி தேவியின் நகைகளில் பத்து பெரிய சபையர் கற்கள் பதித்த ஒரு நீல பட்டயம் உலகப் பிரசித்தம். அதன் ஆபூர்வ அழகு கண்களை பறிப்பதாக இருக்கிறது என்பதை மகாராணியும் கேள்விப்பட்டார் . அதன் மேல் காதல் கொண்டார்; "காண" விரும்பினார். கம்பெனிக்காரர்கள் ஏற்பாட்டில் பதக்கம் லண்டனுக்கு கப்பலில் சென்றது.


பதக்கத்தை பார்த்ததுமே, மனித காதல் கொள்ள அது சாதாரண நகையல்ல; மகாராணியாக இருந்தாலும் தான் அணிந்து கொள்ள ஏற்புடையதல்லை என்று உணர்ந்தார் மகாராணி. மறு கப்பலிலேயே பத்திரமாக அனுப்பப்பட்டது அந்த பதக்கம்... அன்னை மீனாட்சியை அலங்கரிக்க பதக்கம் மதுரைக்கே மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறது.மீனாட்சிக்கு அழகு சேர்க்க இப்படி பல வைர, வைடூரிய நகைகள் இருந்தாலும், ஒரு ஆங்கிலேயே முரட்டு பக்தன் இருநூறு வருடங்களுக்கு முன்னால் அம்மனுக்கு காணிக்கையளித்த ஷூக்கள் பற்றித்தான் இந்த பதிவு.


தங்கத்தால் இழைக்கப்பட்ட விலை மதிக்க முடியாத மாணிக்கங்கள் பதித்த ஒரு ஜோடி காலணிகளை தன் பக்தியின் காணிக்கையாக வழங்கியவர் அப்போதைய மதுரை கலெக்டர் ரவுஸ் பீட்டர்.


பீட்டர் துரை 1812ல் ஒருங்கிணைந்த மதுரை ஜில்லாவுக்கு கலெக்டராக ஆங்கிலேயே அரசால் நியமிக்கப்பட்டவர்.


மதுரையில் இப்போதெல்லாம் ஆறு மாதங்கள் ஆட்சியராக நீடிப்பதே கடினமாக இருக்கிறது. பீட்டர் துரை பதினாறு ஆண்டுகள் (நீண்ட காலமாக) அதாவது 1828 வரை மதுரை மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர்.


அப்போதெல்லாம் மதுரை கலெக்டர்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் தக்கார். (கோயில் தக்கார் என்றால் கோயிலுக்கு தக்கவர் (Fit Person) மரியாதைக்குரியவர் என்று அர்த்தம்.)


கோவில் தக்காரின் பணி என்னவென்றே தெரியாமல் முதலில் திணறி போனார் பீட்டர் துரை,பின்னர் அம்மனின் மகிமைகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்து, அவள் மேல் மரியாதையும், பக்தியையும் செலுத்த ஆரம்பித்தார்.


தினமும் தன்னுடைய குதிரையில் ஏறி மீனாட்சி அம்மன் கோயிலை வலம் வருவார். அதன் பிறகே தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குவார்.


கிழக்கு கோபுரத்துக்கு முன்பகுதிக்கு வந்ததும் குதிரையில் இருந்து இறங்கி விடுவார். தன் ஷூக்களை அகற்றிவிட்டு அனலாய் சுடும் அந்த கல்தரையில் வெறும் பாதங்களில் நின்று மீனாட்சியை வணங்குவார்.


தினமும் கோவில் கோபுர வாயிலில் நின்று மனமுருக வணங்கும் இந்த முரட்டு பக்தனை பார்த்து மதுரை மக்களுக்கு மட்டுமல்ல, அந்த மீனாட்சிக்கே மனசுருகி போயிருச்சி போல...


பீட்டர் ஆங்கிலேயராக இருந்தாலும்கூட, நம்முடைய கலாசாரத்தையும், ஆன்மிக உணர்வுகளையும் பெரிதும் மதிப்பவராக இருந்தார். 


மக்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் வராமல், அம்மனின் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்தார்.


மதுரை மக்கள், தங்களுக்கு யாரையாவது பிடித்து போனால் எல்லையில்லா அன்பும் நன்றியும் செலுத்துவார்கள். தங்களிடம் மிகுந்த பரிவு காட்டிய இந்த கலெக்டரை ஒரு மன்னனுக்கு நிகராக நினைத்த மதுரை மக்கள் அவரை பீட்டர் பாண்டியன் என்றே அழைத்தனர்.


அன்னை மீனாட்சி தன்  மேல் வைத்துள்ள அன்பை பீட்டர் புரிந்துகொள்ளும் காலமும் வந்தது...


ஒருநாள் இரவு மதுரையில் இடியும் மின்னலுமாகப் பெருமழை பெய்தது. பெருத்த காற்றுடன் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது.


வெள்ளத்தினால் மதுரைக்கும், மக்களுக்கும் பெரிய இடையூறு வருமே என்று கவலையுடன் உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தார் பீட்டர் துரை.


நள்ளிரவாகிவிட்டது. பங்களாவுக்கு வெளியே ஒரு சிறுமி அழைப்பது போல பீட்டருக்கு குரல் கேட்டது. உடனே  எழுந்து வெளி வராந்தாவுக்கு வந்தார்.


அந்த இடத்தில் ஒரு சிறு வயது சிறுமி நின்றிருந்தாள்.

அந்த சிறுமி பீட்டரை பார்த்து புன்னகையோடே அவரை நெருங்கி வந்தாள்...  அதோ அந்த மூன்று வயதே ஆன சிறுமி  தன்னுடைய தளிர்க் கரங்களால் பீட்டரின் கைகளைப் பிடித்து இழுத்து மாளிகைக்கு வெளியில் அழைத்து போனாள்.


சிறுமியும் கலெக்டரும் வெளியில் வந்ததுதான் தாமதம், அந்த மாளிகை அப்படியே இடிந்து விழுந்தது. மிரண்டு போனார் பீட்டர். தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய அந்த சிறுமிக்கு நன்றி சொல்ல தேடினார். சிறுமியை காணவில்லை.


பின்னர் கொட்டும் மழையில் சற்றுத் தொலைவில் அந்தச் சிறுமி சென்றுகொண்டிருப்பதைப் பார்த்த கலெக்டர் பின்தொடர்ந்து ஓடினார். பிடிக்கமுடியவில்லை. இறுதியில் அந்தச் சிறுமி மீனாட்சியின் திருக்கோயிலுக்குள் சென்று மறைந்தே போனாள்.


தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றியது தான் தினம் தினம் வணங்கும் அம்மன் மீனாட்சிதான் என்று கலெக்டர் ரவுஸ் பீட்டர்  கண்டுகொண்டார்.


அன்னை இந்த சிறு பக்தன் மீது வைத்த அன்பையும் கருணையையும் கண்டு மனமகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தினார். 


உடனே கவலையும் கொண்டார்

கொட்டும் மழையில் வெறும் காலோடு தன்னைக் காப்பாற்ற ஓடோடி வந்த அம்பிகையின் பாதம் தரையில் பட்டு வலித்திருக்குமே என எண்ணி வேதனை பட்டார்.

உடனை யோசனை செய்த பீட்டர் அன்னையின்  பாதங்களுக்கு அணியும்படி ஏதாவது அணிகலன் செய்து தரவேண்டும் என்று முடிவு செய்தார். அவை தான் மேலே சொன்ன அந்த காணிக்கை காலணிகள்.


நன்றியுணர்வின் அடையாளமாக அவர் மீனாட்சிக்கு காணிக்கை அளித்த இந்த ஒவ்வொரு தங்க ஷூவின் எடை 28 டோலாக்கள் (ஒரு டோலா தங்கம் தோராயமாக 12 கிராம்).


இதுபோக 412 சிவப்பு கற்கள், 72 மரகதங்கள், 80 வைரங்கள் மற்றும் பூனை கண், முத்துக்கள், சபையர் என்று நவரத்தினங்கள் காலணிகளை அலங்கரிக்கின்றன....


அம்மனைத்தவிர அந்த நாட்களில் மதுரையில் குதிரை வலம் வருபவர் பீட்டர் மட்டும்தான். குதிரை சவாரி எவ்வளவு சிரமம் என்று அவருக்குத்தான் தெரியும். விழா காலங்களில் குதிரையில் வலம் வரும் அம்மன், சேணம் இல்லாததால் பேலன்ஸ் பண்ண சிரமபடுவதாக அவரின் பக்திக்கண்களுக்கு பட்டது.


வெள்ளைக்காரர்கள் எதையும் மிஸ் பண்ண மாட்டார்கள். "எடுறா தங்கத்தை, அடிறா சேணத்தை" என்று நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட இரண்டு தங்க சேணங்களையும் செய்து, அவற்றையும் அம்மனுக்கு காணிக்கையாகச் சமர்ப்பித்தார்


இன்றைக்கும் சித்திரை திருவிழாவின் ஐந்தாவது நாளில், மீனாட்சி தேவி தங்கக் குதிரையில் இந்த விசித்திரமான அணிகலங்களை பூட்டி, புன்னகையுடன் மாசி வீதிகளைச் சுற்றி வருகிறாள்.


முப்பது ரூபாய் குழல் மின் விளக்கை கோயிலுக்கு தானம் கொடுத்தாலும் "இன்னார் உபயம்" என்று பொறித்து கொடுப்பதுதான்  மக்களின் இயல்பு, சரித்திரம் முக்கியமல்லவா? வெளிச்சமே தெரியாமல் போனாலும், விளக்கு முழுவதும் தெரியும்படி கொட்டை எழுத்துகளில் இனிஷியலோடு முழு பெயர், ஊருடன் எழுத படவேண்டும் இது எழுதபடாத சட்டம் அல்லவா?!!!


அயல்நாட்டை சேர்ந்த பீட்டருக்கு இதன் தாத்பரியம் சரியாக பிடிபடவில்லை. பக்தியில் திளைத்த அவர், மீனாட்சி நடக்கும்போது அவள் திருப்பாதங்கள் தன் மேல் நடந்து போவதாக இருக்கட்டும் என்று சொல்லி, அவள் காலணிகளுக்கு அடிப்பாகத்தில் தன் பெயரை எழுத சொல்லிவிட்டார்.


பணி ஓய்வுக்குப் பின்னரும் பீட்டர் இங்கிலாந்துக்கு திரும்பவில்லை. தனது கடைசி நாட்களை மீனாட்சி பட்டிணத்திலேயே கழித்தார்.


மதுரையிலேயே காலமான அவர் மதுரை, மேல ஆவணி மூல வீதி் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.


பீட்டரின் கல்லறை, தேவாலயத்தின் பலிபீடத்தின் அடியில் ஒரு பாதாள அறையில் அமைந்துள்ளது.


கிருஸ்துவ தேவாலயத்தின் அறையில் அவரது இறுதி விருப்பப்படி, அவர்தம் முகம் மீனாட்சி கோயிலை நோக்கி இருக்குமாறு அடக்கம் செய்யப்பட்டார்.

Tuesday 15 November 2022

அகத்தியர் ஆலய பணிகள்

 அனைவருக்கும் வணக்கம் 🙏🏼     நமது பொகலூர் ஓம் ஸ்ரீ அகஸ்தியர் பீடத்தின் புதிய ஆலய கட்டிடிடம், ஸ்ரீ அகத்தியர் அய்யாவின் அருட்கருணையினாலும்,நமது அன்பர்களின் நன்கொடைகளாலும், பக்தர்களின் கைய்ங்கரியத்தாலும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது🌺.     இந்த பதிவில் நமது ஆலய பணிகள் நடைபெறக்கூடிய புகைப்படத்தினை பதிவேற்றம் செய்கிறோம்🪷.   நமது ஆலய பணிகள் மேலும் சிறப்பாகவும் விரைவாகவும் நடைபெற தங்களது மேலான ஆதரவையும் கொடைகளையும் தந்து சித்தர்கள் நாயகனாம் பேராருட்கருணை ஸ்ரீ அகத்தியரின் ஆசிகளுக்கு பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறோம் 🙏🏼 நன்றி 🌺  ஓம் ஸ்ரீ அகத்தீஸ்வராய நமக 🌼


Gpay 9176012104, Santhanam













கஞ்சமலை ரகசியங்கள்

 *💥கஞ்சமலை  ரகசியங்கள் !*


சித்தேஸ்வர ஸ்வாமி

கஞ்சமலை இது ஒர் அதிசயமலை பலருக்கும் தெரியாத ஒரு மலை. சித்தர்கள் வாழ்ந்த மலை *இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மலை.🌹🙏*

காலங்கி நாத சித்தர் என்பவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு ஆவார். திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர். கூடுவிட்டு கூடு பாய்வது உள்ளிட்ட அஷ்டமாசித்திகளை அறிந்தவர்.


காலாங்கி நாத சித்தரும், அவருடைய குரு திருமூலரும் மலைப்பகுதிகளில் மூலிகை தேடி அலைந்தனர்.அவ்வாறு மூலிகை தேடி அலையும் போது கஞ்சமலைக்கும் வந்தனர். திருமூலர், தன் சிஷ்யன் காலாங்கியை சமைக்கச் சொல்லி விட்டு, மூலிகை தேடி காட்டுக்குள் போய்விட்டார். அரிசி வெந்து கொண்டிருந்த போது, அதைக் கிளறுவதற்கு அகப்பை ஏதும் இல்லாததால், அருகிலுள்ள ஒரு செடியிலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக் கிளறினார். அவ்வளவு தான் சோறு கருப்பாகி விட்டது.


“”ஐயையோ! குரு வந்தால் கோபிப்பாரே,” என்ற பயம் ஏற்பட்டது காலாங்கிக்கு. உடனே, அவர் சமைத்த சோறு முழுவதையும் சாப்பிட்டு விட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நடுத்தர வயதில் இருந்த காலாங்கி, வாலிபனைப் போல் மாறி விட்டார். தன்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். எல்லாம், அந்த மூலிகைக்கம்பு படுத்திய பாடு தான்.


காட்டுக்குச் சென்ற திருமூலர் திரும்பி வந்தார். சீடனைக் காண வில்லை. யாரோ ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார்.


“”அடேய்! இங்கே என் சீடன் ஒருவன் இருந்தான் பார்த்தாயா? பசிக்கிறது. சாப்பாடு போடாமல் எங்கே போய் விட்டான்?” என்றார்.


இளைஞர் திருமூலரின் காலில் விழுந்தார்.

“”குருவே! நான் தான் காலாங்கி,” என்றவர் நடந்ததை எல்லாம் சொன்னார்.


திருமூலருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு, “”அடேய்! நான் வருவதற்குள் சாப்பிட்டு விட்டாயே. இதற்கு பரிகாரத்தை நீயே செய்து கொள்,” என்றார்.


காலாங்கி வேறு வழியின்றி கை விரலைக் தொண்டைக்குழிக்குள் வைத்து சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடுத்து விட்டார். திருமூலர் அவர் வாந்தி எடுத்ததை எடுத்துச் சாப்பிட்டார். அதன் பின் அவரும் இளைஞராகி விட்டார்.


இருவரும் இனைஞர்களான இடம், தற்போது கூட உள்ளது. இந்த ஊருக்கு பெயரே “ *இளம் பிள்ளை* ’. கஞ்சமலை அருகில் இந்த ஊர் இருக்கிறது. பின்னர் காலாங்கிக்கு சித்தர் என்ற அந்தஸ்தை அளித்து, அங்கு வரும் மக்களின் நோய்க்கு தருந்தபடி தகுந்த சிகிச்சையளிக்க உத்தரவிட்டார். காலாங்கியும் அங்கேயே தங்கி விட்டார். மக்கள் அவரை “காலாங்கி சித்தர்’ என் அழைத்தனர்.


ஒரு கால கட்டத்தில் அவர் இரும்புக்கல் தாதுவாக மாறி அப்படியே அமர்ந்து விட்டார். இவர் சிவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்ததாகவும், இவரது தவத்திற்கு இரங்கிய சிவன், இவருக்கு ஈஸ்வரபட்டம் கொடுத்து “சித்தேஸ்வரர்” என பெயர் மாற்றியதாகவு7ம் தல வரலாறு கூறுகிறது.


இதனால் லிங்கவடிவிலேயே சித்தரின் சன்னதி தற்போது இருக்கிறது.

கஞ்சமலை என்பது சேலம் மாவட்டத்தின் சேர்வராயன் மலைத்தொடரை சார்ந்த ஒன்றாகும்.


சேலம் மாவடத்திலுள்ள சின்னசீரகபாடி என்ற கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த மலை அதிகம் சித்தர்கள் வாழ்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது.


இந்த மலையில் சடையாண்டி சித்தர் வாழ்ந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது.மேலும் சித்தர் கோவில்,வற்றாத நீருற்றைக் கொண்டுள்ளது.


இது கொல்லிமலையின் ஒரு பகுதியாகும் இங்கு பதினெட்டு சித்தர்களுள் முதன்மை யானவர்களான திருமூலர், காலங்கிநாதர், அகத்தியர், கோரக்கர் ஆகியோர் வாழ்ந்த மலையாகும்


மேலும் இது பல சிறப்புகளை யுடையதாகும் .


பதினெட்டு சித்தர்களில் ஒருவரான காலங்கிநாதர் வெகுகாலம் வாழ்ந்த இடம் இதுவாகும். கௌ-லன்-கீ என்ற சீனதேசத்து யோகியே கஞ்சமலை வந்து தங்கி காலங்கி ஆனார் என்று கூறுவர்.


எங்களுக்காக சீனாவிலிருந்து வந்து இங்கே சித்தர் தங்கிவிட்டார் என்று அப்பகுதி மக்கள் இன்றளவும் கூறிவருவதைக் கேட்கலாம்.


கஞ்சமலையின் மேல் மலையில் அக்காலத்தில் சித்தர்கள் கூடி பல்வேறு ஆன்மீக, மருத்துவ, இரசவாத ஆய்வுகளை நடத்தியதாக சொல்லப்படுகிறது.


இன்றும் சித்தர்களின் பொருள்வேண்டி அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மேல்மலைக்குச் சென்று முழு இரவு தங்கி தவத்திலும், பூசையிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


கஞ்சமலையின் பெயர் காரணம் சற்று கவனிக்கத் தக்கதாகும். கஞ்சம் என்பது தங்கம், இரும்பு, தாமரை எனும் மூன்றுவித பொருள் கொண்டதாகும். தாமரையில் உதித்த கஞ்சன் எனும் பிரமன் உருவாக்கிய மலை இது என்பதால் கஞ்சமலை எனும் பெயர் பெற்றது எனலாம்.


மலை முழுவதும் இரும்புத்தாது மிக உயர்ந்தரகத்தில் நிறைந்துள்ளது. அதனால் கஞ்சமலை எனப் பெயர் பெற்றது எனலாம்.


இவை அனைத்திற்கும் மேலாக வரலாற்று ஆதாரங்களுடன் கூடிய ஒரு உண்மை என்னவென்றால் இம்மலையில் தங்கம் கிடைத்தது என்பதுதான்.

கஞ்சமலையிலிருந்து எடுக்கப்பட்ட தங்கத்தைப் பயன்படுத்தித்தான் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு (பராந்தக சோழனால்) பொன் கூரை வேயப்பட்டது.


அக்காலத்தில் கொங்கு நாடு என்பது கஞ்சமலையினை மையமாக வைத்து கிழக்கே மதிற்கோட்டைக் கரையையும், மேற்கே வெள்ளியங் கிரியையும், வடக்கே பெரும் பாலையையும், தெற்கே பழநியையும் எல்லைகளாகக் கொண்ட கொங்குமண்டலமாகும்.


சேலம், செவ்வாய்ப்பேட்டை, இராசிபுரம், குமாரபாளையம், அயோத்தியாபட்டணம் என எழுபத்தெட்டு நாடுகள் இதில் அடங்கும்.


பற்றறுத்தாளும் பரமன் ஆனந்தம் பயில்நடனஞ்செய்


சிற்றம்பலத்தைப் பொன்னம்பலம் ஆகச் செய்ச்செறும்பொன்


முற்றிலுந் தன்னகத்தேவிளை வாவதை மொய்ம்பிறையுள்


மற்றும் புகழக்கொடுத்த தன்றோ கொங்கு மண்டலமே.


(கொங்கு மண்டலச்சதகம் - கார்மேகக்கவிஞர்)


இப்பாடல் மூலம் கஞ்சமலையில் தங்கம் கிடைத்தது உறுதியாகிறது. அதுமட்டுமன்றி மலையிலிருந்து ஒடிவரும் நீரில் ஆற்றில் பொன் (பொன் தாது) கிடைத்ததால் அதனைப் பொன்நதி பொன்னிநதி என்று அழைக்கின்றனர்.


அந்நதியில் பொன் எடுத்தவர்கள் சமீபகாலம் வரை வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.


தங்கம் மட்டுமல்லாது கருமையான கஞ்சமலையில் கருநெல்லி, கருநொச்சி, கருஊமத்தை, கருந்துளசி என பல்வேறு காயகல்ப மூலிகைகள் உள்ளன. கஞ்சமலைக் காட்டினைக் கருங்காடு என்றும் கூறுவர்.


அதியமான் அவ்வைக்குத்தந்த கருநெல்லிக்கனி கஞ்சமலையில் விளைந்த கருநெல்லிக்கனியே ஆகும்.


இந்த அதியமான் ஆண்ட தலைநகரம் தான் தகடூர் ( இன்றைய தருமபுரி .சேலத்தின் அருகில் உள்ள ஊர் ) . இன்றும் தருமபுரி சேலம் சாலையில் அதியமான் கோட்டை என்ற ஊர் அதே பேரிலேயே உள்ளது ...


அங்கே கோட்டையையும் இன்றும் காணலாம் .இங்கே அதியமான் மன்னன் வணங்கிய கால பைரவர் கோவில் இன்றும் கூட மிக பிரசித்திமாக உள்ளது.


அஷ்டமி தினத்தன்று கோவில் கூட்டம் அலைமோதும் . இது பெங்களூர் போகும் வழித்தடத்தில் உள்ளதால் கர்நாடகா மற்றும் பெங்களூரிலுருந்து ஏராளமான பேர் வருகின்றனர் . தேவே கவுடா அடிக்கடி இங்கு வருவது வழக்கம் .


கஞ்சமலையில் தங்கத்தாது கிடைத்துள்ளது. அம்மலையில் சித்தர்கள் இரசவாதம் செய்துள்ளனர். சித்தர்களின் அருளாசி அங்கே இன்றும் பூரணமாக நிறைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.


சேலம் பகுதி மக்கள் அதிக அளவில் தங்கம் வாங்கி சேமிக்கும் பழக்கம் உடையவர்கள் .. அதனால் இன்று சேலத்தில் பத்தடிக்கு ஒரு நகை கடையை காணலாம் . தங்க நகை கடைகள் சேலத்தில் அதிக அளவு பரவி இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்


தங்கம் வேண்டுவோர் முழு நம்பிக்கையுடன் கஞ்சமலை சித்தரை வேண்டினால் கைதேர்ந்த இரசவாதியாகிய சித்தர் அருளால் தேவையான அளவு தங்கம் பெறலாம்.


பலரும் கொல்லிமலை, கல்வராயன்மலை, பர்வதமலை, பொதிகைமலை, சதுரகிரி என பல மலைகள் பற்றி கூறியிருக்கிறார்கள், ஆனால் கஞ்சமலை பற்றி யாரும் விரிவாக கூறவில்லை.


காலங்கிநாதரின் குருபக்தியை திருமூலர் கண்டது இந்தமலையில் தான் அவ்வையாருக்கு அதியமான் நெல்லிகனி கொடுத்ததும் இங்கு தான்,


அது விளைந்த இடமும் இங்கு தான் அங்கவை, சங்கவை திருமணம் நடந்ததும், அகத்தியர் இங்கிருந்து பொதிகைமலைக்கு சுரங்கம் மூலம் போனதாகவும், போலாம் எனவும்அவரே குறிப்பிடுகிறார்.


சிவனும், பெருமாலும் சுயம்பு வடிவாக கோயில் கொண்டுள்ள மலைகளுள் இதுவும் ஒன்றாகும்.


சுலுமுனை சித்தர் குகை, அகத்தியர் குகை, காலங்கி குகை ஆகியவைகளை உள்ளடக்கியது


சித்தர் பீடம், 77அடி உயரமுள்ள ஆஞ்சனேயர் சிலை ஆகியவற்றையும் கொண்டுள்ளது.


கஞ்சமலைசித்தர் கஞ்சமலையில் பிறந்ததாக அறியப்படுகிறது. இவர் வாழ்நாள் முழுவதும் குகையிலேயே களித்ததாக அறியப்படுகிறார்.


*💥இவர்அட்டமா சித்திகள் என்ற கலையில் காற்றில் பறக்கும் கலையை அறிந்தவர். இவர் மூலிகையையே ஆடையாக அணியும் பழக்கம் கொண்டவர். இவர் பறவைகளுக்கு பிரியமானவர்.*🙇‍♀️🙇‍♂️🌹🙏

Friday 11 November 2022

காகம் அர்ச்சகரை அழைத்து அபிஷேக பாலை அருந்தும் தினமும் நடைபெறும் அற்புதக்காட்சி

 காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் உள்ள  உக்கம்பெரும்பாக்கம் அருகே உள்ள அருள்மிகு நட்சத்திர விருச்ச விநாயகர் திருக்கோயிலில் எழுந்தருளி அருள் பாலிக்கும் சனீஸ்வர பகவான் கோயிலில் வரும் காகம் அர்ச்சகரை அழைத்து அபிஷேக பாலை அருந்தும் தினமும் நடைபெறும் அற்புதக்காட்சி . . .





கும்பகோணம் மகாமககுளம் சுற்றி உள்ள 16 மண்டபங்களில் உள்ள 16 சோடச மகா லிங்கங்கள்

 கும்பகோணம் மகாமககுளம் சுற்றி உள்ள 16 மண்டபங்களில் உள்ள 16 சோடச மகா லிங்கங்கள் அன்னாபிஷேக விழா 7-11-2022 நடபெற்றது.  இதனை தரிசிப்பது மிகவும் புண்ணியம். பூர்வ ஜெனம பாவங்கள் தொலைந்து பஞ்சம் நீங்கும் என்பது ஐதீகம் புகைப்படங்கள் குடந்தை- ப-சரவணன் 9443171383





ருத்ராட்சம் அணியும் முறை மற்றும் உண்மைத்தன்மை

 🪷ருத்ராட்சம்! 


🍀 சிவ சிவ :சிவாய நம🍀


ருத்ராட்சம் அணியும் முறை மற்றும் உண்மைத்தன்மை உணர்ந்து ருத்ராட்சம்  அணிய வேண்டும்.


முதலில் உண்மையான ருட்ரட்சத்தை அறிந்து வாங்க வேண்டும். ருத்ராட்சம் ஒரு முகத்தில் இருந்து இருபத்தியொரு முகங்கள் வரை உள்ளன. ஒரு இலந்தைப் பழத்தின் அளவுள்ள ருத்ராட்சம் மத்தியமான தரம், அதன் அளவு கூட கூட அதன் தரம் உயரும், அளவு குறைய குறைய தரம் குறையும்.


பத்ராட்சம் என்ற மணி ருத்ராட்சம் போலவே இருக்கும், அவை நல்ல பலன்களைத் தராது.


உண்மையான ருத்ராட்சத்தை நீரில் போட்டால் மூழ்கி விடும் போலியானவை மிதக்கும். மேலும் கல்லில் உரைக்கும் போது தங்க நிற கோடுகள் கல்லில் பதியும். இரு செம்பு நாணயங்கள் நடுவில் ருத்ராட்சத்தை வைத்தால், மின் சுழற்சியின் காரணமாக அது சுழலும். இவ்வாறு உண்மையான ருத்ராட்சத்தை சில ஆய்வுகள் மூலம் கண்டறியலாம்.


தாவர வகைகளில் மின் காந்த சக்தி ஒரு குறிப்பிடும் அளவு உள்ளது ருட்ராட்சதில் மட்டும்தான். ருத்ராட்சத்தை அணிவதாயின் சிவப்பு நிற நூலில் அணியவேண்டும். அல்லது செம்புக் கம்பியிலோ, தங்கக் கம்பியிலோ, வெள்ளிக் கம்பியிலோ அணியலாம்.


ஒரு சிவனடியாரிடம் இருந்து ருத்ராட்சத்தை அணியும் வழிமுறைகளை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. ஒரு நன்னாளில் நமக்குகந்த ருத்ராட்சத்தை வாங்கி சுத்தமான நீரில் கழுவிய பின்பு காய்ச்சாத பசும்பால், தேன், கற்கண்டு பொடி, நெய், தயிர் ஆகிய ஐந்து பொருட்களையும் ஒன்றாக கலந்து அபிசேகம் செய்ய வேண்டும். பிறகு சுத்தமாக துடைத்துவிட்டு ஒரு வளர்பிறை திங்கட்கிழமை அதிகாலையில் திருகோவிலில் பூஜை செய்து அணியவேண்டும்.


ருத்ராட்சத்தை தினமும் அணிவதற்கு முன்பாக நமது இஷ்ட தேவதா மந்திரத்தை நிச்சயமாக சொல்ல வேண்டும். சர்வ மந்திரங்களும் வசியம் ஆகக்கூடிய சிறந்த காந்த ஈர்ப்பு மண்டலத்தைக் கொண்டது ருத்ராட்சம்.


#ஒரு முக ருத்ராட்சம் ஏக முக ருத்ராட்சம் சூரியனுக்கு உரியது, சகலவிதமான பித்ரு தோஷங்களை விலக்கி எல்லா நலன்களையும், நல்ல வாழ்வையும் தரக்கூடியது. ஏக முகம் எனப்படும் ருத்ராட்சம் மிகவும் அரிதான ஒன்று, பல வருடங்களுக்கு ஒரு முறையே தோன்றக்கூடியது. சிவபெருமானின் பூரண அருளை தரக்கூடியது. இதனை ஒரு படி அளவுள்ள எதாவது ஒரு தானியத்தின் அடியில் வைத்தால் தானாகவே மேல வரக்கூடிய தன்மை உள்ளது என்று ஒரு பழமையான நூல் தெரிவிக்கிறது. மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’


#இரு முக ருத்ராட்சம் த்விமுக ருத்ராட்சம் அர்த்தநாரீஸ்வரர ுக்கும், நவக்கிரகங்களில் சந்திரனுக்கும் உரியதாகும். இதை அணிவதால் குடும்ப உறவுகளில் நல்ல சுமுகமான போக்கு நிலைக்கும். நம் உடலில் இருக்கும் நீர்த்தன்மையில் நன்மை தரத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஜாதகத்தில் சந்திர பலம் குறைதவர்களும், மனோ ரீதியான சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்களும் இருமுக ருத்ராட்சம் அணிவதால் நல்ல பலன்களை பெறலாம். மந்திரம்: ‘ஓம் நம’


#மூன்று முக ருத்ராட்சம் திரிமுக ருத்ராட்சம், அக்னி அம்சம் பெற்றது, செவ்வாய்க்கு உரியது. மனதில் தைரியத்தையும், துணிவையும் தருவதோடு உடலியக்கத்தில் துடிப்பான செயல்திறனையும் உண்டாக்கும். விளையாட்டுத் துறை, ராணுவத்துறை, தொழிற்சாலை போன்றவற்றில் உள்ளவர்கள் அணிந்தால் நல்ல பலன்களை தரும். மந்திரம்: ‘ஓம் க்லிம் நம’


#நான்கு முக ருத்ராட்சம் சதுர்முக ருத்ராட்சம் பிரம்மாவின் அம்சம் கொண்டது, புதனுக்கு உரியது. இதையணிவதால் சுவாச கோளாறுகள் கட்டுப்படும், திக்குவாய் உள்ளவர்களுக்கு பேச்சுத்திறன் மேம்படும். கணிபொறி, மின்னியல் ஆய்வுகள், நிர்வாக பொறுப்பு போன்றவற்றில் உள்ளவர்கள் இதை அணிவதால் நல்ல பலன்களை பெறலாம். மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’


#ஐந்து முக ருத்ராட்சம் பரவலாகக் காணக்கிடைக்கும் பஞ்சமுக ருத்ராட்சம் சிவ அம்சம் பொருந்தியது, குரு பகவானுக்கு உரியது. கல்வி அறிவையும், மனத்தின் சமநிலையையும் ஏற்படுத்தும். இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும், மேலும் இரத்த அழுத்தம் சமந்தமான நோய்களை நீக்கும். இது ஒரு காந்த ஆற்றலை உள்ளடக்கியது, நம்மை சுற்றி ஒரு கவசம் போன்று காப்பாற்றும். மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’


#ஆறு முக ருத்ராட்சம் சண்முக ருத்ராட்சம் முருகப்பெருமானின் அம்சம் கொண்டது, சுக்ரனுக்கு உரியது. மனத்தின் வசீகர சக்தியை மேம்படுத்தும். தொழில் ரீதியாக மற்றும் வெகுஜனத் தொடர்பு உள்ளவர்கள் அணிந்தால் ஜனவசிய சக்தியை பெற்று நல்ல பலன்களை பெறலாம். மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’


#ஏழு முக ருத்ராட்சம் சப்தமுக ருத்ராட்சம் மகாலட்சுமியின் அம்சம் கொண்டது, சனீஸ்வர பகவானுக்கு உரியது. சனிபகவானின் அலைவீச்சை சாதகமாக நன்மை தரும் விதமாக மாற்றக்கூடியது. வறுமை நீங்கவும், ஏழரை சனி மற்றும் சனி கிரக தோஷம் போன்றவற்றில் இருந்து விடுபட உதவும். இந்த ருத்ராட்சத்தை உடலில் அணிவதை விட பூஜை அறையில் வைத்து முறைப்படி வணங்குவதே நல்லது. மந்திரம்: ‘ஓம் ஹம் நம’


#எண் முக ருத்ராட்சம் அஷ்டமுக ருத்ராட்சம் விநாயகப் பெருமானின் அம்சம் கொண்டது, இராகுவின் அலைவீச்சை கட்டுப்படுத்தக் கூடிய காந்த மண்டல சுழற்சியை உடையது. ருத்ராட்சங்களிலேயே மிகவும் கவனமாக சோதனை செய்தபின்பு பூஜை அறையில் வைத்து முறைப்படி வணங்குவதே நல்லது. பெரும்பாலும் உடலில் அணிவதை தவிர்க்கப்படுகிறது. இந்த ருத்ராட்சம் நூதனமான அனுபவங்களை தரக்கூடியது, ஒருவரை அறிவியலின் அடிப்படைக்கு உட்படாத புதிரான விளைவுகளுக்கு உண்டாக்க கூடிய அதீத சக்தியின் சுழற்களம் அமையப்பெற்றது. மந்திரம்: ‘ஓம் ஹம் நம’


#ஒன்பது முக ருத்ராட்சம் நவமுக ருத்ராட்சம் அன்னை பராசக்தி, அத்யா சக்தியின் அம்சம் கொண்டது, கேதுவுக்கு உரியது. கேதுவின் கெடு பலன்கலான அடிபடுதல், கெட்ட கனவுகள், எதிர்மறை எண்ணங்கள் போன்ற சங்கடங்களை தீர்க்கும். இதனை அணிவதால் பொறுமையும், நிதானமும் நிலை நிற்பதோடு, மனதில் பயம் சார்ந்த உணர்வுகள் யாவும் விலகி விடும். பிற மொழிகளில் நிபுணத்துவம், இலக்கண, இலக்கியம் சார்ந்த அறிவின் மேம்பட்ட நிலைக்கு கொண்டு செல்லும். மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’


#பத்து முக ருத்ராட்சம் தசமுக ருத்ராட்சம் மகாவிஷ்ணுவின் அம்சம் கொண்டது, தசாவதாரங்களையும் குறிப்பது போல பத்து முகங்களை கொண்டது. ஹரிஹரர்களின் திருவருளை ஒருங்கே பெற்று தருவதாக நம்பப்படுகிறது. மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் நம’


#பதினோரு முக ருத்ராட்சம் ஏகதச ருத்ராட்சம் ருத்ர அவதாரமான ஆஞ்சநேயரின் அம்சம் கொண்டது. மனத்தின் ஆற்றலை பன்மடங்காக ஆக்கக் கூடியது. பிரம்மச்சரியத்தில் நிலை பெற விரும்புவோர் இதனை அணிந்து நற்பயன் பெறலாம். மந்திரம்: ‘ஓம் ஹ்ரீம் ஹம் நம’


#பன்னிரு முக ருத்ராட்சம் துவாதச ருத்ராட்சம் சூரிய பகவானின் திருவருளை பெற்றுத்தரக் கூடியது. அரசுத்துறை சார்ந்த வேலைவாய்ப்பை எதிர்பார்பவர்கள், பணியில் உயர்வு பெற விரும்புபவர்கள், ஆன்மிக பலம் வேண்டுவோர் இந்த பன்னிரு முக ருத்ராட்சம் அணியலாம். மந்திரம்: ‘ஓம் க்ரௌம் ஷௌம்,,,


   🌹 சிவாயநம🌹


     🌷 நமசிவாயா 🌷


🙏 கு பண்பரசு