Monday 1 July 2019

எனது அனுபவம் - ஈஸ்வர அனுக்கிரஹம்

இன்று ஒரு மகத்தான நாள்

என் அப்பன் ஈஸ்வரனின் அருள் கிடைத்த புண்ணிய திருநாள்

ஆணி மாதம் 15 ஆம் தேதித்ரயோதசி திதிரோகினி நட்சத்திரம் , தேய்பிறை பிரதோஷத்திருநாள் (30/06/2019).

காலை எதேச்சையாக பூமார்கட் சென்று பூஜை பொருட்களை  வாங்கிக்கொண்டு  இருந்த போது கடைக்காரர் இன்று பிரதோஷம் என்று  நினைவு படுத்தினார். சுத்தமாக பிரதோஷ தினத்தை மறந்தே விட்டிருந்தேன் . அவர் சொன்னவுடன் பார்த்தேன் வெள்ளை தாமரை விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டு இருந்தது. 10 வெள்ளை தாமரைகளை வாங்கி சென்று பிரதோஷ வேளையிலே வீட்டில் உள்ள சிவலிங்கத்திற்கு  தாமரையில் பூஜை செய்து பின்னர் மேலும் சில வெண்  தாமரைகளை சிவன்  ஆலயத்திற்கு எடுத்து சென்று கொடுத்து பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு பிரசாதம் பெற்று  திரும்பினேன் (அகத்தியர் பிரதோஷ நாளன்று சிவனுக்கு வெண் தாமரை வைத்து பூஜை செய்ய அறிவுறுத்தி உள்ளார் ).


பின்னர் வீடு  திரும்பியதும் உள்ளே இருந்து ஒரு - குரல்  "நாராயணி " அவர்களுக்கு அழைத்து பேசவும் என்று. இன்று காலையிலேயே  அவரை அழைத்து தொலைபேசியில் பேச வேண்டும் என்று உத்தரவு வந்தது. நான் வேலையாக இருந்து விட்டதால் அழைக்க மறந்து விட்டேன். ஆனால் மாலையில் மீண்டும் வந்த உத்தரவில் ஏன் அழைக்காமல் தாமதப்படுத்துகிறாய் - உடனே அழை என்று உத்தரவு.

நான் கேட்கிறேன், ஏன்  இப்போது அவர்களை அழைக்க வேண்டும் , அழைத்து என்ன கேட்க வேண்டும் என்று கேட்கிறேன். அப்போது  இது போன்று  பதில் வருகிறது - அவர்களை அழைத்து பேசி  பல நாள் ஆகிறது - இப்போது அவர்களை அழைத்து நலம் விசாரித்து கோவைக்கு எப்போது வருகிறீர்கள் என்று கேள் - என்று பதில் வருகிறது .

சரி என்று அவர்களை தொலைபேசியில் அழைக்கவே , அவர்கள் கைபேசியை எடுக்கவே இல்லை - அழைப்பிற்கு எந்த பதிலும் இல்லை - சரி அவர்கள் பிரதோஷ பூஜையில் ஏதாவது கோவிலில் இருப்பார்கள். உத்தரவு படி நாம் அழைத்தாகி விட்டது - அவர்கள் பேசவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும் என்று நான் எனது வேலைகளை பார்க்க துவங்கினேன்

சுமார் இரவு 8:25 மணிக்கு அவர்கள் என்னை அழைத்தார்கள் , தொலைபேசியில் அப்போது பேச இயலவில்லை - நீங்கள் அழைத்ததை இப்போது தான் பார்த்தேன் - என்ன விஷயம் என்று கேட்டார்கள் - நான் சும்மா தான் கூப்பிட்டேன் - நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் - பேசி ரொம்ப நாளாயிற்று என்று கூப்பிட்டேன் - அவர்கள் உடனேயே நான் இன்று இரவே உன் இல்லம் வருகிறேன் - கையில் ஈஸ்வரனின் விக்ரகம் வைத்து உள்ளேன் - உங்கள் இல்லம் வந்து ஈஸ்வரனின் விக்ரகத்தை வைத்து நானும் இன்னும் ஒரு அடியவரும்  தங்கி இருந்து காலை திண்டுக்கல் ஆஸ்ரமம் செல்கிறோம் என்று கேட்கிறார்

நான் நினைக்கிறேன் - என்னடா இது முன்னமே எதுவும் தெரிவிக்கவில்லை இரவு நேரத்தில் இப்படி கேட்க்கிறாரே - சரி என்று சொல்லுவோம் - என்று நினைத்து - தாராளமாக வாருங்கள் என்று கூறி விட்டேன் - அவர்கள் எங்கு இருக்கிறார்கள் , நமது இல்லத்திற்கு எந்த வண்டியில் வருகிறார்கள் வழி தெரியுமா என்று ஏதும் பேசவில்லை - உடனே தொலைபேசி துண்டித்து விட்டார்கள் - சரி அவர்கள் வருவார்களோ  இல்லையோ தெரியாது - இப்போதைக்கு நாம் வழி கூறாமல் அவர்களால் வர முடியாது - ஒரு வேலை வருவதனால் மீண்டும் அவர்கள் அழைப்பார்கள் அப்போது பார்த்து கொள்ளலாம் என்று நினைத்து கொண்டேன். நான் மீண்டும் வீட்டில் சென்று என் வேலைகளை பார்க்க துவங்கினேன்

மீண்டும் ஒரு  அரை மணி நேரத்தில் மறந்து போய் விட்டேன் சுமார் 9.30 மணி அளவில் கீழ் தளத்தை பூட்டிக்கொண்டு தூங்குங்கள் என்று மாமியாரிடம் சொல்லிவிட்டு நான் மேல் தளம் சென்று தூங்க சென்று விட்டேன். அப்போது மீண்டும் அவர்கள் அழைத்து நாங்கள் பெரியநாயக்கன் பாளையம் தண்டி வந்து கொண்டு இருக்கிறோம் - இங்கே இருந்து எப்படி வர வேண்டும் என்று சொல்லுங்கள் - மேலும் நாங்கள் ஹோட்டலில் சென்று ஈஸ்வர விக்ரகத்தையும் வைத்து கொண்டு சாப்பிட முடியாது - உங்கள் வீட்டிற்க்கே வந்து சாப்பிடுகிறோம் என்று வேண்டுகோள் வேறு - அவர் ஒரு பெண் சிவனடியார் - ஒரு சன்னியாசினி - அவர்களுக்கு உணவளிப்பது நமது பாக்கியம் - அனால் மாமியார் என்ன நினைப்பார்களோ - இந்த நேரத்தில் சமையல் செய்ய சொன்னால் அசௌகரியமாக எண்ணுவார்களோ என்று பயந்தேன் - சரி ஆனது ஆகட்டும் ஏற்கனவே வீட்டில் உணவு உள்ளது - போதவில்லை  என்றால் தானே சமைக்க வேண்டும் என்று எண்ணினேன்

நாராயணி மாதாஜி அவர்கள் ஒரு வாடகை காரில் வந்தார்கள் - வீட்டிற்கு வர கூகிள் வரைபடம் மற்றும் வழி ஆகியவை கூறினேன் - ஆனாலும் நேரில் மெயின் ரோடு சென்று அழைத்து வர வேண்டும் என்று நான் இரு சக்கர வாகனத்தில் மெயின் ரோடு சென்று அங்கே நின்று அவர்களை காட்டி அழைத்து வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்தேன்

அக்கா அவர்கள் ஈஸ்வர விக்ரகத்தை தனது மடியிலேயே வைத்து கொண்டு வந்தார் . அவர்க இருகுவதென்றால் விக்ரகத்தை யாரவது வாங்க வேண்டும் - நான் சென்று கார் கதவை திறந்து விட்டு விக்கிரகத்தை வாங்கி ஆலிங்கனம் செய்து நேராக பூஜை அறைக்கு சென்று அங்கே இருந்த வேங்கை மர பீடத்தில் வைத்து விட்டேன் - விக்கிரகம் துணியில் சுற்றப்பட்டு பையினுள் வைக்கப்பட்டு இருந்தது - பிரித்து பார்க்காமல் பையுடனேயே  பூசை அறையில் அப்படியே வைத்து விட்டேன்.

பின்னர் அக்கா அவர்கள் கூறியதாவது - இந்த விக்கிரகம் அத்தி மரத்தால் செய்யப்பட்டது - சிற்பி பெரியநாயக்கன் பாளையம் அருகே பால மலை அருகே இருக்கிறார் - அவரிடம் இருந்து இந்த விக்கிரகத்தை இப்போது தான் முதன் முறையாக ஆசிரமத்துக்காக வாங்கி வந்து இருக்கிறார்கள் - வாங்கி வந்து நேராக நமது இல்லம் வந்து வைத்து உள்ளார்கள் - விக்கிரகம் முதன்  முதலில் வந்து இருப்பது நமது வீடு தான் - ஆஹா பிரதோஷத்தன்று என்ன ஒரு புண்ணியம் ஈசுவரன் நம் வீடு தேடு வருகிறார் - கொண்டு வருபவர் நமது இல்லம் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்யவில்லை  - நமக்கு உள்ளே உத்தரவாக நாராயணி அக்காவை அழைக்க சொல்லி - அவர்கள் யாரிடம் உதவி கேட்பது என்று இருந்த நிலையில் , நாம் அழைத்தவுடனே - அதுவே ஈசுவரன் உத்தரவு என்று எண்ணி'- ஈசுவரனே நம்மை உதவிக்கு அனுப்பியதாக எண்ணி நேராக நமது இல்லம் வந்து விட்டார்கள் - என்னே ஈசுவரனின் கருணை

இதில் மிக சிறப்பான விஷயம் என்னவென்றால் - இந்த விக்கிரகம் செய்து உள்ளதன்  நோக்கம் இந்தியா முழுவதும் இந்த விக்கிரகத்தை கொண்டு திக்விஜயம் செய்ய வேண்டும்  என்பதே அது - அதற்க்கு முன் யாரும் செய்யாத அரிய யாகமான சப்தரிஷி யாகம் இந்த விக்கிரகத்தை வைத்து செய்து பின்னர் திக்விஜயம் மேற்கொள்ளப்படும் - திக்விஜயம் செய்யும் ஒவ்வொரு ஊரிலும் பக்தர்கள் இல்லத்தில் வைத்து பூசை செய்யப்படும் - இந்த சப்த ரிஷி யோகமானது கிட்டத்தட்ட அசுவமேத யாகம் போன்றதாகும் - இது அத்திரி மகரிஷி அனுசூயா தேவி அவர்கள் பல யுகங்கள் முன்னர் செய்த யாகம் போன்றதாகும் - மிகவும் சக்தி வாய்ந்த யாகம் அது நடைபெறும் நாள் 15.07.2019.

  இன்று நமது இல்லம் வந்தது தான் முதல் திக்விஜயம் - என்ன ஒரு பாக்கியம்அருள் - இல்லம் இறைவனின் கருணை - வந்த நாள் பிரதோஷம் - மறு  நாள் பூஜை செய்த நாள் - மாத சிவராத்திரி - வந்த நாள் திரயோதசி திதி - மறு  நாள் சிவராத்திரி அன்று திங்கட்கிழமை - சிவனுக்கு உகந்த நாள் - இரு சிவனடியார்களுக்கு உணவளித்தது , அதிகாலையில் சூரிய உதய -வேளையில்  சந்தியா வேளையில் அத்தி  மர ஈஸ்வரனுக்கு முதன் முதலில் சிவ பூஜை - வில்வ அர்ச்சனை , மலர் அர்ச்சனை , பன்னீர் அபிஷேகம் , சிவபுராணம் படித்தது சமஸ்க்ருத மந்திரம் சொல்லி பூஜித்து ,நெய்வேத்தியம் , தீப ஆராதனையாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் - தேடி வந்து அருள் செய்தது , அவனருளால் அவன் தாள் வணங்கி என்பது போல இருந்தது .

லிங்கம் நமது இல்லம் வந்த பொது - இது தான் ஆத்ம லிங்கம் என்று கூறினார்கள் .
நான் கடைசியாக பூஜை முடித்து ஈசுவரனுக்கு பிரியா விடை கொடுக்கும்  போது ஈசுவரனின் பெயராக "ஆத்மேஸ்வரா" என்று நான் அழைத்ததாகவும் - அது தான் அந்த லிங்கத்தின் பெயராக இருக்கும் என்றும் மாதாஜி அவர்கள் கூறினார் . ஆனால் நான் அவ்வாறு அழைத்ததாக எனக்கு தெரியவில்லை - என்னை மீறி என் வாய் இந்த பெயரை கூறியுள்ளது - மாதாஜி அவர்களுக்கும் அந்த பெயர் ஏற்புடையதாக தோன்றி இருக்கிறது . இறைவன் பெயரை வைப்பதற்கும் இறை அருள் என் மூலம் வழி செய்து கொண்டது .

அனைவரும் இந்த சக்தி வாய்ந்த சப்த ரிஷிகள் யாகத்திற்கு வந்திருந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இந்த யாகமும் திக்விஜயமும் முழுக்க முழுக்க  சாதுக்கள்,சந்யாசிகள் , சித்த மார்க்கத்தில் உள்ளவர்களால் நடத்தப்படுகிறது - சாதுக்கள் மடங்களுக்கு தங்களால் முடிந்த நிதி உதவி, பொருள் உதவி போன்றவை மிகவும் தேவைப்படுகிறது - அவர்கள் பல பூஜை பொருள்கள் செய்து விற்கிறார்கள் - யாகத்தில் கலந்து கொண்டு தங்காளால் முடிந்த உதவியை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் யாகத்தின் முழு விவரங்கள் இந்த  இணைக்கப்பட்டு உள்ள பத்திரிகை இல் காணவும்


த்ரிசக்தி மஹா சமஸ்தானம், ஸ்ரீ யோகி பாலரிஷிஸ்வரானந்தா ஸ்வாமிஜி அவர்களின் சிஷ்யை Yogini Narayani Mathaji Amma- யோகினி நாராயணி மாதாஜி அம்மா – 9487301999