Friday 28 September 2018

முருகர் புகழ் பாடும் அவ்வை

#முருகப்பெருமான்_அவ்வையாரிடம்

 #கேட்ட_கேள்விகள்!

#உலகில்_கொடியது_எது?

வாழ விரும்புகிறவன் மனிதன். அவன் வாழ்க்கைக்குத் தேவையான வளங்கள் அவனிடத்தில் நிரம்பி இருக்க வேண்டும். அதுவன்றி, அவனிடத்தில் வறுமை, வந்துவிட்டால், அது மிகவும் கொடியது. ஆனால் உணவு அன்பிலாத மனைவி அளிக்கும் உணவு அதைவிடக் கொடியது என்றார். தமிழ் மூதாட்டி.

#உலகில்_இனியது_எது?

இன்ப.. துன்பங்கள் ஆகிய இரண்டும் கலந்து வருவதே உலக வாழ்க்கை. இவற்றைத் தருவன புலன் இச்சை. ஆனால் புலன்களை ஒடுக்கித் தனிமையாக இருந்து, மனத்தை நல்ல நெறியிலே செலுத்துவதுதான் இன்பம். ஆனால், அறிவுடையாரை கனவிலும் நனவிலும் கண்டு இன்புறுவது அதனிலும் மிகவும் இன்பம் தருவதாகும்.

#உலகில்_பெரியது_எது?

இறைவன் அடியார்கள் உள்ளத்தில் வசிக்கிறான். எனவே தொண்டர்களது பெருமைதான் உலகத்தில் மிகப் பெரியது என்றார்.

#உலகில்__அரியது_எது?

மனிதராய்ப் பிறப்பது அரிது. அப்படிப் பிறந்தாலும் ஊமை, செவிடு, குருடு போன்ற குறைகள் நீங்கிப் பிறப்பது அரிது. அப்படி நன்றாகப் பிறந்தாலும், ஞானமும் கல்வியும் நம்மை வந்தடைவது அரிதாகும். அவற்றை மேற்கொண்டால்தான் சுவர்க்கம் செல்வதற்கான வழி கிடைக்கும் என்றார் அருந்தவ மூதாட்டி. இந்த அற்புதமான உலகியல் நீதிகளை ஔவையின் வாயால் நமக்காக எடுத்துரைக்க வைத்தான் தன் தமிழின் மிகுநேயனான ஆறுமுகச் செல்வன்.

#சரணம்_அடைந்தோம்_சண்முகனே..!

ஆறுபடைவீடுகளில் அருள்புரியும் ஆறுமுகனே! அகத்திய முனிவருக்கு உபதேசித்த குருநாதனே! ஈசனின் நெற்றிக்கண்ணில் அவதரித்த சிவபாலனே! கார்த்திகைப்பெண்டிரின் அன்பில் வளர்ந்த காங்கேயனே! வள்ளிக்கு வாய்த்தவனே! தவசீலர்களின் நெஞ்சில் குடியிருக்கும் தவமணியே! பச்சைமயிலில் பவனி வரும் பரம்பொருளே! உன் திருவடிகளைச் சரணடைகிறோம்.

ஞானதண்டாயுதபாணியே! செந்தூரில் வாழும் வேலவனே! பழநிமலையில் வீற்றிருப்பவனே! குன்றுதோறும் குடியிருக்கும் குமரக்கடவுளே! முத்தமிழில் வைதாரையும் வாழவைக்கும் வித்தகனே! பகைவனிடம் அன்பு காட்டிய பரம்பொருளே! சேவல்கொடியோனே! சிக்கல் சிங்காரவேலனே! தாயிற்சிறந்த தயாபரனே! கருணாகரனே! உன் பாதமலர்களைத் தஞ்சம் என வந்துவிட்டோம் ஏற்றுக்கொள்வாயாக.

தந்தைக்கு மந்திரத்தை உபதேசித்தவனே! கார்த்திகேயனே! வெற்றி வேலாயுத மூர்த்தியே! தேவர்களுக்கு வாழ்வளித்த தேவசேனாபதியே! தெய்வானை மணவாளனே! திருமாலின்மருமகனே! அருணகிரிக்கு அருள்செய்த ஆறுமுகா! பன்னிருகரங்களால் வாரிவழங்கும் வள்ளல் பெருமானே! அழகின் வடிவமாய்த் திகழ்பவனே! உன்னருளால் என் வாழ்வு வளம் பெற வேண்டும்.

கல்லாதவர்க்கு எளியவனே! கற்றவர்க்கு கனியாக இனிப்பவனே! அன்பர் வேண்டும் வரம் தருபவனே! முத்தமிழ் நாயகனே! ஆனைமுகனின் சோதரனே! திருப்புகழ் நாயகனே! வலிமை மிக்க பன்னிருதோள்களைக் கொண்டவனே! குழந்தைக்கடவுளே! எனக்கு ஆரோக்கியத்தையும், மனதில் மகிழ்ச்சியையும் நிலைக்கச் செய்வாயாக.

சிவபார்வதியின் செல்வமகனே! தணிகாசலனே! சங்கரன் புதல்வா! கதிர்காமம் வாழும் கதிர்வேல் முருகா! கந்தா! கடம்பா! சூரபதுமனுக்கு வாழ்வளித்த வள்ளலே! வெற்றிவேல் தாங்கி வருபவனே! வள்ளிமணாளனே! வாழ்வில் குறுக்கிடும் துன்பங்களைப் போக்கி நல்வழிக் காட்டியருள வேண்டும்.

தாமரை மலர் போன்ற திருவடிகளைப் பெற்றவனே! வேதம் போற்றும் சிவசண்முகனே! குறிஞ்சிக்கடவுளே! ஆறுதலை அமலனே! செங்கல்வராயனே! அவ்வைக்கு நாவல்பழம் தந்தவனே! அலைகடல் ஓரத்தில் அருளாட்சி நடத்திடும் செந்திலம்பதியே! கண் கண்ட தெய்வமே! கலியுகவரதனே! முத்துக்குமாரசுவாமியே! உன் திருவடியைத் தஞ்சம் என வந்து விட்டோம் அபயம் தர வேண்டுமய்யா!

சரவணப்பொய்கையில் உதித்தவனே! பிரம்மனுக்கு பாடம் புகட்டியவனே! பிள்ளைக் கடவுளே! முத்தமிழ்வித்தகனே! சுவாமிநாதனே! ஒருகை முகன் தம்பியே! அருணகிரிக்கு அருளியவனே! உன் கடைக்கண் காட்டி எங்கள் குறை தீர்த்திடப்பா,

#ஓம்_சரவணபவாய_நமஹ!!!



தருபவனும் நானே... பெறுபவனும் நானே... நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்... என் தரிசனம் பெறக் கண் தேவையில்லை.. மனதுதான் வேண்டும்..






மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..


'வெறுங்கையோடு பார்க்கப் போகாதே... ஏதாவது கொண்டு போ' என்றார்கள்..

குசேலனின் அவல் போல்... இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்..

மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்..

ரொம்ப உயரம் போலவே...
ஏற முடியுமா என்னால்...

மலையைச் சுற்றிலும் பல வழிகள்..
மேலே போவதற்கு...

அமைதியான வழி..
ஆழ்ந்த தியானத்தி்ன் வழி..
சாஸ்திர வழி...
சம்பிரதாய வழி..
மந்திர வழி..
தந்திர வழி..
கட்டண வழி..
கடின வழி...
சுலப வழி...
குறுக்கு வழி..
துரித வழி...
சிபாரிசு வழி...
பொது வழி..
பழைய வழி..
புதிய வழி..

இன்னும்...இன்னும்...கணக்கிலடங்கா...

அடேயப்பா....எத்தனை வழிகள்...

ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி..

கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்..

'என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை...'
ஒதுக்கினர் சிலர்..

'நான் கூட்டிப் போகிறேன் வா...
கட்டணம் தேவையில்லை..
என் வழியி்ல் ஏறினால் போதும்..
எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு...'
என கை பிடித்து இழுத்தனர் சிலர்...

'மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம்
உனக்குப்பதில் நான் போகிறேன்..
கட்டணம் மட்டும் செலுத்து'...
என சிலர்..

'பார்க்கணும் அவ்ளோதானே...
இங்கேயிருந்து காட்டுகிறேன் பார்..
அது போதும்.....
அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும்...'
ஆணவ அதிகாரத்துடன் சிலர்....

'அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது..
உன்னால் ஏறமுடியாது...
தூரம் அதிகம்.. திரும்பிப்போ...
அவரை என்னத்துக்குப் பார்க்கணும்..
பார்த்து ஆகப்போறது என்ன..'
அதைரியப்படுத்தினர் சிலர்...

'உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை..
ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும்
அது ஒரு வழிப்பாதை...
ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது...அப்படியே போவேண்டியதுதான்...'
பயமுறுத்தினர் சிலர்...

'சாமியாவது...பூதமாவது..
அது வெறும் கல்..
அங்கே ஒன்றும் இல்லை..
வெட்டி வேலை...
போய் பிழைப்பைப் பார்...'
பாதையை அடைத்து வைத்துப்
பகுத்தறிவு பேசினர் சிலர்...

என்ன செய்வது...
ஏறுவதா...
திருப்பிப் போவதா...

குழம்பி நின்ற என்னிடம்
கை நீட்டியது.. ஒரு பசித்த வயிறு..

கடவுளுக்கென்று கொணர்ந்ததை
அந்தக் கையில் வைத்தேன்..

'மவராசியா இரு...'

வாழ்த்திய முகத்தினைப் பார்த்தேன்..

நன்றியுடன் எனை நோக்கிய
அந்தப் பூஞ்சடைந்த கண்களிலிருந்து
புன்னகைத்தார் கடவுள்..!!!!

'இங்கென்ன செய்கிறீர்..!!'

* "நான் இங்கேதானே இருக்கிறேன்..."*

'அப்போ அங்கிருப்பது யார்..?'
மலை உச்சியை நோக்கிக் கை நீட்டினேன்..

* "ம்ம்ம்...அங்கேயும் இருக்கிறேன்...
எங்கேயும் இருப்பவனல்லவா நான்!
இங்கே எனைக் காண முடியாதவர்
அங்கே வருகிறார்...
சிரமப்பட்டு!!!!..."*

'ஆனால்'..திணறினேன்...
'இது உமது உருவமல்லவே...'

* "அதுவும் எனது உருவமல்லவே...
எனக்கென்று தனி உருவமில்லை..
நீ என்னை எதில் காண்கிறாயோ
அது நானாவேன்..."*

'அப்படியென்றால்..??'

* "வாழ்த்திய கண்களில் உனக்குத் தெரிபவனும் நானே....

பசித்த வயிற்றோடு கைநீட்டியவன்,
உணவளித்த உன் கண்களில்
காண்பதும் எனையே..

தருபவனும் நானே...
பெறுபவனும் நானே...

நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்...
என் தரிசனம் பெறக் கண் தேவையில்லை..
மனதுதான் வேண்டும்..." *

'அப்போ உனைப் பார்க்க
மலை ஏற வேண்டாம் என்கிறாயா??'..
குழப்பத்துடன் கேட்டேன்..

* "தாராளமாக ஏறி வா...
அது உன் விருப்பம்...
அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே..
அங்கு வந்தாலும் எனைப் பார்க்கலாம்.." *

'கடவுளே'...விழித்தேன்...
'எனக்குப் புரியவில்லை...'

* "புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல...

உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால்..
என்னைக் காண,  நீ சிரமப்பட்டு
மலையேறி உச்சிக்கு வரவேண்டும்...

பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால்...
நீ இருக்குமிடத்திலேயே
எனைக் காண்பாய்..

ஏனெனில்...
நான் ஒருபோதும்..
உன்னை விட்டு விலகுவதுமில்லை!!
உன்னைக் கை விடுவதுமில்லை!!!" *

புன்னகைத்தார் கடவுள்!

- படித்ததில் பிடித்தது.

அமானவன் யார்


Thursday 27 September 2018

நாட்டு மாடு, கோமாதா சிறப்பு, அறிவியல் பூர்வ நிரூபணம்

நமது காளை மாட்டை வலப்புறமாக ஐந்து தடவை வலம் வந்தால் நமது ஆரா சக்தி ஆறுமடங்கு அதிகரிக்கிறது என்பதை நிரூபிக்கும் வீடியோ...இதை தான் இந்துமதம் பல லட்சக்கணக்கான வருடங்கள் முன்பே சொன்னது . இதை சில நபர்கள் மூடநம்பிக்கை என்று சொல்லி எதிர்த்தவன் எல்லாம் அது உண்மை தான் என்று இப்பொழுது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது பழைய பழக்கம் எதுவும் மூட நம்பிக்கை இல்லை. இந்துமத தர்மசாஸ்திரம்  விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.இந்துவாக பிறந்தது  புண்ணியம். இந்து தர்மப்படி வாழ்வது மிகப்பெரிய புண்ணியம்.....




ஸ்ரீ வைத்தியநாதர் பதிகம்

ஸ்ரீ வைத்தியநாதர் பதிகம் பாடுவோம் !வாழ்விலேமுன் னேற்றுவைத்ய நாதனே!சிவாயநம திருச்சிற்றம்பலம்

ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய

உன்னையன்றி வேறுதெய்வம் உள்ளம் எண்ண வில்லையே
ஓசைகொண்ட தமிழினாலே பாடுவேன் உன் பிள்ளையே
அன்னை, பிள்ளை மழலையிலே அகம் குழைதல் போலவே
அணிய வேண்டும் எனது சொல்லும் ஆதி வைத்தியநாதனே. 1

தேசமெங்கும் கோயில்கள் திறந்து வைத்த வாயில்கள்
தேடும் அன்பர் யார்க்கும் இன்பம் கோடிநல்கும் மூர்த்திகள்
பூசைகொள்ளும் தேவர்கள் யாவையும் நின் கோலமே
போற்றும் என்னை வாழ்விலேமுன் னேற்றுவைத்ய நாதனே 2

ஓதும் நாலு வேதமும் உலாவு திங்கள், ஞாயிறும்,
உகந்த கந்தவேள், சடாயு உண்மை அன்பின் ராமனும்
பாதபூசை செய்யவே பலன் கொடுத்த ஈசனே
பாதிகொண்ட தையலோடு வாழி வைத்ய நாதனே 3

ஆலகால நஞ்சை நீ அமிர்தமாய் அருந்தினாய்
அடித்துவைத்த பன்றியின் இறைச்சியும் விரும்பினாய்
பாலன் நஞ்சு தேடவோ? பன்றிவேட்டை ஆடவோ?
படைத்தபா சுவைத்தருள் பராவும் வைத்ய நாதனே. 4

வாத, பித்த, சிலேட்டுமம் வகைக்கு நூறு நோய்க்குலம்
மனிதராசி அறிகிலாத புதிய நோய் தினம், தினம்
வேதனை வளர்ந்ததன்றி வென்றதோ மருத்துவம்?
மேலும் என்ன கூறுவேன்? கண் பாரும், வைத்ய நாதனே 5

ஆயுர்வேதம் ஆங்கிலம் அமைந்த சித்தவைத்தியம்
ஆனவேறு வகையிலும் அனேகமான பத்தியம்!
பாயும் நோயும் போனதே? பலித்து நன்மை ஆனதோ?
பாவியேன் என் கூட்டத்தோடுன் பாரும் வைத்ய நாதனே. 6

அங்குமிங்கும் ஓடிஎன்ன? அகலவில்லை நோய்களே
ஆடி என்ன? பாடி என்ன? விலகவில்லை பேய்களே
மங்கைபாகன் நீயிருக்க எங்கு செல்வோம் சேய்களே?
மனமிரங்கி அருள்வழங்கு வாழி வைத்யநாதனே. 7

கண்ணில்லாத குருடருக்கும் கண்கொடுக்கும் ஈசனே
கால் இலாத முடவருக்குக் கால் கொடுக்கும் போஜனே
எண்ணிலாத நோயின் கூட்டம் இடமிலாமல் ஓடவே,
என்னுளே எழுந்தருள்வாய் அண்ணல் வைத்ய நாதனே. 8

சிந்தையில் இருந்த நோய் செயல்களால் விளைந்த நோய்
திசுக்குள், தோல், நரம்(பு), எலும்பு, குருதியில் செறிந்த நோய்
எந்த நோயும் போக்குவாய் எதிர்வராமல் ஆக்குவாய்
இசைந்தகந் புரியிலே அமர்ந்த வைத்யநாதனே. 9

நாம, ரூப பேதமற்ற ஞான ஜோதி மூர்த்தியே
நாளும் உன்னை அன்புசெய்து பாடுகின்றேன் வாழ்த்தியே
சாமவேத கீதனே சடாயு போற்றும் பாதனே
தஞ்சம், தஞ்சம், தஞ்சம் என்னைத் தாங்கு வைத்ய நாதனே. 10
சிவாயநம திருச்சிற்றம்பலம்

Tuesday 25 September 2018

அகத்தியர் ஜீவ நாடி அருளுரை, எனக்கு உரைத்தது 24Sep18

ௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐ

நான் கடந்த வாரம் திருவண்ணாமலை பருவதமலை சதுரகிரி ஆகிய திருத்தலங்களுக்கு 3 நாள் தொடர்ந்து ஒரு யாத்திரையாக புறப்பட்டு சென்று வந்தேன்

பௌர்ணமி அன்று அகத்தியர் ஜீவ நாடியில் என்னை பற்றி கேட்ட போது அகத்தியர் உரைத்த வரிகள் கீழ்வருவன

என் மழலைக்கு சிறு சிறு இன்னல்களை கொடுத்து யாமே அழைத்து சென்றோம்

அவனுக்கு இயற்கையின் நிலையில் அற்புதங்களை தந்தோம்

வானர வடிவில் வந்து வந்து காட்சி தந்தோம்

யாம் மனம் மகிழ்ந்தோம்

அவன் கர்ம வினைகள் யாவையுமே விட்டு ஒழிந்தது

வாசனை வடிவில் வந்து புலன் உணர்த்தினோம்

வானரமாக வந்து அவனை ஆசீர்வாதம் செய்தோம்

தென்றலாக வந்து அவனை தொட்டு தழுவி சென்றேன்

பின்னர் ஒரு கோ பசு மாடாக வந்து அவனுக்கு குரல் கொடுத்தேன் மூன்று முறை

பைரவர் வடிவில் வந்து காட்சி தந்தேன்

 என் மழலையை பக்குவ நிலைக்கு அழைத்துச் செல்லவே யாம் தலங்களுக்கு அழைத்து சென்றோம்

பெரும் விபத்திலிருந்து அவனை காக்கவே அவனை சதுரகிரிக்கு அழைத்து சென்றோம்

எமது ஆலய திருப்பணியை ஐப்பசி கார்த்திகை நன்னாளில் ஆரம்பிக்கவும்

கண்டம் விட்டு கண்டம் வந்து முயற்சி கொடுப்பார்கள் ஏழு பேர் வெளிநாட்டில் இருந்து வந்து ஒன்று சேர்ந்து உதவி செய்வார்கள்

எல்லாமே என் மழலையின் முன்னிலையில் செய்ய வேண்டும் அவன் தான் முன்னிலை வகிக்க வேண்டும் அதற்கு வேண்டிய செல்வம் யாமே தருவோமே.

முற்றே.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻




Wednesday 19 September 2018

சுருளிமலை கைலாசநாதர் குகை

சுருளிமலை கைலாசநாதர் குகை.

சிவன் தவம் செய்த குகை

காணக்கிடைக்காத அற்புதமான பதிவு .


Tuesday 18 September 2018

கர்ம வினை களையும்நவபுலியூர்

கர்ம வினை களையும்நவபுலியூர்

வாழும் இந்த ஜென்மத்தில் அவரவர் செய்த பாவ புண்ணிய பலன்களுக்கு ஏற்பவே கர்மவினைகள் ஒருவரை தாக்குகின்றன. அந்த கர்மாக்களின் அளவுக்கேற்ப தண்டனை தரும் சக்தி ஒவ்வொரு நவக்கிரக நாயகர்களுக்கும் தனித்தனியே தரப்பட்டு உள்ளது.

 ஒவ்வொருவருடைய வாழ்நாளிலும் குறிப்பிட்ட காலங்கள் நவக்கிரக நாயகர்களின் ஆட்சியில் இருக்கின்றன. என்னென்ன வினைப் பலன்களை அவர்களால் அழிக்க முடியும் என்ற விதிப்படி இயங்கும் வகையில் நவகிரகங்களின் சக்திகள் வரையுறுத்தப்பட்டு உள்ளன. ஆகவே ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அனுபவிக்க வேண்டிய கர்மவினைப் பலன்களை, தம்முடைய ஆட்சி காலத்தில் அவர்கள் இருக்கும்போது நவகிரக நாயகர்கள் நிறைவேற்றுகிறார்கள். இதனால்தான் கர்மவினைப் பலங்களினால் கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பவர்கள் நவகிரக
ஆலயங்களுக்கு சென்று நவகிரகங்களை வழிபட்டு அவர்களுடைய அருளை வேண்டி நிற்கிறார்கள்.

சிவபெருமான் வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி மகரிஷிகளை பூமியிலே பிறப்பு எடுக்க வைத்து, தான் சுயம்புவாக அருள்பாலிக்கும் ஒன்பது ஆலயங்களுக்கு சென்று தரிசிக்கும் வகையில்  *நவபுலியூர் யாத்திரையை* மேற்கொள்ள வைத்து கர்மவினைகளைக் களைய (நவக்கிரகங்களை தாண்டி) அருளியிருக்கிறார். இதைப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.

முதலில் *சிதம்பரத்தை* சென்றடைந்து முக்கால பூஜைகளை தரிசனம் செய்த பின் சிதம்பரத்தில் இருந்து அடுத்த நாள் காலை கிளம்பி *திருப்பாதிரிப்புலியூர்* சென்று அங்கு ஆலய தரிசனம் செய்தபின் அங்கிருந்து கிளம்பி *எருக்கத்தம்புலியூர்,* *ஓமாம்புலியூர்,* *கானாட்டம்புலியூர்* மற்றும் *சிறுப்புலியூர்* ஆலயங்களின் தரிசனத்தை அன்று இரவுக்குள் முடித்துக் கொள்ளலாம்.

அங்கிருந்து அடுத்தநாள் காலை கிளம்பி *அத்திப்புலியூர்,* *தப்பளாம்புலியூர்* மற்றும் *பெரும்புலியூர்* ஆலயங்களை தரிசனம் செய்த பின் அங்கிருந்து கிளம்பிச் சென்று *திருப்பட்டூர்* மற்றும் *திருவரங்கம்* ஆலயங்களை தரிசனம் செய்ய வேண்டும். பிறகு திருவரங்கத்தில் இருந்து கிளம்பி நேராக வீட்டுக்கு சென்று விட வேண்டும்.

*இடையே வேறு ஆலயத்துக்கு செல்லக் கூடாது.*

இதுவே கர்மவினைகளை கழட்டி எறியும் *நவபுலியூர் யாத்திரை*

கும்பகோணம் கோயில்கள் 62

கும்பகோணம் கோயில்



கள் 62.

சென்று வாருங்கள். வாழ்வில் வசந்தம் வீசும். மன நிம்மதி கிடைக்கும. கண்டிப்பாக நடக்கும்

I.  From திருக்கொட்டையூர் to திருவைக்காவூர்

1.  திருக்கொட்டையூர் - கோடீஸ்வரர் திருக்கோயில்
     (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
     கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது

2.  திருவலஞ்சுழி - கபர்தீஸ்வரசுவாமி திருக்கோயில்
     (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
     திருக்கொட்டையூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

3.  சுவாமிமலை - சுவாமிநாதசுவாமி திருக்கோயில்
     (முருகரின் நான்காவது படை வீடு)
     திருவலஞ்சுழியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

4.  புள்ளபூதங்குடி – வல்வில்ராமன் திருக்கோயில்
     (திவ்ய தேசம்)
     சுவாமிமலையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

5.  ஆதனூர் - ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்
     (திவ்ய தேசம்)
     புள்ளபூதங்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

6.  இன்னம்பூர் - எழுத்தறிநாதர் திருக்கோவில்
     (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
     ஆதனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

7. திருப்புறம்பயம் - சாட்சிநாத சுவாமி திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
    இன்னம்பூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

8.  திருவிசயமங்கை - விஜயநாதர் கோவில்
     (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
     திருப்புறம்பயத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

9.  திருவைக்காவூர் - வில்வவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில்
     (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
     திருவிசயமங்கையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

                                                * * * * *

II.  From திருநாகேஸ்வரம் to திருந்துதேவன்குடி

1.  ஒப்பிலியப்பன் கோயில்
     (திவ்ய தேசம்)
     கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

2. திருநாகேஸ்வரம் - நாகநாதசுவாமி கோவில்
     (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
     ஒப்பிலியப்பன் கோயிலிருந்து அரை கி.மீ தொலைவில்
      உள்ளது.

3.  தேப்பெருமாநல்லூர் - விஸ்வநாதசுவாமி திருக்கோயில்
     திருநாகேஸ்வரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

4. திருபுவனம் - கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோவில்
    (சரபேஸ்வரர் கோயில்)
    தேப்பெருமாநல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

5. திருவிசைநல்லூர் - சிவயோகிநாத சுவாமி கோவில்   
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    திருபுவனத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

6. திருந்துதேவன்குடி - கற்கடேஸ்வரர் திருக்கோயில்
    (நண்டாங் கோயில்) 
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
     திருவிசைநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

                                                      * * * * *

III. From திருவிடைமருதூர் to திருவாவடுதுறை

1.  திருவிடைமருதூர் - மகாலிங்கேசுவரர் கோவில் 
     (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
     கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது

2. தென்குரங்காடுதுறை - ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
     (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
     திருவிடைமருதூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

3.  திருமங்கலக்குடி - பிராணநாதேஸ்வரர் கோயில்
     (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
     தென்குரங்காடுதுறையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

4.  சூரியனார் கோயில் - சிவசூரியப் பெருமான் கோயில் 
     திருமங்கலக்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

 5. கஞ்சனூர் - அக்னீஸ்வரர் கோயில் (சுக்ர ஸ்தலம்)
     (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
     சூரியனார் கோயிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

6.  திருக்கோடிகாவல் - திருக்கோடீஸ்வரர் கோவில்
     (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
     கஞ்சனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

7.  திருவாவடுதுறை - மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
     (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
     திருக்கோடிகாவலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

                                                      * * * * *

IV.  From தாராசுரம் to ஊத்துக்காடு

1.  தாராசுரம் – ஐராவதீஸ்வரர் திருக்கோயில் 
     கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

2. பழையாறை வடதளி (முழையூர்) – சோமேஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
    தாராசுரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

3.  பட்டீஸ்வரம் – தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்
     (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
     பழையாறையிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

4.  திருசத்திமுத்தம் – சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்
     (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
     பட்டீஸ்வரம் கோவிலுக்கு ½ கி.மீ தொலைவில் உள்ளது.

5.  ஆவூர் (கோவிந்தகுடி) – பசுபதீஸ்வரர் திருக்கோயில்
      (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
      திருசத்திமுத்தம் கோயிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

6.  ஊத்துக்காடு - காளிங்கநர்த்தனர் திருக்கோயில்
     ஆவூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
                             
                                                   * * * * *

V.  From திருக்கருகாவூர் to திருக்கொள்ளம்புதூர்

1. திருக்கருகாவூர் – முல்லைவனநாதர் திருக்கோயில் -
    (முல்லைவனம்)   
    விடியற்கால வழிபாட்டிற்குரியது.
    தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்
    கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.

2.  திருஅவளிவநல்லூர் – சாட்சிநாதசுவாமி திருக்கோயில்
     (பாதிரி வனம்)
     காலை வழிபாட்டிற்குரியது.
     தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்
     திருக்கருகாவூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.

3.  ஹரித்துவாரமங்கலம் (அரதைப்பெரும்பாழி) 
     பாதாளேஸ்வரர் திருக்கோயில் (வன்னிவனம்) 
     உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது.
     தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.
     திருஅவளிவணல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

4.  ஆலங்குடி – ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
     (திருஇரும்பூளை)
     பூளைவனம்
     மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது.
     தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்.
     அரித்துவாரமங்கலத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது

5.  திருக்கொள்ளம்புதூர் – வில்வவனநாதர் திருக்கோயில்
     (வில்வவனம்)
     அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.
     தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்.
     ஆலங்குடியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது.

                                                         * * * * *

VI. From சிவபுரம் to நாதன் கோயில்

1.  சிவபுரம் - சிவகுருநாதசுவாமி திருக்கோயில்
     (தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்)
     கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

2.  சாக்கோட்டை (கலயநல்லூர்) - அமிர்தகலசநாதர் திருக்கோயில்
     (தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்)
     சிவபுரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

3.  கருவளர்ச்சேரி - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத
     அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில்
     (குழந்தை பேறு வேண்டுபவர்கள் இக்கோயிலில் வழிபடலாம்)
     சாக்கோட்டையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

4.  மருதநல்லூர் (கருக்குடி) – சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்
     (தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்)
     கருவளர்ச்சேரியிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது.

5.  கீழக்கொருக்கை – பிரம்மபுரிஸ்வரர் திருக்கோயில்
     (அவிட்டம் நட்சத்திரக்காரர்களின் பரிகார ஸ்தலம்)
     மருதநல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

6.  நாதன் கோயில் (நந்திபுர விண்ணகரம்) - ஜெகந்நாத பெருமாள்
     திருக்கோயில்
     (திவ்ய தேசம்)
     கீழக்கொருக்கையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

                                                           * * * * *

VII.  From திருநல்லூர் to திருவையாறு

1.  திருநல்லூர் - பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் -
     (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
     கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது

2.  பாலைத்துறை - பாலைவனநாதர் திருக்கோயில்
     (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
     திருநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

3.  பாபநாசம் - ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் -
     108 சிவலிங்க கோயில்
     பாலைத்துறையிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

4.  கபிஸ்தலம் - ஸ்ரீ கஜேந்திர வரதன் திருக்கோயில் -
     (திவ்ய தேசம்)
     பாபநாசத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

5.  திருக்கூடலூர் - ஸ்ரீ ஜெகத்ரட்சக பெருமாள் திருக்கோயில் –
     (திவ்ய தேசம்)
     கபிஸ்தலத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

6.  வடகுரங்காடுதுறை - தயாநிதீஸ்வரர் திருக்கோயில் -
     (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
     திருக்கூடலூரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

7. திங்களூர் - கைலாசநாதஸ்வாமி திருக்கோயில் –
    (சந்திரன் ஸ்தலம்)
    வடகுரங்காடுதுறையிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.

8. திருப்பழனம் - ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் –
    (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
    திங்களூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

9.  திருவையாறு - ஐயராப்பன்  திருக்கோயில் –
     (தேவாரப் பாடல் பெற்ற தலம்)
     திருப்பழனத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

                                                            * * * * *

VIII.  From அழகாபுத்தூர் to குடவாசல்

1.  அழகாபுத்தூர் - ஸ்வர்ணபுரீஸ்வரர் (படிக்காசுநாதர்) திருக்கோயில்
     (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
     கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் நாச்சியார் கோயில்
     போகும் வழியில் இருக்கிறது. திருநறையூர் என்ற ஊரின் முன்னால் 
      அழகாபுத்தூர் உள்ளது

2.  திருநறையூர் -  சித்த நாதேஸ்வரர் திருக்கோயில்
     (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
     அழகாபுத்தூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருநறையூர்
     பேருந்து நிறுத்தத்தில் இருந்து மிக அருகில் கோயில் உள்ளது.

3.  நாச்சியார்கோவில் - திருநறையூர் நம்பி திருக்கோயில்
     (திவ்யதேசம்)
     சித்த நாதேஸ்வரர் கோயிலில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது.

4.  ஆண்டான் கோயில் – ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
      (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
      நாச்சியார்கோயிலில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது.
 
5.  திருச்சேறை – சாரநாதப்பெருமாள் திருக்கோயில்
     (திவ்யதேசம்)
     ஆண்டான் கோயிலில் இருந்து  6 கி.மீ. தூரத்தில் உள்ளது.

6.  திருச்சேறை – சாரபரமேஸ்வரர் திருக்கோயில்
     (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
     சாரநாதப்பெருமாள் கோயிலில் இருந்து 1/2 கி.மீ. தூரத்தில் உள்ளது.

7.  நாலூர் – பலாசவனேஸ்வரர் திருக்கோயில்
     சாரபரமேஸ்வரர் கோயிலில் இருந்து 2  கி.மீ. தூரத்தில் உள்ளது.

8.  திருநாலூர் மயானம் - ஞானபரமேஸ்வரர் திருக்கோயில்
     (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
     நாலூரிலிருந்து  2  கி.மீ. தூரத்தில் உள்ளது.

9.  குடவாசல் - கோணேஸ்வரர் திருக்கோயில்
     (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
     திருநாலூர் மயானத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.

                                                            * * * * *

IX.  From திருநீலக்குடி to திருப்பாம்பரம்

1.  திருநீலக்குடி - நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
     (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
    கும்பகோணத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது.

2.  திருவைகல் மாடக்கோவில் - வைகல்நாதர் திருக்கோயில்
     (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
     திருநீலக்குடியிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது.

3.  கோனேரிராஜபுரம் - உமா மஹேஸ்வரர் திருக்கோயில்
     (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
     திருவைகல் மாடக்கோயிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

4. திருவீழிமிழலை - வீழிநாத சுவாமி திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
   கோனேரிராஜபுரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

5.  திருப்பாம்பரம் - பாம்பு புரேஸ்வரர் கோவில்
     (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
     திருவீழிமிழலையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

108 திவ்ய தேசங்கள்

108 திவ்ய தேசங்கள்


108 திவ்ய தேசங்கள். இனி 108 திவ்ய தேசங்களையும் அந்த திவ்ய தேசங்களின் தாயார் யார், பெருமாள் யார், அந்த தலம் எந்த மண்டலத்தில் இருக்கிறது, எந்த நகருக்கருகில் இருக்கிறது போன்ற விவரங்களை இந்த பட்டியலில் காணலாம்.

1-ஸ்ரீரங்கம்
(திருவரங்கம்)
ஸ்ரீரங்க நாச்சியார்
ஸ்ரீ ரங்கநாதன்
நம்பெருமாள்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

2-திருக்கோழி
(உறையூர், நிசுலாபுரி, உரந்தை)
ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்
ஸ்ரீ அழகிய மணவாளன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

3-திருக்கரம்பனூர் (உத்தமர் கோவில், கடம்ப க்ஷேத்ரம்)
ஸ்ரீ பூர்வ தேவி
ஸ்ரீ புருஷோத்தமன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

4-திருவெள்ளறை (வேதகிரி க்ஷேத்ரம்)
ஸ்ரீ செண்பகவல்லி நாச்சியார்
ஸ்ரீ புண்டரீகாக்ஷன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

5-திருஅன்பில்
ஸ்ரீ அழகியவல்லி நாச்சியார்
ஸ்ரீ வடிவழகிய நம்பி
ஸ்ரீ சுந்தரராஜன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

6-திருப்பேர்நகர் ,அப்பக்குடத்தான்
ஸ்ரீ கமலவல்லி (இந்திரா தேவி)
அப்பலா ரங்கநாதன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

7-திருக்கண்டியூர்
ஸ்ரீ கமலவல்லி
ஹர சாப விமோசன பெருமாள்
கமலநாதன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

8 -திருக்கூடலூர்,
ஆடுதுறை பெருமாள் கோவில்
ஸ்ரீ பத்மாசனி (புஷ்பவல்லி)
வையம் காத்த பெருமாள் (ஜகத்ரக்ஷகன்)
சோழ நாடு,கும்பகோணம்

9-திரு கவித்தலம் (கபிஸ்தலம்)
ஸ்ரீ ரமாமணிவல்லி (பொற்றாமரையாள்)
கஜேந்திர வரதன்
சோழ நாடு,கும்பகோணம்

10-திருப்புள்ளம் (பூதங்குடி)
ஸ்ரீ பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி)
ஸ்ரீ வல்விலி ராமர்
சோழ நாடு,கும்பகோணம்

11-திரு ஆதனூர்
ஸ்ரீ ரங்கநாயகி
ஸ்ரீ ஆண்டளக்குமையன்
சோழ நாடு,கும்பகோணம்

12-திருகுடந்தை
(பாஸ்கர க்ஷேத்ரம்)
ஸ்ரீ கோமளவல்லி (படிதாண்டா பத்தினி)
ஸ்ரீ சாரங்கபாணி
சோழ நாடு,கும்பகோணம்

13-திருவிண்ணகர்,
ஒப்பிலியப்பன் கோயில்
ஸ்ரீ பூமிதேவி நாச்சியார்
ஸ்ரீ ஒப்பிலியப்பன் (ஸ்ரீநிவாசன்)
சோழ நாடு,கும்பகோணம்

14-திரு நறையூர்,
நாச்சியார் கோயில்
ஸ்ரீ வஞ்சுளவல்லி நாச்சியார்
திருநறையூர் நம்பி
சோழ நாடு,கும்பகோணம்

15-திருச்சேறை
ஸ்ரீ சாரநாயகி (சார நாச்சியார்)
ஸ்ரீ சாரநாதன்
சோழ நாடு,கும்பகோணம்

16-திரு கண்ணமங்கை
ஸ்ரீ அபிசேக வல்லி
பக்த வத்சல பெருமாள்
சோழ நாடு,கும்பகோணம்

17-திருக்கண்ணபுரம்(கிருஷ்ணாரண்யா, பஞ்சக்ருஷ்ண, சப்த புண்ணிய க்ஷேதரம்)
ஸ்ரீ கண்ணபுர நாயகி
நீல மேகப் பெருமாள்
சௌரிராஜ பெருமாள்
சோழ நாடு,நாகப்பட்டினம்

18-திரு கண்ணங்குடி
ஸ்ரீ லோகநாயகி (அரவிந்த வல்லி)
ஸ்ரீ லோகநாதன் (சியாமளமேணிப் பெருமாள்)
தாமோதர நாராயணன்
சோழ நாடு,கும்பகோணம்

19-திரு நாகை,
நாகப்பட்டினம்
ஸ்ரீ சௌந்தர்ய வல்லி
நீலமேகப் பெருமாள்
சௌந்தர்யராஜன்
சோழ நாடு,நாகப்பட்டினம்

20-தஞ்சைமாமணி கோயில்
ஸ்ரீ செங்கமல வல்லி
நீலமேகப் பெருமாள்
சோழ நாடு,தஞ்சாவூர்

21-திரு நந்திபுர விண்ணகரம்,
நாதன் கோயில், தக்ஷின ஜகன்னாத்
ஸ்ரீ செண்பக வல்லி தாயார்
ஸ்ரீ ஜகந்நாதன் (நாதநாதன், விண்ணகர பெருமாள்)
சோழ நாடு,கும்பகோணம்

22-திரு வெள்ளியங்குடி
ஸ்ரீ மரகத வல்லி
கோலவல்வில்லி ராமன்
ஸ்ருங்கார சுந்தரன்
சோழ நாடு,சீர்காழி

23-திருவழுந்தூர்
(தேரழுந்தூர்)
ஸ்ரீ செங்கமல வல்லி
தேவாதிராஜன்
ஆமருவியப்பன்
சோழ நாடு,மயிலாடுதுறை

24-திரு சிறுபுலியூர்
ஸ்ரீ திருமாமகள் நாச்சியார்
அருள்மாக்கடல் (ஜலசயனப் பெருமாள்)
க்ருபா சமுத்ரப் பெருமாள்
சோழ நாடு,மயிலாடுதுறை

25-திரு தலைச் சங்க நாண்மதியம்(தலைச்சங்காடு)
ஸ்ரீ தலைச்சங்க நாச்சியார்
நாண்மதியப் பெருமாள் (வெண்சுடர் பெருமாள்)
வியோமஜோதிப்பிரான் (வெண்சுடர்பிரான், லோகநாதன்)
சோழ நாடு,மயிலாடுதுறை

26-திரு இந்தளூர்
ஸ்ரீ பரிமள ரங்க நாயகி (சந்திர சாப விமோசன வல்லி, புண்டரிக வல்லி)
பரிமள ரங்கநாதன் (மருவினிய மைந்தன், சுகந்தவன நாதன்)
சோழ நாடு,மயிலாடுதுறை

27-திருக் காவளம்பாடி,
திரு நாங்கூர்
ஸ்ரீ மடவரல் மங்கை
ஸ்ரீ கோபால கிருஷ்ணன் (ராஜ கோபாலன்)
சோழ நாடு,சீர்காழி

28-திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம்,சிர்காழி
ஸ்ரீ லோக நாயகி (மட்டவிழ்குழலி)
திரு விக்ரமன் (தாடாளன்)
த்ரிவிக்ரம நாராயணன்
சோழ நாடு,சீர்காழி

29-திரு அரிமேய விண்ணகரம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ அம்ருதகட வல்லி
குடமாடுகூத்தன்
சதுர்புஜங்களுடன் கோபாலன்
சோழ நாடு,சீர்காழி

30-திருவண் புருடோத்தமம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ புருஷோத்தம நாயகி
ஸ்ரீ புருஷோத்தமன்
சோழ நாடு,சீர்காழி

31-திரு செம்பொன்செய் கோயில்,
திரு நாங்கூர்
ஸ்ரீ அல்லிமாமலர் நாச்சியார்
ஸ்ரீ பேரருளாளன்
ஹேமரங்கர் (செம்பொன்னரங்கர்)
சோழ நாடு,சீர்காழி

32-திருமணிமாடக் கோயில்,
திரு நாங்கூர்
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
ஸ்ரீ நாராயணன் (நந்தாவிளக்கு)
நாராயணன், அளத்தற்கரியான்
சோழ நாடு,சீர்காழி

33-திரு வைகுந்த விண்ணகரம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ வைகுந்த வல்லி
ஸ்ரீ வைகுந்த நாதன்
சோழ நாடு,சீர்காழி

34-திருவாலி மற்றும் திருநகரி
திருவாலி: ஸ்ரீ அம்ருதகட வல்லி, திருநகரி: ஸ்ரீ அம்ருத வல்லி
திருவாலி: ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹர் (வயலாளி மணவாளன்), திருநகரி: ஸ்ரீ வேதராஜன்
திருவாலி: ஸ்ரீ திருவாலி நகராளன், திருநகரி: ஸ்ரீ கல்யாண ரங்கநாதன்
சோழ நாடு,சீர்காழி

35-திரு தேவனார் தொகை,
திரு நாங்கூர்
ஸ்ரீ கடல் மகள் நாச்சியார், மாதவநாயகி
தெய்வநாயகன்
மாதவப் பெருமாள்
சோழ நாடு,சீர்காழி

36-திருத்தெற்றி அம்பலம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ செங்கமல வல்லி
செங்கண் மால் (ரங்கநாதன், ஸ்ரீ லக்ஷ்மிரங்கர்)
சோழ நாடு,சீர்காழி

37-திருமணிக்கூடம் ,
திரு நாங்கூர்
ஸ்ரீ திருமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி), பூதேவி
வரதராஜப் பெருமாள் (மணிகூட நாயகன்)
சோழ நாடு,சீர்காழி

38-அண்ணன் கோயில்(திருவெள்ளக்குளம்), திரு நாங்கூர்
ஸ்ரீ அலர்மேல்மங்கை, ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார், பத்மாவதி
ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள்
சோழ நாடு,சீர்காழி

39-திரு பார்த்தன் பள்ளி,
திரு நாங்கூர்
ஸ்ரீ தாமரை நாயகி
ஸ்ரீ தாமரையாள் கேள்வன்
ஸ்ரீ பார்த்தசாரதி
சோழ நாடு,சீர்காழி

40-திருச்சித்திரக் கூடம் ,
சிதம்பரம்
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
கோவிந்தராஜன்
தேவாதி தேவன் (பார்த்தசாரதி)
சோழ நாடு, சிதம்பரம்

41-திரு அஹீந்த்ரபுரம்,
ஆயிந்தை
ஸ்ரீ ஹேமாமபுஜ வல்லி தாயார் (வைகுண்ட நாயகி)
ஸ்ரீ தெய்வநாயகன்
ஸ்ரீ மூவராகிய ஒருவன், தேவநாதன்
நடு நாடு,கடலூர்

42-திருக்கோவலூர்
ஸ்ரீ பூங்கோவை நாச்சியார்
த்ரிவிக்ரமன்
ஆயனார், கோவலன் (கோபாலன்)
நடு நாடு,கடலூர்

43-திருக்கச்சி,
அத்திகிரி (அத்தியூர், காஞ்சிபுரம், சத்யவ்ரத க்ஷேத்ரம்)
ஸ்ரீ பெருந்தேவி (மகாதேவி) தாயார்
ஸ்ரீ பேரருளாள வரதராஜன்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

44-அஷ்டபுயகரம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அலர்மேல் மங்கை, பத்மாசனித் தாயார்
ஆதி கேசவ பெருமாள் (சக்ரதரர், கஜேந்திர வரதன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

45-திருத்தண்கா,
தூப்புல், காஞ்சிபுரம்
ஸ்ரீ மரகத வல்லி
ஸ்ரீ தீபப் பிரகாசன் (விளக்கொளிப் பெருமாள், திவ்யப்ரகாசர்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

46-திரு வேளுக்கை,
காஞ்சிபுரம்
ஸ்ரீ வேளுக்கை வல்லி (அம்ருதவல்லி)
அழகியசிங்கர் (ந்ருசிம்ஹர், ஸ்ரீ முகுந்த நாயகன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

47-திரு நீரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ நிலமங்கை வல்லி
ஸ்ரீ ஜகதீச்வரர்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

48-திருப் பாடகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ ருக்மிணி, சத்ய பாமா
பாண்டவ தூதர்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

49-திரு நிலா திங்கள் துண்டம்,காஞ்சிபுரம்
நேர் ஒருவர் இல்லா வல்லி (நிலாத்திங்கள் துண்ட தாயார்)
சந்திர சூட பெருமாள் (நிலாத்திங்கள் துண்டத்தான்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

50-திரு ஊரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அமுத வல்லி நாச்சியார் (அம்ருதவல்லி)
ஸ்ரீ த்ரிவிக்ரமன் (உலகளந்த பெருமாள்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

51-திரு வெஃகா,
காஞ்சிபுரம்
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
ஸ்ரீ யதோக்தகாரி (வேகாசேது, சொன்னவண்ணம் செய்த பெருமாள்)
தொண்டை நாடு.காஞ்சிபுரம்

52-திருக் காரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ பத்மாமணி நாச்சியார் (ரமாமணி நாச்சியார்)
ஸ்ரீ கருணாகர பெருமாள்
தொண்டை நாடு, காஞ்சிபுரம்

53-திருக் கார்வானம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ கமல வல்லி (தாமரையாள்)
ஸ்ரீ கள்வன்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

54-திருக் கள்வனூர்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அஞ்சில வல்லி நாச்சியார்
ஆதி வராஹப் பெருமாள்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

55-திருப் பவளவண்ணம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ பவள வல்லி
ஸ்ரீ பவளவண்ணன்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

56-திருப் பரமேஸ்வர விண்ணகரம்,காஞ்சிபுரம்
ஸ்ரீ வைகுண்ட வல்லி
ஸ்ரீ பரமபதநாதன் (வைகுந்தநாதன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

57-திருப்புட்குழி
ஸ்ரீ மரகத வல்லி தாயார்
ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
தொண்டை நாடு
காஞ்சிபுரம்

58-திரு நின்றவூர்
(தின்னனூர்)
ஸ்ரீ சுதா வல்லி (என்னைப் பெற்ற தாயார்)
ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் (பத்தராவிப் பெருமாள்)
தொண்டை நாடு
சென்னை

59-திரு எவ்வுள்
(புண்யாவ்ருத, வீக்ஷாரண்ய க்ஷேத்ரம்), திருவள்ளூர்
ஸ்ரீ கனக வல்லி (வசுமதி)
வைத்ய வீர ராகவப் பெருமாள்
தொண்டை நாடு
சென்னை

60-திரு அல்லிக் கேணி(திருவல்லிக்கேணி, ப்ரிந்தாரண்ய க்ஷேத்ரம்)
ஸ்ரீ ருக்மிணித் தாயார்
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன்
ஸ்ரீ பார்த்தசாரதி
தொண்டை நாடு
சென்னை

61-திரு நீர்மலை
ஸ்ரீ அணிமாமலர் மங்கை
நீர்வண்ணன் (நீலமுகில்வண்ணன்)
தொண்டை நாடு
சென்னை

62-திரு இட வெந்தை
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
லக்ஷ்மி வராஹப் பெருமாள்
நித்ய கல்யாணப் பெருமாள்
தொண்டை நாடு
சென்னை

63-திருக் கடல் மல்லை,
மஹாபலிபுரம்
ஸ்ரீ நில மங்கை நாயகி
ஸ்தல சயனப் பெருமாள்
ஸ்தலசயனதுரைவார் (உலகுய்ய நின்றான்)
தொண்டை நாடு
சென்னை

64-திருக்கடிகை,
சோளிங்கர்
ஸ்ரீ அம்ருத வல்லி
யோக ந்ருஸிம்ஹன்
அக்காரக்கனி
தொண்டை நாடு
சென்னை

65-திரு அயோத்தி,
அயோத்யா
ஸ்ரீ சீதாப் பிராட்டி
ஸ்ரீ ராமன் (சக்கரவர்த்தித் திருமகன், ரகுநாயகன்)
வட நாடு
உத்தர் பிரதேஷ்

66-திரு நைமிசாரண்யம்
ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி (ஸ்ரீ புண்டரீகவல்லி)
ஸ்ரீ ஸ்ரீஹரி (தேவராஜன்)
வட நாடு
உத்தர் பிரதேஷ்

67-திருப் ப்ரிதி (நந்தப் பிரயாக்,
(ஜோஷி மடம்)
ஸ்ரீ பரிமள வல்லி நாச்சியார்
பரம புருஷன்
வட நாடு
உத்தராஞ்சல்

68-திருக் கண்டமென்னும் கடிநகர்(தேவப்ரயாகை)
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
ஸ்ரீ நீலமேக பெருமாள் (ஸ்ரீ புருஷோத்தமன்)
வட நாடு
உத்தராஞ்சல்

69-திரு வதரி ஆசிரமம்
(பத்ரிநாத்)
ஸ்ரீ அரவிந்த வல்லி
ஸ்ரீ பத்ரி நாராயணன்
வட நாடு
உத்தராஞ்சல்

70-திரு சாளக்ராமம்
(முக்திநாத்)
ஸ்ரீ ஸ்ரீதேவி நாச்சியார்
ஸ்ரீ ஸ்ரீ மூர்த்தி
வட நாடு
நேபால்

71-திரு வட மதுரை
(மதுரா)
ஸ்ரீ சத்ய பாமா நாச்சியார்
கோவர்தனேசன் (பால க்ருஷ்ணன்)
வட நாடு
உத்தர் பிரதேஷ்

72-திருவாய்ப்பாடி,
கோகுலம்
ஸ்ரீ ருக்மிணி மற்றும் சத்ய பாமா
ஸ்ரீ நவ மோகன கிருஷ்ணன்
வட நாடு
உத்தர் பிரதேஷ்

73-திரு த்வாரகை
(துவரை, துவராபதி)
ஸ்ரீ கல்யாண நாச்சியார் (ஸ்ரீ லக்ஷ்மிஸ்ரீ, ருக்மிணி)
கல்யாண நாராயணன் (த்வாரகாதீசன், த்வாரகாநாத்ஜி)
வட நாடு
குஜராத்

74-திரு சிங்கவேழ்குன்றம்,அஹோபிலம்
ஸ்ரீ செஞ்சு லக்ஷ்மி (ஸ்ரீ அம்ருத வல்லி)
ப்ரஹலாதவரதன் (லக்ஷ்மிந்ருசிம்ஹன்)
வட நாடு
ஆந்திரம்

75-திருவேங்கடம்
(திருப்பதி, திருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம்)
அலர்மேல் மங்கை (பத்மாவதி)
ஸ்ரீ திருவேங்கமுடையான் (வெங்கடாசலபதி, பாலாஜி)
ஸ்ரீநிவாசன் (மலையப்ப சுவாமி, மலைகுனியன் நின்ற பெருமாள்)
வட நாடு
ஆந்திரம்

76-திரு நாவாய்
ஸ்ரீ மலர் மங்கை நாச்சியார் (சிறுதேவி)
நாவாய் முகுந்தன் (நாராயணன்)
மலை நாடு
கேரளம்

77-திரு வித்துவக்கோடு(திருவிசிக்கோடு, திருவஞ்சிக்கோடு)
ஸ்ரீ வித்துவக்கோட்டு வல்லி (பத்மபாணி நாச்சியார்)
உய்ய வந்த பெருமாள் (அபயப்ரதன்)
மலை நாடு
கேரளம்

78-திருக்காட்கரை
ஸ்ரீ பெருஞ்செல்வ நாயகி (ஸ்ரீ வாத்சல்ய வல்லி நாச்சியார்)
காட்கரையப்பன்
மலை நாடு
கேரளம்

79-திரு மூழிக்களம்
ஸ்ரீ மதுரவேணி நாச்சியார்
திரு மூழிக்களத்தான் (ஸ்ரீ சூக்தி நாத பெருமாள், அப்பன்)
மலை நாடு
கேரளம்

80-திரு வல்ல வாழ்
(திருவல்லா, ஸ்ரீ வல்லபா க்ஷேத்ரம்)
ஸ்ரீ வாத்சல்ய தேவி (ஸ்ரீ செல்வ திருக்கொழுந்து) நாச்சியார்
ஸ்ரீ கோலப்பிரான் (திருவல்லமார்பன் , ஸ்ரீவல்லபன்)
மலை நாடு
கேரளம்

81-திருக்கடித்தானம்
ஸ்ரீ கற்பக வல்லி
ஸ்ரீ அம்ருத (அத்புத) நாராயணன்
மலை நாடு
கேரளம்

82-திருச்செங்குன்றூர்
(திருசிற்றாறு)
ஸ்ரீ செங்கமல வல்லி
இமயவரப்பன்
மலை நாடு
கேரளம்

83-திருப்புலியூர்
(குட்டநாடு)
ஸ்ரீ பொற்கொடி நாச்சியார்
மாயப்பிரான்
மலை நாடு
கேரளம்

84-திருவாறன்விளை
(ஆறன்முளா)
ஸ்ரீ பத்மாஸநி நாச்சியார்
திருக்குறளப்பன் (செஷாசனா )
மலை நாடு
கேரளம்

85-திருவண் வண்டுர்
ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
பாம்பணை அப்பன்
மலை நாடு
கேரளம்

86-திருவனந்தபுரம்
ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி
அனந்தபத்மநாபன்
மலை நாடு
கேரளம்

87-திரு வட்டாறு
ஸ்ரீ மரகத வல்லி நாச்சியார்
ஆதி கேசவ பெருமாள்
மலை நாடு
கேரளம்

88-திருவண்பரிசாரம்
ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
ஸ்ரீ திருக்குறளப்பன் (திருவாழ்மார்பன்)
மலை நாடு,கேரளம்

89-திருக்குறுங்குடி
ஸ்ரீ குறுங்குடிவல்லி நாச்சியார்
சுந்தர பரிபூரணன் (நின்ற நம்பி)
பாண்டியநாடு,திருநெல்வேலி

90-திரு சிரீவர மங்கை(வானமாமலை, தோதாத்ரி க்ஷேத்ரம்,திருசிரீவரமங்கள நகர், நாங்குநேரி)
ஸ்ரீ சிரீவரமங்கை நாச்சியார்
ஸ்ரீ தோதாத்ரிநாதன் (வானமாமலை)
ஸ்ரீ தெய்வநாயகன்
பாண்டியநாடு,திருநெல்வேலி

91-ஸ்ரீவைகுண்டம்,
நவதிருப்பதி
ஸ்ரீ வைகுந்தவல்லி
ஸ்ரீ வைகுந்தநாதன் (ஸ்ரீ கள்ளபிரான்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

92-திருவரகுணமங்கை,
நவதிருப்பதி
ஸ்ரீ வரகுண வல்லி தாயார் (ஸ்ரீ வரகுணமங்கை தாயார்)
விஜயாசனப் பெருமாள்
பாண்டியநாடு,திருநெல்வேலி

93-திருப்புளிங்குடி,
நவதிருப்பதி
ஸ்ரீ மலர்மகள் நாச்சியார், ஸ்ரீ புளிங்குடி வல்லி
ஸ்ரீ காய்சினவேந்தன்
பாண்டியநாடு,திருநெல்வேலி

94-திரு தொலைவில்லிமங்கலம்(ரெட்டைத் திருப்பதி), நவதிருப்பதி
ஸ்ரீ கரும் தடங்கண்ணி நாச்சியார்
ஸ்ரீ அரவிந்த லோசனன், ஸ்ரீநிவாசன் (தேவப்பிரான்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

95-திருக்குளந்தை (பெருங்குளம்), நவதிருப்பதி
ஸ்ரீ அலமேலுமங்கை தாயார், ஸ்ரீ குளந்தை வல்லி
ஸ்ரீ ஸ்ரீநிவாசன்
ஸ்ரீ மாயக்கூத்தன்
பாண்டியநாடு,திருநெல்வேலி

96-திருக்கோளூர், நவதிருப்பதி
ஸ்ரீ குமுத வல்லி, ஸ்ரீ கோளூர் வல்லி நாச்சியார்
ஸ்ரீ வைத்த மாநிதி பெருமாள் (நிக்ஷேபவிதன்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

97-திருப்பேரை
(தென் திருப்பேரை), நவதிருப்பதி
ஸ்ரீ குழைக்காது வல்லி, ஸ்ரீ திருப்பேரை நாச்சியார்
ஸ்ரீ மகர நெடும் குழைக்காதன் (ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

98-திருக்குருகூர்
(ஆழ்வார் திருநகரி), நவதிருப்பதி
ஸ்ரீ ஆதிநாத வல்லி, ஸ்ரீ குருகூர் வல்லி
ஸ்ரீ ஆதிநாதன் (ஸ்ரீ ஆதிப்பிரான்)
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
பாண்டியநாடு,திருநெல்வேலி

99-ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீ ஆண்டாள் (ஸ்ரீ கோதா நாச்சியார்)
ஸ்ரீ வடபத்ரசாயி (ரங்கமன்னார்)
பாண்டியநாடு,விருதுநகர்

100-திருதண்கால் (திருதண்காலூர்)
ஸ்ரீ செங்கமல தாயார் (அன்ன நாயகி, அனந்த நாயகி, அம்ருத நாயகி, ஜாம்பவதி)
ஸ்ரீ நின்ற நாராயணன்
பாண்டியநாடு,விருதுநகர்

101-திருக்கூடல்,
மதுரை
ஸ்ரீ மதுர வல்லி (வகுலவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி)
கூடல் அழகர்
பாண்டியநாடு,மதுரை

102-திருமாலிரும் சோலை
(அழகர் கோயில்)
ஸ்ரீ சுந்தர வல்லி (ஸ்ரீதேவி)
திரு மாலிரும் சோலை நம்பி (அழகர், கள்ளழகர், மாலாங்காரர்)
பாண்டியநாடு,மதுரை

103-திரு மோகூர்
ஸ்ரீ மோகூர் வல்லி (மேகவல்லி, மோகன வல்லி)
ஸ்ரீ காளமேக பெருமாள்
ஸ்ரீ திருமோகூர் ஆப்தன்
பாண்டியநாடு,மதுரை

104-திருக்கோஷ்டியூர் (கோஷ்டி க்ஷேத்ரம்)
திருமாமகள் நாச்சியார்
ஸ்ரீ உரகமெல்லணையான்
ஸ்ரீ சௌம்யநாராயணன்
பாண்டியநாடு,புதுக்கோட்டை

105-திருப்புல்லாணி, ராமநாதபுரம்
ஸ்ரீ கல்யாண வல்லி, ஸ்ரீ பத்மாஸநி த் தாயார்
ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன் (தெய்வச் சிலையார்)
பாண்டியநாடு,ராமநாதபுரம்

106-திருமெய்யம்
ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்
ஸ்ரீ சத்ய கிரிநாதன் (ஸ்ரீ சத்யமூர்த்தி)
ஸ்ரீ மெய்யப்பன்
பாண்டியநாடு,புதுக்கோட்டை

107-திருப்பாற்கடல்
ஸ்ரீ கடல் மகள் நாச்சியார் (ஸ்ரீ பூதேவி)
ஸ்ரீ க்ஷீராப்தி நாதன்
விண்ணுலகம்

108-பரமபதம்
ஸ்ரீ பெரிய பிராட்டியார்
ஸ்ரீ பரமபத நாதன்
விண்ணுலகம்

Sunday 16 September 2018

தேவ பிரயாகை காணொளி, ஸ்ரீ ராமர் திருப்பாத தரிசனம்

காணக்கிடைக்காத அற்புத காட்சி, தேவ பிரயாகை, அலக் நந்தா நதியும் பாகீரதி நதியும் இணைந்து கங்கை உருவாகிறது.  ராமர் திருப்பாத தரிசனம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻


தண்டபாணி என்று சொல்லப்படுவதன் பொருள் பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு

தண்டபாணி என்று சொல்லப்படுவதன் பொருள் பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு



இறைவன் அருளால் அஃதொப்ப தண்டமும், அங்கே ஒரு ஆயுதமாக பயன்படுகிறது. அன்பை போதிக்கின்ற மகான்களும், ஞானிகளும் ஆயுதம் வைத்திருப்பார்களா ? அப்படியிருக்க அன்பே வடிவான, கருணையே வடிவான இறைவன் கையில் ஆயுதம் இருக்குமா ? அப்படியல்ல. இறைவன் கையில் ஆயுதத்தை வைத்ததின் மர்மமும், சூட்சுமமும் என்ன ? மனிதனுக்கு ஒரு பாதுகாப்பு. ஒரு காவலன் கையில் இருக்கின்ற ஆயுதம் மனிதனுக்கு அச்சத்தை தராது. ஏன் ? அது சமூகத்தைக் காப்பதற்காக அவனுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு, அதிகாரம். நாட்டை பாதுகாக்க ரணகளத்தில் பணியாற்றுகின்ற மனிதனிடம் ஆயுதம் இருக்கிறது. அந்த ஆயுதத்தை யாரும் அச்சத்தோடு பார்ப்பதில்லை. ஆனால் ஒரு கள்வன் கையில் ஆயுதம் இருந்தால் அச்சத்தோடு பார்க்கிறார்கள். எனவே ஆயுதம் என்பது பொதுவாக பார்த்தால் அது அஃறிணை. ஆனால் யாரிடம் இருக்கிறது ? என்பதை பொறுத்துதான் அதன் பலனும், பலாபலனும். ஆனாலும்கூட இறைவன் கையில் ஆயுதம் இருப்பது, அறியாமையில் இருக்கின்ற மனிதனுக்கு ‘ உன்னை இறைவன் பாதுகாப்பார். இறைவன் பராக்ரமசாலி, பலசாலி. உலகிலுள்ள சக்திகளுக்கெல்லாம் சக்தி என்பதை புரிந்துகொள்ளவே இறைவனுக்கு பலவிதமான கரங்களும், சிரங்களும் கொடுக்கப்பட்டன. ஆனால் அப்படித்தான் இறைவன் இருக்கிறாரா ? இல்லை. நினைத்தவர் தம் மனதிலே எப்படி நினைக்கிறார்களோ அப்படி காட்சி தரக்கூடிய நிலையில்தான் பரம்பொருள் இருக்கிறது.

எனவே பழனி முருகனிடம் தண்டம் ஆயுதமாக இருப்பதன் மர்மமே, பொதுவாக முருகனுக்கு எது ஆயுதம் ? வேல் ஆயுதம். அஃதொப்ப வேல், மனிதன் கையில் இருக்கின்ற வேல் அல்ல. இந்த வேல் ஆழமாக இருக்கும். அகலமாக இருக்கும். நீளமாக இருக்கும். குளுமையாக இருக்கும். இது ஞானவேல். அன்னை சக்தி தந்ததினால் சக்திவேல் என்றாலும் அது முழுக்க, முழுக்க ஞானத்தைத் தரக்கூடிய வேலாகும். இரத்தினவேல் என்றுகூட வேலிலே ஒருவகை இருக்கிறது. வைரவேலும் இருக்கிறது. சிலவகை தோஷங்களை வைரங்கள் போக்கும். சிலவகை தோஷங்களை வைரம் தரும். வைரவேல் தரிசனத்தைப் பார்த்தாலே மனிதர்களுக்கு சிலவகை தோஷங்கள் நீங்கும். சில முருக ஆலயங்களிலே வைரவேல் தரிசனம் என்பது இருக்கிறது. ஆக இந்த வேலானது ஞானத்தைக் குறிக்கிறது. இப்பொழுது இவள் கேட்டாளே, பாசத்திலிருந்து, பந்த்த்திலிருந்து, உலக மாயையிலிருந்து எவ்வாறு விடுபடுவது ? என்று. இவற்றையெல்லாம் அறுக்கின்ற ஆயுதம்தான் தண்டாயுதம்.

ஆக மனிதனுக்கு யார் எதிரி ? என்றால், புறத்தே இருக்கின்ற மனிதன் எதிரி அல்ல. அவன் மனதிலே விளையக்கூடிய களைகள், பதர்கள், தேவையற்ற எண்ணங்கள், சபலங்கள், கீழான எண்ணங்கள் – இவற்றையெல்லாம் விட்டுவிட முடியாமல் மனிதன் தவிக்கிறான், தடுமாறுகிறான். இவற்றையெல்லாம் அடித்து நொறுக்கக்கூடிய ஆயுதமே தண்டாயுதம், வேலாயுதம். இதுபோன்ற இறையுடன் இருக்கக்கூடிய ஆயுதம் அசுரர்களை அழிப்பதாக புராணங்கள் கூறுவதைக்கொண்டு, அசுரர்கள் என்றால் எங்கோ புறத்தே இருக்கிறார்கள். கோரப் பற்களோடும், மிகப்பெரிய பயமுறுத்தும் கண்களோடும் இருக்கிறார்கள். கருகரு என்று வருவார்கள். மனிதர்களை மிரட்டுவார்கள் என்று எண்ணுகிறார்கள். அந்த அசுரர்களைக்கூட மனிதர்கள் சமாளித்துவிடலாம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றானே, பொறாமை எனும் அசுரன், காமம் எனும் அசுரன், சபலம் எனும் அசுரன், வேதனை எனும் அசுரன், விரக்தி எனும் அசுரன், கோபம் எனும் அசுரன் – இவற்றைதான் மனிதனால் விரட்ட முடியாது. இவற்றை விரட்டக்கூடிய ஆயுதம், தண்டாயுதம்.

அந்த தண்டு முதுகிலே மையப்பகுதியில் இருக்கும். அது முதுகுத்தண்டு. இஃதொப்ப தாமரையின் மையத்திலே இருக்கிறது. அது தாமரைத்தண்டு. தண்டு என்றாலே, பொதுவாக அதன் பொருள், மையம். அங்கே தண்டம் என்பது மனிதனிடம் இருக்கக்கூடிய எல்லாவகையான எதிரான குணங்களையும் நீக்கக்கூடிய ஒரு மையம். மனிதனுக்கு மையம் எது ? புருவ மத்தி. அந்த புருவ மத்தியை நோக்கி ஒரு மனிதன் சிந்தனை செய்தால், சர்வகாலமும் புருவ மத்தியை கவனித்துக்கொண்டே வந்தால் அவனுடைய சிந்தனை ஒழுங்குபடும், நேர்படும், நிரல்படும், உறுதிபடும். எனவே மனிதனுக்கு மையம் புருவ மத்தி. அங்கே தண்டு மையம். அந்த மையத்தை நோக்கி இவன் சென்றால் இவன் மையம் சரியாகும் என்பதன் பொருள்தான் தண்டாயுதமாகும்.

சப்தமாதர்களைப் பற்றி அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு

சப்தமாதர்களைப் பற்றி அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு



சப்தமாதர்கள் யார் ? சக்தியின் அம்சங்கள்தான். இப்படியே பிரிந்து, பிரிந்து பார்த்துக்கொண்டே வந்தால் ‘ எனக்கு அம்பாளை பிடிக்கிறது, எனக்கு முருகனைப் பிடிக்கிறது, எனக்கு விநாயகரைப் பிடிக்கிறது ‘ என்று மீண்டும், மீண்டும் வடிவங்களில் மனிதன் சிக்கிவிடுகிறான். தவறொன்றுமில்லை. எஃதாவது ஒரு வடிவத்திற்குள் தன் மனதை ஒடுக்கப்  பழகிக்கொண்டால்கூட போதும். இந்த சப்தமாதர்கள் என்பது, சித்தர்கள், முனிவர்கள் இவர்களுக்கே சக்தியை அருளக்கூடிய நிலையில் உள்ள அம்பாளின் உபசக்திகள்தான். எனவே சப்தமாதர்களை வணங்கினாலும், சாக்ஷாத் அன்னை பராசக்தியை வணங்கினாலும் எல்லாம் ஒன்றுதான். அதற்காக விநாயகப்பெருமானை வணங்கினால் அல்லது முக்கண்ணனாகிய சிவபெருமானை வணங்கினால் அவையேதும் பலனைத் தராதா ? என்று கேட்கவேண்டாம். இவள் கேட்ட கேள்வியின் அடிப்படையில் எமது பதில் அமைவதால் அந்தக் கேள்வி, அதற்குரிய அளவில் இந்த பதிலை எடுத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் அடிக்கடி எமை நாடுகின்ற சேய்களுக்கு கூறுவது, சப்தகன்னியர்கள் அல்லது சப்தமாதர்கள் இரண்டும் ஒன்றுதான். சப்தம் என்ற சொல்லின் பொருளைப் பார்த்தால் ஏழு என்ற எண்ணைக் குறிக்கும்.

சப்தம் என்ற சொல்லுக்கு ஏழு என்ற பொருள் எப்படி வந்தது தெரியுமா ? ஏழு வகையான விலங்குகள் ஒரே சமயத்தில் ஒரேவிதமான ஒலியளவை எழுப்பினால் அப்பொழுது ஒருவிதமான இனிமையான இசை வடிவம் பிறக்கும். அந்த இசை வடிவத்தை வரிவடிவமாக மாற்றினால் என்ன கிடைக்கும் தெரியுமா ? ச,ரி,க,ம,ப,த,நி,ச என்ற ஒலி வரிவடிவமாக அப்பொழுது கிடைக்கும். இந்த சப்தம் என்ற சொல்லுக்குப் பின்னால் எத்தனையோ பொருள் இருக்கிறது. இருட்டிலே வழிகாட்டியாக இந்த சப்தமாகிய ஒலி இருக்கிறது. எந்தவிதமான ஒளி, அதாவது வெளிச்சம் இல்லாத நிலையிலே ஒலிதான் மனிதனுக்கு கண்ணாக இருக்கிறது. எனவே ஏழுவகையான சக்திகள் என்பதை குறிக்கதான் சப்தம், சப்தமாதர்கள், சப்தரிஷிகள் என்றெல்லாம் ஒருவகையான பொருளில் கூறப்படுகிறது. இன்னும் பல்வேறுவிதமான பொருள் இருக்கிறது. அது குறித்தெல்லாம் தக்க காலத்தில் விளக்கம் தருவோம்.

சப்தமாதர்களை வணங்கினால் என்ன பலன் ?

 என்று பார்த்தால், பொதுவாக எல்லாவகையான தோஷத்திற்கும் எத்தனையோ வகையான பரிகாரங்கள் இருக்கின்றன. அத்தனை பரிகாரங்களையும் ஒரு மனிதனால் செய்ய இயலாது என்பது எமக்கும் தெரியும், இறைவனுக்கும் தெரியும். அப்படியிருக்கும் பட்சத்தில் மிக எளிமையாக சப்தமாதர்களை அவனவன் அறிந்த மொழியில் வணங்கிவந்தால் அது நல்ல தோஷ பரிகாரமாக இருக்கும். அடுத்ததாக குறிப்பாக பெண்களுக்கு நாங்கள் கூறவருவது, இக்காலத்திலே வெளியில் செல்லவேண்டிய நிலை பெண்களுக்கு ஏற்படுகிறது. வெளியில் செல்லும்பொழுதே புரிந்துகொள்ள வேண்டும், ஆபத்தும் உடன் வருகிறது என்று. அப்படி வரக்கூடிய ஆபத்துக்களிலிருந்து பெண்கள் தங்களைக் காத்துக்கொள்ள இந்த சப்தமாதர்கள் வழிபாட்டை அனுதினமும் இல்லத்தில் அமர்ந்து அமைதியாக செய்து வந்தால் நல்ல பலன் உண்டு.

 இன்னும் கூறப்போனால், மனமொன்றி சப்தமாதர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டே வந்தால், எல்லோரும் கேட்கிறார்களே, குண்டலினி என்றால் என்ன ? அந்த குண்டலினி சக்தியை எழுப்பினால் என்ன நடக்கும் ? என்று. இந்த அன்னையர்களின் கருணையாலே எந்தவிதமான தியான மார்க்கமில்லாமல் சப்தமாதர்களை பிரார்த்தனை செய்வதன் மூலமே ஒரு மனிதன் அடையலாம். ஆனால் இது அத்தனை எளிதான காரியமல்ல. பல்வேறு சோதனைகள் வரும். அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு ஒருமைப்பட்ட மனதோடு சப்தமாதர்களை வணங்கிவந்தால் ஒரு மனிதனுக்கு வேண்டிய எல்லா நலன்களும் இகத்திலும், பரத்திலும் கிட்டும். இன்னும் பல்வேறு விளக்கங்களை பிற்காலத்தில் உரைப்போம்.

இல்வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்று ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு

இல்வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்று ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு



மதியாமை செய்கின்ற மாந்தனை,துதியாமை செய்வாய் ஆயினும்,

மிதியாமை செய்யாய் பதியாமை இறையை உள்ளத்தில் வாழ்ந்தால் நல் கதியாமை தொடராது.உணர்வாய்.சதியாமை செய்யும் மாந்தன் பிறன் நலன் கருதாமை செய்து வாழுங்கால்,கர்மாவை சேர்த்து,சேர்த்து தர்மத்தை மறக்கிறான்.அறத்தை,சத்தியத்தை புரியாமை வாழ்ந்து இவற்றை எல்லாம் விளங்காமை கொண்டு கல்லாமையில்,நல்லவற்றை கருதாமையால் பொல்லாமை கொண்டு, புகழாமை தேடி பிறரை புகழாமை வாழும் மாந்தன் நற்பண்பு அவனிடம் புகலாமையில்,மெய் புகழாமை அவனுக்கு வராது.எத்தனை அறியாமை தலை கனத்தால்,பிறரை மதியாமை,பொல்லாமை,பொறாமை என்று உணராமை காரணம். சித்தன் வாக்கு நடவாமை ஆனால் மட்டும் எம்மீது சின ஆமை கொண்டு,வெறுப்பாமை தொடர ,கர்மாவை மறக்கிறான் மாந்தன்.உண்மையை சொல்லாமை,அறத்தை செய்யாமை,சினத்தை விடாமை,கடமையை தொடராமை,காலத்தை பயன்படுத்தாமை என்று பல ஆமை மனிதன் கொள்ள,இவற்றால் உயராமை கொள்கிறான்.பொறாமை விட்டு போதாமையிலும்,பொல்லாமை கொள்ளாது, உள்ள ஆமையை நில் ஆமை என்று கட்டளையிட்டு,இவ்வுலகில் எல்லாம் நிலையாமை என உணர்ந்து பதவி கிடைக்காமல் போனால் அவற்றால் பலனாமை இல்லை.பதவி நிலையாமை,தனம் நிலையாமை, அழகு நிலையாமை,அறமே நிலைத்த ஆமை என்று உணர்ந்து துயிலாமை கொண்டு துடிக்கின்ற காலத்தை பயிலாமை,உள் அடங்கி மனதை சாந்தி ஆக்கி,தள்ளாமையிலும் தாளாமை கொள்ளாது,தேகத்தை வலுவாமை ஆக்க தேவையற்றதை ஏற்காமை,உண்மையாக நல்லனவற்றை ஏற்காமை இருக்காமை, என்றும் எதிலும் எவர் மீதும் சினவாமை, தேவை.தேவையல்லா பொறாமை,ஆற்றாமை, அடிக்கடி உள்ளத்தை மாற்றாமை,நல்ல செயலை தொடர்ந்து செய்யாமை இருக்காமையாக இருக்க,இறை தோழமை உண்மையாக தொடரும் என்பதை மெய்ம்மை மனத்தோடு உணர்ந்து,தேகம் நிலையாமை என்பதை உணர்ந்து, ஆத்மா உணராமை வாழாமை,தொட்டதற்க்கு எல்லாம் வருத்தாமை,வாழும் வழி தொடர, புரியாமை நடக்கின்ற செயல் எல்லாம் பரந்தாமன் திருவடி பற்ற புரியாமை,பரியாமை.தொடர்ந்து நரியாமை நகர்ந்து தெரியாமை,தொலைந்து உன் உள்ளத்தில் எரியாமை,அணைந்து பரியாமை வளர்ந்து, தெரியாமை,எது குறித்தும் வாழாமை,வாழும் மெய் கொண்டு வாழ அனைத்தும் நலமாம்.

ஆசிகள்.

Wednesday 12 September 2018

திருவிடைக்கழி

திருவிடைக்கழி
திருவிசைப்பா பாடல் பெற்ற தலம்.
தற்போது முருகன் தலமாகப் பிரசித்தி பெற்றுள்ளது. மயிலாடுதுறையிலிருந்து தில்லையாடி சென்று (தில்லையாடி வள்ளியம்மை வளைவுக்குள் நுழைந்து சென்று) அங்கிருந்து 3 A.e. சென்றால் திருவிடைக்கழி தலத்தையடையலாம். கோயில் வரை பேரூந்து செல்லும், நல்ல சாலை, சுப்பிரமணியக் கடவுள் மூலத்தான மூர்த்தியாக விளங்குகிறார். இத்தலத்திற்கு மகிழவனம் என்ற பெயரண்டு.
தெய்வயானை இறைவனிடம் திருப்பரங்குன்றம் செல்ல விடைகேட்டதாலும், முருகனுக்கு இரணியாசுரனைக் கொன்ற பழிகழிந்ததாலும் இத்தலம் விடைக்கழி என்னும் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
முசுகுந்தன், வசிட்டர், சேந்தனார், அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்ட பதி, சேந்தனார் முத்தி பெற்ற தலம். திருமுறைகளில் இடம் பெற்றுள்ள முருகன் தலம். சேந்தனார் பாடியுள்ள திருவிசைப்பா பதிகம் பெற்ற தலம்.

இறைவன் - காமேசுவரர்.

இறைவி - காமேசுவரி.

தலமரம் - குரா, மகிழம் (குராமரம் முருகப்பெருமானுக்கும் மகிழமரம் இறைவனுக்கும் தலமரங்களாம்)

தீர்த்தம் - சரவண தீர்த்தம், கங்கைக் கிணறு.

அம்பாள் தரங்கம்பாடிக்குச் சென்றதால் இக்கோயிலில் அம்பாள் சந்நிதி இல்லை. மூலத்தானத்தில் முதற்கண் பிரதான மூர்த்தியாக சுப்பிரமணியப் பெருமானும் பின்னால் உள்ளடங்கிச் சிவலிங்க மூர்த்தமும் காட்சி தருகின்றனர். இருமூர்த்தங்களுக்கும் தனித்தனி விமானங்கள். முருகனுடைய விமானம் சற்று உயரமாகவும், இறைவனுடைய விமானம் சற்று தாழவும் உள்ளது.
தெய்வயானைக்குத் தனிச்சந்நிதி. அழகான ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் வண்ணப் பொலிவுடன் கண்ணுக்கு விருந்தாகக் காட்சி தருகிறது.
கை கூப்பித்தொழுது இடைச் சிந்தனையேதுமின்றி 'விடை'ச் சிந்தனையாக உள்ளே சென்றால் கொடிமரமும், பலிபீடமும், அடுத்து விநாயகரையும் தரிசிக்கலாம். முன்மண்டபத்தில் திருப்புகழ்ப் பாடல்கள், வேல் விருத்தம் முதலியவை கல்வெட்டுக்கள் உள்ளன. வலப்பால் தெய்வயானை சந்நிதி - தவக்கோல தரிசனம்.
பிராகாரத்தில் விநாயகர் சந்நிதி. தலமரம் "குராமரம்" தழைத்துக் காட்சி தருகிறது. பங்குனியில் பூக்கும் என்று கூறுகின்றனர். மலைகளில் மட்டுமே தோன்றக்கூடிய இக்குராமரம் இத்தலத்தில் நிலத்திலும் தோன்றி வளர்த்துள்ளது. இதன் கீழமர்ந்து பலரும் தியானம் செய்கின்றனர்.
சுப்பிரமணியக் கடவுள் இக்குராமரத்தின் கீழ் யோக நிட்டையில் இருக்கின்றாதலின் இங்கமர்ந்து தியானம் செய்தல் சிறப்புடையதாகின்றது - மனமும் ஒன்றி, சாந்தத்தையும், சத்துவகுணங்கைளையும் அருளுகின்றது.
எதிரில் தனிச்சந்நிதியாக திருக்காமேசுவரர் சிவலிங்க வடிவில் தரிசனம் தருகிறார்.
வலம் முடித்து உள்வாயிலைத் தாண்டி இடப்பால் சென்றால் சந்திரன், அருணகிரிநாதர், சேந்தனார் மூர்த்தங்கள் உள்ளன. உட்சுற்றில் நவசத்திகள் தரிசனம். விநாயகரும் சுப்பிரமணியரும் அடுத்தடுத்துக் காட்சிதர, வழிபட்டவாறே நடந்தால் நாகநாதலிங்கம், கஜலட்சுமி, வில்லேந்திய முருகர் உற்சவமூர்த்தம் கண்டு தொழலாம்.
சண்டேசுவர மூர்த்தங்களும் இரண்டு உள்ளன. சிவச்சண்டேசுவரர், குகச்ண்டேசுவரர் என்று (இறைவனுக்கும் முருகனுக்கும் உரியவர்களாக) பெயர்கள் சொல்லப்படுகின்றன. துர்க்கை, பைரவர், சூரியன் ஆகியோரைத் தொழுதவாறே முன் மண்டபத்திற்கு வந்து இரு கணபதிகளையும் கைகூப்பி வணங்கி படியேறிச் சென்றால் நேரே மூலவர் - சுப்பிரமணியர் கடவுள் காட்சி தருகிறார்.
நின்ற திருக்கோலம் அழகான வடிவம். பின்னால் இலிங்கமூர்த்தி தரிசனம். எழில்ததும்ப மனங்கவரும் இளங்காளை - குராமரத்துக்குழகன் - விடைக்கழி வித்தகனைத் தரிசித்த பின்பு, விட்டுப் பிரியவே மனம் வரவில்லை. கம்பீரமாக நின்று காட்சிதரும் அருமையை அநுபவித்தாலன்றி அளந்தறியவொண்ணாது.
முருகனுக்கு முதன்மையருளித் தான் பின்னிருந்து காட்சி தரும் காமேசுவரரைக் 'கைகாள் கூப்பித்தொழீர்' எனக் கட்டளையிட்டு உச்சி மேற்குவித்து
உள்ளம் நிற்க, உடலாற் பிரிகிறோம். கல்வெட்டில் முருகனுடைய பெயர் "திருக்குராத்துடையார்" என்று குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுக்களிலிருந்து அங்கு பல மடங்கள் இருந்ததாகவும், வேதமோதுவார்க்கும் வழிபாட்டுக்கும் இறையிலியாக
நிலங்களையளித்ததும் ஆகிய செய்திகள் தெரியவருகின்றன.
இரண்டாம் பிராகாரத்தில் வடக்கு மதிற்சுவரில் இரு உருவங்கள் செதுக்கப்பட்டு அவைகளின் மேல் பொற்கோயில் நம்பி, தில்லை மூவாயிரநம்பி என்னும் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ் ஒரு மேடையில் ரிஷபம், இடையன், குடம், பாம்பு முதலிய உருவங்களும், சற்றுத் தள்ளி மன்னன் ஒருவன் உள்ளிட்ட பல உருவங்களும் உள்ளன. இவற்றின் விவரம் சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை தலபுராணத்துடன் தொடர்புடையனவாக இருக்கலாம்.
சேந்தனார் பாடியுள்ள திருவிசைப்பா பதிகம் முருகனைப் பற்றியது. அந்தாதி அமைப்பில் பாடப்பட்டுள்ளது. இப்பதிகம் - தலைவனிடம் அன்பு கொண்ட தலைவியின் துன்பத்தையும் - ஆற்றாமையையும் கண்டு, நற்றாய் இரங்கிக் வறுவதாக அமைந்துள்ளது. கோயிலில் தேசாந்திரி கட்டளை உள்ளது. நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன. கோயில் தூய்மையாக நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் உள்ள திருமுறைத்தலம் திருக்கடவுர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய திருமிகு. மங்கலமுடையார் அவர்கள் இம் முருகப் பெருமானால் ஈர்த்து ஆட்கொள்ளப்பட்டு இத்திருக்கோயில் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு இவருடைய பெருமுயற்சியாலேயே அழகான இராஜகோபுரம் கட்டப்பட்டு (1-9-1977ல்) குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.

"மாலுலா மனம்தந்து என் கையிற் சங்கம்
வவ்வினான், மலைமகள் மதலை
மேலுலாந் தேவர் குலமுழு தாளுக்
குமரவேள் வள்ளிதன் மணாளன்
சேலுலாங் கழனித் திருவிடைக்கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
வேலுலாந் தடக்கை வேந்தன் என் சேந்தன்
என்னும் என் மெல்லியல் இவளே".

"கொழுந்திரள் வாயார் தாய்மொழியாகச்
தூய்மொழி அமரர்கோ மகனைச்
செழுந்திரட்சோதிச் செப்புறைச் சேந்தன்
வாய்ந்த சொல் இவை சுவாமியையே
செழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக்கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
எழுங்கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார்
இடர்கெடும் மாலுலா மனமே".
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
திருவிடைக்கழி - அஞ்சல் - 609 310
தரங்கம்பாடி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.

திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர்

*சுமங்கலி பாக்கியம்*....
*************************

திலிபச்சக்கரவர்த்தி ஆழ்ந்த வேதனையடைந்தார்.காட்டுக்கு வேட்டைக்கு வந்த அவர், பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார். ஆனால், அது ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார். இதைக்கண்ட பெண் மான் ரிஷிபத்தினி (ரிஷியின் மனைவி) வடிவெடுத்தது. அந்தப்பெண், அவர் மீது விழுந்து அழுதாள். நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட ராஜா,  அவளருகே ஓடிவந்தார். ""அம்மா! மான் என்று நினைத்தே அம்பெய்தேன். இப்படி ஆகிவிட்டதே! அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே! '' என்று கண்ணீர் வடித்தார்.

அதுகேட்ட ரிஷிபத்தினி, ""மன்னா! இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்பிற்குரியதே. இருப்பினும், என் கணவரின்றி என்னால் வாழ இயலாது. என்னையும் கொன்று விடுங்கள்,'' என்று அழுதாள்.

மன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. ஒரு பெண்ணை...அதிலும் அந்தணப்பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதா! ஐயையோ! என்ன செய்வேன்! என் குலகுருவே! வசிஷ்ட மகரிஷியே! தாங்கள் இப்போதே இங்கு எழுந்தருள வேண்டும். இந்த குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்,'' என்று வேண்டினான். வசிஷ்டர் அங்கு தோன்றினார். அந்தப் பெண் அவரது  பாதங்களில் விழுந்தாள்.

என்ன நடந்ததென்பதை அறியாத வசிஷ்டர்,""தீர்க்க சுமங்கலி பவ'' என அவளை வாழ்த்தினார்.

""மாமுனிவரே! இதோ! இங்கே இறந்து கிடப்பவர் என் கணவர். அவர் இறந்தபிறகு, அபாக்கியவாதியாக நிற்கிறேன்! தாங்களோ நான் சுமங்கலியாக வாழ்வேன் என்று சொல்கிறீர்ளே! இதெப்படி சாத்தியம்!'' என்று வருத்தமாகக் கேட்டாள். வசிஷ்டருக்கு இப்போது தான் நிலைமை புரிந்தது. "தன் மாணவனையும் காப்பாற்ற வேண்டும், இந்தப்பெண்ணுக்கும் தன் வாக்குப்படி சுமங்கலியாய் வாழும் பாக்கியம் தர வேண்டும். என்ன செய்யலாம்?' அவர் யோசித்தார். ""பெண்ணே! காவிரிக்கரையில் வில்வமரக்காட்டில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அருகில் அம்பாள் சிலையும் இருக்கும். அங்கே நீ செல். உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில் ஏற்றிக்கொள். அதை இந்த மன்னனின் சேவகர்கள் சுமந்து வருவார்கள். அந்தக் கோயிலிலுள்ள ஜல்லிகை தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவனின் உடலில் தெளி. அவர் பிழைத்து எழுவார். அந்தக் கோயிலில்  ஜல்லிகை என்ற அசுரகுலப் பெண்மணி, இதே போல உயிர்போன தன் கணவனை எழுப்பினாள். அசுரனுக்கே அருளிய அந்த இறைவன், உனக்கு

நிச்சயம் உதவுவான், கிளம்பு,'' என்றார். அந்தப் பெண் மகிழ்ந்தாள். ரிஷிபத்தினி அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து தன் கணவரின் உடல் மீது தெளித்தாள். தூங்கி எழுந்தவர் போல் எழுந்தார் முனிவர். அப்போது  அம்பாளும், சிவனும் அவர்கள் முன் தோன்றினர். அம்பாளிடம் ரிஷிபத்தினி, ""அன்னையே! என்னைப் போலும், ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல்நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும்,' ' என வேண்டினாள். அம்பாளும் அப்படியே செய்வதாக  வாக்களித்தாள். ரிஷிபத்தினியும், முனிவரும் மீண்டும் திலீபனைச் சந்தித்தனர். தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் கோயில் கட்டும்படி கூறினர். மன்னனும் அவ்வாறே செய்தான். அதுவே திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலாகும்.

ஜல்லிகை என்பவள் அரக்க குலத்தில் பிறந்தாலும், சிவபக்தியில் சிறந்தவள். அவளுக்கு மனிதர்களை விழுங்கும் விருபாட்சன் என்றராட்சஷன் கணவனாக அமைந்தான். ஒருமுறை, ஒரு அந்தணச்சிறுவன் தன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய கங்கைக்கு சென்று கொண்டிருந்தான். விருபாட்சன் அவனை விழுங்க முயன்றான். ஜல்லிகை தடுத்தாள். அந்தணர்களை விழுங்கினால் அந்த உணவே விஷமாகும் என எச்சரித்தாள். அவளது பேச்சைக் கேட்க மறுத்த விருபாட்சன், சிறுவனை விழுங்கியதால், விஷமேறி இறந்தான். ஜல்லிகை திருத்துறைப் பூண்டி சிவனை வணங்கி, இறைவா! என் கணவன் நல்லவன் அல்ல, இருப்பினும் அவனின்றி நான் வாழேன். அரக்க குணத்தை மாற்றி, இரக்க குணமுள்ளவர் களையே இவ்வுலகில் பிறக்கச்செய். இல்லையேல், பிறவியிலிருந்து விடுதலை கொடு, என வேண்டினாள். அவளது துயரம் தாங்காத இறைவனின் துணைவியான பெரியநாயகி அவளுக்கு காட்சியளித்தாள். அவளது அருளால் விருபாட்சன் உயிர் பெற்றான்.
அத்துடன் அவனது வயிற்றில் கிடந்த அந்தணச் சிறுவனையும் எழுப்பினாள். அம்மா! நான் என் வழியே போய்க் கொண்டிருந்தேன். இடையில் இவன் என்னை விழுங்கினான். விதி முடிந்த என்னை உயிர்ப்பித்த காரணம் என்ன? என்றான்.

அவனிடம் அம்பிகை, மகனே! தந்தை இறந்த பிறகும், எவன் ஒருவன் அவரை நினைத்து ஆண்டுதோறும் அவருக்கு சிரார்த்தம் செய்கிறானோ, அவனுக்கு என்னருள் நிச்சயம் உண்டு. அது மட்டுமின்றி, மறைந்த அந்த தந்தைக்கு மறுபிறவி இல்லாமலும் செய்து சொர்க்கத்தில் இடமளிப்பேன், என்றாள். ஜல்லிகையிடம், மகளே! நீ அசுர குலத்தவள் ஆயினும் நற்குணமும், சிவபக்தியும் கொண்டிருந்தாய். எந்தப் பெண் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அதைத் தாங்கிக் கொண்டு, இன்முகத்துடன் கணவனின் நல்வாழ்வை விரும்புகிறாளோ, அவள் சுமங்கலியாக வாழ வழி செய்வேன். அவளது கணவனையும் திருத்துவேன், என்றாள்.


திருவாரூரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. இந்தக் கதையைப்  படித்தவர்களின் குடும்பத்தில் அகால மரணம் நிகழாது என்பது ஐதீகம். தம்பதி சமேதராய் இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெறுங்கள்..

நன்றி....

Tuesday 11 September 2018

ஞான ஸ்கந்தர் ஜீவ நாடி 11.09.2018

 நேற்று முருகர் நாடியில் எனனிடம் அகத்தியர் ஆலயம் அமைக்க சொல்லி உத்தரவு.
🙏🏻ஓம் முருகா 🙏🏻
🙏🏻ஓம் அகத்தீசா🙏🏻
- சந்தானம்

பொகளூரிலேயே அகத்தியர் கோவில், ஆசிரமம் அமைக்க உத்தரவு. பணிகள் துவங்கும்🙏🏻

என் சீடன் அகத்தியன் தான் உனக்கு எல்லாம் என்று அருளுரை

தற்போது நிலம் வாங்கி குடில் அமைத்து துவக்கப்படும்.

பின்னர் ஆலய கட்டுமானம்.  அகத்தியர் பெயரில் trust ஆரம்பித்து நிலம் அதில் பதிந்து செய்யப்படும்

நிலம் வாங்கியவுடன் , 27 நட்சத்திர மரங்கள் நடப்படும்.

சில மாதம் கழித்து மூல மந்திர உபதேசம்.

இன்னும் மிகப்பல அருளுரைகள் ஆசீர்வாதங்கள்

சில பரிகாரங்கள்

நாடி வாசிக்கும் பணி வரும் என்று உத்தரவு.

ஞானிகள் தொடர்பு சித்தர்கள் தொடர்பு

மகான்கள் தொடர்பு பீடாதிபதிகள் தொடர்பு தானே தேடி வரும் என்று வாக்கு வந்துள்ளது.

குருநாதராக பிற்காலத்தில் திகழ்வேன் என்று அருள் வாக்கு

வெளிநாட்டு தொடர்பு, வெளி நாட்டு நிறுவனம், வெளிநாட்டு பணம் போன்றவை இங்கே இருந்து நிர்வகிக்கும் நிலை உண்டு என்று அருள் வாக்கு

முருகரின் பரிபூரண அருள் உண்டு என்று ஆசி

வேலையை விட வேண்டாம் ஆன்மீகத்தையும் லௌகீகத்தையும் சேர்த்து பார்க்க சொல்லி உத்தரவு.

 ஒரு முருகர் தலத்துக்கு என்னை வர சொல்லி அங்கே ஒரு மரத்தை குறிப்பிட்டு அதன் அடியில் த்யானத்தில் அமர சொல்லி உத்தரவு.


Gnana Skanda Murthy Temple
Pudukad, Tamil Nadu 638501

https://maps.google.com/?cid=12370482404876957814








முருகர் நாடி, அகத்தியனே உனக்கு குருநாதர், மனித குரு ஒருவரும் அமைவார் என்று எனக்கு அருள் வாக்கு.

Monday 10 September 2018

ஜெர்மனியில் இருக்கும் ஐரோப்பாவின் பெரிய காமாட்சியம்மன் கோயில். வீடியோவை பாருங்கள்.

ஜெர்மனியில் இருக்கும் ஐரோப்பாவின் பெரிய காமாட்சியம்மன் கோயில். வீடியோவை பாருங்கள்.




ஔவை வரலாறு

ஔவை

ஔவை வரலாறு.
ஒளவையின் வாழ்க்கை வரலாற்றினை நோக்குங்கால், அவர் 12ம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்தவர் என்று அறியப்படுகிறது. இவர் தந்தையார் பகவன் எனவும் தாய் ஆதி எனவும், அவர்களுக்கு ஏழாவது குழந்தையாக ஒளவை பாணரகத்தில் அவதரித்ததாகவும் ஒரு குறிப்பு கானப்படுகிறது.

         ஆயினும் இவரின் படைப்புகளின் காலக்கட்டங்களை இன்ன பிற புலவர்களின் காலக்கட்டங்களோடு ஒப்பிட்டு நோக்குங்கால், ஒள‌வை பிராட்டியார் காலத்தை வென்று வாழ்ந்தவர் என்று கணிக்க முடிகிறது. இக்கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக அரசன் அதியமான் நெடுமான் அஞ்சி ஒள‌வைக்கு ஈந்த மரணத்தை வெல்லும் வல்லமை படைத்த அற்புத நெல்லிக்கனி கதையும் கூறப்படுகின்றது.

           இத்தமிழ் மூதாட்டியின் பெயர் சிறப்பினை நோக்குங்கால், அகர வரிசையில் பதினோராம் எழுத்தாகிய "ஔ" எனும் எழுத்தில துவங்கும் ஒளவை என்ற பெயர் அவ்வா என்ற சொல்லின் திரிபாக கருதப்படுகிறது. அதன் பொருள் மூதாட்டி அல்லது தவப்பெண் என்பதாகும் என்று பழந்தமிழ் அகராதி பகர்கிறது. அத்துடன் பிந்தையகாலத்தில் ஒளவை எனும் சொல், வயது அல்லது அறிவாற்றல் ஆகியவற்றில் முதிர்ச்சி பெற்றவர்க்கு வழங்கப்படும் குறியீடாகவும் அமைந்துள்ளது. இதிலிருந்தே பெரும் சிறப்பு வாய்ந்த தமிழ்ப்புலவி இவர் என்பது வெள்ளிடைமலை.

            சிரஞ்சீவியாக வாழ்ந்தவர் ஒளவை என்று எண்ணப்பட்டாலும், வரலாற்று ஆசிரியர்களின் கூற்றின்படி மூன்று பெண்புலவர்கள் 12ம் நூற்றாண்டுக்கு முன் ஒள‌வை எனும் பெயருடனும் ஒருமித்த குணாதிசயங்களோடும், புலமையோடும் வெவ்வேறு காலக்கட்டங்களில் தமிழகத்தில் வாழ்ந்தனர், கவி பாடிச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றனர்.

            மேற்குறிப்பிட்ட வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி முதலாம் ஒள‌வை கடைச்சங்க காலத்தில் வள்ளுவர், நக்கீரர் போன்றோரின் காலக்கட்டத்தில் வாழந்ததாகவும், இரண்டாம் ஒள‌வை பக்தி இலக்கியப் புலவர்களாகிய சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் காலத்திலும் மூன்றாமவர் கம்பர், புகழேந்தி, செயங்கொண்டார், சேக்கிழார், ஒட்டக்கூத்தர் போன்றோர் வாழ்ந்த காலத்திலும் வாழ்ந்தார் என்றும் சான்று பகர்கின்றனர்.இவையன்றி 14ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டுக்கு மத்தியிலான காலக்கட்டத்தில் மேலும் இரண்டு ஔவைகள் வாழ்ந்தனர் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். ஓர் ஒளவை 14ஆம் அல்லது 15ஆம் நூற்றாண்டிலும் அடுத்தவர் 18ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த இரு ஒளவைகளின் வாழ்க்கைக் குறிப்புக்கள் முழுமையாகக் பெறப்படவில்லை.

           ஔவையின் தோற்றப்பொலிவுப் பற்றி விவரிக்கையில் அறியப்படும் தகவல்கள் யாதெனில் ஔவை என்பவர் ஒரு விறலி (அதாவது ஒரு பாடலின் பொருளை உணரும் வகையில் மெய்ப்பாடு தோன்ற ஆடிக்காட்டுபவள் விறலி என்று அழைக்கப்படுபவராவார்). இவர் மடப்பத்தன்மை பொருந்திய மடவரல். இவர் மைதீட்டிய கண்களும் வாட்டமான நெற்றியும் அமைந்தவராக அறியப்படுகிறார். மேலும் எடுப்பான இலுப்பில் அழகிய அணிகலன்களையும் அணிந்திருந்தார் என அறியப்படுகிறார்.

            மனித வாழ்வுக்கேற்ற மகத்தான தத்துவங்களை வாரி வழங்கிய அவ்வையின் பொதுச் சிறப்பியல்புகள் என சில விசயங்கள் கூறப்படுவதுண்டு. அவையாவன ஒளவையானவர் பிறவியிலேயே தமிழறிவுடன் பிறந்தவர், பெற்றோரிடத்தில் வளராதவர், பாணரகத்தில் வளர்ந்தவர்,சிவபரத்துவம் தெளிந்தவர், வரகவித்துவம் வாய்க்கப்பெற்றவர்.இலௌகிகம்,வைதிகம் இரண்டும் தெரிந்தவர். உள்ளம்,உண்மை,மொழி ஆகியவற்றில் உயர்ந்தவர். அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கும் புரிந்தவர். தமிழ் நாடு முழுதும் திரிந்தவர்.கோவலூரிலும் புல்வேளுரிலும் வெகுநாட்கள் வாழ்ந்தவர். பலரை பற்றி கவிபாடிப் பரிசு பெற்றவர். சிறியோராயினும், வறியோராயினும் தமக்கு பரிசு ஈந்தவரை பெரியோராய் மதித்துப் பாடியவர். பரிசு கொடுத்தாலும் பாட்டுக் கேட்டலிலும் பாராமுகம் காட்டியவரையும், பாடலருமை அறியா மூடரையும் வெறுத்துப் பாடிய‌வர். மேற்கூறிய சிறப்பியல்புகள் அனைத்து ஔவைகளிலும் ஒருமித்து இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆற்றிய பணிகள்.
           ஒளவை பிராட்டியார் உலக மாந்தர் உய்வடைய தமது கவிப்பாக்களின் வழி நிறைய நற்பணிகளை ஆற்றிச் சென்றுள்ளார்.மிகப்பெரிய வாழ்வியல் தத்துவங்களை மிகவும் எளிய முறையில், ஒருவரிக் கவிதைகளாக புனைந்து மனதில் ஆழமாகப் பதியும் வண்ணம் அற்புதமாகப் படைத்தளித்தவர் ஒளவை பிராட்டி என்றால் அது மிகையல்ல...! இவர் இலெளகிகம், வைதிகம் இரண்டும் ஐயம் திரிபுர புரிந்து, அவற்றை மேன்மை வாய்ந்த தனது கவிப்புலமையால் யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் இனிய நடையில், எளிய முறையில் மக்களுக்கு கவிதைகளாக்கித் தந்துள்ளார்.

           சிவபரத்து வந்தெளிந்தவரான இவ்வம்மையார், பக்தி நாட்டம் கொன்டு இறை பக்தியை முன்னிறுத்தி பல தெய்வ வழிபாட்டுக் கவிதைகளையும் படைத்துள்ளார். இவரின் "விநாயகர் அகவல்" இன்றும் தியான வழிபாட்டிலும் , குரு வழிபாட்டிலும் முன்னிலையாக போற்றிப்பாடப்படுவது யாவரும் அறிந்ததே. இவரது இறைத்தொன்டு இதிலிருந்து நமக்கு புலனாகிறது.

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பது பழமொழி, நல்ல மனிதர்கள் இம்மண்ணில் உருவாக்கப்படவேண்டும் என்பதே ஒளவை பிராட்டியாரின் பெரும் கனவாக இருந்திருக்கிறது, அதனாலேயே அவர் சிறுவர் சிறுமியர்க்கும் அறிவுரைகளை பாடல் வரிகளாக விட்டுச் சென்றுள்ளார். இன்றும் தமிழ் பயிலும் மாணவர்களின் அரிச்சுவடியாக விளங்குவது ஒளவை பாடிச்சென்ற பாடல்களே...! அவை "இளமையிற் கல்வி சிலை மேல் எழுத்து சிலைமேல் எழுத்து" என்பதற்கொப்ப இளம்பிராயத்திலிருந்தே சிறுபிள்ளைகள் நல்லறிவும் ஒழுக்கமும் நற்பண்புகளும் வாய்க்கப்பெற்ற மனிதராக மலர உதவி புரிகின்றது. ஒளவையின் அரும்பணிகளின் தலையாய பணியாக இதை புரிந்து கொள்ள முடிகிறது.

            உலகம் சிறக்க, நாடு செழிக்க தனி மனித முன்னேற்றம் இன்றியமையாததாகும்..! ஒரு உயர்ந்த குணம் படைத்த மனிதனால் ஒரு சிறந்த குடும்பத்தை உருவாக்க இயலும், பல சிறந்த குடும்பங்கள் ஒருங்கிணைந்தால் சிறந்த ஊர், நாடு என உலகமே சிறப்படையும், இக்கருத்தினை முன்வைத்து ஒள‌வையானவர் பல கவிதைகளை படைத்துள்ளார். அறம் செய விரும்பு, ஆறுவது சினம் என‌த்துவங்கி ஓரம் சொல்லேல் என முடித்த 109 ஆத்தி சூடி வரிகளாகட்டும் சரி அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் எனத்துவங்கி முடித்த  ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம் 91 வரிகள் படைத்த கொன்றை வேந்தனாகட்டும், தனிமனித ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, வீரம், அறிவு, திறமை ஆகியவை மாந்தரிடையே மலர உன்னதமான கவிப்பணி ஆற்றியுள்ளார் ஓளவை பிராட்டியார் என்பதற்கு அவர் பாடிச்சென்ற இக்கவிதை வரிகளே நற்சான்றாகும்.

             மக்கள் நல்ல முறையில் மகிழ்ந்து வாழ நல்ல அரசாட்சி மிக முக்கியமாகும். ஒளவை சாதாரண குடிமக்கள், குழந்தைகள் அன்றி அரசர்க்கும் சிறந்த வழிகாட்டியாகவும், அவர் புகழ் பரப்பும் கவிப்புலவியாகவும் திகழ்ந்து அரும் தொன்டாற்றியுள்ளார், பல காலங்களுக்கு முன்னர் வாழ்ந்த மன்னர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்தம் வீரம், கொடைத்தன்மை மாண்பு மரபு ஆகியவைகளை ஒளவை போன்ற அரும் புலவர்களின் கவிப்பாக்களில் இருந்தே கண்டுணர்ந்து மக்களுக்கு தெளிவுபடுத்துகின்றார்கள் சரித்திர ஆசிரியர்கள். அவ்வகையில் காலத்தை வென்ற கல்வெட்டுக்களாய் இவர் பாடல்கள் நமது மூதாதையர்களின் அருமை பெருமைகளை நமக்கு விளக்கும் கலங்கரை விளக்கமாய் திகழ்கின்றது என்பது கண்கூடு...!  ஆக த‌னது வாழ்வில் உலக மக்கள், தமிழ்மொழி, பக்தி நெறி என வாழ்வு சார்ந்த யாவற்றுக்கும் ஈடினையற்ற அரும் பெரும் தொன்டாற்றியுள்ளார் ஒளவை.

தமிழ்த் தொண்டு.
           சங்ககாலப் புலவர்களுள் ஒருவராக போற்றப்படும் ஒளவை எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் மொத்தம் பாடல்கள் 59 இயற்றியுள்ளார். அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள். தமிழ் மொழியின் தொன்மையை உலகுக்குப் பறைசாற்றும் விதத்தில் காலங்களை வென்று வாழும் இத்தமிழ் பொக்கிசங்களை உலகுக்கு அளித்து மாபெரும் தமிழ் தொண்டு புரிந்தவர் ஒளவை ஆவார்.

           எல்லோர்க்கும் எல்லாத் திற‌மைகளும் வாய்த்து விடுவதில்லை, அப்படியே வாய்த்திருந்தாலும் அதை வெற்றிகரமாக உபயோகித்து தானும் பிறரும் பயனடையும் வண்ணம் எல்லோரும் வாழ்ந்து விடுவதில்லை, ஆனால் பிறப்பிலேயே தமிழறிவுடன் பிறந்த ஒளவையானவர், இயல்பிலேயே வரகவித்துவம் வாய்க்கப் பெற்றவர். இவர் தமது திறமையை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தி அருமையான கவிப்பாக்களைப் புனைந்து, பிற‌ரை ம‌கிழ்வித்து தானும் அதன் மூலம் ப‌ரிசில் பெற்று, இன்றுவரை நிலைத்திருக்கும் வண்ணம், நாமும் ப‌டித்துண‌ர‌வும் வகையில் ப‌ல சிற‌ப்பான நூல்களையும் உருவாக்கித்தந்து அருமையான‌ த‌மிழுக்கு மேலும் அணிக‌ல‌னாய் விள‌ங்கச் செய்து தமிழ்த் தொன்டாற்றியுள்ளார் ஒள‌‌வை பிராட்டியார்.

             ஒளவையால் மொத்தம் 59 செய்யுள்கள் பாடப்பட்டுள்ளன, அவை குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் காணப்படுகின்றன. இதில் முதலாம் ஒள‌வை என நம்பப்படும் ஒளவையால் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி நாற்பது ஆகிய‌ நூல்களை சிறுவர்களுக்கு இயற்றப்பட்டுள்ளன. இள‌ம் பிராயத்திலிருந்தே சிறுவர்கள் மனதில் நற்குணங்கள் பதிவதோடு அவர்கள் தமிழறிவில் சிறந்து விள‌ங்கவும் தமது படைப்புக்களைப் பாலமாக படைத்துச் சென்றவர் ஒள‌வை என்பது உண்மை. இந்த‌ விதையிலிருந்தே தமிழை விருட்சமாக்கும் ஒளவையின் முயற்சி ஒரு மிகவும் உயர்ந்த தமிழத்தொண்டாகும்.

            இவர் தூய தமிழ் வழிபாட்டிற்கு உறுதுணையாக பக்தியையும் தமிழ்ப்படுத்தியவர் ஆவார், அதனை நாம் அசதிக்கோவை, பந்தனந்தாதி, விநாயகர் அகவல் என‌ இவ‌ர் வ‌டித்த‌ நூல்க‌ளின் வ‌ழி உண‌ர‌ முடிகிற‌து. த‌மிழை விடுத்து வேற்று மொழியில் வ‌ழிபாடுக‌ள் அமைவ‌தை ஆத‌ரிக்காது த‌மிழால் ப‌க்தி வ‌ள‌ர்த்து இறைவ‌ழிபாட்டிலும் த‌மிழ்த்தொன்டு ஆற்றியுள்ளார் ஒள‌‌வை...! அற‌ம், பொருள், இன்ப‌ம், வீடு எனும் சித்தாந்த‌ங்க‌ளை த‌ம‌து கவித்திற‌னால் எளிமைப‌டுத்தி வேதாந்த‌க் க‌ருத்துக்களை நயமான கவிகளாக்கி, பல்லோரும் படித்து பயனுறும் நூல்களா‌க்கி தாம் வாழும் கால‌க்க‌ட்ட‌த்தில் த‌மிழ் இல‌க்கிய‌த்தை உயர்ந்த இட‌த்திற்கு எட்ட‌ச்செய்து மகத்தான தமிழ்த்தொண்டு புரிந்தவர் அவ்வை பிராட்டி என்ப‌து த‌மிழ்கூறு ந‌ல்லுல‌க‌ம் க‌ண்ட‌ உண்மையாகும்.‌

             இத்தகு மேன்மையான தமிழ்த்தொன்டுகள் பல புரிந்த ஒளவைக்கு 21ம் நூற்றாண்டில் வாழும் இன்றைய தமிழர்களான நாம் என்ன செய்யப் போகிறோம் ? காலங்களை வென்று இன்றளவிலும் நிலைத்து நிற்கும் இவ‌ர் நூல்க‌ளை ப‌டிப்ப‌தும், ப‌டித்து அத‌ற்கொப்ப ஒழுக்கமும் நற்பண்புகளும் நிறந்த நல்வாழ்வு வாழ்வதும், ஒளவையின் கருத்துக்களை இனி வரும் சந்ததியற்கு எடுத்தியம்புவதுமே அவ்வைக்கும், இவ்வுலகிற்கும், செம்மொழியாம் நம் தமிழ்மொழிக்கும் நாம் புரியவேண்டிய அரும் பெரும் தொண்டாகும்.

ஔவையார் இயற்றிய நூல்கள்.
இவரால் 59 செய்யுள்கள் பாடப்பட்டுள்ளன, அவை குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் காணப்படுகின்றன.அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள் என பகுத்துக் கூறப்படுகின்றன‌.இவர்களில் முந்தியவர் எனக்கருதப்படுபவர் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, ஞானக்குறள் , நாலு கோடிப் பாடல்கள், நல்வழி நாற்பது போன்ற நூல்களை இயற்றியவர். இவர் மேலும் அசதிக்கோவை, பந்தனந்தாதி, விநாயகர் அகவல் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். இவற்றில் அசதிக்கோவை மற்றும் பந்தனந்தாதி காலத்தால் அழிந்து நமது கைக்கு எட்டாமல் போய்விட்டது.மேலும் இவர் காலத்தில் தமிழ் இலக்கியம் உயர் நிலையை எய்தியது என்பர்.கீழக்கண்டவாறு சரித்திர ஆசிரியர்களால் ஒளவையின் நூல்கள் பகுத்துக் கூறப்படுகின்றன, ‍சங்கப்பாடல்கள் தனிப்பாடல்கள் (12-ஆம்நூற்றாண்டு) நீதிநூல்கள் (நல்வழி, மூதுரை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன்) சமயநூல்கள் (விநாயகர்அகவல், ஔவைகுறள்) சிற்றிலக்கியம் (பந்தன்அந்தாதி) ஒளவை அபரிமிதமான‌ அறிவாற்றலும், அற்புதமான கவியாற்றலும் வாய்க்கப் பெற்றவர் என்பதை மேற்காணும் அவருடைய படைப்புக்கள் உள்ளங்கை நெல்லிக்கனியென தெளிவுற எடுத்தியம்புகின்றன‌.

ஆத்திசூடி.
கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

ஆத்தி-திருவாத்தி பூமாலையை சூடி-அணிபவராகிய சிவபெருமான்அமர்ந்த-விரும்பிய

தேவனை-விநாயகக் கடவுளை ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்திதொழுவோம்-வணங்குவோம் யாமே-நாமே.

1.அறம் செய விரும்ப - நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.

2. ஆறுவது சினம்  - கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

3. இயல்வது கரவேல் - உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்குஒளிக்காது கொடு.

4. ஈவது விலக்கேல் - ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்றுதடுக்காதே.

5.உடையது விளம்பேல்- உன்னிடத்திலுள்ள பொருளை அல்லதுஇரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

6. ஊக்கமது கைவிடேல்- எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்- கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல்நன்கு கற்க வேண்டும்.

8. ஏற்பது இகழ்ச்சி- இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.

9. ஐயம் இட்டு உண்- யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு- உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறுநடந்துகொள்.

11. ஓதுவது ஒழியேல் -நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல் -ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13.அஃகஞ் சுருக்கேல்- அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்துவிற்காதே.

14.கண்டொன்று சொல்லேல்-. கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி)சொல்லாதே.

15.ஙப் போல் வளை -. 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாகஇருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச்சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்."ங"என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வதுபோல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளையவேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

16.சனி நீராடு -.சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.

17.ஞயம்பட உரை- கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு.

18.இடம்பட வீடு எடேல்-உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.

19.இணக்கம் அறிந்து இணங்கு -ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்லகுணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன்நட்பு கொள்ளவும்.

20.தந்தை தாய்ப் பேண் -உன் தந்தையையும் தாயையும் அவர்களுடையமுதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.

21.நன்றி மறவேல் - ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.

22.பருவத்தே பயிர் செய் - எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்யவேண்டும்.

23.மண் பறித்து உண்ணேல் -பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே(அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்புவழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)

24.இயல்பு அலாதன செய்யேல் - நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச்செய்யாதே.

25.அரவம் ஆட்டேல். -பாம்புகளை பிடித்து விளையாடாதே.

26.இலவம் பஞ்சில் துயில்  -இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால்செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு.

27.வஞ்சகம் பேசேல் -படச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களைபேசாதே.

28.அழகு அலாதன செய்யேல் -.இழிவான செயல்களை செய்யாதே

29.இளமையில் கல்- இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை(இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.

30.அறனை மறவேல். தருமத்தை எப்போதும் மறவாமல் செய்.

31.அனந்தல் ஆடேல்- மிகுதியாக துங்காதே.

32.கடிவது மற-யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.

33.காப்பது விரதம்- தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதேவிரதமாகும் (அல்லது) பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக்காப்பாற்றுவதே தவம் ஆகும்.

34.கிழமை பட வாழ்-உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்துவாழ.

35. கீழ்மை யகற்று-இழிவான குணஞ் செயல்களை நீக்கு.

36. குணமது கைவிடேல்- நன்மை தரக்கூடிய நல்ல குணங்களைபின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).

37. கூடிப் பிரியேல்- நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே.

38. கெடுப்ப தொழி -பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.

39. கேள்வி முயல்-கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயர்சிசெய்.

40. கைவினை கரவேல்-உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலைமற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.

41. கொள்ளை விரும்பேல்- பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.

42. கோதாட் டொழி-குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு).

43.கௌவை அகற்று-வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்க.

44. சக்கர நெறி நில்- அரசன் வகுத்த நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் =ஆள்பவர், தலைவர் ).

45.சான்றோ ரினத்திரு-அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன்சேர்ந்து இரு.

46. சித்திரம் பேசெல்- பொய்யான வார்தைகளை மெய் போல்ப் பேசாதே.

47. சீர்மை மறவேல்- புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்துவிடாதே.

48. சுளிக்கச் சொல்லேல்-கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படிபேசாதீர்.

49. சூது விரும்பேல்- ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.

50. செய்வன திருந்தச் செய்- செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும்இல்லாமல் செய்யவும்.

51.சேரிடமறிந்து சேர்-நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடயவர்களா எனநன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.

52. சையெனத் திரியேல்-பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே.

53. சொற்சோர்வு படேல்- பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப்பேசாதே.

54. சோம்பித் திரியேல்-முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

55. தக்கோ னெனத்திரி-பெரியோர்கள் உன்னைத்தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்.

56. தானமது விரும்பு-யாசிப்பவர்களுக்கு தானம் செய்.

57. திருமாலுக்கு அடிமை செய்-நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்.

58. தீவினை யகற்று-பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.

59.துன்பத்திற் கிடங்கொடேல்-முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின்வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.

60. தூக்கி வினைசெய்-ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளைநன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்.

61. தெய்வ மிகழேல்-கடவுளை பழிக்காதே.

62. தேசத்தோ டொத்துவாழ்- உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகைஇல்லாமல் வாழ்.

63. தையல்சொல் கேளேல்-மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

64. தொன்மை மறவேல்- பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே.

65. தோற்பன தொடரேல்-ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான்முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.

66. நன்மை கடைப்பிடி-நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும்உறுதியாகத் தொடரவும்.

67. நாடொப் பனசெய்- நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்லகாரியங்களை செய்.

68. நிலையிற் பிரியேல்-உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்துவிடாதே.

69. நீர்விளை யாடேல்-வெள்ளத்தில் நீந்தி விளையாடாதே.

70. நுண்மை நுகரேல்-நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே.

71. நூல்பல கல்- அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி.

72.நெற்பயிர் விளை- நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கைதொழிலாகக் கொண்டு வாழ்.

73. நேர்பட வொழுக- ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட.

74. நைவினை நணுகேல்-பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே.

75. நொய்ய வுரையேல்-பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

76. நோய்க்கிடங் கொடேல்-மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால்நோய்க்கு வழிவகை செய்யாதே.

77. பழிப்பன பகரேல்-பெறியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களானபொய்,கடுஞ்சொல் ஆகியவற்றை பேசாதே.

78. பாம்பொடு பழகேல்-பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன்பழகாதே.

79. பிழைபடச் சொல்லேல்-குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.

80. பீடு பெறநில்-பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்.

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்-உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்.

82. பூமி திருத்தியுண்-விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொள்.

83. பெரியாரைத் துணைக்கொள்-அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத்துணையாகப் பேணிக்கொள்.

84. பேதைமை யகற்று-அறியாமையை போக்க.

85. பையலோ டிணங்கேல்-அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

86. பொருடனைப் போற்றிவாழ்-பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவுசெய்யாமற் பாதுகாத்து வாழ்.

87. போர்த்தொழில் புரியேல்-யாருடனும் தேவையில்லாமல் சண்டைபொடுவதை ஒரு வேலையாக செய்யாதே.

88. மனந்தடு மாறேல்-எதனாலும் மனக்கலக்கம் அடையாதே.

89. மாற்றானுக் கிடங்கொடேல்-பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னைவெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.

90. மிகைபடச் சொல்லேல்- சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.

91. மீதூண் விரும்பேல்-மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

92. முனைமுகத்து நில்லேல்- எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காகபோர் முனையிலே நிற்காதே.

93. மூர்க்கரோ டிணங்கேல்- மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

94. மெல்லினல்லாள் தோள்சேர்-பிற மாதரை விரும்பாமல் உன்மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.

95. மேன்மக்கள் சொற்கேள்-நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக்கேட்டு நட.

96. மைவிழியார் மனையகல்- விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகிநில்.

97. மொழிவ தறமொழி-சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்.

98.மோகத்தை முனி-நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையைவெறுத்திடு.

99. வல்லமை பேசேல்-உன்னுடைய சாமர்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.

100. வாதுமுற் கூறேல்-பெறியோர்கள் இடத்தில் முறன் பட்டு வாதிடாதே.

101. வித்தை விரும்பு- கல்வியாகிய நற்பொருளை விரும்பு.

102. வீடு பெறநில்-முக்தியை பெறுவதற்க்கான சன்மார்கத்திலே வாழ்க்கையைநடத்து.

103. உத்தமனாய் இரு-உயர்ந்த குணங்கள் கொண்டவனாக் வாழு.

104. ஊருடன் கூடிவாழ்-ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்.

105. வெட்டெனப் பேசேல்-யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாகபேசாதே.

106. வேண்டி வினைசெயேல்- வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே.

107. வைகறை துயிலெழு- நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில்இருந்து எழுந்திரு.

108. ஒன்னாரைத் தேறேல்-பகைவர்களை நம்பாதே.

109. ஓரஞ் சொல்லேல்-எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல்நடுநிலையுடன் பேசு.