Thursday, 31 May 2018

அமானுஷ்ய கோவில் - பகவான் ஜெகந்நாதர் ஆலயம்.

☝வருடம் எவ்வளவு மழை பொழியும் என்பதை கூறும்... அமானுஷ்ய கோவில் !!

மழையின் அளவை முன்பே கூறும் அமானுஷ்ய கோவில் !!

அதிசயங்கள் நிறைந்த உலகம் இது. இன்னும் பல அமானுஷ்ய, அதிசய நிகழ்வுகள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கான விடையும் தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படியொரு அதிசயங்கள் நிறைந்த, நம்மை வியக்க வைக்கும் விடை தெரியாத அதிசயம் கான்பூரில் இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மழை வருமா? வராதா? என்பதை பொதுவாக எல்லோரும் வானத்தை பார்த்து அறிவதுதான் வழக்கம். ஆனால், ஒரே ஒரு ஊரில் உள்ள மக்கள் மட்டும் வானத்தை பார்க்கமாட்டார்கள்.

மாறாக அங்குள்ள கோவிலிற்கு சென்று அறிவார்கள். ஆம். மழை வருமா? இல்லையா? என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் ஒரு அதிசய கோவில் உள்ளது. வாருங்கள் அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் அமைந்திருக்கிறது பகவான் ஜெகந்நாதர் ஆலயம். சுமார் 1000 வருடங்கள் பழமையான இந்த கோவிலின் மேற்கூரையில் இருந்து வருடா வருடம் திடீரென நீர் சொட்டுகிறது.

சொட்டும் நீரின் அளவை பொறுத்து அந்த வருடம் எவ்வளவு மழை பொழியும் என்பதை அந்த ஊர் மக்கள் அறிந்து கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக, அந்த கோவிலின் உள்பகுதியில் மழை பெய்யத் தொடங்கி விடுகிறது. ஏழு நாட்களும் மழை நிற்பதே இல்லை.

ஆனால், வெளியில் பருவ மழை பெய்யத் தொடங்கியதும் கோவிலின் உள்ளே மழை நின்று விடுகிறது. இதற்கான காரணம் இன்னும் யாருக்கும் தெரியவில்லை. அந்த கோவிலின் உள்ளே மழை பெய்யத் தொடங்கிய ஏழு நாட்களில் பருவ மழை தொடங்கிவிடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இதற்கான காரணத்தைக் கண்டறிய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் வருகிறார்கள். ஆனால், இதுவரையிலும் அதற்கான விடையை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள், இங்கு சொட்டும் நீரின் அளவை பொறுத்தே அந்த வருடத்தில் என்ன பயிரிடலாம் என்பதை முடிவு செய்கின்றனர். அதோடு இந்த கோவிலில் உள்ள கடவுளுக்கு வருடா வருடம் சிறப்பு பூஜை செய்து, அதிக அளவில் நீர் சொட்ட வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றனர்.

Wednesday, 30 May 2018

சரணாகதி விளக்கம்

எளிய முறையில் சரணாகதி விளக்கம்

மாட்டு வண்டிக்கு
உயிர் இல்லை

மாட்டுக்கு
உயிர், அறிவு
இரண்டும் உண்டு

ஆனால்.....

வண்டிக்காரன்

உயிரில்லாத
வண்டியை....

அறிவுள்ள மாட்டுடன் பூட்டி..

எந்த இடம் செல்ல
வேண்டும்...

என்பதை தீர்மானித்து,

வண்டியை
செலுத்துவான்.

*எவ்வளவு தூரம்...*

*எவ்வளவு நேரம்...*

*எவ்வளவு பாரம்...*

அனைத்தையும்

*தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே*!

அறிவிருந்தும்.....

சுமப்பது தானாக இருந்தாலும்

மாட்டால்
ஒன்றும் செய்ய
இயலாது...

அதுபோல....

உடம்பு என்ற
ஜட வண்டியை

ஆத்மா, உயிர்
என்ற மாட்டுடன் பூட்டி

*இறைவன் என்ற வண்டிக்காரன்*

 ஓட்டுகிறான்....

*அவனே தீர்மானிப்பவன்*

*அவன் இயக்குவான்..*

*மனிதன் இயங்குகிறான்*

👉 *எவ்வளவு காலம்..

👉எவ்வளவு நேரம்..

👉எவ்வளவு பாரம்..

*தீர்மானிப்பது  இறைவனே*

இதுதான்

நமக்காக
இறைவன்
போட்டிருக்கும்
 *டிசைன்..*!

இதுதான்

இறைவன் நமக்கு
தந்திருக்கும்
*அசைன்மென்ட்*..!

*இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..*

*இதை*
*உணராதவனுக்கு*
*அமைதி இல்லை*.

*இருக்கும் காலங்களில்*
*இனியது செய்வோமே*!.🙏🙏 🙏 🙏 .

குண்டலினிசக்தி

குண்டலினிசக்தி
யைப்பற்றி அற்புதமான விளக்கம் கிடைத்தது.பதிவிட்டுள்ளேன்.

====>> குண்டலினி சக்தி நம்
முதுகுதண்டின் அடிப்பகுதியில்
குடிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால் அங்கே என்ன?? உள்ளது என்று பார்த்தால் தனிமங்களே!! அத்தனிமத்தின் பெயர்
வெண்பாஸ்பரஸ்.
இந்த வெண்பாஸ்பரஸ்
காற்று பட்டாலே பற்றி எரியும் தன்மை
கொண்டது. அதேபோல் நம் உடலில்
உண்ணாக்குக்கு மேலேயும் அடிவயிற்றுக்கு
கீழேயும் காற்று செல்வதில்லை.
இங்கே ஒரு
சாதகன் எதோ ஒரு சாதகம் மூலம் சுழுமுனை
வழியாக காற்றை மூலாதாரத்திற்கு
கொண்டு
செல்லும்போது, வெண்பாஸ்பரஸ் காற்றோடு
வினைபுரிந்து எரிய தொடங்கி அந்த அனல்
மேலே எழுகின்றது.
இதுவே யோகமுறையில்
குண்டலினி விழிப்படைதல் ஆகும். நம்
உடலின் வெப்பத்தை உண்மையில்
மூலத்தில்தான் கண்டறிய முடியும். அந்த
வெப்பத்துடன் இந்த அனலும் சேர்ந்தே மேலே
எழுகின்றது.
அடுத்து அந்த அனல் மேலே எழும்பி
சுவாதிஷ்தானத்தை அடைகின்றது. அங்கே
உள்ள தனிமத்தின் பெயர் கார்பன். மேலே
எழும்பிய அனலுடன் கார்பன் அணுக்களும்
வினைபுரிந்து வெப்பம் அதிகப்படுத்தப்ப
டுகின்றது. வெப்பம் அதிகப்படுத்தலே
குண்டலினி எழுவதாக குறிப்பிடபடுகின்றது.
இதனால் அனல் மேலும் மேலே எழுந்து
மணிபூரகத்தை அடைகின்றது. அங்கே அது
வினைபுரியும் தனிமத்தின் பெயர்
ஹைட்ரஜன். இந்த தனிமத்தின் இயற்கை
குணமே வெடிப்பதாகும். எனவே
வெப்பநிலை
மேலும் அதிகரித்து அனாகதத்தை
அடைகின்றது.
அனாகதத்தில் உள்ள
தனிமத்தின் பெயர் சுத்த ஆக்சிஜன். நாம்
சுவாசிக்கும் காற்று நைட்ரஜன் கலந்த
ஆக்சிஜனாகும். சுத்த ஆக்சிஜன்
எப்பொருளையும் விரைவாக எரித்துவிடும்.
எனவே இங்கேயும் வெப்பம் அதிகரித்து
விசுத்தியை அடைகின்றது.
ஐயோடின் என்பது விசுத்தியில் உள்ள
தனிமத்தின் பெயராகும். இங்கேயும்
வினைபுரிதலும் வெப்பம் அதிகமடைதலும்
நிகழ்ந்து மேலேறுகின்றது.
அடுத்ததாக உள்ள
சக்கரத்தின் பெயர் ஆக்கினை. அங்கே சுத்த
நைட்ரஜன் என்ற தனிமம் உள்ளது. மேலே
எழுப்பிய அனல் இத்துடன் வினைபுரிவதோடு நிற்கிறது என்றும்,அதை எழுப்பத்தான் குருவின் உதவி தேவைப்படுகின்றது என்றும்,
ஒரு குருவின்
பெருமைகளை வெறும் வார்த்தைகளால்
விவரிக்க முடியாது. அவருக்கு நிகர் இந்த
பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை. அது உங்கள்
அனுபவத்திற்கு வரும்போது நன்கு
விளங்கும் என்றும் கூறப்படுகிறது.
"சிரம் முட்டும் பொழுதில்
வரம் தட்டும் குருவே
தரம் பார்த் துன்னை
பரம் ஆக்கிடு வான்"
ஆக்ஞா சக்கரத்தின் புருவமத்தி வாசல்
திறந்தலே வெற்றிட பூஜ்ஜிய
பரமநிலையாகும். பிரமநிலைக்கு மணிபூரக
சக்கரம் விழிப்படைதலே காரணம்.
பக்தி
நிலைக்கு அனாகத சக்கரம் விழிப்படைதலும்,
முக்தி நிலைக்கு சகஸ்ராரம்
விழிப்படைதலும்,
யோக நிலைக்கு சுவாதிஷ்டானமும்,
ஞானத்தேடலுக்கு மூலாதாரம்
விழிப்படைதலும் காரணமாகும்.
நாதத்தின்
மீயோலி வெம்மையால் அமிர்தம் சுரப்பதற்கு
விசுத்தி விழிப்படைதலே காரணமாகும்.
மேலும் நாம் தியானத்தில் அமரும் போது
குண்டலினியானது புருவமத்தி அல்லது
சகஸ்ராரத்திலும், தூங்கும் போது
விசுத்தியிலும் தங்கும். அந்த அமிர்தமும்
விசுத்தியை தாண்டி கீழிறங்காது. அதாவது
விசுத்திதான் உறைவிடம்(உறையும் இடம்).
குண்டலினி எழும்பியபின் முதலில் நரம்பு
முடிச்சுகள் அவிழ்ந்து ஒவ்வொரு சக்கரமாய்
விழிப்படையும். இதில் உடலில் மாறுபாடாக
அடையாளமாக காண்பது விந்தின்
வெம்மையால் சகஸ்ராரத்தின் கீழ் உள்ள
மூளையின் நரம்பு முடிச்சுகள் அவிழ்ந்து
வெம்மையானது நெருப்பாறாக மாறி
வரிவரியாக தடம் இருக்கும்.
மேலும் உடலில்
நிரந்தரமாக காணப்படும் அடையாளமாக
புருவமத்திக்கு மேல் நெற்றி வகிடுக்கு கீழ்
விந்தின் வெம்மையால் ஒரு பிறைவடிவ "U"
நாமத்தடம் விழும். இத்தடமானது இப்பூமியில்
உடல் விடும் வரை இருக்கும். கை விரலால்
தடவி பார்த்து நெற்றியில் இந்நாமத்
தடத்தினையும், கபாலத்தில் வரிவரியாக
நெருப்பாற்றின் தடத்தினையும் காணலாம்.
சகஸ்ராரத்திலிருந்து நெருப்பாற்று தடத்தின்
வழியாக அமிர்தமானது பிறை வடிவ
நாமத்தடம் நீர் வடியும் விளிம்பாக மாறி அதன்
வழி புருவமத்தி உட்வாசலான குதம் சென்று
பின் அங்கிருந்தே உண்ணாக்கு வழி விசுத்தி
சென்று உறைவிடமாய் கொள்கிறது. மேலும்
பொன்னை உரசினாற் போல் மேனியுடைய
தேமலானது உடலில் அதிகம் காணலாம்.
அடுத்ததாக இந்திரியம், இரத்தம் வழியாக
உடல் முழுவதும் கலந்ததன் அடையாளமாகிய
உடலில் நறுமணமும், சிறுநீர் மற்றும்
வியர்வையில் கூட இந்திரியத்தின் மணமோடு
கூடிய ஓர் பழ வாசனையை அறியலாம்.
உடல் அடையாளமாக சாதாரணமாகவே
உழிழ்நீரானது அதிகமாக சுரப்பதும் மற்றும்
புருவமத்தி உள் வாசலான குதம் உறுத்தலும்,
மேலும் விசுத்தி சக்கரம்தான் அமிர்தமானது
உறையும் இடமாதலால் தொண்டை மத்தியில்
ஏதோ ஒன்று கட்டியாக ஒரு சிறு
உருண்டையாக இருந்துகொண்டு எதையும்
நாம் சாதாரணமாக விழுங்கும் போது அங்கு
உறுத்தல் ஏற்படும்.

குண்டலினி சக்தி என்பது உங்களுக்குள்
இருக்கும் ‘வெளிப்படாதசக்தி’. அதாவது அது
தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வரை,
அப்படியொரு சக்தி உங்களுக்குள் இருப்பதைக்
கூட நீ

ங்கள் அறியமாட்டீர்கள்.
ஆம், ‘அசையாத
வரை’ இல்லாதது போல் இருக்கும், ஆனால்
அது எழுச்சியுற்று, வெளிப்பட
ஆரம்பித்துவிட்டாலோ, இத்தனை சக்தியும்
உங்களுக்குள் தான் இருந்ததா என்று நீங்கள்
மலைத்துப் போவீர்கள்.
இக்காரணத்தினால்தான்
இந்த சக்தியை ‘சுருண்டு கிடக்கும் பாம்பாக’
குறித்தார்கள். சுருண்டு கிடக்கும் பாம்பு
நகர
ஆரம்பிக்கும் வரை, யார் கண்ணிலும் படாது.
அதேபோல் தான் உங்களுள் அமிழ்ந்திருக்கும்
இந்த சக்தி எழுச்சியுற்று நகரும் வரை, அதை
நீங்கள் உணரமாட்டீர்கள்.இந்த சக்தி
எழுச்சியுறும் போது, நீங்கள் கற்பனையில்
கூட நினைத்திடாதஅதிசயங்கள் உங்களுக்குள்
நடக்கத் துவங்கும். முற்றிலும் புதுவிதமான,
அபரிமிதமான சக்தியோட்டம் உங்களுக்குள்
நிகழ, அனைத்துமே வேறு வகையில்
இயங்கும்.
குண்டலினியை எளிமையாக விளக்க உங்கள்
வீட்டின் சுவற்றில் பிளக் பாயிண்ட் (plug point)
இருக்கிறது. அது தானாக மின்சாரத்தை
உருவாக்குவதில்லை.
எங்கோ ஓரிடத்தில் ஒரு
பெரிய மின்சாரத் தயாரிப்பு நிலையம்
இருக்கிறது, அதுதான் மின்சாரத்தை
உருவாக்குகிறது,ஆனால் அது உங்களுக்கு
நேரடியாக மின்சாரத்தை வழங்க
முடியாது.இந்த பிளக் பாயிண்ட்தான்
உங்களுக்குமின்சாரத்தைக் கொடுக்க
முடியும்.
பெரும்பாலானவர்கள் அந்த மின்நிலையத்தை
நினைத்துக்கூட பார்ப்பதில்லை, இல்லையா?
அவர்களுக்கு அப்படி என்றால் என்னவென்று
தெரியாமல் இருந்தாலும், ஒரு
மின்சாதனத்தை
இந்த பிளக் பாயிண்டோடு இணைத்துவிட்டால்,
அந்த சாதனம் வேலை செய்யும் என்பது
மட்டும் தெரிந்திருக்கிறது. இந்தக்
குண்டலினியும் ஒரு பிளக் பாயிண்ட்
போலத்தான், அதுவே ஒரு மின்நிலையம்
அல்ல. இது 3 பின்களைக் (pin) கொண்ட பிளக்
பாயிண்ட் அல்ல. 5 பின்களைக் கொண்ட பிளக்
பாயிண்ட். இதை இப்படிப் பார்க்கலாம். உடலில்
இருக்கும் ஏழு சக்கரங்கள் பற்றி நீங்கள்
கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் மூலாதார
சக்கரம், அடிப்படை அல்லது ஆதாரமாக
இருக்கும் சக்கரம். இது ஒரு பிளக்
பாயிண்டைப்
போலவும் அடுத்த 5 சக்கரங்கள் சேர்ந்து 5
பின்கள் கொண்ட ஒரு பிளக் போலவும்
இருக்கிறது.ஏழாவது சக்கரம் ஒரு பல்பைப்
(bulb) போன்றது. இப்போது பிளக்கை பிளக்
பாயிண்ட்டில் சொருகினால், உங்களைப்
பற்றிய
அனைத்தும் ஒளிவிடுகின்றன. இப்போது
உங்களைப் பற்றிய அனைத்தையும் படிக்க
முடியும். இப்படி உங்களுடைய பிளக்
அதற்கான பிளக் பாயிண்டில் சரியாக
சொருகப்பட்டு விட்டால், பிறகு விளக்குகள்
இருபத்தி நான்கு மணி நேரமும்
பிரச்சனையின்றி தொடர்ந்து எரியும். பேட்டரி
தீர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டிய
அவசியம் கிடையாது. எனவே, உங்களில், பிளக்
சரியாக பிளக் பாயிண்டில் இணைக்கப்பட்டிரு
க்கும்போது, நீங்கள் எல்லையில்லாத
சக்தியின் மூலத்தோடு தொடர்பு
கொள்கிறீர்கள். அதுதான் குண்டலினி.
யோகா செய்வதன் அடிப்படையே
அவர்களுக்குள் ஒரு சமநிலையை
ஏற்படுத்துவதுதான். அந்த சமநிலை
வந்துவிட்டால், பிறகு ப்ளக்கை பிளக்
பாயிண்டில் சரியாக சொருகி விடுவீர்கள்.
அப்படிச் சரியாக தொடர்பு கொள்ளும்போது,
எல்லையில்லாத சக்தியுடன் தொடர்ந்து
தொடர்பில் இருப்பீர்கள்.
சக்தி நிலை கூடுகிறது என்றால் உங்கள்
‘ஆழ்ந்து உணரும்’ ஆற்றலும் கூடுகிறது.
யோக விஞ்ஞானம் முழுவதுமே உங்களின்
இந்த நுண்ணுணர்வை அதிகரிக்க
உருவாக்கப்பட்டவை தான். ஆன்மீக
செயல்முறை என்றாலே உங்களின் உணரும்
திறனை அதிகரிப்பதற்குத்தான்… ஏனெனில்
உங்கள் அறிவின் சாரம், நீங்கள் அறிபவை
எல்லாம் நீங்கள் உணர்வதை சார்ந்தே
இருக்கிறது.

வாழ்கதமிழ்
வெல்கபாரதம்
வந்தேமாதரம் 👏

Saturday, 26 May 2018

வாழ்க்கைத்துணையை இழந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, ஸதாபிஷேகம் செய்துகொள்ளலாமா?

வாழ்க்கைத்துணையை இழந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, ஸதாபிஷேகம் செய்துகொள்ளலாமா?
வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, ஸதாபிஷேகம் போன்ற சாந்தி ஹோமங்களைச் செய்து கொள் ளலாமா ?

அறுபது வயது நிரம்பியவ ர், ஆயிரம் பிறைகளைக் கண்டவர் அதத னைபேரும் ஆண் – பெண் பேதமி ன்றி அந்த இரண்டுசடங்குக ளையும் நடைமுறைப் படுத்தலாம். வயதின் அளவை வைத் து நிகழ்த்தப்படுவதால் குறிப்பிட்ட அந்த வயதுகளை

எட்டி யவர்களின் பிறப்புரிமை அது.

திருமணம் ஆகாதவரும், அந்த வயதை எட்டுவார். ஆகை யால் அவருக்கும் உண்டு. தம்பதி களில் இழப்பு என்பது நிகழக் கூ டிய ஒன்று. இழந்தவர்களும் வ யதை எட்டுவார்கள். இருவரும் இருந்தால் மட்டுமே அதை செய் யவேண்டும் என்றுஇல்லை. அது தாம்பத்தியத்தின் அடிப்படையி ல் ஏற்பட்ட சடங்கு அல்ல. குறிப்பிட்ட அந்த வயதை எட்டிய வர்களின் உரிமை. இறந்தவர்களின் நூ றாவது பிறந்த நாள் கொண்டாட்டம் உண்டு. வெள்ளிவிழா, தங்க விழா, வைர விழா என்று அமரத்துவம் அ டைந்தவர்களுக்காகவும் அனு ஷ்டிப்பது உண்டு. ஆக, இழப் பைக் காரணம் காட்டி, உரிமை யைமறுப்பது சரியில்லை. பண் டைய நாட்களில் இழப்பைச் சந் தித்தவர்கள், கொண்டாட்டத் தைத் தவிர்த்தார்கள். தனி மனிதனின் விருப்பு, வெறுப்பு, செ யல்பட்டது. ஆனால் சாஸ்திரம் மறுக்கவில்லை.

-ஸ்ரீசேஷாத்ரிநாத சாஸ்த்ரிகள் – சக்தி விகடன் (08.02.2011)

சிகண்டி

சிகண்டிக்கு ஆண்மையை வழங்கி, பெண்மை ஏற்றுக்கொண்ட ‘யட்சன்’! – அறியாத வரலாறு
புத்திரப்பேறு வேண்டி சிவனைக் குறித்துக்கானகத்தில் கடும் தவம் செய்து கொண்டிருந்தான் மன்னன் துருபதன். தன் கணவனுக்கு சிவன் அருளப்போகும் வரம், தனக்கும் பேறுவ கை அளிப்பதாக அமைய வேண்டும் என்று அதே காலத்தில் அரண்மனையி ல் பூஜையறையிலேயே பழியாய்க் கிட ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந் தாள் துருபதனின் பட்ட மகிஷி. இருவர து வேண்டுதல்களாலும் திருப்தியடை ந்த சிவன் தனித்தனியே அவர்கள் முன் தோன்றினார். அவர்களுக்கு பீஷ்மரை க் கொல்லக் கூடிய வலிமை படைத்த குழந்தை பிறக்குமென்றும் தொடக்கத் தில் பெண்ணாக இருக்கும் குழந்தை பின்னர் ஆணாக

மாறு மென்றும் வரமருளி மறைந்தார்.

கானகத்திலிருந்து தவம் முடிந்து திரும்பிய கணவனை சற் றே கவலையோடு வரவேற்றாள் பட்ட மகிஷி. சிவனருளால் பிறக்கவிருக்கும் குழந்தையை எப்படி வளர்ப்பது? பெண் ணாகவா? ஆணாகவா? பெண் குழந்தையென்றே சமுதாயத் திற்கு அறிமுகப்படுத்தி வளர்த்தால் ஒரு காலத்தில் குழந் தை ஆணாக மாறும்போது சமுதாயம் நகைக்காதா? இதில் மேலும் ஒரு சிக்கல், குழந்தை எந்த வயதில் ஆணாக மாறு ம் என்பதைச் சிவன் தெரிவிக்கவுமில்லை. சிந்தனை யோடு அவர்கள் இருவரும் காத்திருந்தார்கள். பத்து மாதத்தில் மகா ராணி ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள். குழந்தை பெண் என்பதை அவர்கள் ரகசியமாக வைக்க முடிவு செய் தார்கள்.

குழந்தையை ஆண் என்றே அறிவித்தார்க ள். ஆண் உடை உடுத்தி சிகண்டி எனப் பெயர் சூட்டி, ஆணாகவே வள ர்த்தார்கள். தவமிருந்து பெற்ற குழந்தையாதலால், தாங்க ளே மிகுந்த கவனிப்போடு வளர்க்க விரும்புவதாகச் சொல் லி, பணிப்பெண்களைத் தவிர்த்தார்கள். குழந்தையை நீரா ட்டுதல் போன்ற விஷயங்களைத் தனிமையில் நிகழ்த்தி, அதுபெண் குழந்தை என்று யாருக்கும் தெரியாமல் பார்த் துக் கொண்டார்கள். சிகண்டி ஆண் அல்ல என்ற ரகசியம் சிக ண்டிக்கும் பெற்றோருக்கும் மட்டுமே தெரியும். உலகம் சிக ண்டியை ஆண் என்றே அறிந்தது.

சிகண்டி ஆணுக்குரிய அத்தனை போர்க் கஸ்லகளையும் கற்று மாபெரும் வீரனாக வளர்ந்தாள். வாலிப வயதில் அந்த அழகி பெரும் அழகனாகத் தோற்றமளித்தாள். சிகண்டியின் அழகு பல இடங்களில் வியந்து பேசப்பட்டது. சிவகடாட்சத் தால் பிறந்த குழந்தை பேரழகோடு திகழ்வதில் என்ன விய ப்பு? சிவனின் தலையில் இருந்த இளம்பிறை வளர்ந்து முழு மதியாகி சிகண்டியின் முகமாய் மாறியதுபோல் தோன்றிய து. சிகண்டி வீதியுலா வந்தபோது, வெண்ணிலவைப் பழிக் கும் சிகண்டியின் முகத் தைப்பார்ப்பதற்காக மக் கள் பெருங் கூட்டமாகக் கூடினார்கள். மன்மத னையும் பழிக்கும் சிக ண்டியின் அழகு பல  இடங்களிலும் பேசப்ப டலாயிற்று.

இதனால் ஒரு விபரீதம் உருவாயிற்று. சிகண்டி யின் பேரெழிலைப் பற்றிக் கேள்விப்பட்டு, தாசார்ணக மன் னன் இரண்யவர்மனின் புதல்வி, சிகண்டியைத்தான் மணப் பேன் என்று ஒற்றைக் காலில் நின்றாள். கடவுளே! இப்போது என்னதான் செய்வது? துருபதன் மனம் அனலில் பட்ட புழு வாய்த் துடித்தது. இரண்யவர்மனைப் பகைத்துக் கொள்ள இயலாது, அவன் பெரும் படைபலம் நிரம்பியவன். ரகசிய த்தை வெளியிட வும் இயலாது. அது பெருத்த அவமானம். துருபதன் சிகண்டி யை அழைத்தான். ‘‘வேறு வழியில்லை. நீ அவளை மணந் துகொள். ஆறு மாத காலம் சிவபெருமான் குறித்து விரதமி ருப்பதாகச் சொல்லி, அவள் உன்னை நெருங்காமல் பார்த் துக் கொள்.

இப்போது மணம் நடந்தாலும் உன் சிவ விரதம் முடிந்தபிற கே அவளை நாம் நம் இல்லத்திற்கு மருமகளாக அழைத்துக் கொள்வோம் என்று சொல்லிவிடுவோம். ஆறுமாத காலம் உண்மையிலேயே நீ சிவனை மனமுருகிப் பிரார்த்தனை செய்து ஆண் தன்மை பெற்றுவிட்டால் பின் எந்தச் சிக்கலும் இராது!’’ என்றான்.

இந்த ஒப்பந்தத்தின் பேரில் திரு மணம் விமர்சையாக நடை பெ ற்றது. ஆனால், என்ன இருந்தா லும், கல்யாணமான புது மாப்பி ள்ளை மாமனார் இல்லத்திற்கு நான்கு நாட்களேனும் வந்து திரும்ப வேண்டாமா? தங்கள் நாட்டு மக்கள் மாப் பிள்ளையைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டாமா? இரண் யவர்மன் இப்படியொரு வேண்டுகோள் வைத்தபோது துருபதனுக்கு என்ன செய்வதென்று தெரியவி ல்லை. வேறு வழியி ல்லாததால், சிகண்டியை எச்சரிக்கை செய்து மாமனார் தே சத்திற்கு நான்கே நான்கு நாட்கள் சென்றுவர அனுமதித் தான்.

உண்மையை எத்தனை நாள் மறைக்க முடியும்? சிகண்டி குளியலறையில் நீராடியபோது, கணவனின் முழுமையான அழகை ரசிக்க நினைத்த புது மனைவி சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்தாள். அதுவரை மறைக்கப்பட்டிருந்த ரகசியத் தை அறிந்துவிட்டாள். தந்தையிடம் ஓடோடிச் சென்று தாங் கள் ஏமாற்றப்பட்ட விவரத்தைக் கூறி ஓவென்று ஓலமிட்டு அழுதாள். இரண்யவர்மன் கடும் சீற்றமடைந்தான். வழக்கம் போல் ஆணுடை தரித்து வெளியே வந்த சிகண்டி, தன்னைப் பற்றிய ரகசியம் வெளிப்பட்ட விவரமறிந்து திகைப்படைந் தாள். ஆனால் சாமர்த்தியமாக ஒரு நாடகமாட முடிவு செய் தாள். மன்னன் இரண்யவர்மன் முன் வந்த சிகண்டி, உரத்த குரலெடுத்து கர்ஜித்தாள்:

‘‘மன்னா! உன் பெண் யாரை யோ காதலிக் கிறாள் போலிருக் கிறது. நீங்கள் வற்புறு த்தி என்னை அவளுக்குத் திருமணம் முடி த்து வைத்திருக்கிறீர்கள் என்று சந்தேகிக் கிறேன். என்னை த் தவிர்க்கவே இப்படி யோர் அபாண்டப் பழியை என்மேல் சுமத் துகிறாள். எதிர்காலத்தில் கணவனை விரு ம்பாத பெண்களெல்லாம் கணவன் ஆண்மையற்றவன் என்று சுலப மாகப் பொய்சொல்லி வழக்குமன்றம் சென்று தங்கள் மண த்தை ரத்துசெய்து கொள்ளப் போகிறார்கள். இப்படியொரு பொய்யை மனைவியே சொன்னால் யார்தான் மறுக்க இய லும்! எதிர்கால நிகழ்வுகளுக்கான பிள்ளையார் சுழியை இதோ இப்போது இவள் ஆரம்பித்து வைத்திருக்கிறாள். நல் லது. நான் வருகிறேன்!’’

இப்படிச் சொல்லிவிட்டு, கம் பீரமாகத் தன் தேரிலேறிய சிகண்டி, குதிரைகளின் கடி வாளத்தைப் பிடித்துச் சொடு க்கினா ள். குதிரைகள் அவள் தேசத்தை நோக்கிக் காற்றாய்ப் பறந்தன. சிகண்டி அப்போ தைக்கு அந்தச் சிக்கலிலிருந்து தப்பித் து விட்டாள். ஆனால், தன் மகள் கூற்றையே பெரிதும் நம் பிய இரண்யவர்மன், இதில் ஏதோ சூது இருப்பதை உணர்ந் தான். வஞ்சினத்தோ டு, அவனுடைய படைகள் துருபதன் நாட்டை நோக்கிப் பாய் ந்து வந்துகொண்டிருக்கும் விவரத் தைச் சிகண்டி அப்போது அறியவி ல்லை. தன் நாடு சென்ற சிகண்டி நேரே அரண் மனைக்குச் செல்லா மல் கானகம் சென்றாள். இனி இந்த அவ மானத்தோடு உயிர்வாழ்வதில் அர்த்தமில்லை.

பிராயோபவேசம் என்னும் முறை யில் உண்ணாநோன்பு இருந்து உயிரை விட்டுவிட வேண்டியதுதா ன். உரிய நேரத்தில் கிட்டாத சிவனருளால் இனியென்ன பயன்? கானகத்தில் ஒரு குகையின் முன்னே இருந்த பெரிய ஆல மரத்தின் அடி யில் இரவு பகலாக ஒரே நிலையில் அமர்ந்து உண்ணா நோன்பிருக்கலா னாள் சிகண்டி. அந்தக் கு கையில் குபேரனுக்கு வே ண்டியவ னான ஸ்தூணா கர்ணன் என்ற யட்சன் வா ழ்ந்துவந்தான். கருணை யுள்ளம் கொண்ட அவன் சிகண்டியிடம் வந்து பரி வோடு விசாரித்தான். சிக ண்டி அவன் அன் புக்கு மரியாதை கொடுத்து, தன் வரலாறு முழுவதையும் சொன்னாள். ‘‘இவ்வளவுதானே?’’ என்று ஆறுதலாகக் கேட்டான் அவன். ‘‘சிகண்டி, வருந்தாதே!

நான் குபேரனுக்கு வேண்டியவன். அவன் மூலம் வரமருளு ம் ஆற்றல் பெற்றிருக்கிறேன். என்னால் உன் பெண்மையை நான் வாங்கிக் கொ ண்டு என் ஆண்மையை உனக்குத்தர முடியும். ஓராண்டுக்குள் நீ மறுபடி வந்து என் ஆண்மையை எனக்கே திருப்பித் தருவதாக வாக்களித் தால் அந்தக் குறுகி ய காலத்திற்கு நான் உன்னை ஆணாக்குகிறேன்!’’ என்றா ன். சிகண்டி மிகுந்த மகிழ்ச்சியடை ந்தாள். ஓராண்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். திருமணமான இந்தத் தருணத்தில் ஆண்மை கிட்டுவதல்ல வா மிக முக்கியம். அந்த யட்சனைத் தன்னைக் காக்க வந்த சிவனாகவே கருதி வண ங்கினாள். அவனை ஓராண்டில் மீண்டும் சந்திப்பதாக வாக் குறுதி கொடுத்தாள்.

யட்சன் அவள் தலையில் கைவைத்து மந்திரஜபம் செய்தா ன். சில கணங்களில், என்ன ஆச்சரியம்! சிகண்டி ஆணானா ள். அவன் பெண்ணானான். இப்போது சிகண்டி அவளல்ல. அவன்! சிகண்டி ஓடோடித் தன் நாட்டுக்கு வந்து சேர்ந்தான். நாட்டைப் படைகள் சூழ்ந்திருப்பதையும் தன் மாமனார் கடும் சீற்றத்தோடிருப்பதையும் அறிந்தான். தன் பெற்றோர் முன்னி லையிலும் தன் நாட்டு மக்கள் முன்னிலையி லும் தன மாமனாரான இரண்யவர் மனை அறைகூவி அழைத்தான்: ‘‘ இரண் யவர்மரே! மாமனார் என்றால் தந் தை ஸ்தானம் அல்லவா? அப்படி யிருக்க உங்கள் மாப்பிள்ளை மேல் இப்படி அபாண்டப் பழி சுமத் தலாமா? என்தேச மக்கள் என்னை ப் பற்றி என்ன நினைப்பார்கள்?

உங்கள் பெண்ணிடம்தான் ஏதோ மனக்கோளாறு இருக்கிற தே தவி ர என்னிடம் எந்த உடல் கோளா றும் இல்லை. அவச ரப்பட்டுப் படையெடுத்து வந்திருக்கிறீ ர் களே? ஏன் என்னை நீங்கள் மருத்துவக்குழுவை வைத்துப் பரிசோதிக்கக்கூடாது? எங்கள் நாட்டு மருத்துவர்கள் தேவை யில்லை. உங்கள் நாட் டிலிருந்தே மருத்துவர்கள் சில ரை அழைத்து வாருங்கள். நான் சோதனைக்கு உட்படத் தயார்!” சிகண்டியின் கம்பீர மான அறைகூவல் இரண்யவர்மனைத் திகைக்க வைத்தது. அவன் உடனடி யாகத் தன் தேச மருத் துவர்கள் சிலரை வர வழைத்தான். அவர்கள் அந்தரங்கமாக சிகண்டி யைப் பரி சோதித்தார்கள். பின்னர் இரண் யவர்மனிடம் பொதுமக்கள் முன்னி லையில் அந்த மருத்துவர்க ள் ஏகோ பித்த அபிப்ராயத்தைத் தெரிவித்தா ர்கள்:

‘‘மன்னா! ஆணழகரான சிகண்டியிட ம் எந்த உடல் கோளாறும் இல்லை. அவர் முழுமையான ஆண்மகன்தா ன். எங்க ளுக்கொரு சந்தேகம். நம் நாட்டு ராஜகுமாரியை நல்ல மன நல மருத்துவரிடம் காண் பிப்பது நல்லது!’’இந்த விளக்கத் தைக் கேட்டு இரண்ய வர்மன் அவமானம் அடைந்தான். தன் மாப்பிள்ளையிடமும் அவனது பெற்றோரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். தன் மகளை அழைத்துவந்து சபை முன் அவளைத் தாறு மாறாக ஏசலானான்.

அப்போது குறுக்கிட்டான் சிகண்டி. ‘‘இரண்யவர்மரே! நட ந்தது நடந்துவிட்டது. இனிப் பழையவற்றைப் பேசுவதால் லாபமென்ன? உங்கள் மகளை என் முன்னிலையில் நீங்கள் ஏசக் கூடாது. ஏனென்றால் இப்போது அவள் உங்கள் மகள் மாத்திரமல்ல என் மனைவியும் கூட. என் அன்பான மனை வி மீது யார் கடும்சொல் கூறினாலும் அதை என்னால் அனு மதிக்க இயலாது!’’

தன் மனைவியை இழுத்து அணை த்துக் கொண்டான் சிகண் டி! அவ ள் அவன் மார்பில் தலைவைத்து விம்மினாள். இரண் யவர்மன் தன் மகளை சரியான இடத்தில்தான் ஒப்படைத்தி ருக்கிறோம் என்ற நிம்மதியோடு விடைபெற்றான். ஆனால், சிகண்டியின் மனை விக்குத்தான் தன் கண் தன்னை எப்படி ஏமாற்றியது என்று கடைசிவரை தெரியவில்லை! குளியல றைச் சாளரம் பொய் சொன்னதோ! ஓராண்டு என்பது, முந் நூற்று அறுபத்தைந்தே நாட்களில் உருண்டு ஓடியே போய் விட்டது. சிவனை வணங்கிய சிகண்டி, யாருமறியாமல் கா ் னகம்சென்றான். தனக்கு ஆண் மையை வழங்கிய ஸ்தூணா கர்ணன் என்ற அந்த யட்சனை மறுபடி சந்தித்தான். தன் ஆண் மையை ஏற்று மீண்டும் தனக் குப் பெண்மையை வழங்குமா று நன்றியுடன் வேண்டினான்.

ஆனால், ஸ்தூணாகர்ணனோ கலகலவென்று சிரித்தான். பின் சொல்லலானான்: ‘‘அன்பனே சிகண்டி! என் இரக்கத் தின் காரணமாகத்தான் நான் உனக்கு என் ஆண் தன்மையை வழங்கினேன். நான் பெண்ணானேன். நீ விடைபெற்றுச் சென்ற சில நாட்களில் என் தலைவன் குபேரன் இங்கே வந் திருந்தார். என் நிலைகண்டு சீற்றமடை ந்தார். இரக்கப்படுவதற்கு ஓர் அளவில் லையா, இனி நீ பெண்ணாகவே தான் இருப்பாய் என்று சபித்துவிட்டார். நல்ல நோக்கத்தோடு செய்த செயலுக்கு இப்ப டியொரு சாபமா என்று கதறினேன். அவ ர் மனமிரங்கினார். நீ யாருக்கு ஆண் தன்மையை வழ ங்கினாயோ அவர் காலமானபின் நீ மீண்டும் ஆணாவாய் என்று சாப விமோசனம் அருளினார்.

நீ நெடுநாள் வாழவேண்டும் என்பதே என் பிரார்த்தனை. ஏனென்றால் நான் பெண்ணானதில் எனக்கு இப்போது வருத் தமெதுவும் இல்லை. ஒருபெ ண் அடையக் கூடிய சுகதுக்க ங் களை அனுபவபூர்வமாக அறிய இது ஒரு வாய்ப்பு என் றே என் மனம் நினைக்கிறது. வாழ்க்கைச் சம்பவங்கள் வி சித்திரமானவை. நீயும் நானு ம் ஆணாகவும் பெண்ணாக வும் இருந்து இருவேறு நிலை மைகள் குறித்தும் அறிந்து கொண்டோம். இது கடவுள் தந்த பேறு!’’ யட்சனின் அன் பான பேச்சைக் கேட்ட சிகண் டியின் கண்கள் கலங்கின. யட்சனை வணங்கி ஆசிபெற்ற சிகண்டி தன் அரண்மனைக்குத் திரும் பினான். தன் தாய், தந் தையரிடம் நடந்த சம்பவங்கள் அனை த்தையும் விளக்கி னான்.

துருபதனும் அவன் மனைவியும் சிவபெருமான் அல்லவோ யட்சனின் மனத்திற்குள் புகுந்து இத்தகைய திருவிளையாட லை நிகழ்த்தியிருக்கிறார் என்று வியந் தார்கள். அவர்கள் சிகண்டியோடு பூஜை யறைக்குச் சென்று தரையில் விழுந்து சிவலிங்கத்தை வணங்கினார்கள். அந்த க்காட்சியைப்பார்த்த சிகண்டியின் ம னைவி, ஏன் இவர்கள் திடீரென்று பூஜை யறைக்குச் சென்று சிவனை வணங்குகி றார்கள் என்றறியாமல் திகைத்தாள். ஆண்மை நிறைந்த தன் கணவனின் சிவ பக்தியை நினைத்து அவள் உள்ளம் மகி ழ்ந்தது. (மகாபாரத இதிகாசத்தில் அம் போபாக்கியானம் என்ற பகுதியில் வரும் இந்தக் கிளைக் கதை, வாக்குத் தவறாமையின் மகத்துவத் தையும் இறைவன் நினைத்தால் எதுவும் நடக்கும் என்பதை யும் விவரிக்கிறது.)

பாட்டிமை

அமாவாசைக்கு மறுநாள் பாட்டியமை அன்று எந்த நல்ல‍ காரியங்களையும் செய்ய‍க்கூடாது ஏன்?

பாட்டியம் என்பது என்ன? பிரதமை திதியை பாட்டியம் என்று சொல்வா ர்கள். பெளர்ணமிக்குப் பிறகு சந்திரன் குன்றுதலை அவ்வாறு சொல்வார்கள். பெளர்ணமி முழுமதி நாள். மறுநாள் தேய்பிறை துவக்கம். அன்று சற்றே குன் றுதல். அதனை பாட்டியமை. அதாவது பிரதமை திதி. அமாவாசையாக இருந்தா லும், பெளர்ணமியாக இருந்தாலும் அடுத் த நாள் பிரதமை திதி. பிரதமை திதியில் எதுவும் செய்யக் கூடாது என்பார்கள். இதனை ஒவ்வொரு கிராமத்திலு ம் பாட்டிமை, பாட்டிமுகம் என்றெல்லாம் பலவாறாக அழைப்பார்கள். கதிர் வீச்சுக் குன்றுவதால் அன்று எதையும் செய்யக் கூடாது என்பார் கள். இருந்தாலும் அமாவாசைக்கு மறுநாள்தான் மிகவும் மோசமான து. அன்றைய தினம் எதையும் செய் யக் கூடாது என்பார்கள். போர் தொ டுத்தல், ஆநிரை கவர்தல் போன்ற வை செய்யலாம் என்று கூறுவார்க ள். போருக்கான துவக்கங்களை அன்று செய்யலாம். நோய் வாய்ப் பட்டிருப்பவர்கள் அமாவாசையைத் தாண்டுவார்களா என்று எதை வைத்துக்கூறுகின்றனர்? அமாவாசை யை நாம் அறிவியல் பூர்வமாகவே பார்க்கலாம். ஆத்ம காரகன் சூரியன். ஆத்மா என்பது உயிர். உடலுக்குரிய வன் சந்திரன். சூரியனும், சந்திரனு ம் இணைவது அமாவாசை அன்று. இர ண்டுமே இயல்புநிலை மாறுபட்ட வை. அவைகள் ஒன்றாக சேரும்போ து சீக்கிரமாகவே ஆவி பிரியும். அத னால்தான் அமாவாசை, அதற்கு முத ல் நாள், அமாவாசைக்கு மறுநாள் பிர தமை திதிகளில் உயிர் நீப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதற்கு காரணம், ஆத்ம காரகன் சூரியனுடன், மனோ காரகன், உடலுக் கான சந்திரன் நெருங்கும் போது உடலின் வலிமை, உணவு உட்கொள் ளும் திறன் குறையும். ஏதோ ஒரு அசெளகரியம் உண்டாகும். திடீர் மார டைப்பு எல்லாம் உண் டாகும். அதனா ல்தான் அமாவாசையை தாண் டுமா என்று சொல்கிறார்கள். சில நேரங்களி ல் அமாவாசை எல்லாம் தாண்டி கடைசி நேரத்தில் உயிரிழப்புகள் நேர்ந்துவிடும்.

வேலூர் மாவட்டம், ஆரணிக்கு அருகில் வாழைப்பந்தல் - ஸ்ரீவரதராஜ பெருமாள் கோ யில்.

சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்று போற்றப்படும் நகரம் காஞ்சிபுரம். அப்படிப்பட்ட காஞ்சியம் பதியை நினைக் கும் போதும் சொல்லும்போ தும் நமக்குள் சட்டென்று மூன்று விஷயங்கள் சடசட வென விரிந்து நிற்கும். காஞ் சி என்றதும், சிவ காஞ்சியை க் குறிப்பிடும் வகையில் ஸ்ரீ ஏகாம்பரேஸ் வரரும், சக்தியின் முக்கிய பீடமாக திகழும் ஸ்ரீகாமாட்சி அம்பாளும், விஷ்ணு காஞ்சியைப் பறைசாற்று ம் வகையிலான

ஸ்ரீவரதராஜரும் நினைவுக்கு வருவார்கள்.

அதிலும் வைஷ்ணவர்கள், ‘காஞ்சி வரதா… காஞ்சி வரதா’ என்று கண்ணீர் வடிய பக்தி செலுத்துவார்கள். காஞ்சியி ல் பிரம்மாண்ட கோயிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீவர தராஜரை, தன்னையும் தன் சந்ததியினரையும் வாழ வை க்கும் கண்கண்ட தெய்வமா கப்போற்றுகின்றனர் பக்தர்க ள். நம் தாயார் எப்படி நமக்குத் தேவையானதை நாம் கேட் காமலே தந்து காப்பாற்றி வருவாளோ அதேபோல, நாம் கே ட்காமலேயே நமக்குத் தேவையானதையெல் லாம் தந்து அருளும் கரு ணையுள்ளம் கொண்ட வர் ஸ்ரீவரதர் எனச் சொ ல்லிச்சிலாகிக்கின்றனர்.

அதுமட்டுமா? தங்களுக் கு ஏற்படுகிற பிரச்னைகளையும், கவலைகளையும் அவமா னங்களையும் தயக்கமோ குழப்பமோ இல்லாமல் ஸ்ரீவரதரி டம் முறையிட்டு, ‘இது உனக்கே நல்லாருக்கா? என்னைக் காப்பாத்திக்கரை சேக்க றது உன் கடமை இல்லி யா?” என்று நண்பனி டம் புலம்புவதுபோல், உரி மையுடன் கேட்பார்கள் பக்தர்கள்.

கடவுளை நண்பனாகப் பார்ப்பதற்கும் பழகுவத ற்கும் மிகப் பெரிய ஈடு பாடும் அறிவும் வேண்டும். மனம் முழுவதும் இறை பக்தியு ம், புத்தி முழுவதிலும் நம்பிக்கையும் குடிகொண்டிருக்க வே ண்டும். காஞ்சியில் அருளும் பெருமாளை, ஸ்ரீவரதராஜ ரை வரதா வரதா என்றழை த்துப் பரவசமாகிற பக்தர்கள் பலரும், அவரைத் தோழனா கப் பாவித்துதான் வணங்கிச் செல்கிறார்கள் என்பது தெரி கிறது.

அதேபோல், வைணவர்கள் மட்டுமின்றி, மக்கள் அனைவரு ம் வரதர் எப்போது திருவீதியுலா வருவார் என ஆவலாகக் காத் துக்கிடப்பார்கள். தவிர, வரதரா ஜ பெருமாளுக்கு ஒரு வருடத்தி ல் எந்த மாதத்தில், எந்த நட்சத் திர நாளில் விழா எடுப்பார்கள் என்பதையெல்லாம் அறிந்து வைத்திருப்பார்கள். அந்தந்த நா ட்களில் ஸ்ரீவரதரைத் தரிசனம் செய்து பூரித் துப் போவார்கள்.

வேலூர் மாவட்டம், ஆரணிக்கு அருகில் வாழைப்பந்தல் என் றொரு கிராமம் உள்ளது. இந்த ஊரில், மெயின் ரோட்டு க்கு அருகிலேயே அமைந்துள்ளது ஸ்ரீவரதராஜ பெருமாள் கோ யில்.

காஞ்சிவரதருக்கு எப்போதெல்லாம் சிறப்பு பூஜைகளும் வழி பாடுகளும் கோலாகலமாக நடை பெறுகிறதோ, அப்போதெ ல்லாம் இங்கே வாழைப்பந்தல் ஸ்ரீவரத ராஜருக்கும் பூஜைக ள் சிறப்புற நடைபெறும்.

ஐந்து நிலை ராஜகோபுரமும், பிர மாண்டமான நீளமான மதி லும் கொண்டு, ஒருகாலத்தில் கம்பீரத் துடன் நின்ற கோயில் தான் இது. ஆனால் இன்றைக்கு, எப்போது வேண்டுமானா லும் விழுவேன் என்பதுபோல் நிற்கிற கோபுரம் நம்மைப் பதைபதைக்கச் செய்கி றது. அழகிய கோபுரத்தின் வழியே நுழைய முடியவில்லை. சுற்றுச்சுவருக்கு நடுவே சிறியதொரு பாதையில் சென்று தா ன் ஸ்ரீவரதராஜரை தரிசி க்க வே ண்டியுள்ளது.

காஞ்சி வரதரைப் போல வே, வாழைப்பந்தல் வர தரும் விழா ன் போது ஒவ்வொரு நாளும் ஒவ் வொரு வாகனத்தில் வீதி யுலா வருவாராம். இதைப் பார்க்க ஒருங்கிணைந்த தென் னாற்காடு மற்றும் வட ஆற்காடு மாவட்டங்களில் இரு ந்து மக்கள் திரண்டு வருவார்களாம் . ஆனால், வரதரின் வாகனங்க ள் எல்லாமே இப்போது சிதைந் தும்பெயர்ந்தும், வண்ணங்க ளை இழந்து பரிதாப மாகக் காட் சி அளிக்கிறது.

கல் தீப ஸ்தம்பம், பிராகாரம், அதைச் சுற்றிலும் நந்தவனம் என அழகும் சக்தியும் நிறைந்த திருத்தலமாக இருந்திருக்கிறது இக்கோயில். காலப்போக் கில் முள்ளும் புதருமாக மாறிப் போய், சந்நிதிகள் எல்லாம் களையிழந்து விட்டது தான் கண்ணீரை வரவழைக்கிறது.

கருவறையில், மூலவரும் உத் ஸவரும் திவ்விய தரிசனம் தருகின்றனர். ஸ்ரீதேவி- ஸ்ரீபூதே வி சமேதராக அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீவரதராஜபெருமாள். இவரை ஸ்ரீகஜேந்தி ர வரதராஜ பெருமாள் என்றும் போற்றுகின்றனர், பக்தர்கள்.

ஒருகாலத்தில், திருகூர் என்று அழைக்கப்பட்டு, பிறகு வாழைப் பந்தல் என்று இப்போது அழைக் கப்படும் தலத்தில் உள்ள ஸ்ரீவர தரின் ஆலயம், வழிபாட்டுக்கு உரிய அழகிய இட மாகத் திகழ வேண்டாமா? கஜேந்திரன் எனும் யானைக்கு மோட்சம் கிடைத்தது போல், இந்தக் கோயிலின் திருப்பணி யில் நாமும் பங்கு பெற்று, மோட்ச கதியை அடையவேண் டாமா?

ஸ்ரீபெருந்தேவித் தாயாரும் ஸ்ரீ ஆண்டாளும் ஸ்ரீஅனுமனும் அருளும் ஒப்பற்ற இந்தக் கோ யிலில் கோபுரங்கள் சீரமைக் கப்பட்டு, மடப்பள்ளி கட்டப்பட் டு, வரதருக்கு நைவேத்தியம் செய்யப் புளியோதரையும், சர்க் கரைப் பொங்கலும், தயிர் சாத மும் அங்கே மணக்க மணக்கத் தயாராவதற்கு நாமும் நம்மால் ஆன கைங்கர்யத்தைச் செய்வ துதானே நம் கட மை? வாழை ப்பந்தல் ஸ்ரீவரதராஜரின் வாகன ங்கள் சரிசெய் யப்படுவதற்கும், மண்டபங்களும் கோபுரமும் ம திலும் பழை யபடி பொலிவுறுவ தற்கும் திருப்பணியில் கலந்து கொண் டால், நம் சந்ததியும் வாழையடி வாழையாய் வாழாதா?

காஞ்சியம்பதி ஸ்ரீவரதராஜ பெரு மாள் கோயிலில், வருடம் முழுவ தும் திருவாபரணத்துக்கும், ஸ்வா மியின் திருஅலங் காரத்துக்கும் ஒரு குறைவுமில்லை. ஆனால், அதே திருநாம த்துடன் காஞ்சிக்கு அருகில் உள்ள இந்தப் புராதனத் திருக் கோயிலும் காஞ்சிக் கோயி லைப் போலவே கம்பீரம் காட்டி நிற் பதுதானே முறை!

பித்ருக்கள் சாபத்தில் இருந்து வி மோசனத்தைத் தந்து, நல்ல நிம்ம தியான வாழ்க்கையையும் அருளச் செய்பவர் ஸ்ரீகஜேந்திர வரதராஜ பெருமாள். ஆயிரம் வருடப் பழைமையான ஆலயம் என்றும், ஆதி கிரந்தத்தில் குறிப்பி டப்பட்டுள்ள கோயில் என்றும் போற்றப்படுகிற இந்தக் கோ யிலில், நாம் தருகிற சிறு திருப்பணிக் கான காரியம் நமக்கு ப் பன்மடங்காக, வீர்யம் கொண்டதாக, நிம்மதியு ம் சந்தோ ஷமும் கொண் ட வாழ்க்கையைத் தந்து, நம்மையும் நம் வம்சத்தையும் வாழசெய்யும் என்பது உறுதி!

ஸ்ரீவரதா… ஸ்ரீவரதா… உன் கோயிலில், கும்பாபிஷேகம் எனும் வைபவம் நடைபெறும் நாள் வந்துவிட்டது ஸ்ரீவரதா!

இவ்வ‍ளவு பெருமைகள் கொண்ட பெருமாளின் கோயில் எங்கே இருக் கிறது?

வேலூர் மாவட்டத்தில் உள்ளது ஆரணி. பட்டுக்குப் பெயர் பெற்ற இந்த ஊரில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது வாழைப்பந் தல் கிராமம். இங்கே, மெயின் ரோ ட்டுக்கு அருகிலேயே அற்புதமாக அமைந்துள்ளது ஸ்ரீகஜேந்திர வரத ராஜ பெருமாள் கோயில். ஆரணியி ல் இருந்து பஸ் வசதி குறைவுதான். ஆட்டோ வசதி உண்டு.


பரமசிவன் ஐந்து வேல்களை மூலவராக அமைந்த சிவாலயம்

பரமசிவன்    ஐந்து  வேல்களை மூலவராக  அமைந்த சிவாலயம்




பேய்களை விரட்ட எட்டு அம்ச திட்டம்

பேய்களை விரட்ட எட்டு அம்ச திட்டம்:-

1.வேப்ப மர இலைகளை வீட்டில் சொருக வேண்டும்
2.வெண் (ஐயவி) கடுகைப் புகைக்க வேண்டும்
3.வெண் கடுகை (ஐயவி) நெய்யுடன் கலந்து அப்ப வேண்டும்
4.யாழ் இசைக்க வேண்டும்
5.ஆம்பல் குழல் ஊதவேண்டும்
6.மணி அடிக்கவேண்டும்
7.காஞ்சி பாட வேண்டும்
8.அகில் புகை போட வேண்டும்

கடுகுச் செடி

இதோ பாடல்கள்:---

புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் (புற.98)

தீ கனி இரவமொடு வேம்பு மனைச் சொரீஇ
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கரங்க
கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
இசை மணி எறிந்து, காஞ்சி பாடி
நெடு நகர் வரைப்பில் கடி நறை புகை இ (புற.281)

வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும் (புற.296)

பொருள்:

போரில் காயம்பட்டுக் கிடக்கும் வீரர்களிடம் எமன் வராமல் இருக்கவும், பேய்கள் அண்டாமல் இருக்கவும், குழந்தை பிறந்த வீட்டில் குழந்தைக ளையும் பிள்ளை பெற்ற தாய்மார்களையும் பேய் கள் தாக்காமல் காக்கவும் வெண் கடுகு புகைப்பர் அல்லது நெய்யுடன் கலந்து அப்புவர்.

இதோ குழந்தை பெற்ற தாய்மார்கள் பற்றிய நற்றிணைப் பாடல்கள்:

புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசு நெய் கூர்த்த மென்மை யாக்கைச்
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த (நற்.40)

நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட்குறுகி
புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து... (நற்.370)

பொருள்: நறுமணம் மிக்க மென்மையான படுக்கையில் செவிலித் தாயுடன் புதல்வன் உறங்க, சிறப்புமிக்க தலைவி வெண் சிறு கடுகு அணிந்த நெய்யாட்டு நிறைவேறிய அணிமைக் காலத்தில் நெய் விளங்கும் மெல்லிய உடம்போடு இரு இமைகளும் பொருந்தத் தூங்கினாள்.................

நெய்யுடனே ஒளிவீசும் வெண் சிறுகடுகு முதலானவற்றைப் பூசி விளங்கிய நம் இல்லம் சிறப்புறுமாறு ஓய்ந்து படுத்திருந்தாள்................

திருமுருகாற்றுப் படை (228), மதுரைக் காஞ்சி ( வரி 287), நெடுநல்வடை (வரி 86) – ஆகிய சங்க நூல்களிலும் ஐயவி (வெண் கடுகு) பற்றிய குறிப்புகள் உண்டு. உரைகாரர்கள் எழுதிய உரைகளில் பேயை விரட்ட ஐயவி புகைக்கப்படுவது பற்றி விளக்கியுள்ளனர்.

வேப்ப மரம்

அதர்வண வேத மந்திரங்கள்

அதர்வண வேதத்தில் கருச் சிதைவு நிகழாமல் இருக்கவும், கர்ப்பிணிப் பெண்களைப் பாதுகாக்க வும், கண்வ (2-25-3) எனப்படும் தீய சக்திகளை
விரட்டவும் வெண் கடுகு, ப்ரிஸ்னிபரணி மூலிகை கூறப்பட்டுள்ளது:--
கர்ப்பிணிகள் வெண் கடுகு தாயத்து உடலில் அணிய வேண்டும். தீய சக்திகள் உண்டாக்கும் கருச் சிதைவை இது அகற்றும் (அ.வே. 8-6-9)
தீய சக்திகள் இடுப்பு வலியை உண்டாக்கும் அல்லது கருவை விழுங்கிவிடும்.(8-6-23) குழந்தையை கருவிலோ பிறந்த பின்னரோ இறக்கச் செய்யும் தீய சக்திகள் (8-6-18);மலடித் தன்மை, குழந்தை இழப்பு ஆகியவற்றை வெண் கடுகு தடுக்கும் (8-6-26)

மேலும் ஆராய வேண்டும்!

கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு மேலாக வடவிமயம் முதல் தென்குமரி ஈறாக ---16 லட்சம் சதுர மைல் பரப்பில் ---- கர்ப்பிணிப் பெண்களும் காயமடைந்தோரும் வெண் கடுகைப் பயன்படுத்தியதால் இதன் மருத்துவ குணங்களை விஞ்ஞான முறையில் ஆராய்வது பலன்  தரும். இதில் பாக்டீரியா தடுப்பு, வைரஸ் தடுப்பு சக்திகள் இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

வாழ்க அதர்வண வேதம்! வளர்க சங்க இலக்கியம்!!

தீய சக்திகளை அழிக்கும் வழி முறை?


 
 
தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின் தீமையைக் குறைக்கும் வழி முறை என்ன?

ஒரு மண்டலம் (45 நாட்கள்) பைரவப் பெருமானுக்கு

வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகம்புல் என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்த பின் சாம்பிராணி தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகை மட்டும் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும் ஸூதர்சன ஹோமங்களில் ஓதப்படும் மந்திரங்களில்சர்வ சத்ரு நாசன மந்திர உச்சாடனமான

ஓம் க்லீம் க்ருஷ்ணாய........ “, என்று துவங்கும் வார்த்தைகள் வலிமை மிக்க மந்திர ஒலிகள். .......

அதை ஓதும்போது பகவான் விஷ்ணுவே ஸூதர்சனராக வந்து சத்ருக்களை அழிப்பார். அப்படிப்பட்ட ஹோமத்தில் வெண்கடுகை ஸமித்து ஹோமம் செய்வார்கள் வெண்கடுகுப் புகை ஸூதர்சனார் வருகை தரும் நிலையைக் குறிப்பதாகும்.

ஆகவேதான் வெண் கடுகு கடவுள் தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது .

வெள்ளைக் கடுகுச் செடிகள் இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும்.

Wednesday, 23 May 2018

சென்னையில் சில ஜீவ சமாதிகள்


https://goo.gl/maps/F5JgTiviHfR2
Temple is the Jeeva Samadhi.Chennai
Vyasarpadi
Saamiyaar Thottam 1st Street/Karapatra Swamy

பங்குனி – உத்திராடம்


https://goo.gl/maps/m2PxKAokYjH2
Temple is the Jeeva Samadhi.Chennai
Triplicane
Ramanagaram, Gajapathy Lala St.Nirdisaianandar Swamy



https://goo.gl/maps/j8qcXtHumU82
Temple is the Jeeva Samadhi.Chennai
Chetpet
Harrington Road, 6th Avenue/Gangadhara Swamy


https://goo.gl/maps/QUaVgh5R8Gu
Jeeva Samadhi is inside Otteri Cemetry (Near Burning Place inside Cemetry). Photo Pooja at 173/77, DeMellows Road, Perambur Barracks.Chennai
Otteri/Dada Kasi Sadhasiva Guru Swamy @ Aarumuga Swamy & Maduraanandham Swamy
***
சித்திரை

https://goo.gl/maps/KEujaPBgC5J2
Temple is the Jeeva Samadhi.Chennai
Purasaiwakkam
Manickam St.Veera Subbaiah Swamy



https://goo.gl/maps/iBUCE9jhDn72
Temple is the Jeeva Samadhi.Chennai
Purasaiwakkam
Venkatesa Bakthan St.Easur Satchidhaanandhar Swamy


https://goo.gl/maps/24RBRxbR2jQ2
Pandrimalai Swamy Temple.Chennai
Nungambakkam/Pandrimalai Swamy


https://goo.gl/maps/Bjqb5ymwFkE2
Temple is the Jeeva Samadhi.Chennai
Erukkancheri – Kodungaiyur
Dr. Ambedkar Street/Ethiraja Swamy


https://goo.gl/maps/BqkA1i8tZRF2
Jeeva Samadhi is in this Temple.Chennai
Vyasarpadi/Narayanan Swamy




Sunday, 20 May 2018

குல தெய்வ ஆராய்ச்சி செய்தி

குல தெய்வம் - முழுமையாக ஓர் அலசல்...!
*********************************************

33 கோடி தேவர்களில் குலதெய்வம் யார்
என்பதை எப்படி கண்டு பிடிப்பது?

எனக்கு ஒரு பழக்கம் உண்டு. எங்காவது ஒரு ஆலயத்துக்குச் சென்றால் அங்கு ஏதாவது விவரம் அறிந்த பண்டிதர் இருந்தால் அவர்களிடம் தெய்வ சம்மந்தமாக ஏதாவது கேட்டு தெரிந்து கொள்வது உண்டு. என்னிடம் யாராவது மாட்டிக் கொண்டு விட்டால் லேசில் விடுவது இல்லை. கேட்டு முடித்தப் பின் தட்சணையாக ஏதாவது தருவதை மறப்பதில்லை. இந்த முறையும் ஒருவர் வசமாக மாட்டிக் கொண்டார். ஒரு சமயம் ஒரு கிராமத்தில் இருந்த ஆலயத்துக்கு சென்ற இருந்தபோது அங்கு ஒரு வயதான பண்டிதர் போன்றவர் இருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது குல தெய்வத்தைப் பற்றிய சந்தேகத்திற்கு விளக்கம் கேட்டேன். அவர் அதற்கு ஒரு பிரசங்கமே கொடுத்து விட்டார். அதைக் கேட்டபோது மிக அற்புதமாக இருந்தது. அதன் பிறகு நாங்கள் ஆலயத்தை சுற்றி விட்டு வந்தபோது அவரை அங்கு காணவில்லை. நான் தவறு செய்துவிட்டதாகத் தோன்றியது. அவர் பெயரையோ, எங்கு இருக்கின்றார் என்பதையோ கேட்டுக் கொள்ளவில்லை. அங்கும் இங்கும் தேடியும் அவரைக் காணவில்லை. எனக்காகவே அவர் அங்கு வந்திருந்தது போல இருந்த அவர் யார்? தெரியவில்லை, ஒரு கனவு போல வந்தார், சென்றார் என ஆகிவிட்டது. ஆனால் குலதெய்வம் பற்றி அவர் கொடுத்த பிரசங்க விளக்கமே சரியானதாக இருந்தது . பண்டிதர் கொடுத்த தகவல் இது:

குல தெய்வம் யார் எனத் தெரியாதவர்கள்
என்ன செய்ய வேண்டும்?

'' முன் காலத்தில் சில கிராமப்புறங்களில் இருந்த பிராமணர்களுக்கு தமது குல தெய்வம் யார் என்று தெரியாமல் இருந்தபோது அவர்கள் நதியில் குளித்து விட்டு பூமியில் இருந்து ஒரு பிடி களி மண்ணை எடுத்து வருவார்கள். வீட்டிற்கு வந்து அதை பிள்ளையார் பிடிப்பதைப் போல பெரியதாக பிடித்து மஞ்சள் குங்குமம் இட்டு அதையே தமது குலதெய்வமாக வணங்கி பூஜிப்பார்கள். குல தெய்வம் யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது என்பது தெரியாததினால் உருவமற்ற அதை ஒரு பீடத்தில் (அந்த காலத்தில் மரப்பலகைகள் நிறையக் கிடைக்கும் என்பதினால்) சந்தனத்தினால் ஒரு கட்டம் போட்டு அதில் வீபுதி மற்றும் மஞ்சள் குங்குமத்தையும் தூவி களி மண்ணால் செய்த பிள்ளையார் பிடியைப் போன்ற அந்த குலதெய்வ களிமண் தெய்வத்தை அதன் மீது வைத்து அதையே தமது குல தெய்வமாக எண்ணி பூஜை செய்வார்கள். வீபுதியையும், மஞ்சள் மற்றும் குங்குமத்தை தூவுவது எதற்காக என்றால் குல தெய்வம் யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது தெரியாததினால் ஆண், பெண் என்ற இருவருக்கும் பொருந்தும் வகையில் ஆணான குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் வீபுதியையும், பெண்ணான குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் குங்குமத்தையும் இடுவதான ஐதீகம் கொண்டு அதை செய்வார்கள் . பூஜை முடிந்ததும் பூஜை அறையில் அந்த களிமண் பிடியை தமது குல தெய்வமாக கருதிக் கொண்டு ஸ்வாமி பீடத்தில் பத்திரமாக பாதுகாப்பாக உடையாமல் வைத்து விடுவார்கள். அதையே தமது குல தெய்வமாக வணங்கி வரும்போது ஒரு கட்டத்தில் நிச்சயமாக அவர்களுடைய குலதெய்வம் அவர்கள் கனவிலோ அல்லது யார் மூலமாகவோ வந்து அவர்களுக்கு தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும். இது சத்தியமான உண்மையாகவே இருந்தது''

எப்படி களிமண் உருவை படைத்து அதை பூஜித்தார்கள் என அவர் கொடுத்த விவரத்தை மேலே உள்ள படத்தில் கொடுத்து உள்ளேன் . அவர் மேலும் கூறுகையில் 'ஒரு தவறை செய்யக்கூடாது' என எச்சரித்தார்.

''பூமியில் இருந்து எடுத்த களி மண்தானே என அதை அலட்சியப்படுத்தி விடக் கூடாது. எப்போது அந்த மண் பிடியை குல தெய்வத்தின் உருவம் என்று கருதி பூஜிப்போமோ அப்போதே அதில் நம்மை அறியாமல் நம்முடைய குல தெய்வங்கள் வந்து குடியேறும். ஆகவே அதை தமது குல தெய்வம் அடையாளம் தெரியும் வரை பத்திரமாக, உடையாமல் பாதுகாத்து வர வேண்டும். தேவை என்றால் தெய்வங்களை வைத்து உள்ள இடத்திலோ, பூஜை அறையிலோ ஒரு சிறிய பிளாஸ்டிக் பெட்டியிலாவது வைத்து அதை பத்திரமாக வைத்து பாதுகாக்க வேண்டும். மேலும் அதற்கு தினமும் ஒரு பூவாவது, அது முடியவில்லை என்றால் அதன் பீடத்தில் சிறிது குங்குமத்தையாவது தூவி ' குல தெய்வமே, எனக்கு உன்னை அடையாளம் காட்டுவாயா' என பிரார்த்தனை செய்து வணங்கி வர வேண்டும். வேறு எந்த பூஜையும் செய்யத் தேவை இல்லை. ஆனால் நிச்சயமாக அவரவர் பிராப்தம் போல எப்போது அவர்களுக்கு தன்னைப் பற்றிய விவரம் தெரிய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுமோ அப்போது அவர்களுக்கு குல தெய்வம் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் என்பதில் சற்றும் சந்தேகம் கிடையாது. எப்போது அவர்கள் தமது குல தெய்வத்தை அடையாளம் கண்டு கொள்கின்றார்களோ அதன் பின் அவர்கள் எப்போது அந்த ஆலயத்துக்கு செல்வார்களோ அப்போது தமது குல தெய்வமாக வணங்கி வந்த மண் பொம்மையை எடுத்துக் கொண்டு அந்த ஆலயத்தில் குல தெய்வத்தை வணங்கியப் பின் ஆலய ஸ்தல விருஷத்தின் கீழ் அல்லது ஆலயத்திலேயே ஏதாவது ஒரு மூலையில் அந்த பொம்மையை வைத்துவிட்டு வருவார்கள். அல்லது ஆலயத்தில் குளம் இருந்தால் அந்த நீரில் அதைப் போட்டு விட்டு வருவார்கள்'' . என்று கூறினார். குல தெய்வம் என்பது எத்தனை ஜென்மங்களுக்குப் பொருந்தும், வம்சக் கணக்கு என்பது என்ன என்ற கேள்வி எழுந்தபோது அவர் கூறிய கீழே தந்துள்ள விவரங்கள் ஆச்சர்யமாக இருந்தன.

குல தெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு
ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்?

சாதாரணமாக ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை. ஏழேழு ஜென்மம் என்பது 7x7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13 . இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண். ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம் நாள் அன்று கிரேக்கியம் என்ற நல்ல காரியத்தை செய்வது பழக்கம். அன்றுதான் உடலை விட்டு வெளியேறிய ஆத்மா சொர்கத்தை அடைகின்றது என்று நம்புகிறோம்.
அது போலத்தான் இறுதிக் காலமாக 13 என்ற அந்த காலத்தைக் குறிக்கும் விதத்தில் 49 ஜென்ம காலமான 13 ஜென்மத்துடன் ஒரு வம்சம் முடிவடைகின்றது என்று நம்பப்படுகின்றது . அதாவது எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் அந்த வம்சத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஏழேழு ஜென்மங்களுக்கு மேல் எந்த வம்சத்தினரும் இருக்க மாட்டார்கள். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு - வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்.

வம்சக் கணக்கு என்பது என்ன?
வம்சம் என்பது எப்படி கணக்கிடப்படுகின்றது?

 ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே வம்சத்தில் கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும். யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அவர் சந்ததியினர் யார் என்பது தெரியுமா? அதை விட சிறிய கேள்வி, யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா? இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள்? அதனால்தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்மங்களுக்கு அதாவது 13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது.

மகள் என்பவள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க பாத்யதை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும்.

பலருக்கு குல தெய்வம் யார் என்பது
ஏன் தெரியாமல் உள்ளது?

இதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் ஏற்பட்ட சாபம் அல்லது முன்னோர்கள் செய்த அலட்சியமே காரணம் . முன்னர் எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தமது மகன்களுக்கு தாம் வணங்கும் குல தெய்வம் யார், அந்த ஆலயம் எங்கு உள்ளது என்பதைக் கூறுவார்கள். சில வருடங்களுக்கு ஒரு முறையாவது தமது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று பூஜித்து விட்டு வருவார்கள். வீடுகளில் குல தெய்வ உண்டியல் இருக்கும். அதில் தமது காணிக்கைகளை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அவ்வபோது தாம் போக முடியாவிடிலும் குடும்பத்தில் யார் அங்கு செல்கிறார்களோ அவர்களிடம் அந்த காணிக்கைப் பணத்தை தந்து உண்டியலில் சேர்த்து விடுமாறு கூறுவார்கள். தமது பிள்ளைகள் வெளியூருக்குப் போகும்போது அவர்களுக்கு குல தெய்வம் யார் என்பதைக் கூறி குல தெய்வத்தின் படத்தையும் தருவார்கள். அது மட்டும் அல்ல எந்த ஒரு நல்ல காரியமும் வீட்டில் நடக்கும்போது, முதல் பிரார்த்தனை குல தெய்வத்திற்குத்தான் நடைபெறும். அதற்குப் பின்னரே மற்ற பூஜைகள் துவங்கும்.

ஆனால் காலபோக்கில் ஏற்பட்ட நாகரீக மாற்றங்களினால் வெளியூர் செல்லும் பிள்ளைகள் குல தெய்வம் என்ற கருத்தை மறந்து விட்டார்கள். தங்கும் இடமே என்ன என்பது தெரியாதபோது குல தெய்வத்தின் நினைவு அவர்களுக்கு எப்படி இருக்கும். குல தெய்வத்தின் படம் கூட அவர்களிடம் இருக்காது. திருமணம் ஆகி வேலைக்கு சென்றதும் கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியே செல்வதும், வெளியூர் செல்வதும் பழக்கமாகி விட்டது. ஆனால் சில வருடங்களுக்கு ஒரு முறையாவது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று வணங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இல்லை. குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு மொட்டை அடிக்கும்போது மட்டுமே குல தெய்வத்தை தேடுவார்கள். அது தெரியவில்லை என்றால் அதுவும் ஒரு சடங்கு போல பழனி, திருப்பதி அல்லது வைதீஸ்வரன் ஆலயம் என எங்காவது சென்று மொட்டைப் போட்டு விட்டு வந்து விடுவார்கள்.

அது மட்டும் அல்லாமல் காலப் போக்கில் தமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முடிவு தேட புதுப் புது சாமியார், சன்யாசிகள் மற்றும் தெய்வப் பிறவிகள் என ஓடுகிறார்கள். அவர்கள் கூறுவதை செய்வார்கள். ஆனால் தம்முடைய குல தெய்வத்தை நினைக்க மாட்டார்கள். அதற்கு மேலும் அந்த சாது, சன்யாச, தெய்வப் பிறவிகளும் முதலில் உங்கள் குல தெய்வத்திற்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற நியதியை அறிவுறுத்த மாட்டார்கள். அப்படி செய்தால் அவர்கள் என்ன ஆவது ?

இப்படி எல்லாம் இருப்பதினால்தான் குல தெய்வத்தை மறந்து விடுபவர்களும், குலதெய்வ சிந்தனை இல்லாமல் இருப்பவர்களும், அப்போது தம்மையே அறியாமல் ஒரு சடங்கு போல வீட்டில் நடக்கும் அனைத்து பூஜை, பண்டிகைகளையும் கொண்டாடும்போது தாம் குல தெய்வத்தை மறந்து விட்டோமே என்ற எண்ணம் இருப்பது இல்லை. அப்படி செய்யும் தவறு தெரிவது இல்லை. என்னதான் எந்த ஆலயத்தில் சென்று சடங்கை செய்தாலும் குல தெய்வத்தை மறப்பது பெற்றோர்களையே மறப்பது போன்றதே என்ற தவறு தெரிவது இல்லை. அதனால் அவர்கள் குல தெய்வத்தின் சாபங்களுக்கு ஆளாகி விட அது அவர்கள் வம்சத்தை பல வகைகளிலும் பாதிக்கின்றது. அந்த குல தெய்வ சாபம் அந்த குடும்பத்தினருக்கு தொடரும்.

இந்த விவரங்கள் எத்தனை பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரியாது. ஆனால் எனக்கு கிடைத்த தகவலை எப்போதும் போலவே அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள இங்கு பிரசுரித்துள்ளேன்..

கைலாச பர்வதத்தின் மிரள வைக்கும் செய்தி


கைலாஷ் மலையை இதுவரை ஏறியவர்கள் எவரும் இல்லை! முயற்சித்தவர்கள் வயோதிகர்களாக இறந்தது மட்டுமே மிச்சம்! இதன் மர்மம் என்ன? மலை மொத்தமும் DNA மூலக்கூறுகள்! வியந்த விஞ்ஞானிகள்!
-----------------------------------------------------------------------------------
12 மணி நேரம் கைலாஷ் மலை ஏறினால் மனித உடல் இரண்டு வாரத்திற்கான வளர்ச்சியை பெறுகிறது. நகம், முடி அனைத்தும் இரண்டு வாரத்திற்கான வளர்ச்சியை பெறுகிறது! இது வரை யாராலும் கைலாஷ் மலையை முழுமையாக ஏறியதில்லை. ஏற முயற்சித்தவர்களும் திரும்பியதில்லை.

Dr Ernst Muldashev இரஷ்ய விஞ்ஞானி:
-----------------------------------------------------------
எர்நெஸ்ட் முல்டஷேவ் என்னும் இரஷ்ய விஞ்ஞானி கைலாஷ் மலையில் உள்ள இரகசியங்களை உடைத்தெரிய எண்ணினார். அதன்படி கலாஷ் மலையை ஆராய்வதற்காக வந்தார். இதுவரை ஏன் எந்த மனிதனாலும் கைலாஷ மலையை ஏற இயலவில்லை என்பது குறித்து ஆராயத் தொடங்கினார். பல திபெத்தியர்கள் மற்றும் சைபீரியர்களிடம் விசாரித்ததில் கைலாஷ் மலையில் ஷம்பாலா என்னும் குடிகள் வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர். முதலில் நம்பாமல் இருந்த இரஷ்ய விஞ்ஞானி பிறகு இரவில் மலையை சுற்றி ஏற்பட்ட சத்தத்தை வைத்து மலையின் உள்ளே யாரோ வசிப்பதாக உறுதிபூண்டார். அதுமட்டுமல்லாமல் இந்த உலகின் ஒட்டு மொத்த உயிர்களின் வாழ்க்கையும் இங்கிருந்துதான் தொடங்குகிறது என்றும் அவர் கருதினார்.

வயதாகி இறக்கும் மர்மம்:
-----------------------------------------
இந்த மலையை ஏற முயற்சித்த அனைவரும் வயதாகி இறந்திருந்தனர். அதாவது 24 வயது மதிக்கத்த ஆள் மலையை ஏற முயற்சித்தால் 90 வயதானவராக மாறி வயோதிகம் காரனமாக இறந்திருக்கிறார். எவ்வாறு குறுகிய காலத்தில் இவ்வாறு வயதாக சாத்தியமாகும் என்பது விஞ்ஞானிகளுக்கு இன்றளவும் விந்தையாகவே உள்ளது.

DNA வடிவம்:
--------------------
இரஷ்ய விஞ்ஞானி எர்னஸ்ட் முல்டஷேவ் கைலாய மலை மொத்த மலையையும் திட்ட வரைபடமாக தீட்டினார். தீட்டி முடித்து பார்த்ததும் அதிசயித்துப் போனார். மொத்த வரைபடமும் DNA வடிவில் காட்சியளித்தது. இது அவருக்கு பெருத்த ஆச்சரியத்தையும், ஒட்டு மொத்த உயிர்களின் வாழ்க்கையும் இங்கிருந்துதான் தொடங்குகிறது என்ற அவரது எண்ணமும் முற்றிலும் உண்மைதான் என்ற தகவலை அளித்தது.

மனிதனால் செய்யப்பட்டதா?
----------------------------------------------
அவரின் ஆராய்ச்சியின் முடிவில் ஒட்டுமொத்த மலையையும் (Pyramid) மனிதனின் பெரிய கைகளால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று முடித்தார். இவ்வளவு பெரிய மலையை செய்யும் பெரிய கைகள் எந்த உயிரினத்துக்காவது இருக்கிறதா என்ன?

ஆதாரச் சொடுக்குகள்:
-----------------------------------
https://www.rbth.com/blogs/tatar_straits/2017/02/24/when-a-russian-doctor-tried-to-crack-the-mystery-of-the-abode-of-lord-shiva_707558
http://www.ancientpages.com/2014/10/27/mysterious-mount-kailash-secrets-of-the-man-made-pyramid-and-entrance-to-the-city-of-the-gods/
----------------------------------------------------------------------

என்றைக்கு இறக்கிறோமோ அன்றைக்கு துயிலெழத் தெரியும்

என்றைக்கு இறக்கிறோமோ அன்றைக்கு துயிலெழத் தெரியும் ....என்னவோ முடிந்ததென்று
சட்டென்று பயம் போலொன்று மறந்திட முயற்சி செய்யும். ஆயினும் கலவரம் தூக்கி
ஒன்றிரண்டு உளறல்  நடக்கும்.
அமர்ந்திட நடக்கத் தோன்றும் நடந்திட
அமரத் தோன்றும்
படுத்திட முடியாதோர் பயம் உள்ளே புரண்டிருக்கும் விலுக்கென எழுந்த பின்னர் விட்டத்தை வெறித்து நோக்கும்.
சிந்திக்க ஏதுமின்றி உள் மனம் கலைந்திருக்கும்

நோயென்றால் கண்கள் சொருகும் தேகத்தின் காயமென்றல் கடும் வலி
கண்டிருக்கும்.
சடக்கென்று மரணம் வந்தால் இவையத்தனையும் சில நொடிப் பொழுதில்
நீண்டதும் சுருக்கமுமாக சுருங்கியது நீளமாக காலத்தின் தன்மை மாறும்
பகல் இரவு காலம் அழிந்து கடிகாரக் காலம் கலைந்து வேறொரு காலம் தோன்றும் விளக்கிட முடியாதய்யா

முதலிலே கால்கள் துவளும் மூலாதாரம் நகர்ந்து போக பிறகு வரும் சுவீதிஷ்டானம்
குறி மலக் குடல் நிலை போக இதன் பின்னே சீரண  சக்தி சீறுநீரக வலுவு குறையும் மணிபூரகம எனவே சொல்வார்
நெஞ்சிலே பாறை வைத்த திணறல்
தோன்றுமாயின் முடிந்தது மீட்சியரிது அனாதகம் அமைதியாச்சு
தொண்டையிற் கரகர சப்தம் விசுக்தியின் வேலை முடிந்தது. உன்னுயிரை உடம்பினோடு பிணைத்தது குண்டலினி முடிச்சு
இனி மீதம் ஆஞ்ஞை தானே பிரஞ்ஞையும் நகரும்தானே

இந்நேரம் வேறொரு உலகம் முன்னிருந்தோர் கடவுள் தூதர்
காட்சியாய் தெரியும் திகைப்பீர்
தெரு சப்தம் உறவினர் அழுகை
தாதியின் அதட்டல் பேச்சு காற்றழுத்த
சப்தம் சூடு கைகால் நரம்பிழுப்பு
நெற்றிக்குள்  நெருப்பு கோளம் போகாதே போகாதே உடம்பதன் அலறல் சபதம் மனம்
குழப்பத்தின் உச்சகட்டம.

அந்நேரம் தெளிவு வரணும் கதை முடிஞ்சு போச்சு என்று உடன் துணிந்தேற்றுக் கொள்வீர் மிரளவே உள்ளே அலறும்
அலறவே அடுத்த வாழ்கை குறையாகத் துவங்கும்தானே
அங்கு போய் குடியேறாது இங்கு வாழ் இடமில்லாது முன் பின்னாய்  சீவன் அலையும்
ஆற்றிலே ஒரு கால் ஆழச் சேற்றிலே
ஒரு கால் என்ற சூத்திரம் இதுவே கண்டீர்
உ லகவாழ்வென்பது  ஆறு அதுவோ புதைகுழி சேறு அசையாத தபசு அங்கே ஆட்டமான  ஆட்டம் இங்கே
உச்சியை சகஸ்ரத்தை உடல் நழுவ
விட்டபோது உனக்கினி பெயரேயில்லை
உடம்பது அழியத் துவங்கும்.

இது வரை நடந்ததென்ன இனி நடக்கப் போவதென்ன என்பதை அறிய முயன்றால்
அழகான தெளிவு கிடைக்கும் எந்த அர்த்தமும் இல்லையென்று.
மரணத்தை ஜீரணித்தால் வாழும் வாழ்வு எளிது எளிது.  இக்கவிதை மறக்க முயன்றால் மறந்தோர்க்கு மீட்சியில்லை.

- எழுத்துச்சித்தர் பாலகுமாரன்

Friday, 18 May 2018

அட்ட வீரட்ட தலங்கள்

அறுபடை வீடு தெரியும்... ஈசன் அருள்பாலிக்கும் அட்ட வீரட்ட தலங்கள் தெரியுமா?

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து செயல்களைப் புரியும் சிவபெருமான், தமது லீலைகளின் மூலம் பலருடைய ஆணவத்தை அடக்கி, பக்தர்களைக் காப்பாற்றியிருக்கிறார். குறிப்பாக பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அட்ட வீரட்டத் தலங்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

1.பிரமசிரக்கண்டீசுவரர் ஆலயம், திருக்கண்டியூர்
*****************************************************

தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு சுமார் 4 கி.மீ தொலைவிலிருக்கிறது திருக்கண்டியூர். மூலவர் பெயர் வீரட்டேசுவரர்; அம்பிகை மங்கள நாயகி.
ஐந்து தலைகளுடன் படைப்புத் தொழிலைச் செய்து வந்த பிரம்மன், அனைத்து உயிர்களையும் படைக்கும் தானே உயர்ந்தவன் என்று கர்வம் கொண்டார். பிரம்மனின் செருக்கை ஒடுக்க நினைத்த சிவபெருமான், பிரம்மனின் ஒரு தலையைக் கொய்து செருக்கை அடக்கினார். பிரம்மாவின் சிரத்தை தன் சூலத்தால் கண்டம் செய்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு `கண்டியூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இறைவனுக்கு `பிரமசிரக்கண்டீசுவரர்’ என்று திருப்பெயர். இவரை வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

2. வீரட்டேசுவரர் ஆலயம், திருக்கோவிலூர்
**********************************************

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது வீரட்டேசுவரர் ஆலயம். வீரட்டேசுவரர் சுயம்புவாக அருள்புரிகிறார். இறைவன் வீரட்டேசுவரர்; அம்பிகை பெரியநாயகி, சிவானந்தவல்லி. அந்தகாசுரனை கீழே தள்ளி, அவன் மேல் சூலாயுதத்தை ஏவும் நிலையில் அந்தகாசுர சம்ஹாரமூர்த்தி காட்சிதருகிறார். அந்தகாசுரன் என்பவன், இறைவனிடம் வரம் பெற்ற செருக்கில் உலகத்திலுள்ள அனைத்து உயிர்களையும் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கிய சிவபெருமான், தம்முடைய அம்சமாக பைரவரைத் தோற்றுவித்து, அந்தகாசுரனை சம்ஹாரம் செய்தார். அஷ்டமியன்று இந்தத் தலத்துக்கு வந்து பைரவர் உருவில் அருள்புரியும் இறைவனை வழிபட்டால், கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

3. வீரட்டானேசுவரர் ஆலயம், திருவதிகை
*********************************************

கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து 2 கி.மீ தொலைவில் கெடிலம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. இந்தத் தலத்தில் அருளும் இறைவன் திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்தார். மேலும், திருஞானசம்பந்தருக்கு திருநடனமாடியும், அப்பருக்கு ஏற்பட்ட சூலைநோயைத் தீர்த்தும் அருள்புரிந்திருக்கிறார். இறைவனின் திருப்பெயர் வீரட்டானேசுவரர்; அம்பிகை பெரியநாயகி, திரிபுரசுந்தரி.
தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் அரக்க சகோதரர்கள் பிரம்மனிடம் வரம் பெற்று தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றாலான பறக்கும் கோட்டைகளைப் பெற்றனர். மூன்று கோட்டைகளும் முப்புரம் என அழைக்கப்பட்டன. முப்புரத்தைப் பெற்ற ஆணவத்தால் மூவரும் தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் மூன்று கோட்டைகளையும் தம்முடைய புன்னகையால் எரித்து அசுரர்களை சம்ஹாரம் செய்தார். சிவபெருமான் முப்புரங்களை அழித்த இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், நம் மனதிலிருக்கும் தீய குணங்கள் நீங்குவதுடன், வயிறு தொடர்பான பிணிகளும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

4.தருப்பறியலூர் வீரட்டானேசுவரர் ஆலயம், கீழப்பரசலூர்
**************************************************************

காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோயில். மயிலாடுதுறையிலிருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கிறது பரசலூர். திருப்பறியலூர் என்பது புராணப் பெயர். `பரசலூர்’ என்றே இப்போது அழைக்கப்படுகிறது. சிவபெருமான் தட்சனின் கர்வத்தை அடக்கிய தலம். மூலவர்: வீரட்டானேசுவரர்; அம்பிகை: இளங்கொம்பனையாள்.
தட்சன், தன் மாப்பிள்ளையான சிவபெருமானை மதிக்காமலும், அவருக்குச் சேரவேண்டிய அவிர் பாகத்தைக் கொடுக்காமலும் ஒரு யாகம் செய்கிறான். அதனால் கோபம் கொண்ட சிவன் வீரபத்திரர் மூலம் தட்சனின் யாகத்தை நிறுத்தி, யாகத்தில் பங்குகொண்ட தேவர்களை அழித்ததுடன், தட்சனின் தலையைக் கொய்து அவனது அகங்காரத்தை அடக்கிய தலம் இது. தட்சனின் தலையைப் பறித்ததால் `திருப்பறியலூர்’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்தத் தலத்துக்கு வந்து சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

5.வீரட்டானேசுவரர் ஆலயம், திருவிற்குடி
********************************************

இந்தத் தலமும் காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கிறது. திருவாரூரிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவிலுள்ளது திருவிற்குடி. இறைவன்: வீரட்டானேசுவரர்; அம்பிகை: ஏலவார்க்குழலி, பரிமளநாயகி.
ஜலந்தரன் என்ற அசுரனை சிவபெருமான் சம்ஹாரம் செய்த தலம் இது. ஜலந்தரனின் மனைவி பிருந்தையை துளசியாக ஏற்ற தலம் திருவிற்குடி. முன்னோர் வழிபாட்டில் ஏற்பட்ட தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருவிற்குடி.

6.வீரட்டானேசுவரர் ஆலயம், திருவழுவூர்
********************************************

திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் மங்கைநல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது வழுவூர். இந்தத் தலத்தில் இறைவன் சுயம்புவாகத் தோன்றியவர். இந்தத் தலத்தில்தான் கஜசம்ஹார மூர்த்தியாக அருளும் சிவபெருமானின் திருவடியின் உட்புறத்தை தரிசிக்க முடியும். இறைவன்: வீரட்டானேசுவரர்; அம்பிகை: இளங்கிளைநாயகி.
இந்தத் தலத்தில் யானை வடிவிலிருந்த கஜமுகாசுரன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சிவபெருமான், அவனுடைய தோலை உரித்து ஆடையாக உடுத்தியிருக்கிறார். அமாவாசையன்று இந்தத் தலத்துக்கு வந்து, தீர்த்தக் குளத்தில் நீராடி இறைவனையும் அம்பிகையையும் வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

7. வீரட்டேசுவரர் ஆலயம், திருக்குறுக்கை
********************************************

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது திருக்குறுக்கை. இறைவன்: வீரட்டானேசுவரர்: அம்பிகை: ஞானாம்பிகை.
கயிலையில் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமான், தவம் கலைந்து பார்வதி தேவியை மணந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, தேவர்களின் தூண்டுதலின்பேரில் மன்மதன் புஷ்ப பாணங்களை சிவபெருமானின் மீது தொடுக்க, நிஷ்டை கலைந்ததால் சினம்கொண்ட சிவபெருமான், மன்மதனை எரித்த தலம் இது. பின்னர் ரதிதேவியின் வேண்டுதலுக்கு இரங்கி, மன்மதனை உயிர்ப்பித்து, ரதியின் கண்களுக்கு மட்டுமே அவன் தெரிவான் என்று வரம் கொடுத்த தலம். திருமால், பிரம்மா, திருமகள் ஆகியோர் வழிபட்ட தலம். இந்தத் தலத்துக்கு வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கி இனிய இல்லற வாழ்க்கை அமையும்.

8. அமிர்தகடேசுவரர் ஆலயம், திருக்கடையூர்
***********************************************

மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் அமைந்திருக்கும் இந்தத் தலத்தில் அருளும் இறைவனின் திருப்பெயர் அமிர்தகடேசுவரர்; அம்பிகை அபிராமி.
தன் உயிரைக் கவர்ந்து செல்ல வந்த யமதேவனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, சிவலிங்கத்தைத் தழுவிக்கொண்டான் மார்க்கண்டேயன். ஆணவம் கண்களை மறைக்க, ஈசனின் சந்நிதியில் இறைவனைத் தழுவிக்கொண்ட மார்க்கண்டேயன் மீது பாசக்கயிற்றை வீசினான் யமதர்மன். தன் பக்தனைக் காப்பாற்றவும், யமதர்மனின் ஆணவத்தை அடக்கவும் வேண்டி, சிவபெருமான் யமனைக் காலால் உதைத்து சம்ஹாரம் செய்த தலம் இது. இந்தத் தலத்தில் நீண்ட ஆயுளும் நோயற்ற வாழ்க்கையும் பெற ஆயுஷ் ஹோமம் செய்துகொள்வது சிறப்பு. சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் தினமும் நடைபெறும் தலம்.

பிறப்பிலி என்னும் பெருமைக்கு உரிய சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களை தரிசித்து வழிபட்டால், கருமேகங்களாக நம் மனதை மறைத்திருக்கும் ஆணவம், கண்மம், மாயை ஆகிய மூன்றையும் வென்று, இறைவனின் திருவருளைப் பெற்று சிறப்புற வாழலாம்.

இறை சித்தருடன் ஒரு உரையாடல் - கேள்வி பதில்

இறை சித்தருடன் ஒரு உரையாடல் - கேள்வி பதில்



🙏மிகவும் அமைதியாக படிக்கவும்

கர்மவினை' பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு.

1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?

2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன்
வாழ்கின்றார்கள்?

3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது?

4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா?

போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இப்பதிவு.

பதிவிற்குள் செல்வதற்குமுன் ஒரு கதையை பார்த்துவிடுவோம்.

சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக
இருந்தபோதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.

வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன்
பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த
அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டன.

அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான்.

தனது இன்பத்திற்காக எந்த ஒரு
கொடுமையான செயலையும்
குணமுடையவனாக அவனிருந்தான்.

அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள்.

இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட இல்லை. அவனுக்கு
சித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை.

இதன் காரணமாக ஒரு கட்டத்தில்
இருவரிடையே சண்டையே வந்துவிட்டது.

கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் இறைவன்மீது தனது பக்தி உண்மையாயிருந்தால்
இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த
தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிட தொடங்கினான். சிரித்துக்
கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும்
என்ற சவாலுக்கு இழுத்தான்.

இதற்கு ஒப்புக்கொண்ட சித்தன் தீவிரமான பிராத்தனையில் ஈடுபட்டான்.

போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில்
வித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு. அதிகமான பறவைகளையும்
விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான். வரும்வழியில் களைப்பு
தாங்காமல் ஒரு மரதினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ
உருத்துவதுபோல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான். கணக்கிட முடியாத
செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை பார்த்து, அதையும் மூட்டையாக கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன்
வீடு திரும்பினான். இதற்கிடையே வயலில் வேலை செய்துகொண்டிருந்த சித்தனை மாடு முட்டி கடுமையான காயங்களுடன்
படுத்தபடுக்கை ஆக்கிவிட்டது விதி.

இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது
அசிங்கம் என்று சித்தனின் மனைவி
அவனைவிட்டு நீங்கினாள். தனது நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு
நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை
என்ற முடிவுக்கு வந்தான் சித்தன். உடல் ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து
கொள்ள முடியவில்லை.

எப்படியோ எழுந்து தன் விட்டிற்கு பின்னடியுள்ள கிணற்றில்
குதித்தான். திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான். ஆம் எந்த
தெய்வத்தை அவன் பக்தியுடன்
வணங்கினானோ அதே தெய்வம் அவனை காப்பாற்றி காட்சியும் கொடுத்தது. உடலாலும்
மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்க
தோனவில்லை, மாறாக சண்டை போட தொடங்கினான். தனது ஆதங்கத்தையும்
ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான்.

அனைத்தையும் பொருமையுடன்
கேட்டுகொண்டிருந்த கடவுளோ அவனை தன்னோடு அனைத்து கொண்டார். அவனின்
அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான் சித்தன். இப்பொழுது கடவுள் பேச தொடங்கினார், சித்தா நீ இப்பிறவியில் நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில்
வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய்.

நீ உன் மனைவியை மதித்தது கூட
கிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில் நல்ல காரியங்களையே செய்து வந்தான்,
அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ
செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது.

என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ அனுபவிக்க வேண்டிய கர்மத்தின்
பெருபாலனவையை நானே ஏற்றுகொண்டேன்,.மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே
அனுபவிக்கின்றாய். ஆன்மீகத்தை தொடங்கும் ஒருவன் முதலில் அவனது பாவபதிவையே
அனுபவிக்க தொடங்கின்றான், மாறாக அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன்
செய்த புண்ணியங்களை அனுபவித்தபின் அவன் பாவபதிவுகள் செயல்பட தொடங்கும்.

வித்தனுக்கு கிடைத்த புதையலே
அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும்.

அவன் செய்த அனைத்து புண்ணியங்களும்
ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு புதையலாக கிடைத்தது. இதுவரை நீ
அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து பாவங்களும் கரைந்துவிட்டன. இனி
நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து
தெரிந்து கொள் என்று சில
அறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள்.

நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல்நிலை நலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய
உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது
சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும்
சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில் வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி
படுத்தபடுக்கையாகி விட்டான். அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன்
கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன்
சொத்துக்கள் அனைத்தையும்
பரித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர்.

தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே
தங்க செய்து உதவினான்.

ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது
நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை எனப்படுவது. அது நல்லதாக இருந்தால்
நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.

ஆனால் இந்த வினைகளிலிருந்து தப்பிக்க.விதிவிலக்குகளும் உண்டு. அதுதான் "பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை
ஏற்படுத்தி விடுவது". இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு உதாரணத்தை
பார்த்துவிடுவோம்.

நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் மீது கல்லை எறிந்தீர்கள் என வைத்துக்கொள்வோம்.

இது நீங்கள் செய்த செயல். அது அவர் காலில் பட்டு இரத்தம் வந்துவிடுகின்றது. இதை
வினை என்று எடுத்துக்கொள்வோம். அந்த
இடத்திலிருந்து நீங்கள் தப்பித்து
ஓடிவிட்டீர்களானால் அந்த நிகழ்வுக்கான
எதிர்வினை செயல்படும்.

எப்படியென்றால்
நீங்கள் ஒரு தெரு வழியே செல்லும்போது
உங்கள் கால் ஒரு கல்லில் மோதி இரத்தம் வர வேண்டும் என்ற ஒரு விதி செயல்படும்.

நீங்கள் அந்த வழியே செல்லும்போது இந்த
கர்மவினையிலிருந்து தப்பிக்க நினைத்தால்  அந்த கல்லில் உங்கள் கால் படாமல் செல்ல
வேண்டும். ஆனால் கர்மங்களிருந்து ஒருவன்
தப்பிக்க நினைக்கும்போது அதாவது அந்த கல்லை தாண்டி செல்ல முற்படும்போது ஒரு
மாடோ அல்லது வண்டியோ உங்களை குறுக்கே வந்து தள்ளிவிடும். முடிவாக கால்
பட வேண்டிய இடத்தில் தப்பிக்க
நினைத்ததனால் தடுக்கி விழுந்து அதே கல்லால் உங்கள் தலையில் அடிபட்டுவிடும்.

ஆனால் அவருக்கு அடிப்பட்ட உடனே அதற்காக
வருந்தி அவரிடம் மன்னிப்போ அல்லது மருத்துவ உதவி செய்து விடுகின்றீர்கள் என
வைத்து கொள்வோம். இங்கேயும் அதே கர்மவினைதான் செயல்படும்.

அதாவது நீங்கள் அந்த தெரு வழியே செல்லும்போது உங்கள்
கால் அந்த கல்லில் மோதி இரத்தம் வர வேண்டும் என்ற அதே விதிதான் செயல்படும்.

ஆனால் அது செயல்படும் விதம்தான் வேறு.

எப்படியென்றால் நீங்கள் அதே தெரு
வழியாகதான் செல்வீர்கள், ஆனால் உங்களை அறியாமல் மாட்டு சாணியிலோ அல்லது
சேற்றிலோ காலை வைத்துவிடுவீர்கள்.

இதனால் எந்த கல்லால் உங்கள் காலில் அடிபட வேண்டுமோ, அந்த கல்லில் உங்கள் காலில்
உள்ள சேற்றை துடைப்பதற்காக
தேய்த்துவிட்டு சென்றுவிடுவீர்கள். அதாவது
பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுவீர்கள். இதில்
அந்த பொருளுக்கும் உங்களுக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

நீங்கள் செய்த செயலுக்கான விதிப்படி அந்த கல்லிற்கும் உங்கள் காலிற்கும் ஒரு தொடர்பு
ஏற்பட வேண்டும். அதை நீங்கள் செய்வதால் அந்த கர்மவினை அங்கேயே முடிவுபெறுகின்ற
து. இதைதான் " தலைக்கு வந்தது
தலைப்பாகையோடு போனது " என்பர் பெரியோர்கள். அந்த பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டால்
உங்கள் செயலுக்குரிய எதிர்வினையும் நடந்துமுடிந்து விடுகின்றது. உங்கள்
செயலை கொண்டே வினையும், வினையை கொண்டே எதிர்வினையும், அந்த
எதிர்வினையை செயல்படுத்த அந்த பொருளும் நிர்ணயிக்க படுகின்றதே தவிர மற்றபடி
ஒன்றுமில்லை. இதைத்தான் " தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்றனர். எந்த செயலுக்கும்
வினை ஏற்பட கூடாது என்றால் "நான்"
என்பதை விட்டுவிட வேண்டும்.

ஆன்மீகத்தில் இதற்கு பெயர் பூரண சரணாகதி.

அந்த விதிவிலக்கு என்பது கூட
இவர்களுக்குதான். தன்னை அறிய
முற்படுவதால் அவர்களுக்கு தரப்படும்சலுகைகள்தான் இது. ஏன் அவர்களுக்கு
மட்டும்??

எந்த ஒரு வினைக்கும் நீங்கள் தான் காரணம் என்ற புரிதல் ஏற்படும்போது உங்களை சுற்றி
நடக்கும் அனைத்தையும் ஏற்று கொள்வீர்கள்.

கடவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை?

எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம்?

கெட்டவனெல்லாம் நல்லா இருக்கானே! என்ற எண்ணங்கள் மாறி உங்கள் தவறுக்கான
வினைகள்தான் தற்போது நீங்கள்
அனுபவித்துவரும் கஷ்டங்கள் என்ற ஆழமான புரிதல் ஏற்படும். புரிதல் ஏற்படும்போது
எதையும் ஏற்றுகொள்ளும் பக்குவம் வந்துவிடும். அப்படிப்பட்ட பக்குவத்தை
நீங்கள் அடையும்போது, உங்களின் 95% கர்மங்களை உங்களுக்காக வேறு ஒருவர்
அனுபவித்து விடுவார். காரணம்!!

நீங்கள் அவர்மீது கொண்டுள்ள அதிகப்படியான
அசைக்கமுடியாத நம்பிக்கையே ஆகும். அந்த அவர் ஏற்கனவே பிறவிகடலை கடந்தவராக
இருப்பார்.

ஞானி ஒருவர் கூட்டம் நிறைந்த ஒரு தெரு வழியே சென்று கொண்டு இருந்தார்.

திடீர் என்று அங்கே உள்ள சாக்கடையில் குதித்துவிட்டு பக்கத்தில் உள்ள தண்ணீர்
குழாயில் காலை கழுவிவிட்டு
சென்றுவிட்டார். இதை பார்த்தவர்களுக்கு அவர்
பைத்தியகாரன் என்று தோனலாம்.

ஆனால் அவரை பொறுத்தவரை பொருளுக்கும்
அவருக்கும் தொடர்பை ஏற்படுத்தி கொள்வது ஆகும். ஆனால் அவர் ஏற்படுத்திய தொடர்பு
அவருடையது அல்ல!! அவரை நம்பி இருப்பவர்களின் கர்மவினைகளை தான் அவர்
அச்செயலின் மூலம் தீர்த்து வைக்கின்றார்.

இது எப்படி சாத்தியம்?? என்ற கேள்வி வரலாம்!! அந்த ஞானியை பொறுத்தவரை
அவர் செய்யும் எந்த செயலுக்கும் வினை என்ற ஒன்று ஏற்படுவது கிடையாது.

காரணம்? அவர் உள்ளே வெறும் வெற்றிடம் தான் உள்ளது.

 அதாவது அவருக்கு மனம் என்ற
ஒன்று கிடையாது!! உள்ளே சூன்யமாக தான்
இருக்கும்!! அவரிடம் எந்த எண்ணங்களும் உதிப்பதும் கிடையாது!! மறைவதும்
கிடையாது!! இதுவே " சும்மா இருப்பது "
என்று சொல்லப்படுகின்றது.

ஒருவன் அவர்மீது கொண்டுள்ள தீவிர பக்தியால் அந்த
வெற்றிடத்தில் இவனது எண்ணங்கள்
சுற்றிகொண்டிருக்கும். இவனுக்கு அன்று சாக்கடையில் விழுந்து அடிபட வேண்டும்
என்ற விதி இருக்கும், ஆனால் இவன்  உண்மையாக இருப்பதால் இவனுக்கு பதிலாக
அந்த ஞானி அந்த விதியை முடித்து
வைக்கின்றார். மேலும் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவரின் எண்ண
அலைகளும் அங்கே உள்ள வெற்றிடத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும். இவர்கள் தன்
தவறை உணர்ந்து தனக்கு உண்மையாக நடக்க
தொடங்கும்போது அந்த ஞானி எதோ ஒரு செயலின் மூலம் இவர்களின் பாவபுண்ணிய
கணக்குகளை அழித்துவிடுவார்.

முடிவில் இவர்களும் அந்த ஞானியின் நிலைக்கே வந்துவிடுகின்றனர்.

அதனால் தான் ஞானிகள் அருகில் இருக்கும்போது எதையும்
கேட்காதீர்கள் என்று கூறுவது. காரணம்!!

நீங்கள் கேட்டுதான் பெறவேண்டும் என்ற
அவசியமே அங்கு கிடையாது. மாறாக நீங்கள்
கேட்க நினைப்பது கூட சிறியதாக தான் இருக்கும். அவர் கொடுக்க நினைப்பதோ கணக்கில் அடங்காதவையாக இருக்கும். இதற்கு அவரிடம் பூரண சரணாகதி அடைந்தலே
சிறந்தது ஆகும்.

இதில் பூரண சரணாகதி என்பது இனி அனைத்தும் உன் செயல் என பற்றுகளை துறப்பதுவே ஆகும்.

 "நான்" என்ற எண்ணத்திற்கு பதிலாக இனி எல்லாம் "நீ" என்ற
எண்ணத்தை கொண்டு வருவதே சரணாகதி.

அதற்குபிறகு உங்களுக்கென்று தனிப்பட்ட எந்தவொரு செயலும் இருக்காது, இருக்கவும்
கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் செய்வதாகவே இருக்க
வேண்டும்.

இறைவனை நோக்கிய உங்களது பிராத்தனை அல்லது வேண்டுதல் எந்த முறையில் இருக்க
வேண்டும் என்பதை விளக்குவதே இப்பதிவு.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும்
சூழ்நிலைக்கு தகுந்தவாறு தேவைகள் என்பது
மாறிக்கொண்டே இருக்கும். அந்த
தேவைகளுக்கு தகுந்தவாறு
வேண்டுதல்களும் மாறிக்கொண்டே இருக்கும்.

ஆனால் ஆன்மீகத்தில் ஓரளவு புரிதல் உள்ளவர்களை பொருத்தவரை, அவர்களுடைய
வேண்டுதல் என்பது அவர்கள் வாழ்நாளில் "ஒரே ஒருமுறை" தான் இருக்குமே தவிர
ஒவ்வொரு முறையும் இருக்காது.

ஏனென்றால் அவர்கள் முடிவான ஒன்றை முதலிலேயே
வேண்டியும் விடுவர். அந்த வேண்டுதலில்
அத்தனையும் அடங்கியும் விடும். இதை புரிந்துகொள்ள ஒரு சிறு கதையை பார்ப்போம்.

ஒரு ஏழை தாயின் மகனுக்கு படிப்பு அவ்வளவாக வரவில்லை. அவளுக்கு.தெரிந்ததெல்லாம் அவள் வழிபடும் தெய்வம்
மட்டும்தான். தன் மகன் பரிட்சையில் தேர்ச்சி
பெற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்
என்பது அவள் கனவு.

 கடவுளிடமும் இதை
குறித்து வேண்டுதல் வைக்கவே, மகனும் பரிட்சையில் தேர்ச்சி பெற்றான். ஆனால்
இவனது வினை வேலை கிடைக்கவே இல்லை.

மறுபடியும் கவலை கொண்ட தாய் வேண்டவே
மகனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது.

சிறிது காலம்தான் சென்றது மகனுக்கு விபத்து
ஏற்பட்டு படுக்கையில் இருந்தான். அத்தாய்க்கு தெரிந்ததெல்லாம் அவனே என்பதால் மறுபடியும் ஒரு வேண்டுதல்..!!

இதுவே அத்தாய் கடவுளே "எனக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் கொடு"
என்று ஒரே ஒருமுறை மட்டும்
வேண்டியிருந்தால், அவள் வாழ்க்கை வசந்தமாகி இருக்கும்.

புரியும்படி கூற
வேண்டுமென்றால் ஒருவனுடைய வேண்டுதல் என்பது நிரந்தரமான முடிவான ஒன்றாக இருக்க
வேண்டும். அத்தாய் வேண்டியது எல்லாமே தற்காலிகமான தீர்வை தரக்கூடியது என்பதால்
ஒவ்வொரு முறையும் வேண்ட வேண்டிய அவசியம் இருந்தது. மேலும் எதிர்வரும்
கர்மவினை இதுதான் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கூடவே எனக்கு
இந்த தேவை நிறைவேறினால் நான்
நிம்மதியாக இருப்பேன் என்ற தவறான கணக்கை போட்டுக் கொண்டு தற்காலிக
தீர்வை நாடுகின்றோம்.

உண்மையில் எந்த ஒன்றில் எல்லாம் அடங்குமோ!! அடக்கமோ!! அந்த ஒன்றை
வேண்டுதலாக வைக்க வேண்டும். அப்படி.அந்த வேண்டுதல் நிறைவேறும் பொழுது
அவனுக்கு அனைத்தும் வசமாகி விடுகின்றது.

எனவே அவனது வேண்டுதல் என்பது ஒரே ஒருமுறையோடு முடிவடைந்து விடுகின்றது.

இதில் உங்களை சுற்றி உள்ளவர்களும் பயன்
பெறுவர். எப்படியென்றால் உங்கள்
அமைதியும் சந்தோஷமும் உங்களை சுற்றி
உள்ளவர்களையும் சார்ந்தே உள்ளது.

உங்கள் தாய்க்கு உடம்பு சரியில்லை என்றாலோ,
உங்கள் மனைவி கோபபட்டலோ, உங்கள்முன்.ஒரு நாய் குட்டி கஷ்டப்பட்டாலோ, உங்களுக்கு
பணக்கஷ்டம் ஏற்பட்டாலோ உங்களால் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க
முடியுமா?? முடியாதல்லவா..!!

எனவே உங்கள்
அமைதி என்ற வேண்டுதல் நிறைவேற.உங்களை சார்ந்த மற்றும் உங்களை
சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை தரமும் நல்லவைகளாக மாற்றம் பெறகின்றன.

இப்பதிவு உங்களுக்கு தெளிவாக புரிந்தால்  இறைவனை நோக்கிய உங்களது
பிராத்தனையும் ஒருமுறைதான்..!!
🙏இனிய காலை வணக்கம்🙏





Wednesday, 16 May 2018

சர்வம் பிரம்ம மயம் ரே ரே சர்வம் பிரம்ம மயம்...

சதாசிவ பிரம்மேந்திரர் ஆற்றங்கரையில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த போது ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து ஆற்றில் மண் அள்ளியபோது அவரது உடல் கண்டு எடுக்கப்பட்டது. அப்போது கண்விழித்த அவர் எதுவும் நடக்காதது போல எழுந்து சென்றார். இனி...

மூன்று மாதங்கள் வரை மணலில் புதைந்திருந்த காலத்திலும் சமாதி நிலையில் இருந்து விடுபடாமல் சதாசிவ பிரம்மேந்திரர் இருந்த செய்தி அவருடைய குருவான பரம சிவேந்திர சரஸ்வதி சுவாமிகளை எட்டிய போது ‘அப்படியொரு நிலையை எப்போது என்னால் எட்ட முடியும்’ என்று வியந்தாராம்.



குருவையே அப்படி வியக்க வைத்த சதாசிவ பிரம்மேந்திரர் எத்தனையோ சக்திகளைப் பெற்றிருந்த போதும் அதை விளம்பரப்படுத்திக் கொள்ளவோ, தன்னை ஒரு மகானாகக் காட்டிக் கொள்ளவோ எப்போதும் முயன்றதில்லை. அவருடைய அந்த சக்திகள் இயல்பாக தேவைப்பட்ட இடங்களில் வேலை செய்தன. அதற்கு சம்பந்தப்பட்டவர் போலவே அவர் காட்டிக் கொண்டதில்லை.

ஒரு முறை ஒரு தானியக் குவியலில் அமர்ந்தவர் அப்படியே சமாதி நிலையில் லயித்திருக்க ஆரம்பித்து விட்டார். அந்த விவசாயி அவரை தானியம் திருட வந்த கள்வன் என்று நினைத்து ஒரு கம்பால் அவரை அடிக்க ஓங்கினான். ஆனால் அவன் கை அப்படியே நின்று விட்டது. அவர் விழித்து அவனைப் பார்த்த போது தான் அவனால் கையைக் கீழே இறக்க முடிந்தது. அவன் அவரைத் திருடன் என நினைத்ததற்கு வருந்தி மன்னிப்பு கேட்பதற்கு முன் அவர் அங்கிருந்து போயுமிருந்தார்.

ஒரு முறை திருநெல்வேலியில் இருந்து குற்றாலத்திற்கு அவர் நடந்து போய்க் கொண்டிருந்தார். வழியில் சிலர் வண்டியில் மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். நெடிய கட்டை போல் அவர் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களில் ஒருவன் அவரை அழைத்து கட்டைகளை எடுத்துத் தரச் சொன்னான். எந்த விதமான மறுப்பும் சொல்லாமல் அவரும் எடுத்துத்தந்து அந்த மரக்கட்டைகளை வண்டியில் ஏற்றுவதற்கு உதவினார். வேலை முடிந்த பின் அவர் மறுபடி தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

அந்தக் கயவர்கள் தங்களுக்கு உதவிய ஒருவர் என்கிற நன்றியும் இல்லாமல் ‘இந்தக் கட்டை எங்கே போகிறது?’ என்று கூவி ஏளனமாகக் கேட்டார்கள்.

சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் வண்டியில் ஏற்றி இருந்த கட்டைகள் திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. அப்போது தான் அவர்களுக்கு அவர் ஒரு யோகி என்பது புரிந்தது.

இன்னொரு சமயம் ஒரு பண்டிதன் அவருடைய பூர்வாங்கம் தெரியாமல் அவருக்குக் கிடைக்கும் புகழைக் கண்டு பொறாமைப்பட்டான். பல சமஸ்கிருத நூல்களைக் கற்றுத் தேர்ந்திருந்த அவன், அவர் வேத நூல்கள் பற்றிய பரிச்சயமே இல்லாதவர் என்றும், அவர் வாழும் வாழ்க்கை வேதங்களின் அங்கீகாரம் இல்லாதது என்றும் அவரிடம் நேரில் வந்து குற்றம் சாட்டினான்.

சதாசிவ பிரம்மேந்திரர் அப்போது அங்கே அருகில் இருந்த ஒரு சலவைத் தொழிலாளி நாக்கில் சில எழுத்துக்கள் எழுத, படிப்பறிவில்லாத அவர் வேத மந்திரங் களைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்.

அந்த மந்திரங்கள் ஒரு ஞானியின் வாழ்க்கை முறையை விவரிப்பதாக இருந்தன. அவை அனைத்தும் சதாசிவ பிரம்மேந்திரரின் வாழ்க்கையை ஒத்ததாகவும் இருந்தன.

இப்படி அவருடைய சக்திகளை உணர்ந்தவர்கள் சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, அரசர்களும் தான்.

ஒரு முறை அவர் பயணத்தின் போது வழியில் ஒரு நவாபின் (சில குறிப்புகள் ஒரு படைத்தலைவன் என்கின்றன) அந்தப்புரத்துக்குள் புகுந்து விட்டார். ஆடைகள் இல்லாத ஒரு பித்தர் என்று அவரை எண்ணிய அந்தப்புர பெண்மணிகள் அலறி அடித்துக் கொண்டு ஒதுங்கினார்கள். ஆனால் அவரோ சுற்றுப்புற சூழலே உணராமல் அந்தப்புரத்தைக் கடந்து கொண்டு இருந்தார். இந்தத் தகவல் நவாபின் செவிகளை எட்டியது.

கோபம் கொண்ட நவாப் அந்தப் பித்தனின் கையை வெட்டிக் கொண்டு வரும்படி சிப்பாய்களிடம் ஆணை இட்டான். சிப்பாய்கள் விரைந்து வந்து சதாசிவ பிரம்மேந்திரரின் ஒரு கையை வெட்டினார்கள். கை வெட்டப்பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்த போதும் சிறிதும் சலனப்படாத அவர் சென்று கொண்டே இருந்தார். அந்தச் செய்தியும் நவாபின் செவிகளை எட்டியது.

திகைத்துப் போன நவாப் அந்த வெட்டப்பட்ட கையை எடுத்துக் கொண்டு ஓடி அவரை அடைந்து மன்னிப்பு கேட்டான்.

அந்தக் கையை அவனிடம் இருந்து வாங்கி மீண்டும் பொருத்திக் கொண்டு அவர் போய்க் கொண்டே இருந்தார்.

கையை வெட்டியதற்குக் கோபம் கூடக் கொள்ளாத அந்த யோகி சாதாரண மனிதர்களின் உணர்ச்சிகளை என்றோ கடந்திருந்தார் என்றல்லவா இதிலிருந்து நமக்குப் புரிகிறது.

கி.பி.1730 முதல் 1768–ம் ஆண்டு வரை புதுக்கோட்டை மன்னராக இருந்த விஜய ரகுநாத தொண்டைமான் சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்து கவுரவிக்க விரும்பினார். தன் ஆட்சி எல்லைக்குள்ளே இருந்த அந்த யோகியைத் தானே நேரில் சென்று அழைக்கவும் செய்தார்.

மவுன விரதம் மேற்கொண்டிருந்த சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருந்தார். அவர் அப்படி அரண்மனைக்கு எல்லாம் வர மாட்டார் என்பதைப் புரிந்து கொண்ட மன்னர் ஆன்மிகம் குறித்த கேள்வி ஒன்றை அவரிடம் கேட்டார். அதற்காவது அவரிடம் இருந்து பதில் வந்தால் அது தனக்கு அவரது ஆசீர்வாதமாக இருக்கும் என்று மன்னர் எண்ணினார்.

சதாசிவ பிரம்மேந்திரர் மணலில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி மந்திரத்தைப் பதிலாக எழுதி விட்டுச் சென்றார்.

விஜய ரகுநாத தொண்டைமான் தன் அங்கவஸ்திரத்தில் அந்த மணலைக் கட்டி எடுத்துக் கொண்டு சென்று அரண்மனையில் பூஜித்து வந்ததாகச் சொல் கிறார்கள்.

சதாசிவ பிரம்மேந்திரரின் அருளைப் பெற்ற இன்னொரு மன்னர் சரபோஜி மன்னர். அவரது அமைச்சராக இருந்த மல்லாரி பண்டிட் என்பவர் சதாசிவ பிரம்மேந்திரரைச் சந்தித்து மன்னருக்கு மகன் பிறக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும், அவரும் ஆசீர்வதித்து தனது ‘ஆத்மவித்யா விலாசம்’ என்ற நூலை அளித்ததாகவும் குறிப்பிட்டு எழுதிய கடிதம் வரலாற்று ஆவணமாக தஞ்சை சரஸ்வதி மகாலில் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இப்படி ஒரு பிரம்ம ஞானியாகவே வாழ்ந்து வந்த சதாசிவ பிரம்மேந்திரர் தன் வாழ்வு கடைசிக் கட்டத்தை நெருங்குவதை உணர்ந்தார். அருகில் இருந்த அவரது பக்தர்களிடம் தனது சமாதியை கரூரை அடுத்த நெரூரில் அமைக்கும்படி எழுதிக் காட்டினார்.

அந்தப் பக்தர்கள் பெருந்துக்கம் அடைந்தனர். கண்களை மூடிக்கொண்டு கடைசி யாத்திரைக்குத் தயாராக இருந்த சதாசிவ பிரம்மேந்திரரிடம் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்திய அவர்கள் ‘இனி எங்களுக்கு யார் இருக்கிறார்கள்? எங்களுக்கு வழி காட்டுங்கள்’ என்று வேண்டினார்கள். கஷ்டப்பட்டு கண்களைத் திறந்த சதாசிவ பிரம்மேந்திரர் தன் கடைசி கீர்த்தனையை எழுதிக் காட்டினார்.

‘சர்வம் பிரம்ம மயம் ரே ரே  சர்வம் பிரம்ம மயம்...’ என்று தொடங்கும் அந்தக் கீர்த்தனையில் ‘எல்லாமே இறைமயம் தான். அப்படி இருக்கையில் கடவுளை எங்கே தேட வேண்டும். அந்தப் பிரம்மத்தில் அல்லவா நாமும் இருக்கிறோம்’ என்ற பொருள் இருக்கிறது.

1755 –ம் ஆண்டு சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி அடைந்து இவ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார். நெரூரில் அவரது ஜீவ சமாதியைக் கட்ட புதுக்கோட்டை மன்னர் உதவி இருக்கிறார். இன்றும் அவரது ஜீவசமாதிக்குப் பல ஆன்மிக அன்பர்கள் சென்ற வண்ணம் இருக்கிறார்கள். சென்றவர்கள் அங்கு அவரது ஆன்மிக அலைகளை உணர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.

#ஸ்ரீராமஜயம்

தேப்பெருமாநல்லூர் அதிசயங்கள்

தேப்பெருமாநல்லூர் சென்று சிவனை தரிசனம் செய்தவர்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்




Saturday, 12 May 2018

பாண்டி முனீஸ்வரா்

#ஆலய_தரிசனம்
🐠பாண்டி முனீஸ்வரா்🐠
***************************

மதுரை அருள்மிகு பாண்டி முனீஸ்வரர் தல வரலாறும் சிறப்புகளும்

""பாண்டி... நீ என்ன செய்வியோ தெரியாது. என்னோட கோரிக்கைய நீ சீக்கிரமே நிறைவேத்தித் தரணும்' என சாமிக்கே கட்டளையிடுவது போலத்தான் வரம் கேட்கிறார்கள் பக்தர்கள். கடவுளைத் தாயாய்- தந்தையாய்- தாயுமானவனாய்- தந்தையுமானவனாய்பார்த்தார் பாரதியார். காதலனாய் பார்த்தார்கள் ஆண்டாளும் மீராவும். கடவுளைக் காதலியாகவே பார்த்தார் குணங்குடி சித்தர். ‘""அண்ணன் 15 நாளா கனவுல வந்து, "வாடா... வந்து என்னய பாத்துட்டுப் போ'ன்னு சொல்லிச்சு. அதான் வந்தேன்'' என பாண்டி முனீஸ்வரனை அண்ணனாகப் பார்க்கிறார்கள்பாண்டி யின் பக்தர்கள்.

பொங்கலோ, ஆடு வெட்டுவதோ, சுருட்டு வாங்கி வைப்பதோ, பாலாபிஷேகம் செய்வதோ... எப்படி வேண்டு மானாலும் படைத்து பாண்டியை வணங்கலாம். "கடவுளின் அருளைப் பெற சடங்குகள் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது. விரும்பிய வழியில் கடவுளின் அன்பைப் பெறலாம்' என்கிற உயர்ந்த தத்துவத்திற்கு உதாரணமாக இருக்கிறது பாண்டி கோவிலின் பக்தி மார்க்கம்.

மதுரை வடக்குப் பகுதியில் இருக்கும் மேலமடை பகுதியில் இருக் கிறது பாண்டி முனீஸ்வரர் கோவில். பாண்டியைப் பற்றி மதுரை மாவட்ட மக்களிடையே பல செவிவழிக் கதைகள் உண்டு. அதில் சிறுவர்களை மிரள வைக்கும் பிரசித்தி பெற்ற கதை ஒன்று உண்டு.

'வீட்டுக்கே அடங்காத பிள்ளையாய் வளர்ந்த பாண்டி, நாளாவட்டத்தில் யாருக்கும் அடங்காத- அடக்கவும் முடியாத மனிதரானார். ஆனால் அநீதியைக் கண்டால் ஆக்ரோஷத்தோடு பாய்வார். இப்படி வாழ்ந்த பாண்டி இறந்தபின் ஒரு குடும்பத்தின் குலதெய்வமாகி, இன்று தென்மாவட்ட மக்களின் இஷ்ட தெய்வமாகி இருக்கிறார். இப்போதும்கூட பாண்டி சிலையை குழந்தை கள் பார்த்தால் பயந்து போகும். முழிகளை உருட்டி, முறுக்கிய மீசையோடு சினந்து காணப்படும் பாண்டி முனி... எப்போது வேண்டு மானாலும் ஆக்ரோஷத் தோடு கிளம்பிவிடும் என்ப தால், சிலையை இரும்புச் சங்கிலியால் கட்டிப் போட்டிருக்கிறார்கள்' எனச் சொல்வார்கள். இதுபோல பல கதைகள் உண்டு.

ஒரு குடும்பத்தினர் வம்சாவழியாக இக் கோவிலை நிா்வாகித்து வருகிறாா்கள். இனி பாண்டி கோவில் வரலாறு குறித்துக் காண்போம்.

""பாண்டியைப் பத்தி நிறைய்ய கதைகள் இருந்தாலும்,நிஜம் வேறு. சுமாா் நூறு வருஷங்களுக்கு முன்பு இந்த இடம் பழைய மதுரை என சொல்லப் பட்டது. கரூர் அருகே உள்ள நெரூர் கிராமத்தில் முத்தரையர் வம்சத்தைச் சேர்ந்த வள்ளியம்மை பிழைப்பு தேடி மதுரை மாநேரியில் குடியேறினார்.

வள்ளியம்மை கனவில் பலமுறை சாமி வந்து, மேலமடை கிராமத்தில் தான் புதைந்திருக்கும் இடத்தைச் சொல்லியது. ஆனா அந்த அம்மா கனவை பொிதாக கவனம் செலுத்த வில்லை. ஆனா கனவு தொடர்ந்து வரவும் கிராம மக்கள்கிட்ட இந்தக் கனவைச் சொல்லியிருக்கார். உடனே வண்டியூர், உத்தங்குடி, கருப்பாயூரணி கிராம மக்களோட மேலமடை மக்களும் சேர்ந்து வள்ளியம்மை கனவில் சாமி சொன்ன இடத்தைத் தோண்டியபோது, உருட்டிய விழிகள், முறுக்கிய மீசை, அடர்ந்து நீண்டு வளர்ந்த ஜடாமுடியோடு சம்பணமிட்ட தவக்கோலத்தில் சாமி சிலை கிடைத்தது. அந்த சிலையை வெளியே எடுத்து, ஒரு குடிசை போட்டு சிலையை வைத்து கும்பிடத் தொடங்கினார்கள். ஜடாமுனீஸ்வரர் கோவில் என மக்கள் மத்தியில் பிரபலமானது. வள்ளியம்மையே பூசாரியாக இருந்தார்.

அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியாக- நடக்கக்கூட சரிவர பாதையில்லாத காலம். கம்பீரமாக இருக்கிற ஜடாமுனியைப் பார்த்து மக்கள்- குறிப்பாக குழந்தைகள் அச்சப்பட்டதாம். நீண்டு வளர்ந்த ஜடாமுடியைப் பார்த்து சாமியை இரும்புச் சங்கிலியால் கட்டி வைத் திருப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டார்கள்.

அந்தக் காலத்திலேயே கோவில் பிரபலமாகிவிட, வெள்ளைக்கார அரசாங்கம் கோவிலுக்கு சில சட்ட- திட்டங்களைப் போட்டது. இதேபோல் எல்லா கோவில்களுக்கும் சட்டங்கள் போட்டது. ஆனால் வள்ளியம்மை நீண்ட போராட்டம் நடத்தியதன் விளைவாக 1930-களில் ‘"அரசு சட்டங்களிலிருந்து விலக்கு அளிக் கப்பட்ட கோவில்' என்ற பெருமையைப் பெற்றது.

இப்போதும் தமிழக அரசின் அறநிலையத் துறையின் ‘"அன்ன தானம்' உள்ளிட்ட சில சலுகை களைப் பெற்றாலும், இது விலக்கு அளிக்கப்பட்ட கோவில்தான். வள்ளியம்மையின் வம்சாவழியினர் தொடர்ந்து கோவில் பூசாரிகளாக இருந்து வந்தனர். இவா்கள் சமூகத்தை சாா்ந்தபடி, பாண்டி கோவில் என்பது, "பாண்டி பூசாரி கோவில்' என அழைக்கப்பட்டு, நாளடைவில் ஜடாமுனீஸ்வரர் என மாறி பாண்டி முனீஸ்வரர் கோவில் ஆனது.

பக்தர்கள் கோரிக்கை யில் நியாயம் இருப்பின்.... அதை உடனே நிறை வேத்தி வைப்பார் பாண்டி முனி. பில்லி, சூன்ய, ஏவல்களில் பாதிக்கப்பட்ட வங்க பாண்டிகிட்ட முறை யிட்டா... உடனே சரி பண்ணுவார். குழந்தையில்லாதவர்கள் தூளிகட்டி வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்'' என பாண்டி கோவில் வரலாற்றை கூறுகிறாா்கள் அங்குள்ள மக்கள்.

பொதுவாக இந்துக்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்தான் கோவிலுக்குப் போவது வழக்கம். ஆனால் "நல்லவருக்கு ஏது நாளும் கிழமையும்' என்பதுபோல... செவ்வாய், வெள்ளியோடு ஞயிற்றுக்கிழமை ரொம்ப விசேஷமாக இருக்கிறது. அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

எந்த மதத்தை சோ்ந்தவரானாலும் கோவிலுக்கு வரலாம், மேலும் , கர்ப்பக்கிரகம் வரை சென்று பாண்டியைத் தரிசனம் செய்யலாம்.

இப்படி சமயங்களைக் கடந்த சாமியாக இருக்கிறார் பாண்டி. பொதுவாக வீடுகளில் வெள்ளி, செவ்வாயில் அசைவம் சமைக்காத- உண்ணாத இந்துக்கள்கூட குடும்பம் குடும்பமாக வந்து ஆடு பலியிட்டு, தங்கள் நோ்த்திக் கடன் செலுத்தியும், அங்கே சமைத்தும் உண்ணு கிறார்கள்.

ஆனாலும் பாண்டிமுனி சைவச்சாமி என்கிறார் கோவில் பூசாரி.

""பாண்டி- ஆண்டி- சமயன் என மூன்று தெய்வங்கள் இங்கே இருக்கிறாா்கள். பாண்டிக்குக் கட்டுப் பட்டவர் ஆண்டி. அவருக்கு சுருட்டு வைத்து பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். ஆண்டிக்கு விருப்பமானது மாம்பழ பூஜை.

பாண்டிக்குக் காவலாக இருப்பது சமய கருப்பு சாமி. பாண்டி நிறைவேற்றிய கோரிக்கைகளுக்குப் பிரதிபலனாக மக்கள் ஆடுகளை பலியிடுவது கருப்பு சாமிக்கு மட்டுமே.

பாண்டி சைவச்சாமி. பொங்கல் படையல், நெய், பால், பன்னீர், சந்தன அபிஷேகம்தான் பாண்டிக்கு இஷ்டம். அதை மீறி பாண்டிக்கு எது கொடுத்தாலும் பக்தர்களின் இஷ்டத்தை ஏற்றுக் கொள்கிறார் பாண்டி''’என்கிறார் பூசாரி.

லாரிகளில், டிராக்டர்களில், பஸ்களில், வேன்களில் கூட்டம் கூட்டமாக வந்தபடியே இருக்கிறார்கள் மக்கள். நிறைவேறின கோரிக்கைக்காக நேர்த்திக் கடன் செய்ய வரும் பழைய பக்தர்கள், கோரிக்கை வைப்பதற்காக வரும் புதிய பக்தர்கள் என எல்லா நாளும் திருவிழாவாக இருக்கிறது பாண்டி கோவிலில். சமய பேதங்களைக் கடந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் இந்த சைவ முனி.

சமய கருப்பை பற்றிய சுவையான கதை உண்டு. ஒரு முறை ஒரு வெள்ளைக்காரன் அங்கு வந்து கேலியாக நான் இன்று எத்தனை விலங்குகளைக் கொல்வேன் எனக் கேட்க சமயக் கருப்பு பேசாமல் இருந்ததாம். (சிலை என்பதினால்) . அன்று முழுதும் வேட்டை ஆடி விட்டு எந்த மிருகமும் கிடைக்கவில்லை என்பதினால் கோபத்துடன் திரும்பி வந்த வெள்ளைக்காரன் அந்த சிலையின் கைகளையும் முகத்தையும் உடைத்துவிட்டுச் சென்றானாம். ஆனால் போகும் வழியிலயே அவன் கல்லாக மாறி விட்டானாம். அதனால்தான் இன்றும் சமயக் கருப்புக்கு தலையும் கைகளும் இல்லையாம்.
ஆண்டி அய்யாவுக்கு இனிப்பு இல்லாத பொங்கலும், பாண்டி ஐயாவுக்கு சைவ உணவும், சமயக் கருப்புக்கு மிருக பலிகளும், கள், சுருட்டு போன்றவையும் தரப்படுகின்றன. பாண்டி அய்யாவின் ஆலயத்துக்கு சென்றால் பேய் பிசாசுகளின் தொந்தரவு விலகும் என்பது மக்களின் நம்பிக்கை. அங்கிருந்து இரண்டு கிலோ தொலைவில் உள்ள கழுன்கட்டி என்ற இடத்தில் பல வேல்கள் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அந்த இடத்தை அடைந்ததும் பேய்பிசாசு பிடித்தவர்கள் துள்ளி குதிப்பார்கள். ஆகவே அந்த வழியாக செல்லும் வாகனங்களை பேய் , பூதங்களுக்கு பயந்து மரியாதை தரும் வகையில் வண்டிகளை நிறுத்தி விட்டுத்தான் செல்வார்கள்.
பாண்டி முனீஸ்வரருக்கு ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் ( ஆடி) தனி விழா நடைபெறுகின்றது. மக்கள் மாம்பழத்தை காணிக்கையாகத் தருகிறார்கள். பாண்டி அய்யாவுக்கு சர்க்கரை பொங்கல் படைகின்றார்கள். ஒரு தடுப்புத் திரை போடப்பட்டு அதற்கு அந்தப் பக்கத்தில் சமய கருப்புக்கு மிருக பலி தரப்படும். ஆண்டி அய்யாவின் படிகள் முழுவதும் மாங்காய் பழத்தினால் அலங்கரிக்கப் படும். அவருக்கு வெண்பொங்கல் பிரசாதம் வைக்கப்படுகின்றது.