ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583 THIS SITE IS BEST VIEWED IN GOOGLE CHROME BROWSER. இந்த வலைத்தளம் கூகிள் குரோம் என்ற சாதனத்தில் சிறப்பாக இயங்கும்.
Friday, 24 December 2021
குருபூஜை படங்கள்
Tuesday, 7 December 2021
நவகுஞ்சரம்
*இது தான் நவகுஞ்சரம்*
*மகாபாரதத்தில் வரும்* *வித்தியாசமான உடலமைப்பைக்* *கொண்ட பறவை நவகுஞ்சரம்.*
*ஒன்பது மிருகங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவை இது.*
*சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின்வால், யானை,புலி,* *மானின் கால்கள், மனிதனின்* *கையுடன் கூடிய விலங்கு எப்படி இருக்கும்?*
*அதுதான் நவகுஞ்சரம்.*
*‘நவ’ என்றால் ஒன்பதைக் குறிக்கிறது.* *ஒன்பது விலங்குகளின் கலவை என்பதால் நவகுஞ்சரம் என்று பெயர்.*
*ஒரிய மொழிக் கவிஞரான சரளதாசர் எழுதிய மகாபாரதக் கதையில் நவகுஞ்சரம் சித்தரிக்கப்பட்டுள்ளது*
*அர்ஜுனன் மலை மீது தவம் செய்துகொண்டிருந்தார்.*
*அப்போது நவகுஞ்சர உருவெடுத்து கிருஷ்ணர்,* *அர்ஜுனன் முன் தோன்றியதாக வருகிறது.*
*தவத்திலிருந்து கண் விழித்த அர்ஜூனன், முதலில் நவகுஞ்சரத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்து திகைத்தார்.*
*பின்னர் அதன் கையில் தாமரைப் பூவைப் பார்த்தார்.*
*வெவ்வேறு விலங்குகளின் உடல் உறுப்புகள் சேர்ந்த* *அதன் உடலமைப்பைப் பார்த்து,* *ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டார்.*
*அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன.*
*’மனிதர்களின் எண்ணங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை.*
*உலகமோ எல்லையற்றது’* *என்பதை உணர்ந்தார் அர்ஜுனன்.*
*இதுவரை பார்த்திராத ஓர் உயிர் இந்த உலகில் இருக்கலாம் என்றும் நினைத்தார்.*
*தன்னைச் சோதிப்பதற்காக இந்த உருவத்தில் வந்திருப்பது கிருஷ்ணன்தான் என்று தெரிந்துகொண்டு, எடுத்த வில்லை கீழே போட்டுவிட்டு வணங்கினார்.*
*ஒடிஷாவில் விளையாடப்படும் கஞ்சிபா சீட்டுக்கட்டு விளையாட்டில் நவகுஞ்சரம் ராஜாவாகவும்,*
*அர்ஜுனன் மந்திரியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.*
*ஒடிஷாவில் வரையப்படும் ஓவியங்களில் நவகுஞ்சரம் பல வகைகளில் வரையப்படுகிறது.*
*நவகுஞ்சரத்தின்* *உருவம் பூரி கோவிலின் வடக்குப்புரத்தில் செதுக்கப்பட்டுள்ளது*
*அதன் கையில் இருக்கும் நீலச் சக்கிரம் பூரி கோவில் கோபுர கலசத்தின் உச்சாணியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது*
Thursday, 2 December 2021
அதிசய ஆலயம் - நந்தி சிலையை திருப்பினால் சுக பிரசவம்
Trustee Srinivasan.Phone: 9840955363.You can tell even a day before the public time.Priest Name: Natarajan.Phone Number: 96265 23642.
.கோவில்: இளநகர் உதயபுரீஸ்வரர் கோவில்.காஞ்சிபுரம் மாவட்டம்.உத்திரமேரூர் அருகில் உள்ள கிராமம்.கோவில் டிரஸ்டி ஸ்ரீநிவாஸன்.போன் நம்பர்: 9840955363.பிரசுப நேரத்திற்கு ஒரு நாள் முன்பு கூடச் சொல்லலாம்.பூசாரி பெயர் : நடராஜன்.போன் நம்பர்:96265 23642.
Wednesday, 1 December 2021
அகத்தியர் குரு பூஜை விழா 23.12.2021
அன்புடையீர் அனைவருக்கும் நமஸ்காரம்
நமது அய்யா அகத்தியர் எம்பெருமானுக்கு பொகளூரில் ஆறாம் ஆண்டு குரு பூஜை நடக்க இருக்கிறது. இதுவரை 2015 இல் இருந்து பொகளூரில் அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடத்தில் நடத்தி கொண்டு வருகிறோம். நமது அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம் மூலம் வருடம் தோறும் ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு ஜீவ நாடி வாசிக்கப்பட்டு, அவர்களுக்கு அகத்தியரிடம் உரையாட , தங்கள் குறைகளை தெரிவிக்க, அகத்தியர் கூறும் பரிகாரங்களை கேட்டு அறிய, ஆன்மீக முன்னேற்றம் பெற, வாழ்வில் அணைத்து சிக்கல்களுக்கும் தீர்வாய், முதல் ஆதி மருத்துவராய் தீராத நோய்களை எல்லாம் தீர்த்து அருள் பாலித்து கொண்டு வருகின்றார். இந்த இடத்தில பீடம் அமைத்து அருள் பாலிக்க வேண்டும் என்பதுவும் ஜீவ நாடி மூலம் அவர் இந்த இடத்தை பற்றிய குறிப்புகளை கொடுத்து இங்கே பீடம் அமைக்க சொல்லி, தனது விக்ரகம் எங்கே பிரதிட்டை செய்யப்பட வேண்டும், நுழைவு வாயில் எங்கே வர வேண்டும், தீபம் எங்கே வைக்க வேண்டும் என்பது போன்ற அனைத்து ஏற்பாடுகளும் அகத்தியர் ஜீவ நாடி மூலம் கூறிய உத்தரவுக்கு ஏற்ப அமைக்கப்பட்டு செய்யப்பட்டு உள்ளது
மேலும், இங்கே அய்யனின் அருள் எப்போதும் நிறைந்து இருப்பதற்காக தினமும் நித்திய அபிஷேகம், அலங்காரம் மற்றும் வியாழன் தோறும் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் மற்றும் பௌர்ணமி தோறும் சிறப்பு யாகம் , சிறப்பு அபிஷேகம் , சிறப்பு அலங்காரம் , அன்னதானம் ஆகியவை ஒரு முறை கூட தவறாது நடை பெற்று வருவதால் அய்யன் மிக்க மகிழ்ச்சியுடன் இங்கே எழுந்தருளி அருள் பாலித்து மக்கள் குறைகளை இந்த கலி காலத்திலும் கேட்டு அறிந்து அறிவுரை கூறி ஆட்கொண்டு வழிநடத்தி வரும் ஆஸ்ரமம் நமது அகத்தியர் பீடம்.
இங்கே தற்போது ஐயனுக்கு ஆலயம் அமைக்க நிலம் வாங்கப்பட்டு உள்ளது. ஆலய பணிகள் அய்யனின் உத்தரவு பேரில் ஆரம்பிக்கப்பட்டு, உள்ளது -
இத்தகைய சிறப்பு வாய்ந்த நமது பீடத்தில் அணைத்து பணிகளும் பக்தர்களின் நன்கொடை, குரு தட்சிணை பொன்றை மூலமே நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வழக்கம் போல நமது அய்யனின் குரு பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் அதிகாலை 5 மணி அளவில் வருபவர் *அனைவருக்கும் அகத்தியர் ஜீவ அருள் நாடி வாக்கு ஆசீர்வாதம் வழங்கப்படும்*. *குரு பூஜை நாளில் அவரவர் கைகளால் அய்யன் விக்கிரகத்துக்கு பால் அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படும்.* *வருடத்தில் இந்த ஒரு நாள் மட்டுமே பக்தர்கள் தமது கரங்களால் பால் அபிஷேகம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.* இதனை யாரும் தவற விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும்குரு பூஜை அன்று சுமார் 1000 பேருக்கு அன்னதானம் - வடை பாயாசத்துடன் வாழை இலையில் முழு சாப்பாடு அளிக்கப்படுகிறது.
அதற்கு திட்டம் தீட்டி செயலாக்கம் நடைபெற்றுக்கொண்டு உள்ளது.
ஒவ்வொரு குரு பூஜை தினத்தன்றும் அகத்தியர் பல வடிவங்களில் காட்சி கொடுத்துளார்கள், முதியவர் வடிவம், குழந்தை வடிவம், கருடன் வடிவம், மழை பொழிவு மூலம் அருள் பாலித்தல், வானவில் தோன்றி காட்சி அளித்தல், வாசனை வடிவம் மூலம் உணர செய்தல் என்று பல பல வகையான அருளாசிகள் கிடைக்கும், அய்யன் மேல் அபிஷேகம் செய்த பிரசாதங்கள், ஹோமத்தில் நாமே இடும் ஆகுதி, நம் கரங்களால் பால் அபிஷேகம், ஜீவ அருள் நாடி வாக்கு, அறுசுவை உணவு போன்றவைகளுடன் சேர்த்து பல சாதுக்கள் அவர்களுக்கு ஆடை தானம், பண உதவி போன்றவைகளும் வழங்கப்படும். ஒரு முறை சாதுக்களின் ஒருவராக அருள்மிகு திருவண்ணாமலையில் வாழும் அடிமுடி சித்தர் அவர்கள் சாதுக்கோளோடு சாதுவாக முதியவர் வடிவம் எடுத்து வந்து என்னிடம் யாசகம் பெற்று சென்றார்கள் என்பது பின்னர் ஜீவ நாடி மூலம் அய்யனால் உரைக்கப்பட்டது.
எனவே இத்தகைய சிறப்பு வாய்ந்த அகத்தியர் குரு பூஜையில் அனைவரும் கலந்து கொண்டு பணிகள் செய்து அகத்தியர் அருளுக்கு பாத்திரமாகும்படி மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். இது ஒரு மக்கள் விழா, இதில் அனைவரும் சமம், யாரும் தலைமை தாங்க மாட்டார்கள், எந்த அரசியலும் இங்கே கிடையாது, இங்கே எந்த ஜாதி மதமும் பார்ப்பதில்லை, தூய சைவ நெறியில் ஊறி திளைத்த நமது குருஜி முக்கிய பொறுப்பாக இருந்து தமது சீடர்களுடன் சேர்ந்து நமது ஐயனுக்கு நாம் நடத்தும் விழாவாகும்.
விழா நாள் 23/12/2021 - வியாழக்கிழமை - நாள் முழுவதும் விழா நடக்கும்
*இத்துடன் பத்திரிக்கை இணைக்கப்பட்டுள்ளது.*
அனைவரும் பங்கு கொள்ளுங்கள், முடிந்தவர்கள் நிதி அளியுங்கள், முடிந்தவர்கள் சில பணிகளை எடுத்து செய்யுங்கள், அருளாசி பெறுங்கள்