Wednesday 28 December 2022

தண்டி அடிகள் நாயனார்

 *🙏63 நாயன்மார்கள் வரலாறு*


*🙏தண்டி அடிகள் நாயனார்*


*சோழ நாட்டில் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் என்னும் தலம். அங்கு அடியார் கூட்டத்தில் வாழ்ந்து வந்தவர்களில் ஒருவர்தான் தண்டி அடிகள் என்னும் சிவனருட் செல்வர். இவர் பிறக்கும் போதே கண் பார்வையின்றி பிறந்தார். சிறுவயது முதலே எம்பெருமானின் பாடல்களில் அவர்தம் பெருமைகளையும் கேட்டு வந்தார் தண்டி அடிகள். இதன் மூலம் புறக்கண் கொண்டுதான் எம்பெருமானைக் காண வேண்டும் என்பதில்லை எனவும், அகக்கண்ணாலேயே இறைவனை காணமுடியும் என்பதை உணர்ந்தார். மேலும் திருவாரூர்த் தியாகேசப் பெருமானை வணங்கி அவருடைய மந்திரமான பஞ்சாக்ஷரத்தை மிகுந்த அன்போடும், பக்தியோடும் எந்த பொழுதாகினும் உச்சரித்துக் கொண்டே எந்நேரமும் இடைவிடாமல் வணங்கி வழிபட்டு வந்தார்.*


*தண்டி அடிகளார் வாழ்ந்து வந்த காலத்தில் திருவாரூர் நகரில் சமணர்களின் ஆதிக்கம் சற்று அதிகமாக இருந்தது. சமணர்கள், சைவத்தை பின்பற்றும் அடியார்களுக்கு பலவிதமான வழிகளில் இன்னல்களையும் ஏற்படுத்திக் கொண்டே இருந்தனர். அதுமட்டுமல்லாது அடிகளார் நீராடும் கமலாலய குளத்திற்கு அருகில் சமணர்கள் பலர் பல மடங்களை கட்டிக் கொண்டு தங்கள் மதத்தைப் பற்றிய பிரச்சாரத்தையும் நடத்திக் கொண்டிருந்தனர். இதை கேள்விப்பட்டதும் தண்டி அடிகளார் மிகவும் மனம் வருந்தினார்.*


*இவர்கள் இதே போக்கை கையாண்டு கொண்டிருந்தால் சைவ குலத்தினை மண்மூடி விடுவார்களோ? என்று வேதனைப்பட்டு கொண்டிருந்தார். இனியும் பொறுத்திருந்தால் இறைவனுக்கு உருவாக்கப்பட்டுள்ள அந்த திருக்குளமானது இவர்களால் அழிக்கப்பட்டு விடும் என்பதை உணர்ந்து குளத்தை காக்கும் பணியில் இறங்கினார். அதாவது, குளத்தின் பரப்பையும், ஆழத்தையும் தம்மால் இயன்ற அளவு பெரிதுப்படுத்தும் திருப்பணிகளை செய்ய வேண்டும் என எண்ணத் தொடங்கினார்.*


*அடிகளாரிடம் பார்வை மட்டுமே இல்லை. ஆனால், அவரிடம் நிறைந்த முயற்சிகளும், இறைவன் மீது கொண்ட அன்பும் அவரை வழி நடத்தத் தொடங்கியது. அதாவது, பார்வையற்ற அடிகளார் இறைவனின் அருளால் திருக்குளத்தின் பரப்பை அறிந்து, அதற்கு தகுந்தாற்போல் அடையாளமாக சில குச்சிகளை நட்டு, கயிறு கட்டி வேலியாக அமைத்துக் கொண்டார். பின்பு மண்ணை வெட்டி, கூடையில் சுமந்துக் கொண்டு வேலியாக உள்ள கயிற்றின் உதவியால் இந்த மண்ணை கொண்டு வந்து கொட்டுவார். இவருடைய செயல்களை புரிந்து கொள்ள முடியாத சமணர்கள் அவருக்கு பலவிதமான இடையூறுகளையும் விளைவிக்கத் தொடங்கினர்.*


*தண்டி அடிகள் நாயனார் சமணர்கள் செய்த பலவித இடையூறுகளையும் கடந்து தாம் செய்த பணிகளை மேற்கொண்டு செய்து கொண்டே இருந்தார். இவருடைய செயல்களால் பொறுமை இழந்த சமணர்களோ நேரடியாக நாயனாரை சந்தித்து தாங்கள் இவ்விதமாக செய்து கொண்டிருப்பதினால் இந்தக் குளத்தில் உள்ள சின்னஞ்சிறு ஜீவராசிகள் எல்லாம் அழிந்துப்போக நேரிடும். இது அறச்செயலுக்கு புறம்பாகும் என்று கூறினார்கள்.*


*சமணர்களின் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருந்த தண்டி அடிகள் தமது உள்ளத்தினுள்ளே புன்னகைத்துக் கொண்டிருந்தார். கல்லினுள் இருக்கும் தேரைக்கும், கருவிலிருக்கும் உயிருக்கும் நல்ல உணர்வுகளைத் தந்து அவைகளை காக்கும் எம்பெருமானுக்கு இந்த குளத்தில் இருக்கக்கூடிய இந்த ஜீவராசிகளை காக்க வேண்டும் என்பது தெரியாமலா இருக்கப் போகின்றது? என்றார். மேலும் கங்கையை முடியில் கொண்ட நாதனுக்கு நான் செய்யும் இப்பணிகள் சிறு ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல உங்களுக்கும், இனி வரவிருக்கின்ற சந்ததிகளுக்கும் எவ்வித தீங்கும் நேராது என்று கூறினார்.*


*இவரின் பேச்சைக் கேட்டதும் சமணர்கள் இந்நாள் வரை உம்மை கண் பார்வை தெரியாத குருடன் என்றுதான் எண்ணினோம். ஆனால் இப்பொழுதுதான் புரிகிறது உனக்கு காதும் கேட்கவில்லை என்று. இல்லாவிட்டால் நாங்கள் நீ செய்யும் இந்த செயல்களால் உயிர்கள் இறப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று சொல்லியும், அந்த உண்மையை புரிந்து கொள்ள முடியாமல் போகுமா என்ன? என்று உரைத்துக்கொண்டு இருந்தனர்.*


*அவ்வேளையில் யாவரும் எதிர்பார்க்காத வகையில் அவர்களின் நகைகளுக்கு பதில் உரைக்கும் விதமாக திரிபுரத்தை எரித்த முடியில் பிறை சூடிய எம்பெருமானின் திருவடிகளை யாம் தினமும் அகக்கண்களால் கண்டு மகிழ்கின்றோம். அவரது திருநாமத்தை என் நாவால் சொல்லி மகிழ்கின்றேன். ஆலயத்தில் ஒலிக்கின்ற வேத ஒலிகளையும், மந்திரங்களையும் என் காதுகளால் கேட்கின்றேன்.*


*ஒப்பில்லாத என் அப்பனின் அருளையும், அன்பையும் ஐம்பொறிகளாலும் அனுபவித்து ஆனந்தம் கொண்டு இருக்கின்றேன். ஆனால் நீங்கள்தான் கண்களிருந்தும் குருடர்களாகவும், கேட்பதற்கு செவிகள் இருந்தும் கேட்க முடியாத செவிடர்களாகவும், எம்பெருமானின் நாமத்தை உச்சரிக்க இருக்கின்ற நாவையும் இழந்து ஊமைகளாக இருக்கின்றனர் என்று அடிகளார் கூறினார்.*


*அடிகளார் மொழிந்ததைக் கேட்ட சமணர்கள் மிகுந்த கோபம் கொண்டு மேலும், அவரை பல வழிகளில் இகழுரை உரைத்து அவரை எள்ளி நகையாடி கொண்டிருந்தனர். இதனால் மிகுந்த கோபமும்... சினமும்... கொண்ட தண்டியடிகள் அவர்களை சோதிக்கும் பொருட்டு ஒரு கேள்வியும் கேட்கத் துவங்கினார். சமணர்களே....! எமக்கு ஒரு ஐயம். எம்பெருமானுடைய திருவருளினால் பார்வை இழந்த என் கண்களுக்கு ஒளி கிடைத்திருந்தால் நீங்கள் அனைவரும் என்ன செய்திருப்பீர்கள் என்று கேட்டார்.*


*இவருடைய இந்த கேள்வியானது அவர்களுக்கு நகைச்சுவையாக இருந்தாலும், இவருக்கு பதில் அளிக்கும் விதமாக நீர் வணங்கும் எம்பெருமானின் அருளினாலேயே கண்களை பெற்று இருந்தால் நாங்கள் கண்களை இழந்து இந்த ஊரிலேயே இருக்க மாட்டோம் என்று கோபம் மேலிடக் கூறினார்கள்.*


*இவருடைய இந்தக் கேள்வியினால் கோபம் கொண்ட சமணர்கள் தண்டியடிகளின் கரத்திலிருந்த மண்வெட்டியையும், மண்ணெடுத்து வந்த கூடைகளையும், அடையாளத்திற்காக அமைத்திருந்த கயிற்று வேலிகளையும் அறுத்து எறிந்தனர்.*


*இதை உணர்ந்த தண்டியடிகள் மிகவும் மனம் வருந்தி கவலையோடு திருத்தலத்தில் வீற்றிருக்கும் எம்பெருமானிடம் தமது துன்பத்தைப் போக்க அருள்புரியுமாறு வேண்டி நின்று கொண்டிருந்தார். பொழுது சாயும்போது எல்லாம் நல்லதே நடக்கும் என்று எண்ணிய வண்ணம் எம்பெருமானின் மீது முழு நம்பிக்கை கொண்டு தனது இல்லத்தை நோக்கி சென்று துயில் கொண்டார்.*


*துயில் கொண்டிருந்த நாயனாரின் அன்றிரவு கனவிலே எழுந்தருளிய எம்பெருமான் மனம் கலங்காதே... யாம் உம்மைக் காப்போம்... எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். உம்மை இகழ்வது எம்மை இகழ்வதாகும். எமக்காக நீர் செய்து கொண்டிருக்கும் திருத்தொண்டை இடையுறாது செய்து கொண்டு இருப்பாயாக... உமது கண்களுக்கு யாம் ஒளி தந்து சமணர்களை ஒளி இழக்கச் செய்வோம் என்று திருவாய் மலர்ந்தார்.*


*இறைவன் அரசர் கனவிலும் அன்றிரவே தோன்றி... அரசரே, எம்மை வணங்கி வரும் திருத்தொண்டன் குளத்திலே திருப்பணி செய்து கொண்டிருக்கிறான். நீ அவனிடத்திலே சென்று அவனது எண்ணம் அறிந்து நிறைவேற்றுவாயாக. மேலும், அவனது நல்ல திருப்பணிக்கு இன்னல்கள் ஏற்படுத்தி கொண்டிருப்பவரை அறிந்து அவர்களை கண்டித்து அடியார்க்கு நீதி வழங்குவாயாக... என்று கூறி மறைந்தார்.*


*பொழுது விடிந்ததும் வேந்தன் இறைவன் தம் கனவில் கூறிய பணியை முதற்பணியாக தம் மனதில் கொண்டு அதை நிறைவேற்றத் துவங்கினார். சோழவேந்தன் திருக்குளத்தை வந்தடைந்தார். அந்த குளத்தில் ஒரு அடியார் மட்டும் திருப்பணி செய்து கொண்டிருந்தார். அவர் கண் பார்வையற்ற நிலையில் தட்டு தடுமாறிக் கொண்டு திருக்குளத்தில் திருப்பணியை செய்து கொண்டிருந்தார். பின்பு அடிகளார் அருகில் சென்று அவரை வணங்கினார். எம்பெருமான் தம் கனவில் தோன்றி மொழிந்ததை கூறினார். வேந்தர் கூறியவற்றில் இருந்து தண்டியடிகள் மிகவும் மனம் மகிழ்ந்தார். தண்டியடிகளும் சமணர்களால் தமக்கு ஏற்பட்ட இடையூறுகளை ஒன்றுவிடாமல் மன்னனிடம் எடுத்துக்கூறி தமக்கு நீதி வழங்குமாறு கேட்டார்.*


*மன்னன் காவலாளிகளை அழைத்து சமணர்களை அழைத்துவர கட்டளையிட்டார். சிறிது நேரத்திற்குள் சமணர்களும் அவ்விடத்திற்கு வந்தனர். சமணர்கள் மன்னரிடம் தண்டியடிகளிடம் தாங்கள் சவால்விட்டு கோபத்துடன் பேசியதை பற்றி கூறினார்கள். பின்பு சமணர்கள் வேந்தரிடம் தண்டியடிகள் பார்வை பலம் பெற்றால் சமணர்களாகிய நாங்கள் இந்த ஊரை விட்டு செல்கிறோம் என்று கூறினார்கள். சமணர்கள் மொழிந்ததைக் கேட்ட வேந்தர் அடிகளாரையும், சமணர்களையும், தமது அமைச்சர்களையும், அவை ஆலோசகர்களையும் கலந்து ஓர் முடிவிற்கு வந்தார்.*


*தண்டியடிகளை நோக்கிய மன்னன் எந்நேரமும் பரம்பொருளான சிவபெருமானை வழிபடும் தவநெறிமிக்கவரே...! தாங்கள் எம்மிடம் உரைத்ததுபோல் எம்பெருமானின் திருவருளினால் கண்பார்வை பெற்று காட்டுவீராக! என்று பயபக்தியுடன் கேட்டார். மன்னர் மொழிந்ததை கேட்டதும் தண்டியடிகள் திருக்குளத்தில் இறங்கினார். மண்ணுற வீழ்ந்து கண்ணுதற் கடவுளை உள்ளக் கண்களால் கண்டு துதித்தார். எல்லாம் உணர்ந்த பரம்பொருளே...! யான் தங்களுக்கு அடிமை என்பதை உலகறியச் செய்ய எனக்கு கண்ணொளி தந்து அருள் காட்டுவீர்களாக... என்று பிரார்த்தித்தார். பின்பு ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் துதித்த வண்ணம் கையிரண்டையும் தலைமீது கூப்பியவாறு அடிகளார் நீரில் மூழ்கினார்.*


*நீரில் மூழ்கிய தண்டியடிகள் இறைவனின் திருவருளால் கண் ஒளி பெற்று எழுந்தார். தண்டியடிகள் கண் ஒளி பெற்றதும் புளகாங்கிதம் மேலிட பூங்கோவில் திருக்கோபுரத்தைக் கண்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தார். இருகரங்களை சிரம்மேல் தூக்கி வணங்கினார். அரசனை வணங்கினார். மன்னன் கரங்குவித்து சிரம் தாழ்த்தி தண்டியடிகளாரை வணங்கினார். அதே வேளையில் சமணர்கள் தங்கள் கண் பார்வையை இழந்தனர். சமணர்கள் அனைவரும் கண் பார்வையின்றி குருடர்களாக நின்று தவித்தனர்.*


*செங்கோல் ஏந்தி நீதி குன்றாமல் ஆட்சிபுரியும் அரசன் அவர்களை நோக்கிய வண்ணம் நீங்கள் கூறியபடி தண்டியடிகள் கண் பார்வை பெற்றால் ஒருவர்கூட இல்லாமல் அனைவரும் சென்று விடுவதாக கூறினீர்கள். அவரும் பார்வை பெற்றுவிட்டார். இனி திருவாரூரில் ஒரு சமணர்கள்கூட இருக்கக்கூடாது என்றுரைத்து அனைத்து சமணர்களும் வெளியேற கட்டளை பிறப்பித்தார். அமைச்சர்களிடம் சமணர்களைத் துரத்த ஏற்பாடு செய்யுங்கள் என்றும் கட்டளையிட்டார். தண்டியடிகள் குளத்தைப் பார்த்து மகிழ்ந்த வண்ணம் பூங்கோவிலை அடைந்து எம்பெருமானைக் கண்குளிர, மனம் குளிர கண்டு களித்தார்.*


*பின்பு தண்டியடிகள் எப்போதும்போல் தாம் செய்து கொண்டிருக்கும் திருப்பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். அரசன் அவருக்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்து கௌரவித்தார். மன்னன் அளித்த பொருளையும், எம்பெருமானின் அருட்பார்வையால் கிடைத்த அருளாலும், தண்டியடிகள் தாம் எண்ணியபடியே திருக்குளத்தை மிகப் பெரிதாகக் கட்டி முடித்தார். அடிகளாரின் அறப்பணியை அரசரும், மக்களும் கொண்டாடி மகிழ்ச்சி கொண்டனர். நீண்ட காலம் இந்த பூவுலகில் வாழ்ந்து நெடுப்புகழ் பெற்று எம்பெருமானின் திருவடியை அடைந்து பேரின்ப நிலையை நாயனார் எய்தினார்.*

Monday 26 December 2022

பட்டுப்போன மரத்தை தளிர்விடச் செய்த சித்தர்கள்

 *பட்டுப்போன மரத்தை தளிர்விடச் செய்த சித்தர்கள்*

   

கொம்மடிக்கோட்டையில் அருள் செய்து வந்த வாலை குருசாமிக்கும், காசியானந்தருக்கும், அவர்களின் சக்தியைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆலயம் அமைத்தனர்.


கொம்மடிக்கோட்டையில் அருள் செய்து வந்த வாலை குருசாமிக்கும், காசியானந்தருக்கும், அவர்களின் சக்தியைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆலயம் அமைத்தனர். 


இந்த ஆலயம் ஆரம்பத்தில் மண்சுவரால் சுற்றுச் சுவர் எழுப்பி, பனை ஓலையால் கூரை வேயப்பட்டதாக இருந்தது. 


சித்தர்கள் அருள் கடாட்சத்தால் பல நன்மைகளைப் பெற்ற பக்தர்களால், நாளடைவில் ஆலயம் வளர்ச்சியடைந்தது.


இந்த ஆலயத்தில் தனியாக குறி சொல்பவர் என்று யாரும் கிடையாது. தனக்கு வேண்டியதைக் கேட்டு வரும் பக்தர்களுக்கு, அங்கு வரும் பக்தர்கள் வாயிலாகவே சில வார்த்தைகள் கேட்கும். 


அதனையே தெய்வ வாக்காக எடுத்துக் கொண்டு செயல்பட்டால், நன்மைகள் விளைவதாக கூறப்படுகிறது. 


அப்படித்தான் ஒரு முறை ஒருவர் மூலமாக வாலாம்பிகை அன்னை, ஆலயத்தின் வளர்ச்சியை உணர்த்தினார்.


‘இவ்விடம் வளரும் திருச்செந்தூராக விளங்கும். கருங்கல்லிலே கற்பக் கிரகம் கட்டப்படும். 


தொடர்ந்து பல மண்டபங்கள் எழுப்பப்படும். கொடிமரம் உருவாகும். வருடத்துக்கு இரண்டுமுறை கொடி ஏறும். கோபுர வாசல் முன்பே, தெப்பம் தோன்றும்’ என்றார். 


அந்த அருள் வாக்கு பலித்தது. தற்போது அன்னை கூறியபடியே இக்கோவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.


ஞானியார்கள் விரும்புவது அன்பு, நீதி, தர்மம் நேர்மை மட்டுமே.. இது மகான்களின் தியான பூமி. உணர்வு பூர்வமாக வழிபட்டால், மகான் களின் ஆசி உண்டு. 


இங்கு வந்து வணங்கி நின்றால் அனைத்து செயலும் வடிவம் பெறும். குருவின் தரிசனமும், ஸ்ரீவாலாம்பிகையின் தரிசனமும் ஒரே இடத்தில் கிடைப்பது அற்புதத்திலும் அற் புதம்.


அன்பர்களுக்கெல்லாம் இருபெரும் ஞானிகளை குருவாக தந்து, அவர்கள் அருகிலே தானும் அமர்ந்து அருள்பாலிப்பது ஸ்ரீ வாலையின் லீலா வினோதம். 


எனவேதான் இந்த ஆலயத்தில் பக்தியோடு பூஜிப்பவர்களுக்கு கேட்டவரமும், தியானம் செய்பவர்களுக்கு ஞானமும் கைகூடுகிறது. 


அமைதியாய் வந்து அன்னை சன்னிதானத்திலும், குரு சிஷ்யர்கள் பீடம் முன்பும் அமர்ந்து வணங்கி நின்றால் வேண்டும் வரம் கிடக்கிறது. 


சாதி மதம் கடந்து இவ்வாலயத்தில் வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.


இந்த நவீன யுகத்தில் பல அற்புதங்கள் இந்த பீடத்தில் நடை பெறுகிறது என்பதற்கு பல சாட்சிகள் உள்ளன. அதில் ஒன்று பட்டமரம் தளிர்ந்த வரலாறு.


கோவிலின் தல விருட்சம் மஞ்சணத்தி மரம். இந்த மஞ்சணத்தி மரத்தின் அடியில்தான் வாலை குருசாமியும், காசியானந்தரும் வாலையம்பிகைக்கு பூஜை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 


இம்மரத்தின் அடியில் உச்சிஷ்ட கணபதி காட்சி தரு கிறார். சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வரை கோவிலின் பழமையை பறைசாற்றும் விதமாக இந்த மரம் விளங்கியது. திடீரென ஒரு நாள் மஞ்சணத்தி மரம் பட்டுப்போனது.


பக்தர்கள் அனைவரும் அதிர்ந்து போய் விட்டனர். என்ன செய்வது? எனத் தெரியாமல் தவித்தனர். 


‘புதிய மஞ்சணத்தி மரக்கன்றை நட்டு வளர்க்கலாம்’ என்று ஊர் மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான், ‘பட்டமரம் துளிர்க்கும்’ என்ற உத்தரவு கிடைத்தது. 


அதன்படியே பட்டுப்போன மஞ்சணத்தி மரத்தின் நடுவில் தளிர் விட்டது. அந்த புதிய தளிர் செடிதான் வளர்ந்து, தற்போது தல விருட்சமாக காணப்படுகிறது. 


பழைய மரம் கோவில் வளாகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. புதிய மரத்தடியில் உச்சிஷ்ட கணபதி அருளாசி தருகிறார்.


பக்தர் ஒருவர் சுவாமிக்கு பொருள் கொடுப்பதாக நினைத்து, அதை தனது வீட்டின் பீரோவில் வைத்து விட்டார். 


சில நாட்களில் அதை முற்றிலுமாக மறந்து விட்டார். ஒரு நாள் அவர் கோவில் சன்னிதானத்தில் நின்று வணங்கிய போது ‘எனக்குரிய பொருள் உன் வீட்டு பீரோலில் உள்ளது' என சுவாமி உணர்த்தினார். 


அதன் பிறகே அவருக்கு நினைவு வந்தது. உடனே சென்று அந்த பொருளை எடுத்து வந்து கோவிலில் ஒப் படைத்தார். 


இதுபோலவே பல நிகழ்வுகள் பக்தர்கள் வாழ்வில் நடந்தேறி இருக்கிறது.


சித்தர் பெருமக்களை நம்பி வருவோருக்கு வேண்டும் வரம் கிடைக்கிறது. ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. 


இன்றும் பலர் இந்த ஆலயத்திற்கு வந்து, தொழில் தொடங்குவது, அரசு வேலை தேடுவது போன்ற காரியங்களுக்கு குரு - சிஷ்யர்களின் உத்தரவை வேண்டி நிற் கிறார்கள்.


இந்த ஆலயத்தில் எப்போது சென்றாலும் அன்னதானம் நடந்து கொண்டே இருக்கிறது. 


அன்னதானம் சாப்பிடும் போது பக்தர்கள் தங்களுக்கு என்ன பிரார்த்தனை உள்ளதோ அதை வேண்டி சாப்பிட அது உடனே கைகூடுகிறது.


*ஆலய அமைப்பு*


முதலில் கொம்மடிக்கோட்டை அரசு பள்ளியில் இருந்து நேர் எதிரே உள்ள சாலையில் செல்லும்போது அங்கே பாலா சேத்திரம் உள்ளது. 


நுழைவு வாசல் வழியாக உள்ளே நுழைந்தால், இடது புறம் அகத்திய பெருமான் அருளாசி தருகிறார். எதிரே ஆலய முகப்பு நம்மை வரவேற்கிறது.


வலது புறம் திரும்பினால் கல் மண்டபம் பிரமாண்டமாக காட்சியளிக்க, உள்ளே குருவும் சிஷ்யரும் ஒரு கருவறையில் அமர்ந்து நமக்கு அருள்பாலிக்கிறார்கள். வாலை குருசாமிக்கு எதிரே கொடிமரத்தடியில் நந்திகேஸ்வரப் பெருமான் காட்சியளிக்கிறார்.


குரு - சீடர் சன்னிதிக்கு வலப்புறம் சந்திரசேகரர் சமேத மனோன்மணி அம்பாள் சன்னிதி உள்ளது. 


‘மனோன்மணி’ என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. ‘மன இருளை அழித்து ஞான நிலைக்கு அழைத்துச் செல்பவள்’ என்பது இதன் பொருள். 


பின்புறம், சுற்றுப் பிரகாரத்தில் கன்னி விநாயகரும், பாலமுருகனும், சண்டிகேஸ்வரரும், இடப்புறத்தில் தெற்குநோக்கி நடராஜர் - சிவகாமி அம்பாளும் அருள்பாலிக்கின்றனர்.


தனிச்சன்னிதியில் தனி விமானத்துடன் பாலாம்பிகை வீற்றிருக்கிறார். அதற்கு வலப்புறம் வராகி அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. 


வெளிப் பிரகாரத்தில் கொடி மரத்துக்கு அருகில் வட கிழக்கு மூலையில் சொர்ண ஆகர்ஷண பைரவர் அருள்கிறார். 


ஆலயத்தின் பின்புறம் திருமாத்திரை தயாரிக்கும் கூடம் உள்ளது. மூலிகையை அம்மியில் அரைத்து மாத்திரைகள் உருவாக்கப்படுகிறது. 


இந்த திருமாத்திரையை 41 நாள் சாப்பிட்டு வந்தால், தீராத வியாதிகள் கூட நீங்கும் என்பது நம்பிக்கை.


வருடம்தோறும் சித்திரை, ஆவணி மாதங்களில் 11 நாள் திருவிழா கோலாகலமாக நடைபெறுகின்றது. 


ஐப்பசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சந்திரசேகரர் - மனோன்மணி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 


திருமணம் தடை ஏற்படு பவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தடை நீங்கி செல் கிறார்கள். 


இரவு சீர் கொண்டு செல்லுதல், அம்மி மிதித்தல், தேங்காய் உருட்டுதல், நலுங்கு வைத்தல் போன்ற சடங்குகள் நடைபெறும். தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் திருத்தேரில் எழுந்தருளி, பவனி வருகிறார்கள்.


அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜையும், மதியம் அன்னதானமும் நடைபெறுகிறது. 


பவுர்ணமி அன்று மாலை வாலாம்பிகை அம்பாள் ஊஞ்சலில் எழுந்தருள்வார். அப்போது லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், தொடர்ந்து திருவிளக்கு பூஜையும் நடைபெறும். 


*ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கும், ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமியில் வராகி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன*


மாதம் இரு பிரதோஷமும், உச்சிஷ்ட கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தியும் சிறப்பாக நடைபெறுகிறது.


வாலைகுருசாமிக்கும், காசியானந்தா சுவாமிக்கும் வெள்ளை நிற வஸ்திரம் சாத்தி, வில்வமாலை அணிவித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் வெற்றிபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 


வாலாம்பிகைக்குச் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி, செவ்வரளி மாலை அணிவித்து, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். 


நாகருக்கு மஞ்சள் பொடி சாத்தி வர கடன் தொல்லை விலகுகிறது.


சித்தர்கள் அனைவரும் குரு முகமாக தீட்சை பெற்றே, வாலை அம்மனை அடைந்தனர். 


அதேபோல, வாலைகுருசாமி, அவரது சீடர் காசியானந்தர் இருவரையும் முழுமையாக வணங்கிய பின்னரே, வாலையம்மனை வழிபட வேண்டும். அப்போதுதான் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


*சிறுவர்கள் மீது விழுந்த பனைமரம்*


சுமார் 70 வருடங்களுக்கு முன்பு இங்கு நடைபெற்ற ஒரு சம்பவம் ஆலயத்திற்கு மேலும் புகழ் சேர்க்கிறது.


வாலை குருசாமியின் வருஷாபிஷேக பூஜையின் இரண்டாவது நாள், அங்கிருந்த பனைமரத்தின் அடியில் ஆறு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். 


அப்போது திடீரென வீசிய சூறைக் காற்றில், பனைமரத்தின் மட்டைக் கிளைகளுடன் கூடிய மேல்பகுதி ஒடிந்து விழுந்தது. 


மரத்தினடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது அந்த மட்டை கிளை விழுந்து, அவர்களை மூடி விட்டது. 


அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ‘என்ன ஆயிற்றோ’ என்ற அச்சத்துடன், அனைவரும் ஓடி வந்து மட்டைகளை அப்புறப் படுத்த, அதன் அடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆறு சிறுவர்களும் சிறு காயம் கூட இல்லாமல் சிரித்தபடியே வெளியே வந்தனர். 


இந்த சிறுவர்களின் ஒருவர் 84 வயது பெரியவராக, அந்த சம்பவத்திற்கு சாட்சியம் கூறியபடி இன்றும் அந்த ஊரில் வலம் வருகிறார். 


*அமைவிடம்*


திசையன்விளையில் இருந்து உடன்குடி செல்லும் சாலையில் இருந்தும், சாத்தான்குளம் மற்றும் உடன்குடியில் இருந்தும் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கொம்மடிக்கோட்டை. உடன்குடி, சாத்தான்குளத்தில் இருந்து பஸ்வசதிகள் உள்ளன.

மதுரகாளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தொட்டியம் எனும் ஊரில் அமைந்துள்ளது

 #தினம்_ஒரு_ஆலயம் 


#தொட்டியம்_மதுரை_காளியம்மன்_ஆலயம்


 

மதுரை காளியம்மன் கோயில் அல்லது மதுரகாளியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தொட்டியம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மூலவராக மதுரகாளியம்மன் உள்ளார். 


தல வரலாறு :

மதுரை மாநகரில் வீற்றிருந்த மகாகாளி தொட்டியத்திலிருந்து பறை இசைக்க சென்ற இருவரின் இசையில் மயங்கி, தொட்டியம் சங்கம்  புதரில் வந்து அமர்ந்தாள், அப்போது எசங்கராயண் பட்டியில் இருந்த மாடுகள் மேய்ந்து விட்டு பால்  கொடுக்கும் நேரத்தில் சங்கம் புதருக்கு சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தது.  இதனை  அறியாத ஊர் மக்கள் மாட்டில் பால் கறந்தால் பால் வருவதில்லை.  எனவே சங்கம் புதரில்  கள்வர்கள் யாரோ  பாலை கறந்து விடுகிறார்கள் என்று  இசங்கராய அரசனிடம் முறையிட்டனர்.


அரசன் தன் படை வீரர்களுடன் சங்கம் புதர் சென்று கள்வனை தேடினார். அரசன் புதருக்குள் வாளை சொருகினான்.  சற்று நேரத்தில் புதரிலிருந்து ரத்தம் பீரிட்டது.  உடனே மன்னன் அதிர்ந்து  போனான்.  அவன் முன் ஸ்ரீ மதுரைகாளியம்மன் தோன்றினாள் (இன்றும் கருவறையில் உள்ள மதுரைகாளியம்மன் மேனியில் இக்காயத்தின் வடு உள்ளது).  மனம் உருகி மன்னிக்கும்படி வேண்டி,  தாயே உனக்கு என்ன வேண்டும்? ஏன் இப்படி அமர்ந்து இருக்கிறாய்? என்று மன்னன் கேட்டான். 


மதுரைகாளியம்மன் அரசனுடைய பட்டியிலிருந்து ஒரு மாட்டை காட்டி இந்த மாடு எங்கெல்லாம் சென்று சுற்றி வருகிறதோ?  அதெல்லாம் எனக்கு சொந்தம், அதுவே எனது எல்லை  என்று மதுரைகாளியம்மன் கூறினாள்.  மாடு பதினெட்டு பட்டி கிராமம் சுற்றி வந்து புதரில் நின்றது.  18  பட்டி மக்களும் என் பிள்ளைகள் என் அருள்பெற ஒரு அழகான கோவிலை அமைத்து என்னை வழிபட வகை செய்வாயாக என்று கூறி ஸ்ரீ மதுரைகாளியம்மன் மறைந்தாள். அம்மனின் வாக்கை  கனிவுடன் ஏற்ற அரசன் உடனே “தொட்டியம் ஸ்ரீ மதுரைகாளியம்மன் திருக்கோவிலை” கட்டினார்.


 

கோவிலின் மூன்று நிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால், விநாயகர், அழகு நாச்சியம்மன், மாரியம்மன், மதுரை வீரன், கருப்பண்ணசாமி, காத்தவராயன் சன்னிதிகள் உள்ளன. 


கருவறையில் அன்னை தொட்டியம் மதுரகாளியம்மன் ஒய்யாரமாக வலது காலை குத்துக்காலிட்டு, இடதுகாலை தொங்க விட்ட நிலையில் வலது கரத்தில் திரிசூலம் ஏந்தி அழகிய எழிற்கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.


குதிரை மீது அமர்ந்த நிலையில் மன்னன் இசங்கராயன் சிலை, மதுரை செல்லான், தொட்டியம் சின்னான் சிலை சூழ கருவறை அமைந்துள்ளது.

 


தலச்சிறப்பு : 


மதுரை காளியம்மன் கோவில் பங்குனித் “தேர்த் திருவிழா” காப்புகட்டுதல் மற்றும் பூச்சொரிதலுடன் தொடங்கும்.  ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழாவை முன்னிட்டு அம்மன் கோவில் (உட்பிரகாரம், அம்மன் சன்னதி மட்டும்) ஒருவாரம் அடைக்கப்பட்டிருக்கும்.  அப்படி  அடைக்கப்படும் அம்மன் கருவறையில் இரண்டு பெரிய பானைகளில் நெய் ஊற்றி எட்டு  வேட்டியால் ஆன இரண்டு பெரிய திரிகள் தயாரிக்கப்பட்டு விளக்கு ஏற்றப்படும்.  இதை தொடர்ந்து  அடைத்த கோயிலுக்கு ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து, மதுரை காளியம்மன் கோயில்  முன்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்படும். முக்கிய நிகழ்ச்சியான சுமார் முப்பதடி உயரம் உள்ள  ஓலை பிடாரி அம்மன், சுமார் இருபத்து ஒன்பது அடி உயரமுள்ள சின்ன தேர் மதுரைகாளியம்மன்,  திருத்தேர் தலை அலங்காரமும், அதன் பின் இரண்டு தேர்த்தூக்கும் நிகழ்ச்சி மூலம் அம்மன்  திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள்.


தமிழகத்திலேயே தோளால் தூக்கிச் செல்லப்படும் மிக உயரமான தேர் இதுவாகத் தான் இருக்கும். இரண்டு தேரும் ஒரே நேரத்தில் வீதிவலம் வருவதால், சுமார் 300பேர் ஒவ்வொரு தேரையும் சுமந்து செல்கின்றனர். இவ்விரு தேர்களையும் பக்தர்கள் தங்கள் தலையிலும், தோளிலும் சுமந்து திருவீதி உலா வருவார்கள். 


இந்த இரு தேர்களையும் தூக்குவதற்காகவே கவுத்தரசநல்லூர், சித்தூர், அரங்கூர், கிளிஞ்சநத்தம், அயினாப்பட்டி, ஏரிகுளம், பாலசமுத்திரம், தொட்டியம் கோட்டமேடு, சந்தப்பேட்டை, கொசவம்பட்டி, காமலாபுரம்புதர், தோளூர்பட்டி, ஏலூர்பட்டி, குண்டுமனிப்பட்டி, மாராச்சிப்பட்டி, உடையாளம்புத்தூர், நத்தம், புத்தூர், கார்த்திகைப்பட்டி என 18 பட்டி கிராம மக்கள் திருவிழாவில் ஒன்று கூடுகின்றனர். சிறிய தேரில் மதுர காளி அம்மனும், பெரிய தேரில் ஓலைப்பிடாரிகளும் எழுந்தருளி வீதிகளில் வலம் வருவர்.


இத்தலத்தில் ஆண்டு தோறும் "ஆனித் திருமஞ்சனவிழா" வெகு விமரிசையாக நடைபெறும். திருமஞ்சனவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொட்டியம் காவிரி  ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம், சந்தனக்குடம், அக்னி சட்டி எடுத்து அலகு குத்தி  மதுரைகாளியம்மனுக்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர்.


தேர்த் திருவிழா:


ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் கடைசி செவ்வாய் அன்று திருவிழா தொடங்கி, சித்திரை மாதம் முதல் செவ்வாய் வரை விழா நடைபெறும். இதில் பங்குனி முதல் செவ்வாய் அன்று பூச்சொரிதல் நிகழ்ச்சியும், 2–ம் செவ்வாய் அன்று காப்புகட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்று, அன்று இரவு முதல் அடுத்த செவ்வாய் காலை வரை தொடர்ந்து 8 நாட்கள் ஆலய நடை அடைக்கப்படும். காப்பு கட்டி நடை சாத்தப்பட்ட மறுநாள் ஆயிரம் பானையில் பொங்கல் வைத்து பூஜை நடைபெறும். 


பங்குனி 3–ம் செவ்வாய் அன்று நடை திறக்கப்பட்டு தொடர்ந்து 8 நாட்கள் இரவு, பகலாக நடை திறந்திருக்கும். திருத்தேர் தலையலங்காரம் இரவு முழுவதும் நடைபெற்று, 30 அடி தேரில் ஓலை பிடாரி அம்மனும், 29 அடி தேரில் மதுரைக் காளியம்மனும் எழுந்தருள்வார்கள். இவ்விரு தேர்களையும் பக்தர்கள் தங்கள் தலையிலும், தோளிலும் சுமந்து திருவீதி உலா வருவார்கள்


                  


 பிரார்த்தனை: 


அம்மனுக்கு தொடர்ந்து 9 அமாவாசை நாட்களில் சந்தனாதி தைலம் அபிஷேகித்து, எலுமிச்சை பழ தீபமேற்றி, 9 உதிரி எலுமிச்சைப் பழங்களை சமர்ப்பித்து வழிபட்டு வந்தால் வியாபாரத்தில் மிகுந்த லாபம், திருமண யோகம், கல்வியில் சிறப்பு உள்ளிட்ட சகல நற்பேறுகளும் கிட்டும்.   


தல மரமான வன்னி மரத்தில் அமாவாசை நாளில் தொட்டில் கட்டி, தொடர்ந்து 11 அமாவாசை நாட்களில் அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கி வந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். காளியம்மனுக்கு காவேரி நீரால் அபிஷேகம் செய்வது விசேஷம். 


நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல்  முதல் இரவு 9.00  வரை.


திருவிழாக்கள் : பங்குனித் தேர்த்திருவிழா, ஆனித் திருமஞ்சன விழா,

மா இலைகளை வீட்டு வாசலில் கட்டி வைக்க நமது கலாச்சாரம் தூண்டும் காரணம்

 மா இலைகளை வெட்டிய பிறகு குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஆக்ஸிஜனை வெளியிடுவது தொடர்கிறது. அதனால்தான், எல்லா விழாக்களிலும், விழாக்களிலும் காற்றை புதியதாக வைத்திருக்க அவை பயன்படுத்தப்படுகின்றன, குறிப்பாக மக்கள் அதிகமாக இருக்கும்போது.


மா இலைகளை வீட்டு வாசலில் கட்டி வைக்க நமது கலாச்சாரம் தூண்டும் காரணம்..... இந்த காணொளியில் மா இலையை ஆய்வகத்தில் வெட்டி நுண்ணோக்கியில் வைத்து..... இலையில் இருந்து வெளிவரும் குமிழ்கள் ஆக்ஸிஜன்.. ... நமது ரிஷிகள் இந்த பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து அதை நம் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக்கினர்.



Sunday 25 December 2022

திருவிடந்தை நித்யகல்யாணப்பெருமாள் கோவில்

 🙏


╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝



🔘 ⪢┈ᗘSMMᗛ┈⪡ 🔘



திருவிடந்தை நித்யகல்யாணப்பெருமாள் கோவில் 


தன்னை வழிபடுபவர்களின் அனைத்து துன்பங்களையும் போக்குபவர் நாராயணனாகிய மகாவிஷ்ணு. அப்படியான மகாவிஷ்ணுவிற்கு நமது நாட்டில் பல கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு விதத்தில் சேவை சாதிக்கிறார் திருமால். அப்படி ஆண்டு முழுவதும் “கல்யாண” கோலத்தில் காட்சி தரும் “திருவிடந்தை ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள்” கோவிலின் சிறப்புகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.




திருவிடந்தை கோவில் தல வரலாறு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் திருவிடந்தை கோவில் என கூறப்படுகிறது. காஞ்சியை தலைநகராக கொண்டு ஆண்ட பல்லவ மன்னர்களாலும், சோழ மன்னர்களாலும் இக்கோவில் நன்கு பராமரிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் ஒரு சில கோவில்களில் திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோவிலும் ஒன்று. 108 திவ்ய தேசங்களில் ஒன்று இந்த திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோவில். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யபட்ட புண்ணிய ஷேத்திரம்.


இக்கோவிலின் இறைவனான திருமால் நித்யகல்யாண பெருமாள், லட்சுமி வராக பெருமாள் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இறைவியாக கோமளவல்லி தாயார் இருக்கிறார். புன்னை மரம் இக்கோவிலின் தல விருட்சமாக இருக்கிறது. புராணங்களின் படி “குனி” என்ற முனிவரும், அவரது மகளும் சொர்க்கம் செல்ல முயன்ற போது அவர்களை சந்தித்த நாரதர் குனி முனிவரின் மகளுக்கு திருமணம் ஆகாததால் அவளால் சொர்க்கத்தில் நுழைய முடியாது என கூறினார். மேலும் தேவலோகத்திலுள்ள முனிவர்கள் யாரேனும் குனி முனிவரின் மகளை திருமன்னம் செய்துகொண்டு அவர்கள் இருவரும் சொர்க்க லோகத்தில் வாழ உதவுமாறு அனைத்து முனிவர்களிடமும் வேண்டினார் நாரதர்.




“காலவரிஷி” என்பவர் குனி முனிவரின் மகளை திருமணம் செய்து 360 பெண்குழந்தைகளை பெற்றார். அவர்கள் அனைவரையும் நாராயணனாகிய திருமாலுக்கே திருமணம் செய்விக்க விரும்பி நெடுங்காலமாக தவமிருந்தார் ஆனாலும் திருமாலின் காட்சி கிடைக்கவில்லை. ஒரு நாள் காலவரிஷி தங்கியிருந்த குடிலுக்கு ஒரு இளைஞர் வந்தார். தான் தீர்த்த யாத்திரை மேற்கொண்டிருப்பதாக கூறி, காலவரிஷியிடம் சில உதவிகளை கேட்டான் அந்த இளைஞன். இளைஞனின் முகத்தில் இருந்த தெய்வீக தேஜஸை கண்ட ரிஷி, தனது 360 பெண்களையும் அந்த இளைஞனுக்கு திருமணம் செய்து வைக்க தனது விருப்பத்தை தெரிவித்தார். இளைஞனும் அதற்கு ஒப்புக்கொண்டு தினம் ஒரு பெண் வீதம் 360 நாட்களில் 360 பெண்களை திருமணம் செய்து கொண்டார். 360 ஆம் நாள் இறுதியில் இளைஞன் வடிவில் வந்த திருமால் தனது வராகமூர்த்தி அவதாரத்தில் காலவரிஷிக்கு காட்சி தந்தார். எப்போதும் திருமண கோலத்திலேயே இருந்ததால் இவருக்கு “நித்யகல்யாண பெருமாள்” என்ற பெயர் ஏற்பட்டது.




360 பெண்களையும் ஒரே பெண்ணாக மாற்றி தனது இடது புறத்தில் நிறுத்தி அனைவருக்கும் காட்சி தந்தார். திரு என்ற மகாலட்சுமி தேவியை தன் இடது பக்கத்தில் வைத்து சேவை சாதித்ததால் இந்த தளம் “திருவிடவெந்தை” என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் திருவிடந்தை என்ற பெயர் ஏற்பட்டது. பலி எனும் அரக்க குல அரசன் தனது “பிரம்மஹத்தி” தோஷத்தை இத்தல பெருமாளை வழிபட்டு போக்கி கொண்டான்.


திருவிடந்தை தல சிறப்பு


இக்கோவிலின் இறைவனாகிய பெருமாள் எப்போதும் கல்யாண கோலத்திலேயே இருப்பதால், திருமணம் காலதாமதம் ஆகிற ஆண்கள், பெண்கள் இக்கோவிலில் வந்து வழிபட்டு பூஜைகள், பரிகாரங்கள் மேற்கொண்டு பெருமாளுக்கும் தாயாருக்கும் செய்யப்படும் திருக்கல்யாண உற்சவத்தை தரிசித்து வழிபட வெகு சீக்கிரத்திலேயே திருமணம் கோலத்தை தன்னை வழிபடும் திருமணம் ஆகா இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு திருமண பிராப்தியை அளிக்கிறார் என்பது இங்கு வந்து வழிபட்டு அனுபவம் பெற்ற பக்தர்களின் வாக்காக இருக்கிறது.




குழந்தை பேறு, பொருளாதார நிலை உயரவும் பக்தர்கள் இங்கு வந்து வேண்டிகொள்கின்றனர். இந்த திருவிடந்தை பெருமாள் கோவிலில் மட்டும் தான் ஓர் ஆண்டில் 365 நாட்களும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கோவில் அமைவிடம்:


அருள்மிகு ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோவில் சென்னை – புதுச்சேரி சாலையில், கோவளம் அருகே திருவிடந்தை என்ற ஊரில் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்கு செல்ல சென்னையிலிருந்து ஏராளமான புறநகர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வாடகை வண்டி சேவைகளும் கிடைக்கின்றன.


கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:


காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை. மாலை 3 மணி முதல் இரவு 8 மணிவரை நாடி திறந்திருக்கும்.


கோவில் முகவரி:


அருள்மிகு ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோவில்

திருவிடந்தை

காஞ்சிபுரம் மாவட்டம் – 603 112


தொலைபேசி எண்


44 – 27472235


ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.


*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.


தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.


ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.

பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.

நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.

மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.


தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏


Agathiyar Temple JeevaNadi

Tiruppur, Tamil Nadu

093843 95583


கூகிள் வரைபடம் வழி கீழே 👇


https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in


முகநூல் -


https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

திருக்கோடீஸ்வரர்திருக்கோயில்

 #ஆலயம்அறிவோம்

🚩


🔥 *பகிர்வு*🔥


     *அன்பேசிவம் 🔥*


     ★━━━━━━ *SMM*━━━━━━★                  


#திருக்கோடீஸ்வரர்திருக்கோயில் 


 #தலவரலாறு

 

 இறைவன்


கோடிஸ்வரர்


இறைவிதிருப்பெயர் 


 வடிவாம்பிகை, திரிபுரசுந்தரி


தல மரம் : பிர தீர்த்தம், காவிரிநதி

வழிபட்டோர் : துர்வாச மகரிஷி,பிருங்கி முனிவர் ,ஆழ்வார்கள்,ஹரதத்தர்,யமதர்மராஜன்,மூன்று கோடி மந்திரதேவதைகள்,

ஸ்ரீ நாராயணண்,மூன்று கோடி தேவர்கள், செம்பியன் மாதேவியார்

தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்


தல வரலாறு:

சிவனின் தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் இது 37வது தலம்


ஒரு சமயம் கைலாசத்தையும், திருகோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது, இத்தலம் உயர்ந்து, கைலாசம் கீழே போய்விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட தலம் இது என்று சிவபெருமானால் சிலாகித்து கூறப்பட்ட தலம்.


திருகோடிக்கா என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும், அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் சிவபெருமான் கட்டளையிடுகிறார்.


காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது. இன்றுவரை இவ்வூரில் மயானம் தனியாக இல்லை இங்கு இறப்பவர்களுக்கு அமைதியான மரணம் தான் நிகழ்கின்றது, துர் மரணங்கள் இல்லை, இங்கு இறப்பவர்களை இன்றுவரை பக்கத்து ஊரில் தான் அடக்கம் செய்கிறார்கள்.


எமனின் கை மற்றும் கால்கள் விலங்கால் கட்டப்பட்டுள்ளது.


இத்தலத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கின்ற பெருமையுடைய தலம்.


சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்ற தலம்.


அதேபோல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ள தலம்.


தலத்தின் தீர்த்தமான் காவேரி நதி உத்திரவாஹினியாக தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது. கார்த்திகை மாதம், ஞாயிறு அன்று விடியற்காலையில் இத்தலத்தில் காவிரியில் நீராடினால், எல்லா பாவங்களும் தொலைந்துவிடும் என்பது ஐதீகம்.


இத்தலத்தில் உள்ள சனிபகவான் பாலசனி என்று அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது.


கண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன்மாதேவியாரின் ஆனைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கற்றளியாக திரும்பக் கட்டப்பட்ட சிறப்பையுடைய தலம்.


மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக மந்தரங்களை உச்சரித்து சாப விமோசனம் பெற்ற தலம்.


மந்திரங்கள் தவறான கொள்கைக்கு பயன்படுத்தப் பட்டதால் மந்திரங்கள் மீதே கோபப்பட்ட துர்வாசர் மந்திரத்திற்கு சாபம் கொடுத்தார். மூன்று கோடி மந்திரங்கஇத்தலத்திற்குளும் சாப விமோசனம் பெற கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக உச்சிக்கப்பட்டு சாபவிமோசனம் பெற்றன.


அதேபோல் மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை செய்துள்ளனர். எனவே இத்தல இறைவனின் திருநாமம் "கோடீஸ்வரர்' என்றும், ஊர் "திருக்கோடிக்கா' அழைக்கப்பட்டது.


திரிகோடி மந்திரங்களுக்கு சாயுஜ்ய முக்தி கிடைத்தல் இத்தலத்தின் மகிமையை விளக்கும் வரலாறு " ஆதிசைவ ருத்ரகோடி ஸம்ஹிந்தை' என்ற சிவபுராணத்தில் சாயுஜ்ய காண்டத்தில், முப்பத்தி மூன்று அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. நைமிசாரணியத்தில், சனகாதி முனிவர்களுக்கு, சூத பௌராணிகர் நிகழ்ச்சிகளை விவரிப்பதாக அமைந்துள்ளது. அதைச் சுருக்கமாகக் காண்போம்.


க்ரத யுகத்தில், பன்னீராயிரம் ரிஷிகளும் (வாலகில்ய மற்றும் வைகானஸ் முனிவர்கள்), மூன்று கோடி மந்திர தேவதைகளும், "சாயுஜ்' முக்தி (ஞானமுக்தி) அடையும் பொருட்டு, வேங்கடகிரியில், திருவேங்கடமுடையான் (வெங்கடேசப் பெருமாள்) திருச்சன்னதியில், மந்திரங்களைக் கோஷித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் அங்குவந்த "துர்வாச மகரிஷி' இவர்களின் நோக்கத்தை அறிந்து, பரிகசித்தார். பின் அவர்களைப் பார்த்து ""சாயுஜ்ய முக்தியை தவத்தாலோ அல்லது மந்திர சக்தியாலோ பெற முடியாது. ஞானத்தால் மட்டும் தான் பெறமுடியும் குருவிற்கு பணிவிடை செய்து, அவரது ஆசியைப் பெற்ற அத்யாத்ம வித்தையைப் பயின்று, பிரம்ம ஞானம் பெற்று, பின் பரமேஸ்வரனின் அனுக்கிரஹத்தால் மட்டும் தான் "ஞானமுக்தி' பெற முடியும் என்று கூறினார்.


இதைக் கேட்ட மந்திர தேவதைகளுக்கு கடும் கோபம் வந்தது. தங்கள் வலிமையைப்பழித்த துர்வாசரைத் தூற்றினர். ""முக்தியடைய எங்களுக்கு சக்தியில்லை என்கிறீர்களா? வெங்கடாஜலபதியை குறித்து தவம் செய்து, இக்கணமே தாங்கள் முக்தியடையவோம்'' என்று சூளுரைத்தனர். தம்மையும் பிரம்ம வித்தையையும் அவமதித்த மந்திர தேவதைகளை நீங்கள் பலப்பல ஜென்மங்கள் எடுத்து துன்பப்பட்டு இறுதியில்தான் முக்தி பெறுவீர்கள். அதுவும் இந்த ஷேத்திரத்தில் கிடைக்காது.


வெங்கடேசப் பெருமாளும் அதை உங்களுக்கு அளிக்க முடியாது. என்று துர்வாசர் சபித்தார். துர்வாசருடைய கோபத்தைப் பொருட்படுத்தாத மந்திர தேவதைகள், தாங்கள் சபதம் செய்ததுபோல், திருமயிலையிலேயே தங்கி புஷ்கரணியில் ஸ்ரீ நாராயணனைத் குறித்து கடும் தவம் புரியத் தொடங்கினர். ஆனால் பன்னீராயிரம் ரிஷிகள், துர்வாசருடைய அறிவுரையை ஏற்று, அவரைப் பின் தொடர்ந்து காசிக்குச் சென்றனர். அங்கு மணிகர்ணிகையில் நீராடி, டுண்டிகணபதி, விஸ்வேஸ்வரர், விசாலாட்சி, பிந்துமாதவர் மற்றும் காலபைரவரை தரிசனம் செய்தனர். மகரிஷிகளுக்கு எதை உபதேசம் செய்வது என்று துர்வாசர் சிந்தித்துக் கொண்டிருக்கும் சமயம், ஸ்ரீ விஸ்வநாதரான வேத்ரவனேஸ்வரர் (திருக்கோடீஸ்வரர்) அவரது கனவில் தோன்றி, மகரிஷிகளுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து "அத்யாத்ம' வித்தையை கற்றுத் தரும்படியும், ஒரு மாதம் காசியில் தங்கிவிட்டு பின் மகரிஷிகளுடன் வேத்ரவனத்திற்கு (திருக்கோடிக்கா) வரும்படியும் கட்டளையிடுகிறார்.


அவ்வாறே துர்வாசர் திருக்கோடிக்கா தலத்திற்கு வந்து சேர்ந்தார். பின் திருக்கோடீஸ்வரரின் ஆனைப்படி, மகரிஷிகளுக்கு சிருங்கோத்பவ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்து, அத்தீர்த்தத்தை சிறிது கையில் எடுத்துக்கொண்டு, அவர்களுடன் முக்கோடி மந்திரமந்திரதேவதைகள் கடுந்தவம் புரியும் இடமான திருமயிலைக்கு வந்தார்.


அப்போது ஸ்ரீதிருக்கோடீஸ்வரர், அம்பாள் திரிபுரசுந்தரி மற்றும் இரு புத்திரர்கள், பரிவாரங்களுடன் வந்து திவ்யதரிசனம் கொடுத்தார். ஸ்வாமியின் முன்னிலையில் துர்வாசர் தன் கையில் கொண்டு வந்திருந்த, சிருங்கோத்பவ தீர்த்தத்தை, பன்னீராயிரம் ரிஷிகளுக்கும் தலையில் தெளிக்க, அப்போது ஓர் ஜோதி தோன்றி முனிவர்கள் யாவரும் அதில் ஐக்கியமானர்கள். அவர்களுக்கு ஞான முக்தி கிட்டிவிட்டது.


இதைக் கண்ணுற்ற மந்திரதேவதைகள், துர்வாசரைப் பார்த்து, ""உங்கள் முயற்சியாலோ, பரமேஸ்வரனின் அருளாலோ மகரிஷிகளுக்கு ஞானமுக்தி கிடைக்கவில்லை. அவர்களுடைய பூர்வ ஜென்ம கர்மபலன்களால் தான் அது கிட்டியது. நாங்கள் எப்படியாவது, ஸ்ரீ நாராயணனிடமிருந்தே சாயுஜ்ய முக்தியை பெருவோம் பாருங்கள்'' என்று சூளுரைத்தார்கள். மந்திரதேவதைகளின் கர்வம் இன்னும் அடங்கவில்லை என்பதைக் கண்ணுற்ற துர்வாசர் மிக்க கோபம் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.


சுவாமி புஷ்கரணியின் கரையில் தவமிருந்த திரிகோடி மந்திரதேவதைகளுக்கு பல இடையூறுகள் ஏற்படவே, அவை அங்கிருந்து புறப்பட்டு பத்ரிகாச்சரம், நைமிசாரணியம், துவாரகை, கோஷ்டிபுரம் முதலிய வைணவ தலங்களுக்குச் சென்று தங்கள் தவத்தைத் தொடர்ந்தனர். ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் முன் ஸ்ரீ நாராயணன் தோன்றி ""நீங்கள் துர்வாசரை விரோதித்துக்கொண்டு, அவரது கோபத்திற்கு ஆளானது மிகத்தவறு. என்னால் உங்களுக்கு சாயுஜ்ய முக்தி தர இயலாது. பரமசிவனால் மட்டும்தான் அது சாத்தியம். ஆகவே அவரை வழிபடுங்கள்'' எனக் கூறுகிறார்.


மாற்றமடைந்த முக்கோடி மந்திர தேவதைகள், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல், திகைத்து நின்றபோது நாரத முனிவர் தோன்றி ""பரமேஸ்வர பிரசாதத்தால் மட்டுமே ஞான முக்தி பெறமுடியும்.'' என வலியுறுத்துகிறார். துர்வாசர் போன்றே, இவரும் கூறியதைக்கேட்டு, கோபமடைந்த மந்திரதேவதைகள், நாரதரையும் இழிவாகப் பேசினர். நாரதர் அவர்களைப் பார்த்து நீங்கள் நூறு ஜென்மங்கள், மீண்டும் பிராம்மணர்களாகப் பிறந்து, கடைசி ஜென்மத்தில் ஸ்ரீ நாராயணனின் அனுக்கிரஹத்தால் முக்தி பெறுவீர்கள்'' என்று கூறி மறைந்து விடுகிறார். இதைக் கேட்டு ஓரளவு சமாதானம் அடைந்த மந்திரதேவதைகள் பிராம்மண வடிவம் ஏற்று, நூற்றெட்டு திவ்ய தேசங்களிலும், ஸ்ரீ நாராயணனைக்குறித்து, தவமிருந்து விட்டு, கடைசியாக, சுவேத தீவிற்கு வந்தனர். இவர்களது தீவிர தவத்தைக் கண்டு, என்ன செய்வது என்று புரியாத ஸ்ரீ நாராயணன், வீரபத்திரரிடம் செய்தியைக் கூறி, ஆலோசனை கேட்கிறார். வீரபத்திரர் அவரிடம் திருக்கோடிக்கா தலத்தின் மகிமையை எடுத்துக் கூறுகிறார்.


இந்த ஜகத்தில் பாவக ஷேத்திரம் ஒன்று உள்ளது. அதில் பிப்பல விருட்சம் (அரசமரம்) அதிக உத்தமமாக விளங்குகிறது. அங்கு ஸர்வேஸ்வரன், திருக்கோடீஸ்வரர் என்ற நாமதேயத்துடன் ஸ்ரீ திரிபுரசுந்தரி தேவியுடன், ஆவிர்பவித்து இருக்கிறார். அங்கே சிருங்கோத்பவ தீர்த்தம், சித்ர குப்த தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், குபேரதீர்த்தம், அக்னி தீர்த்தம், துர்கா தீர்த்தம், பூத தீர்த்தம், காளி தீர்த்தம், நிர்நதி தீர்த்தம் என்ற மஹா தீர்த்தங்கள் உள்ளன. இங்கு பரமசிவனை ஆராதித்து, தர்ம, அர்த்த, காம, மோஷ என்கிற நான்கு புருஷார்த்த தேவதைகள் ஸித்தி பெற்றன. மேலும் ஸப்தரிஷிகளும், ஸனாகதி முனிவர்களும் மற்றும் அநேக மகான்களும் சித்தி பெற்றுள்ளார்கள்.


தவிர, ஜமதக்னி முனிவரின் புதல்வரான பரசுராமர், தன் தாயைக் கொன்றதால் ஏற்பட்ட மாத்ருஸத்தி தோஷம், ஸ்ரீ ராமருக்கு ஏற்பட்ட "பிரம்மஹத்தி' தோஷம், பிரலம்பாசுரனைக் கொன்றதால் பலராமனுக்கு நேர்ந்த பாவம், தட்சயாகத்தில் பலபேரைக் கொன்றதால் எனக்கும், காளிக்கும் ஏற்பட்ட "மஹா ஹத்யா பாபம்,' இவற்றிற்கெல்லாம், திருக்கோடிக்கா ஸ்தலத்தில்தான் பாப நிவர்த்தி கிடைத்தது.


இந்த ஷேத்திரத்தின் மகிமையை யாராலும் வர்ணித்துச் சொல்ல இயலாது'' என்று கூறி திருக்கோடிக்கா சென்று தவமிருக்கும்படி வீரபத்திரர் ஆலோசனை கூறுகிறார். ஸ்ரீ நாராயணனும் அவ்விதமே, திருக்கோடிக்கா வந்து, இங்குள்ள சிருங்கோத்பவ தீர்த்தத்தில் நீராடி, பிப்பல மரத்தை பிரதட்சனம் செய்து, பரமேஸ்வரனைக் குறித்து தவமிருந்து, அசுவமேத யாகங்கள் செய்ய, ஈஸ்வரன் மனம் மகிழ்ந்து, ஸ்ரீ நாராயணன் முன்தோன்றி, அவரது விருப்பம் என்னவென்று வினவுகிறார். ஸ்ரீ நாராயணன் மூன்று கோடி மந்திரங்களுக்கு எப்படியாவது முக்தி தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.


நீங்கள் தவம் இருந்ததாலும், பெரிய யாகங்கள் செய்ததாலும், உங்களுக்காக திரிகோடி மந்திரங்களுக்கு முக்தி அளிக்கிறேன்,'' என்று பரமேஸ்வரன் வாக்குறுதி அளிக்கிறார். பின் ஸ்ரீ நாராயணன், திரிகோடி பிராமணர்களிடம், அவர்களை திருக்கோடிக்கா சென்று, திருக்கோடீஸ்வரரைக் குறித்து, ஒரு வருடம் தவம் இருக்கும்படி கூறுகிறார். மந்திர தவதைகளும், மகிழ்ச்சி அடைந்து, திருக்கோடிக்காவை அடைந்து, பரமேஸ்வரனைக் குறித்து, தவம் இயற்றத் தொடங்கினர்.


இத்தருணத்தில் நாரதர், துர்வாசரைத் சந்தித்து இன்னும் இரண்டு மாதங்களில், மந்திர தேவதைகளுக்கு, முக்தி கிடைக்கப்போகிறது. அதுமட்டுமன்று, அவர்களுக்கு இன்னும் புத்தி வரவில்லை. கர்வமும் அடங்கவில்லை. ஸ்ரீ நாராயணனின் முயற்சியால், அவர் மூலமாகத்தானே தங்களுக்கு முக்தி கிடைக்கப்போகிறது என்று கூறுகிறார்கள். குரு சேவை செய்து, குரு பிரசாதமாக ஞான முக்தி அடைந்தால்தானே உங்களுக்கு வெற்றி கிடைத்ததாகும். எனக் கூறி கலகமூட்டி விடுகிறார். அதன் பலனாக துர்வாசரும் கடும் கோபம் கொண்டு விட்டேனாபார் என்று கர்ஜித்து விட்டு, கணபதியைத் தொழுகிறார்.


கணபதி பிரத்யட்சமானவுடன், முக்கோடி மந்திரங்கள் தம்மை அவமதித் ததையும், தூஷித்ததையும் கூறி, அவர்களுக்கு முக்தி கிடைக்கும்முன், பல இடையூறுகளை உண்டு பண்ணவேண்டும் என்று கணபதியை வேண்டுகிறார். கணபதியும் துர்வாசரின் வேண்டுகோளுக்கினங்க, காவிரி நதியை கும்பகோண மத்யார்ஜுன க்ஷேத்திர மார்க்கமாக, திருக்கோடிக்காவுக்கு கொண்டு வந்து, அர்த்த ராத்திரியில், எல்லோரும் நித்திரை செய்து கொண்டு இருக்கும் சமயத்தில் வெள்ளத்தைப் பெருகச் செய்து, மந்திர பிராமணர்களை அதில் மூழ்கடித்து, திணற அடிக்கிறார்.


அந்த பிரவாஹத்தில், மகா காளியும், வீரபத்திரரும், மஹாகணபதியின் கட்டளையின் பேரில், திரிகோடி மந்திரதேவதைகளை மிகவும் துன்புறுத்தினார்கள். துர்வாசரும், நாரதரும் அக்காட்சியைக் கண்டு மகிழ்கிறார்கள். வேறு வழி தெரியாத, மந்திர பிராமணர்கள் இறுதியில் துர்வாசரிடம் சரணடைந்து, தாங்கள் செய்த தவறுக்காக வருந்துகிறார்கள். மேலும் அவரையும், நாரதரையும் போற்றி, தோத்திரம் செய்தனர். பிறகு கணபதியை துதித்து, தங்களை வெள்ளத்திலிருந்து கரையேற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். கணபதியும், ஒரு பிரம்மச்சாரியாக வந்து, அவர்களைக் காப்பாற்றி, கரையேற்றி விட்டு, ""பிரம்ம வித்தையை பழிப்பதோ, வேத மார்க்கத்திற்கு விரோதமாக இருப்பதோ மகான்களை தூற்றுவதோ, மாபெரும் பாபச் செயலாகும். உங்கள் கர்வத்தை அடக்குவதற்காகத்தான் இந்த தண்டனையைக் கொடுத்தேன். என்று அவர்களிடம் கூறிவிட்டு, தமது சுய வடிவத்தைக்காட்டுகிறார். தங்கள் தவறுகளை மன்னித்து முக்திக்கு வழிகாட்ட வேண்டும் என்று அவர்கள் கணபதியை வேண்ட, அவரும், ""திருக் கோடிக்காவில் எழுந்தருளியிருக்கும் சுவாமியை பூஜை செய்யுங்கள், உங்களுக்கு முக்தி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்'' என்று கூறி மறைகிறார்.


பின் மந்திர பிராமணர்கள் துர்வாசரை அணுகி, முறையாக சிவ ஆராதனை செய்யும் வழியை கூறும்படி வேண்டுகிறார்கள். ""அகஸ்தியர் வந்து உங்களுக்கு எல்லாம் விளக்குவார்.'' என்று துர்வாசர் கூறிவிட்டு, நாரதருடன் சென்று விடுகிறார். நான்கு நாட்கள் கழித்து, லோபா முத்திரையுடன், அகத்தியர், திருக்கோடிக்கா வந்து சேருகிறார்.


திரிகோடி மந்திரதேவதைகள் வேண்டுகோளின்படி, அவர்களுக்கு அத்யாத்ம வித்தையை உபதேசம் செய்து, முத்திரைகளை சொல்லித்தந்து, சிவபூஜா விதிகளையும், எல்லா மந்திர சாஸ்திரங்களையும் கற்றுக் கொடுக்கிறார். அவரோடு சேர்ந்து, மந்திர பிராமணர்கள், சாஸ்தா, காளி, துர்க்கை மற்றும் வீரபத்திரர் ஆகியோரை பூஜை செய்தனர். பின் அகத்தியர், ருக்கோடீஸ்வரருக்கு தென்மேற்கு பகுதியில், மணலால், கணபதியைபிரிதிஷ்டை செய்ய, எல்லோரும் சஹஸ்ர நாமத்தால் அக்கணபதியை பூஜை செய்தனர். பின்னர் திருக்கோடீஸ்வரரை சஹஸ்ர நாமத்தால் அர்ச்சனை செய்தனர்.


இந்த சஹஸ்ரநாமத்தை திரிகோடி மந்திர தேவதைகளுக்கு, அகஸ்தியர் கற்றுக்கொடுத்தார். (அகஸ்தியருக்கு, சண்முகராலும், சண்முகருக்கு விநாயகராலும், விநாயகருக்கு சிறுவயதில் ஈஸ்வரியாலும் சொல்லிக் கொடுக்கப்பட்டதாகும்.) சிருங்கோத்பவ தீர்த்தத்தில், ஒரு சமயம் பரமேஸ்வரனும், பார்வதியும், ஜலக்கிரீடை செய்யும்போது, மிக்க சந்தோஷம் அடைந்த சுவாமியிடமிருந்து, திரிபுரசுந்தரியானவள், முதன் முதலில் இந்த சஹஸ்ரநாமத்தைக் கற்றுக் கொண்டாளாம். இத்தருணம், மஹாகணபதி, முக்கோடி மந்திரதேவதைகள் முன் தோன்றி, தமது முர்த்தி ஒன்றை பிரதிஷ்டை செய்து, அவருக்கு துர்வாச கணபதி என்று பெயர் வைக்கும்படி கூறுகிறார். அதன்படி மந்தர தேவதைகள், நந்திக்கு சமீபம், கிழக்கே பார்த்து, ஒரு பிள்ளையாரை பிரிதிஷ்டை செய்து பூசித்தனர். மேலும் பைரவருக்கு தெற்கு பாகத்தில் "நாதேஸ்வரர் சண்டிபீடேஸ்வரர், கஹோனேஸ்வரர்' என்ற மூன்று லிங்கங்களையும் பிரதிஷ்டை செய்து, பூஜை செய்தார்கள். இவற்றையெல்லாம் கண்டு, திருப்தி அடைந்த துர்வாசர், கைலாசம் சென்று, விநாயகரிடம், திரிகோடி மந்திரதேவதைகளின் முக்திக்காக சிபாரிசு செய்ய, கணபதியும் மேபரமஸ்வரனிடம் சென்று, ஸ்ரீ நாராயணனுக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி முறையிட்டார். அதன்படி கைலாசபதியான, பரமேஸ்வரன், திருக்கோடிக்காவில் உள்ள சிவலிங்கத்தில் சாந்நித்யம் ஆகி முக்திக்காக காத்திருக்கும் மூன்றுகோடி மந்திர பிராமணர்கள் முன் தோன்றினர். ""பிரபோ! எங்கள் பாக்கிய வசத்தால், தங்கள் திருப்பாதங்களைக் கண்டோம்'' என்று அவர்கள் பரவசமானார்கள். சுவாமி, சைகையால் சிருங்கோத்பவ தீர்த்தத்தைக் காட்டினார். அது அவர்களுக்குப் புரியவில்லை. இதைக் கண்ணுற்ற அதிகார நந்தி, தமது பிரம்பால், திருக்குளத்தைக் சுட்டிக்காட்டிய பின், அப்புனித தீர்த்தத்தில் அனைவரும் இறங்கி நீராடினார். அடுத்த கணம், நீரிலிருந்து ஒரு திவ்ய ஜோதி கிளம்பிற்று, அந்த ஒளிப்பிழம்பில், மூன்று கோடி மந்திர தேவதைகளும் ஐக்கியமாகி விட்டனர். அவர்களுக்கு "ஞானமுக்தி' (சாயுஜ்ய முக்தி) கிட்டி விட்டது. அக்கணம் அங்கு குழுமியிருந்த சப்தரிஷிகள், பிரம்மாதி தேவர்கள், சனகாதி முனிவர்கள் முதலியோர், திருக்கோடீஸ் வரரைத் துதிக்கத் தொடங்கினார். பரமேஸ்வரன், கரம் உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்து விட்டு, திருக்கோடிக்கா ஷேத்திரத்தின் மகிமையை கூறலானார். நந்தியின் கொம்பால் உண்டான, இந்த சிருங்கோத்பவ தீர்த்தக் கரையில் இருப்பது என்னுடைய க்ஷேத்திரம், இது எல்லா சௌபாக்கியங்களையும் கொடுக்கும். எல்லோருக்கும் எல்லா இஷ்ட சித்திகளையும் அளிக்க வல்லது. இது பாவகம் என்ற உத்தம க்ஷேத்திரமாகக் கூறப்படுகிறது. பிரம்மாண்டத்தில், இதற்கு சமமாக ஒன்றைக் கூற இயலாது.


யமபயம் இல்லை: சிவபுராணத்தில் பன்னிரெண்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்படும், மற்றொரு நிகழ்ச்சி, இத்தலத்தின் மகிமைக்கு மேலும் சிறப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது. தன் கணவனைக் கொன்றுவிட்டு, நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்தி வந்த லோக காந்தா என்ற பெண்மணி, வாழ்க்கையின் இறுதிகாலத்தில், திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது. அவள் மரணமடைந்ததும், யமன், அவளைத் தண்டிக்க, நரகலோகம் அழைத்துச் செல்லுகிறான். சிவ தூதர்கள், இதை வன்மையாக கண்டிக்கின்றனர். யமதர்மராஜன், சிவபெருமானிடம் வந்து முறையிடுகிறார்.

தமது தலமான திருக்கோடிக்காவோடு, சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க யமனுக்கு அதிகாரம் இல்லை என்றும், காலதேச வர்த்தமானங்களால், இங்கு வந்தவர்களை எமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும், அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் கட்டளையிடுகிறார்


பாவக க்ஷேத்திரமான திருக்கோடிக்காவில் ஸ்நான, ஜப, தப, தியானங்கள் செய்கிறவர்களை நான் எதுவுமே செய்ய முடியாது என்று யமதர்மராஜன், யமலோகத்தில் முழக்கமிடுகிறான்.லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டுவிட்டதால், யமனிடமிருந்து விடுபட்டு, பின் முக்தி அடைகிறாள்.


காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது. இந்த நம்பிக்கையை உறுதி செய்வது போல, இவ்வூரில் ருத்ரபூமி (மயானம்) தனியாக இல்லை. இவ்வூரில் மறிப்பவர்களை, காவிரி நதியின் மறுகரைக்கு கொண்டு சென்றுதகனம் செய்யும் வழக்கம் தொன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது.


இவ்வூருக்கு மேற்கே அமைந்துள்ள சுக்ரத்தலமான கஞ்சனூர் கிராமத்தில் ஹரதத்தர் என்ற பெரியவர் வாழ்ந்து வந்தார். பிறப்பால் வைணவரானாலும், இவர் தீவிர சிவபக்தர். கண்பார்வைக் குறைவு உள்ளவர். தினமும் காலையில் கஞ்சனூரிலிருந்து கிளம்பி திருமாந்துறை, திருமங்கலக்குடி, திருக்குரங்காடுதுறை, திருவாவடுதுறை, திருவாலங்காடு மற்றும் திருக்கோடிக்கா ஆகிய சிவத்தலங்களை தரிசித்து விட்டு, அர்த்த ஜாம பூஜைக்கு, தனது சொந்த ஊரான கஞ்சனூர் ஆலயத்துக்கு திரும்பிவிடுவதை, தினம் தனது வழக்கமாகக் கொண்டவர்.


ஒரு நாள் மாலை, திருக்கோடிக்கா ஆலயத்தில், ஸ்ரீ திருக்கோடீஸ்வரர் தரிசனத்தை முடித்துக் கொள்ளும் சமயம் பேய்மழை அடிக்க ஆரம்பித்து விட்டது. வெளியே புறப்பட முடியவில்லை. ஒரே இருட்டு வேறு, அவருக்கு நல்ல பார்வையும் கிடையாது. அர்த்த ஜாமம் நெருங்கிக் கொண்டிருக்கிறது

நடுங்கும் குளிரில் கோபுர வாசலில் காத்துக் கிடந்தார். அக்கணம் அவ்வழியே ஒர் அரிஜனன் வந்தார். ""சுவாமி இதோ இந்தக் கம்பைப் பிடித்துக்கொள்ளுங்கள். உங்களை நொடியில் கஞ்சனூர் கொண்டுபோய்ச் சேர்த்து விடுகிறேன்,'' என்றார். ஹரதத்தருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. தெய்வாதீனமாக, அங்கு வந்த அரிஜனன் நீட்டிய கம்பைப் பற்றிக்கொண்டு வேகமாக நடந்து, கஞ்சனூரை அடைந்து. அங்கு கோயில் அர்த்தஜாம வழிபாட்டை இனிதாக முடித்தார். தக்க சமயத்தில் வந்த தனக்கு உதவி புரிந்த அந்த அரிஜனனுக்கு, கோயிலில் தனக்கு பிரசாதமாகக் கிடைத்த அன்னத்தையும், சுண்டலையும் வழங்கினார். அரிஜனனும் நன்றி சொல்லி, அதைப் பெற்றுக் கொண்டு போய்விட்டார்.


மறுநாள் காலை, திருக்கோடீஸ்வரர் ஆலயத்தில் நந்தி, அம்பாள், சுவாமி, விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் சந்நிதிகளில், அன்னமும், சுண்டலும் காணப்பட்டன. முதல் நாள் இரவு அரிஜனனாக வந்து, ஹரதத்தருக்கு கை கொடுத்து உதவியவர், திருக்கோடீஸ்வரர்தான்..


ஆழ்வார்கள், வெங்கடாஜலபதியின் தரிசனத்திற்காக, திருப்பதி சென்றார்கள். அங்கு இறைவன், அவர்களுக்கு காட்சி தரவில்லை, மாறாக, ""திருக்கோடிக்காவில் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள், நீங்கள் விரும்பும் தரிசனம் கொடுப்பாள், அங்கே செல்லுங்கள்,'' என்று அசரீரியாக உத்தரவு பிறந்தது. ஆழ்வார்களும், ஆவலுடன் புறப்பட்டு, திருக்கோடிக்காவை அடைந்தனர். ஊரை நெருங்கியபோது, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதைக்கடந்து வரமுடியாமல் ஆழ்வாராதிகள் சிரமப்பட்டபோது, அகத்திய முனிவர், அவர்கள் முன் தோன்றி, ஆலயத்திலுள்ள கரையேற்று விநாயகரை, மனதில் பிரார்த்தித்துக் கொள்ளும் படி கோரினார். அவர்களும் அவ்வாறே செய்ய, காவிரியில் வெள்ளம் குறைந்தது. ஆழ்வாராதிகள், கரையைக் கடந்து ஆலயத்தினுள் வர, அங்கு அம்பாள் அவர்களுக்கு வெங்கடாஜலபதியாக தரிசனம் தந்தருளினாள்.


பிருங்கி மஹரிஷக்கு காட்சி கொடுத்தல்: காட்சி கொடுத்த அம்பாளாக திருக்கோடீஸ்வரர் சந்நிதியில் வீற்றிருக்கும், இந்த அம்பாளைக் குறித்து வேறொரு கதையும் சொல்லப்படுகிறது. அதைக் கூறுவதற்கு முன்னால் பிருங்கிமஹரிஷியின் கதையை தெரிந்து கொள்வது அவசியம். பிருங்கி மஹரிஷியானவர், தனித்த சிவமே பரம்பொருள் என்று துணிந்து சக்தியின்றி, சிவனை மட்டுமே வழிபடலானார். இதைக் கண்டு கோபம் கொண்ட அன்னை, அவருடைய கால்கள், இரண்டையும் செயலிழக்கச் செய்தாள், ஆனால், பிருங்கி முனிவர் சிவபெருமானிடம் முறையிட்டு, மூன்றாவதாக ஒரு காலைப் பெற்றுச் சிவனை சுற்றி வரலானார். இதைப் பார்த்த அன்னை, மேலும் கோபம் கொண்டு அவரை நடக்கவே முடியாதபடி முற்றிலும் சக்தி அற்றவராகச் செய்தார். மனம் தளராத பிருங்கி, சிவபெருமானைத் துதித்து வேண்டி, ஒரு வண்டாக உருப்பெற்று ஸ்வாமியை மட்டும் சுற்றிப் பறந்தார். இதைக் கண்ணுற்ற அன்னை, ஸ்வாமியிடம் வரம்பெற்று, அவர் உடம்பில் பாதி ஆனார். (அர்த்த நாரீஸ்வரர்). இதைச் சகிக்காத வண்டு உருவில் உள்ள பிருங்கி, அர்த்த நாரீஸ்வரரின் உடலில் பாதியை துளைத்து சிவனைதனிமைப்படுத்தும் காரியத்தில் இறங்கினார். இத்துடன் தனது சோதனையை நிறுத்திக்கொண்ட பரம்பொருள், அன்னையின் கோபத்தை தணித்து பிருங்கியின் தீவிர சிவபக்தியை நிலைநாட்டி, அவரை ஆட்கொண்டார்.


துர்வாச மகரிஷி, தக்ஷின சிதம்பரம் என அழைக்கப்படும் "திருக்களர்' ஊரில் பாரிஜாதவனேஸ்வரரை தரிசித்துவிட்டு, ஆருத்ரா தரிசனத்தன்று, ஸ்ரீ நடராஜரை வணங்கிவிட்டு, திருக்கோடிக்கா வந்தடைந்தார். வேத்ரவனேஸ்வரரான ஸ்ரீ திருகோடீஸ்வரரை தரிசிக்க, ஆலயத்தில் வேகமாக பிரவேசிக்கையில், அம்பாளின் சந்தியைத்தாண்டிச் சென்று விடுகிறார். இதைக் கண்ட திரிபுரசுந்தரி அன்னை, எங்கே பிருங்கி முனிவர் போல் துர்வாசரும், சிவன்வேறு, சக்தி வேறு, எனப் பிரித்து எண்ணிவிடுவாரோ என அஞ்சி. அதற்கு சந்தர்ப்பமே கொடுக்கக்கூடாது என்று எண்ணி, தானே வலியச் சென்று திருக்கோடீஸ்வருக்கு முன்னால் துர்வாசருக்கு காட்சி கொடுக்கிறாள் என்று ஒரு புராணக்கதையும், கூறப்படுகிறது.


திருக்கோயிலில், ஸ்வாமி சந்நிதியில் ஸ்ரீ திருக்கோடீஸ்வரருக்கும், துர்வாசர் சிலைக்கும் நடுவில், மகா மண்டபத்தில் காட்சி கொடுத்த அம்பாள் சிலை இருப்பது இக்கதைக் கருத்துக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.


சோழ மன்னர் பரம்பரையைச் சேர்ந்த செம்பியன் மாதேவி, எடைக்கு எடை பொற் காசுகளை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கத்தை தோற்றுவித்தார்.

கோவில் அமைப்பு:


ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் எதிரில் கவசமிட்ட கொடிமரமும், கொடிமரத்து விநாயகர், பலிபீடம், நந்தியும் காட்சி தருகின்றன. முன்மண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. வடிவாம்பிகை நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள். உட்பிரகார வலத்தில் கரையேற்றும் விநாயகர், மயில்வாகனர், சிவலிங்கமூர்த்தங்கள், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, காலபைரவர், சூரியன், சந்திரன், சனிபகவான், துர்வாசர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தனவிநாயகர், நடராசர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். வலம் முடித்து உள்மண்டபம் சென்று துவார விநாயகரையும் பாலசுப்பிரமணியரையும் தரிசித்து வாயில் கடந்தால் நேரே மூலவர் தரிசனம். மூலவர் கருவறை செல்லும் வழியில் இருபுறமும் சித்தரகுப்தரும், எமதர்மனும் உள்ளனர். இது இத்தலத்தின் விசேஷ அமைப்பாகும். திருகோடீஸ்வரர் சதுரபீடத்தில் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்க உருவில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.


கருவறை மேற்கு சுற்றில் முதலில் உள்ள அறையில் நாகலிங்கம், காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் மனோன்மணி அம்பாள் விக்ரகங்கள் உள்ளன. அடுத்துள்ள சந்நிதியில் ஆறுமுகம், பன்னிரண்டு கைகள். கைகளில் நாககனி, வில், பாணம் மற்றும் பிற படைக்கலங்களோடு வள்ளி, தெய்வானையுடன் அசுரமயில் வாகனத்தில் முருகர் காட்சியளிக்கிறார். இதை அடுத்து ரிக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு வேத சிவலிங்கங்கள் காணப்படுகிறது. அதையடுத்து கஜலட்சுமி விக்ரகம் இரு கால்களையும் தொங்கவிட்டுக் கொண்ட நிலையில் உள்ளது. இறுதியில் சனீஸ்வரனின் மனைவியான ஜேஷ்டாதேவி, மகன் மாந்தி, மகள் மாந்தாவுடன் உள்ள சிலை உள்ளது. மாந்தாவின் கையில் தாமரை மலரும், மாந்தியின் முகம் ரிஷப முகமாயும், இம்மூன்றும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அற்புதமாய் காட்சியளிக்கிறது. வடக்குச் சுற்றில் கோயிலின் தல விருட்சமான பிரம்பு மரம் உள்ளது. அடுத்து அஷ்டபுஜ துர்க்கை சந்நிதியும், அதையடுத்து சண்டிகேஸ்வரர் தனிச்சந்நிதியும், அருகில் புஷ்கரணியும் (கிணறு) உள்ளது. இதைக்கடந்து சென்றால் பிரம்மாவுக்கு என்று ஒரு சிறு தனிச்சந்நிதி உள்ளது.


வடபுற திருச்சுற்று சன்னதிகளைப் பார்ப்போம். முதலில் திருக்கோடீஸ்வர் கருவறைச் சுற்றின் அருகில் கோயிலின் தல விருட்சமான பிரம்பு மரம் உள்ளது. அடுத்து அஷ்டபுஜ துர்க்கை வலக்கைகளில் சூலம், பாணம், கட்கம்(கத்தி), சங்கு, இடக்கைகளில் சக்ரம், வில், கேடயம் ஆகியவையும் உள்ளன. இடக்கை ஒன்றை தொடையில் ஊன்றி உள்ளார். துர்க்கையை ஒட்டி சண்டிகேஸ்வரர் தனிச்சன்னதியும், அருகில் புஷ்கரணியும் (கிணறு) உள்ளது. இதைக்கடந்து சென்றால் பிரம்மாவுக்கு என்று ஒரு சிறு தனிச்சன்னதி உள்ளது.


ஆலயத்தில் சிற்பங்களுக்கு பஞ்சமில்லை. சிவபெருமானின் 64 லீலைகளில் பெரும்பான்மைகளை மிக நுட்பமாக பல்லவகால சிற்ப அமைவில் திருச்சுற்றிலும் ஏனைய பல இடங்களிலும் காணமுடிகிறது. சிற்பங்கள் யாவும் வெகு அற்புதமாய் கண்ணைக்கவரும் விதத்தில் அமைத்திருக்கின்றன. இராஜகோபுர வாயிலில் காமதேனு, கற்பக விருட்சம், குதிரை மற்றும் யானை வீரர்களின் போர்க்காட்சிகள், மனுநீதி சோழன் நீதிவரலாறு, கண்ணனின் கோகுல லீலைகள், மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட 22 விதவிதமான வாத்தியங்களை இசைக்கும் மாந்தர்கள் யாவும் கண்ணிற்கு விருந்தாய் அமைந்துள்ளன.


இதே போன்று திருக்கோடீஸ்வரரின் கருவறை வெளிச்சுவற்றிலும் அழகிய சிற்பகோலங்கள் உள்ளன. தெற்குச் சுவரில் முதலில் நடராஜர் சிற்பம் உள்ளது. இடதுபுறம் சிவகாமியும், வலதுபுறம் காரைக்கால் அம்மையார் பேய் உருவில் தலைவிரி கோலமாய் தாளமிட்டப்படி சிவனது கூற்றினைக் கண்டு ஆனந்திக்கிறாள். திருவடியின் கீழ் இசைபாடுவோர். மத்தளம் அடிப்போர், தாளமிடுவோர் என மூன்று கணங்கள் உள்ளனர். அடுத்து வரிசையாக பிட்சாடனர், விஷ்ணுவின் மோகினி அவதாரம், ஒரு குள்ளபூதம், அமர்ந்த நிலையில் மஹா கணபதி, அகத்திய முனிவர், தட்சிணாமூர்த்தி, அத்ரி முனிவர், பிருகு முனிவர் உள்ளார்கள். விமானத்தில் பிட்சாடனர் உருவம் எட்டு கரங்களுடன் சூலம் ஏந்தி அகோர தாண்டவமூர்த்தியாய் மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. ஸ்வாமியின் கருவறை மேற்குச் சுவற்றில் லிங்கோத்பவர், மகாவிஷ்ணு நின்ற கோலம் அவருக்கு இருபுறமும் குத்ச முனிவரும் வசிஷ்டமுனிவரும் உள்ளனர். விமானத்தில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். வடக்குத் கருவறை சுவற்றில் முதலில் கௌதம மகரிஷியும் அடுத்து பிரம்மாவும், தொடர்ந்து காஸ்யப ரிஷி, அஷ்டபுஷ துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். விமானத்தில் பரமேஸ்வரன் காட்சி அளிக்கிறார். கிழக்குபுற விமானத்தில் ஸ்வாமி மற்றும் அம்பாள் சிற்பம் அமைந்துள்ளது.


இத்தல விநாயகர் கரையேற்று விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவர் ஐந்து நிலை ராஜகோபுரத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் கரையேற்று விநாயகர், கற்சிலை நடராஜர், சப்தரிஷிகள், அகத்தியர், சித்திரகுப்தர், யமன் முதலிய சன்னிதிகள் உள்ளன.


சுமார் 1250 வருடங்களுக்கு முன்பு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் (750) தமிழகத்தில் பல்லவர்களுடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். நந்திவர்மபல்லவன் காலத்தில் இக்கோயிலின் கர்ப்பகிரஹம் மட்டும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. பின் கி.பி. 950 - 957க்கு இடைப்பட்ட காலத்தில் தஞ்சையை உத்தமசோழ மன்னர் ஆண்ட சமயம்  அவருடைய தாயாரும் கண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன்மாதேவியாரின் ஆனைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கருங்கற்களால் திரும்பக்  கட்டப்பட்டது. அதற்குப் பிறகு வழிவழியாக நாட்டை ஆண்ட மன்னர்களால் இக்கோயிலின் மற்றப்பகுதிகள் பல்வேறுகால கட்டத்தில் கட்டப்பட்டன.


 


சிறப்புக்கள் :

எமபயம் நீக்கும் தலம் .


சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்ற தலம்.


எமனின் கை மற்றும் கால்கள் விலங்கால் கட்டப்பட்டுள்ளது.


திருகோடிக்கா என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும், அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் சிவபெருமான் கட்டளையிடுகிறார்.


மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக மந்தரங்களை உச்சரித்து சாப விமோசனம் பெற்ற தலம் .


இங்குள்ள உத்திரவாஹினியில் கார்த்திகை ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது நம்பிக்கை.


போன்:  94866 70043


அமைவிடம் மாநிலம் :


தமிழ் நாடு

மயிலாடுதுறையில் இருந்து குத்தாலம், கதிராமங்கலம் வழியாகவும், கும்பகோணத்தில் இருந்து ஆடுதுறை வந்தும் இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் உள்ள திருவாவடுதுறை என்ற இடத்திலிருந்தும் இத்தலத்தை அடையலாம்.

என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட தலம் இது என்று சிவபெருமானால் சிலாகித்து கூறப்பட்ட தலம்.


திருகோடிக்கா என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும், அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் சிவபெருமான் கட்டளையிடுகிறார்.


காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது. இன்றுவரை இவ்வூரில் மயானம் தனியாக இல்லை இங்கு இறப்பவர்களுக்கு அமைதியான மரணம் தான் நிகழ்கின்றது, துர் மரணங்கள் இல்லை, இங்கு இறப்பவர்களை இன்றுவரை பக்கத்து ஊரில் தான் அடக்கம் செய்கிறார்கள்.


எமனின் கை மற்றும் கால்கள் விலங்கால் கட்டப்பட்டுள்ளது.


இத்தலத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கின்ற பெருமையுடைய தலம்.


மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக மந்தரங்களை உச்சரித்து சாப விமோசனம் பெற்ற தலம்.

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.


*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.


தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.


ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.

பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.

நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.

மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.


தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏


Agathiyar Temple JeevaNadi

Tiruppur, Tamil Nadu

093843 95583


கூகிள் வரைபடம் வழி கீழே 👇


https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in


முகநூல் -


https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

கமலவரவரதராஜப் பெருமாள் மற்றும் ஆறுவிரல்கள் கொண்ட சுந்தரமகாலக்ஷ்மி தாயார் என்றழைக்கப்படும் பெருந்தேவி தாயார் கோயில் பற்றியது இந்த பதிவு!

 அளவில்லா செல்வம் 

சேர வேண்டுமா? வீடுவாங்க முடியவில்லையா?

திருமணத் தடையா? பிள்ளைப்பேறு இல்லையா?,

அபரிமிதமான 

செல்வம் சேர 

வேண்டுமா?


உங்கள் கோரிக்கை எது என்றாலும் உடனே நிறைவேற்றித்தர தயாராக ஆறு விரல்கள் கொண்ட பெருந்தேவித் தாயார் அரசர் கோயில் எனப்படும் கமல வரதராஜபெருமாள் திருக்கோயிலில்  காத்திருக்கிறார்  .


சில நிகழ்வுகள் பிறர் சொல்லி கேட்டால் நம்ப முடியாதது போல் இருக்கும். 


ஆனால் நமக்கே ஏற்படும்போது நம்பித்தான் ஆகவேண்டும். 


சில கோயில்களுக்கு செல்ல நினைத்தால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தடை ஏற்படும். 


ஆனால் அந்த தெய்வமே வா என்று அழைப்பது போல் உள்ள ஆறாயிரம் வருடங்களாக அருள் பாலித்து கொண்டிருக்கும் கமலவரவரதராஜப் பெருமாள் மற்றும் ஆறுவிரல்கள் கொண்ட சுந்தரமகாலக்ஷ்மி தாயார் என்றழைக்கப்படும் பெருந்தேவி தாயார் கோயில் பற்றியது இந்த பதிவு!


ஆறு விரல்கள் கொண்ட பெருந்தேவித் தாயார் வாழும் கோவில், திருஊரல் திருவிழாவிற்கு புகழ்பெற்ற ஆலயம், குச்சியை நான்காகப் பிளக்கும் அதிசய கல் துளை கொண்ட ஆலயம், சுக்ரன் ஐக்கியமான கோவில்  எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட  தலமாகத் திகழ்கிறது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசர்கோவில். 


இந்த ஆலயத்தில் பெருந்தேவி தாயார் 

சமேத வரதராஜப் பெருமாள் அருள்பாலித்து வருகிறார்.


சகல ஐஸ்வர்யங்களையும் நமக்கு தருபவர்கள், அறுபத்தி நான்கு லட்சுமிகள். 


எல்லா லட்சுமிகளுக்கும் தாயார் இந்த சுந்தர மகாலட்சுமி தான். 


இவருக்கு பெருந்தேவி தாயார் என்ற திருநாமமும் உண்டு. 


சுந்தர மகாலட்சுமி தாயாருடன் உடனுறைபவர் ‘கமல’ வரதராஜ பெருமாள். 


காஞ்சி வரதருக்கும் மூத்தவராம் இந்த கமல வரதராஜர்.


கமல வரதராஜர் உடனுறை சுந்தர மகாலட்சுமியும் 

அரசர் கோயிலில் எழுந்தருளியது குறித்து புராண வரலாறு என்ன சொல்கிறது என்று பார்ப்போமா?


பிரம்மா பாப விமோசனம் தேடிக் கொண்டிருந்த சமயம்,பல தவச் சீலர்களை கலந்தாலோசிக்கிறார் 


மண்ணாளும் வேந்தனும், விண்ணாளும் மாதவனும் சேர்ந்து எங்கு காட்சி தருகிறார்களோ அந்தத் திருத்தலத்தில் அவர்களின் தரிசனம் கிடைத்தால் தான் 

"பாப விமோசனம்" 

என்று முனிவர்கள் சொல்கிறார்கள். 


இதெல்லாம் வைகுண்டவாசனின் விளையாட்டுதானே! 


பூலோகத்துக்கு வரும் நாராயணன், பாலாற்றங்கரையில் வாசம் செய்கிறார். 


அந்த சமயம் ஜனக மகாராஜாவும் அங்கே வருகிறார். 


ஆண்டவரும் அரசரும் அங்கே சந்திக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட பிரம்மா விரைந்து வந்த இருவரையும் தரிசனம் செய்கிறார். 


நாராயணர் அவருக்கு பாபவிமோசனம் கொடுத்து, பாலாற்றிலிருந்து மண் எடுத்துச் சென்று யாக குண்டம் கட்டி வேள்வி செய்யச் சொல்கிறார். 


பிரம்மா மண்ணை எடுத்துக் கொண்டு 

போய் காஞ்சிபுரத்தில் வேள்வியைத் துவக்குகிறார்.


இந்த நிலையில் பாற்கடல்வாசனைக் கண்ட ஜனகர் தினசரி அவருக்கு பூஜை செய்து வருகிறார். 


ஒரு நாள் ஜனகர் ஏதோ வேலையாகச் சென்றவர் பூஜை நேரம் முடிந்ததும் திரும்புகிறார்.


வந்து பார்த்தால் பூஜை நடந்து முடிந்ததற்கான தடயங்கள் தெரிகின்றன. 


பெருமாளே வந்து தனக்குத் தானே பூஜை செய்துவிட்டு போனதாக சொல்கிறார் காவலாளி. 


அதிர்ச்சியடையும் ஜனகர், ‘இப்படி நடந்து விட்டதே’ என்று மனம் கலங்குகிறார். 


இதற்கிடையில் பெருமாள் ஜனகர் இருந்த இடத்துக்குப் போய் தனக்குத் தானே பூஜை செய்து கொண்டதைக் கேள்விப்பட்ட மகாலட்சுமி கோபப்படுகிறார். 


அவரை சமாதானப்படுத்தும் விதமாக இங்கே வந்து என்னை தரிசிப்பவர்களைவிட உன்னை தரிசிப்பவர்களுக்கே, ஐஸ்வரியங்கள் சேரும்" என்று பெருமாள் சொல்கிறார். 


தன் தவறுக்கு பரிகாரமாக ஜனகர் பெருமாளுக்கு தேவ சிற்பி விஸ்வகர்மா மூலம் கோயில் கட்ட, அது அரசர் கோயிலென அழைக்கப்பட்டது. 


அங்கே ‘கமல’ வரதராஜரும் சுந்தர மகாலட்சுமியும் எழுந்தருளி காலம் காலமாக மக்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார்கள்.


இந்தக் கோயிலில் முதலில் தாயாரைத்தான் வணங்க வேண்டும்.


இந்த தாயார் 

சந்நிதிதான் அத்தனை விசேஷங்களையும் கொண்டது.


ஆம் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் இந்த தாயாருக்கு வலது காலில் ஆறு விரல்கள்.


புன்னகை சிந்தும் இதழ்கள். தாமரைக்கும் இந்த கோயிலுக்கும் ஏதோவொரு சம்பந்தம்.


பெருமாள் பெயர் கமல என்று தொடங்குகிறது. தாயார் சந்நிதி முன் உள்ள மண்டபத்தில் தூண்களில் தாமரை இதழ் போன்ற அமைப்பு,தாயாரின் கைகளில் தாமரைப்பூ. என்ன ஒரு சிறப்பு.


ஆறு என்பது 

சுக்கிரனின் எண். 

இந்த தாயாரிடம் சுக்கிரன் ஐக்கியமானதாக ஐதீகம். 


இப்போதும் வெள்ளிக்கிழமைகளில் காலை சுக்கிர ஹோரையில் சுக்கிர பகவான் இத்தலத்திற்கு வந்து வழிபடுவதாக சொல்கின்றனர்.


ஜாதகத்தில் போகத்திற்கு அதிபதியான சுக்கிரன் நீசம் அடைந்தோர் சுக்கிர பலம் வேண்டி வழிபட வேண்டிய முக்கியமான கோயில் இது.


உங்கள் வேண்டுதல்களை எண்ணி ஐந்து வெள்ளிகிழமைக்குள் சுந்தரமகாலக்ஷ்மி தாயார் நிறைவேற்றி விடுவார் என்று இந்த கோயில் பட்டர் உறுதியாக சொல்கிறார்.


ஆலய அமைப்பு:

கிழக்கு நோக்கி அமைந்துள்ள பெருந்தேவி தாயார் சன்னிதி பாலாற்றின் அழகையும், அழகிய கல் மண்டபத்தையும் நோக்கியபடி உள்ளது. 


பெருந்தேவி தாயார் முப்பெரும் சக்திகளின் ஆதாரப் பீடத்தில், பத்மாசனம் இட்டு 

அமர்ந்த நிலையில் 

காட்சி தருகின்றார். 


தாயாரின் காதுகளில் பத்தி, குண்டங்கள், கைகளில் அணிகலன்கள், சங்குக் கழுத்தில் மூன்று துளசி மணி மாலைகள், துளசி மணி மாலையின் முடிவில் துளசிப் பத்திரம் போன்றவையும், நெற்றியில் சூரிய –சந்திர பிரபைகளும் அமைந்துள்ளது  தனிச்சிறப்பு ஆகும். 


இந்த தாயாரின் வலது காலில் காணப்படும் ஆறுவிரல்கள் ஒரு அதிசய அமைப்பாகும். 


ஆறு  என்ற எண்ணிக்கை சுக்ரனுக்குரியதாகும். சுக்ரன் இந்தத் தாயாரிடம் ஐக்கியமானதாகத் தலபுராணம் கூறுகிறது. 


இத்தலத்தின் மேற்கே பழமையான ஆஞ்சநேயர் கோவிலும் இருக்கிறது


தாமரை பீடத்தில் பத்மாசன நிலையில் காட்சி கொடுக்கிறார் தாயார். 


மேல் இரு கரங்களில் தாமரை. கீழ் இரு 

கரங்கள் அபய, வரத முத்திரையுடன் ரட்சிக்கின்றன. 


பத்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் தாயாரின் வலது பாதத்தில் சுண்டு விரலுக்கு அடுத்து ஆறாவது விரல். 


பெயருக்கு ஏற்றார் 

போல் ‘சுந்தர’மாக காட்சியளிக்கிறார்.


வெள்ளிக் கிழமையன்று சுக்கிர ஹோரையில் தரிசனம் செய்தால் எல்லா ஐஸ்வர்யங்களையும் கொடுப்பாள் மகாலட்சுமி. 


தாயார் சன்னிதி சடாரியில் மேல் உள்ள பாதத்திலும் ஆறு விரல்கள். 


தாயாருக்கு பலாச்சுளை நைவேத்தியம் சிறப்பு. இப்படி பலாச்சுளைகளை கொடுத்த சித்தரின் சிற்பம் மண்டபத்தில் இருக்கிறது. 


தாயார் கருவறை முன் மண்டபம் முழுக்க சிற்பங்களின் அணிவகுப்பு.


குபேர கோமுகம் :


தாயார் சந்நிதியில் இருந்து அபிஷேக தீர்த்தம் வெளியே வரும் கோமுகம் கூட குபேரகோமுகம் என்றழைக்கப் படுகிறது. 


நம்ம மக்கள் அதற்கும் மஞ்சள் பூசி குங்குமம் வைத்து வழிபடுகிறார்கள். 


மிக அதிகமாக Positive vibration உள்ள கோயில்.


பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம். 


வலது கரத்தில் 

தாமரை மொட்டு. தாயார் கொடுத்தது. 


‘கமல’ வரதராஜர் என்ற திருநாமத்துக்கு காரணம் புரிந்திருக்குமே! 


ஸ்ரீ அக்ஷ்ய பாத்திர விநாயகர்!


தாயார் சந்நிதிக்கு வெளியே அமர்ந்துள்ள தும்பிக்கை ஆழ்வாருக்கு பெயர் அக்ஷ்ய பாத்திர விநாயகர். 


அவரது தலைக்கு மேல் மிகச்சிறிய விதானம். அதுகூட மிக அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது


பெருமாள் சன்னிதியில் விஷ்வக்சேனர், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகன் ஆகியோர் உற்சவர் கோலத்தில் இருக்கிறார்கள்.  


கருவறையில் அழகிய லட்சுமி நரசிம்மர் உற்சவத் திருமேனியும் இருக்கிறது.


இந்த கோயிலில் கஜபூஜை செய்தால் விசேஷம். மேலும் பின்புறம் ஓடும் பாலாற்றில் பித்ரு 

காரியம் செய்வதும் சிறப்பு. 


விஜயநகர பேரரசர்கள், மூன்றாம் ராஜராஜன், ஜடாவர்மன், சுந்தர பாண்டியன் ஆகியோர் கோயிலுக்கு திருப்பணி செய்ததை கல்வெட்டுக்கள் சொல்வது மட்டுமல்லாமல்;

ஆலயத்தின் தொன்மையையும் வெளிப்படுத்துகின்றன. 


கோயிலின் தல விருட்சம் அரசமரம். 


இறைவன் திருப்பெயர் திருவரசு நாயனார், திருவரசூர் எம்பெருமாள் என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. 


அரசர் கோவில் வரதராஜப் பெருமாளை, பிரம்மா தவமிருந்து வழிபட்டதால்  பூலோக வைகுண்டம் என்ற சிறப்புப் பெயரை இத்தலம் பெற்றுள்ளது. 


மேலும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் பாலாறு, 

அரசர் கோயில் தலத்தில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் அதிசயம் கொண்டதாக அமைந்துள்ளது.


இது தட்சிண 

பிரவாகம் என்று அழைக்கப்படுகிறது.


ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. 


ராஜகோபுரம் இல்லை. பலிபீடம், கொடிமரத்தை ஒட்டி, கருடாழ்வார் சன்னிதி,கிழக்கு முகமாய் காணப் படுகிறது. 


திருச்சுற்றின் வலதுபுறம் கிழக்குநோக்கிய ஆண்டாள் சன்னிதி, 


வலதுபுறம் கிழக்கு நோக்கிய பெருந்தேவி தாயார் சன்னிதிகள் இருக்கின்றன.


தாயார் சந்நிதியின் சுற்றுப்புற சுவர்களில் நரசிம்மர் மற்றும் உலகளந்தபெருமாள் மிகச்சிறிய வடிவில் செதுக்கபட்டிருக்கிறது.


கருடாழ்வார் 

சன்னிதியின் எதிரே 

24 தூண்கள் கொண்ட அழகிய கல் மண்டபம் உள்ளது. 


குச்சியை நான்காக பிளக்கும் கல் தூண்


பெருந்தேவி தாயார் சன்னிதியின் முன்மண்டபம் சிற்பக் கலைநயம் மிக்கதாகும். 


தாயார் சன்னிதி கருவறை முன் மண்டபத்து தூண்கள் ஒவ்வொன்றையும் தட்டினால் வித்தியாசமான சப்தத்தை எழுப்புகின்றன. 


அமர்ந்த நிலையில் உள்ள சிறிய யாழிகளின்  தலையில் இருந்து எண் பட்டையிலான கல்தூண்கள் ஐந்து அமைந்துள்ளன. 


இவற்றை பதினாறு பட்டைகள் கொண்ட தூண்  ஒன்று உள்ளே நின்று இணைக்கிறது. 


அனைத்து தூண்களையும் இணைத்து ஒரே கல்லில் செதுக்கியுள்ள கலைநயம் போற்றத் தக்கதாகும்.


தாமரை இதழ்களோடு ஒவ்வொரு தூணுமே அமைந்துள்ளன. 


மண்டபத்தின் வலதுபுறம் உள்ள தூணின் உச்சியில் தாமரை இதழ்களில் குச்சி நுழையும் அளவிலான 

துளை ஒன்று காணப்படுகிறது. 


அதில் ஒரு சிறு  ஈர்க்குச்சியை நுழைத்தால் மறுபுறம் உள்ள துளை வழியே அது நான்காகப் பிளந்து வெளிவருகிறது.


இது வேதத்தை நான்காக பிரித்த இடமாம்.


இந்த அதிசயம் சிற்பியின் கைவண்ணத்தைப் பறைசாற்றுவதாகவே அமைந்துள்ளது.


கோயிலை சுற்றி வரும்பொழுது தண்ணீரில்லாமல் கிணறு ஒன்று பூட்டி கிடக்கிறது.


பாலாற்றங்கரையில் இருந்தும் சொட்டு தண்ணீர் இல்லை. பாலாறில் தண்ணீர் இருந்தால்தானே. 


அங்கே மணலே இல்லை அப்புறம்தானே தண்ணீர் இருப்பதற்கு.


திருஊரல் விழா

இவ்வாலயத்தின் மற்றொரு தனிச்சிறப்பு, 


சித்ரா பவுர்ணமியில் பாலாற்றில் நடைபெறும் திருஊரல் திருவிழாவாகும். 


ஊரல் என்பதற்கு நீர் சுரத்தல், குளிர்ச்சி என்பது பொருள். 


சித்திரையின் வெப்பத்தைத் தணிக்க, பாலாறு தன்னையும், தன்னைச் சார்ந்த  மக்களையும் குளிர்விப்பதாக 

இவ்விழா அமைந்துள்ளது.


சித்திரையில் வரும் பவுர்ணமி அன்று காலை வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியோடு, லட்சுமி நாராயணபுரம், பூதூர் வழியே ஈசூர் சென்று அங்குள்ள பாலாற்றங்கரைக்கு எழுந்தருள்வார். 


அங்கே பெருமாளுக்குத் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். (காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் சார்பாகவும், காஞ்சிக்கு அருகே ஓடும் பாலாற்றில் சித்திரா பவுர்ணமி அன்று திருஊரல்விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது)


பாலாற்றில் சுமார் 100 சதுர மீட்டர் மணல் திட்டு உருவாக்கப்பட்டு, அதைச் சுற்றி 2 மீட்டர் அகலத்தில் மணலை அகழ்ந்து எடுத்து நீர் சுரக்கச் செய்வார்கள். 


பெருமாள் மணல் 

திட்டில் வீற்றிருக்க, சக்கரத்தாழ்வார் அந்த நீரில் சுற்றி வந்தபின், 

தீப ஆராதனைகள் காட்டப்படும். 


பிறகு நிலவொளியில் விழா முடியும் வரை, விடியும் வரை அங்கேயே  காட்சி தருவார். 


விடியலில் மீண்டும் சக்கரத்தாழ்வார் நீரில் சுற்றி வருவார். 


அதன்பின் தீபாராதனைகள் முடிந்து பழையபடியே, அரசர் கோவில் வந்து சேர்வார். 


இவ்விழாவே 

திருஊரல் விழா என்று அழைக்கப்படுகிறது. 


இந்த விழாவைக் காண பல்வேறு ஊர்களில் இருந்தும், பல்லாயிரக்கணக்கானோர் திரள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆலய திருவிழாக்கள்!

சித்திரை தமிழ்ப்புத்தாண்டு, 

சித்ரா பவுர்ணமி, திருஊரல் விழா, 

ஆனித் திருமஞ்சனம், ஆடிப் பூரம், புரட்டாசி மூன்றாம் சனி, பங்குனி உத்திரம் என விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. 


வார நாட்களில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய மூன்று நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப் படுகின்றன. 


காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரயிலும் கோவில் நடை திறந்திருக்கும்.


 இங்கு செல்லும்போது நாம் கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள் செவ்வாழை பழம், தாமரைப்பூ, கல்கண்டு, ஏலக்காய்,கிராம்பு ஜாதிபத்திரி ,போன்றவை.


ஆலய அமைவிடம்


காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில், படாளம் அருகே பலாற்றங்கரையில் அரசர் கோவில் அமைந்துள்ளது. சென்னைக்கு தென்மேற்கே 67 கி.மீ, செங்கல்பட்டிற்குத் தென்மேற்கே 27 கி.மீ, காஞ்சிபுரத்திற்குக் கிழக்கே 60 கி.மீ. தொலைவிலும், படாளம் கூட்டுச் சாலையின் கிழக்கே 7 கி.மீ. தொலைவிலும், தாம்பரம் – திண்டிவனம் ரெயில் மார்க்கத்தில் படாளம் ரெயில் நிலையத்திற்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவிலும் அரசர் கோவில் இருக்கிறது.


தொடர்புக்கு ஸ்ரீ. கண்ணன் பட்டாச்சாரியார் 9698510956,

88706 30150


அரசர் கோயில் செல்லுங்கள்,

அபரிமிதமான செல்வ வளத்தை பெறுங்கள்!

 

இந்த ஆலயத்தின் சிறப்புகளை விளக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் கீழே!👇👇






ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.


*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.


தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.


ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.

பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.

நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.

மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.


தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏


Agathiyar Temple JeevaNadi

Tiruppur, Tamil Nadu

093843 95583


கூகிள் வரைபடம் வழி கீழே 👇


https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in


முகநூல் -


https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

ஓம் போக்த்ரே நமஹ , விஷ்ணு ஸஹஸ்ரநாமக்கதைகள்

 *அனந்தனுக்கு ஆயிரம் திருநாமங்கள்*!


*விஷ்ணு ஸஹஸ்ரநாமக்கதைகள்*!!


நல்ல ஆரோக்கியத்தையும், நீங்காத செல்வத்தையும், மன நிம்மதியையும் தரவல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.


அந்த உடலுக்கு ஏற்பட்ட நோய்கள் மட்டுமின்றி ஆத்மாவைப் பீடித்துப் படுத்தும் நோயாகிய பிறவிப் பிணியையும் போக்க வல்ல மருந்து  விஷ்ணு ஸஹஸ்ரநாமம்.


அந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலுள்ள 

1000 திருநாமங்களின் பொருளை எளிய கதைகள் மூலம் உணரலாம், வாருங்கள்.


145::.போக்த்ரே நமஹ (Bhokthre namaha)


திருமலைக்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் வருவதற்கு முன், அம்மலையில் ஒரு வேப்ப மரத்தின் வடிவில் பெருமாள் எழுந்தருளியிருந்தார்.


மரத்தின் வடிவிலுள்ள பெருமாளுக்கு அங்கு வாழ்ந்த வேடன் ஒருவன் தினமும் தேனும் தினைமாவும் சமர்ப்பிப்பதை

வழக்கமாகக் கொண்டிருந்தான். 


பெருமாளுக்குச் சமர்ப்பித்த பின், அவர் அமுது செய்த பிரசாதமாகக் கருதி,

அந்தத் தேனையும் தினைமாவையும் அவன் உட்கொள்வான்.


அவனுக்கு ஒரு மகன் இருந்தான். 


தன்னைப் போலவே தன் மகனையும் பக்தி உள்ளவனாக வளர்த்தான் அந்த வேடன்.


“நீ பெருமாளுக்கு நிவேதனம் செய்யாமல் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தக் கூடாது!” என்று சொல்லியே

தன் மகனை வளர்த்தான். 


ஒருநாள் வேடனும் அவன் மகனும் பெருமாளுக்கு நிவேதனம் செய்வதற்காகத் திருமலைக்குச் சென்றார்கள்.


வேடன் தனது பையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் தினைமாவு மட்டுமே இருந்தது. தேனைக் கொண்டு வர மறந்துவிட்டான்.


“மகனே! இங்கேயே இரு இம்மலையிலுள்ள தேன் கூடுகளுள் ஒன்றில் இருந்து தேன் கொண்டு வருகிறேன்!” என்று சொல்லிவிட்டு

வேடன் சென்றான். 


வெகுதூரம் சென்றும் அவனுக்குத் தேன் கிடைக்கவில்லை.


தினைமாவோடு மரத்தடியில் காத்திருந்த சிறுவனுக்கோ பசி தாங்கவில்லை.


“ஏழுமலையானே! இன்று தேன் கிடைக்காததால் தினைமாவை மட்டும் உனக்குச் சமர்ப்பிக்கிறேன்!” என்று பெருமாளுக்கு

வெறும் மாவை நிவேதனம் செய்துவிட்டு அந்தச் சிறுவன் அதை உண்ணத் தொடங்கினான்.


ஒரு பிடி மாவை அவன் வாயில் போட்டுக் கொண்டபோது, அங்கே தேனுடன் வேடன் வந்துவிட்டான்.


பெருமாளுக்குச் சமர்ப்பிக்காமலேயே தினைமாவைத் தன்மகன் உட்கொள்வதாக எண்ணிய வேடன், சிறுவனின் தலையை வெட்டுவதற்காகத் தன் வாளை உருவினான்.


அப்போது மரத்தைப் பிளந்து கொண்டு அங்கே ஸ்ரீநிவாசப் பெருமாள் தோன்றினார்.


நீலமேகம் போன்ற நிறத்துடனும், கௌஸ்துபம், வைஜயந்தி வனமாலை உள்ளிட்ட அணிகலன்களோடும்,

சங்கு சக்கரங்களைக் கையில் ஏந்தியபடியும் வேடன்முன் நின்ற ஸ்ரீநிவாசன்,

“அந்தச் சிறுவன் பக்தி என்னும் தேன் கலந்த தினைமாவை எனக்குச் சமர்ப்பித்துள்ளான்.


அதை நான் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன்!” என்று கூறினார்.


மேலும், “பக்தியோடு இலையோ, பழமோ, புஷ்பமோ, தண்ணீரோ எதைச் சமர்ப்பித்தாலும் நான் அதை ஏற்பேன்.


இவை எதையும் சமர்ப்பிக்க முடியாவிட்டால், என் பக்தன் கண்ணீரை மட்டும் சமர்ப்பித்தாலும் கூட போதும்!

நான் அதை ஏற்று அருள்புரிவேன்!” என்றார்.


இவ்வாறு வேடனுக்கும் அவன் மகனுக்கும் பெருமாள் திருமலையில் அருள்புரிந்த நாள் ஒரு புரட்டாசி மாத சனிக்கிழமை ஆகும்.


இச்சம்பவத்தின் நினைவாகத் தான் புரட்டாசி சனிக்கிழமைகளில் நம் வீடுகளில் மாவிளக்கு ஏற்றுகிறார்கள்.


அந்த வேடன் சமர்ப்பித்த தினைமாவுக்குப் பதிலாக அரிசிமாவும், தேனுக்குப் பதிலாக வெல்லமும் கலந்து

அதன்மேல் திரியிட்டு விளக்கேற்றுகிறோம்.


“ச்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே” என்று ராமாநுஜர் கூறியபடி, திருமலை என்னும் மலைக்கு மேல்

தீபம் போல் திருமால் விளங்குவதைக் குறிக்கும் விதமாக,மலைபோல்

அரிசி மாவையும் வெல்லத்தையும் வைத்து, அதன்மேல் மாவிளக்கு ஏற்றுகிறோம்.


இவ்வாறு பக்தியுடன் தனது அடியார்கள் சமர்ப்பிக்கும் பண்டங்களை அமுது செய்து அவர்களுக்கு அருள்புரிவதால்,

திருமால் ‘போக்தா’ என்றழைக்கப்படுகிறார்.


‘போக்தா’ என்றால் உண்பவர் என்று பொருள்.


அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 145-வது திருநாமம்.


“போக்த்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியவர்கள் சமர்ப்பிக்கும் அனைத்துப் பொருட்களையும்

திருமால் மனமுவந்து ஏற்றுக் கொண்டு அருள்புரிவார்.


ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.


*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.


தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.


ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.

பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.

நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.

மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.


தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏


Agathiyar Temple JeevaNadi

Tiruppur, Tamil Nadu

093843 95583


கூகிள் வரைபடம் வழி கீழே 👇


https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in


முகநூல் -


https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

திருப்பதி மலையில் ஆபத்தான மலை உச்சியில் இயற்கையிலேயே திருவேங்கடன் உருவத்திற்கு அபிசேகம்

 *திருப்பதி மலையில் ஆபத்தான மலை உச்சியில் இயற்கையிலேயே  திருவேங்கடன் உருவத்திற்கு அபிசேகம்.. கருடன்  காட்சி  தருகிறார் கோவிந்தா...கோவிந்தா...🙏🙏🙏🙏*









ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.


*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.


தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.


ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.

பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.

நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.

மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.


தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏


Agathiyar Temple JeevaNadi

Tiruppur, Tamil Nadu

093843 95583


கூகிள் வரைபடம் வழி கீழே 👇


https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in


முகநூல் -


https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/



தக்கோலம் கங்காதர ஈஸ்வரர் கோவில்

 🌹🌹#தண்ணீர் #தட்டுப்பாடு #போக்கும்

#கங்காதரர்🌹🌹🌹


சூரியன், சந்திரன், தக்கன், தாட்சாயிணி, உதிதி முனிவர் என பலராலும் வழிபாடு செய்யப்பட்ட தலம். ஏழுவிநாயகர், ஏழு சிவாலயங்கள், ஏழு அம்மன் கோயில்கள் கொண்ட அரிய ஊர். பருவ காலத்திற்கேற்ப நிறம் மாறும் தீண்டாத்திருமேனி திகழும் தலம், தொண்டை வள நாட்டின் 12-ஆவது பாடல் பெற்ற தலம், கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் இருந்தே புகழ் மிக்கதாய் விளங்கிய ஊர். பல்லவன், சோழன், விஜயநகர மாமன்னன் எனப் பல்வேறு மன்னர்களும் திருப்பணி மேற்கொண்ட தலம், குருப்பெயர்ச்சிக்குப் பெயர் பெற்ற ஸ்ரீதட்சிணாமூர்த்தி எழுந்தருளிய இடம். ‘தக்கோலப்போர்’ மூலம் இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஊர், தண்ணீர் தட்டுப்பாடு போக்கும் கங்காதீசுவரர் எழுந்தருளிய தலம் என தக்கோலத்தின் பெருமைகள் ஏராளம்.


தக்கோலத்தில் ஏழு சிவாலயங்கள் இருந்தாலும், அதில் தற்போது புகழ்பெற்று விளங்குவது அருள்மிகு கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை அருள்மிகு ஜலநாதீசுவரர் ஆலயமும், அதன் உள்ளே குடிகொண்டிருக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியுமே ஆகும்.



திருஊறல்


ஆனால், தேவாரப் பாடல் மூலம் பாடப்பெற்றதும், திருஊறல் என்ற பெயருக்கு காரணகர்த்தாவுமான அருள்மிகு கங்காதீசுவரர் ஆலயமோ, குடத்திலிட்ட விளக்காகவே இருக்கிறது. ஷீரநதி எனப்படும் கொற்றலை (குசஸ்தலை என்றும் கூறுவர்) ஆற்றின் கரையோரம் எழுந்துள்ள ஆலயம் ஸ்ரீகங்காதீசுவரர் ஆலயம். கங்கைக்கு இணையான நீர் வளத்தினைத் தரவல்ல இறைவன் இவர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இவரை முறையாக வணங்கினால் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கிவிடும் என்பது ஐதீகம்.



ஸ்ரீ கங்காதீசுவரர் ஆலயத்தின் சிறப்பே இங்குள்ள நந்திதான். இந்த நந்தியின் செயல்பாட்டை வைத்தே இன் றைய 'தக்கோலம்' அன்றைய திருஊறலாக அழைக்கப் பட்டது.


நந்தியின் வாய் வழியே நீர்


இந்த வட்டாரத்தில் நீர்நிலை உயர்ந்து இருப்பது கண்டு. எந்த இடத்தில் நந்தியை அமைத்தால், இடைவிடாது அதன் வாயிலிருந்து நீர் வழியும் என்பதைக் கண்டறிந்த அக்கால கட்டட நிபுணர்கள் நந்தியையும் அதற்கேற்ப இறைவன் ஸ்ரீ கங்காதீசுவரரையும் அமைத்துள்ளனர். இனி, நந்தியின் வாய் வழியே நீர் ஊறும் விதத்தினைக் காண்போம்.


சிவலிங்கத்தின் அடிப்பகுதியில், கிழக்கு நோக்கி வருகின்ற நீர், சிவலிங்கத்திற்கு எதிரேயுள்ள நந்தியின் வாயில் நுழைந்து வெளியே வருகின்றது. பின்பு, கருவறையைச் சுற்றியுள்ள பள்ளத்தில் பாய்ந்து, நுழைவாயிலுக்கு கிழக்கே உள்ள கட்டடத்தை ஊடுருவி, கோயிலுக்கு வெளியே கட்டப்பட்டுள்ள குளத்தில் விழுகிறது. இதன்பிறகு, மேற்குப்புறம் உள்ள மற்றொரு நந்தியின் வாய்வழியே வெளிவந்து கலக்கின்றது. இந்த அருமையான அமைப்பு தற்போது பாழ்பட்டு கிடப்பது பரிதாபம்.


நமது முன்னோர்கள் கட்டடக்கலையிலும், மின்சார உதவியில்லாமலும் அரிய நீரூற்றை வடிவமைத்துள்ளது பாராட்டுதற்குரியது.அவர்களின் நிபுணத்துவம் பெருமைப்படத்தக்கது. மேலும் தற்போது ஆற்றிலும் நீர் இல்லை. என்றாலும் நிலத்தடி நீர் அபரிமிதமாகக் கொட்டிக் கிடக்கின்றது. தோண்டிய இடமெல்லாம் நீர்வளம். இதற்குக் காரணம் இப்பகுதியில் குடிகொண்ட ஸ்ரீ கங்காதீசுவரரின்கருணை என்றால் அது மிகையல்ல. இதற்கென ஒரு புராணக்கதையும் கூறப்படுகின்றது.


உதிதி முனிவர்


உதிதி முனிவர், தான் தொழுநோயால் துன்புற வேண்டியிருப்பதை முன்கூட்டியே அறிந்தார். அதிலிருந்து மீள என்ன வழி என இறைவனை கேட்க, 'நீ ஷீரநதியோர நந்திதேவனை வழிபட்டு நலம் பெறுவாயாக' எனக் கூறினார். அதற்கேற்ப விருத்திஷீர நதியில், நந்திதேவரை வழிபட்டார். உதிதி முனிவர்.


உதிதி முனிவர் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த நந்தி தேவர், கங்கையையே தனது வாய்வழியே வெளிவரச் செய்து அதன்மூலம் ஒரு பொய்கையை உருவாக்கினார்.


அந்தப் பொய்கையில் நீராடி வழிபட்ட உதிதி முனிவரும் நலம் பெற்றார். அத்துடன் இந்த நீர்வளம் இப்பகுதியில் எக்காலமும் இருந்து நிலைக்க வேண்டும் என்ற வரத்தினையும், இறைவனிடமிருந்து பெற்றார் முனிவர். அதன் விளைவாகவே இன்றளவும் நீர்வளம் நிறைந்த பகுதியாக விளங்குகின்றது, தக்கோலம்.


ஒளவையாரால் சுரந்த கிணறு


தக்கோலத்திற்கு சுமார் ஏழு மைல் தொலைவில் உள்ள ‘புள்வேளூர்’ என்ற ஊரில் (தற்போது இதன் பெயர் பள்ளூரி ஏழு கிணறு என்ற இடம் உள்ளது. இக்கிணற்றிற்கு சங்ககாலப் பெருமை உண்டு என்பதும், இக்கிணற்று நீர் இன்றளவும் வற்றாது சுரந்து கொண்டிருப்பதும் ஓர் அபூர்வமான நிகழ்வாகும். ஒருசமயம் சங்ககாலப் புலவர் ஔவையார் புள்வேளூர் பூதனிட்ட வரகரசிச் சோற்றை உண்ட மகிழ்ச்சியில் பாடியபோது, இக்கிணற்றில் நீர் சுரக்கத்

தொடங்கியது என்பது வரலாறு. இன்றும் இது நீடிப்பது வியப்பான செய்தியாகும். இனிதக்கோலம் ஸ்ரீ கங்காதீசுவரர் ஆலயத்திற்கு வருவோம்.


பாடல் பெற்ற தலம்


 திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இறைவனும்இவரே.


“நீரின்மிசைத் துயின்றோன்


நிறை நான்முகனும் அறியாது அன்று


 திருஊறலை உள்குதுமே"


என்ற பாடலின் மூலம் இறைவனைப் புகழ்வதை அறிய முடிகின்றது.


இறைவனின் காட்சி


நான்முகனும், திருமாலும். இறைவனது திருமுடியைக் காணாமல் ஏமாற்றம் அடைந்த நிலையில், இறைவன் திருவுருவைக் காண வேண்டி தவம் இருந்தனர். இதேபோல வியாழ பகவானின் தம்பியும், 'சம்வர்த்தனர்' என்று அழைக்கப்பட்ட உதிதி முனிவரும். இறைவனின் திருக்கோலம் காண தவம் இருந்தனர். இம்மூவரின் ஆசையையும் நிறைவேற்ற, இறைவன் தன் துணைவியுடன் இந்தத் திருவூறலில் எழுந்தருளியதாக வரலாறு.


கட்டடக்கலை, அரிய நீரூற்று அமைப்பு ஆகிய சிறப்புகள் கொண்ட ஸ்ரீகங்காதீசுவரர் ஆலயம் இன்று புதர் மண்டிக் கிடக்கின்றது. மன்னர்கள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு திருப்பணி செய்த ஆலயம். இன்று ஒரு கால பூஜை என்ற அளவில் தன்னைச் சுருக்கிக் கொண்டுள்ளது, வேதனையான விஷயம்.



தண்ணீர் குறைதீர்


இக்கோயில் இறைவனை வழிபட்டு, வரம் பெறுவோர் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி நீர்வளத்துடன் வாழ முடியும் என்பது ஐதீகம். இவரை வழிபட்டு இவரது மனதைக் குன்று வைப்பது நல்ல பலனைக் கொடுக்கும் என்பது இப்பகுதி மக்களின் அசையாத நம்பிக்கை.


இச்சிறப்புமிகு தலமான 'தக்கோலம்' வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. சென்னைக்கு மேற்கே 64 கி.மீ., காஞ்சிபுரத்திற்கு வடக்கே 30 கி.மீ., அரக்கோணத்திற்கு தென்கிழக்கே 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு 86, 91, 91பி, 107, 108 என்ற எண்ணுள்ள பேருந்து வழித்தடங்கள் சென்னைப் விருந்து செல்கின்றன. இரயில் மூலம் செல்ல விரும்பினால் அரக்கோணத்தில் இறங்கி அங்கிருந்து பேரம்பாக்கம் செல்லும் பேருந்தில் பயணம் செய்தால், தக்கோலம் அடையலாம். தக்கோலம் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை தரிசிக்க வருவோர் ஆற்றங்கரையோரம் அமைந்துளள ஸ்ரீசுங்கா தீசுவரரையும் வழிபட்டு, நீர்வளப்பேறு பெறலாம். அத்துடன் குடத்திலிட்ட விளக்காகத் திகழும் இவ்வாலயம், குன்றி லிட்ட விளக்காகத் திகழ தன்னால் ஆன திருப்பணியையும் செய்யலாம்.

Gangatheswarar Temple https://maps.app.goo.gl/MDmF6ftPAjz1YPH69



ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.


*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.


தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.


ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.

பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.

நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.

மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.


தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏


Agathiyar Temple JeevaNadi

Tiruppur, Tamil Nadu

093843 95583


கூகிள் வரைபடம் வழி கீழே 👇


https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in


முகநூல் -


https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/