Tuesday 28 January 2020

மதுரை பசுமலை அகத்தியர் ஆலய கும்பாபிஷேகம்

*கந்த நாடி- January 7,2020*

(மதுரை பசுமலையில் பிப்ரவரி7ஆம் தேதி 2020ஆம் ஆண்டி குடமுழுக்கு விழா காண உள்ள அகத்திய மஹரிஷி ஆலயம் குறித்த முருகப்பெருமான் நாடியில் அருளிய வாக்கு)

🌸🌸🌺🌺🙏🌺🌺🌸🌸


வல்லான வகையான முறையான அமைப்பில் வந்ததொரு பாண்டிமாநகர நாடும் சீர்புகழும் நலமதுவும் உண்டு நண்மை கண்டன்ன் *அகத்தியன் ஆலயம் அரும்ப குடமுழுக்கு செய்தி அது கந்தன் மகிழ்ந்தேன்.*
சீருண்டு முறையாக கந்தசீடனது தனக்கும் அகத்தியனுக்கும் சிறப்புறவே ஓர் ஆலயம் அமைவது தொண்டர்கள் அனைவருக்கும் பரிபூரன ஆசிர்வாதம் உண்டு உண்டு. *நலமாக கந்த சீடன் தனக்கு ஓர் ஆலயம் அமைப்பதில் கந்தனுக்கு மகிழ்ச்சியே தான்.*
சிறப்புண்டு நலமாக இதை அமைக்கும் குழுமம் என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு கேள்விதன்னை அது தொடுத்ததால் லாபம் ஆகும். நலமுண்டு கிருத்திகை நன்நாள் இன்றும் உறைகின்ற நேரத்தில் மகிழ்ந்து உரைக்கும் நிலை அதுவும் கண்டன்ன் லாபம் லாபம். சீருண்டு முறையாக லாபம் மார்கழி  ஆயில்யம் முதல்ஆகவே நண்மை முன்னர் அனுகூலம் கன்டனன் குருவின் பூசை அனுகூலம் ஆனபடி கண்டேன் ஆதலால் நட்ப்பாக கண்டதொரு வேளை முடித்தது விட்டிடலாம்.
*குடமுழுக்கு கண்ட பின்னே ஒவ்வொரு ஆயில்யம் வரும் நேரம் முறையாக நண்மை நிலை அகத்தியன் ஜென்மம் நட்சத்திரம் தன்னில் முழுத்திருமஞ்சனத்தோடு அன்னதான தருமங்கள் செய்வதே இந்த குழுவிற்க்கு பணியது என்பேன்.ஓர் வருடம் அப்படியே செய்து வரலாம்.*

( இவ்வாலயத்தில் நடக்க உள்ள அற்புத மகிமை திருவிளையாடல்கள் எல்லாம் பின்வருமாறு கந்தன் உரைத்துள்ளார். நன்கு படித்து மகிழ்க.)

*பிள்ளை இல்லாதோர் பிள்ளை பெறுதல், கணவன் மனைவி சந்தோஷப்படுதல், மணம் ஆகாதோர் மணம் அமைக்கப்பெறுதல், பணி இல்லாதோர் பணி அமைக்கப்பெறுதல், பணம் இல்லாதோர் பணம் கிடைக்கப்பெறுதல், அருள் பெறுவோர் அருள் கிடைக்கப்பெறுதல், பொருள் கேட்ப்போர் பொருள் கிடைக்க பெறுதல், அவர் அவர் இச்சை எப்படியோ அப்படி அகத்தியன் படி அளப்பான். அனுகூலம் இது எல்லாம் திருவாதிரை மண்டலத்தில் பதிந்து சித்தர்கள் மண்டலத்தில் பதிந்து இருக்கும் செய்தி. முறையாக ஈசன் அருளும் பரிபூரணமாக கிட்டும்.*

செய்யும் தானம் அன்னதானம் பூசை முறையாக நல்லதாம் *அடியார்களை ஒன்று கூட்டி சிறப்புறவே நல்லதோர் அகத்தியன் புகழ்பாடி சீராக அவ்வாலயம் தன்னில் எல்லோரும் செல்ல முடியாவிட்டாலும் அவர் அவர் உரிய நிதி திரட்டி முறையாக அவ்வாலயத்தில் ஒவ்வொரு மாதமும் ஆயில்ய பூசை தனை அமர்த்த வேணும் செய்ய வேணும் என்பதே இந்நேர கட்டளை என்பேன் கேட்டு நட என்று கந்தன் பகர்ந்தார்.*

கந்த நாடி முற்றே -

🌸🌸🌺🌺🙏🌺🌺🌸🌸

*அஉம் ஶ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்குக*


*மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி*

அ/ மி சக்தி மாரியம்மன் கோவில் வளாகம்,
தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை-4.
திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் மன்னர் திருமலை நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி  அருகில்.

மதுரை திருமங்கலம் ரோட்டில் மூலக்கரை பஸ்டாப் இறங்கி பார்த்தாலே எதிர்புறம் கோவில் தெரியும். திருப்பரங்குன்றத்திற்கு  முந்தின ஸ்டாப்.

Sri Sakthi Mariamman Temple
Thiagarajar Colony
Pasumalai
Madurai - 625 004
Tamilnadu State
India

https://goo.gl/maps/zgVvY5DD6fvP65VP6 Dropped pin
Near Arulmiga Sri Sakthi Mariamman Temple, Pasumalai, Madurai, Tamil Nadu 625004, India



*அஉம் அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக*

🌺🌺🌸🌸🙏🌸🌸🌺🌺


சர்ப்ப காவடி

சர்ப்பக் காவடி எடுப்பவர்கள் 41 நாள் விரதம் இருப்பார்கள். அவர்கள் கனவில் ஒரு குறிப்பிட்ட பாம்பை காட்டில் எந்த இடத்தில் இருக்கிறது என்று கனவு வருமாம். அவர்களும் அந்தக் காட்டில் போய் ஒரு குறிப்பிட்ட அந்த ஜாதி பாம்பை போய் பிடித்து அதை ஒரு பெட்டியில் வைத்து உப்பிட்டு கொண்டு வந்து, அதைக் காவடியாக சுமந்து வந்து திருச்செந்தூர் கடற்கரையில் விடுவார்கள். அது வேறு எங்கும் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் நேரே கடலின் உட் பகுதிக்கு சென்று விடும்.இந்த சர்ப்பக் காவடி முன்னாட்களில் ஒவ்வொரு ஆண்டும் நிறையவே வரும். இப்போது எப்போதாவது அபூர்வமாகத்தான் வருகிறது. இப்படி சர்ப்பக் காவடி எடுப்பது அவரவர்களின் நம்பிக்கை.



மீனாஷியும்_மூக்குத்தியும்

மீனாஷியும்_மூக்குத்தியும்

"அம்மாடி!! மீனாக்ஷி!! ராஜ உத்தரவு!! மடப்பள்ளில நிறைய நைவேத்யம் பண்ணனும்!! முடியல்லே!! சித்த தூங்கிக்கறேன்!! மறக்காத நேரத்துக்கு எழுப்பிடுடீ!! மறந்துடாதே".

மீனலோசனையின் மீதுள்ள அதீதமான உரிமையால் ஶ்ரீநிவாஸர் தேவிக்கே உத்தரவிட்டு, மடப்பள்ளியை உள்பக்கமாய் தாழ் போட்டுக்கொண்டு உறங்கிப்போனார்.

தடதடவென சத்தம்!! "யார் மடப்பள்ளி கதவை இப்படி உடைக்கறது!!" கோபத்துடன் எழுந்த ஶ்ரீநிவாஸர் கதவைத் திறந்து பார்த்தால் ராஜ ஸேவகர்கள்!!

"என்னங்கானும்!! நீர் கதவை அடைச்சுண்டு உள்ள என்ன பண்றீர்!! காலத்துக்கு அம்பாளுக்கு நைவேத்யம் ஆக வேண்டாமா!! குருக்கள் காத்துண்ட்ருக்கார்!! நைவேத்யம் எடுத்துண்டு வாங்கோ!!" ராஜ ஸேவகர்களோடு வந்த பட்டரின் குரல்.

"ஐயோ!! மீனாக்ஷி!! கைவிட்டுட்டியேடீ!! எழுப்பி விடுன்னு சொன்னேனே!! ஒரு நைவேத்யமும் தயாராகலையே!! நான் என்ன பண்ணுவேன்!! அம்மா!! ராஜ தண்டனை தான் எனக்கு இன்னிக்கு!!" பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தார் ஶ்ரீநிவாஸர்.

"நகருங்காணும்!!" பட்டரொடு நான்கைந்து பேர் நுழைந்தனர் உள்ளே!!

"ஆஹா!! சக்கரைப் பொங்கல்!! தேங்காய் சாதம்!! புளியஞ்சாதம்!! எலுமிச்சை சாதம்!! போளி!! வடை!! பால் பாயசம்!! ஒன்னு பாக்கியில்லையே ஓய்!! இத்தனையும் தனியாவா பண்ணேள்!! ஒன் சிஷ்யாள்ல்லாம் அண்ணா கதவை சாத்திண்டார்!! எப்படி திறக்கறதுன்னு தெரியல்லேன்னு புலம்பிண்ட்ருந்தாளே!! " சொன்னவரின் கண்கள் சர்க்கரை பொங்கலிலும், போளியிலுமே இருந்தது.

மீனாக்ஷிக்கு நைவேத்யம் ஆனதும் ஸோமசுந்தரன் இதை சாப்டறானோ இல்லையோ, நாம சாப்டுடனும் அவர் மனது துடித்துக் கொண்டிருந்தது.

ஶ்ரீநிவாஸருக்கு ஒரே குழப்பம்!! "என்னதிது!! நாம தான் எழுந்துக்கவே இல்லையே!! யார் இதெல்லாம் பண்ணிருப்பா!!" நிகழ்வின் ப்ரமிப்பில் ஶ்ரீநிவாஸர் விலகவில்லை.

"உம் கைக்கு தங்க மோதரம் போடனும் ஒய்!! வாரும்!! மீனாக்ஷிக்கு தீபாராதனை ஆகப்போறது!! பார்ப்போம்!!" எல்லோரும் சிவராஜமாதங்கியின் ஸந்நிதிக்கு விரைந்தனர்.

குருக்கள் அம்பாளுக்கு நைவேத்யம் செய்து பின் தீபாராதனைக்கு திரையை விலக்கினார்.

"ஐயோ!! மாணிக்க மூக்குத்தி காணுமே!! அம்மா!! மீனாக்ஷி!! என்னடி சோதனை இது!!" குருக்களின் கதறல் மீனாக்ஷி கோவிலுக்கு வெளி வரை எதிரொலித்தது.

மீனலோசனையின் அழகையே மெருகூட்டும் மூக்குத்தி தொலைந்த துக்கம் ராஜாவிற்கும், மற்ற அனைவருக்கும்!! ஶ்ரீநிவாஸருக்கோ நடப்பதைக் கண்டு பயம்!! அபசாரம் நிகழ்ந்ததோ என்று!!

அசரீரி கேட்டது:

"அஞ்சற்க!! என் பிள்ளை ஶ்ரீநிவாஸன் சரீர களைப்பால் என்னை எழுப்பிவிடச் சொல்லி உறங்கிப்போனான்!! காலத்தில் எழுப்பிடத் தான் நானே சென்றேன்!! அயர்ந்து அவன் உறங்குவதைக் கண்ட நான் அவனை எழுப்ப மனமில்லாது மடப்பள்ளிக்குள் சென்றேன். துளி வெளிச்சமும் இல்லாத இம்மடப் பள்ளியில் சமைப்பதற்கு வெளிச்சம் வேண்டுமே என்று எனது மூக்குத்தியை கழற்றி வைத்து, அதன் ஒளியில் நானே எனது நைவேத்யங்களை சமைத்தேன்!! குழந்தை உறங்குவதைக் கண்ட தாய் அதனை எழுப்புவாளோ!! அவனால் செய்ய வேண்டிய பணி என்னால் முடிக்கப்பட்டது!! மடப்பள்ளிக்கு சென்று பாருங்கள் !! மூக்குத்தி இருக்கும்!!" சட்டென நின்றது அசரீரீ

நடப்பது கனவா நினைவா என யோசிப்பதற்க்குள் மீனாக்ஷி மூக்குத்தி மடப்பள்ளியிலிருந்து வந்தது.

"அம்மா!! மீனாக்ஷி!!" ஶ்ரீநிவாஸர் கண்களில் ஜலம் பெருக கதறி மீனாம்பாளின் பாதத்தில் விழுந்தார். "அம்மா!! அம்மா!!ன்னு ஸதா கூப்பிட்டதற்கு நீயே எனக்காக நைவேத்யம் சமைச்சிருக்கியே!! தாயே!! நான் என்ன பாக்யம் பண்ணேன்!!" கண்ணீர் கண்களை மறைக்க கதறினார் ஶ்ரீநிவாஸர்.

"தாயே!! மீனாக்ஷி!! தாயே!! மீனாக்ஷி!!" லக்ஷக்கணக்கான ஜனங்கள் நடந்த அதிசயத்தைக் கண்டு திரண்டனர் கோவிலில்!!

ராஜனும் அமைச்சரும் ஶ்ரீநிவாஸரை ஸாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தனர் "ஸ்வாமீ!! நீரே மீனாக்ஷி!! மீனாக்ஷியே நீங்க!!" வேறொன்றும் சொல்லத் தோணவில்லை யார்க்கும்!!

"மீனாக்ஷி!! மீனாக்ஷி!!" திக்கெட்டும் அம்மையின் நாமம் ஒலித்தது.

ராஜராஜேச்வரியான மாதங்கிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

"பாகம் செய்து என் நாவை பாடவும் செய்தாய் தாயே
ஊகமிலார்க்கு இன்னும் உதவினாய் சோகந்நீர்
நாதநலம் நாட்டுகின்ற நான்மறையாம் தண்டை சேர்
பாதநிழல் யான் தங்கப்பண்"

ஶ்ரீநிவாஸரின் நா பாடத்தொடங்கியது!! ஆம் கல்வியறிவு இல்லாத ஶ்ரீநிவாஸர் கவிஶ்ரீநிவாஸர் ஆனார்.

காமாக்ஷி பட்டாரிகை மூககவிக்கருளியது போல், அகிலாண்டநாயகி காளமேகத்திற்கு அருளியது போல், மீனாக்ஷம்மை ஶ்ரீநிவாஸர்க்கு அருளி விட்டாள்.

படிப்பறிவில்லா ஶ்ரீநிவாஸர் பராசக்தி கடாக்ஷத்தால் கவிமாரி பொழிந்தார்.

"மீனாக்ஷி!! மீனாக்ஷி!!" நாமம் ஒன்று போதாதோ!! மோக்ஷமே கைமேல்!!



Monday 27 January 2020

அண்ணாமலையார் கிரிவல சூட்சுமம்

🌸🌸🌸🌸🙏🌺🌺🌺🌺

*அகத்தின் ஈசன் பாதம் காப்பு*

🌸🌸🌸🌸🙏🌺🌺🌺🌺


ஞானிகள் எல்லாம் மல ஜலத்திற்கு அப்பாற்பட்டவர்கள்தான். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர்களுக்கு நம்மைப் போல எலும்பும், சதையும் சேர்ந்த உடம்பு கிடையாது என்பதும் உண்மையே. அவர்கள் ஒளி உடம்பைப் பெற்றவர்கள். தேவ சரீரம் அவர்களுடையது. ஆனால், *பூலோகத்திற்கு வரும்போது, அதிலும் திருஅண்ணாமலை கிரிவலத்திற்காக வரும்போது பூமியின் கர்ம விதிக்கு உட்பட்டு உடல் தாங்கி வர வேண்டும் என்பது எம்பெருமான் அருணாசல ஈசன் விதித்த விதி. இதில் யாருக்கும் விலக்கு கிடையாது.*

*எந்த லோகத்தைச் சேர்ந்த எந்த தேவனாக இருந்தாலும், அசுரனாக இருந்தாலும், அவதார மூர்த்திகளாகவே இருந்தாலும் இந்த நிபந்தனைக்கு உட்பட்டுதான் கிரிவலம் மேற்கொண்டாக வேண்டும்.*

அவ்வாறு கிரிவலம் வரும்போது அவர்களும் மனிதர்கள், மிருகங்கள் போன்ற பூமி வாழ் ஜீவன்களுக்கு உரித்தான வினைகளான உணவு, நீர், உடை போன்ற வசதிகளை ஏற்று அதன் மூலம் பூமியில் உள்ள ஜீவன்கள் மேல் நிலை அடைய அனுகிரகத்தை வழங்கிச் செல்கிறார்கள்.

மனிதர்கள் மேற்கொள்ளும் இறைவழிபாடு சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், தெய்வங்களின், மகான்களின் வழிபாடு பொது நலத்திற்காக மேற்கொள்ளப்படுவது.

🌺🌺🌺🌺🙏🌺🌺🌺🌺

*அகத்தின் ஈசன் புகழ் ஓங்குக*

🌺🌺🌺🌺🙏🌺🌺🌺🌺

காசி

#காசி

காசி என்பதை ஊராகப் பாக்காமல் அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.

காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்ப தற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம்.

வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை.

சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள்.

அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.*

நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும்.
நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள்.
4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள்.
ஆக, 13*9*4 = 468.
நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114.
இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது.
மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும் செய்ய அவசியம் இருக்காது.
மற்ற 108ம் சரியாய் இருந்தால், இந்த நான்கும் தானாய் மலர்ந்திடும்.
இந்த 108ல் 54 பிங்களா (ஆண்தன்மை), 54 ஈடா (பெண் தன்மை).
அதனால் 108 அடிப்படை சக்தி ஸ்தலங்களில் 54 சிவன், மற்றும் 54 தேவி கோவில்கள் காசியில் அமைக்கப் பட்டன.

காசி நகர அமைப்பே வடிவியல் (geometry) அளவிலும் கணிதவியல் அளவிலும் மிகக் கச்சிதமான, அற்புதமான வடிவமைப்பு.
பிரபஞ்சத்தின் சிறு அம்சமான மனிதனும், அந்தப் பிரபஞ்சமும் தொடர்பு கொள்வதற்கான மிக நேர்த்தியான அமைப்பு. இது முழு உயிரோட்டத்தில் இயங்கும் ஒரு மாபெரும் மனித உடலின் பிரதிபலிப்பு.
முழு உயிரோட்டத்தில், முழுமையான சக்தி அமைப்பில் ஒரு உடல் இயங்கினால், அதுவே பிரபஞ்சத்தை அவனிற்குத் திறந்து வைக்கும்.

இப்படி பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய இடமாகத்தான் சிவசக்தியினால் காசி உருவானதாம்.
இங்கே ஒருவர் வாழமுடிந்தால், பிரபஞ்சத்துடன் இவ்வழியில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தால், எவர் தான் காசியை விட்டு வெளியேற சம்மதிப்பார்..?
468 கோவில்களில், 108 போக, மீதத்தில் 56 விநாயகர் கோவில்கள், 64 யோகினி கோவில்கள், 12 சூரியன் கோவில்கள், 9 நவதுர்கை கோவில்கள், 9 சண்டி கோவில்களும் அடங்கும்.
இதில் 56 விநாயகர் கோவில்கள் 8 திசைகளில், 7 பொதுமையம் கொண்ட வட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது.
இந்த வட்டத்தில் நடக்க ஆரம்பித்தால், இதன் முடிவு காசி விஸ்வநாதர் கோவிலில் முடியும்.
அதோடு சூரியனின் 12 கோவில்களும் தக்ஷிணாயனத்தில் இருந்து உத்தராயணத்திற்கு நகரும் சூரியனின் திசையை ஒத்து இருக்கிறது.
இப்படி படைப்பை உற்று நோக்கி, ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ற வகையில் இயங்கும் வண்ணம் காசி அமைக்கப்பட்டது.
இது தவிர சிவன், சப்தரிஷிகளை உலகின் வெவ்வேறு மூலைக்கு அனுப்பிய போது, அவர்கள் அவரைப் பிரிய மனமில்லாமல் ஏங்கியதால், அவர்களுக்கு ‘சப்தரிஷி’ பூஜையை கற்பித்து, அதை அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தால், சிவனுடன் இருக்கும் உணர்வைப் பெறுவார்கள் என்றும் சொல்லி அனுப்பினாராம்.
இன்றளவிலும் இப்பூஜை விஸ்வநாதர் கோவிலில் இரவு 7 மணியளவில் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பு.
அப்பூஜையை உணர்ந்தால் தான் புரியும். அப்பூஜையை செய்பவர்களுக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை எனினும், அதைச் சிறிதும் பிசகாமல் செய்வதால், அவ்விடத்தில் நம்பற்கரிய சக்தி உருவாகிறது.
அக்காலத்தில், இந்தப் பூஜை ஒரே நேரத்தில், காசியின் 468 கோவில்களிலும் செய்யப்பட்டது.
இதன் தாக்கத்தை வார்த்தைகளில் அடக்கிட முடியாது.
இப்படியொரு மாபெரும் உயிரோட்டத்தில் காசிதிளைத்திருந்ததை நாம் அனுபவிக்காமல் போனது, நம்முடைய மிகப்பெரும் துரதிர்ஷ்டம் என ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.
இதை நாம் கவனித்துப் பார்த்தால், எல்லையில்லாமல் வளர வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு.

இது வெறும் ஆசையாய் இருந்தால் போதாது என்று, அதை நிறை வேற்றிக் கொள்வதற்குத் தேவையான கருவியாய் காசி உருவாக்கப்பட்டது.
இது ஒரு சக்தி உருவம். இந்த உருவத்திற்கு ஏற்றாற்போல், அதைச் சுற்றி ஒரு ஊர் தானாக உருவானது.
அதனால் காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.
இந்த மகத்தான வாய்ப்பை உணர்ந்துதான் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள் காசியை இன்றும் போற்றி வருகின்றனர்.
ஓம் நமசிவாய.



புதுச்சேரி மாநிலம் வில்லியனுர் அருகில் திருக்காஞ்சி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம்

காசியை மிஞ்சும் ஒரு கோவில்
புதுச்சேரி மாநிலத்தில் எங்குள்ளது தெரியுமா.??

இந்துக்கள் பலரும் வாழ்வில் ஒரு
முறையாவது காசிக்கு செல்லவேண்டும்
என்று நினைப்பதுண்டு.

கங்கை கரை ஓரத்திலே கோவில் கொண்டு காசி விஸ்வநாதர் தன் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

அதே போல காசிக்கு நிகரான, ஏன் காசியை
விட ஒரு படி அதிகம் சக்தி கொண்ட ஒரு கோவில் புதுச்சேரியிலும் உள்ளது.

அந்த கோவில் எங்கு உள்ளது, அதன் சிறப்புகள் என்ன என்று பார்ப்போம் வாருங்கள்.

புதுச்சேரி மாநிலம் வில்லியனுர் அருகில்   திருக்காஞ்சி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம்.

காசியில் உள்ள கோவில் எப்படி கங்கை கரையோரம் அமைந்துள்ளதோ அதே போல ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம், சங்கராபரணி என்னும் நதிக்கரையில் அமைந்துள்ளது.

 சங்கராபரணி நதியானது கங்கை நதிக்கு நிகராக போற்றப்படுகிறது. இந்த நதிக்கு கிளிஞ்சியாறு, செஞ்சியாறு, வராக நதி என்று பல பெயர்கள் உண்டு.

இந்த கோவில் சங்கராபரணி நதிக்கரையில் இருந்தாலும் இங்குள்ள இறைவன் கங்கைவராக நதீஸ்வரர் என்று அழைக்கப்படுவதில் இருந்தே நாம் சங்கராபரணி நதியானது கங்கை நதிக்கு ஒப்பானது என்று அறிந்துகொள்ளலாம் .

இந்த கோவிலில் வீற்றிருக்கும் ஐயனை வேண்டினால் பதினாறு செல்வங்களும் ஒருசேர கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதோடு பூர்வ ஜென்ம பாவ தோசங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகும் என்று கூறப்படுகிறது.

இந்த திருத்தலத்தில் சித்தர்களின் சமாதிகள்
பல இருப்பதாக குறிப்புகள் உள்ளன.

இந்த ஸ்தலமானது காசிக்கு நிகராக போற்றப்படுவதற்கு பின் ஒரு புராண
காலத்து கதையும் உள்ளது.

ஒரு சமயம் வேத விற்பன்னர் ஒருவர் தன்னுடைய தந்தையின் அஸ்தியை கங்கையில் கரைக்க புறப்பட்டு சென்றுள்ளார்.

போகும் வழியில் இங்குள்ள இறைவனை தரிசிக்க விரும்பிய அவர் இங்கு வந்துள்ளார். இங்கு வந்ததும் தன்னுடைய தந்தையின் அஸ்தி முழுவதும் பூக்களாய் மாறி உள்ளது.

இதை கண்டு அவர் மெய் சிலிர்த்துள்ளார்.

அஸ்தியை பூக்களாக மாற்றும் சக்தி இந்த தளத்திற்கு உள்ளது என்றால் இது காசியை மிஞ்சும் வகையில் சக்தி பெற்ற ஒரு தலம் என்பதை அவர் உணர்ந்துள்ளார்.

அந்த சமயம் அவருக்கு, காசியில்
செய்ய வேண்டிய பிதுர் கர்மாக்களை இங்கும் செய்யலாம் என்றொரு அசரீரி கேட்டுள்ளது.

இங்குள்ள சிவலிங்கமானது ஏறத்தாழ 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்று கூறப்படுகிறது.

இந்த சிவலிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்துள்ளார் என்று ஸ்தல வரலாறு கூறுகிறது. மூலவர் மேற்கு நோக்கி அமர்ந்துள்ள இந்த தலத்தில் காமாட்சி மீனாட்சி என இரு அம்மன்கள் உள்ளனர்.

இங்குள்ள கருவறையானது தஞ்சை பெரிய கோவிலின் கருவறையை ஒத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.🙏🙏🙏

சிவாய நம💐💐💐


Tuesday 21 January 2020

கர்ணனின் முற்பிறவி

*பூர்வ ஜன்மத்தில் அசுரனாக இருந்த கர்ணன்*

மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது. கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அறிந்திருந்தான்.

அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்!மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட வாழ்வு?

இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில் உள்ளது.பூர்வ ஜன்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற அசுரனாக இருந்தான்.

தேவர்களை நிர்தாட்சண்யமின்றி தாக்கி வந்தான். பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது.

எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது. அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12வருடங்கள் தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும்.

இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும் போரும் யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன்பின் ஒன்றாக அறுத்தெறிந்தால்சஹஸ்ர கவசன் மடிவான். இதை யாரால் செய்து சாதிக்க முடியும்?எனவே, அவனிடமிருந்து தேவர்கள் தாங்கொணாத் துயரத்திற்கு ஆளாயினர்.

அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி அசுர உபாதையை ஒழித்து உதவுமாறு வேண்டினர். விண்ணவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறுதல் உண்டு பண்ணத் திருவுளம் கொண்டு நர நாராயணர்களாக அவதரித்தார்.

ஸஹஸ்ர கவசனை ஸம்ஹரிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர். நரன் 12 வருடங்கள் தவம் புரிய, நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார். இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி செய்து 999 கவசங்களை அறுத்து எறிந்தனர்.

இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது. எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான்.இந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள (பூர்வ ஜன்ம கவசம்) ஒரு கவசத்தோடு பிறப்பெடுத்தான்.

இந்தக் கவசமும் அறுக்கப்பட வேண்டியதே! இந்தக் காரியத்திற்காகவே பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும், நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் ஜனித்தனர்.

12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும். ஒரு கவசத்தை இந்திரன் மூலம் நீக்கிய விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே.

கவசம் நீங்கியதால் தான்அர்ஜுனன் கர்ணணை கொல்ல முடிந்தது.நம்முடைய இந்த ஜன்ம வாழ்க்கை நிகழ்வுகளுக்குக் காரணம் தெரியாமல் திகைக்கிறோம். இவற்றுக்குக் காரணம் பூர்வ ஜன்மக் கர்மாக்கள் ஆகும்.

கர்ணனின் வாழ்க்கை அமைந்த விதம் இந்த உண்மையை நிரூபிக்கிறது.


Wednesday 15 January 2020

தனி நாடி தி-இரா. சந்தானம்







தனி நாடி தி-இரா. சந்தானம்



மார்கழி ஆயில்ய நட்சத்திரம்
அகத்தியர் எம்பெருமானாரின் குரு பூஜை நாள்

அருள்மிகு அகத்தியர் லோபாமுத்ரா குரு பூசை

அகத்தியர் ஜீவ நாடி பீடம் - பொகளூர்

கோவை

காலை 5 மணி


நாடி கேட்பவர் - தி. இரா . சந்தானம் 
என் நன் மகனே
நீ செய்த பணிகளை கண்டு யாம் மனமகிழ்ந்தோம்
உமக்கு யாம் அன்றுரைத்தோம் உம்  அருகில் அல்ல உன் உள் இருந்து உமை காப்போம் என்று
வேல் விருத்தம் அதை செப்பித்து வா
வேலவன் துணை நிற்பான்
எமது பூரண நல்லாசியும் உமக்கு கிட்டுமே

அன்றுரைத்தேன் மூடனே
பிறவியில்லா பெரும் சுடரே
ஆலய பனி அதை ஆசிரமம் தனை பணி தனை மேற்கொள்ளப்பா
திரை வடிவு தன் னிலே யாம் உமக்கு துணை நிற்போம்
ஏசுவோரை கண்டு மனம் தளராதே
அவனவன் விதி கர்மத்தால் நிலை மாற்றம் பெறுமே

இன்னவனே - நீ செய்தொழில் தன்னிலே மீண்டுமொரு உயர்நிலை செல்வாய்
அன்றுரைத்தேன் நாலு நாமம் கொண்ட ஒருவன் ஆசிரமம் ஆலய பணிக்கு உனக்கு உதவிக்கரம் புரிவாரே
மனம் தளராதே 
மங்கை அவளும் முன் வந்து மண்டியிட்டு யாசகம் தனை பெற்று உன்னிடம் தருவாளே

அன்றுரைத்தேன் மூடனே நான்கு ஆலயங்கள்  சென்று யாசகம் வாங்கி பூசையிடு
நல்லதோர் நிலை பெறுவாய்
நீ ஈன்ற மழலைகள்  வாழ்வு சீர் பெரும் அப்பா
எமது பூரண ஆசி உமக்கு என்றும் உண்டே

உன் மனை தனிலே யாம் நித்தம் உனை நோக்குகிறேனே
கவுளி வடிவிலே சென்று வட கிழக்கிலே சொல்லுவேனே அறியவில்லையா உமக்கு
நாடி வழி நற்பலன்களை யாம் உரைப்போம் இங்கு
கவுளி வடிவில் வந்து உச்சாடம் கொடுப்போம் அங்கு

உமையே காப்போம்
உமையே ஆசீர்வதிப்போம்
நிலை பெறுவாய் சீர் பெறுவாய்

- முற்றே -

பொது நாடி 13/01/2020 மார்கழி ஆயில்ய நட்சத்திரம் அகத்தியர் எம்பெருமானாரின் குரு பூஜை நாள்


பொது நாடி 13/01/2020

மார்கழி ஆயில்ய நட்சத்திரம்
அகத்தியர் எம்பெருமானாரின் குரு பூஜை நாள்

அருள்மிகு அகத்தியர் லோபாமுத்ரா குரு பூசை

அகத்தியர் ஜீவ நாடி பீடம் - பொகளூர்

கோவை

காலை 5 மணி

நாடி கேட்பவர் - தி. இரா . சந்தானம்  மற்றும் பிற அடியவர்கள்

நாடி வாசிப்பவர் - குருஜி இறைசித்தர்

*********************************************************************
கடவுள் வாழ்த்து

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆள் என்னை கொண்டாய் போற்றி
மெய்யாகி நின்ற நிழலே போற்றி
காவாய் கனக திரளே போற்றி
என் கயிலை மலை வாழ் என் ஐயனே போற்றி போற்றி போற்றி

சிரம் தாழ்ந்து வணங்கும் அடியோரின் தேவ தேவனே போற்றி
சிரம் தாழ்ந்து உலகாளும் என் அப்பன் சக்தி வடி வேலவன்
ஆதி சக்தியின் திருப்பாதம் தொழுது
உதய நட்சத்திரம் தன்னிலே யாம்
பொது நிகழ்வுதனை அருளுரைக்கிறோம்
கவனமுடன் கேளாய் என் மகனே

இவ்வருடம் கண்டம் விட்டு கண்டம் இருக்கும்
ஒரு பெரு நாட்டுக்கும் சிறு நாட்டுக்கும்
பெரும் யுத்தம் ஒன்று தோன்றுமய்யா
அந்த யுத்தத்திலே  பல மானிடர்கள் மடிவார்களே
இது விதியால் வந்த நிலையே

மீண்டுமோர்  கண்டம் விட்டு கண்டம் இருக்கும்
மண் தனிலே ஆட்சி மாற்றம் பெருமப்பா

சில சோக நிகழ்வுகள் அரங்கேறுமே
ஜலத்தால் நிலை குலையுமப்பா
யுத்தத்தால் மான்றுவானே

யாம் இருக்கிறோம் அஞ்சுவது ஏன் மழலையே
அன்றுரைத்தேன் அறிவாய்
என் மக்களே நன் மக்களே
வேலவன் நாமம் கொண்ட ஒருவன் ஆட்சி புரிவான் என்று
ஆட்சி புரிவான் அய்யா
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ________________________________________
இது சித்தனின் நித்திய வாக்கே

நிலைகள்  மாற்றம் பெரும் அப்பா
உற்பத்தி தன்னிலே மேலோங்கும்
மக்களின் பஞ்சம் தீரும்
மழை பொழியும் அப்பா
விவசாயம் செழிக்கும் அப்பா

மந்த நிலை பெற்ற மானிடரெல்லாம்
மனம் திருந்தி ஆன்மீகத்தை நாடி வருவான்
ஏசுவோர் ஏசட்டும்  தூற்றுவோர் தூற்றட்டும்
 எல்லாம் எமக்கே

யாம் இருக்கிறோம் அஞ்சுவது ஏன் மழலைகளே
நன் மக்களே - சனி என்று உரைக்கும் நன் நாளிலே
தானமதை செய்யுங்கள் சுபிட்சம் பெரும்
ஆறுமுகன் துணை நிற்க ஆஞ்சிநேயனின் அருள் பெறுவார்களே

 - முற்றே -

Tuesday 14 January 2020

சாரங்கம் - ராம பாணம்

🙏
🕉
’சார்ங்கம்’ என்றால் உடனே உங்களுக்கு ஸ்ரீராமரின் வில் நினைவுக்கு வந்திருக்கும். ஆனால் கும்பகோணம் நினைவுக்கு வருமா ?

’ஆராவமுதே ! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே’  என்ற இந்த ஒரு பாசுரமே ஸ்ரீராமரின் சாரங்கம் போல் நாதமுனிக்குக் கிடைக்க  அதிலிருந்து சடகோப சர மழை 4000 அம்புகளாகப் புறப்பட்டவை தான் திவ்யபிரபந்தம்.

கும்பகோணம் பெருமாளின் பெயர் சாரங்கபாணி !  ஆராவமுதமான ஆழ்வார் பாசுரங்களைக் கொடுத்து  ஆராவமுதாழ்வாரானார் !

திருமழிசையாழ்வார் கும்பகோணம் சாரங்கபாணியைப் பார்த்தவுடன் அவருக்கு ஸ்ரீராமர் காட்டில் சீதையைத் தேடிச் சென்றது நினைவுக்கு வர,  உடனே


நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞான மேனமாய்
இடந்தமெய் குலுங்கவோ? இலங்குமால் வரைச்சுரம்
கடந்தகால் பரந்தகாவி ரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசுவாழி கேசனே!
”காட்டில் சீதாபிராட்டியைத் தேடி நடந்ததால் கால்கள் நொந்ததோ ; வராகனாய் உலகைப் பெயர்த்து எடுத்த களைப்பா ? பக்தன் வந்தது தெரியாமல் படுத்துக்கிடக்கிறீரே எழுத்திருக்கக் கூடாதா ?” என்று கேட்க உடனே பெருமாள் எழுத்திருக்க முற்படப் பெருமாளைச் சிரமப்படுத்துகிறோமே என்று உடனே ஆழ்வார் “வாழி கேசவனே” என்று பாடினார் என்ற கதை உங்களுக்குத் தெரிந்தது தான். 

ஸ்ரீராமரின் வில்லை அனுபவிக்கும் முன் அவரின் வில் பற்றி வார்த்தா மாலையில் ஒரு சின்னக் கதை வருகிறது அதைப் பார்க்கலாம்.


குருகுலம் ஒன்றில் மூன்று மாணவர்கள் ஒரு குருவனிடம் படிக்கிறார்கள். ஸ்ரீ ராமாயண பாடம் படித்த பின் குரு ஸ்ரீ ராமாயணத்தில் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்ற சிஷ்யர்களைப் பார்த்துக் கேட்டார்.

முதல் சிஷ்யன்: ”ஸ்ரீராமர் மனிதப் பிறவி எடுத்ததால் தான் இவ்வளவு கஷ்டப்பட்டார் சரீர சம்பந்தமே இருக்கக் கூடாது என்றான்.
 குருவும் ”சரி அப்படியானால் இந்தச் சரீர சம்பந்தத்தை அறுக்க நீ தபஸ் முதலிய உபாயங்களைச் செய்யப் புறப்படு” என்று அனுப்பிவிட்டார்.
இரண்டாவது சிஷ்யன் : ”தாய் தந்தையரைப் போற்ற வேண்டும். அவர்கள் சொல்பேச்சு கேட்டு, அவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும்”.  குருவும் ” நீ திருமணம் செய்துகொண்டு உன் மாதா பிதாவிற்குத் தொண்டு செய்யப் புறப்படு” என்று அனுப்பிய பிறகு கடைசி சிஷ்யனைக் கேட்டார்.
மூன்றாவது சிஷ்யன் :  ”ஸ்ரீராமரின் வில்லே நமக்கு உபாயம்” என்றான். குரு சிஷ்யனைத் தழுவிக்கொண்டார்.


வில்லுக்கு என்ன பெருமை ? அது வெறும் ஆயுதம் தானே என்று நாம் நினைப்போம்.
 ”ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து” ஒரு வில்லால் கொந்தளிக்கின்ற கடலை அடைத்தார் ராமர் என்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.

இங்கே வில்லா கடலை அடைத்தது ? இல்லை ஸ்ரீராமர் தான் ! 
 ஸ்ரீராமரின் வீரத்தைப் பல விதமாகப் புகழ்ந்து பேசியுள்ளார்கள். வால்மீகி ராமனுடைய வீரத்தை அவர்களுடைய பகைவர்களும் கொண்டாடுவார்கள் என்கிறார்.


கம்பர் கணக்கு போட்டுக் காண்பிக்கிறார்


ஆனை ஆயிரம், தேர் பதினாயிரம், அடல் பரி ஒரு கோடி,
சேனை காவலர் ஆயிரம் பேர் படின், கவந்தம் ஒன்று எழுந்தாடும்;
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின், கவின் மணி கணில் என்னும்;
ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே

இதன் பொருள் :

யானைப் படை - 1000
தேர்ப் படை - 16,000
குதிரைப் படை - 1,00,00,000
சேனைத் தலைவர்கள் - 1000
இவைகள்  எல்லாம் மடிந்து விழுந்தால் ஒரு தலையற்ற உடல் எழுந்து ஆடுமாம். இப்படி ஆயிரம் தடவை தலையற்ற உடல் எழுந்து ஆடும்போது ஸ்ரீராமரின் வில்லில் இருக்கும் மணி ‘கணில்’ என்று ஒரு முறை ஒலிக்குமாம்.

அதாவது மேலே உள்ள லிஸ்டை x 1000 தடவை செய்தால் ராமருடைய மணி ஒரு முறை ஒலிக்கும்.  யுத்தத்தில் அவருடைய மணி இப்படி மூன்று மணி நேரம் தொடர்ந்து ஒலித்தது என்றால் அவர் எவ்வளவு பேரை வீழ்த்திருக்க வேண்டும் ! அப்பேர்பட்ட வீரம் இராமனுடையது !

ஸ்வாமி தேசிகன் ரகுவீர கத்தியத்தில் “ஜய ஜய மஹா வீர மஹா தீர” என்று வீரமாக ஆரம்பிக்கிறார். 
அதிகார சங்கரத்தில் தேசிகனின் பாசுரம் இது
உத்தம வமர்த்தலம் அமைத்ததோர்
எழில் தனுவுயர்த்த கணையால்
அத்திவரக்கன் - முடிபத்தும் ஒரு
கொத்தென உதிர்த்த திறலோன்

உயர்ந்த போர்க்களத்தில் அமைக்கப்பட்ட நிகரற்ற அழகிய வில்லிலிருந்து செலுத்தப்பட்ட அம்பினால் ராவணனுடைய தலை பத்தையும் ஒரு கொத்தாக அறுத்துக் கீழே தள்ளின பலமுடைய ராமர் என்கிறார்.

நம்மாழ்வார்

ஒருவர், இருவர், ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும்தோறும்
திரு அமர் மார்வன் திருக்கடித்தானத்தை
மருவி உறைகின்ற மாயப்பிரானே.

யுத்தத்தில் ஸ்ரீராமர் ஒருவராகவும் இருவராகவும் மூவராகவும் மாறிமாறி பின்னர் தன் உருவமே யாருக்கும் தெரியாதபடி மிகவேகமாகச் சுழன்று சுழன்று போர் புரிந்தான் என்று  திரைப்படத்தில் கிராபிக்ஸ் மூலம் இன்று நாம் பார்ப்பதை நம்மாழ்வார் அன்றே பார்த்துவிட்டார். இப்படி சுழன்று அடிப்பதை நினைக்கும்போதே நமக்குப் பயமாக இருக்கும் ஆனால் ஆழ்வாருக்கு ’தித்திப்பான்’ ( இனிப்பாக இருக்கிறான் )  என்கிறார்.


ஆண்டாள் ராவணனுக்கு மற்ற ஆழ்வார்கள்போல இவ்வளவு வார்த்தை விரயம் செய்யாமல், சாதாரணமாக நகத்தால் பூச்சி இருக்கும் இலையைக் கிள்ளி எறிவது போல் ’கிள்ளிக் களைந்தான்’ என்று இரண்டே இரண்டு வார்த்தையில் பொல்லா அரக்கனான ராவணனைச் சிக்கனமாக முடித்துவிட்டாள்.

இவ்வளவு வீரம் உடைய ஸ்ரீராமர் டெஸ்ட் கிரிக்கெட்டில்  ’டொக்கு வைக்கும் மொக்கப் ப்ளேயரு’ மாதிரி ராவணனிடம் ஏழு நாள் சண்டை போட்டு ஏன்  இழுத்தடிக்க  வேண்டும் ? ஒரே அடியில் அடித்திருக்கலாமே ?

மிகுந்த ஞானியான கூரத்தாழ்வான்   “இன்று போய் நாளை வா?” என்று ஸ்ரீராமரின் குணத்தை எதில் சேர்க்க முடியும் ? சீல குணமா, வீர குணமா இந்த குணத்தை எப்படி விவரிக்க முடியும் ? என்று அவரே குழம்புகிறார்.

எதற்காக ஸ்ரீராமர் அவனை இவ்வளவு நாள் விட்டு வைத்தார் என்றால் ராவணன் தான் ஸ்ரீராமரை விரோதியாக நினைத்தான். ஆனால் ஸ்ரீராமர் என்றுமே அவனை விரோதியாக நினைக்கவில்லை.

பெருமாள் நான் உன்னை ரக்ஷிக்க வருகிறேன் என்று வரும்போது வேண்டாம் அவனை விலக்காமலிருந்தாலே போதும் அவர் நம்மை ரக்ஷித்து விடுவார்.  நானே என்னை ரக்ஷித்துகொள்கிறேன் என்று நினைப்பது தான் பெரிய குற்றம். அது தான் ராவணன் செய்தது!.

யுத்தத்தில் ராவணன் “ராமா என்னை நீ இரண்டாகப் பிளந்தாலும் என் உயிரற்ற உடல் பின்னோக்கி விழுமே தவிர முன்னோக்கி விழாது” என்கிறான். அதாவது முன்னோக்கி விழுந்தால் அந்த நொடியில் ஸ்ரீராமர் தன்னை நோக்கிச் சரணம் என்று விழுந்துவிட்டானோ என்று அருள் புரிந்தாலும் புரிந்துவிடுவார்.  கடைசி வரை ராவணன் பெருமாளிடமிருந்து  விலகியே இருந்தான். வீழ்ந்தான்.

யுத்தத்தில் ஸ்ரீராமர் கையில் வில் இருக்கிறது எதிரே ராவணன் கையிலும் வில் இருக்கிறது. சண்டையில் ராவணனின் கையில் இருக்கும் வில் கீழே விழப் பெரியவாச்சான் பிள்ளை ”ராவணனை  வீரன்” என்று பாராட்டுகிறார்.
அதாவது நாம் அவனிடம் சரணம் என்று விழுந்தால் பெருமாள் தோற்றுவிடுவார்; நாம் வீரன் ஆகிவிடுவோம் !
ஸ்ரீராமன் காட்டுக்குச் சென்றது, அகலிகை, குகன், சபரீ, சுக்ரீவன், அனுமார், விபீஷணனைப் போன்ற பயிர்களைத் தோட்டத்தில் வளர்க்க. தோட்டத்தில் சில செடிகளின்  இலையில் ஒரு பூச்சி இருந்தால் அதைக் கிள்ளி எறிவது போல வாலி, ராவணனைக் கிள்ளி எறிந்தார் என்று சொல்ல வேண்டும்
பெரியாழ்வார்

“சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்” என்று தான் ’விரும்பிய சொல்’ என்கிறார்.
’வில்லாண்டான்’  என்றால் வில்லை வைத்து அடித்தான் என்பதில்லை வில்லை வைத்துக்கொண்டு அடிக்காமலிருந்தார் என்பது தான் அதன் சரியான அர்த்தம். ஸ்ரீராமனிடம்  கருணைக்கும் வீரத்துக்கும் போட்டி வந்தால் கருணை தான் ஜெயிக்கும்.
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனையில் “கோடி நதுலு தனுஷ்கோடி”  என்ற பாடலில் “கோடி நதிகள் ராமனின் வில் நுனியில் ( தனுஷ்கோடி )  இருக்க ஓ மனசே நீ ஆறுகளுக்குத் திரிகின்றாயே” என்கிறார்.

சாரங்கம் என்றால் ஸ்ரீராமர் நினைவுக்கு வருவார்.  தனுஷ்கோடி (இதுவும் ஸ்ரீராமரின் வில் தான்) என்றால் விபீஷண சரணாகதி நினைவுக்கு வரும்.  முன்பு பார்த்த கதையில் அந்தச் சிஷ்யன் ”ஸ்ரீராமரின் வில்லே தஞ்சம்” என்று ஏன் சொன்னான் என்று புரிந்திருக்கும்.

Bottom line  : Rama has a bow, to defeat him, all you have to do his just bow !
🕉🙏🕉


கிருஷ்ணார்ப்பனம்

🙏
🕉
  முல்லைக்காடு  ஒரு  சிறிய  கிராமம். மத்தியில்  அழகான  ஒரு  கிருஷ்ணன்  கோவில்......அர்ச்சகரும் , அவரிடம்  வேலைபார்த்துவரும்  சிறுவன்  துளசியும், காலை  4 மணிக்கே  கோவிலுக்கு  வந்து விடுவார்கள். துளசிக்கு  கோவில்  தோட்டத்து  பூக்களையெல்லாம்  பறித்து  மாலையாகத்  தொடுத்து தரவேண்டிய  பணி.

          கிருஷ்ண   பகவானே  கதி  என்று  கிடக்கும்  துளசிக்கு, அந்தப் பூப்பறிக்கும்  நேரமும்  கிருஷ்ணனின்  நினைப்புதான் ! " கிருஷ்ணார்ப்பணம் "  என்று  மனதுள்  சொல்லியபடியே  பூக்களைப்  பறித்து , தொடுப்பான். பத்து , பதினைந்து  மாலைகள்  கட்டி  முடித்தவுடன் ,  ஏதோ  அவனே  கிருஷ்ணனுக்கு  சூட்டிவிடுவது போன்று  மனதிற்குள்  நினைத்துக்கொண்டு,  அர்ச்சகரிடம்  கொடுத்து  விடுவான்.

      கிருஷ்ணரின்  சிலைக்கு  மாலை  சூட்ட  போனால் .....ஏற்கனவே  ஒரு  புதுமாலையுடன்  கிருஷ்ணன்  சிலை  பொலிவு  பெற்று  இருக்கும். அதைப்  பார்த்த  அர்ச்சகருக்கு, இது   துளசியின்  குறும்பாக இருக்குமோ  என்று  சந்தேகம். அவனைக்  கூப்பிட்டு,  " துளசி !  இதெல்லாம்  அதிகப்ரசங்கித்தனம் ; நீ , மாலை  கட்டவேண்டுமே  தவிர ,  சூட்டக்கூடாது ! " என்று  கண்டித்தார்.

   " சாமி...!  நான்  சூட்டவில்லை ; கட்டிய  மாலைகள்  மொத்தம்  15. அத்தனையும்  உங்களிடம்  கொடுத்து விட்டேன் ! " என்ற  அவன்  சொற்கள்  அவர்  காதில் விழவேயில்லை. " நாளையிலிருந்து  அண்டாக்களில்  தண்ணீர்  நிரப்பும்  பணியைச் செய் ! பூ  கட்டவேண்டாம் ! " கட்டளையாக  வந்தது .

      இதுவும்  இறைவன்  செயல்  என்று,  துளசி  நீரிறைக்கும் போதும் , தொட்டிகளில்  ஊற்றும்போதும் ,  " கிருஷ்ணார்ப்பணம் " என்று  மனம்  நிறைய  சொல்லிக்கொள்வான்.  மனமும்  நிறைந்தது!

     இப்போதெல்லாம்  சிலைக்கு  அபிஷேகம்  செய்ய  அர்ச்சகர்  வரும்முன்பே ,  அபிஷேகம்  நடந்து  முடிந்து, கருவறை  ஈரமாகி  இருக்கும். நனைந்து...........நீர்  சொட்டச் சொட்ட  கிருஷ்ணர்  சிலை  சிரிக்கும். அர்ச்சகருக்கு  கடும் கோபம், " துளசி ! நீ  அபிஷேகம்  செய்யுமளவுக்கு  துணிந்து விட்டாயா! உன்னோடு  பெரிய  தொல்லையாகிவிட்டதே ! "  வைய்ய  ஆரம்பிக்க .....

     துளசி, கண்களில்  கண்ணீர். " ஸ்வாமி !  நான்  அண்டாக்களை  மட்டும்தான்  நிரப்பினேன் ; உண்மையிலேயே  கிருஷ்ணனுக்கு  எப்படி  அபிஷேகம்  ஆனது  என்று  எனக்கு  தெரியாது ! "

  அவ்வவளவுதான்  அர்ச்சகர்  மறுநாளே  மடப்பள்ளிக்கு  மாற்றிவிட்டார். பிரஸாதம்  தயாரிப்பு பணிகளில்  ஒரு  சிற்றாளன்  ஆனான். இங்கும் .... காய்  நறுக்கும்போதும்  அவன், " கிருஷ்ணார்ப்பணம் "  என்றே  தன்னுடைய  செய்கைகளை  கடவுளுக்கே  காணிக்கையாக்கினான்.

      அன்று.......  அர்ச்சகர்  முன்னெச்சரிக்கையாக ......சன்னிதானம்  பூட்டிச்  சாவியை  எடுத்துச் சென்றுவிட்டார் . மறுநாள்  .....அதிகாலையில்  சந்நிதிக் கதவைத்  திறக்கும்போதே  கண்ணன்  வாயில்  சர்க்கரைப்பொங்கல்  நைவேத்யம் !

      " மடப்பள்ளியில்  அப்போதுதான்  தயாராகி,  நெய்விட்டு இறக்கி  வைக்கப்பட்டிருந்தது ! அதற்குள்  எப்படி  இங்கு  வந்தது ?  நானும்  கதவைப்பூட்டிதானே  சென்றேன் ! பூனை , எலி கொண்டு வந்திருக்குமோ ?  துளசிக்கு  எந்த  வேலை  தந்தாலும்........அந்தப்பொருள்  எப்படியோ  எனக்கு  முன்பே  இங்கு  வந்துவிடுகிறதே !  அவன்  என்ன  மந்திரவாதியா ? "

         இன்று  எதுவும்  கண்ணடிக்கவில்லை,  " துளசி !  நாளை  முதல்,  நீ  வாசலில்,  பக்தர்களின்  செருப்பை  பாதுக்காக்கும்  வேலையைச்  செய் !  நீ  அதற்குத்தான்  சரிய்யானவன் ! "

       " பூ , நீர் , பிரஸாதம் -  எல்லாம்  நல்ல பொருட்கள் ; சந்நிதிக்கு  வந்துவிட்டன ; இனி  என்ன  ஆகிறதென்று  பார்ப்போம் ; " - இதுதான்,  அர்ச்சகரின் எண்ணம்.  இதையும்  கடவுள் விருப்பம்  என்று  ஏற்றுக்கொண்ட  துளசி ....அன்றுமுதல் .......வாசலில்  நின்றிருந்தான். அதே,  " கிருஷ்ணார்ப்பணம் "  என்றே  அந்த  வேலையையும்  செய்துகொண்டு  இருந்தான். இன்றும் ......அர்ச்சகர்  பூட்டி,  சாவி  கொண்டு  சென்றார்.

   மறுநாள்  காலை ; சந்நிதிக்கதவு  திறந்ததும், அர்ச்சகர்  கண்ட காட்சி ......உடலெல்லாம்  அவருக்கு  நடுங்கத்தொடங்கியது.

    இதென்ன......  கிருஷ்ணா !   உன் பாதங்களில்...........  ஒரு  ஜோடி   செருப்பு ! பாதகமலங்களின்  பாதுகையின்  பீடத்தில் .....சாதாரண  தோல் செருப்பு ! எப்படி வந்தது ?  துளசி  எப்படிப்பட்டவனானாலும்,  சந்நிதிப்  பூட்டைத்  திறந்து..........  இப்படி   செருப்பை வைக்க  யாருக்குத்தான்   மனம்  வரும் ?  ஆச்சரியம் , அச்சம் ,......அர்ச்சகருக்கு  வேர்த்துக் கொட்டியது.  அப்போது........  எங்கிருந்தோ   ஒரு  குரல் :

       " அர்ச்சகரே !  பயப்பட வேண்டாம்   அந்த  துளசிக்கு  நீ  எந்த  வேலை  தந்தாலும்,  அவன்,  " கிருஷ்ணார்ப்பணம் "  என்று  எனக்குக்  காணிக்கையாக்கி  விடுகிறான்! அப்படி  அன்போடு  அவன்  தரும்  காணிக்கையை  நான்  மனமுவந்து   ஏற்றுக்கொண்டேன்.  நினைவெல்லாம்  எங்கோ  இருக்க  செய்யும்  பூஜையை  விட , எதை செய்தாலும்  எனக்குக்  காணிக்கையாக்குபவனின்  அன்பை  நான்  ஏற்றுக்கொள்கிறேன் .  துளசி ........ஒரு  யோகி !  அவன்  அன்பு  எனக்குப்  பிரியமானது ! "

        கிருஷ்ண  பகவானின்  இந்தக்  குரல் கேட்டு.......வாசல் பக்கம்  ஓடிவந்து.......அந்த  யோகியின் ....துளசியின்  கால்களில்  நெடுஞ்சாண் கிடையாக  விழுந்து  வணங்கினார்,   அர்ச்சகர் !



         " ஆன்மாவின்  மீது  மனதைச்  செலுத்தி  உன்  செயல்களை  எனக்குக்  காணிக்கை  ஆக்கு ! "

                                                                              🕉🙏🕉


அமைதி

🙏
🕉
ஒரு மன்னன் தன் மக்களிடம் ‘அமைதி’ன்னா என்ன? அப்படிங்கறத தத்ரூபமான ஓவியமா வரைந்து கொடுப்பவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும்னு அறிவிச்சாரு.

இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதி பலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.

மன்னன் ஒவ்வொரு ஓவியமா பார்வை இட்யிட்டவாறு வந்தான். ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதி பலித்து இருந்தார்கள்.

ஒருத்தர் அழகான ஏரியை ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் இருக்கிற மாதிரி வரைஞ்சு இருந்தாரு. மலையின் பிம்பம் ஏரியில் பிரதி பலித்து பார்க்கவே ரம்மியமா இருந்தது.!!

மற்றொருத்தர் பார்த்த உடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களை தத்ரூபமாக வரைஞ்சிருந்தாரு.

இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றினபடி ஓவியத்தில் பிரதி பலிச்சிருந்தாங்க.!

ஆனா, ஒரே ஒரு ஓவியத்தில் ஒரு மலை மேலிருந்து ஆக்ரோஷமா கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்துச்சு.
அதுமட்டுமின்றி இடியோட மழை வேற கொட்டிக் கொண்டு இருந்தது.

சற்று உற்று பார்த்தப்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளோட காணப்பட்டது.!!

“இந்த ஓவியத்தை வரைந்தது யார்?”

சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்பட்டாரு.!

மன்னர்., ” இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை. கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?” என்றார்..

அதுக்கு ஓவியர்,

” மன்னா சப்தமும், பிரச்சனையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது  அமைதி அல்ல
இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்க விடாமல் பார்த்துக் கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி.!

அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது.!”

“அருமை .. அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்” னு கைதட்டிய மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்!!.


அனைத்து வசதிகளும் அமையப்பெற்று எந்த வித பிரச்சனையும் இல்லாத ஒரு சூழலில் அமைதியை தேடி ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு செல்வதோ, இமயமலைக்கு செல்வதோ, கோயில் கோயிலாக ஓடுவது அமைதியல்ல.

அப்படி வாழ்வதும் ஒரு வாழ்க்கையும் அல்ல.

ஆயிரம் துன்பத்திற்கு நடுவே, நிச்சயம் ஒருநாள் விடியும் ” என்று விடா முயற்சியோடு,

தினசரி உழைச்சிட்டிருக்காங்ளே அவர்களிடம் இருப்பது தான் அமைதி..
🕉🙏🕉