Wednesday, 30 September 2020

ஜீவன் சமாதி நிலை

 ஜீவன் சமாதி நிலை 


 1.உலகில் பொதுவாக எல்லோரும் இறக்கும் பொழுது முழுக்கு வெளியாகிவிடும்,அதாவது இப்படி  ஜலமும் வெளியே வந்துவிடும்.இப்படி வெளியாவதே தீட்டு என்று கூறுவதுண்டு.இந்த தீட்டின் காரணமாகத்தான் அந்த உடல் ஞாற்றம் வீசுகிறது(பிண வாடை).


2.சித்தர்கள்,முத்தர்கள்,ரிஷிமார்கள்,சிவனடியார்கள்,இறை பக்தி மார்க்கத்தில் சிறந்தவர்கள் போன்றோர் இறப்பது கிடையாது.அவர்களுடைய உயிர் அவர்களின் தலையில் சென்று அடங்கி விடும்.


👣இப்படி அடக்கம் ஆகும் உடலுக்கு 10 அடையாளங்கள் இருக்கின்றன:👣 


1.அந்த உடல் கெட்ட ஞாற்றம் வீசாது.தேவ மணம் வீசும்.அந்த உடலில் முழுக்கு(தீட்டாகிய மலமும் ஜலமும்) வெளியாகாது.


2.அந்த உடல் விரைப்பாகாது.எவ்வளவு நேரம் ஆனாலும் வளைந்து கொடுக்கும்.அதற்க்கு நாடி கட்டு கால் கட்டு இட தேவையில்லை.


3.அந்த உடல் கணக்காது,ஒரு பூ கூடையை தூக்கினார் போல லேசாக இருக்கும்.


4.இந்த உடல் நேரம் ஆக ஆக வியர்வை கொட்டும்.


5.உடல் குளுந்து போகாமல் எப்பொழுதும் வெது வெதுவென்று அதன் சூடு மாறாமல் இருக்கும்.


6.பொதுவாக பிணத்தின் தொண்டை அடைபட்டுவிடும் ஆனால் அடக்கமான உடலின் தொண்டையோ எவ்வளவு தீர்த்தம் கொடுத்தாலும் அது தொண்டையின் வழியாக இறங்கும்.


7.உயிர் உள்ள பொழுது எப்படி ஒரு உடலுக்கு சொடுக்கு எடுக்க முடியுமோ அது போல இந்த அடக்கமான உடலிலும் எடுக்கலாம்.


8.உயிர் உள்ள பொழுது இந்த உடலில் இருந்த கூன் மேலும் பல கோளாறுகள் எல்லாம் அடக்கமானவுடன் அது நேராகிவிடும்.பார்ப்பதற்கு இளமை தோற்றம் திரும்பிவிடும்.80 வயதில் அடக்கம் ஆகும் ஒரு உடல் அடக்கமானவுடன் அதன் தோற்றம் 40 வயது உடலை போல் ஆகிவிடும்.


9.இறந்தவர்களின் உடலின் முகம் அரண்டு காணப்படும்.அடக்கமனவர்களின் முகம் இள சிரிப்புடன் காணப்படும். "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பார்கள். நாம் தூங்கி கனவில் ஒரு கெட்ட கனவு கண்டு விழிக்கும் பொழுது நமது முகம் அரண்டு காணப்படும்,இதே ஒரு நல்ல கனவு கண்டு விழித்தால் சிரிப்புடன் எழுவோம்.இறந்த ஆன்மா நரகத்தை கண்டு அது அரண்டு விடுகின்றது. அடக்கமாகும் ஒரு ஆன்மாவோ இறைவனை கண்டு அந்த எக்களிப்பில் சிரிக்கின்றது.📿 ❀ஷ•ரு❀ 


10.அடக்கமாகும் உடல் எக்கோடி காலமானாலும் மண்ணில் மக்காது.இறந்தோ உடலோ 6 மாதத்திற்குள் கிட்ட தட்ட சின்னா பின்னமாகிவிடும். பூமியை நாம் தாய் என்று கூறுவோம்.ஒரு தாய் தன் மகனை தின்பதாக இருந்தால் இவன் எக்கேடு கெட்ட நிலைக்கு தள்ளபட்டால் இது நடக்கும்? அடக்கமான சடலத்திற்கோ அந்த பூமி அது மக்காமல் பாதுகாக்கின்றது.ஏனெனில் இவர்களோ வந்த கடமையை சரி வர செய்ததால் இந்த நிலை.


சாகாக்கலை பெற்றவர்கள் (ஜீவ சமாதி) தூல அடையாளங்கள்👣

சிவாயநம திருச்சிற்றம்பலம்🌹🍀


சதுரகிரி பார்க்க வேண்டிய இடங்கள் :

 #சதுரகிரி 

பார்க்க வேண்டிய இடங்கள் :


1.தானிப் பாறை              

2.ஆசிர்வாத விநாயகர்                 

3.கருப்பசாமி கோவில்                  

4.குதிரைகுத்தி                                      

5.வழுக்குப் பாறை                              

6.அத்தி பூ/ஊத்து

7.கோணத்தலை வாசல்                   

8.கோரக்கர்குகை                                  

9.பச்சரிசிப்பாறை

10.காலற்ற நாற்காலிப் பாறை          

11.இரட்டைலிங்கம்                             

12.வற்றாத நாவலூற்று சுனை     

13.பசுகடை / தீர்த்தம்  

14.பிலாவடி கருப்பு                              

15.மூலிகைக்கிணறு                            

16.சுந்தரமகாலிங்கம் கோவில்        

17.சந்தன மகாலிங்கம் கோவில் / ஓடை

18.ஆனந்தவல்லி

19.காளிகா பெரும்காடு / தீர்த்தம்

20.சந்திர தீர்த்தம்

21.தேடிக்கானல் 

22.வனதுர்க்கை

23.தவசிக்குகை

24.நவகிரக மலை

25.நெல்லிவனம்

26.வெள்ளைப்பிள்ளையார்

27.அடுக்குப்பாறை

28.ஐஸ்பாறை

29.மூலிகைவனம்

30.வற்றாப்பொய்கை

31.பெரிய மகாலிங்கம் 

32.பெரிய கல்திருவோடு

33.கோரக்கர் குண்டம்

34.மொட்டை பெருமாள் கோவில்/பெருமாள் பதி 

35.மதிமயக்கி வனம் 

36.அகஸ்தியர் குகை

37.மா ஊத்து

38.கும்பமலை குகை

39.முனிஸ்வரன் எல்லை

40.காற்றாடி மேடை

41.கொடைக்காரன் கல்

42.கங்கண ஆறு 

43.குளிராட்டி பொய்கை

44.பூஞ்சோலை

45.உரோமரிசி வனம் 

46.யுகிமுனி வனம் 

47.கடுவெளி சித்தர் குகை

48.சுந்தரனரின் குகை

49.திருமஞ்சன பொய்கை

50.வட்டசுனை

51.கரும்பாறை

52.மஞ்சளாறு

53.சன்னாசி வனம் 

54.சங்கிலி பாறை

55.காலங்கி குகை

56.தசவேதிஉதக குகை

57.கன்னிமார் கோவில்

58.பளிஞ்ர்கள் குடிசை / பாறை

59.நந்தீஸ்வரர் வனம்

60.திருக்கைப்பாறை

61.படிவெட்டிப்பாறை

62.கவுண்டிண்ய ஆறு

63.அத்திரி மகரிஷி பாறை

64.பசுமிதி பாதை

65.பாம்புக்கேணி

66.தைல கிணறு

67.ஆற்றுக்குள் பேச்சிப்பாறை

68.காளி கானல் / கருங்கானல்

69.மண்மலை / மேடு

70.ஏமபுர கானல்  

71.வாத மேடு

72.எல்லைக்கல் குட்டம்

73.சதம்பு தறை (சஞ்சீவி மூலிகை)

74.தத்துவ ஞான சித்தர் குகை

75.அழுகண்ணி சித்தர் குகை

76.சிவவாக்கியர் சித்தர் குகை

77.சுரங்க வழி பாதை 

78.சாயா விருட்சம் 

79.ஜோதிமரம்

80.முகரை வீங்கி மரம் 

81.கற்பகதரு விருட்சம்


கோரக்கர் அருளிய'கோரக்கர் பிரம்மகானதரிசனம்' மற்றும்


'#கோரக்கர்மலைவாகடம்' நூல்களில் உள்ள சதுரகிரி  மலை பாதைகள்:


அகத்தியரின் கும்பமலையில் இருந்துஆரம்பித்தால் மேற்கே"முனீஸ்வரன் எல்லை" வந்துவிடும், இங்கிருந்து"படிவெட்டி பாறை" வழியாக நடக்க இரண்டுநிமிடத்தில் "காற்றாடிமேடை" வருமாம். இதனைதாண்டி கூப்பிடும்தூரத்தில் 


"கொடைகாரன்கல்லும், முடங்கி வழியும், கங்கன ஆறும்" இருக்கிறது. ஆற்றில்இருந்து மிக அருகில்"குளிராட்டி பொய்கை" இருக்கிறது. இதன்தென்மேற்கு மூலையில்"போகரின் ஆசிரமம்" இருந்திருகிறதாம்.


 அங்குஇருந்து தெற்கே போகும்பாதையில் அழகியபூன்சோலை உள்ளதுஅதன் மத்தியில்"புஜிண்டர்  ஆசிரமம்" இருந்திருகிறதாம்.


அங்கிருந்து மேற்கே அரைநாளிகை நடக்க "எல்லைகுட்டமும், மண்மலைகாடும்" உள்ளது. அதன்வழியே  சென்றால்"உரோமரிசி வானமும்ஆசிரமும்" அமைந்துஉள்ளதாம். அங்கிருந்துதெற்கே கூப்பிடும்  தூரத்தில் "யூகிமுனிவானமும் ஆசிரமும்" அமைந்து உள்ளதாம். 


அங்கிருந்து வடக்கேஅறிய வகையான "சாயாவிருச்சம்" உள்ளது. சாயாவிருச்சம் நிழல் பூமியில்  விழாது. ஆசிரமத்யிலிருந்து  மேற்கே சென்றால்தெற்கே போகும்பாதையில் சென்றால்ஆறு ஒன்று வரும் 


அதைகடந்தால் பளிங்கர்கள்குடிசையும் “சுந்தரலிங்கர்சந்நிதி” உள்ளது. இதன்தெற்கே இருக்கும்ஆற்றுக்கு மேல்“சுந்தரனாரின் குகை”உள்ளது. 


அந்த மேட்டில்இருந்து தெற்கே செல்லும்பாதையில் “மகாலிங்கர்சந்நிதி” உள்ளது.


 சந்நிதிக்கு பின்னல்"கற்பகதரு விருச்சம்" உள்ளது மற்ற பெயர்"பஞ்சுதரு விருச்சம்" . 


இந்த மரத்திற்கு மேல்பக்கம் வட்ட சுனையும்அதன் மேல் பக்கம் ஒருஓடையும் அதன் மேல்பக்கம் ஒரு கானலும் கரும்பாறை  இருக்கிறது. 


அதன்வடக்கே அரை நாழிகைநடக்க செம்மண் தரைவரும்.   அங்கு "சஞ்சீவிமூலிகை" உள்ளது மற்றபெயர் "எமனைவென்றான்".


அங்கிருந்து மேற்கே'மஞ்சளூற்று" ஊற்றுக்குவடபக்கம் அம்பு விடும்தூரத்தில் சதம்பு தரைஉள்ளது அதன்கீழ்பகுதியில் கசிஉதரையில் அழகானந்தர்  


ஆசிரம்மம் உள்ளதாம். அங்கிருந்து நேர் கிழக்கேவந்தால் மீண்டும்மகாலிங்கர் சந்நிதி வரும்.  அங்கிருந்து தெற்கே


சென்றால் "சன்னசிவனம்" வரும். அதன் தெற்கேபோகும் பாதையில்சென்றால் ஒரு ஓடையும்"சங்கிலி பாறையும்" வரும். அதனை கடந்துகூப்பிடும் தூரத்தில்மரங்கள் சூழ "பிரம்ம முனிஆசிரமம்" வரும். அதன்தெற்குபுற பாதையில்சென்று மலை ஏற அதன்சரிவில்


 "காலங்கிநாதர்குகை" உள்ளது. அதன்சரிவில் அம்புவிடும்தூரத்தில் வற்றாத"தசவேதி உதகசுனை" இருக்கிறது. 


காலங்கிநாதர் குகையில்இருந்து தெற்கு பக்கம்கூப்பிடும் துரத்தில் "தபசுகுகை" வரும். 


குகையில்இருந்து வடக்கு பக்கம்செல்லும் பாதையில்சென்றால் மீண்டும்மகாலிங்கர் சந்நிதி வரும்.  அனால் கிழக்கு பக்கம்சென்றால் அரை நாழிகைதுரத்தில் கன்னிமார்கோவிலும் பளிங்கர்கள்குடிசையும்  வரும்.


 அங்கிருந்து தெற்கே அரைநாழிகை துரத்தில்"நந்தீச்வர் வானமும்ஆசிரமும்" உள்ளது. ஆசிரமும் வடக்கில் உள்ளபாதையில் செல்லகிழக்கே ஒரு பாதை வந்துசேரும் அந்த 


பாதைவழியே செல்ல பளிங்கர்பாறையும் அதன் தெற்கேசெல்ல செடி கொடிகள்சூழ "தன்வந்திரிஆசிரமும்" உள்ளது.


சதுரகிரி மலையின்மேற்கு பகுதியில்இருக்கும்  ஒரு திட்டானபகுதியில் மறைவாக ஒருசுரங்கம் உள்ளது. அந்தசுரங்க வாசலில்ஆஞ்சநேயர் காவல்உள்ளது. அங்குகர்மகாண்டம் என்னும்ஒரு நூல் உள்ளதாம்.


காலங்கிநாதர்  தனதுபாடலில் சதுரகிரி இன்மலை பாதைகளை பற்றிகூறியுள்ளார். சதுரகிரிதெற்கு பகுதியில் ஓர்ஓடை ஆற்றுடன்இணைகிறது அதன்பெயர் "தோணி பாறை" இப்போ கால   போக்கில்


"தாணி பாறை" என பெயர்மாறியது. இது தான்நுழைவாயில் மற்ற மூன்றுபாதைகளும்  மிக கடினம். தாணி பாறையின் வடக்குபாதையில் கருப்பணசாமிஇருக்கிறது. 


இங்கிருந்துகூப்பிடும் தூரத்தில்"குதிரை குத்தி பாறையும்" அதன் வடக்கு பக்கம்கூப்பிடும் தூரத்தில்"படிவெட்டி பாறையும்" உள்ளது. அங்கிருந்துஅம்புவிடும் தூரத்தில்காட்டாறு ஒன்றுகாணலாம். 


அதன் வடக்குபக்கம் அரை நாழிகைதூரத்தில் "கவுண்டன்யஆறு" வரும். ஆற்றின்மேற்கு பக்கம் 10அடி தூரம்நடந்தால் "அத்தி ஊத்து" வரும். 


ஊற்றின் வடக்குபகுதியில் இருக்கும்பாறையில் தான் "அத்திரிமகரிஷி" தவம் செய்தார்.


அதன் மேற்கு பகுதியில்அவர் ஆசிரமம் உள்ளது. ஆசிரமதியில் இருந்துகிழக்கே உள்ள பாதையில்மேலேரி அரை நாழிகைநடந்தால்   


 "கோனவாசல்" பாதை வரும். அதை தண்டிமேடரி போனால் "பசுமிதி " பாறை வரும். அதன்கிழக்கே கணபதி உருவபாதை உள்ளது. 


அதன்கிழக்கே உள்ள பாதையில்அரை நாழிகை நடந்தால்தெற்கு பக்கத்தில்அம்புவிழும் தூரத்தில்மச்சமுனி ஆசிரமம்உள்ளது. 


ஆசிரமதியில்


இருந்து தெற்கு உள்ளபாதையில் மேலேரி அரைநாழிகை நடந்தால்"வெள்ளை புனல்முருங்கை" மரமும் அதன்இடப்பக்கம் சமதளபாறையை காணலாம்.


அந்த பாறையின் தெற்குபக்கம் இருக்கும் ஓடையைதாண்டினால் அம்புவிழும்தூரத்தில் காவி  தெரியும்அதன் கீழ்பக்கம்பேய்சுரை  கொடி  உள்ளது.


 அந்த கொடிக்கு தெற்குபக்கம் இருக்கும் நடந்தால்குருவரி கற்றாளைஇருக்கும். அதற்கு நேர்வடக்கு சென்றால்கூப்பிடும்  தூரத்தில்கிழக்கே ஒரு பாதைதென்படும் அதிலிருந்துமேட்டில் ஏறினால் சமதளம்இருக்கும்


. அதில் அரைநாழிகை தூரம் நடந்துவந்து தெற்கு பக்கமாய்பார்த்தல் கோரக்கர்ஆசிரமம் உள்ளது.


ஆசிரமத்தின் நேர்வடக்கில் இருக்கும்ஆற்றில் இறங்கி தெற்குபக்கம் பார்த்தால் மலைசரிவில் "கோரக்கர் குகை" தெரியும். அதன் கிழக்கேஆற்றின் 


நடுவில் "கஞ்சாகடைந்த குண்டா" இருக்கிறது அதன்கிழக்கே "வற்றாதபொய்கை" இருக்கிறது.


கோரக்கர் ஆசிரமத்தின்தெற்கு பக்கம் அம்புவிழும்தூரத்தில் "மஞ்சள்பூத்தவளை" மூலிகைஉள்ளது. அதன் மேற்குபக்கத்தில் உள்ளபாதையில் அம்புவிழும்தூரத்தில் கசிவு தரை

உள்ளது. இங்கிருந்துவடக்கு பக்கம் போனால்ஒரு மேடு அதனையொட்டிஒரு ஓடை அதற்க்குவடக்கே சமதள மண்தரைஅருகில் பாறையும்  உள்ளது. 


பாறைக்குவடக்கே ஒரு ஓடை அதற்குவடக்கே அம்புவிழும்தூரத்தில் "அமுதவல்லிசெடி" உள்ளது. செடிக்குநேர் வடக்கே சென்றால்கிழக்கு பக்கம் எதிர்வரும்மேட்டில் 


இரட்டை லிங்கம்உள்ளது. லிங்கத்துக்குதென்கிழக்கு மூலையில்ஆற்றைஒட்டி "ராமதேவர்ஆசிரமம், ரோமவிருட்சமும், நாகபடகற்றாளையும்" உள்ளது.


ராமதேவர் ஆசிரமத்தில்இருந்து வடக்கே நடந்தால்வரும் சமதளம். அங்கிருந்து கிழக்கேபோனால் "பசுக்கிடை" வரும்.


 அதை தாண்டினால்எக்காலத்திலும் வற்றாத"நாவலுற்று" சுனையும்பாறையும் உள்ளது. அதில்"பாம்புகேணியும்" இருக்கிறது. அங்கிருந்துகிழக்கே போனால்"வழுக்கை பாறையும்" 


அதற்கு அப்பால் "பச்சரிசி" மேடு வரும் அதைகடந்தால் "தெக்கம்பண்ணைமலை" சாலைவரும். இந்த வழியேகிழக்கே போனால் "சின்னபசுகிடையும்","ஒப்பிலாசாயையும்" இருக்கிறது. இதனை தாண்டி கிழக்கேசெல்ல பலாமரமும்,


"கருபண்ண சாமி" கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்குபின்புறம் தான்இரசவாதம் செய்யபயன்படுத்த பட்ட"தைலக்கிணறு"  இருக்கிறது. 


இந்தகோவிலை கடந்துபோனால் ஆறு ஒன்றுவரும் அதற்குள்"பேச்சிபாறை" உள்ளது.


இதன் வடக்கு பக்கத்தில்மேடேறினால் "துர்வாசரிஷியின் ஆசிரமம்" இருக்கிறது. இதன்கிழக்கே அம்பு விழும்தூரத்தில் "வெள்ளைபாறையும்"


,"சந்தனமகாலிங்கம் கோவில்ஓடையும்" உள்ளது. அதைகடந்து கிழக்கே போனால்முச்சந்தியான பாதைவரும் இதில் தெற்கேபோகும் பாதையில்மேடேறினால் "சுந்தரர்கோவில்" 


இருக்கிறது. அதன் தெற்கேஆற்றங்கரை ஓரமாய்கூப்பிடும் தூரத்தில்"மகாலிங்கம் கோவில்" இருக்கிறது. 


இதன் வடக்கே கூப்பிடும்தூரத்தில் அடர்ந்தகாட்டுக்குள் அரைநாழிகை தூரம் நடக்கபெரிய சுரங்கவழி ஒன்றுஇருக்கும்


 இதில் நுழைந்துஅரை நாழிகை தூரம்நடக்க "சந்தன மகாலிங்ககோவில்" வரும். கோவிலின் வடக்கே"காளிகாணல்" நீரோடைஇருக்கிறது. கோவிலின்தென்மேற்கு மூலையில்"சட்டைமுனி நாதரின்" 


குகை ுகை உள்ளது. குகைக்குதெற்கே கூப்பிடும்தூரத்தில் "வெண்நாவல்" மரமும் அதன் இடப்புறம்மன்மலையும் தெற்கேசமதளத்தில்"வனபிரமி" மூலிகையும் உள்ளது. சட்டைமுனி 


குகைக்கு நேர்கிழக்கே வரும் பாதையில்ஒரு நாழிகை தூரம்சென்றால் வடக்கே ஒருபாதை வரும் அதில் ஒருநாழிகை தூரம் நடக்க"கும்பமலை" 


வரும் இதன்அருகில் உள்ள குகையில்தான் "அகத்தியர்" வாசம்செய்கிறார்.


தன்வந்த்ரியின்ஆசிரமத்தின் வடக்கேவந்தால் கிழக்கே ஒருபாதை வரும் அதன்தெற்கே உள்ள பாதையில்நடக்க வடக்கே "எமபுர" கானல் வரும் 


அதன்தென்புறமாய் கிழக்கேபோகும் பாதையில்கூப்பிடும் தூரத்தில் நடக்க"வாதமேடும்" அதில்"வெள்ளை பிள்ளையார்"  கோவில் இருக்கிறது. 


இங்கிருந்து அம்புவிடும்தூரம் வரை சதும்பு தரைஅதற்கு தெற்கே வந்தால்குரு "ராஜரிஷி வானமும்ஆசிரமும்" இருக்கிறது. ஆசிரமத்தின் வடக்கேநடக்க கிழக்கே போகும்பாதையில் அரை நாழிகைதூரம் நடக்க 


ஒருமண்மேடு வரும் அதன்அருகில் அழகியவனத்தின் நடுவில்"கொங்கணவரின்ஆசிரமம்" உள்ளது அதன்கிழக்கே போனால்"எல்லைக்கல்" 


குட்டம்உள்ளது. இங்கிருந்துதெற்கே மூன்று நாழிகைநடக்க தபோவனம்எனப்படும் "மாஊற்று" வரும். அதன் வடக்கே"உதயகிரி சித்தர்" ஆசிரமும் இருக்கிறது.


இங்கிருந்து கிழ்பக்கமாய்  இறங்க அரை நாழிகைதூரத்தில் மீண்டும்எல்லைகுட்டதிற்கு வந்துசேரும். இதன் வடக்கே"


பிருஞ்சக முனிவரின்ஆசிரமம்" இருக்கிறதுஅதன் வடகிழக்குமூலையில் உள்ள சதம்புதரையில் "சஞ்சீவிமூலிகை" உள்ளது.


சதம்பு தரையில் மேல்பக்கம் போகும் பாதையில்அம்பு விழும் தூரத்தில்யானை படுத்திருப்பதைபோல் ஒரு பெரிய பாறைஇருக்கும் அதன்தென்புறமாக அம்பு விழும்தூரத்தில் சரளை தரைஇருக்கிறது. 


அதற்கு நேர்மேற்கில் கூப்பிடும்தூரத்தில் மலையோடைஇருக்கிறது. அந்தஓடையை கடந்து அம்புவிழும் தூரத்தில்"வெள்ளை பிள்ளையார்" இருக்கிறார். இங்கிருந்துமேற்கே ஒரு நாழிகைநடக்க "வாதமேடு" 


வரும்இங்கு தான் பதினென்சித்தர்களும் "ரசவாதம்" செய்தார்கள் .வாதமேடுமேற்கே அம்பு விழும்தூரத்தில் "தத்துவ ஞானசித்தர் குகை" இருக்கிறது.


அதன் வடக்கே அரைநாழிகை நடந்தால் சிறியகுட்டம் வரும் அதன்மேற்கே செல்லும்பாதையில் சென்றால்"கன்னிமார் கோவில்" வரும் அதன் மேற்கேகூப்பிடும் தூரத்தில்


"மகாலிங்கம் சந்நிதி" வரும். சந்நிதியின் நேர்வடக்கே போகும்பாதையில் ஒரு ஆறுவரும்   . ஆற்றின்தென்புறமாய் இரண்டுபாதைகள் பிரியும் அதில்மேற்கே போனால் நாம்கிளம்பிய இடம்தானிபாறை வரும்,


 வடக்கே போகும்பாதையில் இரண்டு  நாழிகை நடக்க"குளிப்பட்டி பொய்கை" இருக்கிறது. இதன்தெற்கே "எல்லை குட்டம்" இருக்கிறது. அதன்அருகில் "பால்பட்டை மரம்" இருக்கிறது.


 அதிலிருந்துமேற்கே போகும்பாதையில் சென்றால்அம்பு விழும் தூரத்தில்"திருக்கை பாறை" இருக்கிறது. அதன்மேற்கே "யாகோபு சித்தர்ஆசிரமம்"


 உள்ளது. ஆசிரமத்தின் மேற்கேபோகும் பாதையில்இரண்டு  நாழிகை நடக்க"கடுவெளி சித்தர் குகை" இருக்கிறது.


இதனை தாண்டி நடந்தால்"கருங்கானல்" ஒன்றுவரும். அதில் நுழையாமல்மேலே ஏற அரைநாழிகையில் கசிஉ தரைவரும். இதன்  வடபக்கம்இரண்டு நாழிகை  நடந்தால் 


"#தேடிக்கானல்" இருக்கிறது. அந்தகானலுக்கு கீழ்பக்கம்போகும் பாதையில்அம்புவிலும் தூரத்தில்"அழுக்காணி சித்தர்குகை"

Tuesday, 29 September 2020

இறைவனின் கருணையால் அய்யன் குடில் கூரை புதிதாக வேயப்பட்டது. அனைத்து அன்பர்களுக்கும் மிக்க நன்றி

 இறைவனின் கருணையால் அய்யன் குடில் கூரை புதிதாக வேயப்பட்டது.


அனைத்து அன்பர்களுக்கும் மிக்க நன்றி











Monday, 28 September 2020

மரம் வளர்ப்போம் - சிறுகதை - தலைப்பு மர(ண)ப் போராட்டம்

 மர(ண)ப் போராட்டம்அடையாறு.

மிகவும் பழமையான வீடு,

60 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது,

அந்த காலி இடம் வாங்கும்போது அந்த இடத்தில ஒரு சிறிய மாமரம் இருந்தது,


அந்த வீட்டை கட்டிய தொழிலாளர்கள் அந்த மரத்தின் கீழ் அமர்ந்துதான் மதிய உணவு உண்பார்கள்.


அந்த வீட்டு முதலாளிக்கு அந்த மாமரத்தின் மீது தனி பாசம்,


அந்த மரத்தை போலவே அவரது வாழ்வும் குழந்தை குட்டியென சந்தோஷமாக வளர்ந்தது.


அவருக்கு இப்போது 90 வயது, மகன்களுக்கு திருமணம் ஆகி பின் பேரப்பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகி குழந்தைகளுடன் வெளிநாட்டில் வசிக்கிறார்கள்.


இந்த பாரம்பரிய வீட்டை இடித்து அதே இடத்தில் ஒரு Apartment கட்டி ஆளுக்கொரு flat எடுத்துக்கொள்ளலாம் என்கின்ற முடிவோடு

ஒன்றுகூடி இருக்கிறார்கள்,


தாத்தாவும் ஒப்புதல் அளித்துவிட்டார்,

ஆனால் அந்த மரத்தை வெட்டவேண்டாம் என்று எவ்வளவோ போராடிப்பார்த்தார்,

ஆனால் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை,


வெளியில் இருந்து பார்க்கும் போது கோடிக்கணக்கில் செலவு செய்து கட்டிய வீடு எடுப்பாக இருக்காது இந்த மரமே மறைத்துவிடும் என்று முதல் வேலையாக மரத்தை வெட்டுவதென முடிவு செய்து, விலைபேச ஆட்களையும் வரச்சொல்லி விட்டார்கள்.


அரசல் புரசலாக விஷயம் தெரிந்துகொண்ட மாமரம் ஒரு நிமிடம் ஆடிப்போனது,

வேறெங்கோ வேலை முடித்துவிட்டு கத்தி கோடாறியுடன் ஆட்கள் van ல் வந்து இறங்கினார்கள்,


தெருவில் இருந்த அத்தனை மரங்களும் ஒருவித பயத்துடனும் பதட்டத்துடனும் ஆடாமல் அசையாமல் அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தது,


அவர்கள் தான் இவர்களின் எதிரி.

அவர்கள் தெருவில் வந்தாலே இவர்களுக்கு நடுங்க ஆரம்பித்துவிடும்!


அவர்கள் நேராக மாமரத்து வீட்டிற்கு வந்து நிற்க எல்லா மரங்களுக்கும் புரிந்துவிட்டது !!

மாமரத்து நிழலில் உட்கார்ந்து டீ சாப்பிட்டபடி பேரம் பேசினார்கள்,


விலைபேசி முடித்ததும் எப்படி வெட்டலாம் என்று சுற்றிச்சுற்றி வந்து நோட்டமிட்டார்கள்,


தூரத்தில் இருந்து எல்லா மரங்களும் எட்டி எட்டி பார்க்க என்ன பேசுகிறார்கள் என்பது மட்டும் தெரியவில்லை,


ஆனால் மாமரம் மட்டும் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்தது, கடைசியில் நாளை காலை வந்து வெட்டிவிடுகிறோம் என்று கூறிவிட்டு சென்றார்கள்.


மாமரத்திற்கு துக்கம் தாங்க முடியவில்லை,

60 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தும் தாத்தாவைத்தவிர யாருக்கும் நம்மீது இரக்கமில்லையே என்ன மனிதர்கள் இவர்கள், உணர்ச்சியற்ற ஜடங்களாக இருந்துகொண்டு நம்மை மரம் என்கிறார்களே, உண்மையில் இவர்கள்தான் ஈரமற்ற மரக்கட்டைகள் என்று வேதனைப்பட்டது!


இரவு 8 மணி

எல்லோரும் சந்தோஷமாக சாப்பிட்டுக்கொண்டு இருக்க தாத்தாவும் மாமரமும் மட்டும் எதையும் சாப்பிடவில்லை,


தாத்தா மனக்கவலையோடு வெளியே வந்து மாமரத்தை தொட்டுப்பார்க்க அவரை கட்டிப்பிடித்து அழமுடியாதபடி மரமாய் பிறந்துவிட்டோமே என்று முதன்முதலாக வேதனைப்பட்டது மாமரம்!

அங்கிருந்த easy chair ல் உட்கார்ந்தபடி கவலைப்பட்டுக்கொண்டே தாத்தா உறங்கிவிட்டார்!!


ஆனால் மாமரத்திற்கு உறக்கம் வரவில்லை,

நாளை காலை கத்தி கோடாறி, ரம்பம் என்று விதவிதமான ஆயுதங்களோடு வருவார்கள், ஒரே அடியாக

கழுத்தை வெட்டிவிட்டால் பரவாயில்லை, ஆனால் இவர்கள் கை, கால், தலை என ஒவ்வொரு உறுப்பாக வெட்டுவார்களே வலியை எப்படி தாங்கிக்கொள்ள போகிறோம்,


நம்மை நம்பி இந்த பறவைகள் வேறு கூடுகட்டி இருக்கிறது


பாவம் இரண்டு நாட்களுக்கு முன்புதான் எல்லாம் குஞ்சுபொறித்தது,


சென்ற மாதம் பின்புற வீட்டில் மரம் வெட்டும்போது இப்படித்தான் குஞ்சுகளெல்லாம் கீழே விழுந்து நசுங்கிபோய்விட்டது அதையே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை இதை எப்படி தாங்கிக்கொள்ள போகிறேன்!? என்று பயந்துகொண்டே இருந்தது,


நீண்ட நேரமாகியும் எந்தவொரு அசைவும் இல்லாமல் இருந்த மாமரத்தை பார்த்து பக்கத்து காம்பௌண்டில் இருந்த வேப்பமரத்திற்கு ஏதோ சந்தேகம் வந்து தன் கிளைகளை நீட்டி மாமரத்தோடு பின்னிக்கொண்டு எதாவது பிரச்சனையா என்று கேட்டது? (பொதுவாக மரங்கள், செடிகொடிகள் தங்களது உணர்வுகளை இப்படித்தான் பகிர்ந்துகொள்ளும் )


மாமரம் நடந்த எல்லாவற்றையும் கூற வேப்பமரம் மிகவும் வேதனைக்குள்ளானது, காரணம் இரண்டு மரங்களும் சிறுவயது முதல் ஒன்றாய் வளர்ந்தவை, தங்களுடைய சுகதுக்கங்களை பகிர்ந்து கொண்டவை நாளை காலை சாகப்போகும் நண்பனை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று வேப்பமரம் துடித்தது,


ஆனால் மாமரத்திற்கு தெரியும் தன்னுடைய இறப்பை யாராலும் தடுக்கமுடியாது என்று, அதனால் உன்னுடைய கிளைகள் மூலம் இந்த பறவைக்கூட்டை மட்டும் எப்படியாவது வாங்கிக்கொள் என்று வேப்பமரத்திடம் கேட்டது,


ஆனால் வேப்பமரம் மறுத்துவிட்டது,

உன்னுடைய இறப்பு இயற்கையான முறையில் இருந்தால் என்னால் தாங்கிக்கொள்ள முடியும்

இதுபோன்ற சுயநலம் மிக்க மனிதர்களால் கொல்லப்படுவாய் என்றால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்,


கடைசி முயற்சியாக அந்த தாத்தாவின் மனதில் கனவாக நுழைந்து உன்னை கொல்லாமல் தடுக்கும்படி வேண்டுகோள் விடு, அது நிச்சயம் பேரனைப்போய் சேரும் அப்போதாவது அவன் மனம் மாறுகிறதா பார்ப்போம்.. என்றது.


என்னால் எப்படி மனதில் நுழைய முடியும்? என்று மாமரம் கேட்க, உனக்கே என்னைப்பற்றி தெரியும்,

நான் பிறக்கும்போது வெறும் வேப்பமரமாகத்தான் பிறந்தேன், இந்த குடும்பம் என்னை சாமி என்று நினைத்து, மூன்று தலைமுறையாக பூஜை செய்து வருகிறார்கள்,


60 வருடங்களாக மிகுந்த நம்பிக்கையுடனும் பக்தியுடனும் செய்த பூஜைகளும் வேண்டுதல்களும் சேர்ந்து எனக்குள் ஒரு சக்தியை உருவாக்கி இருக்கிறது,


அந்த சக்தியை பயன்படுத்தி உன்னை அவர் மனதுக்குள் அனுப்ப என்னால் முடியும், மனதை ஒருநிலைப்படுத்தி உன் வேண்டுதலை கனவாக கூறு... போ !

என்று அனுப்பிவைக்க


மாமரமும் அவ்வாறே செய்ய கண்கலங்கியபடி எழுந்த தாத்தா மெல்ல நடந்து பேரனிடமும் குடும்பத்தினரிடமும் தன்னை கொல்லவேண்டாம் என்று மாமரம் கனவில் வந்து அழுததாக கூற, எல்லோரும் கேலி பேசியபடி தாத்தாவை உள்ளே வந்து படுக்கும்படி கூறிவிட்டு போய்விட்டார்கள்!


மாமரத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது, ஆனால் வேப்பமரத்திற்கு கோபம் பெருக்கெடுத்தது,

இது உனக்கும் இந்த குடும்பத்துக்குமான போராட்டம் மட்டும் கிடையாது,


உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கும் நன்றிகெட்ட தனத்தின் உச்சம்!


மனிதர்களுக்கு உதவுவதற்காக படைக்கப்பட்ட மரங்களை மனிதனே தன் சுயநலத்திற்காக அழித்துக்கொண்டு இருக்கிறான்!


அவன் சுயநலத்திற்கு நாம் ஏன் பலியாக வேண்டும், நம்முடைய சக்தி என்ன என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்!


என்று வேப்பமரம் ஆவேசப்பட,

நம்மால் என்ன செய்யமுடியும், பேசமுடியாது, நடக்க முடியாது, ஓடமுடியாது, நம் பிரச்சனையை புரியவைக்க முடியாது, பிறகு எப்படி மனிதர்களுக்கு உணர்த்தமுடியும்?!


நிச்சயம் முடியும்,


இந்த நிமிடம் முதல் நம்மைப்போன்ற எல்லா மரங்களும் மனிதர்களுக்கு தருகின்ற ஒத்துழைப்பையும், உதவியையும் நிறுத்தினால் நாளை காலை உன்னையும் உன்னைப்போன்று பாதிக்கப்படுபவர்களையும் சாவிலிருந்து காப்பாற்ற முடியும்,


நான் சொல்வதை மட்டும் செய் என்று வேப்பமரம் மாமரக்கிளைகளோடு பின்னிக்கொண்டு ரகசியமாக எதையோ சொல்லி அதை எல்லா மரங்களுக்கும், கிளைகள் மூலமாகவோ, வேர்கள் மூலமாகவோ சொல்லும்படி கூற,


மாமரமும் வேப்பமரமும் தன் கிளைகளும் வேர்களும் எட்டும் தூரத்தில் இருக்கும் எல்லா மரம் செடிகொடிகளுக்கு தகவலை சொல்ல, அவையெல்லாம் தன் பக்கத்தில் இருக்கும் மரங்களுக்கு தகவல்களை சொல்ல, இப்படி நாடுமுழுவதும் கிளைகள் மூலமாகவும் வேர்கள் மூலமாகவும் எல்லா மரம் செடிகொடிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டது,


மாமரமும், வேப்பமரமும் பொழுது விடிவதற்காக காத்திருந்தது....

-----------------------------

மெல்ல சூரியன் உதித்தது.

எல்லா இடங்களிலும் சராசரி அளவைவிட புகைமண்டலம் அதிகமாக இருந்தது,


எல்லா மக்களும் வழக்கமான நேரத்தைவிட கொஞ்சம் முன்பே எழுந்து தும்மியபடி வெளியே வந்தார்கள்,


சொல்லிவைத்தது போல் எல்லோருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது,


புகைமண்டலம் அதிகமாகிக்கொண்டே போனது, இருமியபடி மரத்தை வெட்ட ஆயுதங்களுடன் வந்திறங்கினார்கள்,


இரண்டு மரங்களும் வேதனையோடும் நம்பிக்கையோடும் அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தன,


அவர்கள் மெல்ல மரத்தில் ஏறி கயிறுகட்ட ஆரம்பித்தார்கள், ..


அதற்குள் மூச்சுத்திணறல் அதிகமாகி மக்களெல்லாம் தெருவிற்கு ஓடிவர ஆரம்பித்தார்கள்,


வேப்பமரம் சொன்ன ரகசியம் இதுதான்.

இந்த நிமிடம் முதல் எல்லா மரங்களும் கார்பன் டை ஆக்சைடை சுவாசிக்காமல் ஆக்சிஜனை மட்டுமே சுவாசிக்கவேண்டும் மனிதர்களுக்கு தேவையான ஆக்சிஜனை வெளிவிட்டு, அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் கார்பன் டை ஆக்சைடை நாம் உள்ளே இழுத்துக்கொள்வதால் தான் மனிதர்களால் உயிர்வாழ முடிகிறது,


நாம் ஏன் அவர்களை காப்பாற்ற வேண்டும்?!

எப்போது அவர்கள் நன்றியில்லாமல் நம்மை அழிக்க ஆரம்பித்துவிட்டார்களோ இனிமேல் அவர்களுக்கும் நமக்கும் எந்த உறவும் வேண்டாம்,


நாம் ஏன் விஷத்தன்மை கொண்ட கார்பன் டை ஆக்சைடை சுவாசிக்க வேண்டும்?!


அவர்களால் உருவாக்கப்பட்டது அவர்களே சுவாசித்துக்கொள்ளட்டும்!!

என்ற வேப்பமரத்தின் கருத்தை எல்லா மரங்களும் ஏற்றுக்கொண்டதன் விளைவே இந்த மூச்சுத்திணறல்!


மரத்தில் ஏறியவன் கயிறு கட்டமுடியால் போராடினான்!


நாடே காரணம் தெரியாமல் போராடிக்கொண்டு இருக்க மரங்களெல்லாம் குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும், விலங்கினங்களுக்கும் மட்டும் ரகசியமாய் ஆக்சிஜன் கொடுத்துக்கொண்டு cool ஆக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தன!!


மரத்தில் ஏறியவன் தடுமாறி கீழே விழுந்தான்.

பேரனும் குடும்பத்தினரும் மரத்தின் கீழ் வந்து விழுந்தார்கள்!


குடும்பத்தினர் எல்லோரும் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்க

--------------------------

என்ன மூச்சு முட்டுதா?!

------------------

என்ற குரல் கேட்டு

அங்கும் இங்கும் பார்க்க

நான்தான்டா மாமரம் பேசறேன்....


After all மரந்தானேன்னு கேவலப்படுத்துனீங்க இல்ல,

இப்போ சாவுங்க.....

எங்களோட value என்னன்னு புரியவைக்கிறதுக்குதான் இந்த மரப்போராட்டம்!!


60 வருஷமா

எவ்ளோ நிழல்,

எவ்ளோ காய்,

எவ்ளோ பழம் குடுத்திருப்பேன்


நீங்கல்லாம் குழந்தையா இருக்கும்போது என் கையில தான் ஊஞ்சல் கட்டி ஆடுவீங்க, எல்லாத்தையும் மறந்துட்டீங்க இல்ல?!?


நீங்கல்லாம் நல்லா வாழனும்னு தான் உங்களுக்கு உதவியா கடவுள் எங்களை படைச்சாரு,

காத்து, மழை, காய்கறி, பழம், வீடு, படகு, நடைவண்டி, கைத்தடின்னு செத்து மண்ணா போறவரைக்கும் உங்ககூட தானே இருக்கோம்.


நீங்க மட்டும் ஏன் இப்படி நன்றிகெட்ட தனமா இருக்கீங்க?!


நீங்க ஆரோக்கியமா இருக்கிறதுக்காக முளைகட்டுன பயிருன்னு வாங்கி தின்றீங்க இல்ல, அதெல்லாம் எங்களோட பச்சைகுழந்தைங்க!

உங்க கிட்னி நல்லா இருக்கனுன்றதுக்காக தான் எங்கள வேரோட வெட்டிட்டு வந்து வாழைத்தண்டுன்னு விக்கிறாங்க! அப்போ எவ்ளோ வலிக்கும் தெரியுமா?!


எவ்ளோ ரத்தம் போகும் தெரியுமா?!

சிகப்பா இருந்தாதான் ரத்தமா?

வெள்ளையா இருந்தா ரத்தம் இல்லையா??

கரப்பான் பூச்சி, தேளுக்கு எல்லாம் ரத்தம் வெள்ளையாதான் அதுமாதிரிதான் இதுவும்!


அதெல்லாம் okay இப்ப உனக்கு ஆமான்னு சொல்லனும்னா கூட நான் உயிரோட இருந்தாதான் முடியும்,


please காப்பாத்து என எல்லோரும் கெஞ்ச,

மரங்கள் யாவும்

மரங்கள் இல்லை, மனிதர்கள் தான் மரக்கட்டைகள் என்பதை நிரூபிக்கும் விதமாக

எல்லா மரங்களும் மனிதர்களை மன்னித்துவிட்டு,


விஷவாயுவை விழுங்கி ஆக்சிஜனை வெளியேற்ற

மனிதகுலம் மீண்டும் சுவாசிக்க தொடங்கியது


ஆனால் கொஞ்சம் நன்றியோடு!!


நம் எல்லோருடைய வீட்டிலும் எதாவது ஒரு மரமோ செடிகொடியோ இருக்கும்,


அவைகளுக்குள் நிச்சயம் ஒரு மனமிருக்கும் என்பதை மட்டும் புரிந்துகொண்டால் போதும்.

படித்ததில் பிடித்தது. வாட்சப் பகிர்வு

மொட்டை போடுவதன் காரணம்

 மொட்டை போடுவதன் காரணம்-


உலகில் எங்கிருந்தாலும் ஹிந்துக்களிடையே தலைமுடியை முழுக்க மழிக்கும் பழக்கம் காணப்படுகிறது. இதனை மொட்டை போடுதல் (மொட்டையடித்தல்) என்பார்கள்.


இந்த பழக்கத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, 1 வயது முதல் 100 வயது வரையில் மொட்டையடித்துக் கொள்வதை காணமுடியும்.


பெரும்பாலும் மொட்டை போடுதல் என்பது கோவில்களுக்கு வேண்டுதல் வைத்து நிறைவேற்றப்படுகிறது.


குழந்தைகளுக்கு முடி எடுப்பதென்றால் ஒற்றைப்படை ஆண்டுகளில் (அதாவது ஒரு வயது , மூன்று வயது , ஐந்து வயது) எடுக்க வேண்டும். இரட்டைபடை ஆண்டுகளில் முடி எடுப்பதால் குழந்தைக்கு தொடர்ந்து உடல்நலக்குறை ஏற்படும் என்பார்கள்.


ஆனால் பெரியவர்களுக்கு அப்படியில்லை, எப்போது வேண்டுமானாலும் முடி எடுத்துக்கொள்வார்கள்.


அது தவறாகும்.


ஒரு முறை மொட்டையடித்துக் கொண்டால், அடுத்து முடி இறக்க மூன்று மாதங்களாக வேண்டும். மூன்று மாதமாகாமல், மீண்டும் முடி எடுக்கக்கூடாது.


இதனை ஹிந்துக்களிலேயே கிண்டலடிப்பவர்கள் உண்டு- 'உயிர் கொடுத்த சாமிக்கு மயிர் கொடுக்கிறாயா?' என்றும் ,


'ஏன் முடிய கொடுக்கிற விரலக் கொடுக்கறேன்னு வேண்டிக்கலாமே!' என்றும் கேலி பேசுவார்கள்.

'முடின்னா வளர்ந்துடும்ன்னு வேண்டிகிட்டாயா?' என்று கிண்டலடிப்பார்கள்.


யார் என்ன சொன்னாலும் இன்றும் மொட்டை போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியே இருக்கிறது, இன்னும் பெருகும்.

மத பேதமின்றி, எல்லோருடைய கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கும். இந்த மொட்டை போடும் அல்லது போட்டுக் கொள்ளும் பழக்கம் எப்போது யாரால் துவங்கப்பட்டது, என்பதனை பார்ப்போம்.


மகாபாரதப் போரின் உச்சகட்ட போரின் முடிவு நாளான 18ம் நாள் இரவில், வரும் விதியின் கோரத்தை அறியாத பாண்டவர்கள் ஐவரின் குழந்தைகளும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையில், அவர்களின் உறக்கத்தை மீளா உறக்கமாக மாற்ற எண்ணி, அறையின் உள்ளே புகுந்த குரு துரோணாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமன், உறக்கத்திலிருந்த குழந்தைகளை பாண்டவர்கள் என்று எண்ணி வெட்டி சாய்த்தான் .


அலறக்கூட நேரமின்றி மடிந்தன அந்த குழந்தைகள். விடிந்ததும் அங்கு வந்த பாண்டவர்கள், நடந்த கொடுமையை எண்ணி மனம் கலங்கினார்கள். இந்த மாபாதக செயலை செய்தவனை சிரம் கொய்வேன், என்று சபதமிட்டான் அர்ஜுனன். அன்று மாலைக்குள் யாரென்று கண்டறியப்பட்டு, விலங்கிட்டு கொண்டு வந்து பாண்டவர்கள் முன் நிறுத்தப்பட்டான் அஸ்வத்தாமன்.

குருவின் மகனை கொல்லுதல் பாபம் என திரௌபதியும் , அண்ணன்களும் கூற, 'என் சபதம் முடிக்காமல் விடமாட்டேன்' என கர்ஜித்தான் அர்ஜுனன்.


அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு உபாயம் சொல்கின்றார். 'அர்ஜுனா , உன் கோபமும் செயலும் நியாயமானதே! ஆனாலும் தர்மத்தின் பாதையில் செல்லும் நீ புரிந்து கொள், அவனை சிரம் கொய்யாதே, பதிலாக சிகையை மழித்துவிடு, அது அவன் மரணித்ததற்கு ஒப்பாகும்' என்றார்.

அதற்காக, அஸ்வத்தாமனின் முடி மழிக்கப்பட்டு துரத்தப்பட்டான்.


ஆக, சிகையை (முடியை) இழப்பது என்பது மரணத்திற்கு சமமானதாகும்.

ஹிந்துக்களின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணம் உண்டு ,


நாகரீகம் என்று எண்ணிக்கொண்டு, வெகு தூரம் வெளியே வந்து விட்ட மக்களாகிய நமக்கு, இது கிண்டலாகவும் கேலியாகவும் தெரிவது இயற்கை தானே.


ஒருவரின் ஜாதகத்தில் உயிருக்கு ஆபத்து இருந்தால், மரண திசையாக இருக்குமானாலும் அவர்கள் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று முடி எடுத்துக் கொள்வார்களேயானால், அந்த உயிராபத்திலிருந்து நீங்கிப் பிழைப்பது சர்வ நிச்சயமாகும்.


அதே போல மொட்டை அடிப்பதால் தலை சார்ந்த பல நோய்கள் தீர்வதாகவும் சகஸ்ரா சக்கரம், ஆக்ஞா சக்கரங்கள் நன்கு இயங்கி மனதளவில் பல ஆன்மீக மாற்றங்களை பெற முடியும். இதனாலேயே பல மகான்களும் ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபடுபவர்களும் தலையை மொட்டையாகவே வைத்து கொள்கின்றனர்.


ஹிந்து மதத்தின் ஒவ்வொரு சொல், செயல் அனைத்திற்கும் உள் அர்த்தம் உண்டு. எல்லாவற்றையும் அறிந்து செயலாற்றுவதற்கு நமக்கு வயது போதாது. ஆகவே, சொல்வதை அப்படியே கேட்டு அதன் வழி செல்வதுதான் சாலச் சிறந்தது.


வேண்டுமானால், விஷயமறிந்தவர்களிடம் விபரம் கேட்டுத் தெளியலாம்.


ஒன்று மட்டும் நிச்சயம்! ஹிந்துக்களின் எந்த சொல்லும் செயலும் சத்யமற்றதோ,


அதர்மமானதோ, இறைவனுக்கு எதிரானதோ இல்லை.


யாரோ ஒருவர் ஏதோ தவறிழைத்தார் என்றால் ஹிந்துக்களோ, மதமோ,

காரணமில்லை என்பதை உணருங்கள்.


தனிமனிதனின் தவறுக்காக, ஒரு மதத்தையே இழிவாக்குவது,


இழிவாகப்பேசுவது என்பது எந்த மதமானாலும் தவறே!


வளமோடு வாழுங்கள், வாழும் நாளெல்லாம்!

Sunday, 27 September 2020

நவபாஷாண பெருமாள்

 


அர்ஜுனனின் காண்டீப ரகசியம்

 சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். 


அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். 


அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான். 


ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்


. “நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். 


அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் கர்ணன்.


 “ஆஹா! நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான். நீ உன் திறமையை நம்புகிறாய்!” என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்.


அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். 


இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், “கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை!” என்றார்.


 “அது என்ன?” என்று கேட்டான் அர்ஜுனன். 


“நேரம் வரும் போது சொல்கிறேன்!” என்றார் வியாசர்.


 பல ஆண்டுகள் கழிந்தன.


 மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின், கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான். 


“அர்ஜுனா! நான் எனது அவதாரத்தை முடித்துக்கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன். 


அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குச் சென்றுவிடு!” என்று கூறினான் கண்ணன்.


கனத்த மனத்துடன் கண்ணனிடமிருந்து விடைபெற்ற அர்ஜுனன், தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். 


வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள். 


அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன்.


 ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை.


 பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும், யாராலும் வீழ்த்தமுடியாதவன் என்று போற்றப்படுபவனும், வில் விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்திவிட்டார்கள்.


 தன் வாழ்வில் முதன்முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன். அதுவும் சாதாரணத் திருடர்களிடம்!


வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில், இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன்.


 அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர். “அர்ஜுனா! நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. 


இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது!” என்று கூறினார் வியாசர்.


 “கண்ணனே புறப்பட்ட பின், நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார். 


ஆனால், என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது! இதுவரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. 


என்னால் அதைத் தூக்க முடியவில்லையே! என்ன காரணம்?” என்று கேட்டான் அர்ஜுனன்.


அதற்கு வியாசர், “உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. 


கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். 


அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய்.


 இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால், இதை உன்னால் தூக்க முடியவில்லை!” என்றார். 


மேலும், “சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது, அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே, ஏன் தெரியுமா? 


கண்ணனின் அருள்பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கிவிட்டாய். 


ஆனால் கண்ணனின் அருள்பெறாத கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும்.


அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன், கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து, காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான்!” என்றார் வியாசர்.


இதிலிருந்து பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது. 


இக்கருத்தை “ஸத்வம் ஸத்வவதாம் அஹம்” (பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்) என்று கண்ணன் கீதையில் கூறுகிறான். இத்தகைய மகா பலத்தோடு கூடியவராகத் திருமால் விளங்குவதால் ‘மஹாபல:’ என்றழைக்கப்படுகிறார்.

நட்சத்திர அதிசயங்கள்: #கானோபஸ் எனப்படும் #அகத்தியர் #நட்சத்திரம் - ஆக்கம் திரு ஆர்கே சாமி🌹🙏


 நட்சத்திர அதிசயங்கள்: #கானோபஸ் எனப்படும் #அகத்தியர் #நட்சத்திரம்.


அகஸ்திய நட்சத்திரம் பூமியை நெருங்கி வரும் போதெல்லாம் கடல் நீர் சற்று வற்றுகிறது என அறிவியல் கூறுகிறது. அது உதிக்கும் போது அகத்திப் பூ மலர்கிறது. எண்ணற்ற அதிசயங்களைக் கொண்ட அகஸ்திய நட்சத்திரத்தைப் பார்ப்போம்!


கானோபஸ் என மேலை நாட்டினரால் அழைக்கப்படும் அகத்திய நட்சத்திரம் அபூர்வ ஆற்றல்களைக் கொண்டு வானில் ஜொலிக்கும் ஒன்று. இது 700 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. கற்பனைக்கு அப்பாற்பட்ட தூரம் இது!இதன் மாக்னிட்யூட் 0.86,அகத்தியர் உள்ள ஆர்கோ நட்சத்திரத் தொகுதியில் மொத்தம் 21 நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் இந்தத் தொகுதி கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இருந்தாலும் கூட அகத்தியர் மட்டும் தனித்து சூரியனைப் போல 13600 மடங்கு பிரகாசத்துடன் ஜொலிக்கிறார்.எல்லையற்ற தூரத்தின் காரணமாக இவரது பிரகாசத்தை நம்மால் உணர முடியவில்லை!இவருக்கு அருகில் உள்ள டோராடஸ் நட்சத்திரமே இவரது மனைவியான லோபாமுத்ரை என்பர் அறிஞர்.


27 நட்சத்திரங்கள் என்ற வரிசையில் சேராவிட்டாலும் கூட தன் தவத்தின் வலிமையால் தனியொரு இடத்தைப் பிடித்தவர் அகத்தியர்!சூரியன் சிம்ம ராசியிலிருந்து மறையும் போது கும்ப ராசி உதயமாகிறது. கும்ப ராசி உதிக்கும் அதே சமயம் அகத்திய நட்சத்திரமும் உதிக்கும். இவருக்கு கும்ப முனி என்ற பெயர் பொருத்தம் தானே!

***********************************************************


கடல் நீரைக் குடித்த கதை 


அகத்தியர் கடல் நீரைக் குடித்த கதையை இன்றைய அறிவியல் மிகவும் பொருத்தமாக விளக்குகிறது. இதைப் புரிந்து கொள்ள சிறிது அடிப்படை வானவியல் அறிவு வேண்டும். சூரியன் மேற்கே மறைந்தவுடன் ஒரு நட்சத்திரம் கிழக்கே உதிப்பதை Acronycal rising அல்லது தினசரி உதயம் என்கிறோம். சூரியனின் அருகில் ஒரு நட்சத்திரம் வரும் போது சூரியனின் ஒளியால் அந்த நட்சத்திரத்தின் பிரகாசம் மங்கி அது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுகிறது. சூரியனை விட்டுத் தொலைதூரம் சென்றவுடன் மீண்டும் பிரகாசம் பெற்று நம் கண்களுக்குத் தெரிகிறது. இப்படி ஒரு நட்சத்திரம் சூரியனின் அருகில் வந்ததால் ஒளி மங்கி நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து, பிறகு தள்ளிச் சென்றவுடன் ஒளி பெற்று மீண்டும் நம் கண்ணுக்கு முதலில் தெரியும் தினத்தை அல்லது அந்த நட்சத்திரத்தின் உதயத்தை Heliacal rising என்கிறோம்.இந்த முதல் உதயத்தை ஒட்டியே நம் முன்னோர்கள் அந்தந்த நட்சத்திரத்திற்கும் அதற்கான தெய்வங்களுக்கும் விழாவை ஏற்படுத்தினர்.ஒவ்வொரு நட்சத்திர உதயத்தையும் அப்போது ஏற்படுத்தப்பட்டு நடந்து வரும் விழாவையும் உற்று நோக்கினால் நமது முன்னோரின் கூரிய அறிவுத் திறனும் அவர்கள் வகுத்த நெறிமுறைகளின் அர்த்தமும் விழாவின் மகிமையும் எளிதில் புரியும்.


அகத்திய நட்சத்திரத்தின் வருடாந்திர உதயம் உஜ்ஜயினியில் புரட்டாசி மாதம் 23ம் தேதியன்று ஏற்படுகிறது (பண்டித ரகுநந்தனர் இதை புரட்டாசி 17ம் தேதி என்று குறிப்பிடுகிறார்) சூரியன் ரோஹிணியில் செல்லும் போது அகத்தியர் மறைகிறார். பின்னர் சூரியன் ஹஸ்தத்திற்கு வரும் போது பிரகாசமாகி மீண்டும் நம் கண்களுக்குத் தெரிகிறார்,அதாவது சுமார் நான்கு மாத காலம் சூரிய ஒளியால் அகத்தியர் நம் கண்களிலிருந்து மறைந்து விடுகிறார்.அகத்தியர் தோன்றியவுடன் மழைக்காலமும் சரியாக முடிகிறது.ஆகவே தான் மழைக்காலம் முடிந்தவுடன் தோன்றும் அகத்தியர் மழை நீர் சேரும் கடலைக் குடித்து விட்டார் என்று கூறப்பட்டது. வங்காளத்தில் இன்றும் கூட ஆகஸ்ட் -செப்டம்பரில் அகத்தியருக்கு இந்தப் பருவ மாறுதலை ஒட்டி விழா நடைபெறுகிறது. அகத்தியரின் வருடாந்திர உதயம் பற்றி வானவியல் நிபுணர் ஜே.பெண்ட்லி விரிவாக எழுதியுள்ளார்!


நவீன அறிவியல் ஆராய்ச்சியின் படி அதிசயிக்கத் தக்க உண்மை இப்போது வெளிப்படுகிறது. எப்போதெல்லாம் அகத்தியர் பூமியை நெருங்கி வருகிறாரோ அப்போதெல்லாம் கடல் நீர் ஆவியாகி சிறிது வற்றி விடுகிறதாம்!


அகத்தியர் பூமியை சமன் செய்த புராணக் கதை 


இனி அகத்தியர் பூமியைச் சமன் செய்த கதைக்கு வருவோம்.உஜ்ஜயினி வழியாகவே பூமியின் முதல் தீர்க்க ரேகை செல்கிறது!. இந்த ரேகையை வைத்தே அனைத்துக் காலக் கணக்கீடுகளும் செய்யப்படுகின்றன. லாடிட்யூட் எனப்படும் அட்சய ரேகையின் படி அகத்தியர் இருக்கும் இடம் 80 டிகிரி தெற்கு.ஆகவே அட்சய ரேகையின் படி 10 டிகிரி வடக்கிற்கு மேல் இது தெரியாது.வடக்கே உள்ள உஜ்ஜயினி 24 டிகிரி தெற்கு என்ற நிலையில் உள்ள நகரம்.


வானவியல் நிபுணரான வராஹமிஹிரர் காலத்தில் மேஷப் புள்ளி அசுவனி நட்சத்திரத்தில் இருந்தது. அதற்கு 14400 ஆண்டுகளுக்கு முன்னர் சித்திரை நட்சத்திரத்தில் அது இருந்தது.சித்திரை நட்சத்திரத்தில் அகத்தியர் இருக்கும் போது அதன் தென் துருவ தூரம் 14 டிகிரி ஆகும்.அப்போது அது உஜ்ஜயினியில் தெரியவில்லை.ஏராளமான நட்சத்திரங்கள் உள்ள வடக்கு வானம் மட்டும் அப்போது தெரிந்தது. இதையே தேவர்கள் கூடிய திருக்கல்யாணக் கூட்டமாக புராணம் வர்ணிக்கிறது.கி.மு.7200ம் ஆண்டு வாக்கில் அகத்தியரின் தென் துருவ தூரம் 24 டிகிரி ஆனது.அப்போது அகத்திய நட்சத்திரம் உஜ்ஜயினியில் தெரிய ஆரம்பித்தது. இதையே அகத்தியர் தெற்கே வந்து சமநிலை ஏற்படுத்தினார் என புராணம் விவரிக்கிறது.


இந்த விளக்கத்துடன் இன்னொரு விளக்கத்தையும் வானவியலோடு புராணத்தை இணைத்து ஆய்வு செய்யும் அறிஞர்கள் நம் முன் வைக்கின்றனர்.ஒரு காலத்தில் வடக்கே துருவ நட்சத்திரமாக விளங்கிய அபிஜித் நட்சத்திரம் அந்த அந்தஸ்தை இழந்து தெற்கே அகஸ்தியர் அந்த அந்தஸ்தைப் பெற்றார். முதலில் வடக்கே இருந்த அபிஜித்தே அகஸ்தியர் என அழைக்கப்பட்டார். பிறகு இடைவிடாத வான சுழற்சி காரணமாக தெற்கே இருந்த நட்சத்திரம் துருவ நட்சத்திரமாக அந்தஸ்தைப் பெற்றவுடன் வடக்கே இருந்த அகத்தியர் தெற்கே வந்ததாகக் கூறப்பட்டது. பதவியில் இருப்பவருக்கே அந்தஸ்து என்ற ரீதியில் இந்த வானவியல் சுழற்சியைப் பார்த்தால் எளிதில் விவரம் புரியும்.ஆதியில் அபிஜித்தைச் சேர்த்து 28 நட்சத்திரங்களை நமது வேதம் உள்ளிட்ட நூல்கள் கூறுகின்றன. தன் அந்தஸ்தை அபிஜித் இழந்தவுடன் அது நீக்கப்பட்டு 27 நட்சத்திரங்கள் என்ற எண்ணிக்கை ஆகி விட்டது. அபிஜித் நமது மானுட வாழ்க்கையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்ற போது இந்த மாறுதல் ஏற்பட்டது!


‘அக’ என்றால் மலை என்று பொருள். ‘ஸ்தி’ என்றால் அமுக்குவது என்று பொருள். பூமி என்னும் மலையை இரு துருவங்களிலும் அமுக்கியவரே அகஸ்தியர் என்பதை புராணம் விரிவாக தன் பாணியில் பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு விளக்குகிறது. வானவியல் கணிதத்தை மேலே கூறிய படி டிகிரியை வைத்து தூரத்தைச் சொன்னால் இந்தக் கட்டுரையைப் படிக்கும் பலருக்கும் கூட பல முறை படித்தால் மட்டுமே இது புரியக் கூடும் என்ற நிலையில் அகத்தியரின் வரலாறு எளிமைப் படுத்தப்பட்டு சிறந்த கதையாக ஆனது சரி தானே!


அகத்தியர் நட்சத்திரம் உதிக்கும் போது அகத்திப் பூ மலர்வதால் அந்தச் செடிக்கு அகத்திக் கீரை என நம் முன்னோர் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். பதினெட்டு சித்தர்களில் முக்கியமானவரான அகத்தியர் நந்தி தேவருடன் ஒவ்வொரு மூலிகையையும் ஆராய்ந்து அதன் மருத்துவ குணங்களைத் தொகுத்து மனித குலம் நோயின்றி வாழ வழி வகை செய்துள்ளார்.


வானத்தை உற்று நோக்கி புராணங்களைத் தெளிவு படப் படித்து அறிவியலை அலசிப் பின்னர் கம்பனைப் படித்தால் நன்கு ரசிக்க முடியும்! கம்பன் ஆரண்ய காண்டத்தில் அகத்தியன் பற்றிக் கூறும் வாக்கியங்களான “தூய கடல் நீரை உண்டு அது துரந்தான்” என்பதை வானவியல் அறிவுடன் சேர்த்துப் படித்தால் அர்த்தம் புரிந்து மகிழலாம். அகத்தியனை இத்தோடு மட்டும் கம்பன் புகழவில்லை: தமிழ் தந்த முனிவரான அவரை “நிழல்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண் தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான்” எனவும் புகழ்கிறான்.


குருமுனி, கும்பமுனி என அழைக்கப்படும் ஆசான் அகத்தீசரின் பெருமை மிகவும் உயர்ந்தது! அளவிடமுடியாதது.🌹🙏 அனுமன் ஆர்கே சாமி🌹🙏

இது தான் தமிழ்

 *இது தான்* *தமிழ்* ! *அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது*..

*பெயர்களையாவது படித்து அறிவோம்*..

1. தேவாரம் 

உ2. திருவாசகம்

3. திருமந்திரம்

4. திருவருட்பா 

5. திருப்பாவை 

6. திருவெம்பாவை 

7. திருவிசைப்பா

8. திருப்பல்லாண்டு

9. கந்தர் அனுபூதி

10. இந்த புராணம்

11. பெரிய புராணம்

12. நாச்சியார் திருமொழி 

13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!


1.நற்றிணை 

2.குறுந்தொகை 

3.ஐங்குறுநூறு 

4.அகநானூறு 

5.புறநானூறு 

6.பதிற்றுப்பத்து 

7.பரிபாடல் 

8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !


1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 

5.முல்லைப்பாட்டு 

6.மதுரைக்காஞ்சி 

7.நெடுநல்வாடை 

8.குறிஞ்சிப் பாட்டு 

9.பட்டினப்பாலை 

10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!


1.திருக்குறள் 

2.நாலடியார் 

3.நான்மணிக்கடிகை 

4.இன்னாநாற்பது 

5.இனியவை நாற்பது 

6.கார் நாற்பது 

7.களவழி நாற்பது 

8.ஐந்திணை ஐம்பது 

9.திணைமொழி ஐம்பது 

10.ஐந்திணை எழுபது 

11.திணைமாலை       நூற்றைம்பது 

12.திரிகடுகம் 

13.ஆசாரக்கோவை 

14.பழமொழி 

15.சிறுபஞ்சமூலம் 

16.முதுமொழிக் காஞ்சி 

17.ஏலாதி 

18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!


1.சிலப்பதிகாரம் 

2.மணிமேகலை 

3.சீவக சிந்தாமணி 

4. வளையாபதி 

5. குண்டலகேசி 

போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !


1.அகத்தியம்  

2.தொல்காப்பியம்

3.புறப்பொருள்

வெண்பாமாலை 

4.நன்னூல் 

5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்

6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!


1.கம்பராமாயணம்-வழிநூல்.


1.முத்தொள்ளாயிரம் 

2.முக்கூடற்பள்ளு 

3.நந்திக்கலம்பகம் 

4.கலிங்கத்துப்பரணி 

5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!


ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்..


1.தொன்மை 

2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 

3.பொதுமைப் பண்புகள் 

4.நடுவுநிலைமை 

5.தாய்மைத் தன்மை 

6.கலை பண்பாட்டுத் தன்மை 

7.தனித்து இயங்கும் தன்மை 

8.இலக்கிய இலக்கண வளம் 

9.கலை இலக்கியத் தன்மை 

10.உயர் சிந்தனை 

11.மொழிக் கோட்பாடு

இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!


சமய குரவர்கள்

----------------------------


1. திருஞானசம்பந்தர்

2. திருநாவுக்கரசர்

3. சுந்தரமூர்த்தி சுவாமிகள்

4. மாணிக்கவாசகர்


சைவம் வளர்த்தோர்

-----------------------------------

1. சேக்கிழார்

2. திருமூலர்

3. அருணகிரிநாதர்

4. குமரகுருபரர்


12 ஆழ்வார்கள்

---------------------------

1. பொய்கையாழ்வார்

2. பூதத்தாழ்வார்

3. பேயாழ்வார்

4. திருமழிசை ஆழ்வார்

5. நம்மாழ்வார்

6. மதுரகவி ஆழ்வார்

7. குழசேகராழ்வார்

8. பெரியாழ்வார்

9. ஆண்டாள் நாச்சியார்

10. தொண்டரடிப் பொடியாழ்வார்

11. திருப்பாணாழ்வார்

12. திருமங்கையாழ்வார்

-----------------------


தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!

------------------------------------------------------------

அகம்பன் மாலாதனார்

அஞ்சியத்தை மகள் நாகையார்

அஞ்சில் அஞ்சியார்

அஞ்சில் ஆந்தையார்

அடைநெடுங்கல்வியார்

அணிலாடு முன்றிலார்

அண்டர் மகன் குறுவழுதியார்

அதியன் விண்ணத்தனார்

அதி இளங்கீரனார்

அம்மூவனார்

அம்மெய்நாகனார்

அரிசில் கிழார்

அல்லங்கீரனார்

அழிசி நச்சாத்தனார்

அள்ளூர் நன்முல்லையார்

அறிவுடைநம்பி

ஆரியன் பெருங்கண்ணன்

ஆடுதுறை மாசாத்தனார்

ஆதிமந்தி

ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்

ஆலங்குடி வங்கனார்

ஆலத்தூர் கிழார்

ஆலம்பேரி சாத்தனார்

ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்

ஆவூர் காவிதிகள் சகாதேவனார்

ஆவூர்கிழார்

ஆலியார்

ஆவூர் மூலங்கீரனார்

இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்

இடைக்காடனார்

இடைக்குன்றூர்கிழார்

இடையன் சேந்தன் கொற்றனார்

இடையன் நெடுங்கீரனார்

இம்மென்கீரனார்

இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்

இருந்தையூர்க் கொற்றன் புலவன்

இரும்பிடர்தலையார்

இளங்கீரந்தையார்

இளங்கீரனார்

இளநாகனார்

இளந்திரையன்

இளந்தேவனார்

இளம்புல்லூர்க் காவிதி

இளம்பூதனார்

இளம்பெருவழுதி

இளம்போதியார்

இளவெயினனார்

இறங்குடிக் குன்றநாடன்

இறையனார்

இனிசந்த நாகனார்

ஈழத்துப் பூதந்தேவனார்

உகாய்க் குடிகிழார்

உக்கிரப் பெருவழுதி

உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்

உம்பற்காட்டு இளங்கண்ணனார்

உருத்திரனார்

உலோச்சனார்

உவர்கண்ணூர் புல்லங்கீரனார்

உழுந்தினைம் புலவர்

உறையனார்

உறையூர் இளம்பொன் வாணிகனார்

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்

உறையூர்ச் சல்லியங் குமரனார்

உறையூர்ச் சிறுகந்தனார்

உறையூர்ப் பல்காயனார்

உறையூர் மருத்துவன் தாமோதரனார்

உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

ஊட்டியார்

ஊண்பித்தை

ஊண்பொதி பசுங்குடையார்

எயிற்றியனார்

எயினந்தையார்

எருமை வெளியனார்

எருமை வெளியனார் மகனார் கடலனார்

எழூப்பன்றி நாகன் குமரனார்

ஐயாதி சிறு வெண்ரையார்

ஐயூர் முடவனார்

ஐயூர் மூலங்கீரனார்

ஒக்கூர் மாசாத்தனார்

ஒக்கூர் மாசாத்தியார்

ஒருசிறைப் பெரியனார்

ஒரூத்தனார்

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

ஓதஞானி

ஓதலாந்தையார்

ஓரம்போகியார்

ஓரிற்பிச்சையார்

ஓரேர் உழவர்

ஔவையார்

கங்குல் வெள்ளத்தார்

கச்சிப்பேடு இளந்தச்சன்

கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்

கச்சிப்பேடு பெருந்தச்சனார்

கடம்பனூர்ச் சாண்டில்யன்

கடலூர்ப் பல்கண்ணனார்

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

கடுந்தொடைக் காவினார்

கோவர்த்தனர்

கோவூர்க் கிழார்

கோவேங்கைப் பெருங்கதவனார்

கோழிக் கொற்றனார்

கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்

சங்கவருணர் என்னும் நாகரியர்

சத்திநாதனார்

சல்லியங்குமரனார்

சாகலாசனார்

சாத்தந்தந்தையார்

சாத்தனார்

சிறுமோலிகனார்

சிறுவெண்டேரையார்

சிறைக்குடி ஆந்தையார்

சீத்தலைச் சாத்தனார்

செங்கண்ணனார்

செம்பியனார்

செம்புலப்பெயல்நீரார்

செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்

செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்

செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்

செல்லூர்க்கோசிகன் கண்ணனார்

சேந்தங்கண்ணனார்

சேந்தம்பூதனார்

சேந்தங்கீரனார்

சேரமானெந்தை

சேரமான் இளங்குட்டுவன்

சேரமான் கணைக்கால் இரும்பொறை

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

சோழன் நலங்கிள்ளி

சோழன் நல்லுருத்திரன்

தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்

தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

தனிமகனார்

தாமாப்பல் கண்ணனார்

தாமோதரனார்

தாயங்கண்ணனார்

தாயங்கண்ணியார்

தாயுமானவர்

திப்புத்தோளார்

திருத்தாமனார்

தீன்மதிநாகனார்

தும்பிசேர்கீரனார்

துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்

துறையூர்ஓடைக்கிழார்

தூங்கலோரியார்

தேய்புரி பழங்கயிற்றினார்

தேரதரன்

தேவகுலத்தார்

தேவனார்

தொடித்தலை விழுத்தண்டினர்

தொண்டி ஆமூர்ச்சாத்தனார்

தொல்கபிலர்

நக்கண்ணையார்

நக்கீரர்

நப்பசலையார்

நப்பண்ணனார்

நப்பாலத்தனார்

நம்பிகுட்டுவன்

நரிவெரூத்தலையார்

நரைமுடி நெட்டையார்

நல்லச்சுதனார்

நல்லந்துவனார்

நல்லழிசியார்

நல்லாவூர்க் கிழார்

நல்லிறையனார்

நல்லுருத்திரனார்

நல்லூர்ச் சிறுமேதாவியார்

நல்லெழுநியார்

நல்வழுதியார்

நல்விளக்கனார்

நல்வெள்ளியார்

நல்வேட்டனார்

நற்சேந்தனார்

நற்றங்கொற்றனார்

நற்றமனார்

நன்பலூர்ச் சிறுமேதாவியார்

நன்னாகனார்

நன்னாகையார்

நாகம்போத்தன்

நாமலார் மகன் இளங்கண்ணன்

நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்

நெடுங்கழுத்துப் பரணர்

நெடும்பல்லியத்தனார்

நெடும்பல்லியத்தை

நெடுவெண்ணிலவினார்

நெட்டிமையார்

நெய்தற் கார்க்கியார்

நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்

நெய்தற்றத்தனார்

நொச்சி நியமங்கிழார்

நோய்பாடியார்

பக்குடுக்கை நன்கணியார்

படுமரத்து மோசிகீரனார்

படுமரத்து மோசிக்கொற்றனார்

பதடிவைகலார்

பதுமனார்

பரணர்

கடுந்தொடைக் கரவீரன்

கடுவன் இளமள்ளனார்

கடுவன் இளவெயினனார்

கடுவன் மள்ளனார்

கணக்காயன் தத்தனார்

கணியன் பூங்குன்றனார்

கண்ணகனார்

கண்ணகாரன் கொற்றனார்

கண்ணங்கொற்றனார்

கண்ணம் புல்லனார்

கண்ணனார்

கதக்கண்ணனார்

கதப்பிள்ளையார்

கந்தரத்தனார்

கபிலர்

கம்பர்

கயத்தூர்கிழார்

கயமனார்

கருங்குழலாதனார்

கரும்பிள்ளைப் பூதனார்

கருவூர்க்கிழார்

கருவூர் கண்ணம்பாளனார்

கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்

கருவூர் கலிங்கத்தார்

கருவூர் கோசனார்

கருவூர் சேரமான் சாத்தன்

கருவூர் நன்மார்பனார்

கருவூர் பவுத்திரனார்

கருவூர் பூதஞ்சாத்தனார்

கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்

கல்பொருசிறுநுரையார்

கல்லாடனார்

கவைமகன்

கழாத்தலையார்

கழார்க் கீரனெயிற்றியனார்

கழார்க் கீரனெயிற்றியார்

கழைதின் யானையார்

கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்

கள்ளில் ஆத்திரையனார்

காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்

காசிபன் கீரன்

காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்

காப்பியஞ்சேந்தனார்

காப்பியாற்றுக் காப்பியனார்

காமஞ்சேர் குளத்தார்

காரிக்கிழார்

காலெறி கடிகையார்

காவட்டனார்

காவற்பெண்டு

காவன்முல்லையார்

காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்

காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்

காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்

காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்

கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்

கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்

கிடங்கில் குலபதி நக்கண்ணனார்

கிள்ளிமங்கலங்கிழார்

கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்

கீரங்கீரனார்

கீரந்தையார்

குடபுலவியனார்

குடவாயிற் கீரத்தனார்

குட்டுவன் கண்ணனார்

குட்டுவன் கீரனார்

குண்டுகட் பாலியாதனார்

குதிரைத் தறியனார்

குப்பைக் கோழியார்

குமட்டூர் கண்ணனார்

குமுழிஞாழலார் நப்பசலையார்

குழற்றத்தனார்

குளம்பனார்

குளம்பாதாயனார்

குறமகள் இளவெயினி

குறமகள் குறியெயினி

குறியிறையார்

குறுங்கீரனார்

குறுங்குடி மருதனார்

குறுங்கோழியூர் கிழார்

குன்றம் பூதனார்

குன்றியனார்

குன்றூர்க் கிழார் மகனார்

கூகைக் கோழியார்

கூடலூர்க் கிழார்

கூடலூர்ப பல்கண்ணனார்

கூவன்மைந்தன்

கூற்றங்குமரனார்

கேசவனார்

கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்

கொட்டம்பலவனார்

கொல்லன் அழிசி

கொல்லிக் கண்ணன்

கொள்ளம்பக்கனார்

கொற்றங்கொற்றனார்

கோக்குளமுற்றனார்

கோடைபாடிய பெரும்பூதன்

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்

கோட்டியூர் நல்லந்தையார்

கோண்மா நெடுங்கோட்டனார்

கோப்பெருஞ்சோழன்

பராயனார்

பரூஉமோவாய்ப் பதுமனார்

பறநாட்டுப் பெருங்கொற்றனார்

பனம்பாரனார்

பாண்டரங்கண்ணனார்

பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்

பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

பாண்டியன் பன்னாடு தந்தான்

பாண்டியன் மாறன் வழுதி

பாரதம் பாடிய பெருந்தேவனார்

பாரிமகளிர்

பார்காப்பான்

பாலைக் கௌதமனார்

பாலை பாடிய பெருங்கடுங்கோ

பாவைக் கொட்டிலார்

பிசிராந்தையார்

பிரமசாரி

பிரமனார்

பிரான் சாத்தனார்

புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்

புல்லாற்றூர் எயிற்றியனார்

பூங்கணுத் திரையார்

பூங்கண்ணன்

பூதங்கண்ணனார்

பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு

பூதம்புல்லனார்

பூதனார்

பூதந்தேவனார்

பெருங்கண்ணனார்

பெருங்குன்றூர்க் கிழார்

பெருங்கௌசிகனார்

பெருஞ்சாத்தனார்

பெருஞ்சித்திரனார்

பெருந்தலைச்சாத்தனார்

பெருந்தேவனார்

பெருந்தோட் குறுஞ்சாத்தன்

பெரும் பதுமனார்

பெரும்பாக்கன்

பெருவழுதி

பேயனார்

பேய்மகள் இளவெயினி

பேராலவாயர்

பேரிசாத்தனார்

பேரெயின்முறுவலார்

பொதுக்கயத்துக் கீரந்தை

பொதும்பில் கிழார்

பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி

பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்

பொத்தியார்

பொய்கையார்

பொருந்தில் இளங்கீரனார்

பொன்மணியார்

பொன்முடியார்

பொன்னாகன்

போதனார்

போந்தைப் பசலையார்

மடல் பாடிய மாதங்கீரனார்

மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்

மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்

மதுரை இனங்கௌசிகனார்

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்

மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்

மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்

மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்

மதுரைக் கணக்காயனார்

மதுரைக் கண்டராதித்தனார்

மதுரைக் கண்ணத்தனார்

மதுரைக் கவுணியன் பூதத்தனார்

மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்

மதுரைக் காருலவியங் கூத்தனார்

மதுரைக் கூத்தனார்

மதுரைக் கொல்லன் புல்லன்

மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்

மதுரைச் சுள்ளம் போதனார்

மதுரைத் தத்தங்கண்ணனார்

மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்

மதுரைத் தமிழக் கூத்தனார்

மதுரைப் படைமங்க மன்னியார்

மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்

மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்

மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்

மதுரைப் புல்லங்கண்ணனார்

மதுரைப் பூதனிள நாகனார்

மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்

மதுரைப் பெருங்கொல்லன்

மதுரைப் பெருமருதனார்

மதுரைப் பெருமருதிளநாகனார்

மதுரைப் போத்தனார்

மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்

மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்

மதுரை வேளாசன்

மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்

மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்

மருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்

பூதனார்

மருதம் பாடிய இளங்கடுங்கோ

மருதனிளநாகனார்

மலையனார்

மள்ளனார்

மாங்குடிமருதனார்

மாடலூர் கிழார்

மாதீர்த்தன்

மாமிலாடன்

மாமூலனார்

மாயேண்டன்

மார்க்கண்டேயனார்

மாலைமாறன்

மாவளத்தன்

மாறோக்கத்துக் காமக்கண்ணியார்

மாறோக்கத்து நப்பசலையார்

மாற்பித்தியார்

மிளைக் கந்தன்

மிளைப் பெருங்கந்தன்

மிளைவேள் பித்தன்

மீனெறி தூண்டிலார்

முக்கல் ஆசான் நல்வெள்ளையார்

முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

முடத்தாமக்கண்ணியார்

முடத்திருமாறன்

முதுகூத்தனார்

முதுவெங்கண்ணனார்

முப்பேர் நாகனார்

முரஞ்சியயூர் முடிநாகராயர்

முள்ளியூர்ப் பூதியார்

முலங்கீரனார்

மையோடக் கோவனார்

மோசிக்கண்ணத்தனார்

மோசிக்கீரனார்

மோசிக்கொற்றன்

மோசிக்கரையனார்

மோசிசாத்தனார்

மோசிதாசனார்

வடநெடுந்தத்தனார்

வடவண்ணக்கன் தாமோதரன்

வடமோதங்கிழார்

வருமுலையாரித்தி

வன்பரணர்

வண்ணக்கன் சோருமருங்குமரனார்

வண்ணப்புறக் கந்தரத்தனார்

வாடாப்பிராந்தன்

வாயிலான் தேவன்

வாயிலிலங்கண்ணன்

வான்மீகியார்

விட்டகுதிரையார்

விரிச்சியூர் நன்னாகனார்

விரியூர் நன்னாகனார்

வில்லக விரலினார்

விழிகட்பேதை பெருங்கண்ணனார்

விற்றூற்று மூதெயினனார்

விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்

வினைத் தொழில் சோகீரனார்

வீரை வெளியனார்

வீரை வெளியன் தித்தனார்

வெண்கண்ணனார்

வெண்கொற்றன்

வெண்ணிக் குயத்தியார்

வெண்பூதன்

வெண்பூதியார்

வெண்மணிப்பூதி

வெள்ளாடியனார்

வெள்ளியந்தின்னனார்

வெள்ளிவீதியார்

வெள்வெருக்கிலையார்

வெள்ளைக்குடி நாகனார்

வெள்ளைமாளர்

வெறிபாடிய காமக்கண்ணியார்

வேட்டகண்ணன்

வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்

வேம்பற்றுக் குமரன்

ஒட்டக்கூத்தர்


மற்றும் பெண்பாற்புலவர்கள்:

---------------------------------------------------


அச்சியத்தை மகள் நாகையார்

அள்ளுரர் நன்முல்லை

ஆதிமந்தி - குறுந் 3

இளவெயினி - புறம் 157

உப்பை ஃ உறுவை

ஒக்கூர் மாசாத்தியார்

கரீனா கண்கணையார்

கவியரசி

கழார் கீரன் எயிற்றியார்

கள்ளில் ஆத்திரையனார்

காக்கை பாடினியார் நச்செள்ளையார்

காமக்கணிப் பசலையார்

காரைக்காலம்மையார்

காவற்பெண்டு

காவற்பெண்டு

கிழார் கீரனெயிற்றியார்

குட புலவியனார்

குமிழிநாழல் நாப்பசலையார்

குமுழி ஞாழல் நப்பசையார்

குறமகள் ஃ இளவெயினி

குறமகள் ஃ குறிஎயினி

குற மகள் இளவெயினியார்

கூகைக்கோழியார்

தமிழறியும் பெருமாள்

தாயங்கண்ணி - புறம் 250

நக்கண்ணையார்

நல்லிசைப் புலமை மெல்லியார்

நல்வெள்ளியார்

நெட்டிமையார்

நெடும்பல்லியத்தை

பசலையார்

பாரிமகளிர்

பூங்கண்ணுத்திரையார்

பூங்கண் உத்திரையார்

பூதபாண்டியன் தேவியார்

பெண்மணிப் பூதியார்

பெருங்கோப்பெண்டு

பேய்மகள் இளவெயினி

பேயனார்

பேரெயென் முறுவலார்

பொத்தியார்

பொன்மணியார்

பொன்முடியார்

போந்தலைப் பசலையார்

மதுவோலைக் கடையத்தார்

மாற்பித்தியார்

மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி

மாறோக்கத்து நாப்பசலையார்

முள்ளியூர் பூதியார்

முன்னியூப் பூதியார்

வரதுங்க ராமன் தேவியார்

வருமுலையாருத்தி

வில்லிபுத்தூர்க் கோதையார்

வெண்ணிக் குயத்தியார்

வெள்ளி வீதியார்

வெறிபாடிய காமக்கண்ணியர்.


சித்தர்கள்: பதினெண் சித்தர்:


1. திருமூலர்   

2. இராமதேவர் 

3. கும்பமுனி 

4. இடைக்காடர்

5. தன்வந்திரி  

6. வான்மீகி

7. கமலமுனி 

8. போகநாதர் 

9. குதம்பைச் சித்தர்

10. மச்சமுனி

11. கொங்கணர்

12, பதஞ்சலி

13. நந்திதேவர்

14. போதகுரு

15. பாம்பாட்டிச் சித்தர்

16. சட்டைமுனி

17. சுந்தரானந்த தேவர்

18. கோரக்கர்


இது ஒரு பட்டியல்.


1. அகப்பேய் சித்தர்

2. அழுகணிச் சித்தர்

3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்

4. சதோகநாதர்

5.இடைக்காட்டுச் சித்தர்

6. குதம்பைச் சித்தர்

7. புண்ணாக்குச் சித்தர்

8. ஞானச்சித்தர்

9. மௌனச் சித்தர்

10. பாம்பாட்டிச் சித்தர்

11. கல்லுளி சித்தர்

12.கஞ்சமலைச் சித்தர்

13. நொண்டிச் சித்தர்

14. விளையாட்டுச் சித்தர்

15. பிரமானந்த சித்தர்

16. கடுவெளிச் சித்தர்

17. சங்கிலிச் சித்தர்

18. திரிகோணச்சித்தர்


இது  மற்றொரு  பட்டியல்.  இந்தப்  பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.


1. வான்மீகர்

2. பதஞ்சலியார்

3. துர்வாசர்

4. ஊர்வசி

5. சூதமுனி, 

6. வரரிஷி

7. வேதமுனி

8. கஞ்ச முனி

9. வியாசர்

10. கௌதமர் - இது இன்னொரு  பட்டியல்.  


பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.


1. காலாங்கி

2. கமலநாதர்

3. கலசநாதர்

4. யூகி

5. கருணானந்தர்

6. போகர்

7. சட்டைநாதர்

8. பதஞ்சலியார்

9. கோரக்கர்

10. பவணந்தி

11. புலிப்பாணி 

12.அழுகணி

13. பாம்பாட்டி

14. இடைக்காட்டுச் சித்தர்

15. கௌசிகர்

16. வசிட்டர்

17. பிரம்மமுனி

18. வியாகர்

19. தன்வந்திரி

20. சட்டைமுனி

21. புண்ணாக்கீசர்

22. நந்தீசர்

23, அகப்பேய்

24. கொங்கணவர்

25. மச்சமுனி

26. குருபாத நாதர்

27. பரத்துவாசர்

28. கூன் தண்ணீர்

29. கடுவெளி

30. ரோமரிஷி

31. காகபுசுண்டர்

32. பராசரர்

33. தேரையர்

34. புலத்தியர்

35. சுந்தரானந்தர்

36. திருமூலர்

37. கருவூரார்

38, சிவவாக்கியர்

39. தொழுகண்

40. நவநாதர் 

(அ. சத்ய நாதர்,  

ஆ. சதோக நாதர்,  

இ. ஆதி நாதர், 

ஈ. அனாதி நாதர், 

உ. வகுளி நாதர்,  

ஊ. மதங்க நாதர்,  

எ. மச்சேந்திர நாதர், 

ஏ. கஜேந்திர நாதர், 

ஐ. கோரக்க நாதர்)

41. அஷ்ட வசுக்கள்

42. சப்த ரிஷிகள்.


இப்படிச் சித்தர்கள் பட்டியல்  கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. கிடைத்தவை இவைமட்டுமே.


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய ப்ரியமான மொழி எம் தாய்மொழி தமிழ்..!


இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது...

பெருமை கொள்வோம் தமிழரென்று.



➖➖➖🔥🔥➖➖➖

*🚩சர்வம் சிவமயம்🚩* 

*🙏ஆன்மீக பயணம்🙏* 

➖➖➖🔥🔥➖➖➖


   *🚩தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🚩*

➖➖➖➖➖➖➖➖

தலவிருட்சங்கள் தரும் பலன்கள் - பவளமல்லி

 🌹தலவிருட்சங்கள் தரும் பலன்கள் - பவளமல்லி


🌹


🌹பவளமல்லிகை தெய்வீக மலராகக் கருதப்படுகிறது. ஆம், தேவலோகத்தில் உள்ள ஐந்து புனிதமான மரங்களில் பவளமல்லிமரமும் ஒன்று என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. பவளமல்லி பார்ப்பதற்கு மிக அழகானதும், நறுமணம் மிகுந்ததுமான அபூர்வமான மலராகும். இது சவுகந்தியா என்ற ஆபரணத்தை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.


🌹பவளமல்லிக்கு மற்றொரு பெயர் பாரிஜாதம். இலக்கியத்தில் சேடல் என்று அழைக்கப்படுகிறது. புட்ப விதி என்னும் நூலில் பவள மல்லிகை சண்பக‘ஞாழல் கோட்டூப்பூவகை’ என்று கூறப்பட்டுள்ளது.


🌹அதாவது, நாற்பது வகையான கோட்டூப் பூ வகைகளில் பவளமல்லியும் ஒன்று.இந்த மரம் முன்னிரவில் பூத்து மணம் வீசி சூரிய உதயத்துக்கு முன்பே மண்ணில் உதிர்ந்து விடும். பொதுவாக இந்த மரம் ஆவணி, புரட்டாசி மாதங்களில் பூத்துக் குலுங்கும். இறைவனின் பூஜைக்குரிய மலர்கள் அனைத்தும் செடிகளில் இருந்துதான் பறிக்கப்படும்.


 🌹பொதுவாக மண்ணில் உதிர்ந்து கிடக்கும் பூக்களை பூஜைக்கு பயன்படுத்தமாட்டார்கள். ஆனால், இதற்கு பவள மல்லி விதிவிலக்காக உள்ளது. இது இரவில் பூத்து அதிகாலையில் உதிர்வதால் அப்படி உதிர்ந்த பவளமல்லிப் பூக்களை சேகரித்துத் தொடுத்து இறைவனுக்கு பயன்படுத்துவார்கள்.


🌹பவளமல்லிமரம் மூன்று இலை தொகுப்புகளைக் கொண்டது. இவற்றில் மும்மூர்த்திகளும் உறைந்திருப்பதாக ஐதீகம். மத்தியில் மகாவிஷ்ணுவும், வலது பக்கத்தில் பிரம்மாவும், இடது பக்கத்தில் சிவபெருமானும் இருப்பதாக நம்பப்படுகிறது.


🌹பவளமல்லி சிறுமரமாகக் காணப்படும். இந்தியா முழுவதும் பரவலாக பவளமல்லியை பார்க்கலாம். 1500 அடி உயரம் வரையுள்ள இடங்களில் வளரக்கூடியது. சுமார் 15 அடி உயரம்வரை வளரும். தண்டுபாகம் நான்கு பட்டைகளை உடையது. இலைகள் சற்றுநீண்டு முட்டைவடிவில் சொரசொரப்புடன் இருக்கும்.


🌹பூக்கள் எட்டு இதழ்களுடன் வெண்மையாகவும், காம்பு பவள (சிவப்பு) நிறத்திலும் பார்ப்பதற்கு அழகாகவும், நறுமணத்துடனும் இருக்கும். கனிகள் வட்டவடிவில் உறைஅமைப்பில் இருக்கும். செடியில் இருந்து உதிரும்போது இருபகுதியாக பிரிந்து விழும். அதில் ஒவ்வொரு பாகத்திலும் சிறியவிதை இருக்கும். அந்த விதையை எடுத்து தொட்டிகளில் ஊன்றி புதிய செடியை உருவாக்கலாம்.


🌹இந்த அற்புதச் செடியைப்பற்றி வாயு புராணம் இவ்வாறு தெரிவிக்கிறது.பாரிஜாதம் என்ற இளவரசி சூரியனை திருமணம் புரிய விருப்பம் கொண்டிருந்தாள். ஆனால், சூரியன் இளவரசியை ஏற்கவில்லை. இதனால் பாரிஜாதம் மனம் உடைந்து தீயில் குதித்து தனது இன்னுயிரை விடுத்தாள். இளவரசி பாரிஜாதம் தீயில் எரிந்த சாம்

பலில் இருந்துதான் பாரிஜாதம் என்ற செடி உருவானது.


🌹சூரியன் பாரிஜாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் இந்த செடி பகலில் சூரியனை பார்த்து பூப்பதைத் தவிர்த்து இரவில் மட்டுமே பூத்துக் குலுங்குகிறது. இதனால்தான் இதனை வருந்தும் மரம் என்றும் அழைப்பார்கள். தன்னைக் கைவிட்ட சூரியனைப் பார்ப்பதை தவிர்ப்

பதற்காக இரவில் மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து, கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் என்று விளக்குவார்கள்.


🌹பாரிஜாதம் என்ற இந்த பவளமல்லி, திருமாலுக்கு உகந்தது. பவளமல்லி வேரில் சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் குடியிருப்பதாக நம்புகிறார்கள்.தேவலோகத்தில் இருந்த இந்த பாரிஜாதமலர் வேண்டும் என்று சத்யபாமா, ருக்மிணி இருவரும் கிருஷ்ணபகவானிடம் கேட்கவே கிருஷ்ணர் பவளமல்லிமரத்தை கொண்டுவந்து சத்யபாமாவின் வீட்டுத் தோட்டத்தில் நட்டாராம், ஆனால், மரம் வளர்ந்து ருக்மிணி வீட்டில் பூக்களை உதிர்த்தது என்றுகூறப்படுகிறது.


🌹இத்தகைய பவளமல்லியில் இருந்து நம் முன்னோர்கள் நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான மருந்துகளையும் கண்டுபிடித்து நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள். பவளமல்லிமரத்தின் இலை, விதை, பட்டை ஆகியவை மருத்துவ குணம் வாய்ந்தவை. பவளமல்லி சிறுநீரகத்தை காப்பாற்றக்கூடிய மருத்துவத்தன்மை உடையதாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து.


🌹கால்மூட்டு வலி, ரத்தப்போக்கு, இடுப்பு வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. பவளமல்லி இலை பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தக் கூடியது. பவளமல்லி மரத்தின் வேரை மென்றுதின்றால் பல்லீறுகளில் உருவாகும் வலியை குணப்படுத்தும். விதைகளை பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் தீரும். இலைச்சாறு குழந்தைகளுக்கு மலமிளக்கியாகவும் உள்ளது. பவள மல்லிவிதையை பொடி செய்து அதை எண்ணெயில் குழைத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கையும் மறைந்து முடி வளரும்!


🌹தமிழகத்தில் திருக்களர் திருத்தலத்தில் உள்ள பாரிஜாதவனேஸ்வரர், மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரர், சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர், தென்குரங்காடுதுறையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர், திருநாரையூர் சித்தநாதீஸ்வரர், திருவைகுண்டத்தில் உள்ள கண்ணபிரான், திருக்கடிகை திருமால் கோயில் ஆகிய தலங்களில் பவளமல்லி தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.


🌹திருக்களரில் இறைவன் பாரிஜாதவனேஸ்வரராக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இவருக்கு களர்முலை நாதேஸ்வரர் என்றும் பெயருண்டு. இறைவியை, இளம்கொம்பன்னாள், அமுதவல்லி என்று பக்தர்கள் போற்றி வணங்குகிறார்கள்.இத்தலம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 21 கி.மீ. தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டிக்குச் செல்லும் வழியில் அமையப்பெற்றுள்ளது.


🌹தில்லையில் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாச முனிவர் தானும் அந்த பாக்கியத்தைப் பெற நினைத்தார். இத்தலத்தின் மகிமையை உணர்ந்து தேவலோகத்தின் சிறந்த மலரான பாரிஜாத செடியை இங்கே கொண்டுவந்து வளர்த்து வந்தார். அந்தச் செடியால், நாளடைவில் வளர்ந்து சில நாட்களில் அந்தப் பகுதி முழுவதுமே பாரிஜாத வனமாக மாறியது. அதன்பிறகு ஒரு சிவலிங்கத்தை பாரிஜாத மரத்தடியில் பிரதிஷ்டை செய்து பக்கத்தில் அம்மனையும் ஸ்தாபித்து தேவதச்சன் மூலமாக கோயிலை எழுப்பி வழிபட்டு தவம் செய்து வந்ததாக கோயில் தலவரலாறு தெரிவிக்கிறது.


🌹துர்வாசருக்கு இறைவன் நடராஜர் பிரம்ம தாண்டவ தரிசனம் தந்து அருளினார். திருக்களர் திருத்தலத்தில் வழிபாடு செய்யும் பக்தர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம்.இத்தலத்தில் பாரிஜாதகராக அருள்

பாலிக்கும் இறைவனைப்பற்றி திருஞானசம்பந்தர் பாடியிருப்பதாவது:


🌹“பாக்கியம்பல செய்தபத்தர்கள் பாட்டொ டும்பலபணிகள் பேணிய

தீக்கியல் குணத்தார் சிறந்தாருந் திருக்களருள்

வாக்கின் நான்மறை யோதினாயமண்

தேரர் சொல்லிய சொற்க ளானபொய்

ஆக்கி நின்றவனே அடைந்தார்க் கருளாயே.”


திருவண்ணாமலை மாவட்டத்தில்

ஆரணியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் திருத்தலத்தில் பவளமல்லி தலவிருட்சமாக வணங்கப்படுகிறது. இத்தலத்தில் குழந்தை இல்லாதோரின் தோஷம் நீக்கும் புத்திரகாமேட்டீஸ்வரராக ஈசன் அருள்பாலித்து வருகிறார்.


🌹வீட்டிலும் வளரக் கூடிய இந்த பவளமல்லி மரத்தில் பட்டு வீசும் காற்று ஆரோக்

யமானது; நம் உடல்நலத்தை பாதுகாக்கக் கூடியது.

இன்று நமது பீடத்தின் அகத்தியர் குடிலுக்கு, புதிய கூரை வேயப்படுகிறது

 இன்று நமது பீடத்தின் அகத்தியர் குடிலுக்கு, புதிய கூரை  வேயப்படுகிறது. அகத்தியர், ஜீவ நாடி மூலம் இந்த நற்காரியம் நல்லபடி நடக்க நல்லாசிகளை வழங்கி உள்ளார். குருஜி இறைசித்தர் அவர்கள் நேரடி மேற்பார்வையில் வேலைகள் துரிதமாக நடைபெற்று இன்றே நிறைவு பெறும். நிதி உதவி அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் குருஜி மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார். அகத்தியர் ஆசி அனைவருக்கும்.








Saturday, 26 September 2020

குரு ராகவேந்திரர் திருவிளையாடல்

 குரு ராகவேந்திரர் திருவிளையாடல்


*ஸ்ரீ ராகவேந்திரர் அட்சய திருதியை மகிமையை உணர்த்தினார்*


விஜயராகவ நாயக்கர் ஆட்சியில் மழை இல்லாமல் நாடு வறட்சியில் அல்லல்பட்டது. மழை இல்லை அதனால் விவசாயம் இல்லை அதனால் உணவு இல்லை. அரசருக்கே அடுத்த வேலை உணவுக்கு திண்டாட்டம் உண்டானது. என்ன செய்வது? இயற்கையை எதிர்க்க மனிதர்களால் முடியுமா? என்று மந்திரிசபை கூட்டி ஆலோசித்தார் அரசர். அப்போது ஒரு மந்திரி, “நம் ஊருக்கு ஸ்ரீ ராகவேந்திரர் வந்திருக்கிறார். அவர் சிறந்த மகான். அவர் நமக்கு ஒரு நல்ல வழியை காட்டுவார்.” என்று கூறினார். அரசரும் உடனே, “ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு மரியாதை செலுத்தி அழைத்து வாருங்கள்.” என்று உத்தரவிட்டர். ஸ்ரீ ராகவேந்திர சுவாமி அரசரை சந்தித்தார். தன் நாடு மழை இல்லாமல் வறுமையில் பிடியில் இருக்கிறது. இயற்கை வளங்கள் பெற சுவாமிகள் அருள் செய்ய வேண்டும் என்று அரசர், ஸ்ரீராகவேந்திரரிடம் வேண்டிக் கொண்டார். மக்களும் சுவாமிகளிடம் தங்கள் நிலையை எடுத்துச் சொல்லி அழுதார்கள். நாட்டின் நிலையையும் மக்களின் நிலையையும் நேரில் கண்ட சுவாமிகள், “நெல் களஞ்சியத்திற்கு போகலாம் வாருங்கள்” என்று அரசரையும் மக்களையும் அழைத்துக் கொண்டு நெல் களஞ்சியத்திற்கு சென்ற ஸ்ரீராகவேந்திர சுவாமிகள், அங்கு சிறிய அளவில் இருந்த நெல்லின் மேல் “அட்சயம்” என்ற எழுதி, அங்கு இருந்த சில மக்களுக்கு தன் திருகரத்தால் நெல்லை தானம் செய்தார். அங்கே ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது. 50 பேருக்கு கூட போதாத அளவில் இருந்த நெல் இருப்பு, சுவாமியின் மகிமையால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அள்ளி அள்ளி தந்தும் குறையவில்லை. பிறகு சில மணி நேரத்திலேயே மழை பெய்ய தொடங்கியது. சில மாதங்களிலேயே விவசாயம் பெருகியது. வரட்சி நீங்கியது. பிறகுதான் உணர்ந்தார்கள் மக்கள். அட்சயம் என்றால் “வளருவது” என்ற பொருள். இந்த மகிமை நடந்த நாளும் ஒரு அட்சய திருதியை நாளில்தான்.

மார நாடு கருப்பண்ணசாமி


 

ஆஞ்சநேயர் தரிசனம்


 உலகம் முழுவதும்

சுற்றி வந்து

பெரும் பணத்தைச்

செலவிட்டாலும்

148 ஆஞ்சநேயரை

யாராலும் தரிசிக்க

முடியாது!


கவலைகள் தீருமே

இதைக் கண்டால்!!!

ஈசனின் புகழ்


 

SPB அவர்கள் இறக்கும் தருவாயில் கடவுளுடன் எவ்வாறு உரையாடி இருப்பார்

 *கவரிமான்* 

Dr. B.R.J. Kannan


சென்னையில் ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தன் உடலில் பல இடங்களில் பலதரப்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டு உறக்கத்தில் இருந்தார் எஸ்பிபி. திடீரென்று முழிப்புத் தட்டியது. தன்னைப் பற்றியும் தற்போதைய நிலைமையைப் பற்றியும் உடனே தெளிவடைந்தார். அந்த சமயத்தில் அவரெதிரே மிகுந்த பிரகாசமான ஓர் உருவம் தோன்றியது. வந்திருப்பது அந்த இறைவனே என்பதை அறிந்தார். கை கூப்பினார். ஒரு சில நிமிடங்கள் அமைதியாகக் கரைந்தன.


“மகனே என்னிடம் ஏதாவது பேசத் தோன்றவில்லையா உனக்கு?”


இல்லை என்று தலையசைத்தார் எஸ்பிபி. 


“எனக்கு ஏன் இந்த நிலைமை என்று கேட்பாயோ?” 


இல்லை என்று மீண்டும் தலையசைத்தார். “எனக்கு மட்டும் இந்த அளவு குரல்வளம் தந்தாய். கோடிக்கணக்கான ரசிகர்களைத் தந்தாய். பலபேரின் வாழ்க்கையில் மாற்றத்தை உணரவைக்கும் திறமையைத் தந்தாய். இதெல்லாம் எனக்கு மட்டும் ஏன் என்று நான் கேட்டேனா? அதுபோலத்தான் இதையும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஏதோ என் வினைப்பயன் கழிந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறேன்”


இறைவன் முகத்தில் புன்னகை. “உன்னை ஏன் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது தெரியுமா?” 


“என் பாடல்கள். அதனை அவ்வளவு அருமையாக வடிவமைத்துக் கொடுத்த இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் மிக்க நன்றி” 


“பாடல்கள் மட்டுமா?” 


வேறு என்ன என்பதுபோல் பார்த்தார் எஸ்பிபி.


“நீ உண்மையான மனிதத்துவம் அறிந்த மனிதன். எந்த ஒரு சிறிய ஆத்மாவையும் மதிப்பவன்” 


இரு கைகளையும் கூப்பினார் பாலு. 


“புகழின் உச்சியை அடைந்தாலும் அது உன் தலைக்கேறாது பார்த்துக்கொண்டாய். உன் நெருங்கிய நண்பன் உன்னைக் காயப்படுத்திய போதும், அடுத்த மேடையிலேயே அவனைப் போற்றியவன் நீ. பெரியவர்களை மதிப்பதிலும் இளையவர்களை ஊக்குவிப்பதிலும் உனக்கு நிகரில்லை” 


மீண்டும் இரு கைகளையும் கூப்பினார் பாலு. 


“அதனால்தான் எல்லோரும் தங்களில் உன்னைப் பார்க்கிறார்கள் உன்னில் தங்களைப் பார்க்கிறார்கள்” 


“போதும் பெருமானே. இதுவெல்லாம் நீ கொடுத்ததன்றோ?” 


“அப்படிச் சொல்லிவிட முடியாது, நீ வளர்த்துக் கொண்டது. பலபேர் பாலுவைப்போல் ஆகவேண்டும் என்று கனவு காண்கிறார்கள். எல்லோரும் உன்னைப்போல் பாடி விட முடியுமா என்ன? ஆனால் எல்லோரும் உன் மனித குணங்களைப் பேண முடியும்” 


“அந்த வகையில் என் ரசிகர்கள் மனதில் நான் ஒரு சிறு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் என்றால் எனக்கு மகிழ்ச்சியே. ஐயனே, இன்று நீங்கள் வந்திருக்கும் நோக்கம்?” 


“உன் முடிவைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை உனக்கு அளிக்கவே இங்கு வந்திருக்கிறேன்” 


“புரியவில்லையே…” 


“இப்பொழுது உன் உடலும் மனமும் எப்படி இருக்கின்றன?” 


“மனம் அதே போல் தான். உடல்தான் சுகமில்லை. இதோ இத்தனை கருவிகள் மூலமாக என் உயிர் ஓடிக்கொண்டிருகிறது. முன்னை விடத் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்” 


இறைவன் புன்னகை மாறாமல் கேட்டுக்கொண்டிருந்தார். எஸ்பிபி தொடரட்டும் என்று காத்திருந்தார். 


“ஒரு சந்தேகம் கேட்கலாமா?” 


“கேட்பாயாக” 


“என் தொண்டையில் துளையிட்டு சுவாசக்கருவி பொருத்தி இருக்கிறார்கள். நாளை நான் குணமடைந்த பின் மீண்டும் முன்புபோல் பாட இயலுமா?” 


“சில மாதங்கள் கழித்து நன்றாகப்பேச முடியும். உன் நுரையீரல் மிகவும் பாதிப்படைந்துள்ளது. முன்புபோல் பாட இயலாது என்பதுதான் உண்மை” 


இதைக் கேட்டவுடன் பாலுவின் கண்களில் தாரைதாரையாக்க் கண்ணீர் வழிந்தது. அதை எதிர்பார்த்து இறைவன் அமைதி காத்து இருந்தான். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பாலு பின்னர் கேட்டார், “எனக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். அது செய்து முடிந்தால் நான் பாட முடியுமா?” 


“அப்பொழுதும் சந்தேகமே. அந்த நுரையீரலைக் காப்பாற்றும் பொருட்டு நிறைய மருந்துகளை உட்கொள்ள வேண்டி வரும். சாதாரணமாக வெளியில் சென்றுவரக் கட்டுப்பாடுகள் இருக்கும்” 


“அப்படியானால் நான் முன்புபோல வானம்பாடியாக வாழ முடியாதா?”


“என்னை மன்னித்துகொள் மகனே” 


மீண்டும் பாலுவின் கண்களில் கண்ணீர். 


“முடிவு உன் கையில். இருக்க விருப்பமா, இறக்க விருப்பமா?”


“என்னால் பாட முடியாது என்றால் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை. என்னை இப்பொழுதே அழைத்துக் கொள்” 


இறைவனின் முகத்தில் அதே புன்னகை. “நன்றாக மீண்டுமொருமுறை யோசித்துக் கொள்” 


“இதில் யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. நான் தயார்” 


மீண்டும் பாலுவின் கண்கள் கண்ணீர் சிந்தின. 


“இப்பொழுது எதை நினைத்து அழுகிறாய் மகனே?” 


“என்னுடைய கோடிக்கணக்கான ரசிகர்கள், நான் இறந்துவிட்டேன் என்று அறிந்தால் அதிர்ச்சியடைவார்கள். அந்த வகையில் நான் அவர்களுக்குத் துன்பம் தருகிறேன். அதை நினைத்தால்….” 


“நீ  திடீரென்று அகால மரணம் அடைந்திருந்தால் பலரும் அதிர்ச்சியில் உயிர் விட்டிருப்பார்கள். அவர்கள் மனதையும் தயார் படுத்தும் பொருட்டுத்தான் கடந்த 40 நாட்களாக நாடகம் நடந்தது. முடிவை யாரும் எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது உண்மை. ஆனால் ஓரளவு பக்குவப்பட்டு விட்டார்கள். உன் பூத உடல் தான் இல்லாதிருக்கும். இசையாக நீ நெஞ்சில் என்றும் நிறைந்து இருப்பாய். தமிழ் உள்ளவரை உன் புகழ் இருக்கும்”  


கண்ணீர் மல்க மீண்டும் கை கூப்பினார் பாலு. “பல்வேறு இடங்களில், பலதரப்பட்ட மனிதர்களின் முன் நான் பாடியிருக்கிறேன். இப்பொழுது உங்கள் முன் பாடும் வாய்ப்பை வேண்டுகிறேன் இறைவா”


“ஆரம்பிக்கலாம் மகனே உன் இசையை”


கண்கள் மூடி மனம் உருகிப் பாடத் தொடங்கியது அந்தக் குயில். அதை அணைத்தவாறு, அதனை அழைத்துகொண்டு அதன் இசையில் மயங்கியவாறே பயணிக்க ஆரம்பித்தான் இறைவன். சன்னமாக வெகுநேரம் அந்தப் பாட்டு கேட்டுக்கொண்டேயிருந்தது. 


‘இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்…………’

த்ரோனாச்சாரியார் ஏகலைவன் கட்டை விரல் சர்ச்சை

 தமிழ்நாட்டில் கல்லெறியும் அடியும் வாங்காமல் ஓயமாட்டேன் என கங்கணம் கட்டி திரிகின்றது சிவகுமாரர் குடும்பம்

சூர்யா என்பவர் அமெரிக்க பல்கலைகழக மருத்துவாராக இருந்து அவர் மனைவி ஏய்ம்ஸ் மருத்துவராக இருந்து சிவகுமார் என்பவர் டோக்கியோ பல்கலைகழக மருத்துவராக இருந்தால் ஓரளவு அவர்களை ஏற்கலாம்

ஆனால் கேமரா முன் கூலிக்கு ஆடும் கோஷ்டி புனிதமான மருத்துவ நுழைவு தேர்வினை சாடுவது அபத்தம்

மனுநீதி என்பது கொள்கையல்ல, அது சமூக கொடுமையுமல்ல. அன்றொரு நாள் அரேபியாவில் "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" என்றிருந்தது போல பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்த சட்டம்

இன்று காலங்கள் மாறி நமக்கான சட்டத்தை நாமே எழுதினோம், அம்பேத்கர் எழுதினார் அதுபோக சட்ட திருத்தம் பாராளுமன்றம் மட்டுமே செய்யமுடியும்

தனிபட்ட யாரும் சட்டத்தை திருத்த முடியாது , இதில் மனுநீதி சட்டம் எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை

அடுத்து கட்டைவிரல் கேள்வி, துரோணர் ஏன் ஏகலைவனின் கட்டை விரலை கேட்டார் எனபதற்கு இலக்கியங்களில் அரைகுறையாக மேய்ந்த சிவகுமாரர் பதில் சொல்லாமல் இருக்கலாம், ஆனால் சொல்ல வேண்டியது நம் கடமை

இதோ நாம் சொல்கின்றோம்

துரோணர் ஏகலைவனிடம் கட்டை விரலை வாங்கினார், அவர் ஒரு ஆரிய பிராமண சூது பிடித்தவர் , இரக்கமில்லாதவர், பார்ப்பன கொடூரக்காரர் என ஏக குற்றசாட்டுகள் பகுத்தறிவு கோஷ்டிகளிடம் இருந்து வரும்

உண்மையில் நடந்தது என்ன? அந்த துரோணரின் நிலை பரிதாபமானது

ஆம், துரோணர் அந்த அரச குடும்பத்து ஆசிரியர், எல்லா விதத்திலும் அரசனுக்கு கட்டுபட்டவர், அவனை மீறி அவர் ஏதும் செய்துவிட முடியாது.

சுருக்கமாக சொன்னால் அரச குடும்பத்து அடிமைகளில் ஒருவர்

அந்நாளில் ராஜவம்சத்துக்கு மட்டுமே ஷத்ரிய வம்சத்துக்கு மட்டுமே சில பயிற்சிகள் கற்றுகொடுக்கபடும், எல்லோரும் எல்லாம் பயின்றால் அரசுக்கு எதிரான சக்திகள் தலையெடுக்கும் எனும் தந்திரம் அது

அவ்வகையில் பாண்டவரும், கவுரவரும் பயில்கின்றார்கள், தேரோட்டி மகனான கர்ணனும் படிக்கின்றான்

அவர்கள் அரங்கேற்றம் முடிந்தபின்புதான் ஏகலைவன் என்றொருவன் இருப்பதும் அவன் வில்வித்தையில் அர்ஜூனனையும் மிஞ்சி நிற்பதும் அறியபடுகின்றது

அரசவாரிசுகளையும் மீறி ஒரு வேட்டுவன் வித்தையில் மிஞ்சி நிற்பது அரசகுடும்பத்துக்கும் நல்லதல்ல நாட்டுக்கும் நல்லதல்ல, அவன் எதிரிகையில் வீழ்ந்தால் முடிந்தது கதை,

நாட்டு மக்களை சேர்த்து கலகம் செய்தால் இன்னும் மோசம்

அதற்காக வேட்டுவனை அரண்மனைக்கும் அழைக்கமுடியாது சட்டம் இடம் கொடாது

இப்படி ஒரு சிக்கல் இருக்க அவனை சந்திக்க கிளம்புகின்றது மேலிடமும், துரோணரும் அர்ஜூனனும்,

அர்ஜூனனை மீறி ஜொலித்து நிற்கின்றான் ஏகலைவன், அவனை விட்டுவைப்பது நல்லதலல் என மேலிடம் முடிவெடுக்கின்றது

ஏகலைவன் குரு என யார் என கேட்க அவன் துரோணர் சிலையினை காட்டுகின்றான், ஆம் துரோணரை மனதால் வணங்கி வளர்ந்து தானே வித்தை கற்றவன் ஏகலைவன்

எல்லோரும் அதிர்கின்றனர், காரணம் துரோணர் அரசகுடும்பத்துக்கு மட்டுமே ஆசிரியர்..

அப்படியானால் இவனை இவ்வளவு திறமையாக அவர் உருவாக்க காரணம் என்ன எனும் சந்தேக கேள்விகள் எழுகின்றன‌

துரோணர் அரச குடும்பத்துக்கு எதிராக ஒருவனை ரகசியமாக வளர்ப்பதாக சந்தேகம் அவர்மீதே படர்கின்றது,

அரசகுடும்பத்துடன் உறவாடுவது ராஜநாகத்துடன் உறவாடுவதற்கு சமம்

சிக்கலில் தவிக்கின்றார் துரோணர், ராஜதுரோக குற்றசாட்டு அவர்மேல் சுமத்தபடும் ஆபத்து நெருங்கிற்று, இதன் சூத்திரதாரி கண்ணன்

அவரை காக்கும் ஒரே நம்பிக்கையாக ஏகலைவன் நிற்கின்றான், அவன் நிச்சயம் துரோணரின் பெருமை, துரோணரின் மாபெரும் மகிழ்ச்சியும் சாதனையும் அவன்

ஆனால் விதி?

துரோணருக்கு அவனை விடவும் முடியவில்லை எடுக்கவும் முடியவில்லை, தவிக்கின்றார்.

ஆம் அரச கட்டளை மீறி அவர் என்ன செய்யமுடியும்?

அவனை கொல்லவேண்டிய இடம் அது, ஆம் அரசனின் கோபம் அவனை முதலில் கொல்லும் துரோணரை அடுத்து கொல்லும், ராஜதுரோகம் எனும் குற்றத்துக்கான தண்டனை அது

யோசித்தார் துரோணர், அந்த சீடன் அழிவதில் அவருக்கு விருப்பமில்லை அவனை பலமிழக்க வைத்தால் போதுமென குருதட்சனையாக கட்டைவிரலை கேட்கின்றார்

குரு கேட்டால் தலைகொடுக்கவும் துணியும் ஏகலைவன் கட்டை விரலை மகிழ்வாய் கொடுத்து பலமிழக்கின்றான், இனி அவனால் வில்வித்தை அவ்வளவு துல்லியமாக செய்யமுடியாது

குருவுக்கு சிஷ்யன் கொடுக்கும் காணிக்கை அவரை காக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை , கண்ணீரோடு அவனின் கட்டை விரலை தாயத்தில் வைத்து கழுத்தில் கட்டிகொள்கின்றார் துரோணர்

அந்த காட்சி உருக்கமானது, கண்ணீர் வரவழைக்கும் காட்சி அது. துரோணருக்கு அவனை போல மாணவன் இல்லை, நல்ல ஆசிரியனுக்கு சிறந்த மாணவனை விட பெருமை எது?

ஆனால் விதி?

அப்பக்கம் ஏகலவைனுக்கோ குருநாதருக்காக வித்தையினையே கொடுத்துவிட்ட தியாக மகிழ்ச்சி, தன் கட்டைவிரல் அவர் கழுத்தில் இருப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி

தானே அவரின் மார்பில் சாய்ந்ததாக மகிழ்ந்தான், துரோணர் அரண்மனை திரும்பினார்

ஆம் துரோணர் அவன் உயிரை காத்தார், அவன் துரோணர் உயிரை காத்தான்

காலங்கள் ஓடின பாண்டவருக்கும், கவுரவருக்கும் யுத்தம் நெருங்கிற்று, ஒவ்வொருவரின் பலத்தையும் அளந்த கண்ணன் துரோணர் பக்கமும் வருகின்றான், ஏற்கனவே கட்டை விரல் வாங்க காரணமே அந்த மாயவனே

(ஆம் வித்தை ஒன்றுக்காக கர்ணணையே அரசனாக்கி கைக்குள் வைத்திருக்கும் துரியன் , ஏகலைவன் கிடைத்தால் விடுவானா? கண்ணனின் கவலை அவனுக்கு)

துரோணர் கழுத்தில் இருப்பது உன்னதமான சிஷ்யனின் காணிக்கை, அது துரோரணை சாகவிடாது , அது இருக்கும்வரை துரோணர் வீழமாட்டார்

என்ன செய்யலாம்?

அதே வித்தைதான், ஏழை அந்தணராக மாறிய கண்ணன் யாசகனாய் வந்தான், தன் மகளுக்கு திருமணமென்றும் ஒரு தாலிக்கும் வழியில்லை எனவும் அழுது அந்த தாயத்தையே உற்று பார்த்தான்

குறிப்பறிந்த துரோணர் இதைவிட பெரும் தாலி இல்லை, இது ஆசிமிக்கது என அதை வழங்கினார், துரோணரின் கழுத்தில் இருந்து அந்த பெரும் கவசத்தை அகற்றினான் கண்ணன்

அதன்பின் எல்லாம் முடிந்தது, சாகும் வேளையில் துரோணர் முன் தன் புல்லாங்குழலை காட்டினான் கண்ணன், ஆம் அதில் அந்த விரலை பதித்திருந்தான்

அதை கண்டவுடன் துரோணருக்கு எல்லாம் விளங்கிற்று, மெல்ல பேசினான் கண்ணன் அவன் குரல் அந்த ஞான தத்துவத்தை போதித்தது

"துரோணாச்சாரியே.. சிஷ்யர்களில் எல்லாம் உயர்ந்தவன் ஏகலைவன், ஆசிரியரில் எல்லாம் உயந்தவன் நீ

உங்களுக்குள்ளான உணர்வும் புரிந்துணர்வும் பாசமும் எந்த குருவுக்கும் சீடனுக்கும் அமையாது

அவனை அன்றே நீ கொன்றிருந்தால் நீ பாவிபாயிருப்பாய், விட்டிருந்தால் அவனை நீனே வளர்த்தாய் என பழிசுமந்திருப்பாய் , அவன் பாண்டவர் பக்கம் வந்தாலும் கவுரவர் பக்கம் வந்தாலும் பழி உனக்கே

உன் மாணவர்களின் அர்ஜூனன் பெரும் அடையாளம் ஆனால் நீ நேரடியாக பயிற்றுவித்தாய், ஆனால் உன்னை மனதால் வணங்கி வளர்ந்த ஏகலைவனே அவனை விட உயர்ந்தவன், ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதன் அடையாளம்

அங்கு உன் உயிரை அவன் காத்து மாணவனின் கடமையினை செய்தான், நீ அவன் உயிரை காப்பாற்றி ஆசிரியனுக்குரிய கடமையினை காத்தாய்

நீ கேட்டவுடன் கொடுத்த அந்த விரல் அவனின் தியாகத்துக்கும் குருசிஷ்ய பாவத்துக்கும் என்றும் எடுத்துகாட்டாய் இருக்கும், உன் பெயர் இருக்குமிடமெல்லாம் அவனும் இருப்பான்..."

அந்த புல்லாங்குழலின் இருந்த விரலை நோக்கியபடியே உயிர்நீத்தார் துரோணர்

ஆம் நல்ல மாணவன் ஆசிரியர் அளவு வரலாற்றில் நிலைப்பான் என்பதுதான் ஏகலைவன் வாழ்வின் தத்துவம்

மகாபாரதத்தின் ஒவ்வொரு காட்சியும் சிலாகிப்பானவை, வெற்று பாத்திரம் என்றோ தேவையற்ற திணிப்பு என்றோ எதுவுமில்லை

மணிரத்னம் புராண காட்சிகளை சுட்டு படமெடுப்பதில் கெட்டிக்காரர் ஆனால் அவரும் ஏகலைவன்பக்கமே வரவில்லை

அவன் கதையினை மிக மிக அழகான படமாக எடுக்கலாம், எடுப்பார் யாருமில்லை, இதைவிடுத்து பூரா இயக்குநரும் கதை திருட்டு காட்சி திருட்டு என கோர்ட் படி ஏறிகொண்டிருக்கின்றான்.'

ஆயிரம் அர்த்தமும் உருக்கமும் தியாகமும் நிறைந்த காட்சி ஏகலைவன் துரோணர் காட்சி, அது சொல்லும் தத்துவம் ஏராளம்

இந்த கருப்பு சட்டைகள் , திராவிட இம்சைகளுக்கு ஒருமண்ணும் தெரியாது, அவைகளின் மனமும் புத்தியும் கருப்பு, எல்லாவற்றையும் தப்பு தப்பாக உணர்ந்து பிராமணன் ஒழிக என முடிப்பது ஒன்றே அவர்கள் ஏற்றுகொண்ட கொள்கை

அவர்களின் புரட்டு செய்தியினை புறந்தள்ளுங்கள், ஏகலைவன் கதை போல கொண்டாடபட வேண்டிய ஆயிரம் கதைகள் இங்கு உண்டு

அவற்றை எல்லாம் படியுங்கள், பெரும் அர்த்தமும் ஞானமும் விளங்கும்

உங்களுக்கு புரியாவிட்டால் எம்மிடம் கேளுங்கள் எப்பொழுதும் விளக்க தயாராக இருக்கின்றோம்

நமது நாட்டின் பெரும் அறிவார்ந்த ஞான புதையலை நாம் விளக்கமால் ஆஸ்திரேலியனும் ஜப்பானியனுமா வந்து விளக்குவான்?

நாம்தான் விளக்க வேண்டும், நமக்கு அந்த கடப்பாடும் பொறுப்பும் எக்காலமும் உண்டு

எனினும் சூர்யாவின் உளறலில் என்ன விளங்குகின்றது?

தகப்பன் சிவகுமார் இலக்கியம் , இதிகாசம் என ஊரெல்லாம் காசுக்கு பேசியதில் கொஞ்சம் கூட தன் மகனுக்கு வீட்டில் சொல்லிதரவில்லை என்பது தெரிகின்றது

குல தெய்வ சாஸ்திரம்

 #விவாகரத்தான_பெண்கள்,


குழந்தைகள்-அவர்களது


குலதெய்வம் யார் ?



குல தெய்வம் குறித்து பல பண்டிதர்களிடம் பேசி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்திருந்த என்னிடம் சமீபத்தில் ஒரு பெண்மணி ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பி இருந்தார். இந்த சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் இதற்கான விளக்கங்கள் கூறப்படுகின்றன. அந்த பெண்மணியின் கேள்வி இதுதான்:


”திருமணத்தில் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி ஏறியவுடனேயே அவளுடைய குலதெய்வம் புகுந்த வீட்டின் குல தெய்வம் ஆகி விடும் என்பது சாஸ்திரம் எனும்போது, திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்த பின் அந்த பெண்ணுக்கு விவாகரத்து ஏற்பட்டால் அவள் எந்த குலதெய்வத்தை வணங்க வேண்டும்? விவாகரத்து ஆவதற்கு முன் அவருக்கு குழந்தை பிறந்து இருந்தால் விவாகரத்து ஆன பின் அந்த குழந்தைகள் எந்த குலதெய்வத்தை வணங்க வேண்டும்?”


இவை இரண்டுமே மிக முக்கியமான கேள்விகள் ஆகும். பொதுவாகவே பெண்கள் மட்டும் வெவ்வேறு குல தெய்வங்களை வணங்குபவர்களாக படைக்கப்பட்டு உள்ளார்கள். பிறந்த வீட்டில் இருக்கும்வரை அவளது தந்தையின் குலதெய்வத்தை ஆராதித்து வருகின்றாள். ஆனால் திருமணம் ஆகி புகுந்த வீட்டில் சென்ற பின் இன்னொரு தெய்வத்தை குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு பிறந்த வீட்டில் வணங்கி வந்திருந்த குலதெய்வ ஆராதனையை துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகின்றது.




பிறந்த வீட்டு குலதெய்வம் 


ஆனால் திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்களின் இந்த நிலை பிறந்த வீட்டு குல தெய்வத்தை முற்றிலும் துறக்கும் நிலை அல்ல என்பதையும், பிறந்த வீட்டு குல தெய்வம் அவளை நிரந்தரமாக கைவிட்டு விட்டது என்ற அர்த்தமும் அல்ல என்பதையும் மனதில் ஆழமாக வைத்துக் கொள்ள வேண்டும். திருமணம் ஆன பெண்கள் மாற்று குலதெய்வத்தை ஏற்கும் இந்த நிலை சாஸ்திரங்களின் அடிப்படையில் அமைந்தது. அந்த நிலை ஒரு குலதெய்வம் அதுவரை தம்முடைய பாதுகாப்பில் இருந்த ஒருவரை இன்னொரு குலதெய்வத்திடம் அதே காரணத்திற்காக தாமாகவே ஒப்படைக்கும் தெய்வீக நிலைப்பாடாகும். ஒரு தேசத்தை சேர்ந்தவர் இன்னொரு தேசத்துக்கு சென்று அங்கேயே தங்கி அந்த தேசத்தின் பிரஜை ஆகி விட்டால் அந்த தேசத்தின் சட்ட திட்டங்களை அனுசரிக்க வேண்டும் எனும் நிலைபாடு போன்றதுதான் இதுவும். பண்டிகை, பூஜைகள் போன்றவற்றில் முதல் வழிபாடு அந்த வீட்டினரை பாதுகாத்து வரும் குலதெய்வத்துக்கே செய்ய வேண்டும் என்பது தெய்வ நியதி. அதனால்தான் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீடு செல்லும் ஒரு பெண்ணும் அந்த வீட்டின் குலதெய்வத்துக்கே முதல் மரியாதை மற்றும் முக்கியத்துவம் தரும் நியதியை கடைபிடிக்க வேண்டி உள்ளது. ஒரு பெண்ணுக்கு பிறந்த வீட்டின் குலதெய்வமே நிரந்தர மற்றும் நிலையான தெய்வம்  என்றாலும் திருமணம் ஆனபின் அதே குலதெய்வ அனுமதியுடன் ஒரு பெண்ணால் ஏற்கப்பட வேண்டிய குலதெய்வம் கணவர் வீட்டின் குலதெய்வம் ஆகும்.




புகுந்த வீட்டு குலதெய்வம்


தாலி கழுத்தில் ஏறியதும் ஒரு பெண் தனது சொந்த அதிகாரங்கள் உட்பட தன்னையும் கணவனிடம் முழுமையாக ஒப்படைத்து விடுகின்றாள். அந்த நிமிடமே அவளும் புகுந்த வீட்டின் ஒரு அங்கம் ஆகி விடுகின்றாள். அந்தப் பெண்ணின் கணவர் அவளுக்கு முதல் தெய்வம் ஆகி விடுகிறார். அந்த திருமணத்தில் கண்களுக்கு தெரியாமல் வீற்று இருக்கும் இரு வீட்டாரின் குல தெய்வத்தின் ஆசிகளுடன் அக்னி சாட்சியாக தாலி கட்டியதும் அதுவரை அவளை அனைத்து நிலையிலும் பாதுகாத்து வந்திருந்த அவளது பிறந்த வீட்டின் குல தெய்வம் தனது பொறுப்பை விலக்கிக் கொண்டு அந்த பொறுப்பை அவள் புகுந்த வீட்டு குலதெய்வத்திடம் ஒப்படைத்து விடுகின்றது. அது முதல் அவள் மீதான அனைத்து அதிகாரங்களும் புகுந்த வீட்டு குலதெய்வத்தின் கையில் சென்று விடும். இது குல தெய்வங்களுக்கு இடையே வகுக்கப்பட்டு உள்ள பிரும்ம நியதியாகும். அதனால்தான் புகுந்த வீட்டுக்கு சென்று விடும் பெண்ணின் குல தெய்வமும் கணவன் வீட்டினரின் குல தெய்வம் ஆகி விடுகின்றது என்பது சாஸ்திரத்தின் தாத்பர்யம் ஆகும். இந்த அடிப்படை நியதியினால்தான் திருமணம் ஆகும் பெண்மணிகள் தமது பிறந்த வீட்டு குலதெய்வத்தை ஆராதிக்கும் உரிமையை துறந்துவிட்டு புகுந்த வீட்டு குலதெய்வத்தை ஆராதிக்கும் நிலைக்கு சென்று விடுகின்றார்கள்.


சாஸ்திரங்களின்படி ஒரு குழந்தையை வளர்த்து வழிகாட்ட வேண்டிய கடமை ஒரு தம்பதியருக்கு உள்ளதினால் அவர்களுக்கு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மாதா பிதாவே முதல் தெய்வம் ஆகிறார்கள். அதற்கு அடுத்துதான் குல தெய்வம் முதல் மற்ற அனைத்து தெய்வம் வரும். அதை போலவேதான் புகுந்த வீட்டிற்கு சென்று விடும் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை அவளுக்கு கணவனே முதல் தெய்வம் ஆகின்றார். திருமணம் ஆனது முதல் கணவருடன் அவளும் சிவசக்தி தத்துவம் போல சம பாதியாகி விடுவதினால் அனைத்து நிலைகளிலும் அவளுடைய துணையோடு அவர் வாழ்க்கை பயணிக்கின்றது. அவளும் கணவர் வீட்டின் ஒரு பிரஜை ஆகி விடுகின்றாள்.


இன்னொரு உண்மையையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். ஆணோ அல்லது பெண்ணோ எந்த குழந்தையாக இருந்தாலும் ஒரு தாய் தந்தைக்கு பிறக்கும் குழந்தைகள் அவர்களோடு ரத்த சம்மந்தம் கொண்டவை.  அந்த அடிப்படை ரத்த சம்பந்தத்தை மாற்ற முடியாது. ஆகவே தாய் தந்தையோடு உள்ள அவர்களது அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களது தந்தை மற்றும் அவருடைய பதிமூன்று முன் தலைமுறையினர் வழிபட்ட தெய்வமே அடிப்படை மற்றும் நிரந்தர தெய்வம் ஆகும். இந்த அடிப்படை நியதி அந்த வீட்டில் பிறக்கும் அனைத்து ஆண் குழந்தைகளுக்கும், அவர்களுக்கு திருமணம் ஆனாலும், இல்லை தனியாகவே இருந்தாலும், மாறாத நியதியாக இருக்கும். ஆனால் இந்த நிலை பெண் குழந்தைகளுக்கு மாறுபடும். பிறந்த வீட்டு தெய்வம் அவளுடைய தந்தை வீட்டில் வாழுந்தவரை அந்த பெண்ணை பாதுகாக்கும் பொறுப்பு அந்த வீட்டினரின் குலதெய்வத்தை சார்ந்தது என்பது அடிப்படை தத்துவம் ஆகும்.  ஒரு பெண்ணின் திருமணத்துக்குப் பிறகுதான் அவளை புகுந்த வீட்டின் தெய்வத்திடம் தந்தை வீட்டு தெய்வம் குலதெய்வ நியதிகளின்படி ஒப்படைக்கின்றது.  திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்களின் குல தெய்வம் கணவர் வழிபடும் குலதெய்வமாக மாறி விடுவதினால் திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்களின் நலனைப் பாதுகாக்கும் பொறுப்பை பிறந்த வீட்டு தெய்வம் அவளுடைய புகுந்த வீட்டினரின், அதாவது தனது சகோதர, சகோதர குல தெய்வத்திடம் தற்காலிகமாக ஒப்படைத்து விடுகின்றது. ஆனால் அவளை தன்னை விட்டு முற்றிலும் விலக்கி விடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் எத்தனை ஆழமாக இந்த குலதெய்வ தத்துவ நியதியை கையாண்டு உள்ளார்கள் என்பது இந்த விளக்கத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம்.


வேத காலங்களில் ஒரு திருமணம் எப்படி நடைபெற்றது என்றால் குலதெய்வ வழிபாடு துவங்கிய காலத்தில் பெண்ணின் குலதெய்வ ஆலயத்துக்கு சென்று அங்கு கடவுள் முன்னால் ஒரு குத்து விளக்கேற்றி வைத்து அதன் முன்பாக தாலியை வைத்து ஆலய கடவுளை வணங்கிய பின்னர் அந்த தாலியை எடுத்துக் கொண்டு பிள்ளை வீட்டின் குலதெய்வ ஆலயத்துக்கு சென்று அங்கும் விளக்கை ஏற்றி வைத்து தாலி கட்டிய பின், மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கைகளை பிடித்துக் கொண்டு இனி இருவரும் ஒருவருடன் ஒருவர் இணைந்து விட்டோம் என இரு வீட்டினரின் பெரியோர்கள் மற்றும் தெய்வத்தின் முன் சத்தியம் செய்து கொடுப்பது போல நிற்க, திருமணம் முடிவுக்கு வந்து விடுமாம். அந்த காலத்தில் திருமணங்களில் மந்திரங்கள் ஓதி செய்யப்படும் சடங்குகள் கிடையாது. இனி இருவரும் ஒருவருடன் ஒருவர் இணைந்து விட்டோம் என்ற அந்த சத்திய பிரமாணத்தையே அந்த பெண்ணின் கழுத்தில் கட்டப்பட்ட தாலியில் (அந்த காலத்தில் காய்ந்த மஞ்சளே தாலியில் கட்டப்பட்ட தாலி சின்னம் ஆகும்) அங்கு கண்களுக்கு தெரியாமல் வீற்று இருக்கும் இரு வீட்டினரின் குலதெய்வங்களும் உருவேற்றி விடுமாம். அதனால்தான் மணமகளின் கழுத்தில் ஏறிய தாலியே தெய்வீகத்துக்கு இணையானதாக கருதப்பட்டது. தாலியே திருமணத்திற்கு சாட்சியாக விளங்கியது. தெய்வ சன்னிதானம், (வழிபாட்டு தலங்கள்) மற்றும் கூடி உள்ள உறவினர்களே அதற்கு பிற சாட்சிகள். அங்கு ஏற்றப்பட்ட தீபமே அக்னி சாட்சி, மணமக்களால் ஏற்கப்பட்ட வாக்குறுதியே சத்திய பிரமாணம் ஆகும். இது திருமண நிலை.


அதை போலவேதான் இருவரும் இணைந்து வாழ முடியாமல் போன சூழ்நிலையில் (பெண்ணுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை என்பதே முக்கியமான காரணமாக அமைந்து இருந்தன) பெண்களை வாழாவெட்டி என்று தள்ளி வைத்து, திருமணம் ஆன அதே ஆலயத்துக்கு சென்று அங்கு தெய்வ சாட்சியாக மணமகள் அனைவர் முன்னிலையிலும்  இனி எங்களுக்கு இடையே எந்த பந்தமும் இல்லை என சத்திய பிரமாணம் எடுத்தப் பின் தாலியை கழுத்தில் இருந்து எடுத்து அதை தெய்வத்தின் முன்னிலையில் வைத்து விடுவார்களாம். அந்த தாலியின் சத்தியத் தன்மையும் அங்கேயே விலகுகிறது எனும்போது அப்போது அவர்கள் இருவரும் மாணவன் மனைவி எனும் அந்தஸ்தை இழந்து விடுகின்றார்கள். மணமான தம்பதியினர் பிரிந்து வாழும் நிலை அதாவது விவாகரத்து என்பது உடலால் மட்டும் பிரிவது அல்ல, உணர்வுகளாலும் பிரிக்கப்படுகின்றது எனும்போது அதில் அவர்கள் வணங்கிய குலதெய்வங்களும் அடங்கி இருந்தன. அவளுக்கோ மறுமணம் செய்து கொள்ள தடை போட்டு இருந்தார்கள். அப்படி தள்ளி வைக்கப்பட்ட பெண்கள் வாழ வேறு வழி இன்றி தந்தை வீட்டுக்கு சென்று வாழலானார்கள்,  விவாகரத்து என்ற நியதி இல்லாமல் இருந்தது. கால ஓட்டத்தில் மெல்ல மெல்ல அந்த பழக்கம் மாறத் துவங்கி மந்திரம் ஓதி, சடங்குகள் செய்து தாலி கட்டும் பழக்கம் வந்து விவாகரத்து போன்ற நடைமுறை பழக்கங்களும், இருவருமே மறுமணம் செய்து கொள்ளலாம் எனும் நிலைபாடுகளும் வழக்கத்தில் வந்தன.


இடைக் காலத்தில் மன்னர்கள், மற்றும் மன்னர்களால் நியமிக்கப்பட்ட கிராமத் தலைவர்கள் மற்றும் ஆலய தலைமை பூஜாரிகளே தெய்வ சாட்சியாக திருமணம் செய்து கொள்ளவும், மன விருப்பத்தோடு வாழ விரும்பாத தம்பதியினர் பிரிந்து கொள்ளும் வகையிலான தர்ம சாஸ்திர நியமங்களையும் கடைப்பிடித்து அதற்கான தீர்ப்புக்களை தர்ம தேவதையின் தீர்ப்பு என்ற பெயரில் கொடுத்து வந்துள்ளார்கள் என்பதினால்தான் மன்னர் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என வழக்க மொழியும் இருந்துள்ளது. அதன் பின் அவர்களது செயல்களை நிறைவேற்றி தரும் பொறுப்பு நீதிமன்றங்களில் நிறுவப்பட்ட நீதிபதிகள் மீது விழுந்தது. நீதி தேவதையின் (தெய்வம்) சார்ப்பில் செயல்படும் ஒரு நீதிபதியால் தம்பதியினர் பிரியும் வகையிலான விவாகரத்து எனும் தீர்ப்பு தரப்படுகின்றது என்பதினால் அதுவும் தெய்வம் கொடுக்கும் தீர்ப்பாகின்றது. ஏன் எனில் நீதிக்கு அதிபதி என்பவர்கள் தர்ம தேவதையின் நிழல்கள். நீதி தேவதையின் நியதிக்கு ஏற்ப முடிவு எடுப்பவர்கள்.


விவாகரத்து தீர்ப்பை கொடுக்கும் முன்னர் ஒரு நீதிபதி தனக்கு முன் சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டு அதாவது தெய்வ சாட்சியாக தான் கட்டிய கணவரை பிரிந்து வாழ விரும்புகின்றேன் என்று மனைவியும் அதை போலவே தான் தாலி கட்டிய மனைவியை பிரிந்து வாழ்கிறேன் எனக் கணவன் கூறுவதையும் கேட்ட பின்னரே அந்த சத்திய பிராமணத்தின் அடிப்படையில் அவர்களுக்கு இடையே இனி பந்தம் இல்லை எனும் பொருளிலான விவாகரத்தை தருகிறார். அந்த நிலையில்  அங்கு கண்களுக்கு தெரியாமல் வீற்று இருக்கும் இரு குலதெய்வங்களும் அதை ஆமோதிக்கும் வகையில் தமது கடமைகளை செய்கின்றன. விவாகரத்து பெறும் பெண்ணின், அதாவது புகுந்த வீட்டினரின் குலதெய்வம், மீண்டும் அவளை அவளது மூல குலதெய்வத்திடம் (பெற்றோர் வணங்கிய) ஒப்படைத்து விடுகின்றது.


இனி கேள்விக்கான பதிலுக்கு வருவோம். விவாகரத்து பெற்ற பெண் கணவனை பிரிந்து ஒன்று பிறந்த வீட்டிற்கு வந்து விட்டாள், இல்லை தனியாகவே வாழத் துவங்குகிறாள். சில காலம் கடந்த பின் இன்னொரு கணவரை மணந்து கொண்டு விட்டால் அவருடைய குலதெய்வத்தை ஆராதிக்கத் துவங்க வேண்டும் என்பதும் நியதி என்பதினால் கணவனை பிரிந்து விடும் ஒரு பெண், இன்னொரு திருமணம் செய்து கொள்ளும் வரை அந்த இடைப்பட்ட காலத்தில் எந்த தெய்வத்தை ஆராதிக்க வேண்டும்?  விவாகரத்து ஆன பெண் இன்னொரு திருமணமே செய்து கொள்ளாவிடில் எந்த தெய்வத்தை ஆராதிக்க வேண்டும்? இதில் குழப்பம் அடையாத தேவையே இல்லை. 


எந்த நிலையிலும் அந்த பெண்களுடைய அடிப்படை ரத்த சம்மந்தம், அதாவது அவளை பெற்று எடுத்த பெற்றோர்களோடு அறுபடுவதில்லை. விவாகரத்து பெறும் பெண்களுக்கு நேரடி ரத்த சம்மந்தம் இல்லாத புகுந்த வீட்டின் உணர்வுகளுடன் தொடர்ப்பு முற்றிலும் முறிந்து விடுவதினால் அந்த பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்தை புகுந்த வீட்டை சேர்ந்த குலதெய்வம் இழந்து விடுகின்றது. அவளை பாதுகாக்கும் உரிமையை மீண்டும் அந்த குலதெய்வம் பழைய குல தெய்வத்திடம் திரும்பத் தந்து விடவேண்டும் என்பது நியதி என்பதினால், அவளுக்கு நேரடி ரத்த சம்மந்தம் உள்ள தந்தையின் குலதெய்வத்தையே தற்காலிக குலதெய்வமாக மீண்டும் ஏற்க வேண்டும் என்பது நியதி ஆகின்றது. இந்த நிலை அவள் மீண்டும் மறுமணம் செய்து கொள்வதை பொறுத்தது. ஏன் எனில் மறுமணம் செய்து கொள்ளும் பெண்களின் குலதெய்வம் மறு திருமணத்தின்போது மீண்டும் மாறி விடுகின்றது. அதே சமயம் விவாகரத்து ஆன பெண்கள் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டு இருந்தால் அவர்கள் வணங்கி கொண்டு இருக்க வேண்டிய குலதெய்வம் தந்தை வீட்டு குலதெய்வமே ஆகும்.


இன்னொரு சிக்கலான கேள்வியும் உள்ளது. விவாகரத்து பெறும் பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் ஏற்க வேண்டிய குலதெய்வம் – தாயின் குலதெய்வமா இல்லை தந்தையின் குலதெய்வமா? விவாகரத்து ஆனவர்களுக்கு பிறந்திருந்த குழந்தைகள் நேரடி ரத்த சம்மந்தம் உள்ள தந்தையின் குலதெய்வத்தைத்தான் ஏற்க வேண்டும் என்பது நியதி. இதில் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. ஏன் எனில் நிரந்தரமான குலதெய்வம் ஆண்களுக்கு மட்டுமே உள்ளது. திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு சென்று விடும் பெண்கள் அந்த வீட்டின் ஆணுடன் உறவு கொண்டுதான் குழந்தைகளை பெற்றெடுக்கிறாள். சாஸ்திரங்களின்படி குழந்தைகளுடன் நேரடி ரத்த சம்மந்தம் உள்ள  தந்தையின் குலதெய்வமே அவருக்கு பிறக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் குலதெய்வம்  என்பதினால் புகுந்த வீட்டு குலதெய்வத்திற்கே அந்த குழந்தைகள் மீதான அதிகாரம் வந்து விடுகின்றது. விவாகரத்து ஆனவர்களுக்கு பிறந்திருந்த ஆண் குழந்தைகள் தாயாரோடு வளர்ந்தாலும் சரி தந்தையோடு வளர்ந்தாலும் சரி அவர்கள் வணங்க வேண்டிய குலதெய்வம் மூல தந்தையின் குலதெய்வத்தையே சார்ந்து இருக்கும். பெண் குழந்தைகளை பொறுத்தவரை அவர்களது குலதெய்வம் அவர்களுடைய திருமணத்தின்போது மாறி விடுகின்றது என்பதினால் பெண் குழந்தைகள் பற்றிய சச்சரவு கிடையாது.