Wednesday 30 October 2019

என் கோவில் இடிக்கப்பட்டது!! உன் இல்லத்தில் எனக்கு ஒரு இடம் கொடு!! இதோ இந்த திண்ணையிலேயே இருந்து கொள்கிறேன்!! இங்கேயே சிறிய ஆலயம் எழுப்பு!! செய்வாயா!!

🕉
🙏

காசி க்ஷேத்ரத்தில் ஶ்ரீஅன்னபூர்ணா பகவதியின் மஹிமை

"கமலா!! நாளைக்கு மத்யான்னம் இங்கிருக்கற ஸாதுக்களுக்கெல்லாம் சாப்பாடு போடறதுங்கற நீண்ட நாள் அபிலாஷையை பூர்த்தி பண்ணலாம்ங்கள எண்ணம்!! நீ என்ன சொல்லறே!! பதார்த்தங்கள் எல்லாம் தயார் பண்ணிடலாமோல்லியோ!!" நாராயண தீர்த்தர் தன் மனைவியிடம் கேட்டார்!!

"ஆகட்டும் நா!! சமைக்கறதுக்கு வேண்டிய பதார்த்தங்கள் எல்லாம் இருக்கு!! ஸந்யாஸிகள் நம்மாத்தை தேடி வந்து பிக்ஷை வாங்கிக்கறதை விடவும் பாக்யம் உண்டா!! அவசியம் அழைங்கோ!!" முதல் நாள் கமலாவும் தன் கணவனிடம் கூறிவிட்டு சமையலுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யத் தொடங்கி விட்டார்!!

முதல் நாள் மாலையே முக்யமான ஸாதுக்களிடமும், ஸந்யாஸிகளிடமும் பிக்ஷை எடுத்துக்கொள்ள வீட்டிற்கு வரச் சொல்லியாகிவிட்டது!!

மறுநாள் விடியற்காலை ஸ்நாநம் முதலிய ஆச்சார அனுஷ்டானங்களை பூர்த்தி செய்து விட்டு, கமலாவைத் தேடினார்!!

"கமலா!! கமலா!!"

கொல்லைப்புறத்திலிருந்து குரல் கேட்கிறது "மன்னிச்சுடுங்கோன்னா!! திடீர்னு தூரமாய்ட்டேன்!! எதிர்பார்க்கவேயில்லை!! என்ன பண்றது தெரியல்லியே!!" படபடப்புடன் கமலா கூறினாள்!!

"அட விச்வநாதா!! கமலா!! இப்போ என்னடீ பண்றது!! அன்னபூர்ணே!! விசாலாக்ஷி!! ஸாதுக்களெல்லாம் வரத்தொடங்கிடுவாளே!! அம்மா!! நீ தான் ரக்ஷிக்கனும்!!" என்றபடி மனக்கலக்கத்துடன் நாராயணர் வீட்டிற்குள் சென்றார்!!

சரியாக ஸூர்யோதயம் ஆகும் போது வீட்டு வாசற்கதவை யாரோ தட்டியது போலிருந்தது!! கதவைத் திறந்தாள் பழுத்த ஸுமங்கலியாக ஒரு மாமி!!

"இது நாராயணர் அகம் தானே!! ஸாதுக்களுக்கெல்லாம் இன்னி மத்யான்னம் இங்க சாப்பாடுன்னு ஜனங்கள் பேசிண்ட்ருந்தா!! அதான் ஏதாவது உபகாரம் தேவைப்படுமான்னு கேக்கறதுக்கு வந்தேன்!!" என்றாள் அந்த மாமி

"ஆஹா!! மாமி!! ஸாக்ஷாத் அன்னபூர்ணாம்பாளே வந்தது போலிருக்கு!! நல்ல ஸமயத்துக்கு வந்தேள்!! ஆத்துக்காரி திடீர்னு தூரமாய்ட்டா!! என்ன பண்றது தெரியல்லியே!! ஸாதுக்கள் மனஸ் வேதனைப்படும்படி ஆய்டுமோன்னு ஒரே கவலை!! அம்பாளே வந்தாப்போல நீங்க வந்துருக்கேள்!!

சித்த ச்ரமம் பாக்காத ஸாதுக்களுக்கு நீங்க தான் சமைச்சு போடனும்!! உபகாரம்ன்னு வந்தவாளை வேலை வாங்கறனேன்னு நினைக்கப்படாதா!!" விநயத்துடன் கூறினார் நாராயணர்.

"அடாடா!! அதுக்குத்தானே நான் வந்துருக்கேன்!! நீங்க கவலையே படாதேள்!! சமையலறையை மறைக்கும்படியா ஒரு திரையை மட்டும் போட்டுடுங்கோ!! எல்லா பதார்த்தமும் ஜம்முனு பண்ணிடலாம்!! ஸாதுக்களுக்கு பரிமாறறதுக்கு ஸ்த்ரீகள் இருக்காளோல்லியோ!!" என்றாள் மாமி.

"ஆஹா!! இருக்கா மாமி!!" என்றபடி மாமியை உள்ளே அழைத்து வந்தார் நாராயண தீர்த்தர்.

சமையலறையை மறைக்கும் விதமாக திரைச்சீலை போட்டாயிற்று. சமையலறையிலிருந்து கமகமவென்று வாசனையும் வரத்தொடங்கியது!!

பலபலவென விடிந்த பின்னர் ஸாதுக்களும் ஸந்யாஸிகளும் வரத்தொடங்கியாயிற்று!! எதிர்பார்த்ததை விட இரண்டு மூன்று மடங்கு ஸந்யாஸிகள் வந்திருந்தனர்!!

நாராயணருக்கு அடுத்த கவலை!! "விசாலாக்ஷி!! நல்லபடியா இவா எல்லாரும் த்ருப்தியாக சாப்பிட்டுட்டு போகனுமே!! அன்னத்துக்கு குறைவு இயுக்கப்படாதே!!" என்று அம்பிகையை ப்ரார்த்தித்தார்.

விதவிதமான பக்ஷணங்கள், பலகாரங்கள், சித்ரான்னங்கள், பாயஸங்கள், போளி, வடை முதலிய பதார்த்தங்கள் என சமையலறையிலிருந்து வந்துகொண்டே இருந்தது!!

நாராயணருக்கு ஆச்சரியம்!! "இருந்த சாமான்களோ குறைவு!! எப்படி இவ்வளவு பதார்த்தங்கள்!?! அதுவும் மூன்று மடங்கு ஜாஸ்தியாக ஸாதுக்கள் வந்துவிட்ட பின்னரும் இவ்வளவு பதார்த்தங்களை சமைக்க முடிந்தது!!"

சித்ரான்னங்களும் போளி முதற்கொண்ட பதார்த்தங்கள் அமுதசுரபி போன்று வந்துகொண்டே இருந்தன!!

ஸாதுக்கள் அனைவரும் "நிரம்ப த்ருப்தி!! நிரம்ப த்ருப்தி!! காசி க்ஷேத்ரத்திலேயே இது போன்ற.உணவை எங்கும் சாப்பிட்டதில்லை!! விச்வநாதர் அருள்!! அன்னபூர்ணா பகவதி அனுக்ரஹம்!! என்றபடி அனைவரும் ஆசீர்வதித்துச் சென்றனர்!!

நாராயணருக்கு மிகுந்த ஸந்தோஷம்!! அத்தனை ஸாதுக்களும் வாய் நிறைய ஆசீர்வதித்தது மட்டுமல்லாமல், அத்தனை பேர் வயிறும் நிறையும் படி அம்பிகை செய்தாளே என்று!!

அவ்வளவு பேர் சாப்பிட்டுச்சென்ற பின்னரும் இன்னும் ஐம்பது பேர் சாப்பிடும் அளவிற்கு பதார்த்தங்கள் நிரம்பியிருந்தது!!

அனைவரும் சென்ற பின்னர் தான் சமையலறையை விட்டு மாமி வெளியில் வந்தாள்!!

"நாராயணரே!! எல்லோருக்கும் ஸந்தோஷமா!! எல்லார் வயறும் நிறைச்சதா!!" என்றாள் மாமி!!

"ஆஹா பாக்யம் மாமி!! எல்லாரும் ஸந்தோஷமா வயறு நிறைய சாப்ட்டு ஆசீர்வாதம் பண்ணினா!! உங்க புண்யம்!!"

"சரிப்பா!! நா உத்தரவு வாங்கிக்கறேன்!!"

"ஆஹா!! வாங்கோ!!"

பழுத்த சுமங்கலியான அந்த மாமி வீட்டு வாசல்படியை தாண்டிய பிறகு தான் நாராயணருக்குத் தோன்றியது
"அடாடாடா!! வந்த மாமிக்கு குங்குமம் கூட குடுக்கல்லியே! ஈச்வரா!! ஸம்பாவனையும் பண்ணலை!! காலம்பறலேந்து வெளில வராம சமைமலறையிலேயே புழுங்கிண்டு இருந்தாளே!! ஒரு மர்யாதையும் பண்ணல்லியே!! தாம்பூலம் வஸ்த்ரம் ஸம்பாவனை எல்லாம் கொடுக்கனும்ன்னு நினைச்சுண்ட்ருந்தோமே!! மறந்துடுத்தே!!" என்று பதறியபடி

"மாமி!! சித்த நில்லுங்கோ!!" என்றபடி வெளியில் பார்த்தால் மாமியைக் காணும்!!

"எங்க போய்ருப்பா!! இவ்ளாம் பெரிய தெருவை எப்படி தாண்டி போய்ருப்பா!! வாசப்படி தாண்டி ரெண்டு நிமிஷம் கூட ஆகல்லியே!!" என்று வியந்தபடி காசி க்ஷேத்ரம் முழுவதும் அந்த மாமியைத் தேடினார்!! எங்குமே இல்லை மாமி!!

அலுத்து சலித்து நடுநிசி இரவில் வீட்டுத் திண்ணையிலேயே படுத்து உறங்கி விட்டார்!!

அவரது ஸ்வப்னத்தில் "நாராயணா!! வந்தது யாருன்னு தேடறியா!!" என்றபடி ஸாக்ஷாத் பகவதி ஶ்ரீலலிதா ராஜராஜேச்வரி ஒரு கையில் ஸ்வர்ண கரண்டியும், மறுகையில் பாயஸான்னம் நிரம்பின பாத்ரமும் கொண்டு மூன்று கண்களும், சிரஸில் அலங்கரிக்கும் சந்த்ரபிறையும் தாங்கியவளாகவும், லக்ஷ்மியும் பூமா தேவியும் பணி புரிய, ஸிம்ஹாஸனேச்வரியாக ஶ்ரீசக்ரராஜத்தில் வஸிப்பவளாக, அகில உலகிற்கும் அமுதமாம் அன்னத்தை வழங்கும் ஜகன்மாதா அன்னபூர்ணேச்வரியாக காக்ஷியளித்தாள்!!

"அம்மா!! தாயே!! அன்னபூர்ணி!! ராஜராஜேச்வரி!! பராசக்தி!! ஜகதம்பா!! இந்த ஏழை வீட்டுக்கு நீயா வந்தே!! காமாக்ஷி!! இந்த க்ருஹத்திற்கு வந்து நீயா சமையல் பண்ணினே!! அம்மா!! விசாலாக்ஷி!! உன்னையா நான் வேலை வாங்கினேன்!! அம்மா!! உனக்கா நான் குங்குமம் கூட கொடுக்காம அனுப்பினேன்!! அம்மா!! தாயே!! மன்னிச்சுடம்மா!!" என்றபடி கதறினார்!!

"நாராயணா!! பெற்றவள் தன் பிள்ளைகளிடம் எதையும் எதிர்பார்த்து செய்வதில்லை!! உன் பக்திக்கு கட்டுப்பட்டே உன் இல்லத்தைத் தேடி வந்தேன்!! இந்த காசித்தலத்தில் நான் வசிக்க இடம் இல்லாது வீதி முழுவதும் அலைகிறேனப்பா!! (அவுரங்கசீப்பால் காசி விச்வநாதர் கோவில் தரைமட்டமாக்கப்பட்ட சமயம் அது!!)
என் கோவில் இடிக்கப்பட்டது!! உன் இல்லத்தில் எனக்கு ஒரு இடம் கொடு!! இதோ இந்த திண்ணையிலேயே இருந்து கொள்கிறேன்!! இங்கேயே சிறிய ஆலயம் எழுப்பு!! செய்வாயா!!" என்றபடி மறைந்தாள் அன்னபூர்ணா பகவதி!!

"அம்மா!! அம்மா!! என்ன சோதனை இது!! உனக்கு வசிக்க இடமில்லையா!!" என்று அலறியபடி விழித்துப் பார்த்தால் வைர மூக்குத்தி ஒன்று நாராயணர் அகத்து திண்ணையில் பளிச்பளிச் என்று மின்னிக்கொண்டிருந்தது!!

"அம்மா!! அன்னபூர்ணா!!" என்று இருகண்களிலும் கண்ணீர் பொங்க நாராயணர் விஷயத்தை ஊர் மக்களிடம் கூறினார்!! அன்னபூர்ணா தேவிக்கு அழகிய சிறிய ஆலயம் ஒன்று அந்த வீட்டின் திண்ணையிலேயே எழுப்பப்பட்டது!!

அம்பாளின் காருண்யம் எப்படிப்பட்டது!! தன் குழந்தையின் இல்லத்திற்கு தானே வந்து, சமைத்து, அங்கேயே வசிக்க விருப்பமும் கொண்டாள் எனில்  அவள் கருணைக்கு ஈடு உண்டோ!!

🕉🙏🙏🕉




மதுரை அன்னை மீனாட்சி #கோலாட்ட உற்சவம். 30.10.19- 3ம் நாள்

🌷மதுரை அன்னை மீனாட்சி #கோலாட்ட உற்சவம்🙏
30.10.19- 3ம் நாள்
                             
🍀மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்🌺

🌺Madhurai Annai Meenkshi Kolattam (Traditional dance of Tamilnadu)

Festival Day 3 today 30.10.19 evening.

Madhurai Sri Meenkshi Sundareswarar Temple*
✨✨✨✨✨✨✨
குருந்தே வருக!
அருள் பழுத்த
கொம்பே வருக! திருக்கடைக்கண்
கொழித்த கருணைப் பெருவெள்ளங்
குடைவார் பிறவிப் பெரும் பிணிக்கோர்
மருந்தே வருக!
எங்கள் மீனாட்சி
அம்மே வருக வருகவே!
✨✨✨✨✨✨✨
ஓம் நமசிவாய 🙏



ஸ்ரீ சக்கர மகாமேரு பூஜை வழிபாட்டு முறை

 ஸ்ரீ சக்கர மகாமேரு பூஜை வழிபாட்டு முறை

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||
”ஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு”

யாகங்களில் உயர்ந்தது அஸ்வமேதம். தேவர்களில் உயாந்தவர் ஹரி. யானைகளில் உயர்ந்தது ஐராவதம். குதிரைகளில் உயர்ந்தது பஞ்சகல்யாணி. பசுக்களில் உயர்ந்தது காமதேனு. மிருகங்களில் உயர்ந்தது ஸிம்ஹம். பெண்களில் உயர்ந்தவர் சீதை. அது போல யந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீ சக்ரம் எனப்படும் ஸ்ரீ சக்ர பூர்ண மகாமேரு. விநாயகன் உறையுமிடம் ஆனந்தபுரி. முருகன் இருக்கிமிடம் ஸ்கந்தலோகம். ப்ரமன் இருக்குமிடம் ஸத்யலோகம். நாராயணன் இருக்குமிடம் வைகுந்தம்; இந்திரன் இருக்குமிடம் தேவலோகம். சிவபெருமான் இருக்குமிடம் கைலாயம். அது போல அன்னை ஜகன்மாதா அம்பிகை எம்பெருமானுடன் கூடி இன்புற்று உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு அருள்பாலிக்கும் இடம் ஸ்ரீ புரம் எனக்கூறப்படும் ஸ்ரீ சக்ர பூர்ண மகாமேரு பீடம் என்னுமிடமாகும். அன்னையுறையும் இந்த யந்திரத்தை கோடுகளாக வரைந்து வைத்தால் அது ஸ்ரீ சக்ரம் எனவும் அதற்கு வடிவம் கொடுத்தால் அதுவே மகாமேரு எனவும் கூறப்படும.

அன்னை உறையும் இந்த மகாமேரு 9 ஆவரணம் என்னும் கோட்டைகளைக் கொண்டது. அரசர்கள் அரண்மனைகளைச் சுற்றிகோட்டை மதில்களை அமைத்துக் காப்பது போல் தேவியின் ஸ்ரீ சக்ரபுரம் என்னும் கோட்டையைச் சுற்றி 9 கோட்டைகள் உண்டு. ஒவ்வொரு கோட்டையையும் சேனாதிபதிகள் காப்பது போல பெண் சேனாதிபதிகள் காவல் காக்கின்றனர். ஒவ்வொரு கோட்டையும் ஒவ்வொரு அமைப்பைக் கொண்டது.

முதலில் சதுரக் கோட்டை த்ரைலோக்ய மோகனசசக்கரம் எனறு பெயர். இதனை ப்ரகடயோகினி முதலான 8 தேவியர் காவல்புரிகின்றனர்.

தாமரை இதழ்போன்ற 16 அமைப்புக்கள் கொண்ட பரிபூரக சக்ரம் என்னும் கோட்டை. இதை குப்தயோகினி முதலான 16 தேவியர் காவல் புரிகின்றனர்

3 தாமரை இதழ் போன்ற அமைப்பபைக் கொண்ட 8 தளங்களைக் கொண்ட கோட்டை இதற்கு ஸர்வரரேக ஸம்சேஷோபனா சக்ரம் என்ற பெயர். இதனை குப்ததரயோகினி முதலான 8 தேவியர் காவல் புரிகின்றனர்.

14 முக்கோணங்களைக் கொண்ட ஸர்வ ஸொபாக்கியதாயக சக்ரம் என்ற பெயரைக் கொண்டது இதனை ஸம்ப்ரதாய யோகினி முதலான 14 தேவதைகள் காவல் புரிகின்றனர்.

முக்கோணங்களைக் கொண்ட ஸர்வார்த்த ஸாதக சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இதை குலோத்தீரண யோகினி முதலான 10 தேவதைகள் காவல் புரிகின்றனர்.

10 முக்கோணங்களைக் கொண்ட சர்வரக்ஷாகர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை நிகர்ப்பயோகினி முதலான பத்து தேவதைகள் காவல் புரிகின்றனர்.

முக்கோணங்களைக் கொண்ட சர்வரோகஹர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை ரஹஸ்ய யோகினி முதலான 8 தேவதைகள் காவல்புரிகின்றனர்.

ஒரே முக்கோணம் சர்வஸித்தப் பிரதாயக சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இதனை அதிரஹஸ்ய யோகினி முதலான தேவதைகள் காக்கின்றனர்.

பிந்து ஸ்தானம் எனப்படும் ஸர்வானந்தமய சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இது ஒரு புள்ளி போன்ற இடமாகும். இதில் பரதேவதையான அம்பிகை ஸ்ரீ லலிதா மகாத்ரிபு சுந்தரியாக இருந்து கொண்டு அருள் பாலிக்கின்றாள். லலிதா மஹாத்ரிபுர சுந்தரியாக இருந்து கொண்டு அருள் பாலிக்கின்றாள்.

இந்த அமைப்பைக்கொண்ட ஸ்ரீ சக்ரம் உலகம் உய்யும் பொருட்டு, ஆதிசங்கரரால் பாரத தேசத்தில் காஞ்சி. திருவானைக்கா, மற்றம் திருஓற்றியூர்; போன்ற தலங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மக்களின் துயரைப் போக்கி அன்னையின் அருளை அளிக்கும். ஒரு சிறந்த மார்க்கம் இந்த மஹாமேரு வழிபாடாகும். அன்னையிடம் நாம் செய்யும் அபசாரத்தினால் உண்டாகும் கோபம் தணிய தேவிக்கு இந்த சக்ரஸ்தாபனம் செய்து வழிபட்டால் எல்லா நன்மையும் பெறுவது திண்ணம்.                                             
ஸ்ரீ சக்கர மகாமேரு பூஜை வழிபாட்டு முறை.

நமக்கு வழிகாட்டும் சக்திதேவிக்கு யந்திர வடிவம் தேவை என்று மகாமேரு யந்திர வடிவை ஏற்படுத்தினார் ஆதிசங்கரர். இதற்கு ஸ்ரீசாயனர், சுரேஸ்வராச்சார்யர், கைவல்யாச்ரமர் போன்ற மகான்கள் தனி வடிவமும் வழிபாட்டு விதிகளும் ஏற்படுத்தினர்.

‘ஸ்ரீ வித்யை என்னும் தெய்வக்கலை ரகசியத்தை அறிந்திருப்பவர்கள் பாக்கியசாலிகள்’ என்று சொல்கின்றன, ஸ்ரீ சக்கரத்தின் மூல ஆதார நூல்கள். குரு மூலமாக உபதேசம் பெற்று, ஸ்ரீசக்கர பூஜையைச் செய்பவர்கள் இந்த உலகில் மகாபாக்யங்களைப் பெற முடியும் என்கிறது ஸ்ரீவித்யா ரகஸ்யம்.

ஸ்ரீ சக்கரத்தின் மகிமை: மேரு மலையின் மீது புஷ்பதந்தர் என்பவரே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும், விநாயகப் பெருமான் அதற்கு முழுவதுமாக வடிவம் கொடுத்தார் என்றும், ஆதிசங்கரரின் குருவான கௌடபாதர்தான் அதை கிரஹித்து அவருக்கு உபதேசித் தருளினார் என்றும் லிங்கபுராணச் செய்யுள் குறிப்பிடுகிறது.

மறைபுகழும் சவுந்தரிய லகரியினை வகுத்தெழுதும் விறல் கெழுமு வேழமுகன் விரைமலர்த் தாளினைத் தொழுவாம்.

மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீ சக்கரம். சக்தி வாய்ந்த இதன் வழிபாட்டுப் பாடலைத் தமிழில் ‘அம்பிகையின் அழகு அலை’ என்று முதன்முதலாக எழுதித் தொகுத்தவர் வீரை கவிராஜ பண்டிதர் ஆவார். ஸ்ரீசக்கர வரைமுறை விதியை லக்ஷ்மீதரரும் கைவல்யாச்ரமரும் சிறு மாறுதல்களுடன் வரைந்து காட்டினர்.

சௌபாக்கியவர்த்தினி என்ற விதி நூலின்படி 11 பாடல்களால் இதை எப்படி சக்தி பொருந்தியதாக வரைவது என்று அறியலாம். அதன்படி, பிந்து, முக்கோணம், எண்கோணம், இருபத்து கோணம், பதினான்கு கோணம், எட்டு தளம், பதினாறு தளம், மூன்று வட்டம், மூன்று வரைகோட்டுப் பூபுரம் என்று ஸ்ரீ சக்கர அமைப்பு, ஓலைச்சுவடியின் வாயிலாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் பெரியதான இந்தப் பிரபஞ்சத்தில் சக்திதேவி ஸ்ரீசக்கரத்தைத் தன் சொந்த வீடாகக் கொண்டு ஆட்சிபுரிந்து வருகிறார். லலிதா சகஸ்ரநாமத்தின் 996-வது நாமாவளியான, ’ஸ்ரீசக்ரராஜநிலயாயை’ என்ற நாமாவளியினால் அறியலாம்.

அந்நிய தேசத்தவர் வியந்த ஸ்ரீசக்கரம்: –  சில ஆண்டுகளுக்கு முன்னர் மாஸ்கோவில் உள்ள கணிதவியல் விஞ்ஞானி அலெக்ஸி குலச்சேவ் என்பவர் ஸ்ரீ சக்கரத்தை வைத்து சிறு ஆய்வு நடத்தினார். மிகச்சரியாக வரைந்த ஒரு சக்கரத்தையும், சரியாக வரையாத ஒன்றையும் வெவ்வேறு நண்பர்கள் வீட்டில் வைத்துச் சில நாட்கள் பொறுத்துப் பார்த்தபோது நல்ல ஸ்ரீசக்கரம் இருந்த வீட்டில் நலனும், அடுத்ததில் நோய் குணமாகாமையும் உள்ள சூழ்நிலையைக் கண்டார். இதுபற்றி ஆய்வுக் கட்டுரை எழுதிய குலச்சேவைப் பாராட்டிய அவர் நண்பர் உண்மையாகவே ஸ்ரீசக்கரத்தில் சக்தி உள்ளது என்று பத்திரிகைச் செய்தி வெளியிட அனைவரும் இதன் வரைகலையைக் கண்டு அதிசயித்தனர்.

முற்காலத்திலிருந்தே ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோயில்களில் மக்கள் ஈர்ப்புத் தன்மை ஏற்பட்டு புகழ் பெற்றிருப்பதைக் காண முடிகிறது. பூர்வ புண்ணியச் சேர்க்கை இருந்தால்தான் கலியுகத்தில் சக்தியை வழிபட்டு மேன்மைக்கு வரமுடியும் என்று ஆதிசங்கரர் தன் சௌந்தர்ய லஹரியில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்கர வழிபாட்டு முறை: ஸ்ரீ சக்கரத்தை முறையாக தாமிரத் தகட்டில் வரைந்து கோணங்கள் தவறாமல் கோடுகளால் பூர்த்தி செய்து அமைத்து விதிமுறைப்படி வழிபடுவது அவசியம். எல்லோருடைய வீடுகளிலும் இந்தச் ஸ்ரீ சக்கரம் இருப்பதைக் காணலாம். ஆனால், எல்லோருமே செல்வச் செழிப்புடன் நலமோடு இருக்கிறார்களா? இல்லையே! காரணம் ஸ்ரீசக்கர வழிபாட்டுக்கான விதிமுறைகளைச் சரியாகக் கடைப் பிடிக்காததுதான்.

ஸ்ரீ சக்கரம் பூஜிக்கப்படும் வீடு சுத்தமாக நல்ல காற்றோட்டம் உடையதாக இருக்க வேண்டும். பூஜை அறையின் மேற்பகுதிகளில் மகாலட்சுமிக்கு உரிய மலர்கள், விருட்சங்களை வரைந்து அழகுபடுத்தி வைக்க வேண்டும். பசு, சிம்மம், சங்கு, சக்கரம், தாமரை, குதிரை, யானை, ஸ்வஸ்திகம் போன்ற குறிகளை அமைக்கலாம். பூஜை அறைக்குள் முன்னோர்கள் படத்தை மாட்டி வைக்காமல் வேறு சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கும் குருதேவர் படங்கள், பீடாதிபதிகள் தரும் பஸ்மம், குங்குமப் பிரசாதம் போன்றவற்றை ஸ்ரீசக்கரம் அருகில் வைக்கக் கூடாது.

வெள்ளிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, பூர நட்சத்திர நாள், பூஜை செய்பவருடைய ஜென்ம நட்சத்திர நாளில் ஸ்ரீ சக்கரத்துக்காக உபதேசிக்கப்பட்ட மந்திரத்தைத் தவறாமல் பூஜையுடன் ஜெபிக்க வேண்டும்.

வீட்டில் சிராத்தம் செய்வதாக இருந்தால், அன்று முன்னோர் வழிபாடு செய்த பிறகே ஸ்ரீசக்கர வழிபாடு செய்தல் வேண்டும்.

பூஜை அறையைச் சுத்தமாக வைத்துக் கொண்டு சுபயோக சுப தினத்தில் ஸ்ரீசக்கர வழிபாடு தொடங்கி யந்திரஸ்தாபனம் (பிரதிஷ்டை) செய்து கணபதி, நவகிரகங்கள், ராசி, நட்சத்திரத் தெய்வங்களின் துதிகளோடு மலர், குங்கும அர்ச்சனையும் செய்து வழிபட்டால் நலம் பெருகும்.

ஸ்ரீ சக்கர பூஜையின்போது, முதலில் குரு வந்தனம் செய்து விநாயகரை வழிபட வேண்டும். ஆத்மதத்வம் சோதயாமி, வித்யா தத்வம் சோதயாமி, சிவதத்வம் சோதயாமி, சர்வ தத்வம் சோதயாமி என்று நான்கு முறை தீர்த்தம் உட்கொள்ள வேண்டும். அன்றைய திதி-வாரம்-நட்சத்திரம் சொல்லிக்கொண்டு, மம குடும்ப சௌபாக்ய தனவிருத்தியர்த்தம் ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரி அனுக்ரஹ ப்ரசாத சித்யர்த்தம் ஸ்ரீசக்ர பூஜாம் கரிஷ்யே என்று மலர் எடுத்து ஸ்ரீசக்கரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அடுத்ததாக,

தீபதேவி மகாதேவி சுபம் பவதுமே ஸதா
யாவத் பூஜா ஸமாப்தி:ஸ்யாத் தாவத் ப்ரஜ்வல ஸுஸ்திரா:

என்று அருகில் உள்ள குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் மலர் சமர்ப்பிக்க வேண்டும். சுத்தமான தாம்பாளத்தில் ஸ்ரீ சக்கரத்தை வைத்து மஞ்சள் பொடி, அரிசி மாவுப்பொடி அபிஷேகப்பொடி, எலுமிச்சம்பழம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீரால் அபிஷேகம் செய்து பட்டுத்துணியால் சுத்தம் செய்து, சந்தனம் குங்குமம் இட்டு, மலர்ச்சரம் சாற்றி தயாராக வைக்கவும். கைகளைக் கூப்பியபடி தியானம் செய்யவேண்டும்.

அருணாம் கருணா தரங்கிதாக்ஷீம் த்ருத
பாசாங்குசபுஷ்பபாணசாபாம்
அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை:
அஹமித்யேவ விபாவயே பவானீம்
மகாபத்ம வனாந்தஸ்தே தாரணா நந்த விக்ரணே
சர்வபூத ஹிதே மாத: ஏகி யேகி பரமேஸ்வரி

ஸ்ரீலலிதா மகா த்ரிபுர சுந்தரீம் சௌபாக்ய லக்ஷ்மி ஸ்வரூபிணீம் யந்திர ஸ்தானே
ஆவாகயாமி ஸ்வாகதம் தர்ஸயாமி.

சமஸ்த சக்ர சக்ரேசி யுதே தேவி நவாத்மிகே
ஆராத்திக மிதம் துப்யம் க்ருஹாண மம சித்தயே – என்று சொல்லி வணங்கிய பிறகு, கைகளில் மலர் எடுத்துக்கொண்டு, குங்குமமும் சேர்த்து அர்ச்சனை செய்க.

(ஸ்ரீ சக்கரத்தை முதலில் பிரதிஷ்டை செய்து வழிபட ஒன்பது ஆவரண பூஜை என்ற விதியில் அதிகமான மந்திரங்கள் இருப்பதால் அவற்றைத் தொகுத்து இலகுவான பூஜையாக இங்கே தந்துள்ளோம்)

ஓம் ஹ்ருதய தேவ்யை நம;
ஓம் சிரோ தேவ்யை நம:
ஓம் சிகா தேவ்யை நம:
ஓம் கவச தேவ்யை நம:
ஓம் நேத்ர தேவ்யை நம:
ஓம் அஸ்திர தேவ்யை நம:
ஓம் காமேஸ்வர்யை நம:
ஓம் பகமாலியை நம:
ஓம் நித்யக்லின்னாயை நம:
ஓம் பேருண்டாயை நம:
ஓம் வன்னிவாசின்யை நம:
ஓம் மகா வஜ்ரேஸ்வர்யை நம:
ஓம் சிவதூத்யை நம:
ஓம் த்வரிதாயை நம:
ஓம் குலசுந்தர்யை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் நீல பாதகாயை நம:
ஓம் விஜயாயை நம:
ஓம் சர்வ மங்களாயை நம:
ஓம் ஜ்வாலாமாலின்யை நம:
ஓம் சித்ராயை நம:
ஓம் லலிதா மகாநித்யாயை நம:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சௌம் லலிதா
மகாதிரிபுர சுந்தரீ ஸ்ரீ சக்ர மாதாயை நம:
நானாவித பத்ரபுஷ்பாணி சமர்ப்பயாமி

என்று கூறி தேவியை துதித்து, தூபதீபம் காட்டியபின் பழம் வைத்து நிவேதித்து, வாசனை மலர்களில் சந்தனம் தெளித்து கையில் எடுத்துக்கொண்டு சௌந்தர்ய லஹரியை முழுவதும் பாடிய பலனைத் தரும் ஒரு துதியைக் கூறவும்.

ஸ்ரீசக்ரத்திற்கு உரிய விசேட நவாவர்ண பூஜையை சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, தை, ஆடி, பௌர்ணமிகளில் கூட்டாகச் செய்யலாம்.

ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜன விதி:
ஸீதா ஸீதேச் சந்த்ரோபல ஜலல வைராக்ய ரசனா
ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸெளஹித்ய கரணம்
த்வதீயாபிர் வாக்பிஸ் தவஜனனி வாசாம் ஸ்துதிரியம்

(இத்துதியில் ஐஸ்வர்யங்களைக் கொடுக்கும் ஸெளபாக்யவர்த்தனீ இரகசியம் அடங்கி உள்ளதாக ஸ்ரீ சங்கரரே சொல்லி இருக்கிறார். இதை தினமும் மூன்று முறை ஸ்ரீசக்கரத்தை வணங்கிக் கூறலாம்).

அன்னையே போற்றி! ஞாலத்து அல்லலை ஒழிப்பாய் போற்றி!
துன்னியே எம்பால் அன்பு சுலவ அவ்வுணர்த் தேய்த்து
நன்னிலப் பொறை தீர்க்கின்ற நாயகி போற்றி! நல்லோர்க்கு
உன்னரும் இன்பம் ஈயும் ஒளி மலர்க் கண்ணாய் போற்றி!

மலர்களை தீபத்தில் சமர்ப்பித்து தனியாக புஷ்பாஞ்சலியை ஸ்ரீசக்கரத்துக்குச் செய்தல் வேண்டும்.

சக்கர மகிமையைப் பாடுவோம்:
சிவசக்கரம் ஒரு நான்கும் வடதிசையை நோக்க
தேவியுடன் ஐந்து வட்டம் தென்புறமே பார்க்க
பவமான உடலுலகமாக பரிகார பிண்டாண்ட யோனியதுவாக
சிவயுவதி அஷ்ட வசு எண் தளங்களாக
சேர்ந்தகலை ஈரெட்டு மேல் தளங்களாக
நவமான மூவட்டம் முக்கோடு நால்வாய்
நாற்பத்து நான்காகி ஸ்ரீசக்ர மானாய்

வாசனை மலர்களை இட்டு ஆரத்தி காட்டியபின் ஆத்ம பிரதட்சிணம் செய்து நமஸ்கரித்து ஸ்ரீசக்கரத்தில் உள்ள குங்குமத்தை வகிட்டிலும், நெற்றியிலும், திருமாங்கல்யத்திலும் பெண்கள் இட்டுக் கொண்டு மஞ்சள் குங்குமம் தட்டில் கரைத்து ஆரத்தி எடுத்து வாசலில் ஓரமாகக் கொட்ட வேண்டும். ஸ்ரீசக்கரத்தை வழிபடுபவருக்கு தீமைகள் அகன்று சுகயோகங்களே சேர்ந்திடும்.                           
“ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானி ஸ்துதிமஹோ; ந ச்ச ஆவாஹனம் த்யானம் ததபி ச்ச ந ஜானே ஸ்துதி-கதா: |

ந ஜானே முத்ரிஸ்தே ததபி ச்ச ந ஜானே விலபனம்; பரம் ஜானே மாதாஸ்தவதனுசரணம் க்லேஷஹரணம்” ||

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை

|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||

|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||

”ஸ்ரீ சக்கரம்”

இனிய காலை வணக்கம், சீர்மிகு வாழ்வு சிறப்புடனும் செழிப்புடனும் அமையவே!

படித்தவர் பகிரவும், முடிந்தவர் முயற்சிக்கவும்!

ஸ்ரீ சக்கரம்

ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி

சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி

சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி

மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி

சர்வாபீஷ்டம் சாதய சாதய ஆபத்தோ நாசய நாசய

சம்பதோப்ராபய ப்ராபய சஹகுடும்பம் வர்தய வர்தய

அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு

பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நம:

பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நம:

பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நம:

இந்த மந்திரத்தை சித்தி செய்தவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. மேலும் இந்த தேவியால் சர்வ சுப காரியங்களும் சித்தியாகும். செல்வம் பெருகும். உடலில் உள்ள நோய்களெல்லாம் விலகி விடும்.


அகத்தியர் வாக்கு - இயல்பாகவே ஜாதகத்தில் ஆழி(கடல்) தாண்ட வேண்டும் என்ற நிலை இருக்கும் மனிதர்களுக்கு சிறிய முயற்சியினால் வெற்றி வந்து விடுகிறது

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 271*

*தேதி: 31-10-2019 (வியாழன் - தேவகுரு, பிரகஸ்பதி, அந்தணன்)*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*வையாபிகனின் குரு* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : அயல்நாடு(செல்லும்) ஆசை நிறைவேற வேண்டும் :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*கேது பகவானை வணங்கலாம். நவக்ரக வழிபாட்டை செய்யலாம். கருடாழ்வாரை வணங்கலாம். அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்கலாம். இஃதாெப்ப இயல்பாகவே ஜாதகத்தில் ஆழி(கடல்) தாண்ட வேண்டும் என்ற நிலை இருக்கும் மனிதர்களுக்கு சிறிய முயற்சியினால் வெற்றி வந்து விடுகிறது. இல்லையென்றால் சற்று அதிகமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. இப்படிதான் வேண்டும் என்பதை விட, "இறைவா! கடல் தாண்டி செல்ல வேண்டும். அஃதாெப்ப தேசம் பார்க்க வேண்டும். அங்கும் சென்று பாெருள் ஈட்ட வேண்டும் என்கிற ஆவல் இருக்கிறது. இது எனக்கு ஏற்றதென்றால் நிறைவேற்றித் தா. இதனால் நன்மையை விட தீமை அதிகம் விளையும் என்றால் நீயே தடுத்து விடு" என்று இறையிடமே இந்த பிரச்சனையை ஒப்படைத்து பிராத்தனை செய்வதே ஏற்புடையது.*

*கேள்வி : ஜேஷ்டாதேவியைப் பற்றி முழுமையாக சாெல்லுங்கள் :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இறைவனின் கருணையால் யாங்கள்(சித்தர்கள்) அடிக்கடி கூறுவது பாேல பரம்பாெருளின் வெவ்வேறு வடிவங்கள் விதவிதமான தெய்வ நாமத்தில் விளங்கி மனிதர்களின் தேவைக்கு ஏற்ப அருளைத் தருகிறது. ஒரே மனிதன் தந்தையாக, சகாேதரனாக, கணவனாக, அலுவலகத்தில் அதிகாரியாக எப்படியெல்லாம் உருமாற்றம் அடைகிறானாே, அப்படிதான் பரம்பாெருள் விதவிதமான வடிவங்களில் மனிதர்களுக்கு அருளை வாரி வழங்குகிறது. இஃதாெப்ப நிலையிலே துயில்(தூக்கம்) தாெடர்பான பிரச்சனைகள், அமைதியற்ற மனம் காெண்டவர்கள் நல்ல முறையிலே வழிபட வேண்டிய தெய்வ வடிவம் இன்னவன் வினவிய(கேள்வி கேட்டவர்) தேவியின் வடிவமாகும். இந்த அளவிற்கு இதனைப் புரிந்து காெண்டு இந்த வழிபாட்டில் கவனம் செலுத்தினால் நன்மையைத் தரும்.*

                🙏 *-சுபம்-*  🙏 

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************


அகத்தியர் திருப்புகழ் பாடல்


காப்பு

மாதவன் மறையவன் காணா சோதியே
ஆதவன் ஆயிரம் ஈடில்லா சோதியே
மாதவன் அகத்தியன் வன்புகழ் பாடிட
வேதியன்  நின் அடி காப்பு

அகத்தியர் திருப்புகழ் பாடல்

கன்னாரமுத கடலே போற்றி
எண்ணாதவர்க்கும் துணைவா போற்றி
கன்னாரமுத கடலே போற்றி
எண்ணாதவர்க்கும் துணைவா போற்றி

அகத்தீசாய வாழ்க ஆசான் தாள் வாழ்க
இமைப்பொழுதும்  என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
ஈசன் தன் நிகர் நின்ற குரு முனிவன் தாள் வாழ்க
உன்னத தவ ஞான உத்தமன் தாள் வாழ்க
ஓம் நிலை தாண்டி உயர்ந்தவன் தாள் வாழ்க

கன்னாரமுத கடலே போற்றி
எண்ணாதவர்க்கும் துணைவா போற்றி

எண்ணங்கள் தாண்டி நிலைத்தவன் அடி வாழ்க
ஏகம் பரம் என்று நிறைந்து இருந்தோன் வாழ்க
ஐம்புலன் தாண்டி அகம் நிறைந்தோன் வாழ்க
ஒப்புயர்வு இல்லா உதித்தவன் அடி  வெல்க
ஓங்காரமாகி ஒளிர்பவன் கழல் வெல்க

ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி
ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி


அவ்வியம் அறு போற்றி
கன்மம் அறு போற்றி
காமம் அறு போற்றி
கிட்டார் அறு போற்றி

கீழ்நிலை மாற்றும் ஈழகன் அடி  போற்றி
கேடு நீக்கி  நிற்கும் சித்தன் அடி போற்றி
கேடில் தவத்தோன் நம் அத்தன் அடி போற்றி
குன்றாத இன்பம் அருளும் குரு போற்றி

அகத்தியம் எனும் அருளே போற்றி
அகத்தினில் உறையும் நாயக போற்றி
அகத்தியம் எனும் அருளே போற்றி
அகத்தினில் உறையும் நாயக போற்றி

குருபரன் என் சிந்தையுள் நின்ற அதனால்
கூரருளாளன் அவன் தாள் வணங்கி
கைமாறு அறியோன் குரு புராணம் தன்னை
கொடுமை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்

கோதில்லான் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி
கௌரி நந்தனனை குருவாய் அடைந்தோங்கி
சத்தியத்திற்க்கோர் வடிவாய் நின்றாய் விளங்கொளியாய்
சாற்றுதற்கு இயலாத சற்குரு பெரும் சீர்
சிவனார் கொழுந்தே புகழுமாறு ஒன்றறியேன்

ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்

சீவனுள் சிவனாகி சித்தம் நிறைவாகி
சுற்றம் பலம் எல்லாம் சிற்றம்பலம் ஆகி
சூழ்முனை ஏறி சுருதி நல் கூடி
செய் செயலுமான பொய்யிலா தத்துவனை
சேனாபதியோன் நல்கிய நற்றமிழின்
சொல்லாய் நிறைந்தான் குறுமுனிவன் எம்பெருமான்

பொதிகை மேவிய ஜோதியே போற்றி
விதியை மாற்றிடும் வித்தக போற்றி
பொதிகை மேவிய ஜோதியே போற்றி
விதியை மாற்றிடும் வித்தக போற்றி

சோராது சொல்லாது கண்டு இன்று வீடுற்றேன்
சோதியாய் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்று
தவமாய் சிவமாய் உள்ளமர்ந்த உத்தமனே
தாயாய் இருந்தென்றும் பேணுகின்ற பேரொளியே

கன்னாரமுத கடலே போற்றி
எண்ணாதவர்க்கும் துணைவா போற்றி
கன்னாரமுத கடலே போற்றி
எண்ணாதவர்க்கும் துணைவா போற்றி

திடமாய் திறனாய் உரித்தானவா விமலா
தீராத இப்பிறவி பிணி தாண்ட வந்தருளி
மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
துய்ஞ்ஞானம் இல்லாதே இன்ப பெருமானே
துர்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
அகல்விக்கும் நல்லறிவே

ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்

தூலம் அளவு இறுதி இல்லாய்
தெரிவதெல்லாம் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய்
தெருள் தருவாய் போக்குவாய் என்னை
தேற்றுவாய் நின் தொழும் பின்
தொட்டனைத்தூறும் ஓர் நீராய் நணியானே
தோற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
நின்ற மறையோனே ..........

ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்

தோற்றம் பல நீக்கி தொல்வினைகள் போக்கி
படர்ந்து அடியார் சிந்தனையில் தேனூறி நின்று
பகுத்து மலம் அறுக்கும் எங்கள் பெருமான்
பாதங்கள் ஓர் பேர் துணையாய் சான்றோர்கள் ஏத்த
பரந்திருந்தாய் எம்பெருமான்
பரந்திருந்தாய் எம்பெருமான் ......

ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி
ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி

பாழ்வினையேன் தன்னை மறைத்திட மூடிய மாய இருளை
வினை பாவமெல்லாம் கலைந்தருளும் தந்து
பிறப்பால் ஒன்றி நின்ற மும்மலங்கள் நீக்கி
பீசமெனும் ஒன்பது வாயில் குடில்
புலன்கள் எனும் கள்வர் வஞ்சனையை போக்கி
புரங்கள் அறுக்கும் விமலா
எனக்கு ....புருவ நடுவாகி புரிந்த பொருளாகி
புறந்தான் இல்லாத அகமாய் காண் என்று
புவியுள் வந்ததென்தன் சூக்குமம் தான் காட்டி
பூவுள் மலராய் கிடந்த அடியேற்கு
பூத்தல் அளித்த தயாவான தத்துவனே

அகத்தியம் எனும் அருளே போற்றி
அகத்தினுள் உறையும் நாயக போற்றி
அகத்தியம் எனும் அருளே போற்றி
அகத்தினுள் உறையும் நாயக போற்றி

பைந்தமிழ் தன்னை பனித்த மலர்ச்சுடரே
பொதிகையின் மாமுனியே குருமுனியே
போற்றுவார் தம்மை பாலித்து நிற்கும் ஆரியனே
போதமருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட
போக்காக நின்ற பெருங்கருணை பேராறே

ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்

நற்றோர் துணையை அளவிலா பெம்மானே
நாற்றாள் விக்ஞானம் அளிக்கும் ஒளியானே
நிரலால் அடைந்திடும் உள்ளொளியாய் நின்றானே
நீக்கறு கதியாய் நின்றானே உள்ளானே 

ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி
ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி

நுட்பருக்கு நுட்பனே யாவையுமாய் அல்லையுமாம் 
நுட் பொருளே நுண்ணறிவே தோன்றா பெருமையனே
நெக்குருகி நின்ற அடியார்கள் தமை ஈர்த்து
நேயமுடன் ஆட்கொண்ட எந்தை பெருமானே
மெய்கல்வி ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே

பொதிகை மேவிய சோதியே போற்றி
விதியை மாற்றிடும் வித்தக போற்றி
பொதிகை மேவிய சோதியே போற்றி
விதியை மாற்றிடும் வித்தக போற்றி

மரணம் இல்லா பேற்றை தரும் புண்ணியனே
மார்க்கம்  சீரடியே காண்பரிய பேரொளியே
மிகுதி இன்ப வெள்ளமே ஊற்றாய் உள்ளாய் நின்று
நீளத்தளைகள் இல்லா வற்றாத மெய்யுணர்வாய்
முற்றுரா வையகத்தில் மும்மாயயை வந்தழிப்பாய்
முத்தனே முதுபொருளே என் சிந்தனையுள்
மூன்றான முத்தே எந்தன் உடையானே

ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி
ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி

மோன விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
வல்லோய் எம் அய்யா , குருவே என்றென்று
வாசியறிந்துணர்ந்து பொய் கேட்டு மெய் ஆனார்
விடுதி கண்டு வந்து வினைப்பிறவி சாராமே
மீள்வு புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
வெஞ்சமனை வெல்ல வகையான நாதனே

கன்னாரமுத கடலே போற்றி
எண்ணாதவர்க்கும் துணைவா போற்றி
கன்னாரமுத கடலே போற்றி
எண்ணாதவர்க்கும் துணைவா போற்றி

வேள்வியில் பூத்தனே வெண்ணீறு பூண்டோனே
வேகு ம் பிறவி அறுப்பானே வென்று
வேலன் தன் அடியானை சொல்லி திருவடிக்கீழ்
வேண்டிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
வேண்டில் தென்பொதிகை உள்ளார்
குருவடிக்கீழ் வையத்துள் தம்மை அறிந்து

ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி
ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி
ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி
ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி
கன்னாரமுத கடலே போற்றி
எண்ணாதவர்க்கும் துணைவா போற்றி
கன்னாரமுத கடலே போற்றி
எண்ணாதவர்க்கும் துணைவா போற்றி

https://youtu.be/-BG-E12XGXI