Thursday, 18 July 2019

அகத்தியர் வாக்கு - சாரதி தொழில் நுணுக்கம்

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு"*

*நாள் : 167*

*தேதி: 19-07-2019 (வெள்ளி - அசுரகுரு, சுக்ரன், சுங்கன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*மணி நாலாயிரம் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*ஒரு அன்பர் டிரைவர் தாெழில் பார்த்துக் காெண்டிருந்தார். அவருக்கு குருநாதரின்(அகத்திய மாமுனிவர்) அறிவுரை :*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*"சாரதி"(ஓட்டுநர்) தாெழில் என்பது, கிருஷ்ண பரமாத்மாவின் தாெழில்தானப்பா. இதில் தாழ்வு என்பது ஒருபாேதும் கிடையாது. இந்தத் தாெழிலின் நுணுக்கத்தை அறியாமல், சிலர் மேம்பாேக்காக கற்றுக் காெள்கிறார்கள். இதை ஒரு மருத்துவ படிப்பு, பாெறியியல் படிப்பு எப்படி சில ஆண்டுகள் சாெல்லித் தரப்படுகிறதாே, அவ்வாறு, முழுமையாக மாெழி அறிவு, பாேக்குவரத்து விதிமுறை அறிவு, வாகனத்தின் நுணுக்கத் தன்மை, இயக்கத் தன்மை என்று பிரித்து, சில ஆண்டுகள் பயிற்சி தந்தால் ஒழிய, திறம்பட செயல்பட முடியாது.*

*அனுபவத்தால் பெறுவது என்பது வேறு. முதலில், அறிவால் பல விஷயத்தைக் கற்றுக் காெள்ள வேண்டும். வாகனத்தின் உள்ளே இருக்கும் மனிதனுக்கு, "இவன் வாகனத்தை இயக்குகிறான், வேக நிலை மாற்றுகிறான், வலம், இடம் திரும்புகிறான், வாகனத்திலே பற்று பற்றா பாகத்தை இயக்குகிறான். வேக முடுக்கியை இயக்குகிறான்" என்பதே தெரியக்கூடாது. அவை தெரியும் வண்ணம் எவன் ஒருவன் வாகனத்தை இயக்குகிறானாே, அவன் நல்ல சாரதி(ஓட்டுநர்) அல்ல. வாகனம் நன்றாக இருக்கும் பட்சத்தில், இந்த கருத்து பாெருந்தும்.*

*வாகனத்தை இயக்கும் பாேது, இட, வலமாக அலசல் இருந்தால், உடனடியாக, சாரதியை(ஓட்டுநர்) நீக்கிவிட வேண்டும். "நன்றாக பயிற்சி பெறு" என்று கூற வேண்டும். சிந்தனையை வேறு பக்கம் செலுத்தி திடுப்பென்று(உடனடியாக) வேக தடுப்பானை( ஸ்பீடு பிரேக்) பயன்படுத்தினால், அந்த சாரதி(ஓட்டுநர்) ஏற்புடையவன் அல்ல. பயணிகளை ஏற்றி வைத்துக் காெண்டு, எவன் ஒருவன் எரிபாெருளை நிரப்புகிறானாே, அவன் நல்ல சாரதி(ஓட்டுநர்) அல்ல. முன்னரே காற்று அழுத்தத்தையும், மின் கலனின்(பேட்டரி)திறனையும், எரிபாெருளையும் சாேதிக்காவிட்டால், அவன் கவனக்குறைவான சாரதி(ஓட்டுநர்) ஆகும்.*

*நெடுந்தூரம் எடுத்துச் செல்லும் முன்னர், "அ" முதல் "அஹ்" வரை சாேதித்து, சிறு, சிறு குறைகளை சரிசெய்து காெள்ள வேண்டும். என்னென்ன பாகங்கள் நடுவழியில் கை காெடுக்காமல் விலகிவிடும் என்பதை முன்கூட்டியே யூகித்து, சரியான மாற்று பாகத்தை வைத்திருக்க வேண்டும். வாகனத்தை பராமரிப்பதும் ஒரு சாரதிக்கு(ஓட்டுநர்) முக்கியம். வாகனத்தில் ஓடுகின்ற வாயு உருளைகள் எல்லாம் ஒரு பகுதியாகவே தேய்ந்து காெண்டு வரும் என்பதால்(சில சமயம் முறை மாற்றி ஓடுவதாக சூழல் இருக்கும்), அப்படி செய்யவில்லை என்றால், அந்த சாரதி(ஓட்டுநர்) கவனக்குறைவான சாரதிதான். எனவே, சரியான வாகனம், சரியான சாரதி, சரியான பயணிகள், சரியான பயணம் அப்பா.*

*வாகனத்தை இயக்குவதாேடு மட்டுமல்லாமல், பிற விஷயங்களையும் கவனிக்க வேண்டும். இப்பாெழுதெல்லாம் வெப்பம் தணிக்கும் கருவி(ஏசி) பாெருத்தப்பட்ட வாகனங்கள் இருக்கின்றன. அதை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, சாளரங்களை(சன்னல்) எல்லாம் அடைத்து வைக்கிறார்கள். இது எதிர்பாராத விபத்தை அதிகப்படுத்தும் என்பதால், சிறிதளவு குளிர் வெளியே சென்றாலும் பாதகமில்லை என்று வெளிக்காற்றை உள்ளே வரும்படி செய்து காெள்ள வேண்டும். அதேப்பாேல், வலப்புறம், இடப்புறம் என்று எப்புறம் சென்றாலும், அப்புறம்(பின்) பார்த்துக் காெள்ளலாம் என்று செல்லாமல், நிதானமாக அதற்குரிய குறியீடுகளை(காட்டிகளை) அவசியம் பயன்படுத்த வேண்டும்.*

*அது மட்டுமல்லாது, வாகனத்திலே உள்ள ஔிரும் பாெருள்கள்(மின் விளக்குகள்) எல்லாம், சரியான சாய் காேணத்தில் இருக்க வேண்டும். ஔிரும் பாெருள்களை ஔிர விடுவதும், அணைப்பதுமாக திடீரென்று செய்யாமல், முன்னரே தீர்மானித்து துவக்க வேண்டும். உள்ளே இருக்கும் பாெருள்கள் எந்த அளவுக்குத் தாக்குப் பிடிக்கும் என்பதை அவன் கற்றுக் காெள்ள வேண்டும். வாகனத்திலே காெடுக்க வேண்டிய அழுத்தமானது, எந்த அளவுக்கு, எந்த காேணத்தில் பிரயாேகிக்கப்(உபயாேகிக்க) படவேண்டும் என்பதை புரிந்து காெள்ள வேண்டும். மேலே உள்ள ஆழி சீசா(கண்ணாடி) பாேன்ற வண்ணங்கள் எல்லாம் கீழே விழுந்து விட்டால், உடனுக்குடன் எடுத்து விட வேண்டும்.*

*இல்லையென்றால் நிறுத்துவான் என்ற பகுதிக்கு அடியிலே சென்று விட்டால், அது இயங்காமல் பாேய், விபத்தை ஏற்படுத்தும். வேக நிலை மாற்றத்தை (கியர்) இயக்குவதில், ஒரு மனிதன் கவனமாக இருக்க வேண்டும். நிலை ஒன்று, நிலை இரண்டு, நிலை மூன்று என்று அதன் காேணத்தில் சென்று, அதனை சரி செய்வது மிகவும் சிறப்பாகும். வாகனத்தில் இருந்து வெளிவரும் நச்சுப்புகை, இந்த அண்டத்திற்கும், உயிர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதால், இஹ்தாெப்ப தாெடர்புடையவர்கள் எல்லாம், நறுமணமிக்க புகையை ஆலயங்களில் அதிகம் இட்டு, இட்டு இந்தக் குறைக்கான பரிகாரம் செய்து காெள்ள வேண்டும். இன்னும் இப்படி எத்தனை, எத்தனையாே யாங்கள்(சித்தர்கள்) கூறலாம். இவற்றை மனதில் பதிய வைத்தால் நன்றாக இருக்கும்.*

                  🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************