Wednesday 29 May 2019

அகத்தியர் வாக்கு - கேள்வி பதில் - ஏகன், அனேகன் ஆன நிலை

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 76*

*தேதி: 29-05-2019(புதன் - கணக்கன்)*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*சுதேவனுடைய பிணம் தின்னும் சாபத்தை பாேக்கியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : அனைத்து பிரச்சனைகளுக்கும் கர்மாதான் காரணமாகிறது. இது மாயையால் மனிதனை பற்றுகிறது. அவதாரங்களாகவே இருந்தாலும் அவர்களையும் மாயை பற்றுகிறது என்று முன்னர் கூறியிருந்தீர்கள். மாயைதான் உயிர்களை பற்றுகிறது. அப்படி செய்வது இறைவன்தானே? இதற்கு பாெறுப்பு இறைவன்தானே? பிறகு ஏன் மக்களை தாக்க வேண்டும்?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இறைவன் அருளாலே நல்லதாெரு வினாவை இவன் எழுப்பியிருக்கிறான்.* எனவே அனைத்து பாவங்களும் இறைவனுக்கு சேர்ந்துவிடும் என்பதால் சேய்கள் அனைவரும் இனி பாவங்களை துணிந்து செய்யலாம். *இருந்தாலும் சிந்திக்க வேண்டிய வினாவைதான் இவன் எழுப்பியிருக்கிறான்.*

நன்றாக கவனிக்க வேண்டும். *மாயை மனிதர்களை பற்றுகிறது. ஏன்? ஒரு மனிதனிடம் நிலம் இருக்கிறது. அதிலே முறையாக விவசாயம் செய்கிறான். பயிர் விளைகிறது. சிலருக்கு பயிரைவிட களை அதிகம் விளைகிறது. 'இந்த நிலம் இருப்பதால்தானே நான் விவசாயம் செய்தேன். விவசாயம் செய்ததால்தானே களை வந்தது' என்று அவன் அலுத்துக் காெள்ளலாமா?*

நன்றாக கவனிக்க வேண்டும். *மாயை சென்று எல்லாேரையும் பற்றும் வண்ணம் அந்த உயிர்களின் கர்மவினை இருக்கிறது.* உயிர்களை இறைவன் ஏன் படைத்தான்? படைத்ததால்தானே உயிர்கள் எல்லாம் பாவங்கள் செய்தது என்ற அடுத்ததாெரு வினாவை ஏற்கனவே இவன் கேட்டிருக்கிறான். *அதாவது ஏகன்,  ஏகனாக இருந்துவிட்டால் பிறகு பிரச்சனையே இல்லையே?* ஏகன் எதற்கு அநேகனாக மாறினான்? என்று இவன் கேட்கிறான்.

*ஏகன், அநேகனாக மாறுவதற்கு முன்னால் அந்த ஏகனைப் பார்த்து யாராவது ஒருவர் 'நீ இப்படியே இரு. பல் கூறுகளாக பிரியாதே' என்று கூறியிருக்கலாம்.* ஆனால் அங்குதான் அப்படி கூறுவதற்கு யாருமில்லையே? *அப்படி யாராவது கூற வேண்டும் என்பதற்காகவாவது ஏகன், அநேகன் ஆகியிருக்கலாம் அல்லவா?.*

எனவே *'என்னை எதற்காக படைத்தாய்? படைத்ததால்தான் பாவங்கள் செய்தேன்'* என்று கூறுவதைவிட *'நான் பாவங்கள் செய்யாமல் இருக்கும் வண்ணம் என் மன நிலையை அமைத்துக்காெடு'* என்று பிராத்தனை செய்வது சிறப்பு அப்பா.

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************

அகத்தியர் வாக்கு, ஆன்மீக கேள்வி பதில்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*கேள்வி : பாவங்கள் ஒரு மனிதனை ஆன்மீக வழியில் செல்லவிடாது எனும்பாெழுது அது எப்படி மனித குற்றமாகும்?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இறைவன் அருளால் பாவத்தை குறைத்துக்காெள்ள மனிதன் என்றாவது ஒரு சிறு முயற்சி எடுத்திருக்கிறானா?* என்றுதான் நாங்கள் பார்க்கிறாேம். *கட்டாயம், பாவங்கள் இருக்கும்வரை இறை சிந்தனையாே, பெருந்தன்மையாே, தர்ம சிந்தனையாே வராது என்பது உண்மை.*

*அதனால்தான் முதலில் எஃதாவது ஒரு ஆலயம் செல்லப் பழக வேண்டும். பிறகு அன்றாடம் சில நாழிகையாவது இறை நாமத்தை மனம் சாேர்ந்தாலும், தளர்ந்தாலும் பாதகமில்லை என்று உருவேற்ற வேண்டும்.* எல்லாம் கடினம் என்று எண்ணினால், *தனம் இருப்பவர்கள் முதலில் 'இந்த தனம் நமக்கு உரியதல்ல, என்றாே நாம் செய்த(நல்) வினைகளுக்காக இறைவன் தந்திருக்கிறார். நமக்கும், நம் குடும்பத்திற்கும் பாேக எஞ்சியுள்ள தனம் அனைத்தையும் பிறருக்காக தந்துவிட்டால் நல்லது' என்ற சிந்தனையை அசைபாேடவேண்டும்.*

அதனால்தான் மனம் என்பது பாவத்தை நாேக்கி செல்லாமல் இருக்கும். *பாவங்கள் இருக்கிறது. எவ்வாறு தர்மம் செய்வது? அந்த பாவங்கள்தானே மனிதனை மேல்நாேக்கி செல்லவிடாமல் தடைபாேடுகிறது என்ற சிந்தனை வரும்பாெழுதே, அந்த பாவங்களை நீக்கிக் காெள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் வந்துவிட வேண்டும்.*

*உடல் ஊனம், நான் எப்படி வாழ்வேன்? என்பதைவிட இந்த உடல் ஊனத்தாேடு என்ன முடியுமாே, அதை செய்வேன் என்பதுதான் மனஉறுதி.* எனவே யாம் மீண்டும், மீண்டும் கூறுவது என்னவென்றால் *வறுமை தண்டனையல்ல. வித்தை கற்காமை தண்டனையல்ல. பிணி தண்டனையல்ல. அறியாமை ஒன்றுதான் தண்டனை.*

*விதி மனிதனிடம் விளையாடுவது அறியாமையை வைத்துதான்.*

*அறியாமை என்றால் என்ன?*

*ஆசை, பற்று, தனக்கு வேண்டும், தன் குடும்பத்திற்கு வேண்டும், தன் வாரிசுக்கு வேண்டும், தனக்குப் பின்னால் தன் பிள்ளைகள் சந்தாேஷமாக இருக்க வேண்டும், எனவே எப்படியாவது முடிந்தவரை தனத்தை சேர்க்க வேண்டும் என்று எண்ணுகிறானே ? இதை முதலில் மனதைவிட்டு அகற்றினாலே பாவங்கள் அகன்றுவிடும்.* எனவேதான் மீண்டும், மீண்டும் இந்த ஜீவ அருள் ஓலையிலே பரம்பாெருள் கூறுகின்ற தர்ம விளக்கத்தைக் கூறிக்காெண்டே இருக்கிறாேம். சாேதித்துக்கூட பார்க்கலாம். *பாவம் இருக்கிறது. என்னால் ஆலயம் செல்லமுடியவில்லை, பிராத்தனை செய்ய முடியவில்லை. குடும்பத்தில் கஷ்டம் இருக்கிறது. அடுத்தடுத்து நஷ்டம் வருகிறது. பாேராட்டமாக இருக்கிறது. பாேர்க்களமாக இருக்கிறது. ஒன்று பாேனால் ஒன்று கஷ்டம் வருகிறது. இதில் எப்படி நான் தர்மத்தை செய்ய முடியும்?*

*முதலில் நான் பட்ட ருணத்தையெல்லாம் அடைக்க வேண்டும். நான் படும் கஷ்டங்களிலிருந்து வெளியே வரவேண்டும். நான் நிம்மதியாகவும், சந்தாேஷமாகவும் இருந்தால்தானே எதனையும் செய்ய முடியும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு அந்த நிம்மதியும், சந்தாேஷமும் கிடைப்பதற்காக முதலில் எப்படி அன்றாடம் உலகியல் கடமைகளை மனிதன் ஆற்றுகிறானாே அதைப்பாேல அவனவனால் முடிந்த உதவியை அன்னத்தை, ஆடையை, தனத்தை, மருத்துவ உதவியை தேடி, தேடி, தேடி, தேடி, தேடி, தேடி, தேடிச் சென்று தர, தர பாவங்கள் குறைந்துகாெண்டே வரும்.*

*பாவங்கள் குறைந்தாலே மனம் அறியாமையிலிருந்து விடுபட்டுவிடும்.* எனவேதான் *கடுமையான பூஜைகளையும், தவங்களையும் நாங்கள் கூறாமல் இந்த எளிய வழிமுறைகளைக் கூறுகிறாேம். வாய்ப்புள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் காெள்ளலாம்.*

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************

Monday 27 May 2019

அகத்திய மகரிஷி அகமகிழ்தருளிய முருகர் பாடல்

அகத்திய முனிவர் அருளிய இந்தப் பாடல்கள் மிகவும் சந்த நயத்துடன் கூடியது.

ஷண்முக நாயகன் தோன்றிடுவான் -சிவ
ஸத்குரு நாயகன் தோன்றிடுவான்
கண்களினால் கண்டு போற்றிடலாம்-கொடும்
காலத்தைக் காலனை மாற்றிடலாம் (ஷண்முக) (1)

ஆனந்த மாமலர்ச் சோலையிலே-மன
ஆட்டம் அடங்கிய வேளையிலே
ஞானம் தரும் தென்றல் காற்றினிலே-எழும்
நாம சங்கீர்த்தன ஊற்றினிலே (ஷண்முக) (2)

பக்குவமாம் தினைக் காட்டினிலே- அவன்
பக்தர் நுழைந்திடும் வீட்டினிலே
மிக்குயர்வாம் மலைக் கோட்டினிலே -அருள்
மேவும் அகத்தியன் பாட்டினிலே (ஷண்முக)(3)

தொண்டர் திரண்டெழும் கூட்டத்திலே-அவர்
சுற்றிச் சுழன்றிடும் ஆட்டத்திலே
அண்டர் தினம் தொழும் வானத்திலே-தவ
ஆன்ம சுகம் பெரும் மோனத்திலே (ஷண்முக)(4)

ஏழைக்கிரங்கிடும் சித்தத்திலே-பொருள்
ஈந்து மகிழ்ந்தவர் அத்தத்திலே
ஊழைக் கடப்பவர் பக்தியிலே-தெய்வ
உண்மையைக் காண்பவர் சக்தியிலே (ஷண்முக)(5)

வேதாந்த தத்துவ ஸாரத்திலே-அலை
வீசும் செந்தூர்க் கடல் தீரத்திலே
ஆதார குண்டலி யோகத்திலே-பர
மாத்ம ஜீவாத்ம வைபோகத்திலே (ஷண்முக)(6)

அன்பர்க்கு இயற்றிடும் சேவையிலே-உயர்
அர்ச்சனையாய் மலர் தூவையிலே
இன்பப் பெரும்புனல் வீழ்ச்சியிலே-காணும்
யாவும் ஒன்றென்றுணர் காட்சியிலே (ஷண்முக)(7)

நண்ணும் இயற்கை அமைப்பினிலே-ஒளி
நட்சத்திரங்கள் இமைப்பினிலே
விண்ணில் விரிந்துள நீலத்திலே-மயில்
மேல்வரும் ஆனந்தக் கோலத்திலே (ஷண்முக)(8)

தேகவிசாரம் மறக்கையிலே-சிவ
ஜீவவிசாரம் பிறக்கையிலே
ஆகும் அருட்பணி செய்கையிலே_கங்கை
ஆறு கலந்திடும் பொய்கையிலே- (ஷண்முக)(9)

மானாபிமானம் விடுக்கையிலே- தீப
மங்கள ஜோதி எடுக்கையிலே
ஞானானுபூதி உதிக்கையிலே-குரு
நாதனை நாடித் துதிக்கையிலே (ஷண்முக)(10)

ஆடிவரும் நல்ல நாகத்திலே-அருள்
ஆறெழுத்தின் ஜெபவேகத்திலே
கோடிவரம் தரும் கோயிலிலே-தன்னைக்
கூப்பிடுவார் மனை வாயிலிலே (ஷண்முக)(11)

ஸித்தரின் ஞான விவேகத்திலே- பக்தர்
செய்திடும் தேனபிஷேகத்திலே
உத்தமமான விபூதியிலே-அதன்
உட்பொருளாம் சிவ ஜோதியிலே (ஷண்முக)(12)

அன்னைமடித்தலப் பிள்ளையவன்
சச்சிதானந்த நாட்டினுக் கெல்லையவன்
பண்ணும் ஏகாக்ஷர போதனவன்-மலர்ப்
பாதனவன் குருநாதனவன் (ஷண்முக)(13)

செல்வமெல்லாம்தரும் செல்வனவன் -அன்பர்
சிந்தைகவர்ந்திடும் கள்வனவன்
வெல்லும்செஞ்சேவல் பதாகை உயர்த்திய
வீரனவன் அலங்காரனவன் (ஷண்முக)(14)

சேர்ந்தவருக்கென்றும் சகாயனவன் -இன்பத்
தூயனவன் அன்பர் நேயனவன்
சேர்ந்தவரைத் துறந்தாண்டியுமாய் நின்ற
சீலனவன் வள்ளி லோலனவன் (ஷண்முக)(15)

அஞ்சுமுகத்தின் அருட்சுடரால்-வந்த
ஆறுமுகப் பெருமானுமவன்
விஞ்சிடும் அஞ்செழுத்தாறெழுத்தாய்-வந்த
விந்தைகொள் ஞானக்குழந்தையவன் (ஷண்முக)(16)

முத்தொழிலாற்றும் முதற்பொருளாம்--ஆதி
மூல சதாசிவ மூர்த்தியவன்
இத்தனி உண்மை மறந்தவனைச் -சிறை
இட்டவனாம் பின்னர் விட்டவனாம் (ஷண்முக)(17)

வள்ளி தெய்வானை மணாளனவன் -மண
மாலைகொள் ஆறிருதோளனவன்
அள்ளி அணைப்பவர் சொந்தமவன் - புகழ்
ஆகம நான்மறை அந்தமவன் (ஷண்முக)(18)

கோலமுடன் காலை மாலையிலும்-இரு
கோளங்கள் வானில் வரப்புரிவான்
ஓலையில் ஆணியை நாட்டுமுன்னே-எந்தன்
உள்ளத்திலே கவி ஊட்டிடுவான் (ஷண்முக)(19)

பேர்களெல்லாம் அவர் பேர்களன்றோ -சொல்லும்
பேதமெல்லாம் வெறும் வாதமன்றோ
சார்வதெல்லாம் அருள் என்றிருந்தால்-வினை
தாண்டிடலாம் உலகாண்டிடலாம் (ஷண்முக)(20)

கும்பமுனிக்கருள் நம்பியன் -அன்பு
கொண்ட கஜானனன் தம்பியவன்
தும்பை அணிந்தவன் கண்டு கண்டின்புறும்
ஜோதியவன் பரம் ஜோதியவன் (ஷண்முக)(21)

இரண்டு கோவில்களின் அதிசய ஒற்றுமைகள்

#இரண்டு கோவில்களின் அதிசய ஒற்றுமைகள்..!

காஞ்சிபுரத்தில் இருக்கும் வைகுண்ட பெருமாள் கோவிலுக்கும், கம்போடியா நாட்டில் உள்ள அங்கோர்வாட் கோவிலுக்கும் கால இடைவெளி 300 ஆண்டுகள்.

வைகுண்ட பெருமாள் கோவில் கட்டப்பட்டு 300 ஆண்டுகளுக்குப் பிறகே அங்கோர் வாட் கோவில் கட்டப்பட்டது.

அந்த இரு கோவில்களுக்கும் இடையே உள்ள ஆகாசவெளி 2,500 கிலோ மீட்டர் தூரம்.

ஆனால் இந்த இரு கோவில்களும் அசாத்தியமான பல ஒற்றுமைகளைத் தாங்கி இருக்கின்றன என்பது வினோதமாக இருக்கிறது.

வைகுண்ட பெருமாள் கோவிலை முன்மாதிரியாகக் கொண்டே அங்கோர்வாட் கோவில் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்று நினைப்பதற்கு அவை இடம் தருகின்றன.

பெரும்பாலான இந்துக்கோவில்கள் கிழக்கு நோக்கியே கட்டப்படும். ஆனால், விதிவிலக்காக காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் மட்டும் மேற்கு திசை நோக்கி அமைக்கப்பட்டு இருக்கிறது.

அதைப் போலவே கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோவிலும் மிக வித்தியாசமாக மேற்கு நோக்கி இருக்கிறது.

இந்துக்கோவில்களின் கோபுரங்கள் பல அடுக்குகளாக இருந்தாலும், சன்னிதி இருக்கும் இடம் தரைத்தளத்திலேயே காணப்படும். பிரமிட் போன்ற அடுக்குகளில் சன்னிதி பெரும்பாலும் அமைக்கப்படுவது இல்லை.

ஆனால், வைகுண்ட பெருமாள் கோவில், மூன்று அடுக்கு களாக பிரமிட் வடிவில் கட்டப்பட்டு ஒவ்வொரு அடுக்கிலும் விஷ்ணு, ஒவ்வொரு கோலத்தில் இருப்பது போல உள்ளது. (காஞ்சிபுரம் அருகே உத்திரமேரூரில் உள்ள சுந்தரவரத பெருமாள் கோவிலும், மதுரை கூடலழகர் கோவிலும் மூன்று அடுக்குகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது).

வைகுண்ட பெருமாள் கோவில் போலவே, அங்கோர்வாட் கோவிலும் மூன்று அடுக்குகளாக பிரமிட் வடிவில் கட்டப்பட்டு இருக்கிறது.

வைகுண்ட பெருமாள் கோவில் என்று இப்போது அழைக்கப்பட்டாலும் இந்தக் கோவில் ‘பரமேசுவர விண்ணகரம்’ என்ற பெயரைக் கொண்டே விளங்கியது. அதாவது, ‘விஷ்ணுவின் நகரம்’ என்று இதைக்கொள்ளலாம்.

அங்கோர்வாட் என்று அழைக்கப்படும் கோவிலின் ஆதி காலப்பெயர் ‘விஷ்ணுலோக்’ என்பதாகும். விஷ்ணுவின் உலகம் என்பதைக் குறிப்பதற்காக இந்தப் பெயர் வைக்கப்பட்டது.

விஷ்ணுவுக்காக அமைக்கப்பட்ட இரு கோவில்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான பெயரைத் தாங்கி இருப்பது நோக்கத்தக்கது.

தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான கோவில்களின் உள் பகுதியில், சன்னிதியைச் சுற்றி அகழி அமைக்கப்படுவது இல்லை.

ஆனால், வைகுண்ட பெருமாள் கோவிலின் சன்னதியை சுற்றிலும் 3 அடி ஆழத்துக்கு அகழி காணப்படுகிறது.

இதைப்போலவே அங்கோர்வாட் கோவிலிலும் சன்னதியை சுற்றி 4 அடி ஆழத்துக்கு அகழி இருப்பதையும் அதற்கு தண்ணீர் வருவதற்கும், வழிந்து செல்வதற்கும் தூம்புகள் அமைக்கப்பட்டு இருப்பதையும் காணமுடிகிறது.

பாற்கடலில் அமிர்தம் எடுப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் சமுத்திரத்தைக் கடைந்தார்கள் என்ற புராண செய்தி, தமிழகத்தில் அதிகம் பேசப்பட்டாலும், அந்தக் காட்சி பெரும்பாலான தமிழகக் கோவில்களில் சிற்பமாக இடம்பெறுவது இல்லை.

அந்தக்காட்சி வைகுண்ட பெருமாள் கோவிலில் சிற்பமாகக் காணப்படுகிறது. அதைப் போலவே அங்கோர் வாட் கோவிலிலும், பாற்கடல் கடையப்படும் காட்சி சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

ஒரு சில தமிழக கோவில்களில் வரலாற்று சம்பவம் கல்வெட்டாக எழுத்தில் காணப்படும். ஆனால் அதற்கான காட்சிகள் சிற்ப வடிவில் இருப்பது இல்லை.

வைகுண்ட பெருமாள் கோவிலில் மட்டுமே, பல்லவ குலத்தின் வரலாறு, சுமார் 160 அடி நீளத்துக்கு சுவரில் தொடர் சிற்பமாக செதுக்கப்பட்டு உள்ளது. அந்தக் கோவிலின் சன்னதியை சுற்றியுள்ள வெளிப்பிரகாரத்தின் 4 பக்க சுவர் முழுவதும் இந்த அழகிய சிற்பத்தொகுதியைப் பார்க்க முடியும்.

இதைப் போலவே அங்கோர்வாட் கோவிலின் பிரகார சுவர் முழுவதும் புடைப்புச் சிற்பங்கள் இருக்கின்றன. அந்த சிற்பத் தொகுதியில், கோவிலைக் கட்டிய மன்னர் சூரிய வர்மன் நடத்திய போர்க்காட்சிகள் வரலாற்று ஆவணமாக செதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பல வகையிலும் வைகுண்ட பெருமாள் கோவிலும், அங்கோர்வாட் கோவிலும் ஒரே மாதிரியான ஒற்றுமைகளைக் கொண்டு இருப்பதால், காஞ்சிபுரத்தில் இருந்து சென்ற ஓர் அந்தணர், வைகுண்டபெருமாள் கோவில் அடிப் படையில் அங்கோர் வாட் கோவிலை அமைக்கலாம் என்று கம்போடிய மன்னர் சூரிய வர்மனுக்கு ஆலோசனை சொல்லி இருக்கலாம் என்றும், அதன்படி அங்கோர்வாட் கோவில் கட்டப்பட்டு இருக்கலாம் என்றும் நினைக்க இடம் இருக்கிறது.

வைகுண்ட பெருமாள் கோவிலையும், அங்கோர்வாட் கோவிலையும் நேரில் பார்வையிட்ட வெளிநாட்டு அறிஞர்கள் பலர், இந்த இரு கோவில்களுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி மேலும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர் அலெக்ஸாண்டர் ரியா (தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வை நடத்தியவர்), அமெரிக்காவில் உள்ள ஸ்மித் பல்கலைக்கழகத்தில் மதத்துறை பேராசிரியராக பணியாற்றிய டென்னிஸ் ஹட்சன் போன்ற பலர், வைகுண்ட பெருமாள் கோவில் சிற்பங்களை ஆய்வு செய்து புத்தகங்கள் எழுதி இருக்கிறார்கள்.

சென்னையைச் சேர்ந்த சி. மீனாட்சி என்பவர், 1936-ம் ஆண்டு வைகுண்ட பெருமாள் கோவில் சிற்பங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து, சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

34 வயதிலேயே மரணம் அடைந்துவிட்ட அவர் வெளியிட்ட அறிக்கை தான், வைகுண்ட பெருமாள் கோவில் சிற்பங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ ஆவணமாகத் திகழ்கிறது.

வைகுண்ட பெருமாள் கோவிலின் சன்னதியைச் சுற்றி, 40 அடி நீளம், 40 அடி அகலம் என்ற அளவில் பிரகாரம் அமைந்துள்ளது.

இந்த பிரகாரத்தின் சுவர் முழுவதும் பல்லவ குல வரலாறு, தொடர் சிற்பங்களாக, இரண்டு அடுக்குகளாக செதுக்கப்பட்டுள்ளன.

கோவிலுக்குள் நுழைந்ததும், இடதுபுறமான மேற்குப்பகுதி சுவரில் இருந்து சிற்பத் தொகுதி தொடங்குகிறது. பல்லவர்கள், பிரம்மாவின் வாரிசு என்பதில் இருந்து சிற்பம் ஆரம்பம் ஆகிறது.

பின்னர் படிப்படியாக ஒவ்வொரு சிற்பத்திலும் பல்லவர் குல வரலாறு பல காட்சிகளாகக் காணப்படுகின்றன. ஒவ்வொரு மன்னருக்கும் நடைபெற்ற முடிசூட்டு விழா காட்சிகளும், முக்கிய வரலாற்று நிகழ்வுகளும் சிலைகளாக செதுக்கப்பட்டு உள்ளன.

மன்னர் 2-ம் நந்திவர்மன், தூர தேசத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு அழைத்து வரப்படுவது, பின்னர் மன்னராக முடி சூட்டிக்கொள்வது ஆகிய காட்சிகள் தெற்குப்புற சுவரை அலங்கரிக்கின்றன.

கம்போடியாவில் இருந்து வந்த 2-ம் நந்திவர்மன், வைகுண்ட பெருமாள் கோவிலைக் கட்டியது வரை உள்ள காட்சிகளுடன் சிற்பத்தொகுதி நிறைவு பெறுகிறது.

இந்த சிற்பங்களின் இறுதித்தொகுப்பில், வைகுண்ட பெருமாள் கோவில் கட்டப்பட்ட காட்சி, மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. கோவிலின் சிறிய மாதிரி வடிவத்துடன், மிக அழகாக அந்தக் காட்சி சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.

வெறும் சிற்பங்கள் மட்டும் அமைக்கப்பட்டால், அது என்ன சிற்பம், அது சொல்லும் தகவல் என்ன என்பது தெரியாமல் எதிர்கால சந்ததியினர் திகைக்க நேரிடும் என்பதால், ஒவ்வொரு சிற்பத்திற்குக் கீழேயும், அது பற்றிய குறிப்பு பல்லவ கிரந்த எழுத்துக்களால் கல்வெட்டாக பதிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால், கால வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, கல்வெட்டின் பல பகுதிகள் அழிந்துவிட்டன. என்ன காரணத்தாலோ கல்வெட்டு முழுமை அடையாமலும் இருக்கிறது. இப்போது இருப்பவற்றில் ஒரு சில வரிகள் மட்டுமே படிக்கும் வகையில் உள்ளன.

வைகுண்ட பெருமாள் கோவிலைக் கட்டிய 2-ம் நந்திவர்மன், கம்போடியாவில் இருந்து அழைத்து வரப்பட்டு காஞ்சிபுரம் மன்னரானவர் என்று கூறப்பட்டாலும் அதை விளக்கும் சரித்திர சான்றுகள் வேறு ஏதும் இல்லை.

பட்டாட்டாள் மங்களம் மற்றும் காசக்குடி ஆகிய இடங்களில் கிடைத்த செப்பேடுகள், 2-ம் நந்திவர்மன் பற்றிய தகவலை ஓரளவு தெரிவித்தாலும், அந்த மன்னர் வேறு தேசத்தில் இருந்து காஞ்சிபுரம் வந்தது எப்படி என்பதைத் தெளிவுபடுத்தவில்லை.

அந்த மன்னரின் வரலாறு வைகுண்ட பெருமாள் கோவிலில் மட்டுமே காணப்படுகிறது.

வைகுண்ட பெருமாள் கோவிலில் உள்ள சிற்பத்தொகுதியில், மன்னர் மகேந்திர வர்மன் மறைவுக்குப் பிறகு, காஞ்சிபுரத்தில் இருந்து சென்ற குழுவினர், வேறு தேசத்தில் உள்ள மன்னர் ஹிரண்ய வர்மனை சந்திப்பது போலவும், அவரிடம் காஞ்சிபுர நிலையை விளக்கிக் கூறுவது போலவும், அதன் பின்னர் ஹிரண்ய வர்மனின் மகன் பல்லவ மல்லாவை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் வருவது போலவும், காஞ்சிபுரத்தில் பல்லவ மல்லாவுக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுப்பது போலவும் பின்னர் அவர், 2-ம் நந்தி வர்மனாக முடி சூட்டிக் கொள்வது போலவும் தொடர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கோவிலின் தெற்குப்புற பிரகார சுவரில் உள்ள அந்த சிற்பங் களுக்கு அடியில் கல்வெட்டாக, அந்த நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்பு வாசகங்கள் காணப்படுகின்றன.

அந்த வாசகத்தில், ‘பல்லவ மல்லா, ஏராளமான மலைகளையும், அடர்ந்த காடுகளையும், நதிகளையும் தாண்டி அழைத்து வரப்பட்டார்’ என்று கூறப்பட்டுள்ளது.

வெகு தொலைவில் உள்ள கம்போடியா நாட்டில் இருந்து அவர் தரை மார்க்கமாக அழைத்து வரப்பட்டதையே இந்த வர்ணனை சுட்டிக்காட்டுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

பல்லவ மல்லா, கம்போடியாவில் இருந்து அழைத்து வரப்பட்டு இருக்கலாம் என்பதற்கு இது ஒன்று தான் ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது.

2-ம் நந்திவர்மன் காலம் மட்டும் அல்லாமல், தமிழகத்தை பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்த காலம் முழுவதும், தமிழகத்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே நல்ல உறவு இருந்தது.

பல்லவர்களுக்குப் பிறகு வந்த சோழர்கள் காலத்திலும் இந்தத் தொடர்பு நீடித்தது.

ஒரு சமயம், ஆட்சிப்பொறுப்பை இழந்த கம்போடியா நாட்டு மன்னருக்காக தமிழகத்தில் இருந்து சென்ற சோழ மன்னரின் படைகள், மிகப்பெரிய போர் நடத்தி அந்த மன்னருக்கு ஆட்சியை மீட்டுக் கொடுத்தனர் என்பதும் வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.

இந்த உதவிக்காக கம்போடியா நாட்டு மன்னர், சோழ மன்னருக்கு பரிசுகள் வழங்கி நன்றி பாராட்டினார்.

தமிழகத்தில் சிதம்பரம் நகரில் சிவனுக்கு பெரிய கோவில் கட்டியபோது அந்தக் கோவில் சுவரில் வைப்பதற்காக கம்போடியாவில் இருந்து அழகிய பெரிய கல் ஒன்றை நினைவுச் சின்னமாக அந்த நாட்டு மன்னர், சிதம்பரம் கோவிலுக்கு அனுப்பி வைத்த அரிய நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

Sunday 26 May 2019

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால், காலகாலம் மனிதர்கள் வாழ்வியல் சிக்கல்களை தீர்க்கும் விதத்திலே எத்தனையோ முயற்சிகள் எடுப்பதில் ஒன்றுதான், தெய்வீக வழியில் தீர்வைக் காண எண்ணுவது. இஃதொப்ப முறையிலே மகான்களை, ஞானிகளை நாடுவதும் அதில் ஒன்றாக, இஃது போன்ற நாடிகளை நாடுவதும் காலகாலம் நடந்துகொண்டே இருக்கக்கூடிய நிகழ்வுதான். ஆனால் இயம்புங்கால், நாடிகளை பார்ப்பது என்பது வேறு. நாடிகளை வாசிக்கக் கேட்பது என்பது வேறு. நாடிகளை முழுமையாக உணர்ந்து கொள்வது என்பது வேறு. நாடிகளை பார்ப்பதும், கேட்பதும் ஒரு மேலெழுந்தவாரியான சிந்தனை. நாடிகளை முழுமையாக ஞானக்கண்ணோட்டத்தோடு உணர்ந்து கொள்ள முயற்சி செய்யாவிட்டால், நாடியில் பலாபலன்கள் பலியாதது போலும், நாடிகள் அனைத்தும் பொய் போலவும் மனிதனுக்குத் தோற்றமளிக்கும். இஃதொப்ப நிலையிலே ஞானிகளும், மகான்களும், மனிதனின் விதியும் இஃதொப்ப அந்த ஞானிகளின் கருணையால், இறைவனின் அருளால் அந்த மனிதனின் விதியில் சேர, இஃதொப்ப நாடிகளின் மூலம் எம்போன்ற மகான்கள்  வாக்கை இறைவனருளால் அருளிக்கொண்டே வருகிறார்கள்.  இஃதொப்ப நிலையிலே நாங்கள் மீண்டும், மீண்டும் கூற வருவது என்னவென்றால் ஒரு மனிதன் இதுவரை எடுத்த பிறவிகளில் சேர்த்த பாவங்களின் மற்றும் புண்ணியங்களின் நிலை. இப்பொழுது நடப்பு பிறவியில் அவன் சிந்தனை, அவன் செயல். இஃதொப்ப ஒரு ஆலயத்தில் இருக்கும்பொழுது மட்டுமாவது ஒருவன் நல்லவனாக இருந்துவிட்டுப் போகட்டுமே! இது போன்ற நாடிகளைக் கேட்கும்பொழுதாவது ஒருவன் நல்லவனாக இருந்துவிட்டுப் போகட்டுமே! என்பது ஒரு மாறாத உண்மையாக இருந்தாலும் எம்மைப் பொருத்தவரை இறைவன் இல்லாத இடம் ஏதுமில்லை. எனவே ஒரு மனிதன் வாழ்க்கை முழுவதும் எல்லா நிலையிலும் பரிபூரணமான நல்லறிவைப் பெறுவதோடு, நல்ல குணத்தை வளர்த்துக் கொண்டிட வேண்டும். ஒரு மனிதன் தனக்கு தேவையான விஷயங்களை அல்லது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தவறான வழியைத் தேர்ந்தெடுப்பதின் காரணமே, அவனுக்கு சரியான வழிமுறையில் வெற்றி கிடைக்கவில்லை என்பதாலும், சரியான வழிமுறையில் சென்றால் வெற்றி கிடைக்க நீண்ட காலம் ஆகிறது, என்பதற்காகவும், அஃது மட்டுமல்லாமல் குறுக்கு வழியிலே சென்றால் விரைவில் வெற்றி பெறலாம், பலரும் அவ்வாறு பெற்றிருக்கிறார்கள் என்பதே காரணம்.  இவையனைத்துமே மனிதன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளக்கூடிய நிலையாகும்
Agni lingam arunachalam
Siththan arul
அகத்தியர்ஞானம்

சுதீட்சணர் அகத்தியரின் சீடர்!

சுதீட்சணர் அகத்தியரின் சீடர்!

சுதீட்சணர் அகத்தியரின் சீடர். அகத்தியர் தந்த சிலையை பாதுகாக்க தவறியதால் அவரிடம் சாபம் பெற்றவர். ஐந்து வயதில் பெற்ற சாபம் ஐம்பது ஆண்டுகள் கடந்துதான் தீர்ந்தது. சுதீட்சணர் என்றால் கூர்மையான புத்தி உடையவர் என பொருள். சிறுவயதில் பெற்றோரை இழந்து விட்ட சுதீட்சணர், அகத்தியரின் சீடரானார். அகத்தியர் அவர்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். சிறு குழந்தை என்பதால் மிகவும் குறும்புத்தனம் செய்வான் சுதீட்சணன். ஆனால் அவனை நல்லமுறையில் வளர்ப்பதற்காக இளம் வயதிலேயே பூஜை, புனஸ்காரங்கள் பற்றி கற்றுக்கொடுத்தார் அகத்தியர். ஒருமுறை அவர் தல யாத்திரை கிளம்பினார். அப்போது தன்னிடமிருந்த சாளக்கிராமம் என்ற மூலிகைகளால் செய்யப்பட்ட நாராயணனன் சிலை ஒன்றை சுதீட்சணனிடம் கொடுத்து அதை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படியும், அதற்கு தினமும் பூஜை புனஸ்காரங்கள் செய்யும்படியும் கூறினார். சுதீட்சணனும் அதை வாங்கிக்கொண்டான். ஆனால் அகத்தியர் சொன்னதை விளையாட்டுப் பிள்ளையான அவன் கடைபிடிக்க வில்லை. ஏனோ தானோவென சிலையை கண்ட இடத்தில் வைத்துவிடுவான். அகத்தியர் கிளம்பும் போது அந்த சிலைக்கு நதியிலிருந்து தண்ணீர் எடுத்துவந்து அபிஷேகம் செய்யும்படி சொல்லியிருந்தார். ஆனால் சுதீட்சணன் அதைக் கேளாமல் நதிக்கே சிலையை எடுத்துச் சென்று அங்கு வைத்து அபிஷேகம் செய்தான். நதியிலிருந்து குடத்தில் தண்ணீர் எடத்துவர சோம்பல்பட்டு இப்படி செய்து வந்தான். அந்தச் சிலையை ஒரு பெட்டியில் வைத்து நதிக்கரைக்கு எடுத்துச் சென்று பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருந்தான்.
நதிக்கரையில் ஒரு நாவல் மரம் இருந்தது. மிகப்பெரிய பழங்கள் பழுத்துக் கிடந்தன. ரிஷிகுமாரர்கள் அந்த பழங்களை பறிப்பதற்காக நதிக் கரைக்கு கூட்டமாக வருவார்கள். சிறுவனான சுதீட்சணனுக்கும் நாவல் பழங்களை தின்பதில் விருப்பம் அதிகம். அவனும் ரிஷிகுமாரர்களுடன் சேர்ந்து கல்லெறிந்து பழங்களை பறிப்பான் . ஒருநாள் இவ்வாறு பழம் பறித்துக் கொண்டிருந்த போது மரத்தின் உச்சியில் மாம்பழம் அளவுக்கு பெரிதான நாவல்பழம் ஒன்று தொங்கியது. அதை எப்படியாவது பறித்துவிடவேண்டும் என்ற ஆசை அவனுக்கு ஏற்பட்டது. சுற்றும்முற்றும் பெரிய கல் ஏதாவது கிடக்கிறது என தேடிப் பார்த்தான். கல் கிடைக்கவில்லை. எனவே தன் கையில் இருந்த சாளக்கிராம சிலையை மரத்தின் மீது வீசினான். பழம் கீழே விழுந்தது. ஆனால் சிலை மரத்தின் கிளையில் சிக்கிக் கொண்டது. சுதீட்சணனுக்கு பயம் தொற்றிக் கொண்டது. அகத்தியர் வந்தால் என்ன பதில் சொல்வது ? என தெரியாமல் திண்டாடினான். மரத்தின் மீது ஏறி சிலையை எடுக்க ரிஷி குமாரர்கள் பயந்தனர். அந்த மரத்திலிருந்த பொந்தில் ஒரு பாம்பு வசித்தது. மரத்தில் ஏறினால் பாம்பு கடித்து விடும் என்ற பயத்தில் யாரும் ஏற மறுத்து விட்டனர். சுதீட்சணன் கவலையுடன் ஆசிரமத்திற்கு திரும்பினான். அவன் எதிர்பாராத விதமாக அகத்தியர் அன்று வந்து சேர்ந்து விட்டார். நாராயணன் சிலைக்கு தினம்தோறும் அபிஷேகம் செய்தாயா ? அதை எங்கே வைத்திருக்கிறாய் ? உடனே எடுத்துவா, பூஜை செய்ய வேண்டும், என்றார். சுதீட்சணன் விழித்தான். ஒரு சிலையை எடுத்துவந்தான். அது முன்னம் கொடுத்த சிலைபோல இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. தொட்டுப் பார்த்தபோது நசுங்கியது. தான் பறித்த நாவல் பழத்தில் நாராயணன் போல் சித்திரம் எழுதி, அதை அகத்தியரிடம் கொடுத்துவிட்டான். அகத்தியர் அதை கண்டுபிடித்து விட்டார். அதன்பிறகு மரத்தில் சிலை சிக்கிக் கொண்டது பற்றி சுதீட்சணன் பயத்துடன் சொன்னான். அகத்தியருக்கு கோபம் வந்த விட்டது. உண்மையைச் சொல்லாமல் தன்னை ஏமாற்றிய சீடனுக்கு, சிறுவன் என்றும் பாராமல் சாபம் கொடுத்து விட்டார். எப்போது நீ நாராயணன் சிலையுடன் வருகிறாயோ, அப்போது இங்கு வந்தால் போதும் அதுவரை உனக்கு இடமில்லை. என சொல்லி விரட்டி விட்டார்.
சுதீட்சணன் மீண்டும் மரம் இருக்கும் இடத்திற்கு சென்றான். மரத்தில் ஏறினான். ஆனால் பாம்பு அவனை விரட்டியது. பயந்துபோன சுதீட்சணன் அருகிலிருந்த காட்டுக்குள் ஓடி விட்டான். அவனுக்கு 50 வயதை எட்டி விட்டது. அகத்தியரின் சீடன் என்பதால் காட்டிலிருந்த மற்ற முனிவர்கள் சுதீட்சணனுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தனர். காட்டில் காலத்தை வீணாக கழிக்காமல் தன் குருவின் விருப்பப்படி மீண்டும் நாராயணன் சிலை கிடைக்கவேண்டும் என, அந்த நாராயணனை நினைத்தே தவம் இருந்தான். இதனால் சுதீட்சணன் சுதீட்சண முனிவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார். அவரும் சாளக்கிராமத்தில் பல வணங்கி வந்தார். அந்த சிலைகளை சில குரங்குகள் எடுத்துச் சென்று அருகிலுள்ள ஏரியில் வீசி வந்தன. சுதீட்சணரும் மீண்டும் மீண்டும் சிலைகள் செய்து வணங்கிவந்தார். அகத்தியருக்கு பிடித்தமான சிலையை தொலைத்து விட்டதால் தான் குரங்குகள் இவ்வாறு தனக்கு துன்பம் செய்வதாக சுதீட்சணர் நினைத்தார். மனம் தளராமல் பல சிலைகளை செய்து நாராயணனை வணங்கிவந்தார். ஆனால் ஒவ்வொரு நாளும் குரங்குகள் அவற்றை ஏரியில் வீசிவந்தன. இதைக் கண்டு மனம் பொறுக்காத சுதீட்சணர், நளன், நீலன் என்ற அந்த குரங்குகளிடம், நீங்கள் இனிமேல் எந்த பொருளை தண்ணீரில் வீசினாலும் அவை மிதக்கும் என சாபம் கொடுத்தார். பிற்காலத்தில் ராமபிரான் இலங்கைக்கு சென்ற போது அனுமானுடன் சென்ற நளன், நீலன் என்ற இந்த குரங்குகள் தான் கடலில் பாறைகளை தூக்கி வீசி பாலம் அமைத்தன. அந்த பாறைகள் தண்ணீருக்குள் மூழ்காமல் கடலில் மிதந்ததால் பாலம் அமைப்பது எளிதாக அருந்தது. இதனால் சுதீட்சணர் அளித்த சாபம்vகூட ராமனுக்கு உதவியது. இதைக்vகேள்விப்vபட்ட ராமன். சுதீட்சணர் இருக்கும் இடத்திற்கு வந்து, இலங்கைக்கு செல்ல உங்களது சாபம்தான் எனக்கு மிகவும் பயன்vபட்டது, எனக் கூறி அவருக்கு நன்றி தெரிவித்தார். நாராயணனே ராம அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தவர் என்பதை உணர்ந்த சுதீட்சணர், அவரை அழைத்துக்கொண்டு தனது குருவான அகத்தியரிடம் சென்றார். ராமனே தன் ஆசிரமத்திற்கு வந்ததும் மகிழ்ச்சியடைந்த அகத்தியர் அவரை வணங்கினார். சுதீட்சணர் அகத்தியரிடம், தாங்கள் நாராயணன் சிலை இல்லாமல் உங்களை பார்க்கக் கூடாது என சொன்னீர்கள். ஆனால் நான் நாராயணனையே இங்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன். உங்கள் சாபம் இன்றோடு தீர்ந்தது. என்னை மீண்டும் உங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.  நீங்கள் என்னை வெளியே அனுப்பாமல் இருந்திருந்தால் நாராயண தரிசனம் எனக்கும் கிடைத்திருக்காது. என்மீது கொண்ட உண்மையான பாசத்தால், ராம தரிசனம் கிடைக்க எனக்கு தாங்கள் உதவியதை இப்போது புரிந்து கொள்கிறேன். உங்கள் சீடனாக இருக்க இனியாவது அனுமதிப்பீர்களா என கேட்டார். அகத்தியர் அவரை மகிழ்வோடு அணைத்து மீண்டும் தன் சீடனாக்கி கொண்டார்.
அகத்தியர்ஞானம்

அகத்தியர் வாக்கு - சிவ சக்தி வடிவங்கள்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 74*

*தேதி: 27-05-2019(திங்கள் - சந்திரன், நிலா, மதி)*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*பதவி நான்கும் கண்டவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : சக்தியும், சிவனும் வெவ்வேறா? அல்லது ஒன்றா?🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்) வாக்கு :*

*தங்கமும், நகையும் வெவ்வேறா?* (பதில் - இல்லை, ஒன்றுதான்). *அதைப்பாேல்தானப்பா.*

*கேள்வி : அவ்வாறிருக்க சக்திக்கும், சிவனுக்கும் ஏன் தனித்தனி வழிபாடுகள்?*🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

முன்புதான் கூறினாேமேயப்பா. *மனிதனுக்கு அனைத்தும் விதவிதமாக இருக்க வேண்டும். உண்ணுகின்ற உணவாக இருந்தாலும், உடுத்துகின்ற உடையாக இருந்தாலும், செல்லுகின்ற மார்க்கமாக இருந்தாலும், ஒரே விதமாக இருந்தால் அவன் ஏற்றுக்காெள்ள மாட்டான்.* அவனிடம் இருக்கின்ற தன்முனைப்புதான், இத்தனைவிதமாக இறைவனை பிரித்து வைத்திருக்க உதவியிருக்கிறது அல்லது அதுதான் சரி என்று அவனுக்கு பட்டிருக்கிறது.

*எதுவுமே இல்லை, ஒரு விலங்கைப் பார்த்து "இதுதான் இறைவன்" என்றால் அதையும் மனிதன் ஏற்றுக் காெள்வான்.* அதன் பின்னாலும் சிலர் செல்வார்கள். *எனவே நீ சக்திக்குள்ளேயே சிவத்தைக் காணலாம். சிவத்திற்குள்ளேயே சக்தியைக் காணலாம். அதையெல்லாம் உணர்ந்து தானே அந்த அர்த்தநாரி வடிவத்தையே அன்று இறைவன் எடுத்திருக்கிறார். யாருக்கு எந்த வடிவில் இறைவனை வணங்க பிடிக்கிறதாே அந்த வடிவில் வணங்கிவிட்டுப் பாேகட்டும் என்றுதான் இறைவனும் அமைதியாகப் பார்த்துக் காெண்டிருக்கிறார்.*

*கேள்வி : பூனை வழிபட்ட புனுகீஸ்வரர் பற்றி :🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்) வாக்கு :*

*சர்ம பிணிகளை நீக்கிக் காெள்ள முடியாமல் கர்மவினையால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று வழிபட வேண்டிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.*

*கேள்வி : நண்டு வழிபட்ட ஈஸ்வரர் பற்றி:🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்) வாக்கு :*

இஃதாெப்ப *நண்டு வடிவில் மட்டுமல்ல, பல்வேறு மகான்களும், ஞானிகளும் இன்றளவும் வழிபடக்கூடிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று. பிரம்மஹத்தி தாேஷங்களில் நீக்கக்கூடிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று.*

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************

மஹாராஷ்டிரா மாநிலம் மாரலேஸ்வரர் குகை கோவில் மற்றும் அதை சுற்றி உள்ள நீர் வீழ்ச்சிகள்.

தனிப்பட்ட அருள் வாக்கு - 26.05.2019

அகத்தியர் ஜீவ அருள் வாக்கு

உரைப்பவர்  : குருஜி இறைசித்தர்

உரைத்த இடம்  - பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி பீடம்

அருள் பெறுபவர் - தி. இரா.சந்தானம் , கோவை

தேதி - 26/05/2019

அகத்தியர் அருளுரை கீழ் வருமாறு

தனிப்பட்ட முறையில் கூறிய பரிகாரங்கள் பகிரப்பட்ட மாட்டாது

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அகத்தியர் ஜீவ நாடியை பற்றி உலகோர் புரிந்து கொள்ளவே இந்த பதிவு

பல அன்பர்கள் அகத்தியரின் நேரடி வார்த்தைகளை கேட்க முடியாதவர்கள் , இந்த பதிவை படித்து புத்துணர்ச்சி பெறுவர் .

ஜீவ நாடியில் அருள் பெரும் எல்லோருக்கும் அகத்தியர் எல்லாவற்றையும் உரைப்பது இல்லை - சிறந்த அருள் வாக்கினை பெற்றவர்கள் பதிவிடுவது இல்லை - பின் எவ்வாறு அகத்தியரை பற்றி புரியும் -

பலர் ஜீவ நாடி என்றால் ஏதோ பரிகாரம் கூறுவார்கள் - கேட்டு செய்ய வேண்டும் அவ்வளவு தானே என்று முக்கியத்துவம் கொடுப்பதில்லை -

ஆனால் ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர வைப்பதும் - இயற்கை சேதங்களை முன்கூட்டியே அறிவிப்பதும் , இயற்கை சேதங்களில் இருந்து காப்பதும் - ஊக்கம் கொடுப்பதும்  - ஒரு தாயாகவும் தகப்பனாகவும் குருவாகவும் பரம்பொருளாகவும் இருந்து வழி காட்டுவதும் அய்யன் ஒருவரே

படித்து பயன் பெறுவீர்களாக

குறிப்பு - அகத்தியர் யாருடனும் வாதம் செய்ய வேண்டாம் என்று உத்தரவு - அதனால் (கோவை பாஷையில்  சொல்வதானால் எந்த ஒரு ஆகாவளி கமெண்ட் க்கும் பதில் அளிக்க மாட்டேன் - மாறாக அவர்கள் நமது பக்கத்தில் இருந்து Ban செய்யப்படுவார்கள் )

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பிச்சாடல் பேயோடு உகந்தாய் போற்றி
பிறவி அறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்கு மகிழ்ந்தாய் போற்றி
மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி
மொய்ச்சார் புறமொன்றும் எய்தாய் போற்றி
கச்சாக நாகம் அசைந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி போற்றி

சிரம் தாழ்ந்து வணங்கும் அடியவரின் தேவ தேவனே போற்றி
சிரம் தாழ்ந்து இக்கலியுகம் தன்னிலே எம் நிலை இறக்கி
உமையவள் ஆதிசக்தியின் அருளை பெற்று
என் மகனுக்கு அருள் தனை  உரைப்பேன்

கேளடா !!!!!

இன்னவனும் என் நாமம் அதை ஜெபித்தாய்
வீண் மனச்சலனம் கொள்ளாதே என் மகனே

நாவடக்கம் கொள்ளப்பா 

நாடி வழி நற்செய்திகளை யாம் உரைப்போம் உமக்கு

வேலுண்டு வினையில்லை
வினை தீருமய்யா
வேலாட மயிலாட வினை ஓடுமே

உமக்கு யாம் அன்றுரைத்தோம்
சக்தி வடி வேலவனின் நல்லாசி கிட்டுமே

கிட்டும் மனம் தளராதே தூயவனே
அன்றுரைத்தேன் நாவடக்கம் கொள்ளப்பா  நாடி வழி நற்செய்திகளை யாம் உரைப்போம் உமக்கு

வாதம் அதை விட்டொழி
கள்ளனவனும் குள்ளனவனும் ஓடுவானே

உமக்கு யாம் அன்றுரைத்தோம் உன் அருகில் அல்ல உன் உள் இருந்து உமை காப்பேன் என்று

யாம் காப்போம் தூயவனே

நவகோடி சித்தனின் நல்லாசி பெற்றவனே

மனதை மென்மைப்படுத்து

அவரவர் விதி கர்மத்தால் வந்த வினையே அய்யா

உனை  ஈன்றவள் உன்னை விட்டு வெகு தூரம் பயணித்தாளே
அவள் விதிக்கர்மத்தால் விலகி நிற்கிறாள்
மனதை நீ மென்மைப்படுத்து
உமை யாம் இயக்கச்செய்வோமே

யாம் ஆள்வதும் உனை  ஆட்டி வைப்பதும் யாமே 

சித்தனின் நாமத்தை பறை சாற்று ...சீர் பெறுவாய்

யாம் இருக்கிறோம் உமை காக்க தூயவனே அஞ்சாதே

தினம் சிவ புராணத்தை பதியம் படி
வாழ்வில் நிலை பெறுவாய்

செவ்வாய் என்றுரைக்கும் நன்னாளில் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

உமை யாம் காப்போம்

உமை  யாம் ஆசி தந்தோம்

உமையே வெல்லச்செய்வோம்

இனி நாட்டில் நிலை மாற்றம் பெரும் அப்பா

மாற்றுமோர் நிலை உண்டாக்கி புதியதோர் தலைமை மாற்றம் பெறுமே

கள்ளனவன்   ஓடுவானே , குள்ளனவனும் மறைவானே

உனக்கு யாம் அன்றுரைத்தோம் சித்தனின் திருநாமத்தையும் சித்தனின் நல்லாசி பெற்றவனும் ஆளுவானே

மும்மாரி மழை பெய்யும் விவசாயம் செழிக்கும் அப்பா
கால்நடைகளுக்கு திடீர் தொய்வுநிலை ஏற்பட்டு மாளுமே !!! யாம் காப்போம் !!!

தினம் சிற்றசர்களாக வாழும் சிட்டு குருவிகளுக்கு தானம் கொடு
சாபத்தால் நிலை பெற்றவனப்பா
வாழ்வு சிறக்கும்

ஒரு முறை கொண்டவளுடன் ஈன்ற மழலையுடன் >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

தானம் செய்  த்யானம் செய் என் மகனே

யாம் உனக்கு அன்றுரைத்தோமே
வினை தீரவே வேல் தந்தோம்
வினை தீருமப்பா

உன் மழலைகளின் வாழ்வை சீர் செய்

கொண்டவளுடன் நட்புறவு கொள்ளப்பா

மனதை மென்மைப்படுத்து

விதியும் நானே வேதமும் நானே

வேதங்களும் நானே

குருவும் நானே

குரு  தட்சிணாமூர்த்தியும் நானே

உமை ஆட்கொண்டு அருளுரைக்கும் அகத்தியனும் நானே

பனி போல் இருக்கும் துயரெல்லாம் மழையாக கரையுமய்யா

காளி  அவள் துணை நிற்பாள்  கலங்காதே என் மகனே

உனை தூற்றுவோரெல்லாம் துர்கெட்டு  ஒழிவானே

உன்னை ஏசுவோரெல்லாம் இடம் விட்டு ஓட கடைவானே  

யாம் இருக்கிறோம்

மனதை மென்மைப்படுத்து

புன்னகையுடன் எனைத்தொழு
யாம் உனக்கு காட்சி தருவோம்

வாழ்வு சிறக்கும் !!! முற்றே

 தி. இரா. சந்தானம் 
கோவை Ph : 91760 12104

Saturday 25 May 2019

சுகர் நாடி 24.05.2019, வைகாசி திருவோணம்

சனிபகவான் பீடை விலக வழி பத்மபுராணம் நூல்

💐💐💐சனி பகவான் 💐💐💐

சனிபகவான் பீடை விலக வழி பத்மபுராணம் நூலில் இருந்து பொறுமையாக படிக்க வேண்டிய பகவான் ஈஸ்வரரே உபதேசித்த அற்புத விஷயம்

நாரதர் சிவபெருமானைப் பார்த்து பகவானே என்ன செய்தால் சனிபகவானால் உண்டாகும் துன்பங்கள் விலகும் , இதை தங்கள் வாயிலாக கேட்டறிய விரும்புகிறேன் .என்று கேட்டார் பரமேஸ்வரன் கூ றினார் .

நாரதரே நான் சொல்லப் போகும் விஷயத்தைக் கவனமாக கேளுங்கள் .ஏனென்றால் பக்தியுடன் இதைக் கேட்பவர்கள் கூட துன்பங்களிலிருந்து விடுதலை பெறமுடியும் .சனிபகவான் சாதாரணமான தென்று எண்ணக் கூடாது .சகல கிரகங்களுக்கும் அரசனைப் போன்றவர் சனீஸ்வரன்.சூரிய பகவானுடைய மகன் கறுத்ததேகம்உடையவன். அவனால் உண்டாகும் துன்பத்தைவென்ற அரசனுடைய கதையைக் கூ றுகிறேன் கேள் என்றார்..

ரகு குலத்தில் பிறந்த அரசன் தசரதன் மிகவும் பிரபலமானவன் .மகா பராக்கிரமசாலியானவன். ஏழு கண்டங்களுக்கும் அதிபதி .அந்த மன்னன் ஆண்டு வரும் காலத்தில் சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலம் வந்தது .சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் மிகக் கொடிய பஞ்சம் தோன்றி பனிரெண்டு ஆண்டுகள் வரையில் பூலோகத்தில் கொடிய துன்பத்தில் ஆழ்த்துவதாகும்.

அதை நினைத்து தேவர்கள் ,அசுரர்கள் எல்லோருமே பயந்து நடுங்குக் கொண்டிருந்தார்கள் .அதைப் பற்றி குல குருவான வசிஷ்டர் முதலான ரிஷிகளையும் தான் மந்திரிகளையும் கூட்டி பூலோகத்தில் துன்பம் நேராமல் தடுப்பதற்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் என்று கேட்டார் .அதற்கு வசிஷ்டர் இது பிரஜைகள் துன்பப்பட வேண்டிய காலம். இதைத் தடுப்பது என்பது பிரம்மவாலும் முடியாத காரியம் என்று கூறினார்.

ஆனால் தசரதன் சும்மா இருக்கவில்லை .எப்படியாயுனும் பூலோகத்திற்கு சனிபகவானால் ஏற்படக் கூடிய துன்பம் நேராமல் பாதுகாக்க வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டவனாக வஜ்ஜிரக்கவசம் தரித்து தன் வில்லையும் ,அநேகவிதமான பானங்களையும் எடுத்துக் கொண்டு நட்சத்திர மண்டலத்தில் பிரவேசித்தான் .

சூரிய மண்டலத்திற்கப்பால் வெகு துரத்தில் பிரகாசித்த ரோகிணி நட்சத்திரற்குப் பின் பாகத்தில் தன்னுடைய ரதத்தில் அமர்ந்தபடி அந்நட்சத்தையே பின் தொடர்ந்து செல்லத் தொடங்கினர் ..

அன்னப் பறவைகளைப்போல் தூய வெண்ணிறமான புரவிகளோடு கூடிய அந்த ரதம் ஒளிவிட்டுப் பிரகாசித்தது .அதன்மேல் அசைந்தாடிய கொடி எதிரிகளை விலகிச் செல்லும்படியாக எச்சரித்தது .தசரதன் ஆகாயத்தில் இன்னொரு சூரியபகவான் போல் ரோகிணி நட்சத்திரத்தை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார் .வில்லை வளைத்து காதுவரை இழுத்து நாணில் தொடுத்த பயங்கரமான அஸ்திரத்துடன் தசரதன் சென்று கொண்டிருந்தார்.

தேவர்கள்,அசுரர்கள் அனைவரையும் பயந்து நடுங்கும்படிச் செய்பவனான சனிபகவான் தசரதனைப் பார்த்தான் .
சனிபகவான் புன்னைகை புரிந்தபடி ராஜராஜனே ,உன்னுடைய வீரம் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும்.தேவர்,அசுரர்,மனிதர்களில்லோ,சித்தர்,வித்யாதரர்,கந்தர்வர்களிலோ,யட்சர்கள்,ராட்சஸர்கள்,நாகர்களிலோ யாருமே என்னை எதிர்க்கத் துணிந்தவர்கள் கிடையாது .. என் பார்வை பட்டவுடன் அவர்கள் சாம்பலாகப் போய்விடுவார்கள் .

ஏ ராஜேந்திரா ,நீ மகா தவங்களைச் செய்தவனும்,அதிகமான புண்ணிய பலம் பெற்றவனும் ஆகையாலேயே என் பார்வை பட்டும் கம்பீரமாக நிற்கிறாய் .உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் .நீ எதைக் கேட்டாலும் தருகிறேன் என்று சனிபகவான் கூறினார்..

தசரதன் சனிபகவானைப் பார்த்து ஏ செளரி தங்கள் எக்காலத்திலும் ரோகிணி நட்சத்திரத்தைப் பின்னம் செய்யக் கூடாது .சூரியர் சந்திரர் உள்ளவரையும் இனி எக்காலத்திலும் அது நடக்கக்கூடாது .முதலாவதாக அந்த வரத்தையே தங்களிடமிருந்து பெற விரும்புகிறேன் என்று கூறினார்.அவ்வாறே ஆகுக என்று கூறி சனிபகவான் ஆயினும் உனக்கு வேண்டிய வரம் எதுவாயினும் கேள் .உனக்கென்று எதையும் கொடுக்காமல் செல்ல மாட்டேன் அதனால் உனக்கு வேண்டியதைக் கேள் என்றுகூறினார்...

தசரதன் சனிபகவானைப் பார்த்து ஆதவன் மைந்தனே ரோகிணி நட்சத்திர மண்டலத்தை தங்கள் பின்னம் செய்வதால் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கக் கூடிய கொடிய பஞ்சம் ஏற்படுமென்று கேள்விப்பட்டிருக்கிறேன் .அப்படிப்பட்ட நீண்ட பஞ்சக்காலமும் ஏற்படக்கூடாது அதையே நான் தங்களிடமிருந்து முக்கிய வரமாகப் பெற விரும்புகிறேன் என்று தசரதன் மீண்டும் கூறினார்....

சனிபகவான் தசரதனை பார்த்து சொன்னர் அதைத்தான் முன்பே கொடுத்து விட்டேனே ,என்னிடமிருந்து இந்த வரம் பெற்றதால் உன்னுடைய கீர்த்தி உலகம் உள்ளவரைக்கும் நிலைத்திருக்கும் ..மூவுலகிலும் உன் பெருமை பேசப்படும் .உன்னிடம் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக இருக்கிறேன் .வேறு என்ன வரம் வேண்டும் கேள் என்றான் சனிபகவான்..

தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை தியானித்து பின் சனிபகவானைக் குறித்து ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினான்..!!!

நம கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாய ச
நமகாலாக்னிரூனாய க்ருதாந்தாய ச வை நம
நமோ நிமலாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாய ச
நமோ விசால நேத்ராய சுக்ஷ்கோதர பயாக்ருதே
நம புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம
நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே

நமேஸ்த கோடாக்ஷாய துர்நிரீச்ரயாய வை நமே
நமோ கோராய ரெளத்ராய பீஷ்ணாய கபாலிநே
நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸதுதே

சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாய ச
அதோத்ருஷ்டே,நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே

நமோ மந்த கதே,துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே
தபஸா தகத் தேஹாய நித்யப் யோக ரதாய
நமோ நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம
ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ ஸுநவே
துஷ்டோ தகாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸு தத்க்ஷணாத்...!!!

இதன் பொருள் விளக்கம் : --

கரியவனே, நீல நிறம் படைத்தவனே , நீலகண்டன் போல் சிவந்த காலாக்னி போன்ற உருவம் உடையவனே, உன் கருணையைப் பெற வேண்டி மீண்டும்மீண்டும் வணங்குகிறேன்.

மாமிசம் இல்லாத உயர்ந்த தேகம் படைத்தவனே. உன்னை வணங்குகிறேன் . அகன்ற விழிகளையுடையவனே ,உன்னை வணங்குகிறேன். பயங்கரமான தோற்றம் உடையவனே, உன்னை நான் வணங்குகிறேன் .

புஷ்கல கோத்திரத்தில் பிறந்தவனே, தடித்த ரோமம் உடையவனே, உன்னை வணங்குகிறேன். அகன்ற தாடை உடையவனே ,ஜடாமுடி தரித்தவனே, அகன்ற கண்களும், ஒட்டிய வயிறுமாக பயங்கரமான தோற்றமுடையவனே உன்னை வணங்குகிறேன்.

சூரிய புத்திரனே ,சூரியனுக்கு பயத்தை உண்டாக்கக்கூடிய வனே ,மெதுவாக நடப்பவனே, நீண்ட தவத்தால் வருந்திய தாகம் உடையவனே, யோகத்தில் நிலைத்து நிற்பவனே, உன்னை வணங்குகிறேன். ஞானக்கண் உடையவனே, கச்யப் குமாரனாகிய சூரியனின் புத்திரனே, உன்னை வணங்குகிறேன்.

சனிபகவானே ,நீ கருணைக் கட்டினால் உன்னுடைய அன்புக்கு பத்திரமான மனிதன் மகாராஜனாகிறன்.யானை,சேனை,படைகளும் அந்தஸ்தும் பெறுகிறான்.அதேபோல் உன்னுடைய கோபத்திற்கு ஆளாபவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்கணமே எல்லாவற்றையும் இழந்து பரம தரித்திரனாகி விடுகிறான்.

ஏ சனிபகவானே,தேவர்,அசுரர்,மனிதர்,ஆயினும், சித்தர்,வித்யாதரர்,உரகர் ஆயினும் அவர்கள் எதிலுமே அல்லர் ஆயினும் அவர்கள் மேல் உன் பார்வை பட்டுவிட்டால் அவர்கள் வேரோடு அழிந்து போகிறார்கள் .ஆகையால் நீ அனுக்கிரஹ மூர்த்தியாக கருணைக்கண் கொண்டே நீ பார்க்க வேண்டும்.

உன்னைத் தொழுது சேவை செய்கின்ற பாக்கியத்தை அளிக்க வேண்டும் என்று தசரதன் பிரார்த்தனை செய்தான்.

மஹா பகவானும் ,பயங்கரமனவனும்,கிரகங்களுக்கு அரசனுமான சனிபகவான் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக ,

"ஏ ராஜேந்திரா ,உன்னிடம் நான் மிகவும் பிரியமுள்ளவனாகி விட்டேன் .உன்னுடைய ஸ்தோத்திரம் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியளிக்கிறது .உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றார் .

அதைக் கேட்ட தசரதன் , "ஏ செளரி இன்றுமுதல் யாருக்கும் துன்பம் அளிக்கக்கூடாது. தேவர்,அசுரர்,மனிதரானாலும்,பறவைகள்,விலங்குகள்,ஊர்ந்து செல்லும் ஜந்துக்களானாலும் எவர்க்கும் தீங்கு செய்யலாகாது என்றார் .

அதைக் கேட்ட சனிபகவான் ,ஏ ராஜனே ,நீ கேட்ட வரம் சரியானதுதான் .ஆனால் ஒரு நிபந்தனை நீ இப்போது கூறிய ஸ்தோத்திரத்தை படிப்பவர் யாரானாலும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தடவையேனும் பாராயணம் செய்து வருபவர் எவரானாலும் அவர் அக்கணமே என்னால் உண்டாகும் பீடைகளிளிருந்து விடுபடுவார்.

உளுந்து,எள்ளு முதலானவற்றை உரிய தட்சணையோடு தானம் செய்பவர்கள் கரிய நிறப் பசுவை தானமாகக் கொடுப்பவர் என்னுடைய நாளான சனிக்கிழமைகளில் நீ கூறிய இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி பூஜை செய்தபிறகும் இந்த ஸ்தோத்திரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பவர்,ஜெபித்தபடி என்னை நமஸ்காரம் செய்பவர்களை நான் ஒரு நாளும் துன்புருத்தமாட்டேன் .

கோசாரத்தின் படியாகவும்,ஜென்ம இலக்னத்தின்படி வரும் அந்தர திசைகளிலும் கூட என்னால் துன்பம் தேராமல் ரட்சிப்பேன்.ஏ ரகுநந்தனா ,உனக்கு நான் இந்த வரத்தை அளிக்கிறேன் என்று கூறினார்..

தசரதன் அதன் பிறகு சனிபகவானை வணங்கி விடை பெற்றுத் தன்னுடைய ரதத்தில் ஏறி நாடு திரும்பினான்.அன்றுமுதல் சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து பின் சிரத்தையோடு இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர் சகல துன்பங்களிலிருந்தும் விடுபட்டு நரக வேதனை அடையாமல் மோக்ஷலோகத்தை அடைவார்கள்.

இந்த ஸ்தோத்திரமும் நீண்ட ஆயுளும் நல்ல புத்தியும் அளிப்பதோடு சகல கிரக தோஷங்களிலிருந்தும் விடுதலை அளிக்கக்கூடியது மாகும்.இதைப் போன்ற புனிதமான ஸ்தோத்திரம் பூலோகத்தில் வேறு எதுவும் கிடையாது...
சனிபகவானே போற்றி போற்றி போற்றி

Friday 24 May 2019

அகத்தியர் வாக்கு - சித்தர்கள் தொடர்பு

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 72*

*தேதி: 25-05-2019(சனி - காரி, கரியன், மந்தன்)*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*மேருதாழ்வை நீக்கியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : பாேக மகரிஷியின் தாெடர்பு கிடைக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஆசி கூறுங்கள்🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

இறைவனின் அருளைக் காெண்டு இன்னவனின் முன் இரு வினாக்களுக்கு பின்னாெரு தருணம் இன்னவன் எம்முன்னே அமரும் தருணம் யாங்கள் வாக்குகளை பரவலாகக் கூறுகின்ற தருணம் இயம்பிடுவாேம். அஃதே தருணம் பாேகன் என்று இல்லை. *எந்த மகானுடன் மனிதன் தாெடர்பு காெள்ள வேண்டும். எந்த சித்தர்களுடன் மனிதன் தாெடர்பு காெள்ள வேண்டும் என்றால் முதலில் மனிதன் தன்னிடம் உள்ள அனைத்து தீய பழக்க, வழக்கங்களையும், குணங்களையும் விட்டுவிட்டு, இன்னும் கூறப்பாேனால் பல மனிதர்களிடம், தன்னிடம் இன்ன, இன்ன வேண்டாத குணங்கள் இருக்கின்றன என்று கூட புரிந்துகாெள்ள முடியாமல் வாழ்கிறார்கள்.*

*அவற்றையெல்லாம் சுய ஆய்வு செய்து மெல்ல, மெல்ல விட்டுக்காெண்டே இன்னாெருபுறம் எந்த சித்தனாேடு தாெடர்பு காெள்ள வேண்டும் என்று மனிதன் எண்ணுகிறானாே அந்த சித்தனின் நாமத்தை (பெயரை) அடிக்கடி ஆழ்மனதிலே சாெல்லிக்காெண்டு இருப்பதும், குறிப்பாக முன் பிரம்ம முகூர்த்தத்திலே எழுந்து வடகிழக்கு திசை நாேக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து ஓர் முக சிந்தனையாேடு அந்த சித்தனின் நாமாவளியை (பெயரை) மனதிற்குள் உருவேற்ற, உருவேற்ற சித்தர்களின் தாெடர்பு என்பது மிக எளிதாகும்.*

ஆனால் சிக்கல் எங்கே உருவாகிறது? என்றால் *'சித்தர்களாேடு எனக்கு தாெடர்பு இருக்கிறது. சித்தர்கள் என்னாேடு பேசுகிறார்கள் அல்லது நான் சித்தர்களை தரிசனம் செய்திருக்கிறேன்' என்பது ஒரு மனிதனை பாெறுத்தவரை அந்தரங்கமாக இருக்கும் வரையில் பிரச்சனை இல்லை. அதனை பலரும் நம்ப வேண்டும் என்று அவன் முயற்சி செய்யும்பாெழுதுதான் சிக்கல் உருவாகிறது.* எனவே இதனை அவன் தனித்தன்மையாேடு வைத்துக்காெண்டு இந்தவிதமான முயற்சியில் ஈடுபட்டுக்காெண்டு *இஃதாேடு பெருவாரியான தாெண்டுகளையும், தேகவழி(உடல்வழி) தாெண்டுகளையும், பாெருள் வழி தாெண்டுகளையும் செய்து காெண்டே இருந்தால் கட்டாயம் சித்தர்களின் தாெடர்பு எல்லா மனிதர்களுக்குமே எளிதாகக் கிட்டும்.*