Friday, 28 February 2020

அகத்தியர் பாடல் - மாதங்களில் அவர் மார்கழி

மாதங்களில் அவர் மார்கழி
வேதங்களில் அவர் உட்பொருள்
உருவங்களில் அவர் உன் உருவம்
அருவங்களில் அவர் பேருருவம்
பருவங்களில் அவர் வாலிபம்
புருவங்களில் அவர் உரையுமிடம்
துருவங்களில் அவர் பனித்துருவம்
காலங்களில் அவர் வசந்த காலம்
ஆயுதங்களில் அவர் வேலாயுதம்
அசுரவதத்தில் அவர் சக்ராயுதம்
யோகங்களில் அவர் ராஜ யோகம்
சித்தத்தில் அவர் வாசி யோகம்
கர்மத்தில் அவர் கர்ம யோகம்
பாடல்களில் அவர் பாமாலை
வ்ருக்ஷங்களில் அவர் கற்பகம்
மருத்துவத்தில் அவர் ஆயுர்வேதம்
நோய் தீர்ப்பதில் அவர் சித்தவேதம்
பக்ஷிகளில் அவர் கருடதேவன்
உணர்வுகளில் அவர் பூரிப்பு
உறவுகளில் அவரே அம்மையப்பர்
குருக்களில் அவரே சற்குரு
சங்கங்களில் அவர் சத் சங்கம்
நதிகளிலே அவர் தாமிரபரணி
பதிகளிலே அவர் உமாபதி
திதிகளில் அவர் முழுமதி
தூதிகளிலே அவர் சிவதுதி
விதிகளிலே அவர் வேதநாயகன்
கதிகளிலே அவர் நற்கதி
மலைகளிலே அவர் தென்கைலாயம்
அலைகளில் அவர் பேரலை
சிலைகளிலே அவர் மரகதம்
கலைகளிலே அவர் கலைவாணி
இசையினிலே அவர் நாதவீணை
திசையினிலே அவர் கிழக்கு
உயரத்தில் அவர் பொதிகைமலை
சிகரங்களில் அவர் கயிலாயம்
மலர்களிலே அவர் தாமரை
நிறங்களிலே அவர் வெண்மை
தலங்களில் அவர் காசி
யாகங்களில் அவரே பூரணாகுதி
ஊரினிலே அவர் உச்சி பிள்ளையார்
பேறினிலே அவர் முக்திப்பேறு
தேரினிலே அவர் திரு ஆரூர்
பாரினிலே அவர் பரந்தாமன்
லோகங்களில் அவர் சத்ய லோகம்
புராணத்தில் அவர் சிவபுராணம்
புகழிலே அவர் திருப்புகழ்
இதழிலே அவர் புன்சிரிப்பு
கண்களிலே அவர் ஒளிவெள்ளம்
செவியிலே அவர் கட்செவி
உணர்வுகளிலோ அவர் மென்மை
அறங்களில் அவரே வாய்மை
தரங்களிலே அவர் தருமம்
சக்கரங்களில் அவர் கால சக்கரம்
ஆற்றில் இறங்கும்போது அழகர்
சூரனை வதைத்தபோது முருகன்
திரிபுரம் எரித்த போது ஈசன்
வினைகள் தீர்க்கும் விநாயகன்
செல்வங்களில் அவர் குபேரன்
சம்பத்துகளில் அவர் சகலசம்பத்து
காரியங்களில் அவர் வெற்றி
வெற்றிடத்தில் அவரே சக்தி
சக்தியில் அவரே சிவம்
சிவத்தில் உள்ளே பரம்
பரத்தின் உள்ளே வெளி
வெளியில் எல்லாமும்.
ஆரம்பம் இல்லாத முடிவுமில்லாத அளப்பற்கரிய நெடியவேந்தன் அண்ணாமலையான் மகேசுவரன், எம் அகத்தீசன் திருவடி பணிந்து போற்றி தொழுது தொண்டாற்றி மகிழ்வோம். வாழ்வாங்கு வாழ்வோம் சிரஞ்சீவியாய் பெரும் ஜீவியாய் சஞ்சீவியாய் சகல ஜீவியாய் அறிவு ஜீவியாய் பெரும் ஜோதியாய் உட் கலப்போம்.
ஓம் மகத்தான அகத்தீசா உம் திருவடியே கதி !!!!!!!!!
TRS 29.02.2020

Wednesday, 26 February 2020

எனது பாடல் - அகத்தியருக்கு அர்ப்பணம்

அகத்தியமே சத்தியம்
அகத்தியமே நித்தியம்
அகத்தியம் என்பது உன்னுள் இருக்கும் ஓர் கவிதை
அகத்தியத்துள் எல்லாமும் அடங்கும்
அடங்கும் அதற்குள் ஏழு கடலும்
உடலும் உயிரும் அகத்தியத்தின் இயக்கத்தில்
இயக்கத்தின் மூலம் அகத்தியம்
அகத்தியமே ஆற்றலின் மூலப்பொருள்
இவ்வுண்மையை அறிந்தோர் எல்லோரும் அகத்தியர்
அகத்தியரை அறிய முயல்வோருக்கு வழிகாட்டுவார்
அஷ்ட மா சித்துக்களும் அகத்தியனை  வணங்கும்
வணங்கும் அது, அவர் கமண்டலத்தில் அடங்கும்
தேவரும் மூவரும் அகத்தியத்தை போற்றுவர்
அகத்தியமே சிவம், அகத்தியமே பிரம்மம்
அகத்தியமே சக்தி, அகத்தியமே ஆதி
அகத்தியமே சோதி, அகத்தியமே நீதி
அகத்தியமே உலகம் துவங்கிய இடம்
அகத்தியன் கால் படாத இடம் உண்டோ
காற்று புகாத இடத்திலும் அகத்தியன் புகுவான்
பக்குவமற்றதை பக்குவப்படுத்துவான்
விதியை வகுப்பான் அருளை இறைப்பான்
மதியை வெல்லுவான் இருளை  நீக்குவான்
சதியை தடுப்பான் பதியாய் இருப்பான்
கதியை கொடுப்பான் துடிப்பாய் இருப்பான்
கால் பிடிப்போருக்கு யோகம் அருளுவான்
கால் (காற்று) பிடிப்போருக்கு யோகம் அருளுவான்

இசைத்தால் ரசித்து கேட்டு மகிழ்வான
இசைந்தால் இசைவிப்பான்
காலில் விழுந்தால் காத்து நிற்பான்
காலை (காற்றை) இழுத்தால் ஆற்றல் தருவான்
இவனுடன் இருக்கும் ஒரு நொடி பொழுதில்
பல ஆயிரம் பிறவியில் செய்த கன்மங்கள் காணாது போகும்
உன்னத அடியவர்கள் தொடர்பு கூடும்
எண்ணிய எண்ணெமெல்லாம் ஈடேறும்
ஏற்றம் மிக்க வாழ்வு வரும்
புண்ணியமெல்லாம் கிட்டும்
தீவினைகள் அகலும்
பகைமை பறக்கும்
இல்லாமை இல்லை என்றாகும்
பொல்லாமை எல்லாம் பொடியாய் போகும்
கல்லாமை கரைந்து போம்
வாழ்வாங்கு வாழுவோம்
அகத்தியனை பற்றுவோம்
சத்திய வழி நடப்போம்
நித்திய வாழ்வு பெறுவோம்
அகத்தியன் நிழலில் அன்னையின் அன்பு
அகத்தியன் நிழலில் தந்தையின் தெளிவு
அகத்தியன் நிழலில் குழந்தையின் தூய்மை
அகத்தியன் நிழலில் தாய்மையின் உண்மை
அகத்தியன் நிழலில் நாம்
அகத்தியரே, உம்மை போல எம்மை செய்திடுவீர்
செகமெல்லாம் உய்வு பெறவே பரம்பொருளாய் விளங்கிடுவோமே
அகமெல்லாம் அகத்தியமே
சுகமெல்லாம் காணுமே
இதற்கு நிகரேதும் இல்லையே
*********************************
TRS


Monday, 24 February 2020

அகத்திய மஹரிஷி அடியவர் திரு.சரவணன் அவர்கள் எழுதிய குரு கவிதை

🌸🌸🌸🌸🙏🌸🌸🌸🌸
*கலச முனி பாதம் காப்பு*
🌸🌸🌸🌸🙏🌸🌸🌸🌸

*அகத்திய மஹரிஷி அடியவர் திரு.சரவணன் அவர்கள் எழுதிய குரு கவிதை*

🙏குருவடி சரணம்🙏

சொல்லாடி உள்ளாடி
ஆட்டுவித்தான்
மாட்டுவித்தான்!

கட்டுவித்தான்
பலவும் காட்டுவித்தான்!

ஊட்டானை மாட்டானை
கெட்டானை காட்டானை!

இட்டானை ஏட்டானை
வாட்டானை!

குருவடி விட்டானை
ஒருபோதும் காட்டானை!

கலங்காது
கருதிநின்றால்
கருணையால்
காட்டானை
காட்டானோ!
🙏

ஆக்கம்
*திரு. சரவணன், மதுரை*
+91 86789 71355

🌸🌸🌸🌸🙏🌸🌸🌸🌸
*பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக*
🌸🌸🌸🌸🙏🌸🌸🌸🌸

அன்னை பாடல்

அன்னையே ஆதி சக்தியே
முன்னையே மூல சக்தியே
என்னையே ஏக சக்தியே
வின்னையே வீர சக்தியே
மண்ணையே மாய சக்தியே
ஏகாம்பரியே ஜகன்மோகினியே
மார்த்தாண்ட பயிரவியே
மூல நாயகியே மண்டல சக்தியே
திரிபுராந்தக காளியே
திரிசக்தியே, திகம்பரியே
என்னுள் வாழும் ஈஸ்வரியே
எமை ஆளும் பரமேசுவரியே
ஏக நாயகியே என்னுள் இருப்பவளே
வா வா என்னுள் இறங்கு
உள்ளிருந்து பொங்கு
வ்யாபி இங்கு
பாரெங்கும் பரவு


இயக்கத்தின் மூலமே
இச்சா சக்தியே
இணையில்லா தாயே
கடவூர் வாழும் தேவியே
கருமாரியே கருவாய் இருப்பவளே
கற்பூர ஜோதியே
கண்ணகியே கமலவள்ளியே
காமேஸ்வரியே, காமாட்சியே
கருவூர் அரசியே
கற்பகாம்பிகையே
கண்ணாயிரம் உடையாளே
கோதையே லட்சுமி தேவியே
வீணா தேவியே வாழும் தெய்வமே


உனை நினைப்போர் நிம்மதி அடைவர்
துதிப்போர் துயர் நீங்குவர்
யோசிப்போர் யோகம் பெறுவர்
பாடுவோர் பாக்கியமெலாம் பெறுவார்
வணங்குவோர் வல்லமை பெறுவர்
நோக்குவோர் நோய் நீங்க பெறுவர்
தூக்குவோர் தூய்மை அடைவர்
ஏற்றுவோர் ஏற்றம் பெற்று உயர்வர்
சிந்திப்போர் சிந்தை தெளிவர்
பேசுவோர் பெரும் பேறு பெருவர்
கொள்வோர் கோள்களை ஜெயிப்பர்

நீ இருக்கும் இடமெல்லாம் நீங்கா செல்வம் என்றென்றும் நிறைந்து இருக்கும்.
சிவகாமேஸ்வரியை துதிப்போர் ஜெகமாள்வர்
சிவசக்தி ஐக்கிய சொரூபிணியை தொழுவோர் சிரஞ்சீவித்துவம் பெறுவர்
பிரம்மத்தின் பொருளே பிரம்ம நாயகியே
உங்கள் திருவடியை பணிந்து நிற்போம்

அருளை யாசிப்போம்
சத்தியத்தை யோசிப்போம்
உன்னையே நேசிப்போம்
அன்னையே சுவாசிப்போம்
எம்மையே தந்திடுவோம்
உம்மையே இயம்பிடுவோம்
ஊன் உறக்கத்தில் அன்னையே
உணர்விலும் அன்னையே

செயலில் செகதாம்பிகை
நாவில் சரஸ்வதி
கைகளில் காத்யாயினி
கால்களில் கௌமாரி
நெற்றியில் விசாலாட்சி
புருவத்தில் புவனேசுவரி
நாசியில் நவசக்தி
வாசியில் வாலை ஈஸ்வரி
பேச்சில் பெரியநாயகி
மூச்சில் மூகாம்பிகை
சிரத்தில் லலிதாம்பிகை
மார்பில் லட்சுமி தேவி
வலக்கையில் வாராகி
இடக்கையில் துர்கா பரமேசுவரி
வயிற்றில் வண்டார்குழலி
சொப்பனத்தில் சொர்ணாம்பிகை
வாகனத்தில் திருசூலி வராகி பஞ்சமி
பார்வையில் நேத்ரபூஷனி
உச்சந்தலையில் உமாதேவி

தெற்கே அகத்தியர்
வடக்கே புலத்தியர்
மேற்கே கோரக்கர்
கிழக்கே போகர்
மத்தியிலே சுப்பிரமணியர்

அவர்களின் சுற்றமுடன்
உமையோருப்பாகராகிய சர்வேசுவரர்
சதாசிவர் திரிபுரம் எரித்தவர்
தாள் வணங்கி
வாழ்வாங்கு வாழ்வோம் இப்புவியெங்கும் நிறைந்து
அருள் உள் பரவ அச்சம் விலக
அமைதி பொலிய
ஆற்றல் மிக
அறிவு உயர
பெண்மை பெருமை கொள்ள
ஆண்மையே அரணாக கொண்டு
அருந்தவம் ஆற்றி
அருள் நிலை எய்துவோம்
சிறப்புடன் வாழ்வோம்
பல்லாண்டு பல்லாண்டு
பல கோடி நூறாண்டு


உண்டு உண்டு
அன்னை உண்டு
அருள் கண்டு
உய்து உய்வித்து
செய்து செய்வித்து
அறிந்து அறிவித்து
புரிந்து புரிவித்து
தெரிந்து தெரிவித்து
பரந்து பரப்பித்து
உணர்ந்து உணர்வித்து
கொணர்ந்து கொள்வித்து
இயைந்து இயைவித்து
கிடைத்து கிடைப்பித்து
கடைந்து கலை உருவாகி
நினைந்து உருகி தொழுவோருக்கு
அன்னை அருள் பரிபூரணம்.

ஆக்கம்
தி. இரா. சந்தானம்
23.02.2020

Wednesday, 19 February 2020

நான் எழுதிய பாடல்

  நான் எழுதிய பாடல்

அகத்தீசா அகத்தீசா
மகத்தான அகத்தீசா
உள்முகத்தான அகத்தீசா
பன்முகத்தான அகத்தீசா
சின் மயமான அகத்தீசா
உண்மை யமான அகத்தீசா
உன் -மயமான அகத்தீசா
உள் -மயமான அகத்தீசா
தன் மயமான அகத்தீசா
நாடி வருவோருக்கு
நாடியில் வருவீரோ
நாடியில் வந்து பாடி வருவீரோ
ஓடி எம்மில் வருவீரோ
ஓடி எம் இல் வருவீரோ
ஒளியாய் வருவீரோ
கிளியாய் வருவீரோ
இந்த கலியில் வருவீரோ
மலையில் வருவீரோ
மழையில் வருவீரோ
சிலையில் வருவீரோ
அக்கணமே வருவீரோ
அருள் தருவீரோ
பொருளாய் இருப்பீரோ
கருவாய் உதிப்பீரோ
உருவாய் இருப்பீரோ
அருவாய் வருவீரோ
திருவாய் மலர்வீரோ
இலகுவாய் தருவீரோ
வெகுவாய் காப்பீரோ
தீமை அழிப்பீரோ
ஊழ்வினை களைவீரோ
தமிழ் வளர்ப்பீரோ
யோகம் அளிப்பீரோ
சித்தர் தலைவரே
அகத்திய மாமுனியே
அகந்தை அழிப்பவரே
அருளெல்லாம் கொடுப்பவரே
சக்தி புதல்வரே
சங்கடம் அழிப்பவரே
காவல் தெய்வமே
கானக அரசரே
காத்து நிற்பவரே
கவலை தீர்ப்பவரே
ஆறுமுகன் சீடரே
ஊழ்வினை அழிப்பவரே
உற்சாகம் கொடுப்பவரே
தொல்லை போக்குபவரே
அருகில் இருப்பவரே
கும்பத்தில் உதித்தவரே
ஜோதியாய் இருப்பவரே
இலக்கணம்  வகுத்தவரே
ஆயுர்வேதத்தின் தந்தையே

விதியே, எம் மதியே
நீயே எம் பதியே
தந்தாய் நிம்மதியை
தந்தாய் நின் மதியை
வருவாய் அருள்வாய்
திருவாய் மலர்வாய்
மறைபொருள் தருவாய்
நிறைநிலை காணுவாய்
அகத்தின் ஈசனே
எம் அகத்திய மாமுனியே
குருவின் குருவே
நின் தாள் சரணம்
நீயே வரணும் வரணும்
அருளே தரணும் தரணும்
தாயாய் வந்தாய்
சேயாய் நின்றாய்
மாயமாய் இருந்தாய்
ஒளியை தந்தாய்
தந்தையாய் இருந்தாய்
சிந்தையில் தெளிந்தாய்
சித்தத்தை அளித்தாய்
பித்தத்தை அழித்தாய்
வாதத்தை ஒழித்தாய்
கபத்தை அறுத்தாய்
அறிவை வளர்த்தாய்
அகங்காரம் ஒழித்தாய்
அச்சம் நீக்கினாய்
தெளிவை காட்டினாய்
காட்டாமல் காட்டினாய்
ஊட்டாமல் ஊட்டினாய்
ஓங்காரம் ஒலித்தாய்
ஒளியின் ஊடே ஒளிந்தாய்
தேடாமல் தேடினாய்
சூடாமல் சூடினாய்
பாடாமல் பாடினாய்
செய்யாமல் செய்தாய்
சொல்லாமல் சொன்னாய்
நில்லாமல் நின்றாய்
இல்லாமல் இருந்தாய்
இல்லமதில் இருக்கும் தாய் நீ
சொல்லின்  வன்மையாய் இருந்தாய்
வில்லின் தன்மையாய் வளைந்தாய்
புல்லின் தன்மைக்குள் இருந்தாய்
கல்லுக்குள் தேரையாய் இருந்தாய்
வானவில்லாய் ஜொலித்தாய்
வண்ணத்து பூச்சியாய் பறந்தாய்
கான மயிலாய் ஆடினாய்
காண குயிலாய் பாடினாய்
ஓடும் நதியாய் ஓடினாய்
தேடும் கண் பார்வைக்குள் இருந்தாய்
ஆசானாய் விளங்கினாய்
அறிவை தந்தாய்
பாஷாணம் அளித்தாய்
பழியை போக்கினாய்
குருட்டை நீக்கினாய்
குருவாய் ஆக்கினாய்
ஆக்கினையில் இருந்தாய்
அக்கினியாய் இருந்தாய்
ஞான பழமாய் இருந்தாய்
ஞானியர் தலைவனாய் இருந்தாய்
சந்திர சூரியனாய் இருந்தாய்
சந்திர மண்டலத்தில் இருந்தாய்
ஏழ் கடலும் நீ
ஏழ் கடலை குடித்தவனும் நீ
எழுமலையானும் நீ
ஏழாம் அறிவும் நீ
எட்டாத பொருளும் நீ
வற்றாத செல்வம் நீ
தற்கால பொருளும் நீ
முக்காலம் உணர்ந்தாய் நீ
இக்காலம் உரைப்பாய் நீ
பகலும் நீ இரவும் நீ
மாலை மதியமும் நீ
சொல்லும் நீ பொருளும் நீ
அருளும் நீ திரு வும் நீ
தோன்றா பொருளும் நீ
தோன்றிய நிலையும்  நீ
நீங்கா நினைவும் நீ
நிலை பெற்று நிற்பவனும் நீ
மூலப்பொருளும் நீ
கால காலனும் நீ
வேதத்தின் வித்தகன்  நீ
யோகத்தின் உச்சம் நீ
சிவானுபூதியின் மொத்தம் நீ
சித்தன் நீ சிவனும் நீ
அத்தன் நீ அயனும் நீ
புத்தன் நீ சுக்தன்  நீ
கணலாய் இருந்தாய்
நிழலாய் நடந்தாய்
பொருளாய் இருந்தாய்
அருளாய் பொழிந்தாய்
காற்றாய் அடித்தாய்
ஊற்றாய் உறைந்தாய்
பனியில் கிடந்தாய்
மலையில் பொதிந்தாய்
குகையில் அமர்ந்தாய்
யோகம் புரிந்தாய்
காலம் கடந்தாய்
ஞாலம் படைத்தாய்
சூலம் தரித்தாய்
சுழிமுனையில் விரிந்தாய்
காட்சி கொடுத்தாய்
தாமரையாய் மலர்ந்தாய்
தாயுமான தயாபரா
தன்னிகரில்லா தலைவரா
தொழுபவருக்கு தோழனாய்
அழுபவருக்கு ஆறுதலாய்
அடியவர்க்கு அடியவராய்
தேவருக்கு இந்திரனாய்
முனிவருக்கு மூத்தவனாய்
அணிபவருக்கு மாலையாய்
ஆனந்த கூத்தனாய்
ஆனந்த பத்மநாபனாய்
பொகளூரின் செல்வனாய்
கல்லாரில் இறைவனாய்
பொதிகையின் முதல்வனாய்
வெள்ளியங்கிரி ஈசனாய்
பழனியில் போகனாய்
அகஸ்திய கூடத்தின் நடு நாயகமாக விளங்கும்
எங்கள் பொதிகை மலை வேந்தனின் தாள் சரணம் சரணம் சரவணபவ ஓம்.

தி. இரா. சந்தானம்
20.02.2020

Monday, 17 February 2020

அகத்தியர் வாக்கு


Monday, 10 February 2020

என்னுடைய தனிப்பட்ட ஜீவ அருள் வாக்கு - அகத்தியர் அருளியது 08.02.2020

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என்னுடைய தனிப்பட்ட ஜீவ அருள் வாக்கு - அகத்தியர் அருளியது  08.02.2020

அகத்தியர் ஜீவ அருள் வாக்கு

உரைப்பவர்  : குருஜி இறைசித்தர்
                           Ph. 95850 18295

உரைத்த இடம்  - பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி பீடம்

அருள் பெறுபவர் - தி. இரா.சந்தானம் , கோவை
                                       Ph.91760 12104

தேதி - 08.02.2020

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


அகத்தியர் அருளுரை கீழ் வருமாறு



தனிப்பட்ட முறையில் கூறிய பரிகாரங்கள் பகிரப்பட்ட மாட்டாது

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அகத்தியர் ஜீவ நாடியை பற்றி உலகோர் புரிந்து கொள்ளவே இந்த பதிவு

பல அன்பர்கள் அகத்தியரின் நேரடி வார்த்தைகளை கேட்க முடியாதவர்கள் , இந்த பதிவை படித்து புத்துணர்ச்சி பெறுவர் .

ஜீவ நாடியில் அருள் பெரும் எல்லோருக்கும் அகத்தியர் எல்லாவற்றையும் உரைப்பது இல்லை - சிறந்த அருள் வாக்கினை பெற்றவர்கள் பதிவிடுவது இல்லை - பின் எவ்வாறு அகத்தியரை பற்றி புரியும் -

பலர் ஜீவ நாடி என்றால் ஏதோ பரிகாரம் கூறுவார்கள் - கேட்டு செய்ய வேண்டும் அவ்வளவு தானே என்று முக்கியத்துவம் கொடுப்பதில்லை -

ஆனால் ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர வைப்பதும் - இயற்கை சேதங்களை முன்கூட்டியே அறிவிப்பதும் , இயற்கை சேதங்களில் இருந்து காப்பதும் - ஊக்கம் கொடுப்பதும்  - ஒரு தாயாகவும் தகப்பனாகவும் குருவாகவும் பரம்பொருளாகவும் இருந்து வழி காட்டுவதும் அய்யன் ஒருவரே

படித்து பயன் பெறுவீர்களாக


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


08.02.2020 6.25pm
ஸ்ரீனுவாசப்பெருமானின் திருநாமம் பெற்றவனே

உன் பணியை கண்டு யாம் மணமகிழ்ந்தோம்

குரு பூசை தண்ணிலே நீ ஆற்றிய பெரும் பணியை கண்டு யாம் மன நிறைவு அடைந்தோமே.

வேலவன் துணை நிற்க வீண் மனச்சுமை ஏன் மகனே உனக்கு

சித்தனும் தேவனும் இதில் அடங்க உனக்கு நல்லருள் புரிவானே

நாமம் அதை ஜெபியடா

நாளென்ன கோளென்ன உனை என்ன செய்யும்

மாந்த்ரீகம் தாந்த்ரீகம் எல்லாம் உன்னிடம் மண்டியிடும்

உமை யாம் ஆள்வோம் ஆட்கொள்வோம்.
மனம் தளராதே தூயவனே

கொண்டவளுடன் வீண் வாதத்தை விட்டொழி

அவள் முற்ப்பிறவியில் ஒரு நிலை சார்ந்த மகளாக வளர்ந்தாளய்யா

நாவடக்கம் கொள் மகனே

உமக்கு யாம் யோக நிலைக்கு , பின் அழைப்போம்

தென்பொதிகை மலை தனிலே நீ வந்து யாசகம் வாங்கி பூசைதனை இடு
குறிப்பு - தென்பொதிகை என்றால் பாபநாசம் மலை என்று பொருள்.

இடு மகனே, உமை யாம் காப்போம்

மழலை வாழ்வு சீர் பெரும் அப்பா

மனைதனிலே நான் முன் சொன்ன புகை தனி இடு.

கால பைரவனை ஞாயிறு என்று உரைக்கும் நன்நாளிலே ஆலயம் சென்று தொழுது வா

வேலவன் துணை நிற்க யாம் உமை காப்போம்

முற்றே.








Saturday, 8 February 2020

அருள்மிகு ஶ்ரீ உலோபாமுத்திரை உடன்உறை அகத்திய மாமுனி ஆலய குடமுழுக்கு விழா இனிதே நிறைவேறியது


https://youtu.be/SxtNl3itfIY

*இந்த அற்ப்புத காட்சியை அனைவருக்கும் , அனைத்து ஊடகங்களிலும் பகிர வேண்டுகின்றோம்*

இறை அருளால் பிப்ரவரி 7ஆம் தேதி , 2020 அருள்மிகு ஶ்ரீ உலோபாமுத்திரை உடன்உறை அகத்திய மாமுனி ஆலய குடமுழுக்கு விழா இனிதே நிறைவேறியது. உங்கள் பார்வைக்கு சமர்பிக்கின்றோம்.

🌸🌸🌸🌸🙏🌸🌸🌸🌸
*சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வேந்தன், தமிழ் வளர்த்த அகத்திய மாமுனி புகழ் ஓங்குக*
🌸🌸🌸🌸🙏🌸🌸🌸🌸


Thursday, 6 February 2020

எனது அனுபவம் மின்மினி பூச்சிகளுடன்

தற்போது எதேச்சையாக மாடி ஏறி பார்த்தபோது. எங்கள் வீட்டின் அருகில்  உள்ள கோவிலில் உள்ள கோவிலில் உள்ள அரச மரமும் வேப்ப மரமும் பின்னிப்பினைந்த ஸ்தல விருக்ஷ மரத்தில் அலங்கார விளக்கு போட்டது போல பல நூறு விளக்குகள் மின்னிக்கொண்டு இருந்தன. முதலில் நான், அது ஏதோ அலங்கார விளக்கு என்று நினைத்தேன். ஆனால் பின்னர் உற்று நோக்கிய போது அது அலங்கார விளக்கை போல தெரியவில்லை. ஒரே வெள்ளை நிற ஒளியுடன் மின்னிக்கொண்டு இருந்தன. அப்போது தான் புரிந்தது அவை மின்மினி பூச்சிகள் என்று. நமது ஊர் கோவிலில் இப்படி ஒரு அதிசயம், யாருமே பார்க்கவில்லை, யாருக்கும் பார்க்க கிடைக்கவில்லை. எனக்கு மட்டுமே அந்த பாக்கியம்.

சரி , அப்படி அந்த மின்மினி பூச்சிகளின் காட்சியில் என்ன உள்ளது என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். யாரவது பார்த்து இருந்தாலும் அவர்களால் புரிந்து கொண்டு இருக்க முடியாது.

இணையத்தில் உள்ள வெங்கடராம ஸ்வாமிகள் அருளுரையை உங்களுக்கு தெரிந்து கொள்வதற்காக கீழே தொகுத்து கொடுத்து உள்ளேன்.

இன்று இரவு 11 மணியை எட்டியதால், அருகில் சென்று புவைப்படம் எடுக்க முடியவில்லை. நாளை பார்க்கிறேன். மீண்டும் வந்தால் அருகில் சென்று புகைப்படம் எடுத்து காண்பிக்கிறேன். இப்போதைக்கு zoom செய்து எடுத்த படம் உங்கள் பார்வைக்கு. இன்று பிரதோஷம், கோவில் நிர்வாகிகள், கோவில் பூசாரி, பக்தர்கள் அனைவருக்கும் கிடைக்காத ஒரு காட்சி இன்றி அகத்தியர் அருளால் நாம் காணப்பெற்றோம்.

குரு வாழ்க குருவே துணை

தி. இரா. சந்தானம்
கோவை.
06.02.2020
9176012104
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

தெய்வீக மின்மினி
உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவனின் படைப்பிற்குப் பின்னும் ஆழ்ந்த தெய்வீக காரணங்கள் உண்டு. இவ்வகையில் மின்மினிப் பூச்சிகளின் படைப்பிற்குப் பின்னும் சுவையான ஆன்மீக அர்த்தங்கள் உண்டு.

மனிதனை மிகவும் கவர்ந்த பல உயிரினங்களில் மின்மினிப் பூச்சியும் ஒன்று. எந்த உயிரினத்தின் படைப்பு இரகசியமும் விஞ்ஞானத்தின் கருவிகளுக்குப் புலப்படாது என்பது உண்மையாயினும் மின்மினிப் பூச்சிகளின் ஒரு சிறு அணுக் கூற்றைக் கூட இன்றைய விஞ்ஞானக் கோட்பாடுகளால் விளக்க முடியாது என்பதே சித்தர்கள் நமக்கு அறிவுறுத்தும் பாடமாகும்.

விளக்கு என்று இருந்தால் அதில் ஒளியும் வெப்பமும் இருப்பதே இயற்கை. ஆனால், ஒரு சிறிது வெப்ப சக்தியும் இன்றி ஒளியை மின்மினிப் பூச்சிகள் அளிக்கின்றன என்றால் அதன் தெய்வீகத் தன்மை எத்தகைய சிறப்பு வாய்ந்தாக இருக்கும்?

பொதுவாக, மின்மினிப் பூச்சிகள் நமது பூமிக்கு உரிய சிவப்பு (மண்) வண்ணத்தையும், புவர் லோகத்திற்கு உரித்தான பச்சை வண்ணத்தையும், சுவர் லோகத்திற்கு உரித்தான மஞ்சள் வண்ணத்தையும் தங்கள் ஒளிப் பிரகாசத்தால் அளிக்கின்றன. எனவே மின்மினிப் பூச்சிகளை ”திரிலோக சஞ்சாரிகள்” என்று காரணப் பெயரால் அழைக்கின்றனர். சித்தர்களோ அவற்றை சுடர்மணிகள் என்று அன்புடன் விளிக்கின்றனர்.

இறைவனை, ”சோதியே, சுடரே,” என்றுதானே பெரியோர்கள் அழைப்பார்கள். முழுக்க முழுக்க ஒளிப் பிரகாசம் மட்டும் நிறைந்ததே சுடர் எனப்படும். இறைவன் வெறும் ஜோதிப் பிரகாசமாகவே விளங்குவதால் அவரை அருட்பெருஞ்சோதி என்றும், சுடர் என்றும் அழைக்கின்றனர். ”தோளா முத்தச் சுடரே,” என்று துதிக்கும்போது பிரகாச ஒளி மட்டுமே முழுவதும் நிறைந்தவர் என்பதுதானே அர்த்தமாகின்றது?

இவ்வாறு தங்கள் வாழ்நாள் முழுவதும் மூன்று லோகங்களுக்கும் உகந்த வண்ண ஜோதிக் கிரணங்களை பரப்பியே வாழ்வதால்தான் சித்தர்கள் மின்மினிப் பூச்சிகளை சுடர் மணிகள் என்று பாராட்டுகின்றனர்.

தமிழ் மொழி சுப்ரமண்ய சுவாமியின் தூல சரீரமாக அமைவதால் தமிழ் வார்த்தைகளில் ஆழ்ந்த அற்புதமான அர்த்தங்கள் பொதிந்திருக்கும். மின்மினி என்னும் தமிழ் வார்த்தையும் அர்த்தம் பொதிந்த பதமாகும். ”ம, ன” என்ற மெல்லின எழுத்துக்களால் ஆன மின்மினி என்ற வார்த்தை மென்மையைக் குறிக்கும். பெயருக்கேற்ப இப்பூச்சிகளின் உடல் மிகவும் மென்மையாக, மிருதுவாக இருக்கும்.


ஸ்ரீவிநாயகர் கருப்பத்தூர்

பொதுவாக, ஒருவர் எந்த அளவு இறைவனை நோக்கி தவம் இயற்றுகிறாரோ அந்த அளவிற்கு அவருடைய உடல் உறுப்புகள் மென்மை அடையும். மகான்களின் தூல உடம்பை தொட்டுப் பார்த்து உணரும் பாக்கியம் பெற்றவர்களுக்கு இந்த உண்மை விளங்கும். மேலும் எந்த அளவு உடல் மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அது வலிமை உள்ளதாகவும் இருக்கும்.

பெண்கள் ஆண்களை விட ஏழு மடங்கு ஆன்மீக சக்தி உடையவர்களாக இருப்பதால் அவர்கள் மென்மையான உடல் வாகுடன் இருக்கிறார்கள். மேலும் அதிக சக்தியை வெளிப்படுத்தக் கூடிய அவர்களுடைய ஜனன உறுப்புகளும் மிகவும் மென்மையாக இருப்பதற்குக் காரணமே அந்த உறுப்புகளால் நிறைவேற்றப்பட வேண்டிய பணி மிகவும் சிறப்புடையது என்பதற்காகத்தான். இதை உணர்வதே உண்மையான தெய்வீகம்.

அப்படியானால் உலகில் உள்ள ஜீவன்களை கரையேற்றுவதற்காக அவதாரம் எடுத்து வந்துள்ள மகான்களின் உடல் மிகவும் பஞ்சு போல் மென்மையாக இருப்பதில் அதிசயம் இல்லையே.

அதே போல மிகவும் மென்மையான உடலமைப்பை மின்மினிப் பூச்சிகள் பெற்றிருப்பதால் அவைகளின் பெயரும் மென்மையான எழுத்துக்களால் அமைந்துள்ளன.

மேலும், மின்மினிப் பூச்சிகள் என்று கூறும்போது ”பூச்சி” என்ற வார்த்தையில் பொதிந்த அர்த்தத்தையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ”பூச்சி” என்ற வார்த்தைக்கு உரிய பல அர்த்தங்களில் ”அடிப்படை உயிர்”, ”காரணம்” என்பவையும் அடங்கும்.

சித்தர்கள் கூற்றின்படி விந்து இரகசியம் அறிந்தவனே உயிர் இரகசியம் அறிந்தவன் ஆகிறான். உயிர் இரகசியம் அறிந்தவன்தான் ஆத்மாவைப் பற்றி உணர முடியும். ஆன்மாவை உணர்ந்தவன்தான் இறை தரிசனம் பெற முடியும். விந்து இரகசியத்திற்கு ஆதாரமாய் இருப்பதே சுக்ர சக்தியாகும். இந்த சுக்ர சக்தியை அளிப்பதே மின்மினிப் பூச்சிகளின் அருந் தொண்டாகும்.

ஆம், கற்பனைக்கும் எட்டாத அற்புத ஆன்மீகத் தொண்டாற்றுபவையே மின்மினிப் பூச்சிகளாகும். நவீன விஞ்ஞானக் கோட்பாட்டுடன் ஒப்பிட்டுச் சொன்னால் ATP enzyme கூறின் மூல சக்தியாக அமைவதே சுக்ர சக்தியாகும். இதை எந்த உபகரணங்களாலும் பார்க்கவோ உணரவோ முடியாது.

இவ்வாறு மனித சமுதாயத்திற்கு வேண்டிய சுக்ர சக்திகளை வான மண்டலத்திலிருந்து கிரகித்துத் தரும் இந்த அற்புத சேவையை மின்மினிப் பூச்சிகள் எப்படி நிறைவேற்றுகின்றன என்பதை விளக்குவோம்.

ஒவ்வொரு மார்கழி மாதப் பிறப்பிலும் திருஅண்ணாமலை உச்சியிலிருந்து வெண்பனி வடிவில் ஒரு சக்தி உற்பத்தியாகி உலகெங்கும் வியாபிக்கிறது. இதை ஆங்கிலத்தில் ஓசோன் என்று அழைக்கிறோம். இந்த ஓசோன் வாயு மிகவும் சக்தி வாய்ந்த கிருமி நாசினி. இதன் சக்தியைப் பெறுவதற்காக தமிழ்நாட்டில் உள்ள மக்கள் விடியற் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து வீட்டு வாசலை நீர் விட்டு சுத்தம் செய்து, பசுஞ் சாணம் தெளித்து அதன் மேல் பச்சரிசி மாக்கோலம் இட்டு பசுஞ் சாணத்தை அந்தக் கோலத்தின் மேல் வைத்து அதன் மேல் ஒரு பறங்கிப் பூவை வைப்பார்கள்.

மார்கழி என்பது மார்கசீர்ஷம் என்னும் நட்சத்திரத்தின் (தமிழில் மிருக சீரிடம்) பெயரைக் கொண்டு வழங்கப்படுவது. மிருக சீர்ஷ நட்சத்திரம் செவ்வாய் பகவானின் பாத சாரத்தைப் பெற்றிருப்பதால் மார்கழி மாதத்தில் அற்புதமான பூமி சக்திகள் தோன்றுகின்றன. இந்த பூமி கிரணங்களையும் ஓசோன் வாயு கிரணங்களையும் ஒருங்கிணைப்பதே பச்சரிசி மாக்கோலம், பசுஞ் சாணம், பறங்கிப் பூ (மஞ்சள் பூசணிப் பூ).


ஸ்ரீசுகந்தகுந்தளாம்பாள் கருப்பத்தூர்

எனவே நமது முன்னோர்கள் கற்றுத் தந்த வழிபாட்டு முறைகள் அற்புதமான அனுகிரக சக்திகளை அளிக்கக் கூடியவை. மார்கழி மாதத்தில் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றி விட்டால் அந்த வருடம் முழுவதும் மக்களுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து விடும் என்றால் மார்கழி மாத வழிபாட்டுப் பலனை எப்படி வார்த்தைகளால் விளக்க முடியும்.

அதே போல இந்த ஓசோன் வாயுவை கிரகித்து அதிலிருந்து மக்களுக்குத் தேவையான சுக்கிர சக்திகளைப் பெற்றுத் தருவதே மின்மினிப் பூச்சிகளின் சேவையாகும். சாதாரண மனிதர்களால் ஓசோன் வாயுவிலிருந்து சுக்ர சக்தியை கிரகிக்க முடியாது. அதற்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஜீவன்களால்தான் அந்தப் பணியை நிறைவேற்ற முடியும்.

சுக்கிரனுக்கு உரித்தான எண் 6. எனவே ஆறு கால்கள் உடைய வண்டினங்களும் பூச்சிகளும்தான் சுக்கிர சக்திகளை இனங் கண்டு கொள்ள முடியும். மேலும் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகத்திற்கு உடைய வண்ணங்களை அளிக்கக் கூடிய ஜீவன்கள்தான் சுக்ர சக்திகளைக் கையாள முடியும்.

மின்மினிப் பூச்சிகள் புழு பருவத்தில் இருக்கும்போது மார்கழி மாதம் முழுவதும் பூமியை விட்டு வெளிவராமல் பூமி சக்திகளைக் கிரகிக்கின்றன. அப்போது அவை எந்த உணவையும் ஏற்பதில்லை. மார்கழி மாதம் முழுவதும் உபவாசம் இருந்து உத்தராயணத்தில் கண் திறக்கின்றன. அப்போது சூரிய பகவானை வழிபடும் நத்தை போன்ற ஜீவன்களை உணவாகக் கொள்கின்றன.

இதன் பின்னால் அற்புத ஆன்மீக இரகசியங்கள் பொதிந்துள்ளன. மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகள் தங்கள் உடலை மற்ற ஜீவ ராசிகளுக்கு உணவாக அர்ப்பணித்து பொது நலத்தைப் பேணுகின்றன. உதாரணமாக, ”பா, பு” என்ற பீஜாட்சரங்களை ஓதி கஞ்சலங்கை என்ற தவளை ஒரு வருடம் முழுவதும் ஓதி அதன் பலனை தானே உணவாக மாறி இஷ்ட பரிமாண திவ்ய நாகம் என்னும் நாகதேவதைக்கு அளிக்கும் தியாகத்தை திருக்கழிப்பாலை திருத்தல வரலாற்றின் மூலம் நாம் அறியலாம். இதன் விளக்கங்களை கடுக்கன் மகிமையை விளக்கும் எமது நூலில் காணலாம்.

அதே போல நத்தைகள் சூரிய பகவானைத் துதிப்பதால் கிடைக்கும் அனுகிரக சக்திகளை மின்மினிப் பூச்சிகளுக்கு அளிக்கின்றன. அதனால்தான் தங்கள் ஒரு மாத உபவாசத்திற்குப் பின் நத்தைகளை உண்ட மின்மினிப் பூச்சிகள் எந்த வண்ணத்திலும் ஒளிப் பிரகாசத்தை ஏற்படுத்தும் அற்புத தெய்வீக சக்திகளுடன் விளங்குகின்றன.

அது காரணம் பற்றியே நத்தைகள் ஊர்ந்து சென்ற தாரையில் சூரிய ஒளி பட்டு அது மனிதர்கள் மேல் பிரகாசித்தால் சுப சகுனமாக கணக்கிடப்படுகிறது.

இவ்வாறு செவ்வாய் பகவானின் அனுகிரகத்தையும் சூரிய பகவானின் அனுகிரகத்தையும் பெற்ற மின்மினிப் பூச்சிகள் சூரிய பகவானின் ஏழு நிறங்களுடன் சத்துவம், ரஜோ தமோ குண பேதங்களையும் இணைத்து ஒன்பது வண்ணங்களுடன் மிளிர்கின்றன. ஒரு மனிதனுக்கு உள்ள ஒன்பது சூட்சும உடல்களின் வண்ணங்களைத்தான் மின்மினிப் பூச்சிகள் பிரதிபலிக்கின்றன என்பதே இதுவரை மக்கள் சமுதாயம் அறிந்திராத தெய்வீக உண்மையாகும்.


ஒன்பது வண்ண ஒளிக் கீற்றுக்களை
வெளிப்படுத்தும் மின்மினிப் பூச்சி

இந்த விந்தையை இங்கே உள்ள படத்தின் மூலம் நீங்களே கண்டு உணர்ந்து கொள்ளலாம். இவ்வாறு ஒன்பது வண்ணங்களுடன் பிரகாசிக்கும் மின்மினிப் பூச்சிகளைக் கண்டு தம்பதிகளுக்கு ஏற்படக் கூடிய தாம்பத்ய பிரச்னைகளை அறியக் கூடிய ஜோதிடக் கலை முற்காலத்தில் பின்பற்றப்பட்டு வந்தது. வர்ண மாலை எனப்படும் அந்த ஜோதிடக் கலை நாட்கள் செல்லச் செல்ல மறைந்து விட்டது.

தம்பதிகளுக்கு இடையே தேவையான ஈர்ப்பு சக்தியைத் தோற்றுவிக்கும் வல்லமை உடைய சுக்ர சக்திகளை நிர்வகிக்கும் திறனை மின்மினிப் பூச்சிகள் பெற்றிருப்பதால் வர்ண மாலை ஜோதிடக் கலையால் தம்பதிகளுக்கிடையே உள்ள தாம்பத்ய உறவுப் பிரச்னைகளை எளிதில் இனங் கண்டு தேவையான, பரிகார முறைகளை அளித்து வந்தனர் அக்காலப் பெரியோர்கள்.

குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காப்பதே மின்மினிப் பூச்சிகளின் வழிபாடாகும். தம்பதிகள் அவ்வப்போது இத்தகைய மின்மினிப் பூச்சிகள் கூட்டமாக சஞ்சாரம் செய்யும் மரங்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வலம் வந்து வணங்கி வருவதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

மின்மினி என்பதைப் பிரித்தால் ம்+இ+ன்+ம்+இ+ன்+இ என்று வரும். இவ்வாறு ”இ” என்ற குற்றெழுத்து சுட்டெழுத்தாய்த் தொழில் செய்யும்போது அது நிலைத்த சக்திகளை உருவாக்கும். இதனால் தம்பதிகளுக்கு இடையே உள்ள உறவும், நண்பர்களுக்கு இடையே உள்ள உறவும். முதலாளி தொழிலாளிகளுக்கு இடையே உள்ள உறவும், சமுதாயத்தில் சகோதர உறவுகளும் நிலைப்படும். இவற்றை அளிக்கவல்லதே மின்மினிப் பூச்சிகளின் வழிபாடு.

மின்மினிப் பூச்சிகளுக்கு ஒளிகாட்டிகள், வழிகாட்டிகள், ஒளி கூட்டிகள் என்ற காரணப் பெயர்களும் உண்டு. தங்கள் நிற மாலை மூலம் மனிதர்களின் குணாதிசயம், வரக் கூடிய வியாதிகள், குடும்பப் பிரச்னைகள் போன்றவற்றை தங்கள் ஒளிப் பிரகாசத்தின் மூலம் காட்டுவதால் அவைகள் ஒளி காட்டிகள் என அழைக்கப்படுகின்றன.

இறந்தவர்கள் அனைவரும் திருக்கைலாயத்திற்கோ, வைகுண்டத்திற்கோ சென்று விடுவதில்லை. லட்சத்தில் ஒருவரோ கோடியில் ஒருவரோதான் அத்தகைய உயர் நிலைகளை அடைகிறார்கள். மற்றவர்கள் பெரும்பாலும் ஒளி உலகம், மத்திம உலகம், இருண்ட உலகம் இவற்றைத்தான் அடைகிறார்கள்.

இவற்றில் ஒளி உலகம் அடைந்தவர்களை நாம் நமது பித்ருக்கள், முன்னோர்கள் என்று அழைக்கிறோம். மனிதர்கள் அளிக்கும் தர்ப்பணங்கள், திவசம், படையல் போன்ற வழிபாடுகள் எல்லாம் இந்த ஒளி உலகத்தில் உள்ளவர்களுக்குத்தான் போய்ச் சேரும்.

தற்கொலை, விபத்து போன்ற அகால மரணம் அடைந்தவர்கள் பெரும்பாலும் இருண்ட லோகத்திற்குத்தான் செல்வார்கள். இதில் பல விளக்கங்கள் உண்டு. அவற்றைத் தக்க பெரியோர்கள் மூலம் தெரிந்து கொள்ளவும்.

அவ்வாறு இருண்ட லோகம் அடைந்தவர்களை பூமியில் உள்ள எவருமே தொடர்பு கொள்ள முடியாது. அப்படியானால் நாம் அத்தகையோருக்கு பூமியில் அளிக்கப்படும் தர்ப்பணம், திவசம் போன்றவை வீணாகி விடுமா என்று நினைக்கத் தோன்றும் அல்லவா?

உண்மையில் தெய்வீகத்தில் நாம் செய்யும் எந்தக் காரியங்களும் வீணாவதில்லை. நீங்கள் ஒரு வங்கியில் மாதம் மாதம் போட்டு வைக்கும் பணம் நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது பெருந்தொகையாக வட்டியுடன் உங்களுக்குக் கிடைக்கிறது அல்லவா? அது போல இருண்ட லோகத்தை அடைந்தவர்களை நினைத்து நீங்கள் செய்யும் வழிபாடுகள் அவர்களைப் போய்ச் சேராது எனினும் அந்த வழிபாட்டுப் பலன்கள் உங்கள் வம்சாவழியில் உள்ள ஒளி உலகத்தைச் சேர்ந்த மூதாதையர்களுக்கு போய்ச் சேரும்.

எப்போது இருண்ட லோகத்தில் உள்ள உங்கள் மூதாதையர் அங்கிருந்து வெளியே வருகிறாரோ அப்போது ஒளி உலகத்தில் உள்ள உங்கள் பித்ருக்கள் நீங்கள் இவ்வளவு நாள் அளித்த தர்ப்பண சக்திகளை உங்கள் இருண்ட லோக வாசிகளுக்கு அளித்து விடுவார்.

சினிமா, அரசியல், விளையாட்டுத் துறை, விஞ்ஞானம் போன்ற துறைகளில் திடீரென பெரும் பதவிகள், விருதுகள் போன்றவற்றைப் பெற்று உலகப் புகழுடன் விளங்குவதற்கு இவ்வாறு பல வருடங்கள் சேர்த்து வைத்த தர்ப்பணப் புண்ணிய சக்திகள் திடீரென ஒரு இருண்ட லோகத்தில் இருந்தவருக்கு சேர்ந்து அவர் ஒரே சமயத்தில் அனைத்து புண்ணிய சக்திகளையும் உங்களுக்குப் பலனாக வழங்குவதுதான்.


கருப்பத்தூர் சிவாலயம்

அதனால்தான் பெரியோர்கள் அதிர்ஷ்டம் என்ற ஒன்றை ஏற்றுக் கொள்வதில்லை. முன்னால் நாம் சேர்த்து வைத்த புண்ணியமே பின்னால் சுகமாக வருகிறது என்பதே உண்மை.

பூமியில் உள்ளவர்கள் இருண்ட லோகவாசிகளைத் தொடர்பு கொள்ள முடியாது என்றாலும் மூவுலகிற்கும் சஞ்சாரம் செய்ய வல்ல மின்மினிப் பூச்சிகள் இருண்ட லோகவாசிகளையும் தொடர்பு கொள்ளும் சக்தி பெற்றவை.

மின்மினிப் பூச்சிகள் கூட்டமாகத் தங்கும் பால் விருட்சங்களுக்கு கையால் அரைத்த சந்தனம், தங்கள் கையால் அரைத்த மஞ்சள் இவற்றைப் பூசி குங்குமப் பொட்டிட்டு வலம் வந்து வணங்கி அம்மரத்தடியில் தர்ப்பண பூஜைகளை மேற்கொண்டால் உங்களுடைய தர்ப்பண சக்திகள் ஒளி உலக பித்ருக்களை அடையும். அவர்கள் எந்த இருண்ட லோகவாசிகளுக்கு அந்த புண்ணிய சக்திகளை அளிக்க வேண்டும் என்ற செய்தியை நீங்கள் தர்ப்பணம் அளிக்கும் மரத்திலுள்ள மின்மினிப் பூச்சிகள் அந்த ஒளி லோக பித்ருக்களிடம் தெரிவித்து விடும்.

இவ்வாறு இருண்ட லோகத்தில் வாழும் உங்கள் மூதாதையர்களை அடையாளம் கண்டு. அவர்களிடம் மனோ ரீதியான தொடர்பை ஏற்படுத்தி அவர்களைப் பற்றிய விளக்கங்களை ஒளி லோக பித்ருக்களுக்கு அளிப்பதால் மின்மினிப் பூச்சிகள் வழிகாட்டிகள் என்று புகழப்படுகின்றன.

நாரதர் ஒரு முறை அகத்திய பெருமானை பித்ரு லோகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு பல பித்ருக்கள் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதை அகத்தியர் பார்த்து திடுக்கிட்டார்.

நாரதரிடம், ”சுவாமி, ஏன் இந்த மூர்த்திகள் இவ்வாறு தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் என்ன தவறு புரிந்தனர்?” என்று வினவ நாரதர் குறுநகையுடன், ”முனிபுங்கவரே, அவர்கள் தவறேதும் செய்யவில்லை. பூமியில் அவருடைய வழித் தோன்றல்கள் செய்த மறந்த காரியத்தால் இங்கு இவர்கள் தலை கீழாகத் தொங்கும் நிலை ஏற்பட்டது,” என்றார்.

அகத்தியர், ”சுவாமி, அப்படியானால் அவர் யார் என்று சொன்னால் அவர் காலில் விழுந்து வணங்கியாவது இந்த முதியவர்களை அவலமான இந்தச் சூழ்நிலையிலிருந்து மீட்க முயற்சி செய்கிறேன்,” என்று பணிவுடன் கூறினார்.

நாரதர், ”முனிசிரேஷ்டரே, நீங்கள் யார் காலிலும் விழ வேண்டிய அவசியமில்லை. இவர்கள் அனைவரும் உங்களுடைய மூதாதையர்கள்தான். நீங்கள் இதுவரை தவம், யோகம் என்று மூழ்கி விட்டதால் திருமணம் என்ற தெய்வீக பந்தத்தைப் பற்றி நினைக்கவில்லை. நீங்கள் திருமணம் செய்து கொண்டால்தான் உங்களுடைய மனிதப் பிறவி பூர்த்தியாகும். அப்போது நீங்கள் அளிக்கும் தர்ப்பணம்தான் இவர்களை இந்த நிலையிலிருந்து விடுவிக்கும்,” என்று கூறி முடித்தார்.

அதன் பின்னரே ஸ்ரீஅகத்தியர் லோபா மாதாவை மணந்து தன்னுடைய மூதாதையர்களை பித்ரு லோகத்திலிருந்து விடுவித்து அவர்கள் கைலாயத்தை அடைய வழிவகுத்தார்.

இவ்வாறு ஒரு மனிதனுடைய பித்ருக்கள் நன்னிலை அடையும்போதுதான் அவனுடைய ஒன்பது சூட்சும சரீரங்களும் தூய்மை அடைகின்றன. அப்போதுதான் அவன் இறை மார்கத்தில் முன்னேற முடியும். இவ்வாறு ஒன்பது சரீரங்களின் வண்ணத்தை தூய்மைப்படுத்த மின்மினிப் பூச்சிகள் வழிகாட்டி மனிதனின் சூட்சும சரீரங்களின் ஒளியைக் கூட்ட, பெருக்க உதவுவதால் அவை ஒளி கூட்டிகள் என்று பாராட்டப்படுகின்றன.

மின்மினிப் பூச்சிகளின் தரிசனம் எத்தகைய மனக் கஷ்டத்தையும் போக்கி மனதிற்கு அமைதி அளிக்கக் கூடியதாகும். பல்வேறு மனக் கஷ்டங்களால் அல்லல்படுவோர் கீழ்க் கண்ட துதியை ஓதி இரவு படுக்கைக்குச் செல்லும் முன் குறைந்தது ஒரு நாழிகை (24 நிமிடம்) மின்மினிப் பூச்சிகளை தரிசனம் செய்து வந்தால் மனம் அமைதி பெறும். ஆழ்ந்த உறக்கம் கிட்டும்.

சுடர்மணி சோதியே சுப்பிரமே நிறைமணியே
இடர்களையும் பாங்கில் உனக்கினை யாருமுண்டோ
மனக் கவலை மாற்ற வல்ல மாமறையே மாமருந்தே
எனதிருள் நினதருளால் மறையாதோ மண்ணாளா

சுப்பிரம் என்பது 24வது யோகம். அந்த யோக ஸ்புடம் சதய நட்சத்திர ஸ்புடத்துடன் இணைந்து சதய நட்சத்திரத்தின் முதல் பாதம் குரு நவாம்சத்துடன் இணைவதும் சுடர் மணிக்கு ஒளி கூட்டுவதாகும். எனவே மின்மினிப் பூச்சிகள் திகழும் பால் விருட்சங்களின் அடியில் தர்ப்பண வழிபாடுகளை இயற்றுவதும் அதையொட்டி தேங்காய் மிட்டாய்கள், பர்பிகளைத் தானமளிப்பதும் அற்புத வழிபாடாகும்.

சூரிய பகவான் வழிபாடு செய்யும் திருநெடுங்களம் போன்ற திருத்தலங்களிலும் (பாஸ்கர பூஜை தலங்கள்), காவிரி போன்ற புனித நதிக் கரைகளில் அமைந்துள்ள திருத்தலங்களிலும், சூரிய பகவான் சிறப்புப் பெறும் திருத்தலங்களிலும் (உதாரணமாக முள் இல்லாத வில்வ மரம் திகழும் நகர்) மின்மினிப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் ஒரு குருநாதர் உண்டு. எறும்புகளுக்கு பிப்லாத மகரிஷியும், எருமைகளுக்கு சுவாலினன், காரடையான் கரட்டையும், கழுதைகளுக்கு ருத்ர பல்குனி சித்தரும் குருநாதர்களாய் அமைந்து நல்வழி காட்டுவது போல மின்மினிப் பூச்சிகளுக்கு சற்குரு அமைந்தவரே ஸ்ரீதிரிநாம கண்ட மகரிஷி ஆவார்.



திரிநாம கண்ட மகரிஷி நித்ய வாசம் செய்யும் திருத்தலங்களுள் ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் திருத்தலமும் ஒன்றாக இருப்பதால் இங்கு மின்மினிப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகம். மேலும் இன்னும் ஓர் அற்புத விசேஷமும் இத்தலத்திற்கு உண்டு. மின்மினிப் பூச்சிகளின் அவதாரத் தலமே கருப்பத்தூர் திருத்தலமாகும். ஜீவ நதிகளின் நீரோட்டம் நாளுக்கு நாள் உலகெங்கும் குறைந்து வருவதைப் போல மின்மினிப் பூச்சிகளின் நடமாட்டமும், மகான்களின் சஞ்சாரமும் குறைந்து வருவது கலியுகத்தின் யுக தர்மமே.

என்று நீங்கள் மின்மினிப் பூச்சிகளைக் காண முடியாத நிலை வருகிறதோ அன்று தெரிந்து கொள்ளலாம் பூமியில் உள்ள ஜீவ நதிகளும் மகான்களின் சஞ்சாரமும் முற்றிலும் மறைந்து விட்டதென்று.

ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் திருத்தலத்தில் முற்காலத்தில் மின்மினிப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. தற்காலத்தில் குறித்த சில சமயங்களில் மட்டும் அவைகளைக் காண முடிகிறது. ஆனால், பாக்கியம் பெற்றோர் இன்றும் இத்தலத்தில் மின்மினிப் பூச்சிகளைக் கும்பல் கும்பலாகத் தரிசிக்க முடியும்.

ஆயிரக் கணக்கான பட்டுப் பூச்சிகளைக் கொண்டே ஒரு பட்டுப் புடவை உருவாக்கப் படுவதால் ஆன்மீகத்தில் இருப்பவர்களாவது பட்டுத் துணிகளை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், இறைவனுக்கு பட்டு வஸ்திரங்களை அளிப்பதும், ஏழைகளுக்கும் சுமங்கலிகளுக்கும் பட்டுப் புடவைகளைத் தானமாக அளிப்பதும் ஏற்புடையதே. அதனால் பட்டுப் பூச்சிகள் நன்னிலை அடைந்து அத்தகைய தானம் அளித்தோரை வாழ்த்தி அற்புத புண்ணிய சக்திகளை அளிக்கும்.

பட்டுப் புடவையை வாங்க வசதி அற்றவர்களும் இறைவனுக்கு பட்டு வஸ்திரங்கள் சார்த்திய புண்ணிய சக்தியைப் பெற வழி வகுப்பதே மின்மினிப் பட்டாகும். மின்மினிப் பூச்சிகளின் பட்டொளி வீசிய வஸ்திரங்கள், ஆடைகள் மின்மினிப் பட்டு என அழைக்கப்படுகின்றன. அற்புதமான தெய்வீக சக்தியை மின்மினி ஒளிக் கீற்றுகள் கொண்டுள்ளதால் மின்மினிகளின் ஒளியை ”பட்டொளி” என்று சித்தர்கள் புகழ்கின்றனர்.

63 நாயன்மார்களின் ஒருவரான நேச நாயனார் முசிறி அருகே மணமேடு என்னும் கிராமத்தில் வாழ்ந்தவர். அவர் நெசவுத் தொழிலை மேற்கொண்டு இறைவனுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு வேஷ்டியை நெய்து எடுத்து வந்து ஸ்ரீசிம்மபுரீஸ்வரருக்கு சார்த்தி வந்தார்.

சப்திமி திதி அன்றே கருப்பத்தூர் திருத்தலத்தை அடைந்து தான் பஞ்சாட்சரம் ஓதி நெய்த வேட்டியை ஒரு மூங்கில் கூடையில் வைத்து தலையில் சுமந்தவாறே திருக்கோயிலில் உள்ள அரசமரத்தைச் சுற்றி சப்தமி திதி முழுவதும் வலம் வருவார். அவர் வாழ்ந்த காலத்தில் மின்மினிப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

மின்மினித் தாரகை குடை பிடிக்க
தாரகைக்குத் தாரகை குடை பிடிக்க
குடை பிடிக்கும் நாகமும் குனிந்து போற்றும்
குவலயத்து ஈசனைக் கூறாமல் போவேனோ

என்று ஓதியவாறே ஆனந்தத்துடன் வலம் வருவாராம். திருஞான சம்மந்த மூர்த்தி நாயனார் மூன்று வயதுடைய பாலகனாக தன்னுடைய தந்தையில் தோளில் செல்லும்போது தான் இறைவனுடைய திருப்பாதத்தின் கீழ் ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறோம் என்ற ஆனந்தப் பரவச நிலையில் இருப்பாராம்.

அது போல நேச நாயனார் இறைவனுக்காக நட்சத்திரங்கள் குடை பிடிக்க இறைவனுக்காக பட்டாடைகளை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம் என்ற பரவச நிலையில் மூழ்கி அரச மரத்தை வலம் வந்து கொண்டிருப்பாராம். இத்தகைய மின்மினிப் பட்டு வஸ்திரத்தை இறைவனுக்கு சார்த்தி வழிபடுவதால் ஒரு பட்டுத் துணியை அளிப்பது போல நூறு மடங்கு பலனைப் பெறலாம்.

எந்த வஸ்திரத்தையும் ஆடையையும் இவ்வாறு மூங்கில் கூடையில் வைத்து அரசமரத்தை சப்தமி திதியில் வலம் வந்து, சிறப்பாக மின்மினிப் பூச்சிகள் நடமாட்டம் உள்ள பால் விருட்சங்களை வலம் வந்து, அஷ்டமி திதியில் இறைவனுக்கு சார்த்தி வழிபடுவதால் திருமண தோஷங்கள் விலகும். குடும்ப ஒற்றுமை பெருகும்.

எட்டாமிட தோஷங்கள் விலகும். குறிப்பாக திருமணத்திற்கான முகூர்த்த லக்னத்திற்கு எட்டில் சுக்ரன் இருத்தலால் ஏற்படும் தோஷங்களைக் களைவதே ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் தலத்தில் நிறைவேற்றப்படும் வழிபாடாகும். சுயம்பு மூர்த்தி தலங்களிலும் இத்தகைய வழிபாட்டை நிறைவேற்றிப் பலன் பெறலாம்.

கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிபவர்களும், ஆர்க் வெல்டிங் பணியாளர்களும், எக்ஸ்ரே போன்ற சக்தி வாய்ந்த ஒளிக் கதிர்களை கையாள்பவர்களும் நேச நாயன்மாரை வணங்கித் துதித்து மேற்கூறிய சுடர்மணித் துதி, குடைக் கவசத் துதிகளை ஓதி வெயிலில் வாடும் ஏழைகளுக்கும், சாலைப் பணியாளர்களுக்கும் குடைகளைத் தானமாக அளித்தலால் தங்கள் துறையில் பாதுகாப்புப் பெறுவார்கள்.





Tuesday, 4 February 2020

08.02.20 பௌர்ணமி பூஜை, கோமதாவிற்கு உணவு

                     
வரும் சனிக்கிழமை 08.02.2020 தை மாதம் பௌர்ணமி சிறப்பு பூஜை, சிறப்பு யாகம், சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு அன்னதானம், குருவருளும் திருவருளும் சேர்ந்திட பெருவருளாய் வருவோருக்கு எல்லாம் கிட்டி ஒளி மிகுந்த வாழ்வை பெற்று உய்ய , எல்லாம் வல்ல அகத்தீசர் அருளுடன், முருகனருள் முன்நிற்கவும், ஈசன் கணேசன் கிரீசன் அருளும் சேர்ந்து, எண்ணிலா கோடி சித்தர்கள் அருட் கடாட்சத்துடன் ஆனந்தமாய் இறை சேவை செய்வோம். அப்போது பாக்கியவான்களாகிய தங்கள் வந்து இருந்து உய்வுற்று பலன் பெறுமாறு அருள் பெற உரைக்கிறோம்.

ஓம் அகத்தீசாய நம 🙏

நேரம், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.

இடம், அகத்தியர் ஜீவ அருள் நாடி சித்தர் பீடம்,   கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

https://maps.google.com/?cid=12305587362742028797



யாசகம்



நமது பொகளூர் அகத்தியர் ஜீவ அருள் நாடி சித்தர் பீடத்தில், கோமாதா ஒன்றும் கன்று குட்டி ஒன்றும் அன்பர்கள் தானம் கொடுக்கப்பபெற்று பராமரிக்கப்பட்டு உள்ளது. அது பெரிய திமில் கொண்ட முழுவது சிகப்பு நிறம் கொண்ட ஆஜானுபாகுவான நாட்டு மாடு. அதனுடைய பால் மிகவும் சக்தி நிறைந்தது. குருஜி அவர்களின் நேரடி பராமரிப்பில் உள்ளது. கறந்த பால் சூடு குறையும் முன் அதனை தினமும் நமது அய்யன் அகத்தீசருக்கு அபிஷேகத்திற்கு எடுத்துக்கொள்ள படுகிறது. மீதம் உள்ள பால் அதனுடைய கன்று குட்டிக்கு செல்கிறது. இந்த கோமாதா நல்ல போஷாக்கான உணவு இன்மையால் பால் சுரப்பது மிகவும் குறைந்துள்ளது. பெரிய மனம் படைத்த அன்பர்கள், பொருளுதவி - அதாவது பணமாக இல்லாமல் அவர்கள் கரங்களால் மாட்டு தீவனம் வாங்கி அளித்தால், அவர்களும் அவர்கள் பரம்பரையும் அய்யன் அருளால் நீடூழி வாழும் புண்ணியம் கிடைக்கும். கீழே உள்ள கட்டுரை உங்கள் பரிசீலனைக்கு 🙏🙏
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*கோமாதாவிற்கு தரக்கூடியவை - பலன்*
🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄
*1) கொள்ளு (ஊறவைத்தது) -*
செய்யும் தொழிலில்/வேலையில் நிலையாயிருத்தல்

*2) காராமணி (ஊறவைத்தது) -*
தனம் அபிவிருத்தி

*3) கோதுமை (ஊறவைத்தது) -*
 கீர்த்தி, உறுதி

*4) கீரை, வெல்லம் -*
நிம்மதி, தரித்திரம் நீங்கும், அறிவு வளரும், கோர்ட் வழக்குகளில் வெற்றி

*5) கடலை பருப்பு (ஊறவைத்தது) -*
கோபம் குறையும்

*6) உளுந்து (ஊறவைத்தது) -*
ஆத்ம விஸ்வாஸம் பெருகும்

*7) கடலை (ஊறவைத்தது) -*
ஆத்யாத்மிக சிந்தனை பெருகும்

*8) பச்சைப்பயறு (ஊறவைத்தது) -*
வித்யை அபிவிருத்தியாகும்

9) *உருளைக்கிழங்கு*
 - நரகோஷ (சண்டை சச்சரவு) நிவாரணம்

*10) கேரட் -* வியாபாரம் அபிவிருத்தியாகும்

*11) பீட்ரூட்/பாலக் -* ஐஸ்வர்ய ப்ராப்தி

*12) தோசக்காய் -* சத்ரு நிவாரணம்

*13) தக்காளி -* விவாஹ ப்ராப்தி

*14) கத்திரிக்காய் -* சந்தான ப்ராப்தி

*15) வாழைப்பழம் -* உன்னதமான பதவி

*16) வெண்டைக்காய் -* தைரியம்

*17) கோவக்காய் -* மன அமைதி

*18) உளுத்தமாவு* வெல்லம் - அகண்ட ஐஸ்வர்ய ப்ராப்தி

*19) கோதுமை மாவு வெல்லம் -* உத்யோக ப்ராப்தி

*20) ப.பருப்பு (ஊறவைத்தது) -* இந்த்ரியங்களை அடக்கும் தன்மை

*21) து.பருப்பு (ஊறவைத்தது) -* ருண விமுக்தி (கடன் தொல்லை தீரும்)

*22) உ.பருப்பு (ஊறவைத்தது) -* ஆரோக்ய ப்ராப்தி (உடல்நலம்)

*23) க.பருப்பு (ஊறவைத்தது) -* குடும்பத்தில் குழப்பங்கள் விலகும்

*24) பாசிப்பருப்பு (ஊறவைத்தது) -* புத்தி கூர்மை, கல்வியில் மேன்மை

குரு வாழ்க, குருவே துணை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Monday, 3 February 2020

மாயை, பகவத் கீதை சொன்ன சிறுகதை

*தெய்வத்தை  சரணடைகிறவர்கள் , மாயையை  எளிதில்  கடக்கிறார்கள்.*

நாரதர் ஒரு சமயம் "கிருஷ்ணா! உங்களுடைய மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.பிரம்மத்தை (தெய்வத்தை) உணர்ந்த பிரம்ம ஞானி தேவரிஷியாகிய நானும் மாயையால் பாதிக்கப்படுவேனா? என்று கேட்டார். கிருஷ்ணர், நாரதரின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், சற்று தூரத்திலிருந்த ஒரு குளத்தைச் சுட்டிக்காட்டி, நாரதரே! அதோ அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்து வாருங்கள்... என்று கூறினார். கிருஷ்ணர் கூறியபடியே, நாரதர் தன் கையில் இருந்த மகதி என்ற வீணையைக் குளக்கரையில் வைத்துவிட்டு, குளத்தில் சென்று மூழ்கி எழுந்தார். மூழ்கி எழுந்தாரோ இல்லையோ, அவர் அழகிய இளம் பெண்ணாக மாறியிருந்தார்! தான் நாரதர் என்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவருக்கு அறவே இல்லாமல் போயிற்று; குளக்கரையில் அவர் வைத்த வீணையும் இல்லை. கிருஷ்ணரும் அங்கு இல்லை.இப்போது நாரதப் பெண், குளத்தின் படிகளில் ஏறி மேலே வந்து கொண்டிருந்தாள். அந்த வழியாக அந்த நாட்டு அரசன், குதிரையில் வேகமாக வந்தான். அவன் இளைஞன், அழகானவன். நாரதப் பெண்ணை அவன் பார்த்தான். அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். நான் இந்த நாட்டின் அரசன். உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன், உனக்குச் சம்மதமா? என்று கேட்டான். நாரதப் பெண் மவுனமாகத் தலையசைத்து, தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். அரசன் அவளைத் தன்னுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். இருவருக்கும் முறைப்படி திருமணம் விமரிசையாக நடந்தது. இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஒரு சமயம் பக்கத்து நாட்டு அரசன், இந்த நாட்டு அரசன் மீது போர் தொடுத்தான்.

இருதரப்புக்கும் கடுமையாகப் போர் நடந்தது. போர்க்களத்தில் நாரதப் பெண்ணின் கணவன் கொல்லப்பட்டான். அதைத் தொடர்ந்து, நாரதப் பெண் இருந்த நாட்டின் தலைநகரைக் கைப்பற்றுவதற்கு பகைவர்கள் விரைந்து வந்தார்கள். அப்போது வீரர்கள் சிலர், போர்க்களத்தில்இருந்து தப்பி அரண்மனைக்கு வந்து நாரதப் பெண்ணிடம், அரசியாரே! போரில் நமது அரசர் கொல்லப்பட்டார்! பகைவர்கள் அரண்மனையைக் கைப்பற்ற நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள்! உங்களையும், நமது அரச குமாரர்களையும் பகைவர்கள் சிறை பிடிப்பதற்குள் இங்கிருந்து நீங்கள் தப்பிச் சென்றுவிடுங்கள், என்று கூறினர்.நாரதப் பெண்ணும், குழந்தைகளுடன் அரண்மனையிலிருந்து தப்பி ஓடினாள். ஆனாலும், பகைவர்கள் இதை அறிந்து விட்டனர். அவளைத் தேடிச் சென்றனர். அவர்கள் தன்னைத் துரத்தி வரும் சப்தம் அவளுக்குக் கேட்டது. அவள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வேக வேகமாக அருகிலிருந்த காட்டிற்குள் ஓடினாள். விரைந்து ஓடியபோது, அவள் தன் மூத்த மகனின் கையைத் தவற விட்டாள். இப்போது அவள் தன் ஒரு குழந்தையை மார்போடு அணைத்தபடியே ஓடிக்கொண்டிருந்தாள். இதற்குள் பகைவர்கள் அவளை மிகவும் நெருங்கி விட்ட ஆரவாரம் கேட்டது. இதனால் பயந்து வேகத்தை அதிகரித்த போது, அவள் கையில் இருந்த குழந்தையும் தவறி கீழே விழுந்தது. குழந்தையை எடுக்க முடியவில்லை. பகைவர்களிடம் சிக்காமல் தப்ப கல்லிலும் முள்ளிலும் விழுந்தாள். அதனால் உடலில் பலமான காயங்கள் ஏற்பட்டன. நீண்ட துõரம் ஓடிய பிறகு, பகைவர்கள் துரத்தி வந்த சப்தம் கேட்கவில்லை. பகைவர்களிடமிருந்து தப்பியதை அவள் உணர்ந்தாள்.

காட்டிலிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து தன் நிலையை நினைத்து அவள், ஐயோ! என் நிலை இப்படி ஆகிவிட்டதே! நான் என் கணவரை இழந்துவிட்டேன்! குழந்தைகளையும் பறிகொடுத்து விட்டேன்.... நாட்டையும் பகைவர்கள் பிடித்து விட்டார்கள். ஆதரவற்ற அநாதையாக நான் இப்போது இருக்கிறேன். இனிமேல் நான் யாருக்காக உயிர் வாழ வேண்டும்? கல்லிலும் முள்ளிலும் அடிபட்டு உடல் முழுவதும் ஏற்பட்ட இந்தக் காயங்களின் வலியை என்னால் பொறுக்க முடியவில்லை. பசியும் தாகமும் என்னை வருத்துகின்றன! என்று பலவாறு கூறி கதறி அழுதாள். அப்போது கிருஷ்ணர் ஒரு முதியவர் வடிவத்தில் அங்கு வந்து, அம்மா! நீ யார்? ஏன் இப்படி இந்தக் காட்டில் தனிமையில் அழுதுகொண்டி ருக்கிறாய்? என்று கேட்டார். நாரதப் பெண், தன்னுடைய அவல நிலையை அவரிடம் கூறி அழுதாள். முதியவர் அவளிடம், அம்மா! அதோ தெரியும் அந்தக் குளத்தில் நீராடி விட்டு வா! அதனால் உனக்கு நன்மை ஏற்படும், என்று தெரிவித்தார். முதியவர் கூறியபடியே நாரதப் பெண் குளத்தில் மூழ்கி எழுந்தாள். உடனே நாரதப் பெண் உருவம் மாறி, பழைய நாரதர் வடிவம் கொண்டார். அவருக்கு நடந்தவை அனைத்தும் நினைவுக்கு வந்தன. குளத்தின் படிகளில் ஏறி வந்த நாரதர், குளக் கரையில் தான் வைத்துச் சென்ற வீணையை எடுத்துக் கொண்டார். சற்று தூரத்தில் கிருஷ்ணர் நின்று கொண்டிருப்பதையும் பார்த்தார். நடந்ததையெல்லாம் நாரதர் நினைத்துப் பார்த்தபடியே கிருஷ்ணரிடம் சென்று, பகவானே! நான் கர்வம் கொண்டதற்கு என்னை மன்னியுங்கள். உங்கள் மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்பது உண்மை தான். மாயைக்கு நான் ஒருபோதும் வசப்படாமல் இருக்க வேண்டும் என்று என்னை ஆசீர்வதியுங்கள், என்று வணங்கிக் கேட்டுக்கொண்டார். கிருஷ்ணரும் நாரதரின் பிரார்த்தனையை ஏற்று ஆசீர்வதித்தார்.

வாழ்க்கை என்ற ஒன்று இருக்கும் வரை இதுபோன்ற மாயை இருந்து கொண்டே இருக்கும். இதில் இருந்து விடுபட ஒரே வழி இறைவனைச் சரணடைவது தான். தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா! மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே!!.முக்குணங்களால் ஆகிய என்னுடைய இந்த மாயை தெய்வீகமானது, யாராலும் கடக்க முடியாதது. ஆனால் யார் என்னையே சரணடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையைக் கடக்கிறார்கள்.

பகவத்கீதை 7.14

Sunday, 2 February 2020

100 ஆண்டுகளாக பூட்டியிருக்கும் நந்தீஸ்வரர் ஆலயத்தின் கதவை திறந்து ஒரு அற்புதத்தை காணுமாறும் கூறி மறைந்தார்..

"நீ ஒரு சிவதொண்டன் நீ போய் காளையை
அடக்கலாமா?"கேட்டார் நீலகண்டம்...

"இல்லை அம்மாவின் மருத்துவ செலவுக்கு
நூறு வராகன் தேவைப்படுகின்றது..
வேறுவழியில்லை"..பதிலளித்தான் சிவக்கொழுந்து..

"நீ எங்கே வேலை செய்கின்றாயோ,அந்த ஜமீன்தாரின் காளை என அறிவாயா..?"

"ஆம் அறிவேன்..."

"தெரிந்தும் இந்த காரியத்தில் எஜமானனுடன்
மோதப்போகின்றாயா.."
விடாமல் தொடர்ந்தார்.. நீலகண்டம்..

"மன்னிக்கவும் என் எஜமானன் சிவபெருமான் ஒருவர்தான்..அவரை தவிர என் கால்கள் யார் முன்னாலும் மண்டியிடாது..என் நாவு யாரிடமும் இறைஞ்சாது.."நெஞ்சை நிமிர்த்து கூறினான் சிவக்கொழுந்து..

"பலே..பலே..உனக்கு அந்த காளையை பற்றி
தெரியுமல்லவா..எட்டுப்பட்டிக்கும் தண்ணீர்
காட்டிய காளை...எந்த வாலிப காளையும்
அந்த வீரத் திமில் கொண்ட காளையை அடக்கியதில்லை.."

"அதையும் பார்த்துவிடுவோம்..
இருவரில் ஒருவர் யாரென்று?"

"நீ புதியவன்.."

"தமிழன் வீரத்தில் பழையவன்..

பார்ப்போம் களத்தில்.."

கிளம்பினார் நீலகண்டம்.

பந்தயக்களம் மன்னர் ராஜராஜன் கம்பீரமாக
போட்டியை காண குடும்ப சகிதமாக
அமர்ந்திருந்தார்...

முதலில் வருவது கிள்ளிவளவனூர் ஜமீன்
காளை.."துள்ளிவரும் காளையை அள்ளி அடக்குபவருக்கு 20 தங்கவராகன்" அறிவிப்பாளன் அறிவிக்க..

கனத்த உடலுடன் மலை போன்ற திமில்களுடன் காளை உள்ளே புகுந்தது.. இளைஞர்கள் உள்ளே குதிக்க.. சுற்றிலும் கரகோஷம் விண்ணை பிளந்தது..

"நீ இறங்கவில்லையா சிவக்கொழுந்து.." கேட்டார்  நீலகண்டம்..

"இல்லை, எமது காளை 100 வராகன்களுடன்
வரும்..அதற்காக காத்திருக்கின்றேன்.."

"20 வராகன்கள் உள்ள காளையை யாரும்
அடக்க முடியாமல் போக்கு காட்டுகின்றது..
உன்னை பார்த்தால் எனக்கு நகைப்புத்தான்
வருகின்றது.."சிரித்தார் நீலகண்டம்.

20  வராகன் காளை யாரும் நெருங்கமுடியாமல் நெருப்புபோல இருந்து போக்குகாட்டியபடி வெற்றியடைய..வளவனூர் ஜமீன் மீசையை முறுக்கிவிட்டார்..

அடுத்து வருவது...30 தங்கவராகன் காளை
இம்முறை இளைஞர்கள் ஒன்றுகூட,அத்தனை பேரையும் தொடமுடியாமல் தவிடு
பொடியாக்கியது காளை...

"சிவக்கொழுந்து இப்பொழுதும் ஒன்றும் மோசம் போய்விடவில்லை போட்டியிலிருந்து
விலகிவிடு.."கூறினார் நீலகண்டம்...

"இல்லை..எம்பெருமான் எனக்கு வெற்றியை
நல்குவார்..பார்த்துவிடலாம்.."

அறிவிப்பாளன் அறிக்கையை தொடர்ந்தான்..
எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் வீரவ நல்லூர் ஜமீனின் காளை அடுத்ததாக
களமிறங்கும்..

கைதட்டலும்..விசில் சப்தங்களும்
விண்ணைப்பிளந்தன...

மேலும் அறிவிப்பாளன் தொடர்ந்தான்..
இதுவரை இந்த ஆண்டில் நான்கு காளைகளையும் வென்று ஒருவர் கூட வெற்றி பரிசை தட்டிச்செல்லவில்லை..இறுதியாக
இறங்கும் வீரவநல்லூர் காளையை வென்று
சோழமண்ணிற்கு பெருமை சேர்ப்பவருக்கு
மன்னர் 1000ம் தங்க வராகன்களுடன், மன்னர்
படைப்பிரிவில் உயர் பதவியும் வழங்குவதாக
அறிவித்துள்ளார்...முரசு கனமாக ஒலித்தது..

"எங்கே வீரவநல்லூர் ஜமீன்"..மன்னர் கேட்க..

"போட்டிக்கு முந்தைய நாளே வரும் அவர்
இன்னும் வரவில்லை மன்னா.."

தொலைவில் ஒருவர் காளையை பிடித்தபடி
வருவது தெரிந்தது..

"யார் அவர் பார்த்து வாருங்கள்.."

பணியாட்கள் வேகமாய் சென்று..விரைவாக
மன்னரிடம் வந்தனர்...

மன்னா வருவது ஜமீன்தான்..வரும் வழியில்
பாலாற்றின் சேற்றில் மற்றவர்கள் மாட்டிக் கொள்ள ஜமீன் மட்டும் காளையை பிடித்தபடி தனித்துவருகின்றார் மன்னா..

"அப்படியா..விரைவில் அழைத்துவாருங்கள்.."
ஜமீன் அருகில் வர மன்னன் வணங்கி
வரவேற்றான்..

வீரவநல்லூர் காளை இப்பொழுது களமிறங்கும்,

விசில் ஒலி விண்ணைப்பிளக்க...கைதட்டல் ஆராவாரம் காதை பிளந்தது..

களத்தில் கொம்புகளில் கட்டப்பட்ட தங்க சங்கிலி 100 வராகன்களுடன்..திமில்களை
மலைபோல அசைத்துக்கொண்டு தைரியம்
இருப்பவன் தொட்டுப்பார் என காளை புழுதி
பறக்க நின்றது...

அனைத்து வாலிபர்களும் பின்வாங்க, களத்தில் நெஞ்சை நிமிர்த்தி குதித்தான் சிவக்கொழுந்து

மன்னர்..வைத்த கண் வாங்காமல் பார்க்க..
ஜமீன் மீசையை தடவிக்கொண்டே சிரித்தார்..
காளை..நான் தயார் என்பதை போல.. நிலத்தை காலால் பறித்து..கொம்புகளினால் மண்ணை பெயர்த்து எடுத்தது...

சிவக்கொழுந்து எதிரில் போய் நின்று.. தன்னுடைய  அகண்ட மார்பை காண்பித்து
உனக்கு எந்த விதத்திலும் சளைத்தவனல்ல
என எதிர் நின்றான்..

கரகோஷம் விண்ணை பிளக்க..
சிவக்கொழுந்து தன் தாய் மரணத்தின்
தருவாயில் இருப்பதை உணர்ந்து காளையை
நோக்கி ஆவேசமாக பாய்ந்தான்..கருப்பான அந்த காளை..சற்றே விலக...

மண்ணில் விழுந்தான் சிவக் கொழுந்து...
ஓ..என்றோரு சப்தம் கூட்டத்தில் எழுந்தது...

சுதாரித்துக்கொண்ட சிவக்கொழுந்து உடனே
சுதாரித்து சட்டென எழுந்தான்..

அதற்குள் அவனருகில் வந்த காளை
அவனை தூக்கி பந்தாடியது..

மன்னரின் மேடையருகில் போய் விழுந்த அவன் நெஞ்சில் ரத்த காயங்களுடன் எழுந்தான்..

கூட்டமே திகைத்து நிற்க...

வெறிகொண்ட வேங்கையாய் எழுந்தான்
சிவக்கொழுந்து...

ஜமீன்தார்..கை தட்டி சிரிக்க..

மன்னன் தலைகுனிந்தான்..

மேலும் வெறியேறியவனாய்..தன்னிடம்
வந்த காளையை நோக்கி பாய்ந்தான்
சிவக்கொழுந்து...

திமிலை அணைத்துக்கொள்ள..காளை பிடிகொடுக்காமல் திமிறியது..தன்னுடைய
தாயின் தோற்றம் கண்முன்னே வர, காளையின் திமிலை மேலும் இறுக்கினான்...

காளை துள்ளிக்குதிக்க..

காளையின் திமிலை சிவலிங்கமாய்
நினைத்து கண்களில் கண்ணீர் பெருக
இறுக அணைத்தான் சிவக்கொழுந்து..

காளையின் ஓட்டம் குறைய..மெல்ல காளை
தளர்வடைந்தது...அமைதியான காளை சிவக்கொழுந்துவிடம் பணிந்து நின்றது...

காளையை தழுவிய சிவக்கொழுந்து..அதன்
நெற்றியில் முத்தமிட..கூட்டத்தில் கரகோஷம்
விண்ணை பிளந்தது..

மன்னரும்..ஜமீன்தாரும்..மகிழ்ச்சியை கைதட்டல் மூலம் சிவக்கொழுந்திருக்கு தெரிவித்தனர்..

சிவக்கொழுந்து காளையின் கொம்பிலிருந்த
தங்க வராகன்களையும்..தங்க சங்கிலியையும்
எடுத்துக்கொள்ள கூட்டத்தில் ஆரவாரம் விண்ணை பிளந்தது...

மன்னர் அறிவிப்பாளனிடம் ஏதோ சொல்ல..
அறிவிப்பாளன்..மன்னரின் பரிசுத்தொகையும்
வீரனின் பதவியும் நாளை ராஜசபையில்
வழங்கப்படும்..என அறிவித்தான்...

கூட்டத்தில் அனைவரும் கரவொலியை வெளிப்படுத்தினர்..

மறுநாள்..காலை...

சூரியன் பொன்னிற கதிர்களை பூமியில்
படரவிட..பேச முடியாத தன்னுடைய தாயின்
கால்களை தொட்டுக்கும்பிட்டுவிட்டு அரசவை
நோக்கி கிளம்பினான் சிவக்கொழுந்து..

மக்கள் அங்கே கூடியிருக்க,சிவக்கொழுந்துக்கு அரசவையில் ஆசனம் அளிக்கப்பட்டது..

மன்னர் அரியணையில் அமர்ந்து சிவக்கொழுந்துவின் வீரத்தை புகழ்ந்து பேசினார்..

சிவக்கொழுந்து எதுவும் பேசாமல்
பணிந்து நின்றான்..

யார்..அங்கே..பரிசுத்தொகையை
கொண்டு வாருங்கள்..

பரிசுத்தொகை தங்கத்தட்டில் கொண்டுவரப்பட்டது..

மன்னன் பரிசுத்தொகையை எடுத்து வழங்க..
அதை பெற்றுக்கொள்ள கைகளை நீட்டினான்
சிவக்கொழுந்து...

"சற்றே..பொறுங்கள் மன்னா...."

குரல் கேட்டு திரும்பிய பக்கத்தில் வீரவநல்லூர் ஜமீன்தார் காளையுடனும்..அநத ஊர் மக்களும் நின்றிருந்தனர்..

அரசவையும்..மக்களும்..சிவக்கொழுந்தும்
அதிர்ச்சியுடன் திகைத்து நிற்க..

மன்னன் மட்டும் முகத்தில் எந்த ஒரு
திகைப்புமில்லாமல் பார்த்தான்...

"மன்னா..நேற்று முழுவதும் பாலாற்றின் சேற்றில் சிக்கிய எங்களது வண்டிமாடுகள்
மக்கள் இவற்றையெல்லாம் விடுவித்து கொண்டுவர சற்று காலதாமதம் ஆனது...
இப்பொழுதுதான் நாங்கள் எங்கள் காளையுடன் வருகின்றோம்.அதற்குள்
இவர் வெற்றிபெற்ற பரிசுத்தொகையை அறிவித்தால் ஏற்றுக் கொள்ளமுடியாது மன்னா..."ஜமீன் கூற...

அரசவையிலும்..மக்களிடமும்..சலசலப்பு ஏற்பட்டது..சிவக்கொழுந்து குழம்பி போய் நின்றான்..

மன்னர் ராஜராஜன் அனைவரையும்
அமைதிப்படுத்தினார்..

அனைவரும் அமைதியாக இருங்கள்...

"ஜமீன் சொல்வது சரிதான் என்றார் மன்னர்.."

மக்கள் அனைவருடன் சிவக்கொழுந்தும்
மேலும் திகைக்க..

மன்னர் புன்னகையுடன் தொடர்ந்தார்...

"இன்று அதிகாலையில் வந்த கனவில் எம்பெருமான் தந்தை ஈசன் என் கனவில்
தோன்றினார்..சிவக்கொழுந்தின் பக்தியை
உலகிற்கு உணர்த்தவும்..நேர்மையையும், வீரத்தையும் பறைசாற்றுவதற்க்காகவும்.. யாமும், நந்திதேவரும்..ஜமீனாகவும்.. காளையாகவும் வந்தோம்..அறிவித்தபடி
பரிசையும்..பதவியையும்..சிவக்கொழுந்துக்கு
வழங்கவும் ஆணையிட்டார்..மேலும், 100
ஆண்டுகளாக பூட்டியிருக்கும் நந்தீஸ்வரர் ஆலயத்தின் கதவை திறந்து ஒரு அற்புதத்தை காணுமாறும் கூறி மறைந்தார்...எப்படியும் ஜமீனும் வந்துவிடுவார் என தெரியும்...
எனவே, இதை சொல்ல காத்திருந்தேன்.."

மன்னர் சொல்ல..சொல்ல..மக்களும்,
அரசவையினரும், ஜமீன்தாரும் திகைப்பில்
நின்றனர்...

மன்னன்.. பரிசுத்தொகையை கொடுத்து..படை தளபதியாக சிவக்கொழுந்தை அறிவித்தான்...

வாருங்கள் நந்தீஸ்வரன் கோவிலுக்கு செல்வோம்..

மக்கள் அனைவரும் பின்தொடர...
நூறாண்டுகள் பூட்டப்பட்ட கோவில் கதவு
பெரும் சப்தத்தோடு திறந்தது...

🐃மன்னனின் பார்வையும்,மக்களின் பார்வையும் நாலாபுறமும் சுழல...மேடையில் அமர்ந்திருந்த நந்தியின் திமில்கள் சிவலிங்கமாக காட்சி அளித்தது..அதைக்கண்ட பரவசத்தில் மன்னனும்,மக்களும் "ஓம் நம சிவாய" என்ற பெரும்கோஷம் எழுப்ப..எதுவும் பேசமுடியாமல் நின்ற சிவக்கொழுந்துவின் கண்களில் கண்ணீர்..தாரை..தாரையாக.பெருகியது 🐃
🐃திருச்சிற்றம்பலம்.🐃

 அன்பே சிவம் .
சிவாயநம அருணாச்சலம்
🌹🕉🌹