Thursday, 4 July 2019

ஆனி மாதம் மகம் நக்ஷத்ரம் வான்கலந்த மணிவாசகர்.. தில்லை அம்பலத்தில் ஜோதியுள் கலந்த புண்ய தினம் 06/07/2019

🙏🎊ஆனி மாதம் மகம் நக்ஷத்ரம்
வான்கலந்த மணிவாசகர்..
தில்லை அம்பலத்தில் ஜோதியுள் கலந்த புண்ய தினம்
06/07/2019
🎊🙏

மணிவாசகர் தில்லையில் சிறிது காலம் தங்கி அப்பதியில் திருநடமிடும் ஈஶனை போற்றித் துதித்து வந்தார். 'தான்' எனும் தத்போதமற்று எந்நேரமும் ஶிவயோகத்தில் வீற்றிருப்பார். பெருந்துறை மேவும் பரமனும், சொக்கேஶரும், அம்பலவாணரும் தம்மை ஆட்கொண்டருளிய நிகழ்வினை நினைந்து நினைந்து உருகுவார்; கண்ணீர் பெருக்குவார்; ஶிவானந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைப்பார்.

சிவப்பிழம்பாய் வீற்றிருந்த அடிகளும் தன் வயமற்று 'திருவாசகம்' முழுவதும் பாடியருளினார். ஆனந்தக் கூத்தரும் தன் திருக்கரங்களால் அவற்றைச் சுவடிகளில் பதிவு செய்து கொண்டார். பின் அடிகளிடம் 'திருக்கோவையும் பாடி அருள்க' என்று அருளினார். மணிவாசகப் பெருமானும் கோவை பாட, நடேசப் பெருமான் அகம் குளிர்ந்து அவற்றையும் பதிவு செய்து கொண்டார். பின் அடிகளாரை வணங்கி விடை பெற்றார்.

*_மாணிக்கவாசகன் சொல்ல அழகிய சிற்றம்பலம் உடையான் எழுதியது' என்று கையொப்பம் இட்டுத் தில்லைத் திருக்கோயிலின் பஞ்சாட்சரப் படிகளில் வைத்தருளிப் பின் ஆலயம் ஏகினார்_*....
_பொழுது புலர்ந்ததும் தில்லை அந்தணர்கள் ஆடல் வல்லானின் திருச்சந்நிதியின் முன் சுவடிகளையும் அதில் அருட்கூத்தரின் திருக்கையொப்பத்தினையும் கண்டு பெருவியப்புற்றனர்._

தன்னிலை மறந்து 'ஶிவ மயமாய்' வீற்றிருந்த அடிகளாரிடம் 'இப்பாடல்களின் பொருள் யாது?' என வணங்கி வேண்ட, வாதவூரடிகள் அமபலத்து ஆடுகின்ற கூத்தர் பிரானைச் சுட்டி 'இங்குறையும் இறைவரே இத்திருப்பாடல்களின் சாரமும் பொருளும்' என்று அறிவித்து, ...... *_ஸந்நிதி உட்புகுந்து, ஆனி மாதமும் மக நட்சத்திரமும் கூடிய அத்திருநாளில் பொன்னம்பல ஜோதியில் கலந்து ஶிவமாம் பேறு பெற்று இன்புற்றார்._*

🙏🎊 *_நானேயோ தவம்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்_*
_தேனாய்இன் அமுதமாய்த் தித்திக்கும் சிவபெருமான்_
*தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே.*

அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே! அன்பினில் விளைந்த ஆரமுதே!
*_பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும், புழுத் தலைப் புலையனேன் தனக்கு_*.. ,
*_செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே! சிவபெருமானே!_*

_இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந்தருளுவது, இனியே?_