Sunday 23 April 2023

யோகேஸ்வரர், புத்தேரி, கன்னியாகுமாரி


 

Wednesday 19 April 2023

திருப்பரங்குன்றம் குகை காணொளி காட்சி


 

ஸ்ரீ சொரிமுத்து அய்யனார்


 ஸ்ரீ சொரிமுத்து அய்யனார்

(Sri Sorimuthu Ayyanar)


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காரையாறில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் திருக்கோவில். இத்தலத்தில் உள்ள இறைவனின் பெயர் சொரிமுத்து அய்யனார். இறைவியர் புஷ்கலை, பூர்ணகலை. தல விருட்சம் இலுப்பை மரம் ஆகும். இங்கு பாண தீர்த்தம், சாயா தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் இருக்கின்றன.


இந்த ஆலயமானது, களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள், பொதிகை மலையில் மரங்கள் சூழ, தென்றல் தாலாட்டு பாட, தாமிரபரணி சலசலத்து ஓட, ஒருமித்து மிளிரும் இயற்கையின் மையத்தே அமைந்துள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியான இந்த இடத்தில் கொடிய விலங்குகள் பல வசித்து வந்தாலும், இத்தலத்து பகவானின் அருளால் அவைகள் பக்தர்களுக்கு எந்த வித தொல்லையும் கொடுப்பதில்லை என்பது ஆச்சரியமான விஷயமாகும்.


 

தல வரலாறு:


இந்தக் கோவிலைப் பற்றி தெரிந்து கொள்வோம்...


தென்னாட்டில் பண்டைய காலத்தில் பண்டமாற்று வணிகமுறை நடைமுறையில் இருந்தது. தற்போது சொரிமுத்து அய்யனார் சன்னிதி அமைந்து உள்ள இடத்திற்கு அருகில், பண்டமாற்று சந்தை நடைபெற்று வந்தது. அப்போது பொதி மாடுகளின் காலடி பட்டு ஓரிடத்தில் இருந்து ரத்தம் பெருகியது. இதைக் கண்ட வணிகர்கள் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டு அதிசயித்து பார்த்தனர்.


அந்த சமயத்தில் ஒரு அசரீரி ஒலித்தது. ‘குருதி பெருகும் இடத்தில் இருப்பவர் மகாலிங்க சுவாமி. இனி வரும் காலங்களில் மகாலிங்க சுவாமியை, சொரிமுத்தைய்யன், சங்கிலிமாடன், பிரம்மரட்சகி போன்ற மூர்த்திகள் சூழ ஆலயம் எழுப்பி வழிபட்டு வாருங்கள்’ என்றது அந்தக் குரல். அதன்படியே வணிகர்களும், ஊர் மக்களும் சேர்ந்து கோவில் எழுப்பி, பல சன்னிதிகளை அமைத்து வழிபட்டு வந்தனர்.


இமயமலையில் பரமேஸ்வரனுக்கும், பார்வதிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இந்த தெய்வீக காட்சியைக் காண்பதற்காக தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் வடதிசை நோக்கி பயணப்பட்டனர். இதனால் வடதிசை தாழ்ந்தும், தென்திசை உயர்ந்தும் காணப்பட்டது. உலகை சமநிலை அடையச் செய்வதற்காக, சிவபெருமான் அகத்திய முனிவரை அழைத்தார். ‘அகத்தியனே! நீ தென்திசை நோக்கிச் செல். உன்னால் தான் இந்த உலகை சமநிலை பெறச் செய்ய முடியும்’ என்றார்.


இறைவனின் ஆணைப்படி நடக்க சித்தம் கொண்ட அகத்தியர், தென்திசை நோக்கி பயணித்து பொதிகை மலையை வந்தடைந்தார். அங்கு தற்போது சொரிமுத்து அய்யனார் சன்னிதி அமைந்திருக்கும் இடத்தில் நீராடி, தனது நித்திய காரியங்களை முடித்துக் கொண்டு யோக நிஷ்டையில் அமர்ந்தார். அப்போது ஜோதி ஒன்று அவரது மனக்கண்ணில் தோன்றியது. அதைக் கண்டு அதிசயித்த அகத்தியர், அந்த ஜோதியை யார் என்று அறிய ஞான திருஷ்டியால் பார்த்தார்.


அப்போது சாஸ்தாவானவர், சொரிமுத்து அய்யனாராக, மகாலிங்க பெருமானை பூஜிக்கும் காட்சி அவருக்கு தெரிந்தது. சொரிமுத்து அய்யனாருடன், பேச்சியம்மன், பிரம்மரட்சகி ஆகியோரும் மகாலிங்க சுவாமியை வழிபட்டனர்.


இதுகண்டு அகத்திய முனிவர் ஆனந்தம் அடைந்தார். பின்னர் மலர் தூவி ‘இவ்விடத்தில் எழுந்தருளியிருக்கும் மூர்த்திகளை தரிசித்து வழிபடுவோருக்கு எல்லா இன்னல்களும் நெருப்பிலிட்ட பஞ்சுபோல் ஆக வேண்டும்’ என்றும், ‘பக்தர்கள் தனது மக்களுடன் வழி, வழியாய் எல்லாப்பேறுகளும் பெற்று பெருவாழ்வு வாழ வரம் தர வேண்டும்’ என்றும் வேண்டிக்கொண்டார்.


அப்போது சாஸ்தாவானவர் ‘மலர் சொரிமுத்தய்யனார்’ என்று பெயர் தாங்கி, மகாலிங்கேசுவரர், சங்கிலி பூதத்தார், காத்தவராயர், மேலவாசி பூதத்தார், மேலவாசல் விநாயகர், தட்சிணாமூர்த்தி, கும்பமாமுனி, பெரியசாமி, பேச்சியம்மன், தூண்டில் மாடன், ஜோதிருத்திரன், பட்டவராயர் போன்ற பல தெய்வங்களுடன் ஒருசேர காட்சி கொடுத்து மறைந்தார். அன்று தொடங்கி இத்தலத்தில் மேற்சொன்ன அனைத்து தெய்வங்களுக்கும் சன்னிதி ஏற்படுத்தி வழிபாடு நடைபெற்று வருகிறது.


ஒரு சமயம் இப்பகுதியில் வற்கடம்(12 ஆண்டுகளுக்கு மழையின்மை) ஏற்பட்டது. அப்போது அகத்திய முனிவர் ‘ஆடி அமாவாசையன்று, இந்தத் திருத்தலத்தில் உள்ள சாஸ்தாவுக்கு புனித நீர் சொரிந்து அபிஷேகம் செய்தால், மாதம் மும்மாரி பொழியும்; வறட்சி நீங்கும்’ என்று கூறினார். அதன்படியே புனித நீரை பொற்குடங்களில் நிரப்பி, அபிஷேகம் செய்ய வறட்சி நீங்கியது. மழையை பொழிய வைத்த அய்யனார், ‘சொரிமுத்து அய்யனார்’ என அழைக்கப்பட்டதாகவும் செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.


முத்துப்பட்டன் என்ற பிராமண இளைஞன், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த பொம்மக்கா, திம்மக்கா ஆகிய சகோதரிகளை மணம் புரிந்து கொண்டு செருப்பு தைக்கும் தொழிலை செய்து வந்தான். ஒருசமயம் பசுக்களை பாதுகாக்க போரிடும்போது முத்துப்பட்டன் வீரமரணம் அடைந்தான். பட்டவராயன் என்றழைக்கப்பட்ட அவருக்கும், இத்தலத்தில் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.


அய்யப்பனின் முதல் நிலையாக சொரிமுத்து அய்யனார் விளங்குவதால், கார்த்திகை மாதங் களில் அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து மாலை அணிவிந்து சபரிமலைக்கு செல்கின்றனர். இக்கோவிலில் தினசரி காலை 6 மணி அளவிலும், மாலை 5.30 மணி அளவிலும் பூஜைகள் நடைபெறுகிறது.


நெல்லைக்கு மேற்கே அம்பாசமுத்திரம், பாபநாசம் வழியாக செல்லும் பாதையில் நெல்லையில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். நெல்லை மற்றும் செங்கோட்டையில் இருந்து இக்கோவிலுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.


ஆடி அமாவாசை திருவிழா :


அகத்திய முனிவரின் யோக நித்திரையில் இறைவன் திருவருள் கூடி காட்சி தந்த நாள் ஆடி அமாவாசை ஆகும். எனவே இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி தங்களது நேர்த்திக் கடன்களை பக்திப்பெருக்கோடு செலுத்தி வருகின்றனர். இத்திருத்தலத்தில் நடைபெறும் ஆடி அமாவாசை விழாவானது நெல்லை மாவட்டத்தில் குறிப்பிடப்பட்ட திருவிழா ஆகும். இதேபோல் தை, மாசி மாத அமாவாசை தினங்களும் விசேஷமான நாட்களாகும். இக்கோவிலுக்கு அருகில் உள்ள பாணதீர்த்த அருவிக்கு பக்தர்கள் சென்று புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு நீத்ததார் கடன் மேற்கொள்வார்கள். இந்த பாணதீர்த்தத்தில்தான் ராமர் தனது தந்தை தசரதனுக்கு திதி செய்தார் என்று ஒரு ஐதீகம் நிலவுகிறது. 


செருப்பு காணிக்கை:


குல தெய்வம் தெரியாதவர்கள் இவரையே(சொரிமுத்து அய்யனார்) குலதெய்வமாக வழிபடலாம் என்ற சிறப்புடையது இக்கோவில். இத்திருத்தலத்தில் உள்ள பட்டவராயர் சன்னிதியில் பக்தர்கள் செருப்புகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். முதல் ஆண்டு இங்கு கட்டப்படும் செருப்புகளை மறு ஆண்டு இக்கோவிலுக்கு வந்து பார்த்தால் அந்த செருப்புகள் தேய்ந்திருப்பதை காணமுடியும். பக்தர்கள் இத்தலத்திற்கு காணிக்கையாக வழங்கும் செருப்புகளை பட்டவராயரே பயன்படுத்துவதாக பக்தர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை நிலவுகிறது. 


மணி விழுங்கி மரம் :


இத்திருக்கோவில் வளாகத்தில் இலுப்பை மரம் ஒன்று உள்ளது. பக்தர்களின் வேண்டுதலின்படி இந்த மரத்தில் கட்டப்படும் மணிகள் மரத்தின் உள்ளே பதிந்து விடுவதால் இந்த மரம் மணி விழுங்கி மரம் என்று அழைக்கப்படுகிறது. பக்தர்களின் காணிக்கைகளை இறைவன் இதன் மூலம் ஏற்றுக்கொள்வதாக நம்பப்படுகிறது.

Tuesday 18 April 2023

சுயம்பு லட்சுமி நரசிம்மர் மலைக்கோயில்


 

குழந்தை தெய்வம் பாடும் மருதமலை பாடல்


 

காசி விஸ்வநாதர் அருள் -முகநூலில் வந்த ஒரு நண்பரின் அனுபவ பதிவு

https://fb.watch/j_38JnY3rq/ 


முகநூலில் வந்த ஒரு நண்பரின் அனுபவ பதிவு




Monday 17 April 2023

கம்பதீஸ்வரர் கோயில்

Kampatheeswarar Kovil கம்பதீஸ்வரர் கோயில் https://maps.app.goo.gl/do6ZEJK2bs7yWJcNA 




பகவான் ஸ்ரீவிஷ்ணு வின் சஹஸ்ர நாமங்கள்

 விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள்.


மகாபாரதத்தின் இறுதிக்கட்டம். பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர் நோக்கிப் படுத்திருக்கிறார். கர்ணனும் வஞ்சனையால் கொல்லப்படுகிறான். 


குந்திதேவி கர்ணனை மகனே என்றழைத் து துக்கம் அனுஷ்டிக்கிறாள். கர்ணனுடை ய மனைவியும் அவன் உடல்மேல் விழுந்து கதறுகிறாள். இவர்களோடு இன்னொரு பெண்மணியும் கர்ணனுக்காக அழுதாள். 


அதைகண்ட தருமபுத்திரர் கிருஷ்ணனை ப் பார்த்து, "இவள் யார்? இவள் ஏன் அழுகிறாள்?'' என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணர், "இவள் தர்ம தேவதை. இனி உலகில் தர்மமே இருக்கப் போவதில்லை.


தர்மம் செய்வதற்கென்றே பிறந் தவன் கர்ணன். அவனே போய்விட்ட பிறகு பூமியில் எனக்கென்ன வேலை என்று உலகை விட்டுப்போகிறாள் அவள்'' என்றார். தர்மபுத்திரரைப்பயம் சூழ்ந்து கொண்டது.


காரணம்- பாண்டவர்களுடைய பேரனான ஜெனமேஜெயன் ஆளும்போது இந்த நாட்டில் தர்மம் இருக்காதாஎன்கிற பயம்தான் அது. "தர்மம் மீண்டும் செழிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?'' என்று பரந்தாமனை தர்மர் கேட்க, பரந்தாமனோ "அம்புப் படுக்கை யில் படுத்திருக்கும்பீஷ்மரைக் கேள்; அவர் சொல்வார்'' என்றார்.


பீஷ்மரும் தர்மதேவதை உலகை விட்டு ச் சென்றதால் ஏற்படப் போகும் அவலங்க ளைச் சொல்கிறார்: "இனி உலகம் செழிப் புற்று விளங்காது. தேசங் கள் ஒவ்வொன் றும் அநியாயமாக சண்டையிட்டு அழியும். அரசர்கள் நீதிமான்களாக இருக்க மாட்டார்கள். அவர்களிடம் பணிபுரியும் அமைச்சர்கள் முதல் பணியாட்கள் வரை ஊழல் செய்து, மக்களை வாட்டி தவறான வழியில் தனம் சேர்ப்பார்கள். 


அரசனிடம் நல்ல வற்றிற்கு நீதி கிடைக் காது. குருமார்கள் தங்கள் சீடர்களுக்கு ஒழுங்காகப் பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள்; சீடர் களும் ஒழுங்காக படிக்க மாட்டார்கள். படித்தவன் சூதும் வாதும் செய்வான். மழை பொழியாது; நிலங்கள் விளைச்சலைக் கொடுக்காது; பஞ்சமும் பட்டினி யும் தலைவிரித்தாடும். 


கணவன்மார்கள் தங்கள் மனைவியைச் சரிவர காப்பாற்ற மாட்டார்கள்; மனைவி மார்களும் பதிவிரதையாக இருக்க மாட்டா ர்கள். அவர்களின் குழந்தைகள் தவறான வழியில் நடக்கும்...


இப்படி பீஷ்மர் சொல்லச் சொல்ல பாண்டவர்கள் பயந்தார்கள். இதிலிருந்து தங்கள் சந்ததியினர் தப்பிப்பது எப்படி என்று கேட்டார் கள். அதை ஸ்ரீ கிருஷ்ண னே சொல்லுவார் என்று பீஷ்மர் கை காட்ட, கிருஷ்ணனோ, "நீங்கள் பிதாமகர். நான் சொல்லுவதைவிட உங்கள் நாவிலிருந்தே நல்ல வார்த்தைகள் புறப்படட்டும்''  என்று சொன்னார்.


அப்போது புறப் பட்டவைதான் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம். அதாவது, எம்பெ ருமான் ஸ்ரீமந் நாராயணனை ஆயிரம் பெயர் சொல்லி அர்ச்சித்து அவன் மனம் குளிர வேண்டினால் தர்மம் மீண்டும் தழைக்கும் என்பதுதான் விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகிமை.பகவானுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டா என்று நாம் வியப்படையலாம்.


சாதாரண மனிதனாகிய நமக்கே பாலசு ப்பிரமணியன் என்று பெயர் வைத்தால், பாலா, பாலு,சுப்பிரமணி, சுப்பி, மணி, மணியன் என்று பல பெயர்களால் அழை க்கும்போது, பகவானுக்கு ஆயிரம் பெயர் கள் இருக்காதா என்ன? இந்த ஆயிரம் பெயர் களைச் சொல்லி, பகவானை வேண்டினால் கொஞ்சமாவது தர்மம் பிழைக்கும் என்பது பீஷ்மர் வாக்கு.


உடனே பார்வதிதேவிக்குச் சந்தேகம் வந்து விட்டது. அவள் சர்வேஸ்வரனான தன் கணவனைப் பார்த்து, ""சுவாமி, இது எப்படி சாத்தியமாகும்? ஆயிரம் நாமங்கள் சொல்லி அதனால் தர்மம் தழைக்கும் என் றால், அந்த நாமங்களை பண்டி தர்களால் சொல்ல முடியலாம்; படித்தவர்களால் சொல்ல முடியலாம். ஆனால் படிக்காத ஒருவன் தர்மம் தழைக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா?'' என்று கேட்டாள்.


ஈஸ்வரன் புன்னகைத்தார்."தேவி... நீ சொல்வது சரிதான். ஏதுமறியாத ஒருவன் ஆயிரம் பெயர் சொல்லி திருமாலை வேண்டுவது நடக்காத காரியம்தான். ஆனால் அதற்கும் ஓர் வழி உண்டு.


ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமேஸஹஸ்த்ர நாம தந்துல்யம் ராம நாம வரானனே'-  இப்படி மூன்று முறை சொன் னால் போதும். சஹஸ்ர நாமம் சொன்ன பலனை அடையலாம் என்று பார்வதிதே வியின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தார் ஈஸ்வரன். 


சரி; இப்படிச் சொல்வதால் நமக்கு என்ன பலன் கிடைக்கும்? என்று கேட்கலாம். மரா... மரா... மரா... என்று சொல்லியே ராமநாமத்தை உச்சரித்த வேடனும் திருடனுமாக இருந்தவனே வால்மீகி மகரிஷியாக உயரவில்லையா? அது தான் ஸ்ரீராம நாம மகிமை.


மேலும் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும், அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்களும் சொல்லலாம். முழு மனதோடு பகவானைச் சரணாகதி அடைந்தால்பலன்களை அவன் தருவான். 


பேய், பிசாசுகள் அண்டாது. வியாதிகள் அணுகாது. வைத்தியர்கள் கைவிட்ட தீராத நோயும் தீரும். சுகப்பிரசவம் சரியாக நேரும். நோயாளிகளின் காதருகே அவர்கள் மனம் கேட்கும்படியாக சஹஸ்ர நாமப் பாராயணம் செய்வது மிக மிக உத்தமம். மேலும் தர்மங்களும் தழைக்கும்.

Saturday 15 April 2023

நந்தவனத்தில் ஒரு ஆண்டி

 கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி!

ஒரு கிராமத்துக்கு ஒரு பரதேசி வந்தார். அவர் வீடு வீடாகப் போய் பிச்சை கேட்பார். 


ஒருநாள் ஒரு வீட்டின் பெண்மணி, ஏம்ப்பா...உனக்கு கை காலெல்லாம் நல்லாத்தானே இருக்கு. உழைச்சு சாப்பிட்டா என்னவாம்? என்று கடுமையாகப் பேசி விட்டாள். பரதேசிக்கு வருத்தம். அவருக்கு ரோஷம் வந்து விட்டது. தன்னைத் திட்டிய அந்த ஊரார் முன், தான் ஒரு கடும் உழைப்பாளி என்பதைக் காட்ட ஒரு காலியிடத்தில் பூந்தோட்டம் போட்டார். கோயில்கள் மிகுந்த அந்த ஊரில் பூக்களை விற்று சம்பாதிக்கலாம் என கணக்கு போட்டார். ஆங்காங்கே கிடந்த பூங்குச்சிகளை ஒடித்து குழி தோண்டி நட்டார். அருகிலேயே ஒரு கால்வாய் ஓடியது. அதில் இருந்து தண்ணீர் எடுத்து, செடிகளில் ஊற்ற குடம் இல்லை.

                              ஒரு குயவனிடம் சென்று, எனக்கு இலவசமாக ஒரு குடம் தா. என் தோட்டத்து பூக்களுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். நான் பரதேசி. காசு இல்லை, என்றார். இவர் பரதேசி என்றால், அவன் வடிகட்டிய கஞ்சன். இருந்தாலும் இல்லை என சொல்லாமல் அப்போதைக்கு தட்டிக் கழிப்பதற்காக, நாளை வாரும், குடம் தருகிறேன், என சொல்லி அனுப்பிவிட்டான். அவர் அவன் குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக அங்கு போய் நின்றார். அன்றும் நாளை வாரும், குடம் தயாராகவில்லை, என சொல்லி அனுப்பி விட்டான். மறுநாளும் போனார். இப்படியே பலநாள் போனார்.


பத்து மாதங்களாக தொடர்ந்து ஒரே பதிலே கிடைத்தது. அதுவரை தென்னை மட்டையில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றியும், கொட்டாங்கச்சிகளில் தண்ணீர் எடுத்தும், தன் மேல் துண்டை தண்ணீரில் நனைத்து அதைக் கொண்டு வந்து பிழிந்தும் செடிகளை ஓரளவு காப்பாற்றி வைத்திருந்தார் பரதேசி. ஒருநாள் பரதேசியின் தொல்லை தாங்காமல் ஒரு மண்குடத்தை கொடுத்துவிட்டான். பரதேசிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. தன் தலையில் குடத்தை வைத்துக்கொண்டு ஆட ஆரம்பித்து விட்டார். தற்செயலாக கை நழுவ குடம் கீழே விழுந்து உடைந்தது. வருத்தத்துடன் தோட்டத்துக்கு திரும்பிய பரதேசி ஒரு சித்தரைப் பார்த்தார். நடந்ததைச் சொன்னார். சித்தர் அவரிடம், ஒவ்வொரு மனிதனும் பத்துமாதம் தாயின் கருவில் இருந்து, பிறக்கும் போது பரதேசியாக ஆடை கூட இல்லாமல் தான் வருகிறான்.  இங்கே வந்ததும் பாட்டு, கூத்து, செல்வம், ஆடை, அணிகலன் என்ற மாயைக்குள் சிக்கி, ஆடாத ஆட்டம் ஆடுகிறான். உயிர் பிரிந்ததும், நீ கஷ்டப்பட்டு சம்பாதித்த குடத்தை கீழே போட்டு உடைத்தது போல, எல்லாவற்றையும் இழந்து, அதே நிர்வாணத்துடன் வந்த இடம் திரும்புகிறான், என்றார். பரதேசி வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிந்து கொண்டு, மீண்டும் ஆசைகளைத் துறந்து தவம் செய்ய புறப்பட்டு விட்டார்.

Tuesday 11 April 2023

அனுமார் சரித்திரம், காலநேமி சம்ஹாரம்

 ஶ்ரீரங்கம் சேஷராயர் மண்டபத்தில் உள்ள சிற்பம் இது.

இதற்கான விளக்கம்:இராவணன் மகன் இந்திரஜித்கும் இலட்சுமணனுக்கும் இடையே நடைபெற்ற போரில், இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தால், இலட்சுமணன் மூர்ச்சையாகி மயங்கி வீழ்ந்தார்.

இலங்கை அரச மருத்துவர் சுசேனர், இலட்சுமணனை குணப்படுத்த இமயமலையில் வளரும் ‘சஞ்சீவினி’ எனும் மூலிகை மருந்துச் செடிகளை பறித்து வர அறிவுறுத்துகிறார்.

சஞ்சீவினி மூலிகை மருந்தினை இமயமலையில் இருந்து கொண்டு வருவதற்காக பெரும் பலவானாகிய அனுமன் விரைந்து சென்றார். இதை அறிந்த இராவணன் அனுமனுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்த, அவற்றை எல்லாம் கடந்து அனுமன்சஞ்சீவினிமலையைஅடைந்தார்.

அங்கு அனுமனைக் கொல்ல காலநேமியை இந்திரஜித் அனுப்பி வைக்கிறார். காலநேமி என்னும் அசுரர் மாரீசனின் மகன் ஆவார். அனுமன் இமயமலையின் சஞ்சீவினி மூலிகை உள்ள பகுதியை அடைந்து, சஞ்சீவினிச் செடிகளை பறிக்க முற்படுகையில், அவ்விடத்தில் போலித் துறவி வேடத்தில் வந்த காலநேமி, அனுமனை வரவேற்று, அருகில் உள்ள ஏரியில் குளித்து விட்டு சஞ்சீவினி செடிகளை பறிக்கச்சொல்கிறார். அனுமன் ஏரியில் குளிக்கையில், காலநேமிஏவிய மாயமுதலை, அனுமனை விழுங்குகிறது. அனுமன் அம்முதலையின் வயிற்றைக்கிழித்துக் கொல்கிறார். அனுமன் கையால் இறந்த முதலை அப்சரசாக மாறி, தான் ஒரு முனிவரால் சாபம் பெற்ற வரலாற்றைக் கூறி, காலநேமியின் சதித் திட்டத்தை அனுமனுக்கு எடுத்துரைக்கிறாள்.

காலநேமியைக் கொன்று, விடிவதற்குள் சஞ்சீவினிச் செடிகள் பறித்து, இலட்சுமணனைக் காக்குமாறு அப்சரஸ் அனுமனிடம்கூறுகிறாள்.அனுமனும்காலநேமியைக்கொன்று, சஞ்சீவினி மூலிகைச் செடிகள் வளரும் குன்றை கொணர்ந்து, இலங்கை திரும்பி, இலட்சுமணனின் மூர்ச்சையை தெளியவைக்கிறார். இராமாயணத்தின் மிக முக்கிய திருப்புமுனையாக விளங்கும் இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் உள்ள சேஷராயர் மண்டபத்தில் உள்ள தூணில் அழகிய சிற்பங்களாக சிறப்புற அமைக்கப்பட்டுள்ளது.



அரூபலட்சுமி

 ஆயுள் பலம்; காஞ்சி காமாட்சி; அரூப மகாலட்சுமி!  நோய் போக்குவாள்; ஆரோக்கியம்  தருவாள்!


லோகமாதா என்று போற்றப்படுகிறாள் காஞ்சி காமாட்சி. உலகின் அனைத்து சக்தி பீடங்களுக்கும் தலைமைப் பீடமாகத் திகழ்வது காஞ்சி மாநகரம். இங்கே குடிகொண்டிருக்கும் காமாட்சி அன்னையே, சக்தி பீடங்களுக்கும் தலைவி.


ஆலயத்தில், காமாட்சி அன்னை சந்நிதிக்கு அருகிலேயே அமைந்துள்ளாள் அரூப லட்சுமி.

அழகும் தெய்வாம்சமும் உள்ள பெண்களை ‘மகாலட்சுமி மாதிரி இருக்கா’ என்று சொல்வோம். ‘அப்படியென்றால் அழகில் சிறந்தவள் நானே’ என கர்வம் கொண்டாள் ஸ்ரீமகாலட்சுமி. ‘இந்த கர்வம் உலகத்துக்கு நல்லதல்ல. கர்வமே ஒருவருக்கு எதிரி என்பதை எல்லோருக்கும் உணர்த்த வேண்டும்’ என முடிவு செய்த மகாவிஷ்ணு தன் விளையாட்டைத் தொடங்கினார்.


முதல்கட்டமாக, மனைவிக்கு சாபமிட்டார். தன் துணைவி என்றும் பாராமல் மகாலட்சுமியைச் சபித்தார். அவ்வளவுதான். அவளின் அழகு மட்டுமின்றி, அவளுக்கு உருவமே இல்லாமல் போயிற்று. ரூபம் இழந்து, அரூபமானாள் மகாலட்சுமி. அரூப லட்சுமியானாள். ‘கர்வமே சத்ரு என்பதை உணர்ந்தேன். சாபத்துக்கு விமோசனம் தந்தருளுங்கள் ஸ்வாமி’ எனக் கதறினாள். கன்ணீர் விட்டாள்.


பிறகு, மகாவிஷ்ணுவின் ஆணைப்படி, இங்கே காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அன்னையின் சந்நிதிக்கு வந்து, இங்குள்ள காயத்ரீ மண்டபத்தில் அமர்ந்து, உமையவளை நோக்கி கடும் தவம் புரிந்தாள்.


அவளின் தவத்தில் மகிழ்ந்த காமாட்சி அம்பாள், கருணையே உருவெனக் கொண்டு, பிலாகாஸம் எனும் பகுதியில் இருந்து வெளிப்பட்டு, மகாலட்சுமி க்கு எதிரில் வந்து நின்று, காட்சி தந்தருளினாள். உருவமே இல்லாமல் இருந்தவளின் முன்னே உலகத்துக்கே தாயான காமாட்சி அம்பாள் நின்றதும், மகாலட்சுமியின் சாபம் மொத்தமும் காணாமல் போனது. சாப விமோசனம் பெற்றாள்.


‘என் குழந்தைகள், அரூபலட்சுமியாக இருக்கிற உன் மீது குங்குமத்தை வைத்துவிட்டு, எடுத்துச் செல்வார்கள். இழந்த சௌந்தர்யத்தை மீண்டும் பெறுவாய். என் குழந்தைகளும் இழந்ததையெல்லாம் பெறுவார்கள். சகல சௌபாக்கியங்களுடன் வாழ்வார்கள். நோய் நீக்கி, ஆரோக்கியத்துடன் அவர்களை வாழச் செய்வாய்’ என அருளினாள் காமாட்சி அம்பாள்.


இன்றைக்கும் காஞ்சி காமாட்சி அம்பாள் சந்நிதியில் தரப்படுகிற குங்குமப் பிரசாதத்தை, காயத்ரி மண்டபத்தில் உள்ள ஸ்ரீஅரூபலட்சுமியின் மேல் வைத்துவிட்டு, அவளையும் வணங்கி, பிரசாதத்தை எடுத்துச் செல்கின்றனர் பக்தர்கள்.


ஸ்ரீமகாலட்சுமி சாப விமோசனம் கிடைக்கப் பெற்ற புண்ணியத் திருத்தலம் காஞ்சியம்பதி. காஞ்சி காமாட்சியையும் அவளுக்கு அருகே இருந்து கொண்டு, அகிலத்து மக்களின் நோயையும் தீயசக்தி யையும் விரட்டி, ஆரோக்கியம் தந்தருள்கிறாள்.


வீட்டில், காலையும் மாலையும் விளக்கேற்றி, காமாட்சி அன்னை துதிகளைப் பாடி, மகாலட்சுமி யை மனதார வேண்டிக்கொள்ளுங்கள். நெற்றியிலும் மாங்கல்யத்திலும் குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். சகல ஆரோக்கியமும் ஐஸ்வரியமும் தந்தருள்வாள் அரூபலட்சுமி!

அமிர்தவர்ஷினி மரம்

 அதிசய கோவில் மரம்


*திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சி என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ளது அத்திரி மலை. புலிகள் உட்பட பல வனவிலங்குகள் வாழும் இந்த மலையில் வருடா வரும் ஒரு அதிசயம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.*


*அத்திரி என்னும் மகரிஷி தன் மனைவியோடு இந்த மலையில் வாழ்ந்துள்ளார். அதனாலேயே இந்த மலைக்கு அத்திரி என்னும் பெயர் வந்துள்ளது. அடர்ந்த இந்த மலைக்குள் ஒரு அற்புதமான சிவன் கோவில் உள்ளது.*


 *அதோடு கங்கைக்கு நிகராக கருதப்படும் அத்ரி கங்கை என்னும் தீர்த்தம் எப்போதும் இங்கு வற்றாத நிலையில் உள்ளது. இதில் வெள்ளை ஆமை ஒன்று உள்ளதாகவும் அதை காண்பது அவ்வளவு எளிதல்ல எனவும் கூறப்படுகிறது.*


*சிவன் கோயிலிற்கு அருகே பாலை மரம் என்றொரு அரியவகை மரம் உள்ளது. இந்த மரத்தில் இருந்து வருடா வருடம் அதிசயிக்கும் வகையில் ஒரு அற்புதமான பன்னீர் மழை பொழிகிறது. பங்குனி மாதத்தின் கடைசி 5 நட்கள், சித்திரையின் முதல் 5 நாட்கள் என இந்த 10 நாட்களுக்கும் ஏதாவது 2 நாட்கள் மட்டும் இந்த மரத்தின் கிளைகளில் ஒருவகையான வண்டுகள் வந்து அமர்கின்றன.*


*அந்த வண்டுகள் ஒரே நேரத்தில் தங்கள் உடம்பில் இருந்து நீர் போன்ற ஒரு திரவத்தை சுரந்து அதை பீய்ச்சி அடிக்கின்றன. அதை பார்க்கையில் அந்த மரத்தில் இருந்து மட்டும் மழைபொழுவது போல காட்சி அளிக்கின்றன. வண்டுகளால் பீய்ச்சி அடிக்கப்பட்ட அந்த திரவத்தை நுகர்ந்து பார்த்தல் அது பன்னீர் வாசனையில் உள்ளது. அனால் அது மிக விரைவில் காய்ந்துவிடுகிறது.*


 


*மரத்தின் அடியில் நின்று பார்த்தால் ஒரு வண்டு கூட கண்களுக்கு தெரிவதில்லை.*


*இந்த வண்டுகள் அனைத்தும் இந்த மலையில் வாழும் சித்தர்கள் என்று நம்பப்படுகிறது. தமிழ் புத்தாண்டான சித்திரை மாதத்தை வரவேற்கும் வகையில் சித்தர்கள் வண்டாக வந்து இந்த மரத்தில் இருந்து பன்னீரை தெளிக்கிறார்கள் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.*


*அந்த வனப்பகுதியில் எத்தனையோ பாலை மரங்கள் இருந்தாலும் ஏன் வண்டுகள் அனைத்தும் கோவில் அருகில் உள்ள இந்த ஒரு மரத்தில் மட்டும் வந்து அமர்கின்றன ? ஏன் அனைத்து வண்டுகளும் இங்கு மட்டும் திரவத்தை மழைபோல பொழிகின்றன ? அவை ஏன் மனிதர்களின் கண்களுக்கு தென்படுவதில்லை போன்ற பல கேள்விகளுக்கு இன்று வரை விடை இல்லை.*


*அத்ரி முனிவர் வழிபட்ட சிவாலய ஸ்தலமான அத்ரிமலையில் உள்ள பாலை மரம் என்கிற ஒரு அரிய வகை மரத்தில் பங்குனி மாதத்தின் கடைசி 5 நட்கள் சித்திரையின் முதல் 5 நாட்கள் என இந்த 10 நாட்களுக்குள் 2 நாட்கள் மட்டும் மரத்தின் நிறத்தை ஒத்த பல்லாயிரக்கணக்கான வண்டுகள்( நம் கண்களுக்கு தெரியாது) கிளைகளில் கூடி தங்கள் உடம்பிலிருந்து சுரபிகள் வழியாக நீரை போன்ற திரவங்களை தெரித்தடிக்கும் . நம் பார்வைக்கு , மரத்தடியில் மட்டும் மழை பெய்வது போலத் தோன்றும் , ஆகையால் இந்த மரத்திற்கு அமிர்தவர்ஷிணி என்ற மற்றொரு பெயரும் உண்டு

Monday 10 April 2023

வடாமலீஸ்வரர் ,ஓரகடம், சென்னை

 


Sunday 9 April 2023

நந்தி பகவான் ஓவியம்


 

சகாதேவர் கால சாஸ்திரம்

 🌳 பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான

சகாதேவன் சாஸ்திரத்தில் வல்லவர். 🌳

🌕 இவர் இயற்றிய இந்த சாஸ்திரம் தமிழில் இருக்கிறது. கால ஸாஸ்திரம் <<<<<<<<<>>>>>>>>>

⭕ கால அளவை கூறும் கால ஸாஸ்திரம்

தாமரை இதழ்களை எட்டு அடுக்கி ஒரு

நுட்பமான ஊசிக்கொண்டு துவாரம் பண்ணுவதற்கு ஆகும் நேரமே ஒரு க்ஷணமாகும்.

02க்ஷணம்கள் 01இல்லம்

02இல்லம்கள் 01காஷ்டை

02காஷ்டைகள் 01நிமேஷம்

02நிமேஷங்கள் 01துடி (15விதற்பரைகள்)

02துடிகள் 01துரிதம் (30விதற்பரைகள்)

02துரிதம்கள் 01தற்பரை (60விதற்பரைகள்)

60தற்பரைகள் 01வினாழிகை

60வினாழிகைகள் 01நாழிகை

60நாழிகைகள் 01நாள்

07நாட்கள் 01வாரம்

(ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி இவையே ஏழு நாட்கள்)

🔥 பதினைந்து நாட்கள் ஒரு பக்ஷம்,

(ப்ரதமை,த்வீதியை,த்ரீதியை,சதுர்த்தி,பஞ்சமி,ஷஷ்டி,ஸப்தமி,அஷ்டமி,நவமி,தசமி,ஏகாதசி,த்வாதசி,த்ரயோதசி,

சதுர்தசி,பௌர்ணமி.இதுசுக்லபக்ஷம்)(ப்ரதமை,த்வீதியை,

த்ரீதியை,சதுர்த்தி,பஞ்சமி,ஷஷ்டி,ஸப்தமி,அஷ்டமி,நவமி,தசமி,ஏகாதசி,த்வாதசி,த்ரயோதசி,சதுர்தசி,அமாவாசை.

இது க்ருஷ்ணபக்ஷம்.)இரண்டு பக்ஷங்கள் ஒரு மாதம்

மாதங்கள் இரண்டுவகைப்படும்

01சந்திரமானம்

02ஸௌரமானம்

01சைத்திரம்

02வைசாகம்

03ஜேஷ்டம்

04ஆஷாடம்

05ச்ராவணம்

06பாத்ரபதம்

07ஆஸ்வீயுஜம்

08கார்திகம்

09மார்கசிரம்

10புஷ்யம்

11மாகம்

12பால்குனம்

என இப்பன்னிரெண்டும் சாந்திரமான மாதங்கள் இவை சூரிய சந்திர்கள் கூடி பிரிதல் மூலம் எற்படுவதாம்.

01மேஷம் (சித்திரை)

02ரிஷபம் (வைகாசி)

03மிதுனம் (ஆனி)

04கடகம் (ஆடி)

05சிம்மம்(ஆவணி)

06கன்னி (புரட்டாசி)

07துலா (ஐப்பசி)

08வ்ருச்சிகம் (கார்திகை)

09தனுஸு (மார்கழி)

10மகரம் (தை)

11கும்பம் (மாசி)

12மீனம் (பங்குனி)

என இப்பன்னிரெண்டு மாதங்கள் ஸௌரமான மாதங்களாகும்.

இவை ஸூரியனுடைய ஓட்டத்தால் மட்டுமே ஏற்படுவதாகும்.

இரண்டு மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது,

01வஸந்தம், (சித்தியரை,வைகாசி)

02க்ரீஷ்மம்,(ஆனி,ஆடி)

03வர்ஷம்,(ஆவணி புரட்டாசி)

04சரத்,(ஐப்பசி,கார்த்திகை)

05ஹேமந்தம்,(மார்கழி,தை)

06சிசிரம்.(மாசி,பங்குனி)

என ருதுக்கள் ஆறு வகைப்படும்.

ருதுக்கள் மூன்று சேர்ந்த்து ஒரு அயணம்,

01உத்ராயணம்,

02தக்ஷிணாயம்

என அயணங்கள் இரண்டு வகைப்படும்.

இரண்டு அயணங்கள் சேர்ந்தது ஒரு வருஷம்.

இவ்வாறுபக்ஷங்கள்லும்,மாதங்களாலும்,ருதுக்களாலும்,அயணங்களாலும், உருவான வருடங்கள் மொத்தம் அறுபதாகும் (60)

அவையாவன

01ப்ரபவ,02விபவ 03சுக்ல 04ப்ரமோதூத 05ப்ரஜோத்பத்தி 06ஆங்கீரஸ 07ஸ்ரீமுக 08பவ 09யுவ 10தாது 11ஈஸ்வர 12வெகுதான்ய13ப்ரமாதி 14விக்ரம் 15விஷூ16சித்திரபானு 17ஸுபானு 18தாரண 19பார்திப 20விய 21ஸர்வஜித்

22ஸர்வதாரி 23விரோதி24விக்ருதி 25கர 26நந்தன

27விஜய 28ஜய 29மன்மத 30துன்முகி 31ஹேவிளம்பி

32விளம்பி 33விகாரி 34ஸார்வாரி 35பிலவ36சுபக்ருது 37சோபக்ருது 38க்ரோதி 39விசுவாவசு 40பராபவ

41பிலவங்க 42கீலக 43ஸௌம்ய 44ஸாதாரண

45விரோதிக்ருது46பரிதாபி 47ப்ரமாதீச 48ஆனந்த்

49ராக்ஷஸ 50நள 51பிங்கள் 52காளயுக்தி 53ஸித்தார்தி 54ரௌத்ரி 55துன்மதி 56துந்துபி57ருத்ரோத்காரி

58ரக்தாக்ஷி 59க்ரோதன60அக்ஷய. என்பனவையே

60வருடங்களாகும்.

🍒 இவ் அறுபது வருடங்கள் ஒன்று முடிந்தால் ஒரு பரிவ்ருத்தியாகும்.

🍒 ஆறு பரிவ்ருத்திகள் சேர்ந்தால் ஒரு தேவவருடமாகும் அதாவது 360மனித வருடங்களாகும்.

🍒1200தேவ வருடம் ஒரு கலியுகம் (432000மனித வருடம்)

2400தேவ வருடம் ஒரு த்வாபரயுகம் (864000மனித வருடம்)

3600தேவ வருடம் ஒரு த்ரேதாயுகம் (1296000மனித வருடம்)

4800தேவ வருடம் ஒரு க்ருதயுகம் (1728000மனித வருடம்)

மேற்கூறப்பட்ட நான்கு யுகங்கள் ஒன்று சேர்ந்தது 12000தேவயுகமாகும்.(4320000மனித வருடமாகும்)இதை ஒரு சதுர்யுகம் அல்லது ஒரு மஹாயுகம் என்று கூறப்படுகிறது.

🍒 மாஹாயுகங்கள் எழுபத்துஒன்றும்(71)சற்று சந்தி வருடங்களும் சேர்ந்த்து ஒரு மன்வந்த்ரம் எனப்படும்.

இது ஒரு மனுவினுடைய காலமாகும்.

மனுக்கள் மொத்தம் பதினான்கு(14)பேர்களாவார்.

01) ஸ்வயம்புவ மனு 02) ஸ்வாரோசிஷ மனு

03) உத்தம மனு 04) தாமஸ மனு 05) ரைவத மனு

06) ஸாக்ஷூஸமனு 07) வைவஸ்வத மனு 08)ஸாவர்ணிமனு09)தக்ஷஸாவர்ணி மனு 10)ப்ரம்மஸாவர்ணி11)தர்மஸாவர்ணி12)ருத்ரஸாவர்ணி 13) தேவஸாவர்ணி 14) இந்த்ரஸாவர்ணிபோன்றவைகளே பதினான்கு மனுக்களின் பெயர்களாகும்.

சந்தி வருடங்களுடன் கூடிய இம்மொத்த மனுக்களின் காலமும் ஒன்று சேர்ந்த்து ஒரு கல்பமாகும்.

🍒 ஒரு கல்பம் என்பது மொத்தம் (1000) ஆயிரம் மஹாயுகங்களாகும்.

ஒரு கல்பம் என்பது ப்ரம்மாவிற்கு அரை நாளாகும்.

இரண்டு கல்பம் சேர்ந்த்து ப்ரம்மாவிற்கு ஒரு நாளாகும்.

பகலில் ப்ரம்மாவிழித்திருந்து இரவில் உறங்குவார்.

ப்ரம்மாவின் பகல் பொழுதிலேயே ஸ்ருட்டிகள் நடக்கும் இரவில் ப்ரபஞ்சத்தை ஒடுக்கிக்கொண்டு தூங்குவார்.

ப்ரம்மாவின் மாதத்தில் முப்பது(30) பகல் பொழுதும் முப்பது (30) இரவு பொழுதும் அடங்கும்,

01) வாமதேவ கல்பம் 02) ஸ்வேதவராஹ கல்பம் 03) நீல லோஹித கல்பம் 04) ரந்தர கல்பம் 05) ரௌரவ கல்பம் 06) தேவ கல்பம் 07) ப்ருகத் க்ருஷ்ண கல்பம் 08) கந்தர்ப கல்பம் 09) ஸத்ய கல்பம் 10) ஈசான கல்பம் 11) தம கல்பம் 12) ஸாரஸ்வத கல்பம் 13) உதான கல்பம் 14) காருட கல்பம் 15) கௌரம கல்பம் 16) நாரஸிம்ம கல்பம் 17) சமான கல்பம் 18) ஆக்னேய கல்பம் 19) ஸோம கல்பம் 20) மானவ கல்பம் 21) தத்புருஷ கல்பம் 22) வைகுண்ட கல்பம் 23) லக்ஷ்மி கல்பம் 24) ஸாவித்ரீ கல்பம் 25) கோர கல்பம் 26) வராஹ கல்பம் 27) வைராஜ கல்பம் 28) கௌரீ கல்பம் 29) மஹேஸ்வர கல்பம் 30) பித்ரு,எனஸ்ருஷ்டிகள் நடக்கும் ப்ரம்மாவின் பகல் பொழுதின் பெயர்களாகும்.

இரவு காலத்தில் ப்ரம்மா உறங்குவதால் அந்தந்த கல்பத்தின் இரவாகவே கொள்ளப்படும்.

அறுபது கல்பம்(60) சேர்ந்த்து ப்ரம்மாவிற்கு ஒரு மாதமாகும்,

எழு நூற்று இருபது (720) கல்பம் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு வருடமாகும்,

இந்த கணக்கின் படி ப்ரம்மா (100) ஆண்டு காலம் வாழ்வார்,

பிரம்மாவின் பூர்ண ஆயுள் எழுபத்திரெண்டாயிரம் (72000) கல்பகாலமாகும்.

இனி பிரம்மாவின் ஸ்ருஷ்டி முதல் சென்ற நாட்களை எவ்வாறு கணக்கிட வேண்டும் என்பதை கூறப்போகிறேன் கவனமாக கேட்கவும்.

வாமதேவ கல்பம் முடிவடைந்து ஸ்வேதவராஹ கல்பத்தில் இதுவரை ஆறு மனுக்களின் காலமும் அவர்களின் சந்திவருடங்களும் முடிவடைந்து தற்சமயம் ஏழாவது மனுவான வைவஸ்வதமனுவின் காலத்தில் இருபத்துஏழு சதுர்யுகங்கள் முடிந்து இருபத்து எட்டாவது சதுர்யுகத்தில் நான்காவது யுகமான கலியுகம் நடந்துக்கொண்டிருக்கிறது.

2010வருட கணக்கின் படி கலியுகம் 5111வருடம் முடிந்து விட்டது....இது சகாதேவன்சாஸ்திரத்தில் இருக்கிறது🙏

நன்றி🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை...

 சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை...


  நான் கேட்ட ஒரு பழைய பாடல் , என்னை ரொம்பவே சிந்திக்க வைத்தது.


“இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை.” 


எத்தனையோ ஆண்டுகளாக நாம்  கேட்டுக் கொண்டிருக்கும் "திருவிளையாடல்" படப் பாடல்தான் இது !

ஆனால் இன்று ஏனோ ,

இந்தப் பாடலின் ஒரு சில வரிகள், என்னை அறியாமலேயே , 

மீண்டும் மீண்டும் என் உள்ளத்தின் உள்ளே  ஓடி வந்து உட்கார்ந்து கொண்டு 

அர்த்தம் தெரிந்து கொள்ள என்னை அழைத்தன.


“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ - மாமன்

திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?”


"இசைத்தமிழ் நீ செய்த 

அரும் சாதனை "பாடலின் இடையில் வரும் வரிகள் இவை.


இத்தனை வருடங்களாக இந்த பாடல் வரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோமே ,

அது என்ன சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை ?


நண்பர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன்.


“ அது வந்து , 

அதாவது , சிவனின் திருவிளையாடல்களில் 

அதுவும் ஒன்று.

அதற்கு மேல்...முழுசா தெரியலியே !”


சரி , பாடலை எழுதியவர் யார் என்று பார்த்தேன்.


கண்ணதாசன்.


சும்மா எழுத மாட்டார் கண்ணதாசன்!

அவர் ஒரு வரி எழுதினால் , 

அதற்குள்ளே ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும் .

 

கூகிளில் அங்கும் இங்கும் ஓடியாடி  ,

சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையை தேடிப்  பிடித்தேன்.

அது இதுதான்.


அந்தக் காலத்தில் காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன்  - அவன் பெயர் அரதன குப்தன்- மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு , மதுரையிலேயே வாழ்ந்து வந்தான்


காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த , அவன் தங்கைக்கும் , தங்கையின் கணவருக்கும் , தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை.


எதிர்பாராமல் ஒரு நாள் , அரதன குப்தனின் தங்கையும் , அவள் கணவரும் இறந்துவிட்டதாக காவிரிபூம்பட்டினத்திலிருந்து தகவல் வர , 

உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு , திரும்பும்போது  தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான்.


வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே ஒரு புன்னைவனம்.

அதில் ஒரு வன்னிமரம் ; அருகில் ஒரு சிவலிங்கம்.


சற்றுத் தள்ளி ஒரு கிணறு.


கட்டுசோறை பிரித்து சாப்பிட்டு விட்டு , 

அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும் !


காலையில் கண் விழித்த ரத்னாவளி பதறிப் போனாள் ; கதறி அழுதாள்.


காரணம் ?


அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன்.

.

நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது.

.

தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர் .

.

நடந்ததை அறிந்து அவர் , ஈசனிடம் முறையிட , உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்.


சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் ரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர்.

அப்புறம் சொன்னாராம் : “ஈசனுக்கு முன்பாகவே  இந்தப் பெண்ணுக்கு  ஒரு தாலியைக் கட்டி , இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ..!”

.

மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன்.

இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள், 

அங்கே இருந்த ஒரு வன்னிமரமும், கிணறும் , சிவலிங்கமும்தான்.


இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள்.


கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி , கொதித்துப் போனாளாம்.


கள்ளம் இல்லாத உள்ளம் கொண்ட ரத்னாவளி நடந்த விஷயங்களை , உள்ளது உள்ளபடியே சொல்ல ,அதை கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி.


அப்புறம் என்ன ?


வழக்கு சபைக்கு வந்தது.

திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள்.


“மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி ” என்று கூறினாள் ரத்னாவளி.

முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி : “ஓஹோ ,அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?” 


கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.


கூனிக்குறுகிப் போன ரத்னாவளி , கைகூப்பி அழுதாள் ; தொழுதாள்.


கண்களில் கண்ணீர் வடிய கதறினாளாம் ரத்னாவளி :  “ஈசனே , இது என்ன சோதனை ? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார் ? சொல் இறைவா , சொல் ?”

ரத்னாவளி பெரும் குரல் எடுத்து கதறி அழ , அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல் :


"நாங்கள் சாட்சி.."


குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க , 

ஈசன் அங்கே எழுந்தருளி   நின்றாராம்:


“ ஆம் , இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான்.

ரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக  , கல்யாணம் நடந்த இடமான  திரும்புறம்பயத்தில் இருந்த வன்னிமரமும், கிணறும், லிங்கமும் , இன்று முதல் ,இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும் ” என்று சொல்லி மறைந்தாராம் ஈஸ்வரன்.


பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்.


இப்போதும் , மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளி பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில் , 

வன்னி மரம் , கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறதாம்.


நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ?


ஏற்கனவே மதுரை கோவிலுக்கு அடிக்கடி நான் போயிருக்கிறேன்.

ஆனால் அப்போது  இந்தக் கதை தெரியாததால் தேடிப் போய் பார்க்கவில்லை .


இனி போகும்போது கவனித்துப்  பார்க்க வேண்டும்.


கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “சாட்சி நாதர்” என்றும் “ஸ்ரீ சாட்சிநாதசுவாமி” என்ற பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு !


கும்பகோணத்திலிருந்து 6கி.மீ. தூரத்தில் இந்த திரும்புறம்பயம் ஸ்ரீ சாட்சிநாதசுவாமி கோவில் இருக்கிறது.


( “பொன்னியின் செல்வன்” நாவலில் திரும்புறம்பயம் பள்ளிப்படைக்கோவில் பற்றி எழுதி இருக்கிறார் கல்கி)


கதையைப் படித்து முடித்த நான் , 

கண்ணதாசனை எண்ணி எண்ணி வியந்து போனேன்.


“சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ ?”


கண்ணதாசன் எழுதிய இந்த ஒரு வரிக்குப் பின்னால் , 

இவ்வளவு பெரிய கதை இருக்கிறதே !

Wednesday 5 April 2023

05.04.2023, பொ களூர் பௌர்ணமி அலங்கார தீப ஆராதனை காட்சிகள்

05.04.2023, பொ களூர் பௌர்ணமி அலங்கார தீப ஆராதனை காட்சிகள்













05.04.2023 பொ களூர் பௌர்ணமி அபிஷேக காட்சிகள்

 05.04.2023 பொ களூர் பௌர்ணமி அபிஷேக காட்சிகள்












05.04.2023, பொகளூர் பௌர்ணமி யாக காட்சிகள்

 சிவபுராணம் சொல்லி ஆரம்பிக்கப்பட்டது




நந்தி பகவானை அழைத்தல்



முருகரை அழைத்தல்



பைரவரை அழைத்தல்





கயிலை மலையானை அழைத்தல்



அகத்தியரை போற்றி அழைத்தல்



சித்தர்களை எழுந்தருள அழைத்தல்



மகத்தான அகத்திய பெருமானை அழைத்தல்



சனி பகவான், நவகிரக சாந்தி, ஆகுதி