அன்புடையீர் அனைவருக்கும் நமஸ்காரம்
நமது அய்யா அகத்தியர் எம்பெருமானுக்கு பொகளூரில் ஐந்தாம் ஆண்டு குரு பூஜை நடக்க இருக்கிறது. இதுவரை 2015 இல் இருந்து பொகளூரில் அகத்தியர் ஜீவா அருள் நாடி பீடத்தில் நடத்தி கொண்டு வருகிறோம். நமது அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம் மூலம் வருடம் தோறும் ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு ஜீவ நாடி வாசிக்கப்பட்டு, அவர்களுக்கு அகத்தியரிடம் உரையாட , தங்கள் குறைகளை தெரிவிக்க, அகத்தியர் கூறும் பரிகாரங்களை கேட்டு அறிய, ஆன்மீக முன்னேற்றம் பெற, வாழ்வில் அணைத்து சிக்கல்களுக்கும் தீர்வாய், முதல் ஆதி மருத்துவராய் தீராத நோய்களை எல்லாம் தீர்த்து அருள் பாலித்து கொண்டு வருகின்றார். இந்த இடத்தில பீடம் அமைத்து அருள் பாலிக்க வேண்டும் என்பதுவும் ஜீவ நாடி மூலம் அவர் இந்த இடத்தை பற்றிய குறிப்புகளை கொடுத்து இங்கே பீடம் அமைக்க சொல்லி, தனது விக்ரகம் எங்கே பிரதிட்டை செய்யப்பட வேண்டும், நுழைவு வாயில் எங்கே வர வேண்டும், தீபம் எங்கே வைக்க வேண்டும் என்பது போன்ற அனைத்து ஏற்பாடுகளும் அகத்தியர் ஜீவ நாடி மூலம் கூறிய உத்தரவுக்கு ஏற்ப அமைக்கப்பட்டு செய்யப்பட்டு உள்ளது
மேலும்ம், இங்கே அய்யனின் அருள் எப்போதும் நிறைந்து இருப்பதற்காக தினமும் நித்திய அபிஷேகம், அலங்காரம் மற்றும் வியாழன் தோறும் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் மற்றும் பௌர்ணமி தோறும் சிறப்பு யாகம் , சிறப்பு அபிஷேகம் , சிறப்பு அலங்காரம் , அன்னதானம் ஆகியவை ஒரு முறை கூட தவறாது நடை பெற்று வருவதால் அய்யன் மிக்க மகிழ்ச்சியுடன் இங்கே எழுந்தருளி அருள் பாலித்து மக்கள் குறைகளை இந்த கலி காலத்திலும் கேட்டு அறிந்து அறிவுரை கூறி ஆட்கொண்டு வழிநடத்தி வரும் ஆஸ்ரமம் நமது அகத்தியர் பீடம்.
இங்கே தற்போது ஐயனுக்கு ஆலயம் அமைக்க நிலம் வாங்கப்பட்டு உள்ளது. ஆலய பணிகள் அய்யனின் உத்தரவு பேரில் ஆரம்பிக்கப்பட்டு, ஆழ் குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அய்யன் அருளால் 200 ஆதி ஆழத்தில் 10 ஏக்கர் நிலத்துக்கு நீர் பாய்ச்சும் அளவுக்கு நல்ல தெளிந்த குடி நீர் கிடைத்துள்ளது - ஊரில் உள்ள அணைத்து போர்வெல்களிலும் 1000 அடி துளையிட்ட போதும் நீர் வரவில்லை.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நமது பீடத்தில் அணைத்து பணிகளும் பக்தர்களின் நன்கொடை, குரு தட்சிணை பொன்றை மூலமே நடத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக, என்னை எடுத்து கொண்டீர்களானால், நான் பீடம் அமைக்க கடன் பெற்று நிலம் வாங்கி மாதம் ரூபாய் 50,000 கடன் கட்டி வருகிறேன். அணைத்து பக்தர்களையும் ஒருங்கே இணைக்கும் பணியை அய்யன் எனக்கு கொடுத்துளார்கள். நமது பீடத்தின் சார்பாக "தர்ம சிறகுகள் " என்று அய்யன் பெயரிட்டு கொடுத்த அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் மாதா மாதம் சுமார் 50000 ருபாய் தர்ம சிந்தனை உள்ளவர்களிடம் இருந்து தருமம் பெறப்பட்டு உணவில்லாதவர்கள், ஊனமுற்றவர்கள், விழி இழந்தவர்கள், திருநங்கைகள், கோசாலைகள், ஏழ்மை கொண்டவர்கள் ஆகியோருக்கு பல வகை வகையான உதவிகள் மாதம் தோறும் ஒவ்வொரு மாத பிறப்பு நாளன்று தருமம் செய்யப்படுகிறது
போன குரு பூஜைக்கு என்னால் முடிந்த அளவில் அன்னதானம் சேயா உதவியாக பெரிய சைஸ் அலுமினிய பாத்திரங்கள் போன்றவைகளை நான் வாங்கி கொடுத்தேன், அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வரும் காலங்களில் நித்திய அன்னதானம் செய்யும் திட்டமும் இருக்கிறது. ஆதரவில்லாத முதியவர்குளுக்கு உணவு உடை, இருப்பிடம் கொடுத்து அமைக்கும் திட்டமும் உள்ளது. போன மாதம் அன்பர்களின் உதவியால் 5 அன்னதான டேபிள்கள் 20 சேர்கள் ஆகியவை தானமாக அளிக்கப்பட்டன, சென்ற மாதம் பூஜை பொருட்கள் மளிகை பொருட்கள் 20000 அளவில் தானமாக அளிக்கப்பட்டன, கோதானம் செய்ய ரோப்பை 30000 ஒதுக்கப்பட்டு தயாராக உள்ளது - அய்யன் உத்தரவு கொடுக்கும் பட்சத்தில் கோ தானம் அளிக்கப்படும். ஏற்கனவே 2 கோமாதாக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன, அவைகளுக்கு மாதம் தோறும் தீவனம் நம் அன்பர்கள் அளிக்கும் தொகையில் தானமாக அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வழக்கம் போல நமது அய்யனின் குரு பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் அதிகாலை 5 மணி அளவில் வருபவர் அனைவருக்கும் அகத்தியர் ஜீவா அருள் நாடி வாக்கு ஆசீர்வாதம் வழங்கப்படும். குரு பூஜை நாளில் அவரவர் கைகளால் அய்யன் விக்கிரகத்துக்கு பால் அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படும். வருடத்தில் இந்த ஒரு நாள் மட்டுமே பக்தர்கள் தமது கரங்களால் பால் அபிஷேகம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இதனை யாரும் தவற விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலு குரு போஜன அன்று சுமார் 1000 பேருக்கு அன்னதானம் - வடை பாயாசத்துடன் வாழை இலையில் முழு சாப்பாடு அளிக்கப்படுகிறது. இந்த முறை வழக்கமான உணவு வகைகளுடன் சேர்த்து மொத்தம் 16 வகை உணவு பதார்த்தங்கள் அறுசுவை விருந்தாக வழங்கும் எண்ணம் உள்ளது. அதற்கு திட்டம் தீட்டி செயலாக்கம் நடைபெற்றுக்கொண்டு உள்ளது.
ஒவ்வொரு குரு பூஜை தினத்தன்றும் அகத்தியர் பல வடிவங்களில் காட்சி கொடுத்துளார்கள், முதியவர் வடிவம், குழந்தை வடிவம், கருடன் வடிவம், மழை பொழிவு மூலம் அருள் பாலித்தல், வானவில் தோன்றி காட்சி அளித்தல், வாசனை வடிவம் மூலம் உணர செய்தல் என்று பல பல வகையான அருளாசிகள் கிடைக்கும், அய்யன் மேல் அபிஷேகம் செய்த பிரசாதங்கள், ஹோமத்தில் நாமே இடும் ஆகுதி, நம் கரங்களால் பால் அபிஷேகம், ஜீவா அருள் நாடி வாக்கு, அறுசுவை உணவு போன்றவைகளுடன் சேர்த்து பல சாதுக்கள் அவர்களுக்கு ஆடை தானம், பண உதவி போன்றவைகளும் வழங்கப்படும். ஒரு முறை சாதுக்களின் ஒருவராக அருள்மிகு திருவண்ணாமலையில் வாழும் அடிமுடி சித்தர் அவர்கள் சாதுக்கோளோடு சாதுவாக முதியவர் வடிவம் எடுத்து வந்து என்னிடம் யாசகம் பெற்று சென்றார்கள் என்பது பின்னர் ஜீவ நாடி மூலம் அய்யனால் உரைக்கப்பட்டது.
எனவே இத்தகைய சிறப்பு வாய்ந்த அகத்தியர் குரு பூஜையில் அனைவரும் கலந்து கொண்டு பணிகள் செய்து அகத்தியர் அருளுக்கு பாத்திரமாகும்படி மிக தாழமையுடன் கேட்டு கொள்கிறேன். இது ஒரு மக்கள் விழா, இதில் அனைவரும் சமம், யாரும் தலைமை தாங்க மாட்டார்கள், எந்த அரசியலும் இங்கே கிடையாது, இங்கே எந்த ஜாதி மதமும் பார்ப்பதில்லை, தூய சைவ நெறியில் ஊறி திளைத்த நமது குருஜி முக்கிய பொறுப்பாக இருந்து தமது சீடர்களுடன் சேர்ந்து நமது ஐயனுக்கு நாம் நடத்தும் விழாவாகும்.
விழா நாள் 02/01/2021 - சனிக்கிழமை - நாள் முழுவதும் விழா நடக்கும் - நாள் மற்றும் தேதி அகத்தியரிடம் ஜீவ நாடியில் கேட்டு பிறகு உறுதி செய்யப்படும்
அனைவரும் பங்கு கொள்ளுங்கள், முடிந்தவர்கள் நிதி அளியுங்கள், முடிந்தவர்கள் சில பணிகளை எடுத்து செய்யுங்கள், அருளாசி பெறுங்கள்
இங்கனம்
தி. இரா . சந்தானம்
சேவகன் - பொகளூர் பீடம்
கோவை
9176012104 - போன் , வாட்ஸ் அப், GPay