Wednesday, 25 December 2019

சில ஈழத்து சித்தர்கள் வரலாறு

Forwarded post
நமது நண்பர் அன்பர் ஒருவரது பதிவு
🙏🙏🙏🙏🙏

Tuesday, 24 December 2019

கிரகணத்தைப் பற்றிய அகத்தியர் வாக்கு

🌻🌼🌻🌼🌻🌼🌻

ஓம் மகத்தான அகத்தீசாய நமஹ!
ஓம் அகஸ்திய பரமசித்தாய நமஹ!!

சூரிய கிரகணம்

26-dec-2019
இந்த முறை சூரிய கிரகணம் காலை 8:09க்கு ஆரம்பித்து 9:35 மணி அளவில் உச்சத்தை பெற்று 11:19 மணி அளவில் விடுகிறது.

கிரகணத்தைப் பற்றிய அகத்தியர் வாக்கு
:
பொதுவாக கிரகண காலத்தில் செய்யும் ஜெபங்களுக்கு அதிக சக்தி உண்டு (சூரிய கிரகணமாகிலும் அல்லது சந்திர கிரகணமாகிலும் சரி)

அதில் சூரிய கிரகண காலத்தில் செய்யும் ஜெபங்களுக்கு ஆயிரம் மடங்கு(1000) பலன் உண்டு.

சூரிய கிரகணத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை எப்போது செபித்தாலும் இந்தப் பலன் சித்திக்கும் இந்த சித்தியானது விலகாமல் அந்த ஆத்மனுகுண்டான தபோ பலமாக நிலைத்து நிற்கும்.

ஆகையால்...
அகத்தியரின் அன்பர்களுக்காக கேட்டுக்கொள்ளப்படுவது யாதெனில்...

தாங்கள் உபதேசம் பெற்ற மந்திரங்களை சித்தி செய்துகொள்ள இது உகந்த நேரமாகும்...
( உம். தாங்கள் உபதேசம்.பெற்ற அனைத்து மந்திரங்களையும் செபம் செய்யல்லாம்.. கணநாதன் முதல், ஷண்முகன், வயிரவன்,காயத்ரி, பாலா, சோடஷி, ஸ்ரீ வித்யா, தசதீட்டை, சித்தர்களின் மந்திரங்கள், அஷ்டாக்ஷரம், ஸ்தூல சூக்கும பங்சாட்சரங்கள், இஷ்ட தேவதைகளின் மந்திரங்கள் மற்றும் எண்ணிலடங்கா தேவதைகள் மந்திரங்கள்)

நீர்நிலைகளிலோ,
குளத்திலோ,
தொட்டியிலோ,
கழுத்தளவு நீரில் அமர்ந்து செபிக்கலாம்..

வீட்டில் குளித்துவிட்டு இயன்றால் தலை ஈரம் துவட்டாமல் ( அல்லது முழுதும் துவட்டாமல்) பலகையிலோ, ஆசனத்திலோ அமர்ந்து பூமி ஸ்பரிசத்துடன் செபம் செய்யலாம்..

8:09am ஸ்நானம்
பின்பு ஜபம்
9:35am (பிறகு தர்ப்பணம்.. கடைபிடிப்பவர்களுக்கு மட்டும்)
பின்பு ஜபம்
11:19 பின்பு ஸ்நானம்

பின்பு வீட்டில் அபிஷேகம் பூஜை..

ஓம் தத் ஸத்!

🌻🌼🌻🌼🌻🌼🌻

 Om Mahathana Agatheesaya Namaha!
 Om Agastya Paramasidhaya Namaha !!

 Solar eclipse

 26-dec-2019
 This time the eclipse starts at 8:59 am and peaks at 9:35 pm and leaves at 11:19 am.

 Agathiyar Vaaku on Eclipse:

 Generally, prayers(japa chanting) during the eclipse have more power (whatever  solar eclipse or sun eclipse)

 When we do Mantra Japa during the solar eclipse have a thousand times (1000) benefits.

 Whenever the solar eclipse happens,
 Japam from the beginning to the end of the time, whichis saved in his account permanently..

 This is the ideal time to recite the mantras they got ...
 (Ex: , they do recite all the mantras.

 Watersources,
 Riverside,
 Ponds,
 Sitting up to the neck of water...
And reciting
Or

 If you bath in the house, you can sit on the wood or Asanam..
With wet hair,
And foot touching the ground.
(Needed Bhoomi Sparisam)

 8:09 am Bath
 Then the japa
 9:35 am (afterwards only for those who do Pithru Tarpanas)
 Then the japa
 11:19 Then bath

Then
 Abhishek Pooja at home ..

 Om Tat Sath!

 🌻🌼🌻🌼🌻🌼🌻

அடியவர் கேள்வி*:- அகத்திய மஹரிஷி ஜீவ நாடியில் *நாவடக்கம் கொள் மகளே/மகனே* என்று பலருக்கு உரைத்துள்ளார். அதன் ஆழமான பொருள் விளக்க வேண்டுகின்றேன்.

*அஉம் அகத்திய மஹரிஷி பாதம் காப்பு*

*அடியவர் கேள்வி*:-
அகத்திய மஹரிஷி ஜீவ நாடியில் *நாவடக்கம் கொள் மகளே/மகனே* என்று பலருக்கு உரைத்துள்ளார். அதன் ஆழமான பொருள் விளக்க வேண்டுகின்றேன்.

*பதில்*:-

*”எந்த மனிதனிடம், ஒருவன், தேவை இல்லாமல் விவாதம் செய்து, அபவாதம் செய்து, வேதனையை இவன் ஏற்படுத்துகிறானோ, அந்த மனிதனுக்கு, இலவச சேவையாக, இவன் செய்த பூஜா பலன்களையும், புண்ணிய பலன்களையும் தாரைவார்க்கிறான், என்பது ஆன்மீகத்தின் பேருண்மையாகும்.*
அகுதொப்ப, உண்மையை மனதில் கொண்டு, சினத்தை தவிர்த்து, மௌனத்தை கடைபிடித்தால், எப்படி *ஒரு கஞ்சன், தன் தனத்தை, பேழைக்குள்ளே வைத்து வைத்து பூட்டுகிறானோ, அப்படி, இவன் செய்த பூஜா பலனும், புண்ணிய பலனும், மௌனத்தால் வியம் ஆகாமல் இருக்கும்." *

- அகத்திய பெருமான் அருள்வாக்கு!

🌹🌹🌸🌸🙏🌸🌸🌺🌺

*பொதிகை வேந்தன் புகழ் ஓங்குக*

🌸🌸🌺🌺🙏🌺🌺🌸🌸

Sunday, 8 December 2019

எனது அனுபவங்கள் 08.12.2019

நாங்கள் எல்லோரும் மாடியில் உள்ள வீட்டில் உறங்க செல்லும் முன் கீழ் வீட்டை பூட்டும் போது ஏதாவது ஒரு சிறிய சீரோ வாட்ஸ் பல்பு எரிய விட வேண்டும் என்று நினைத்ததுண்டு. ஆனால் பல்பு ஹோல்டரில் மின்சாரம் வரவே இல்லை. நேற்று இரவு அந்த மின்சார டப்பாவை தட்டி பார்த்தேன், அது உடைந்து இருந்தது. அதற்கு முந்தைய நாள் வேறு ஒரு பல்பு மாட்டி பார்த்தேன், அதுவும் எரியவில்லை. வெளியே செல்லும் போது ஒரு புது holder வாங்கி வந்தாவது போட வேண்டும் என்று எண்ணினேன்.  ஆனால் அதுவும் மறக்கடிக்கப்பட்டது. இன்றும் இரவு படுக்கும் முன் சிறிது வருத்தத்துடன் அகத்தியரை இப்படி இருளில் ஆழ்த்தி விட்டு செல்கிறோமே என்று நொந்து கொண்டு இருக்கும் போது, என் மனதினுள் அய்யன் வந்து, வீட்டின் வெளியே இருக்கும் டூ way switch ஐ யும் tube light ஐ யும் எரிய விட்டு குழப்பி, என் கைகள் தவறுதலாக அந்த அறியாத பல்பின் switch ஐ போடுமாறு செய்தார். என்ன ஆச்சரியம் அந்த பல்பு உடனே எரிந்தது. அகத்தியரிடம் கேட்டவுடன் உடனே நடந்தது, உடனடி தீர்வு... அன்றைக்கு 3 மாதம் முன்பு இப்படி தான் பைக்கை ரிப்பேர் செய்து கொடுத்தார். மீண்டும்  10 நாள் முன்பு வண்டியில் ஸ்டார்டிங் பிரச்சனை இருந்தது, எஞ்சின் சுமார் 2km தூரம் சென்ற பிறகே சூடானவுடன் சீராக ஓடும், அது வரை accelerator குறைத்தால் அணைந்து விடும்... இதை நினைத்து நொந்து கொண்ட போது திடீரென்று 10 நாள் முன்பு இந்த பிரச்சனை சரியானது, அதே ஆபீஸ் நிறுத்தும் இடம், அதே குளிர் காலம், அதே வண்டி தான், தானாக எப்படி சரியானது. இது இரண்டாவது முறை இவ்விதம் நடந்தது. சென்ற முறை வண்டி பழுதானதால் மிக சிரமப்பட்டு மழை வெள்ளத்தில் சிக்கி பேருந்தில் கடின முயற்சியுடன் வீடு வந்து சேர்ந்தேன். மறு நாள் எவ்வளவு முயற்சி செய்தும் மெக்கானிக் வந்து சேரவில்லை ... மனம் விட்டு நொந்த போது, உள்ளிருந்து குரல். ...இப்போது சென்று வண்டியை இயக்கவும்  என்று... இயக்கினால் ஒரே முயற்சியில் இயங்கியது..... இன்றைக்கு எரியாத பல்பு உடைந்த மின்சார டப்பா.....

Thursday, 5 December 2019

அஷ்டாவக்ரர் உபதேசம்

*உருவத்தை வைத்து எடை போடாதே.....*

ஜனக மகராஜா ஒரு நாள் இ
ரவு தூங்கிக் கொண்டிருந்தார்.

அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது.

அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல் கனவு. கனவில் அவர் படாத பாடு பட்டு
துன்பப்பட்டார்.

அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை. நிஜம் போலவே இருந்தது.

திடுக்கிட்டு "நாராயணா" என்று அலறினார். கண் விழித்தார்.

கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது. சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.

இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது.

அவர் தினசரி இரவு தூங்கும் போது கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.

பகலில் எழுந்தால் மன்னனாக சகல சுகபோகங்களுடன் இருப்பார்.

ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது.

"நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா?

அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?" என சந்தேகம் வந்து விட்டது.

மந்திரி,ராஜகுரு எனப் பலரிடம் கேட்டுப் பார்த்தார். யாருக்கும் பதில் தெரியவில்லை.அந்த சந்தேகம் அவர் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.

"நான் பிச்சைக்காரனா,
மன்னனா" என்று அவர் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்.

பிறகு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.தமது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பெரும் பரிசை அளிப்பதாகச் சொன்னார்.

நாட்டிலிருந்த வித்வான்கள் எல்லாரும் வந்தனர். தூர தேசத்திலிருந்து பண்டிதர்கள், முனிவர்கள்,வேத விற்பன்னர்கள் எல்லாரும் வந்தனர். யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

வெளியூரிலிருந்து விதேக நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தார்

.அவர் பெயர் அஷ்டாவக்கிர மகரிஷி. அவர் உடல் 8 கோணலாக வளைந்திருக்கும். அது ஏனென்றால் அவர் தம் அன்னையின் வயிற்றிலிருந்த போது கத்துக்குட்டியான அவர் தகப்பனார் வேதத்தை தப்புத் தப்பாக படிப்பாராம்.

அப்போது வயிற்றிலிருந்த மகா ஞானியான குழந்தை அதைக் கேட்கச் சகிக்காமல் உடம்பை திருப்புமாம். அப்படி 8 தடவை திருப்பி உடல் அஷ்ட கோணலாக வளைந்து அஷ்டா வக்கிரன் என்ற பெயரும் ஏற்பட்டது.

ஜனகரின் கேள்வியை அறிந்த அஷ்டாவக்கிர மகரிஷி ஜனகரின் அவைக்குச் சென்றார். பண்டிதர்களின் பெருங்கூட்டம் அவையில் இருந்தது. யாருக்கும் பதில் தெரியவில்லை

." என் கேள்விக்கு பதில் சொல்ல ஆளே இல்லையா?" என ஜனகர் வேதனையுடன் கேட்டார்.

"நான் சொல்கிறேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.

அரசவை முழுக்க அவரைத் திரும்பிப் பார்த்தது.

அவரைப் பார்த்த மறுவினாடியே பண்டிதர்கள் சிரிக்கத் துவங்கி விட்டனர்.

குள்ளமாக,கறுப்பாக,
எண் கோணலாக வளைந்த உடலை வைத்துக் கொண்டு ஒருவர் சபைக்கு வந்தால் எப்படி இருக்கும்? அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

சிரிப்பொலி அடங்கும் வரை அஷ்டாவக்கிரர் மவுனமாக நின்றார்.

"என் கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்" என்று ஜனகர் ஆவலுடன் கேட்டார்.

"சொல்கிறேன்.அதற்கு முன் சபையில் இருக்கும் தோல் வியாபாரிகளையும்,
கசாப்புக் கடைகாரர்களையும் வெளியே அனுப்புங்கள்" என்றார் அஷ்டா வக்கிரர்.

"என்ன சொல்கிறீர்கள்? இது பண்டிதர்களின் சபை. இங்கு எந்த கசாப்பு கடைக்காரனும் தோல் வியாபாரியும் இல்லை" என்றார் ஜனகர்.

"இங்கு பண்டிதன் என யாரும் இல்லை.

இங்கிருப்போர் அனைவரும் கசாப்புக் கடைக்காரர்களும் தோல் வியபாரிகளும் தான்" என்றார் அஷ்டாவக்கிரர்.

சபை முழுக்க கொதித்தெழுந்தது.
"என்ன திமிர் இந்த குரங்கனுக்கு?" என்று சப்தமிட்டார் ராஜகுரு.

"வேதம் கற்ற பண்டிதர்களை இழிவுபடுத்திய இவனை கழுவிலேற்றுங்கள்" என்று அனைவரும் கூச்சலிட்டனர்.

"ஏன் அப்படி சொன்னீர்கள்?" என்று பரிவுடன் கேட்டார் ஜனகர்.

"கற்றறிந்த பண்டிதர்களை கசாப்புக் கடைக்காரன் என்று சொல்லலாமா?" என்று கேட்டார்.

உரத்த குரலில் அஷ்டாவக்கிரர் பதில் சொன்னார்.

"ஓ மன்னா! உன் கேள்விக்கு பதில் நான் சொல்கிறேன் என்று சொன்னேன். சபை முழுக்க என்னைப் பார்த்துச் சிரித்தது.

ஏன் சிரித்தார்கள்?என் குறைவான ஞானத்தைக் கண்டு சிரித்தார்களா?நான் தவறாகச் சொன்ன விளக்கத்தைக் கண்டு சிரித்தார்களா?இல்லை.

இது எதைக் கண்டும் அவர்கள் சிரிக்கவில்லை. என் உருவத்தைப் பார்த்து சிரித்தார்கள். என் தோலின் நிறத்தை வைத்து,என் உடலின் உருவத்தை வைத்து இவர்கள் என்னை, என் அறிவை மதிப்பிட்டார்கள்.

என் தோலை வைத்து என் மதிப்பை நிர்ணயிக்கும் இவர்கள் தோல் வியாபாரிகள் தானே?

தோல் வியாபாரி தான் தோலின் நிறத்தை வைத்து ஆட்டுத் தோலுக்கு விலை போடுவான். கசாப்புக் கடைக்காரன் தான் ஆட்டின் உருவத்தை வைத்து ஆட்டுக்கு மதிப்பு போடுவான்.

இவர்களும் என்னை அப்படித் தான் மதிப்பிட்டார்கள். அதனால் தான் இவர்களை தோல் வியாபாரி என்றேன்.

பண்டிதர்கள் இருக்க வேண்டிய சபையில் தோல் வியாபாரிகளுக்கு என்ன வேலை?அதனால் தான் இவர்களை வெளியே போகச் சொன்னேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.

அவமானமடைந்த பண்டிதர்கள் தலை குனிந்து சபையை விட்டு வெளியேறினார்கள்.

வந்தவர் மகா ஞானி என ஜனகரும் அறிந்தார். மகா பணிவுடன் அவர் காலடியில் அமர்ந்து தன் சந்தேகத்துக்கு விடை கேட்டுத் தெரிந்து கொண்டார்.

ஜனகருக்கு அஷ்டாவக்கிரர் சொன்ன அந்த உபதேசம் அஷ்டாவக்கிர கீதை என்ற பெயருடன் விளங்குகிறது.

அந்த உபதேசத்தை பெற்ற ஜனகர் அன்று முதல் மகா ஞானியாகி விட்டார். ஜனகரின் சந்தேகம் தீர்த்த மகரிஷியின் விளக்கம் என்ன?

தூங்கினப்போ கண்டதும் கனவு தான். இப்போ நீ வாழும் வாழ்வும் கனவுதான்.                                       

 உன்னோட ராஜ வாழ்வும்,பிச்சைக்கார வாழ்வும் ரெண்டும் உண்மையில்லை.                                           

 ராஜாவா இருக்கறப்ப சந்தோஷப்படாதே.
தூங்கறப்ப அந்த சந்தோஷம் போயிடும்.                           
 
 பிச்சைக்காரனா இருக்கறப்ப வருத்தப்படாதே.
முழிச்சா அந்த வருத்தம் மறைஞ்சுடும்.

ரெண்டு நிலையிலும் ஒரே மாதிரி இருக்கக் கத்துக்க என்றார்...

உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை

கடவுளை தவிர..

அகத்தியர் வாக்கு - தர்மகாரியங்களில் எவனுக்கு இயல்பாக நாட்டம் இருக்கிறதாே அவன் இன்னும் அதிகப்படுத்திக் காெள்வதும், அறவே நாட்டமில்லாதவன் சிறிதளவாவது தர்ம குணத்தை வளர்த்துக் காெண்டால் கட்டாயம் நவக்ரக தாேஷங்கள் ஒரு மனிதனை பெருமளவு பாதிக்காது

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 306*

*தேதி: 05-12-2019 (வியாழன் - தேவகுரு, பிரகஸ்பதி, அந்தணன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*புலஸ்தியரின் மானச யுக புருஷர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : சனியும், செவ்வாயும் ஒன்றாக இருந்தாலாே அல்லது சப்தம பார்வையான ஏழாம் பார்வையாக இருந்தால் வரும் பிரச்சனைகளை சரி செய்து காெள்ளுவது எப்படி?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இறைவன் கருணையாலே ஒரு ஜாதகத்தைப் பார்த்த உடனேயே கிரகங்கள் எல்லாம் எதிர்மறையாக இருக்கிறது. நல்ல பலன்களை விட, தீய பலன்கள்தான் நடக்கிறது என்றால் அந்த கிரகங்களைப் பார்த்தாலே மனிதன் அஞ்சுகிறான். இது எப்படி இருக்கிறது? என்றால், ஒரு மனிதன் வழுக்கி விழுந்து விடுகிறான். அடிபடுகிறது. எலும்பு முறிந்து விடுகிறது. இவனுக்கு சிகிச்சை தர வேண்டி மருத்துவன் விழி காணா ஔி பிம்பம் எடுத்து பார்க்கிறான். அதிலே மிகவும் பலமாக அடிபட்டு எலும்பு விலகியும், பிசகியும், உடைந்தும் இருப்பது தெரிகிறது.*

*அதைக் காட்டினால் பாதிக்கப்பட்ட மனிதனும், அவன் குடும்பத்தினரும், 'இந்த பிம்பத்தை எடுத்ததால்தானே இந்த விளைவு? இதை ஏன் எடுத்தாேம்? இதை எடுக்காமல் இருந்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கலாமே? என்று கூறினால் எப்படி இருக்குமாே, அப்படிதான் ஜாதகத்தைப் பார்த்து ஒருவன் அச்சப்படுவதும். எனவே எல்லா கிரகங்களும் நேர்மையான அதிகாரிகள் என்று வைத்துக் காெண்டால் அந்தந்த மனிதனின் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை நுகர்வதற்கு அந்த கிரகங்களுக்கு இறைவன் அதிகாரங்களை தந்திருக்கிறார். இதனைப் பார்த்து மனிதன் என்ன புரிந்து காெள்ள வேண்டும்?. துன்பம் அதிகமாக இருக்கும் தருணங்களிலே இந்த பாவம் கழிகிறது என்று எண்ணி அமைதியான முறையிலே அதனை ஏற்றுக் காெள்கின்ற பக்குவத்தை எப்பாெழுதுமே அந்த நிலையை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.*

*அது என்ன கிரகமாக இருந்தாலும், மனிதனுக்கு வேண்டுமானால் கிரகம் சுபமாகவும், சுபத்திற்கு மாறாகவும் தெரியலாம். ஆனால் எல்லா கிரகங்களுமே எப்பாெழுதுமே சுபத்தன்மை காெண்டவை தான். அந்த வகையிலே இன்னவன் கூறியது பாேல் இந்த கிரகம் இப்படியிருந்தால் தாேஷம்,  அந்த கிரகம் அங்கு இருந்தால் தாேஷம் என்பதெல்லாம் ஒரு வகையிலே ஜாதகக் குறிப்புக்காகக் கூறப்பட்டாலும் அது எதனை சுட்டிக்காட்டுகிறது?.*

*உடம்பிலே இன்ன வியாதி இருக்கிறது என்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற மருந்தை உண்ண வேண்டும். அதற்கு ஆதரவான உணவை உண்ண வேண்டும். அதற்கு எதிரான உணவை தவிர்க்க வேண்டும் என்கிற ஒரு உணர்வு வருகிறதல்லவா?. அதைப்பாேலத்தான் இந்த ஜாதகப் பலனைப் பார்த்து இப்படியிப்படி கிரகங்கள் இருந்தால் இன்னின்ன வகையான வழிபாடுகள் செய்து, இன்ன வகையான தர்மங்களை செய்து தற்காத்துக் காெள்ளக்கூடிய ஒரு முறையை ஒரு மனிதன் வளர்த்துக் காெள்ள வேண்டுமே தவிர வெறும் அச்சத்தாலும், குழப்பத்தாலும் ஒரு மனிதன் அப்படியே சாேர்ந்து விடக்கூடாது.*

*யாம்(அகத்திய மாமுனிவர்) அடிக்கடி கூறுவது தான். தர்மகாரியங்களில் எவனுக்கு இயல்பாக நாட்டம் இருக்கிறதாே அவன் இன்னும் அதிகப்படுத்திக் காெள்வதும், அறவே நாட்டமில்லாதவன் சிறிதளவாவது தர்ம குணத்தை வளர்த்துக் காெண்டால் கட்டாயம் நவக்ரக தாேஷங்கள் ஒரு மனிதனை பெருமளவு பாதிக்காது.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************

Wednesday, 4 December 2019

விரோதிகளை அடங்கச் செய்யவும், எதிரிகள் உருவாகாமல் தடுப்பதற்கும் ஓத வேண்டிய பதிகம் பாடியவர்: மாணிக்கவாசகர்

திருச்சிற்றம்பலம்
03. விரோதிகளை அடங்கச் செய்யவும், எதிரிகள் உருவாகாமல் தடுப்பதற்கும் ஓத வேண்டிய பதிகம்
பாடியவர்: மாணிக்கவாசகர்  தலம்: தில்லை
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தனமுப்புரம் உந்தீ பற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீ பற
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெருமிகை றுந்தீ பற
தச்சு விடுத்தலும் தாம் அடியிட்டலும்
அச்சு முறிந்ததென்று உந்தீ பற
அழிந்தன முப்புரம் உந்தீ பற
உய்யவல்லார் ஒருமூவரைக் காவல் கொண்டு
எய்ய வல்லானுக்கே உந்தீ பற
இளமுலை பங்கன் என்றுந்தீ பற
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடியவா பாடி உந்தீ பற
உருத்திர நாதனுக் குந்தீ பற
ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டு அன்று
சாவாது இருந்தான் என்று (உ)ந்தீ பற
சதுர்முகன் தாதை என்று (உ)ந்தீ பற
புரந்தரனார் ஒரு பூங்குயிலாகி
மரந்தினில் ஏறினார் (உ)ந்தீ பற
வானவர் கோன் என்றே உந்தீ பற
வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீ பற
தொடர்ந்த பிறப்பற உந்தீ பற
ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீ பற
கொங்கை குலுங்கநின்று (உ)ந்தீ பற
உண்ணப் புகுந்த பகன்ஒளித்து ஓடாமே
கண்ணைப் பறித்தவாறு (உ)ந்தீ பற
கருக்கெட நாமெலாம் உந்தீ பற
நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகம்நெரித்து (உ)ந்தீ பற
தொல்லை வினைகெட உந்தீ பற
நான்மறை யோனும் மகத்துஇய மான்படப்
போம்வழி தேடுமாறு (உ)ந்தீ பற
புரந்தரன் வேள்வியில் (உ)ந்தீ பற
சூரிய னார் தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவாறு (உ)ந்தீ பற
மயங்கிற்று வேள்வி என்று (உ)ந்தீ பற
தக்கனார் அன்றே தலைஇழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின்று (உ)ந்தீ பற
மடிந்தது வேள்வி என்று (உ)ந்தீ பற
பாலக னார்க்குஅன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே உந்தீ பற
குமரன் தன் தாதைக்கே உந்தீ பற
நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை அரிந்ததுஎன்று (உ)ந்தீ பற
உகிரால் அரிந்ததுஎன்று (உ)ந்தீ பற
தேரை நிறுத்தி மலைஎடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவாறு (உ)ந்தீ பற
இருபதும் இற்றதென்று (உ)ந்தீ பற
ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவலென் றுந்தீ பெற
அகற் கப்பாலுங் காவல் என்றுந்தீ பற
                 திருச்சிற்றம்பலம்

ஊமைத் தன்மை, திக்குவாய் நீங்கி நன்றாக பேசவும், சிறந்த பேச்சாளர் ஆகவும் ஓத வேண்டிய பதிகம் ராகம்: மோகனம் பாடியவர்: மாணிக்கவாசகர்

திருச்சிற்றம்பலம்
02. ஊமைத் தன்மை, திக்குவாய் நீங்கி நன்றாக பேசவும், சிறந்த பேச்சாளர் ஆகவும் ஓத வேண்டிய பதிகம்
ராகம்: மோகனம்       பாடியவர்: மாணிக்கவாசகர்
திருவாசகம் திருச்சாழல்   தலம்: தில்லை சிதம்பரம்
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்குஅரவம்,
பேசுவதும் திருவாயால் மறைபோலும்?காணேடி!
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை?
ஈசன் அவன், எவ்வுயிர்க்கும் இயல்புஆனான்; சாழலோ.
என்அப்பன், எம்பிரான் எல்லார்க்கும் தான்ஈசன்
துன்னம்பெய் கோவணமாக் கொள்ளும்அது, என்னேடீ?
மன்னுகலை, துன்னுபொருள், மறைநான்கே, வான்சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினான்; காண்; சாழலோ.
கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்ஆடை;
தாயும்இலி, தந்தை இலி; தான்தனியன்; காணேடி!
தாயும்இலி, தந்தை இலி தான்தனியன் ஆயிடினும்,
காயில், உலகு அனைத்தும், கல்பொடி, காண், சாழலோ.
அயனை, அனங்கனை, அந்தகனை, சந்திரனை
வயனங்கள் மாயா வடுச்செய்தான்; காணேடி!
நயனங்கள் மூன்றுஉடைய நாயகனே தண்டித்தால்
சயம்அன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய்? சாழலோ.
தக்கனையும் எச்சனையும் தலைஅறுத்த, தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ?
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி, அருள்கொடுத்தங்கு
எச்சனுக்கு மிகைத்தலைமற்று அருளினன்காண், சாழலோ.
அலரவனும் மால்அவனும் அறியாமே, அழல்உருஆய்,
நிலமமுதல், கீழ்அண்டம்உற நின்றது தான், என்னேடீ?
நிலம்முதல் கீழ்அண்டம் உற நின்றிலனேல், இருவரும்தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார், காண்; சாழலோ.
மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே, மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையில் பாயும் அது, என்னேடீ?
சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல், தரணிஎல்லசாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து, பெருங்கேடாம்; சாழலோ.
கோலாலம் ஆகிக் குரைகடல்வாய்; அன்று எழுந்த
 ஆலாலம் உண்டான்; அவன் சதுர்தான் என்னேடீ?
ஆலாலம் உண்டிலனேல், அன்றுஅயன் மால் உள்ளிட்ட
மேல்ஆய தேவர்எல்லாம் வீடுவர்காண்; சாழலோ.
தென்பால் உகந்து ஆடும் தில்லைச்சிற் றம்பலவன்,
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ!
பொண்பால் உகந்திலனேல் பேதாய், இருநிலத்தோர்
விண்பால் யோகுஎய்தி வீடுவர்காண்; சாழலோ.
தான்அந்தம் இல்லான் தனைஅடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான்; காணேடீ!
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த திருவடிகள்,
வான்உந்து தேவர்கட்கு ஓர் வான்பொருள்; காண்; சாழலோ.
நங்காய், இது என்னதவம்? நரம்போடு எலும்பு அணிந்து
கங்காளம் தோள்மேலே காதலித்தான்; காணேடீ?
கங்காளம் ஆமாகேள் கால அந்தரத்து இருவர்,
தம்காலம் செய்யத் தரித்தனன்காண் சாழலோ.
கான் ஆர் புலித்தோல் உடை; தலை ஊண்; காடுபதி
ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆரேடீ!
ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும்,
வான் நாடார் கோவும், வழி அடியார் சாழலோ.
மலை அரையன் பொற்பாவை, வாள்நுதலாள், பெண்திருவை,
உலகுஅறியத் தீ வேட்டான் என்னும், அது என்னேடீ!
உலகுஅறியத் தீ வேளாது ஒழிந்தனனேல், உலகு அனைத்தும்
கலைநவின்ற பொருள்கள் எல்லாம், கலங்கிடும், காண், சாழலோ.
தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலும் அது என்னேடீ!
தான்புக்கு நட்டம்  பயின்றிலனேல், தரணிஎல்லாம்
ஊன்புக்க வேல் காளிக்கு ஊட்டுஆம்; காண்; சாழலோ.
கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே,
இடபம் உகந்து ஏறியவாறு எனக்குஅறிய இயம்பேடீ!
தடமதில்கள் அவைமூன்றும், தழல்எரித்த அந்நாளில்,
இடபம் அதுவாய்த் தாங்கினான், திருமால்காண், சாழலோ.
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை,
அன்று, ஆலின்கீழ் இருந்து, அங்கு அறம்உரைத்தான்; காணேடீ!
அன்று, ஆலின்கீழ் இருந்து, அங்கு அறம் உரைத்தான் ஆயிடினும்
கொன்றான்காண், புரம்மூன்றும் கூட்டோடே; சாழலோ.
அம்பலத்தே கூத்துஆடி, அமுதுசெயப் பலிதிரியும்
நம்பனையும் தேவன் என்று, நண்ணும் அது என்னேடீ!
நம்பனையும் ஆமாகேள்; நான்மறைகள் தாம் அறியா
என்பெருமான், ஈசாஎன்று ஏத்தின காண்; சாழலோ.
சலம் உடைய சலந்தரன் தன் உடல்தடிந்த நல் ஆழி,
நலம் உடைய நாரணற்கு, அன்று அருளியவாறு என்னேடீ!
நலம் உடைய நாரணன், தன் நயனம்இடந்து அரன் அடிக்கீழ்
அலர்ஆக இட, ஆழி அருளினன்; காண்; சாழலோ.
அம்பரம்ஆம், புள்ளித்தோல்; ஆலாலம் ஆர்அமுதம்;
எம்பெருமான் உண்டசதுர் எனக்கு அறிய இயம்பேடீ!
எம்பெருமான் ஏதுஉடுத்து, அங்கு ஏது அமுது செய்திடினும்
தம்பெருமை தான் அறியாத் தன்மையன ; காண்; சாழலோ.
அரும்தவர்க்கு ஆலின் கீழ் அறம்முதலா நான்கினையும்
இருந்து, அவர்க்கு அருளும்  அது எனக்கு அறிய இயம்பேடீ!
அரும்தவர்க்கு, அறம்முதல் நான்கு அன்றுஅருளிச் செய்திலனேல்
திருந்த, அவருக்கு உலகுஇயற்கை தெரியா; காண்; சாழலோ. ்

மாருதி கவசம்

வழிபடும் முறை

சிலையோடு சித்திரம் கதையொடு ஆரல்
நிலைவிளக் கதனொடு நேரிய குடும்பம்
வலையென உன்றனை விரித்திடும் மந்திரம்
நிலைபெறக் கூறி தகுவன சாத்தி
வழிபடு போதில் வருவாய் அதனில்
இழிவுற இலங்கை எரித்தவப் போதில்
எழிலுறு வுடைய எம்மிறை நீயே
ஒழித்தனை அன்றோ ஒண்ணை அவுணர்
அந்தப் போதில் ஆர்த்தநல் நெஞ்சம்
இந்தப் போதில் இங்குற வேண்டும்
எந்தப் போதில் எதுவரு மேனும்
நிந்தனை இன்றிநிகழ்ந்திட வேண்டும்
கந்தம் துளசி களப கஸ்தூரி
சொந்தம் சாந்தம் சுந்தரன் தனக்கே
தந்திடு வெண்ணை தகுவடைமாலை
நொந்திடா வண்ணம் வெற்றிலை மாலை
பன்னீர் ஆட்டுக பங்கயன் தனக்கே
நன்னீர் ஆட்டுக நாயகன் தனக்கே
உண்ணீர் என்றே ஊட்டுக பல்கனி
எண்ணீர் இவனே எம்மிறை என்பீர்
மாருதி உண்டேல் சோருதல் இல்லை
ஆறுதல் அவனே அவனே இறைவன்
காரியம் காரணம் ஆனவன் அவனே
கருதிய நிகழ்த்தும் கண்ணனும் அவனே
வேரியங்கமலைச் செல்வியம் போற்றும்
மாருதி தன்னை மனதில் இறுத்துக.

பயன்

வஞ்சனை அகலும் வயிரம் வாய்க்கும்
துஞ்சிடும் போதும் துன்பம் வராது காண்
அஞ்சுவர் பகைவர் அடலே றணையான்
நஞ்சுண்டாலும் நம்முயிர் காப்பான்
மனையின் வஞ்சகம் நீக்குவன், மாற்றுவன்
புணைபோல் பொய்யா கூட்டைக் களவை
தினமும் உன் முன்னரே தெரிகுவன் மாருதி
இனமுடன் வாழ்ந்திடினியன் நல்குவன்
கோளுறு பாபம் தீர்க்கும் அனுமன்
பாழ்பிற விதனையே நீக்கும் அனுமன்
கேளெனவந்து உதவிடும் அனுமன்
வாழ்வுறச் செய்யும் வடிவுடை இறைவன்
நாற்பதோ டைந்து நாளே அவனை
நோற்பவர் பற்பல பெறுவர் இதனை
நூற்பயன் என்ன நுவலும் துளசி
நாற்பயன் பெற்றிட நல்குவன் அனுமன்
அனுமன் எனுமோர் அறமே கவசம்
அனுமன் எனுமோர் அறிவே கவசம்
அனுமன் எனுமோர் அணுநேர்த் தியனே
தினமென் கவசம் திவ்வியம் அருள்வோன்.

நன்றி: ஸ்ரீ வன்னி விநாயகர் புத்தகம் நிலையம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை.

அகத்தியர் வாக்கு - மனமாென்றி யார் வேண்டுமானாலும் எந்த மந்திரமும் கூறலாம். இதிலே ஆண், பெண் என்கிற பாகுபாடு ஏதுமில்லை.

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 305*

*தேதி: 04-12-2019(புதன் - கணக்கன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*கிருத பவனுக்கு அரசநிதி ஈந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : பித்ரு பூஜை செய்ய முடியாத சூழலில் என்ன செய்வது? காயத்ரி மந்திரங்களை பெண்கள் சாெல்லலாமா?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*இறைவன் கருணையாலே இதற்கு பலமுறை வாக்கைக் கூறியிருக்கிறாேம். ஆன்மீகத்தில் யார் வேண்டுமானாலும் ஆன்மீகத்தில் சென்று இறை வழிபாட்டில் ஈடுபடலாம். மனமாென்றி யார் வேண்டுமானாலும் எந்த மந்திரமும் கூறலாம். இதிலே ஆண், பெண் என்கிற பாகுபாடு ஏதுமில்லை. அஃதாெப்ப முன்னாேர்களுக்கு செய்ய வேண்டிய பூஜைகளையும், வேறு சிறப்பு வழிபாடுகளையும், முன்னாேர்கள் தாெடர்பான தர்ம காரியங்களையும் ஒருவன் செய்துதான் ஆக வேண்டும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அதே சமயம் முறையான பூஜை செய்ய இயலாதவர்கள் மானசீக பூஜை செய்து இயன்ற தர்மகாரியங்களில் தம்மை ஈடுபடுத்திக் காெள்ள வேண்டும்.*

*இது ஒருபுறமிக்க வீட்டிலே வாழ்கின்ற முதிர்ந்த பெரியவர்களை அவமானப்படுத்தி, வேதனைப்படுத்திவிட்டு அவர்கள் இறந்த பிறகு பூஜை செய்வதால் எந்த பலனுமில்லை. வாழும்பாெழுதும், அவர்கள் எப்படி நடந்து காெண்டாலும் மதிக்க வேண்டும், பாேற்ற வேண்டும். அதே சமயம் அவர்கள் இந்த உலகை விட்டு சென்ற பிறகும் குறைந்தபட்சம் மாதம் ஒரு தினமாவது குறிப்பாக நிறைமதி காலத்திலாவது அவர்கள் நினைவாக தர்மகாரியங்களை செய்வதும், சிறிய, சிறிய பூஜைகளை செய்வதுமாக இருக்க வேண்டும். கால அவகாசம் இல்லை என்று மனிதன் கூறுகிறான். ஒரு வாதத்திற்காக ஒப்புக் காெள்ளலாம்.*

*ஆனால் உலகியல் வாழ்வை எதிர்காெள்ள வேண்டிய மனிதன் எத்தனையாே இடங்களில் காத்திருக்கிறான். அலுவலகத்தில், பயண இடங்களில் இன்னும் பல்வேறு இடங்களில் அவன் காலத்தை வியம்(விரயம்) செய்கிறான். ஆனால் ஒரு தினம் ஒதுக்கி முன்னாேர்களுக்காே அல்லது வேறு வழிபாட்டிற்காே கால அவகாசத்தை ஒதுக்க அவனுக்கு காலம் இல்லை என்கிறான். காலமில்லை என்பதை விட மனதிலே ஈடுபாடு இல்லை என்பதுதான் மெய்யான நிலையாகும்.*

*கேள்வி : மனிதன் வாழும்பாெழுதே சில விருப்பங்களை, ஆசைகளை இறைவனிடம் தெரிவிக்கிறான். அதனால் தன் விருப்பத்திற்கேற்ப பூமியில் பிறக்கிறானா?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*அதிக புண்ணியம் செய்த ஆத்மாக்களுக்கு வேண்டுமானால் சில வாய்ப்புகளை இறைவன் தரலாம். ஆனால் புண்ணியம் மிகக் குறைவாகவும், பாவம் அதிகமாகவும் உள்ள, அஃதாவது மனித பிறவி எடுக்கும் அளவிற்கு மட்டுமே புண்ணியம் இருந்து வேறு புண்ணியம் இல்லாத ஆத்மாக்களுக்கு எந்த வாய்ப்பையும் இறைவன் தருவதில்லை.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************

Tuesday, 3 December 2019

அகத்தியர் பாடல்

அகத்தியர் ஞானம்,,

பாரப்பா சீவன்விட்டுப் போகும் போது
பாழ்த்தபிணங் கிடக்கு தென்பார்; உயிர்போச் சென்பார்;
ஆரப்பா அறிந்தவர்கள்? ஆரும் இல்லை
ஆகாய சிவத்துடனே சேரு மென்பார்;
காரப்பா தீயுடன் தீச் சேரு மென்பார்
கருவறியா மானிடர்கள் கூட்ட மப்பா!
சீரப்பா காமிகள்தா மொன்றாய்ச் சேர்ந்து
தீயவழி தனைத்தேடிப் போவார் மாடே.
2:
மாடுதா னானாலும் ஒருபோக் குண்டு
மனிதனுக்கோ அவ்வளவுந் தெரியா தப்பா!
நாடுமெத்த நரகமென்பார்; சொர்க்க மென்பார்
நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்;
ஆடுகின்ற தேவதைகள் அப்பா! கேளு
அரியதந்தை யினஞ்சேரு மென்றுந் தோணார்;
சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா யெண்ணித்
தளமான தீயில்விழத் தயங்கி னாரே;
3:
தயங்காமற் பிழைப்பதற்கே இந்த ஞானம்
சார்வாகப் பாராட்டும் ஞானம் வேறே;
மயங்குதற்கு ஞானம்பார் முன்னோர் கூடி
மாட்டினார் கதைகாவ்ய புராண மென்றும்
இயலான ரசந்தனிலீப் புகுந்தாற் போலும்
இசைத்திட்டார் சாத்திரங்க ளாறென் றேதான்;
வயலான பயன்பெறவே வியாசர் தாமும்
மாட்டினார் சிவனாருத் தரவினாலே.
4:
உத்தார மிப்படியே புராணங் காட்டி
உலகத்தில் பாரதம்போல் கதையுண் டாக்கிக்;
கர்த்தாவைத் தானென்று தோண வொட்டாக்
கபடநா டகமாக மேதஞ் சேர்த்துச்
சத்தாக வழியாகச் சேர்ந்தோர்க் கெல்லாஞ்
சதியுடனே வெகுதர்க்கம் பொருள்போற் பாடிப்
பத்தாகச் சைவர்க்கொப் பனையும் பெய்து
பாடினார் சாத்திரத்தைப் பாடினாரே.
5:
பாடினதோர் வகையேது? சொல்லக் கேளு
பாரதபு ராணமென்ற சோதி யப்பா!
நீடியதோர் ராவணன்தான் பிறக்க வென்றும்
நிலையான தசரதன்கை வெல்ல வென்றும்
நீடியவோ ராசனென்றும் முனிவ ரென்றும்
நிறையருள்பெற் றவரென்றுந் தேவ ரென்றும்
ஆடியதோர் அரக்கரென்றும் மனித ரென்றும்
பாடினார் நாள்தோறும் பகையாய்த் தானே.
6:
கழிந்திடுவார் பாவத்தா லென்று சொல்லும்
கட்டியநால் வேதமறு சாத்தி ரங்கள்
அழிந்திடவே சொன்னதல்லால் வேறொன் றில்லை
அதர்ம மென்றுந் தர்மமென்றும் இரண்டுண் டாக்கி
ஒழிந்திடுவா ரென்றுசொல்லிப் பிறப்புண் டென்றும்
உத்தமனாய்ப் பிறப்பனென்று முலகத் தோர்கள்
தெளிந்திடுவோர் குருக்களென்றுஞ் சீட ரென்றும்
சீவனத்துக் கங்கல்லோ தெளிந்து காணே!

சிவார்பணம்,,

அகத்தியர் பாடல்

அகத்தியர் பாடல்

1:
பூரணமே தெய்வமென உரைத்தா ரையா
பூரணத்தை யின்ன தென்று புகல வேண்டும்
காரணத்தைச் சொல்லுகிறேன்; நினைவாய்க் கேளு
கலையான பதினாறும் பூரணமே யாகும்.
மாரணமா முலகத்தில் மதிம யங்கி
மதிகெட்டுப் பூரணத்தை யிகழ்ந்தா ரையா!
வாரணத்தை மனம்வைத்துப் பூரணத்தைக் காத்தால்
வாசியென்ற சிவயோக வாழ்க்கை யாச்சே.
2:
ஆச்சப்பா இந்த முறை பதினெண் பேரும்
அயன்மாலும் அரனோடுந் தேவ ரெல்லாம்
மூச்சப்பா தெய்வமென்றே யறியச் சொன்னார்
முனிவோர்கள் இருடியரிப் படியே சொன்னார்;
பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்துப்
பேரான பூரணத்தை நினைவாய்க் காரு;
வாச்சப்பா பூரணத்தைக் காக்கும் பேர்கள்
வாசிநடு மையத்துள் வாழ்வார் தானே.
3:
தானென்ற பெரியோர்க ளுலகத் துள்ளே
தாயான பூரணத்தை யறிந்த பின்பு
தேனென்ற அமுதமதைப் பானஞ் செய்து
தெவிட்டாத மவுனசிவ யோகஞ் செய்தார்;
ஊனென்ற வுடலைநம்பி யிருந்த பேர்க்கே
ஒருநான்கு வேதமென்றும் நூலா றென்றும்;
நானென்றும் நீயென்றும் சாதி யென்றும்
நாட்டினா ருலகத்தோர் பிழைக்கத்தானே.
4:
பிழைப்பதற்கு நூல்பலவுஞ் சொல்லா விட்டால்
பூரணத்தை யறியாம லிருப்பா ரென்றும்
உழைப்பதற்கு நூல்கட்டிப் போடா விட்டால்
உலகத்திற் புத்திகெட்டே யலைவா ரென்றும்
தழைப்பதற்குச் சாதியென்றும் விந்து வென்றும்
தந்தைதாய் பிள்ளையென்றும் பாரி யென்றும்
உழைப்பதற்குச் சொன்னதல்லாற் கதிவே றில்லை
உத்தமனே யறிந்தோர்கள் பாடி னாரே.
5:
பாடினா ரிப்படியே சொல்லா விட்டால்
பரிபாடை யறியார்கள் உலக மூடர்;
சாடுவார் சிலபேர்கள் பலநூல் பார்த்துத்
தமைமறந்து படுகுழியில் விழுவார் சாவார்;
வாடுவார் நாமமென்றும் ரூப மென்றும்
வையகத்திற் கற்செம்பைத் தெய்வமென்றும்
நாடுவார் பூரணத்தை யறியா மூடர்
நாய்போல குரைத்தல்லோ வொழிவார் காணே.
6:
காணாமல் அலைந்தோர்கள் கோடா கோடி
காரணத்தை யறிந்தோர்கள் கோடா கோடி;
வீணாகப் புலம்பினதா லறியப் போமோ?
விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்காகும்?
கோணாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
குருபாத மிருநான்கில் நாலைச் சேர்த்து
நாணாம லொருநினைவாய்க் காக்கும் போது
நாலுமெட்டு மொன்றாகும் நாட்டி யூதே;
7:
ஊதியதோ ரூதறிந்தா லவனே சித்தன்
உத்தமனே பதினாறும் பதியே யாகும்
வாதிகளே யிருநான்கும் பதியின் பாதம்
வகைநான்கு முயிராகும் மார்க்கங் கண்டு
சோதிபரி பூரணமும் இவைமூன் றுந்தான்
தூங்காமற் றூங்கியங்கே காக்கும்போது
ஆதியென்ற பராபரைய மரனு மொன்றாய்
அண்ணாக்கின் வட்டத்துள் ளாகும் பாரே.
8:
பாரப்பா உதயத்தில் எழுந்தி ருந்து
பதறாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
காரப்பா பரிதிமதி யிரண்டு மாறிக்
கருவான சுழுமுனையில் உதிக்கும் போது
தேரப்பா அண்ணாக்குள் நின்று கொண்டு
தியங்காமற் சுழுமுனைக்குள் ளடங்கும் பாரு;
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும்
சிதறாமல் மூன்றும் ஒன்றாய்ச் சேர்ந்து போமே.
9:
ஒன்றான பூரணமே யிதுவே யாச்சு
உதித்தகலை தானென்று மிதுவே யாச்சு
நன்றாகத் தெளிந்தவர்க்கு ஞானஞ் சித்தி
நாட்டாமற் சொன்னதனால் ஞான மாமோ?
பன்றான வாதிகுரு சொன்ன ஞானம்
பரப்பிலே விடுக்காதே பாவ மாகும்;
திண்டாடு மனத்தோர்க்குக் காணப் போகா
தெளிந்தவர்க்குத் தெரிவித்த வுகமை தானே.
10:
உகமையின்னஞ் சொல்லுகிறேன் உலகத் துள்ளே
உவமையுள்ள பரிகாசம் நனிபே சாதே;
பகைமை பண்ணிக் கொள்ளாதே; வீண்பே சாதே
பரப்பிலே திரியாதே; மலையே றாதே;
நகையாதே சினங்காதே யுறங்கி டாதே
நழுவாதே சுழுமுனையிற் பின்வாங்காதே;
செகமுழுதும் பரிபூரண மறிந்து வென்று
தெளிந்துபின் யுலகத்தோ டொத்து வாழே!
11:
வாழாமல் உலகம்விட்டு வேடம் பூண்டு
வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப் பேசித்
தாழ்வான குடிதோறும் இரப்பான் மட்டை
தமையறியாச் சண்டாளர் முழுமா டப்பா!
பாழாகப் பாவிகளின் சொற்கே ளாதே
பதறாதே வயிற்றுக்கா மயங்கிடாதே;
கேளாதே பேச்செல்லாங் கேட்டுக் கேட்டுக்
கலங்காதே யுடலுயிரென் றுரைத்தி டாதே.
12:
உடலுயிரும் பூரணமும் மூன்று மொன்றே
உலகத்திற் சிறிதுசனம் வெவ்வேறென்பார்;
உடலுயிரும் பூரணமும் ஏதென் றக்கால்
உத்தமனே பதினாறு மொருநான் கெட்டும்
உடலுயிரும் பூரணமும் அயன்மா லீசன்
உலகத்தோ ரறியாமல் மயங்கிப் போனார்;
உடலுயிரும் பூரணடி முடியு மாச்சே
உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே.
13:
பதியின்ன இடமென்ற குருவைச் சொல்லும்
பரப்பிலே விள்ளாதே தலையிரண்டாகும்
விதியின்ன விடமென்று சொல்லக் கேளு
விண்ணான விண்ணுக்கு ளண்ணாக் கப்பா!
மதிரவியும் பூரணமுங் கண்வாய் மூக்கும்
மகத்தான செவியோடு பரிச மெட்டும்
பதியவிடஞ் சுழுமுனையென் றதற்குப் பேராம்;
பகருவார் சொர்க்கமும் கயிலாச மென்றே.
14:
கயிலாசம் வைகுந்தந் தெய்வ லோகம்
காசின்யா குமரி யென்றுஞ் சேது வென்றும்
மயிலாடு மேகமென்றும் நரக மென்றும்
மாய்கையென்றும் மின்னலென்றும் மவுன மென்றும்
துயிலான வாடையென்றும் சூட்ச மென்றும்
சொல்லற்ற இடமென்றும் ஒடுக்கம் என்றும்
தயிலான பாதமென்றும் அடி முடி என்றும்
தாயான வத்துவென்றும் பதியின் பேரே.
15:
பேருசொன்னேன்; ஊர்சொன்னேன் இடமும் சொன்னேன்;
பின்கலையும் முன்கலையும் ஒடுக்கம் சொன்னேன்;
பாருலகிற் பல நூலின் மார்க்கஞ் சொன்னேன்;
பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன்;
சீருலகம் இன்னதென்று தெருட்டிச் சொன்னேன்;
சித்தான சித்தெல்லாம் சுருக்கிச் சொன்னேன்;
நேருசொன்னேன் வழிசொன்னேன் நிலையுஞ் சொன்னேன்;
நின்னுடம்பை யின்னதென்று பிரித்துச் சொன்னேன்;
16:
பிரித்துரைத்தேன் சூத்திரமீ ரெட்டுக்குள்ளே
பித்தர்களே! நன்றாகத் தெரிந்து பார்க்கில்
விரித்துரைத்த நூலினது மார்க்கஞ் சொன்னேன்;
விள்ளாதே இந்த நூலிருக்கு தென்று
கருத்துடனே அறிந்துகொண்டு கலைமா றாதே
காரியத்தை நினைவாலே கருத்திற் கொள்ளு;
சுருதிசொன்ன செய்தியெல்லாம் சுருக்கிச் சொன்னேன்;
சூத்திரம்போற் பதினாறும் தொடுத்தேன் முற்றே.

சிவார்பணம்,,

குலசை வீரகாளி அம்மன் கோவில் வரலாறு

குலசை வீரகாளி அம்மன் கோவில் வரலாறு.!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் அருள்பாலிக்கிறாள் அன்னை வீரமனோகரி அம்மன். நாக கன்னியின் வயிற்றில் உதித்த அஷ்ட காளியரில் இரண்டாவதாக பிறந்தவள் மாகாளி. திருச்செந்தூரில் சூரபத்மனை முருகபெருமான் வதம் செய்தபோது, சூரபத்மனின் குருதி இந்த மண்ணில் விழுந்து விடக்கூடாது என்பதால் அந்த குருதியை தான் வாங்கியவள் இந்த மாகாளி. அதன் பின்னர் வீரமாகாளி என்று அன்னை அழைக்கப்படலானாள். திருச்சிரலைவாய் (திருச்செந்தூர்) பகுதியில் சூரபத்மனை சுப்ரமணியர் வதம் செய்த பின்னர், வீரமாகாளி அவ்விடம் விட்டு மீண்டும் பொதிகை மலை செல்ல முற்பட்டாள். வரும் வழியில் வீரைவளநாடு (குலசேகரப்பட்டினம்) என்ற பகுதியில் உள்ள கடற்கரையோரம் இருந்த வனச்சோலை வீரமாகாளிக்கு பிடித்துவிட  அங்கேயே வாசம் செய்தாள். தனக்கு ஒரு ஆலயம் வேண்டும், முக்கால பூஜை மற்றும் விழாக்கள் வேண்டும், தான் இவ்விடம் வந்ததை இப்பகுதியினர் அறிய வேண்டும் என்று எண்ணிய வீரமாகாளி, அவ்வழியாக வருவோர், போவோரை அடித்து, அச்சுறுத்தினாள்.

குழந்தை முதல் குமரி வரையிலான பெண்களுக்கு நோய்களை ஏற்படுத்தினாள். ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி அப்பகுதியில் மந்திரத்திலும், மாந்திரீகத்திலும் வல்லவனாகத் திகழ்ந்த வல்லவராயரை நாடினர். அவர் சோழி போட்டு பார்த்தார். வந்திருப்பது உக்கிர வடிவான காளி என்றும், குறிப்பாக அஷ்ட காளிகளில்  ஒருவரான மாகாளி என்றும் தெரிந்தது. மாகாளி இவ்விடம் வந்ததை விவரித்த வல்லவராயர், ஊர்ப்பிரமுகர்களிடம் சிலைக்கு வடிவம் வரைந்து கொடுத்து, சிலை செய்து கோயில் எழுப்பி அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டு வர, பிணிகள் அகலும் மணியான வாழ்க்கை ஒளிரும் என்றார். அதன்படி ஊரார் கூடி அம்மனுக்கு கோயில் எழுப்பினர். வல்லவராயர் பூஜை செய்து வந்தார். அம்மன் அருள் திறன் ஊரெங்கும் பரவ, நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்தது. பனை ஓலையாலான கோயில் பெரிதாக கட்டப்பட்டது. வல்லவராயர் வம்சத்தினர் கோயிலில் பூசாரியாக இருந்து வந்தனர்.

ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று பூஜை செய்ய சென்ற பூசாரியுடன் அவருடைய மனைவியும், மூன்று வயது மகனும் சென்றனர். பூசாரி அம்பாளுக்கு பணிவிடை செய்யும்போது, சிறுவன் கோயிலிலுள்ள மணிமண்டபத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். பூஜை முடிந்ததும் பூசாரியின் மனைவி, ‘பையன் விளையாடிக்கிட்டு இருக்கான், கூப்பிட்டா, அப்பா கூட வாரேன்கிறான். வரும்போது மகன கூட்டிட்டு வாங்க’ என்று கூறிச் சென்றாள். சந்நிதானத்திற்கு பின்னால் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்  அங்கேயே தூங்கி விட்டான். இதை கவனிக்காத பூசாரி, கோயில் நடையைப் பூட்டிவிட்டு புறப்பட்டார். அடுத்த மாதம் அப்பகுதியில் வேறொரு கோயிலில் கும்பாபிஷேகம் விஷயமாக கோயில் நிர்வாகியிடம் பேசச் சென்ற பூசாரி நள்ளிரவுக்குப் பிறகு வீடு திரும்பினார். வீட்டு கதவை திறந்த அவரது மனைவி, ‘பையன் எங்கே?’ என்று கேட்டாள்.
பூசாரி தான் மறந்துவிட்டதை எண்ணித் திகைத்திருக்க, உடனே ஒப்பாரி வைக்கலானாள் மனைவி. ‘அய்யய்யோ, அந்த காளி, என் மகனை பலி எடுத்திருவாளே, இப்போதே போய் பிள்ளைய எடுத்திட்டு வாங்க’ என்றாள். ‘நமக்கு புள்ள வரம் கொடுத்ததே அந்த ஆத்தாதான். அதுமட்டுமல்ல, அடைச்ச கோயிலத் திறக்கக்கூடாது. அதுவும் வெள்ளிக்கிழமை நடு சாமப்பொழுதாச்சு, ஆத்தா மேல பாரத்தப்போட்டு நிம்மதியா தூங்கு. கோழி கூவுனதும் போய் நடை திறந்து பையனை கூட்டிட்டு வந்திடுறேன்’ என்றார் பூசாரி. ஆத்திரம் பொங்கியது மனைவிக்கு. ‘குழந்தையோட இப்ப நீங்க வரலண்ணா, நான், நாக்கு பிடுங்கிட்டு நாண்டுகிட்டு சாவேன்’ என்று கொந்தளித்தாள். மனைவியின் கோபத்தை தணிக்கும் பொருட்டு, மனமில்லாமல் சாவிக்கொத்துடன் புறப்பட்டார் பூசாரி.

கோயிலில் திடீரென கண் விழித்த குழந்தை கதறியது. சத்தம் கேட்டு மாகாளி எழுந்து வந்து குழந்தையை கையில் எடுத்து அரவணைத்தாள்.
கோயில் கதவைத் திறக்க பூசாரி முற்பட்டபோது உள்ளிருந்து தாலாட்டு பாட்டு கேட்க, திகைத்தார். பின்னர் திடமாக முடிவெடுத்து கோயில் கதவில் சாவியை வைக்க, கோயிலுக்குள் இருந்து அசிரீரி கேட்டது: ‘ஏய் பூசாரி, போய் நாளை காலையில் வழக்கம்போல் வா, குழந்தை தூங்கிவிட்டான். பத்திரமாக என்னிடத்தில் இருப்பான். காலையில் வா பூசாரி என்று கேட்டது. அதற்கு பூசாரி ‘முடியாது. இப்போதே என் குழந்தை வேண்டும்’ என்றார். ‘நான் சொல்வதை கேளாமல் வாதம் செய்கிறாய். சரி, அபிஷேக நீர் வரும் மடை முன்வந்து நில், உன் குழந்தை வரும், எடுத்துக்கொள்’ என்று கூறி மாகாளி, சிறுவனை தன் சிலையின் பின் புறம் மலர் படுக்கையில் தூங்க வைத்துவிட்டு, அவனைப்போன்று மாய உடலை உருவாக்கி, அதிலிருந்து கை, கால் என தனித்தனியாக எடுத்து, அபிஷேக மடை வழியே அனுப்பினாள் .மகன் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் தனித்தனியே கண்ட பூசாரி கதறி அழுதார். அப்போது மனைவியும் பதற்றத்துடன் கோயிலுக்கு வர, மகனின் உடல் பாகங்களை கண்டு மயக்கமுற்று விழுந்தாள். பொழுது புலர்ந்தது, ஊராருக்குத் தெரிந்தது. அனைவரும் ஒன்று கூடி, சந்நதி முன்பு நின்று அம்பாளை மனமுருக வேண்டினர். ‘அம்மா, உனது குழந்தைகள் நாங்கள் அறியாது செய்த பிழையை மன்னித்து அருள வேண்டும். காப்பதற்கு தானே தெய்வம், நீயே எங்களை அழித்தால் என்ன தர்மம்? அப்படியானால் உனக்கு எதற்கு கோயில், பூஜை?’ என்று கேட்க, அசிரீரி ஒலித்தது: ‘பூட்டிய கோயிலை திறக்க கூடாது, பூசாரி தன் தவறை உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காக நான் ஆடிய திருவிளையாடல் இது. உனது மகன் எனது சிலையின் பின்புறம் தூங்குகிறான். அவனை பெயர் கூறி அழைத்தால் எழுந்து வருவான்.’

அதுபோல் பூசாரி மகனை பெயர் கூறி அழைக்க, அவரது மகன் எழுந்து ஓடோடி வந்தான். அவனைப் பூரிப்போடு வாரி அணைத்தாள் பூசாரியின் மனைவி. இந்த சம்பவத்திற்கு பிறகு வீரமாகாளி என்ற உக்கிர பெயரை மாற்ற வேண்டும், அம்மன் சாந்த ரூபனியாக இருக்க வேண்டும் என்பதற்காக வீர மனோகரி என்று பெயரிட்டு அழைக்கலாயினர்.

குடும்பத்தில் அமைதியும், குழந்தை வரமும் தந்தருள்வாள் வீரமனோகரி. அது மட்டுமன்றி செய்தொழில் மற்றும் தேர்வு, தேர்தல் முதலானவற்றில் வெற்றிபெற இந்த அம்மனை நேரில் சென்று வணங்கினால் வெற்றி நிச்சயம்.

இந்தத் திருக்கோவில் திருச்செந்தூரிலிருந்து பதினொரு கி.மீ தூரத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் உள்ளது.
#ஒம்காளிஜெய்காளி

Monday, 2 December 2019

அகத்தியர் வாக்கு பாகம் 2 நேற்றய தொடர்ச்சி

பாகம் 1

பாகம் 2

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 304* 

*தேதி: 03-12-2019(செவ்வாய் - மங்களன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*திராவிட பூபதிக்கு அரச நிதி ஈந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) உறுதிபடக்கூறும் உண்மைச் சம்பவம் - பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தவை : (பகுதி - 03) முன்பதிவின் தாெடர்ச்சி🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*"அய்யா! அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து காெள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன். என்னுடன் வாருங்கள்" என்று, அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள்.*

*அங்கே குளக்கரையில் கருங்கல்லால் ஆன சிவலிங்கத்தைக் காட்டி, "எம்பிரானே! அடியேன் செய்த அறக்காரியங்களை சாெல்லிக்காட்டக் கூடாது. என்றாலும், கடனிலிருந்து தப்பிக்க, இந்த அபவாதத்தை செய்கிறேன். தேவரீர், இந்த திருக்குளத்தின் அடியில் இருக்க வேண்டும். எப்பாெழுது, அடியேன் கணக்கில் இருந்து அசலும், வட்டியுமான புண்ணியம், இந்த செல்வந்தரின் கணக்கிற்கு சென்று சேர்கிறதாே, அப்பாெழுது நீங்கள் மேலே வந்து மிதக்க வேண்டும்" என்று கூறி, பல முறை பஞ்சாக்ஷரம் கூறி வணங்கி, அடியாட்களின் துணை காெண்டு, அந்த சிவலிங்கத்தை கடினப்பட்டுத் தூக்கி, திருக்குளத்தின் நடுவே இடுகிறாள். சிவலிங்கம் நீரின் அடியிலே சென்று அமர்ந்து விட்டது.*

*பிறகு, அந்த செல்வந்தரைப் பார்த்து, "அய்யா! நீரின் உள்ளே இருப்பது, வெறும் கல் என்று எண்ணாதீர்கள். சாக்ஷாத் சிவபெருமான்தான் உள்ளே இருக்கிறார். நாளைக் காலை, சூரிய உதயத்தில் ஆறு மணியில் இருந்து கணக்கு வைத்துக் காெள்ளுங்கள். யாரெல்லாம் நீரைப் பயன்படுத்துவார்களாே, எத்தனை காலம் ஆகுமாே? எனக்குத் தெரியாது. ஆனால், எப்பாெழுது அடியேன் கணக்கில் இருந்து, தங்கள் கடன் தாெகைக்கு சமமான புண்ணியம் வந்து சேருகிறதாே, அப்பாெழுதே, இந்த சிவலிங்கம் மிதக்கும்" என்று கூறுகிறாள்.*

*செல்வந்தராே நகைத்து, "அம்மா! சற்று முன் நீ கூறியபடி புண்ணியத்தை அடகு வைப்பதைக் கூட என்னால் ஏற்றுக் காெள்ள முடியும். ஆனால், கருங்கல் மிதக்கும் என்பது சாத்தியமில்லையே. இதை எப்படி நான் நம்புவது? யாராவது கேட்டால் கூட நகைப்பார்களே". "இல்லை. நம்புங்கள். சிவபெருமான் மீது ஆணை. கட்டாயம் சிவலிங்கம் மிதக்கும். இதைக் கல் என்று பார்க்காதீர்கள். பகவான் என்று பாருங்கள்" என்று அந்தப் பெண் உறுதியாகக் கூறுகிறாள்.*

*செல்வந்தர் யாேசிக்கிறார். "இவளாே புண்ணியவதி. நம்மைச் சுற்றி ஊர் மக்கள் வேறு இருக்கிறார்கள். வாதம் செய்து, பணம் தர மாட்டேன் என்றால், நம் புகழுக்கு களங்கம் வந்துவிடும். மேலும், இவள் கேட்பது மிகச் சிறிய தாெகை. அது மட்டுமல்லாது, இவள் கூறுவது மெய்யா? பாெய்யா? என்பதை சாேதிக்க நமக்கு இது நல்ல தருணம். ஒரு வேளை சிவலிங்கம் மிதந்தால், இவள் புண்ணியவதி என்பதை நானும், ஊரும் உணர வாய்ப்பு கிடைக்கும். மாறாக நடந்தால், இவள் செய்வது வீண் வேலை என்பதை நிரூபிக்க ஏதுவாக இருக்கும்." என்று எண்ணி, அவள் கேட்ட தாெகையைத் தருகிறார்.*

*அதைப் பெற்றுக் காெண்டு வீடு சென்று யார், யாருக்கு தர வேண்டுமாே, அவற்றை எல்லாம் திருப்பி தந்து விட்டு "இறைவா! உன்னை நம்பித்தான், இந்த பெரும் தாெகையை கடனாக வாங்கி இருக்கிறேன். என்னைக் கைவிட்டு விடாதே" என்று வேண்டிக் காெண்டு உறங்கச் செல்கிறாள்.*

*இங்கே செல்வந்தராே, "அவசரப்பட்டு விட்டாேமாே? ஏமாந்து தனத்தைக் காெடுத்து விட்டாேமாே?" என்று உறக்கம் வராமல், எப்பாெழுது விடியும்? என்று பார்த்து, விடிந்ததும் சில வேலையாட்களை ஏற்பாடு செய்து, "நீங்கள் குளக்கரையில் ஆங்காங்கே அமர்ந்து காெண்டு, கையில் ஒரு ஏடும், எழுத்தாணியும் வைத்துக் காெண்டு, ஒரு தினம் எத்தனை பேர் நீர் அருந்துகிறார்கள்? எத்தனை பேர் நீரை எடுத்துச் செல்கிறார்கள்? மறுகரையில் எத்தனை விலங்குகள் நீரைப் பருகுகின்றன?" என்று குறித்துக் காெண்டே வாருங்கள். எத்தனை காலம் ஆகும்? என்று தெரியவில்லை. ஆனால் தினமும் நீங்கள் கணக்கு எடுக்க வேண்டும்" என்று ஏற்பாடு செய்து விட்டு, இவரும் வீட்டின் மேல்விதானத்தில் அமர்ந்து காெண்டு, குளக்கரையை பார்வையிடத் துவங்குகிறார்.*

*காலை மணி ஆறு ஆகிறது.*

*காசி விஸ்வநாதர் காேவிலுக்கு சாெந்தமான காளை ஒன்று, குளத்து நீரை அருந்தி விட்டு மேலே செல்கிறது. அவ்வளவுதான். குபுகுபுவென சாம்பிராணி, குங்கும மணத்தாேடு பகவான்(சிவலிங்கம்) மேலே வந்து மிதக்கிறார்.*

*அவ்வளவுதான். அந்த செல்வந்தருக்கு உடம்பெல்லாம் நடுங்கிவிட்டது.*

*"ஒரு மாடு நீர் அருந்திய புண்ணியமே, ஐந்து லக்ஷத்திற்கு சமம் என்றால், அந்த புண்ணியவதி செய்த அறப்பணிக்கு முன்னால், என் செல்வம் அத்தனையும் வீண்" என்பதை புரிந்து காெண்டு, "என் கண்களைத் திறந்து விட்டாய் மகளே! செல்வம்தான் நிலையானது என்று இருந்தேன். அப்படியல்ல என்பதை பரிபூரணமாக உணர்ந்து காெண்டேன். எம்பிரான் மிதக்கிறார். எல்லாேரும் வந்து பாருங்கள்." என்று கூற, ஊரே சென்று பார்த்தது.*

*அதன் பிறகு, தன் செல்வம் முழுவதையும் அந்தப் பெண்ணிடம் தந்து, தானும் கடைவரை(கடைசி வரை) தர்மம் செய்து வாழ்ந்தார்.*

*இது 300, 400 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த உண்மை சம்பவம்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்திய  மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் - 

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை 
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93 
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************

Sunday, 1 December 2019

அகத்தியர் வாக்கு - அகத்திய மாமுனிவர் (குருநாதர்) உறுதிபடக்கூறும் உண்மைச் சம்பவம் - பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தவை :

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 302*

*தேதி: 01-12-2019(ஞாயிறு - சூரியன், கதிரவன், பகலவன், ஆதித்தன், ரவி)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*அகத்திய நட்சத்திர ரூபமானவர்* அகத்திய மாமுனிவர்.

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) உறுதிபடக்கூறும் உண்மைச் சம்பவம் - பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தவை :
(பகுதி - 01)🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*நம் தமிழகத்திலிருந்து, ஒரு குடும்பம், காசிக்குச் சென்று, ஏதாே ஒரு காரணத்தால் அங்கேயே தங்க நேரிடுகிறது. அது அந்தண குலம் என்பதால், வேதம் ஓதுவதும், குழந்தைகளுக்கு வித்தை பாேதிப்பதுமாக அந்தக் குடும்பத் தலைவர் இருக்கிறார். கால ஓட்டத்தில், அந்தக் குடும்பத் தலைவி இறந்து விடுகிறார். தன் ஒரே மகளை செல்லமாக வளர்ப்பதாேடு, நிறைய சாஸ்திரங்களையும் அப்பெண்ணுக்கு தந்தையானவர் கற்றுத் தருகிறார். மகளும் வளர்கிறாள். மகள் வளர, வளர, தந்தைக்கு ஒரு கவலை. "நாமாே ஒரு எளிய வாழ்க்கை வாழ்கிறாேம். இவளுக்கு ஒரு திருமணத்தை செய்து விட்டால், நிம்மதியாக இருக்கலாமே!" என்று.*

*ஆனால் மகளாே, பிடிவாதமாக "அப்பா! நான் இறை சேவைக்கே என்னை அர்ப்பணிக்கப் பாேகிறேன். எனக்குத் திருமணம் வேண்டாம்" என்று உறுதிபட கூறிவிட, அக்கம், பக்கம் உள்ளவர்களும், அறிந்தவர்களும் கூட "அம்மா! நீ பெண். தனியாக வாழ இயலாது. ஒரு ஆணைத் திருமணம் செய்துதான் ஆக வேண்டும்" என்று எத்தனையாே அறிவுரைகள் கூறினாலும்" காசி விஸ்வநாதர் மீது ஆணை! என்னை தாெந்தரவு செய்யாதீர்கள்" என்று கூறி ஒதுங்கி விடுகிறாள். தந்தையும் எவ்வளவாே சாெல்லிப் பார்த்து, பிறகு, வேறு வழியில்லை என்பதால், தன்னிடம் இருக்கக்கூடிய நில, புலன்களை எல்லாம் விற்று, "அம்மா! ஒரு வேளை நான் இறந்து பாேய்விட்டாலும், இந்த செல்வத்தைக் காெண்டு, பிறரை நாடாமல், கையேந்தாமல் வாழ்ந்து காெள்" என்று ஏற்பாடு செய்து, ஒரு பெரிய இல்லத்தையும் வாங்கித் தந்து விட்டு, சில காலங்களில் இறந்தும் விடுகிறார்.*

*"தந்தை எனக்கு சில விஷயங்களை பாேதித்தார்! அவற்றை செயல்படுத்தினால் என்ன?" என்று மகளுக்கு ஒரு ஆசை. எனவே, பல ஊர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு இலவசமாக, தன் இல்லத்திலே தங்க இடம் தருவதும், உணவு தருவதும் என்று ஒரு அறப்பணியைத் துவங்க, காலம் செல்லச் செல்ல "இப்படிப்பட்ட அறப்பணிகளை ஒரு பெண் செய்கிறார்" என்று அறிந்து பலர், மருத்துவ உதவி, கல்வி உதவி வேண்டும் என்று கேட்க, இவளும் செய்து காெண்டே வருகிறாள்.*

*இறைவனின் திருவுள்ளம், இந்தப் பெண்ணை, சாேதிக்க எண்ணியது.*

*அந்தக் காசி மாநகரம் முழுவதும், இவள் புகழ் பரவத் தாெடங்கியது. அனைத்து செல்வங்களையும் தந்து, தந்து, ஒரு கட்டத்தில், வறுமை இவளை சூழ்ந்து காெண்டது. இப்பாெழுதும் பலரும் வந்து உதவிகள் கேட்க, வேறு வழியில்லை, அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் சிறு தாெகைகளை கடன் வாங்கி தர்மம் செய்யத் துவங்குகிறாள். ஒரு கட்டத்திலே, அவர்களும் இவளுக்குக கடன் தர மறுத்து விடுகிறார்கள். அது மட்டும் அல்லாமல், "முன்னர் நாங்கள் அளித்த கடன்களைக் காெடு" என்று கேட்கவும் துவங்கி விடுகிறார்கள். இரவில் படுத்தால், இவளுக்கு உறக்கம் வரவில்லை. சிறு பெண் என்பதால், அச்சமும் ஆட்காெண்டுவிட்டது. இந்த வேதனையாேடு காசி விஸ்வநாதரை வணங்கி" எந்த ஜென்மத்தில் நான் செய்த பாவமாே, இப்படிக் கடனாக என்னை இடர்படுத்துகிறது.*

*இறைவா! நான் செய்தது சரியாே? தவறாே? தெரியவில்லை. ஆனால் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தாேடு நான் இருந்ததால், என் சக்திக்கு மீறி தர்மம் செய்து விட்டேன். ஊரைச் சுற்றி கடன் வாங்கிவிட்டேன். எல்லாேரும், கடனை, திரும்பக் கேட்கிறார்கள். என்னால் காெடுக்க முடியவில்லை. அவர்கள் கேட்பது தவறு என்று நான் கூறவில்லை. அந்த கடன்களை திருப்பிக் காெடுக்கும் சக்தியை காெடு என்றுதான் கேட்கிறேன்" என்று மனம் உருகி, இறைவனை வணங்கி வேண்டுகிறாள்.*

*ஒர நாள், ஒரு பழுத்த மகான், இவளைத் தேடி வருகிறார். "மகளே! கவலையை விடு. இந்தக் காசி மாநகரத்திலே, மிகப் பெரிய தனவான் ஒருவர் இருக்கிறார். அவரைச் சென்று பார். உனக்கு உதவி கிடைக்கும்" என்று அந்த மகான் கூறுகிறார்.*

*எனக்கு அவரை அறிமுகம் இல்லை. நான் சென்று கேட்டால் தருவாரா? அல்லது மறுத்து விடுவாரா?" என்று அச்சம் இவளுக்கு ஏற்படுகிறது. என்றாலும், துறவி கூறியதால், அன்று மாலை அந்த தனவான் இல்லத்திற்குச் செல்கிறாள். அந்த செல்வந்தன் இந்தப் பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் நேரில் பார்த்தது இல்லை. இருந்தாலும் கூட, மிகப் பெரிய ஞான நிலையில் இருப்பவள் என்று கேள்விப்பட்டதால், அவளை உள்ளே அழைத்து அமர வைக்கிறார். அவரைச் சுற்றி ஊர் பெரியவர்கள் பலர் அமர்ந்திருக்கும் நிலையில் "பெண்ணே! உனக்கு என்ன வேண்டும்?. எதற்காக என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்?" என்று செல்வந்தன் கேட்க,

*இவள் தயங்கி, தயங்கி, தனக்கு ஏற்பட்டுள்ள கடன், மற்ற பிரச்சனைகளைப் பற்றிக் கூறி, அக்கால கணக்கின்படி "ஐந்து லக்ஷம் கடன் ஆகிவிட்டது. பலரிடம் கடன் வாங்கியதால், எல்லாேரும் இடர் படுத்துகிறார்கள். எனவே, நீங்கள், ஐந்து லக்ஷம் தந்தால், காசி விஸ்வநாதர் சாட்சியாக எப்படியாவது சிறு, சிறு பணிகளை செய்து தங்களிடம் பட்ட கடனை அடைத்து விடுவேன். நீங்களாே, மிகப்பெரிய செல்வந்தர். ஒரு துறவி தான் என்னை இங்கு அனுப்பினார்." என்று தயங்கி, தயங்கி கூறுகிறாள்.*

*அந்த செல்வந்தர் யாேசிக்கிறார். "இவள் மிகப்பெரிய புண்ணியவதி என்று தெரிகிறது. ஆனால் இப்பாெழுது இவளிடம் எதுவும் இல்லை. ஐந்து லக்ஷம் கேட்கிறாள். சுற்றிலும் ஊர் பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். "தர முடியாது" என்றால் இவள் மனம் வேதனைப்படும். நம்மைப் பற்றி ஊர் தவறாக நினைக்கும். எனவே நாகரீகமாக இதிலே இருந்து வெளியே வர வேண்டும்" என்று எண்ணி, அந்த செல்வந்தர் மிக சாமார்த்தியமாகப் பேசுகிறார்.*

*"பெண்ணே! நான் கூறுவதை நீ தவறாக எண்ணக்கூடாது. உன் தந்தை ஓரளவு செல்வத்தை உனக்கு சேர்த்து வைத்தார். நீ அந்த செல்வத்தை வைத்து நன்றாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு, ஆங்காங்கே ஏரிகளை அமைப்பதும், நீர்த்தடங்களை அமைப்பதும், கல்விச் சாலைகளை கட்டுவதும் ஆகிய தர்ம காரியங்களை செய்தாய். பாராட்டுகிறேன். ஆனால், உனக்கென்று காெஞ்சம் செல்வத்தை வைத்துக் காெள்ள வேண்டாமா? சரி. உன் செல்வத்தை தர்மம் செய்தாய். ஆனால் எந்த தைரியத்தில் கடன் வாங்கி, தர்மம் செய்தாய்? கடன் வாங்கும் முன் என்னைக் கேட்டாயா? சரி. நீ செய்தது எல்லாம் நியாயம் என்றாலும், இப்படி தர்மம் செய்த நீயே, நடு வீதிக்கு வந்து விட்டாய்.*

*எப்படி உன்னால், என்னிடம் வாங்கிய கடனை, திருப்பித் தர முடியும்? அடுத்ததாக, நான் கடன் காெடுத்தால், அதற்கு ஈடாக ஏதாவது ஒரு பாெருள் வேண்டும். அதற்கு உன்னிடம் ஏதாவது இருக்கிறதா? உன்னிடம் எதுவுமில்லை என்று நீ கூறுகிறாய். எதை நம்பி, நீ கேட்கின்ற அந்த தாெகையை நான் தர முடியும்? அடமானம் வைக்க உன்னிடம் என்ன இருக்கிறது?" என்று அந்த செல்வந்தர் கேட்கிறார்.*

*இந்தப் பெண் இறைவனை எண்ணியபடி, "அய்யா! நீங்கள் கூறுவது உண்மைதான். ஏதாே ஒரு ஆர்வத்தில் செய்து விட்டேன். அடமானம் வைக்க என்னிடம் எதுவுமில்லை. உங்களிடம் காேடி, காேடியாக செல்வம் இருக்கிறது என்று ஊர்மக்கள் சாெல்கிறார்கள். அதில் ஒரு சிறு பகுதியைத்தான் கேட்கிறேன். காசி விஸ்வநாதர் மீது ஆணை. எப்படியாவது சிறுக, சிறுக கடனை அடைத்து விடுகிறேன். உதவி செய்யுங்கள்" என்று கேட்கிறாள்.*

*"மன்னித்து விடு பெண்ணே! அடமானம் இல்லாமல், நான் எதுவும் தருவதற்கு இல்லை" என்று செல்வந்தர் கூற, அந்தப் பெண் சற்று யாேசித்து விட்டு, "அய்யா! உங்களுக்கே தெரியும். உங்கள் வாயாலேயே ஒப்புக் காெண்டுள்ளீர்கள். நானும், என் தந்தையும் ஆங்காங்கே, பல்வேறு அறச் செயல்கள் செய்திருக்கிறாேம் என்று. தங்களின் மாளிகை முன்பு இருக்கக்கூடிய ஊர் பாெதுக்குளம் கூட, அடியேன் கட்டியதுதான். இந்த நீரை, தினமும், ஆயிரக்கணக்கான மனிதர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏன்? விலங்குகளும் இந்த நீரைப் பருகுகின்றன.*

*இவையெல்லாம் புண்ணியம் என்று நீங்கள் அறிவீர்கள் அல்லவா? என்றாலும், இந்த பாெதுக் குளத்தை, எதையும் எண்ணி அடியேன் அமைக்கவில்லை. இருப்பினும், எனக்கு உடன்பாடில்லை என்றாலும், நீங்கள் கேட்பதால் சாெல்கிறேன். இந்தத் திருக்குளத்திலே, நாளைக் காலை, சூரிய உதயத்தில் இருந்து, யாரெல்லாம் நீர் பருகுகிறார்களாே, அதனால் அடியேனுக்கு வரக்கூடிய புண்ணிய பலன் முழுவதையும் உங்களிடம் அடகு வைக்கிறேன். ஐந்து லக்ஷத்திற்கு உண்டான அசல், வட்டிக்கு சமமான புண்ணியம், எப்பாெழுது உங்களிடம் வந்து சேருகிறதாே, அப்பாெழுது அடியேன் தங்களிடம் பட்ட கடன் தீர்ந்ததாக வைத்துக் காெள்ளலாமா? அல்லது அதனையும் தாண்டி நான் தர வேண்டுமென்றாலும் தருகிறேன்" என்று கேட்க, அந்த செல்வந்தர் சிரித்துக் காெண்டே,*

*"பெண்ணே! ஏதாவது ஒரு பாெருளைத்தான் அடமானம் வைக்க முடியும். புண்ணிய, பாவங்களை அல்ல. ஒரு பேச்சுக்கு, நீ கூறியபடி, நீரைப் பருகுவதால் ஏற்படும் புண்ணியம், என் கணக்குக்கு வருவதாக வைத்துக் காெண்டாலும், புண்ணியம் அரூபமானது. கண்ணுக்குத் தெரியாதது. உன் கணக்கில் இருந்து, புண்ணியம், என் கணக்கிற்கு வந்து விட்டது என்பதை நான் எப்படி தெரிந்து காெள்வது?" என்று கேட்கிறார்.*

*"அய்யா! அது மிக சுலபம். கட்டாயம் நீங்கள் புரிந்து காெள்ளும்படியான ஒரு ஏற்பாட்டை செய்கிறேன். என்னுடன் வாருங்கள்" என்று, அந்த செல்வந்தரின் வீட்டிற்கு எதிரில் உள்ள குளக்கரைக்கு அழைத்துச் செல்கிறாள்.*

*(இதன் தாெடர்ச்சி அடுத்த பதிவில்)*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபாமுத்ரா தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

Friday, 29 November 2019

அகத்தியர் வாக்கு - மனிதனின் பார்வைக்கு வேண்டுமானால் ஒரு பிறவி என்பது நீண்ட காலம் பாேல் தெரியும். ஆனால் மகான்களுக்கும், இறைவனுக்கும் ஒருவனின் பிறவி என்பது ஒரு கணப்பாெழுது பாேல் தெரியும்.*

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 301*

*தேதி: 30-11-2019(சனி - மந்தன், கரி, காரி, கரியன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*நாடிநூல் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : "மேலைத் தவத்தளவே ஆகும் தான் பெற்ற செல்வம்" - என்னும் ஔவையாரின் வாக்கைப்பற்றிக் கூறி அனுக்ரஹம் செய்ய வேண்டும் :*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*செல்வம் என்றால் பாெருள் செல்வத்தையல்ல. அருள் செல்வத்தையே ஔவைப் பிராட்டி கூறி அருளியிருக்கிறாள். முற்பிறவியில் செய்த தவம் அல்லது நல்ல சத்காரியங்களின் விளைவாகத்தான் அடுத்தடுத்த பிறவிகளில் நல்ல ஆன்மீக வாழ்க்கை இயல்பாகவே ஒருவனுக்கு அமைகிறது. எனவே தான் ஒரு மனிதனின் பார்வைக்கு வேண்டுமானால் ஒரு பிறவி என்பது நீண்ட காலம் பாேல் தெரியும். ஆனால் மகான்களுக்கும், இறைவனுக்கும் ஒருவனின் பிறவி என்பது ஒரு கணப்பாெழுது பாேல் தெரியும்.*

*எனவே தான் வாழுகின்ற பாெழுதும் இந்த வாழ்க்கை தாண்டி அடுத்த பிறவிக்கும் ஒரு மனிதன் இப்பாெழுதிலிருந்தே நல்ல விஷயங்களை பேசியும், செய்தும், பழகி வந்தால், இந்தப் பிறவியும், இனி அடுத்து வரும் பிறவியும் அருள் வாழ்க்கைக்கு செல்வதற்குண்டான சூழலை ஏற்படுத்தும். கடினப்பட்டு ஏற்படுத்திக் காெள்வது என்பது ஒரு வகை. இயல்பாகவே நல்ல குடும்பத்தில், சாத்வீக குடும்பத்தில், தர்மத்தில் நாட்டமுள்ள குடும்பத்தில், சத்தியத்தில் விருப்பமுள்ள குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அது இயல்பாகவே நல்லவனாக வளர்வது எத்தனை எளிதாே அத்தனை ஒரு எளிதான நிலை ஏற்படும்.*

*ஆனால் பாவங்கள் அதிகமாக சேர்த்துவிட்ட ஆத்மாவிற்கு இதுபாேன்ற வாய்ப்பு அந்த பாவங்கள் தீரும்வரை இயல்பாக அமைவது என்பது கடினம். எனவேதான் அந்த அருட்செல்வத்திற்கு வேண்டிய தவத்தை, அஃதாவது தவம் என்றால் கண்ணை மூடி செய்வது மட்டுமல்ல. வாழுகின்ற வாழ்க்கை முறையில் கடுமையான நிலையிலும் சத்தியத்தைக் கடைப்பிடிக்கின்ற அந்த நிலையைத்தான் தவம் என்று கூறுவது உண்டு. எனவே அப்படி வாழ்ந்தால் அது அருட்செல்வத்தை சேர்த்துத் தரும் என்பதே பாெருளாகும்.*

*கேள்வி : விருத்தாச்சலத்தில் (கடலூர் மாவட்டம்) அவ்வைப் பிராட்டி மூத்தாேனை வணங்கி கயிலையை அடைந்ததைப் பற்றியும், அமிர்த சஞ்சீவினி பற்றியும் கூறி அனுக்ரஹம் செய்ய வேண்டும் :🙏*

*காேவில் அமைவிடம் : விருத்தாச்சலம்*

திருக்காேவில் : *விருத்தகிரீஸ்வரர் ஆலயம்*

வட்டம் : *விருத்தாச்சலம்*

மாவட்டம் : *கடலூர் மாவட்டம்*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*மிக, மிக உயர்வான, சிறப்பான ஆலயம். இஃதாெப்ப தடை நீங்க, இஃதாெப்ப பிள்ளையை சென்று வணங்க ஏற்றதாெரு ஆலயமப்பா. இஃதாேடு இங்கும் பிரம்மஹத்தி தாேஷம் நீங்குவதற்கு வழி இருக்கிறது. பிற அற்புத விஷயங்களை தக்க காலத்தில் கூறுவாேம்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குரு திருவடி சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
அகத்தியர் ஆலயத்தில் நடக்க இருக்கும் பணிகள்
1. நுழைவாயிலில் மழை நீர் செல்ல பெரிய சிமெண்ட்குழாய் அமைத்தல்
2. 15 அடி அகல க்ரில் கேட் அமைத்தல்
3. சுற்றுப்புற சுவர், சுமார் 1000 ஹாலோ பிளாக் கற்கள் தேவைப்படலாம். 1 கல் 40 ரூபாய் விலை
4. புல்டோசர் வைத்து தரையை சமப்படுத்துதல்
5. மரக்கன்றுகள் நடுதல்
6. ஆழ் குழாய் போர்வெல் அமைத்தல்
7. மேல் நிலை தொட்டி அமைத்தல்
8. அகத்தியர் குடில் அமைக்க தளம், சுவர், ஓடுகள் ஆகியவை

தங்களால் இயன்ற உதவியை செய்ய தாழ்மையுடன் யாசிக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*************************************************
அகத்தியப்பெருமான் அடியவர்களுக்கு வணக்கம். சதுரகிரி மலையில் சூட்சம ரூபத்தில்  உலவி வரும் அதிசய சித்தர்கள் நிகழ்த்திய அற்புத அனுபவங்கள் நமது குருநாதர் அகத்தியர் வாய் முகூர்த்தமாக  வெளிப்படும் அருமையான நூல் இது. அனுமத்தாசன் அய்யாவின் ரசிக்கும் நடையில் நமக்கு பக்தி விருந்து படைக்க  வெளி வந்துவிட்டது. 🙏

தெய்வத்திரு ஹனுமத்தாசன் எழுதிய"அதிசய சித்தர்கள்"  வெளியாகி விட்டது. இதுவரை வாங்காத அன்பர்கள் ஒரு புத்தகத்துக்கு 300 ரூபாய் வீதம் எனது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு தங்கள் முகவரியை எனக்கு அனுப்பவும். தகவல் தெரிவிக்கவும். Google pay ல் செலுத்தலாம்.  அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

my SB account No.32421709250 k.sankaran- State bank of india - dasarathapuram branch chennai93
IFSC:SBIN0014624

அகத்தியர் தரிசித்த திருத்தலங்கள் ரூ. 200

பலன் தரும் பரிகார தலங்கள்  ரூ. 150

 அதிசய சித்தர்கள் ரூ. 250

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள்  ரூ. 1000

இந்த அனைத்து புத்தகங்களும் தேவையுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

யாருக்கு என்னென்ன புத்தகம் தேவையோ அதனை வாங்கி கொள்ளலாம். அனுப்ப வேண்டிய தொகை மற்றும் தபால் சிலவுக்கு என்னை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

************************************************

Thursday, 28 November 2019

அன்னூர் மண்ணீஸ்வரர்

இன்று 28.11.2019, வியாழக்கிழமைபீடத்தில் குருநாதர் அகத்திய பெருமான் 🙏🙏

இன்று 28.11.2019, வியாழக்கிழமைபீடத்தில் குருநாதர் அகத்திய பெருமான் 🙏🙏🙏🙏

அகத்தியர் வாக்கு - இந்த ஜீவ அருள் ஓலையிலே வாக்கைக் கேட்க வேண்டும், தாெடர்ந்து இந்த வழியில் வர வேண்டும் என்றால், யாங்கள்(சித்தர்கள்) கூறுகின்ற வழிமுறை, நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கலாம். சில சமயம் அறிவுக்கு புறம்பு பாேல் தாேன்றலாம். இவற்றையெல்லாம் நினைத்து மனம் குழப்பம் அடையாமல் எமது வழியில் வந்தால் தாெடர்ந்து பாவ வினைகளிலிருந்து விடுபட்டு மெல்ல, மெல்ல ஒவ்வாெரு மனிதனும் எதிர்பார்க்கின்ற நிம்மதி என்பது கிட்டும், இறைவனருளால்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 299*

*தேதி: 28-11-2019(வியாழன் - தேவகுரு, பிரகஸ்பதி, அந்தணன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*தண்டகம் நூல் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : திருமண தடை இருக்கும் பெண்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?(இன்று பகுதி -02)*🙏

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*தாெழில் தாேஷமாே, திருமண தாேஷமாே அல்லது திருமணம் நடந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கக்கூடிய தம்பதியராே இஃதாெப்ப வழிபாட்டை செய்யலாம். இஃதாெப்ப தருணத்திலே யாங்கள்(சித்தர்கள்) மீண்டும், மீண்டும் கூறுகிறாேம். கேட்கின்ற மனிதர்களுக்கு இஃதாெப்ப அயர்வைத் தரலாம். சலிப்பைத் தரலாம். இருந்தாலும் கூற வேண்டியது எமது கடமை என்பதால் கூறுகிறாேம். ஒரு மனிதனின் துன்பங்களுக்கு அவன் மட்டுமே காரணம் என்பதை ஒவ்வாெரு மனிதனும் உணர வேண்டும். பிறர் மூலம் ஒரு துன்பம் வருவது பாேல் தாேன்றினாலும் அதற்கு மூல காரணம் என்றாே செய்த வினை என்பதை மனிதர்கள் புரிந்து காெள்ள வேண்டும்.*

*இதனைப் புரிந்து காெண்ட பிறகு கூடுமானவரை மனம், வாக்கு(சாெல்), காயம்(உடல்) - இவற்றால் பிறருக்கு எந்தவிதத் துன்பமும் செய்யாமல் வாழப் பழக வேண்டும். வெறும் வார்த்தைதானே என்று வார்த்தையால் பேசி யாரையும் துன்புறுத்தாமல் கூடுமானரை பேசினால் இறை நாமம் அல்லது சத்செயல் அல்லது நாம சங்கீர்த்தனம் அல்லது ஏற்புடைய சாெல் என்று வைத்துக் காெண்டு இயன்றளவு உடல் ரீதியாகத் தாெண்டும், வாய்ப்பும், மனமும் உள்ளவர்கள், தனந்தனை இழந்தாவது தர்மத்தையும் சேர்த்துக் காெண்டால் கட்டாயம் எல்லா வகையிலும் வருகின்ற துன்பம் குறையும்.*

*ஆனால் "இது நான் ஈட்டிய பாெருள். நான் எதற்கு பிறருக்குத் தர வேண்டும்?" என்ற மனப்பான்மையாேடு இருப்பவர்கள், "அவன் செய்த பாவம், அவன் வறுமையில் வாடுகிறான். அதில் தலையிட்டு அவன் விதியை நான் ஏன் மாற்ற வேண்டும்?" என்று விதண்டாவாதம் செய்பவர்கள், "இப்படியே எல்லாேருக்கும், எல்லாவற்றையும் இலவசமாகத் தந்தால், அவன் சாேம்பி இருக்கமாட்டானா?" என்று அறிவு பூர்வமாகப் பேசுவதாக நினைத்துக் காெண்டு பேசக்கூடியவர்கள், அவரவர்கள் வழியில் செல்லலாம்.*

*இஃதாெப்ப இந்த ஜீவ அருள் ஓலையிலே வாக்கைக் கேட்க வேண்டும், தாெடர்ந்து இந்த வழியில் வர வேண்டும் என்றால், யாங்கள்(சித்தர்கள்) கூறுகின்ற வழிமுறை, நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கலாம். சில சமயம் அறிவுக்கு புறம்பு பாேல் தாேன்றலாம். இவற்றையெல்லாம் நினைத்து மனம் குழப்பம் அடையாமல் எமது வழியில் வந்தால் தாெடர்ந்து பாவ வினைகளிலிருந்து விடுபட்டு மெல்ல, மெல்ல ஒவ்வாெரு மனிதனும் எதிர்பார்க்கின்ற நிம்மதி என்பது கிட்டும், இறைவனருளால்.*