Friday, 29 December 2017

அரங்கன் வரலாற்று கதை




ஸ்ரீரங்கம் அருகே   அகண்ட -காவேரி   என்னும் ஒரு சிற்றூரில் --காவேரி என்னும் இளம் ஏழை (விதவை) பெண் வாழ்ந்து வந்தாள் ---இரவும் --பகலும் ---அரங்கன் பெயரை உச்சரிப்பதே லட்சியம் என  வாழ்ந்தாள்  ---இவளுக்கு ஒரே மகன் அவனுக்கு அரங்கன் என்றே பெயர் சூட்டி அழைத்தாள்----அரங்கனுக்கு அவ்வூரில் மாடு மேய்க்கும் வேலை கிடைத்தது ----தினமும் பொழுது புலர்ந்ததும் அரங்கன் மாடு மேய்க்க கிளம்பிவிடுவான் ---நண்பகல் ஆனதும் காவேரி அரங்கனுக்கு கலையத்தில் கஞ்சி எடுத்து கொண்டு அவன் மாடு மேய்க்கும் இடத்தின் அருகே ஒரு மர-நிழலில் அமர்ந்து அரங்கா அரங்கா என்று இருமுறை அழைப்பாள் ---தாயின் குரல் கேட்டு அரங்கனும் ஓடி வந்து ---கலையத்தில் உள்ள கஞ்சியை அருந்திவிட்டு ----ஓலை பாய் ஒன்று விரித்து ---அதில் சற்று இளைப்பாறி விட்டு மீண்டும் மாடு மேய்க்க கிளம்பிவிடுவான் -----அவன் போனதும் மகன் அருந்தி  எஞ்சி இருந்த கஞ்சியை காவேரி அருந்திவிட்டு ---கலையத்தை கழுவி விட்டு இல்லத்திற்கு வந்து விடுவாள் ----இப்படி இருக்க ஒரு நாள் நண்பகலில் காவேரி மரத்தடியில் கஞ்சி கலையத்தை இறக்கி வைத்து விட்டு அரங்கா ---அரங்கா ---என்று இருமுறை அழைத்தாள் மகன் வரவில்லை ---பெற்றவளின் உள்ளம் கலங்கியது ----இரு முறை அழைத்து மகன் வரவில்லையே மகனுக்கு ஏதும் நேர்ந்துவிட்டதோ என்று மூன்றாவது முறையாக அரங்கா என்று  உரக்க கத்தினாள் ---அவள் மூன்றாவது முறையாக உரக்க கத்தியது திருவரங்கத்தில் பள்ளிகொண்ட திருமாலின் காதில் விழுந்தது ----உடனே படுக்கையை விட்டு எழுந்து காவேரி மகன் அரங்கனை போல் வேடம் தாங்கி  ----காவேரி இருக்கும் இடம் நோக்கி ஓடி வந்தார் ----அம்மா அம்மா இதோ வந்து விட்டேன் என்று ----கண் கலங்கி நின்ற காவேரி மகனின் குரல் கேட்டு அவன் அருகே வந்ததும் உச்சி முகர்ந்து முத்தமிட்டு --அரங்கா ஏன் இவ்வளோ தாமதம் என்று கேட்டாள்-----அரங்கன் ---அம்மா பசு கன்று ஒன்று வழி  தவறி ஓடி விட்டது அதை தேடி பிடித்து தாய் பசுவிடம் சேர்க்க தாமதம் ஆயிற்று ---கஞ்சி ஊத்தம்மா பசி எடுக்கிறது என்று கூறி கலையத்தை தாயிடம் இருந்து பெற்று அருந்திவிட்டு ---உடனே எழுந்தார் ---காவேரி பதட்டமாக என்னடா எப்பவும் கஞ்சி அருந்தி சிறிது இளைப்பாறிவிட்டு தானே செல்வாய் ----இன்று உடனே  செல்கிறாயே ஏன் என்றாள் -----அரங்கன்--- அம்மா இன்று  கொஞ்சம் வேலை அதிகம் ---எப்பவும் படுக்கையில் இளைப்பாறி கொண்டுதானே இருக்கிறேன் என்று கூறி கிளம்பி மறைந்து விட்டார் திருமால் ---காவேரி மீதம்முள்ள கஞ்சியை அருந்திவிட்டு ----கலையத்தை கழுவி கிளம்பும் நேரம் ----அம்மா அம்மா என்று குரல் கொடுத்துக்கொண்டே உண்மையான அவள் மகன் அரங்கன் வந்தான் ---காவேரி ஆச்சரியமாக என்னடா இப்போதான் வேலை அதிகம் என்று போனாய் அதற்குள் வந்து விட்டாயே ----என்று கேட்க ----அரங்கன் என்னமா சொல்கிறாய் நான் இப்போதுதான் இங்கே வருகிறேன் --பசு கன்று ஒன்று முச்செடியில் சிக்கி கொண்டது அதை முச்செடியில் இருந்து மீட்டு தாய் பசுவிடம் சேர்த்துவிட்டு இப்போதுதான் வருகிறேன் ----நான் இன்னும் உணவருந்தவில்லை அம்மா என்றான் வருத்தத்தோடு ---காவேரி அதிர்ச்சி ஆகி என்னடா இது நீ வரவில்லையென்றால் வேறு யார்   சற்று முன்  உன் உருவத்தில் வந்து உணவருந்தி சென்றது ----என்று திகைப்புடன் கேட்க ---மகன் அரங்கன் யோசித்து விட்டு அம்மா இதை இப்படியே விடக்கூடாது நாளை இங்கு நீங்கள் வரும் நேரம் நான் இந்த மரத்தின் பின்னே ஒளிந்து கொள்கிறேன் நீங்கள் இன்று அழைத்தது போல் நாளையும் மூன்று முறை அழையுங்கள் அந்த போலி அரங்கன் யார் என்று பார்த்துவிடுவோம் என்று பேசி வைத்து கொண்டனர் இருவரும்  ---அடுத்தநாள் காவேரி நண்பகல் வந்து அரங்கா அரங்கா  என்று இருமுறை அழைத்து மரத்தின் பின் மறைந்து நின்ற மகன் அரங்கனை பார்க்க ----அவன் சைகை செய்தான் மீண்டும் அழைக்க சொல்லி ----காவேரி மூன்றாவது முறையாக அரங்கா என்று அழைக்க ----வந்தார் ரெங்கநாதர் ----அரங்கன் வடிவில் ----அம்மா அம்மா அமுத கஞ்சி கொண்டு வந்துவிட்டாயா என்று கேட்டு கொண்டே ----அவரை  பார்த்ததும் மரத்தின் பின் இருந்த உண்மையான அரங்கன் அம்மா அவன் போலி அரங்கன் பிடித்து இரண்டு அடி அடித்து யார் என்று விசாரியுங்கள் என்றான் ----அரங்கன் வடிவில் இருந்த ரெங்கநாதரோ அம்மா அவன்தான் போலி அரங்கன் நம்பாதே அவனை என்று கூற காவேரிக்கு ஒரே குழப்பம் ---கண்ணீர் மல்க ரெங்க நாதரை கண்மூடி வேண்டினாள் ----அரங்கா இது என்ன விளையாட்டு இந்த ஏழையிடம் என்ன இருக்கிறது ஏன் இந்த சோதனை என்றாள்---அரங்கனாக வந்த ரெங்கநாதர் சுய உருவு கொண்டு ---தாயே விளையாடத்தானே வந்திருக்கிறேன் உன்னிடம் கண்திறந்து பாரம்மா உன் மகனை என்றார் ---காவேரி கண் திறந்து திருமாலை பார்த்து பணிந்து வணங்க ---அரங்கனும் ஓடி வந்து வணங்க ----திருமால் ----தாயே இந்த ஏழையிடம் என்ன இருக்கிறது என்றாயே உண்மையான உன் அன்பு இருக்கிறதே அது போதாதா எனக்கு ----உன் அன்பால் கவரப்பட்டு உன் கையால் அமுதுண்ணவே ---உன்னிடம் இப்படி விளையாடினேன் ----இருவரும் குறைவற வாழ்ந்து வைகுண்ட மோட்சம் அடைவீர்களாக என்று கூறி மறைந்தார் -----இந்த விஷயம் காட்டு தீப்போல் ஊரில் பரவ ----இதை கேள்வி பட்ட ராமானுஜர் ----காவேரிக்கு திருமால் காட்சி தந்த இடத்தில் மண்டபம் எழுப்பி ----திருவரங்க பெருமாளை வருடத்திற்கு ஒரு முறை  அங்கே ரெங்கநாதர்  உற்சவத்தை இறங்க செய்து அமுது உண்ணும் படலம் என்று விழா நடத்த  ஏற்பாடு செய்துள்ளார்  -----அகண்ட காவேரி என்ற ஊரின் பெயரை  ---ஜீயர்புரம் என்று  மாற்றினார் ----இந்த கதைக்கு எனக்குள் எழுந்த வரிகள்  ----வானவர்க்கு அமுதம் வழங்கிய பெருமாளே ----வா என்று அழைத்த தாயின் அன்பு அமுதை பருகிய திருமாலே -----தாய் பசுவை தேடி கன்று வந்தது போல் ----தாயின் அன்பை பெற நீ வந்தாயோ ----அரங்கத்து அம்மானே
ஸ்ரீராமஜயம்





🙏🏿☘சிவ சித்தாந்தம்☘🙏🏿

பார்பாரிக்கா

எல்லாம் மாதவன் செயலே.. !

தெரிந்த புராணம் தெரியாத கதை..!

பஞ்ச பாண்டவர்களில் பீமனுக்கும்,இடும்பிக்கும் பிறந்தவன் கடோத்கஜன்.

கடோத்கஜனுக்கும் கம்கன்கடவிற்கும் பிறந்தவன் பார்பாரிக்கா
.

.தாய் கம்கன்கட,மகன் பார்பாரிக்காவிற்கு தானே பயிற்சி அளித்து சிறந்த வீரனாக தயார் செய்திருந்தாள்.

சிவ பெருமான் பார்பாரிக்காவிற்கு மூன்று அம்புகளை பரிசளித்திருந்தார்.

முதல் அம்பு, தான் அழிக்க நினைக்கும் இலக்குகளை குறியிட்டு விடும்.

இரண்டாவது அம்பு,தான் காப்பாற்ற நினைக்கும் இலக்குகளை குறியிட்டு ஒதுக்கிக் காப்பாற்றி விடும்.

மூன்றாவது அம்பு அழிக்கக் குறியிட்ட இலக்குகளை அழித்து விடும்.

மூன்று அம்புகளும் தத்தம் பணிகளைச் செய்து விட்டு பார்பாரிக்காவிடம் திரும்பி விடும்.

இது தவிர அக்னி பகவான் மூவுலகையும் வெல்லக்கூடிய வில் ஒன்றை பார்பாரிக்காவிற்கு பரிசளித்திருந்தார்.இதன் காரணமாக பார்பாரிக்கா மிகவும் பலம் பொருந்தியவனாக விளங்கினான்.

பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே யுத்தம் துவங்க இருந்ததை அறிந்த பார்பாரிக்கா போரைக் காண ஆவலுற்றான்.

தாயிடம் ஆசிப் பெற்று தன் நீலக் குதிரை மீதி புறப்பட்டான்.

புறப்படும் முன்,போரில் பலவீனமாக இருந்தவர்கள் பக்கம் சேர்ந்து அவர்களை வெற்றி பெறச்செய்வேன் என்று தாயிடம் சூளுரைத்தான்.

பார்பாரிக்காவின் திறமையை அறிந்திருந்த கிருஷ்ணன்,அவன் மனநிலையை நேரில் கண்டறிய விரும்பி ஒரு பிராமண வேடம் பூண்டுஅவனைக் காணச் சென்றார்.

வழியிலேயே அவனைப் பார்த்தும் விட்டார்.அவனைத் தடுத்து நிறுத்தினார்.

ஒரு பிராமணர் தன்னை நிறுத்துவது கண்டு பார்பாரிக்காவும் குதிரையை விட்டு இறங்கினான்.”

என்ன பிராமணரே என்னை ஏன் வழி மறித்தீர் “ என்று கேட்டான் பார்பாரிக்கா.

“ போர் உடையில் நீ வேகமாகச் செல்வது கண்டு ஏன் இந்த பரபரப்பு என்று தெரிந்து கொள்ளும் ஆவல் மிகுதியில் நிறுத்தி விட்டேன் “ என்றான் கிருஷ்ணன்.

“ பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் குருக்‌ஷேத்திரத்தில் போர் நடக்க உள்ளது,அதில் கலந்து கொள்ளப் போகிறேன்” என்றான் பார்பாரிக்கா.”

யார் பக்கம் சேர்ந்து போரிட போகிறாய் “ என்று வினவினான் கிருஷ்ணன்.”அங்கு போய் பார்ப்பேன்,யார் பக்கம் பலவீனமாக உள்ளதோ அவர்கள் பக்கம் சேர்ந்து அவர்களை ஜெயிக்க வைப்பேன்” என்றான் பார்பாரிக்கா.

” நீ அவ்வளவு பெரிய பராக்கிரமசாலியா” என்ற வினவினான் கிருஷ்ணன்.”

நீங்கள் வேண்டுமானால் என் பராக்கிரமத்தைச்சோதித்து பாருங்களேன்” என்றான் பார்பாரிக்கா.

”இதோ இந்த அரச மரத்தில் உள்ள இலைகளை ஒரே அம்பால் உன்னால் கோர்க்க முடிந்தால் உன்னை பராக்கிரமசாலி என்று ஒப்புக்கொள்கிறேன்” என்றான் கிருஷ்ணன்.

மரத்தின் ஒரு இலையை மட்டும் பிடுங்கி பார்பரிக்காவிற்கு தெரியாமல் தன் காலடியில் போட்டுக் கொண்டான்.

”இதோ ஒரு நொடியில் செய்து விடுகிறேன்” என்று ஒரு மந்திரத்தை உச்சரித்து அம்பை எய்தான் பார்பாரி்க்கா.

அம்பு மரத்தில் இருந்த இலைகளையெல்லாம் கோர்த்துக் கொண்டு கடைசியாக கிருஷ்ணனின் பாதத்தை நோக்கிப் பாய்ந்தது.

”இது என்ன விபரீதம் அம்பு என் பாதத்தைத் துலைக்க முற்படுகிறதே” என்றான்
கிருஷ்ணன்

்.”பிராமணரே உன் காலடியில் ஒரு இலை இருக்கும் என்று நினைக்கிறேன்,உடனே பாதத்தை எடுத்து விடும்” என்றான் பார்பாரிக்கா.

கிருஷ்ணர் பாதத்தை எடுத்தவுடன் பார்பாரிக்காவின் அம்பறாத்தூணியில் இருந்து புறப்பட்ட அம்பு ஒன்று எல்லா இலைகளையும் ஒன்றாகக் கோர்த்தது.

இந்த இடத்தில் ஒரு குட்டி கிளைக் கதை ஒன்று உள்ளது.

துருவாச முனிவர் கிருஷ்ணருக்கு ஒரு வரம் அளித்திருந்தார்.

கிருஷ்ணரின் பாதம் தவிர்த்த ஏனைய இடங்களில் எந்த ஆயுதத்தாலும் பாதிப்பு எற்படாது என்பதே அந்த வரம்.

மெளசால பர்வத்தில் ஜாரா என்னும் வேடன், மான் என்று எண்ணி கிருஷ்ணரின் பாதத்தில் அம்பு எய்து கிருஷ்ணரின் மரணத்திற்கு காரணமானதிற்கு முன் பார்பாரிக்காவின் அம்பு கிருஷ்ணரின் பாதத்தை பதம் பார்த்து பலவீனப்படுத்தியது,குறியிட்டு விட்டது முக்கிய காரணம் என்கிறது புராணம்.

ராமாவதாரத்தின் போது வாலியை மறைந்திருந்துதாக்கியதற்குவேதனையடைந்தவாலியிடம்,”கிருஷ்ணாவதாரத்தின் போது ஜரா என்னும் வேடனாக நீ பிறந்து நான் மரத்திலே மறைவாக அமர்ந்திருக்கும் போது உன்னால் கொல்லப்படுவேன்” என்று கூறியதாக புராணம் தெரிவிக்கிறது.

பார்ப்பாரிக்காவின் பராக்கிரமத்தை உணர்ந்து கொண்ட கிருஷ்ணர் பஞ்ச பாண்டவர்களை ஒளித்து வைத்தாலும் பார்பாரிக்காவின் அம்பு தேடிக் கண்டு பிடித்துக் கொன்று விடும் என்று உணர்ந்தார்.

”உன்னிடம் எனக்கு ஒரு யாசகம் வேண்டுமே” என்றான் கிருஷ்ணன்.

”எது வேண்டுமானாலும் தயங்காமல் கேளும் பிராமணரே !” என்றான் பார்பாரிக்கா.

”உன் தலையை கொய்து விட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றான் கிருஷ்ணன்.

சற்றே திகைத்து விட்ட பார்பாரிக்கா,

” நீர் யார்,உண்மையை சொல்லும்,நீங்கள் சாதாரண பிராமணரே அல்ல” என்றான்.

பகவான் கிருஷ்ணர் தன் சுய உருவத்தில் திவ்ய சொரூபனாகக் காட்சித் தந்தார்.”

கேசவா,நாராயணா,மாதவா,கோவிந்தா,
மதுசூதனா...என்று பல்வேறு நாமங்களால் கிருஷ்ணரை துதித்தான்.

” பார்பாரிக்கா,நீ மாவீரன். உன் தாயிடம் நீ மேற்கொண்ட பிரத்திக்ஞையின் விளைவுகளை நீ அறியவில்லை.

நீ பாண்டவர்களுக்கு 7 அக்‌ஷொனி படைகளும்,கெளரவர்களுக்கு 11 அக்‌ஷொனி படைகளும் இருப்பதைப் பார்த்து பாண்டவர்கள் பக்கம் சேர்வாய் ;உன் பராக்கிரமத்தால் கெளரவ படை தோற்கத் துவங்கும்.

அது பலவீனமாவதை உணர்ந்து,உன் தாய்க்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக நீ கெளரவர்கள் பக்கம் சேர்வாய்.

பாண்டவர்கள் தோற்க துவங்குவார்கள்.முடிவில் பாண்டவ,கெளரவ சேனைகள் முற்றிலும் அழிந்து நீ மட்டுமே மிஞ்சுவாய்.

இது தர்மத்திற்கு நல்லதல்ல.ஆகவே நீ போரில் பங்கேற்கக் கூடாது.

உன் தாய்க்குச் செய்து கொடுத்த சத்தியத்தின்ன் காரணமாக இது சாத்தியமல்ல.

ஆகவே தர்மத்தின் பொருட்டு நீ உயிர் தியாகம் செய்து விடு”என்றான் கிருஷ்ணன்.

பார்பாரிக்காவும் இசைந்தான்.

பார்பாரிக்கா உண்மையில் நீ ஒரு யக்‌ஷன்.

முன் ஒரு சமயம்,பூமியில் அதர்ம சக்திகள் அட்டூழியம் நிகழ்த்தி வந்த நேரம்,பிரம்மாதி தேவர்கள் எல்லாம் என்னை வந்து பணிந்து தங்களைக் காபாற்றும்படி வேண்ட,நானும் தர்மத்தைக் காக்க அவதாரம் எடுப்பதாகக் கூறினேன்.

அதற்கு அங்கிருந்த நீ,அதற்கு நான் தேவையில்லை
என்றும் நீ ஒருவனே போதும் என்றும் கூறினாய்.

இதை கேட்ட பிரம்மதேவன் கோபமுற்று,நீ பூமியில் மகத்தான சக்திகளுடன் பிறப்பாய் என்றும்,அதர்ம சக்திகளை ஒழிக்க முற்படும் போது நீயே என்னால் கொல்லப்பட்டு முதல் பலி ஆகி விடுவாய் என்றும் உன்னைச் சபித்தார்,அதன் காரணமாகவே,இன்று உனக்கு இந்த நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் போர் துவங்கும் முன் ஒரு மாவீரனை களபலி கொடுக்க வேண்டும்.

உன்னை மிஞ்சிய மாவீரன் இத்தரணியில் இல்லை” என்றான் கிருஷ்ணன்.

கிருஷ்ணனின் சக்ராயுதம் பார்பாரிக்காவின் தலையை கொய்தது.

பரந்தமனின் பரம் பதம் கிடைத்து விட்ட பிறகு வேறென்ன வேண்டும் என்று திருப்தி அடைந்த பார்பாரிக்கா”கிருஷ்ணா நான் போரினைக்காண  மட்டும் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்” என்றான்.

பார்பாரிக்காவின் தலையைப் போர் பூமியைப் பார்த்து நின்ற ஒரு குன்றின் மீது வைத்தான் கிருஷ்ணன்.

போர் நடந்து முடிந்தவுடன்,பாண்டவர்களுக்குள் ஒரு வாக்குவாதம்.

தங்களில் யார் பராக்கிரமத்தால் போரில் வென்றோம் என்பதே அது.

கிருஷ்ணரிடம் வந்து “கிருஷ்ணா எங்களில் யார் பராக்கிரமத்தால் இந்த போரில் வென்றோம் என்று கூறு” என்றனர்.”

எனக்கு எப்படி தெரியும்,நானோ அர்ஜுனனின் ரதத்தை ஓட்டிக்கொண்டு அவன் சொன்னபடியெல்லாம் சென்று க
ொண்டிருந்தேன்.

போதாக்குறைக்கு எதிரிகளின் அம்புக்கணைகள் வேறு என் உடம்பை பதம் பார்த்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் என்னால் வேறு எதையும் பார்க்க தோன்றுமா என்ன” என்றான் கிருஷ்ணன்.

”அப்படியென்றால் வேறு யாரைத்தான் கேட்பது”என்று திகைத்தனர் பாண்டவர்கள்.

”ஒரு ஆள் முழு போரையும் பார்த்திருக்கிறான்.

அவனை வேண்டுமானால் கேட்கலாம்” என்றான் கிருஷ்ணன்.

”யாரது” என்று வினவிய பாண்டவர்களை பார்பாரிக்காவிடம் அழைத்துச் சென்றார் கிருஷ்ணர்.

”என்ன பார்பாரிக்கா முழு போரையும் பார்த்தாயா?” கேட்டான் கிருஷ்ணன்.

”பார்த்தேன் கிருஷ்ணா”என்றான் பார்பாரிக்கா.

”பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம்,யார் பராக்கிரமத்தால் இந்த போரில் வென்றோம் என்று” என்று கேட்டான் கிருஷ்ணன்.

”எனக்கு என்ன தெரியும் கிருஷ்ணா,யுத்த பூமியிலே ஒவ்வொரு தலை விழும் போதும் அங்கு உன் சக்ராயுதம்தான் என் கண்ணுக்கு தெரிந்தது”என்றான் பார்பாரிக்கா.

பாண்டவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்.

!!ஸ்ர்வம் கிருஷ்ணார்ப்பணம்!!

பனபாக்கம் கோவில். அப்பன்மாயூரநாதர் அருள்மிகுஅம்மைசவுந்தர நாயகி


ஸ்ரீ அகத்தியர் லோபாமுத்திரைக்கு
 தரிசனம் தந்த பனபாக்கம் கோவில். அப்பன்மாயூரநாதர்
அருள்மிகுஅம்மைசவுந்தர நாயகி மலர் பாதம் பணிந்து
இன்றைய தினத்தை
தொடங்கவேண்டும்.
அகத்தியரும்லோபாமுத்திரையும் போற்றி வணங்கிய
அகத்தியருக்கு திருமண கோலம்  அளித்த தலம். அன்னை உமையவள்
நின்ற கோலத்தில் காட்சிதருகிறாள். மனமுருகி தன்னைத் தொழுவோருக்கு
இல்லை ஏனாது அருளும்
தாய்.
அகத்தியர் ஞானம்
இக் கோயில் சுமார் 1400வருடங் கள் பழமை வாய்ந்தது.
 அகத்தியருக்கு கையிலையிலிருந்த தம்முடைய திருக்கல்யாணக் கோலத்தைக் காட்சி கொடுத்தருளியது பனசை
 என்னும் இத்தலத்தில்.
அகத்தியர் தன் மனைவி லோபமுத்திரையுடன் தாலமா நகர் வந்து மாயூரநாதரை வணங்கி வட திசையில் (நெடும்புலி) லிங்க மூர்த்தியையும் அகிலாண்ட நாயகியையும் தாபித்து பொதிகை மலைக்கு சென்றனர்.
வேலூர் மாவட்டத்தில் பனப்பாக்கம் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலாகும்.
பனப்பாக்கம் மயூரநாதர் கோயில்

பனப்பாக்கம் மாயூரநாதர் கோயிலில் சுமார் 1000 ஆண்டுக்கு முற்பட்ட இராச இராச சோழனின் காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி என்ற மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் கல்வெட்டு சவுந்தர நாயகி சந்நிதி அர்த்த மண்டபத்தின் வடக்குபுற சுவற்றில் உள்ளது. மாயூரநாதர் கருவறையின் வடக்குச் சுவற்றில் விஜயநகரப் பேரரசு வெங்கடபதி ராயன் கல்வெட்டும் உள்ளது.
பனப்பாக்கம் மயூரநாதர் கோயில் என்ற கோயில் இந்தியாவின், தமிழ்நாட்டில், வேலூர் மாவட்டத்தில் பனப்பாக்கம் என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலாகும்பனைமரங்கள் நிறைந்த ஊர் ஆதலால் இவ்வூருக்கு பனசை நகர் என்ற பெயர் வழங்கலாயிற்று. காலப்போக்கில் பனப்பாக்கம் என்று வழங்கப்பட்டு வருகின்றது.
ஒரு சமயம் சிவன் கயிலாயத்தில் உள்ள உத்தியான வனத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் தியானத்தில் இருக்கும் போது உமாதேவியும் நந்திதேவரும் அவ்விடத்தை விட்டு அவ்வனத்தின் பேரிழிலையும் கண்டனர். உமாதேவி அங்கு மயில் தோகை விரித்து ஆடுவதையும், நந்தித்தேவர் அங்கு புலியின் விளையாட்டையும் கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். சிவபெருமான் தியானத்திலிருந்து நீங்கி அங்கு உமாதேவியும் நந்திதேவரும் காணாததால் கயிலாயம் சென்றார். உமாதேவியும் நந்திதேவரும் திரும்பி வந்து பார்க்க சிவபெருமான் அங்கு இல்லாமையால் அவர்களும் கயிலாயம் போர்ந்தனர். அங்கு சிவபெருமான் நீங்கள் இருவரும் என்னை மறந்து மயில் ஆட்டத்தையும், புலி விளையாட்டையும் பார்த்துக்கொண்டிருந்ததால் புவியில் மயிலாகவும், புலியாகவும் மாறுக என சபித்தார். இவ்விருவரும் சாபம் நீங்க வழியாதென வினவ பூவுலகில் தொண்டைநாட்டில் முக மண்டலம் போன்ற காஞ்சிக்கு ஒரு காத தொலைவில் பனசையம் பதியில் நம் திருவுருவமாக உள்ள சோதிவடிவாக உள்ள பெருமானை பூசிக்க இச்சாபம் விலகும் என்றார். இவ்விருவரும் இத்தலத்திற்கு வந்து பூசை செய்து வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றனர்.

உமாதேவி
மயிலாக சாபம் பெற்ற உமாதேவி பல வனாந்திரங்களைக்கடந்து சிவகங்கையில் நீர் அருந்த பூர்வ ஞானம் தோன்றி சோதிலிங்க பெருமானை அடைந்து பூசித்தனர். பூசனைக்கு மகிழ்ந்த சிவபெருமான் காட்சியளித்து வேண்டும் வரம் யாதென வினவ ஐயனே என் சாபம் நீங்கப்பெற்றதை போன்று உம்மை பூசிக்கும் அடியார்களின் ஆணவபிணி நீங்கவும் இத்தலம் காஞ்சிக்கு அணித்தாக உள்ளதால் விசால காஞ்சி எனவும் பெயர்பெறவும் அருள் செய்தல் வேண்டும் என்றார். இறைவன் அவ்வாறே வரம் அளித்தார். உமையின் மயிலுருவத்தை அருளுடன் நோக்க அதிலிருந்து பாக்கு, பனை, தெங்கு, தாளிப்பனை, ஈந்து (ஈச்சை) ஆகிய ஐவகை மரங்களும் தோன்றின. உனது வடிவம் மிக்க வனப்புடன் இருப்பதால் உலகத்தார் சவுந்தரநாயகி என உன்னை அழைப்பார்கள். நீ என் இடப்பாகம் வந்து அமருவாய் என்று கூறி மறைந்தனர்.

மாயூரநாதர்
அன்று முதல் மயில் பூசித்ததால் அச்சோதிலிங்கப் பெருமானுக்கு மயூரநாதன் (மயூரம்-மயில்) என்றும் தல விருட்சம் பனை ஆதலால் பனசையம் பதி என்றும், பஞ்சதால மரங்கள் தோன்றியதால் தாலமா நகர் என்றும் பெயர் பெற்றது.
அகத்தியர்
திருத்தணிகை வேலனிடம் தாலமாநகரின் வரலாற்றைக் கேட்ட அகத்தியர் தன் மனைவி லோபமுத்திரையுடன் தாலமா நகர் வந்து மாயூரநாதரை வணங்கி வட திசையில் (நெடும்புலி) லிங்க மூர்த்தியையும் அகிலாண்ட நாயகியையும் தாபித்து பொதிகை மலைக்கு சென்றனர்.
நந்திதேவர்
நந்தி தேவர் புலியுருவம் தாங்கி பனசைநகர் வந்து சேர தனது துற்குணங்கள் நீங்கி சற்குணத்துடன் சோதிலிங்கப் பெருமானைப் பூசிக்க சிவபெருமான் சவுந்தரநாயகியுடன் காட்சி தந்து தன்னை விட்டு நீங்கா வரமும் தந்தார். நந்தி தேவர் புலி உரு கொண்டு இறைவனை பூசித்ததால் திருப்புலியீசன் என்றும் இத்தலம் சிவபுரத்திற்கு ஒப்பானதால் சிவபுரம் என்றும் வழங்கப்படுகிறது.

இந்திரன்
இராமபிரானால் சாபம் பெற்ற தன் மகன் சயந்தனின் சாபம் தீர மாயூரநாதரை வேண்டி சாப விமோசனம் பெற்று தென்மேற்கு திசையில் ஒரு சிவலிங்கம் அமைத்து பூசை செய்ய எம்பெருமான் சூரிய ஒளி போன்று காட்சி தந்ததால் அருணாசலேஸ்வரன் என்று பெயர் பெயரிட்டு வணங்கி தன் இந்திர உலகம் சென்றான்.

பிரமன்
கங்கா தேவியால் சிறகுகள் ஒடிக்கப்பட்ட அன்னப்பறவைக்கு மீண்டும் அதே பொலிவு பெற வேண்டி பிரமன் அன்னத்துடன் இத்திருத்தலம் வந்து மயூரநாதரை வணங்கி புது பொலிவு பெற்று திருக்கோயிலுக்கு தெற்கே அரைகடிகை தூரத்தில் ஒரு லிங்கத்தை அமைத்து பூசை செய்து அருள் பெற்றார். பெருமானுக்கு விரிஞ்சகேசன் என்று பெயரிட்டு தன் உலகம் சென்றார்.

திருமால்
திருமாலின் வாகனமான கருடனுக்கு வெப்பு நோய் ஏற்பட்டது. கருடன் திருமாலுடன் இங்கு வந்து மயூரநாதரை வணங்க அந்நோய் தீரப்பெற்றது. எம்பெருமான் திருமாலை நோக்கி இன்று முதல் நீவீர் இலக்குமிநாராயணராக மேற்குதிசையில் அமர்வாய் என்றனர்.

தக்கன்
தக்கனது யாகத்தை அழித்து அவனது தலையை கொய்த வீரபத்திரக்கடவுள் மீண்டும் அவனை ஆட்டுத்தலையுடன் உயிர்பிக்க சாப நிவர்த்தியாக இத்தலம் வந்து மயூரநாதரை வணங்க சாப நிவர்த்தி பெற்று கீழ் திசையில் (ரெட்டிவலம்) தான்தோன்றி ஈசனையும் பெரியநாயகி அம்மனையும் தாபித்து பூசை செய்து தன் உலகம் சென்றான்.

இராகவன்(இராமன்)
நாட்டிலுள்ளோர் பழிக்க, சீதையை காட்டில் விட்ட பாவம் தீர இராமன், வசிஷ்ட முனிவரின் அறிவுறுத்தலின் பேரில் தாலமா நகர் வந்து மாயூரநாதரை வணங்கி சாப நிவர்த்தி பெற்றார்.

மன்மதன்
சிவபெருமானின் மீது அம்பு தொடுத்த பாவம் தீர மன்மதன், மாயூரநாதரை வணங்கி கிழக்கே ஒரு லிங்க உருவத்தை அமைத்து வழிபட இறைவன் காட்சி தந்து சாப நிவர்த்தி அருளினார். மன்மதன், இறைவனுக்கு மதணேசன் என்றும் அம்பிகைக்கு திரிபுர சுந்தரி என்றும் அவ்வூருக்கு நல்ல நகர் என்றும் பெயரிட்டு வழிபட்டு இரதி தேவியுடன் தன் உலகம் அடைந்தனர்.

இயமன்
இயமன், சிவலிங்கத்தின் மீதும், மார்கண்டேயன் மீதும் பாசக் கயிற்றை வீசிய பாவம் தீர தாலமா நகர் வந்து மன்மதன் வழிபட்ட நல்லீசப் பெருமானை வணங்கி பின்பு மாயூரப்பெருமானையும், திருக்காளத்தி நாதரையும் வணங்கி பாவ நிவர்த்தி பெற்று தன் உலகம் சென்றனன்.

வீரபத்திரர்
தாலமா நகரின் மன்னன் வச்சிராங்கதனும் மக்களும் சைவத்தை மறந்து சமணத்திற்கு மாறுகின்ற சேதியறிந்த எம்பெருமான் வீரபத்திரரையும் பத்திரகாளியையும் அனுப்பி மன்னனையும் மக்களையும் சைவத்திற்கு திருப்பி அனைத்து ஆலயங்களையும் புதுப்பித்தனர். மன்னன் வச்சிராங்கதன் வீரபத்திரருக்கு கோயில் ஒன்று எழுப்பி வழிபட்டு மகிழ்ந்தான்.

வேதியர்
மகப்பேறு வேண்டி சிவராத்திரை பூசைக்கு காளத்தி யாத்திரை சென்ற இராமேஸ்வரத்து தம்பதியர் கர்பவதியான மனைவியுடன் மயூரநாதரை வணங்கி தங்கியிருக்கும் போது அன்று இரவு ஆண் மகவு பெற்றதனால் காளத்திநாதனை இங்கேயே அமைத்து பூசித்து இராமேசுவரம் சென்றனர்.
அகத்தியர் ஞானம்
அகத்தியர் ஞானம்
அகத்தியர் தரிசனம்,    ஆனந்தம் நிச்சயம்
இனிய காலை வணக்கம்

Thursday, 28 December 2017

சொரி முத்து அய்யன்

சிங்கம்பட்டி-நெல்லை மாவட்டம்

அகத்தியர், “இங்குள்ள  தீர்த்த கட்டத்தில் யாரெல்லாம் நீராடி இங்குள்ள அய்யன் மற்றும் பிற மூர்த்திகளை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு எல்லா இன்னல்களும் நெருப்பு பட்ட பஞ்சு போல் பொசுங்கி விட வேண்டும், அவர்களுக்கு புத்திர பாக்கியம் மற்றும் அனைத்து ஐஸ்வரியங்களும்  கிடைத்து நல்வாழ்வு வாழ வேண்டும்,” என்று சிவபெருமானை வணங்கி நின்றார்.

 உடனே சிவபெருமான் அவர்முன் தோன்றி அகத்தியர் கேட்ட வரங்களை அருளினார். அப்போது தேவர்கள் வானிலிருந்து மலர் மாரிப் பொழிந்தனர். அந்த பூ மழை பட்ட அய்யன் “சொரிமுத்து அய்யன்” என வழங்கப்பட்டார்.  சொரிதல் என்றால் பொழிதல் என்று பெயர். இங்குள்ள அய்யன் பேரருள் பொழிந்து வருவதாலும், விலை மதிக்க முடியாத முத்து போல் அவர் இருப்பதாலும் இவருக்கு “சொரி முத்து அய்யன்” என்று பெயர் ஏற்பட்டது.

அகத்தியர் உருவாக்கிய சொரிமுத்து அய்யன்  கோயில், நாளாவட்டத்தில் சிதைந்து காணாமல் போனது.  மக்களுக்கு கோயில் இருந்த இடம் மறந்தே போயிற்று. அது நாணயங்கள் புழக்கத்துக்கு வராத காலம். மக்கள் பண்டமாற்று முறை மூலம் வாழ்க்கை நடத்தினர். இந்தக் கோயில் வழியாகத்தான் பாண்டிய நாட்டிலிருந்து மாட்டு வண்டியில் சுமை ஏற்றி சேரநாட்டுக்குக் கொண்டு செல்வார்கள். 

அப்போது திருடர்கள் பயம் அதிகமாக இருந்தது. மாட்டு வண்டிதான் ஒரே வாகன வசதி! வழிப்பறி கொள்ளையரிடமிருந்து தப்ப அல்லது தற்காத்துக்கொள்ள வரிசையாக மக்கள் மாட்டு வண்டிகளில் பயணம் செய்வார்கள். 

அப்படி ஒரு முறை வரிசையாக வந்த வண்டிகளில் முதல் வண்டி, சொரி முத்து அய்யனார் இருப்பிடம் அருகே வந்தது. வண்டியின் சக்கரம் ஒரு கல் மீது மோத, உடனே கல்லிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.  உடனே வண்டியை ஓட்டியவர் நிறுத்தி விட்டு கூச்சலிட்டார். அனைவரும் ஓடி வந்து பார்த்து செய்வது அறியாமல் தவித்தனர். அப்போது அசரீரி  ஒலித்தது: “இந்த இடம் அகத்திய மாமுனிவர் ஞான திருஷ்டி மூலம் மகாலிங்கம் சுவாமி, சொரி முத்து அய்யனார் புடை சூழ அருள்பாலித்த இடம்.  இங்கு ஆகம விதிப்படி பூஜைகள் நடத்த வேண்டும். வருங்காலத்தில் இவ்விடம் மிக சிறப்பான புண்ணிய இடமாக புகழப்படும்.”

 இதை கேட்ட அனைவரும் ஆலயம் அமைக்க முயற்சிகளை மேற்கொண்டனர். திருப்பணி  துவங்கியது. குறிப்பிட்ட இடத்தில் தோண்டியபோது, அகத்தியர் பிரதிஷ்டை செய்த லிங்கம் கிடைத்தது. அதனுடன் மகாலிங்கம், சங்கிலி பூதத்தார், காத்தவராயர், மேலவாசல் பூதம், மேலவாசல் வினாயகர், தட்சணாமூர்த்தி, கும்பமாமுனி, பெரியசாமி, பாதாள பூதம்,  கரடிமாடன், பிரம்ம ராட்சசி, பேச்சி, சுடலை மாடன், கருப்பன், கருப்பி, தளவாய் மாடன், தூண்டில் மாடன், மற்றும் பட்டவராயர் உள்ளிட்ட தெய்வங்களையும் அகழ்ந்தெடுத்து பிரதிஷ்டை செய்தனர்.

 சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு முன்னால் பாறையின் இடுக்கு வழியாக தாமிரபரணி ஆறு, ஓர் ஒடையாக கலகல என்ற சத்தத்துடன் ஓடுகிறது. அதில் குளித்துவிட்டு, அப்படியே ஈர உடையுடன் வந்து அய்யனையும் மற்ற தெய்வங்களையும் மக்கள் வணங்கி வருகின்றனர்.  இந்த கோயில் நிர்வாகம் ஜமீன்தார் கட்டுபாட்டுக்குள்தான் உள்ளது. கோயிலையும் அங்கு வரும் பக்தர்களையும் ஜமீன்தார்கள் தங்கள் ஊழியர்கள் மூலம் நன்கு கவனித்துகொள்கிறார்கள். 

 பக்தர்களின் வசதிக்காக காலை முதல் மாலை வரை இரண்டு பூசாரிகள் கோயிலிலேயே தங்கியிருக்கிறார்கள். தினமும் மூன்று வேளை பூஜை நடத்தப்படுகிறது. காது குத்துதல், முடி எடுக்கும் நேர்ச்சைகளை பக்தர்கள் மேற்கொள்கிறார்கள். வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கு இங்கு தங்கும் விடுதி உள்ளது; சமையல் பாத்திரங்களும் அளிக்கப்படுகின்றன. 

   கோயிலில் மகாலிங்கம், சொரிமுத்து அய்யனார், பூதத்தார், பிரம்ம ராட்சசி, தளவாய் மாடசாமி, தூசி மாடசாமி, பட்டவராயர் ஆகிய ஏழு சந்நதிகள் உள்ளன. சிவன், சக்தி, நாக கன்னி, கிருஷ்ணர் ஆகியோர் கூட்டுறவு சாஸ்தா என்ற பெயரில் தரிசனம் அருள்கின்றனர். பேச்சியம்மன் துஷ்ட அவதானி கோலத்தில் காட்சி தருகிறார்.  குழந்தை வரம் தருகிறார். பிரம்ம ராட்சசி, மகிஷாசுர மர்த்தினியின் அவதாரம். இவரின் அடிமையாக இருப்பவர்கள்  வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பொதுமக்களுக்கு அருள் வாக்கு கூறுகின்றனர். இங்கிருந்து பிடி மண் எடுத்து பல ஊர்களில் நிலையம் போட்டும் பிரம்ம ராட்சசியை வணங்கி வருகிறார்கள்.

  இங்கு முத்து பட்டனை பக்தர்கள் பட்டவராயர் என அழைத்து வழிபடுகின்றனர். இவருக்கு காலணிகளை காணிக்கையாக அளிக்கின்றனர். அவை கோயில் சுவரில் தொங்கவிடப்பட்டுள்ளன. அதை யாரும் தொடுவதும் இல்லை.  ஆனால் சிறிது நாள் கழித்து பார்த்தால், இந்த செருப்புகள் தேய்ந்தும், சகதி, மணல், புல், சில பிராணிகளின் எச்சம் ஆகியவை ஒட்டிக்கொண்டிருப்பதும் ஆச்சரியமான விஷயம். பட்டவாராயர் பக்தர்கள் காணிக்கையாக அளித்த செருப்புகளை அணிந்து கொண்டு காட்டுக்குள் வேட்டைக்கு சென்று வருவதாக  பக்தர்கள் நம்புகிறார்கள். பட்டவராயர் சந்நதியில் பொம்மக்கா, திம்மக்கா உள்ளனர்.

 எல்லா அமாவாசை நாட்களிலும், பாண தீர்த்த அருவியில் பக்தர்கள் புனித நீராடி தங்களது மூதாதையரை நினைத்து நீத்தார் கடனை நிறைவேற்றுகிறார்கள்.
தீர்த்தத்தில் நீராடிய பக்தர்கள் பிறகு  சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு நடந்து  வருகிறார்கள். தோளிலும் இடுப்பிலும் சிறு குழுந்தைகளை தூக்கிக்கொண்டு பக்தர்கள் வருவது அவர்களுடைய பக்தி மேன்மையை விளக்குகிறது. முதியவர்கள், தள்ளாத வயதிலும் அய்யனை தேடி வருவது நெகிழ வைக்கிறது.  குறிப்பாக ஆடி அமாவாசை அன்று பொழியும் மழையில் நனைந்தபடி ஐயனை வணங்கி அருள் பெற, லட்சக் கணக்கில் பக்தர்கள் கூடுகிறார்கள். 

பாண தீர்த்ததிற்கும் சொரிமுத்து அய்யனார் கோயில் வரையும் முற்காலத்தில் சாலை வசதி இருந்தது. தர்ப்பணம் செய்பவர்களின் வசதிக்காக பாணதீர்த்தம் அருகே மண்டபம் இருந்தது, அங்கு அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. 1992ல் ஏற்பட்ட புயல் வெள்ளத்தில் இந்தப் பாதைகள் தூர்ந்து போய்விட்டன. அதன் பிறகு இந்த இடத்துக்கு மேலணை வழியாக படகில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.   வனத்துறை கட்டுபாடு காரணமாக தற்போது படகு போக்குவரத்து நிறுத்தப்பட, பாண தீர்த்தத்துக்கு பக்தர்கள் செல்வதும் நின்றுவிட்டது. அதோடு பக்தர்கள் வசதிக்காக ஜமீன்தார்களால் கட்டப்பட்ட மண்டபமும் பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது.

இன்றும்கூட ஆடி அமாவாசை அன்று பாபநாசத்தில் இருந்து பொதிகை மலையை பார்த்தால் வாகனங்கள் வரிசையில் செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும். ஆடி அமாவாசையில்  சாமியாடிகள் பூக்குழி இறங்குவர். பூதத்தார், தளவாய் மாடசாமி, பட்டவராயன் ஆகிய சந்நதிகள் முன்பு மூன்று கட்டமாக இந்தப் பூக்குழி திருவிழா நடக்கும்.   பூகுழி இறங்குபவர் தவிர, சிலர் சைவப்படையல் இட்டு பிரம்மராட்சசி அம்னை வணங்கி குழந்தைவரம் கேட்பார்கள். வேறுசிலர் பட்டவராயன் கோயிலில் செருப்பை காணிக்கையாகச் செலுத்தி  கிடா வெட்டி படையல் இடுவர். 

சங்கிலி பூதத்தாரை வணங்கும் பக்தர்கள் தங்களை மறந்த நிலையில் சங்கிலியை எடுத்து மார்பிலும், முதுகிலும் ஓங்கி அடித்துத் தங்களது பக்தியை வெளிபடுத்துவார்கள். ராஜ உடையில் ஜமீன்தார் தர்பாரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். 

 இந்த நிகழ்ச்சியின்போது, பல பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக மேடைமீது சிறப்பிக்கப்படுவார்கள். மேடையில் பிரதானமாக, சிம்மாசனத்தில் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி ராஜா அமர்ந்திருப்பார். சாமியாடிகள் அவர் முன்பு அமர்ந்திருப்பார்கள். ராஜாவிடம் உத்தரவு வாங்கியே மற்ற காரியங்களை கவனிப்பார்கள்.  
 பங்குனி உத்திரமும் இங்கு விசேஷமானது.  அப்போதும் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். 

அய்யப்பனின் முதல் நிலையாக சொரிமுத்து அய்யனார் விளங்குவதால் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் இங்கு வந்து மாலை அணிந்து  சபரிமலை சென்று வருகின்றனர். மாலை அணியாதவர்களும் சபரிமலை செல்லும் வழியில் இங்கு வந்து சொரிமுத்து அய்யனாரை வணங்கி செல்கின்றனர். மழை முறையாக பெய்யவில்லை என்றால் இந்த சொரிமுத்து அய்யனாருக்கு சிறப்பு யாகம் செய்து பின் தாமிரபரணி தாயை வணங்குகிறார்கள். விவசாயிகளோடு பலதரப்பட்ட பிரமுகர்களும் பூஜை செய்வார்கள். பூஜை முடிந்த உடனேயே மழை பொழிவது தற்போதும் நிகழ்கிறது!

 கோயில் வளாகத்தில் ஒரு மரத்தில் மணிகளை பிரார்த்தனையாக பக்தர்கள் கட்டி வைக்கிறார்கள். ஆனால் மறு வருடம் வந்து பார்த்தால் அந்த மணி காணப்படுவதில்லை! தேடிப் பார்த்தும் கிடைப்பதில்லை. எங்கே போயிற்று? அந்த மணியை மரமே விழுங்கி விடுகிறது என்கிறார்கள்! இந்த மரத்தை “மணி விழுங்கி மரம்” என்று போற்றுகிறார்கள்.

 ஜமீன்தார் வாரிசுகள் இந்தக் கோயிலை தற்போதும்  நல்ல முறையில் பேணி பாதுகாத்து வருகின்றனர். பாலங்கள் மற்றும் தங்கும் விடுதிகளை சீரமைத்தல், ஆற்றை பக்தர்கள் பதுகாப்பாகக் கடக்க சங்கிலி அமைத்தல் போன்ற பல பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். 

 பரம்பரை பரம்பரையாக சிங்கம் பட்டி ஜமீன்தார் வாரிசுகள் தாங்கள் வணங்கும் தெய்வங்களை தங்களது தோளில் சுமந்து செல்வர். பக்திக் கண்ணீர் வடித்தும், இன்னிசை பாடியும் ஆன்மிகம் பரப்பி வருகின்றனர். அவர்களது வழியில் தற்போது ஆன்மிக பணியை மிகச்சிறப்பாக செய்து வருகிறார் முருகதாஸ் தீர்த்தபதி. 80 வயதைக் கடந்தும் கம்பீர தோற்றத்துடன், தொய்வின்றி இவர் ஆற்றி வரும் பணியைப் பாராட்டி  பல பட்டங்களும், விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.   இவர் தற்போதும் தனது அரண்மனையை மிகச் சிறப்பாக, கலைநயத்துடன் பராமரித்து வருகிறார்.   தங்கள் அரண்மனையில் தர்பார் மண்டபம், லட்சுமி விலாஸ், அந்தப்புறம், விருந்தினர் மாளிகை என பழமையின் பெருமை மாறாமல் காத்து வருகிறார். விருந்தினர்கள் அரண்மனைக்கு வந்தால் போதும், உபசரிப்பு மிக பிரமாதமாக இருக்கும்!

 சிங்கம்பட்டியில் உள்ள அரண்மனை விருந்தினர் மாளிகை பட்டு மெத்தை விரித்து. பார்ப்போரை கவரும் வண்ணம் பிரமாண்டமாய் உள்ளது. ஆங்கிலேயர்கள் தங்கள் தொப்பிகளை மாட்டி வைத்திருந்த தொப்பி ஸ்டான்ட் உள்பட பல  நினைவுப் புகைப்படங்களும் அந்த மாளிகையை  அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

தங்கள் மூதாதையர்கள் பயன்படுத்திய பொருட்களையெல்லாம் அருங்காட்சியகம் அமைத்து அதில் பேணிக் காத்து வருகிறார், ஜமீன்தார் விவேகானந்தர் சேதுபதிராஜாவுக்கு கொடுத்த பனைமரத்தால் ஆன யானை, குதிரைக் குளம்பில் தாயாரிக்கப்பட்ட ஆஷ் டிரே, முன்னோர்கள் பயன்படுத்திய வாள், ஈட்டி போன்றவை தொன்மையைப் பறைசாற்றுகின்றன.

 சொரிமுத்து அய்யனாரை தவிர சிங்கம்பட்டி ஜமீன்தார்கள் வணங்கும் தெய்வங்கள் வேறு உள்ளனஅவை, சிங்கம்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயில், விநாயகர் கோயில், முத்தாரம்மன் கோயில், அயன்சிங்கம்பட்டியில் உள்ள  மகாதேவர் ஆலயம், வெயிலுகந்தம்மன் கோயில், ஏர்ரம்மாள்புரம் முப்பிடாதி அம்மன் கோயில் ஆகும்.

அகத்தியரும் வைகாச பூரண மகரிஷியும்

காகம் பெற்ற ஈஸ்வர பட்டம்

இவ்வாறு சனீஸ்வர பகவானின் வாகனமாக அமைந்த காக மூர்த்திக்கு அடுத்து ஓர் ஆசை தோன்றியது. அது என்ன? தன்னுடைய தேவன் ஈஸ்வர பட்டம் பெற்ற மூர்த்தியாக விளங்கும்போது தான் மட்டும் சாதாரண வாகன மூர்த்தியாக விளங்குவது தன்னுடைய தலைவனுக்குத்தானே இழுக்கு. அதற்கு என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தது.

பல காலம் ஆழ்ந்த யோசனைக்குப் பின் தன்னுடைய மூர்த்தியிடமே தன்னுடைய எண்ணத்தை வெளியிட்டது. சனீஸ்வர மூர்த்தியும் உன்னுடைய எண்ணம் நல்ல எண்ணமே, ஆனால், இத்தகைய விருப்பத்தை நிறைவேற்றும் தகுதி உள்ளவர் ரிஷிகளுக்கெல்லாம் தலைமை ரிஷியாக விளங்கும் ஸ்ரீஅகத்தியப் பெருமான் ஒருவர்தான். நீ அவரை நோக்கி தவம் இருப்பாயாக,” என்று அறிவுரை கூறினார்.

காக வாகனமும் சனீஸ்வர மூர்த்தியின் அருளுரையை ஏற்று அகத்திய முனிவரை நோக்கித் தவம் இயற்றியது. ஸ்ரீஅகத்திய பெருமான் திருஅண்ணாமலையில் காக வாகன மூர்த்திக்கு ஆக்கோட்ட லிங்கம் தரிசனமும், ஈஸ்வர பட்டமும் பெற்றுத் தந்த தெய்வீக மகாத்மியத்தை எமது ஆஸ்ரம வெளியீடான ஸ்ரீஅகஸ்திய விஜயம் மாத இதழில் எடுத்துரைத்துள்ளோம். வைகாச பூரண மகரிஷியே சனீஸ்வர மூர்த்திக்கு ஈஸ்வர பட்டம் பெற்ற வாகனமாக அமைந்து மக்களின் குறை தீர்த்து வருகிறார்.

இவ்வாறு காக வாகனம் ஈஸ்வரப் பட்டம் பெற்றவுடன் ஸ்ரீஅகத்திய பெருமானுக்கு எவ்வகையிலேனும் நன்றிக் கடன் தீர்க்க வேண்டும் என்று விரும்பி, “சுவாமி, தங்கள் கருணையால் அடியேனுக்கு மிகவும் தெய்வீகமான ஈஸ்வர பட்டம் அருளப் பெற்றேன். தங்களின் கருணைக்கு எவ்வகையிலேனும் நன்றி செலுத்த அடியேனுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்க வேண்டும்,” என்று மனமுருகிப் பிரார்த்தனை செய்தது. 

அகத்தியப் பெருமானும், “எதிர்காலத்தில் செய்நன்றி மறத்தல் என்பது கலியுகத்தில் நடைபெறும் ஒரு அன்றாட நிகழ்ச்சியாக ஏற்படும். உன்னுடைய வரலாற்றைக் கேள்விப்படும் மக்கள் உன்னை ஓர் முன்னோடியாக எடுத்துக் கொண்டால் அவர்கள் நற்கதி அடைவார்கள். ஒரு காகத்திற்கு உள்ள நன்றி மறவாத குணம் கூட ஒரு மனிதனிடம் காணப்படாதது கலியுக சாபக் கேடே. இனி வரும் மக்களுக்கு உன்னுடைய தியாகம் ஒரு பாடமாக அமையட்டும்,” என்று அற்புத ஆசி வழங்கினார். 

மேலும், “மக்களுக்கு அரும் பெரும் தொண்டாற்ற வேண்டும் என்று உன்னுடைய உள்ளம் விழைவதால் அதை நிறைவேற்றும் பொருட்டு இறைவன் அருளால் உனக்கு ஒரு இறைப் பணி வழங்க கடமைப்பட்டுள்ளேன். திருஅண்ணாமலை புனித பூமியில் மலையைச் 

சுற்றிலும் 11,022 தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்களில் எல்லாம் முறையாக நீராடி வழிபாடுகள் இயற்றி மீண்டும் பொதிய மலைக்கு வந்து சேர். உனக்கு நற்செய்தி ஒன்று காத்திருக்கும்,” என்று ஸ்ரீஅகத்தியர் காகத்திடம் தெரிவித்தார்.

காகமும் பரமானந்தத்துடன் அகஸ்தியர் கூறிய முறையில் திருஅண்ணாமலையை கிரிவலம் ஆரம்பித்தது. தினமும் ஒரு தீர்த்தத்திலாவது தீர்த்த நீராடல் பூஜைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு வைராக்யத்தை தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டு திருஅண்ணாமலையைச் சுற்றிலும் உள்ள தீர்த்தங்களில் நீராடிக் கொண்டிருந்தது. 

மகரிஷிகளுக்கு இறைவன் பெரும்பாலும் பூஜை முறைகளை அளிப்பதில்லை. அவர்கள் தாங்களாகவே தாங்கள் மேற்கொண்டிருக்கும் இறைப் பணியைப் பொறுத்து பூஜை முறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் அவர்கள் பூலோகத்தில் ஒரு மனிதனாகவோ, விலங்காகவோ, மரம், செடியாகவோ பிறப்பெடுத்தால் அந்த ஜீவ உடலை விட்டுப் பிரிய வேண்டிய நேரத்தையும் அவர்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். மகரிஷிகளைப் பொறுத்தவரை இதுவே ஒரு முக்தி நிலையாகும். கேட்பதற்கு எளிமையாகத் தோன்றினாலும் இதன் பின்னால் உள்ள ஆன்மீக இரகசியங்கள் மிகவும் கடினமானவை. 

உதாரணமாக, ஒரு மகரிஷி ஒரு லட்சம் மக்களைக் கரையேற்றுவதற்காக பூலோகத்திற்கு அவரை இறைவன் அனுப்பி வைத்தால் அந்த ஒரு லட்சம் மக்களும் ஆன்மீகத்தில் முன்னேற்றம் பெற்ற பின்தான் அவர் பூமியை விட்டுப் புறப்பட முடியும்.

இதற்கிடையே அவருடைய பூத உடல் பூமியில் ஏற்படும் கர்ம வினைகளைச் சுமக்க முடியாமல் போகலாம். ஆனால், அதை காரணம் காட்டி தாங்கள் மேற்கொண்ட பணியை நிறைவேற்றாமல் அவர்கள் தங்கள் உடலை உகுக்க முடியாது. இந்த இக்கட்டான சூழ்நிலையை ஒவ்வொரு மகரிஷியும், மகானும் கட்டாயம் சந்தித்தே ஆக வேண்டும்.

எனவே முக்தி, மோட்ச நிலை என்பது ஒவ்வொருவருடைய ஆன்மீக நிலையைப் பொறுத்தது என்பதை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். 
வைகாச பூர்ண மகரிஷியின் தொண்டு

தற்போது சனீஸ்வர மூர்த்தியின் காக வாகனமாக உருக் கொண்ட வைகாச பூரண மகரிஷியும் அத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் தன்னுடைய தீர்த்த யாத்திரை பூஜைகளை நிறைவேற்றி வந்தார். அவர் எப்படி தீர்த்த பூஜைகளை நிறைவேற்றி வந்தார். தான் ஈஸ்வர பட்டம் பெறுவதற்காக அகத்தியப் பெருமானுக்கு ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த மூலிகையைப் பறித்து அவருக்கு அர்ப்பணித்து வந்தார் அல்லவா? அது போல ஒவ்வொரு தீர்த்தத்தில் நீராடும்போதும் அந்த தீர்த்தத்திற்கு உரித்தான மலர்களைப் பறித்து வந்து அந்த மலர்களால் தீர்த்த தேவதைகளை பூஜித்த பின்னரே தீர்த்தங்களில் இறங்கி நீராடும் முறையைக் கையாண்டார் வைகாச பூரண மகரிஷி. 

இறை மூர்த்திகளுக்கு மட்டும்தான் மலர் வழிபாடு என்ற கணக்கு கிடையாது. தீர்த்த தேவதைகளையும் அவசியம் மலர்களால் வழிபட வேண்டும். இவ்வாறு தீர்த்த மலர் வழிபாட்டு முறையை பூலோகத்தில் முதல் முறையாக ஏற்படுத்தியவரே சனீஸ்வர மூர்த்தியின் வாகனமாய் அருள்புரியும் வைகாச பூரண மகரிஷி ஆவார். 

தீர்த்த தேவதைகளுக்கு உரிய மலர்கள் பூலோகத்தில் மட்டும் அல்லாது வேறு லோகங்களிலும் மலர்ந்திருக்கும். அந்தக் குறிப்பிட்ட லோகங்களுக்குப் பறந்து சென்று குறித்த நேரத்திற்குள் மீண்டும் பூலோகத்திற்கு வந்து மலர்கள் வாடும் முன் அவற்றை தீர்த்த தேவதைகளுக்கு அர்ப்பணித்து அற்புதமாக வழிபாடுகளை நிறைவேற்றி வந்தார். உதாரணமாக, பாரிஜாத மலர் விஷ்ணு லோகத்தில் மட்டும்தான் மலரும், ஹரி சந்தன மலரை சப்தரிஷி லோகத்திலிருந்துதான் பெற முடியும். 

திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள தீர்த்தங்களில் ஒரு சில தீர்த்தங்கள் மட்டுமே மனிதர்களின் கண்ணுக்குப் புலப்படும். சில வகைத் தீர்த்தங்களை தேவர்கள் மட்டுமே காண முடியும். இன்னும் சில அரிதான தீர்த்தங்களை மகரிஷிகள் மட்டுமே தரிசிக்க முடியும். 

நாட்கள் செல்லச் செல்ல ஒவ்வொரு தீர்த்தத்தையும் அடையாளம் காண்பதற்கு மிகவும் அபரிமிதமான பூஜா சக்திகள் தேவைப்பட்டது. அச்சமயங்களில் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலேயே யோகத்தில் ஆழ்ந்து விடுவார் காக மூர்த்தி. அடுத்த தீர்த்தம் பற்றிய விளக்கங்களை அறியும் வரை உண்ணாமல் உறங்காமல் யோகத்திலேயே நிலைத்திருந்து தவம் இயற்றி வந்தார் வைகாச பூரணர். இவ்வாறு அவர் 11,022 புனித தீர்த்தங்களையும் வழிபட்டு அவற்றில் நீராடல் மேற்கொள்வதற்கு 300 யுகங்கள் கடந்து சென்றன. 

வைகாச பூரணர் திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள அனைத்துத் தீர்த்தங்களிலும் தீர்த்த நீராடல்களை நிறைவேற்றிய பின் அவருடைய மேனி நூறு சூரிய பிரகாசத்தைக் கொண்டிருந்தது. அவர் உடலைச் சுற்றி பொன்னிறக் கதிர்கள் வெளிப்பட்டன. ஆனால், வைகாச பூரண மகரிஷியோ தன்னுடலிலிருந்து தோன்றிய பொற்கதிர்களை தன்னுடைய தபோ சக்தியால் மறைத்துக் கொண்டு ஒரு சாதாரண காக வடிவத்திலேயே அகத்திய முனிவரின் தரிசனத்திற்காக பொதிய மலைக்கு விரைந்து சென்றார்.

வைகாச பூரண மகரிஷியைக் கண்டவுடன் ஸ்ரீஅகத்திய முனிவர் அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினார். வைகாச பூரணர் திடுக்கிட்டார். “சுவாமி, ரிஷி குலத்திற்கே தலைமைப் பீடாதிபதியான தாங்கள் அடியேனுடைய காலில் விழலாமா?” என்று குரல் தழுதழுக்க கண்கள் நீர் சொரிய இரு கரம் கூப்பி வணங்கி அகத்திய முனியைத் தொழுதார். அகத்தியர் அன்புப் புன்னகையுடன், “திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள ஆயிரக் கணக்கான தீர்த்தங்களைத் தரிசித்து அவற்றில் முறையாக நீராடி அற்புதமான தேவ லோக, விஷ்ணு லோக, சத்ய லோக மலர்களை எல்லாம் கொண்டு சிறப்பாக தீர்த்த பூஜைகளையும் நிறைவேற்றி உள்ளாய். அவ்வாறிருக்கும்போது வணங்குவதற்கு உன்னைவிடத் தகுதியான ஜீவன் எது?“ என்று வினவினார்.

காகம் தன் தலையைக் குனிந்து கொண்டது. அகத்திய பெருமானின் வார்த்தைகளில் இருந்த உண்மை காகத்தைப் பிரமிக்க வைத்தது. 300 யுகங்கள் நீராடியும் திருஅண்ணாமலை தீர்த்தத்தின் மகிமையை உணராமல் இருந்த வைகாச பூரண மகரிஷிக்கு ஒரே நொடியில் அத்தீர்த்தங்களின் அற்புத மகிமையை தன்னுடைய பணிவான வணக்கம் மூலம் தெரிவித்த அகத்திய மகரிஷியின் மேன்மை குறித்து புளகாங்கிதம் அடைந்தார். இப்படி ஒரு மகரிஷியைப் பெற்ற உலகம் எத்துணை பெருமை வாய்ந்தது என்று எண்ணி எண்ணி பேருவகை கொண்டார் வைகாச பூரண காக மூர்த்தி. 

அகத்தியர் தொடர்ந்து, “மகரிஷி, அடியேன் மேற்கொள்ள இருக்கும் தெய்வீகப் பணிக்கு உங்களுடைய புண்ணிய சக்தியை ஈந்தருள வேண்டும்.இது எம்பெருமானின் விருப்பம். இதைத் தாங்கள் அன்பு கூர்ந்து நிறைவேற்ற வேண்டும்,” என்று பணிவுடன் கேட்டுக் கொண்டார். வைகாச பூரணர் பெருமகிழ்ச்சி கொண்டார். தான் அகத்தியப் பெருமானுக்கு எப்படியாவது நன்றிக் கடனைத் தீர்க்க வேண்டும் என்று தானே பல யுகங்கள் காத்திருந்தார். 

இப்போது அகத்திய முனிவர் தானே முன் வந்து அந்தச் சந்தர்ப்பத்தை அளிக்கும்போது இதை விடச் சிறந்த பேறு என்ன இருக்க முடியும்? 

வைகாச பூரணர், “சுவாமி, அடியேனுக்கு என்று எந்த வித புண்ணிய சக்தியும் கிடையாது. அனைத்தும் தாங்கள் இட்ட பிச்சையே. எனவே எப்போது வேண்டுமானாலும் அதைத் தங்கள் திருப்பாதங்களில் அர்ப்பணிக்க சித்தமாக இருக்கிறேன்,” என்று தயங்காமல் தெரிவித்தார். 

ஒரு சுப முகூர்த்த தினத்தில் அகத்தியரும் வைகாச பூரணரும் குடகு மலையை அடைந்தனர். அகத்தியர் முதலில் ஒரு மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்து முறையாக கணபதி பூஜையை நிறைவேற்றினார். பின்னர் ஒரு முகூர்த்த நேரத்திற்கு அற்புதமான வேத மந்திரங்களை ஓதி தன்னுடைய கமண்டலத்திலிருந்து மூன்று சொட்டு தீர்த்தத்தை பிள்ளையாரின் திருவடிகளில் சமர்ப்பித்தார். அடுத்த விநாடியே அங்கு ஓர் அற்புத நீரூற்று தோன்றியது. தேவர்கள் விண்ணிலிருந்து பூமாரி பொழிந்தனர்.  ஆம், அகத்தியர் கங்கைக்கும் மூத்த காவிரி நதியை பூமிக்கு கொண்டு வந்து விட்டார். அந்த அற்புத கோலாகலமான முகூர்த்தத்தில் அகத்தியர் வைகாச பூரணரை அழைத்து, “மகரிஷியே, தங்களுடைய திருஅண்ணாமலை தீர்த்த பூஜை பலன்கள் அனைத்தையும் இந்த தீர்த்தத்தில் தரை வார்த்துக் கொடுத்து விடுங்கள்,” என்று கூறவே வைகாச பூரணரும் சற்றும் தாமதியாது தன்னுடைய தீர்த்த பூஜா சக்திகள் அனைத்தையும் அகத்திய மகரிஷி தோற்றுவித்த காவிரி நதியில் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார்.

அகத்தியர், “தங்களுடைய மலர் வழிபாடு சக்திகள் நிறைந்த புண்ணிய சக்தியால் இந்நதி பொங்கிப் பெருகுவதால் இன்று முதல் காவிரி என்று அழைக்கப்படும், (மலர்கள் செறிந்த சோலைகளுடன் விளங்கும் நதி),”

”திருஅண்ணாமலையில் உறையும் தட்சிணா மூர்த்தியின் குரு சக்திகள்  இந்நதியில் பரிணமிப்பதால் உங்களுடைய பொற் கிரண சக்திகளும் அதில் கலந்து இந்நதி குருவுக்கு உகந்த நதியாக அமையும். எனவே, காவிரி பொன்னி நதி எனவும் பெரியோர்களால் அழைக்கப்படும், தாங்கள் காக வடிவில் தீர்த்த யாத்திரைகளை மேற்கொண்டதால் இந்நதி காகநதி எனவும் வழங்கப்படும். சனீஸ்வர பகவான் முடவன் முழுக்கு என்ற தீர்த்த நீராடலை மேற்கொள்ளும் காலத்தில் தங்கள் திருநாமத்தைக் கூறி காவிரியில் நீராடுபவர்களே அதன் முழுப் பலனையும் பெற முடியும்,” என்று ஆசி வழங்கினார். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த காவிரி நதி நமது பூலோகத்தில் பிரவாகம் கொண்டுள்ளது என்றால் இதை விடப் புனித தேசம் வேறெங்கு இருக்க முடியுமா? 

ஒரு முறை ஏழு கடலையும் ஒரு துளியாக்கி அகத்திய பெருமான் தன் உள்ளங்கையில் வைத்து விழுங்கி விட்டார் அல்லவா? அதனால் அகத்தியரின் கரங்கள் பட்ட தீர்த்தத்தில் எப்போதும் ஏழு கடல்களின் சக்திகள் துலங்கும். எனவே, காவிரி தீர்த்தத்தில் ஏழு கடல் தீர்த்த சக்திகளும், திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள அனைத்து தீர்த்த சக்திகளும் நிரவிப் பெருகி உள்ளன. இறை அடியார்கள் இனியாவது காவிரித் தாயின் மேன்மையை உணர்ந்து முடிந்த போதெல்லாம் காவிரியில் நீராடி அற்புத தெய்வீக சக்திகளைப் பெற்று இம்மையிலும் மறுமையிலும் நலம் அடைய வேண்டுகிறோம்.

சனீஸ்வர பகவானின் வாகன மூர்த்தியின் பெருமையே இவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருந்தால் சனீஸ்வர பகவானின் கீர்த்தி எத்துணை சக்தி உடைத்ததாக இருக்கும் என்று சற்றே எண்ணிப் பாருங்கள்.  

ஒரு மனிதன் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும், புத்திசாலியாக இருந்தாலும், அனைத்து செல்வங்களையும் பெற்றிருந்தாலும் இந்த நலன்கள் அனைத்தையும் அனுபவிக்க வேண்டுமானால் அவன் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் அல்லவா? ஒருவர் எல்லா யோகங்களையும் பெற்றிருந்தாலும் அதை அனுபவிக்க ஆயுள் இல்லை என்றால் அனைத்தும் வீண்தானே.  எல்லாச் செல்வத்திற்கும் மூலமான ஆயுள் செல்வத்தை அளிக்கும் மூர்த்தியே சனி பகவான் ஆவார். 

கடுமையான அரிஷ்ட யோகங்களையும் தகர்க்கும் சக்தி உடையதே சனீஸ்வர வழிபாடு. 

அகத்தியர் அருள்வாக்கு - பூக்கள்!

அகத்தியர் அருள்வாக்கு - பூக்கள்!

ஒருமுறை, நாடி வாசிக்க யாரும் இல்லாத பொழுது, "பூக்களில் எத்தனையோ விதங்கள் உள்ளது. அவைகளை பற்றிய விஷயங்களை சொல்லித்தர முடியுமா" என்று அகத்தியப் பெருமானிடம் வினவியபொழுது, அவர் மனம் மகிழ்ந்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவைகளை உங்கள் கவனத்திற்காக, கீழே தருகிறேன்.

மனிதர்களை படைத்த இறைவன், அவர்களுக்கு சந்தோஷத்தையும் கொடுத்தான். அதோடு மனிதர்களாலேயே துன்பங்களையும் தந்தான். பின்னர் மனிதர்களை வென்று நிம்மதியாக வாழ்வதற்கு பலமுறைகளையும், வழிகளையும் காட்டினான்.

இந்த வழிகாட்டுதலில் ஒன்றுதான் பக்தி. இதை பல பிரிவுகளாகப் பிரிக்கலாம்.  ஞான பக்தி, ஆசாரிய பக்தி, ஆண்டவனுக்கு அருட்பணி செய்கின்ற பக்தி, கடைசியாக, பிடித்தமான மலர்களால் ஆண்டவனை நினைத்து அர்ச்சனை செய்யும் பக்தி.  இந்த நான்கு வகை பக்திகளும் அவர் அவர்களது சூழ்நிலைக்கு ஏற்ப, நம்பிக்கைக்கு ஏற்ப செய்யப்படுவது.

ஞானபக்தி என்பது மிகப்பெரிய தவத்தினால் பெறப்படுவது.  இது எல்லோராலும் செய்யக்கூடியது அல்ல. அத்தனை வாய்ப்பு ஒரு சிலருக்கே ஏற்படும்.  ஆசாரியபக்தி என்பது ஆண்டவனை வழிபாடு செய்து பெறுவது. இதும் எல்லாவித மனிதர்களால் செய்யக் கூடியது அல்ல.

ஆண்டவனுக்கு நேரடியாக அருட்பணி செய்கிற பக்தி, இது கோவில் கட்டுவது, அன்னதானம் செய்வது, தம் தம் மத வழக்கத்துக்கு ஏற்ப, மனித நேயத்தை போற்றும் வகையில், நான்கு பேர்களுக்கு உதவிடும் வகையில் செய்யக் கூடிய, பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யக் கூடிய பக்தி.

இவை எல்லாம் தாண்டி நிற்கும் பக்திதான் மலர்களைக் கொண்டு நம்மைப் படைத்த ஆண்டவனுக்கு, அர்ச்சனை செய்து மனதார பிரார்த்தனை செய்வது.  இது ஒன்றுதான் சகலவிதமான மனிதர்களுக்கும் ஏற்ற பக்தி.  நிம்மதியை தரக் கூடிய பக்தி மாத்திரமல்ல, எந்த வித இடையூறும் இல்லாமல் நம் இஷ்டத்திற்கு எப்பொழுது வேண்டுமானாலும் இறைவனை அழைத்து பக்தியினால் காரியங்களை சாதித்துக் கொள்ளக் கூடியது.

இதற்கு மலர்கள் அவசியம். சரி எந்தெந்த மலர்கள் எந்தெந்த கிரகங்களுக்கு, இறைவனுக்கு ஏற்றது என்பதை நமது முன்னோர்கள் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். ஏனோ தானோ என்று சொல்லவில்லை.  ஒவ்வொன்றுக்கும் அடிப்படையான சூட்சுமத்தை வைத்து சொல்லி, இதை பின்னர் அனுபவ ரீதியாகவும் ஏற்றுக் கொண்ட பின்னர், மற்றவர்களும் பலன் பெற வேண்டும் என்ற நன்நோக்கத்தில் ஞானிகள் மூலம், ரிஷிகள் மூலம், வேதத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்கள்.

சூரியன்:- உங்கள் ஜாதகத்தில் ராசிக்கோ, லக்னத்திற்கோ 8, 12ம் வீட்டில் இருந்தால், "செந்தாமரைப்" பூவால் சூரியனை, ஞாயிறு தோறும் வழிபாட்டு வந்தால் உத்தியோகம், கண் சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளும் விறுவிறு என்று விலகிவிடும். வேறு எந்த மலரைக் கொண்டும் சூரியனை வழிபடக்கூடாது. அப்படி ஒரு வேளை செந்தாமரைப் பூ கிடைக்கவில்லை என்றால் தாமரை தண்டு இதழால் திரியிட்டு விளக்கேற்றி வருவது கூட நல்ல பலனைக் கொடுக்கும்.

சந்திரன்:- ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் கெட்ட கிரகங்களோடு சேர்ந்த சமயம் அவருக்கு சந்திர தசை அல்லது சந்திர புக்தி அல்லது சந்திர அந்தரம் நடந்து கொண்டிருந்தால் அந்த நபர் சந்திரனுக்கு உரிய வெண்மை நிறத்துடைய "அல்லி மலரை" வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். இதனால் நீர் சம்பத்தப் பட்ட வியாதிகள் வெளிநாடு செல்ல முடியாமல் ஏற்படும் தடங்கல்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளிலிருந்து வெளியே வந்து விடலாம். "வெள்ளல்லி" மலர் கிடைக்காவிட்டால் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது நன்று.

செவ்வாய்:- ஒருவரது ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12இல் செவ்வாய் இருந்து செவ்வாய் தசையோ அல்லது புக்தி, அந்தரமோ நடை பெற்று - வியாதியினால், போட்டி, பொறாமையினால் முன்னேற முடியாமல் துன்பப்பட்டுக் கிடந்தால், அதிலிருந்து தப்பிக்கக்கூடிய ஒரே வழி "சண்பக" மலரால் - செவ்வாய் கிரகத்திற்கோ அல்லது முருகப் பெருமானையோ வழிபட்டால் அத்தனைப் பிரச்சினைகளிலிருந்தும் சட்டென்று விலகி வெளியே வந்து விடலாம்.

புதன்:- ஒருவரது ஜாதகத்தில் புதன் கெட்ட கிரகங்களோடு சேர்ந்து எந்த ராசியில் இருந்தாலும் தேவை அற்ற பாதிப்புகள் எற்ப்படத்தான் செய்யும். கோர்ட் விவகாரம், தோல் சம்பந்தமான வியாதிகள், மாமன் உறவுமுறை பகை, தொழில் நஷ்டம் ஆகியவை வரலாம். இதிலிருந்து விடுதலை பெற "வெண் காந்தள்" மலரை வைத்து புதன் கிழமை தோறும் பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமானது. சிறந்த பரிகாரமும் கூட.

குரு:- ஒருவரது ஜாதகத்தில் 3, 6, 8, 10, 12இல் குரு பகவான் இருந்து அதே சமயம் அவருக்கு குரு மகாதசை, புத்தி, அந்தரம் நடந்து கொண்டிருந்தால், குரு அனுகூலமாக மற்ற பிரார்த்தனைகள், பரிகாரங்கள் செய்வதை விட, குரு பகவானுக்கு பிரியமான "முல்லை" பூவால், வியாழன் தோரும் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வந்தால், பயம் இல்லாமல் வாழ்க்கையைக் கொண்டு செல்லலாம். தடைக் கற்களைப் படிக்கற்களாக மாற்றலாம்.

சுக்கிரன்:- ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன், 12ம் வீட்டில் மறைந்திருந்தாலும், பகை வீடான குரு வீட்டில் தனித்திருந்தாலும், சுக்கிர தோஷம் என்று பெயர்.  இந்த சுக்கிர தோஷம் போக வேண்டுமானால் "வெண் தாமரை" புஷ்பத்தினால், சுக்கிரனுக்கு வெள்ளி தோறும் மாலை சூட்டி, அர்ச்சனை செய்து வந்தால், சுக்கிரன் இரண்டு மடங்கு அனுகூலமாக மாறி சகல விதமான சௌபாக்கியங்களையும், கல்யாண சந்தோஷங்களையும் தருவார்.

சனி:- ஒருவரது ஜாதகத்தில் 2,4,7,8,12இல் சனி பகவான் இருந்தால் பல்வேறு பிரச்சினைகளால் கடுமையாகப் பாதிக்கப் படலாம். இதிலிருந்து ஒதுங்கி வாழ வேண்டுமானால் "கருங்குவளை" மலரால் சனீஸ்வரனுக்கு, அல்லது சனி கிரகத்திற்கு சனிக்கிழமை தோறும் அர்ச்சனை செய்துவரின் சனி பகவானின் அனுக்ரகத்திற்கு பாத்திரமாகலாம்.

ராகு:-  ஒருவரது ஜாதகத்தில் "ராகு" 2,4,5,7,8,12இல் இருந்தால், அவருக்கு ராகுவால் ஏதாவது தொந்தரவு இருந்து கொண்டே இருக்கும்.  இதனைத் தடுக்க "மந்தாரை" புஷ்பத்தால் முடிந்த பொழுதெல்லாம் அர்ச்சனை செய்து வந்தால், ராகுவினால் எந்தவித தொந்தரவும் கடைசிவரை இருக்காது.

கேது:- ஒருவரது ஜாதகத்தில் கேது பகவான் 2,4,5,7,8,12இல் தனித்து இருந்தாலும், மற்ற கிரகங்களோடு சேர்ந்து இருந்தாலும், கேது தோஷம் உண்டு.  இந்த தோஷத்தை நீக்க மிக சுலபமான வழி "செவ்வல்லி" மலரால் கேது கிரகத்திற்கு முடிந்த பொழுதெல்லாம் அர்ச்சனை செய்து வந்தால் போதும். கேது பகவானது பரிபூரண அனுக்ரகம் கிடைத்து விடும்.

இவை எல்லாம் எளிய, ஆனால் பலன் தரும் பரிகாரங்களாகும். மனிதர்கள், இதை நம்பி செய்து வந்து பலனடைய எமது ஆசிகள்.

அகத்தியர் அடியவர்களே, அகத்தியப் பெருமான் ஆசியுடன் இந்த எளிய பரிகாரங்கள் நம் தெளிவுக்கு வந்துள்ளது. இவற்றை செய்து, எல்லோரும் வாழ்க்கையை சுத்தமாக்கி கொள்ளுங்கள். அருள் பெறுங்கள்.

தேவ அர்க்கவல்லி

ஸ்தல வரலாறு

ஒரு மகாசிவராத்திரி நாளில் நாரதர் தேவலோகத்தில் உள்ள ரிஷிகளிடம் பூலோகத்தில் ஒரே ஒருமுறை பூக்கும் “தேவ அர்க்கவல்லி

” என்ற மலரினால் சிவபெருமானை பூஜித்தால் உலகில் உள்ள எல்லா மலர்களையும் கொண்டு பூஜித்த பலன் கிடைக்கும் என்று சொன்னார். எல்லா முனிவர்களும் சிவ பூஜையில் சிறந்தவரான பிருகு மகரிஷியை தேர்வு செய்து அம்மலரைக் காணவேண்டி கேட்டுக்கொண்டனர்.
அவ்வாறே பிருகு மகரிஷியும் அம்மலரைக்காண பூவுலகில் பல இடங்களில் தவம் செய்து சிங்கம்புணரியை அடுத்த திருக்களம்பூரில் தவம் செய்த போது அங்கு ஒரு வாழை மட்டையானது பிரான்மலை, குளக்குடி, நெடுங்குடி வழியாக அந்த மகா முனிவருக்கு வழிகாட்டி இறுதியாக திருத்தியமலை வந்தவுடன் அந்த வாழை மட்டையானது மறைந்தது.
அச்சமயத்தில் திருத்தியமலையில் மாமுனிவர் அகத்தியரும் அவரது துணைவியார் லோபமாதாவும் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து கொண்டிருந்திருந்தனர். பிருகு மகரிஷி , அகத்திய முனிவரிடம் “தேவ அர்க்கவல்லி” மலரின் இரகசியத்தைக் கேட்டு அறிந்தார். மீண்டும் பிருகு மகரிஷி சிவலோகத்திற்கு சென்று தாம் அம்மலரைக் காணவேண்டி தவமிருக்க ஆரம்பித்தார்.
சிறிது காலத்திற்கு பிறகு, பிருகு முனிவர் மீண்டும் திருத்தியமலை வந்தடைந்தார். அச்சமயத்தில் அங்கு இருந்த அகத்திய முனிவரிடம் மேலும் சில இரகசியங்களை கேட்டறிந்தார்.
அச்சமயத்தில் மலையின் மீது மிகப்பெரிய மரமும், அதில் ஆயிரக்கணக்கான பறவைகளும் காணப்பட்டன. அகத்தியர் தான் கிரிவலம் செய்த போது இதுபோன்ற மரமும், பறவைகளும் இல்லையென்றும் எனவே ஒரு மகா அதிசயம் நடக்க இருப்பதாக, லோபமாதாவிடமும், பிருகு முனிவரிடமும் கூறினார்.
அவ்வாறே, மகா சிவராத்திரியான அந்த நாளில் அந்த மரத்தில் இருந்த பறவைகள் எல்லாம் “ஓம் நமச்சிவாய” என்று கூறியவாறு பறந்து சென்றதை அவர்கள் கண்டனர்.
அகத்திய முனிவர் பறவைகளின் பாஷையை அறிந்தவர் ஆதலால் “தேவ அர்க்கவல்லி” பூவை அப்பறவைகள் கண்டு கொண்டதால் அவை சிவலோகம் செல்வதாகவும் கூறினார். பறவைகள் மட்டும் அம்மலரைக் கண்டு கொண்டதால் பிருகு முனிவர் சிறிது வருத்தப்பட்டார்.
அகத்திய முனிவர் முதன் முறையாக பிருகு முனிவரையும், லோப மாதாவையும் திருத்தியமலை குன்றின் மீது அழைத்து சென்றார். அங்கு உள்ள சுனைநீரில் தேவ அர்க்க வல்லி பூவின் பிம்பத்தை அவர்கள் மூவரும் கண்டனர். பூவின் பிம்பத்தை மட்டும் கண்ட அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுற்ற போது சிவபெருமான் அந்த தேவ அர்க்க வல்லி பூவை சூடிக்கொண்டு சுயம்புவாக அகத்தியருக்கும், லோபமாதாவுக்கும், பிருகு முனிவருக்கும் காட்சியளித்தார்.
இத்திருக்கோயிலானது 5000 ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்தது. ஆதித்திய சோழர். விக்ரம சோழர் மற்றும் இரண்டாம் இராஜேந்திர சோழர்கள் காலத்தில் பராமரிக்கப்பட்டு , இறுதியாக கி.பி.1883 ஆம் கால கட்டத்தில் சென்னையை ஆண்டு வந்த சென்னப்ப நாயக்கர் மற்றும் நக்கன நாயக்கரால் புதுப்பிக்கப்பட்டது.
இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள், சோழர்கள் காலத்தின் அளவை முறைகள் மற்றும் கோவிலின் சிறப்பு முதலியவற்றை பற்றி எடுத்துரைக்கின்றன.



இத்திருக்கோயிலின் சிறப்பு அம்சங்கள்;

  • சிவநேயச் செல்வர்களே எம்பெருமான் திருவருள் கொண்ட இடம் திருத்தியமலை.
  • தேவ அர்க்க வல்லி புஷ்பத்தை சூடிக் கொண்ட ஸ்தலம்.
  • பிருங்கி, அகத்தியர் மற்றும் எண்ணிலடங்கா மகாமுனிவர்கள் வழிபட்ட ஸ்தலம்.
  • சூரியன் தனித்து வழிபட்ட ஸ்தலம்.
  • எம்பெருமான் திருசெம்பொன்மேனி.
  • கிரி சுயம்பு மூர்த்தி.
  • முருகப்பெருமான் சூரனை வதம் செய்து விட்டு தேவசேனாவை மணந்த ஸ்தலம்.
  • அம்பிகை தாயினும் நல்லாள்.
  • 22 படிகள் தாண்டி திருமலை மேல் அமர்ந்த ஸ்தலம்.
  • ஸ்தலவிருட்சம் வில்வ மரம்.
  • தனித்த சுனைநீர் தீர்த்தம்.
  • தட்சிணாமூர்த்தி பாத தரிசன ஸ்தலம்.
  • பிரிந்த தம்பதிகளை மனம் ஒத்து இணைத்து வைக்கும் ஸ்தலம்.
  • நக்ஷத்திர தோஷம் நிவர்த்தி ஸ்தலம்.
இத்திருக்கோயில் திருச்சியில் இருந்து 35கி.மீ. தூரத்தில் உள்ளது. திருச்சியில் இருந்து மணச்சநல்லூர், திருப்பஞ்சலி, மூவானூர் வழியாகவும், முசிறியில் இருந்து தண்டலைப்புத்தூர் வழியாகவும் சென்றடையலாம். சமயபுரத்திலிருந்து மணச்சநல்லூர், திருப்பஞ்சலி வழியாகவும் சென்றடையலாம்.

தாமதித்த மங்கள நாணும் சடுதியில் கூடும் மெய்யே

தாமதித்த மங்கள நாணும் சடுதியில் கூடும் மெய்யே


‘‘நான்முகன் இந்திரன் மாலோடு
சித்தருந் தேவருந் தொழவே மத்தர்
தாம் அறியார் மணஞ்சேரி வாழ்
அத்தனை அடைந்தார் அல்லல் கருகுமே!’’

-என்கிறார் அகத்தியர். திருமணத் தடை என்றால் ‘திருமணஞ்சேரி’ செல் என்பது மட்டுமே உண்மை அல்ல. பற்பல நற்கருமங்களும் திருமணஞ்சேரி உறையும் அத்தனாம் அச்சிவனை தொழுபவருக்கு கிடைக்கும். எப்படிப்பட்ட துன்பங்களாயினும் அவை கரும வினையினால் வந்ததாயினும் அல்லது முன்னோர்கள் தம்மால் பட்ட தோஷங்களினால் உண்டானவையானாலும் அல்லது குலதேவ சாபங்கள் நமது வாரிசுகளின் பிரச்னைகளால் உருவான அல்லல்கள் ஆனாலும்... எவ்வகையின ஆனாலும்... அவை போக்கும் ஈசன், இத்திருமணஞ்சேரி நாதனாம், உத்வாக நாதனாம், பக்தவத்சல வள்ளல் பெருமான். அன்னைக்கு கோகிலாம்பாள் என்று திருநாமம். கண்டராதித்ய சோழ சக்ரவர்த்தியின் பட்ட மகிஷி செம்பியன் மகாதேவிக்கு அன்னை கோகிலநாயகி தனது திருமணக் கோலக் காட்சியை அருளினார்.

பார்வதி தேவிக்கு ஒரு ஆசை. பூலோகத்தில் பக்தர்கள் செய்யும் வைதீக முறைப்படி நடக்கும் திருமணச் சடங்கைப் போல, தானும் சிவபெருமானை மணம்புரிய ஆவல் கொண்டார். இதனை கருணை உள்ளம் மிக கொண்ட சிவனிடம் வேண்ட, இல்லை என சொல்லத் தெரியாத சிவனும் அருள்பாலித்தார். உடனே அன்னை ஒரு பசு உருகொண்டு பூலோகத்தில் உலாவர, மகாவிஷ்ணுவும் பசுக்களை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு பசு உருகொண்டிருந்த பார்வதி பிராட்டியாரை பராமரித்தார். பரதமுனிவரின் ஆசிரமம் ஒன்று திருவாடுதுறை அருகில் உள்ள திருவேள்விக்குடியில் இருந்தது. தக்க காலம் வந்ததும் பசு உரு மாறி பெண் உருக் கொண்டார் அம்பிகை. பரத முனிவர் ஒரு வேள்வியை செய்ய, அவ்வேள்வி அக்னியில் சிவபெருமான் தோன்றி அன்னை பார்வதியை, கோகிலவாணியை மணந்தார். இன்றும் அம்பிகை மணப்பெண் கோலத்தில் கோகிலாம்பாள் என்ற நாமத்துடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உற்சவ மூர்த்திக்கு கல்யாண சுந்தரமூர்த்தி என்றே பெயர். இவருடைய திருவடியை மணமகளுக்கே உரிய நாணத்துடன் அன்னை கோகிலாம்பாள் நோக்கியபடி மணக்கோலத்தில் தத்ரூபமாக காட்சி தருகின்றார்.

‘‘தடைபட்ட தம்பதியர் தம்
வாழ்வு வோங்கிடும் மெய்யே
தாமதித்த மங்கள நாணும்
சடுதியில் கூடும் மெய்யே,
கோகில நாயகிக்கார மணிவித்து
காத்து நிற்க ஊறேது மணந்தனக்கு’’
- என்றார் அகத்தியர்.

இத்திருமணத்திற்கு ராகு பகவான் எழுந்தருளி தன் தோஷம் களையப் பெற்றான். அதனால் இங்குள்ள ராகு பகவானை ‘மங்கள ராகு’ என பரத்வாஜ மகரிஷி போற்றுகின்றார். இந்த ராகு பகவான், தனது உடல் முழுக்க பக்தி பரவசத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால், இவருக்கு பால் அபிஷேகம் செய்து, பாலில் செய்த பாயசத்தை நிவேதனம் செய்து அருந்தினால், மலட்டுத்தன்மை உடைய மங்கைக்கும் சத் சந்தானம் கிட்டும். இது சத்யம் என்கிறது நாடி.

‘‘பரவசமான பாம்பும் உருக்காட்டி நிற்க, உவந்த ஆ அமுது கொண்டபிசேகித்து அமுதும் அஃதாலாற்றி உண்ட தம்பதியர் தமக்கு வம்ச விருத்தியுண்டு சத்யஞ் சொன்னோம்’’
குயிலின் மென் மொழியாளாம் கோகிலாம்பிகையை தொழும் முன், இங்கு உறை சப்த சாகர தீர்த்தத்தில் நீராடுதல் அவசியம், ஏழு கடல்களில் நீராடினால் என்ன புண்ணியமோ அந்த புண்ணியம் இந்த புஷ்கரணியில் நீராடினால் கிட்டும். அது மட்டுமல்ல, ஏழுவிதமான சாபங்களும் நீங்கப் பெறுமாம். பட்சி சாபம், மாதா சாபம், பிதா சாபம், மூதாதையர் இட்ட சாபம், குல சாபம், உற்றவுறவினர் சாபம், தேவர்கள் சாபம் போன்றனவற்றிலிருந்தும் விடுபட ஏதுவாகும்.

‘‘பிறவி அறுபடும் - நின்ற சப்த
சாபமும் கருகும். கடல் ஏழு
மூழ்கிய புண்ணியங் கூடும். வினை
அகல சப்த சாகர தீர்த்தமாடுவீர்
மதிமறையத் தானே’’

மதிமறைய என்றால் அமாவாசை என்று பொருள். அதாவது அமாவாசை அன்று இவ்வாறு தீர்த்தமாடுவது பெரும் புண்ணியம் என்கிறார், அகத்தியர் மலர் மாலையை கல்யாண சுந்தரேசுவரருக்கும் கோகிலாம்பாளுக்கும் சாத்துவது வழக்கம். ஆனால் அது ஆத்தி மாலை, கொன்றை மாலை, வில்வ மாலை, மல்லிகை மாலை என அணிவிக்கையில் பலன்கள் மாறுபட்டு திருமண வாழ்வு சிறப்பு பெறுகின்றது என்கிறது அகஸ்தியர் நாடி. அம்மாலையை பாதுகாத்து வைக்கையில் தீட்டுப்படாது காப்பதும் சைவ உணவுகளையே உட்கொள்வதும் அவசியம் என்கிறார் தமது நூலில் அகத்தியர்.
‘‘தேவரிட்ட நாமமிது மணஞ்சேரி

மணமது கூடவே மல்லிகை
மாலை தொடுத்து வள்ளலுக்குச் சூட்டு
வார் வாட்டம் விரைந்தோடும்
வளமான ரதமொரு மச்சுமனை
கட்டி வாட்டமின்றி வாழ்வர் வுண்மையிது.
ஆத்திமாலை கட்டி ஆராதிப்போருக்கு
அண்டாதொரு பீடை தானே-
கடனுபாதை கருகிப் போம்
காசினியில் கண்டார் தொழ வாழ்வு சேரும்.
கொன்றை மாலை கொண்டார்
பின்னை பிறவியிலும் மணந்து
வாழ்வர் மெய்யே
வில்வத்தால் மாலைகட்டி கோகிலநாயகி
தன்னை தொழுவார் எதிலுஞ்செயம்
பெறுவர் திண்ணமே. நீடு நல்லற
வில்லறம் நடத்தி இறையடி அண்டுவர்
திண்ணமே.’’

எனவே அவரவர் விருப்பப்படி மாலை அணிவித்து ஆராதித்து, பின் அம்மாலையை வாங்கிச் சென்று தீட்டுப்படாத தனி இடத்தில் வைத்து பூஜித்து வந்தால், திருமணம் நடப்பதும் திண்ணம், சிறப்பான செழிப்பான வாழ்வும் சேரும் என்பதும் திண்ணம்.

திருமணஞ்சேரி என்பது மனிதர் சூட்டிய பெயர் அல்ல, தேவர்கள், அன்னை பராசக்திக்கும் முக்கண்ணனாராம் சிவபெருமானுக்கும் திருமண வைதீக முறைப்படி பூலோகத்தில் நடைபெற்ற இடம் இது என்பதால் ‘திருமணஞ்சேரி’ என்று சூட்டினர்.

இன்றும் ரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை போன்றோர் அனுதினமும் உஷா காலத்தில் இந்த கல்யாண கோல தம்பதி தெய்வங்களை தொழுது இளமை நிலைக்கவும், கலைகள் விருத்தியாகவும் வேண்டிச் செல்கின்றனர். நாமும் நமது அழகு இளமை இனிதே நிலைக்கவும், நாட்டியம், இசை, நடிப்பு போன்ற கலைகள் விருத்தி ஆகவும் கல்வி தழைக்கவும் நல்ல வாழ்க்கைத் துணை அமையவும் திருமணஞ்சேரி இறையை தொழுவோம்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை தாலுகாவில், குத்தாலத்துக்கு அருகில் உள்ளது திருமணஞ்சேரி. குத்தாலம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து பக்கம். கும்பகோணத்திலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும் வெகு அருகாமையில் உள்ளது

Wednesday, 20 December 2017

கோலம் போடும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்

கோலம் போடும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் ! 

சில விதிகள் ஏற்ப கோலமிட்டால் வாழ்க்கையில் வளம் சேரும். 

சூரியன் உதிப்பதற்கு முன்பு பசுஞ்சாணம் தெளித்து கோலம்போட வேண்டும்.  வீட்டு வாசலில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் எனவே புது தண்ணீரே தெளிக்க வேண்டும். 

தெற்கு பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ கோலம் போடக்கூடாது.

கோலம் போட்டதும் காவி இடுவது மும்மூர்த்திகளை குறிக்கும். 

கோலத்தின் நடுவில் செம்பருத்தி, பூசணி பூ வைத்தால் செல்வம் சேரும். 

#ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை கோலம், சூரிய கோலம் போடுதல் நல்லது.

#திங்கட்கிழமை அல்லி மலர்க்கோலம் 

#செவ்வாய்க்கிழமை வில்வ இலை கோலம், 

#புதன் மாவிலைக்கோலம் 

#வியாழக்கிழமை துளசி மாட கோலம், 

#வெள்ளிக்கிழமை எட்டு இதழ் தாமரை கோலம் 

#சனிக்கிழமை பவளமல்லி கோலம் 

#பவுர்ணமி தினத்தன்று தாமரைப்பூ கோலம் 

 வீட்டுச்சுவரையொட்டி போடும் பார்டர் கோலம் தீய சக்திகளை உள்ளே விடாது.

#அமாவாசை மற்றும் இறந்தவர்களுக்கு திதி தரும் நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது. 

அந்த ஆத்மாக்களை வீட்டினுள் அனுமதிக்காமல் கோலங்கள் தடுக்கும்.  அதனால் நம் முன்னோர்கள் நம்மை தேடி வருகிற திதி தரும் நாளில் வாசலில் கோலங்கள் போடாமல் இருந்து, அவர்களை வீட்டினுள் அனுமதித்து ஆசி பெறுவது நல்லது. 

இடது கையால் கோலம் போடக்கூடாது.

பெண்கள் குனிந்து நின்றே கோலம் போட வேண்டும்.

உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும். 

கணவர் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிடவேண்டும்.

கோலம் போட்ட பிறகே அடுப்பு பற்ற வைக்க வேண்டும். 

ஆள்காட்டி விரலை நீக்கியே கோலம் போட வேண்டும். 

கிழமைக்கு ஏற்ப வாசலில் கோலமிட்டால் கெட்ட ஆவிகள் நம் வீட்டை நெருங்காது. 

வாழ்க வளமுடன்.

Monday, 18 December 2017

கல்பம்

திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவை
1. கல்பம்
2. அணுகல்பம்
3. உபகல்பம

கல்பம்:
கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும். பஞ்ச பிரம்ம மந்திரங்களை தக்க குரு மூலம் அறிந்து கொள்ளவும். வைத்தீஸ்வரன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரத்தின் அன்று இந்த கல்ப விபூதி விற்பனைக்குக் கிடைக்கிறது என்ற தகவலை இந்த கட்டுரை எழுதும் போது ஒரு நண்பர் இந்த தகவலைச் சொன்னார்.
அணுகல்பம்
காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.
உபகல்பம்
மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.
அகல்பம்
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.
இதில் கல்பம் என்று சொல்லப்படும் வகையான விபூதியே மிகச்சிறப்பான அருள் சாதனமாக கருதப்படுகிறது. சாதாரணமாக கடையில் விற்கப்படும் விபூதி அகல்பமாகக்கூட இருக்கலாம். வியாபர நோக்கில் எருமை போன்ற விலங்குகளின் சாணமும் விபூதி தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த விபூதியை மந்தரித்து கொடுத்தால் எந்த நற்பலனையும் உபாசகர்கள் எதிர்பார்க்க முடியாது. எனவே நீங்களே கல்ப விபூதியை தயார் செய்வதே சிறப்பு என்பது எனது கருத்தாகும். பொதுவாக விபூதியில் வேறு எந்தப் பொருளும் கலக்காமல் இருப்பதே நல்லது. நல்ல ஒரு மஹானால் தொடப்பட்ட விபூதி எந்த ஒரு நறுமணமும் கலக்காமலே மிகச் சிறப்பான வாசனையைத் தருவதை நாங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம்.சில சித்தர்கள் அரிய வகையான மூலிகைகளை விபூதியில் கலந்தும் பயன்படுத்தி பல காரியங்களைச் சாதித்துள்ளார்கள். அவற்றையும் குரு மூலம் தெரிந்து கொள்வதே சிறப்பான முறையாகும்.
விபூதியை ஐஸ்வர்யம் என்று சொல்வர். செல்வத்தை அளிப்பது விபூதி! நம்மை எல்லாம் காத்து ரட்சிப்பதால், “ரட்சை’ என்ற பெயரும் விபூதிக்கு உண்டு. விபூதியில் உயர்வானது, “அக்னி ஹோத்ரம்’ செய்து கிடைக்கும் விபூதி. இது அக்னிஹோத்ரிகளிடம் கிடைக்கும். அதற்கடுத்து, பசுஞ் சாணத்தால் வரட்டி தட்டி, பசு மாட்டின் கோமியத்தால், “விரஜா’ ஹோமம் செய்து, வீட்டிலேயே மந்திரத்துடன் தயாரிக்கப்படும் விபூதி உயர்ந்தது.

நவ நிதிகள்

நவ நிதிகள் .
நவ நிதிகள் .....................
நவ நிதிகளுக்கும் அதிபதி குபேரன். நவ நிதிகளுக்கும் அதிபதி குபேரன். நவ நிதிகள் யாவை?
1) பத்மம் 2) மஹாபத்மம் 3) மகரம் 4) கச்சபம் 5) குமுதம் 6) நந்தம் 7) சங்கம் 8) நீலம் 9) பத்மினி குபேரன் இவற்றுள் மிக முக்கியமான நிதிகள் சங்க நிதி மற்றும் பத்ம நிதி.
அள்ள அள்ள வற்றாமல் கூடிக் கொண்டே இருக்கும் அபூர்வ ஆற்றல வாய்ந்த இந்த நிதிகளைப் பற்றி அப்பர் முதல் அருளாளர்கள் பலரும் தங்களது பாக்களில் பாடியுள்ளனர்.

குபேரன் சிவ பெருமானது உற்ற தோழன். அவனுக்கு 'சிவ சகா' என்ற பெயரே உண்டு. சிவ புராணத்தில் ருத்ர சம்ஹிதையின் பத்தொன்பதாவது அத்தியாயம் ஒரு அழகிய சம்பவத்தை வர்ணிக்கிறது.

இந்த அத்தியாயத்தின் தலைப்பு சிவ-குபேரனின் நட்பு என்பதாகும்.

அளகாபுரியின் அதிபதியான குபேரன் கடுந்தவத்தை மேற்கொண்டான். அவன் தவத்தைக் கண்டு மெச்சிய சிவபிரான் உமையுடன் தோன்றினான். ஆயிரக்கணக்கான உதயசூரியன்களின் பிரகாசத்தைத்தோற்கடிக்கும் பேரொளியைக் கண்ட குபேரன் அந்த ஒளியால் கண்கள் கூசவே கண்களை மூடிக் கொண்டான்.

"உன் திருவடிகளைக் காணும் பார்வையைக் கொடு' என்று வேண்டினான். சிவபிரான் தன் உள்ளங்கையால் அவனைத் தொட குபேரன் பார்வை பெற்றான்.

முதலில் அவன் பார்வை உமையின் மேல் பட்டது. சிவனின் பத்தினியான உமையின் ஒளியையும் அழகையும் கண்டு வியந்த குபேரன் "சிவனுக்கு அருகில் இருக்கும் இந்தப் பெண்மணி யார்? என்னை விட எப்படிப்பட்ட பெருந்தவத்தை (சிவனின் அருகில் இருக்கும்படி) மேற்கொண்டாள் இவள்? என்ன உருவம்! என்ன அன்பு! என்ன அதிர்ஷ்டம்! என்ன பெரும் புகழ்!' என்று திரும்பத் திரும்ப குபேரன் கூறினான்.

அவனின் பார்வை அம்பிகையை விட்டு அகலாதிருக்கவே தேவியின் பேரொளியால் அவனது இடது கண் வெடித்துத் தெறித்தது. "இவனது பார்வை என்ன பார்வை; பொறாமையுடன் கூடியதா" என்று தேவி சிவபெருமானை வினவ சிவபிரான் சிரித்தார்.

"இல்லை தேவி! இவன் உனது மகனே! உன் தவத்தின் ஒளியைக் கண்டு அவன் வியந்து என்ன அழகு! என்னஒளி! என்ன உருவம் என்று புகழ்கிறான்." என்று கூறிய சிவபிரான் குபேரனை நிதிகளுக்கு நாயகனாக்குகிறான்;

அத்தோடு குஹ்யர்களுக்கும் அதிபதி ஆக்குகிறான். குஹ்யர்கள் என்றால் மறைந்திருப்பவர்கள் என்று பொருள்.

யட்சர்களைப் போல இவர்களும் குபேரனுக்கு சேவகம் செய்யலாயினர்.

ஒரே கண்ணை உடையவனாதலால் "ஏக பிங்களன்" என்ற பெயரும் குபேரனுக்கு உண்டு.

 வைஸ்ரவணன என்பதும் குபேரனின் பெயரே.அஷ்டதிக் பாலர்களில் குபேரனும் ஒருவன். வடதிசைக்கு அதிபதி. தீபாவளியன்று இரவில் குபேரனை விசேஷமாக தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து பாரதம் முழுவதும், குறிப்பாக வட இந்தியாவில், வழிபடுகின்றனர்.

நிதிகளுக்கு அதிபதியான குபேரனின் சிலையை சென்னையில் உள்ள திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் காணலாம்.

பாரத ரிஸர்வ் வங்கியின் வாசலிலுல் குபேரனுக்கு ஒரு இடம் உண்டு. (இந்தக் கட்டுரையைப் பார்த்த "செகுலர் பர்ஸன்" யாரேனும் குபேரனுக்க ரிஸர்வ் வங்கி வாசலில் இடம் என்றால் தேசத்தின் செகுலரிஸம் என்னாவது என்று முழங்கி அதை அகற்ற வேண்டும் என்று கூறாமல் இருக்க வேண்டும்.

முஸ்லீம்கள் அதிகம் உள்ள இந்தோனேஷியாவின் ஏர்லைன்ஸ் பெயர் கருடா ஏர்வேஸ் என்று இருக்கலாம்;

ஆனால் இந்தியாவில் இப்படிப்பட்ட பெயர்கள் இருந்தால் நம் மதச்சார்பின்மை என்னாவது?!)

குபேரனுக்கு ஒரு கோலம் உண்டு. எந்தப் பக்கம் கூட்டினாலும் 72 வரும் இந்த மாயச்சதுரம் குபேரனுக்குரியதாக நெடுங்காலமாக வழிபட்டு வரப்படுகிறது.

குபேரனுடைய தியான ஸ்லோகம் பின் வருமாறு:-

மநுஷ்யவாஹ்ய விமாந வரஸ்திதம் கருடரத்ந நிபம் நிதி நாயகம் சிவஸகம் முகுடாதி விபூஷிதம் வரகதம் தநதம் பஜே துந்திலம்

இதனுடைய பொருள் :- மனிதர்களால் தாங்கப்பெறும் உத்தமமான விமானத்தில் வீற்றிருப்பவரும், கருடரத்தினம் (மரகதம்) போன்று ஒளி வீசுபவரும், நவ நிதிகளின் தலைவரும், சிவ பெருமானின் தோழரும், சிறந்த கதை என்னும் ஆயுதத்தை கையில் ஏந்தியவரும் பொன் முடி முதலிய ஆபரணம் பூண்டவரும் தொந்தியோடு விளங்குபவரும், செல்வம் தருபவருமாகிய குபேரப் பெருமானை வணங்குகிறேன்.

குபேர மந்திரம் பின் வருமாறு:-

ஓம் யக்ஷய குபேராய வைஸ்ரவணாய தந தாந்யாதிபதயே தநதாந்ய ஸம்ருத்திம் மே தேஹி தாபய ஸ்வாஹா

வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய நாளில் இந்தக் குபேர சக்கரத்தை அல்லது யந்திரத்தை உரியவர்களைக் கொண்டுவீட்டில் பிரதிஷ்டை செய்வது மரபு. அல்லது தாமிரத் தகட்டில் பொறித்து கடைகளில் விற்கப்படும் இந்த யந்திரத்தை வாங்கி வணிகக் கடைகளிலும், இல்லங்களிலும், பர்ஸிலும் குபேரனை நாடி வழிபடுவோர் வைத்திருப்பர்.

'சிவ சகா' என்பதால் சிவனை வழிபட்டாலும் குபேரனது பார்வை சிவபிரானின் பக்தர்கள் மீது திரும்பும்.

குபேரனது சக்கரத்தை வைத்து பக்தியுடனும் வழிபட்டால் செல்வம் வந்து சேரும் என்று அற நூல்கள் அறுதியிட்டு உறுதி கூறுகின்றன ்

உபாசனை

உபாசனையைப் பலர் பற்றி பலவாறு சொல்லி இருந்தாலும் கடந்த பதினான்கு ஆண்டுகளாக எமது பதினாறு வயதிலிருந்து செய்த உபாசனையால் பெற்ற அனுபவத்தாலும், ஜீவ நாடி மூலம் கிடைக்கும் செய்திகளாலும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். ஒருவரது ஜாதகத்தின் மூலம் உரிய தெய்வத்தைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும் சித்தர்கள் எழுதி வைத்த நாடி மூலமோ அல்லது ஜீவ நாடி மூலமோ உரிய தெய்வத்தைத் தேர்ந்தெடுப்பது உடனடி பலனைத் தருவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது. ஏதெனும் ஒரு தேவதையைத் தொடர்ந்து உபாசிப்பதன் மூலம் உயர்ந்த வாழ்வை உறுதியாய்ப் பெறலாம். அதனால்தான் உயர்ந்த வாழ்வளிக்கும் உபாசனை சித்தி யோகம் என்று சொல்கிறோம். மனதை ஒருமுகப்படுத்தினால் ஏராளமான சக்திகளைப் பெற முடியும். அதற்கு உதவி செய்வது உபாசனை. யார் ஒருவர் குரு மூலம் சரியாக உபாசனை செய்கிறாரோ அவர் அஷ்டமா சித்திகளை அடைவதோடல்லமல் அனைத்துப் பிரச்சினைகளில் இருந்தும் விடுதலை பெறுவார். அப்படி மனதை அடக்குவது என்பது அவ்வளவு எளிமையானதல்ல. எனவெ ஏதாவது ஒரு உபாயத்தைப் பயன்படுத்தி உபாசனையால் ஏற்படும் அதிர்வுகளை எதேனும் ஒரு பொருளில் சேமித்து வைத்து அதை மற்றவர்களும் உப்யோகப் படுத்த வேண்டும் எனத் தீர்மானித்த சித்தர்கள் அருள் சாதனங்களை அனுபவத்தில் உபயோகம் செய்து பார்த்து அதை அனைவரும் கடைபிடிக்கும்படி உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
விபூதி, எலுமிச்சை, ருத்திராட்சம், சங்கு, யந்திரங்கள், வெற்றிலை, தர்ப்பைப்புல், போன்றவை அருள் சாதனங்கள் எனப்படும். நாம் மந்திரங்களைத் தொடர்ந்து ஜபம் செய்யச் செய்ய அதன் அதிர்வுகள் மேற்குறிப்பிட்ட பொருட்களில் பதிந்து அதன் சக்திகளை வெளியிடும் அமைப்பில் இறைவன் அவற்றைப் படைத்துள்ளான். அருளை வாங்கி வெளியிடும் தன்மை உடையதால் அவை அருள் சாதனங்கள் எனப் பெயர் பெறுகின்றன. நவக்கிரகங்களின் கதிர் வீச்சை பிரதிபலிக்கும் நவ ரத்தினங்கள், எண்கள், வண்ணங்கள் மற்றும் மூலிகைகள் போலவே நமது அருள் ஆற்றலை பிரதிபலிப்பது அருள் சாதனங்கள் ஆகும்.
எனவெ அனைத்து அருள் சாதனங்களையும் பயன்படுத்தி ஆத்ம சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தியானம் செய்யும் போது வருகின்ற அருள் நிலையை அப்படியே தேக்கி வைக்கஅருள்சாதனங்கள் உதவும். தியானம் என்பது, மனதை இறைவனிடம் வைத்து, மனதில் இறைவனின் உருவத்தையேபதித்து,மந்திரஜபம் செய்வது. தியானத்தில் ஈடுபடுபவர்கள் தனிமையான இடத்தில் அமர்ந்து, தியானம் செய்வது சிறப்பு. ஜன சந்தடியோ, வேறு ஏதாவது சப்தமோ இருக்கக் கூடாது. ஏதெனும் ஒரு ஆசனத்தின் மீது அமர்ந்து தான் தியானம் செய்ய வேண்டும். பொதுவாக ஆசனமானது நமது ஆற்றல்களை புவி ஈர்ப்ப்பு விசை ஈர்த்துக்கொள்ளாமல் தடை செய்கிறது. எனவெ எந்த ஒரு பூஜை, அல்லது உபாசனை ஆனாலும் வெறும் தரையில் அமர்ந்து செய்யக்கூடாது.
ஜபம்செய்ய நதிக்கரை, மலை, புனித தலங்கள், சுத்தமான காற்று வீசும் இடங்கள் சிறந்தவை. பசுத்தொழுவத்தில் செய்யப்படும் ஜபம் பல மடங்கு பலன் தருகிறது. இதை அனுபவபூர்வமக உணரலாம். ஜபம் செய்ய ருத்ராட்சம், மணிமாலை, தாமரை மாலை, பவழம் போன்ற மாலைகளும், முத்து மாலைகளும் உபயோகப்படுகின்றன. முக்கியமாக, மனம் இறைவனிடம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லமல் வெறும் மாலையை மட்டும் உருட்டிக் கொண்டு, உட்கார்ந்தபடி வேறு ஏதெனும் எண்ணிக் கொண்டிருந்தால், அது தியானமாகாது. இத்தனை விஷயங்களை கவனித்து ஜபம் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் மனம் அங்கும் இங்கும் அலை பாயும். குருவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மனம் தளராமல் ஜபம் செய்யச் செய்ய தாரணை சித்தியாகிறது. இப்படி பண்ணிரண்டு தாரணை சேர்ந்து தியானமாக மாறுகிறது. கீழ்க்கானும் வழிமுறையைக் கடைபிடித்தால் உபாசனயில் ஓரளவு வெற்றி பெறலாம்.
1. உங்கள் உபாசனை தெய்வத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அதை ஜாதகம் மூலமோ அல்லது ஜீவ நாடி மூலமோ கண்டறிந்து கொள்ளவும். குரு மிக மிக அவசியம். குரு முறைப்படி உபாசிப்பதே மிக உயர்வானது. யாரை குருவாக எற்றுக் கொள்வது யாரிடம் தீட்சை பெறுவது என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உண்மையான ஆர்வம் இருப்பின் குரு உங்களைத் தேடி வருவார்.யார் உங்களது ஆத்மாவை கவருகிறாரோ அவரை குருவாக எற்றுக் கொள்ளலாம். ஜீவ சமாதி ஆகியுள்ளவர்களை அதில் நீங்கள் விருப்பப்படுபவரை முதலில் மானசீக குருவாகக் கொண்டு அவரிடமே ஒரு உயிருடன் உள்ள குருவைக் காண்பிக்கச் சொல்லுங்கள். நிச்சயம் நடக்கும்.
2.உபாசனைக்காகஒரு நாளில் இரண்டு நேரங்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். உதாரணமாகக் காலை 5 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 7 மணி வரை . முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் உபாசனையில் அமர வேண்டும். நேரத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது தீவிர சாதனை புரிய பிரம்ம முஹூர்த்தத்தில் உபாசிப்பது விரைவான பலனைத் தரும். நடு நிசி பூஜையைத் தவிர்க்கவும்
3.வீட்டில்ஒரு குறிப்பிட்ட இடத்தை உபாசனைக்காகத் தேர்ந்தெடுங்கள். அது பூஜை அறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.
4. அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்வெறும் தரையில் அமர்ந்து செய்யக்கூடாது.
5. உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும். மூச்சை மெதுவாக இழுத்து விடவும். பிரணாயாமம் செய்வது இன்னும் விரைவான பலன் தரும்.
6. மூச்சு சீரான பிறகு குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தை மௌனமாக மனதிற்குள் சொல்ல ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் அது சிரமமாகத் தோன்றுபவர்கள் சில நாட்களுக்கு மட்டும் வாய் விட்டே மெல்ல சொல்லலாம். ஆனால் சில நாட்கள் கழிந்த பின் மனதிற்குள் மௌனமாக உச்சரிக்க ஆரம்பித்து விட வேண்டும்.
7. உங்கள் உபாசனை தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். உங்கள் கோரிக்கை என்னவோ அதைப் பிரார்த்திக்கவும். இதற்கு சங்கல்பம் என்று பெயர். எவன் ஒருவன் சங்கல்பிக்கிறானோ அவன் சிந்திக்கிறான் பின்னர் செயல்படுகிறான் அதன் மூலம் சாதிக்கிறான் என்பதை நினைவில் கொள்ளவும்.
8. ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் உபாசனை தெய்வத்தைத் தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து உங்கள் உபாசனை தெய்வத்திடம் வைராக்கியத்துடன் நிறுத்தவும்.
9.பின்புகுருவிடம்உபதேசம்பெற்றமந்திரத்தை ஜபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். சிலர் அதிகமாக செய்ய விரும்பினால் அது 1008, 10008, 10008 ஆக இருக்கட்டும்.
10. உங்கள் முழு கவனமும் நீங்கள் மனதில் உச்சரிக்கும் அந்த மந்திரத்தின் மீதே இருக்கட்டும்.
11. எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் ஒரு லட்சம் முறை ஜபித்தால்தான் பலன் தர ஆரம்பிக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
12. தியானத்தை முடித்த பின்னர் ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்து பின்னர் எழுங்கள்
13. குருவிடம் அவ்வப்போது சத்-சங்கம் வைத்துக் கொள்ளவும். அது மேலும் உபாசனை சித்திக்கு வழி கொடுக்கும்.
ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று பகவத் கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 -
13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.
· சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும். · பூஜை அறை, பசுக்கொட்டகை, நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம்.
· கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.
· சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.
· கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி; வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்; மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்; புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.
இது சாத்வீக உபாசனை முறையாகும். இது மாந்திரீகம் அல்ல. எந்த ஒரு தவறான நோக்கிலும் பயன்படுத்தக்கூடது. மற்றவர்க்குச் செய்கின்ற தீமை திரும்ப வந்து உங்களையே தாக்கிவிடும். ஒரு சிலர் குரளி, எட்சினி, ஜின் போன்ற தேவதைகளை மந்திர உபாசனை மூலம் வசியப் படுத்திக் கொண்டு அற்புதங்கள் செய்து காட்டுவார்கள். அவா்களால் ஒருவரை ஆன்மிகத்தில் உயா்த்த முடியாது. ஒருவரது ஊழ்வினையைக் கரைக்க முடியாது. தெய்வீக அனுபவங்களைக் கொடுக்க முடியாது. ஆனாலும் அத்தகைய சிலா் மிகப் பெரிய மகான்கள் போலவும், ஞானிகள் போலவும் தெய்வ அவதாரங்கள் போலும் தம்மைக் காட்டிக் கொண்டு உலா வருவார்கள். மோடி மஸ்தான் வித்தை செய்பவா்கள் யார்? யட்சணி வித்தை செய்பவா்கள் யார்? மந்திர சித்திகள் மூலம் அற்புதம் செய்பவா்கள் யார்? உண்மையான மகான்கள் யார்? சித்தா்கள் யார்? தெய்வ அவதாரங்கள் யார்? என்றெல்லாம் புரிந்து கொள்ள ஆன்மிக அறிவு வேண்டும். அனுபவ அறிவு வேண்டும். எனவே ஒரு சரியான குருவைத் தேர்ந்த்தெடுக்க பூர்வ புண்ணியமும் சிறந்த அனுபவமும் வேண்டும்.இதற்கு கீதையில் சொல்லியபடி நமது உள்ளத்தில் இறைவன் இருக்கிறார். நமது தேவைகளைப் பூர்த்தி செய்கிறார். நமது பக்குவத்திற்கு தகுந்தபடி குருவைக் காட்டுகிறார். மாயை எனும் திரையால் தன்னை முழுதும் மறத்துள்ளார்.
எனவே முடிந்த அளவு மற்றவர்க்கு நன்மை செய்வோம். தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்பது வள்ளுவன் வாக்கு.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் எல்லா உபாசனைகளுக்கும் பொருந்தும். முதலில் குருவிடம் பெற்ற மந்திரத்தை ஒரு லட்சம் முறை உச்சரித்து உரு ஏற்றிய பின்பே அருள் சாதனங்களைக் கையாள வேண்டும். ஒரே நாளில் ஒரு லட்சம் உச்சரிப்பது என்பது உடலில் காந்த சக்தியை திடீரென கூட்டி விடும் என்பதால் தினசரி 108 முறை காலை, மாலை உச்சரித்து உரு எற்றுவதே சிறப்பு. இப்போதெல்லாம் சுமார் ஒரு மணி நேரத்தில் எல்லா வகையான சித்தியும் கிடைத்து விட வேண்டும் என்று பலர் எதிர் பார்க்கிரார்கள் ஆனால் உபாசனை உயர்வான மார்க்கம், இது சித்தர்கள் கண்ட சாத்வீக முறை. பொறுமை மிக மிக அவசியம் தேவை. நாம் உச்சரித்த மந்திரங்கள் ஒரு லட்சத்தை தாண்டிய பின்னர் மேலே சொன்ன அருள் சாதனங்களைக் கையால் தொட்ட உடனேயே நம்மிடம் உள்ள சக்தி அலைகள் உடனடியாக அதில் பதிந்து அதை யார் பெறுகிறார்களோ அவர்களுக்கு உடனடியான நல்ல பலன்கள் கிடைகின்றன. எனவேதான் மஹான்கள் தொட்டு ஆசிர்வாதம் செய்த விபூதி, எலுமிச்சை போன்றவைகள் அருள் நிறைந்து அதன் மூலம் பல்வேறு அதிசயங்கள் நடக்கின்றன. மந்திர உரு இல்லாமல் அருள் சாதனங்கள் வேலை செய்யாது. சாதரமாண விபூதியை விட முறைப்படி தயார் செய்த விபூதியில் நமது கை பட்டவுடன் உடனடி நற்பலன்கள் கிடைக்கிறது.

Friday, 15 December 2017

தென்திருவாலவாய்

மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட குணமடைந்து உடல்நலம் பெறுகிற அதிசயக்கோவில்:

அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை- 625 001. .phone +91 452 2344360.

தென்திருவாலவாய்
என்று பெயர் வரக்காரணம் :

பண்டைய காலத்தில் திருவிளையாடல் புராணத்தில் மதுரைக்கு வழிகாட்டிய படலம் உண்டு. ஒரு காலத்தில் கடல் பொங்கி மதுரை மாநகரமே எல்லைகள் எல்லாம் தெரியாமல் குறுகிப்போய், மதுரை நகரின் எல்லை எதுவென்ற‌ே தெரியாமல் போனது.

அப்படி கடல் பொங்கி குறுகிய மதுரையை முந்தைய அளவிற்கே மீண்டும் அமைக்க விரும்பிய சேகர பாண்டிய மன்னன் சிவ பெருமானிடம் வேண்டினான்

அப்போது சிவபெருமான் ஆலவாய் என்றழைக்கப்படும் ஒரு பெரிய பாம்பை வீசி போட்டிருக்கின்றார். போடப்பட்ட அந்த பாம்பு மதுரை ஊரின் முழுக்க வட்டமடித்து காட்டியிருக்கிறது. அப்போது தென்திருவாலவாய் கோயில் இருக்கும் இடத்தில்தான் அந்த பாம்புடைய வாயும், வாலும் ஒன்று சேர்ந்துள்ளது.இந்த கோயிலும் தெற்கு திசையில் அமைந்ததால்   தென்திருவாலவாய் என்று பொருள்படுகிறது.

 ஆலவாய் என்ற பாம்பு, தெற்கு திசை எல்லாம் சேர்ந்து தென் திரு ஆலவாய் என்று பெயர் வந்தது.

தெற்கு திசைக்குத் தலைவனாகிய எமன் வழிபட்ட கோயில்இது.
மனிதனுக்கு மரணத்தை விடக் கொடிய பகைவனும் இல்லை. அந்த மரணத் துயரை மாற்றும் வைத்தியனை விடச் சிறந்த நண்பனும் இல்லை.

இத்தகையவைத்தியநாதப்
பெருமான் எழுந்தருளிக் காலன் வருங்கால் காட்சி கொடுக்கக் காத்திருக்கும் திருத்த‌லமே தென் திருவாலவாய் ஆகும்.

தனக்கு நோய் நொடி வந்து உயிருக்கு பங்கம் வருமோ எனும் பயம் எல்லோர் உயிரையும் எடுக்கும் எமனுக்கே வந்து விடுகிறது. சிவபெருமானை வணங்க அவரும் காட்சி தருகிறார்.

அப்போது தென்திருவாலவாய் க‌ோயிலுக்கு சென்று வழிபட்டு அந்த திருநீற்றை பூசு., இனி உனக்கு மரணபயமே கிடையாது என்கிறார். எமனும் வந்து வழிபட்டு தன் மரணபயம் நீங்கப் பெற்றான். அத்தகையை சிறப்பு வாய்ந்த தலம் இது.

திருநீற்றுப்பதிகம் பாடப்பெற்ற தலம் இது.

 இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் அக்னி தலம் ஆகும். திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது.

இங்குள்ள தென் திருவாலவாய் சுவாமியை வணங்கினால் நோய் நொடிகள் நீங்கப்பெறுவதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வரு‌கை தருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை
விலகுகிறது.

இத்தலத்து இறைவனை வணங்குவோர்க்கு மன நிம்மதி கிடைக்கிறது. இத்தலத்து அம்பாளை வழிபட்டால் திருமணவரம், குழந்தை வரம் ஆகி‌யன கிடைக்கின்றன. சுவாமிக்கு வஸ்திரம் வழங்கினால் பெரிய அளவில் புண்ணியம் கிடைக்கிறது. கல்வியில் சிறக்கவும், எடுத்தகாரியம் நல்ல முறையில் நடைபெறவும் இத்தலத்தில் வழிபடலாம்.

அஸ்வத்தபிரதட்சணம் : இக்கோயிலில் உள்ள அரசமரத்தை 108 முறை வலம் வந்து திருவாலவாய சுவாமியை நினைத்து உள்ளம் உருகி வேண்டி நின்றால், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட குணமடைந்து உடல்நலம் பெறுகிற அதிசயம் இத்தலத்தில் நடக்கிறது.

மேலும் நீண்ட ஆயுள் வேண்டுபவர்கள் இத்தலத்துக்கு வந்து இந்த அஸ்வத்தபிரதட்சணம் அதாவது 108 முறை வலம் வந்து வணங்குகின்றனர்.

இத்தலத்தில் 60ம் கல்யாணம் செய்வதும் ஏராளமாக நடக்கிறது. அவர்களே சதாபிசேகமும் (80) செய்து நல்ல ஆயுளை அடைகின்றனர்.

மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் பழைய சொக்கநாதரை வழிபட்டால் செல்வம் செழிக்கும்.

இம்மையில் நன்மை தருவாரை வணங்கினால் பதவி கிடைக்கும்.

தென்திருவாலவாய சுவாமியை வணங்கினால் மரண துன்பம் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

தவிர இந்த நான்கு ‌‌கோயில்களுக்கும் நடுவில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டால் இந்நான்கும் கிடைக்கும். இங்குள்ள மூர்த்தி மதுரையில் உள்ள தலங்களில் அளவில் பெரியவர்.

Thursday, 14 December 2017

இந்திரன் முதல்வர் எண் திசை போற்ற, மந்திர வடிவேல் வருக வருக - தேவர்கள் போற்றும், சித்த பெருமக்கள் பூசித்த மந்திரகிரி முருகர்.



Wednesday, 13 December 2017

குரு ராகவேந்திர ராயரு

சரணடைந்தவர் களைக் காப்பாற்றுவது என்பது எல்லா சித்தர்களுக்கும் இயல்பாக உள்ள ஒரு குணம்.

அவர்கள் தாங்கள் இறைநிலை அடைவதோடு நின்றுவிடு வதில்லை. தொடர்ந்து தங்கள் அடியவர்களை
ஆபத்துக் காலத்தில் காப்பாற்றுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் அடியவர்களின் துயரங்களைத்
தீர்ப்பதன் பொருட்டுத்தான் அவர்கள் இறைநிலையையே அடைகிறார்கள். அடியவர்கள் பால் அவர்கள்
கொண்டுள்ள கருணை அளப்பரியது.

பல்லாண்டுகள் பல நூல் களைப் பயின்று சரஸ்வதி கடாட்சம் பெற்ற ராகவேந்திரர், தம் வாழ்வில்
நிகழ்த் திய ஓர் அற்புதம் அவரது பேராற்றலை மட்டுமல்ல; அவரது பெருங்கருணையையும்
புலப்படுத்துகிறது.

 ஏழை
எளிய விவசாயிகளை அதிக எண்ணிக்கையில் கொண்ட கிராமம் அது. அந்த கிராமத்தில் வெங்கண்ணா
என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். கள்ளங்கபடமற்ற மனம் படைத்த ஏழைச் சிறுவன்.

என்ன துரதிர்ஷ்டம்! அவன் வாழ்வில் பெரும் சோதனைகள் நேர்ந்தன. அடுத்தடுத்துத் தன் தாய்- தந்தை
இருவரையும் பறிகொடுத்தான்.

இனி அவனை வளர்க்கும் பொறுப்பை யார்
மேற்கொள்ளப் போகிறார்கள்?

 கடவுளைத் தவிர வேறு நாதியற்ற அவன், தன் தாய்மாமனிடம் போய்ச் சேர்ந்தான்.

தாய்மாமன் வெங்கண்ணாவையும் தன் சொந்தக் குழந்தையாக எண்ணி வளர்த்திருக்க வேண்டும். அதுதான்
கடவுளின் விருப்பமாய் இருந்திருக்கும். ஆனால் வெங்கண்ணாவைத் தன் பிள்ளைபோல் கருத அந்தத்
தாய்மாமனுக்கு மனம் வரவில்லை.

அவனைப் பள்ளிக்கு அனுப்பினால் செலவுதானே?

தாய்- தந்தையற்ற அநாதைப் பயலுக்கு ஏன் செலவு
செய்ய வேண்டும்?

செலவு செய்வதால் தனக்கென்ன பயன்?

 இப்படி எண்ணிய தாய்மாமன், வெங்கண்ணா
வுக்கு எழுதப் படிக்கவே கற்பிக்க வில்லை.

தினந்தோறும் தன் வீட்டு எருமை மாடுகளை
மேய்த்துவரும் பணியில் வெங்கண்ணாவை ஈடுபடுத்தினான்.

வெங்கண்ணாவும் விதியை நொந்துகொண்டு அந்த வேலையைச் செய்துவரலானான். கல்வி கற்க வேண்டும்
என்ற தன் ஆசையில் மண் விழுந்ததை அவன் புரிந்துகொண் டான். மாடு மேய்ப்பதற்கு மறுத்தால்,
கிடைக்கும் கொஞ்ச உணவும் கிடைக் காது என்று அவனுக்குத் தெரியும்.

மாடு மேய்ப்பது மட்டுமென்ன சாதாரண தொழிலா?

#கிருஷ்ண பகவானே செய்த தொழிலல்லவா அது!

இப்படி எண்ணி அவன் தன் மனதைத் தேற்றிக் கொண்டான்.

ஒருநாள் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு ஒரு மரத்தடி நிழலிலில் அவன் இளைப்பாறிக்
கொண்டிருந்த போது, அந்த வழியே கை, கால் முளைத்த ஒரு பூரணச் சந்திரன் வெயிலிலில்
நடந்து வந்து கொண்டிருந் தது.

 வேறு யாருமல்ல;

#மகான்_ராகவேந்திரர்தான் அவர்.

சந்நியாசிகள் எந்த ஊரிலும் நெடுநாட்கள் தங்க லாகாது என்ற மரபுப்படி அந்தப் பிரதேசத்தை
விட்டு வேறு பிரதேசத் திற்கு  நடந்து போய்க்கொண்டி ருந்தார் அவர்.

வெங்கண்ணாவுக்கு அவரைப் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஏற்பட்டது.

அந்தக் கடும் வெயிலில்
ஸ்ரீராகவேந்திரரின் தரிசனம் அவன் மனதில் பெரும் குளுமையை ஏற்படுத்தியது.

இவர் யாரோ
பெரிய மகான் என்பதைப் புரிந்துகொண்ட வெங்கண்ணா,

 ஓடோடிப் போய் அவர் #கால்களில் விழுந்தான்.

அவர் பாதங்களைக் கெட்டியாய்ப் பற்றிக் கொண்டான்.

தம்மையே சரண் என்று வந்திருக்கும் வெங்கண்ணா வைத் தூக்கி நிறுத்தினார் ஸ்ரீராகவேந்திரர்.

அவன் தலையை வருடியவாறே, ""என்ன விஷயம்?'' என்று பரிவோடு கேட்டார்.

வெங்கண்ணா தன் தாய்மாமனால் தான் கொடுமைப் படுத்தப்படுவதையும்; தனக்குக் கல்வியறிவே
இல்லாமல் போனதையும் மிகுந்த வருத்தத்தோடு கண்ணீர் மல்கத் தெரிவித்துக் கொண்டான்.

அந்த ஏழைச் சிறுவனின் பக்தி ராகவேந்திரரின் உள்ளத்தை உருக்கியது. ""வெங்கண்ணா! எந்த
சோதனையைக் கண்டும் கலங்காதே.

 சோதனை வரும் காலங்களில் என்னை நினைத்துக் கொள்.
ராகவேந்திரர் என்று என்னை அழைப்பார்கள்.

 நீ என்னை நினைத்துக் கொண்டால் நான் எங்கிருந்தாலும்
உனக்குத் தேவையான உதவிகள் ஓடோடி வரும். எதைப் பற்றியும் கலங்காமல் இறை பக்தியில்
தோய்ந்திரு!''

அவனுக்கு அறிவுறுத்திவிட்டு ராகவேந்திரர் தன் வழியில் நடந்து சென்றார்.

அவர் சென்ற
வழியை விழுந்து கும்பிட்டான் வெங்கண்ணா. நாள்தோறும், "எனக்கு நல்வாழ்க்கை அமைய நீயே
அருள்புரிய வேண்டும்!' என்று மானசீகமாக அவரிடம் பிரார்த்தித்து வரலானான். வெங்கண்ணாவைப்
பொறுத்தவரை, ராகவேந்திரர்தான் அவனது கடவுள். அவரது
#புனித_தரிசனத்தால் அப்படியொரு
பக்தியும் ஈர்ப்பும் அவனி டம் ஏற்பட்டுவிட்டன.

ராகவேந்திரரின் அருளை யாசித்தே ஆகவேண்டிய ஒரு கஷ்ட காலம்- மெல்ல மெல்ல வளர்ந்து
இளைஞனாய் மாறியிருந்த வெங்கண்ணாவின் வாழ்வில் ஒருநாள் வந்தது.

அன்றொருநாள் அவன் மாடுமேய்த்துக் கொண்டிருந்த வழியில் நவாப் ஸித்தி #மசூத்கான் குதிரை
மீதேறி தன் பரிவாரங்களோடு வந்துசேர்ந்தான். பீஜப்பூர் சுல்தானின் சிற்றரசனான நவாப் அவன்.
அந்த கிராமத்துக்கு அவன் வந்தது நிலவரியை வசூல் செய்வதற்காக. அவன் அதிகாரம் செய்வதற்கும்
பிறரை அச்சுறுத்துவதற்கும் என்றே பிறந்தவன் என்பது அவன் பார்வையின் தெறிப்பில் தெரிந்தது.

அப்போது குதிரை மேல் வந்துகொண்டிருந்த அவனை நோக்கி எங்கிருந்தோ இன்னொரு வீரன்
குதிரையில் மிக வேகமாக
வந்துசேர்ந் தான்.

மின்னல்போல் வந்த அவன், ஒரு கடிதத்தை நவாபிடம்
தந்துவிட்டு, ஒரு கணத்தில் குதிரை மேல் ஏறி மின்னல் போலவே விரைந்து சென்று
கண்பார்வையிலிலிருந்து மறைந்துவிட்டான்.

என்ன கடிதம் அது? யார் அனுப்பியது? அதில் என்ன எழுதப்பட்டிருக்கும்? நவாபுக்கு எதுவும்
தெரியவில்லை.

பொதுவாகப் பெரும் பதவியில் இருக்கும் நவாபைப் போன்றவர்கள் தங்களுக்கு வந்த கடிதங்களைத்
தாங்களே படிக்கும் வழக்கமில்லையே?

 யாரிடமாவது கொடுத்து படிக்கச் சொல்லிலிக்
கேட்பதுதானே அவர்கள் வழக்கம்?

 இப்போது யாரிடம் கொடுத்து இந்தக் கடிதத்தைப் படிக்கச் சொல்வது?

மாடு மேய்த்துக் கொண்டிருந்த வெங்கண்ணா, நவாப் கண்களில் பட்டான். ""அடேய்! இங்கே வா!''
என்று அவனைக் கூவி அழைத்த நவாப், தனக்கு வந்த ஓலையை அவன் கையில் திணித்து, ""எங்கே?
இதில் என்ன எழுதி இருக்கிறது என்று படித்துச் சொல்!'' என்று கட்டளை இட்டான்.

வெங்கண்ணாவின் விழிகளிலிலிருந்து கரகரவென கண்ணீர் வழிந்தது. என்ன சங்கடம் இது! எழுதப்
படிக்கத் தெரியாத தன்னிடம் ஓலையைக் கொடுத்துப் படிக்கச் சொல்லிலி பெரும்பதவியில்
இருக்கும் நவாப் கட்டளையிடுகிறாரே?

 கட்டளையை மீறினால் என்ன ஆகுமோ?

 என்றாலும் நம்
நிலைமையை எடுத்துச்  சொல்லிலித்தானே ஆகவேண்டும்?

வெங்கண்ணா அழுதவாறே தனக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று தெரிவித்தான். ஏறக்குறைய
பதினாறு வயதான ஓர் இளைஞன் தனக்கு சுத்தமாக எழுதப் படிக்கத் தெரியாது என்று சொன்னதை
நவாப் நம்பவில்லை. தன் அதிகாரத்திற்குப் பணிய மறுத்து

அவன் பொய் சொல்வ தாகவே நினைத்தது நவாபின் உள்ளம். அவன் கண்களில் அனல் பறந் தது.

"அடேய்!' ஓர் இளை ஞனாக இருக்கிறாய் நீ?

ஒரு கடிதத்தைப் படிக்கக் கூட உன்னால் முடியாது
என்கிறாய். நான் யார் என்று தெரியாமல் என்னிடம் விளையாடுகி றாயா?

 முட்டாளே! இப் போது
இந்தக் கடிதத் தைப் படிக்கிறாயா
அல் லது உயிரை விடுகிறாயா?''

இடுப்பிலிலிருந்து வாளை உருவி, வெங்கண்ணாவை நோக்கி அசைத்த வாறே கர்ஜித்தான் நவாப்.

அந்த முழக்கத்தைக் கேட்டு எளிய இளைஞன் வெங்கண்ணாவின் சப்த நாடிகளும் ஒடுங்கின. இப்போது
என்ன செய்வது?

அவனுக்கு ராகவேந்திரர் அளித்த வாக்குறுதி ஞாபகம் வந்தது.

"#சோதனை காலத்தில் அவர்
எங்கிருந்தாலும் உதவி வரும் என்றாரே?

 என் பிரபோ! ஸ்ரீராகவேந்திரா! என் கடவுள் அல்லவா நீ?

நாள்தோறும் இரவும் பகலும் உன்னைத்தானே நினைத்துக் கொள்கிறேன். இதோ, இன்னும் சில கணங்களில்
என் உயிர் போய்விடும் போல் இருக்கிறதே?

 என்னைக் காப்பாற்றுவது உன் பொறுப்பு அப்பா!
வேறென்ன நான் சொல்வது?'

நடுநடுங்கும் கரங்களோடு நவாப் கொடுத்த ஓலையைக் கையில் வாங்கிக் கொண்டான் வெங்கண்ணா.

அடுத்த கணம்தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

 படிப்பறிவே இல்லாத வெங்கண்ணாவுக்கு சரஸ்வதி
கடாட்சம் அருளப்பட்டது.

அவன் மனதில் திடீரென ஒரு பெருமிதமும் நம்பிக்கையும் எழுந்தன.

ஓலையைப் பிரித்த வெங்கண்ணாவுக்கு ஓலையில் உள்ள எழுத்துகள் எல்லாம் பளிச் பளிச் என கண் ணில்
தெரிந்தன.

கடகடவென ஓலையை மிடுக்கோடு படித்து முடித்தான் படிப்பறிவே அற்ற வெங்கண்ணா!
தானா படிக்கிறோம்?

அவனுக்குத் தன்னையே தன்னால் நம்ப இயலவில்லை. அன்று தொட்டு அவனால்
எல்லா வற்றையும் படிக்க முடிந்தது.

ஆதோனி சமஸ்தானத்துடன் மேலும் சில பகுதி களைச் சேர்த்திருக்கும் நல்ல செய்தியைச்
சொல்லிலிய மங்கல மடல் அது. நவாபின் அதிகார எல்லை மேலும் விரியவிருப்பதைச் சொன்ன ஓலை.
நவாப் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

""இவ்வளவு நன்றாகவும் கம்பீரமாகவும் படிக்கிறாய். பிறகு எனக்கு எழுதப் படிக்கவே
தெரியாது என்று ஏன் பொய் சொல்கிறாய்?

இளைஞனே! உன் பாண்டித்தியம் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி
தருகிறது. எனக்கு நல்ல சேதி வாசித்த உனக்கு நான் ஒரு நல்ல சேதி சொல்லப் போகிறேன்.
உன்னைப் பார்த்தால் உன்மேல் எனக்கு அன்பு பொங்குகிறது. உன்னை இந்தப் பகுதிக்கு #திவானாக
நியமிக்கிறேன்.''

இவ்விதம் அறிவித்த நவாப் உல்லாசமாகத் தன் வீரர்களுடன் புறப்பட்டுச் சென்றான். வெங்கண்ணா
வுக்கு நடந்ததெல்லாம் கனவா நனவா என்றே தெரிய வில்லை. "என்னே என் அப்பன் ராகவேந்திரரின்
அருள்!' என்று அவன் அங்கேயே தரையில் விழுந்து ராகவேந் திரரை #மானசீகமாக நினைத்து
நமஸ்கரித்தான்.

நவாப் சொன்ன சொற்கள் உணர்ச்சிவசப்பட்டு அப்போது பிறப்பித்த உத்தரவல்ல. உண்மையிலேயே
வெங்கண்ணா அந்தப் பகுதியின் திவானாக ஆக்கப் பட்டான்.

 வெங்கண்ணாமேல் பெரும் நம்பிக்கை
வைத்தான் நவாப். வெங்கண்ணாவுக்கு ஒரு  திவானுக்கே உரிய எல்லா
 அதி காரங்களும் செல்வ
வளமும் வந்துசேர்ந்தன.

இதையெல்லாம் பார்க்கத் தன் தாய்- தந்தை இல்லையே என்பது மட்டும்தான்
வெங்கண்ணாவின் வருத்தம்.

வெங்கண்ணாவின் தாய்மாமனுக்குத் தலை சுற்றியது. தன்னால் மாடுமேய்க்க அனுப்பப்பட்டவன்
திவானாகி விட் டானே?

 இவன் எப்போது எப்படி எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டான்?

வெங்கண்ணா தன் தாய்மாமனிடம் விரோதம் பாராட்டவில்லை. அந்தக் குடும்பத்தைத் தன் குடும்பமாக
எண்ணி அவர்களையும் காப்பாற்றி வாழலானான் அவன்.

 ஸ்ரீராகவேந்திரரின் அருள் கடாட்சத்தை
எண்ணும்போதெல்லாம் பக்தன் வெங்கண்ணாவின் மனம் குளிர்ந்தது.

ஆனால் ஒருமுறை தெள்ளத் தெளி வாக நவாபிடம் நடந்த உண்மையைச் சொல்லிலிவிட்டான் வெங்கண்ணா.
நவாப் பிரமிப்புடன் மறுபடி மறுபடி கேட்டான். வெங்கண்ணா தெளிவாக அறிவித்தான்:

""ஆம்; எனக்கு உண்மையிலேயே எழு தப் படிக்கத் தெரியாது. ஆனால் நீங்கள் தந்த ஓலையை
ராகவேந்திரரைப் பிரார்த் தித்துப் பிரித்தேன். அன்றிலிலிருந்து எனக்கு எழுதப் படிக்கத்
தெரிந்துவிட்டது. இது தான்
நடந்த சங்கதி.

 உங்களுக்குச் சந்தேக மிருந்தால் என்
தாய்மாமனிடம் விசாரிக் கலாம்.''

தாய்மாமனிடம் விசாரித்து அது உண்மைதான் என்றறிந்தபோது நவாபின் வியப்பு எல்லை கடந்தது.

 #கும்பகோணத்தை விடுத்து மாஞ்சாலியில் இருக்க முடிவு செய்து ஆதோணி வந்து  வெங்கண்ணா இல்லத்தில் மூல ராமருக்கு பூஜை செய்து கொண்டிருந்த போது வந்தான்.


அப்போது இராகவேந்திர சுவாமிகள் மூலராமருக்கு பூஜைகள் செய்து கொண்டிருந்தார். அவரிடம் நவாப் #மாமிசம் கொண்ட ஒரு தட்டை துணி கொண்டு மூடி சமர்பித்தான். அதை இராமருக்கு பூஜை செய்து முடித்தபின் தண்ணீர் தெளித்து திருப்பிக் கொடுத்தார் குருதேவர்.

 துணியை எடுத்துப் பார்த்த நவாபிற்கு ஒரே அதிர்ச்சி தட்டில் இருந்தவை பழங்களும்  மலர்களும்.

குரு இராகவேந்திரரின் மகிமையை உணர்ந்த நவாப் அவரைப் பணிந்து என்ன வேண்டுமென்றாலும்  கேட்க வேண்டினான்.

 அப்போது இராகவேந்திரர் இந்த மாஞ்சாலி கிராமத்தைக் கேட்டார்.  நவாப்பும். அந்த பிரதேசம் பாறைகள் நிறைந்த #வறண்ட_பூமி வேண்டாம், 

வேறு நல்ல வளமான பகுதியை தருகின்றேன் என்றான். ஆயினும் இராகவேந்திரர்   அன்மீக சக்தி மிகுந்த இப்பகுதியே வேண்டுமென கேட்க அதையே தானமாக மனமுவந்து வழங்கி   சாசனம் செய்து குருதேவரை வணங்கி சென்றான்.



பின்னர் இராகவேந்திரர் மாஞ்சாலியில் வாழ ஆரம்பித்தார், அவரது இஷ்டதெய்வமான வெங்கடரமண சுவாமிக்கு  ஒரு ஆலயமும் எழுப்பினார்.

 ஆயிரக்கணக்கில் பக்தர்கள் மாஞ்சாலி கிராமத்திற்கு வரத்தொடங்கினர். இந்த கிராமத்தின் கிராம தேவதை #மாஞ்சாலியம்மன்.

 அவர் இராகவேந்திரரிடம் சென்று  தாங்கள்  வந்த பிறகு என்னை மறந்து விடுவார்களே என்றபோது, இராகவேந்திரர்  என்னை தரிசனம் செய்ய வருபவர்கள் முதலில் உன்னை தரிசனம் செய்த பிறகுதான் என்னை தரிசனம் செய்வார்கள் என்று வரம் தந்தார் பரம கருணாமூர்த்தி குரு ராயரு.

 என்ன சுவையாக இருந்ததா?



 
700 வருடகாலம் பிருந்தாவனத்தில் இருந்து அருள்பாலிப்பேன் என்று அருளியபடி இராகவேந்திரர் இன்றும் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை நீக்கி பலவித அற்புதங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்.

 நுழைவாயிலில் அப்பணாச்சாரியார் அருளிய       

பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச|
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||

 என்ற ஸ்லோகம் நம்மை வரவேற்கின்றது.


இந்த மாஞ்சாலியில் குருநாதர்ஆங்கிலேய பிரபு சர் தாமஸ் மன்றோவுடன் நடத்திய ஒரு அற்புதத்தை காணலாமா? 

 கி.பி. 1812ம் ஆண்டு. பிரிட்டிஷ் அரசு ஒரு சட்டம் இயற்றியது. அதன் மூலம் கோயில் இடத்திற்கான வாரிசுகள் யாரும் இல்லை என்றால் அந்த இடத்தை அரசாங்கமே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்புச் செய்தது. அந்தச் சட்டத்தின் மூலம் பிருந்தாவனத்துக்கு தானமாகக் கொடுக்கப்பட்டிருந்த நிலமானியம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது. ஆனால் பொது மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பல ஆண்டுகளுக்கு முன்னால் அப்பகுதியை ஆண்ட சுல்தான் ஸ்ரீ ராகவேந்திரருக்கு தானமாக வழங்கிய இவ்விடத்தை அரசு கையகப்படுத்தக் கூடாது என்று அவர்கள் எதிர்த்தனர். அதனால் பிரிட்டிஷ் அரசு அப்போது பெல்லாரி மாவட்ட ஆட்சியாளராக இருந்த சர் தாமஸ் மன்றோ தலைமையில் ஒரு குழுவை நியமித்து நிலைமையைச் சரி செய்யச் சொல்லி உத்தரவிட்டது.


மன்றோ தனது குழுவினருடன் ஆலயத்துக்கு விரைந்தார்.

ஆலயத்தின் நுழைவாயிலில் தனது காலணியையும் , தொப்பியையும் கழற்றி விட்டு பிருந்தாவனத்தை நோக்கிச் சென்றார். ஜீவசமாதி ஆலயம் அருகே சென்ற மன்றோ யாரோ அங்கு இருப்பது போல் வணக்கம் செலுத்தினார். பின் சத்தமாக உரையாட ஆரம்பித்தார். அவருடன் வந்திருந்த குழுவினருக்கு ஒன்றுமே புரியவில்லை. காரணம், அங்கே மன்றோவைத் தவிர எதிரே யாருமே இல்லை. ஆனால் மன்றோவோ யாரோ எதிரில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பது போல சரளமாக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

வெகு நேரம் கழித்து தனது உரையாடலை முடித்துக் கொண்டு தங்கள் ஆங்கிலேயப் பாணியில் அந்த பிருந்தாவனத்துக்கு ஒரு சல்யூட் வைத்து விட்டு வெளியே வந்தார் மன்றோ. அதுவரை திகைத்துப் போயிருந்த குழுவினர், அவரிடம் யாரிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக்  கேட்டனர். அதற்கு மன்றோ, ”பிருந்தாவனத்தின் அருகே காவி உடை அணிந்து ஒளி வீசும் கண்களுடன் உயரமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நான் அரசு மான்யம் பற்றி சில விளக்கங்களை அளித்தேன். அவரும் என்னிடம் அது குறித்து உரையாடி மடத்தின் சொத்து பற்றிய சரியான விளக்கத்தைத் தந்து விட்டார். இந்த இடம் மடத்துக்குத்தான் சொந்தம் என்பதில் எந்த ஐயமுமில்லை” என்றார். மேலும் அந்த மனிதரது ஒளி வீசும் கண்கள் பற்றியும், அவரது கம்பீரக் குரல் பற்றியும், செழுமையான ஆங்கில உச்சரிப்புப் பற்றியும் வியந்து கூறியவர், ”ஏன், நீங்கள் அவரைக் காணவில்லையா?” என்று கேட்டார், குழுவினரைப் பார்த்து.  தங்கள் கண்களுக்கு அங்கு யாருமே தெரியவில்லை என்று கூறிய அவர்கள், மன்றோவுடன் உரையாடியது சாட்சாத் ஸ்ரீ ராகவேந்திரர்தான் என்பதை அவருக்கு உணர்த்தினர்.

ஒரு   நூற்றாண்டுக்கு முன் பிருந்தாவனஸ்தரான   மகான் தன் முன் நேரில் தோன்றி அதுவும் தனது மொழியான  ஆங்கிலத்தில்யே தன்னுடன் பேசிப் பிரச்சனையைத் தீர்த்த விதம் கண்டு பிரமித்தார் சர் தாமஸ் மன்றோ. தனக்குக் கிடைத்த பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார். அரசுக்கும், ஆளுநருக்கும், அந்த இடம் மடத்துக்குச் சட்டப்படி உரிமை உள்ள நிலம் என்று தகவல் அனுப்பியதுடன் அன்று முதல் ஸ்ரீ ராகவேந்திரரின் பக்தராகவும் ஆகிப் போனார். விரைவிலேயே மன்றோ தாற்காலிக ஆளுநராகப் பொறுப்பேற்கும் நிலை வர, அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு, மடத்துக்கு நிலம் அளிப்பது தொடர்பானது தான். இந்தச் சம்பவங்கள் அப்போதைய சென்னை மாகாண கெஜட்டிலும் (அரசு ஆவணக் குறிப்பு) வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி