Tuesday 30 June 2020

கண் சிமிட்டா மகான்* *ஒத்த வேட்டி சுவாமிகள் ஜீவசமாதி ஆலயம்

*கண் சிமிட்டா  மகான்*
 *ஒத்த  வேட்டி சுவாமிகள் ஜீவசமாதி ஆலயம்*
 *படிக்கட்டுத்துறை கரூர்*
 *தோற்றம்* :
05.07.1895 மன்மத வருடம் ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரம்.
 *ஜுவசமாதி அடைந்த நாள்_* :
02.07.1955.  மன்மத வருடம் ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரம்.
 *ஒத்த வேட்டி சுவாமிகள் ஜீவசமாதி ஆலயத்தின்*

 *65ஆம்  ஆண்டு குரு பூஜை விழா அழைப்பிதழ்* *(நாள்)* 02.07.2020 *வியாழக்கிழமை*...

 *சுவாமிகளின் சுருக்கமான  வரலாறு*......

* பிறப்பு *05.07.1895* மன்மத வருடம் ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரம்.

* பிறந்த ஊர் *கடம்பன்குறிச்சி கிராமம்*  **கரூர் மாவட்டம்....*

* தந்தை பெயர் *வைத்தியநாத சாஸ்திரி*....

* தாயார் பெயர்  *அலங்காரவள்ளி* என்கின்ற *அலமேலு*...
  மகேந்திரமங்கலம்*

*சுவாமிகள் வம்சாவழியினர் *ராமபட்லா*   என்ற பெயர் நாமத்துடன் அழைப்பார்கள்...

* 11 வயதில் **துறவம் பூண்டு* *மகேந்திரமங்கலம்*  வேதபாட சாலையில் கல்வி பயின்றார்.......

* 12 வயதில் *வடதேசம்*  புறப்படுதல்.....

* 1924ஆம் ஆண்டு *கரூர்* வருதல்......

* 1925 ஆம் ஆண்டு *தான் யார் என்பதை மக்களுக்கு அறிய* வைத்தல்........

* இவர் வாழ்ந்த காலம் *கரூர் மக்களின் பொற்காலம்,* *எண்ணற்ற நோய்கள்* மற்றும், *பொருளாதாரத்தை உயர்த்தினார்* .....13 *மொழிகள்* தெரிந்தவர்......

* *அகோரியாகவும்* *ஹடயோகியாகவும்* மற்றும் *அஷ்டமா சித்திராகவும்*  வாழ்ந்தார்....

* *தான் முக்தி அடையும் நாளை பொதுமக்களுக்கு முன்பாகவே உணர்த்தி*  பொது மக்கள் முன்பாகவே முக்தி *ஜுவ சமாதி அடைந்தார்.* .

* சாமியின் நிஜப்பெயர் *ஒத்த வேஷ்டி சுவாமிகள்*  என்கின்ற *சித்க்னாநந்தா சரஸ்வதி சுவாமிகள்*ஆகும்.....

* முக்தியான ஆண்டு 02.07.1955  *மன்மத வருடம் ஆனி மாதம் அனுஷம் நட்சத்திரம்*.....

* முக்தியாவதற்க்கு 3 நாள் முன்பு வியாழக்கிழமை *தன் திருமேனியை புகைப்படம் எடுக்க அனுமதித்தார்* .....

* இவர் சார்ந்த சமுதாயத்தில் *ஹரிதாஸ்ச கோத்திரம்* சேர்ந்தவர்‌......

* இவர் *ஆற்று நீரில் மிதக்கும் சக்தி வாய்ந்தவர்* மற்றும் *ஆற்று நீரில் மாத கணக்கில் ஜல சமாதி ஆவார்கள்* மற்றும் *சூரிய ஒளியை கண் சிமிட்டாமல் பார்ப்பார்*......

 * இன்றும் இவருடைய *புகைப்படத்தை பார்பவர்கள் எந்த கோணத்தில் நின்றாலும் அவர்களை பார்பது போல் தோன்றுவார்கள்* ......

* இவர் எங்கு சென்றாலும் *கூடவே நான்கு நாய்கள் பயணிக்கும்*....

 *எண்ணற்ற சுவாமிகள் வரலாறுகள் தொடரும்...*........‌

                 *இப்படிக்கு*

         *S.மாணிக்கம்*
 20. *ஒத்த வேட்டி சுவாமிகள் ஜீவசமாதி ஆலயம் படிக்கட்டுத்துறை கரூர்* .....

 **தொடர்புக்கு.* 9942368738



அகத்தியர் பீடத்தின் மக்கள் சேவா வேள்வி பணிகள்

நேற்று நமது பொகளூர் அகத்தியர் பீடத்தின் சார்பில் குருஜி இறை சித்தரின் வழிகாட்டுதலின் படி திரு கிரிதரன் ஐயா தலைமையில் சித்தர் யாகம் கரியாம்பாளையம் என்ற அன்னூரில் உள்ள ஒரு கிராமத்தில் திரு ஜெய சூர்யா என்ற நமது பீடத்தை சேர்ந்த அன்பருக்கு யாகம் சிறப்பான முறையில் செய்யப்பட்டது

இதில் கிரிதரன் ஐயா கூறும் போது அவர்களுடைய தொழிற்சாலைக்குள் இந்த யாகம் செய்யப்பட்டது

ஜெயசூர்யா அவர்கள் கூறிய விஷயமாக என்றுமே சூரியனின் ஒளி கதிர்கள் தொழிற்சாலைக்கு உள்ளே வந்தது கிடையாது இருளாக தான் இருக்கும் ஆனால் இன்று யாகத்திற்காக கலசம் வைத்துள்ள போது சூரியனின் கதிர்கள் நேரே உள்ளே இறங்கி கலசங்களின் மேல் உள்ளது.  இதுவரை இதுபோன்ற சூரிய கிரணங்களை தனது தொழிற்சாலையில் கண்டது இல்லை என்று அதிசயமாக கூறினார்

மேலும் யாகத்தின் காட்சிகளை நாம் ஆய்வு செய்து பார்த்த போது சில உருவங்கள் வழக்கம் போல தெரிந்தன

உங்களது மேலான பார்வைக்கு

இவ்விதம் தொடர்ந்து சித்தர் யாகத்தில் பங்கு கொள்வது மூலமாகவும் சித்தர் யாகத்தை அவர்களது இல்லத்தில் நடத்தி கொள்வது மூலமாகவும் சித்தர் நாமத்தை ஜெபிப்பது மூலமாகவும் ஒரு நல்ல தூய்மையான நேர்மறையான அதிர்வுகள் அவர்கள் இருக்கும் இடத்திலும் அவர்கள் செல்லும் இடத்திலும் எப்போதும் உருவாகி பன்மடங்கு பெருகி பல பல நன்மைகளை அளிக்கும் என்பது உண்மை

மேலும் ஆறுமாதம் ஒருவருடம் கழித்து யாகம் செய்தவர்களிடம் இதனை கேட்டு தெரிந்து கொள்வோம் மிக்க நன்றி நண்பர்களே
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் அகத்தீஸ்வராய நமக ஓம் அன்னை லோபமுத்திரை தாயே போற்றி போற்றி 18 சித்தர்களே போற்றி நவகோடி சித்தர்களே போற்றி எண்ணிலா கோடி சித்தர்களே போற்றி தேவர்களே மூவர்கள் போற்றி போற்றி தமிழ்த்தாயே போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏























Monday 29 June 2020

சுதீட்சணன் வரலாறு

அகத்திய முனிவரிடம் ஞான உபதேசம் பெறுவதற்காக அவரின் சீடனாக சேர்ந்திருந்தான், சுதீட்சணன். சிறு வன்தான் என்றாலும் புத்திக்கூர்மையில் அனைவரையும் விட அதிசிறந்தவனாக விளங்கினான். ஆனால் அவனுக்குள் இன்னும் சிறுபிள்ளையின் மனம் மாறாமல் இருந்தது

ஒரு முறை அகத்தியர் புனிதப் பயணம் செல்ல விரும்பினார்.

அதற்கு முன்பாக சுதீட்சண்னை அழைத்து, தனது பூஜை பெட்டியை அவனிடம் வழங்கினார். “நான் வரும் வரை இந்தப் பெட்டிக்குள் இருக்கும் சாளக்கிராமத்திற்கு வழிபாடு செய்து வா” என்று சொல்லிச் சென்றார்

சுதீட்சணன் மனதிற்குள் ஒரு எண்ணம் தோன்றியது

தினமும் ஏரிக்குச் சென்று நீரை எடுத்து வந்து சாளக்கிராமம் திற்கு பூஜை செய்வதற்குப் பதிலாக, பூஜை பெட்டியை ஏரிக் கரைக்குக் கொண்டு சென்று, அங்கேயே வைத்து பூஜை செய்தால் என்ன? அங்கேயே அபிஷேகம் செய்ய நீர், நைவேத் தியத்திற்கு நாவல் பழம், அர்ச்சனைக்கு மலர்கள் என்று கிடைத்துவிடும். நமக்கும் பூஜை செய்வது சுலபம்' என்று நினைத்தான்

தான் நினைத்தபடியே பூஜை பெட்டியை ஏரிக்கரைக்கு எடுத்துச் சென்று சாளக்கிராமத்திற்கு வழிபாடு செய்தான். அது நாவல் பழங்கள் காய்த்துக் குலுங்கும் காலம். எனவே நாவல் மரத்தில் பெரிய அளவிலான நாவல் பழங்கள் கொத்து கொத் தாக காய்த்திருந்தன. அந்தப் பழங்களை மற்ற முனிவர்களின் குமாரர்கள் கல் எறிந்து வீழ்த்திக்கொண்டிருந்தனர். அதைக் கண்டதும் சுதீட்சணனின் பிஞ்சு மனம் அந்த விளையாட்டில் ஈடுபட ஏங்கியது

சாளக்கிராம பூஜை மறந்தது, அந்த சாளக்கிராம கல்லைக் கொண்டே நாவல் பழம் களை எறிந்து வீழ்த்தி னான். கையில் கிடைத்த நாவல் பழங்களை ஆசை தீர தின்று முடித்தபிறகு தான் அவனுக்கு ஒன்று நினைவுக்கு வந்தது

அவன் எறிந்த சாளக்ராம கல், அந்த பெரிய  கிளைகளின் இடை யில் போய் சொருகிக்கொண்டது. அந்த மரப் பொந்தில் விஷப்பாம்பு ஒன்று இருந்தது. ஆனால், அந்தக் கல்லை எடுக்க சுபீட்சணன் முயற்சிக்கவில்லை.

சாளக்கிராம கல் இல்லாவிட்டால், குருவின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று நினைத்த அந்தச் சிறுவன், பெரிய அளவிலான நாவல்பழ கொட்டைக்கு வண்ணம் தீட்டி, சந்தனம் குங்குமம் இட்டு, சாளக்கிராம கல்லுக்குப் பதிலாக அந்தப் பெட்டியில் வைத்து விட்டார்.

அவன் போதாத நேரம், அன்று மாலையே அகத்திய முனிவர் யாத்திரை முடிந்து குடிலுக்கு திரும்பிவிட்டார். அவர் பூஜை பெட்டியை திறந்து சாளக்கிராமத்தை எடுத்துப் பார்த்தபோது, அது கொளகொளவென்று இருந்தது. அதுபற்றி அகத்தியர் கேட்டபோது, “தினமும் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்வதால் இப்படி ஆகிவிட்டது என்று சிறுவனின் சக்திக்கு என்ன பொய் சொல்ல முடியுமோ அதைச் சொன்னான், சுபீட்சணன்.

அவன் சொன்ன பொய்யால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அகத்தியர், "சாளக்கிராமக்கல் என்பது நாராயணனின் அம்சம்

அந்த நாராயணனையே தொலைத்துவிட்டேன், என் நாராயணனைக் கொண்டு வந்தால் இங்கு வா. இல்லையென்றால் என் கண்ணில் படாதே என்று கூறி குடிலில் இருந்து சுதீட்சணனை துரத்திவிட்டார்.

அவனுக்கு தான் செய்த தவறு புரிந்தது. தவறுக்கு பிராய சித்தம் தேட நினைத்தான். அதனால் குரு சொன்னது போலவே குடிலை விட்டு வெளியேற முடிவு செய்தான். குருவின் காலில் விழுந்து ஆசி பெற்று அங்கிருந்து புறப்பட்டோம். வழிநெடுகிலும் எப்படியும் குருவின் மனதை மகிழ்ச்சிப்படுத்தி விடவேண்டும் என்ற எண்ணமே அவனுக்குள் மேலோங்கி இருந்தது. 'என் உடலில் உயிர் இருக்குமேயானால், நாராயணனுடன் தான் என் குருவை சந்திக்க வருவேன் என்று சபதம் ஏற்றாள்

அகத்தியரிடம் இருந்து சென்ற சுதீட்சணன், தண்டகாரண் யத்தில் நீண்டகாலமாக தவம் செய்து வந்தான். கடுமையான தவம் காரணமாக, அவன் வளர்ந்தபின் சுதீட்சண முனிவர் ஆனார்

ராமபிரான் 14 ஆண்டுகள் வனவாச வாழ்க்கை மேற்கொண்ட போது, அவரை தரிசிக்கும் வாய்ப்பு சுதீட்சணருக்கு கிடைத்தது

ஆனால் ராமனை தரிசித்ததோடு, அவரை சுதீட்சணர் விட்டு விட வில்லை. தன் குருவான அகத்தியரை சந்திக்க வரும்படி ராமபிரானை அழைத்துச் சென்றார். இப்படி அகத்தியர் முன்பாக நாராயணரை நிறுத்தி, குருவின் உத்தரவையும் தனது சபதத்தையும் ஒரு சேர நிறைவேற்றினார் சுதர்சணர்

ஜுலை மாதம் முக்கிய தினங்கள்

*நமஸ்காரம்.*

*ஜுலை மாதம் விசேஷங்கள்*

 1/7/2020.புதன்கிழமை சர்வ ஏகாதசி

 2/7/2020.வியாழக்கிழமை ப்ரதோஷம்

 4/7/2020. சனிக்கிழமை குரு பூர்ணிமா

 8/7/2020.புதன்கிழமை. ஸங்கடஹரசதுர்த்தி

16/7/2020.வியாழக்கிழமை. தக்ஷிணாயண புண்ணியகால தர்ப்பணம்

 16/7/2020.வியாழக்கிழமை. ஆடிப்பண்டிகை

 16/72020, வியாழக்கிழமை. ஸர்வ ஏகாதசி

 18/7/2020.சனிக்கிழமை. ப்ரதோஷம்

 20/7/2020. திங்கட்கிழமை. ஆடி அமாவாசை

 24/7/2020. வெள்ளிக்கிழமை. நாக சதுர்த்தி.... ஆடிப்பூரம்

 25/7/2020. சனிக்கிழமை. கருட பஞ்சமி

 26/7/2020. ஞாயிற்றுக்கிழமை. ஷஷ்டி வ்ரதம்

 30/7/2020. வியாழக்கிழமை. ஸர்வ ஏகாதசி

 31/7/2020. வெள்ளிக்கிழமை. வரலக்ஷ்மி வ்ரதம்

உண்மை நிகழ்வு - தரிசனம்

*மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - ஸ்ரீ சங்கர தரிசனம்!*

_அனுபவம் பகிர்ந்தவர்: திரு. கணபதி ஸ்தபதி_

சிறு வயதில் காஞ்சிப் பெரியவரை நான் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம்.

1957ல் எனது தந்தையார் சிற்பக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அப்போது திடீரென்று வாத நோய் அவருக்கு ஏற்பட்டது. இதை நான் எனது வளர்ப்புத் தந்தை கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்களிடம் கூறியபோது அவர் காஞ்சி மகா பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார். அப்போது சுவாமிகள் இளையாற்றங்குடியில் தங்கியிருந்தார். அது ஒரு குக்கிராமம். நான் போகும்போதே மணி இரவு ஒன்பதாகி இருந்தது. சுவாமிகள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று, மேனேஜர் மூலம் தகவல் தெரிவித்தேன். உடனடியாக என்னை அழைத்து வரச் சொன்னார்கள். சுவாமிகளைச் சுற்றி நிறைய பக்தர்கள் கூட்டம் இருந்தது. அனைவரையும் விலக்கி என்னை அழைத்தார்கள். சுவாமிகளிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, என் தந்தையின் நிலையைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு குணமாகுமா, ஆகாதா, பலப்பல கோயில்களைக் கட்டிய இவருக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்றெல்லாம் சுவாமிகளிடம் கேட்டேன்.

சுவாமிகளோ அதற்கு பதில் ஏதும் கூறாமல், என்னைப் பற்றி, என் கல்வி பற்றி, நான் பார்க்கும் வேலை பற்றியே விசாரித்துக் கொண்டிருந்தார். எனக்கு மிகவும் கவலையாகி விட்டது. தந்தையைப் பற்றி இவர் எதுவுமே கூறவில்லையே அவருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ, உயிர் பிழைக்க மாட்டாரோ என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் சுவாமிகளோ திடீரென்று 'வா என்னுடன்' என்று கூறி விட்டு நடக்கத் தொடங்கினார்.

வெகு தூரம் நடந்து மூத்த சுவாமிகளின் அதிஷ்டானம் அருகே சென்றவர், 'இங்கேயே இரு' என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். நான் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தேன். மணி 12ஐக் கடந்து விட்டது. கூட்டம் கலைந்து சென்று விட்டது. நான் மட்டும் தனியே, வெளியில் காத்துக் கொண்டிருந்தேன். வெகு நேரம் சென்றிருக்கும், 'எங்கே அந்தப் பையன்?' என்று கேட்டுக் கொண்டே அதிஷ்டானத்தில் இருந்து வெளியில் வந்தார் சுவாமிகள். 'இங்கே இருக்கிறேன் சுவாமி' என்றேன் நான். சுவாமிகள் உள்ளே செல்லும் போது பாரம்பரிய தண்டத்தோடு மட்டுமே சென்றார். வரும்போது அவர் கையில் இரண்டு தேங்காய் மூடிகள் இருந்தன. வியப்புடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிரகாரத்தின் ஒரு மூலையில் நின்று, தண்டத்தைப் பிடித்துக் கொண்ட சுவாமிகள், என் தந்தையின் நிலையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

நான் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டவர், 'உன் அப்பாவுக்கு வந்திருப்பது பிராரப்த கர்மாவால். நீ மிகவும் அமோகமாக இருப்பாய்' என்று சொல்லி ஆசிர்வதித்தார். இரு தேங்காய் மூடிகளையும் என்னிடம் கொடுத்து, 'இந்த வழியாகப் போ. போகும் போது ஆஃபிஸில் போய் மேனேஜரைப் பார்த்து விட்டுப் போ' என்றார்.

அதுவோ பயங்கரமான இருள் பிரதேசம். சுவாமிகள் சொன்ன வழியில் எப்படிச் செல்வது என்று புரியாமல் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்த போது, ஒரு சிறுவன், சுமார் எட்டு வயதிருக்கும். குடுமி வைத்துக் கொண்டு முன்னால் வந்தான். முகத்தில் தெய்வீகக் களை. 'ஸ்தபதி, இந்த வழியாக என் பின்னாலேயே வாருங்கள்!' என்று சொல்லி நடக்கத் தொடங்கினான். எனக்கு மிகவும் ஆச்சரியம். யார் இவன், எங்கிருந்து வந்தான் என்று. ஏதாவது பேய், பிசாசாக இருக்குமோ என்று சற்று பயமாகக் கூட இருந்தது. மயானக் கரை வேறு அருகில் இருந்தது. ஆனாலும் அவன் பின்னாலேயே நடக்கத் தொடங்கினேன். அவன் உருவத்தைப் பார்க்கும்போது கோபுலு வரைந்த ஆதி சங்கரர் ஓவியம் நினைவுக்கு வந்தது. அந்த உருவமே நேரில் வந்திருப்பது போலத் தோன்றியது. சில நிமிடங்களில் மேனேஜர் இருப்பிடத்தை அடைந்ததும், அவரிடம் அந்தச் சிறுவன் ஏதோ கூறிவிட்டு இருட்டில் சென்று மறைந்து விட்டான்.

பின்னர் மேனேஜர் என்னிடம் ஒரு ரசீதில் கையொப்பமிட்டு ஐம்பது ரூபாயைப் பெற்றுக் கொள்ளும்படிச் சொன்னார். நான் மறுத்தேன். 'இது சுவாமிகளின் உத்தரவு. அவசியம் வாங்கிக் கொள்ள வேண்டும்' என்றார். நானும் மறுக்க மனமின்றி அதை வாங்கிக் கொண்டேன். அதன்பின் என்னை உள்ளே சென்று உணவருந்திவிட்டுச் செல்லுமாறு கூறினார். அப்போதோ நேரம் இரவு 1 மணிக்கு மேல் இருக்கும். நானும் நல்ல பசியில் இருந்தேன். உள்ளே சென்றால் சாதம், சாம்பார், ரசம் என எல்லாம் சுடச்சுட இருந்தது. சாப்பிட்டுவிட்டு, அகால வேளை என்பதால் அங்கேயே இரவு தங்கி விட்டுப் புறப்பட்டேன்.

பிற்காலத்தில் காஞ்சிபுரத்தில் சுவாமிகளிடம் இதைத் தெரிவித்த போது, 'எங்களுக்கெல்லாம் கிடைக்காத பாக்கியம் உனக்குக் கிடைத்திருக்கிறது. நாங்கள் எல்லாம் சங்கரரைப் பற்றிப் படித்துத் தான் இருக்கிறோம். ஆனால் உனக்கு அவரைப் பார்க்கும் பாக்யமே கிடைத்திருக்கிறது' என்று கூறி சிலாகித்தார். 'காமகோடி' என்ற இதழில் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். இது என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம்.

*பெரியவா சரணம்!*

_தொகுப்பு: பெரியவா குரல்_ | https://t.me/perivakural

*An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org*

எட்டு பவுன் ரெட்டை வட சங்கிலி

நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் மஹா பெரியவா திருவடி நிழலே சரணம்

. மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு ஏற்பட்டே தீரும். சாஸ்திரம் இதை‘கர்ம கோட்பாடு’ என கூறுகிறது.

மஹா பெரியவா
கண் கலங்காமல் படிங்கோ ....கருணை தெய்வம் மகா பெரியவா ..

“அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்டுக் கெளம்புங்கோ…..”

பல வருஷங்களுக்கு முன்பு, ஒரு நாள் விடியற்காலை, லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் ஏகாந்தமாக அமர்ந்திருந்தார். மகா பெரியவா.தரிசனத்துக்கு வந்திருந்த பக்தர்கள், தரிசித்துச் சென்றபின் அறைக்குச் செல்வதற்காக எழுந்தார் ஸ்வாமிகள். அப்போது வயதான பாட்டியும், இளம் வயதுப் பெண் ஒருத்தியும் வேகவேகமாக ஓடிவந்து, பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தனர். சற்று கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள்,மீண்டும் அப்படியே அமர்ந்துவிட்டார்.

சந்தோஷம் தவழ, “அடடே,மீனாட்சி பாட்டியா? என்ன அதிசயமா காலை வேளைல வந்திருக்கே?பக்கத்திலே ஆரு? ஒம் பேத்தியா…
பேரென்ன?” என்று வினவினார் ஸ்வாமிகள்.

மீனாட்சி பாட்டி..”பெரியவா, நா எத்தனையோ வருஷமா மடத்துக்கு வந்து ஒங்கள தர்சனம் பண்ணிண்டிருக்கேன்.
இதுவரைக்கும் ஸ்வாமிகள்கிட்டே “என்னைப் பத்தி தெரிவிச்சுண்டதில்லே…அதுக்கான சந்தர்ப்பம் வரலே.. ஆனா,இப்போ வந்துருக்கு. இதோ நிக்கறாளே..இவ எம் பொண் வயத்துப் பேத்தி.இந்த ஊர்ல பொறந்ததால
காமாட்சினு பேரு வெச்சுருக்கு.நேக்கு ஒரே பொண்ணு.. அவளும் பன்னண்டு வருஷத்துக்கு முன்னாலே,இவளை எங்கிட்ட விட்டுட்டு கண்ண மூடிட்டா… ஏதோ வியாதி… அவளுக்கு முன்னாலயே அவ புருஷன்
மாரடைப்புல போய்ச் சேர்ந்துட்டான்.

“அதுலேர்ந்து இவளை வெச்சுண்டு அல்லாடிண்டிருக்கேன். பள்ளிக்கூடத்துல சேத்துப் படிக்க வெச்சேன்.படிப்பு ஏறலே. அஞ்சாங் கிளாஸோடு நிறுத்தியாச்சு.வயசு பதினஞ்சு ஆறது.. இவளை ஒருத்தங்கிட்ட கையப் புடுச்சு குடுத்துட்டேன்னா
எங்கடமை விட்டுது” என்று சொல்லி முடித்தாள்.

பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த ஆச்சார்யாள், “நித்யம் கார்த்தால பத்து பத்தரை மணி சுமாருக்கு
சந்த்ரமௌலீஸ்வர பூஜைக்கு பாரிஜாத புஷ்பம் கொண்டுவர நீ, இன்னிக்கு விடிய காலம்பற வந்து நிக்கறதப் பார்த்த ஒடனேயே ஏதோ விசேஷத்தோடுதான் வந்துருக்கேங்கறத புரிஞ்சுண்டேன். சரி..என்ன சமாசாரம்?” என்று பளிச்சென்று கேட்டார் ஸ்வாமிகள்.

முதலில் தயங்கிய மீனாட்சி பாட்டி மெல்ல ஆரம்பித்தாள்.
“ஒண்ணுமில்லே பெரியவா, இவுளுக்கு ஏத்தாப்ல ஒரு வரன் வந்திருக்கு.பையனும் இந்த ஊர்தான். பள்ளிக்கூட வாத்தியார்.அறுவது ரூவா சம்பளமாம். நல்ல குடும்பம்,பிக்கல் புடுங்கல் இல்லே.ரெண்டு பேர் ஜாதகமும் நன்னா பொருந்தி இருக்குனு சொல்றா.
எப்படியாவது இத நீங்கதான் நடத்தி வெக்கணும் பெரியவா…” என்று நமஸ்கரித்து எழுந்தாள் பாட்டி.

உடனே ஆச்சார்யாள் சற்று உஷ்ணமான குரலில், “என்னது? கல்யாணத்த நா நடத்தி வெக்கறதாவது… என்ன பேசறே நீ..” என்று கடிந்து கொண்டார்.அடுத்த சில வினாடிகளிலேயே சாந்தமாகி, “சரி…நா என்ன பண்ணணும்னு எதிர்பாக்கறே?” என்றார்.

பாட்டி சந்தோஷத்தோடு, “ஒண்ணுமில்லே பெரியவா, இவ கல்யாணத்துக்காக அப்டி இப்டினு ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சுருக்கேன். அதுல கல்யாணத்த நடத்தி  முடுச்சுடுவேன். ஆனா, அந்த புள்ளயாண்டானோட அம்மா, “பாட்டி,நீங்க என்ன பண்ணுவேளோ, ஏது பண்ணுவேளோ.. ஒங்க பேத்தி கழுத்துல எட்டு பவுன்ல ரட்ட [இரட்டை] வட சங்கிலி ஒண்ணு போட்டே ஆகணும்’னு கண்டிஷனா
சொல்லிப்டா. பவுன்ல நகை நட்டுன்னு என் வருமானத்துல இவுளுக்கு பெரிசா ஒண்ணும் பண்ணிவைக்க முடியலே.
தலா ஒரு பவுன்ல இவ ரண்டு கைக்கு மாத்ரம் வளையல் பண்ணி வெச்சுருக்கேன்…அதான் என்னால முடிஞ்சது. நா எட்டு பவுன் ரட்ட வட சங்கிலிக்கு எங்கே போவேன் பெரியவா நீங்கதான்…” என்று முடிப்பதற்குள்…

ஸ்வாமிகள், “ரட்ட..வட சங்கிலிய எட்டு பவுன்ல பண்ணிப் போடணும்கறயா, சொல்லு?” என்று சற்றுக் கோபத்துடனே கேட்டார்.

உடனே மீனாட்சி பாட்டி, ஸ்வாமிகளை நமஸ்காரம் பண்ணி எழுந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு, “அபசாரம்..அபசாரம்
பெரியவா,நா அப்டி சொல்ல வரலே.ஒங்களை தரிசனம் பண்றதுக்கு நித்யம் எத்தனையோ பணக்காரப் பெரிய
மனுஷாள்ளாம் வராளே..அவாள்ள யாரையாவது நீங்க கை காட்டி விட்டு இந்த எட்டு பவுன் ரட்ட வட சங்கிலிய பூர்த்தி
பண்ணித்தரச் சொல்லக்கூடாதா?” என்று ஏக்கத்தோடு கேட்டாள்.

“தரிசனத்துக்கு வர பெரிய மனுஷாள்ட்ட கைகாட்டி விடறதாவது? அப்டியெல்லாம் கேக்கற வழக்கமில்லே. நீ வேணும்னா ஒன்
சக்திக்குத் தகுந்த மாதிரி, எட்டு..பத்து பவுன் கேக்காத எடமா பார்த்துக்கோ.அதான் நல்லது” என்று சொல்லி எழுந்துவிட்டார்
ஸ்வாமிகள்.

உடனே மீனாட்சி பாட்டி பதற்றத்தோடு, “பெரியவா அப்டி சொல்லிப்டு போகக்கூடாதுனு பிரார்த்திக்கிறேன்.இப்ப பாத்திருக்கிறது ரொம்ப நல்ல எடம் பெரியவா, பையன் தங்கமான குணம்,அவாத்துல ரெண்டு பொண்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறச்சே
எட்டெட்டு பவுன்ல ரட்ட வடச் சங்கிலி போட்டுத்தான் அனுப்பிச்சாளாம். அதனால வர்ற மாட்டுப்பொண்ணும் ரட்ட வடத்தோட வரணும்னு ஆசைப்படறா..வேறு இண்ணுமில்லே பெரியவா,நீங்கதான் இதுக்கு வழிகாட்டணும்” என்று கெஞ்சினாள்.

எழுந்துவிட்ட ஆச்சார்யாள் மீண்டும் கீழே அமர்ந்தார். சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தார். பிறகு கருணையோடு பேச ஆரம்பித்தார், “நா ஒரு கார்யம் சொல்றேன்….பண்றயா?”

“கண்டிப்பா பண்றேன்.என்ன பண்ணணும்னு சொல்லுங்கோ” என்று பரபரத்தாள் பாட்டி.

உடனே ஆச்சார்யாள், “ஒம் பேத்தியை அழச்சிண்டு அஞ்சு நாளைக்கு காமாட்சியம்மன் கோயிலுக்குப் போ.ரெண்டு பேருமா
சேந்து, “எட்டு பவுன்ல ரட்ட வட சங்கிலி போட்டு கல்யாணம் ஜாம்ஜாம்னு நடக்கணும்….நீதாண்டி அம்மா நடத்தி வைக்கணும்னு
பிரார்த்திச்சுண்டு ரெண்டு பேருமா சந்நிதியை அஞ்சு பிரதட்சணம் பண்ணுங்கோ, அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம்
பண்ணிட்டுக் கெளம்புங்கோ.இப்டி அஞ்சு நாளக்கி பண்ணுங்கோ… ஒம் மனசுல நெனச்சிண்டிருக்கறபடியே காமாட்சி நடத்தி வெப்பா”
என்று சிரித்துக்கொண்டே அனுக்கிரகித்தார்.

நமஸ்காரம் பண்ணி எழுந்த மீனாட்சி பாட்டி, “அதென்ன பெரியவா… எல்லாமே அஞ்சஞ்சா சொல்றேளே.அப்டி பண்ணா பேத்தி காமாட்சிக்கு அம்பாள் காமாட்சி கல்யாணத்த நடத்தி வெச்சுடுவாதானே” என ஆர்வத்தோடு கேட்டாள்.

உடனே மகா ஸ்வாமிகள், “அஞ்சஞ்சுனு நானா சொல்லலே. அம்பாளுக்கு, ‘பஞ்ச ஸங்க்யோபசாரிணி’னு ஒரு பெருமை உண்டு.
அஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு அனுக்கிரகம் பண்றவ அவ,அதத்தான் சொன்னேனே தவிர, வேற ஒண்ணுமில்லே”
எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.

“இத நாங்க எப்ப ஆரம்பிக்கட்டும் பெரியவா?” என்று பிரார்த்திதாள் பாட்டி.

ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே, “சுபஸ்ய சீக்ரஹனு சொல்லிருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை. ஏன், இன்னிக்கே
ஆரம்பிச்சுடேன்” என உத்தரவு கொடுத்தார்.

“சரி பெரியவா.அப்டியே பண்றேன்” என்று சொல்லிப் பேத்தியுடன் நகர்ந்தார்.பெரியவா எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே, “சுபஸ்ய சீக்ரஹனு சொல்லிருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை. ஏன், இன்னிக்கே
ஆரம்பிச்சுடேன்” என உத்தரவு கொடுத்தார்.

“சரி பெரியவா.அப்டியே பண்றேன்” என்று சொல்லிப் பேத்தியுடன் நகர்ந்தார்.பெரியவா எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

பேத்தியுடன் காமாட்சி அம்மன் கோயிலை நோக்கி நடந்தாள் பாட்டி. வெள்ளிக்கிழமையானதால் கோயிலில் ஏகக் கூட்டம்.
அன்னை காமாட்சி அன்று விசேஷ அலங்காரத்தில் ஜொலித்தாள். இருவரும் கண்களை மூடிப் பெரியவா சொன்னது போலவே
பிரார்த்தித்துக் கொண்டனர். பேத்தியின் நட்சத்திரத்துக்கு ஓர் அர்ச்சனை செய்து பிரசதம் வாங்கிக்கொண்டாள் பாட்டி.

பிறகு பேத்தியும் பாட்டியும் அம்மனிடம், “எட்டு பவுன் ரட்ட வட சங்கிலி’யையே பிரார்த்திதபடி ஐந்து பிரதட்சணம் வந்தனர்.
ஸ்வாமிகள் சொன்னபடி அம்பாளுக்கு முன்பாக ஐந்து நஸ்காரம் பண்ணினார்கள். பிறகு நம்பிக்கையுடன் வீடு திரும்பினர்.

சனிக்கிழமை காலையில் பேத்தியை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டுப் புறப்பட்ட மீனாட்சி பாட்டி,பாரிஜாத
புஷ்பங்களைச் சேகரித்துக்கொண்டு சங்கர மடம் நோக்கி விரைந்தாள்.மடத்தில் ஏகக் கூட்டம்.மீனாட்சி பாட்டி இருபது
முப்பது பக்தர்களுக்குப் பின்னால் பேத்தியுடன் நின்றிருந்தாள். பாட்டிக்கு முன்னால் நின்றிருந்தவர் தனக்கு அருகிலிருந்தவரிடம்
சொல்லிக்கொண்டிருந்த விஷயம் பாட்டியின் காதில் விழுந்தது.

அவர், “இன்னிக்கு அனுஷ நட்சத்ரம். பெரியவாளோட நட்சத்ரமாம். அதனால் ஸ்வாமிகள் இன்னக்கி மௌன விரதம்.
யாரோடயும் பேசமாட்டாராம்.முக தரிசனம் மட்டும்தான்” என்று விசாரப்பட்டுக் கொண்டார்.

மீனாட்சி பாட்டிக்குக் கவலை தொற்றிக் கொண்டது. இன்னிக்கும் பெரியவாளைப் பாத்து எட்டு பவுன் ரட்ட வட
சங்கிலிய பத்தி ஞாபகப்படுத்தலாம்னு நெனச்சுண்டிருந்தேனே, அது இப்ப முடியாது போலருக்கே?” என்று கவலைப்பட்டாள்.
பெரியவா அமர்ந்திருந்த இடத்தை நெருங்கிய இருவரும் ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தனர். எந்தவொரு சலனமுமின்றி
அப்படியே அமர்ந்திருந்தது,அந்த பரப் பிரம்மம்.”எட்டு பவுன் ரட்ட வட சங்கிலி” குறித்துச் சட்டென்று வாய் திறந்து ஸ்வாமிகள்
ஏதும் சொல்லிவிட மாட்டாரா என ஏங்கினாள் பாட்டி.
மகா ஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தவர் சற்றுக் கடுமையாக, “பாட்டி, நகருங்கோ…நகருங்கோ..பெரியவா
இன்னிக்கு மௌன விரதம் பேசமாட்டார்.பின்னாலே எத்தனை பேர் காத்துண்டுருக்கா பாருங்கோ” என்று விரட்டினார்.

காமாட்சியம்மன் கோயிலை நோக்கி பேத்தியுடன் நடையைக் கட்டினாள்.அன்றைக்கும் காமாட்சியம்மன் சந்நிதியில் பெரியவா
கூறியபடி ‘பஞ்ச ஸங்க்யோபசார’த்தை அர்ப்பணித்து வீடு திரும்பினர் இருவரும்.அடுத்தடுத்து ஞாயிறு,திங்கள் இரு
நாட்களும் மகா ஸ்வாமிகள் மௌன விரதம் மேற்கொண்டார்.
இரு நாட்களும் மடத்துக்குப் போய் பெரியவாளை தரிசனம் மட்டும் செய்துவிட்டுத் திரும்பினர் பாட்டியும் பேத்தியும்.
பாட்டி ரொம்பக் கவலைப்பட்டாள்.”பெரியவா சொன்ன பிரகாரம் அஞ்சுல நாலு நாள் பூர்த்தியாயிடுத்தே,ஒண்ணுமே நடக்கலியே…
அம்மா காமாட்சி கண் திறந்து பாப்பாளா,மாட்டாளா?” என்று தனக்குத்தானே அங்கலாய்த்துக் கொண்டாள் பாட்டி

செவ்வாய்க்கிழமை விடிந்தது.அன்று காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் மிகவும் கலகலப்பாக இருந்தது.ஆரணியிலிருந்து வந்திருந்த
பஜனை கோஷ்டி ஒன்று மடத்தை பக்திப் பரவாத்தில் ஆழ்த்திக்கொண்டு இருந்தது.

ஆச்சார்யாள் வழக்கமான இடத்தில் வந்து உட்கார்ந்தார். அன்றைய தினம் பெரியவா முகத்தில் அப்படி ஒரு மகா தேஜஸ்!
இன்று மௌனம் கலைத்துவிட்டார் ஸ்வாமிகள். பெரியவாளை தரிசிக்க ஏகக் கூட்டம். வரிசையில் வந்த நடுத்தர வயது மாமி,
முகத்தில் மகிழ்ச்சி பொங்க ஸ்வாமிகளுக்கு முன் வந்து நமஸ்கரித்து எழுந்தாள். அந்த அம்மா முகத்தில் அப்படி ஒரு குதூகலம். தான்
கொண்டு வந்திருந்த பெரிய ரஸ்தாளி வாழைத் தார், மட்டைத் தேங்காய்கள்,சாத்துக்குடி,ஆரஞ்சு,பூசணி,மொந்தன் வாழைக்காய்
வகையறாக்களை ஆச்சார்யாளுக்கு முன் சமர்ப்பித்துவிட்டு, மீண்டும் ஒரு தடவை நமஸ்கரித்தாள்.

எதிரிலிருந்த பதார்த்தங்களை ஒரு தடவை நோட்டம்விட்ட ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டார். பிறகு கண்களை இடுக்கிக்கொண்டு
அந்த அம்மாவையே கூர்ந்து நோக்கியவர், நீ நீடாமங்கலம் மிராசுதார் கணேசய்யரோட ஆம்படையா[மனைவி] அம்புஜம்தானே?
ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்திருந்தே..ஏதோ சொல்லி துக்கப்பட்டுண்டே..இப்போ சந்தோஷமா பெரிய வாழத்தாரோட
நீ வந்துருக்கறதைப் பாத்தா காமாட்சி கிருபையில அதெல்லாம் நிவர்த்தி ஆயிருக்கும்னு படறது.சரிதானே!” என்று கேட்டார்.

அம்புஜம் அம்மாள் மீண்டும் ஒருமுறை ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு,”வாஸ்தவந்தான் பெரியவா. மூணு வருஷமா
எங்க ஒரே பொண் மைதிலிய அவ புக்காத்துல தள்ளி வெச்சிருந்தா. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்ககிட்ட ஓடி வந்து இந்த
அவலத்தைச் சொல்லி அழுதேன்.நீங்கதான் இந்த ஊர் காமாட்சியம்மன் கோயில்ல அஞ்சு நாளக்கி,அஞ்சு பிரதட்சிணம்,
அஞ்சு நமஸ்காரம் பண்ணி..அபிஷேக ஆராதனையும் பண்ணச் சொன்னேள்.

“சிரத்தையா பூர்த்தி பண்ணிட்டுப் போனேன்.என்ன ஆச்சரியம் பாருங்கோ..பதினஞ்சு நாளக்கி முன்னாடி,ஜாம்ஷெட்பூர் டாடா
ஸ்டீல்ல வேல பாக்கற எம் மாப்ள ராதாகிருஷ்ணனே திடீர்னு வந்து மைதிலிய அழைச்சிண்டு போய்ட்டார். எல்லாம் அந்த
காமாட்சி கிருபையும்,ஒங்க அனுக்கிரகமும்தான் பெரியவா” என்று ஆனந்தக் கண்ணீர் மல்கக் கூறினாள்.

உடனே பெரியவா, “பேஷ்..பேஷ்..ரொம்ப சந்தோஷம்.தம்பதி க்ஷேமமா இருக்கட்டும். ஆமா…இவ்ளவு பெரிய வாழத்தார் எங்க
புடிச்சே. பிரமாண்டமா இருக்கே!” என்று கேட்டுவிட்டு இடிஇடியென்று சிரித்தார்.

அம்புஜம் அம்மாள் சிரித்துக்கொண்டே,”இது நம்ம சொந்த வாழைப் படுகையில வெளஞ்சது பெரியவா.அதான் அப்டி
பெரிய தாரா இருக்கு” என்று பவ்யமா பதில் சொன்னாள்.

ஸ்வாமிகள் மகிழ்வோடு,” சரி…சரி..ஒம் பொண்ணு,மாப்ளய திருப்பியும் அம்மா காமாட்சிதான் சேத்து வெச்சிருக்கா,அதனால்
நீ இந்தப் பெரிய வாழத்தார எடுத்துண்டு போயி அவளுக்கு அர்ப்பணம் பண்ணிட்டு அங்க வர பக்தாளுக்கு விநியோகம்
பண்ணிடு” என்று கட்டளையிட்டார்.

உடனே அம்புஜம் அம்மாள், “இல்லே பெரியவா…இது இந்த சந்நிதானத்துலயே இருக்கட்டும். அம்பாளுக்கு அர்ப்பணிக்க
இதே மாதிரி இன்னொரு வாழத்தார் கொண்டு வந்திருக்கேன். பெரியவா…. நா உத்தரவு வாங்கிண்டு அம்பாளை தரிசனம்
பண்ணிட்டு பிரார்த்தனையைப் பூர்த்தி பண்ணிட்டு வந்துடறேன்” என்று நமஸ்கரித்தாள்.

“பேஷா,பிரார்த்தனையை முடிச்சுண்டு வந்து மத்யானம் நீ மடத்ல சாப்டுட்டுத்தான் ஊருக்கு திரும்பணும்..ஞாபகம்
வெச்சுக்கோ”என்று உத்தரவு கொடுத்தார் ஸ்வாமிகள்.

அன்று காமாட்சியம்மன் கோயிலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. காலை 11 மணி வழக்கத்தைவிட நேரமாகிவிட்டதால்
பேத்தியுடன் கோயிலை நோக்கி வேகமாக நடையைக் கட்டினாள் மீனாட்சி பாட்டி. கோயில் வாசலில் அர்ச்சனைத் தட்டு
வியாபாரம் செய்கிற கடைக்கு முன் நின்ற பாட்டி, பேத்தியிடம், “அடியே காமாட்சி, இன்னிக்கு பூர்த்தி நாள்டீ. அதனால
எல்லாத்தயுமே ஆச்சார்யாள் சொன்னபடி அஞ்சஞ்சாபண்ணிடுவோம். நீ என்ன பண்றே..அர்ச்சனைக்கு அஞ்சு தேங்கா,அஞ்சு ஜோடி
வாழப்பழம்,வெத்தல பாக்குனு எல்லாமே அஞ்சஞ்சா வாங்கிண்டு ஓடி வா,பார்ப்போம் என்று காசைக் கொடுத்தாள்.

பாட்டி சொன்னபடியே வாங்கி வந்தாள் பேத்தி. அம்பாளுக்கு அர்ச்சனை பண்ணி, கண்களில் நீர் மல்கப் பிரார்த்தித்துக் கொண்டாள்
பாட்டி: “அம்மா காமாட்சி, ஒன்னைத்தாண்டியம்மா பூர்ணமா நம்பிண்டிருக்கேன். ஒன்னையும் ஸ்வாமிகளையும் விட்டா
வேற கதி நேக்கு இல்லேடிம்மா.நீதான் எப்டியாவது அந்த எட்டு பவுன் ரட்ட வட சங்கிலிக்கு ஏற்பாடு பண்ணித் தந்து
பேத்தி கல்யாணத்தை நல்ல படியா முடிச்சு வெக்கணும்..”

பாட்டி விசும்ப, பேத்தியும் விசும்பினாள். பாட்டி முன் செல்ல பேத்தி பின் தொடர இருவரும் பிராகார வலத்தை ஆரம்பித்தனர்.
நான்காவது பிரதட்சிணம், வடக்குப் பிராகாரத்தில் வலம் வந்து கொண்டு இருந்தனர் இருவரும்.

“பாட்டீ…பாட்டீ….பாட்டீ…!” பேத்தியின் உயர்ந்த குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த பாட்டி,ஆத்திரத்தோடு, “ஏன் இப்டி கத்றே?
என்ன பறிபோயிடுத்து நோக்கு? என்று கடுகடுத்தாள்.

“ஒண்ணும் பறிபோகலே பாட்டி,கெடச்சிருக்கு! இப்டி ஓரமா வாயேன் காட்றேன்!” என்று சொல்லி பாட்டியை ஓரமாக
அழைத்துப் போய்த் தன் வலக்கையைத் திறந்து காண்பித்தாள். பேத்தி.அதில் முகப்புடன் கூடிய அறுந்த இரட்டை வட
பவுன் சங்கிலி!

“ஏதுடி இது?” பாட்டி ஆச்சரியத்தோடு கேட்டாள். பேத்தி, “நோக்குப் பின்னால குனிஞ்சுண்டே வந்துண்டிருந்தேனா..
அப்போ ஓரமா கெடந்த இந்த சங்கிலி கண்ண்ல பட்டுது… அப்டியே ‘லபக்’னு எடுத்துண்டுட்டேன். ஒருத்தரும் பார்கலே!
இது அறுந்துருக்கே பாட்டி..பவுனா..முலாம் பூசினதானு பாரேன்” என்றாள்.

அ’தைக் கையில் வாங்கி எடையைத் தோராயமாக அனுமானித்த பாட்டி, “பவுனாத்தான் இருக்கணும்னு தோண்றதுடி,காமாட்சி, எட்டு..எட்டரை பவுன் இருக்கும்னு நெனக்கிறேன்.இது பெரியவா கிருபைல காமாட்சியே நமக்கு அனுக்கிரகம் பண்ணியிருக்கா.சரி…சரி….வா, வெளியே போவோம்,மொதல்லே” என்று சொல்லியபடி அதைத்தன்
புடவைத் தலைப்பு நுனியில் முடிந்துகொண்டு, வேக வேகமாக வெளியே வந்துவிட்டாள்.அன்று பிரதட்சிணத்தில், “பஞ்ச
ஸங்க்யோபசார’த்தை [5 முறை வலம் வருவதை] மறந்து விட்டாள்.
மதியம் ஒரு மணி, ஆச்சார்யாளை தரிசிக்க மடத்தில் நான்கோ அல்லது ஐந்து பேரோ காத்திருந்தனர்.பேத்தியுடன் வந்த மீனாட்சி
பாட்டி ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தாள்.பாட்டியைப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்தார். ஸ்வாமிகளிடம் பவுன் சங்கிலி கண்டெடுத்த
விஷயத்தைச் சொல்லலாமா…வேண்டாமா என்று குழம்பினாள்.

அதற்குள் ஸ்வாமிகளே முந்திக்கொண்டு, “இன்னியோட நோக்கு காமாட்சியம்மன் கொயில்ல பஞ்ச ஸங்க்யோபசார பிரதட்சிணம்
கிரமமா பூர்த்தியாகி இருக்கணும்…..ஆனா ஒம் பேத்தி கைல கெடச்ச ஒரு வஸ்துவால அது பூர்த்தியாகாம போயிடுத்து!
அந்த சந்தோஷம்….நாலு பிரதட்சிணத்துக்கு மேல ஒன்ன பண்ண விடலே. காமாட்சி பூர்ணமா அனுக்கிரகம்
பண்ணிப்டதா நெனச்சுண்டு வேகமா வந்துட்டே… என்ன நான் சொல்றது சரிதானே?”என யதார்த்தமாகக் கேட்டார்.

பாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டது. மென்று விழுங்கினாள். கை கால் ஓடவில்லை. “ஸ்வாமிகள் என்னை தப்பா
எடுத்துண்டுடப்டாது. பேத்தி கைல அது கிடச்ச ஒடனே, அம்பாளே அப்டி பிராகாரத்துல போட்டு பேத்திய எடுத்துக்கச்
சொல்லியிருக்கானு நெனச்சுண்டுட்டேன்….அந்த சந்தோஷத்துல இன்னொரு பிரதட்சிணம் பண்ணணும்கறதையும் மறந்துட்டேன்”
என்று தயங்கித்தயங்கிச் சொன்னாள்.

உடனே பெரியவா, “அது மட்டும் மறந்துட்டயே ஒழிய, அந்த வஸ்துவ எடுத்துண்டுபோய் காசுக்கடை ரங்கு பத்தர்ட்ட
எட போடறத்துக்கோ….அறுந்தத பத்த வக்கறத்துக்கோ மறக்கலியே நீ?” என்று சற்றுக் கடுமையாகக் கேட்டுவிட்டு,
“அது போகட்டும்…. எட போட்டயே….சரியா எட்டு இருந்துடுத்தோல்லியோ” என முத்தாய்ப்பு வைத்தார்.

கிடுகிடுத்துப் போய்விட்டனர் பாட்டியும் பேத்தியும். “நீங்க சொன்னதெல்லாம் சத்யம் பெரியவா” என்றாள் பாட்டி.

ஸ்வாமிகள் அமைதியாகக் கேட்டார், “நியாயமா சொல்லு, அந்த பதார்த்தம் யாருக்குச் சொந்தம்?”

“அம்பாள் காமாட்சிக்கு.”

“நீயே சொல்லு…அத ரகசியமா எடுத்து ஒம் பொடவ தலப்ல முடிஞ்சிக்கலாமா?”

“தப்பு…தப்புதான்! என்ன மன்னிக்கணும், தெரியாம அப்டிப் பண்ணிப்டேன்” என்று மிகவும் வருத்தப்பட்ட பாட்டி,
அந்த ரட்ட வட பவுன் சங்கிலியை எடுத்து,கை நடுங்க ஸ்வாமிகளுக்கு முன்பிருந்த பித்தளை தாம்பாளத்தில்
வைத்தாள். சிரித்தார் ஸ்வாமிகள்.

இப்போது மணி இரண்டு, மீனாட்சி பாட்டியையும்,பேத்தியையும் எதிரில் அமரச் சொன்னார் ஸ்வாமிகள்.. அப்போது,கலையில்
புறப்பட்டுச் சென்ற நீடாமங்கலம் கணேசய்யரின் தர்மபத்தினி அம்புஜம் அம்மாள், சொகமே உருவாகத் திரும்பி வந்து
ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தாள்.பொலபொலவென்று கண்களில் நீர் வழிந்தது. இதைப் பார்த்த ஸ்வாமிகள்,
“அடடா…எதுக்கம்மா கண் கலங்கறே? என்ன நடந்தது?” என வாத்ஸல்யத்துடன் வினவினார்.

உடனே அம்புஜம் அம்மாள் கண்களைத் துடைத்துக்கொண்டே, “வேற ஒண்ணுமில்லே பெரியவா,ரண்டு மாசத்துக்கு முன்னாடி
ஒங்க உத்தரவுபடி காமாட்சியம்மன் கோயில்ல அஞ்சு நாள் சேவை பண்றச்சே,’பிரிஞ்சிருக்கிற எம் பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஒண்ணா சேத்து வெச்சயானா, எங்கழுத்துல போட்டுண்ருக்கற எட்டு பவுன் ரட்ட வட சங்கிலிய நோக்கு அர்ப்பணம் பண்றேன்’னு அம்பாள்ட்ட மனப்பூர்வமா பிரார்த்திச்சுண்டேன்.

தம்பதிய ஒண்ணா சேத்து வெச்சுட்டா அம்பாள். வேண்டிண்டபடி அந்த ரட்ட வடத்த சேத்துடலாம்னு கார்த்தால கோயிலுக்குப்
போனேன். அந்த செயின் கழுத்லேர்ந்து நழுவி எங்கேயோ விழுந்துடுத்து. போன எடத்தெல்லாம் தேடிப் பார்த்துட்டேன்.
ஒரு எடத்லயும் கிடைக்கலே…இப்ப என்ன பண்ணுவேன் பெரியவா?” என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.

ஸ்வாமிகள் மீனாட்சி பாட்டியின் பக்கம் தன் பார்வையைத் திருப்பி, அர்த்தபுஷ்டியுடன் பார்த்தார். ஸ்வாமிகளை அப்படியே நமஸ்கரித்துவிட்டு, விருட்டென்று எழுந்தாள் பாட்டி. பெரியவாளுக்கு முன் பித்தளைத் தாம்பாளத்தில் இருந்த ரட்ட வட பவுன் சங்கிலியைக் கையில் எடுத்தாள். மகிழ்ச்சியுடன், “அம்மா பங்கஜம்… நீ தவறவிட்ட ரட்ட வடம் இதுவா பாரு?” என்று காண்பித்தாள்.

அதைக் கையில் வாங்கிப் பார்த்த அம்புஜம் அம்மாள் “இதேதான்….இதேதான்…..பாட்டி..இது எப்படி இங்கே வந்தது?
ஆச்சரியமா இருக்கே!” என்று வியந்தாள்.நடந்த விஷயங்கள் அத்தனையையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் பாட்டி.

மீனாட்சி பாட்டியை கட்டியணைத்துக் கொண்ட அம்புஜம் அம்மாள் “பாட்டி, நீங்க கவலையே படாதீங்கோ. ஆச்சார்யாளுக்கு முன்னால ஒங்ககிட்ட இதத் தெரிவிச்சுக்கிறேன்.எட்டு பவுன்ல ஒங்க பேத்திக்கு புதுசா ரட்ட வட சங்கிலி போட்டுக் கல்யாணம் ‘ஜாம்ஜாம்’னு நடக்கும், நா கழுத்தில போட்டுண்டிருந்த இந்த ரட்ட வடத்தத்தான் அம்பாளுக்கு அர்ப்பணிக்கறதா வேண்டிண்ருக்கேன். இன்னிக்கு சாயந்தரமே ஒங்களையும், பேத்தி காமாட்சியையும் இந்த ஊர் நகைகடைக்கு அழச்சிண்டு போய்,எட்டு பவுன் ரட்ட வட சங்கிலி ஒண்ணு வாங்கித் தரேன்.அதோட கல்யாணச் செலவுக்காக ஐயாயிர ரூபாயும் தரேன்”
என்று ஆறுதல் அளித்தாள். ஸ்வாமிகள் இந்த காட்சியை பிரத்யட்ச காமாட்சியாக அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தார். அனைவரும் ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தனர்.
ஆச்சார்யாள்,மீனாட்சி பாட்டியைப் பார்த்து,, ”இன்னிக்கு நீயும் ஒம் பேத்தியும் கொயில்ல அஞ்சு பிரதட்சிணம் பண்ணலே.
சாயந்தரமா போயி அஞ்சு பிரதட்சிணம்,அஞ்சு நமஸ்காரம் பண்ணி அம்பாள பார்த்துட்டு வாங்கோ” என்று விடை கொடுத்தார்.

மீனாட்சி பாட்டியும் அவள் பேத்தியும் அப்போது அடந்த சந்தோஷத்தையும் சிலிர்ப்பையும் வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.!

ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா குருவே சரணம் குருவின் திருவடி சரணம்

சிலிம்பா வும் சிரஞ்சீவி கதையும்

ஆஞ்சநேயர் சிரஞ்சீவி ஆன கதை
*************************************
சிரஞ்ஜீவியான ஆஞ்சநேயர் - சீதா தேவி கொடுத்த வரம்

ஆஞ்சநேயரின் கனவில், அவருடைய  மூதா தையர்  மிகுந்த வருத்தத்துடன் காட்சியளித் தார்கள். ஆஞ்சநேயருக்கு இந்த கனவிற்கான காரணம்  புரியவில்லை.

அவா் வசிஷ்டரின்  மகனிடம் போய், கனவைச் சொல்லி அதற்கு விளக்கம் கேட்டார். அதற்கு வசிஷ்டரின் மகன், “ஆஞ்சநேயா! உன் முன்னோர்களுக்குப் பசி எடுத்திருக்கும். ஆகையால், உன் முன்னோர்களுக்கு நினைவு க்கடன் செலுத்தி, அவர்களுக்கு ஏதாவது கொடு!” என்றார்.

ஆஞ்சநேயரும் அதன்படியே செய்தார். ஆனால், முன்னோர்கள் மறுபடியும் கனவில் வந்து வருத்தமுடன் காட்சி தந்தனர்.

இந்த முறை  ஆஞ்சநேயர் உண்மையை உணர்ந்து  கொண்டார். “ஆஞ்சநேயா! நீ பொறுப்பாக எங்களுக்குப் பிண்டம் அளிக்கி றாய். ஆனால், உனக்குப்பின் இவ்வாறு, எங்களுக்கு யார் செய்வார்கள்?”என அவர்கள்  வருந்துவதாக ஆஞ்சநேயருக்குப் புலப்பட்டது.

அவருடைய கவலையையும் அதற்கான காரணத்தையும் அறிந்த அன்னை சீதாதேவி, “ஆஞ்சநேயா வருந்தாதே. கிஷ்கிந்தைக்குச் செல். பெண் பார்த்து அழைத்து வா. நான் திருமணம் செய்து வைக்கிறேன்.அப்புறம் என்ன? உன் சந்ததியால், முன்னோர்களுக்கு உண்டான சிராத்த கடமைகளை  செய்வார்கள் என்றார்.

அதன்படியே கிஷ்கிந்தைக்குச் சென்ற அனு மன், சுக்ரீவனிடம் விவரத்தைச் சொன்னார். சுக்ரீவன், கிஷ்கிந்தைக்கு தெற்கே உள்ள கீச்சட் என்ற நாட்டின் அரசகுமாரியான சிலிம்பா என்பவளைப் பற்றிக் கூறி, அவளை மணம் முடிக்க முயற்சி செய்யும்படி அறிவுறுத்தினார்.

அனுமனும் உடனே அந்த நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரை சிலிம்பாவிடம் அழைத்துச் சென்றார்கள் அரண்மனைக் காவலர்கள். அனுமன் அவளிடம் தான் வந்த விஷயத்தைச் சொன்னார்.அவரை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்த சிலிம்பா, அவரைப்பற்றி ய தகவல்களையெல்லாம் அவர் மூலமாகவே கேட்டுத் தெரிந்து கொண்டாள். பின்னர், “காதல் தத்துவத்தைப் பற்றி எவ்வளவு தெரியும்? ஒரு முத்து மாலைக்கு நான் ஆசைப் பட்டால், அதை எப்படிக் கொண்டு வந்து கொடுப்பீர்கள்? கோபம் கொண்டு நான் சாப்பிட மறுத்தால், என்ன செய்வீர்கள்?” என்றெல்லாம், கேள்வி மேல் கேள்விகளை அடுக்கினாள்.

ஆஞ்சநேயர் இந்த கேள்விகளுக்கு  பதில் கொடுத்தார் .‘‘காதல் தத்துவம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், அதை சுக்ரீவனிடத்தில் கேட்டால், அவன் காதல் தத்துவத்தைச் சொல்லிக் கொடுத்து விடுவான். அடுத்து முத்துமாலை வேண்டுமென்றால், அன்னை சீதா தேவியிடம் கேட்டு வாங்கிக் கொடுத்து விடுவேன். மூன்றாவதாக, நீ கோபப்பட்டு உண்ணாமல் இருந்தால், நானே இரும்பு போன்ற என் விரல்களால் உனக்கு ஊட்டிவிடுவேன். ஆகையால் கால தாமதம் செய்யாதே! அயோத்தியில் சீதாதேவி உன்னை வரவேற்கத் தயாராக இருக்கிறார் என்றார்.

சிலிம்பாவோ ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு, “உனக்குக் காதலைப்பற்றி ஒன்றுமே தெரிய வில்லை. போய் சுக்கிரீவனை அனுப்பு!”என அவமானப்படுத்தினாள்.

அதனால் கோபம் கொண்ட அனுமன், ஆவேச த்துடன் சிலிம்பாவை நோக்கி முன்னேறினார். அதற்குள்ளாக, சிலிம்பாவின் வீரர்கள் அனும னைப் பிடித்து கட்டிப்போட்டார்கள்.

“இந்தக் குரங்கைச் சும்மா விடக்கூடாது. இதன் வாலில் பன்னிரண்டு அங்குலம் மட்டும் வெட்டிவிட்டு, தூக்கியெறிந்துவிடுங்கள்!” என உத்தரவிட்டாள் சிலிம்பா.அதே விநாடியில் அனுமன் ராமனைத் தியானிக்க, அவரைக் கட்டியிருந்த கட்டுக்கள் தளர்ந்தன; உடம்பு இமயம் போல் பிரம்மாண்டமாக வளர்ந்தது. அப்படியே தாவிய அனுமன் சிலிம்பாவின் தலைமுடியைப் பற்றியபடி, ஆகாயத்தில் எழுந்து பறக்கத் தொடங்கிவிட்டார்.

அந்த நேரம், “அட! ஆஞ்சநேயரின் பிரம்மசர்ய விரதம் முடியப் போகிறது” என்று பேசியபடியே அஷ்டதிக் பாலர்கள், ஆஞ்சநேயரை நெருங்கி, “ ஆஞ்சநேயா நீங்கள் கொண்டுசெல்லும் பெண்ணைப் பார்க்க விரும்புகிறோம் நாங்கள்” என்று கூறினார்கள்.பெருங்குரல் எடுத்து  ஆஞ்சநேயர்  ஒரு முழக்கமிட, அனைவருமாகப் பயந்து மேகக் கூட்டங்களில் போய் மறைந்தார்கள்.

சிலிம்பா கெஞ்சினாள். தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினாள். ஆஞ்சநேயரின் பிடி தளரவே இல்லை. அதிவேகமாக ஆஞ்சநேயர்  போய்க் கொண்டிருந்த போது, கீழே  துங்க பத்ரா நதியில் சுக்ரீவன் தன் மனைவிகளுடன் நீராடிக் கொண்டிருந்தது, ஆஞ்சநேயரின் பார்வையில் பட்டது.அவ்வளவுதான். சிலிம்பா வை ஆகாயத்திலிருந்து சுக்ரீவனின் தோள்க ளில் விழும்படியாக உதறிவிட்டு, முன்பைவிட வேகமாகப் பறந்து போகத் தொடங்கினார்.

அயோத்திக்கு வெறுங்கையுடன் திரும்பிய அனுமனைப் பார்த்து சீதாதேவி வியந்தார். “குழந்தாய்! ஆஞ்சநேயா! என்ன ஆயிற்று? பெண் எங்கே?” எனக் கேட்டார்.

ஆஞ்சநேயர் தலையைக் குனிந்தபடியே, “தாயே! அவள் என்னை ஏற்கவில்லை. அதனால் அவளைத் தூக்கி வந்து, சுக்ரீவனு க்குக் கொடுத்துவிட்டேன். பரந்து விரிந்த உலகில் தெய்வம் எனக்கு மட்டும் மிகவும் குறுகிய இதயத்தைக் கொடுத்திருக்கிறது. அதில் நீங்களும் ராமசந்திரமூர்த்தியும் முழுவ துமாக நிறைந்து இருக்கிறீர்கள். அங்கே வேறு யாரும் இருக்க இடமில்லை” எனக் கூறியவர், அன்னையை வணங்கி ஒரு வரம் கேட்டார்:

“அன்னையே! பித்ருக்களின் கடனை அடைப்ப தற்காக, நான் எப்போதும்  சிரஞ்ஜீவியாக வாழ்ந்து, முன்னோர்களுக்கு உண்டான சிராத்தாதி கர்மாக்களை செய்யும்படி, தாங்கள் எனக்கு ஆசி வழங்க வேண்டும்”.

சீதாதேவி புன்முறுவல் பூத்து,  “ஆஞ்சநேயா! உன் விருப்பப்படியே நடக்கும்”என ஆசி வழங்கினார். அதைக் கேட்டு மகிழ்ந்த ஆஞ்சநேயா் கைகளை உயரே தூக்கியபடி “ஜெய் சீதாராம்” என முழங்கினார்..

ஜெய ராம் ஜெய ராம்..,🙏🌹🌈

Friday 26 June 2020

நந்தியெம்பெருமான் ஜீவ அருள் நாடி வாக்கு


நந்தியெம்பெருமான் ஜீவ அருள் நாடி வாக்கு

நாடி வாசிக்கும் ஆசான் - திரு சித்த குருஜி , கோவை

அருள் கேட்பவர் - தி. இரா. சந்தானம் கோவை

நாள் : 26/06/2020, வெள்ளிக்கிழமை மாலை சஷ்டி திதி


***************************************

ஆதி அந்த பரம்பொருள் பாதம் போற்றி

அன்னையவள் உமையாளின் அடிகள் தொட்டு

ஓதியே உரைக்கின்றேன் ஜீவ நாடி

ஓங்கார கணபதியின் பாதம் போற்றி

நந்தி நான் உரைக்கின்றேன் ஜீவ நாடி

நல்லபடி மானிடர்கள் வாழ்வுக்காக

இன்று நான் மகனே உன் வாழ்க்கை தன்னில்

இருந்த பல பலாபலன்கள் வாக்கு தானே

நன்றாக ஜீவ நாடி உரைக்கின்றேனே

நல்லபடி தெளிவாக கேட்டுக்கொள்வாய்



அப்பனே இப்போது பூமி தன்னில்

அனைத்து பேர்களுடைய வாழ்க்கை தானும்

முந்த நாள் செய்த கர்ம வினையினாலே

முற்றிலுமாய் அமைந்ததப்பா தெரிந்து கொள்வாய்



இன்று வரை வாழ்கின்ற வாழ்க்கை எல்லாம்

இதுவரைக்கும் அவரவர்கள் செய்து வந்ததே அன்றி 

பலவினைகளின் பயனே  ஆகும்

அதன்படியே அனைத்துமே நடக்குமாமே 



நடக்குமே சகலத்தையும் தெரிந்து கொள்வாய்

நல்ல வகையில் செய்திருந்தால் இப்போதைக்கு

அதற்குரிய பலாபலன்கள் நடக்குமப்பா

அதற்க்கு மேல் அவரவர்கள் செய்த கர்மம்

அப்பனே கொடுமையாய் இருந்து விட்டால் 

தலைவிதியாய் அவையவையே

அவரவர்க்கு  தான் வந்து கொடுமை அது செய்யும் பாரே



இருக்கின்ற கர்மவினை முழுதும்

இந்த ஒரு வாழ்க்கையிலே நடந்து தீர்ந்து

முழுவதுமாய் அழிந்து விட்டால்

அவைகளெல்லாம் முற்றிலுமாய் தீர்ந்து விடும் அப்பா

அவைகளிலே  மிகுதி அது இருந்து விட்டால் அப்பனே

ஆனதொரு துன்பம் தானே

வழிவழியாய் பல பல பிறவி எடுக்க வைத்து

வாகாக அனைத்துமே அனுபவித்து

தலைவிதியாய்  தீர்க்கவே வேண்டும் அப்பா

தானான கர்மத்தின் செயலாய் ஆகும்



அதனினால் மனிதரோடு வாழ்வு தன்னில் அப்பனே

செய்கின்ற கருமங்கள் எல்லாம்

முடிந்த வரை நல்லதாய் செய்து விட்டு

முற்றிலுமே நற்பயனை அனுபவித்தால்

எதுவொமொரு குறையுமில்லை மானிடருக்கு

எப்போதும் துன்பமின்றி வாழலாமே



வாழலாம் மைந்தனே வகையாய் சொல்வேன்

வாழுகின்ற காலத்தில் அவரவர்கள் பூணலாம்

பெரும் சிரமம் நீக்கி தானே

பொல்லாத கர்மவினை நீக்கி தானே

ஆளலாம் புவிதனிலே ஆன்ம பாதை அப்பனே

அவரவர்கள் விதிப்படியே



தானான இந்த ஒரு உண்மை தன்னை

தரணியிலே யாவருமே தெரிந்து கொண்டு

வீணான கர்மத்தை துன்பம் தன்னை

விதிப்பயனால் வந்த பல விதிகள் தன்னை

தானாக விலகி விட்டு

இந்த வாழ்வை தேனாக அனுபவித்து தீர்ப்பதற்கு

சித்தர் முதல் இந்த ஒரு பூமி தன்னில் 

திறம்படவே வாழ்ந்த பல மகரிஷிகள்

உத்தமமாம் ஞானிகள் உயர்ந்த யோகி

உண்மை தன்னை எடுத்து உரைத்து வைக்கும் மாந்தர்

அத்தனையும் விலக்கி வைத்து

வீணாகத்தான் அப்பனே விட்டில் போல்

விழுந்து தான்  செத்தே மடிகிறார் தீமை தன்னில்

சிவலோகம் காணாத மாந்தராக



மாந்தராய்  வந்து இந்த பிறப்படெடுத்து

வையகத்தில் பூணுகின்ற வாழ்க்கை தன்னில்

தீயான வெறும் கர்ம வினையை தீர்த்து

திறம்படவே மெய்யான பாதை பூண்டு

ஞானத்தின் வழிப்பாதை சென்று கொண்டு

நல்ல சற்குருவினுட உபதேசங்கள்

தேனான அமுத வாக்கு அதனினாலே

தெளிவான கர்மவினை விலக்கி தானே

பூணலாம் மெய்ஞான வாழ்க்கை தானே

புவியினிலே பிறந்த கர்மம் விலகி கொள்ள




கொள்ளவே நன்றான வாசல் தன்னை

கோடானுகோடி மாந்தர்கள் தெள்ளவே

தெளியாமல் பூமி தன்னில்

தெரியாத கடும் இருட்டில் விழுந்து தானே

மெல்லவே மடிந்து பிறந்து  இறக்கிறார்கள்

வீணாக பிறந்து பிறந்து இந்த வையகம்

தேனான அமுதத்தை உண்ணாமல் தான்

பெரும் சிரமத்தில் மடிகின்றார்கள்



மடிகின்றார்கள் வையகத்தில் மாந்தர் கோடி

மக்களுக்கு அறிவின்றி அவர்களெல்லாம்

பிடி சாம்பல் ஆகியே போன மாந்தர்

பொழுதொன்றும் காணாமல் வீணாய் மாண்டார்

அழிவான பாதையிலே சென்று தானே

அவரவர்கள் வையகத்தில் மடின்றார்கள்



மடிந்தாலும் மைந்தனே நன்றாய் கேளு

வாழ்க்கையிலே குரு மட்டும் வாய்த்து விட்டால்

இடிந்து விடும் அவர் செய்த கருமம் எல்லாம்

இரவு பகலான சூட்சுமங்களெல்லாம் தெரிந்து விடும்

சூட்சுமத்தின்  பாதை மாற்றம்

தெளிவான குருவின் அருள் உபதேசத்தால்

புரிந்துவிடும் உண்மையும் தத்துவமும்

புகலான மெய்ப்பொருளின் சூட்சுமமும்



அறிந்த அறிவு அதிலிருந்து மீண்டு தானே

அப்பனே அங்கொன்றாய் நின்று தானே

தெளிந்தமுது ஞான வேட்கை ஒன்று தானே

தெளிவான மெய்ஞ்ஞானம் புகட்டுமாமே



புகட்டுமே மைந்தனே தெளிவாய்க்கொள்ளு

பிறந்த இந்த பிறவியதன் நோக்கந்தானே

மறந்து விட்டு மனித குலம்

மீண்டும் மீண்டும் வையகத்திலே  பிறந்திறக்கின்ற தன்மை

தெரிந்து அதனில் இருந்து விளக்கான

இந்த தெளிவான வாழக்கை அது அறிந்து கொள்வோம்

பிறந்ததன் நோக்கம் அது அறிந்து கொண்டு

புவியிதனில் அதற்குரிய வாழ்க்கை வாழ்ந்து

தகுந்த குரு ஆசானால் மெய்ஞ்ஞானத்தில்

தக்கபடி அதில் நுழைந்து

ஆன்ம ஞானம்



ஆன்ம ஞானம் நுழைந்து அதற்குள்ளேயே

மெய்ஞ்ஞானத்தில் உகந்ததொரு யோக பலன் அனுபவித்து

சிறந்த தவ ஞானம் சிவ யோகம் கூடி

சிற்சபையில் ஆடுகின்ற அம்பலத்தான்

அந்தரத்தில்  நின்றாடும்  மார்க்கங்கண்டு

அதனுள்ளே மறந்து உன் நாவில் தானே

சிறந்தமுதம் தேனாக வடிய கண்டு

சிவயோக மார்க்கமதில் நிறைந்திருந்தது

உறைந்ததனில் உண்மை தனை தெரிந்து நித்தியம்

உகந்த பரிபூரணத்தில் கலக்கலாமே



கலக்கலாம் மைந்தனே தெளிவாய்க்கேளு

கற்பக விருட்சம் போல் இருந்து தானே நிலைக்கலாம்

என்றுமே பிறப்பிறப்பு  இல்லாத நிரந்தரமாம்

யோகி  தன்னில் கலந்திடலாம் கற்ப காலம் தன்னில் தானே

கயிலாய மலை வாசன் கிருபையாலே



கிருபையாம் இதை நானும் உரைப்பேன் மைந்தா

கேடில்லை உந்தனது வாழ்க்கை தன்னில்

நிறைந்த கல்வி கற்றுயர்ந்து வருகும் போது

நிச்சயமாய் உந்தனது விதியானாலே

உறைந்த பல மார்க்கங்கள் கல்வி தன்னில்

உகந்தின்றி பல வழிகள் தோன்றும் போது

நிறந்த விதி பயன் படியே நீ எந்நாளும்

நிச்சயமாய் தொழில் பலவும் புரிவதற்கு

உகந்ததொரு பாதையினை தேர்வு செய்து

உந்தனது முயற்சியினால் வழியாய் பற்றி

சிறந்ததொரு பாதை அதை சேர்த்து நீயும் தான் வந்தாய் 



அப்போது உந்தனுக்கு இடையூறாய்

எத்தனையோ துன்பமெல்லாம்

இருந்து வழி தெரியாமல் தடுமாறித்தான்

பெருத்த பல சூறாவளிக்காற்று போல்

பேரான சில துயரம் உன்னை தானே

வழித்தடத்தில் ஆட்டுகின்ற போது

அங்கு மகானாக அகஸ்தியரும் வந்து தானே

கரம் பிடித்து  உன்னை ஒரு வழி நடத்த

கடைசிவரை இதை விடாமல் இதில் இருந்து மீட்டு

சிரம் குவித்து நீ வணங்கி நிற்கும் போது

அத்தீமையெலாம் விலக்கி உன்னை கொண்டு சென்று

நிறைந்த மனம் பண்போடு உன்னைத்தானே

நல்ல வழி மீட்டெடுத்து வந்தார் அன்றோ



வந்தாரே அகஸ்தியரும்  வழி காட்டித்தான்

வரலாறு காணாத அளவுக்கு

நின்றாரே உந்தனது கரம் பிடித்து

நிச்சயமாய் நீ இனிமேல் இந்த வாழ்வில்

எந்த ஒரு இடையூறும் இல்லாமல் தான்

எடுத்து வை காலடி தான் என்றானே

உன்தனது காலடி ஒவ்வொன்றும் தானே

உரமாகும் சருக்காமல் நீயும் நானே

நந்தவனம் போல் உனது வாழ்க்கை தன்னில்

நல்லபடி வாழுவாய் என்றுரைத்து



இந்த நொடி வரையிலுமே உனக்குத்தானே

இருந்தாட்சி செய்து தன் ஆசி தன்னை

எந்த ஒரு கணமும் குறையா வண்ணம்

எடுத்துன்னை இயம்பியே என்னாளெல்லாம்

தொந்தரவு துயர் துன்பம் பிணி இடையூறு

எந்த வழி தனிலும் வராத வண்ணம்

இதுவரைக்கும் உந்தனை வழி நடத்தி

இடர் தீர்த்து வருகின்றார் அகஸ்தியரே



சென்று திருத்தலங்கள் பல ஆலயங்கள்

சிறந்த நல்ல சீவ சமாதியெல்லாம் நின்று

தரிசனங்கள் செய் என்றளவுக்கு

நீ செல்லும் போதிடங்கள் அத்தனையும்

உந்தனுக்கு என்று தனியாக தான்

உகந்த நல்ல வாய்ப்புகள் கிடைத்து நீயும்

அன்று தொட்டு இன்று வரை

சென்று வரும் ஆலயங்களில் உனக்கு வாய்ப்பூனோடு

எங்கு நீ சென்றாலும் அங்கு உனக்கு

ஏதோ ஓர் அதிசயமாய் சகல துண்டாம்

உன்தனது உணர்வில் கலந்து தானே

உன்னை வழிநடத்தும் என்று கூறுகின்றேன்



ஆனதினால் மைந்தனே உந்தனுக்கு

அரும்பிறவியாய் நீ இப்போதைக்கு தானும்

அகஸ்தியனாரை குருவாய் கொண்டு

தலை மேலே அவர் பாதம் ஏந்திக்கொண்டு

சீரும் சிறப்புமாய் அவர் நினைவு திறந்திடவும்

உன்தனது நெஞ்சில் தானே

ஏராளமான சென்மம் எண்ணி தானே

எப்போதும் அவர் நினைவோடு இருந்து கொண்டு

போகின்ற பாதையினை புனிதமாக புகலுகிறேன்

நன்றாக அமைத்து கொண்டு நீயும் அவர்க்காண பணி

தினம் தினமும் நித்தமுமே  செய்து வருகின்றாயே



வருகின்றாய் உன்தனது வாழ்க்கை தன்னில்

வளமான குடும்பமோடு வாழ்க்கை தன்னில்

இருக்கின்ற தெய்வீக வாழ்வு தன்னை

இன்னமும் நீ நடத்தி செல்வதற்கு உனக்கு

நல் அறிவாக இருந்து கொண்டு

உன்னை நடப்பிக்கும் ஆசானாக

தினம் தினமும் அவருக்காய் பணிகள் தானே

செய் கின்ற ஒவ்வொரு காரியமும் 

நினைத்தது போல் நிறைவேறி முடிவதற்கு

நல்ல பல அனுசரையான மாந்தர் உதவிக்கரம் நீட்டி

இவர்களெல்லாம் உன்னோடு கரம் கோர்த்து செய்வதற்கு

இனிவரும் காலத்தில் அனைவரும் தான்

உன்னோடு இனைந்து செயல் படுவதற்கு

மனமுள்ள நல்லவர்கள் வந்து சேர்ந்து

வழி நடத்தி வைப்பார்கள் எதிர்காலத்தில்



அகஸ்தியனார் உந்தனது குருவாகத்தான் அப்பனே

அமர்ந்திருந்து உந்தனுக்கு இனி நடக்கும்

உந்தனது வாழ்வு தன்னில் இடையூறு பல நீக்கி

உந்தனைத்தான் வழி நடத்தி

எதிர்காலம் தன்னில் தானே வளமான உயர்வாழ்க்கை

உயர்வாழ்க்கை தன்னில் தானில் தானே

புவி வாழும் காலத்தில் உந்தனுக்கு

புகழோடு நற்செல்வம் அனைத்தும் தானே

நிலவாழ்வு தன்னிலே நீண்ட ஆயுள்

நிறைந்ததொரு ஆரோக்கியத்தினோடு

வாழுகின்ற காலத்தில் உந்தனுக்கு

வருகின்ற செல்வங்கள் செழிப்பினோடும்

பூணுகின்ற பொன் பொருட்கள் பூமி யோடும்

புகழோடு வாகனங்கள் குழந்தை கல்வி

ஏராளமான செல்வா செழிப்பினோடும்

எதிர்காலம் குறையின்றி வாழ்க்கை தன்னில்



கூடவே துணைவியார் உடல் நலமும்

குடும்பத்தில் மனம் மகிழ்ச்சி சந்தோஷங்கள்

ஆனதொரு கல்வி செல்வம் மேன்மையோடு

அப்பனே உயர் தொழில்கள் கீர்த்தி பெற்று

ஞானம் பெறுகின்ற அளவுக்குத்தான்

நல்ல சற்குருவினுட ஆசி யாலே

பூணவே மெய்ஞ்ஞான வாழ்க்கை தன்னில்

புதுவிதமாம் கருத்துக்கள் நிலைப்பதற்கு

காணவே தரிசனங்களோடு

கண்டேனே மனமகிழ்ந்து இருப்பதற்கும்

கயிலாய யாத்திரைகள் கொள்வதற்கும்

கடந்தினியே  இதற்க்கான சூழ்நிலைகள்

மெய்ஞ்ஞான உள்ள பல மனிதர்களோடு

மேன்மையான பல சிவ தலங்கள் சென்று

அஞ்ஞான இருள் நீக்கி வருவதற்கும் 

அகஸ்தியனார் பேராசி  செய்கின்றாரே



நல்லாசி செய்துன்னை எப்போதும் தான் நல்லபடி

உன் வாழ்வில் மேன்மை பெற்று

எந்நாளும் உந்தனோடு கிருபையாக

எப்போதும் இருந்து பல பணிகள் எல்லாம்

இந்நாளில் தடையாக இருப்பவைகள்

இதற்கு மேல் உந்தனது இல்லம் தன்னில்

நல்லபடி நடக்கின்ற அளவுக்கு

நன்றாக பேராசி செய்து தானே

உன்னை வழி நடத்தியே உந்தனுக்கு

உகந்தபடி அவரும் உனது விருப்பமெல்லாம்

நல்லபடி செய்வதோடு 

உன்னைத்தானே ஞானவழி ஞானப்பாதை தன்னில்

எந்நாளும் வழிநடத்திக்கொண்டு தானே

எதிர்காலம் ஓர்குறையும் இல்லாமல் தான்

நன்னாளாய் எந்நாளும் இருப்பதற்கு

நல்லபடி அகஸ்தியனார் உந்தனுக்கு

உள்ளபடி உனதருகே இருந்து தானே

உகந்ததனைத்தயும் உனக்கு அளித்திட்டானே 



எந்நாளும் ஓர்குறையும் இல்லாவண்ணம்

உந்தனுக்கு அருள் வழங்கி இருந்து கொண்டு

ஆசானாய் அருகிருந்து வழி நடத்தி

அப்பனே குருவாக இருந்து தானே

ஏதுமொரு குறையின்றி வாழ்க்கை தன்னில்

எப்போதும் நன்றாக வாழ்வாய் என்று

தானும் அவர் கரம் உயர்த்தி ஆசி செய்தார்

சற்குருவாய் இருந்துனக்கு ஆசியாக



நான் உனக்கு ஆசி செய்தேன்

அகத்தியானார் நல்லபடி உனக்கு ஆசி செய்யும் போது

ஈசனவன் எப்போதும் உந்தனுக்கு

இடர் துன்பம் நீக்கி உன் வாழ்க்கை தன்னில்

போதுமென்ற அளவுக்கு பொன் பொருட்கள்

புகழுடனே சகலவிதமானவையும்

ஞானமுடன் நீ வாழுகின்ற அளவு

நல்லபடி தருவார் என்று ஆசி செய்தேன்



ஏதுமொரு குறையுமின்றி மைந்தா நீயும்

எப்போதும் நல்லபடி வாழ்வாயாக



ஞான தவ முனிவர்கள்  சித்தன் உனக்கு

நல்லாசி செய்தார்கள்



- நமசிவாயம் -