Wednesday 27 March 2019

நந்தி தேவர் என்பவர் யார்...

நந்தி தேவர் என்பவர் யார்...

சிஷி: மேலேயருளிய நந்திதேவர் என்கிறவர் யாவர்?

குரு:  சிவாதார முனிவருடைய தவத்தினால் அவருக்குப் புத்திரனாய்த் தோன்றி பரமசிவனைக் குறித்துத் திருவையாற்றிற் றவமிழைத்து நெற்றிக் கண் மான் மழு சதுர்ப்புஜம் காளகண்டம் முதலியவை விளங்கச் சிவசாரூபமும் இரஜிதப் பிரம்பும் சுரிகையும் கைலைக்காவலும் கணங்களுக்குத் தலைமையும் பெற்றுக் கொண்டார். அன்னணம் பெற்றுக்கொண்ட இரண்டாஞ் சம்புவாகிய ஸ்ரீ நந்தி யம் பெருமான்; கைலாய அந்தராளத்தின் யாமியவாயின் மண்டபத்திற் றென் முகமாய்க் கொலு வீற்றிருந்து சிவகட்டளைக் கெதிர்பார்த் திருப்பவராம். சிவ தரிசனத்திற்கு முன்னம் அவர் தரிசனமாம். அவர் தரிசனம் சிறந்த யோகீஸ்வர ர்கட்கு முபாதானமாகும். இவரே புராணங்களிலும் ஆகமங்களிலும் வேதங்க ளிலும் "பரமசிவமே பரத்துவம்" என்று முடிபு கூறியிருக்க " விஷ்ணுவே பரத்துவம்" என்று மாயையின் வயப்பட்டு அசத்தியம்பேசி நீட்டிய வியாசருடைய கரங்களைச் சபித்துத் துணித்த அபரமசிவமாவார். பிறவும், வசுமணாவதாரஞ் செய்து உலகத்தில் வீரசைவத்தை நிலை நாட்டிய ஆசானு மிவரெனப்படும். மேனுவன்ற கைலைக் காவற் கொலுமண்டபத்தில் மேற்கே சிரசும் கிழக்கே பாதமும் வைத்து வலத்தோள் கீழாய்ப் படுத்து நெற்றிலோசனச் சுடரானது பத்துயோஜனை வரை பரவி யாவரு முண்ணுழையாது காவலிருக்கும் படிக்கும் உள்ளே புகப்  பலம்பெற்ற சிவபதிகண் மட்டும் தடையிலாது அச்சுடருட் புகுந்து காற்புறமாயுள்ளே செல்லும்படிக்கும் சிவயோக நித்திரைகொள்வாரும், கோமுகம்போல நீண்ட வதனமுள்ளாரும் ஸ்ரீ சைலவடிவமாகிச் சிவனை வதியப் பெற்றாரும் இவரேயாவார். சிவாதார புத்திரரென்பதைச் சிலாதார புத்திரரென்று அக்ஷரப் பிசகா யதிர்க்கப்பட் டிருப்பதுமுள.

Monday 11 March 2019

திருவல்லம் திருத்தலம்.

ஆன்மாவிற்கு உயர்வைத் தரும் திருவல்லம் பரசுராமர் திருத்தலம்


இறந்தவர்களின் ஆன்மா உயர்ந்த நிலையை அடையவும், கொடிய மரணமடைந்தவர்களின் ஆன்மா அமைதியடையவும் சிறந்த தலமாகக் கேரள மாநிலம், திருவல்லம் பரசுராமர் கோவில் அமைந்திருக்கிறது.
ஆன்மாவிற்கு உயர்வைத் தரும் திருவல்லம் பரசுராமர் திருத்தலம்
இறந்தவர்களின் ஆன்மா உயர்ந்த நிலையை அடையவும், கொடிய மரணமடைந்தவர்களின் ஆன்மா அமைதியடையவும் சிறந்த தலமாகக் கேரள மாநிலம், திருவல்லம் பரசுராமர் கோவில் அமைந்திருக்கிறது.
இறந்தவர்களின் ஆன்மா உயர்ந்த நிலையை அடையவும், கொடிய மரணமடைந்தவர்களின் ஆன்மா அமைதியடையவும் சிறப்பு வழிபாடுகளைச் செய்யச் சிறந்த தலமாகக் கேரள மாநிலம், திருவல்லம் பரசுராமர் கோவில் அமைந்திருக்கிறது.

தல வரலாறு :

ஜமத்கனி முனிவர் - ரேணுகாதேவி தம்பதியரின் கடைசி மகனாகப் பிறந்தவர் ராமர். விஷ்ணுவின் ஆறாவது தோற்றமாகக் கருதப்படும் அவர், சிவபெருமானை வழிபட்டு, அவரிடமிருந்து ‘பரசு’ எனும் கோடாரியைப் பெற்றதால் ‘பரசுராமர்’ என்று அழைக்கப்பட்டார்.

ஒரு நாள் ரேணுகாதேவி ஆற்றில் குளிக்கச் சென்றார். அவர் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய போது, வானத்தில் சென்று கொண்டிருந்த ஒரு கந்தர்வனின் நிழல், அந்த ஆற்று நீரில் தெரிந்தது. ஆற்று நீரில் தெரிந்த நிழல் உருவத்தைப் பார்த்து அவர் வியப்படைந்தார். இந்தக் காட்சி தியானத்திலிருந்த ஜமத்கனி முனிவரின் மனதில் தோன்றி மறைந்தது.

உடனே ஜமத்கனி முனிவர், தனது மகன் பரசுராமரை அழைத்து, ‘உன் தாய், கந்தர்வன் ஒருவனைப் பார்த்து மயக்கம் கொண்டு விட்டாள். உடனடியாக அவளைக் கொன்று விட்டுத் திரும்பி வா’ என்று ஆணையிட்டார். தந்தையின் ஆணையைக் கேட்டப் பரசுராமர், தனது தாய் என்றும் பாராமல் ரேணுகா தேவியைக் கொன்று விட்டுத் திரும்பினார்.

திரும்பி வந்த அவர், ‘தந்தையே, தங்களின் ஆணைப்படி நான் தங்களது மனைவியைக் கொன்று விட்டேன். ஆனால், தற்போது நான் தாயை இழந்து நிற்கிறேன். என் மனம், தாயன்பை வேண்டித் தவிக்கிறது. என் தாயின் உடலை உயிர்ப்பித்துத் தந்திட வேண்டும்’ என்று வேண்டினார்.

ஜமத்கனி முனிவரும், தான் சொன்னதைக் கேட்டு எந்த மறுப்பும் சொல்லாமல், தன் தாயையே கொன்று திரும்பிய மகனின் வேண்டுகோளை நிறைவேற்ற முன் வந்தார். உடனே அவர், தன் மனைவியின் உடலுக்கு உயிர் கொடுத்து, முன்பு போலவே திரும்பி வரச் செய்தார்.

பின்னொரு நாளில் ஜமத்கனி முனிவருடன் பகை கொண்டிருந்த அரசன் ஒருவன், யாருமில்லாத வேளையில் ஆசிரமத்துக்குச் சென்று, கண்களை மூடி தியானத்தில் இருந்த ஜமத்கனி முனிவரைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்று விட்டான். இதனையறிந்த பரசுராமர், அந்த அரசனைத் தேடிச் சென்று கொன்றார். அத்துடன், அரச குலத்தினர் அனைவரையும் தானே அழிப்பதாகச் சபதம் செய்தார். அதே வேளையில், திருமணம் செய்து கொண்டிருக்கும் அரசர்களை மட்டும் ஒரு வருடம் வரைக் கொல்வதில்லை என்று முடிவு செய்து கொண்டார்.

தான் செய்த சபதத்தின்படி அரச குலத்தைச் சேர்ந்த பலரையும் தேடிச்சென்று, அவர்களுடன் சண்டையிட்டு, அவர்களை அழித்துக் கொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, தன் தாயைக் கொன்றது, அரசர்களைப் போட்டியிட்டுக் கொன்றது போன்ற செயல்கள் அவரது மனதில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி, அவருக்குப் பெரும் துன்பத்தைத் தந்தது.

அந்த துன்பத்திலிருந்து விடுபட விரும்பிய அவர், இனி எவருடனும் போர் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து, இறைவழிபாட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். தான் செல்லும் இடங்களிலெல்லாம் இறையுருவங்களை நிறுவி, அதற்குச் சிறப்பு வழிபாடுகளைச் செய்தபடி பயணித்துக் கொண்டிருந்தார்.

அப்படி ஒருநாள், கேரள மாநிலத்தில் ஓடிக்கொண்டிருந்த கரமனை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அந்த ஆற்றில் அவருக்குச் சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. அந்தச் சிவலிங்கத்தை ஆற்றின் கரைப்பகுதியில் நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார். அப்போது அவர், தன் தாயைக் கொன்ற பாவம், பல அரசர்களைக் கொன்ற பாவமெல்லாம் நீங்கியதாக உணர்ந்தார்.

அந்தக் கோவிலிலேயே தன் தாயின் ஆன்மா உயர்வுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் ஆன்மா அமைதி வழிபாட்டுச் சடங்கினைச் (பிதுர் தர்ப்பணம்) செய்தார். அந்தச் சடங்கிற்குப் பின்பு, அவருடைய அம்மாவின் ஆன்மா உயர்வு கிடைத்தது தெரிந்து மகிழ்ந்தார். அவருக்கு ஏற்பட்டிருந்த மன வருத்தமெல்லாம் மறைந்து போனது.

பரசுராமர் சிவபெருமானை வழிபட்ட இடத்தில், அவரது பாதம் பொறிக்கப்பட்ட பீடம் ஒன்று இருக்கிறது. இந்தப் பீடத்தின் அருகில் பரசுராமர் கோடாரியுடன் நிற்கும் சிலை ஒன்று இருக்கிறது. இங்குள்ள பீடத்திற்குத் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன.



கோவில் அமைப்பு :

கரமனை ஆறு, கிள்ளியாறு, பார்வதிபுத்தனார் ஆறு ஆகிய மூன்று ஆறுகள் சேருமிடத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவருக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. இங்குள்ள சிவ பெருமானை பரசுராமரும், விஷ்ணுவின் தோற்றமான வேதவியாசரை விபா கரண முனிவரும், பிரம்மாவை ஆதிசங்கரரும் நிறுவினர் என்று இக்கோவிலுக்கான தல வரலாறுகள் தெரிவிக்கின்றன. இக்கோவில் வளாகத்தில் பகவதி, கணபதி ஆகியோருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆலயம் தினமும் அதிகாலை 5 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தினசரி வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆலயத்தில் ‘திருவோணம் ஆறாட்டு’ மற்றும் ‘பரசுராமர் ஜெயந்தி’ எனும் இரு விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

இத்தலத்தில் பரசுராமர் தனது தாயின் ஆன்மா உயர்வுக்கான வழிபாட்டினை (பிதுர் தர்ப்பணம்) செய்திருக்கிறார். இதே போல் ஆதிசங்கரர் அவருடைய தாய் ஆரியாம்பாளின் ஆன்மா உயர்வுக்கான வழிபாட்டினைச் செய்திருக்கிறார். இதனால், இக்கோவில் ஆன்மா உயர்வுக்கான வழிபாட்டிற்கும் (பலி, கர்மம், பிதுர் தர்ப்பணம்), கொடிய மரணமடைந்தவர்களின் ஆன்மா அமைதிக்கான வேள்விக்கும் (தில ஹோமம்) சிறந்த இடமாகக் கருதப்படுகிறது.

இங்கு தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆன்மா உயர்வுக்கான சிறப்பு வழிபாடும் (பலி, கர்மம், பிதுர் தர்ப்பணம்), காலை 6 மணி முதல் 10.30 மணி வரை கொடிய மரணமடைந்தவர்களின் ஆன்மா அமைதிக்கான சிறப்பு வேள்வியும் (தில ஹோமம்) நடத்தப்படுகின்றன.

இங்குள்ள விஷ்ணுவின் தோற்றத்திலான வேதவியாசர் சன்னிதியில், குழந்தைகள் கல்வியில் சிறப்பு பெற்றிட வேண்டிச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அருகிலுள்ள பிரம்மன் சன்னிதியில் நோயற்ற நீண்ட கால வாழ்க்கை வேண்டி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்குள்ள பரசுராமர் பாதம் பொறிக்கப்பட்ட பீடத்தின் முன்பாக, அமைதியான மனநிலை அளிக்க வேண்டிப் பலரும் வணங்கிச் செல்கின்றனர்.

பிதுர் தர்ப்பணம் :

முன்னோர்களில் மூன்று தலைமுறையினர்களின் உயர்வுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் செய்யப்படும் சடங்கை, ‘பிதுர் தர்ப்பணம்’ என்று சொல்கின்றனர். பிதுர் உலகத் தேவதைகளான வசு, ருத்ர, ஆதித்யர்களை எள் மற்றும் தண்ணீரால் நினைத்துக் கொண்டு இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. இந்தச் சடங்கின் முடிவில் எள் கலந்தத் தண்ணீர், இறந்தவர்கள் பூவுலகில் செய்த செயல்பாடுகளுக்கேற்பத் தற்போதடைந்திருக்கும் நிலையில் அமிர்தமாகவோ, நெய்யாகவோ, தண்ணீராகவோ, பாலாகவோ, புல்லாகவோ, ரத்தமாகவோ மாறி, அவர்கள் பெற்றுக் கொள்ளும்படியாக வேண்டிக் கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அந்த ஆன்மா மகிழ்ச்சியையும், உயர்வையும் அடையும் என்பது இச்சடங்கின் நம்பிக்கை.

திருவல்லம் பெயர்க் காரணம் :

திருவல்லம் பரசுராமர் கோவில் விஷ்ணுவின் தலைப்பகுதியாகவும், திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் விஷ்ணுவின் உடல் பகுதியாகவும், திருவனந்தபுரம் அருகே உள்ள திருப்பாதபுரம் கோவில் விஷ்ணுவின் கால் பகுதியாகவும் விளங்குவதாக ஐதீகம். ஒரே நாளில் இம்மூன்று தலங்களுக்கும் சென்று இறைவனை வணங்குவது அனைத்து நலன்களையும், வளங்களையும் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியின் தலைப் பகுதி தற்போது திருவல்லம் என்றழைக்கப்படும் பகுதி வரை நீண்டிருந்ததாம். எனவே திருவல்லம் என்ற இடத்தை தமிழில் ‘தலை’ என்று பொருள் தரும் மலையாள மொழிச் சொல்லான ‘வல்லம்’ என்ற பெயரில் அழைத்தனர். இறைவனின் தலைப்பகுதி என்பதைத் தெரிவிக்கும் விதமாகத் ‘திருவல்லம்’ என்கின்றனர். திருவனந்தபுரம் பத்மநாபரை நிறுவிய வில்வ மங்களம் சுவாமிகள் செய்த வழிபாட்டால், திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியின் உருவம் தற்போது உள்ள அளவுக்குச் சுருங்கிப் போய் விட்டதாக இக்கோவிலின் தல வரலாறுகளில் சொல்லப்பட்டிருக்கின்றன.

அமைவிடம் :

கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம் நகரிலிருந்து கோவளம் கடற்கரைக்குச் செல்லும் புறவழிச் சாலையில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது திருவல்லம் திருத்தலம்.

தாண்டிக்குடி பாலமுருகன்...

முருகா வருக சதுர்வேத முதல்வா வருக வினைதீர்க்கும்
முனைவா வருக மலர் ஆறு முகவா வருக திருமாலின்
மருகா வருக மயில் ஏறுமன்னா வருக அடியார்கள்
வாழ்வே வருக தெய்வசிகாமணியே வருக வருகவே.’        


உள்ளன்போடு உருகி வணங்கும் உயிர்களிடத்தில், எல்லையில்லாப் பேரன்பு காட்டுகிறான் இறைவன். பக்தர்களின் விண்ணப்பங்களை நிறைவேற்றிக்கொடுப்பதில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு நிகர் முருகனே. குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருந்து, பக்தர்களுக்கு அருளாசிகளை வழங்கிவரும் மயில்வாகனன், பாலமுருகனாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் புண்ணியத்தலம் தாண்டிக்குடி.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகாவைச் சேர்ந்த தாண்டிக்குடி வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர். சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இதமான காற்றும், தவழும் மேகங்களுமான ரம்யமான இடம். பொதுவாக, மலைமீதுள்ள முருகப்பெருமானின் தலங்களில், கோயில்கள் மட்டும்தான் மலையில் இருக்கும். அதைச் சுற்றிக் கீழே ஊர் இருக்கும். ஆனால், இங்கு முருகன் இருக்கும் மலையைச் சுற்றியும் மலைகளாகவே இருக்கின்றன. சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் பகுதியில் குள்ளமான மனிதர்கள் வாழ்ந்ததாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அந்தக் குள்ள மனிதர்கள் வாழ்ந்த வீடுகள் இன்றைக்கும் இந்தப் பகுதியில் இருக்கின்றன. அவர்கள் வணங்கிய தெய்வமே இங்கு பாலமுருகனாக வீற்றிருந்து, அருளாசியை வழங்கிக்கொண்டிருக்கிறார்.  

திருக்கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் காட்சி கொடுப்பவர் விநாயகப் பெருமான். அவர் பாதம் பணிந்து வணங்கி, கோயிலுக்குள் செல்ல வேண்டும். அடுத்ததாக, மூலவரைப் பார்த்த நிலையில் இடும்பன் சந்நிதி அமைந்திருக்கிறது. இடும்பனை வணங்கித் திரும்பினால், பக்கவாட்டில் இருக்கிறது கால பைரவர் சந்நிதி. பைரவரை வணங்கி, கிழக்குப் பகுதியில் நடந்துசென்றால் ஆலமரத்தின் அடியில் இருக்கிறது நாகம்மாள் சந்நிதி. அவரை வணங்கி, கோயிலை அடைந்து அங்குள்ள தூணில் வீற்றிருக்கும் விநாயகரையும் வணங்கிய பிறகே  உள்ளே செல்ல வேண்டும். முருகனைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் மயிலும் படமெடுத்தபடி இருக்கும் நாகமும் பிரமாண்டமாகக் காட்சியளிக்கின்றன. அதைத் தாண்டி உள்ளே சென்றால், பாலமுருகனை தரிசிக்கலாம். ராஜ அலங்காரத்தில் இருக்கும்போது முருகனை தரிசிக்கக் கண்கோடி வேண்டும். நம்முடன் நேருக்கு நேராக பேசுவதைப்போலத் தோன்றும் அத்திருமுகத்தைப் பார்க்கப் பார்க்க கண்கள் பனிக்கும். அவன் அருள் பார்வை நம் ஆன்மாவைத் தொட்டு, தழுவிச்செல்லும் அந்த ஆனந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர்வுபூர்வமாக அனுபவிக்க நீங்களும் ஒருமுறை பாலமுருகனை தரிசிக்க வேண்டும். முருகனை தரிசித்த பிறகு, பிராகாரத் தூணில் லிங்க வடிவில் இருக்கும் சிவனை வணங்க வேண்டும். அதைத் தொடர்ந்து, கோயிலுக்கு வடமேற்கில் அமைந்திருக்கும் பன்றிமலை சுவாமிகள் சந்நிதிக்குச் சென்று சுவாமிகளை தரிசித்து, அருளாசி பெறலாம்.   

முருகப்பெருமானின் மற்ற கோயில்களில் இல்லாத பல சிறப்புகள் இத்தலத்துக்கு உள்ளன. கோயில் அருகேயுள்ள பாறையில் நின்று கீழே தெரியும் தாண்டிக்குடி கிராமத்தைப் பார்த்தால், ஊரே மயில் வடிவில் அமைந்திருப்பதுபோல தெரியும். இங்குள்ள பாறையில் மயில் உருவம், பாம்பு உருவம், முருகனை வணங்கும் ஆஞ்சநேயர், வேல் உருவம், முருகன் பாதம் ஆகியவை இயற்கையாகவே அமைந்திருக்கின்றன. முருகன் இங்கிருந்து தாண்டிக் குதித்து, பழநிக்குப் போனதாக ஒரு கதையிருக்கிறது. அப்படி தாண்டிக் குதித்த முருகனின் கால் தடமும் பாறைகளில் இருக்கிறது. இத்தனைச் சிறப்பு வாய்ந்த இந்தக் கோயில் இங்கு அமைந்த கதை சுவராஸ்யமானது. இயற்கை அழகு கொஞ்சும் இந்த இடத்தில், தனக்கு ஆலயம் அமைக்க நினைத்த முருகன், தவத்திரு பன்றிமலை சுவாமிகள் மூலமாக அதை நிறைவேற்றிக் கொண்டான். 

அது, 1948-ம் ஆண்டு. அப்போது இந்த இடத்தில் கோயில் இல்லை. தாண்டிக்குடி கிராமத்தின் பெரும் நிலக்கிழாராக இருந்தவர் சோமசுந்தரம் பிள்ளை. ஒருநாள் அவரது வீட்டிலிருந்த விலையுயர்ந்த பட்டுச்சேலைகளில் ஏழு சேலைகள் திருடு போய்விட்டன. வீட்டின் அனைத்துப் பணியாளர்களையும் கேட்டுப் பார்த்தாயிற்று. ஆனால், குற்றத்தை ஒப்புக் கொள்ள ஒருவரும் முன்வரவில்லை. தனது வீட்டில் திருடுப்போன பொருளை மீட்பதைவிட, திருடனைக் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார் சோமசுந்தரம் பிள்ளை. அதற்கான வழிமுறைகள் பற்றிப் பலரிடம் ஆலோசித்தபோதுதான், பக்கத்து கிராமமான பன்றிமலையில் இருக்கும் ராமசாமிபிள்ளை என அந்நாளில் அழைக்கப் பட்டு பின்னர், `பன்றிமலை சுவாமிகள்’ என அடியார்களால் அழைக்கப்படும், சுவாமிகளைப் பற்றித் தெரிந்துகொள்கிறார். அந்நாளில் கன்னிவாடி ஜமீனில் பணியாற்றிக்கொண்டே பல சித்து வேலைகளைச் செய்து கொண்டிருந்தார் சுவாமிகள். சித்து வேலை தெரிந்த அவரை அழைத்துவந்தால், திருடனைக் கண்டுபிடித்துக் கொடுத்துவிடுவார் என்றார்கள். அதன்படி, அவரிடம் உதவிகேட்க, `இன்னும் மூன்று நாள்களில் உங்கள் பிரச்னை தீர்ந்துவிடும்' எனச் சொல்லி அனுப்பிவைக்கிறார்.    

மூன்றாவது நாள், சோமசுந்தரம் இல்லத்துக்கு விஜயம் செய்கிறார் பன்றிமலை சுவாமிகள். அவரை வரவேற்று விருந்துபசாரத்துக்கு ஏற்பாடு செய்தார் சோமசுந்தரம் பிள்ளை. நான் ‘இன்று திருடனை அடையாளம் காட்டுவேன். ஆனால், அவனுக்குத் தண்டனை எதுவும் தரக் கூடாது’ எனச் சொல்லியபடியே விருந்து உண்ண அமர்ந்தார். அதற்கு முன்னதாக, அங்கிருந்த ஒருவர், ‘நீங்க சித்தெல்லாம் செய்வீங்கன்னு சொல்றாங்க... இப்ப இங்க ஒரு புறாவை உங்களால வரவழைக்க முடியுமா?’ எனக் கேட்டு கேலியாகச் சிரித்தார். அவர் சிரித்து முடிப்பதற்குள், அவரது மடியில் அழகிய புறா ஒன்று தவழ்ந்துகொண்டிருந்தது. இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் சப்தநாடியும் ஒடுங்கிப் போனார்கள். இந்தச் சம்பவம் புடவைத் திருடனையும் அசைத்துவிட்டது. சுவாமிகளுக்கு உணவு பரிமாறும்போது, அவரது காதில் ‘சுவாமி நான்தான் திருடினேன். என்னை எதுவும் செய்து விடாதீர்கள்’ என மன்னிப்புக் கேட்டுவிட்டு, தான் திருடிய புடவைகளை அவர் காலடியில் கொண்டு வந்து வைத்துவிட்டான். அதன் பிறகு சுவாமிகள் மீது பிள்ளைக்கு தனி மரியாதை ஏற்பட்டுவிட்டது. ஊருக்கு மேற்குத் திசையில் உள்ள மலைமீது மாட்டுத் தொழுவம் அமைப்பதற்குச் சரியான இடம் தேர்வுசெய்து தருமாறு சுவாமிகளை, குதிரைமீது அமர்த்தி அழைத்துக்கொண்டு போனார் பிள்ளை. ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் குதிரையில் இருந்து இறங்கிய சுவாமிகள், தனது பூட்ஸ்களை கழற்றிவிட்டு, அங்கேயே அமர்ந்துகொண்டார். 

`இந்த இடத்தில் தெய்விக மணம் வீசிக் கொண்டிருக்கிறது. இங்கு நான் ஒரு ஜோதியைக் காண்கிறேன். இங்கு முருகப்பெருமான் குடிகொண்டிருக்கிறார்’ என்கிறார். ஆனால், அதை பிள்ளை உள்ளிட்ட யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், கோபமடைந்த சுவாமிகள், ‘எனக்கு அருள் கொடுத்த முருகன் உங்களுக்கும் ஜோதி வடிவில் காட்சிகொடுப்பார். அதன் பிறகு நம்புவீர்கள்’ எனச் சொல்லிச் சென்று விட்டார். அதன் பிறகு, ஒருநாள் அந்த மலை மீது ஜோதி ஒன்று தோன்றியது. மூன்று பகல், மூன்று இரவு தொடர்ச்சியாக ஜோதி காட்சி கொடுத்தது. ஜோதியை தரிசனம் செய்த மக்கள், பக்திப் பரவசத்தில் பன்றிமலை சுவாமிகளை சரணடைந்தனர். ‘தவறிழைத்து விட்டோம் சுவாமி, தாங்கள் சொன்னபடி அங்கு முருகன் இருப்பது உண்மைதான். எங்களுக்கு ஜோதி ரூபமாகக் காட்சி கொடுத்து விட்டார். குமரனுக்கு ஆலயம் எழுப்பும் பணியைத் தாங்கள்தான் முன்னின்று நடத்தித் தர வேண்டும்’ என மன்றாடினர்.    

உடனடியாக, ஜோதி தெரிந்த இடத்தில் இருந்த புதர்களை வெட்டி அப்புறப்படுத் தினார்கள். அப்போது, அங்கு ஏற்கெனவே ஒரு கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் தென்பட்டன. கோயில் இருக்கும் இடத்துக்குக் கிழக்குப் பகுதியில் உள்ள பாறையில் முருகனின் பாதம் பதிந்த அடையாளமும் மயில், பாம்பு, வேல் போன்ற அடையாளங்களும் இருந்ததைப் பார்த்து பரவசமடைந்தனர். இந்த அடையாளங்கள் இப்போதும் பாறைகளில் இருக்கின்றன. உடனடியாக அங்கு கோயில் அமைக்கும் பணியைத் தொடங்கினார்கள். ஆனால், அங்கு பணியில் ஈடுபட்ட கல் தச்சர்கள் திடீர் திடீரென வாயில் நுரைதள்ளி மயங்கி விழுவது வாடிக்கையானது. இதைக் கேள்விப்பட்ட சுவாமி, குருவரையான் என்ற மலை தேவதையின் பாதையில் இந்தப் பணிகள் நடப்பதால் இது நேர்கிறது என்பதை உணர்ந்துகொண்டார். ஒருநாள் சர்க்கரை, முற்றிய தேங்காயைக் கையில் வைத்துக்கொண்டு தேவதை வரும் வழியில் நின்றுகொண்டு, ‘நான் முருகன் கோயில் கட்டப்போகிறேன். நீங்கள் அருள்கூர்ந்து உங்கள் வழிப்போக்கை மாற்றிக்கொள்ளவும்’ என வேண்டினார். அவர் வேண்டிக் கொண்ட சில விநாடிகளில், அவர் கையில் இருந்த பொருள்கள் மாயமாகிவிட்டன. அதன் பிறகு தேவதையின் தொந்தரவு இல்லாமல் திருப்பணி நடந்தேறியது. 

`ஒருவழியாக முருகனுக்குக் கோயில் அமைத்தாகிவிட்டது. அதற்கு தீர்த்தம் வேண்டாமா... அதற்கு என்ன செய்யலாம்?’ என யோசித்தார்கள். அப்போது ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டி, ‘அங்கு தோண்டுங்கள்... தீர்த்தம் கிடைக்கும்’ என்றார் சுவாமி. மலை உச்சியில், மொட்டைப் பாறையில் தண்ணீர் வரும் என்று சொல்கிறாரே என்ற ஐயம் இருந்தாலும், சுவாமி சொல்லை மறுக்க முடியாமல் தோண்டினார்கள். ஆனால், தண்ணீரைக் காணோம். அங்கு வந்த பன்றிமலை சுவாமிகள், அந்தப் பாறைகளின் இடுக்கில் தலைதூக்கி நின்ற நீண்ட கற்சிலும்பை தனது திருக்கரத்தால் பற்றி இழுத்தார். அந்த இடத்தில் இருந்து பீறிட்டது தண்ணீர். இன்றைக்கும் அந்த இடத்தில் தண்ணீர் இருந்துகொண்டே இருக்கிறது. இந்தக் கோயிலின் அருகே உள்ள பாறையில், மண்ணே விபூதியாக இருக்கிறது. பூமியில் இருந்து பொங்கிவரும் அந்த வெண்மையான மண்தான் இந்தக் கோயிலில் திருநீறாக வழங்கப்படுகிறது. 

கோயிலுக்குத் தேவையான நிலை, கதவு, சிலைகள் என ஒவ்வொருவராகக் கொண்டுவந்து சேர்த்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, அனைவரும், `கனவில் வந்து முருகன் சொன்னபடி தாங்கள் செய்துகொண்டு வந்திருக்கிறோம்’ என்றனர். ஆக, தனக்கு வேண்டிய ஆலயத்தை முருகனே ஏற்படுத்திக் கொண்டான் என்பதை பக்தர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆலயத் திருப்பணி சிறப்பாக நடந்து முடிந்து, 1949-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அன்று முதல் முருகப்பெருமானின் அருளாடல்களும் தொடர்கின்றன.

நாம் ஒரு கோயிலுக்குச் சென்றால், தரிசனம் மட்டுமே செய்கிறோம். ஆனால், ஒரு கோயில் உருவாவதின் பின்னணியில் எத்தனை எத்தனை அற்புதங்கள் நடந்தேறுகின்றன என்பதைக் கேட்டால், ஒவ்வொரு கோயிலின் மீதும் இன்னும் பன்மடங்கு பக்தி அதிகரிக்கும். பெரும்பாலும் கோயிலுக்குச் செல்வதே மன அமைதிக்காகத்தான். ஆனால், தாண்டிக்குடிக்கு வந்தாலே மன அமைதி கிடைத்துவிடும். சுற்றிலும் மலைகள், தவழ்ந்து செல்லும் மேகங்கள், இயற்கையான சூழ்நிலை இவற்றுக்கு இடையில் இருந்து முருகனை தரிசிப்பது ஆனந்தத்தின் எல்லை என்றே சொல்லலாம். 

‘தாண்டிக்குடி உண்டு
தக்கோர் மிக உண்டு
தாண்டி குதித்தருள
தனயன் முருகுண்டு
வேண்டி அவன் அருளை
உவந்தளிக்க பன்றிமலை
ஆண்டவர் அருளுண்டு
அருள் ஜோதிமலை காணீர்.’  



தாண்டிக்குடி அருள்மிகு பாலமுருகன் கோயில் நிர்வாகக் குழுவின் செயலாளராக இருப்பவர் சண்முகம். அவரது அனுபவத்தைச் சொல்கிறார்... ‘‘இந்தக் கோயிலைக் கட்டி முடிச்சதும், எங்க அப்பாவுக்கு பன்றிமலை சுவாமிகள் ஓர் உத்தரவு போட்டார். `ஒவ்வொரு பங்குனி உத்திரம் அன்னிக்கும் கூட நாலுபேரை சேர்த்துக்கிட்டு, அன்னதானம் போட்டுட்டு வாங்க’ங்கறதுதான் அந்த உத்தரவு. அந்த உத்தரவை அப்பா காலத்துல இருந்து இப்ப வரைக்கும் செயல்படுத்திட்டு வர்றோம். பழநிமலையில் இருக்குற முருகன் அப்படியே இங்கே இருப்பார். ரெண்டு சிலைகளும் ஒரே உயரம், கோவணத்துடன் கையில் தண்டுடன் இருக்கும் அதே திருக்கோலம். ஆனால், இங்கு பால முருகனாகக் காட்சியளிக்கிறார். கேட்டவருக்கு கேட்ட வரம் அருளும் கலியுகக் கடவுளாக விளங்குகிறார் தாண்டிக்குடி பாலமுருகன். எனக்கு கால் சதைகள்ல தீராத வலி உண்டாகிடுச்சு. ஃபேன் கொஞ்சம் வேகமாகச் சுத்தினாக்கூட வலி உயிர் போகும். அந்த அளவுக்குக் கடுமையான பாதிப்புல இருந்தேன். ஒரு கட்டத்துல நிலைமை ரொம்ப மோசமாகிடுச்சு. ‘இனி, சண்முகம் பொழைக்கிறது கஷ்டம்’னு ஊருக்குள்ள பேச ஆரம்பிச்சுட்டாங்க. சரி, நடப்பது நடக்கட்டும். கடைசியாக முருகனை ஒருமுறை பார்த்துட்டு வந்துடுவோம் என அழுதபடி மலைக்கோயிலுக்கு வந்தேன். முருகன் முன்னாடி உட்கார்ந்துகிட்டு, ‘எனக்கு ஏன் இந்த நிலை? எனக்கு எதாவது ஒரு வழியைச் சொல்லு?’னு முருகனிடம் பேசிக்கிட்டே இருந்தேன். கண்ணுல இருந்து கண்ணீர் நிக்காம வழிஞ்சுகிட்டே இருக்கு. அப்ப, சித்த வைத்தியம் பார்க்கச் சொல்லி எனக்கு ஓர் உத்தரவு வந்தது. அதன்படி, காரைக்குடியில இருந்த ஒரு சித்த வைத்தியர்கிட்ட போய்ச் சேர்ந்தேன். அங்கே நாலு மாசம் இருந்ததுல பரிபூரணமா குணமாகிட்டேன். நான் குணமாகி கிளம்பும்போது, அந்த வைத்தியர் என்கிட்ட சொன்ன வார்த்தை, ‘நான் உன்னைப் பார்த்ததும், இது தேறாத கேஸ், எடுத்துக்க வேண்டாம்னுதான் நினைச்சேன். ஆனா, என் மனசுக்குள்ள ஒரு குரல், `உன்னால முடியும் சிகிச்சைக் கொடு’னு சொல்லிக்கிட்டே இருந்துச்சு. அதனாலதான் நான் உன்னைச் சேர்த்துக்கிட்டேன். நீ எனக்கு நன்றி சொல்றதைவிட, என் அப்பன் முருகனுக்கு நன்றி சொல்லு’ என்றார். அதைக் கேட்டதும், முருகனின் அருளை நினைத்து, உருகிப்போனேன். அன்று முதல் கோயில் திருப்பணியை செய்துகொண்டு இங்கேயே இருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட அனுபவம்போல, பலருக்கும் ஏற்பட்டு இருக்கு. இங்கு வந்து அவர்கள் நெக்குருகச் சொல்லி அழும்போதுதான் எங்களுக்கு அது தெரிகிறது. பன்றிமலை சுவாமிகளால், உருவாக்கப்பட்ட இந்தக் கோயிலில் அவருக்கும் தனியாக ஒரு சந்நிதியை அமைத்திருக்கிறோம். கேட்டவருக்கு கேட்ட வரம் கொடுக்கும் பாலமுருகனின் அருள்பெற முருக பக்தர்கள் தாண்டிக்குடி பாலமுருகனை தரிசித்து அருளாசி பெற வேண்டும்’’ என்கிறார்.  




Sunday 3 March 2019

ஶ்ரீ_காஞ்சி_காமாக்ஷி_அகவல்

காமாக்ஷி அகவல்
#ஶ்ரீ_காஞ்சி_காமாக்ஷி_அகவல்:

--- விக்னேஷ் வராஹன்

ஆனந்தாமயமான ஸ்ரீபுரத்தில் சிந்தாமணி க்ருஹத்தில் பிந்து த்ரிகோண மத்யத்தில் அமர்ந்து அனைத்து அகிலங்களையும் ஆளும் பரமேஸ்வரி பரம கருணாரூபிணி
ஜகத்ஜனனி அன்னை ஆதிபராசக்தி
ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரசுந்தரி இப்புவியில் ஸ்ரீ காமாக்ஷி தேவியாக நமக்காக இறங்கிவந்து அருள்கிறாள்.

அப்படிப்பட்ட அபார கருணாரூபிணியான அன்னை காமாக்ஷியை போற்றி பெயர் தெரியாத ஒருவர் எழுதியது தான் இந்த அகவல்.

ஒளவையின் விநாயகர் அகவல் போலவே இந்த செய்யுளும் மிகவும் சக்தி வாய்ந்தது.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா இதற்கு ஸ்ரீமுகம் கொடுத்துள்ளார். இதை பாராயணம் செய்வதால் அம்பிகை வேத மந்திர பாராயணத்தை காட்டிலும் பரம ஸந்தோஷம் அடைந்து நமக்கு வேண்டியதை எல்லாம் கொடுத்து அனுக்ரஹம் பண்ணுவதாக கூறுகிறார்.

காமாக்ஷி அகவலுடன் காமாக்ஷி விருத்தம் சேர்த்து படிப்பது விசேஷம் என்று ஸ்ரீ மஹா பெரியவா கூறுவார்.

இதற்கு சான்றாக ஒரு உண்மை ஸம்பவம் ஒன்று உள்ளது.

ஒருமுறை ஒரு ஸுமங்கலி பெண்மணி மஹா பெரியவாளை தரிசனம் செய்ய வந்தார்கள்.

பெண்மணி : பெரியவா நமஸ்காரம். எங்காதுல ஒரே கஷ்ட ஜீவனம். எனக்கு என்ன பண்ணன்னு தெரியலை. அம்பாளை பிரார்த்தனை பண்ணலாம்ன்னு வந்தேன். ஆனால் எனக்கு எந்த ஸ்லோகமும் தெரியாது. நீங்க தான் பெரியவா அனுக்ரஹம் பண்ணனும்.

பெரியவா: அதனால என்ன. உனக்கு தமிழ் நல்லா படிக்க தெரியுமோல்லையோ?

பெண்மணி: எனக்கு தமிழ் படிக்க தெரியும் பெரியவா.

பெரியவா: பின்ன என்ன. நீ தினமும் காமாக்ஷியை பிரார்த்தனை பண்ணி காமாக்ஷி அகவலும் காமாக்ஷி விருத்தமும் பாராயணம் பண்ணு.

அவள் தாய் அல்லவா. பெற்ற பிள்ளை அழுவதை அவள் எப்படி தாங்குவாள்.
எல்லாத்தையும் அவள் பார்த்துப்பாள்.

பெண்மணி: நிச்சயமா பாராயணம் பண்றேன் பெரியவா.

பின்னாட்களில் அப்பெண்மணி மற்றும் அவள் குடும்பத்தார் அம்பிகையின் அருளால் சீரும்சிறப்புமாக வாழ்ந்தார்கள் என்பது பலருக்கு தெரிந்ததே.

காமாக்ஷிக்கு உகந்த மாசி மாதம் முழுவதும் இவ்விரண்டையும் பாராயணம் செய்தல் விசேஷம். குறைந்தபக்ஷம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை பாராயணம் செய்தல் நன்று.

ஏனெனில் மாசி - பங்குனியில்
வரும் காரடையான் நோன்பிற்க்கு காமாக்ஷி வ்ரதம் என்றே பெயர்.

காமாக்ஷி அகவல் மற்றும் காமாக்ஷி விருத்தம் செய்யுள்கள்.

#ஸ்ரீ_காமாக்ஷி_அகவல்

#காப்பு:

ஜகத்திருள் நீக்கும் காஞ்சி க்ஷேத்ரம் தனில்
மகத்துவம் மிகுந்த சக்தி மனோன்மனீ காமாக்ஷி தன்மேல்
அகத்திருள் நீங்கும் வண்ணம் ஓர் அகவற் பாமலை ஓத
முகத்திருள் நீக்கும் யானை முளரி மாமலர்த்தாள் காப்பே

#அகவல்:

ஓம் நமோ பகவதி உத்தமி கவுரி
சாம்பவி மனோன்மனீ சங்கரி பயங்கரி
வெண்தலை மாலை விமலி எண்தோளி
பஞ்சாக்ஷரத்தி பரப்ரம்மசொரூபீ
எஞ்சாகரத்தி இன்பத் தாண்டவீ
ப்ரணவ சொரூபம் பெற்றிடும் வீரி
சரணாம்புயத்தி ஸர்வஸம்ஹாரி
தத்துவப் பொருளாய் தழைத்த நன்மணி
அத்தி முகவனை அளித்த கண்மணி
சிறுவிதி மகவாய் சிறந்த சிவமணி

ஒருதனி முதலாய் ஓங்கும் தவமணி
வரைமகள் எனவே வளர்ந்த நவமணி
பரையென நாமம் பகர்ந்தவர் பவப்பிணி
அகற்றி ஆட்கொள்ளும் அற்புத ஒளியே
சிவ சிவ சிவ சிவ சிவசங்கரியே
நவவடிவாகிய நாராயணியே
ஆதிஅனாதியும் அந்தமும் நீயே
ஜோதி சுடராய் சூழ்ந்தவள் நீயே
தந்தை தாயுமாய் தழைத்தவள் நீயே
இடை பிங்கலையில் இருப்பவள் நீயே

கடை சுழுமுனையில் கலப்பவள் நீயே
முச்சுடராகி முளைத்தவள் நீயே
உச்சுக்கு வெளியில் உலவுபவள் நீயே
மூலத்தில் நின்ற முதல்வியும் நீயே
ஜாலங்கள் புரியும் சமர்த்தியும் நீயே
ஓரெழுத்தான் ஒலிவெளி நீயே
ஈரெழுத்தான் ஈச்வரி நீயே
மூவெழுத்தான முக்கண்ணி நீயே
நாலெழுத்தான நாயகி நீயே
அஞ்செழுத்தான அம்மணி நீயே

பஞ்சக்ருத்தியம் படைத்தவள் நீயே
ஐவராம் கர்த்தர்கு அன்னையும் நீயே
ஐயாறு மூவேழு அக்ஷரீ நீயே
அருவுருவான அற்புதம் நீயே
குருவாய் விளங்கும் கோலமும் நீயே
சின்மயமாக செறிந்தவள் நீயே
தன்மயமாக தனித்தவள் நீயே
வேதாந்தமான விளைவும் நீயே
நாதாந்தமான நவரசம் நீயே
வேற்றுமை இல்லா வித்தகி நீயே

நாற்பத்து முக்கோண நாயகி நீயே
அரனொடு அரியாய் அமர்ந்தவள் நீயே
பரனொடு பரையாய் பதிந்தவள் நீயே
மோன பாத்திர முடிவும் நீயே
ஞான க்ஷேத்திர நவநிதி நீயே
நடுநிலையான நாயகம் நீயே
கொடுவினை மாற்றும் குண்டலி நீயே
சுத்த சிவமாய் ஜொலிப்பவள் நீயே
சத்தி சிவமாய் சார்ந்தவள் நீயே
சுகஸ்வரூபீ சூட்சியும் நீயே

அகண்டபூரணம் ஆனவள் நீயே
வேலனை ஈன்ற விளக்கொளி நீயே
வாலைத் திருமகள் வாணியும் நீயே
கன்னிகையாம் சிவகாமியும் நீயே
அன்னையாம் வடிவம்மையும் நீயே
ஆட்சி நீலாயதாக்ஷியும் நீயே
சூட்சி சிவகமலாக்ஷியும் நீயே
நாரணியாம் மீனாக்ஷியும் நீயே
ஆரணியாம் விசாலாக்ஷியும் நீயே
கன்னிகள் பத்திரகாளியும் நீயே

மன்னும் துர்கை மாரியும் நீயே
எந்திர வித்தைகள் எல்லாம் நீயே
மந்திர ஸ்வரூப மௌலியும் நீயே
மாய குண்டலி மனோன்மனீ நீயே
ஆயிரம் நாமம் ஆனவள் நீயே
ஆனந்த வடிவாய் அமைந்தவள் நீயே
மனவாக்கடங்கா மகமாயி நீயே
ஸர்வ ஸம்ஹார சக்தியும் நீயே
ஸர்வானுக்ரஹ ஸமர்த்தியும் நீயே
எண்ணும் மனதில் இருப்பவள் நீயே

மண்ணுயிர்க்குயிராய் மருவிய தாயே
அகிலாண்டவல்லி அம்பிகையாளே
மஹிமே சேர் கச்சி மாநகராளே
கனகம் பொழி திருக்காமக்கோட்டத்தி
மனங்கவர் காயத்ரி மாமண்டபத்தி
ஓங்கார கோணத்தில் ஒளிர் பத்மாஸனத்தி
நீங்காத நீல நிறத்தி சதுர்புஜத்தி
காணரும் பிலாகாச பீடத்தி கன்னி
சேனுயர் துவஜ சிகர கோபுரத்தி
தகவுறு தர்ம ஸந்தான ஸ்தம்பத்தி

திகழறத்தி பஞ்ச தீர்த்த பூதத்தி
வெற்றி ஸ்தம்பம் விளங்குமாலயத்தி
பற்றற்றவர் பணி பொற்பதத்தி
தலம் புகழ் சங்கராசாரியர் என்னும்
வலம் புரிந்தேத்தி வன்மையோ இன்னும்
ஒருபுடை மருவ உளம் மகிழ் நீலி
திருமகள் கலைமகள் தினம் தொழும் சூலி
காமக்கண்ணி கவுரி கமலாக்ஷி
தாமதமின்றி தந்தருள் காக்ஷி
ஆதரவின்ற அம்மணி உன்றன்

பாதக் கமலம் பணிந்தனன் என்றன்
வேதனை தீர்த்து இவ்வேளை வந்தாதரி
மாதரி வீரி மயான ருத்ரி
சகலரும் போற்றி சந்தோஷமுற்று
சகல சித்தியும் சக்தியும் பெற்று
பக்குவமாக நின் பதமலர் போற்றிட
சக்ரேச்வரியே ஸந்ததம் காப்பாய்
போற்றி போற்றி பொன்னடி போற்றி
ஏத்தி ஏத்தி இறையடி தொழுவாம்
காத்தருள்வாயே காமாக்ஷித் தாயே
காத்தருள்வாயே காமாக்ஷித் தாயே

#ஸ்ரீ_காமாக்ஷி_விருத்தம்

மங்களஞ்சேர் காஞ்சிநகர் மன்னுகாமாட்சி மிசை
துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே -- திங்கட்
புயமருவும் பணியனியும் பரமனுளந்தனின் மகிழும்
கயமுகவைங் கரனிருதாள் காப்பு.

#விருத்தம்:

சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி
சோதியாய் நின்ற உமையே,
சுக்ர வாரத்திலுனை கண்டு தரிசித்தவர்கள்
துன்பத்தை நீக்கி விடுவாய்,
சிந்தைதனிலுன் பாதந் தன்னையே தொழுபவர்கள்
துயரத்தை மாற்றி விடுவாய்,
ஜெகமெலா முன் மாய்கை புகழவென்னா லாமோ
சிறியனால் முடிந்திடாது.
சொந்தவுன் மைந்தனா யெந்தனை யிரட்சிக்கச்
சிறிய கடன் உன்னதம்மா,
சிவ சிவ மஹேஸ்வரி பரமனிட யீஸ்வரி
சிரோன்மணி மனோன் மணியுநீ
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
யனாத ரட்சகியும் நீயே,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 1 ]

பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
பாடகந் தண்டை கொலுசும்,
பச்சை வைடூரியம் மிச்சையா இழைத்திட்ட
பாதச் சிலம்பினொலியும்
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோகன மாலை யழகும்,
முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
முடிந்திட்ட தாலி யழகும்,
சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
செங்கையிற் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
சிறுகாது கொப்பி னழகும்
அத்திவரதன் தங்கை சக்தி சிவரூபத்தை
யடியனாற் சொல்ல திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 2 ]

கெதியாக வுந்தனைக் கொண்டாடி நினதுமுன்
குறைகளைச் சொல்லி நின்றும்,கொடுமையா
யென்மீதில் வறுமையாய் வைத்து நீ
குழப்பமா யிருப்பதேனோ,

சதிகாரியென்று நானறியாம லுந்தனைச்
சதமாக நம்பி னேனே,
சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க
சாதக னக் கில்லையோ?
மதிபோல வொளியுற்ற புகழ்நெடுங் கரமுடைய
மதகஜனை யீன்ற தாயே,
மாயனிட தங்கையே பரமனது மங்கையே
மயானத்தில் நின்ற வுமையே
அதிகாரி யென்றுநா னாசையால் நம்பினேன்
அன்பு வைத்தென்னை யாள் வாய்,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 3 ]

பூமியிற் பிள்ளையாய்ப் பிறந்தும் வளர்ந்துநான்
பேரான ஸ்தலமு மறியேன்,
பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்
போற்றிக் கொண்டாடி யறியேன்
வாமியென் றுன்னைச் சிவகாமி யென்றே சொல்லி
வாயினாற் பாடியறியேன்.
மாதா பிதாவினது பாதத்தை நானுமே
வணங்கியொரு நாளுமறியேன்,
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு
சாஷ்டாங்க தெண்டனிட்டறியேன்,
ஆமிந்த பூமியிலடியனைப் போல் மூடன்
ஆச்சிநீ கண்ட துண்டோ,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 4 ]

பெற்றதா யென்றுன்னை மெத்தவும் நம்பிநான்
பிரியமா யிருந்தே னம்மா
பித்தலாட்டக் காரியென்று நானறியாது உன்
புருஷனை மறந்தே னம்மா,
பக்தனாயிருந்து உன் சித்தமும் இரங்காமல்
பாராமுகம் பார்த்திருந்தால்
பாலன் யானெப்படி விசனமில் லாமலே
பாங்குட னிருப்பதம்மா,
இத்தனை மோசங்க ளாகாது ஆகாது
இது தர்மமல் லவம்மா,
எந்தனை ரக்ஷிக்க சிந்தனை களில்லையோ
யிது நீதி யல்ல வம்மா
அத்தி முகனாசையா லிப்புத்திரனை மறந்தாயோ
அதை யெனக்கருள் புரிகுவாய்,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 5 ]

மாயவன் தங்கை நீ மரகத வல்லிநீ
மணிமந்திர காரிநீயே
மாயசொ ரூபிநீ மகேஸ்வரியு மானநீ
மலையரை யன்மக ளானநீ
தாயே மீனாட்சிநீ சற்குண வல்லிநீ
தயாநிதி விசாலாட்சிநீ,
தாரணியில் பெயர் பெற்ற பெரிய நாயகியும்நீ
சரவணனை யீன்ற வளும்நீ
பேய்களுடனாடிநீ அத்தனிட பாகமதில்
பேறுபெற வளர்ந்த வளும்நீ,
பிரணவசொரூபிநீ பிரசன்ன வல்லிநீ
பிரியவுண் ணாமுலையுநீ
அகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 6 ]

பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்
புத்திகளைச் சொல்லவில்லையோ,
பேய்பிள்ளை யானாலும் தான் பெற்ற பிள்ளையை
பிரியமாய் வளர்க்க வில்லையோ
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்
கதறி நானழுத குரலில்,
கடுகதனிலெட்டிலொரு கூறுவதி லாகிலுன்
காதி னில் நுழைந்த தில்லையோ,
இல்லாத வன் மங்களென் மீதிலேனம்மா
இனி விடுவதில்லை சும்மா
இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வது
இதுதரும மல்ல வம்மா,
எல்லாரு முன்னையே சொல்லியே யேசுவார்
அது நீதியல்ல வம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 7 ]

முன்னையோர் சென்மாந்திர மேனென்ன பாவங்கள்
இம் மூடன் செய்தா னம்மா
மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டி
மோசங்கள் பண்ணினேனோ,
என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே
இக்கட்டு வந்த தம்மா,
ஏழைநான் செய்தபிழை தாய்பொறுத்தருள் தந்து
என்கவலை தீரு மம்மா.
சின்னங்களாகாது ஜெயமில்லையோ தாயே
சிறுநாண மாகுதம்மா,
சிந்தனைக ளென்மீதில் வைத்து நற்பாக்கியமருள்
சிவசக்தி காமாட்சி நீ
அன்னவாகனமேறி யானந்தமாக வுன்
அடியேன் முன்வந்து நிற்பாய்,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 8 ]

எந்தனைப் போலவே செனன மெடுத்தோர்கள்
இன்பமாய் வாழ்ந் திருக்க,
யான் செய்த பாவமோ யித்தனை வறுமையினுள்
உன்னடியேன் தவிப்பதம்மா,
உன்னையே துணையென் றுறுதியாய் நம்பினேன்
உன் பாதஞ் சாட்சியாக
உன்னையன்றி வேறுதுணை யினியாரை யுங்காணேன்
உலகந்தனி லெந்தனுக்கு
பிள்ளை யென்றெண்ணி நீ சொல்லாம லென்வறுமை
போக்கடித் தென்னைரட்சி,
பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல்
பிரியமாய்க் காத்திடம்மா,
அன்னையே யின்னமுன்ன டியேனை ரட்சிக்க
அட்டி செய்யா தேயம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 9 ]

பாரதனிலுள்ளவும் பக்கியத்தோடென்னைப்
பாங்குட னிரட்சிக்கவும்
பக்தியாய் உன்பாதம் நித்தந் தரிசித்த
பாலருக் கருள் புரியவும்,
சீர்பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்
செங்கலிய னணு காமலும்,
சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து
ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்,
பேர்பெற்ற காலனைப் பின்தொடர வொட்டாமற்
பிரியமாய்க் காத்திடம்மா,
பிரியமாயுன்மீதில் சிறுயனான் சொன்னகவி
பிழைகளைப் பொறுத்து ரட்சி,
ஆறதனில் மணல் குவித் தரியபூசை செய்தவென்
னம்மையேகாம்பரி நீயே,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே. [ 10 ]

எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது
இப்பூமி தன்னி லம்மா,
இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்
இனி ஜெனன் மெடுத் திடாமல்,
முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான்
முக்காலும் நம்பி னேனே,
முன்பின்னுந் தோணாத மனிதரைப் போலநீ
முழித்திருக் காதே யம்மா,
வெற்றி பெற வுன்மீதில் பக்தியாய் நான் சொன்ன
விருத்தங்கள் பதினொன்றையும்,
விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை
விமலனா ரேசப் போறார்.
அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்
அருங்குறை யைத்தீரு மம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி யுமையே.

ஸ்ரீயஞோபவீதேஸ்வரர்

பொதுவாக அவிட்ட நட்சத்திரம் கூடிய ஆவணி நாளிதான் பூணூல் அணிவது சிறப்புடையதாகும். பிரளயத்திற்குப் பின் சிருஷ்டி ஏற்பட்டபோது கிராத மூர்த்தியாக அவதாரம் கொண்ட சிவபெருமான் ஜீவ அணுக்கள் கூடிய குடத்தை மேருமலையில் வைத்துத் தன் வில் கொண்டு சிருஷ்டி ஜோதியை ஏவியபோது அத்திருக்கடம் உடைந்து அதன் மேலிருந்த பூணூல், மாலை போன்றனவும் பல இடங்களில் தெறித்து விழுந்தன. இவ்வாறு அதன் பூணூல் விழுந்த இடத்தில் ஆதிசிவனே ஸ்ரீயஞோபவீதேஸ்வரராக (கும்பகோணம்) எழுந்தருளினார். எனவே உபநயனம், ஆவணி அவிட்டம் மட்டுமல்லாது எப்போது பூணூல் அணிந்திடினும் கும்பகோணம் ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரருக்குச் சாற்றிய பூணூலை அணிவதே மிகவும் விசேஷமானதாகும். இன்றைக்கும் ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரர் திருவடியில் பூணூலை வைத்து அவருக்குச் சாற்றி அதனையே அணிகின்ற நல்வழி முறையைப் பின்பற்றுவோர் பலர் உள்ளனர். இதனால் பூணூலில் படிந்திருக்கும் சகல தோஷங்களும் நீங்கி ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் உரு ஏற்றுவதற்காக மிகச் சிறந்த தெய்வீகப் பெட்டகமாக அது மிளிர்கின்றது.
ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரரின் சந்நிதியில்தான் ஸ்ரீமகாவிஷ்ணுவே முன்னின்று ஸ்ரீநாரதருக்கு உபநயனம் செய்வித்தார். இவ்விடத்தில் மிக எளிமையான முறையில் உபநயனத்தை நடத்திக் குறைந்தது 108 பேருக்கு அன்னதானம் அளித்திட பித்ரு லோக மகரிஷிகளே ஸ்ரீநாரதரின் தலைமையில் நேரில் சூட்சுமாய்ப் பிரசன்னமாகி ஆசிர்வதிக்கின்றனர். பெறற்கரிய பாக்கியமிது!
பூணூலில் உள்ள முடிச்சிற்கு பிரம்ம முடிச்சு என்று பெயர். இதை கைகளுக்குள் அடக்கிப் பிடித்தவாறு காயத்ரீ மந்திரத்தை ஜபிப்பர். இவ்வாலயத்தில் ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரருக்குச் சாற்றிய பூணூலை அணிந்து பிரம்ம முடிச்சை வலது உள்ளங்கைக்குள் இருத்தி காயத்ரீ மந்திரத்தை ஜபிப்போருக்கு ஞாபக சக்தி விருத்தி அடைவதோடு மனக்குழப்பங்கள் நீங்கி வாழ்க்கையில் கணவன், மனைவி, குழந்தைகளிடையே பரஸ்பர அன்பும் ஏற்படும். ஆன்மீகத்தில் முன்னிலை பெற விழைவோருக்கு ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் பீஜாட்சர சக்திகள் இன்றியமையாததாகும்


பிரம்மச்சாரிகள், மூன்று புரிகளையும், திருமணம் ஆனவர்கள் ஆறு புரிகளையும் கொண்ட பூணூலை அணிய வேண்டும். தாய், தந்தையரை இழந்தோர் ஒன்பது புரிகளை அணிந்திடுக.
பூணூலை எக்காரணம் கொண்டும் கழற்றுதல் கூடாது.
நீரிலோ அல்லது அசந்தர்ப்பங்களினாலோ, பூணூல் அறுந்தாலோ, தொலைந்தாலோ அல்லது கழன்றாலோ அதை மீண்டும் அணியலாகாது. உடனே (ஸ்ரீயஞோபவீதேஸ்வரருக்குச் சாற்றிய) புதிய பூணூலை அணிதல் வேண்டும். இதற்காகவே பல பூணூல்களை ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரருக்குச் சாற்றிக் கைவசம் வைத்திருப்பது நலம். காலை, மதியம், மாலை மூன்று வேளைகளிலும் கண்டிப்பாக ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபிக்க வேண்டும். இம்மூன்று வேளைகளிலும் தர்ப்பைப் பாயில் கிழக்கு/அல்லது வடக்கு/மேற்கு நோக்கி அமர்ந்து ஜபித்திட வேண்டும். ஏனைய நேரங்களில் எந்நேரமும், எப்போதும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்திடலாம். 32, 64, 108 என்று குறுகிய எண்ணிக்கைக்குள் முடித்திடாது குறைந்தது 1008 முறையேனும் ஜபித்திடுக மனதினுள் அதாவது மானசீகமாக ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபிக்கப் பழகிடில் ஒருமணி நேரத்தில் நின்று, அமர்ந்த, நடந்த நிலைகளில் கூட குறைந்த்து 300 முறை எவரும் ஜபித்திடலாம், ஆரம்பத்தில், கலியுக கர்ம பரிபாலனத்திற்கேற்ப ஒரு நாளில் குறைந்தது 10,000 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்தல் உத்தமமானது என்பதே சித்தர்களின் அருள்வாக்காகும். இதனால் அவரவர்க்குரிய கர்மசுமைகளின் பளுவை உணராது இறை நினைவுடன் பொழுதில் ஒன்றுவது எளிமையாகிறது.

Saturday 2 March 2019

திருவள்ளுர் அஷ்ட லிங்கங்கள்

திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள் - திருவேற்காடு வேதபுரீஸ்வரர் சந்நிதானத்தைச் சுற்றிலும் அருள் தரும்அஷ்டலிங்கங்களாக ஒவ்வொரு திக்பாலகரது திருநாமத்தைக் கொண்டுவிளங்குகின்றனஒவ்வொரு லிங்கமும் தனித்தனியான வாழ்க்கை நலன்களைஅருள்பவை என்றாலும் அவற்றை ஒரேநாளில் 18 கி.மீஎல்லைச் சுற்றுக்குள்தரிசித்து விடுவதே சிறப்பானது.  அந்தவரிசையில் எண்கயிலாய தரிசனமாகசென்னையின் தென்பகுதியான தொண்டைமண்டலத்தில் வள்ளிக் கொல்லைமேடுநூம்பல்செந்நீர்கு ப்பம்பாரிவாக்கம்மேட்டுப்பாளையம்பருத்திப்பட்டுசுந்தரசோழபுரம்சின்னக்கோலடி ஆகியதலங்களை வழிபடலாம்.

இனிமை தரும் இந்திர லிங்கம்:- வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்து நேர்கிழக்காக வள்ளிக் கொல்லைமேடு என்றஇடத்தில் இந்திரசேனாபதீஸ்வரர் என்றதிருநாமத்துடன் அருள்கிறார்பதவி உயர்வுஅரசு அனுகூலம் பெற்றுத் தருகிற இந்தசுவாமியை நெய்தீபம் ஏற்றி வைத்து    வழிபடவும்.
இடர்களையும் அக்கினி லிங்கம்அகத்தியர் தனித்து பூஜை செய்த லிங்கமாகஆனந்தவல்லி உடனுறையும்அகத்தீஸ்வரராக தென்கிழக்கு திசையில்நூம்பல் என்ற தலத்தில் அருள் தரும் இவர்முன் நெய்தீபம் ஏற்றினால்      வழக்குகளில்    வெற்றி      உண்டாகும்.
எதிர்க்கும் வினைகளையும் எம லிங்கம்மரகதாம்பிகை உடனுறை கைலாசநாதர்எனும் திருநாமத்துடன் பூந்தமல்லிஆவடிசாலையில் தென்திசை லிங்கமாகசெந்நீர்குப்பம் என்ற தலத்தில் சிவமூர்த்தங்களோடு கருங்கற்கோயிலில்காட்சி தருகிறார்ஏழரைச்சனிகண்டச்சனிவிலகிஇரும்புத் தொழிலில் முன்னேற்றம்காண நெய்தீபம் ஏற்றி      வணங்குங்கள்.
நிம்மதி அருளும் நிருதி லிங்கம் : வேதபுரீஸ்வரர் சந்நதியிலிருந்துதென்மேற்கு திசையில்சுமார், 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகஓலைச்சுவடிச் செய்திகளோடு பாலாம்பிகை உடனுறை பாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன்பூந்தமல்லிபட்டாபிராம் இடையில்பாரிவாக்கத்தில் (மகாநாடு நிறுத்தத்தில்அருள்கிறார்கொடுத்த  கடன் திரும்பவும்உறவினர் மூலம் நன்மை பெறவும் நெய்தீபம்ஏற்றி வழிபட வேண்டும்.
                
உடல் திறன் கூட்டும் வருண லிங்கம் : வேதபுரீசர் கோயிலிலிருந்து மேற்கு திக்கில்மேட்டுப்பாளையம் என்ற பூமியில்ஜலகண்டீஸ்வரி உடனுறை ஜலகண்டீஸ்வரசுவாமி என்ற திருநாமத்துடன் ஆலயம்இன்றி வெட்டவெளியில் அருள்  தருகிறார்புத்திரப்பேறுநோய் நீக்கம்விவசாயவிருத்தி போன்ற பலன்கள் பெற நெய்தீபம்ஏற்றி வைத்து வழிபடுங்கள்பூந்தமல்லி - ஆவடி  சாலையில் காடுவெட்டி என்றஇடத்தில்  உள்ளது.
குறைவிலா செல்வம் தரும் குபேரலிங்கம் :- ஆவடி-திருவேற்காடு சாலையில்வடக்கு திசை லிங்கத் திருமேனியாக சுந்தரசோழபுரம் என்ற தலத்தில்வேம்புநாயகியோடு குபேரபுரீஸ்வரர் ஏகதளவிமானக் கருவறையில் அருளாட்சிசெய்கிறார்பைரவர்வாயு தேவர்துர்க்கைநவநாயகர் மற்றும் சத்திய நாராயணருடன்அருள் தருகிறார்ஆலய வரலாற்றுக்குறிப்பைக் காணும்போது இவ்வூரில்சுந்தரன் என்ற சோழ அரசன் சிலகாலம்ஆட்சிபுரிந்தமையால் சுந்தர சோழர்புரம்என்ற பெயர் நிலைத்ததாக உள்ளதுஇத்தலஈசனை வழிபட பொருட் சேர்க்கையோடு சகலசம்பத்துக்களும் கிட்டும்.
வாழ வழி காட்டும் வாயு லிங்கம் :- வேற்காட்டீஸ்வரர் தலத்திலிருந்து வடமேற்குதிசையில்  விருத்தாம்பிகை உடன் வாழவந்தவாயுலிங்க மூர்த்தியாக அழகானசிவாலயத்துள்சிவமூர் த்தங்களோடு அருள்தருகிறார்ஆவடி சாலையில் பருத்திப்பட்டுஎன்ற தலத்தில் கோயில் கொண்ட இந்தசிவலிங்கத் திருமேனி அருகே  இலவம்பஞ்சுமரங்களின் காய்கள் வெடித்துச் சிதறுவதால்பஞ்சுகள் இறைவன் மேல் படர்வதால்அப்பெயர் நிலைத்து விட்டதுசந்நதியில்நெய்தீபம்  ஏற்றி துதி கூறி வழிபட இழந்தபொருளை மீட்பீர்கள் 
எடுத்த செயல் முடிக்க வைக்கும் ஈசானலிங்கம் :- வேதபுரீஸ்வரர் கோயிலில்இருந்து வடகிழக்கு திசையில் திருவேற்காடு - கோலடி சாலையில் சின்னக்வகோலடி என்றஇடத்தில் வெட்ட வெளிச்  சிவலிங்கமாகநானேஸ்வரி உடனுறையும் ஈசான சிவன்அருள் தருகிறார்தொண்டை மண்டலகோட்டத்தில் ஆட்சிபுரிந்த மன்னர்கள்எப்போதும் ஒரு  செயல் வெற்றியாக ஈசனைலிங்க வழிபாடு செய்தபின்பே புறப்பட்டுச்சென்றதாக கால வரலாறு சொல்கிறதுவீடுகட்ட இயலாமைகாரியத் தடை,  கண்திருஷ்டிவண்டி வாகனத்தில் லாபம்இல்லாமை ஆகியவை விலகிடநெய்தீபத்துடன் நல்லெண்ணெய் ஏற்றிவணங்க   வேண்டும்.
திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள் உள்ளதிருவேற்காடு தலத்தை மையமாக வைத்துஇந்த லிங்கங்கள் எட்டையும் சுமார் மூன்றுமணி நேரத்திற்குள்  ஆட்டோ அல்லதுகார்களில் சென்று வழிபட்டு வரலாம்இந்தஊரின் சோமவார வழிபாட்டுக் குழுவினரும்அஷ்டலிங்கத் தரிசன குழுவும் எண் கயிலாயதரிசன சேவைக்கு உதவுகின்றனர்