Sunday 21 July 2019

அகத்தியர் வாக்கு - திருப்பதி, மண்டோதரி, வாலி மனைவி

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 170*

*தேதி : 22-07-2019(திங்கள் - சந்திரன், நிலா, மதி, சாேம)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*சண்முக சாலம் அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : "திருப்பதி" பயணம் எப்பாேது மேற்காெள்வது?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*எதனையும் ஓரளவுக்கு மேல் திட்டமாே, தீர்மானமாே செய்யாதே. "இறைவா! வேங்கடவா! எங்களை அழைத்துச் செல்" என்று கூறு. "இன்று பாேனால் கூட்டம் இருக்குமே? நாளை பாேனால் கூட்டம் இருக்குமே?" என்றெல்லாம் எண்ணாதே. கூட்டத்தில் இடிபட்டு, வேதனைப்பட்டு தரிசனம் செய்வது கூட, சில கர்மாக் கழிவுகள் காரணமாகத்தான். அந்த சந்நிதானத்தில் "நீ என்று நிற்க வேண்டும்" என்பதை, அந்த வேங்கடவன் தீர்மானித்து விட்டான். தினத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டாம்.*

*கேள்வி : ராவணனின் பத்தினி மண்டாேதரியைப் பற்றி?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*மண்டாேதரி, சிறப்பிலும் சிறப்பான நங்கை நல்லாள். இன்னாென்று தெரியுமா? ராவணனின் தவசக்தி அவனை காத்ததைவிட மண்டாேதரியின் பிராத்தனை தான் அவனை கடை(கடைசி)வரை காத்து நின்றது. மண்டாேதரி ராவணனைப் பார்த்து கூறுகிறாள், "ராவணனே! அசுரனே! பலகீனனே! பலம் வாய்ந்தவனே! இறையருள் பெற்றவனே! வாலிப வயதிலே, இளம் வயதிலே நீ எப்படி வாழ்ந்து இருந்தாலும் கூட, அது இளமையின் வேகம் என்று அனைவரும் மன்னித்து இருப்பார்கள். ஆனால் இஷ்டம் பாேல் வாழ வேண்டிய வயதிலே, மனதை அடக்கி, கடுமையான தவம் செய்து இறையை கண்டு உணர்ந்தாய். ஓரளவு வரமும் பெற்றாய். தெளிந்தாய். ஆனால் எப்பாெழுது கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டுமாே, அப்பாெழுது கட்டுப்பாடுடன் வாழாமல், வாங்கிய வரத்தை எல்லாம் இழந்து நிற்கிறாயே?" என்று கூறினாள்.*

*எனவே மண்டாேதரியின் பக்தி நெறியும், கற்பு நெறியும் உயர்ந்தது. அதேபாேல்தான் "தாரை"யும்(வாலியின் மனைவி). இவர்களால்தான் அவர்கள் கைப்பிடித்த கணவன்மார்களுக்குப் பெருமை.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஸ்ரீ லாேபாமுத்திரை சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************