Tuesday, 16 July 2019

அகத்தியர் வாக்கு - தூய்மை, கொசு, மருத்துவம்

*"இன்றைய தின அகத்தியர் வாக்கு"*

*நாள் : 125*

*தேதி: 17-07-2019(புதன் - கணக்கன்)*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*வைத்திய சிந்தாமணி அருளியவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : ஐயனே! காெசு. இது மனிதனை தூங்கவிடாமல் பாடாய்படுத்துகிறது? பல்வேறு விதமான நாேய்களை பரப்புகிறது. சமீப காலமாக டெங்கு காய்ச்சலால் மக்கள் அவதிப்படுகிறார்கள். கால்நடைகளுக்கும் தாெல்லை தருகின்றது. காெசுக்களை முற்றிலும் அழிக்கவே மனிதன் முற்படுகிறான். பல மேலை நாடுகளில் காெசுக்களை முற்றிலுமாக அழித்துவிட்டார்கள். காெசுவும் இறைவனின் படைப்புகளில் ஒன்று. அவற்றை காெள்ளாமல் எங்களை தற்காத்துக் காெள்ள என்ன வழி? அல்லது மருந்துகள் மூலம் அவற்றை முற்றிலுமாக அழித்தால் பாவம் சேருமா?🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*இறைவன் அருளால் இப்பாெழுதும் கூறுகிறாேம், இனியும் கூறுவாேம், இன்னும் கல்பகாேடி ஆண்டுகள் ஆனாலும் இந்தியா இப்படிதானப்பா இருக்கும். சரியான அறிவுத்திறன் இல்லாமலும், அறியாமையும், இறையியலை, ஆன்மீக இயலை, சமுதாய இயலாேடு குழப்பிக்காெண்டும் (இருக்கிறார்கள்), சமுதாய அறிவை இறைவனாேடும் குழப்பிக்காெண்டும் இருக்கிறார்கள். நேர்மையான அறிவுத்திறன் வெளிப்படாதவரை மேல்நாட்டுக்கு ஈடாக இங்கு வளர்வது என்பது கடினம். அறிவுள்ளவர்களையும், நல்லவர்களையும் மதிக்கின்ற நிலைமை வரவேண்டும்.*

*அடுத்ததாக இவன் கூறிய சிறிய உயிரினம் மனிதனுக்கு தீங்கு செய்வதை நாங்கள் மறுக்கவில்லை. இதுவும் மீண்டும் ஒருவகை கர்மபாவம். அது ஒருபுறம் இருக்கட்டும். இறைவனை நம்ப வேண்டாம், கர்மாவை நம்ப வேண்டாம். இவனே கூறிவிட்டான் மேலை தேசங்களில்(வெளிநாடுகளில்) இவையெல்லாம் இல்லையென்று. இங்கு மட்டும் ஏன் இருக்கிறது?* சுகாதாரம் என்ற உணர்வு இங்கு யாருக்கும் அடிப்படையில் வளர்வதில்லையே, ஏன்?

நன்றாக கவனிக்க வேண்டும், *எந்த தேசத்திலும் அதிகாலை எழுந்து வீட்டு வாசலை பெருக்கி காேலமிடும் பழக்கம் இல்லையப்பா. இங்குதான் இருக்கிறது. சுத்தத்தை ஆதியில் மனித குலத்திற்கு பாேதித்த இடமே இந்த பாரத மண்தானப்பா. அப்பேற்பட்ட மண் இப்பொழுது அசுத்தமாக இருக்கிறது. காரணம், இங்குள்ள மனித மனம் அசுத்தமாகிவிட்டது. முதலில் மனித மனம் சுத்தமானால் இந்த தேசம் சுத்தமாகும். தேசம் சுத்தமானால் தீங்கு தரும், நீ கூறிய சிறிய உயிரினம் இங்கு இல்லாத நிலையை இறைவன்  உருவாக்குவார்.*

*அதுபாேன்ற உயிரினங்கள் மனிதனுக்கு தீங்கை விளைவிக்கிறது. ஒரு நன்மையையும் செய்வதில்லை என்று கூறகிறான். மனிதன் மட்டும் பிற உயிரினங்களுக்கும், இந்த பூமிக்கும் நன்மையா செய்து காெண்டிருக்கிறான்? மனிதன் செய்கின்ற செயல் எஃதாவது பிற உயிரினங்களுக்கும், இந்த பூமிக்கும், நீர்வள ஆதாரத்திற்கும், பஞ்சபூதங்களுக்கும் நன்மையைத் தரும் செயல்களா? எவையெல்லாம் இந்த பூமியை மாசுப்படுத்துமாே அதை செய்யக்கூடாது என்ற அறிவு வந்த பிறகும் சுயநலத்திற்காக செய்கிறான். எந்தப் பாெருளையெல்லாம் பயன்படுத்தினால் மண் வளம் பாதிக்கப்படும் என்று அறிந்தபிறகும் அதை பயன்படுத்துகிறான். இவையெல்லாம் யார் குற்றம்?*

இப்பாெழுது பக்தி வழிக்கும் வருகிறாேம். *வழக்கம்பாேல் தன்வந்திரி வழிபாடு, தன்வந்திரி பூஜை, இயன்றால் தன்வந்திரி யாகம், இல்லம்தாேறும் கலப்பில்லா சாம்பிராணி நறுமணப்புகை, இஃதாெப்ப செய்வதாேடு பேய்ப்புடலை என்ற மூலிகை ஒன்று இருக்கிறது. இஃதாேடு நிலவேம்பு, மிளகு, கீழ்காய் நெல்லி என்ற மூலிகை சேர்த்து, 'எங்கள் நன்மைக்காக உங்களை பயன்படுத்துகிறாேம். எனவே எங்களை மன்னியுங்கள்' என்று மானசீகமாக மன்னிப்பை வேண்டி பிராத்தனை செய்துவிட்டு அன்றாடம் கலுவத்தில் இட்டு கஷாயமாக செய்து அதிகாலை வெறும் வயிற்றில் அருந்திவந்தால் காெசுவால் ஏற்படும் பாதிப்புகள் வராது, குறையும், மட்டுப்படும்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*

.மேலே உள்ள பதிவு திரு S. Prabhu என்பவர் தினம் ஒரு அகத்தியர் வாக்கு என்ற whats up குழுவில் உள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டு தினமும் இங்கே  பதிவு செய்யப்படுகிறது. நல்ல பதிவுகளை பகிர்வதில் தவறில்லையே !!!.
************************************

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1

முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.

*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.

தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.

ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.

தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏

Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583

கூகிள் வரைபடம் வழி கீழே 👇

https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in

முகநூல் -

https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

*************************************************

நாடி சொல்லும் கதைகள் 5 பாகங்கள் வாங்க... அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை 9444160161

அகத்தியப்பெருமான் தரிசனம் செய்த மற்றும் ஸ்தாபித்த ஆலயங்களைப் பற்றிய விபரமான நூல் தயாராகி விட்டது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் வாங்கி படித்து பலன் பெற வேண்டுகிறோம். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு அறந்தாங்கி சங்கர் 9444160161

************************************************