Wednesday, 31 October 2018

திருச்செந்தூர் முருகனும், வீரபாண்டிய கட்டபொம்மனும்:

☘🙏☘🙏☘🙏☘


    🌹   *திருச்செந்தூர் முருகனும், வீரபாண்டிய கட்டபொம்மனும்:* 🌹

முருகப்பெருமான் மீது வீரபாண்டிய கட்டபொம்மன்  அளவு கடந்து வைத்திருந்த பக்திக்கு ஈடு இணையே கிடையாது.

தன் பக்தனின் மெச்சுதலை அங்கீகரிக்கும் விதமாக கட்டபொம்மன் மூலமாக முருகன் சில அற்புதங்களை நிகழச் செய்திருக்கிறான்.

கட்டபொம்மன், தினமும் திருச்செந்தூரில் முருகப்பெருமானுக்கு பூஜை, நிவேதனம் நடந்து முடிந்த பிறகே, தன் மதிய உணவை உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

கட்டபொம்மனின் கோட்டை இருப்பதோ பாஞ்சாலங் குறிச்சியில். இங்கிருந்து அவ்வளவு தொலைவில் இருக்கிறது திருச்செந்தூர் முருகனாலயம்.

கோயிலில் முருகனுக்கு நிவேதனம் நடந்துவிட்டதை அவர்  தெரிந்து கொள்ளும விதமாக.........

திருச்செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை ஆங்காங்கே கல் மண்டபங்களை அமைத்தார். மண்டபத்தின் உள்ளே வெங்கல மணிகளை பொருத்தினார்.

ஒவ்வொரு மண்டபத்திலும் சேவகர்களை நிறுத்தியிருந்தார்.

திருச்செந்தூரில் உச்சிகால பூஜை நடந்து முடிந்தவுடனே திருச்செந்தூர் கோயில் ஆலய கோபுர மணி ஒலிக்கத் தொடங்குவது வழக்கம்.

இதைத்தொடர்ந்து அடுத்திருக்கும் மண்டபத்திற்கு இந்த மணியோசை கேட்கும்.

இதற்காக ஆறுமுகநேரி, ஆத்தூர், ஒட்டபிடாரம், பாஞ்சாலங்குறிச்சி உள்பட பல இடங்களில் மணி மண்டபம் அமைந்திருந்தார் கட்டபொம்மன்.

அந்த மண்டபத்திலிருக்கும் சேவகன், உடனே மண்டபத்தின் மணிகட்டை அவிழ்த்து மணியோசையை எழுப்புவான்.

இப்படி அடுத்தடுத்து ஒவ்வொரு மண்டபமாக மணி ஒலித்து, இறுதியில் பாஞ்சாலங்குறிச்சி மண்டபத்தில் மணி ஒலிக்கும்.

(இவற்றில் சில மண்டபங்களை இதன் வழியில் தற்போதும் காணலாம்.)

மேலும், திங்கட்கிழமை தோறும் அதிகாலையில் கட்டபொம்மனுக்கு திருச்செந்தூர் முருகன் கோயிலிலிருந்து இலை விபூதி பிரசாதத்தை குதிரை வீரர்கள் கொண்டு வந்து கட்டபொம்மனிடம் கொடுத்துச் செல்வார்கள்.

விபூதி கையில் கிடைத்தபிறகே அன்றாட பணிகளை கட்டபொம்மன் துவங்குவார்.

திருச்செந்தூர் முருகன் கோயில் கோபுரத்தின் ஏழாவது நிலையில் ஒரு மணி தொங்க விடப்பட்டிருக்கும்.

இதனை கட்டபொம்மனே அமைத்துக் கொடுத்திருந்தார். இது பல வருடங்களாக ஒலிக்கச் செய்யாமலே இருந்து வந்தது.

இந்த கோபுரத்திலிருந்த மணியோசனையின் மூலமே, அடுத்திருக்கும் மணியை ஒலிக்கச் செய்து, முருகனுக்கு நிவேதனம் ஆகிவிட்டது என குறிப்புணர்த்துவர்.


இயங்காமலிருந்த இந்த மணியை, முன்பு கோயில் கும்பாபிஷேகம் நடந்தபோது மீண்டும் ஒலிக்கச் செய்யப்பட்டது. தற்போது உச்சிகால பூஜையில் இந்த மணி ஒலிக்கிறது.

மேலும் இவர் முருகன் மேல் கொண்டிருந்த பக்தியால், தன்னுடைய நெற் களஞ்சியங்களிலிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அன்னதானம் அளிக்க பல ஆயிரம் கோட்டை நெல்லை அனுப்பிக் கொண்டிருக்கும் வழக்கத்தையும்  கொண்டிருந்தார் கட்டபொம்மன்.

குடிமக்களும் தம் வயல்களிலிருந்து நெல்லைக் காவடியாகச் சுமந்து கோயிலுக்குச் செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வந்து பணித்திருந்தார். 

ஒரு சமயம், தன் மனைவிக்கு தங்க அட்டிகை ஒன்றை அன்பளிப்பாக வழங்க விரும்பி பொற்கொல்லரிடம் அதைத் தயாரிக்கும்படி சொல்லியிருந்தார் கட்டபொம்மன்.

அன்றிரவு அவர் கனவில் தோன்றிய முருகன்  அந்த அட்டிகையை நீ எனக்குத் தந்திருக்கலாமே? என்றாராம்.

அட்டிகை தயாரான உடனேயே அதை எடுத்துப் போய் திருச்செந்தூர் கோயிலில் முருகனுக்கு அணிவித்து விட்டார்.

இன்னொரு சமயம்,  திருச்செந்தூரில் மாசி திருவிழா நடந்து கோண்டிருந்தது.

தேரோட்டத்துக்குத் தேர் தயாராக நிற்கிறது. கட்டபொம்மன் வந்து வடம் பிடித்து கொடுக்க வேண்டும். ஏனோ அன்று , வர முடியவில்லை.

சரி, நாமே தேரை இழுத்து விடலாம், என பக்தர்கள் தேரை இழுத்தனர். தேர் சிறிது தூரம்தான் உருண்டது. அதற்குமேல் நகராமல் நின்று விட்டது.

தேரின் சக்கரம் ஓரிடத்தில் பதிந்து நின்று கொண்டது. எவ்வளவோ பக்தர்கள் முயற்சித்தும் தேர் நகரவில்லை.

இதற்கிடையில் கட்டபொம்மனுக்கு செய்தி கொண்டு சேர்த்து, அவரும் இங்கு வந்து சேர்ந்தார்.

கட்டபொம்மன் தேர்வடத்தை பற்றி பிடித்தார். உடனே தேர் நகர்ந்தது. இதுபோல பல அற்புதங்களை கட்டபொம்மனின் மூலம் முருகன், அவரின் பக்தியை மெச்சி அருளியிருக்கிறார்.

தாமிரபரணி ஆற்றங்கரையில், முத்தாலங்குறிச்சி என்று ஓர் அழகிய கிராமம் உண்டு.

இங்கு கவிராயர் கந்தசாமிப் புலவர் எனும் புலவர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

இவரும் மிக தீவிரமான முருகபக்தர். இவருக்கு இரு கண்களிலும் பார்வை கிடையாது.

இவர் பாடும் பாடலைக் கேட்க முருகப்பெருமானே நேரில் வந்து விடுவாராம்! அவ்வளவு ஆசை இவரின் பாடலின் மீது.

ஒருநாள் கவிராயர் கவி பாடிக் கொண்டிருந்தார். வெற்றிலை போடும் பழக்கம் இருந்து வந்தது.

கவிராயருடைய வெற்றிலையை மெல்லும்போது, அதன் எச்சில் முருகனின் பரிவட்டம் மீது பட்டுவிட்டது.

அது திருச்செந்தூர் மூலஸ்தானத்தில் இருக்கும் மூலவர் பரிவட்டத்தில் தெரி்த்து தெரிந்தது.

இதைக் கண்ட பட்டர் பதை பதைத்து போனார். இப்படி ஏற்பட்டது எப்படி என்று தெரியாமல் மனம் நொந்தார்.

அன்றிரவு பட்டரின் கனவில் முருகன் தோன்றி, 'பட்டரே, என்மீது ஆழ்ந்த பக்தி கொண்டவன் முத்தாலங்குறிச்சி கவிராயர் ஆவார்.

அவரும் பார்வையற்றவர். அவருக்குப் பார்வையளிக்க நான் முடிவு செய்து விட்டேன்.

ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளி தோறும் என்னை தரிசிக்க அவர் நடந்தே  வருகிறார்.

அவரைக் கூப்பிட்டு வந்து எனக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் மாலையிலிருந்து ஒரு பூவை எடுத்து அவர் ஒரு கண்ணில் ஒத்து எடுப்பீராக!

அப்போது அந்தக் கண்ணில் அவருக்குப் பார்வை கிடைக்கும். மறு கண்ணை எப்போது முருகப்பெருமான் திறப்பார் என்று உங்களிடம் கேட்பார்.

அதற்கு அவரைப் பாஞ்சாலங்குறிச்சிக்குப் போகுமாறு சொல்.  அங்கே என் பக்தன் கட்டபொம்மன் அவருக்கு மறுகண்ணைத் திறப்பான் என்று கூறி மறைந்தருளிப் போனார்.

அடுத்த வெள்ளிக்கிழமை திருச்செந்தூர் வந்த கவிராயர் கடலில் நீராடி விட்டு வந்தார். அவரைக் கண்டுபிடித்து முருகன் சந்நதிக்குக் கூட்டி வந்தார் பட்டர்.

முருகன் ஆணைப்படியே ஒரு பூவை எடுத்து கவிராயர் கண்ணில் வைத்து ஒற்றியெடுத்தார்.

பளிச்சென்று கண்ணில் பார்வை  கிடைத்தது கவிராயருக்கு. இன்னொரு கண்ணின் பார்வை கிடைக்க நீங்கள் பாஞ்சாலங் குறிச்சி செல்லுங்கள் இது முருகனின் ஆணை, என பட்டர் கூறியனுப்பினார்.

இதன்படி பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்றார் கவிராயர். கவிராயரிடமிருந்து விவரம் தெரிந்துகொண்ட கட்டபொம்மன் வியப்பில் ஆழ்ந்தார்.

 மறுகண்ணைத் திறக்க என்னிடம் முருகன் அனுப்பினாரா? என்று கேட்டு வியந்து நெகிழ்ந்து போனார்.

உடனே ஜக்கம்மாள் கோயிலில் பூஜைக்கு ஏற்பாடு செய்தார். பின் கவிராயரை ஒரு கையில் பிடித்து கொண்டு மறுகையில் உருவிய வாளுடன் கோயிலுக்கு நுழைந்தார்.

உருவி வாளுடன் கட்டபொம்மனின் நிலை கண்டு அதிர்ந்து போனார் கவிராயர்.

என்ன இது? உருவிய வாளுடன் கோயிலுக்குள் வருகிறீரகள்? என்று சினந்து கேட்டும் விட்டார். புலவருக்குத் தான் கோபத்திற்கு குறைவிருக்காதே!, அதேபோல கேட்டும் விட்டார்.

கோயிலின் புனிதத்தை அவர் சிதைக்கிறாரே என்ற ஆதங்கம் புலவருக்கு. ஆனால், கட்டபொம்மன் ஏதும் பேசாமல் ஜக்கம்மா தேவிக்கு அணிவிக்கப்பட்டிருந்த மாலையிலிருந்து ஒரு பூவை எடுத்து கவிராயரின்  மறு கண்ணில் வைத்து ஒற்றினார்.

என்ன ஆச்சரியம்! மறுகண்ணில் அந்தக் கண்ணும் பார்வை பெற்றது!

கவிராயர் ஆனந்தப்பட்டாலும், கட்டபொம்மனின் ஒழுங்கீனத்தால் மீண்டும் கோபப்பட்டார். ‘நீ ஆணவம் பிடித்தவன். அதனால்தான் தேவியின் சன்னிதானத்திலும் அதிகார மமதையில் உருவிய வாளுடன் நிற்கிறாய் என்றார்.

அம்மனை அவமதிக்கும் உன்னால் எனக்குக் கிடைத்த இந்தப் பார்வை எனக்கு வேண்டவே வேண்டாம், என்று கூறியவர் கட்டபொம்மனின் வாளை பிடுங்கி தன் கண்ணில் குத்திக் கொள்ள முயன்றார்.

புலவருடைய கரம் பற்றித் தடுத்தார் கட்டபொம்மன். கவிராயரே நான் ஆணவத்துடன் வாளைப் பிடித்து வரவில்லை, முருகப்பெருமானின் உத்தரவுப்படி என்னால் உமக்குப் பார்வை வராது போனால், இந்த வாளால் என்னையே குத்திக் கொண்டு உயிர் துறக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவிய வாளுடன் இருந்தேன், என்று நிதானமாகச் சொன்னார்.

கவிராயர் அப்படியே ஸ்தம்பித்துப் போனார். ‘‘என்னது? உன் உயிரையே மாய்த்துக் கொள்ள நினைத்தாயா! நீ அல்லவா முருகனின் சிறந்த பக்தன்! என்னை மன்னித்து விடு கட்டபொம்மா! என்னை மன்னித்து விடு என்று கண்களில் நீர் ததும்ப கரங்கூப்பி சொன்னார்.

அப்போது முருகப்பெருமானின் அசரீரி கேட்டது. கவிராயரே உமக்குப் பார்வை தரவேண்டும் என்றால் முத்தாலங்குறிச்சியிலேயே   பார்வை கொடுத்த பட்டரும், கட்டபொம்மனும் என் கடமைகளைச் செய்ய பிறந்தவர்கள் என உமக்கு உணர்த்தவே இந்தத் திருவிளையாடலை யாம் நிகழ்த்தினோம்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு கவிராயரும், கட்டபொம்மனும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

கவிராயரைப் பார்க்க கட்டபொம்மன் முத்தாலங்குறிச்சிக்கு வந்த போது அவர் தாமிரபரணி ஆற்றின் கரையில் குதிரையைக் நிப்பாட்டிய இடம், தற்போதும் *வீரபாண்டியன் கசம்* என்று அழைக்கப்பட்டு வருகிறது.

அங்கிருக்கும் கோயிலில் அதுவரை முகில்வண்ணநாதராகத் திகழ்ந்த ஈசன், அதன்பின் வீரபாண்டீஸ்வர் என அழைக்கப்பட்டும் வந்தார்.

தற்போது வீரபாண்டிய கசம் சிறு குட்டையாக மாறியிருக்கிறது!

கட்டபொம்மன் உருவாக்கிய திருவிழா வழிபாடுகள் திருச்செந்தூர் ஆலயத்தில் அவரது வாரிசுகளால் இன்றளவும் தொடர்ந்து  நடத்தப்பட்டு வருகின்றது.

இறைவன் நம் மூலமாக ஒரு திருவுகளை நிகழ்த்த  அருளுவதெல்லாம் சாதாரணம் கிடையாது.

அவனை வணங்கி விட்டோம் என்றிருப்போர்க்கெல்லாம், சாதாரண வாழ்நிலையே கழியும்.

அதைவிட ஒரு படி மேலே வந்து, அவன் மீது பரிபூரண நம்பிக்கை வைத்துப் பாருங்கள். அவன், நம் மீது நம்பிக்கை கொணரும் பாத்திரங்களை நிகழக் காரணமாவான்.

அவன் மீது உயிரைவிட மேலான நம்பிக்கையை எவ்வளவு வைத்திருந்தால், கட்டபொம்மன் மீது முருகனுக்கு நம்பிக்கை பிறந்திருக்கும்.

நம் மீது அவனுக்கு நம்பிக்கை ஏற்படும் அளவிற்கு காராணகாரியங்களை செய்யத் துணிவோமாக!
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

Tuesday, 30 October 2018

பரிகாரம்

*பரிகாரம்*
.................................................
பரிகாரம் என்றால் என்ன?



பசி எடுத்தால் சாப்பிடுவது பரிகாரம்.

தாகம் எடுத்தால் நீர் அருந்துவது பரிகாரம்.

நோய் வந்தால் மருந்து சாப்பிடுவது பரிகாரம்
.

தோசம் என்றால் குறைபாடு என்று பொருள். குறைபாடுகளை சரி செய்வதே பரிகாரம் ஆகும்.

 இயற்கையில் உருவாகும் எந்த ஒரு பொருளையும் மனிதனால் செயற்கையாக உருவாக்க முடியாது .

 காலில்லாதவன் கம்பு ஊன்றி நடக்கலாம், கால்களை முளைக்க வைக்க முடியாது.
கம்புகள் கால்களுக்கு ஈடாகாது.

 கண் தெரியவில்லை என்றால் ஒரு அளவுக்கு கண்ணாடி அணிந்து சரி செய்யலாம், அறுவை சிகிச்சை செய்தும் கண் பார்வையை சரி செய்யலாம்.
ஆனால் கண்ணின் அசல் தன்மையை திரும்ப கொண்டு வர முடியாது. கண் இல்லாதவர்களுக்கு இன்னொருவரிடமிருந்து கண்ணை பிடுங்கி வைக்கலாம்.
ஆனால் செயற்கையாக கண்ணை உருவாக்க முடியாது.

 உடைந்த எலும்பை ஒட்ட வைக்கலாம்.
ஆனால் புதிய எலும்பை உருவாக்க முடியாது.

 இது போல் பரிகாரம் என்பது ஒரு வகையில் குறைபாட்டு மேலாண்மையே தவிர முற்றிலும் எதையும் உருவாக்க முடியாது.
இயற்கையில் இல்லாத ஒன்றை மனிதனால் உருவாக்க முடியாது.

மழை வருவதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் குடை பிடிப்பது ஒரு பரிகாரம்.
ஆனால் முற்றிலும் உடல் மழையில் நனையாது என்று கூற முடியாது.
மழையுடன் பலத்த காற்றும் வீசினால் குடை என்ற பரிகாரம் பலன் தராது. குடை காற்றில் பறந்து விடும்.

வறட்சியை போக்க யாராலும் மழையை வரவைக்க முடியாது. குளிரை போக்க யாராலும் வெயிலை வரவைக்க முடியாது

. பஞ்ச பூதங்கள் யாருக்கும் கட்டுப்படாது. நன்றாக புரிந்துகொள்ளுங்கள்,

இல்லாததை உருவாக்குவதல்ல பரிகாரம்.
 குறைபாடுகளை சமாளிப்பதுதான் பரிகாரம்.

 குறைபாடுகளுடன் வாழ பழகிக்கொள்வதே பரிகாரம்

. பழுதுபட்ட வாகனங்களை பழுது நீக்கி சரி செய்வது போன்றதுதான் பரிகாரம்.

 மனம் என்னும் வண்டியை பழுது நீக்கி தொடர்ந்து செயல் பாட்டில் வைத்திருப்பதே பரிகாரம்....

........,..........................................
┈┉┅━❀••🌿🌷🌺🌷🌿••❀━┅┉┈

சித்தர்கள் நிலையை பற்றி ஆச்சர்யமான அபூர்வமான விளக்கம்

#திருமூலர் என்ற மாமுனிவரின் கருக்கிடை600 என்ற நூலில் ஆச்சர்யமான அபூர்வமான விளக்கம்



நாம்இறைவனாக தேவர்களாக வழிபடும்
சதாசிவன் மகேசுவரன்
ஈசன் பிரம்மா போன்றவர்கள் மனிதர்களாக இந்த பூவுலகில் தோன்றி காயகற்பங்களை பலவாக உட்கொண்டு
அதன் மூலம் அழியா உடல் பெற்றனர்.
நாம்இறைவனாக வணங்கும் சதாசிவன்
ஏழு லட்சம் கற்பங்களையும் மகேசுவரன் மூன்று லட்சம் கற்பங்களையும் ஈசன் இரண்டு லட்சம் கற்பங்களையும் விஷ்ணு எழுபதாயிரம் கற்பங்களையும் பிரம்மா முப்பதாயிரம் கற்பங்களையும் முனிவர்கள் ஆயிரம் கற்பங்களையும்
இந்த மண்ணில் பிறந்து உட்கொண்டு இறவாத நிலைபெற்றனர் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு காயகற்பம் உட்கொண்டு இறவாநிலை அடைந்த இவர்கள் இப்போது எங்குள்ளனர்?

கருவூராரின் அற்புதமான வாதகாவியம் பாடலில் 155முதல் 159வரை தெளிவாக விளக்குகின்றது

அடுத்து கலியுகத்தில் கொடிய
அநியாயம் மெத்த நடக்குமென்று
விடுத்துநான் சொல்லிவிட்டேன் இந்த
மேதினியி லிருக்க நீதியில்லையென்று
நீதியிலாக் கலியுகந்தான் தீரும்வரை
நிஷ்டையிலிருந்திட வேணுமென்று
பாதிமதி யணியீசன் திருவடி
பதமல ரடியினி லிருந்திடவே
என் குரு போகநாதர் காலங்கி
இன்பமுறும் நந்தி திருமூலர்
தன்மையுள்ள சட்டைமுனிவர் சுந்தரர்
தன்வந்திரி ராமத்தேவர் மச்சமுனிவர்
கொங்கணவர் தன்னுடனை அனேகர்
கூடியே கைலாச கிரியில் வந்து
அங்கங்கு குகைகள் செய்து இருந்து
அருந்தவத்தோடு நிஷ்டை புரிந்து கொண்டு
இருந்தார் குகைதனிலே கலியுகம்
எப்படியும் போகட்டும் மென்றேதான்
திருந்துங் கிரேதா யுகத்தில் வெளிப்பட்டு
தீர்க்கமுடன் வந்திடுவார் ஏற்கையுடனே
ஒயிலாய்ச் சதுரகிரி மத்தியில்
உற்பனம தாயமைந்த மேருகிரி
கும்பகிரி யெனவும் நீலகிரி
கூடுஞ் சஞ்சீவிகிரி வெள்ளிகிரியும்
நம்புகின்ற பிரமகிரியும் சந்திரன்
நாட்டும் வைகுண்டகிரி குபேரகிரியும்
சித்தகிரி யதற்குப் பக்கத்தில்
சிறப்பா யமைந்தகை லாசகிரியின்
மத்தியிலே தானும் சித்தர்
மகாதவத் தோடு வாசமுற்றார்
கும்பகிரியிலே தனியே சிறந்த
குருமுனி வர்தனியே அடவுசெய்து
அம்புவி யோர் மெச்சும் பொதிகை
யதிலிருந்த தேயொரு வழிசெய்து
புலஸ்தியர் தன்னுடனே நிஷ்டை
பூண்டிருந்தா ரெங்கே ஆண்டவனும்
தலத்தி லுயர்ந்ததென்று சதுரகிரி
தன்னிலிருந் தார்சித்தர் நன்னயமுடன்


அற்புதம் அற்புதம்
மனிதர்களுக்காக ஆண்டவனும் இன்றையளவில் ஒவ்வொரு மலைகளிலும் நிஷ்டை கொண்டுள்ளார்

பாரம்பர்ய இசை கருவிகள், அதை குறிக்கும் பாடல்கள்


























Friday, 19 October 2018

நிருதி மூலை - தென் மேற்கு

*நிருதி மூலை - தென் மேற்கு*

நிருதி திக்கு விநாயகப் பெருமானுக்கு உரிய திசையாகும். பிரார்த்தனைக்கு உரிய விசேஷமான இடமும் இதுவேயாம். இது குறித்த சுவையான ஒரு இறை விளையாட்டைக் காண்போம்.

ராம பக்தரான ராமதாசர் நவாபிடம் பணி புரிந்து வந்தார். அரசாங்க காரியத்திற்காக நவாப் கொடுத்த பணத்தைக் கொண்டு ராமபிரானுக்கு கோயில் கட்டி விட்டார். செய்தி அறிந்த நவாப் ராமதாசரை அழைத்து அரசாங்கப் பணத்தை எடுத்து எப்படி கோயில் கட்டலாம் என்று கேட்டார்.

ராமதாசர் தான் இறைவனுக்கு மட்டுமே கோயில் கட்டியதாகவும் அனைவரும் ராமபிரானின் அடிமைகள் என்பதால் அரசாங்க பணத்தை எடுத்து கோயில் கட்டியது தவறு கிடையாது என்று வாதிட்டார். அதை நவாப் ஏற்றுக் கொள்ளவில்லை.

அரசாங்கப் பணத்தைத் திருடினால் அதற்கு மரண தண்டனை வழங்க வேண்டும். ஆனால், ராமதார் இறைவனுக்காக அதை செலவிட்டதால் நவாப் அதை மன்னித்தார். ஆனால், செலவழித்த பணத்தை வட்டியுடன் திரும்பித் தந்தால் அவரை விட்டு விடுவதாகவும் இல்லையெனில் சிறைத் தண்டனை வழங்கப் போவதாகவும் நவாப் தெரிவித்தார்.

ராமதாசரும் தன்னுடைய உற்றார், உறவினர், நண்பர்களிடம் ராமருக்குக் கோயில் கட்ட செலவான பணத்தைக் கடனாக தருமாறு கேட்டார். ஆனால், எவருமே அதற்கு முன் வராததால் மிகவும் மனம் நொந்து போனார். அப்போதுதான் ராமர் ஒருவர்தான் தன்னுடைய உண்மையான உறவினர், அவர் ஒருவர் மட்டுமே தன்னுடைய நிரந்தர நண்பர் என்பதை உணர்ந்தார்.

கனத்த நெஞ்சத்துடன் நவாபிடம் சென்று தன்னால் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்று கூறி தான் அரசாங்கப் பணத்தை எடுத்த குற்றத்திற்கு உரிய தண்டனையை வழங்குமாறு கேட்டார். நவாபும் வேறு வழியின்றி ராமதாசரை சிறையில் அடைத்து விட்டார்.

சிறையில் வாடிய ராமதாசர் ராம நாமத்தை இரவு பகலாக ஓதிக் கொண்டே இருந்தார். நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாகி வருடங்களும் உருண்டோடின.

ராமதாசரின் வேதனைக் குரல் வைகுண்டத்தை அடைந்தது. லட்சமி தேவி பெருமாள் மூர்த்தியிடம், ”சுவாமி, உங்கள் பக்தன் எவ்வளவு காலமாய் உங்களைக் கூவி அழைக்கிறான். ஆனால், தாங்கள் சிறிதும் அவனைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்களே? அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை,” என்றாள்.

பெருமாள், ”தேவி, பக்தர்கள் அழைத்தால் மறு கணமே கருட வாகனத்தில் விரைந்து சென்று அவர்களைக் காப்பாற்றுவதுதானே என்னுடைய தலையாய கடமை. அப்படி இருக்கும்போது ராமதாசர் அழைத்தால் போகாமல் இருப்பேனா? இவ்வளவு கடுமையான சிறைத் தண்டனை பல வருடங்களாக அனுபவித்தும் இன்னும் ஏன் அவன் என்னை அழைக்கவில்லை என்று புரியவில்லை,” என்று சிறு குழந்தையைப் போல் கேட்டார்.

லட்சுமி தேவிக்கு ஒன்றும் புரியவில்லை. ”என்ன சுவாமி சொல்கிறீர்கள், சுவாமி? அவன் உங்களை அழைக்கவில்லையா? அவனுடைய ராம நாம ஒலி பூமியிலும் வானத்திலும் ஒலித்து எங்கும் வியாபித்துள்ளதே.”

பெருமாள், ”நீ சொல்வது எனக்கு சிறிதும் புரியவில்லை, தேவி. அவன் ஒரே ஒரு முறை என்னை அழைத்தால் போதும். உடனே சென்று அவனைக் காப்பாற்றி விடுவேன்,” என்று மீண்டும் கூறினார்.

தேவிக்கு குழப்பம் அதிகரித்தது. சற்று நேர யோசனைக்குப் பின் அவளுக்கு ஒரு விஷயம் புரிந்தது. தனக்கே ராமதாசரின் ராம நாம ஒலி தொடர்ந்து கேட்கிறது என்றால் தன்னுடைய பிராண நாயகனுக்கு நிச்சயம் அந்த ஒலி கேட்டிருக்கும். ஆனால், அதை தனக்குத் தெரியாது என்று மறுக்கிறார் என்றால் அதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்தாள் தேவி.

உண்மையில் பெருமாள் மூர்த்தி ஒரு நாடகத்தை நடத்த திட்டம் வைத்திருந்தார். இறைவனிடம் பக்தன் கொண்டாடும் பக்தியில் பல படித்தரங்கள் உள்ளன. இறை பக்தியில் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளதே அடிமை என்னும் பாவத்தில் தோன்றும் பக்தி நிலை. மிக மிக உன்னத பக்தி நிலை இது.

ராமதாசர் தன்னை ராமரின் பக்தனாக நினைத்தால் ஒரு நொடியில் ராமர் பூலோகம் வந்து ராமதாசரைக் காப்பாற்றி இருப்பார். ஆனால், ராமதாசரோ தன்னை ராமபிரானின் தாசன் அதாவது அடிமை என்ற உன்னத நிலையில் நிலைக்க விரும்பினார். எனவே, இத்தகைய உயர்ந்த நிலையை அடைய வேண்டுமானால் அதற்கான காலம் கனியும் வரை காத்திருக்கத்தானே வேண்டும்.

ராமதாசரும் விடாமல் ராம நாமத்தைக் கூவிக் கொண்டே இருந்தார். பன்னிரெண்டு வருடங்கள் கடந்தன. ஒரு நாள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பெருமாள் மூர்த்தி லட்சுமியிடம், ”தேவி நீயும் நீண்ட காலம் ராமதாசரைக் காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டிருக்கிறாய். எனக்கோ அவன் குரல் கேட்கவில்லை. இப்போது ஒரு வழி முறை உள்ளது. அதாவது அவன் பிரார்த்தனைக்கு உரிய திசையான நிருதி திக்கில் இருந்து ராம நாமத்தை அழைத்தால் அப்போது அந்த நாமம் என்னுடைய காதில் விழும். நானும் உன்னுடைய விருப்பப்படி அவனைக் காப்பாற்றி விடுவேன்,” என்றார்.

தேவியும் மிகவும் மகிழ்ச்சியடைந்து இந்தச் செய்தியை எப்படி ராமதாசருக்குத் தெரிவிப்பது என்று யோசித்தாள். அப்போது நந்தவனத்தில் புறாக்கள் பறக்கும் ஒலி கேட்டது. உடனே தேவி ஒரு புறாவை அழைத்து ராமதாசரிடம் சென்று எம்பெருமான் கூறிய செய்தியைத் தெரிவிக்குமாறு வேண்டினாள்.

அந்தத் தெய்வீகப் புறாவும் வைகுண்டத்திலிருந்து பூலோகம் வந்து ராமதாசரின் சிறைக்கு மேலிருந்த ஜன்னலில் உட்கார்ந்து ராம நாமத்தை ஒலிக்க ஆரம்பித்தது.

ராமா ராமா ராமா ராமா ராமா ராமா
ராமா ராமா ராமா ராமா ராமா ராமா
ராமா ராமா ராமா ராமா ராமா ராமா

என்று கூவி விட்டு அங்கிருந்து பறந்து சென்று வைகுண்டத்திற்கு வந்து விட்டது.

புறாவின் ராம ஒலியைக் கேட்டார் ராமதாசர். புறாக்கள் தெய்வீக லோகத்திலிருந்து செய்தியைக் கொண்டு வரும் என்பதை உணர்ந்தவர் ராமதாசர்.

இதில் சில வாஸ்து ரகசியங்களும் உண்டு. பொதுவாக, வீடுகள் கட்டும்போது சமையல் அறை, முற்றம், பூஜை அறை இந்தந்த அளவுகளில் இருக்க வேண்டும் என்ற வாஸ்து சாஸ்திர அளவு கோல் இருப்பது போல என்னென்ன அமைப்புகள் எவ்வளவு உயரத்தில் இருக்க வேண்டும் என்ற சாஸ்திர நியதிகளும் உண்டு.
அதன்படி இருபது அடி உயரத்தில் புறாக் கூண்டுகள் அமைத்தால் அக்கூண்டில் தெய்வ லோகத்து பட்சிகள் வந்து இறை மூர்த்திகளிடமிருந்து செய்தி கொண்டு வரும் என்பது வாஸ்து நியதி.

அந்த வாஸ்து நியதியை அறிந்த ராமதாசர் அந்த புறா இருபது அடி உயரத்தில் இருந்த ஜன்னலில் அமர்ந்ததால் அது தெய்வீக லோகத்திலிருந்து செய்தி கொண்டு வந்தது என்பதை எளிதில் உணர்ந்து கொண்டார். ஆனால், அந்த செய்தி என்ன என்பது அவருக்குப் புரியவில்லை. மீண்டும் மீண்டும் அந்த வைகுண்டப் புறா ஓதிய ராம நாமத்தினை நினைவுக்குக் கொண்டு வந்து சிந்திக்கத் தொடங்கினார். பல மணி நேரத்திற்குப் பின் புறா கூறிய இறைச் செய்தி அவருக்குப் புரிந்தது.

ஆறு முறை ராம நாமத்தை புறா தொடர்ந்து ஓதியது. ஆறு எண்ணிற்கு உரிய திசை நிருதி. எனவே நிருதி மூலையில் நின்று ராம நாமத்தை ஓதினால் நிச்சயம் ராமபிரானின் தரிசனம் கிட்டும் என்று அவருடைய உள்ளுணர்வு அவருக்குத் தெளிவாக தெரிவித்தது. எல்லையில்லா உவகையுடன் ராமதாசரின் நிருதி மூலையில் நின்று கொண்டு பசி தாகத்தை மறந்தவராய் ராம நாமத்தை ஓத ஆரம்பித்தார்.

பெருமாள் மூர்த்திக்கு ராமதாசரின் ராம நாமம் தெளிவாகக் கேட்டது. குறும்புப் புன்னகையுடன் லட்சுமியை நோக்கி, “இப்போதுதான் ராமதாசரின் இறை நாமம் என்னுடைய காதில் கேட்கிறது. நான் உடனே சென்றாக வேண்டும். ஆனால், நவாபுக்குக் கொடுக்கத் தேவையான பணம் இல்லையே என்ன செய்வது? என்னிடம் இருப்பது இந்த பழைய வில்தான். இதை வைத்துக் கொண்டு யார் பணம் தருவார்கள்?” என்று ஒன்றும் அறியாதவர்போல் பெருமாள் கேட்டார்.

லட்சுமி தேவியும், ”நீங்கள் கூறுவதும் உண்மைதான். ஏற்கனவே நீங்கள் குபேரனிடம் வாங்கிய கடனே தீராமல் இருக்கிறது. அப்படி இருக்கும்போது யார் உங்களுக்குக் கடன் தருவார்கள்? வேண்டுமானால் நான் சேர்த்து வைத்த பணத்தில் இருந்து உங்களுக்குத் தருகிறேன். சீக்கிரம் சென்று நம் குழந்தையை மீட்டு வாருங்கள்,” என்று கூறி ஒரு பொன் முடிச்சை பெருமாள் மூர்த்தியிடம் கொடுத்தாள் லட்சுமி தேவி.

பெருமாள் ராம லட்சுமண மூர்த்திகளாய் மாறி நவாபிடம் வந்தார்கள். நவாபிடம் தங்களை ராமதாசரின் நெருங்கிய உறவினர்கள் என்றும் தங்கள் பெயர் ராம்சிங், லக்ஷ்மண் சிங் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டனர். சிறையில் வாடும் ராமதாசரை அழைத்துப் போக வந்திருப்பதாகக் கூறினர். அவர்களைக் கண்ட நவாப் தன்னை மறந்தான். ராம லட்சுமணர்களின் கம்பீரத் தோற்றம் அவனை ஈர்த்தது. அவனுடைய கண்கள் அந்த திவ்ய மூர்த்திகளிடமிருந்து நகர மறுத்தன. தன் வாழ்நாளில் இதுவரை கண்டிராத ஒரு தெய்வீகப் பரவச நிலைக்குச் சென்று விட்டான் நவாப்.

ராமதாசர் தர வேண்டிய பணத்திற்கு வட்டி, கூட்டு வட்டி எல்லாம் கணக்கிட்டு ஒரு பெரிய தொகையைக் கேட்டான் நவாப். லட்சுமண சுவாமி லட்சுமி தேவி கொடுத்த பொற்காசு மூட்டையை நவாபிடம் கொடுத்தார். அதை அவிழ்த்துப் பார்த்த நவாபின் மனம் மாறியது. அரசன் பக்தன் ஆனான்.

“ஹமாரா அல்லா ஆ கயா” (நமது இறைவன் வந்து விட்டான்) என்று கூறி ஆனந்தக் கூத்தாடினான் நவாப். தன்னை மறந்த நிலையில் இருந்த நவாபிடம் ராமதாசரை சிறையிலிருந்து விடுவிக்குமாறு கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து மறைந்தனர்.

நேராக சிறைக்குப் பறந்து வந்தான் நவாப். ராமதாசரின் பாதங்களில் தடாலென விழுந்து வணங்கினான். ராமதாசருக்கு ஒன்றும் புரியவில்லை. “என்னுடைய அரசாட்சி, அரண்மனை, நாடு, நகரம் அனைத்தையும் உன்னுடைய காலடியில் சமர்ப்பிக்கிறேன். வேறு எது வேண்டுமானாலும் கேள். என்னுடைய உயிரை வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறேன். ராம்சிங், லட்சுமண்சிங் என்ற அந்த இருவரை மட்டும் எனக்குக் கொடுத்து விடு,” என்று கதறி அழுதான் நவாப்.

ராமதாசருக்கு மெல்ல மெல்ல விஷயம் புரிய ஆரம்பித்தது. ராமதாசர் நேரே தான் கட்டிய கோயிலுக்குச் சென்றார். ”ராம் நாம் சத்ய ஹை” அதாவது ராம நாமமே உண்மை. அதுவே நித்தியமானது, சாசுவதமானது என்று கூறிக் கொண்டே ராமருடன், ராம நாமத்துடன், ராம ஜோதியுடன் இரண்டறக் கலந்தார் ராமதாசர்.

இறைவனுடன் நெருங்கி உறவாட, பிரார்த்தனை செய்ய உகந்த திசையே நைதிருதி ஆகும். இதை நன்முறையில் பயன்படுத்தி பயன் பெறுவது பக்தர்கள் கடமை.

பிரார்த்தனைக்கு மட்டும் அல்லாது கடன் வாங்கவும் நிருதி திசை உகந்தது. கடன் வாங்குபவர்கள் நிருதி மூலையிலோ அல்லது அந்தத் திசையை நோக்கி நின்று கொண்டோ கடன் கேட்டால் எளிதில் கடன் கிடைக்கும். அவ்வாறு பெற்ற கடனைத் திருப்பித் தருவதும் சுலபமாகும்.

Thursday, 18 October 2018

இன்று என்னுடய ஜீவ நாடி வாக்கு 18Oct18


இன்று 18.10.2018, சரஸ்வதி பூஜை அன்று நானும் என் நண்பர் சமுத்திர ராஜனும் பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி பீடத்திற்கு சென்று, அங்கு நடந்த வியாழக்கிழமை சிறப்பு பூஜையில் பங்கேற்றோம்.

அவற்றின் படங்கள் சில












இன்று பூசை முடிந்து சுமார் மாலை 6:20 மணி அளவில் ஜீவ நாடியில் அகத்தியரிடம் வாக்கு கேட்டோம். அகத்தியரின் வரிகள் கீழ் வருவன.

ௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐௐ

எமை நித்தம் தொழும் மழலையே, உமை யாம் காப்போம்.

பூசை தனிலே நீ செய்த சிறு தொண்டினை கண்டோம், யாம் மனம் மகிழ்ந்து ஆசி தந்தோம்.

உனக்கு அன்றுரைத்தேன் ஆலயப்பணி அதை செய் மகனே, சிதறிய செல்வம் அது உன்னிடத்தில் வந்து சேரும்.

நீ உயர் நிலை அடையக்கடைவாயே

கொண்டவளுடன் (மனைவியுடன்) வீண் பிடகளை (வாக்குவாதம்) வேண்டாம் மகனே.

அவள் கர்மமது விட்டொழியும் நிலை பெறுவாளே.

யாம் உன்னுள் இருந்துஉனை இயக்கசெய்வோமே

யாம் உம்மை வந்து உற்று நோக்கிச்சென்றோமே

உன் வாழ்வது சிறக்கும் ஏன் மகனே

உனை ஈன்றவள் தேகம் சீர் பெரும் அப்பா

மனம் தளராதே தூயவனே, நல்லாயுளை கொடுத்து அந்த ஆத்மாவை யாம் முக்தி நிலைக்கு அழைத்து செல்வோம்.

இது சித்தனின் நித்த வாக்கே.

- முற்றே -

Wednesday, 17 October 2018

தற்கொலை பற்றிய கேள்வி பதில்






அடியார்

குருதேவா, ஒருவருக்கு ஆயுள் 60 வருடங்கள் என்று அவர் ஜாதகத்தைப் பார்த்து ஆயுள் கணித்துச் சொன்னார்கள். ஆனால், அவர் 40 வயதிலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். அதனால் ஜோதிடமே பொய் என்று சொல்கிறார்களே.

சற்குரு
ஜோதியிடம் இருந்து வந்ததால் அதை ஜோதிடம் என்று சொல்கிறார்கள். இறைவனான ஜோதியிடம் பிறந்து வந்த ஒரு கலை பொய்யாகுமா? யோசித்துப் பார். ஒரு காலமும் ஜோதிடம் பொய்ப்பது கிடையாது. ஜோதிடக் கலையைப் பயன்படுத்துவதில்தான் குழப்பங்களும், தவறுகளும் ஏற்படுகின்றன. நீ கூறியபடி 60 ஆண்டு காலம் ஆயுள் உடையவர் 40 வயதில் இறந்தால் அதை எப்படி ஜோதிடத் தவறு என்று சொல்ல முடியும். அந்த மனிதனுடைய ஆயுள் 60 ஆண்டு காலம். 40வது வயதில் தற்கொலை செய்து கொண்டு அவன் உடல் மறைய வேண்டும் என்பது அவன் ஜாதகத்øதை ஆராய்ந்து பார்த்தால் தெரிய வரும். பாக்கி உள்ள 20 வருடங்களுக்கு அவன் மனித உடல் இல்லாத ஆவியாக அலைந்து விட்டு 60 வருடங்கள் முடிந்த உடன் வேறு லோகத்திற்குச் சென்று விடுவான். இதுதான் ஜோதிடத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளும் முறையாகும்.

நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் காலம் முடியும் வரை மனித ஆவி தற்கொலை செய்து கொண்ட இடத்திலேயே சுற்றிச் சுற்றி வரும். அந்த இடத்தை விட்டு ஒரு அங்குலம் கூட அது நகர்ந்து செல்ல முடியாது. அது மட்டுமல்ல. அவ்வாறு அந்த ஆவி நகர முடியாத நிலையில் இருக்கிறது என்பதை மற்ற ஆவிகள் எளிதில் தெரிந்து கொள்வதால், அங்குள்ள தீய ஆவிகள் இந்தத் தற்கொலை செய்து கொண்ட ஆவியைத் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே இருக்கும். ஆவிகள் தரும் வேதனைகளை எல்லாம் வார்த்தைகளால் உங்களுக்குப் புரிய வைக்க முடியாது. இவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட 20 ஆண்டு ஆவி வாழ்க்கைக்குப் பின்தான் அந்த ஆவி நிலையிலிருந்து விடுதலை பெற்று அடுத்த உயிர் நிலையை அடைய முடியும்.
இதை மக்கள் அனைவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். மனிதப் பிறவி என்பது கடவுள் மனிதனுக்குக் கொடுத்த ஒரு வெகுமதி. தற்கொலை செய்து கொள்வது என்பது பரிசைக் கொடுத்தவர் முகத்திலேயே திருப்பி அடிப்பது போலாகும். இந்த நன்றி கெட்டக் காரியத்திற்கு எக்காலத்திலும் மன்னிப்புப் பெறவே முடியாது என்பதை நன்றாகப் புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.

அடியார்
குருதேவா, பொதுவாக மக்கள் தங்களால் தாங்க முடியாத வயிற்று வலி, புற்று நோய், கடன் தொல்லை, காதல் தோல்வி போன்ற பிரச்னைகளால்தானே தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதை எப்படித் தவறு என்று சொல்ல முடியும்?

சற்குரு
மேலோட்டமாகப் பார்த்தால் உங்கள் கூற்றில் உண்மை இருப்பது போல் தோன்றும். சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் எது உண்மை நிலை என்பது புரிய வரும். இன்னா முற்பகல் செய்யின், இன்னா பிற்பகல் விளையும் என்பதுதானே பழமொழி. நமக்கு ஒரு துன்பம் வருகிறது என்றால் அதற்குக் காரணம் நாம் அறிந்தோ அறியாமலோ முன்பு செய்த வினைகளே காரணம். தவறு செய்தவன் தண்டனையை மனதார ஏற்றுக் கொள்வதுதானே முறை. உலகச் சட்டமும், தெய்வீகச் சட்டமும் இதில் தவறுவது கிடையாதே.
தற்கொலை செய்து கொள்வதால் தண்டனையிலிருந்து தப்பிவிட முடியுமா? உன்னிடத்தில் ஒருவன் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி விட்டு அதைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு விட்டால் அந்த கடன் பாக்கி தீர்ந்து விடுமா? நன்றாக யோசித்துப் பார். அவன் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அந்த ஆயிரம் ரூபாய் கடனை உரிய வட்டியுடன் சேர்த்து உன்னிடமோ, உன் பரம்பரையில் வரும் யாரிடமோ கொடுத்தால்தானே அந்தக் கடன் பாக்கி தீரும். கடனுக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டால், கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போவதோடு, தற்கொலை செய்து கொண்ட பின் இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்காலம் வரை ஒரே இடத்தில் நகராமல் இருந்து எல்லா ஆவிகளின் தாக்குதல்களையும் அனுவித்துக் கொண்டு, மனித ஆயுள் முடிந்த பின் இறைவனை அவமதித்து தற்கொலை செய்து கொண்டதற்கான தண்டனையையும் அனுபவித்தாக வேண்டுமே. இவ்வளவு வேதனைகள் தேவைதானா?

எந்த மனிதனுக்கும் அவன் தாங்க முடியாத கஷ்டத்தை இறைவன் கொடுப்பதில்லை என்பதே இறை நியதி.
2007ம் ஆண்டு முதல் குடும்பம், தொழில், சமுதாயப் பிரச்னைகளால் தற்கொலைகள் நிறைய நிகழ வாய்ப்புண்டு என சித்த கிரந்தங்கள் உரைக்கின்றன. இறை நம்பிக்கை குறைவதே தற்கொலை எண்ணத்திற்கு மூல காரணம் ஆகும்.
இந்தியாவில் 3862 கோடி சுயம்பு லிங்க மூர்த்திகள் உள்ளனர். அதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 40,000 சுயம்பு மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர். சுயம்பு மூர்த்தியைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தால் தன்னம்பிக்கை அதிகரித்து தற்கொலை எண்ணங்கள் அகலும். கோடானு கோடி சிவலிங்க மூர்த்திகளை உங்களைச் சுற்றி வைத்துக்கொண்டு, அவர்கள் அருகிலேயே 24 மணி நேரமும் வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள் நம்பிக்கையை இழக்கலாமா? எப்போதும் இறை நாமத்தைச் சொல்லப் பழகிக் கொள்ளுங்கள். அல்லது உங்கள் பெயரையே நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கலாம். சுயநாம ஜபமும் தன்னம்பிக்கையையும், இறை பக்தியையும் வளர்க்கும் உன்னத மார்க்கமே.

தொடர்ந்து ஒரே நாமத்தைச் சொல்வதால் சலிப்பு ஏற்படுவது போல் தோன்றினால் தேவாரம், திருவாசம் போன்ற பக்தி கமழும் பாடல்களைப் பாடி வாருங்கள். தினமும் ஒரு பாடலைப் பாடி வந்தால் உங்கள் வாழ்க்கை மணமுள்ளதாகும். தினமும் சாம கானம் ஓதி வந்தால் அல்லது சாம வேத பீஜாட்சரங்கள் பரிணமிக்கும் ‘மந்திரமாவது நீறு...‘ என்னும் திருஞான சம்பந்த மூர்த்திகளின் தேவாரத் திருப்பதிகத்தை ஓதி வந்தால் சாம வேதப் பிரியனான எம் ஈசன் உங்களுக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கையை அபரிமிதமாக வளர்த்து எல்லாத் துறைகளிலும் முன்னேற்றத்தைக் கொடுப்பான். திருச்சி லால்குடி அருகில் உள்ள திருமங்கலத்தில் அருள்புரியும் ஸ்ரீசாமவேதீஸ்வர ஈசனை வாழ்வில் ஒரு முறையாவது சென்று தரிசித்து வந்தால் தற்கொலை எண்ணங்கள் உங்களை அணுகாது.
தற்கொலை என்பது உங்கள் பிரச்னைகளுக்கு நீங்கள் போடும் ‘கமா‘வே தவிர அது முற்றுப் புள்ளி ஆகாது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.

ஸ்ரீஅங்காள பரமேசுவரி அந்தாதி"

ஸ்ரீஅங்காள பரமேசுவரி அந்தாதி"





ஆனந்த கணபதி காப்பு

முருகனுக்கு மூத்தோனாய் முழுமுதற் சுழியாய் வைத்தென்றும்
பெருகிவளர் சோதியா யெங்கும்பரவி யருளென்னும்
அருகுபுல் சாத்திய ஆனந்த கணபதியருளால் அங்காளம்பிகை அந்தாதி
உருகி யாவருள்ளத்திலுள்ளே ஊடுருவக் கண்டு

உதிக்கின்ற திங்கள் உணர்வூட்டும் முகமென் னினைவில்
பதிக்கின்ற நின்பார்வைப் பாலில் பழமும் வீழ்ந்து
மதிக்கின்ற குவளைபோல் பராசக்தியென் பாவம் தீர்த்து
துதிக்கின்ற தூய்மையாக்கும் தூயவளே. 1

தூயவளே துன்பந் தகர்ப்பவளே துணையாயென்றும்
மாயவளே மாணிக்கமே மலைமன்னன் புதல்வியே
தாயவளே தமிழவளே தந்தையாயு மென்றும்
வாய்ப்பவளே வளம்பல வாய்த்திடுவாய். 2

வாய்த்திடுவாய் தாயாயெனக் கென்றும்
சாய்ந்திடுவாய் திருவருளமுதந்தா யெனக்கு
வாய்த்திடுவாய் கருணையுளந்தனைக் கண்ணகத்தே
பாய்த்திடுவாய் நின்திருவுளப் பேரொளியே. 3.

பேரொளியே மாயப்பாசத் தொடரெலாம்
தாரொளியே தகர்த்தங்கு தகுதியுடைய வனாய்ப்
போர்த்தங்கு புண்ணியப் புவியதில் பக்குவமாய்
வார்த்திங்கு விட்டினையே விந்தைமிகு நாயகியே. 4.

நாயகியே நான்முகனும் நாரணரும் நமசிவாயருக்குத்
தாயாகியே யொளிவிடும் தனிப்பெருஞ்சுடரே யெனைச்
சேயாக்கியே சித்தம் தெளிவுறச் செய்து செல்வியே
பேயனை யென்றும் பெருமைபட வைத்திட்டாயிங்கு. 5

இங்குளநாள் மட்டுமல்லா தினியான்
எங்குசெல்கினும் நின்னருளால் நின்புகழ்தான்
தங்குமென்று தாரணியில் பரப்பிடும்போது
அங்கெல்லாம் வந்தென்முன் நிற்கும் முக்கண்ணியே. 6


முக்கண்ணியே முனிவரும் தேவரும் மூவரும்
இக்கன்னியாய்த் தோன்றியிங்கு முத்தொழில் செய்திட்டு
தண்ணிலவாய் தன்பத்தியினைப் பரப்பியே பலரிடம்
விண்ணிலவமுதாய் வேழாம்படியில் வீற்றிருப்பவளே. 7

வீற்றிருப்பவளே யீரேழுலகெங்கும் விந்தையாய்
தோற்றியிருப்புவளே தோற்றத்துள்ளிருந்து துலங்குபவளே
போற்றினா யென்னுள்ளத்திலிருந் துன்னேயே யென்மனம்
மாற்றினா யெங்கும்பரம் பொருளான சுந்தரியே. 8

சுந்தரி சுகந்தருஞ் சுயஞ்சோதி சுயம்பிரகாசினி
அந்தரி யகத்தினுள்ளிருந்து மந்திரம் விளக்குபவளே
தந்திரஞ் செய்பவளே தமிழாயெங்குந் தாவியே
இந்தத் தரணியிலாடிடும் அங்காளம்பிகையே. 9

அங்காளம்பிகையாய் அகமதிலாடு மருட்கடலே
செங்காளம்பிகையாய்ச் செகமதிலாடி யிங்கு
கங்கையம் மனாயானந்தக் கூத்திட்டு மாலுக்குத்
தங்கையம்மனாய்த் தரணியகத்தாடும் தாரணியே. 10


தாரணியே தன்தமிழ்ப் பாசாங்குசச்
சீரணியே சிதம்பரத்தாடும் நாயகனுக்குப்
பேரணியே பெருமாட்டியே பேச்சும்பாட்டு மீயவல்ல
நாராயணி நம்பினவருக்கு நலம்பல ஈந்திடும் நாயகியே. 11

நாயகி நாயேனுனை நம்பவைத்திங் காட்டிடும்
தாயாகித் தன்மனத்தே யெனைவைத்து வித்துவளர்செடி பூவுமாக்கிக்
காயாகிக் கனிந்து கற்பகத் தருவாக்கிநின் சேயாக்கும்
மாயா விளையாட்டினை விளம்பத்தா னியலுமோ. 12

இயலுமோ உன்பெருமைதனை யியம்ப விமயத்தரசி
கயலுமென் விழிகாட்டி விளக்கியிச் சிறியனுக்குப்
பயிலுவித்தாய் பக்திதனைப் பராசக்தி பாரெங்குமினித்
துயிலுருமோயிவ்வுள மோங்காரத் தெளிவே. 13

தெளிவே தென்னாட்டி னின்னமுதே ஞான
நெளிவே நெல்முத்தே நெல்லையப்பருக் கருட்
பொலிவே ஏகாந்தமே யெண்ணிலடங்காத யென்னம்மே
வலிவே ஈந்திடுவாயிப் பாடலென்று மீரேழுலக முலாவிடவே. 14

உலாவிட உன்னருள் பரப்பிடவே பிறந்திங்கு
குலாவிடவே குழந்தையாய் உன்னருட் புனலில்
கலாபமயிலே மயிலைவாழும் கற்பகாம்பிகையே யருட்
பலாபல னீந்திடுவாய் நின்பாதம் பற்றியே. 15

பற்றினேன் இவ்வாக்கை நினைவுதனை யென்றும்
கற்றிலேன் காலன்பற்றா கல்விதனை ஞான
நெற்றியிலே ஆடுகின்ற அங்காளம்பிகையே
வெற்றியே யாவருக்கு மீந்திட்ட யென்தாயே.


தாயே தரம்பெற்ற பத்தருக்கு ளெனையென்றும்
சேயாக்கிவிட்டு யெனைச் சிறப்புறச் செய்தாய்
மாயாப் பிறவியிட்டு மனமகிழ வைத்திங்கு நினை
வாயாரப் புகழவைப்பா யென்றென்று மிவ்வையகத்தே. 17

வையகத்தே வாய்திறந்து பாடவைத்தாயே யெனையுன்
கையகத்தே யென்றும் வைத்தாட வேண்டுகின்றேனென்
மெய்யகத்தே யென்று மேவிவிளையாடு மென்னம்மே
தையல்நாயகியே தரணியில் தான்தோன்றி. 18

தான்தோன்றி தரணியில் தந்திடும்நின் புகழ் முன்பே
வான்தோன்றி வருமுன்னை வந்தம்மா நின்புகழ்பாட
யான்தோன்றி யென்றும் நின்னருள் பரப்பியே நினைவில்
நானெனும்நீ தோன்றியே நின்றாடுவாய் பராசக்தியே. 19

பராசக்தியே மூவர்க்கும் முதலே யென்றும்
மாறாசக்தியே சத்தியஞான பீடமே யென்னுள்
தீராசக்தியே தீவினையகற்றும் தெளிவே
பாராயோ சக்தியே பாரில் யாவரையும் பத்தராக்கி. 20

பத்தராக்கி நின்நாமமே நான்கு வேதமாக்கி யென்றும்
சித்தருக்கு உபதேசித்த சிவசக்திரூபியே யெங்கும்
முத்தருக்கு மூலபீடமே முக்கண்ணியே யென்போன்றோருக்கு ஞானப்
பித்தமே உன்னருள் கூட்டி வந்ததே. 21

சிறந்தவளே சித்தந் தெளிவுறச் செய்பவளே எம்மயமாய்
பிறந்தவளே பிறவிப் பெருங்கடல் நீந்திடவே எம்மோடு
மறந்திடாமல் வந்தெம்மை யாட்கொள்ளுமகா சக்தியே
இறந்திடுதல் வந்தெம்மையாட்கொள்ளு முன்னேநீவரல் வேண்டும். 22

வேண்டுமென நான்கேட்கு முன்னே நீயறிந்து
வேண்டின வெலாந்தந்திடும் அங்காளம்பிகையே நின்னருளால்
தாண்டினேன் தரணிப்பொருளாசையை யென்போல் நின்பத்தருக்கும்
வேண்டியே தந்திட்டால் விந்தை மிகுவாழ்வை விளம்பத்தா னியலுமோ. 23


இயலுமோ உன்னருட் சக்தியைச் செப்புதற்கே யென்றும்
பயிலுகின்றேன் நின்னருளால் நீலியுனைப் பாடவே யிவ்வுடல்
துயிலுருமுன்னே தூக்கியெம்மைக் காத்திடுவாய்
வயலூர்ப் பெருமானை யீன்றெடுத்த வடுவாம்பிகையே. 24

ஈன்றெடுத்த தாயினைக் காட்டினாய் நினைவி லென்றும்
மூன்றெழுத்தோங்காரங் காட்டியே முப்பத்து கோடியினரும்
சான்றதுன் பாதமே சாவாமருந்தளிக்கும் சாந்தியே
போன்றதுன் நாமம்போல் சாந்தமளிக்கு மொருநாம முன்டோ. 25

உண்டோ உனைப்போலுளமுருகி உவந்தளிக்கும் தெய்வமதைக்
கண்டிலனே இப்பாரெங்கும் பரந்துநிற்கும் பராசக்தியே
தொண்டே உனக்கென்றுஞ் செய்திடவே வைத்தாண்டு
கொண்டே யிருப்பா யினியெப் பொழுதுமே. 26

பொழுதென்னு மிரவுபகலா யென்று மேத்தியுன்னைத்
தொழுதென்றுந் துதித்திட்டென் நினைவிலாலம்
விழுதென யென்றும் பற்றியே ஆனந்தக் கண்ணீரால்
அழுதழுதுன்னைத் தொழுதிடக் குறையேது அங்காளம்பிகையே. 27

குறையேது குணக்குன்றே குளிர்மலை வாழுமெம்
பிறைசூடிய பெருமானென்று முன்னன்பெனு மருட்
கரையிலமர்ந்தங்கு மோனத்தவம்புரிய வைத்திட்டு
நிறையருளை நிறைந்தருளும் நீர்மல சுந்தரியே. 28

சுந்தரி சூக்குமச் சுடர்சோதியே மாயா
தந்திரி மனமகிழ்சித்திக்கு வித்துநீ சிந்தை தெளிவூட்டும்
மந்திரி மங்களநாயகி மாமறைதேடிடு மென்றும்
வந்தறிவாய் விளங்கவேண்டு மென்னுள்ளே. 29

என்னுற் சொல்லும் செயலும் நீயேயாகி யெனை
உன்னுளுறைகின்ற உயிர்க் கதிரொளியாக்கித்
தன்னுளிருந்து தாருக்களிக்குந் தாரமுதமே யென்
கண்ணுள் நீயிருக்கு மதிசயத்தை யென்னென்பேன். 30

அதிசயமான வடிவில் வந்தாடும் வளர்சோதியே நினையுன்
பதியே பலகாலம் தவமிருந்து பார்த்திட்டா ரெனக்கு
கதியே நினையன்றி வேறுயாருளா ரெப்பிறப்பிலும் வருமென்
விதியை மாற்றிட மனங்கொண்டாடும் மகாசக்தியே. 31

சூலங்கொண்ட கையொன்று சுற்றியெனைக் காக்க
ஆலமரன்பனுக் கருட்கூட்டு மங்களாம்பிகையே தமிழுக்கொரு
வேலனை யீந்திட்டவேம்புலி நாயகியே யென்மேல்
காலக் கயிறதுவிழுமுன்னே கண்முன்னே வரல்வேண்டும். 32

கண்ணாவோ நின்கருனைக் கெல்லையொன்றுண்டோ
அண்ணாவோ திருவண்ணாமலைக்கு நீயருள் அண்ணாவோ மாதுள
வண்ணாவோ வாய்திறந்து பாட்டியற்று மிவ்வேழைதனை நீயென்றும்
எண்ணாவோ யிருந்திடலு மியலுமோ விமயத்தரசியே. 33

கனியே கனியின்ரசமே கற்கண்டே மலர்ப்
பனியே பணியும்பத்தருக்குப் பாலமுதே பணியாதவர்க்கு மாயத்
துணியே துணிகிழித்தெறியுந் தூயபொருளே யென்றும்
துணிந்துனைப் பணிந்தபின் பணியேன்நின் பக்தரல்லாதவருக்கே.  34

இல்லாதவரு முன்நாமங் கல்லாதாருண்டோ யிவ்வுலகில்
சொல்லாத நாளுண்டோ நின்தோத்திரமே யிப்புவியில் நின்திருக்கோயில்
செல்லாத நாளென்னநாளோ நானறியேன் நாளெல்லாம்
நில்லாதது சென்றாலும் நீயேயெனக்கு வந்தெதுவும் செய்தல் வேண்டும். 35

அது வேண்டுமென நான்கேட்கு முன்னே வந்து
இது வேண்டுமா யெனக்கேட்கு மங்காளம்பிகையே யென்றும்
எது வெனக்கு நலந்தருமோ அதையேநினைத் தருளல் வேண்டும்
பதுமையாய்த் திருக்கோயிலகத்தே யிருக்கும் பராசக்தியே.  36


அகத்தே யொன்று வைத்தனைத்துயிர் வாழும்
செகத்தே யொன்றுசொல்லி சிறியோர் முன்னேசிரந் தாழ்த்தி
இகத்தே பிறக்கும் பொருள்நாடி யிறவாதென நம்பி
நகத்தே யெடுக்குமழுக்குபோல் யானுள்ளேனே. 37

அழுக்கது அகலவோர் மார்க்கம் கூறென்னன்னையே
முழுக்கது போட்டிடிவ்வுலகவாழ்விற்கு ஞானக்
கூழுக்கழுது வருமென்னைக் கூட்டிக்கொண்டிடு குலதேவி
ஊழுக்கழுதிடாம லென்னுளமதி லாடம்பிகையே. 38

ஆடனைத் தாட்டமும் நீயேயாடு உள்ளக் காமக்
காடழிந்திடவே காளியென்றே யாடென்மனம்
நாடும் நாராயணி நலமிகுவிவ் வேழுலகும்
பாடும்பாடும் பராசக்தியென்றே பாடும். 39

பாடு பலகோடி ஜீவன்களில்பாடு நின்பக்தரோடு
கூடு யென்றுங் கூட்டினுள்ளோடுங் குகைநாயகியே
கேடொன்றுமில்லை நின்நாமங் கேட்டபோதே உன்னருளைத்
தேடு தேடென்றே தேடவைத்தாய் ஞானப் பித்தனாக்கி. 40

பித்தனெனப் பெயர்சூடினான் சுடலை நாயகன் பத்தியால்
கத்தாமலிருப்பேனோ நினைக்காணும் வரைகண்டபின்னென்றும்
சொத்தாய் நீயெனக்கு வேண்டுமென்றே பித்தாயலைகின்றேன்
சித்தாய்ச் சிதம்பரமாய்ச் சின்மயமாய் வீற்றிருப்பவளே. 41


சாதனையென் றொன்றுண்டெனிலது நீயேகுளிர்மலை
நாதனும் நீயிட்டபடி செய்வதே சாதனை யென்றான்திரு
ஆதிமூலனுமாறு முகத்தோனும் மூத்தோனும் நின்நாமமே சாதனை யென்றார்
நாதியுனையன்றி வேறறியாருக்குச் சாதனையும் சாந்தியும் நீயே. 42

இவள் சோதனை செய்யமுனைந்திட்டால் சொல்லத்தானியலுமோ
பவள நிறத்தினள் பாரில்லோர்க்கெல்லாம் பக்திப் பாலூட்டினாள் நின்னருள்
துவளாதென்று மெனையுமனைவரையுங் காக்குமிச்சக்தி
அவள் செய்வதத்தனையுந் திருவிளையாட லென்றியம்புவது நன்றே. 43

இயம்புவதுன் நாமத்தை நின்னடியாரிடையே யென்றும்
சுயம்பு சோதியாய்ச் சுற்றியாவரையுஞ் சுத்திசெய்தெங்கும்
மயங்க வைத்தாய் மகாசக்தியெனும் நாமக்கள்ளையூட்டி யாவரையும்
இயங்க வைத்தாயுன்னருட்சக்தியாலே பலவண்ணமாய். 44

மூவருந்தேட மற்ற முனிவருந்தேட ஆயிரங்கோடி யண்டந்தேட
யாவருந்தேட உடுக்கை சூலமுடனெம்முன் வந்திங்கெமைநீ
பாவலராக்கிப் பாட்டிசைத்துப் பாடியிங்கெமக் கென்றுங்
காவலாகிக் காட்சியாகி நின்றாயே. 45

நின்றா யெம்மனத்து ளென்றுமுனைப் பற்றியெங்கும்
கன்றா யுன்னடிமை கொண்டுநான் பிறமதத்தில்
நன்றாய்ச் சேருவேனோ கனவிலுமில்லையடி தாயே
இன்றா யிக்கணமாயிங் கென்முன் நிற்கவே. 46

என்முன் வாழவழிவகுத்து விட்டாய் வளம்பெரும்
பொன்வாழ்வொன்று காட்டினாய் ஞாலம் புகழ்
உன்வாழ்வொளியென்மீது வீசியே யென்றும்
நின்வாழ்வை யென்வாழ்வாக்கிய நாயகியே. 47

வாழ்வில் தவறேது நின்னருளால் செய்யினும் நாயகியே
தாழ்வுறும் தவறேதும் வேண்டாதடுத்ததை நீதிருத்தி
வீழ்வுறு மெண்ணம் வீணுக்குந்தோன்றல் வேண்டா ஞானக்
கூழுற்றி யெனக்கூட்டும் குலப்பெரும் நாயகியே. 48

குறிப்பறிந் தளிக்குங் கூர்மதியுனக்கன்றி யாருக்குளதோநல்
நெறிப்பண்புதனை யென்றுமென்னுடலுதிரமாக்கி யென்மனப்
பரிதனையடக்கியே யெங்கும் நீயேயாகி யென்னுளடங்கும்
கரியநீலக் காரிகையே கற்பகாம்பிகையே. 49

கரிந்திவ்வுடல் சாம்பலாகிப் பயனற்றுப் போகுமுன் கற்பகத்தருவே யெனை
பரிந்து நீயுமேற்று நின்பாதப் பணிவிடை செய்வித்துனைத்
தெரிந்த பின்னும் சாகும்காரியம் செய்வித்திடாம லென்றும்
சரிந்திவ்வுடல் வீழுமுன்னே சமாதியெனக் கருளே. 50

அகங்காரங்களைந்திட நாமங்கொண்டா யங்காளம்பிகையெனச்
செகத்தேயென்றும் செகதாம்பிகையாய் நின்றவளே யென்றும்
இகபரவாழ்வில் வந்துதவுமினியபெரு நாயகியே உன்கை
நகத்தேயிருந் துதிர்ந்ததுதானே திருமாலுக்குத் தசாவதாரமே. 51

அவதாரம் பலவுருவிலெடுக்கும் நாயகியே யார்
அவதார மெடுத்தாலு முன்னருளால் வந்தவரே முத்தருக்குத்
தவத்தாரமளிக்கும் தமிழ்ப்பூங் பூங்கோதையே யனைத்
தவதாரமு முன்னவதாரமெனத்தெரியும் நாளென்றோ. 52

உன்னருளால் வந்தவரிங்கு பலகோடியே யாவரையும்
தன்னருளால் வந்ததெனக் கூறவைத்தாயே யெங்கும்
இன்னருளத்தனையு மெங்கிருந்தாலுமது
உன்னருளால் வந்ததென இயம்ப வைத்திடாயோ. 53


இவரு யர்ந்தவரென்று பலகூட்டங் கூற
அவரு யர்ந்தவரென்று மற்றேர்கூற அனைவருள்ளும்
எவரு யர்ந்தவரெனக் கேட்கவைத்தனையே யாவரையும்
கவர்ந்திழுக்குங் கருணைதான் உயர்ந்ததெனப் புகட்டிலையோ. 54

புகட்டாத பொருளொன்றுண்டோ யிப்புவிமீதே உன்னருளால்
பகட்டான பொருளுக்கே பலகோடியினரையும் மயங்கவைத்தா யென்றும்
திகட்டாதுன் நாமம்திவ்வியத் திருவே யாவரையு முன்னருள்
நகட்டா திருக்குமோ ஞானவழி நோக்கியே. 55

ஞானவழி நடந்திட நலமிகுநாமம் மேல்
வானவழி பறந்திட சீலமிகுநாம மங்கு
கானவொலி கேட்டிட ஒலிமிகுநாம மவள்பணிக்கு
தானமென யீவதிவ்வுடல் பொருளாவிதானே. 56

உடலதுருவாக்கி யுயிரெனப்புகுந்துள்ளே யுனையடையுமாசைக்
கடலதுவைத்துநீ கப்பலாயாகி கரையதுசேர்க்கவே ஞானத்
திடலதமைத்தாயழியா மெய்ப்பீடத்துள்ளே உனையென்றும் பாடும்
மடலது ஈந்திட்டிட்டாய் மணப் பூங்குயிலே. 57

குயிலே நீகூவியழைத்திடிற் குழந்தை நானாடியழகு
மயிலாய் வந்துநின் பாதம் பற்றியேயென்றும் ஞானப்பாடம்
பயிலவே யிங்குவந்துனை வேண்டவைத்தா யுன்னுடனெனை யழைத்து
கயிலை சென்றங்குவைத்துக் காட்சியாயுன்னோ டாக்கிடுவாய். 58


ஆவிநீதானே என்னுடலென்னும் கட்டைக்குள்ளே
காவியணிந்திட வேண்டுமோ துறவியெனப் பிறரறிய
பாவியெனக்குப் பலநிறஆடைபூட்டினாய் பாசமுடன்நீ
தாவியே நிர்மல ஆடைவேண்டி வந்தெனக் களிக்கவே. 59

ஒன்றுனது நாமமே யென்றுமெனது நாட்டமே
இரண்டுனது அருள்பொருளிவ்வையத்தினையு மளித்தெனக்கு
மூன்றுனது கண்களால் மும்மலம் போக்கியே யுனை
நான்முகனும் நாரணனும் நமசிவாயனும் நலமுறவணங்கக் காண. 60

வணங்கவே வந்துவிட்டேன் வாழ்நாளெல்லாம் பிறர்சொல்லால்
சுணங்கி சோம்பித் திரிதலும்வேண்டா யிவ்வுலகச் சுற்றத்தாரெல்லாம்
பணிந்துனக்குப் பணிசெய்யும் நாள்தனைப்பார்த்தென் பாமாலையை
அணிந்துனக் கென்றும் பார்த்திடுவே னங்காளம்பிகையே. 61

வானமது நீயேயானாய் வளர்சோதி உன்மீதபி
மானமது நீயேயளித்தாய் வளர்மா மதுரைவாழ்
மீனாட்சியானாய் வந்தெனக் கென்றும்திரு
ஞானமது ஈந்தென்னை யுன்னோடு கூட்டினையே. 62

கூட்டியே சென்றென்னை மனங்குளிர வைத்தமுதப்பால்
ஊட்டினையே உளத்தென்று முன்னருட் பெருக்கை
நாட்டினையே நாட்டமுடன் நின்நாமமந்திரத்தை யென்றும்
நோட்டமே யெனக்கு வைத்தாண்டு கொள்ளே. 63

பொருள்தரும் போகந் தரும் மதிமயங்கிப் போகுமுன்னே
அருள்தரு மனைத்துந்தரும் அங்காளம்பிகைதானே
திருவருள்தருந் தினந்தரும் தன்பால் நீங்காநினைவூட்டி யானந்தக்
கருப்பொருளாய் வந்தெனைக் காக்கும் அம்பிகையே. 64

அன்பாலழுதானந்தக் கண்ணீரா லர்ச்சித்தே யென்றும்
உன்பால் தொழுதுன்னைப் பக்தியால் பாட்டிசைத்தே யென்றும்
என்பால் பழுதுபட்டிருக்கும் உளமாசுதனைப் புதுப்பித்
தன்பால்வந்தெனை யணைத்துக் கொள்ளாயோ. 65


அசைவற்ற பொருளும் நீயேயெனங்கமெலாம்
இசையாகி வந்தாடும் வனப்பும் நீயேயெத்
திசையுமுன் நாமம் பரப்பியே உன்னன்புப்
பசையாகி படர்ந்துன்னுடன் வாழவேண்டுமம்மா. 66

குருவாகி யெனக்குநீ வரல்வேண்டு மென்முன்னே
உருவாய் வந்துநின்றருளல் வேண்டுமுன்னொளிக்
கருவாய் வந்திவ்வேழை பிறந்திடல் வேணடுமென்றுந்
திருவாய்வந்து நிற்குந் திருவெல்லை நாயகியே. 67

வல்லவள் நீயே வியத்தகுயிவ்வுலகி லென்றும்
நல்லவள் நீயேநம்பினோருக்கும் நம்பாதோருக்கும்
மெல்ல நினைவூட்டினையே நின்நாமம்
சொல்லசொல்லச் சுவைக்கொரு யெல்லையுண்டோ. 68

சத்தியம்நின் உடலாகும் சாந்தியே நின்கண்ணாகும் நின்நாமம்
நித்தியங் கூறினோருக்கு நீடுபுகழ்நீயே யுனைவணங்க மனதில்
பத்தியமேதும் வேண்டா பாரில்வளர் நாயகியேயென்று மெனக்கு நல்ல
புத்தியைத்தா புனித வீணையேந்திய சக்தியே. 69

வழிபட வைத்தனையே நின்னை யென்றும் பிறர்மீது
பழிபட யெனைநடத்திடல் வேண்டா வீணாய்
அழிபடும் பொருள்மீது பற்றெனக்கு வைத்தெக் காலத்தும்
இழிவுபட வைத்திடாதே இனியபெரு நாயகியே. 70

வாளுடன் வந்தவடிவழகு நாயகியென் வாக்கினில் நின்று
ஆளுடன் வந்தவருக்கெல்லா முன்நாமங் கூறியவர்
கோளது மாற்றியே குறைதீர்த்திடச் செய்து
நாளெல்லாம் நின்நாமங் கூறும்நிலைதனை யீந்திடாயோ 71


சோமன் நின்னருட்கொண்டான் சூக்குமச்சோதியே நின்
நாமமும்பெரிதெனக் கொண்டு நாரணனும் நலம்பெற்றுக்
காமனைத் தகனஞ் செய்து சிவனுமுயர்
வாமன அவதாரத்தான் தங்கையுனை மணந்தான்தானே. 72

சிவனும் சக்தியுஞ் சேர்ந்து வந்ததுன்னருளால்
அவனுமவளு மவதாரம் பெற்றது அங்காளம்பிகையால்
இவனுமிவளுஞ் சேர்ந்துனைப் பாடவைத்தனேயே யென்றும்
அவனுமுன்னைப் பணியாது சென்றதில்லையே செகப்பெருநாயகியே.  73

ஆசைதனை யிரண்டாக்கி யழியாஅழியுமெனக் கூறியுனைப்
பூசனைச் செய்ய வைத்தனையோ அழியாதுணையடைய வென்றுங்
காசைக் கொடுத்து மனமாசை வளர்த்தல் வேண்டா நின்னருளால்
ஈசனென்பது மீசுவரியென்பது முன்நாமமே. 74

கரும்பு வில்லுங்கைக்கொண்டுகாரிகையே என்றுமுனை
விரும்பும் நினைவே நீயளித்திடல் வேண்டுந் துட்டவெண்ணந்
துரும்பளவும் வந்திடல் வேண்டா யென்னுள்ளென்றும் வளர்
அரும்பாகி யனைத்துமாகி அண்டமாகி யென்னன்னை யாகினையே.  75

பூதநாதனுக்குப் புண்ணியப் பொறுப்பளித்தா யிவ்வேழைதனுக்கும்
பூதவுடலகத்தே உன்னினைவுப் பொறுப்பளிப்பா யென்னுள்ளே
நாதவொலி கேட்டுநாளெல்லாம் நின்நினைவு கூட்டவேண்டுந் தமிழ்
வேதவொலி போற்றும் வேதநாயகியே வேதவுமையே. 76


உமையே யாருக்கு மடியேனுன்னருளா லென்றும்
சுமையா யிருந்திடல் வேண்டா யைம்புலனடக்கும்
ஆமையா யிருக்கவைத்தென்னை யுன்னன்புள்ளத் தென்றும்
அமைத்திடுவா யம்பிகை சிலைபோல் அன்பே. 77

அன்பே யெனன்பினிற் புகுந்துமுக்கால முணர்த்தி
இன்பமுமினிமையும் நீயாகி யினிய பத்தருக்குள்
துன்பமேதுமின்றித் துடைத்து நீதூயநிலை யளித்து
அன்பு மறனுமளித்தாளுகின்றனையே. 78

காதலாகிக் கனிந்திவ்வுளங் கதிநீயேயென்று மிவ்வுலகத்தே
சாதலெனும் மாயவாழ்வில் வைத்தென்னை மயக்கிடாதே
பாதயாத்திரியாயென்று முன்கோவிலுக் கெனைவரவழைத்துக்
கீதமா யென்று முலாவிடும் கீதாம்பிகையே. 79

புண்ணியம் யாதுசெய்யவைத்தனை புலம்புகின்றே னுன்னருளால்
பண்ணிய பாவந்துலைத்திடாயோ தூயபெருநாயகியே யென்னுள்
எண்ணியதெலா முன்னருளால் நிறைவேற்றினாய் நீயேயென்றும்
திண்ணிய நெஞ்சந்தந்தென்னைப் புண்ணியஞ் செய்வித்திடாயோ. 80

புண்ணியஞ் செய்துன்னருட் கொண்டு நின்புகழ்பரப்பிக் கடமை
கண்ணியங் கட்டுப்பாடென்பது நின்செயலே யென்வாழ்வில்
நன்னியுன்னை நலமுடன்நாடிவந்தே னுன்னருளால்
மண்ணில் வாழ்நாளெல்லாம் மனமகிழ் நாளாக்குவாய். 81

வந்தேனென் வாழ்நாளெல்லா முனைப்பாடி யென்றும்
தந்தே னெனக்கென் றொன்றுண்டென்றா லத்தனையும்
கந்தவேளே காக்கும்படித் தமிழுக்கீந்த கருணைபோல்
வந்தேன் நாளுமரிய பலசெயலைச் செய்திடும் நாயகியே. 82


மெல்லிய குழல்குரல் கொண்டே கூவியழைத்தேன் குருவாகி
சொல்லிய மந்திரமென்னுள் ஒலிக்கவே யென்றுந்தூய
மல்லிமணம் பரப்பித் தூயதீபமுள்ளே காட்டியென்றும்
அல்லி யங்காளம்பிகையா யாகிவந்தாய் ஞானமுதளிக்கவே. 83

நஞ்சுண்ட ஐயன் நஞ்சுதனைக் கண்டத்திலே நிறுத்தித் தேவருக்கெலாம்
அஞ்சேலெனக் கூறிநின்னன்ப ருய்யும் வண்ணமுயிரூட்டி யனைவருந்
தஞ்சமெனயுனை வைத்துத் தரம்பெருவாழ்வளிக்கும் நின்
மஞ்சளது குங்கும மகிமையை மனமகிழ்ந்து பாடவைத்தனையே. 84

குங்குமந் தந்திடுங் குறைவில்லா வாழ்வுதனை உலகுக்கு
எங்கும் பரப்பியே பாடிட வேண்டும் நின்னருளால்
தங்குமே யென்றும் நினக்குச்செய்யுந்தொண்டே யழியாமல்
இங்கினி வேறோருக்குப் புகழில்லையே உனைப்போலே. 85

திருநீற்றின் மகிமையைத் திருத்தமுடன் கூறயெனக்கியலுமோ
பெருங் காற்றென வந்திடுமெக்குறையும் மடக்கி யொழிக்கும்
வருகாற்றென வந்து வேண்டாதென ஓட்டித் தள்ளி ஞானமூட்டும்
அருட்தென்றலாகி யானந்தக் களிப்பூட்டுந் திருநீறே. 86

பாதமலர் கண்டுநானும் பாசமுடன் பாடியுன்னை தமிழ்
வேதமலர் தூவியே துதித்துன் பாதயிடைப் பத்திச் சர்க்கரை
சாதம்வைத்து சாந்தமெனும் நின்னருட் பழம் படைத்தன்பு
கீதம்பாடியே கீர்த்தனை புரிய வேண்டுமம்மா. 87


தாமரை மலர்ப் பொன்னடிதனைப் பொறுப்புடன் வணங்கி
யாவரையும் யாவையும் செய்யத் தூண்டியென்னை யுன்புனித
பூவறைத்தாள் மீதுபுண்ணியனாய் வைத்தென்றுமுன்
பாவறையும் செயலீந்தனையே ஈகைபெருமாட்டியே. 88

பூவடி பெருமைதனைப் புரிந்துகொள்ளும் நாளென்றோ ஞானக்
காவடிப் பாட்டிசைத்து நின்கணங்களெல்லா மாடக்கண்டு
பால்வடியும் நின்பாசப் புன்னகையுடனிங்கு நீயெழுதும்
நாலடிப் பாடலுக்கு நலமிகு நின்பாதம் பட்டிடவே. 89

பாதநினைவே யெனக்கென்றும் வேண்டும் வேறெது நினைவும்
காததூரம் ஓடிடவேண்டும் நின்நினைவென்றும்
சேதமுறாது செம்மலர்ப் பாதநினைவே வேண்டும்நின்
பாதமேயென் பலபிறவி யழிக்க வந்ததே. 90

பார்வை யொளியால் பகலிரவு செய்துளமாயப்
போர்வை களைந்தெறிய வந்திடாயோ வீணுக்குழைத்தென்
வேர்வை ஒழியப் பாடுகின்றேன் பண்ணிசையே யுன்மீதென்றும்
ஆர்வம் வந்திடப் புனிதப் பார்வை பாய்ச்சுவாயே. 91

நின்புருவமசைந்திடில் நீலகண்டனாடுவா னென்னுள்ளத்தே
அன்புருகொண்ட நாயகியே யாயிரங்கோடி யண்டங்களும்நின்
புன்முறுவலில் வந்ததே புண்ணியமூட்டும் நாயகியேயிங்கு
என்புருவாயிருக்கு மெனையேற்றுக் கொண்டருள்வாயே. 92

புவனங்களாடப் புவியெங்குமாட புலன்களாட யென்
கவனங்களாட வுன்னால் கண்டதத்தனையுமாட யிவனுன்
மவனென்று கொண்டாட மனமகிழ்ந்து நானும் மெத்த
தவமென்ன செய்தேனோ தவமருள் நாயகியே. 93


நுதலதில் அழகொரு பொட்டுங் கண்டேன் ஞானப்
பதிகங் கூறும் மூன்று திருநீற்றுப் பட்டை கண்டேனென்னால்
அதிக மியம்பத்தா னியலுமோ ஞானமுன்மூத்த
துதிக்கை நாதனாற்றான் நவில இயலுமே. 94

வேல்கொண்டளித்தாய் குமரனுக்கே ஞானத்தால்
மேல்கொண்டெழ வைத்தெனக் கமிர்தப் பாலளித்துநின்
கால்தனுக்குத் தொண்டுசெயுங் காலந்தந்துநின்
கோலமெல்லாம் நானாகித் திருநீராயமர் நாளென்றோ. 95

இடுகாட்டிற் சென்றுயெனை யிட்டிடல் வேண்டா ஞானச்
சுடுகாட்டிற் சென்றுசுட்டென்னைப் பசும்பொன்னாக்கு
வடுவாம்பிகையே வந்தென்னை வளர்த்திட்டுன்னருளாற் பாழும்
படுகுழிக்கழுத்தும் நின்பாசமற்றவருடன் சேர்த்திடாதே. 96

அறியாது நின்னருளால் யாதுபிழையும் செய்தல் வேண்டா மதிமயக்கித்
தெரியாமலெதுவுஞ் செய்வித்திடல் வேண்டா யென்றும் நல்ல
நெறியது தவறாமல் நலம்பல நின்னன்பருக்கெலாம் செய்தென்
குறியது நின்திருப்பாதமே யென்றிருக்க வைப்பாயே. 97

அனத்து மழிந்தாலும் நின்னருளா லழியாநல
மனைத்து மளித்து நம்பிக்கையு மளித்துநின்புகழ் மாலையால்
வினையத்தனையுந் தீர்த்து வீடுகொடுத்திடுவாய் யாருக்காவது
தினைத்துளி யளவேனும் நின்பத்தருக்குத் தீர்த்தமளித்தே. 98


ஓடுகின்ற நீருமுன் பெயர்கூறியே யோடியெங்கும்
வாடுகின்ற பயிர்வாழவழிசெய்து நீயெமக்குநின்
வீடுபுகழளித்து நினைவத்தனையும் நீயேயாகி நினை
நாடுகின்றவருக்கு நாமமாம் பராசக்தியே. 99

கல்லையு முருக்கு முன்நாமங் கனிந்தழுதிடில்ஞான
எல்லையுந் தாண்டவைக்கும் நின்நினைவா லென்றுமிருப்போர்
புல்லையும் நெல்லாக்கும் புனிதநிலை பெறுவரே யனைவர்
தொல்லையும் போக்குந் தூயநிலை நின்போலாவாரே. 100

கண்கண்டு குருடராய் குணம்பிரண்டலைதல் வேண்டா
மண்கொடுக்குமாசையதை மனதிலும் வேண்டா அழியும்
பொன்பொருள் கொடுக்குமாசையதை யொழித்துநீ யென்றுமுயர்
பண்கொண்டநின் நாமயிசை யென்றுமென் நினைவில் நிற்கவே. 101

நூல்பயன்

அன்புடன் அண்டங்கோடி யனைத்துங் காக்குமங்காளம்பிகையை
இன்பமுடன்பாடி பணிந்தோருக் கெல்லாந் துன்பம்
என்பதில்லையே துயரெல்லாந் தீர்த்துத் தூய்மையாக்கி
இன்பமுண்டினிமை யுண்டென்று ளமாடுமே.

இப்பாடல்கள் அனைத்தும் தேவியின் மூலமந்திர எழுத்துக்களின் பூரண சக்திதனை நூறு பாடல்களாய்ப் பிரித்து, கடைசிப் பாடலில் கருணையைச் சேர்த்து 'க' என்னும் மூலசக்திதனை விளக்கும் பயனாக அம்மன் அருளால் அமைகின்றன.

1. நல்லெண்ணம் வளர, பாவம் தீர
2. மறந்தவர் ஒன்றுசேர
3. தாய் தந்தையை அடைய
4. மாயை விலக
5. சித்தம் தெளிவுற
6. அருள் சேர
7. யோக நிலை எய்த
8. தவறு வழி செல்லாதிருக்க
9. மந்திர சித்தி பெற


10. தேவி அருள் பெற
11. பாடும் வல்லமை பெற
12. நம்பிக்கை வளர
13. பக்தி வளர
14. நாமம் பரப்ப
15. தூய உள்ளம் பெற
16. நினைத்த காரியம் இடையூறின்றி நடக்க
17. சத்சங்கம் கிடைக்க
18. தியானத்தில் பூரணம் அடைய
19. தான் என்ற அகந்தை ஒழிய
20. தெய்வத் தொண்டு செய்யும் வரம் பெற
21. முக்காலம் உணரும் சக்தி பெற
22. முக்தி பெற
23. பொருளாசை விட
24. மரண பயம் அகல
25. ஞானம் பெற
26. அழியா செல்வமும், வீடுபேறும் பெற
27. பக்தி பரவசம் உண்டாக
28. பேரின்பம் அடைய
29. சித்துக்கள் பெற
30. மாயை அகல
31. விதியையும் வெல்ல
32. வழித்துணையாய் வர
33. மனக்குறை தீர
34. மகாமாயை அகல
35. நினைத்தவுடன் பலன் பெற
36. தாயின் கருணை பெற
37. உள்ளம் தெளிவு பெற
38. தேவியைக் காண
39. காமம் அழிய
40. தேவிஉருவை உள்ளத்தில் என்றும் காண
41. அருட்பெருஞ்ஜோதி காண
42. மனசாந்தி கிடைக்க
43. இக்கட்டான நிலை நீங்க
44. சகலபோக பாக்கியங்கள் அடைய
45. பகைவர்களால் உண்டாகும் பயம் நீங்க
46. எம்மதமும் ஒன்றாய்க் காண
47. இல்வாழ்க்கையில் இன்பம் பெற
48. வாழ்க்கையில் தவறினாலும் மீண்டும் தவறு செய்யாதிருக்க
49. நிரந்தரமான மகிழ்ச்சி உண்டாக
50. சமாதிநிலை அடைய
51. உள்ளத்தே ஞானஒளி உண்டாக
52. மனப்பக்குவம் அடைய
53. நிலையான மனசந்தோஷம் உண்டாக
54. அம்பிகை அருள் என்றும் கிடைக்க
55. அரிய பெரிய செயல்களைச் செய்ய
56. கெட்ட நடத்தை உள்ள மகன், மகள் திருந்த
57. வாக்குவன்மையும் செல்வமும் அடைய
58. இறக்கும் தருவாயில் தேவி நினைவு பிரியாதிருக்க
59. இல்லறம் நல்லறமாக
60. கன்னிகைகளுக்கு நல்லவரம் கிடைக்க
61. தேவிக்கு செய்த அபசார தோஷம் தொலைய
62. மரண அவஸ்தை இல்லாது ஒழிய
63. புத்திரபாக்கியம் உண்டாக
64. தனக்குரிய பொருள் தப்பாமல் அடைய
65. ஈவிரக்கம் வளர
66. நடிப்பு, பாட்டு, ஓவியம் முதலிய கலைகளில் திறமைபெற
67. குருவை அடைய
68. வேலை கிடைக்க
69. மேல்படிப்பு வளர
70. வீண்பழி வராமல் காக்க
71. கிரகங்களால் ஏற்படும் துன்பம் அகல
72. திருமணம் நிகழ
73. வேலையில் மேல் பதவி பெற
74. கடவுள் உண்டா இல்லையா என்ற சந்தேகம் அகல
75. கெட்ட நினைவுகள் எண்ணங்கள் மறைய
76. தலைமைப் பதவி பெற
77. அரச பதவி பெற
78. அட்டமாசித்துக்கள் பெற
79. அனைவரையும் மகிழவைக்கும் பொறுமை பெற
80. தன் குழந்தைகள் நலம் பெற
81. கடமை, கண்ணியம், கட்டுப்பாடுஅறிய
82. பக்குவ நிலை அடைய
83. மீண்டும் பிறவா நிலை அடைய
84. சுமங்கலியாய் இருக்க
85. விதிப்படி காதல் நிறைவுபெற
86. நோயற்ற வாழ்வு பெற
87. தேவியை கனவில் காண, தீய கனவு வராமல் இருக்க
88. வேதங்கள் உணர
89. தேவி திருவடி தீட்சை கிடைக்க
90. பலகோடி அசுவமேத யாகங்கள் செய்த பலன் பெற
91. ஆயுதங்களால் உண்டாகும் பயம் அகல
92. அம்பிகையின் திருவுருவுடன் நேரே பேச
93. இல்லத்திலேயே துறவறத்தின் தவவலிவு பெற
94. தடங்கல்கள் வராமலிருக்க
95. சிவனாய் ஆக
96. நன்றி மறந்தவரும் திருந்த
97. பஞ்சபூத நிலையறிய
98. வறுமையென்றும் வராதிருக்க
99. பயிர் செழிப்புடன் வளர
100. தேவியாய் ஆக
101.அகிலாண்டமெங்கும் புகழ்நிலைக்க

ஸ்ரீஅங்காளபரமேசுவரி திருமலரடிசரணம்
திருக்கயிலாயபொதியமுனி திருமலரடிசரணம்

Tuesday, 16 October 2018

சித்தன வாசல் சிவன்

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
*சித்தர் பூமியாகதிகழும் புதுக்கோட்டை மாவட்டத்தின் சித்தனவாசல் மலை உச்சியில் எப்போதும் நீர்நிறைந்த நிலையில் காணப்படும் சுணையில் தீர்த்தநீராடிய(மூழ்கிய நிலையில்) உள்ள குகையில் அருள்பாலித்துவரும் சிவபெருமான் ஊர்மக்களாலும் தொல்லியல் துறை அலுவலர்களின் சீரிய முயற்சியாலும் மக்களுக்கு நேரடியாக அருள்பெற்று தரும் விதத்திலும். தூய்மைசெய்யும் நோக்கிலும் செயல்பட்டு நேற்று நீர்இறைக்கபட்டு  அபிஷேக ஆராதனை   இறைவழிபாட்டுக் அந்த பெருமானை தரிசிக்க  28வருடங்களுக்கு பிறகு இப்பொழுதுதான் வெளியில் மக்களுக்கு அருள்பாலிக்கின்றார் என்பது குறிப்பிடத் தக்கது. முதல்முறையாக பன்னிருத்திருமுறை பாடும் பாக்கியமும் தரிசனமும் சில நபர்களுக்கு மட்டுமே கிடைத்ததும். சிறப்பு 28வருடத்திற்கு பிறகு நீர் இறைக்க பட்டபோது திடீர் மழைபெய்து உடனே நீரால் சிவலிங்கம்  மூழ்கியது .*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉




நெல்லை குறுக்குதுறை அருகே மேலநத்தம் அருள்மிகு ஸ்ரீ அக்னிஸ்வரர் உடனுறை கோமதியம்பிகை திருக்கோவிலில் கன்னி மூலையில் அதிசயதக்க விநாயகர் மூன்று தோற்றங்களில் காட்சி தருகிறார், வலம்புரி, நடுபுரி, இடம்புரி, தும்பிக்கை கவனித்து பார்த்தால் வேறுபாடு தெரியும், மற்றும் இந்த விநாயகரை திருமண தடை,கெட்ட கனவு, கனவில் யானை விரட்டுவது,சகுனகுறைவு, தொழில் விருத்தி போன்றவற்றிக்கு அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்கின்றனர்.




Sunday, 14 October 2018

இன்று 14/10/2018 இன்னுமொரு நிகழ்வு


இன்று 14/10/2018 இன்னுமொரு நிகழ்வு

இங்கே நினைத்தால் அங்கே நடக்கிறது, அங்கே நினைத்தால் இங்கே தெரிகிறது

ஜீவ நாடி பீட ஆசான் இறைசித்தன் செந்தில் அய்யா அவர்களின் அலைபேசி பழுதை சரி செய்வதற்காக சமுத்திர ராஜன் என்ற அகத்திய அடியவரிடம் கொடுத்து இரண்டு வாரம் ஆகி விட்டது. நேற்று பேசிய போது அது சரி செய்யப்பட்டு விட்டதாகவும் அடுத்த முறை வரும் போது கொடுத்து விடுவதாகவும் தகவல். ஆனால், அந்த தொலைபேசி இல்லாமல் சிரமமாக உள்ளது என்று தகவல்.

இது நடந்தவுடன், அன்று இரவு சமுத்திர ராஜன் என்னை அழைத்து பேசுகிறார். நானும் அவரும் உரையாடி பல நாட்கள் இருக்கும். பெரும்பாலும் அழைத்தால் கைபேசியை எடுக்கவே மாட்டார். ஆனால் அதிசயமாக நேற்று இரவு அவரே அழைத்தார். உடனேயே கை பேசி சரியாகி விட்டதா என்று கேட்டேன். உடனே அது சரி செய்து விட்டாச்சு, நீங்கள் செல்லும் போது சொல்லுங்கள், கொடுத்து விடலாம் என்று கூறினார். சரி நீ இரண்டு தினம் கழித்து அதை என்னிடம் கொண்டு சேர்ப்பித்து விடு நான் செல்லும் போது கொடுத்து விடுகிறேன் என்று கூறினேன். அதற்க்கு ரூபாய் 500 செலவு செய்தேன். அனால் செலவு செய்தேன் என்று அவரிடம் கூற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். நான் கூறினேன், அந்த செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன், உனக்கு கொடுத்து விடுகிறேன் என்றேன். அதற்க்கு சரி என்றார்.

இன்று காலை இறைசித்தர் பெரியநாயக்கன்பாளையம் ஒரு வேலையாக வந்துள்ளார். அப்போது ஏன் மனதில் எழுந்த எண்ணம். " பார் இந்த அன்பருக்கு நமது பீட ஆசானுக்கு உதவி செய்ய வாய்ப்பு கிடைத்து உதவி செய்தும் அதன் பலன் அவனுக்கு கிடைக்காமல் நமக்கு கிடைக்கும் போல அமைப்பு உள்ளது. அந்த செலவையும் நாம் ஏற்க்க போகிறோம், கைபேசியையும் நாம் நமது கையாலே கொடுக்க போகிறோம். அவனுக்கு கிடைக்க வேண்டிய புண்ணிய பலன் நமக்கு கிடைக்கபோகிறது. அவனுக்கு இதெல்லாம் எப்படி புரிய போகிறது என்று எண்ணினேன். பின்னர் சமுத்திர ராஜனை கைபேசியில் அழைத்து இங்கு வர சொல்லி இறைசித்தரின் கைபேசியை நாமே இன்றே வாங்கி விடுவோம், நாம் இன்று வீட்டில் சும்மா தானே இருக்கிறோம், அவரும் நம் வீட்டின் அருகில் உள்ள இடத்தில் வந்து உள்ளார். இன்றே அந்த கைபேசியை எடுத்து சென்று கொடுத்து விடுவோம் என்று எண்ணினேன்.

இங்கே அடித்தால் அங்கே வலிக்கும் என்பது போல மதியம் எனது நண்பர் என்னை அழைத்தார்.

என்ன தோன்றியது என்று தெரியவில்லை, என்னை சில ஆன்மீக முக்கியமான கூடத்திற்கு அழைத்தார்கள், நானோ அங்கே செல்ல விருப்பமிலாமல், ஏதோ ஒரு உந்துதல் பேரில் இரு சக்கர வாகனத்தை எடுத்து பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு மேட்டுப்பாளையத்திர்க்கு பயணசீட்டு எடுத்து ஏறி விட்டேன். அங்கிருந்து பொகளூர் பேருந்தில் சென்று சித்தர் பீடம் அடைந்து பொருளை (கைபேசியை) சேர்த்து விடலாம் என்று எண்ணினேன்.

எல்லாமே ஒரு உந்துதல் பேரில், இப்படி செய் என்று உத்தரவு இட்டதால் செய்ய தோணியது. இறைசித்தரை தொலைபேசியில் அழைத்தால் எடுக்கவே இல்லை. பின்னர் துடியலூர் தாண்டியதும் அவரை அழைக்க ஒரு உந்துதல், அவர் எடுக்கவே இல்லை. ஆனால் சரியாக பெரிநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்திற்கு முன்னால் இறைசித்தரே என்னை அழைத்தார். தாம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார். அந்த நேரத்தில் தான் பெரியனயக்கன்பாளையத்தின் பேருந்து நிறுத்தத்தில் நின்றது. உடனே இறங்கி அந்த இடத்தை விசாரித்து, அவரிடம் கைபேசியை சேர்ப்பித்து விட்டேன். இப்போது என் இல்லம் திரும்பி விட்டேன். உங்களிடம் தெரிவிக்கலாம் என்று கூறினேன் என்றாரே பார்க்கலாம்.

இது ஒரு சாதாரண விஷயம் தான் ஆனால் அந்த உந்துதலுக்கு என்ன பெயர்?.

எனது எண்ணம் அவன் மனதில் உந்துதல் ஏற்படுத்தியது, அவன் எண்ணம் இறைசித்தர் மனதில் உந்துதல் ஏற்படுத்தியது, அழைகழிக்காமல் சரியாக பெரியநாயக்கன்பாளையத்தில் இறங்க வைத்து எது?

கைபேசி இல்லாததால் பலர் இறைசித்தரை தொடர்பு கொள்ள முடியாமல் அவரவர் வாழ்க்கை சிக்கலுக்கு விடை தெரியாமல் திணறி இருக்கலாம். அது இறைவன் செயலாக அதற்கு தடையாக உள்ள கைபேசியை கொண்டு சேர்த்தது இறை செயலல்லாமல் வேறு என்ன?

நாங்கள் வெறும் கருவியே, கட்டளை இட்டால் செயல்படுத்துவோம். ஆனால் எத்துனை பேருக்கு இந்த ஆழ் மனது, உந்துதல் வேலை செய்கிறது, எத்தனை பேர் அதை மதித்து அதன்படி செயல் செய்கிறார்கள் என்பது தான் ரகசியம்.

நான், சமுத்ர ராஜன் ஆகியோர் ஆழ் மனதில் வரும் எண்ணங்களை பார்த்து செயல் செய்கிறோம், ஒரு எந்திரம் போல, சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளை போல.

வாழ்க்கையில் இவ்வாறே செய்பவன் இல்லாமல் செயல் மட்டும் நடந்தால் அனைத்து காரியங்களும் இறை செயலாக சுபமாக இருக்கும்.

சுபம் - சுபம் - சுபம்
தி. இரா. சந்தானம் - 9176012104
சமுத்திர ராஜன் - 9566777973 .
கோவை.