Friday 24 December 2021

குருபூஜை படங்கள்




 






Tuesday 7 December 2021

நவகுஞ்சரம்

 *இது தான் நவகுஞ்சரம்*


*மகாபாரதத்தில் வரும்* *வித்தியாசமான உடலமைப்பைக்* *கொண்ட பறவை நவகுஞ்சரம்.*


*ஒன்பது மிருகங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவை இது.*


*சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின்வால், யானை,புலி,* *மானின் கால்கள், மனிதனின்* *கையுடன் கூடிய விலங்கு எப்படி இருக்கும்?* 

*அதுதான் நவகுஞ்சரம்.*


*‘நவ’ என்றால் ஒன்பதைக் குறிக்கிறது.* *ஒன்பது விலங்குகளின் கலவை என்பதால் நவகுஞ்சரம் என்று பெயர்.*

*ஒரிய மொழிக் கவிஞரான சரளதாசர் எழுதிய மகாபாரதக் கதையில் நவகுஞ்சரம் சித்தரிக்கப்பட்டுள்ளது*


*அர்ஜுனன் மலை மீது தவம் செய்துகொண்டிருந்தார்.*


*அப்போது நவகுஞ்சர உருவெடுத்து கிருஷ்ணர்,* *அர்ஜுனன் முன் தோன்றியதாக வருகிறது.*


*தவத்திலிருந்து கண் விழித்த அர்ஜூனன், முதலில் நவகுஞ்சரத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்து திகைத்தார்.*


*பின்னர் அதன் கையில் தாமரைப் பூவைப் பார்த்தார்.*


*வெவ்வேறு விலங்குகளின் உடல் உறுப்புகள் சேர்ந்த* *அதன் உடலமைப்பைப் பார்த்து,* *ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டார்.*


*அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன.* 


*’மனிதர்களின் எண்ணங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை.*


*உலகமோ எல்லையற்றது’* *என்பதை உணர்ந்தார் அர்ஜுனன்.*


*இதுவரை பார்த்திராத ஓர் உயிர் இந்த உலகில் இருக்கலாம் என்றும் நினைத்தார்.*


*தன்னைச் சோதிப்பதற்காக இந்த உருவத்தில் வந்திருப்பது கிருஷ்ணன்தான் என்று தெரிந்துகொண்டு, எடுத்த வில்லை கீழே போட்டுவிட்டு வணங்கினார்.*


*ஒடிஷாவில் விளையாடப்படும் கஞ்சிபா சீட்டுக்கட்டு விளையாட்டில் நவகுஞ்சரம் ராஜாவாகவும்,* 


*அர்ஜுனன் மந்திரியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.*


*ஒடிஷாவில் வரையப்படும் ஓவியங்களில் நவகுஞ்சரம் பல வகைகளில் வரையப்படுகிறது.*

*நவகுஞ்சரத்தின்* *உருவம் பூரி கோவிலின் வடக்குப்புரத்தில் செதுக்கப்பட்டுள்ளது*


*அதன் கையில் இருக்கும் நீலச் சக்கிரம் பூரி கோவில் கோபுர கலசத்தின் உச்சாணியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது*




Thursday 2 December 2021

அதிசய ஆலயம் - நந்தி சிலையை திருப்பினால் சுக பிரசவம்

 https://youtu.be/m7PlpF8zORY



Trustee Srinivasan.Phone: 9840955363.You can tell even a day before the public time.Priest Name: Natarajan.Phone Number: 96265 23642.

.கோவில்: இளநகர் உதயபுரீஸ்வரர் கோவில்.காஞ்சிபுரம் மாவட்டம்.உத்திரமேரூர் அருகில் உள்ள கிராமம்.கோவில் டிரஸ்டி ஸ்ரீநிவாஸன்.போன் நம்பர்: 9840955363.பிரசுப நேரத்திற்கு ஒரு நாள் முன்பு கூடச் சொல்லலாம்.பூசாரி பெயர் : நடராஜன்.போன் நம்பர்:96265 23642.

Wednesday 1 December 2021

அகத்தியர் குரு பூஜை விழா 23.12.2021

 அன்புடையீர் அனைவருக்கும் நமஸ்காரம்


நமது அய்யா அகத்தியர் எம்பெருமானுக்கு பொகளூரில் ஆறாம் ஆண்டு குரு பூஜை நடக்க இருக்கிறது. இதுவரை 2015 இல் இருந்து பொகளூரில் அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடத்தில் நடத்தி கொண்டு வருகிறோம். நமது அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம் மூலம் வருடம் தோறும் ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு ஜீவ நாடி வாசிக்கப்பட்டு, அவர்களுக்கு அகத்தியரிடம் உரையாட , தங்கள் குறைகளை தெரிவிக்க, அகத்தியர் கூறும் பரிகாரங்களை கேட்டு அறிய, ஆன்மீக முன்னேற்றம் பெற, வாழ்வில் அணைத்து சிக்கல்களுக்கும் தீர்வாய், முதல் ஆதி மருத்துவராய் தீராத நோய்களை எல்லாம் தீர்த்து அருள் பாலித்து கொண்டு வருகின்றார். இந்த இடத்தில பீடம் அமைத்து அருள் பாலிக்க வேண்டும் என்பதுவும் ஜீவ நாடி மூலம் அவர் இந்த இடத்தை பற்றிய குறிப்புகளை கொடுத்து இங்கே பீடம் அமைக்க சொல்லி, தனது விக்ரகம் எங்கே பிரதிட்டை செய்யப்பட வேண்டும், நுழைவு வாயில் எங்கே வர வேண்டும், தீபம் எங்கே வைக்க வேண்டும் என்பது போன்ற அனைத்து ஏற்பாடுகளும் அகத்தியர் ஜீவ நாடி மூலம் கூறிய உத்தரவுக்கு ஏற்ப அமைக்கப்பட்டு செய்யப்பட்டு உள்ளது


மேலும், இங்கே அய்யனின் அருள் எப்போதும் நிறைந்து இருப்பதற்காக தினமும் நித்திய அபிஷேகம், அலங்காரம் மற்றும்  வியாழன் தோறும் சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் மற்றும் பௌர்ணமி தோறும் சிறப்பு யாகம் , சிறப்பு அபிஷேகம் , சிறப்பு அலங்காரம் , அன்னதானம் ஆகியவை ஒரு முறை கூட தவறாது நடை பெற்று வருவதால் அய்யன் மிக்க மகிழ்ச்சியுடன் இங்கே எழுந்தருளி அருள் பாலித்து மக்கள் குறைகளை இந்த கலி காலத்திலும் கேட்டு அறிந்து அறிவுரை கூறி ஆட்கொண்டு வழிநடத்தி வரும் ஆஸ்ரமம் நமது அகத்தியர் பீடம்.


இங்கே தற்போது ஐயனுக்கு ஆலயம் அமைக்க நிலம் வாங்கப்பட்டு உள்ளது. ஆலய பணிகள் அய்யனின் உத்தரவு பேரில் ஆரம்பிக்கப்பட்டு, உள்ளது - 


இத்தகைய சிறப்பு வாய்ந்த நமது பீடத்தில் அணைத்து பணிகளும் பக்தர்களின் நன்கொடை,  குரு தட்சிணை பொன்றை மூலமே நடத்தப்பட்டு வருகிறது. 


இந்த நிலையில், வழக்கம் போல நமது அய்யனின் குரு பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளில் அதிகாலை 5 மணி அளவில் வருபவர் *அனைவருக்கும் அகத்தியர் ஜீவ அருள் நாடி வாக்கு ஆசீர்வாதம் வழங்கப்படும்*. *குரு பூஜை நாளில் அவரவர் கைகளால் அய்யன் விக்கிரகத்துக்கு பால் அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படும்.* *வருடத்தில் இந்த ஒரு நாள் மட்டுமே பக்தர்கள் தமது கரங்களால் பால் அபிஷேகம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.* இதனை யாரும் தவற விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும்குரு பூஜை அன்று சுமார் 1000 பேருக்கு அன்னதானம் - வடை பாயாசத்துடன் வாழை இலையில் முழு சாப்பாடு அளிக்கப்படுகிறது. 

 அதற்கு திட்டம் தீட்டி செயலாக்கம் நடைபெற்றுக்கொண்டு உள்ளது.


ஒவ்வொரு குரு பூஜை தினத்தன்றும் அகத்தியர் பல வடிவங்களில் காட்சி கொடுத்துளார்கள், முதியவர் வடிவம், குழந்தை வடிவம், கருடன் வடிவம், மழை பொழிவு மூலம் அருள் பாலித்தல், வானவில் தோன்றி காட்சி அளித்தல், வாசனை வடிவம் மூலம் உணர செய்தல் என்று பல பல வகையான அருளாசிகள் கிடைக்கும், அய்யன் மேல் அபிஷேகம் செய்த பிரசாதங்கள், ஹோமத்தில் நாமே இடும் ஆகுதி, நம் கரங்களால் பால் அபிஷேகம், ஜீவ அருள் நாடி வாக்கு, அறுசுவை உணவு போன்றவைகளுடன் சேர்த்து பல சாதுக்கள்  அவர்களுக்கு ஆடை தானம், பண உதவி போன்றவைகளும் வழங்கப்படும். ஒரு முறை சாதுக்களின் ஒருவராக அருள்மிகு திருவண்ணாமலையில் வாழும் அடிமுடி சித்தர் அவர்கள் சாதுக்கோளோடு சாதுவாக முதியவர் வடிவம் எடுத்து வந்து என்னிடம் யாசகம் பெற்று சென்றார்கள் என்பது பின்னர் ஜீவ நாடி மூலம் அய்யனால் உரைக்கப்பட்டது.


எனவே இத்தகைய சிறப்பு வாய்ந்த அகத்தியர் குரு பூஜையில் அனைவரும் கலந்து கொண்டு பணிகள் செய்து அகத்தியர் அருளுக்கு பாத்திரமாகும்படி மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். இது ஒரு மக்கள் விழா, இதில் அனைவரும் சமம், யாரும் தலைமை தாங்க மாட்டார்கள், எந்த அரசியலும் இங்கே கிடையாது, இங்கே எந்த ஜாதி மதமும் பார்ப்பதில்லை, தூய சைவ நெறியில் ஊறி திளைத்த நமது குருஜி முக்கிய பொறுப்பாக இருந்து தமது சீடர்களுடன் சேர்ந்து நமது ஐயனுக்கு நாம் நடத்தும் விழாவாகும்.


விழா நாள் 23/12/2021 - வியாழக்கிழமை - நாள் முழுவதும் விழா நடக்கும் 

*இத்துடன் பத்திரிக்கை இணைக்கப்பட்டுள்ளது.*


அனைவரும் பங்கு கொள்ளுங்கள், முடிந்தவர்கள் நிதி அளியுங்கள், முடிந்தவர்கள் சில பணிகளை எடுத்து செய்யுங்கள், அருளாசி பெறுங்கள்



Saturday 27 November 2021

இது எந்த ஊர் என்று தெரியவில்லை....


 

திருக்கழுக்குன்றத்தில் மொத்தம் 16 புண்ணிய தீர்த்தங்கள்

 புகழ்பெற்ற திருக்கழுக்குன்றத்தில் மொத்தம் 16 புண்ணிய தீர்த்தங்கள் இருந்திருக்கின்றது. அவைகள் எங்கு எங்கு எந்த நிலையில் உள்ளது என பார்க்கலாம்.


1.சங்கு தீர்த்தம்.


உலகப்புகழ் பெற்ற சங்குதீர்த்த குளம் சுமார் 13 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வழக்கமாக கடல்  நீரில் பிறப்பதாக சொல்லப்படும் சங்கு இங்கு நன்னீரில் பிறப்பது சிறப்பு. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங் கு சங்கு பிறக்கும். அதனாலேயே இதனை சங்கு தீர்த்தம் என அழைக்கின்றனர்.கடந்த 01.09.2011  அன்று இத்திருக்குளத்தில் சங்கு பிறந்தது.ஒரு மண்டலம் -48 நாட்கள் குளித்து மலைவலம் வந்தால் சித்தபிரமை தீரும் என்பது உண்மை.நோய் தீர்க்கும் தீர்த்தம் என்பது சிறப்பாகும். கங்கா நதி.காவிரி நதி.சரஸ்வதி நதி.வைதாளி நதி.கோமகி நதி.பொன்முகி நதி.தெனகுமரி நதி.தேவிகை நதி.கம்பை நதி போன்ற அனைத்து நதிகளிடமும் சிவபெருமான கூறியதாவது:-

"காணினும் கைதொடினும் அள்ளித்தெளிப்பினும் உட்கொளினும்;-கணப்பொழுது முழ்கினும்-கால் வழுக்கி வீழினும் பாணிவிரி திரையின் ஒரு பனித்திவலை படினும் படரும் காற்றனுகினும் மெய்ப்பாதகம் குடிபோம் சேலைகு தொழுமிந்த தடந்தோறும் நீர் முகந்து செலும் அடியோர் அயமேகத்திற நகராம. விரதம் பூனுமவர் படிந்தியற்றில் அனந்தமெனப்பலிக்கும் புராரி என்றும் தீர்த்தம் என்றும் இரண்டில்லை இப்புரிக்கே" என கூறியுள்ளார்.

குரு பகவான் கன்னிராசிக்கு பிரவேசிக்கும் காலம் புஷ்கர மேளா நடைபெறும். அதுசமயம் இந்த குளத்தில்  நீராடுதல் சிறப்பாகும். அன்று மாலை நடைபெறும் லட்ச தீப பெருவிழா காண கண்கோடி வேண்டும். சமீபத்தில் 02.08.2016 அன்று இவ்விழா நடைபெற்றது.


2. ருத்ர தீர்த்தம்:-


இங்கு சங்கு தீர்த்த குளத்திற்கு தெற்கு பகுதியில் ருத்ராங்கோயில் அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவனை தேவகணங்கள்.முனிவர்கள்.வழிபட்ட திருக்கோயில் இது.ஏழு மங்கையரும்.முருகக்கடவுளும்.வசிஷ்டர் விசுவாமித்திரர் அகத்தியர் ஜனக முனிவர் அகலிகை முதலியோர் தவம் செய்து அவரவர் வேண்டுதல் நிறைவேற்றியதாக ஐதிகம். ருத்ரர்கள் இறைவனை வேண்டி இத்தலத்திற்கு ருத்ர தீர்த்தம் எனவும்.இத்தலம் ருத்ராங்கோயில் எனவும். இங்குள்ள சிவன் ருத்ர கோடீஸ்வரர் எனவும் வழங்க வேண்டி அதன்படியே இத்தலம் வழங்கப்படுகின்றது.


3.வசிஷ்ட தீர்த்தம்:-


இது ருத்திரான்கோயிலில் உள்ள  ஓசூரம்மன் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. இங்கு வசிஷ்டர் பல வேள்விகள் செய்து சிவனருள் பெற்றதால் இதற்கு வசிஷ்ட தீர்த்தம் என பெயர் உண்டாயிற்று. இங்குள்ள அம்மனை வெள்ளிக்கிழமம் விரதம் இருந்து வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். இக்குளத்தில் மூழ்கி சிவனை வசிஷ்டர் வேண்டியதாக வரலாறு உண்டு. அம்மன் அருளாளல் குழந்தை பாக்கியம் இல்லாவர்களுக்கு குழந்தை பெற்றதாக சொல்வதுண்டு.


4. அகத்திய தீர்த்தம்:-


இந்த குளம் கருங்குழி போகும் வழியில் வெள்ளாழ தெரு முனையில் அமைந்துள்ளது.இங்கு அகத்தியர் தவம் செய்ததால் இது அகஸ்தியர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது.சுந்தர மூர்த்தி நாயனார் கழுக்குன்ற ஈசனை பூஜிக்க வந்தபோது இக்குளத்தில நீராடி எழுந்த போது சிவ காட்சி பெற்று பொன்பெற்றார் அத்தகைய சிறப்பு வாய்ந்தது இந்த தீர்த்தம்.அதன் காரணமாக இன்றும் சித்திரை திருவிழா நடைபெறும் நான்காம் நாள் திருவிழா உற்சவத்தில் இறைவன் தெற்கு வாசல் வழியாக வந்து தீர்த்தத்தின் அருகில் மண்டபத்தில் வைத்து சுந்தரருக்கு பொற்றாளம் அளிக்கும் போது அன்புடன் இறைவன் இடம் உபதேசம் பெறுகிறார்.


5. மார்க்கண்டேய தீர்த்தம்:-


அகத்திய தீர்த்தத்திற்கு வடக்கு. தாழக்கோயிலுக்கு தென்மேற்கிலும் வயல்வெளிக்கு நடுவில் அமைந்துள்ளது. அருகிலேயே ஆலமரமும் அம்மன்கோயிலும் உள்ளது. மார்க்கண்டேய முனிவர் இறைவனை வணங்கி அருள்பெற்ற இடம் .எனவே இது மார்க்கண்டேய தீர்த்தம் என அழைக்கப்படுகின்றது.


6.ஞான தீர்த்தம்:-


இந்த தீர்த்தம் மார்க்கண்டேய தீர்த்தத்திற்கு வடக்கு புறத்தில் அமைந்துள்ளது. ஆனால் அங்கு சென்று பார்த்தால் குளத்தினை காணவில்லை..குளத்தின் அருகே மண்டபமும் வினாயகர் கோயிலும்.ஆலமரமும் உள்ளதாக சொன்னார்கள். தேடிக்கொண்டிருக்கின்றோம்.


7.கௌசிக தீர்த்தம்:-


இது மலைக்கு வட மேற்கில் அமைந்துள்ளது.கொளசிக முனிவர் இதில நீராடி சிவனை வழிபட்டதால் இவர் பெயரே இக்குளத்திற்கு அமைந்துள்ளது. பேச்சு வழக்கில் ஆண்டரசன் குளம் -ஆண்டர்சன்குளம் என்றும் அழைக்கப்படுகின்றது. இது வன்னிய தெரு முடிவில் உள்ளது.


8.அகலிகை தீர்த்தம்:-


அகலிகை வேதமலை ஈசனை வணங்கிடவும் அவள் பாவ விமோசனம் பெற்று நலம் அடைந்திடவும் தேவர்களும் முனிவர்களும் தொழுதிடும் கழுக்குன்ற ஈசனிடம் வந்தபோது இந்த குளத்தில் நீராடி சிவனை வழிபட்டதால் இது அகலிகை தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. தற்காலத்தில இது வெள்ளை குளம் என்று அழைக்கப்படுகின்றது.


9.வருண தீர்த்தம்:-


மலை வலம் வரும் சமயம் நவகிரக கோயிலுக்கு பின்புறம் இந்த தீர்த்தம் உள்ளது. வருண பகவான் இக்குளத்தில் நீராடி பின்னர் இறைவனை வழிபட்டதால் வருண தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. இதன் அருகிலேயே கோடி வினாயர் ஆலயம் உள்ளதால் கோடிவினாயர் தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றது.


10. சுந்தர  தீர்ததம்:-


நால்வர்கோயில் பேட்டை -தேவஸ்தானத்திற்கு சொந்தமான பயணிகள் விடுதி அருகில் உள்ளது. சுந்தரர்  இங்குள்ள குளத்தில் நீராடி இறைவனை வேண்டியதால் இது சுந்தர தீர்த்தம்  என்று அழைக்கப்படுகின்றது.


11.இந்திர தீர்ததம்:-


இது நால்வர் கோயில் பேட்டையில் நால்வர் கோயில அருகில் உள்ளது. அப்பர் சுவாமிகள் இக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டதாக பதிகம் உள்ளது. இறைவனடிகளார்கள் இறைவனை வழிபட இக்குளத்தில் ;தினம் நீராடி இறைவனடி சேர்ந்ததால் இது இந்திர தீர்த்தம் என அழைக்கப்படுகின்றது.


12. சம்பு தீர்த்தம்:-


இந்த தீரத்தம் மாமல்லபுரம் சாலையில் கொத்திமங்கலத்தில் அமைந்துள்ளது. இதன் கரையில ஆலமரமும்.முனிஸ்வரர் ஆலயம் உள்ளது. சம்பாதி மற்றும் சடாயு போன்ற பல முனிவர்கள் இக்குளத்தில் மூழ்கி சிவனை வழிபட்டு முக்தி அடைந்தார்கள். அதனாலேயே இது சம்பு தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது.


13. லட்சுமி தீர்த்தம்:-


ஒரு முறை சிவனை காண திருமால் கயிலாயம் சென்றபோது வேதமலை(திருக்கழுக்குன்றம்) வந்து என் திருக்காட்சியை காண்பாயாக என அழைத்தார் அதன்படியே திருமால் இங்கு வந்து லட்சுமி சமேதராக இக்குளத்தில நீராடி இறைவனை வழிபட்டார்.அப்போது திருமாலிடம் லட்சுமி தேவி இக்குளத்திற்கு என்ன பெயர் என வினவினார். சகல சம்பத்துக்களும் தரும் நீயே இங்கு நீராடியதால் இது லட்சுமி தீர்த்தம் என வழக்கட்டும் என்றும் இக்குளத்தில் நீராடி இறைவனை வழிபடுபவர்கள் வாழ்வில லட்சுமி கடாச்சம் கிட்டும் என வரம் வழங்கினார். அதன்படியே இக்குளம் லட்சுமி தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது.


14.நந்தி தீர்த்தம்:-


இறைவனை நந்தி இந்த குளத்தில் நீராடி வழிபட்டு இறையடி சேர்ந்ததால் இது நந்தி தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. இது தாழகோயில் உள்புறம்அமைந்துள்ளது. 


15.பட்சி தீர்த்தம்:-


வேதமலை மீது பட்சி உணவருந்தும் பாறைக்கு அருகில் இந்த தீர்த்தம் உள்ளது. இரண்டு பாறைகளுக்கு இடையே இந்த தீர்த்தம் உள்ளது. கடுமையான  வறட்சியிலும் இக்குளத்தில் உள்ள நீர்வற்றியது இல்லை. கடும் பிணிஉள்ள நாய் குளத்தில் விழுந்து பிணி நீங்கி சென்றதாக வரலாறு உண்டு. பட்சிகள் நீராடுவதால் இது பட்சி தீர்த்தம் என அழைக்கப்படுகின்றது.


















Friday 19 November 2021

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் சித்தர் வணங்கி சென்ற காட்சி

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் சித்தர் வணங்கி சென்ற காட்சி



Monday 15 November 2021

சனீஸ்வரர் மந்திரங்கள்! கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகங்களைக் கூறுவதன் மூலம் சனிபகவானின் பரிபூரண அருளைப் பெறலாம்

 சனீஸ்வரர் மந்திரங்கள்!

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகங்களைக் கூறுவதன் மூலம் சனிபகவானின் பரிபூரண அருளைப் பெறலாம்.

சனீஸ்வர காயத்ரி

ஓம் சனைச்சராய வித்மஹே

சாயாபுத்ராய தீமஹி

தந்நோ: மந்தப்ரசோதயாத்

ஓம் காக த்வஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தந்நோ மந்த: ப்ரசோதயாத்

ஸ்லோகம்

நீலாம்பரோ, நீலவபு: கிரீடி

க்ருத்ரஸ்தித: சத்ராஸக ரோ தநுஷ்மான்

சதுர்புஜ: ஸுர்யஸு: ப்ரசாந்த:

ஸதாஸ்து மஹ்யம் வரத: ப்ரஸன்ன:

பொருள் : மிகவும் சாந்தமானவரும், வரத்தை அளிப்பவருமான சனி பகவானைத் தியானம் செய்தால் ஆயுள் விருத்தி, விவசாயத்தில் மேன்மை, எருமை விருத்தி, இரும்புத் தொழில்கள், செங்கல் காளாவாயினால் லாபம் ஏற்பட, உத்தியோகம் செய்யும் இடத்தில் மனநிம்மதி ஏற்பட வேலைக்காரர்களால் நன்மை பெற, எலும்பு, பற்கள், கணை சம்பந்தமான நோய்கள் வராமல் இருக்க, சளி, நெஞ்சுக் கட்டு, வாத நோய்கள் தடுக்க, சட்டபூர்வமான தண்டனை, சிறைவாசம், கட்டுப்படுதல், சில சமயங்களில் விபத்துக்கள், மனோதைரியம் இழந்து தடுமாறுதல், சித்தப்பிரமை, மேகநீர் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க போன்றவை நெருங்காமல் தடைபடும்.

சனி ஸ்தோத்திரம்

ஸூர்யபுத்ரோ தீர்க்கதேஹோ விசாலாக்ஷ: ஸிவப்ரிய:

தீர்க்கசார: ப்ரஸந்நாத்மா பீடாம்ஹரதுமே ஸனி:

சூர்யபுத்திரனும், நீண்டதேஹமுள்ளவனும், சிவப்ரியனும் தெளிந்த மனம் உள்ளவனுமான சனீஸ்வரபகவான் என்னுடைய தோஷத்தை போக்க வேண்டும்.

சனி வழிபாடு

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம யமாக்ரஜம்

சாயா மார் தாண்டஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்

சனீஸ்வர ஸ்தோத்ரம்

ஸன்னோதேவீசரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே

ஸம்யோ ரபிஸ்ர வந்துந:

அதிதேவதா மந்த்ரம்:

இமம்யமப்ரஸ்தரமாஹி ஸீதாங்கிரோபி: பித்ருபி: ஸம்விதான:

ஆத்வா மந்த்ரா கவிஸஸ்தா வஹன்த்வே நா ராஜன்ஹ விஷாமாதயஸ்வ:

ப்ரத்யதி தேவதா மந்த்ரம்:

ப்ரஜாபதே நத்வதேதான்யன்யோ விஸ்வா ஜாதானி பரிதாபபூவ

யத்காமாஸ்தே ஜுஹுமஸ் தன்னோ அஸ்து வயங்ஸ்யாம-பதயோ ரயீணாம்

அதிதேவதா ப்ரத்யதி தேவதா ஸமேத பகவதே சனைஸ்ச்சராய நம:

சந்தோஷம் தரும் சனைச்சர ஸ்தோத்ரம்

கோணேந்தகோ ரௌத்ரயமோத பப்ரு:

க்ருஷ்ண: ஸநி: பிங்களமந்தஸெளரி:

நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்

தஸ்மை நம: ஸ்ரீரவிநந்தனாய

பொருள்: கோணன்-முடிவைச் செய்பவன்; ரௌத்ரன், இந்திரியங்களை -அடக்குபவன். மேலும் பப்ரு, கிருஷ்ணன், சனி, பிங்களன், மந்தன், சூரிய புத்திரன் ஆகிய பெயர்களைக் கொண்ட சனைச்சரன் தினமும் நம்மால் தியானிக்கப்படுபவனாகி, சகல பீடைகளையும் போக்குகிறான். அத்தகைய சூரிய புத்திரனான சனைச்சரனுக்கு நமஸ்காரம்.

தசரதர் கண்டு சொன்ன சனைச்சர ஸ்தோத்ரத்தின் ஒரு ஸ்லோகம் இது. தினமும் பயபக்தியுடன் இந்த ஸ்லோகத்தைப் படித்து, சனி பகவானை தியானித்து வழிபட, நற்பலன்கள் கைகூடும்.

சனி கோசார ரீதியால் பன்னிரண்டு, எட்டு முதலிய ஸ்தானங்களில் இருப்பதாலும், ஜாதகத்தில் தோஷத்துடன் கூடியிருப்பதாலும், சனி தசாபுக்திகளிலும் ஏற்படும் கஷ்டங்கள் விலகுவதுடன், சர்வ சம்பத்துகளும் உண்டாகும்.

சனீஸ்வர தியான ஸ்லோகம் (வேறு வகை)

1. நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்

சாயா மார்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்

2. சதுர்புஜம் சனிம் தேவம் சாப தூணீக்ரு பாணகை

சஹிதம் வரதம் பீமதம்ஷ்ட்ரம் நீலோத் பலாக்ருதிம்

3. நீல மால்யானுலேபம் ச நீலரத்னைரலங் கிருதம்

ஜ்வாலோர்தவ முகுடாபாசம் நீலக்ருத்ர ரதாந்விதம்

4. மேரும் ப்ரதக்ஷிணம் யாந்தம் சர்வ லோக பயாவம்கம்

க்ருஷ்ணாம்பரதரம் தேவம் த்விபுஜம் க்ருத்ர சம்ஸ்திதம்

சர்வ பீடாஹரம் ந்ரூணாம் த்யாயேத் க்ரஹ கணோத்தமம்

5. சாபாசனோ க்ருத்ர ரதோதி நீல: ப்ரத்யங்முக: காச்யப கோத்ர ஜாத:

ஸசூலசா பேஷுகதாத ரோவ்யாத் சௌராஷ்ட்ர தேச ப்ரபவச்ச ஸெளரி

6. ஸனைச்சராய ஸாந்தாய சர்வாபீஷ்ட பிரதாயினே

நம: சர்வாத்மனே துப்யம் நமோ நீலாம்பராயச

7. த்வாதசாஷ்ட மஜன் மர்ஷே த்வீதிய ஸ்தான் ஏவச

த்வத் சஞ்சா ரோத்பவா தோஷா: ஸர்வே நச்யந்துமே ப்ரபோ

முனிவர்கள் தேவர் ஏனைய மூர்த்திகள் முதலானோர்கள்

மனிதர்கள் சகல வாழ்வு உன் மகிமை அல்லால் வேறுண்டோ?

கனிவுள தெய்வம் நீயே: கதிர் சேயே! காகம் ஏறும்

சனியனே! உனைத் துதித்தேன்; தமியனேற்கு அருள் செய்வாயே!

சனிபகவான் ஸ்தோத்திரம்

காப்பு - வெண்பா

தேவரெண்டிசைக்கதிபர் சித்தரொடு கிம்புருடர்

மூவர் முனிவர் முதலோரை - மேவியுறுந்

தாரணிந்த மார்பன் சனிபகவான் கதை புகலக்

காரணிந்த யானைமுகன்-காப்பு

1. ஆதிவே தாந்த முதலறிய ஞான

மைந்தெழுத்தினுட் பொருளையயன் மாலோடு

சோதி சிற்றம்பலத்தி லாடிகின்ற

சுடரொளியை நீ பிடித்த தோஷத்தாலே

பாதிமதி சடைக்கணிய வரவம்பூணப்

பதியிழக்கச் சுடலைதனிற் பாடியாடச்

சாதியில்லா வேடனெச் சிற்றின்ன வைத்த

சனியனே காகமேறுந் தம்பிரானே

2. வேலவனை வேங்கை மரமாக்கி வைத்தாய்

விறகுகட்டிச் சொக்கர் தமை விற்க வைத்தாய்

மாலினியை யுரலொடு கட்டுவித்தாய்

வள்ளிதனைக்குறவரது வனத்தில் வைத்தாய்

காலனை மார்க்கண்டனுக்காவரனுதைத்த

காரணமும் நீபிடித்த கருமத்தாலே

சாலவுனையான் றொழுதே னெனைத்தொடதே

சனியனே காகமேறுந் தம்பிரானே

3. மஞ்சுத வழயோத்தியில் வாழ்தசரதன் தன்

மக்களையும் வனவாசமாக்கி வைத்தாய்

பஞ்சவர்கள் சூதினால் பதியிழந்து

பஞ்சுபடும் பாடவர் படச்செய்வித்தாய்

எஞ்சலிலா வரிச்சந்திரன் பெண்டைவிற்றே

யிழிகுலத்திலடி மையுற விசையவைத்தாய்

தஞ்சமெனவுனைப் பணிந்தேனெனைத் தொடாதே

சனியனே காகமேறுந் தம்பிரானே

4. அண்டமாயிரத்தெட்டு மரசுசெய்த

வடல்சூரபத்மனையு மடக்கிவைத்தாய்

மண்டலத்தையாண்ட நளச்சக்கரவர்த்தி

மனைவியோடு வனமதனி லலையச்செய்தாய்

விண்டலத்தை பானுகோபன்றன்னாலே

வெந்தணலாய்ச் சூரரை வெருவச்செய்தாய்

தெண்டனிட்டே னெந்நாளு மெனைத்தொடாதே

சனியனே காகமேறுந் தம்பிரானே

5. அண்டர்கோன்மேனியிற் கண்ணாக்கி வைத்தாய்

அயன்சிரத்தை வயிரவனாலறுக்க வைத்தாய்

திண்டிறல்கொள் கௌதமனால கலிகைதான்

சிலையாகவேசாப முறவேசெய்தாய்

கண்டரள நகையிரதி மாரன் றன்றைச்

சங்கரனார் நுதல்விழியிற் றணல்செய்வித்தாய்

சண்டமிலா துனைத் தொழுதேனெனைத் தொடாதே

சனியனே காகமேறுந் தம்பிரானே

6. பாருலவுபரிதியைப் பல்லுதிரவைத்தாய்

பஞ்சவருக்குத்தூது பீதாம்பரனை வைத்தாய்

தாருலவுவாலி சுக்ரீவன் தம்மைத்

தாரையினாற்றீராத சமர்செய்வித்தாய்

சூரனெ னுமிலங்கை ராவணன்றங்கை

சூர்ப்பனகி மூக்குமுலை துணிசெய்வித்தாய்

தாரணியு மணிமார்பா வெனைத்தொடாதே

சனியனே காகமேறுந் தம்பிரானே

7. சுக்ரன்றன் கண்ணிழந்தான் இலங்கையாண்டு

துலங்குமி ராவணன் சிரங்கண்டிக்க வீழ்ந்தான்

மிக்கபுகழிரணியன்றன் வீறழிந்தான்

விளங்குதிரிபுராதிகளும் வெந்துமாண்டார்

சக்கரத்தாலுடலறுத்தான் சலந்திரன்றான்

தாருகாசுரனுமே சமரில் மாண்டான்

தக்கன் மிகச் சிரமிழந்தா னின்றோஷத்தாற்

சனியனே காகமேறுந் தம்பிரானே

8. அந்தமுள ஐங்கரன் கொம்பரவே செய்தாய்

அறுமுனிவர் மனைவிகள் கற்பழியச் செய்தாய்

சந்திரன் தன் கலையழிந்து தழைக்கச் செய்தாய்

சங்கரனைப் பிச்சை தானெடுக்கச் செய்தாய்

தந்திமுகச் சூரனுயிர் தளரச்செய்தாய்

சாரங்கதரன் கரத்தைத் தறிக்கச் செய்தாய்

சந்ததமுமுனைப் பணிவேனெனைத் தொடாதே

சனியனே காகமேறுந் தம்பிரானே

9. சீதைதனையிரா வணனாற் சிறைசெய்வித்தாய்

தேவர்களைச்சூரனாற் சிறைசெய்வித்தாய்

மாதுதுரோபதை துயிலை வாங்குவித்தாய்

மகேச்சுரனையுமைபிரியும் வகைசெய்வித்தாய்

போதிலயன் றாளிற்றளை பூட்டுவித்தாய்

பொதிகையினிலகத்தியனைப் பொருந்தச் செய்தாய்

தாதுசேர்மலர்மார்பா வெனைத் தொடாதே

சனியனே காகமேறுந் தம்பிரானே

10. அப்பர் தமைக்கருங்கல்லோ டலையிற்சேர்த்தாய்

அரனடியில் முயல்களை யடங்கச்செய்தாய்

செப்புமாணிக்கர் தமைச் சிறையிலிட்டாய்

ஸ்ரீராமனைமச்சவுரு வெடுக்கச் செய்தாய்

ஓப்பிலனுமான் வாலிலொளி தீயிட்டாய்

ஒலிகடலினஞ்சையர னுண்ணவைத்தாய்

தப்பிலா துனைத்தொழுதேனெனைத் தொடாதே

சனியனே காகமேறுந் தம்பிரானே

11. நீரினையுண்டேழுமேக வண்ணா போற்றி

நெடுந்தபத்திலறு கமலக்கண்ணா போற்றி

சூரியன் தவத்தில் வந்த பாலா போற்றி

துலங்கு நவக்கிரகத்துண் மேலா போற்றி

காரியன் பெயர்களுப காரா போற்றி

காசினியிற் கீர்த்திபெற்ற தீரா போற்றி

மூரிகொளு நோய்மகவாமுடவா போற்றி

மூதுமகனின் முண்டகத்தாள் போற்றி போற்றி

சனீஸ்வர கவசம்

நெருங்கிடு பிணி யெலாம்

நீக்கு நோன்மையும்

ஒருங்கு மொய்ம்பு இரண்டும்

ஆங்குறும் கருந்துகில்

மருங்குலும் கழுகிவர்

வனப்பும் கொண்டு அமர்

அருங்கதிர் மதலை தாள்

அன்போடு ஏத்துவாம்!

(வேறு)

மறுவறும் எனது சென்னி

வளர்புகழ்ச் சனி புரக்க

பெறுமுகம் அன்பர் அன்பன்

பேணுக செவி கறுக்கும்

அறுவை நன்கு அணிவோன் காக்க

அச்சமே விளைக்கு மெய்யோன்

நறுமலர் விழி புரக்க

நாசி கை காரி காக்க.

கருங்களம் உடைய தேவன்

கவின்படு கண்டம் காக்க

பெருங்கடின் படுபு யத்தோன்

பெருவரைப் புயம் புரக்க

வருங்கை நீலோற் பலம்போல்

வளர்ஒளி அண்ணல் காக்க

ஒருங்குறும் எனது நெஞ்சம்

உடல் கரியவன் புரக்க.

சுந்தரம் தழுவும் உந்தி

சுட்கமாம் வயிற்றோன் காக்க

சந்தமார் விகடன் செய்வோன்

தடம்படு கடி புரக்க

நந்திய கோர ரூபன்

நற்றொடை புரக்க நாளும்

முந்துறு நெடிய ரூபன்

மொழிதரு முழுந்தாள் காக்க.

மங்கலம் ஈயும் ஈசன்

வனப்புறு கணைக்கால் காக்க

தங்குறு பரடு இரண்டும்

தகு குணாகரன் புரக்க

பங்கெனப் படுவோன் பாதம்

பழுதறப் புரக்க பார்மேல்

செங்கதிர் அளிக்கு மைந்தன்

திருந்திமென் அங்கங் காக்க.

நன்றிதரு சனிகவச நாள்தோறும்

அன்பினொடு நவின்று போற்றில்

வெற்றிதரும் விறல்உதவும் புகழ் அளிக்கும்

பெருவாழ்வு மேவ நல்கும்

கன்றுபவத் துயர்ஒழிக்கும் வினை ஒழிக்கும்

பிணி ஒழிக்கும் கவலை போக்கும்

அன்றியும் உள் நினைந்தவெலாம் அங்கை நெல்லி

யம்கனியாம் அவனி யோர்க்கே.

அருஞ்சுவணம் முதலவற்றின் அமைக்கும்

இயந்திரம் எள்ளுள் அமரவைத்து

வருஞ்சுகந்த மலராதிக்கு அரியவற்றால்

பூசித்து மனுப்பு கன்று

பெருஞ்சுகம் கொண்டிட விழைவோன்

கருந்துகிலோடு அந்தணர்க்குப் பெட்பின்ஈயில்

கருஞ்சனி உள் மகிழ்ந்துறு நோய்

களைந்துநல முழுதும்உளங் கனிந்தே நல்கும்.

ஆங்கதனோடு அரும்பொருளும் மற்றவனுக்கு

அளிப்பன் எனில் அவனுக்கு என்றும்

தீங்குஅகல மேன்மேலும் பெருகி எழு

வாழ்நாளும் செல்வப் பேறும்

ஓங்குமனை மக்கள்முதல் பற்பலசுற்

றப்பொலிவும் உதவும் காண்பீர்

வாங்குகடன் முளைத்திருள்நீத் தெழும்

கதிரேசன் அன்று உதவ வந்த மைந்தன்!

சனீஸ்வரன் அஷ்டோத்திரம்

ஓம் சநைச்சராய நம

ஓம் சாந்தாய நம

ஓம் ஸர்வாபீஷ்ட ப்ரதாயிநே நம

ஓம் சரண்யாய நம

ஓம் வரேண்யாய நம

ஓம் ஸர்வேசாய நம

ஓம் ஸெளம்யாய நம

ஓம் ஸுரவந்த்யாய நம

ஓம் ஸுரலோக விஹாரிணே நம

ஓம் ஸுகாஸ நோப விஷ்டாய நம

ஓம் ஸுந்தராய நம

ஓம் கநாய நம

ஓம் கநரூபாய நம

ஓம் கநாபரண தாரிணே நம

ஓம் கநஸார விலேபாய நம

ஓம் கத்யோதாய நம

ஓம் மந்தாய நம

ஓம் மந்த சேஷ்டாய நம

ஓம் மஹ நீய குணாத்மநே நம

ஓம் மர்த்ய பாவந பாதாய நம

ஓம் மஹேசாய நம

ஓம் சாயா புத்ராய நம

ஓம் சர்வாய நம

ஓம் சத தூணிர தாரிணே நம

ஓம் சரஸ்த்திர ஸ்வபாவாய நம

ஓம் அசஞ்சலாய நம

ஓம் நீலவர்ணாய நம

ஓம் நித்யாய நம

ஓம் நீலாஞ்ஜந நிபாய நம

ஓம் நீலாம்பர விபூஷாய நம

ஓம் நிச்சலாய நம

ஓம் வேத்யாய நம

ஓம் விதிரூபாய நம

ஓம் விரோதா தார பூமயே நம

ஓம் பேதாஸ்பத ஸ்வபாவாய நம

ஓம் வஜ்ர தேஹாய நம

ஓம் வைராக்யதாய நம

ஓம் வீராய நம

ஓம் வீத ரோக பயாய நம

ஓம் விபத்பரம் பரேசாய நம

ஓம் விச்வவந்த்யாய நம

ஓம் க்ருத்ர வாஹாய நம

ஓம் கூடாய நம

ஓம் கூர் மாங்காய நம

ஓம் குரூபிணே நம

ஓம் குத்ஸிதாய நம

ஓம் குணாட்யாய நம

ஓம் கோசராய நம

ஓம் அவித்யர் மூல நாசாய நம

ஓம் வித்யாவித்யாஸ் வரூபிணே நம

ஓம் ஆவுஷ்ய காரணாய நம

ஓம் ஆபதுத்தர்த்ரே நம

ஓம் விஷ்ணுபக்தாய நம

ஓம் வசிநே நம

ஓம் விவிதாகம வேதிநே நம

ஓம் விதிஸ்துத்யாய நம

ஓம் வந்த்யாய நம

ஓம் விரூபாக்ஷõய நம

ஓம் வரிஷ்ட்டாய நம

ஓம் க்ரிஷ்டாய நம

ஓம் வஜ்ராங்குசதராய நம

ஓம் வரதாபயஹஸ்தாய நம

ஓம் வாமநாய நம

ஓம் ஜ்யேஷ்டா பத்நீ ஸமேதாய நம

ஓம் ச்ரேஷ்டாய நம

ஓம் மிதபாஷிணே நம

ஓம் கஷ்டௌகநாசகர்த்ரே நம

ஓம் புஸ்டிதாய நம

ஓம் ஸ்துத்யாய நம

ஓம் ஸ்தோத்ரகம்யாய நம

ஓம் பக்தி வச்யாய நம

ஓம் பாநவே நம

ஓம் பாநு புத்ராய நம

ஓம் பவ்யாய நம

ஓம் பாவநாய நம

ஓம் தநுர்மண்டல ஸம்ஸ்த்தாய நம

ஓம் தநதாய நம

ஓம் தநுஷ்மதே நம

ஓம் தநுப்ரகாச தேஹாய நம

ஓம் தாமஸாய நம

ஓம் அசேஷ ஜநவந்த்யாய நம

ஓம் விசஷபலதாயிநே நம

ஓம் வசீக்ருத ஜநேசாய நம

ஒம் பசூ நாம் பதயே நம

ஓம் கேசராய நம

ஓம் ககேசாய நம

ஓம் கநநீலாம்பராய நம

ஓம் காடிந்ய மாநஸாய நம

ஓம் ஆர்ய கணஸ்துத்யாய நம

ஓம் நீலச்சத்ராய நம

ஓம் நித்யாய நம

ஓம் நிர்குணாய நம

ஓம் குணாத் மநே நம

ஓம் நிராமயாய நம

ஓம் நந்த்யாய நம

ஓம் வந்தநீயாய நம

ஓம் தீராய நம

ஓம் திவ்யதேஹாய நம

ஓம் தீ நார்ததி ஹரணாய நம

ஓம் தைந்ய நாசகராய நம

ஓம் ஆர்யஜ நகண்யாய நம

ஓம் க்ரூராய நம

ஓம் க்ரூர சேஷ்டாய நம

ஓம் காமக்ரோதகராய நம

ஓம் களத்ர புத்ர சத்ருத்வ காரணாய நம

ஓம் பரிபோஷித பக்தாய நம

ஓம் பரபீதி ஹராய நம

ஓம் பக்தஸங்கமநோபீஷ்ட பலதாய நம

நாநாவித பரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி.

சனீஸ்வர அஷ்டகம்

எட்டு சுலோகங்களான இந்த அஷ்டகம் தசரத சக்கரவர்த்தியினால் திரேதாயுகத்தில் இயற்றப்பட்டதாகும். இந்த ஸ்தோத்திரத்தில் சனீஸ்வர பகவானின் அருமை பெருமைகள் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன. சனிக்கிழமை தோறும் இந்த ஸ்தோத்திரத்தை ஜபிப்போர்க்கு சனிபகவானால் வரும் துன்பம் விலகும். உளுந்து, எள், எண்ணெய், வெல்லம் இவற்றைத் தானம் செய்வது சனிபகவானுக்குப் ப்ரீதியானதாகும். இந்த சுலோகத்தை சனிக்கிழமைகளில், அரச மரத்தடியில் அமர்ந்து படிப்பது மிகவும் விசேஷமாகும்!

கோணாந்தகோ ரௌத்ரயமோ அத பப்ரு:

க்ருஷ்ண: சநி: பிங்கள ஏவ மந்த:

நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்

தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய

ஸுராஸுரா: கிம்புருஷா கணேந்த்ரா:

கந்தர்வ வித்யாதர கிந்நராச்ச

பஜந்தி பீடாம் விஷம ஸ்திதேந

தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய

தைலாயஸைர் மாஷ குட ப்ரதாநை:

ஸ்நாநைர் பலா லோத்ரபலைர் யவாத்யை:

ப்ரீணாதி ஸர்வாந் நிஜவாஸரே ய:

தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய

ஸ்ரஷ்டா ஸ்வயம்பூர் புவநத்ரயஸ்ய

த்ராதா ஹரி: ஸம்ஹரண: பிநாகீ

ஏகஸ் த்ரிதா ருக்யஜு: ஸாமமூர்த்தி:

தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய

நரா நரேந்த்ரா: பசவோ ம்ருகேந்த்ரா:

த்வந்யே ச யே கீடபதங்க ப்ருங்கா:

பீட்யந்தி வேதாஷ்ட ம்ருகஸ்திதேந

தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய

தேசாச்ச துர்காணி வநாநி யத்ர

க்ராமா நிவேசா: புரபட்டநாநி

பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதேந

தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய

ப்ரயாக கூலே யமுநாதடே ச

ஸரஸ்வதீ புண்யஜலே குஹாயாம்

யோ யோகிபி: த்யேயதமோ அதி ஸூக்ஷ்ம:

தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய

மாஷைஸ் திலை: கம்பள தேநுதாநை:

லோஹேந நீலாம்பர தாநதோ வா

ந பீடயேத் யோ நிஜவாஸரேண

தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய

அந்யப்ரதேசாத் ஸ்வக்ருஹம் ப்ரவிஷ்ட:

த்வதீய வாரேஷு ஸுகீ நர: ஸ்யாத்

க்ருஹாத் கதோ யோ ந யத: ப்ரயாதி

தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய

சந்யஷ்டகம் ய: படதி ப்ரபாதே

நித்யம் ஸுபுத்ரை: பசுபாந்தவைச்ச

கரோதி ராஜ்யம் புவி போக ஸெளக்யம்

ப்ராப்நோதி நிர்வாண பதம் ததாந்தே

கோணஸ்த பிங்களோ பப்ரு:

க்ருஷ்ணோ ரௌத்ரோ அந்தகோ யம:

ஸெளரிச் சநைஸ்சரோ மந்த:

பிப்பலாதேந ஸம்ஸ்துத:

ஏதாநி சநி நாமாநி ப்ராதருத்தாய ய: படேத்

சநைசசரருக்ருதா: பீடா: ந பவந்தி கதாசந

இந்த சுலோகத்தில், சனிபகவானின் பதினோரு நாமங்கள் கூறப்படுகின்றன. இந்த சுலோகத்தை, அதிகாலையில் படிப்பது மிகவும் விசேஷமாகும்.

சனீஸ்வர கவசம்

போர் வீரர்கள், பகைவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அணிவது கவசம். அதேபோல், நாம் நோய் நொடிகளால் வரும் துன்பத்திலிருந்து நமது உடலையும் உள்ளத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக உகந்த கவசமாக அணிந்து கொள்வது தெய்வத்தின் திருநாமங்களாகும். புண்ணிய புராண புருஷர்கள் நமது சுபிஷத்திற்காக தெய்வத்தின் திருநாமங்களைக் கவசமாகக் கொண்டு, இடையறாது ஓதும் வண்ணம் அருளியுள்ளார்கள். சனிபகவான் மீது இயற்றப்பட்டுள்ள சனீஸ்வர கவசம், பிரம்ம தேவனால் அருளப்பட்டதாகும். சனீஸ்வர கவசத்தில், உடம்பினை பதினேழு வகையாகப் பிரிக்கப்பட்டு, சனிபகவானுடைய பதினேழு திருநாமங்களால் ஜபிக்கப்படுகின்றன. இக்கவசத்தை அனுதினமும் படித்து, சனிபகவானின் பேரருளால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஓம் அஸ்ய சநைச்சர கவச மந்த்ரஸ்ய, கச்யப ருஷி: அநுஷ்டுப் சந்த: ரவிபுத்ரோ மந்தகதிர் தேவதா. சம்பீஜம், நம் சக்தி: மம் கீலகம், சநைச்சர ப்ரீத்யர்த்தே கவசஜபே விநியோக:

சநைச்சராய நம: - அங்குஷ்டாயாம் நம:

மந்தகதயே: - தர்ஜநீப்யாம் நம:

அதோக்ஷஜாய நம: - மத்யமாப் நாம் நம:

ஸெளரயே நம: அநாமிகாப்யாம் நம:

சுஷ்கோதராய நம: கநிஷ்டிகாப்யாம் நம:

ச்சாயாத்மஜாய நம: கரதலகரப்ருஷ்டாப்யாம் நம:

க்ருஷ்ணாம்பரதரம் தேவம் த்விபுஜம் க்ருத்ரஸம்ஸ் திதம்

ஸர்வபீடாஹரம் ந்ரூணாம் த்யாயேத் க்ரஹகணோத்தமம்

ச்ருணுத்வம் முநயஸ் ஸர்வே ச்நிபீடாஹரம் சுபம்

கவசம் க்ரஹராஜஸ்ய ஸெளரே ரித மநுத்தமம்

கவசம் தேவதாவாஸ: கவசம் வஜ்ரபஞ்ஜரம்

ஸர்வபீடாஹரம் ஸ்ரீமத் ஸர்வ ஸெளபாக்யதாயகம்

சிர: சநைச்சர: பாது பாலம் வை ஸூயநந்தந:

நேத்ரே ச்சாயாஸுத: பாது ச்ரோத்ரே பாது யமஸ் ததா

நாஸாம் வைவஸ்வத: பாது முகம் மே பாஸ்கரிஸ் ததா

சுஷ்ககண்டஸ்து மே கண்டம் பாஹூ பப்ருஸ் ததைவச

ஹ்ருதயம் பிங்கள: பாது கோணஸ்த: பார்சவயோர் யுகம்

நாபிம் நீலாஞ்ஜந: பாது கடிம் ரௌத்ரஸ் ததைவ ச

ஊரூ மமாந்தக: பாது யமோ ஜாநுயுகம் ததா

பாதௌ மந்தகதி: பாது ஸர்வாங்கம் பாது பிப்பல:

அங்கப்ரத்யங்ககம் ஸர்வம் ர÷க்ஷத் ஸூர்யஸுதஸ்ததா

ய ஏதத் கவசம் நித்யம் படேத் ஸூர்யஸுதஸ்ய வை

ந தஸ்ய ஜாயதேபீடா சநைச்சரக்ருதா ஸதா

ஜந்மஸ்தாந கதோவாபி ம்ருத்யுஸ்தாந கதோபி வா

ரந்த்ரஸ்தாந கதோ வாபி சநிபீடா ந தஸ்யவை

இத்யேதத் கவசம் ஸெளரே: திவ்யம் ப்ரஹ்மவிநிர்மிதம்

சனி பகவான் போற்றி

ஓம் அருளுங்கால் இனியனே போற்றி

ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி

ஓம் அலிக்கிரகமே போற்றி

ஓம் அடர்த்தியிலா கிரகமே போற்றி

ஓம் அனுஷத்ததிபதியே போற்றி

ஓம் அன்னதானப் பிரியனே போற்றி

ஓம் அசுப கிரகமே போற்றி

ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி

ஓம் ஆயுட்காரகனே போற்றி

ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி

ஓம் ஆணவமழிப்பவனே போற்றி

ஓம் இருவாகனனே போற்றி

ஓம் இளைத்த தேகனே போற்றி

ஓம் இரும்புத் தேரனே போற்றி

ஓம் இரும்பு உலோகனே போற்றி

ஓம் ஈடிலானே போற்றி

ஓம் ஈசுவரனானவனே போற்றி

ஓம் உக்கிரனே போற்றி

ஓம் உத்திரட்டாதி நாதனே போற்றி

ஓம் உபகிரகமுளானே போற்றி

ஓம் எமன் அதிதேவதையனே போற்றி

ஓம் எள் விரும்பியே போற்றி

ஓம் எவர்க்கும் அஞ்சானே போற்றி

ஓம் எண்பரித் தேரனே போற்றி

ஓம் ஏழாம் கிரகனே போற்றி

ஓம் கரு மெய்யனே போற்றி

ஓம் கலி புருஷனே போற்றி

ஓம் கழுகு வாகனனே போற்றி

ஓம் கருங்குவளை மலரனே போற்றி

ஓம் கரிய ஆடையனே போற்றி

ஓம் கருஞ்சந்தனப் பிரியனே போற்றி

ஓம் கருங்கொடியனே போற்றி

ஓம் கருநிறக் குடையனே போற்றி

ஓம் கண்ணொன்றிலானே போற்றி

ஓம் காகமேறியவனே போற்றி

ஓம் காசியில் பூசித்தவனே போற்றி

ஓம் காரியே போற்றி

ஓம் காற்றுக் கிரகமே போற்றி

ஓம் குளிர்க் கோளே போற்றி

ஓம் கும்பராசி அதிபதியே போற்றி

ஓம் குச்சனூர்த் தேவனே போற்றி

ஓம் குளிகன் தந்தையே போற்றி

ஓம் குறுவடிவனே போற்றி

ஓம் கொள்ளிக்காட்டில் அருள்பவனே போற்றி

ஓம் கைப்புச்சுவையனே போற்றி

ஓம் சடையனே போற்றி

ஓம் சமரிலானே போற்றி

ஓம் சனிவிரதப் பிரியனே போற்றி

ஓம் சனிவார நாயகனே போற்றி

ஓம் சாயை புத்ரனே போற்றி

ஓம் சுடரோன் சேயே போற்றி

ஓம் சூரனே போற்றி

ஓம் சூலாயுதனே போற்றி

ஓம் சூர்ய சத்ருவே போற்றி

ஓம் சுக்ர நண்பனே போற்றி

ஓம் சிவனடியானே போற்றி

ஓம் சிவபக்தர்க்கடியானே போற்றி

ஓம் சீற்றனே போற்றி

ஓம் செயலறச் செய்பவனே போற்றி

ஓம் தமோகணனே போற்றி

ஓம் தண்டாயுதனே போற்றி

ஓம் தசரதனுக்கருளியவனே போற்றி

ஓம் தனிக்கோயிலுளானே போற்றி

ஓம் தீபப் பிரியனே போற்றி

ஓம் திருநள்ளாற்றுத் தேவனே போற்றி

ஓம் துலாராசியிலுச்சனே போற்றி

ஓம் துயரளித்தருள்வோனே போற்றி

ஓம் தைரியனே போற்றி

ஓம் தொலை கிரகமே போற்றி

ஓம் நம்பிக்கிரங்கியவனே போற்றி

ஓம் நளனைச் சோதித்தவனே போற்றி

ஓம் நீலவண்ணப் பிரியனே போற்றி

ஓம் நீண்டகாலச் சுழலோனே போற்றி

ஓம் பத்தொன்பதாண்டாள்பவனே போற்றி

ஓம் பயங்கரனே போற்றி

ஓம் பக்கச் சுழலோனே போற்றி

ஓம் பத்மபீடனே போற்றி

ஓம் பத்திரை சோதரனே போற்றி

ஓம் பிணிமுகனே போற்றி

ஓம் பிரபலனே போற்றி

ஓம் பீடிப்பவனே போற்றி

ஓம் ப்ரஜாபதி ப்ரத்யதி தேவதையனே போற்றி

ஓம் புஷ்பப்பிரியனே போற்றி

ஓம் புதன்மித்ரனே போற்றி

ஓம் பூசத் ததிபதியே போற்றி

ஓம் பேதமிலானே போற்றி

ஓம் பைய நடப்பவனே போற்றி

ஓம் போற்றப்படுபவனே போற்றி

ஓம் மகரத்தாள்பவனே போற்றி

ஓம் மாங்கல்ய காரகனே போற்றி

ஓம் மதிப்பகையே போற்றி

ஓம் மநு சோதரனே போற்றி

ஓம் முடவனே போற்றி

ஓம் முதுமுகனே போற்றி

ஓம் மும்முறை பீடிப்பவனே போற்றி

ஓம் மூபத்தாண்டில் சுற்றுபவனே போற்றி

ஓம் மேல் திசையனே போற்றி

ஓம் மேற்கு நோக்கனே போற்றி

ஓம் யமுனை சோதரனே போற்றி

ஓம் யமனுடன் பிறந்தோனே போற்றி

ஓம் வன்னி சமித்தனே போற்றி

ஓம் வலிப்பு தீர்ப்பவனே போற்றி

ஓம் வக்கரிப்பவனே போற்றி

ஓம் வளை மூன்றுளானே போற்றி

ஓம் வில்லேந்தியவனே போற்றி

ஓம் வில்வப்பிரியனே போற்றி

ஓம் ஸ்ரம் பீஜ மந்திரனே போற்றி

ஓம் சனீச்வரனே போற்றி

சனி ஸ்தோத்திரப் பாடல்

முனிவர்கள் தேவ ரேமும்

மூர்த்திகள் முதலி னோர்கள்

மனிதர்கள் வாழ்வும் உன்றன்

மகிமையது அல்லால் உண்டோ

கனிவுள தெய்வம் நீயே

கதிர்சேயே காகம் ஏறுஞ்

சனியனே உனைத் துதிப்பேன்

தமியனேற்கு அருள்செய் வாயே!

(வேறு)

சங்கடம் தீர்க்கும் சனி பகவானே

மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்!

சச்சரவு இன்றி சாகா நெறியில்

இச்செகம் வாழ இன்னருள் தாதா!!

சனி மங்களாஷ்டகம்

ஸெளரி: க்ருஷ்ணருசிச்ச பச்சிமமுக: ஸெளராஷ்ட்ரப: காச்யபோ

நாத: கும்பம்ருகர்க்ஷயோ: ப்ரியஸூஹ்ருத்சுரக்ஞயோர்க்ருத்ரக:

ஷட்த்ரிஸ்த: சுபதோசுபோதநுகதிச்சாபாக்ருதௌ மண்டலே

ஸந்திஷ்டந் சிரஜீவதாதிபலத: குர்யாத் ஸதா மங்களம்

பொருள்: காசியப கோத்ரியும், கும்பம், மகரம் ராசிகளுக்கு தலைவரும், மேற்கே தெற்கு முகமாக வில் போன்ற மண்டலத்தில் இருப்பவரும், நீண்ட ஆயுளை அளிப்பவருமான சனி மங்களத்தைச் செய்யட்டும்.

சனிக்கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சனி பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

சனி பகவானை வழிபடும் போது சொல்ல வேண்டிய சுலோகம்:

விதாய லோஹப்ரதிமாம் நரோதுக் காத் விமுச்யதே பாதாவா அந்ய க்ரஹாணாஞ்சய படேத்திஸ்ய நச்யதி.

மேலும் சனிக்கிழமைகளில் காக்கைக்கு ஆல இலையில் எள், வெல்லம் கலந்த அன்னம் வைத்தால் சனியின் கெடுபிடி நீங்கும் என்பர்.

மேற்கூறி ஸ்லோகங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள திருஞான சம்பந்தரின் பதிகத்தை தினமும் படித்து வந்தால், சனிபகவானைப்போல் கொடுப்பவர் யாருமில்லை. இப்படி என்னதான் விளக்கு போட்டு, பதிகம் பாடி சனிபகவானை வழிபட்டாலும், நாம் எப்போதும் இறை சிந்தனையுடன் நல்லதே செய்து நல்ல முறையில் வாழ்வது மிகவும் முக்கியம்.

போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்

பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி,

ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின்மேல்

நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே

தோடுடைய காது உடையன், தோல்உடையன், தொலையாப்

பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன்

ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த

நாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே

ஆன்முறையால் ஆற்ற வெண்நீறுஆடி, அணியிழைஓர்

பால்முறையால் வைத்த பாதம் பக்தர் பணிந்தேத்த

மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை

நால்மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே

புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே

மல்க வல்ல கொன்றைமாலை மதியோடு உடன்சூடி,

பல்க வல்ல தொண்டர்தம் பொற்பாத நிழல்சேர,

நல்கவல்ல நம்பெருமான், மேயது நள்ளாறே

ஏறுதாங்கி ஊர்திபேணி, ஏர்கொள் இளமதியம்

ஆறுதாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம்சூடி

நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரை கொன்றை

நாறுதாங்கும் நம்பெருமான், மேயது நள்ளாறே

திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன், இமையோர்கள்

எங்கள் உச்சி, எம்இறைவன் என்று அடியே இறைஞ்ச,

தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்

நங்கள் உச்சி நம்பெருமான், மேயது நள்ளாறே

வெஞ்சுடர்த்தீ அங்கை ஏந்தி, விண்கொள் முழவுஅதிர,

அஞ்சுஇடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச்,

செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி திகழ்தருகண்டத் துள்ளே

நஞ்சு அடைத்த நம்பெருமான், மேயது நள்ளாறே

சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத்தீ அம்பினால்

சுட்டு மாட்டிச், சுண்ணவெண் நீறுஆடுவது அன்றியும்போய்ப்

பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,

நட்டம் ஆடும் நம்பெருமான், மேயது நள்ளாறே

உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி

அண்ணல்ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்

எண்ணல்ஆகா உள்வினை என்று எள்க வலித்து இருவர்

நண்ணல் ஆகா நம்பெருமான், மேயது நள்ளாறே

மாசுமெய்யர், மண்டைத்தேரர், குண்டர் குணமிலிகள்

பேசும்பேச்சை மெய்என்று எண்ணி, அந்நெறி செல்லன்மின்,

மூசுவண்டார் கொன்றைசூடி, மும்மதிலும் உடனே

நாசம் செய்த நம்பெருமான், மேயது நள்ளாறே

தண்புனலம் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,

நண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந்தன், நல்ல

பண்புநள்ளாறு ஏத்துபாடல் பத்தும் இவைவல்லார்

உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே

திருச்சிற்றம்பலம்

தசரதர் போற்றிய துதி

நம: க்ருஷ்ணாய நீலாய சிதிகண்ட நிபாயச

நமோ நீலமயூகாய நீலோத்பல நிபாயச

நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்க்க ச்ருதிஜடாயச

நமோ விசால நேத்ராய சுஷ்கோதர பயாநக

நம: பௌருஷகாத்ராய ஸ்தூரோம்ணே ச தே நம:

நமோ நித்யம் க்ஷúதார்த்தாய த்ருப்தாய ச தே நம:

நமோ கோராய ரௌத்ராய - பீஷணாய கராளிநே

நமோ தீர்காய சுஷ்காய - காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே

நமஸ்தே கோரரூபாய - துர்நிரீக்ஷ்யாயதே நம:

நமஸ்தே ஸர்வ பக்ஷõய - வலீமுக நமோஸ்துதே

ஸூர்ய புத்ர நமஸ்தேஸ்து - பாஸ்கரே அபயதாயிநே

அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து - ஸம்வர்தக நமோஸ்துதே

நமோ மந்தகதே துப்யம் - நிஷ்ப்ரபாய நமோநம:

தப நாத் ஜாத தேஹாய - நித்ய யோகரதாயச

க்ஞாந சக்ஷúர் நமஸ்தேஸ்து - காச்யபாத்மஜ ஸூனவே

துஷ்டோ ததாஸி ராஜ்யம்த்வம் - க்ருத்த: ஹரஸி தத்க்ஷணாத்

தேவாஸுர மநுஷ்யாச்ச - ஸித்த வித்யாதர உரகா:

த்வயா அவ லோகிதா: ஸர்வே - தைன்யம்ஆசு வ்ரஜந்திதே

ப்ரம்மா சக்ரோயமச்சைவ - முநய: ஸப்ததாரகா:

ரஜ்ய ப்ரஷ்டா: பதந்தீஹ - தவ த்ருஷ்ட்யா அவலோகிதா:

த்வயா அவலோகிதாஸ்தேபி - நாசம் யாந்தி ஸமூலத:

ப்ரஸாதம் குருமே ஸெளரே - ப்ரணத்யாஹித்யம் அர்தித:

ஏவம் ஸ்துத: ஸதா ஸெளரி: - க்ரஹராஜோ மஹா பல:

அப்ரவீக்ச சநிர் வாக்யம் - ஹ்ருஷ்டரோமா ஸபாஸ்கரி:

ப்ரீதோஸ்மி தவ ராஜேந்த்ர - ஸ்தோத்ரேண அநேநஸம்ப்ரதி

அதேயம் வாவரம் துப்யம் - ப்ரீதோஹம் ப்ரததாமிச

த்வயா க்ருதந்து யத் ஸ்தோத்ரம் - ய: படேத் இஹமாநவ:

ஏகவாரம் த்விவாரம்வா-பீடாம் முஞ்சாமி தஸ்யவை

ம்ருத்யு ஸ்தாந கதோவாபி - ஜன்மஸ்தாந கதோபிவா

ய: புமான் ச்ரத்தயா யுக்த: சுசி: ஸ்நாத்வா ஸமாஹித:

சமீபத்ரை: ஸமப்யர்ச்ய-ப்ரதிமாம் லோஹஜாம் மம

மா÷ஷாதநம் திலைர் மிச்ரம் - தத்யாத் லோஹந்து தக்ஷிணாம்

க்ருஷ்ணாம் காம் மஹிஷீம் வஸ்த்ரம் - மாம் உத்திச்ய த்விஜாதயே

மத்திநேது விசேஷேண - ஸ்தோத்ரேண அநேந பூஜயேத்

பூஜயித்வா ஜபேத் ஸ்தோத்ரம் - பூத்வா சைவ க்ருதாஞ்ஜலி:

தஸ்ய பீடாம் நசைவாஹம் - கரிஷ்யாமி கதாசந

கோசரே ஜன்ம லக்னேச - தசாஸு அந்தர் தசாஸுச

ரக்ஷõமி ஸததம் தம்ஹி - பீடாப்ய: அன்ய க்ரஹஸ்யச

அநேநைவ ப்ரகாரணே - பீடாமுக்தம் ஜகத்பவேத்

வரத்வயந்து ஸம்ப்ராப்ய - ராஜா தசரத: ததா

மேநே க்ருதார்த்தம் ஆத்மாநம்-ஸம்யக் ஸ்துத்வா சனைச்சரம்

கோண: சனைச்சரோ மந்த: சாயாஹ்ருதய நந்தந:

மார்தாண்டஜ: ததாஸெளரி: பாதங்கிர் க்ருத்ரவாஹந:

ப்ரும்மண்ய: க்ரூரகர்மாச - நீலவஸ்த்ர: அஞ்ஜநத்யுதி:

க்ருஷ்ண: தர்மாநுஜ: சாந்த: - சுஷ்கோதர வரப்ரத:

÷ஷாடச ஏதாநிநாமாநி - ய: படேச்ச திநேதிநே

விஷமஸ்தோபி பகவான் - ஸுப்ரீத: தஸ்ய ஜாயதே

மந்தவாரே சுசிஸ்நாத்வா - மிதாஹாரோ ஜிதேந்த்ரிய:

தத்வர்ண குஸுமை: ஸம்யக் - ஸர்வாங்கம் த்விஜ ஸத்தம:

பூஜயித்வா அந்ந பாநாத்யை: - ஸ்தோத்ரம் ய: ப்ரயத: படேத்

புத்ரகாமோ லபேத்புத்ரம் - தநகாமோ லபேத்தநம்

ராஜ்ய காமோ லபேத் ராஜ்யம் - ஜயார்த்தீ விஜயீபவேத்

ஆயுஷ்காமோ லபேதாயு: - ஸ்ரீ காம ச்ரியம் ஆப்நுயாத்

யத்யத் இச்சதி தத்ஸர்வம் - பகவான் பக்த வத்ஸல:

சிந்திதாநிச கர்மாணி - ததாதிச நஸம்சய:

சநிநா அதஅந் யநுக்ஞாத: - ஸ்வஸ்தாநம் அகமத்ந்ருப:

ஸ்வஸ் தாந ஸங்கதோ பூத்வா - ப்ராப்தகாம: அபவத்ததா

சனைச்சர ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

முத்துசாமி தீட்சிதர் பாடிய கீர்த்தனங்கள்

பல்லவி

திவாகர தநுஜம் சனைச்ரம் தீரதரம் ஸந்தகம் சுந்தயேஹம் (திவா)

அநுபல்லவி

பவாம்பு நிதௌ நிமக்ன ஜநாநாம் பயங்கரம் அதி க்ரூரபலதம்

பவானீச கடாக்ஷ பாத்ர பூதபக்திமதாம்

அதிசய சுய பலதம் (திவா)

சரணம்

காலாஞ்ஜந காந்தியுக்த தேஹம் காலஸஹோதரம்

காக வாஹநம் நீலாம் சுக புஷ்பமாலா வருதம்

நீலரத்ந பூஷண அலங்க்ருதம்

மாலிநீ விநுத குருகுஹ முதிதம் மகரகும்ப ராசீ

நாதம் திலதைல மிச்ரிதான்ன தீபப்ரியம் தயா

ஸுதா ஸாகரம் நிர்பயம்

கால தண்ட பரிபீடித ஜாநும் காமிதார்த்த

பலத காம தேநும் கால சக்ர பேத சித்ரபாநும் கல்பித

சாயா தேவீ ஸுநும் (திவா)

சூரியதேவனின் குமாரர் தைரியமுள்ளவர். சம்சாரம் என்னும் சாகரத்தில் மூழ்கியோர்க்கு பயங்கரமானவர் - கடுமையான பலனைத் தருபவர். சிவபெருமானது கடாட்சத்திற்கு பாத்ரமான பக்தர்களுக்கு அதிகமான - சுபமான பலனைத் தருபவர். மைபோலும் கருமை நிறம் கொண்ட காகத்தை வாகனமாகக் கொண்டவர். கருமை நிறத்துடன் கூடிய வஸ்திரத்தாலும், புஷ்பத்தாலும் அலங்காரம் செய்யப்பட்டவர். மாலிநீ மந்திரத்தால் துதிக்கின்ற குருகுஹனுக்கு இன்பம் அளிப்பவர். மகரம், கும்பம், ராசிகளுக்கு அதிபதியானவர். எள் அன்னத்திலும், நல்லெண்ணை தீபத்திலும் அத்யந்த பிரேமை மிக்கவர். கருணையில் கடலைப் போன்றவர். பயமற்றவர் யம தண்டத்தினால் வருந்தும் முழங்காலைப் பெற்றவர். நாம் விரும்பியதை அளிக்கும் காமதேனு! காலச் சக்ரத்தைப் பிளக்கும் சூரியன் சாயாதேவியிடம் பிறந்தவர். இப்பேர்ப்பட்ட சனிபகவானை எப்பொழுதும் தியானம் செய்கிறேன். சனி பகவானின் அருளையும், கருணை உள்ளத்தையும் சுந்தர கிருதிகளால் பாடிய தீக்ஷதர் அப்பெருமானை எள் அன்னத்தை நிவேதித்து, நல்லெண்ணை விளக்கேற்றி ஆராதிக்க வேண்டும் என்று கூறுகிறார். சனி பகவானுக்கு, நல்லெண்ணை விளக்கேற்றி, எள் அன்னத்தால் நிவேதிப்பதால், அப்பெருமான் நமது கோசார தோஷங்கள், தசாபுத்தி தோஷங்கள், மற்றுமுள்ள இன்னல்கள் அனைத்தையும் விலகச் செய்து, நமக்கு நல்ல பல பலன்களை அளிப்பார் என்பது திண்ணம்

Saturday 13 November 2021

உண்மைகள் உபதேசமாய்




1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.

2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.

3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.

4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.

5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.

6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.

7. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.

8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை.

9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.

10. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.

மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.

11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.

12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?

13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல,

கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல,

சில்லரைக் கடன் சீரழிக்கும்.

14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?

15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.

(எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்).

16. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?

(இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?)

17. ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது!

(எல்லாம் காலத்தின் கோலம்!)

18. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.

(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).

19. உள்ள பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு திருப்பதிக்கு நடக்கிறாள்.

(இருக்கிற குழந்தைக்கு சோறு போடாமல் அது உரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தானியத்தை நக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் அடுத்த பிள்ளை வேண்டும் என்று திருப்பதிக்கு வேண்டிக் கொண்டு நடக்கிறாளாம். இப்படியும் இருக்கிறார்கள்).

20. இறுகினால் களி. இளகினால் கூழ்.

21. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.

(யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்)

22. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.

(பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது)

23. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

(எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது).

24. விசாரம் முற்றினால் வியாதி.

(கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்).

25. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.

(நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.)

26. காற்றில்லாமல் தூசி பறக்காது.

(நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி)

27. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.

(நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்).

28. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.

(துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?)

29. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.

(பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி)

30. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.

(விதைத்ததெல்லாம் பயிராகி பலன் தருவதில்லை. அது போல பெற்றதெல்லாம் பிள்ளையாகி நல்லபடியாக நம்மைப் பார்த்துக் கொள்ளும் என்று நினைத்துவிட முடியாது).

31. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.

(தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது.

32. வாங்குகிற கை அலுக்காது.

(வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்றே சொல்லப்பட்ட பொருத்தமான பழமொழியோ?)

33. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும்.

(என்ன சாமர்த்தியம் பாருங்கள்!)

34. உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?

35. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.

36. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.

37. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.

38. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்.

ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.

39. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான்,

அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.

40. ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?

41. இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்?

42. இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்?

43. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

44. இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?

45. உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது..

Thursday 11 November 2021

ரசவாதி

 நான் சமீபத்தில் படித்த அற்புதமான நூல் "ரசவாதி" என்னும் நூல்....


எழுதியவர் - : Paulo Coelho

தமிழில் மொழிபெயர்த்தவர்: நாகலட்சுமி சண்முகம்.


ஆங்கில மொழியில் எழுதப்பட்ட இந்த நாவலின் பெயர்

The Alchemist. எழுதியவர் பாலோ கொயலோ.


இந்த நாவலின் சிறப்பு இதுவரை உலகம் முழுவதும் 8.5 கோடிப் பிரதிகள் விற்றுச் சாதனை படைத்த பிரம்மாண்ட நூல்!


நூலின் சிறப்பு

--------------------------


ஆன்மாவிற்கு பரவசமூட்டுகிற ஞானத்தை உள்ளடக்கிய எளிய, சக்தி வாய்ந்த புத்தகம் இது.

சான்டியாகோ என்ற ஆடு மேய்க்கும் இளைஞன் ஒருவன், ஸ்பெயினில் உள்ள தன் சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு எகிப்தில் உள்ள பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி பாலைவனத்தின் வழியாக செல்லும் தீரமிக்க தேடல் பயணமே இந்தக் கதையின் மூலம்.

அங்கு செல்ல சிலர் அவனுக்கு உதவுகின்றனர். அந்தப் பொக்கிஷம் என்ன என்பது அவனுக்கோ, அவனுக்கு உதவுபவர்களுக்கோ தெரியாது.


பொக்கிஷத்தைத் தேடிச் செல்லும் இந்தப் பயணத்தில் சான்டியாகோ, தனக்குள் இருக்கும் பொக்கிஷத்தை கண்டறிகிற ஒன்றாக மாறுகிறது.

வசீகரமான, உணர்வுகளை தட்டி எழுப்புகிற, மனிதாபிமானத்தைப் போற்றுகிற இக்கதை பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பான "த்ரில்லர்".


சில விஷயங்களை நாம் தேடும் போது கிடைக்காது. ஆனால், நமக்கு கிடைக்கும் என்பது எழுதப்பட்ட விதி என்றால் நாம் அதை சென்றடைந்தே தீருவோம். அதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இந்நூல் திகழ்கிறது.


இதன் கதாநாயகன் சான்டியாகோ காணும் கனவு எப்படி நனவாகிறது, சாகசங்கள் நிறைந்த அவனது பயணம் அவனுக்கும், நமக்கும் என்ன சொல்லித் தருகிறது?


இந்தக்கதையின் நாயகன் ஆடு மேய்க்கும் இடையன் சான்டியாகோ. நீங்கள் ஒவ்வொருவரும் அந்த இளைஞன் சான்டியாகோ தான். நீங்களும் உங்களுடைய பொக்கிஷத்தைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள். ஒருவனின் கதையே எல்லோருடைய கதை! ஒரு தனி மனிதனின் தேடலே ஒட்டு மொத்த மனித சமூகத்தின் தேடல் என்று முன்னுரையில் படித்தவுடன் இந்தக் கதையின் நாயகனாகவே இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் மாறி விடும் சூழல் உருவாகி விடுகிறது.

இது நமது ஆர்வத்தை வெகுவாக தூண்டி விடுகிறது.


இடையன்

------------------


சான்டியாகோ தனது செம்மறியாடுகளை ஓட்டிக் கொண்டு பல ஊர்களுக்கு சென்று ஆட்டு உரோமத்தை வழித்து எடுத்து அதை விற்று வியாபாரம் செய்து வருகிறான். ஒருநாள் பாழடைந்த தேவாலயத்தில் தனது ஆடுகளுடன் தங்க நேர்கிறது. தொடர்ந்து வரும் கனவு அன்றும் அவனுக்கு வருகிறது.


மாற்றத்திற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்ற குணம் கொண்ட அவன் உலகை முழுவதும் சுற்றிவர வேண்டும் என்ற ஆசை கொண்டவனாக இருந்தான். அதற்காக ஆடு மேய்க்கும் தொழிலே சிறந்தது என அதை தேர்ந்தெடுத்து ஊர் சுற்றி வியாபாரம் செய்து வந்தான்.


கனவு

-----------


கனவுகளுக்கு விளக்கம் அளிக்கும் ஒரு மூதாட்டி கிராமம் ஒன்றில் இருப்பதை அறிந்து அவளிடம் சென்று தன் கனவின் அர்த்தத்தை கேட்டான். கனவு இதுதான்:


தன் செம்மறியாடுகளுடன் புல்வெளியில் இருக்கும்போது ஒரு சிறுமி வந்து அவன் கையைப் பிடித்து எகிப்திய பிரமிடுகளின் முன்பு நிறுத்தி, நீ இங்கே வந்தால் இங்கே மறைத்து வைக்கப்பட்டிருக்கிற ஒரு புதையலைக் காண்பாய் என்று கூறுவதாக மூதாட்டியிடம் கூறினான்.


அதற்கு மூதாட்டி, நீ எகிப்து செல்ல வேண்டும். அங்குள்ள பிரமிடுகளில் உனக்கு ஒரு புதையல் காத்துக் கொண்டிருக்கிறது. அது உன்னைப் பெரிய பணக்காரனாக ஆக்கும் என்கிறாள். இந்தக் கனவு மிகவும் கடினமான ஒன்று எனவும் கூறுகிறாள்.

ஆனால், சான்டியாகோவிற்கு அது ஏமாற்றமாக இருக்கிறது.


தன் பயணத்தை தொடர்கிறான்.

புத்தகம் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவன் ஒருநாள் ஒரு இடத்தில் உட்கார்ந்து ஒரு புத்தகத்தை வாசித்து கொண்டிருக்கிறான். முதியவர் ஒருவர் அவனருகில் வந்து அமர்கிறார். இடையனிடம் பேச்சு கொடுத்து அவனுக்கு உதவுவதாக கூறுகிறார். அவர் சாலோம் நகர அரசன் நான் என்றும், தனது பெயரையும் கூறி உன்னுடைய செம்மறியாடுகளில் பத்தில் ஒரு பங்கு தனக்குத் தந்தால் புதையலை எப்படி எடுப்பது என சொல்லித் தருகிறேன் என்கிறார்.

நாம் புதையலை தேடி போவது இவருக்கு எப்படித் தெரிந்தது என ஆச்சரியப்படும் போது அவர் அங்குள்ள மணலில் இவனது சரித்திரத்தையே எழுதினார்.

பிரமிப்படைகிறான் சான்டியாகோ!


சாதகக் கொள்கை

--------------------------------


உன்னுடைய கனவை நீ நனவாக்க முயற்சிப்பதால் உனக்கு உதவுகிறேன் என்றவர், மறுநாள் வா என்று கூறிவிட்டு சென்று விடுகிறார்.

ஸ்பெயினிலிருந்து எகிப்து செல்ல நடுவில் உள்ள நீர் நிலையை கடந்தாக வேண்டும். அதற்கு, கப்பலுக்கு பணம் தர வேண்டும். இவனிடம் பைசா இல்லை. கனவை துரத்திச் செல்வதா அல்லது ஆடுகளை மேய்த்து அதே வேலையைச் செய்வதா என்ற குழப்பம்.

ஆனால், ஆறு ஆடுகளை மட்டும் விட்டுவிட்டு வேறு ஒரு நண்பன் இவனிடமிருந்த மற்ற ஆடுகளை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டான்.


மறுநாள் அந்த முதியவரை சந்திக்கும்போது எதிர்பாராமல் நடந்த இந்த நிகழ்வைக் கூற, அதற்கு அவர்

நீ உன் கனவை நிறைவேற்ற முயற்சிப்பதால் ஒரு சக்தி உனக்கு வெற்றியின் சுவையை கொடுத்துவிட்டு உன்னுடைய பசியைத் தூண்டுகிறது என்கிறார்.


எப்போதும் இப்படித்தான் நடக்கும். இதற்கு சாதகக் கொள்கை என்று பெயர் என கூறி உற்சாகப் படுத்துகிறார். அவனிடமிருந்து ஆறு ஆடுகளை வாங்கிக் கொள்கிறார்.


புதையலை கண்டுபிடிக்க நீ சகுனங்களை கவனமாகப் பின்தொடர வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.


தன் மார்பு கவசத்திலிருந்து ஒரு வெள்ளைக்கல், ஒரு கருப்புக்கல்லை எடுத்து அவனிடம் கொடுத்து இதற்கு  "உரிம்" என்றும் "தும்மிம்" என்றும் பெயர்.

உன்னால் சகுனங்களை புரிந்து கொள்ள முடியாத நேரங்களில் இந்தக் கற்களை பயன்படுத்தி கருப்புக் கல் என்றால் "ஆமாம்" என்றும் வெள்ளை என்றால் "இல்லை" என்றும் புரிந்து கொள். ஆனால், உன்னால் இயன்றவரை, நீ சொந்த தீர்மானங்களை எடு. நீ தேடும் புதையல் பிரமிடுகளில் இருக்கிறது என்று கூறிவிட்டு கிளம்புகிறார்.


புதையலைத் தேடிச் சென்று கொண்டிருக்கும் ஒரு சாகசக்காரன் நான் என்று தனக்குத் தானே கூறிக் கொண்டான், சான்டியாகோ!


மகிழ்ச்சியை விளக்கும் கதை

-----------------------------------------------------


ஒரு வியாபாரி தனது மகனை, ஒரு ஞானியிடம் மகிழ்ச்சிக்கான வழியை அவரிடமிருந்து கற்றுக் கொண்டு வர அனுப்புகிறார். அந்த இளைஞன் ஞானி இருக்கும் பெரிய அரண்மனைக்குச் சென்று அவரிடம் வேண்டிக் கேட்கிறான்.

"தனக்கு முழுமையாக சொல்லித்தர இப்போது நேரமில்லை. இரண்டு மணி நேரம் ஆகும். நீ அதற்குள் இந்த அரண்மணையை சுற்றிப் பார்த்து விட்டு வா" என உள்ளே அனுப்புகிறார்.

அதோடு, கையில் ஒரு தேக்கரண்டியைக் கொடுத்து அதில் 2 சொட்டு எண்ணெயை விட்டு, "நீ சுற்றி வரும்வரை இந்த எண்ணெய் துளிகள் கீழே சிந்தாமல், பத்திரமாக கொண்டு வா" என்று கூறி அனுப்புகிறார்.


இரண்டு மணி நேரம் ஆயிற்று! இளைஞன் அரண்மனையின் எல்லா பகுதிகளுக்கும் சென்று ஞானியிடம் திரும்பினான். ஞானி அவனிடம், "எல்லாம் சுற்றிப் பார்த்தாயா?" எனக்கேட்க "ஆம்" என்கிறான்.

தர்பாரில் இருந்த திரைச்சீலையைப் பார்த்தாயா? என்கிறார்.

இளைஞன் இல்லை என்கிறான்.


சுவரில் வரைந்திருந்த ஓவியங்கள், மலர்கள் பூக்கும் அழகான தோட்டங்கள் இவற்றை பார்த்தாயா? என்கிறார். இளைஞன் இல்லை என்கிறான்.

இப்படி பல சிறப்பு வாய்ந்த விஷயங்களை ஒவ்வொன்றாக கேட்க,

இளைஞன் " நான் இவை எதுவும் பார்க்கவில்ல. என் கவனம் முழுவதும் கரண்டியில் இருந்த எண்ணெய் துளிகள் கீழே சிதறாமல் இருப்பதில் இருந்தது" என்று தர்மசங்கடத்தில் நெளிந்தான்.


ஞானி, சரி! நல்லது. மீண்டும் ஒரு முறை சென்று பார்த்து விட்டு வா எனக்கூறி அதேபோல் ஒரு கரண்டியில் இரண்டு சொட்டு எண்ணெயை விட்டு அனுப்புகிறார்.

இளைஞன் திரும்பி வந்தான். ஞானி கேட்ட எல்லா இடங்களையும் பார்த்ததாக விவரித்தான். ஆனால், அவன் கையில் வைத்திருந்த கரண்டியில் எண்ணெய் துளிகள் இல்லை! கீழே சிந்தி விட்டது!


ஞானி அவனிடம், உனக்கு ஒரு அறிவுரை தருகிறேன். உலகின் அதிசயங்கள் அனைத்தையும் பார்க்கின்ற அதே நேரத்தில் , தேக்கரண்டியில் இருக்கும் எண்ணெய்த் துளிகளையும் மறக்காமல் இருப்பதுதான் மகிழ்ச்சிக்கான ரகசியம் என்கிறார்.


சான்டியாகோ எதுவும் கூறாமல் அமைதியாக நின்றான். அந்த முதியவர் கூறிய இந்தக் கதை அவனுக்குப் புரிந்திருந்தது.


ஒரு இடையன் பல இடங்களுக்கு ப் பயணிக்கக் கூடும். ஆனால், தனது செம்மறியாடுகளை மறந்து விடக் கூடாது என்பதே அது! என கதை முடிவடைகிறது.

என்ன நண்பர்களே! மிகுந்த அர்த்தம் பொதிந்த இக்கதை உங்களுக்கும் புரிந்திருக்கும். இது ஒவ்வொருவருக்கும் மிகவும் பொருந்தக் கூடிய கதை!


தொடர்ந்த பயணம்

-----------------------------------


ஆடுகளை விற்ற பணத்தை வைத்துக் கொண்டு ஆப்பிரிக்க தேசத்தில் காலடி வைக்கிறான், சான்டியாகோ.  ஒரு வழிப்போக்கனைப் பார்த்து பழகி பிரமிடு இருக்கும் இடத்தை காண்பிக்கப் போவதாக அவன் கூறியதை நம்பி தன் கையிலிருந்த பணம் முழுவதையும் ஒட்டகம் வாங்க (பாலைவனத்தில் பிரயாணிக்க) கொடுத்து அவன் ஏமாற்றி ஓடிப்போய் விட திக்கற்று நிற்கிறான் சான்டியாகோ!


தேர்ந்த வேலைக்காரன்

-------------------------------------------


மனம் தளறாமல் புதையலை நோக்கிய தன் பயணத்தை தொடர முடிவெடுத்தான் சான்டியாகோ. அவன் இருந்தது டேஞ்ச்சியர் எனும் நகரம். ஒரு குன்றின் மீது அமைந்திருந்த  படிக கண்ணாடிகளால் ஆன பொருட்களை விற்கும் கடை ஒன்றில் வேலை கேட்டு அங்கு சேர்கிறான். விற்பனை மிகவும் மந்தமாக இருந்த அந்தக் கடையின் வருமானம் இவன் வருகைக்குப் பிறகு, இவனது சாமர்த்தியமான நடவடிக்கைகளால் நன்றாக முன்னேறத் துவங்கியது.

ஆரம்பத்தில் சம்பளமாக சாப்பிட ஏதேனும் கொடுத்தால் போதும் என்று சேர்ந்த அவனுக்கு 120 ஆடுகள் வாங்கும் அளவிற்கு அவனுக்கு, அந்தக் கடையின் உரிமையாளர் விற்பனையில் கமிஷன் என்ற பெயரில் இவனுக்கு கொடுக்கும் அளவுக்கு வியாபாரம் வளர்ந்தது.


பாலைவனப் பயணம்

---------------------------------------


முதலில் இருந்த பணத்தை தொலைத்திருந்தாலும், மீண்டும் அவன் முயற்சியால் சம்பாதித்த கமிஷன் பணத்தை வைத்து வீடு திரும்பாமல் தனது கனவை நோக்கி, அதாவது புதையலைத் தேடி பிரமிடுகள் நோக்கி பாலைவனத்தில் பயணிக்கிறான்.


ரசவாதி

--------------


உடன் ஒரு ரசவாதியும் இணைகிறார். அவர் ஒரு ஆங்கிலேயர். செம்பு, வெள்ளி, இரும்பு என எந்த உலோகமானாலும் அதை தங்கமாக ஆக்கும் அதி அற்புத ரசவாதக் கல்லை கண்டுபிடிக்கும் நோக்கில் எகிப்து நோக்கிய பயணம் மேற்கொண்டவர் அவர்.


சுட்டெரிக்கும் வெயிலில் சஹாரா பாலைவனத்தில் பிரயாணிகள் பலரோடும் சேர்ந்து கொண்டு வீரதீர சாகசப் பயணம் செய்கிறான் சான்டியாகோ! உடன் வந்த ரசவாதியுடன் பல இன்னல்களை கடந்து,  இடையே, பாலைவன பழங்குடிகளிடையே கலவரம் மூண்டுவிட,

போய் சேர முடியுமா என்ற கேள்வி முதல்கொண்டு உயிரோடு இருப்போமா? என்ற கேள்வி வரை பல சிக்கல்களை கடந்து மணல் பிரதேசத்தைக் கடக்கிறார்கள்.


பிரபஞ்ச ஆன்மாவின் மொழி

----------------------------------------------------


உடன்வந்த ரசவாதி, ஈயம், தாமிரம் போன்ற உலோகங்களிலிருந்து தங்கமாக மாற்றும் ரசவாத திறமையை வைத்து ஒரு தட்டை தங்கமாக மாற்றி அதன் ஒரு பகுதியை சான்டியாகோ கையில் தருகிறார். அதை அவன் பத்திரமாக வைத்துக் கொள்கிறான்.

பழங்குடி குழு ஒன்றிடம் இவர்கள் மாட்டிக் கொள்கின்றனர்.

சான்டியாகோ விற்கு பிரபஞ்ச ஆன்மாவின் மொழி தெரியும் என அவர்களிடம் ஒரு பெரிய பாலைவனக் காற்று இங்கு வந்தடையும் என்றும் ரசவாதி கூறுகிறார். மணலோடு பிரபஞ்ச மொழியில் சான்டியாகோ வேண்டிக் கொள்ள அங்கே மணல் புயல் உருவாகிறது.  பழங்குடி கூட்டத்தினர், இவர்கள் இருவரையும் அதிசயமாகப் பார்த்து மேலே பிரயாணம் செய்ய அனுமதிக்கிறார்கள்.


பிரமிடுகள் இருக்கும் பகுதிக்கு வெகு அருகில் வந்துவிட, சான்டியாகோ இதுதான் தனது கனவு இடம் என பாலைவன மணலை தோண்டுகிறான், புதையலைத் தேடி!


புதையல்

----------------


ஆழம் சென்றாலும் எதுவும் தட்டுப்படவில்லை! திடீரென ஒரு பழங்குடி இன கூட்டம் வந்து அவனை விசாரித்து  உதைக்கிறார்கள். உடலெங்கும் காயங்களோடு கீழே சாய்கிறான். இவனிடமிருந்த தங்கத்துண்டை எடுத்து ஏது உனக்கு? எனக் கேட்க இவன் நான் புதையலைத் தேடுகிறேன் என்கிறான்.

அப்போது அந்தக் கூட்டத்தின் தலைவன், மற்றவர்கள் சான்டியாகோவை அடிப்பதை நிறுத்தி இவன் எங்கோ திருடிக் கொண்டு வந்திருக்கிறான் விட்டு விடுங்கள் என்கிறார்.

சான்டியாகோ, என் கனவை தொடர்ந்து புதையலை தேடி வந்தேன் என்கிறான் ஈனக்குரலில்!


அந்தத் தலைவன் சிரித்துக் கொண்டே, *இளைஞனே! எனக்கும் ஒரு கனவு முன்பொரு சமயம் வந்தது. ஸ்பெயின் நாட்டில் ஆடுகள் மேயும் புல்வெளிப் பிரதேசம் ஒன்றில் பழைய இடிந்து போன தேவாலயம் ஒன்றின் ஊடே ஒரு சிக்கமோர் மரத்தடியின் வேர்ப்பகுதியில் தோண்டினால் ஒரு புதையல் கிட்டும் என்று!

அந்தக் கனவை நம்பி பாலைவனம் கடந்து,கடல் கடந்து வேறு தேசம் சென்று பார்க்க நான் ஒன்றும் முட்டாளில்லை! சரி நீ போய் பிழைத்துக் கொள்*


 என்று ஏளனச் சிரிப்பு சிரித்துக் கொண்டே தன் சகாக்களோடு சென்று விடுகிறான்.


இதைக் கேட்ட சான்டியாகோ மிகுந்த உற்சாகத்தோடு எழுந்து ஆஹா, நான் என் புதையலை கண்டுபிடித்தேன் என்று மகிழ்ச்சியாக கூக்குரலிடுகிறான்.


நம் சான்டியாகோ அந்த ஸ்பெயின் தேசத்தில் அந்த இடிந்து போன தேவாலயத்தில் ஆடுகளை மேய்த்தவாறு உறங்கிக் கொண்டிருந்ததை நாம் வாசித்திருந்தோம்.

அங்குதான் அவனுக்கு பிரமிடுகளில் புதையல் இருப்பதாக கனவு வந்தது. அந்தக் கனவைத் தொடர்ந்து அவன் வெகுதூரம் பயணித்தான்.


மீண்டும் ஸ்பெயின்

-----------------------------------


சில நாட்கள் கழித்து,

அவன் முன்பு ஆடுகளை மேய்த்தபடி இருந்த அந்த தேவாலயம் அருகே சிக்கமோர் மரம் அருகே இப்போது நின்றிருந்தான். கையில் ஒரு மண்வெட்டி!

தோண்ட ஆரம்பித்தான். சற்று நேரத்தில் பொற்காசுகள் அடங்கிய பேழை, விலையுயர்ந்த கற்கள், ஆபரணங்கள் இருந்த புதையல் அவனுக்கு சொந்தமானது!


தங்கள் கனவுகளைத் தொடர்ந்து செல்பவர்களுக்கு வாழ்க்கை தாராளமாக அள்ளி வழங்குகிறது என்று சான்டியாகோ தனக்குள் சொல்லிக் கொள்வதாக இந்தக் கதை முடிவடைகிறது....


பிடித்த வரிகள் மற்றும் மேற்கோள்கள்

--------------------------------------------------------------------


1. தங்களுடைய பிறவி நோக்கம் என்ன என்பதை தங்களுடைய இளமைப் பருவத்தில் எல்லோருமே அறிந்திருக்கின்றனர். ஆனால், காலம் செல்ல, செல்ல தங்களுடைய பிறவி நோக்கத்தை தங்களால் அடைய முடியாது என்று ஏதோ ஒரு மர்மமான சக்தி அவர்களை நம்ப வைத்து விடுகிறது.


2. நீ யாராக இருந்தாலும் சரி, நீ செய்வது எதுவாக இருந்தாலும் சரி, நீ உண்மையிலேயே ஒன்றை விரும்பும்போது, அந்த ஆழ்விருப்பம் பிரபஞ்ச ஆன்மாவிலிருந்து முளைக்கிறது. அதுதான் இப்புவியில் உனது பிறவி நோக்கம்.


3. நீ உண்மையிலேயே ஒன்றை ஆழமாக விரும்பும்போது, அதை நீ அடைவதற்கு இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் உன் உதவிக்கு வரும். இது 120 வருடங்களுக்கு முன்பாக நம் நாட்டில் அவதரித்த சுவாமி விவேகானந்தர் கூறிய பொன்மொழியை ஒத்து இருக்கிறது என்பது நினைவில் நிற்கிறது!


4. நான் (கனவை மெய்ப்பிக்கும் சக்தி) ஏதோ ஒரு வடிவத்தில் எப்போதும் தோன்றுகிறேன். சிலசமயம் ஒரு தீர்வின் வடிவிலோ அல்லது ஒரு நல்ல யோசனையின் வடிவிலோ தோன்றுவேன். விஷயங்கள் சுலபமாக நடக்க நான் உதவுகிறேன். இன்னும் பல விஷயங்களை செய்கிறேன். ஆனால், பெரும்பாலான சமயங்களில் நான் (சக்தி) அவற்றைச் செய்துள்ளதை மக்கள் உணருவதில்லை.


5. எது எப்படியோ, வாழ்வில் எல்லாவற்றுக்கும் ஒரு விலையைக் கொடுத்தாக வேண்டும்.


6. உன்னால் இயன்றவரை, நீ உன்னுடைய சொந்த தீர்மானங்களை எடு.


7. சகுனங்களை புரிந்து கொள்ள ஏராளமான பொறுமை தேவை

 

8. உலகின் அதிசயங்கள் அனைத்தையும் பார்க்கின்ற அதே நேரத்தில் தேக்கரண்டியில் இருக்கும் எண்ணைய்த் துளிகளையும் மறக்காமல் இருக்க வேண்டும்.


9. மாற்றத்திற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்


10. ஒரு கனவு நனவாவதற்கான சாத்தியக்கூறு இருப்பதுதான் வாழ்க்கையை சுவாரசியமாக ஆக்குகிறது


11. கனவுகள் என்பவை, கடவுளின் மொழி


12. வாழ்வில் எளிமையான விஷயங்கள்தான் மிகவும் அசாதாரணமானவையாக இருக்கின்றன


13. பிறர் எப்படி தங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது குறித்து எல்லோருக்கும் ஒரு தெளிவான யோசனை இருக்கிறது. ஆனால் தான் எப்படி தன்னுடைய வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது பற்றிய ஒரு தெளிவான யோசனை யாருக்கும் இருப்பதில்லை


14. உலகிலுள்ள புத்தகங்கள் எல்லாம் தங்கள் சொந்தத் தலைவிதியை நிர்ணயித்துக் கொள்ளுவதற்கான திறன் மக்களுக்கு இல்லாதது பற்றி விளக்குகிறது


15. உலகின் மாபெரும் பொய் எது?

நம்முடைய வாழ்வில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், நமக்கு நிகழ்கின்ற விஷயங்களுக்கான கட்டுப்பாட்டை நாம் இழந்து விடுகிறோம். பிறகு, நம்முடைய தலைவிதி கட்டுப்படுத்தத் தொடங்குகிறது என்பதுதான் உலகின் மிகப்பெரிய பொய்


16. நானும் மற்ற எல்லோரையும் போலவே உள்ளது உள்ளபடி உலகத்தைப் பார்ப்பதற்கு பதிலாக, அது எப்படி இருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றோனா அதை அப்படிப் பார்க்கிறேன்.  (சான்டியாகோ இப்படி நினைக்கிறான்).


17. தெளிவான கேள்விகளைக் கேட்பதற்கு முதலில் தனக்கு என்ன வேண்டும் என்பதை ஒருவன் அறிந்திருக்க வேண்டும்.


18. வார்தைகளை சாராத ஒரு மொழி இருக்கத் தான் செய்கிறது. செம்மறியாடுகளுடன் அந்த அனுபவம் சான்டியாகோ விற்கு கிடைத்திருந்த்து. மொழி தெரியாத ஆப்பிரிக்காவில் மனிதர்களிடம் அது நிகழ்ந்தது. (மொழி ஒரு பிரச்னையே அல்ல).


19. பசியோடு இருக்கும் எவரொருவருக்கும் உணவளிக்க வேண்டும் என்று குரானில் கூறப்பட்டுள்ளது.


20.நீயும், நானும் நம்முடையமனங்களில் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களைத் துடைத்தெறிந்து நம்முடைய மனங்களைத் தூய்மையாக்க வேண்டும்.


21. அதிர்ஷ்டம் நம் பக்கத்தில் இருக்கும் போது அதை நாம் நமக்கு அனுகூலமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிர்ஷ்டம் நமக்கு எந்த அளவிற்கு உதவுகிறதோ, அதே அளவிற்கு நாம் அதற்கு உதவ வேண்டும். இதுவே சாதகக் கொள்கை அல்லது துவக்க ஆட்டக்காரர்களின் அதிர்ஷ்டம் எனப்படுகிறது


22. எல்லோரும் புரிந்து கொள்கின்ற மொழி, உற்சாகத்தின் மொழி அன்பு எனப்படுவதாகும்.


23. வெற்றிகரமாக செய்வதற்கு தோல்வி குறித்த பயம் இருக்கக் கூடாது.


24. ஒருசமயம் அந்த சகாரா பாலைவனம் கடலாக இருந்திருக்கிறது


25. பிரபஞ்ச மொழியைப் புரிந்து கொள்வதற்குத் துணிச்சல்தான் மிகவும் இன்றியமையாத பண்புநலன்.


26. உன் இதயம் சொல்வதை காது கொடுத்துக் கேள். எல்லாம் அறிந்தது அது


27.தேடலின் ஒவ்வொரு நொடியும் கடவுளுடனான ஒரு சந்திப்பு


28.மகிழ்ச்சியாக இருக்கின்ற அனைவருக்குள்ளும் கடவுள் இருக்கிறார்


29. பொழுது விடிவதற்குச் சற்று முன்பாகத் தான் இரவு மிக அதிக இருட்டாக இருக்கிறது


30. உன்னுடைய பயங்களுக்கு அடிபணிந்து விடாதே. நீ பயந்தால் உன் இதயத்திடம் பேச முடியாது


31. ஒரே ஒரு விஷயம்தான் ஒருவன் தன் கனவை அடைவதைச் சாத்தியமற்றதாக ஆக்குகிறது. தோல்வி குறித்த பயம்தான் அது


32. நாம் முன்பு இருந்ததை விட அதிக சிறப்பானவர்களாக ஆகக் கடினமாக முயற்சிக்கும் போது, நம்மைச் சுற்றி இருக்கின்ற எல்லாமே சிறப்புறுகின்றன


33. அராபிய தேசத்து பழமொழி:

*ஒரு முறை நிகழ்கிற அனைத்தும் இன்னொரு முறை நிகழ்வதற்கான வாய்ப்பே இல்லை!

ஆனால், இரண்டு முறை நிகழ்கின்ற அனைத்தும் மூன்றாவது ஒருமுறை நிச்சயமாக நிகழும்*


34. தன்னுடைய கனவை நனவாக்குவதுதான் ஒருவனுடைய ஒரே கடமையாகும்...


Sunday 7 November 2021

ஸ்ரீ சுப்ரம்மண்ய புஜங்க ஸ்தோத்ரம்

 கந்தர் சஷ்டி விரதம் - ஸ்கந்த பஞ்சமி திருநாள் !


#ஸுப்ரமண்ய_புஜங்க_ஸ்தோத்ரம்


1.ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ

மஹாதந்திவக்த்ராபி பஞ்சாஸ்யமாந்யா

விதீந்த்ராதிம்ரிக்யா கணேசாபிதா மே

விதத்தாம் ச்ரியம் காபி கல்யாணமூர்தி


இளம் பாலகனாக இருப்பினும் மலைபோன்ற இடையூறுகளைப் போக்குபவரும் பெரும் யானைமுகத்தவராயினும் சிங்கத்தின் மரியாதைக்குரியவரும் (பரமேச்வரனின் மரியாதைக்குரியவர்) , பிரம்மதேவன், இந்திரன் முதலியோரால் தேடித்தேடி வழிபடத் தக்கவரும், மங்களஸ்வரூபினியான கணேசப் பெருமான் எனக்கு செல்வம் சேர்ப்பிக்கட்டும்.


2.ந ஜாநாமி சப்தம் ந ஜாநாமி சார்தம்

ந ஜாநாமி பத்யம் ந ஜாநாமி கத்யம்

சிதேகா ஷடாஸ்யா 

 த்யோததே மே

முகாந்நி:ஸரந்தே கிரஸ்சாமி சித்ரம்


எனக்கு சப்தமும் தெரியாது அதன் பொருளும் தெரியாது. அதனாலேயே செய்யுட்காவியமும் வாசனகாவியமும் அறியேன். ஆனால் ஆறுமுகமான ஞானவடிவம் ஒன்றே என் மனதில் நிழலாடுகிறது. வாயினின்று ஏதேதோ விசித்ரமான சொற்கள் வெளிப்படுகின்றன.


3.மயூராதிரூடம் மஹாவாக்யகூடம்

மநோஹரிதேஹம் மஹச்சித்தகேஹம்

மஹீதேவதேவம் மஹாவேதபாவம்

மஹாதேவபாலம் பஜே லோகபாலம்


மயில்மேல் ஏறி, மஹாவாக்யர்களின் முழுப் பொருளாக அமைந்து, அழகிய வடிவுடன் மஹான்களின் மனதில் நித்யவாஸம் செய்யும் மஹாதேவன் மகனை வழிபடுகிறேன். அவர் உலகைக் காப்பவர். வேதவிழுப்பொருள் ஸுப்ரஹ்மண்யராவர்.


4.யதா ஸந்நிதாநம் கதா மாநவா மே

பவாம்போதிபாரம் கதாஸ்தே ததைவ

இதி வ்யஞ்ஜயஸிந்துதீரே ய ஆஸ்தே

தமீடே பவித்ரம் பராசக்திபுத்ரம்


எப்பொழுது மனிதர்கள் என் ஸந்நிதானம் வந்து சேர்ந்தார்களோ அப்பொழுதே ஸம்ஸாரக்கடலையும் கடந்து விட்டார்கள் என்று காட்டுவார் போல் கடற்கரையில் நிலைப் பெற்றிருக்கும் அந்த பராசக்தி புத்ரனைத் துதிக்கிறேன்.


5.யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா

ஸ்ததைவாபத:ஸந்திதௌஸேவதாம் மே

இதீவோர்மிபங்க்தீர் ந்ருணாம் தர்சயந்தம்

ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம்


ஆர்பரிக்கும் பெருங்கடல் அலைகள் சற்று நேரத்தில் அடங்கிவிடுவது போல என்னை ஸேவிக்கும் பக்தர்களின் இன்னல்கள் இடம் தெரியாமல் போய்விடும்... என்று குறிப்பிடத்தானோ இவர் இப்படி கடலலைகளைக் காட்டுகின்றார்!அவ்வாறு காட்சியளிக்கிற குகப்பெருமானை எப்பொழுதும் ஹ்ருதயக்கமலத்தில் த்யானிக்கிறேன்.


6.கிரௌ மந்நிவாஸே நரா யேsதிரூடா

ஸ்ததா பர்வதே ராஜதே தேsதிரூடா:

இதீவ ப்ருவந்கந்தசைலாதிரூட:

ஸ தேவோ முதே மே ஸதா ஷண்முகோsஸ்து


நான் வஸிக்கும் மலை மீது எவர் ஏறி வந்தனரோ அவர் அப்போதே மலை போன்று மிக உயர்ந்த பதவியில் விளங்குவர் - என்று கூறுவார் போல கந்தமாதன மலையில் வீற்றிருக்கும் ஷண்முகப்பெருமான் என்னை மகிழ்விக்கட்டும் .


7.மஹாம்போதிதீரே மஹாபாபசோரே

முநீந்த்ராநுகூலே ஸுகந்தாக்ய சைலே

குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்

ஜநார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம் தம்


பெருங்கடற்கரையில் மஹாபாபங்களைப் போக்கும் முனிவர்க்கு இசைவான கந்தகமான மலையில் குகைக்குள் குடிகொண்டு விளங்கும் அனைவரது அல்லல் தீர்க்கும் குஹனை சரணடைகிறோம்.


8.லஸ்த்ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காம தோஹே

ஸுமஸ்தோமஸஞ்சந்நமாணிக்யமஞ்சே

ஸமுத்யத்ஸஹஸ்ரார்கதுல்யப்ரகாசம்

ஸதா பாவயே கார்திகேயம் ஸுரேசம்


மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுகின்ற, மலர் நிரம்பிய தங்கக்கட்டிலில், தங்கமயமான விமானத்தின்கீழ் ஆயிரம் சூரியர்கள் போல் ஒளி வீசுகிற கார்த்திகேயனை எக்கணமும் த்யானிக்கிறேன்.


9.ரணத்தம்ஸகே மஞ்ஜுலேsத்யந்தசோணே

மநேஹரிலாவண்யபீயூஷபூர்ணே

மந:ஷட்பதோ மே பவக்லேசதப்த:

ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே


அன்னப்பறவைகள் கால்மாறிப் போய்விட்டதே என ஒல மிட ஹேதுவானதும் அழகியதும், மிகவும் சிறப்பானதும், மனதைக்கவரும் அழகமுதம் நிரம்பப் பெற்றதுமான ஸ்கந்த பெருமானே!உனது திருவடிதாமரையில் என் மனதாகிய தேனீ நிலையாக களிப்படையட்டும்.


10.ஸுவர்ணாபதிவ்யாம்பரைர்பாஸமாநாம்

க்வணத்கிங்கிணீமேகலாசோபமாநாம்

லஸத்தேமபட்டேந வித்யோதமாநாம்

கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்யமாநாம்


தங்கமென பளபளக்கும் திவ்யமான ஆடையும், ஒலிக்கும் சலங்கை மேகலையும், தங்கப்பட்டையும் கொண்டு ஜ்வலிக்கும் இடுப்பை, ஸ்கந்தனே!த்யானம் செய்கிறேன்.


11.புலிந்தேசகநேயாகநாபோகதுங்க

ஸ்தநாலிங்கநாஸக்தகாச்மீரராகம்

நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர:

ஸ்வபக்தாவநே ஸ்வர்தா ஸாநுராகம்


ஸ்ரீ வல்லிதேவியின் பருத்து விம்மிய மார்பகத்தில் ஆலிங்கனம் செய்யும்போது குங்குமப்பூகலந்த சந்தனப்பூச்சு படிந்த உனது மார்பை வணங்குகின்றேன். தாரகனை அழித்த வேலவா!அந்த உன் மார்பு, பக்தர்களின் பாதுகாப்பில் அனவரதமும் அக்கரை கொண்டதன்றோ!


12.விதௌ க்லுப்தத்ண்டாந்ஸ்வலீலாத்ருதாண்டா-

ந்நிரஸ்தேபசுண்டாந்த்விஷத்காலதண்டாந்

ஹதேந்த்ராரிஷண்டாஞ்ஜகத்த்ராண சௌண்டாந்

ஸதா தே ப்ரசண்டாஞ்ச்ரயே பாஹ§தண்டாந்


ப்ரம்ம தேவனுக்கே தண்டனை கொடுத்தும், எளிதில் அண்டசாரங்களைத் தாங்கியும், கஜாஸுரன் துதிக்கையை ஒதுக்கித்தள்ளியும், எதிரிகளை காலதண்டமென வெருட்டியும், இந்திரனின் எதிரிகளை அவ்வப்போது அழித்து உலகைக் காக்கத்திறம் பெற்றும் விளங்கிய உன் பன்னிரு கைகளை சரணமடைகின்றேன்.


13.ஸதா சாரதா:ஷண்ம்ருகாங்கா யது ஸ்யு:

ஸமுத்யந்த ஏவ ,¢திதாச்சேத்ஸமந்தாத்

ஸதா பூர்ணபிம்பா:கலங்கைச்ச ஹிநா

ஸ்ததா த்வந்முகாநாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம்


ஒ ஆறுமுகப் பெருமானே!உனதருளால் ஒருவேளை இளவேனிற்காலத்து சந்திரர்கள் அறுவர் நாற்புரமும் தோன்றுபவராகவும், கசடு இல்லாமல் முழு வடிவில் இருப்பவராகவும் இருந்தால் உனது முகத்திற்கு அவரை ஒப்புவமையாகக்கூற இயலும்.


14.ஸ்புரமந்தஹாஸை:ஸஹம்ஸாநி சஞ்சத்

தடகாக்ஷ£வலீப்ருங்கஸங்கோஜ்ஜ்வலாநி.

ஸுதாஸ்யந்திபிம்பாதராணீசஸ¨நோ

தவாலோகயே ஷண்முகாம் போருஹாணி


ஒ மஹேசன் மைந்தனே!உன் முகங்கள் ஆறும் ஆறு தாமரைகள் எனக்காண்கிறேன். அவற்றில் புன்முறுவல் இருப்பதால் அன்னங்கள் உள்ளன. கடைக்கண்கள் துவள்வதால் அழகிய தேனிக்கள் அசைந்தாடுகின்றன. அமிருதமே சிந்தும் சிவந்த உதடுகள் இருப்பதால் தேனுக்குப் பஞ்சமில்லயே!


15.விச்லேஷ§ கர்ணாந்ததீர்கேஷ்வஜஸ்ரம்

தயாஸ்யந்திஷ§ த்வாதசஸ்வீக்ஷணேஷ§

மயீஷத்கடாக்ஷ:ஸக்ருத்பாதிதச்சேத்-

பவேத்தே தயாசீல கா நாம:


ஒ கருணை காட்டும் ஸ்வபாவமுள்ளவனே!உனக்கு பனிரெண்டு கண்கள், அவை காதுவரை நீண்டவை, பரந்தவை, கருணைததும்பும் இணத்தவை, என் மீது சிறிய கடாக்ஷம் விழக்கூடாதா?அதில் உனக்கு என்ன இழப்பு ஏற்படும்?


16.ஸுதாங்கோத்பவோ மேsஸி ஜீவேதி ஷட்தா

ஜபந்மந்த்ரமீசே முதா ஜிக்ரதே யாந்

ஜகத்பாரப்ருத்ப்யோ ஜகந்நாத தேப்ய:

கிரீடோஜ்ஜ்வ்லேப்யோ நமோ மஸ்தகேப்ய:


என்னில் பிறந்த குழந்தாய்!நீ பல்லாண்டு வாழ்க... என்று ஆறுமுறை மந்திரத்தை ஜபித்து பரமேச்வரன் உச்சிமுகர்ந்த அந்த ஆறு தலைகளுக்கு என் நமஸ்காரங்கள். ஒ ஜகன்னாத!அவை கிரீடமணிந்து அழகாய் இருப்பவை மட்டுமில்லை. உலகபாரம் முழுவதும் தாங்குபவை ஆயிற்றே!


17.ஸ்புரத்ரத்நகேயூரஹாராபிராம-

ச்சலத்குண்டலஸ்ரீலஸத்கண்டபாக:

கடௌ பீதவாஸா:கரே சாருசக்தி:

புரஸ்தாந்மமாஸ்தாம் புராரேஸ்தநூஜ:


'பளிச்'என விளங்கும் ரத்ன கேயூரம், ஹாரம் இவற்றால் அழகியவரும், அசையும் குண்டலங்கள் அழகுமிளிர பளபளக்கும் கன்னக்கதுப்புடனும், இடையில் மஞ்சள் பட்டும், கையில் அழகிய சக்தி ஆயுதமும் கொண்ட புராரியின் புதல்வன் என் முன்னே தோன்றட்டும்.


18.இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தாந்ப்ரஸார்யா

ஹ்வயத்யாதராச்சங்கரே மாதுரங்காத்

ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்

ஹராச்லிஷ்டகாத்ரம் ப்ஜே பாலமூர்திம்


குழந்தாய் இங்கே ஒடி வந்துவிடு!என்று கைகளை நீட்டி சங்கரன் பரிவுடன் கூப்பிடுகையில், தாயின் மடியிலிருந்து தாவி தந்தையை அடைந்தவுடன், அவர் இருக அணைத்துக்கொண்ட பால ஷண்முகனை நான் ஸேவிக்கிறேன்.


19.குமாரேசஸ¨நோ குஹ ஸ்கந்த ஸேநா

பதே சக்திபாணே மயூராதிரூட

புலிந்தாத்மஜாகாந்த பக்த்தார்திஹாரிந்

ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷ மாம் த்வம்


ஒ குமாரரே!ஈசன் மகனே!குஹனே!ஸ்கந்தனே!ஸேனாபதியே!சக்தி பாணியே!மயில்வாஹனனே!வள்ளிமணாளனே!பக்தர் துயர் துடைப்பவனே!ப்ரபுவே!தாரகனை ஸம்ஹரித்தவனே!என்னை எப்போதும் காப்பாயாக!


20.ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸஞ்ஜ்ஞே விசேஷ்டே

கபோத்காரிவக்த்ரே பயோத்கம்பிகாத்ரே

ப்ரயாணோந்முகே மய்யநாதே ததாநீம்

த்ருதம் மே தயாலோ பவாக்ரே குஹ த்வம்


புரக்கரணங்கள் அடங்கி, உணர்வற்று, செயலற்று கபங்கொண்டும் வாயுடனும், பயந்தால் நடுங்கும் உடலுடனும், கவனிப்பாரில்லாமல் நான் மேலுலகம் புறப்படும் ஸமயத்தில் என்முன்னே தோன்றுவீராக!ஹே தயாபரனே!குக!


21.கருதாந்தஸ்ய தூதேஷ§ சண்டேஷ§ கோபா-

த்தஹ ச்சிந்த்தி பிந்த்தீதி மாம் தர்ஜயத்ஸு

மயூரம் ஸமருஹ்ய மா பைரிதி த்வம்

புர:சக்திபாணிர்மமாயஹி சீக்ரம்.


யமதூதர்கள் கொடியவர்கள்;அவர்கள் கோபத்துடன் இவனைக் கொளுத்து, வெட்டு, பிளந்து தள்ளு - என்று அதட்டுகையில் ஆறுமுகனே!நீ மயில்மீதேறி பயப்படாதே என்று தேற்றிக்கொண்டு சக்தி ஆயுதத்துடன் சட்டென என் முன்னே வந்துவிடு.


22.ப்ரணாம்யாஸக்ருத்பாதயோஸ்தே பதித்வா

ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்தயேsநேகவாரம்

ந வக்தும் க்ஷமோsஹம் ததாநீம் க்ருபாப்தே

ந கார்யாந்தகாலே மநாகப்யுபேக்ஷ£


ஹே ப்ரபோ!உமது கால்களில் வீழந்து நமஸ்கரித்து கெஞ்சிப் பலமுறை பிரார்த்தித்துக் கொள்கிறேன். கிருபா ஸமுத்திரமே!அந்த கடைசீ காலத்தில் நான் சொல்ல முடியாமல் போகலாம். ஒரு போதும் என்னை கைவிடலாகாது.


23.ஸஹஸ்ராண்டபோக்தா த்வயா சூரநாமா

ஹதஸ்தாரக:ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய:

மமாந்தர்ஹ்ருதிஸ்தம் மநக்லேசமேகம்

ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வ யாமி


ஹே ப்ரபோ!பல அண்டபுவனங்களை அனுபவித்து வந்த சூத்ரனையும் தாரகாசுரனையும், சிங்கமுக்ஸுரனையும், தாங்கள் வதைக்கவில்லையா?என் ஹ்ருதயத்திலுள்ள மனக்லேச மொன்றை ஏன் அழிக்கக்கூடாது?நான் என்ன

செய்வேன். உன்னையன்றி நான் வேறு யாரிடம் போவேன்.


24.அஹம் ஸ்வதா து:கபாராவஸந்நோ

பவாந்தீநபந்துஸ்த்வதந்யம் ந யாசே

பவத்பக்திரோதம் ஸதா க்லுப்தபாதம்

மமார்திம் த்ருதம் நாசயோமாஸுத் த்வம்


ஹே உமையவளின் அருமை மகனே!நான் எப்பொழுதும் துன்பச்சுமை தாங்கமுடியாமல் தவிக்கிறேன். நீரோ ஏழை எளியவருக்கு பங்காளன். உன்னையன்றி வேறு எவரையும் வேண்டேன். உன்னிடம் பக்திசெலுத்த தடையாய் இருப்பதும் இடையராது தொந்தரவு செய்வதுமான என் மனக்லேசத்தை ஒழிப்பாயாக.


25.அபஸ்மாரகுஷ்டக்ஷயார்சப்ரமேஹ

ஜ்வரோந்மாதகுல்மாதிரோகா மஹாந்த:

பிசாசாஸ்ச ஸர்வே பவத்பத்ரபூதிம்

விலோக்ய க்ஷணாத்தாரகாரே த்ரவந்தே


தாரகனை ஸம்ஹரித்த வீரனே!உனது பன்னீர் இலை விபூதியைக்கண்டு, அபஸ்மாரம், குஷ்ட்டம், க்ஷயம், அர்சஸ், ப்ரமேகம், ஜ்வரம், உந்மாதம், குல்மம் முதலிய பெரிய வ்யாதிகளும், பிசாசுகளும், ஒரு நொடியில் ஒடிவிடுகின்றவே!என்ன ஆச்சர்யம்!


26.த்ருசி ஸ்கந்தமூர்தி:ச்ருதௌ ஸ்கந்தகீர்தி-

ர்முக் மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்

கரே தஸ்ய க்ருதயம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்

குஹே ஸந்து லீநா மமாசேஷபாவா:


கண்களில் கந்தனின் உருவமே தோன்றட்டும், காதுகளில் கந்தனின் புகழும் முகத்தில் (வாயில்) அவனது புண்யமான சரித்திரமும், கையில் அவனது சேவைச் செயலும், உடலில் அவனது ஊழியமும் -- இப்படி என் அனைத்து உணர்வுகளும் ஸ்கந்தனைச் சார்ந்தே அமையட்டும்.


27.முநீநாமுதாஹோ ந்ருணாம் பக்திபாஜா-

மபீஷ்டப்ரதா: ஸந்தி ஸர்வத்ர தேவா:

ந்ருணாமந்த்யஜாநாமபி ஸ்வார்த்ததாநே

குஹாத்தேவமந்யம் ந ஜாநே ந ஜாநே


எல்லா தேவர்களும், முனிவர்களுக்கோ, பக்தியுள்ள மனிதர்களுக்கோ தான் அவரது காமனைகளைப் பூர்த்தி செய்பவராக உள்ளனர். ஆனால் பின்தங்கிய மக்களுக்கும் விருப்பம் நிறைவேற்றிவைப்பதில் குஹனைத் தவிர வேறு கடவுளை அறியேன்.


28.ம்ருகா:பக்ஷிணோ தம்சகா:யே ச துஷ்டா-

ஸ்ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே

பவச்சக்திதீக்ஷ்ணாக்ரபிந்நா:ஸுதூரே

விநச்யந்து தே சூர்ணிதக்ரௌஞ்சசைல


எனக்கு துன்பம் விளைவிக்கும் துஷ்ட மிருகங்களும், பறவைகளும், ஈ, கொசு முதலியவைகளும், தங்களது சக்தி ஆயுதத்தின் கூறிய முனையால் சிதறியடிக்கப்படட்டும், அழியட்டும். தாங்கள் க்ரௌஞ்ச மலையை பொடிப் பொடியாகச் செய்யவில்லையா?


29.ஜநித்ரீ பிதா ச ஸ்வபுத்ராபராதம்

ஸஹேதே ந கிம் தேவஸேநாதிநாத

அஹம் சாதிபாலோ பவாந் லோகநாத:

க்ஷமஸ்வாப்ராதம் ஸமஸ்தம் மஹேச


ஹே தேவஸேனையின் தலைவரே!தாயும் தந்தையும் தமது மகன் தவறை பொருத்துக் கொள்வதில்லையா?நானோ மிகவும் சிறு பாலகன். தாங்கள் உலகத்தந்தை:ஆகவே எனது அனைத்து அபராதங்களையும் மன்னித்து அருளிவீராக.


30.நம:கேகித சக்தயே சாபி துப்யம்

நமச்சாக துப்யம் நம:குக்குடாய

நம:ஸிந்தவே ஸிந்துதேசாய துப்யம்

புந:ஸ்கந்தமூர்த்தே நமஸ்தே நமோஸ்துது


மயிலுக்கும், சக்தி ஆயுதத்திற்கும், ஆட்டுக்கடா, கோழி இவற்றிற்கும் நமஸ்காரம், கடலுக்கும் கடலைச்சார்ந்த இடத்திற்கும் எனது நமஸ்காரம் ஸ்கந்த பெருமானுக்கு பின்னும் பின்னும் நமஸ்காரம்.


31.ஜயாநந்தபூமஞ்ஜயாபாரதாம

ஞ்ஜயாமோககீர்தே ஜயாநந்தமூர்தே

ஜயாநந்தஸித்தோ ஜயாசேஷ பந்தோ

ஜய த்வம் ஸதா முக்திதாநேசஸ¨நோ


ஆனந்தப் பெருக்கே!உனது பக்கம் ஜயிக்கட்டும். ஒளி மிகுந்தவனே!உனக்கு ஜபம் பயன்மிக்கப் புகழோனே!உலகனைத்திற்கும் பங்காளனே!உனக்கு ஜயம் உண்டாகட்டும் அனந்த மூர்த்தியாய் மோக்ஷம் நல்கும் பரமேச்வரனின் மைந்தனே!உனக்கு ஜயம், ஜயம்.


32.புஜங்காக்ய வ்ருத்தேன க்லுப்தம் ஸத்வம் ய:

படேத்பக்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய

ஸ புத்ராந்கலத்ரம் தநம் தீர்க்மாயுர்

லபேத்ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நர:ஸ;


புஜங்கப்ரயாதம் என்ற விருதத்தில் அமைக்கப்பெற்ற இந்த ஸ்தோத்திரத்தை எவரெவர் குகனை வணங்கி பக்தியுடன் படிக்கின்றனரோ அவரெல்லாம் மனைவி

மக்களையும் செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் பெறுவர். கடைசியில் ஸ்கந்தனுடன் ஐக்யத்தையும் அடைவர்.

 

கந்தா சரணம்....

காக ( காக்கா ) சாஸ்த்திரம்

 காக ( காக்கா ) சாஸ்த்திரம்....


பித்ருக்கள் தான் காகத்தின் வடிவில் பூலோகத்தில் வலம் வருவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. 


காகங்களுக்கு முக்காலங்களையும் அறியும் சக்தி இருக்கின்ற காரணத்தால் தான், அது, ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய நல்லது, கெட்டதை முன்கூட்டியே தெரிவிக்கும் விதமாக பல்வேறு சமிக்ஞைகள் மூலமாக உணர்த்துகின்றன என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.


அதையடுத்து, காகங்களின் சிறப்பு மற்றும் அதன் அறிவிப்பு குறித்தும், காகத்தை வணங்குவதால் யார், யாருடைய அருள் கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.


□ சிறப்பு...


காகத்திற்கு மற்ற பறவைகளிடத்தில் இல்லாத ஒரு தனிக்குணம் உள்ளது.


மனிதர்களைப் போலவே காகம் தீட்டை அனுஷ்டிக்கும். ஆனால், மற்ற பறவைகள் தீட்டுகளை பார்க்காது.


ஏதாவது ஒரு காகம் இறந்து விட்டால், அந்த காகத்தை சுற்றி மற்ற காகங்கள் மொத்தமாக நின்று "கா கா" என்று குரலெழுப்பி இறந்த காகத்திற்காக துக்கம் அனுஷ்டிக்கும்.


அதன்பின்பு அந்த காகங்கள் எல்லாம் நீர்நிலைக்கு சென்று தன்னுடைய தலையை நீரில் நனைத்து, மனிதர்களுக்கு இணையாக தீட்டை கடைபிடிக்கும் வழக்கம் காக்கைக்கு உண்டு.


அதேபோல், தீட்டான சாப்பாட்டை காகங்கள் சாப்பிடாது என்பது குறிப்பிடத்தக்கது.


□ புண்ணியம்...


இவ்வாறு பல சிறப்புகளைக் கொண்ட காகத்திற்கு தினம்தோறும் உலர் திராட்சையை உணவாக வைப்பது சிறந்தது.


அதனால் கிடைக்கும் புண்ணியம் ஏழேழு ஜென்மத்திற்கும் தொடரும்.


மேலும், உங்கள் வாழ்வு முடியும் வரை வாழ்க்கையில் எந்தவிதமான துன்பங்களும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.


வாழ்வின் இறுதிக்காலம் வரை மிக சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும் என்று காக சாஸ்திரம் கூறுகிறது.


□ அறிவிப்பு...


சில வீடுகளில் காகம் தொடர்ந்து கரைந்து கொண்டே இருந்தால் வீட்டில் சுப செலவுகள் வரப்போகிறது என்பதை குறிக்கிறது.


சிலருக்கு காகம் தன்னுடைய இறக்கை அல்லது கால்களால் தலையில் தட்டி விட்டுப் போகும் அல்லது அவர்கள் மேல் எச்சில் போடும்.


இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் உங்களுக்கு வரக்கூடிய ஆபத்தை, கெடுதலை தடுப்பதற்காகத்தான், காகம் எச்சிலை போட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.


பயனத்தின்போது காகம் வலமிருந்து இடம் போவது தன லாபத்தையும், இடமிருந்து வலம் போவது நஷ்டத்தையும் உண்டாக்கும்.


பயணம் செல்பவரை நோக்கி காகம் கரைந்துகொண்டே பறந்து வந்தால், பயணத்தைத் தவிர்த்துவிட வேண்டும்.


ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவூட்டும் காட்சி தென்படுமானால் பயணம் இனிதாகும்.


பூஜை செய்வது போன்று காகம் பூக்களைக் கொண்டு மேலே தூவினால் அந்த பயணத்தால் லாபம் ஏற்படும்.


வாகனம், குடை, காலணி ஆகியவற்றின்மீது எச்சம் இட்டால் பயணத்தின்போது உணவுக்குப் பஞ்சம் இருக்காது.


ஒரு பெண்ணின் தலையில் ஏந்தியுள்ள குடத்தின்மீது காகம் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டால் தன லாபம் மற்றும் பெண்களால் நன்மை உண்டு


ஒருவருடைய பயணத்தின்போது அவரது வாகனம், குடை, காலணி அல்லது அவர் உடல், நிழல் ஆகியவற்றை காகம் தன் சிறகால் தீண்டினால் பயணத்தின்போது அவருக்கு பெரும் ஆபத்து நேரிடலாம்.


காரணமின்றிச் சுற்றிச் சுற்றிப் பறக்கும் காகம் எதிரிகள் தொல்லையை தெரிவிக்கிறது. இரவில் அசாதாராணமாகப் பறக்கும் காகம் அந்தப் பகுதிக்கு ஏதோ ஆபத்து நேரிடப்போகிறது என்பதை அறிவிக்கிறது.


□ யாருடைய அருள்...


காகத்திற்கு தினந்தோறும் உணவு அளிப்பதால் பித்ருக்களின் ஆசீர்வாதமும், சனிபகவானின் ஆசீர்வாதமும் கிடைக்கிறது.


காகத்திற்கு உணவு வைக்கும் போது, எமதர்மனின் ஆசீர்வாதம் மற்றும் விநாயக பெருமானின் ஆசீர்வாதத்தையும் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ஏன் தெரியுமா?

 காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ஏன் தெரியுமா?

ஸ்ரீ காலபைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி இன்னும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை.இன்று 6/11/2021 சனிக்கிழமை வணங்குவோம் 


காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர், ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவரும்படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார். எங்கும் லிங்கங்கள். எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார். காசியின் காவலாகிய காலபைரவர் அது கண்டு கோபித்தார். என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்? என்று கூறித் தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி இன்னும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை.


பைரவர்மூலமந்தரம் ;


ஓம் ஹ்ரீம் வம் வடுகாய அபதுத்தாரனாய

குரு குரு வடுகாய ஹ்ரீம்||

ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்: ஹ்ரைம்

ஹ்ரெளம், க்ஷம், க்ஷேத்ரபாலாய நம:


பைரவர் காயத்ரீ;


சுவாந த்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி

தந்நோ பைரவ: ப்ரசோதயாத்||


ஒம் தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே க்ஷேத்ரபாலாய தீமஹி

தந்நோ பைரவ: ப்ரசோதயாத்||


நிசாசராய வித்மஹே சுவைஹய தீமஹி

தந்நோ பைரவ: ப்ரசோதயாத்||

கணியன் பூங்குன்றனார் எழுதிய யாதும் ஊரே யாவரும் கேளிர்....

 பழமையான பாடல் ஓன்று...

                  இன்று உலகம் முழுவதும்

தேடப்பட்டு, உச்சரிக்கப்படுகிறது.

அது கணியன் பூங்குன்றனார் எழுதிய

யாதும் ஊரே யாவரும் கேளிர்....


இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது. பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் 

சொல்கிறது.....

முழு பாடலும்... அதன் பொருளும்....

உங்களுக்காக இன்று சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன்....


யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;


சாதலும் புதுவது அன்றே;

வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;

முனிவின் இன்னாது என்றலும் இலமே;


மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது

கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்


முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்...

ஆதலின் மாட்சியின்

பெயோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

          -  கணியன் பூங்குன்றனார்


பாடலின் வரிகளும், பொருளும்:

---------------------------------------------------------


"யாதும் ஊரே யாவரும் கேளிர்...."


எல்லா ஊரும் எனது ஊர்....

எல்லா மக்களும் எனக்கு உறவினர் என்று நினைத்து,

அன்பே வாழ்வின் அடிப்படை, ஆதாரம் என்று வாழ்ந்தால் ல், இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது........ சுகமானது......


"தீதும் நன்றும் பிறர் தர வாரா...."


தீமையும், நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை....... எனும் உண்மையை, உணர்ந்தால், சக மனிதர்களிடம், விருப்பு வெறுப்புஇல்லா ஒரு சம நிலை, சார்ந்த வாழ்வு கிட்டும்.....


"நோதலும் தனிதலும், அவற்றோ ரன்ன...."


துன்பமும் ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை....

மனம் பக்குவப்பட்டால், அமைதி அங்கேயே கிட்டும்...


"சாதல் புதுமை யில்லை...."


பிறந்த நாள் ஒன்று உண்டெனில்.....

இறக்கும் நாளும் ஒன்று உண்டு....

இறப்பு புதியதல்ல....

அது இயற்கையானது....

எல்லோருக்கும் பொதுவானது....

இந்த உண்மையை உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்....

எதற்கும் அஞ்சாமல், வாழ்க்கையை, வாழும் வரை ரசிக்கலாம்.......


"வாழ்தல் இனிது என, மகிழ்ந்தன்றும் இலமே...."

முனிவின் இன்னாது என்றலும் இலமே....."


இந்த வாழ்க்கையில் எது, எவர்க்கு, எப்போது, என்னாகும் என்று

எவர்க்கும் தெரியாது.....

இந்தவாழ்க்கை மிகவும்

நிலை அற்றது.....

அதனால், இன்பம் வந்தால்

மிக்க மகிழ்வதும் வேண்டாம்...

துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்......

வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்......


"மின்னோரு வானம், 

தண்துளி தலைஇ, 

ஆனாது கல்பொருது, 

இரங்கும்வ மல்லல், 

பேர்யாற்று நீர்வழிப், 

படூஉம் புணைபோல், 

ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்....."


இந்த வானம் நெருப்பாய்,

மின்னலையும் தருகிறது....

நாம் வாழ  மழையையும்

தருகிறது.....

இயற்கை வழியில் அது, அது

அதன் பணியை செய்கிறது....


ஆற்று வெள்ளத்தில், கற்களோடு, அடித்து முட்டி செல்லும்படகு போல,

வாழ்க்கையும், சங்கடங்களில் அவர்... அவர் ஊழ்படி அதன் வழியில்

அடிபட்டு போய்கொண்டு

இருக்கும்....

இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்...


"ஆதலின், மாட்சியின்,

பெரியோரை வியத்தலும்,

இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே...."


இந்த தெளிவு பெற்றால்.....

பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து

மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம்...

சிறிய நிலையில் உள்ள சிறியவர்களைப் பார்த்து

ஏளனம் செய்து இகழ்வதும் வேண்டாம்....

அவரவர் வாழ்வு அவரவர்க்கு.....

அவற்றில் அவர், அவர்கள் பெரியவர்கள்...


இதை விட வேறு எவர்

வாழ்க்கைப் பாடத்தை

சொல்லித் தர முடியும்?


எழுதியவர் ஊர் சிவகங்கை மாவட்டம்

திருப்பத்தூர் தாலுக்கா மகிபாலன்பட்டி கிராமத்தில்....


அவர் பிறந்த இடத்தில் நம்மை ஒரு 

பாழடைந்த பலகை மட்டுமே நம்மை

வரவேற்கிறது.....


வாழ்க 

கழகங்களின் தமிழ்த்தொண்டு.......