Monday, 31 August 2020

தேவ ரகசியம்

*#தேவ #ரகசியம்!*

*ஒரு தாய் அப்போதுதான் ஒரு குழந்தையை பிரசவித்திருக்கிறாள். அந்தக் குழந்தையின் தந்தை ஒரு வாரத்துக்கு முன்னால்தான் இறந்து போனான்.*

*எமதர்மன் ஒரு எமதூதனை அனுப்பி "அந்த அம்மாவுடைய உயிரை எடுத்துக் கொண்டு வந்துவிடு" என்கிறான்.*
*இந்த எமதூதன் நினைக்கிறான், "ஐயோ பாவம் அப்பாவும் இல்லை, அம்மாவையும் நான் எடுத்துக்கொண்டு போய்விட்டால்  இந்த குழந்தைக்கு யார் கதி" என்று எடுக்காமல் திரும்பி விட்டான்.*

*நீங்களெல்லாம் அந்த நிலையில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்று ஒரு எண்ணங்களை வைத்திருக்கிறீர்கள். அளவுகோல்களை வைத்திருக்கிறீர்கள்.*

*ஆக, எமதூதன் அந்த குழந்தைக்கு யார் கதி என்று நினைத்து பரிதாபப்பட்டதனால் உயிரை எடுக்காமல் போய்விட்டான்.*

*ஆனால், அங்கே எமன் சொல்லிவிட்டார்,  "உனக்கு தேவலோக ரகசியங்கள் தெரியவில்லை.*

*கடவுளுடைய அருளாட்சி எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை.*

*அது தெரிகிற வரைக்கும் பூமியில் போய் கிட" என்று அவனை தூக்கி பூமியில் போட்டுவிட்டார்.*

 *அவன் ஒரு பூங்காவில் முனகிக் கொண்டு கன்னங்கரேலென்று கிடக்கிறான்.* *அப்போது அந்த வழியாக வருகிற ஒரு தையற்காரன்,*
*"என்னடா இது,  இங்கே முனகல் சத்தம் கேட்கிறதே" என்று அவனைப் பார்த்து விட்டு, இவனிடம் இருந்த துணியை அவனுக்கு போடுகிறான்.*
*மேலும் "என்னுடன் வா" என்கிறான்.*

*எமதூதன் ஒரு வார்த்தை பேசவில்லை.*
*தையற்காரனுடன் அவன் வீட்டுக்குச் சென்றான்.* *திண்ணையில் எமதூதனும்,  அந்த தையற்காரனும் படுத்துக் கொண்டிருக்கிறார்கள்.*

*அந்த தையற்காரனின் மனைவி தையற்காரனை மட்டும், "வா வா வந்து கொட்டிக்கோ"  என்று கூப்பிடுவாள்.*
*அவன் "விருந்தாளி வந்திருக்கிறானே" என்று சொல்வான்.*
*அவள் கணவனை திட்டி விரட்டுவாள்.*

*"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று".  எமதூதன்  ஒன்றும் சொல்ல மாட்டான். போய்க் கொண்டே இருப்பான்.*
*ஒரு பத்து நிமிடம் கழித்து இவள் "சரி சரி வா"  என்று எமதூதனை  மறுபடியும் கூப்பிடுவாள்.*

*அப்போது அவன் லேசாக சிரிப்பான். கன்னங்கரேலென்று இருந்த அவன் உடம்பு கொஞ்சம் பொன்னிறமாக மாறும். ஆனால் ஒன்றும் பேச மாட்டான்.*

 *தையற்காரன் சொல்வான், "எனக்கு இந்த காஜா போடுவதற்கு பட்டன் தைப்பதற்கு எல்லாம் ஆளில்லை . தங்குவதற்கு இடமும் சாப்பாடும் போடுகிறேன். எங்கள் வீட்டில் இருந்து கொள்" என்று சொன்னான்.!!*

*எமதூதன் டெய்லரிங் அசிஸ்டண்ட் ஆகிவிட்டான்.*

*ஒரு பத்து வருடம் ஆகிறது. ஒரு குதிரை வண்டியில் ஒரு பணக்கார பெண்மணி கை கொஞ்சம் முடமாக இருக்கிற குழந்தை, அத்துடன் ஒரு நல்ல ஆரோக்கியமான குழந்தை என இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு வந்து தையற்காரனிடம்* *"இந்தக் குழந்தைக்கு நல்லா தளர்வாக தைக்க வேண்டும். கை கொஞ்சம் சரி இல்லாமல் இருக்கிறது" என்று சொல்வாள்.*

*எமதூதன் அந்த குழந்தையையும் பார்ப்பான். அந்த பணக்கார பெண்மணியையும் பார்ப்பான். சிரிப்பான். அவன் உடம்பு இன்னும் கொஞ்சம் பொன்னிறமாக மாறும்.*

*இன்னும் ஒரு ஐந்து வருடம் ஆகிவிடும்.*

*ஒருநாள் ஒரு பெரிய பணக்காரன் பென்ஸ் காரில் வருவான். வந்து "இந்தாங்க பத்து மீட்டர் துணி இருக்கிறது. இதிலே 20 வருஷம் தாக்குப் பிடிக்கிற மாதிரி சூப்பராக சபாரி சூட் தையுங்கள்" என்று சொல்லி கொடுத்து விட்டுப் போவான்.*

*அதற்குள் நம் எமதூதன் தேர்ந்த தையற்காரன் ஆகிவிடுகிறான்.*

*முதல் நாள் போய்விட்டது.*
*இரண்டாம் நாள் போய்விட்டது.*

*தையற்காரன், "நாளை டெலிவரி , அந்த பணக்காரன் வந்து கேட்பான்,  என்ன சொல்வது?"  என்று கேட்கிறான்.*

*இவன் டர்ரென்று  அந்த பேண்ட் துணியை கிழிப்பான். ஒரு தலையணை உறை, பெட் கவர் தைப்பான். தையற்காரன் திட்டுவான்". என் பிழைப்பில் மண்ணை போடுவதற்கு வந்தாயா? இப்போது அவன் வந்து கேட்டால்  நான் என்ன பண்ணுவது?" என்பான்.*

*அப்போது கார் டிரைவர் ஓடி வருவான்.  "நீங்கள் சபாரி தைக்காதீர்கள். என் முதலாளி இறந்து விட்டார். அதனால் அவருக்கு ஒரு தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்து விடுங்கள்"  என்று சொல்வான்.*

*இவன் முகத்தில் சிரிப்பு வரும் முழுவதும் பொன்னிறமாக மாறி விடுவான்.*
*அப்படியே மேலே போவான்.* 

*அப்போது தையற்காரன்  சொல்வான், "அப்பா நீ யார்? வாழ்க்கையில் இதுவரைக்கும் மூன்று முறைதான் சிரித்தாய். ஒவ்வொரு தடவை சிரிக்கிற போதும் உன் உடம்பு பொன்னிறமாக மாறியது. அதனால் அதற்கு விளக்கத்தை சொல்லிவிட்டு,  நீ போ" என்பான்.*

*அவன் "நான் எமனுடைய தூதுவன். ஒரு தாய் இறந்து விட்டால், அந்த குழந்தைக்கு யார் கதி என்று அந்த தாயின் உயிரை எடுக்காமல் விட்டதனால் பூமியில் போய் தேவ ரகசியத்தை தெரிந்து கொண்டு வா" என்று அனுப்பினார்கள். அதனால் வந்தேன்.*

*"என்ன தெரிந்து கொண்டாய்?"  என்று இவன் கேட்பான்.*

*முதல் நாள் உன் மனைவி என்னை அடிக்க வந்தாள் அல்லவா...?*
*அப்போது அவள் முகத்தில் தரித்திர தேவி தெரிந்தது.*
*பத்தாவது நிமிடம் என்னை சாப்பிட வாவா என்று கூப்பிடும் போது அன்னை மகாலட்சுமி தெரிந்தார்.*
*அப்போது, இந்த உலகத்தில் "ஒருவன் பணக்காரன் ஆக இருப்பதற்கும்  ஏழையாக இருப்பதற்கும் அவனுடைய எண்ணங்கள்தான் காரணம்"  என்று தெரிந்து கொண்டேன். இது போய்விட்டு அது வருவதற்கு பத்து நிமிடம் தான் தேவை என்றும் தெரிந்து கொண்டேன்.*
*#இதுதான் #தேவரகசியம் #ஒன்று!*

*மனிதர்களிடமே  பெரிய திட்டங்கள் எல்லாம் இருக்கிறது.  ஆனால் எந்த கார்டை வைத்து விளையாடுவது என்று தெரியாததினால்  வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள்.*

*"பத்து வருடம் கழித்து ஒரு பணக்கார பெண்மணி குதிரை வண்டியில் வந்தாள் அல்லவா...?*
*அவளுடன் ஒரு குழந்தை கை முடமாக வந்தது அல்லவா...?*
*அதுதான் நான் இதற்கு அம்மா இறந்து விட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்த குழந்தை.*

*நிஜமான தாய் ஏழை. அவள் இறந்து விட்டால் கூட இந்த குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்வதற்கு,  இதற்கு கொஞ்சம் தளர்வாக தைக்கவேண்டும் என்று சொல்கிற அளவிற்கு ஒரு பணக்கார அன்பான அம்மாவை இறைவன் தயாராக வைத்திருக்கிறான்.  இது எனக்கு தெரிந்த போது இரண்டாவது முறை சிரித்தேன்.*
*ஒரு எமதூதன் ஆகிய எனக்கே பச்சாதாபம் இருக்கிறபோது, இறைவனுக்கு இருக்காதா? அவன் அதற்கு ஒரு மாற்று வழி வைத்துக் கொண்டுதான் அந்த உயிரை எடுப்பான். இது எனக்கு தெரிந்தபோது #இரண்டாவது #தேவ ரகசியம் #புரிந்தது.*

*கடவுள் எல்லாம் காரண காரியங்களோடு நடத்துகிறான்.*

*மூன்றாவது #தேவ_ரகசியம்  மூன்று நாட்களில் சாகப் போகிறவன் இன்னும் 20 வருஷம் நான் உயிரோடு இருக்கப் போகிறேன் என்று நினைத்துக்கொண்டு,  நன்றாக 20 வருஷத்திற்கு வருகிற மாதிரி துணி தை என்று சொன்னானே!!*
*"எனக்கு தெரியும் அவன் சாகப்போகிறான்" என்று,  அதனால்தான் நான் துணி தைக்கவே இல்லை.*

*அவன்  இறந்த அந்த நேரத்தில் துணியை கிழித்து தலையணை உறையும், மெத்தை உறையும் தைத்தேன்".*
*இந்த ஜனங்கள் இந்த உலகத்தில் ஏதோ நூறு வருஷம் இருநூறு  வருஷம் கொட்டகை போட்டுக் கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.*

*சாவு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.!!*

*நேற்று இருந்தவன் இன்று இல்லை. அதுதான் இந்தக் கலியுகத்தின் எதார்த்தமான உண்மை!*

*அதுவே தெரியாமல் ஒவ்வொருவனும் நான் மட்டும் ரொம்ப வருஷம் இருப்பேன் என்றும்,  மற்றவன்தான் செத்துக் கொண்டிருக்கிறான் என்றும் நினைக்கிறான் அல்லவா?* *அதுதான் #மூன்றாவது #ரகசியம்!!*

*அதனால்தான் இந்த உலகத்தில் அவன் திறமையாக செயலாற்ற முடியாமல் இன்னும் 20 வருஷம் கழித்து நடக்கப் போகிற குழந்தையுடைய கல்யாணத்திற்கு இன்றைக்கு காசு இல்லையே என்று வருத்தப்படுகிறான்!!*

*இன்னும் 15 வருடம் கழித்து கல்லூரியில் படிக்கப் போகிற பையனுக்கு பணம் இல்லையே என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறான்!!!*
*அதனால்தான் உலகத்தில்  நிம்மதி இல்லாமல் இருக்கிறது. பேசிக் கொண்டிருக்கிறபோது இப்போதே செத்துப் போவோம், என்று நினைத்தால், நீ சந்தோஷமாக இருப்பாய்!*

*இந்த மூன்று ரகசியங்கள்*

*அதாவது ஏழையாக இருப்பதும் பணக்காரன் ஆக இருப்பதும் நம்முடைய எண்ணங்களால் நடக்கிறது.*

*இரண்டாவது எது நடந்ததோ அதற்கு கடவுள் ஒரு மாற்றுவழி வைத்திருப்பார்.*
*மனிதனின் மனநிலையில் உள்ள ஈகோவினாலும்,  அறியாமையினாலும் அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை.*

*மூன்றாவது எந்த நேரத்திலும் சாவு வரலாம்.*
*இது தெரியாமல் மனிதர்கள் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.*
*இந்த #அஞ்ஞானம்தான் உலகில் துக்கங்களுக்கு எல்லாம் காரணம்.*

*இவைதான் அந்த மூன்று #தேவ_ரகசியங்கள் என்பான்.*

*எனவே, நாமும் இந்த தேவ ரகசியங்களை புரிந்து கொண்டு வாழப் பழகி விட்டால், நம் உடலில் உயிர் இருக்கும் வரை நிம்மதியாக வாழலாம்!*

மனிதனின் அடையாளம்

மனதினில் ஒரு கேள்வி - இந்த நண்பன் நடராசன் இப்போது வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறான். நாளை பௌர்ணமி பூஜைக்கு வருவானா , தெரியவில்லையே.


அகத்தியன் மனதினுள் ஒலித்த பதில்  - மகனே நேற்று அவன் வேலையில்லாமல் இருந்தான் இன்று ஒரு வெளி செய்து கொண்டு உள்ளான். நீ வெகு காலமாக வேலை செய்து கொண்டு வருகிறாய். உனது அடையாளமாக என்றுமே இந்த வாங்கி மேலாளர் என்ற அடையாளம் நமது பீடத்துக்கு வரும்போது இருந்ததே இல்லை. ஏன் என்று சிந்தித்து பார்த்தாயா. உனது அடையாளம் என்பது அகத்தியன் என்பது தான். அகத்தியம் உனது அடையாளம். இவ்விதம் மனிதர்கள் தங்களை எளிதில் அடையாளப்படுத்தி கொள்கிறார்கள். வேலையில் மேலாளர் அல்லது அவர்களுக்கு அளிக்கப்பட வேலையில் உள்ள பதவியின் பெயர் கொண்டு தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள. மனிதர்களுக்கு இது மிகவும் சுலபமாக வருகிறது. மேலாளர் என்பது எனது பதவி, எனது அடையாளம் என்பது போய் அந்த டயாளமாகவே மாறி விடுகிறார்கள், கீழதிகாரிகளை கூப்பிட்டு கர்ச்சனை செய்கிறார்கள். இதில் உள்ள சூட்சுமம் என்ன என்றால் மனிதர்களுக்கு இந்த திறமை இருக்கிறது. எதை அடையாளப்படுத்தி கொள்கிறார்களோ அதாகவே ஆகி விடுவது தான் அந்த திறமை. எனவே நான் கூறுவது என்னவென்றால் நமது பீடத்தில் உள்ள அனைவருக்குமே ஒரே அடையாளம் தான். அவன் எந்த வேலை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் சரி. அது தான் "நான் அகத்தியன் " என்ற அடையாளம். அந்த அடையாளமாகவே ஆகி விட்ட ஒருவன் என்னுள் கலப்பது என்பது திண்ணம். இது என்ன அடைய முடியாத காரியமா. உன் வீட்டில் சென்றால் நீ ஒரு தகப்பன் என்ற அடையாளம், அதை மாற்ற முடியுமா, மகன் என்ற அடையாளம், கணவன் என்ற அடையாளம்.  ஆனால் இந்த அடையாளங்களால் என்ன பிரயோஜனம். பிரயோஜனமாக ஏதாவது ஒரு அடையாளம் இருக்குமானால் அது இறைவனின் அடையாளமே. அதனால் தானே இறைவனின் அடையாளமான திரு மண்ணையும் திரு நீரையும் ருத்திராக்ஷத்தையும் சிலுவையும் குல்லாவும் எல்லாமும் அடையாளப்படுத்தி கொள்கிறீர்கள். பிறகு என் இறைவன் போல வேடமும் இட்டு கொண்டு இறைவனாக பாவனை செய்யாமல் இறைவனுடன் கலக்காமல் இந்த பிறவியை மாயையில் வீழ்ந்து கொண்டு இருக்கீர்கள். நாங்கள் உங்களை ஒன்றும் புதிதாக செய்ய சொல்லவே இல்லையே. ஏற்கனவே நீ கொண்டு உள்ள அடையாளத்தை என் அடையாளமாக மாற்று. பிறகு எல்லாமே நானே  கொள்கிறேன் என்று தானே எளிமையான முறையாக கூறுகிறேன். புரிந்ததா மகனே ... ஆசிகள் ..


எழுதியவன்


இவன் "அவன்" ஆனவன்



என்றும் அகத்தியத்துள்

தி. இரா. சந்தானம்
கோவை
அகத்திய சீடன்
பொகளூர் அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம்



Sunday, 30 August 2020

சுகப்ரம்ம மஹரிஷி ஆராதனை

ஓம் நமோ சுக தேவாய நமோ நமஹ 🙏🙏🙏 இன்று ஓணம் திருநாள், மகாபலி சக்ரவர்த்தியை வாமன அவதாரம் எடுத்து முக்தி அளித்த நாள். பெருமாளும் ஈசனும் ஒன்றே என்பது போல, வானத்தையும் பூமியையும் பெருமாள் அளந்து வானளாவி வியாபித்து விஸ்வரூபம் எடுத்ததை நினைவு கூறும் நாள். திருவோனத்துக்குரிய மகரிஷி வேதவியாச புத்திரர், பாகவதம் அருளிய சுகப்ப்ரம்ம மஹரிஷி ஆவார்.  நல்ல நாளாகிய இன்று அவரை ஆராதனம் செய்து ஆசி பெறுவோம்.  *பரசராத்மா ஜம் வந்தே சுக தாதம் தபோனிதிம்* என்று விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் 2 ஆவது வரியிலேயே சுகர் முதன்மை பெறுகிறார். அவர் பெருமை சொல்லி மாளாது. அவர் பாதம் பணிந்து இந்த பதிவை இடுகிறேன். 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

தி.இரா. சந்தானம்


Saturday, 29 August 2020

தருமம் சம்மந்தப்பட்ட கருத்துகள்



நேற்று நமது குழுவை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத புதிய கொடை வள்ளல் பத்தாயிரம் கொடுத்து அதை நல்ல முறையில் இந்த மாத தானத்தில் இல்லாதவர்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்


நான் மிகவும் ஊக்கமடைந்து எவ்விதம் இந்த தான காரியங்களை மேலும் சிறப்பாக செய்வது என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.


எனக்கு எல்லாமே அகத்தியர் தான். அகத்தியர் வேறு தருமர் வேறு இல்லை. தருமர் வெரி தருமம் வேறு இல்லை. 

எம் அய்யனே தருமர் வடிவெடுத்து எம்முள் எண்ணங்களாக தோன்றி பிரதிபலித்த சில விஷயங்களை முடிந்த வரை எழுத்தாக்கம் செய்து, இந்த பதிவின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


முதலில் அனைவரையும் தமிழ் மாத பிறப்பு அன்று அவரவர் இல்லத்தில் விளக்கு ஏற்ற சொல். தருமரை வேண்டு தருமரின் வாக்குப்படி தரும வழியில் தான தருமம் செய்வதால், அவர்களது ஆன்மாவை நம்மில் கொண்டு வர நம் இல்லில் ஐந்து ஐந்தாக வைத்து வழிபட வேண்டும். அதாவது ஒரு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி கோலமிட்டு ஐந்து விளக்கு, ஐந்து மலர்கள் ஐந்து வெற்றிலை ஐந்து பாக்கு ஐந்து எண்ணிக்கை பழம், ஐந்து தூபம் என்று வைத்து - மனதினில் தருமரை பிரார்த்தித்து எழுந்தருளி ஆசி புரிய வேணுமாய் கேட்டுக்கொண்டு இன்று நான் என்னால் முடிந்த ஒரு தொகையை நமது குழுவின் மூலம் தானம் கொடுத்து உள்ளேன், அந்த தானம் சிறப்பாக நடைபெற்று நல்ல பலன்களை வழங்கி நமக்கு புண்ணியத்தை சேர்க்க வேண்டும். மேலும் தான தருமங்கள் இவ்வுலகினில் தழைத்தோங்கிட வேண்டும் என்று வேண்டி கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கி கல்கண்டு நெய்வேத்தியம் வைத்து பிரார்த்தனை செய்து விட்டு தமது அன்றாட பணிகளை துவக்கலாம். மேலும் இந்த மாத பிறப்பு அமாவாசையில் வருவதால் மிக சிறப்பானதாகும்.



மனதினில் ஒரு கேள்வி உள்ளது - எவ்விதம் இந்த தான தருமங்களை மேலும் சிறப்பாக செய்ய முடியும்


பல வகையான தான தருமங்களை செய்ய வேண்டும் - சில வகைகளை கூறுகிறேன்


1. நீர் தானம்


2, நிலம் தானம்


4. கோ தானம்


5. ஆடை தானம்


6. அன்னம் தானம்


7. கல்வி தானம்


8. அறிவு தானம்


9. உடை தானம்


10. விசிறி தானம்


11. குடை தானம்


12. போர்வை தானம்


13. இனிப்பு தானம்


14. கீரை தானம்


15. ஆலய யதானம்


16. சிலை தானம்


17. ருத்திராக்ஷ தானம்


18. தீப தானம்


19. மருந்து தானம்


20.  அந்தணனுக்கு தானம்


21. முதியவருக்கு தானம்


22. மலர்கள் தானம்


23. வெள்ளி தானம்


24. பித்தளை தானம்


25. செம்பு தானம்


26. சங்கு தானம்


27. கலச தானம்


28. கண்ணாடி தானம்


29. கைத்தடி தானம்


30. புஸ்தக தானம்


31. வெள்ளை ஆடை தானம்


32. புடவை தானம்


33. சாக்கடை சுத்தம் செய்பவருக்கு தானம்


34. கோவில் பண்டாரம் அவர்களுக்கு தானம்


இது போல பட்டியல் இட்டுக்கொண்டே செல்லலாம்


தானங்கள் பலவகை ; நாம் கொடுத்து பழக வேண்டும்


குழுவில் அனைவரது ஈடுபாடும் வேண்டும்


தானத்தின் மூலம் வரும் புண்ணியம் முழுமையாக கிடைக்க வேண்டுமானால் , வெறும் பணம் செலுத்துவதோடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல் மேற்கூறிய பஞ்ச தீப வழிபாடு மற்றும் தான் வசிக்கும் ஊரில் உள்ள தானம் பெறுபவர்களை தேர்ந்தெடுத்து ஏதாவது ஒரு தானத்தை தம் கரங்களால் செய்ய வேண்டும். அதற்கு உண்டான பணத்தை குழுவின் பொது நிதியில் இருந்து பெற்று செய்ய வேண்டும். அது தான் முறை. சேர்ந்து செய்யும் காரியங்கள் மிகவும் பெருகி நிறைவான ஆத்ம திருப்தியை அளிக்கும்



நீர் தானம்


பன்னீர் அளிப்பது

குடிநீர் அளிப்பது

புண்ணிய நதிகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்வது

கிணறு அமைப்பது

கங்கை தீர்த்தம் அளிப்பது


நிலம் தானம்


ஆலயத்துக்கு நிலம்


நிலம்  சம்பந்தப்பட்ட தானங்கள்

மரக்கன்று, பூச்செடிகள் தானம்

தரைத்தளம் அமைத்தல்

இருக்கை தானம்

நிலங்களை சாணமிட்டு மெழுகுதல்

மண் கொட்டி சமன் செய்தல்

நில பாதுகாப்பு - வேலி அமைத்தல் போன்றவை


கோ தானம்


கோமாதா வை தானமாக அளித்தல்

கோவிற்கு தேவையான உணவுகளை அளித்தல்

கோ பூஜை செய்தல்

கோ பராமரிப்பில் ஈடுபடுதல்

கோசாலை அமைத்தல்

ஆடி மாடுகளை வாங்கி அவைகளை பராமரித்தல்

கோ இறந்தால் நல்லடக்கம் செய்தல்

கோ சம்ரக்ஷணை யை பற்றி எடுத்து உரைத்தல்


ஆடை தானம்


சிறுவர் சிறுமியருக்கு ஆடை

பெரியவர்களுக்கு வேஷ்டி புடவை

இறை மூர்த்தங்களுக்கு புத்தாடை

கோமாதாவுக்கு பட்டு ஆடை சாற்றுதல்

பூரணாகுதிக்கு பட்டு வஸ்திரம் அளித்தல்


அன்ன தானம்


மளிகை பொருள் அளித்தல்

சமையல் செய்தல்

சமையல் செய்பவர் கூலி அளித்தல்

தன் கைகளால் சமைத்து பரிமாறுதல்

சமைத்த உணவை பரிமாறுதல்

இலை எடுத்தல்

சமையல் தட்டு - பாக்கு மட்டை வாங்கி கொடுத்தல் , வாழை இல்லை வாங்கி கொடுத்தல்

சமையல் எரிபொருள் அளித்தல்

தாம்பூலம் தரிக்க ஏற்பாடு செய்தல்

ஓட்டலில் டோக்கன் வாங்கி இல்லாதவருக்கு கொடுக்கலாம்

ஓட்டலில் பார்சல் வாங்கி இல்லாதவருக்கு கொடுக்கலாம்

காகத்துக்கு அன்னம் மயிலுக்கு அன்னம் குயிலுக்கு அன்னம் மீனுக்கு அன்னம் பைரவருக்கு அன்னம் போன்றவை