Tuesday 29 December 2020

கருப்பராயர் ஆலயம் மேற்கூரை நிறைவு

 நமது பீடத்தின் வாயிலில் உள்ள வெள்ளை கருப்பராயர் அய்யா வுக்கு, அகத்தியர் உத்தரவின் பேரில் பல அன்பர்கள் பொருளுதவி யுடன் மேற்கூரை அமைக்கப்பட்டது.














Monday 28 December 2020

பொகளூர் அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம் - அறிவிப்பு

 *பொகளூர் அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம் - அறிவிப்பு*


வரும் சனிக்கிழமை நம் ஐயனின் குரு பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்படும் நிலையில், பல ஆஸ்ரம ஒருங்கிணைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், பௌர்ணமி க்கு தனியே சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் செய்யவில்லை.


பக்தர்கள் அனைவரும் குரு பூஜையில் கலந்து கொள்ளவும். அய்யன் பல ரூபங்களில் நம்முடன் குரு பூஜையில் இருப்பார். எனக்கு நாடியில் உரைத்துள்ளார். அது ரகசியம். ஆனால் வருபவர் அனைவரும், ஐயனின் திருப்பார்வையிலே விழுவார்கள், நல்ல ஆசீர்வாதம் கிடைக்கும் நல்ல நாள் இது. ஆகவே நழுவ விடாதீர்.


பௌர்ணமி சிறப்பு பூஜை குரு பூஜை அன்றே நடத்தப்படும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Wednesday 23 December 2020

வாழ்க்கை மொத்தமும் ஒரு விளையாட்டு

 இந்த மொத்த  உலகமும் ஒரு வீடியோ கேம் போல துல்லியமாக இருக்கிறது. வீடியோ கேம்ல மொதல்ல ஆரம்பிக்கும் போது நம்ம கேரக்டர் மேல இருந்து உலகத்துக்குள்ள குதிக்கும். குதிச்சவோடனே  அண்ட் பையன் பாப்பான் , நா எந்த கேம் ஐ சொல்றேன் னு உங்குளுக்கு புரிஞ்சிருக்கும் , சூப்பர் மாரியோ கேம் தான் அது, கேம் ஓட குறிக்கோள் வாசலை அடைவது, வாசலை அடைந்தால், அடுத்த லெவலுக்கு போகலாம் , அடுத்த லெவல் பல சவால்கள் இருக்கும். அந்த வாசலுக்கு போகறதுக்கு பல பல தடங்கல்கள் இருக்கும் , சில பேய்கள் எதிரில் வரும், அப்போ நாம அதுங்க மேல படாம எகிறி குதிச்சு தாண்டி போனும் , கொஞ்சம் மூளையை யோசிச்சு பிரயத்தனப்பட்டு ஒரு கரெக்ட்டான எடத்துல எகிறி குதிச்சா நமக்கு பாயிண்ட் கிடைக்கும், புது பவர் கிடைக்கும். நல்ல வெளையான்டா மட்டும் போதாது , ஆட்டம் முடிக்கறதுக்கு ஒரு டயம் கொடுத்து இருப்பான், அதுக்குள்ள நாம பாதி தூரம் தான் போயி இருந்தோம்னா ஒன்னும் பண்ண முடியாது. கேம் ஓவர் ன்னு வந்துடும், அதனால அங்க இங்க வேடிக்க பாத்துட்டு இருக்காம நம்ம போக வேண்டிய இடத்த நோக்கி ஓடிக்கிட்டே இருக்கணும் , போற வழியில கிடைக்குற சக்திகளை எடுத்துக்கிட்டு செல்வங்களை சேத்துக்கிட்டு நிக்காம ஓடி கிட்டே இருக்கணும், பயப்படாம பேய்களை காலால மிதிச்சு தள்ளி முள் செடிகளை தாண்டி குதிச்சு ஓடணும். கேம் தான் உலகம் player 1 தான் நீங்க, நமக்கு கொடுத்த ஆயுள் தான் கேம்  வெளயாடி முடிக்க வேண்டிய டயம். சக்திகள் த்யானம் தவம் யோகம் மூலம் கிடைக்கும், கண்டா கேளிக்கைகளில் ஈடுபட்டால் டயம் முடிந்து போகும் , கதவை அடைய முடியாது. பயம் இல்லாம நம்மளோட கேட்ட குணங்கள எதிர்த்து நின்னு அதுங்கள உதைத்து தள்ளி, சக்திகளை பெற்று, புண்ணியங்களை சேர்த்து, டயம் முடியறதுக்குள்ள ஓடி கதவை அடைய வேண்டும். கேம் ல life இருக்கும், அதாவது உயிர் போயிட்டா திரும்ப அதே எடத்துல புது உயிரோட திருப்பியும் எழுந்து வரும், அதே போல வாழ்க்கையிலே நமக்கு வாழ்க்கை நெறய பாடம் கத்து கொடுக்கும், சில கண்டங்கள் இருக்கும், நாம் சில நேரம் தப்பிச்சு வருவோம், கேம் ல லைப் வேணும்னா நெறய காயின்ஸ் எடுக்கணும். இத்தன காயின்ஸ் எடுத்தா ஒரு லைப் அப்பிடீன்னு கணக்கு இருக்கு, அதே போல உலக வாழ்க்கையிலே , இந்த அளவுக்கு தான தருமம் செய்தா அவனுக்கு மரணத்துல இருந்து தப்பிக்க வைக்க ஒரு வாய்ப்பு கெடைக்கும். இந்த மாரியோ கேம் இக்கும்  நம்ம வாழ்க்கைக்கும் பெரிய வித்யாசம் இல்ல ........ ஏதோ எனக்கு தெரிஞ்சதை கலோக்கியல் பாஷை ல சொன்னேன் ...... புரிஞ்சவங்க புரிஞ்சிக்கோங்க

Monday 21 December 2020

என்னுடைய அனுபவ பதிவு - எல்லாமே அவுங்க நடத்துறாங்க ங்கறது தெளிவா தெரியுது

எல்லாமே அவுங்க நடத்துறாங்க ங்கறது தெளிவா தெரியுது

 

1. நிகழ்வு 1 - பொதுவாக நம்ம பீடத்துக்கு ரெகுலரா பந்தல் போடுறவன் எப்பவுமே வரேன் ன்னு சொல்லீட்டு வர மாட்டான். கடைசி நேரம் வரை அவசரம் அவசரமாக வேலை செய்து முடிப்பான். நேத்து நான் போய் இருந்தப்போ, பந்தல் போட 20,000 ஆகும் ன்னு குருஜி சொன்னாரு. நான் உடனே போயீ ATM 20,000 எடுத்துட்டு வந்து குருஜி கிட்ட கொடுத்து பந்தல் போட உபயோகப்படுத்திக்கோங்க அப்பிடீன்னு சொன்னேன். அவரும் சார் ன்னு வாங்கி வெச்சுக்கிட்டாரு. உள்ள எடுத்துட்டு போய் அகத்தியர் அய்யா கிட்ட பணத்தை வெச்சுட்டு வரேன் இருங்க , ன்னு சொல்லிட்டு போனாரு. போயிட்டு வந்த அடுத்த நிமிஷமே, பந்தல் போடரவர் அவரா வே வந்து நிக்கறாரு. எங்க பந்த போடனுனு சொல்லுங்க அப்பிடீன்னு கேக்கறாரு . இன்னைக்கு வரேன் வந்து பேசறேன்னு எங்க கிட்ட சொல்லவே இல்லை. ஆனா சொல்லாமயே வந்து நிக்கறான். கரெக்ட்டா நீ போயீ இந்த காரியத்துக்கு பணம் எடுத்த்துட்டு வந்து கொடுத்து , அகத்தியர் கிட்ட கொண்டு போய் அந்த பணத்தை வெச்சவுடனே வந்து நிக்கறான் . கூப்பிடாமையே எப்பிடி அவுனுக்கு கரெக்ட்டா வர தோணிச்சு, அதுவும் முன்ன பின்ன இல்ல , பணம் அகத்தியர் கிட்ட வைக்கவும் அவன் வாசலிலே வந்து நிக்கவும் சரியா இருக்கு

 

2. நிகழ்வு  2 -  குருஜி , கருப்பராயருக்கு மேற்கூரை அமைக்கணும் அப்பிடீன்னு தெரிவிக்கறாரு. வீட்டுக்கு வந்து அதை மறந்தே போயிட்டேன். அப்பறம் ராத்திரி நேரம், ஏதோ யோசனை வந்து , அட கருப்பராயரை மறந்து போயிட்டோமே, ன்னு நினைச்சு அவருக்கு மேற்கூரை அமைக்கணும் ன்னு ஒரு பதிவு போட்டேன். ஒடனே வெளிநாட்டு வாழ் நண்பர் ஒருவர் போன் செய்து எவ்வளவு ஆகும் ன்னு கேட்டார். எனக்கோ குருஜி என்ன சொன்னாரு ன்னு யோசிச்சு பாத்து அப்பறம் சுமார் 6000 ஆகும் ன்னு சொன்னேன். அவ்வளவு தான் ஒடனே ஒருத்தர் 1000 ரூபாய் அனுப்பினாரூ, நம்ம வெளி நாடு வாழ் நண்பர் அதை பார்த்து அவரம் ஒரு 1000 அனுப்புனாரு , இன்னும் 2 பேர் தலா 2000 அனுப்பினாங்க. சரியா சொல்லி வெச்ச மாறி 6000 ரூபாய் அரை மணி நேரத்துல சேர்ந்தது. நானும் அரை மணி நேரத்துலே 6000 சேர்ந்துருச்சே மேலும் பணம் வந்தால் என்ன செய்வது என்று யோசித்து கொண்டேன். ஆனா சொல்லி வெச்ச மாறி, 6000 த்துக்கு மேல  1 ரூபாய் கூட வரல. டேய் நீ 6000 தான கேட்ட, வாங்கிக்க, கேட்டதை தான டா கொடுக்க முடியும் னு மனசுக்குள்ள குரல்.

 

நிகழ்வு 3 - பாய் ஏற்கனவே 6 Nos வாங்கியாச்சு. மேல இன்னும் 6 பாய் வாங்கணும் னு கேட்டேன். ஒடனே பணம் வந்தது. அவங்ககே வந்து கூப்பிட்டு கொடுத்தாங்க. மொதல்ல 1200 கொடுக்கறேன்னு சொன்னாங்க. 300 பத்தல , சரி நாம வேற பணத்துலேர்ந்து போட்டுக்குவோம் ன்னு விட்டுட்டேன். ஆனா அவங்களே திருப்பியும் கூப்பிட்டு 1500 அமிச்சிட்டேன் அப்பிடீன்னு சொல்றாங்க. நம்ம மனசுல நெனைக்கறது எல்லாம் இப்பிடி தான் நடக்குமா என்ன. சரி பாய் எந்த கடையில வாங்கனும்னு தெரியும், நம்ம பூமார்க்கெட் கடைக்காரர் வாங்கி கொடுப்பாரு. ஆனா பாய் வாங்க அய்யா விடவே இல்ல , அய்யாவுக்கு பாய் வேணாம் , 2 நாள் ஆகியும் பூமார்க்கெட் கடைக்காரர் பாய் வாங்கலே , நேத்து சொன்ன உடனே 2 மணி நேரத்துலே வாங்கி கொடுத்தார் - ஆனா இப்போ 2 நாள் ஆனா கூட வாங்கலே - சரி உத்தரவு இல்ல போல இருக்கு ன்னு நினைச்சுக்கிட்டேன். அதே போல நேத்து குருஜி யம்பார்க்க போன போது அவரு பாய் வேண்டாம் டா ன்னு சொல்லீட்டார் இருக்கறதே போதும்  அப்பிடீன்கறார். சரி அப்போ 1500 பணம் இருக்கே , அதை என்ன பண்ண ன்னு கேட்டா , சரி அப்போ ஜமுக்காளம் வாங்கலாம் ன்னு பேசுனோம். ஒடனே கடைக்காரரை கூப்டு பாய் வாங்க வேண்டாம் ஜமுக்காளம் வாங்குங்க ன்னு சொல்லிட்டேன். இது நேத்து நடந்தது. கடைக்காரர் இன்னிக்கு மத்தியானம் வரை ஜமுக்காளம் வாங்கி கொடுக்கல . அதுக்குள்ள நேத்து என் கூட வந்த நண்பர் இப்போ ஞானோதயம் வந்து - எங்கிட்ட 2 பெரிய ஜமுக்காளம் இருக்குது - 2 வருஷமா சும்மா தான் இருக்குது, நேத்து நீங்க கேட்டிட்டு இருந்தீங்க , நானே இப்போ உங்க ஆபீசுக்கு வந்து குடுத்துட்டு போறேன் வாங்கிக்கறீங்களா ன்னு கேக்கறார், என்னத்த சொல்ல , சரிங்க அய்யா ரொம்ப சந்தோஷம் ன்னு சொன்னேன் , திருப்பியும் அந்த கடைக்காரரை கூப்டு அண்ணா , ஜமுக்காளம் வேண்டாம் வேற ஏதாவது வாங்குங்க , நான் என்ன வாங்கறது ன்னு கூப்பிட்டு சொல்றேன் ன்னு சொல்லிட்டு வெச்சுட்டேன் . அய்யா எதை வாங்கணும் எப்பிடி வாங்கணும் எல்லாமே அவரே நடத்துறாரு . இப்பிடி தான் டீ பிளாஸ்க் வேணும்னு கேட்டேன் ஒடனே ஒருத்தர் வாங்கி கொடுத்தாரு , அது வாங்க வேண்டிய கடையும்  அந்த கடைய பரிந்துரை செய்ய ஒரு ஆளு அப்பிடீன்னு அமைச்சு கொடுத்தாரு , இதே மாதிரி இரும்பு சட்டி வாங்க கடைக்காரனை பார்த்தாச்சு ரேட்டு கேட்டாச்சு , நன்கொடை கொடுக்க ஆளும் அனுப்பி வெச்சாரு, ஆனா பொருளை வாங்க விட்டாலே ஒரு நாள் தள்ளி போட்டாரு , அப்பறம் ஒருத்தர் கிட்ட போறும் வேணும்னு சொல்ல வெச்சாரு, அப்பறம் அதே பொருள் பாதி விலைக்கு வாங்கி கொடுத்தாரு, எல்லாம் தானே நடக்குது, எங்கேயாவது ஒரு இடத்துல கூட என் மூளைய நான் உபயோகப்படுத்தவேயில்ல

 

 

அதே மாதிரி தான் சாதுக்களுக்கு கவி வேஷ்டி துண்டு வாங்கணும் ன்னு பார்த்தப்ப, ஒரு நல்ல நாள் பார்த்து அவரே முடிவு பண்ணினாரு, யாரு நன்கொடை கொடுக்கனு ம்னு அவரே முடிபு பண்ணினாரு . சம்மந்தமுமில்லாத ஒருத்தன் வந்து இந்த கடையில வேஷ்டி நல்ல இருக்கு அங்கே போய் பாருங்க ன்னு சொன்னான், சரி நீயும் வா போலாம் ன்னு சொன்னேன் , சம்மந்தமாயில்லாத இன்னொருத்தனோட பைக்க வாங்கிட்டு போனோம். சும்மா பாக்கறதுக்கு தான் போனோம், வாங்கலாம்னு பாத்தோம், வாங்க விடலே, சரி தொரும்ப போலாம் னு பாத்தா, ஆங் அது எப்பிடி திரும்ப போவ , உன்னிய விட மாட்டேன் ன்னு எங்க ரெண்டு பேர்த்தயும் புடிச்சு வேற கடைக்கு அனுப்புனார், பணமே இல்ல , நன்கொடை வரவே இல்ல, சரி சும்மா பாக்கலாம் போனோம், நான் சொன்ன ஒரு கடைய வேண்டாம்னு அவரே முடிவு பண்ணுனாரு , அந்த கடைக்கு போக விடலே , வேறு நான் சொன்ன இன்னொரு கடைக்கு போக வெச்சாரு , சும்மா தான் போனோம் , சரி ஒரு கடையில கேட்டாச்சு , இன்னும் 2 கடையில கேட்டு பார்த்து முடிவு செய்வோம் ன்னு நெனச்சேன். சும்மா போனதுக்கு ரொம்ப கொறஞ்ச வெளியில சுமார் நான் போட்ட கணக்குல 40 சதவீதம் மிச்சமாகற மாதிரி செஞ்சாரு. ஒடனே துணிய வாங்க வெச்சாரு , ஒடனே ஒரு மணி நேரத்துல நன்கொடை கொடுப்பவர்கள், மொதல்ல 4 நாள் கழிச்சு தான் பணம் கொடுக்க முடியும் னு சொன்னவங்க , ஒடனே ஒரு மணி நேரத்துல கொடுத்துட்டாங்க , அன்னிக்கு கொடுக்கணும்னு நெனைச்சப்ப இப்போ கொடுக்க வேண்டாம் , நா சொல்லும் பொது கொடு, ன்னு தடுத்தும் அவுரு தான் , இப்போ அந்த டெக்கனிகள் எரர் நீக்கி கொடுத்ததும் அவுரு தான்

 

இது மாதிரி ஒவ்வொரு விசயத்திலேயும் மொத்தமும் அவரோட கண்ட்ரோல் இருக்குது . நாம எங்க போயீ என்ன வேலை செய்யறது . அட்றா ரங்கா அட்றா ரங்கா ன்னு கொரங்கோட முதலாளி குரங்கை சொன்ன அது பல்டி அடிக்கும் , அவ்வளவு தான். மொதலாளி ஒன்னும் சொல்லல நா கம்முனு ஒக்காந்திருக்கும்

 

சந்தானத்தின் அனுபவ பதிவுகள்

 

அவுரு அவுரு ன்னு நான் சொல்றது வேற யாருங்க, நம்ம அகத்தியரு தாங்க அது

 

நன்றி

 

சந்தானம்

கோவை

9176012104

 

 

 

 

நமது நண்பர் நேற்று 20/12/2020 அன்று கும்பகோணம் சென்று அங்கே இருந்து ஒரே நாளில் 21 கோவில்களில் தன பிரார்த்தனைகளை செய்து வந்ததாக கூறினார். நாமும் அவ்விதம் செல்ல விரும்பினால், அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :

 

நமது நண்பர் நேற்று 20/12/2020 அன்று கும்பகோணம் சென்று அங்கே இருந்து ஒரே நாளில் 21 கோவில்களில் தன பிரார்த்தனைகளை செய்து வந்ததாக கூறினார். நாமும் அவ்விதம் செல்ல விரும்பினால், அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :


ஆட்டோ ட்ரைவர் ராஜா - 89252 06585 – Rs.2000, around 120 Kilo meter

ஹோட்டல் ராயாஸ் எக்ஸிகியூடிவ் ஹோட்டல்  - Rs .700 AC ரூம்  -  Ph . 0435-2420402


காலை



1.  சுவாமி மலை - முருகன்

2.  வெள்ளை விநாயகர் கோவில்

3.  108 சிவலிங்கம் கோவில் - பாபநாசம்

4.  திருக்கருகாவூர் = கற்பரக்ஷஅம்பிகை

5.  பட்டீஸ்வரம் துர்க்கை

6.  பட்டீஸ்வரம் - சிவனை தழுவிய துர்க்கை கோவில்

7. தாராசுரம் - சிவன் கோவில்

8.  ஆதி கும்பேஸ்வரர் கோவில்

9.  ராமஸ்வாமி கோவில்

10. நாகேஸ்வரர் கோவில்

 

மாலை

 

1.  நாச்சியார் கோவில்

2.  மங்கள சனீஸ்வரர் கோவில்

3. அய்யாவாடி ப்ரத்யங்கிரா தேவி

4.  உப்பிலியப்பர் கோவில்

5.  திருநாகேஸ்வரம்

6.  தேப்பெருமாநல்லூர்

7. திருபுவனம் - சரபேஸ்வரர்

8. சாரங்கபாணி கோவில்

9. சக்ரபாணி கோவில்

10. ஆதி கூர்மேஸ்வரர் பெருமாள் கோவில்

11. வியாழ சோமேஸ்வரர் கோவில்