Sunday 14 July 2019

திருமூலர் திருமந்திரத்தில் கூறிய ஆசனம்

திருமூலர் திருமந்திரத்தில் கூறிய ஆசனம்

1. பங்கயம் ஆதி பரந்த பல் ஆதனம்
அங்கு உளவாம் இரு நாலும் அவற்றின் உள்
செங்கு இல்லை ஆகச் சுவத்திகம் என மிகத்
தங்க இருப்பத் தலைவனும் ஆமே.

2. ஓர் அணை அப்பதம் ஊருவின் மேல் ஏறி இட்டு
ஆர வலித்து அதன்மேல் வைத்து அழகுறச்
சீர் திகழ் கைகள் அதனைத் தன் மேல் வைக்கப்
பார் திகழ் பத்மாசனம் எனல் ஆமே.

3. துரிசு இவ் வலக்காலைத் தோன்றவே மேல் வைத்து
அரிய முழந் தாளில் அம் கையை நீட்டி
உருசியொடும் உடல் செவ்வே இருத்திப்
பரிசு பெறும் அது பத்திர ஆசனமே.

4. ஒக்க அடி இணை ஊருவில் ஏறிட்டு
முக்கி உடலை முழங் கை தனில் ஏற்றித்
தொக்க அறிந்து துளங்காது இருந்திடல்
குக்குட ஆசனம் கொள்ளலும் ஆமே.

5. பாத முழந்தாளில் பாணிகளை நீட்டி
ஆதர வோடும் வாய் அங்காந்து அழகு உறக்
கோது இல் நயனம் கொடி மூக்கிலே உறச்
சீர் திகழ் சிங்காதனம் எனச் செப்புமே.

6. பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி
சொத்திரம் வீரம் சுகாதனம் ஓர் ஏழு
உத்தமம் ஆம் முது ஆசனம் எட்டு எட்டுப்
பத்தொடு நூறு பல ஆசனமே.

இந்த ஏழு ஆசனமே மிக உத்தமமான ஆசனம் இவற்றில் அமர்ந்து பழகுங்கள்

சிவயநம