Thursday, 31 August 2017

மர்ம யோகத்தில் கனல் வாழ்வு

 மர்ம யோகத்தில்  கனல் வாழ்வு



கனல் வாழ்வு பகுதி ஒன்று *****************************
எத்தனையோ வாழ்க்கை முறைகளிலே கனல் வாழ்வும் ஒன்று என அனைவரும் நினைப்பர்.. ஆனால் அது முற்றிலும் தவறு.. எல்லா வாழ்க்கை முறைகளிலும் சத்தாக சாரமாக ஜீவ நாடியாக மையமாக மறைமுகமாக செயல் படும் இந்த கனல் ஒரு ஜீவ புள்ளி,மையப்புள்ளி... ஒரு புள்ளி தோற்றம் அற்றது.. ஆனால் அந்த மையப்புள்ளியை ஆதாரமாக வைத்து ஏற்படுத்தப் பட்ட வட்டங்கள், தோற்றத்தை உடையது.. தோற்றம் உடைய எதுவும் வெளிச்சத்தை தன்பால் ஈர்க்கவே முயலும்.. ஆனால் அந்த வெளிச்சமோ கனலிலிருந்து வெளிப்பட்டது.. கனல் சக்தியை வெளிச்ச சக்தியாக மாற்றி இந்த தோற்றங்கள் தன் பால் ஈர்த்துக் கொள்ளும்.. இந்த மாற்றமே கவர்ச்சி என பெயர்.. இந்த கவர்ச்சியின் வேகம் தோற்றத்தின் ஈர்ப்பு சக்தியால் நடை பெறுகிறது.. இந்த கவர்ச்சியை இழந்த தோற்றங்கள் ஈர்ப்பு சக்தியையும் இழந்து, தோற்றங்கள், காணாமல் போய் விடுகின்றன.. ஆனால் அந்த மையப் புள்ளியான கனல் காணாமல் போவதில்லை.. அது நிரந்தரமாக என்றும் இருக்கும்.. இதிலிருந்து முக்கியமாக அறிந்து கொள்வது என்னவென்றால், கனல் என்ற மையப்புள்ளி நிரந்தரம்,நித்தியம் நீங்காநிலை கொண்டது... ஆனால் அதை வைத்து தோன்றிய வட்டங்கள் தான், அநித்தியமானது, நீங்கும் நிலை உடையது... இதை அடைப்படையாக வைத்தே கனல் வாழ்வு தொடங்குகிறது...
மையப்புள்ளி, வெளிச்சம், கவர்ச்சி, தோற்றமான வட்டம், ஈர்ப்பு ஆகிய முக்கிய சொற்களை நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே, கனல் வாழ்வைப் பற்றிய இரகசியங்கள் நன்கு விளங்கும்...
பிரச்சனை எல்லாம் அநித்தியத்தை உடைய வட்டமான தோற்றத்தில் தான் உள்ளது... தோற்றமே இல்லாத மையப்புள்ளியில் நித்தியமும்; எதுவும் நீங்காநிலையும் இருப்பதால், தொல்லைகள் துயரங்கள் என்பது அதற்கு இல்லை..  கனலான அந்த மையப்புள்ளியோடு தொடர்பு நீங்காமல்,வட்டமான தோற்றமான வாழ்க்கையோடு தொடர்பு கொண்டாலும், தொல்லைகள் துயரங்கள் இன்றி வாழலாம்... அப்படி புள்ளியோடும் வட்டத்தோடும் வாழும் வாழ்க்கை தான் கனல் வாழ்வு என்கிறோம்..
எத்தனை சோதனைகள் வந்தாலும், துயரங்கள் இன்றி சோகங்கள் இன்றி வாழும் வாழ்க்கை தான் ஞான வாழ்க்கை, தெளிவு வாழ்வு என்கிறோம்..
 மூன்று வகையான வாழ்க்கை உள்ளது..
 1) புள்ளியை மட்டுமே சேர்ந்த வாழ்க்கை
 2) புள்ளியை அறியாது வட்டத்தில் வாழும் வாழ்க்கை..
 3) புள்ளியும் வட்டமும் சேர்ந்த வாழ்க்கை
1) மனிதனுக்கு புள்ளியை மட்டுமே சேர்ந்த வாழ்க்கை என்பது, மரணதிற்கு பின் தோற்றமாகிய உடலை இழந்து சுத்த கனலான தோன்றா நிலையில் வாழ்வது.. இது மண்ணில் புதைந்துள்ள புதையல் போன்றது.. யாருக்கும் பயன்படாதது.. அன்பு என்ற மாசக்தி துளியும் இல்லாதது..
2) இரண்டாவது ஆன புள்ளியை அறியாது வட்டத்தில் வாழும் வாழ்க்கை தான் இன்றைய சராசரி மனிதன் வாழ்க்கை... கனலை தானே உள் வாங்கும் வழி அறியாது, வட்டத்தில் வாழுகின்ற போது கனல் போதுமானதாக இல்லாமல் தவிப்பு பலவகையிலும் ஏற்பட்டு பெரும் பாலும் வாழும் வாழ்க்கை.. இதில் வாழ்வு கலைந்து, தேய்ந்து முடிவில் மரணத்தில் காணாமல் போகும்...
3) புள்ளியும் வட்டமும் சேர்ந்த வாழ்க்கையில் கனல் என்ற புள்ளியான தோன்றா நிலையோடு வட்டம் என்ற தோற்றத்திற்கு வந்த வாழ்வினை இணைத்து நித்திய வாழ்வும் அன்புடன் சேர்ந்த அர்த்தமுள்ள வாழ்வாக வாழ்வது...
கனல் என்பது என்ன ?
 அண்ட ஆற்றல், தேகத்தில் செயல் படும் பொழுது அதை கனல் என்று சொல்லுகிறோம்..
புள்ளி என்பது அந்த ஆற்றலுடன் உள்ளிருந்து பயிலுதல் என்பதாகும்..
 வட்டம் என்பது பெற்ற ஆற்றலை தேகத்தில் பயன் படுத்துவதால் தோன்றிய தோற்றம் ஆகும்...
கோவை மாவட்டம் சீளியூர் என்ற ஊரில் தோகை மலையில் பொதிகை முனி அகத்தியர் ஆலயம் அமைந்து உள்ளது.

இப்போது அங்கே அகத்தியர் உத்தரவுப்படி, சதுரகிரி சந்தன மகாலிங்கம் கோவில் மற்றும் பதினெண் சித்தர்கள் ஆலய கும்ப அபிஷேகம் விழா..07ஜூன்2017


















எல்லா படங்களையும் பாருங்கள். யாகத்தீயில் பலவேறு காட்சிகள் தெரிகிறது.

அகத்தியர் பெருமானின் திருஅவதார சரிதம்

அகத்தியர் பெருமானின் திருஅவதார சரிதம்

இறைவனின் சிருஷ்டி காலத்தை கணிக்க இயலாது.  கோடி கோடி யுகங்கள் தோன்றித் தோன்றி மறைய கோடிக்கணக்கான அகத்திய சித்தர்களும் தோன்றி, நிறைந்தனர்.  பரம்பொருளான, ஆதிசிவனின் திருகைலாயத்தில் என்றும் வாழும் சிவனின் அம்சமாம் ஆதிமூல ஸ்ரீ அகத்தியர், சரித்திரமே படைத்தவர். அகத்தியப் பெருமான் என்றும் சதாசிவனின் சித்தத்தில் திளைப்பவர், பரம்பொருள் போல நித்யத்வம் உடையவர்.

இறைவனின், உலக சிருஷ்டியில் மீன்கள், பறவைகள், கடல் தாவரங்களின் படைப்பிற்கு அடுத்து வர வேண்டுவன, ஐந்தறிவு படைத்த விலங்கினங்கள்.  அவைகளை படைக்கும் முன் அவைகளுக்கு வேண்டிய உணவைப் படைக்க வேண்டுமல்லவா? அதற்காக தாவரங்களை படைக்க பரமசிவனார் உளம் கனிந்தார்.

அப்போது அங்கே ஒரு அற்புதமான தேவி தோன்றினாள். தன்னை வணங்கி நின்ற தேவியை "ஆஷா சுவாசினி" என்றழைத்த பரமசிவன் "தாவரங்களை பூ உலகில் படைப்பாய்" என ஆணையிட்டார்.  அவளும் பரம்பொருளை பணிந்து, இட்ட பணியை தொடங்கினாள்.

கோடி கோடியாம் விலங்கினங்கட்களுக்கும், ஏன் மனிதர்களுக்கும் கூடத் தாவரங்கள் தானே ஜீவசக்தியை தரும் உணவாகின்றது.  எனவே முதல் தாவரத்தை ஓர் அற்புதமான தெய்வீகப் படைப்பாக்கத் தீர்மானித்தாள் ஆஷாஸுவாசினி தேவி. இறைவன் நினைத்ததும் அது தான்.

அனைத்து லோகங்களிலும், மகரிஷிகள் மற்றும் தேவர்கள், கந்தர்வர்கள் இடையே மலர்ந்த நல்லெண்ணங்களை திரட்டினாள் தேவி. பரிசுத்தத்திற்கு இலக்கணமாகத் திகழும் மகரிஷிகள், தேவர்கள், கந்தர்வர்கள், என்றும் இறைத் தவம் புரியும் இறை அடியார்கள் ஆகியோரின் நல்லெண்ணங்களில் இருந்து ஒரு புனிதமான நல்எண்ணத்தை தேவி வடித்து எடுத்தாள் என்றால் அந்தப் புனிதமான எண்ணத்தின் மகத்துவத்தை என்னென்று சொல்வது?

ஆஷாஸுவாசினி தேவி ஹரியையும் சிவனையும் தொழுது, "ஹரிஹர ரூபர்களே, தங்களுடைய ஒப்பில்லா இறைசக்தியை அடியேன் பகுத்து, வடித்துள்ள இந்த நல்ல எண்ணத்தின் மூலக் கருவாய் அமைத்து, அரியும் , சிவனும் சேர்ந்த "அரிசியாய்" மாற அருள் பாலிப்பீர்களாக" என்று பிரார்த்திக்க, ஹரிஹர ரூபனும் அவ்வாறே அருளினார்.

அன்று முதல் அரியும் சிவனும் சேர்ந்ததே அரிசியாயிற்று.  தேவி, இயற்கை மாற்றங்களில் இருந்து அரிசியை காப்பாற்ற, அடுத்த ஒரு பரிசுத்த எண்ணத்தை கொண்டு உறையாக அமைக்க, உமி மூடிய அரிசியே முதல் தாவரமாக ஆகியது.

தேவியின் அற்புதமான பணி தொடர்கிறது.

ஹரிஹரனின் தெய்வீக அம்சத்தால் புனித எண்ணத்துடன் உருப்பெற்ற நெல் (அரிசி) மணியைப் பன்மடங்காக்கி ஏனைய நிலத்தாவரங்களையும் சிருஷ்டிக்க வேண்டுமே! எனவே, தேவி "யார் ஒருவர் சிரசு முதல் பாதம் வரை புனிதமான நல் எண்ணங்களை உடையவரோ, அவர் இந்த நெல் மணியை தன் கையில் தாங்கி பிரார்த்தித்தால் இந்த நெல் மணி விருத்தியாகும். அத்தகையவர் முன் வாருங்கள்" என்றாள்.

இந்த அழைப்பின் உட்பொருளை உணர்ந்த பலர் மௌனமாயினர்.  இறைவனின் லீலை அன்றோ! தகுதி பெற்றிருந்தும், யாரும் முன் வராததால், தேவி யோசித்தாள்.

உடனே சிவனை வணங்கி, "சிரசு முதல் பாதம் வரை புனிதமே பூத்துக் குலுங்கும் என் மகன் அகத்தியனை அழைக்கிறேன்! அவனால் இந்த நற்காரியம் செவ்வனவே முடியும்" என்றாள். எம்பெருமானும் அனுமதியளிக்க,

அகத்தினுள் இருந்து அழகாய் ஆர்பவித்து
எழுந்து நின்ற எண்ணிலா ஈசர்க்கும் பட்டம் சூட்டி
எண்ணத்தில் கலந்து எண்ணத்தை சுத்தமாக்கி
அத்தனை சுத்தமும் அற்புதமாய் தேர்ந்தெடுத்த
என் மகனே அகத்தியா! வா!

என்று தேவி அழைக்க, விண்ணுக்கும், மண்ணுக்கும் விரிந்த மாபெரும் விஸ்வரூபியாய் ஸ்ரீ அகஸ்தியர், தேஜோமயமாய், ஒளிப்பிழம்பாய், கோடி கோடியாம் ஆயிரம் ஆதவர்களின் அருட்ப்ரகாசத்துடன் அங்கே எழுந்தருளினார்.

ஸ்ரீ அகத்தியப் பெருமானின் அருட் கரத்தில் அவர் அன்னை ஆஷா ஸுவாசினி தேவி அற்புத நெல் மணியை வைத்திட, அது சங்கர நாராயண மணியாய் ஒளி வீசியது. ஸ்ரீ அகத்தியரின் திருக்கரத்தில் தவழ்ந்த நெல் மணி, இமைக்கும் நேரத்தில் பல்கிப் பெருகி, கோடி கோடி நெல் மணிகளாய், விண்ணிற்கும், மண்ணிற்கும் இடையே பல கோடி இமயமலைகளை நிகர்த்தார் போல் குவிந்தது.

பரம்பொருளான சதாசிவன் நகைத்தான். "பார்த்தீர்களா இந்த அற்புதத்தை. இந்த அகத்தியன் என்னிடமிருந்து உதித்தவனே! அவன் என் பூர்ணாம்ச அவதார மூர்த்தியே! என் பாகத்திலிருந்து பிரிந்த சித்தர்குல நாயகனாய், நான் உங்களுக்கு அளிக்கும் பரிசு, இந்த அகத்தியன். நானே அவன்" என்று அருளினார்.

நெல் மணிகளை மலைகள் என குவித்த ஸ்ரீ அகத்தியரின் திருக்கரங்கள், கோடிக்கணக்கான தாவரங்களின் வித்துக்களையும் உற்பவிக்க, உலகத்தில் முதல் தாவர சஞ்சாரம் அங்கே தொடங்கலாயிற்று. எனவே உலகின் அனைத்து தாவரங்களுக்கும் அம்மை, அப்பன் ஸ்ரீ அகத்தியரே. மூலிகை தாவரங்களின் மூலக்கரு ஸ்ரீ அகத்தியரே! எனவே தான் இன்றைக்கும் எந்த மூலிகையும் அகத்தியரை கண்டால், நமஸ்கரித்து தன் இனம், பெயர், பொருள், பயன் சொல்லி தலை வணங்கும்.

எனவே, "ஓம் அகத்தீசாய நமகா"  என்று வணங்கி எந்த தாவரத்தையும் பயன்படுத்திடில் அதன் பூரண சக்தியை நாம் பெறலாம். இது சுபிட்சத்தை அளிக்கும்.

முருகன் புகழ்


வெட்டும் கடா மிசைத்தோன்றி வெம் கூற்றன் விடும் கயிற்றால்
கட்டும் பொழுது விடு விக்கவேண்டும் கர அசலங்கள்
எட்டும் குலகிரி எட்டும் விட்டு ஓட எட்டாத வெளி
மட்டும் புதைய விரிக்கும் கலாப மயூரத்தனே.

பாடல் விளக்கம் :
வெட்டுகின்ற எருமைக் கடாவின் மீது வருகின்ற வெம்மையாகிய இயமன் வீசுகின்ற பாசக் கயிற்றினால் அடியேனைக் கட்டிப் பிடிக்கும்போது தேவரீர் தோன்றி விடுவித்து காப்பாற்றியருளவேண்டும். கைகளையுடைய மலைபோன்ற திக்கு யானைகள் எட்டும் குலமலைகள் எட்டும் தத்தம் இடம் விட்டு விலகும் படி கண்களுக்கு எட்டாத ஆகாய வெளி வரைக்கும் மறையும் படி விரிக்கின்ற தோகையையுடைய மயிலை வாகனமாக உடையவரே!

படிக்கின்றிலை பழநித் திருநாமம் படிப்பார் தாள்
முடிக்கின்றிலை முருகா என்கிலை முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை பரமானந்தம் மேற்கொள விம்மி விம்மி
நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கு இனியே?.

பாடல் விளக்கம் :
'' நெஞ்சமே, பழநியில் எழுந்தருளியுள்ள திருமுருகப்பெருமானின் திருநாமங்களை ஓதுகின்றாயில்லை. பழநி ஆண்டவரது திருநாமங்களை ஓதுகின்ற அடியார்களின் திருவடிகளைத் தலையில் சூடிக் கொள்கின்றாயில்லை. பரம்பொருளாகிய திருமுருகப்பெருமானை "முருகா" என்று அழைக்கின்றாயில்லை. யாசிப்பவர்கள் பசியால் மெலிவடையாமல் இருக்கும் பொருட்டு அவர்களுக்குப் உணவு வழங்கி அதனால் நீ வறியவனாகிவிடவில்லை. பேரின்பம் மிகுதியாக வரும் பொருட்டு விம்மி விம்மி அழுது ஆடுகின்றாயில்லை. இனி நமக்கு அடைக்கலம் தரும் பற்றுக்கோடு எங்கு உள்ளது?

கூர் கொண்ட வேலனைப் போற்றாமல் ஏற்றம் கொண்டாடுவிர்காள்!
போர் கொண்ட காலன் உமைக் கொண்டுபோம் அன்று பூண்பனவும்
தார் கொண்ட மாதரும் மாளிகையும் பணச் சாளிகையும்
ஆர்கொண்டு போவர் ஐயோ கெடுவீர் நும்அறிவுஇன்மையே.

பாடல் விளக்கம் :

கூர்மையான வேலாயுதத்தை உடைய திருமுருகப்பெருமானைப் போற்றாமல் உங்கள் மனை மாட்சி, நிதி, அணிகலன் ஆகியவற்றின் மிகுதியைப் பற்றிப் பெருமை பாராட்டிக் கொண்டாடும் மனிதர்களே! போர்த் தொழிலையே மேற்கொண்டுள்ள இயமனுடைய மந்திரியாகிய காலன் என்பவன் உங்களைக் கொண்டுபோகின்ற அந்த நாளில் நீங்கள் அணிந்து கொள்கின்ற ஆபரணங்களையும், பூமாலையை அணிந்துள்ள பெண்களையும், மாளிகை போன்ற வீட்டையும் பணப் பையையும் யார் எடுத்துக்கொண்டு போவார்கள்? ஐயோ, உங்களின் மூடத்தனத்தாலேயே நீங்கள் வீணே கெட்டுப் போகின்றீர்களே!

சித்தர்களின் உடல் தன்மை

ஆதி சூன்யத்தில் இருந்த உயிருக்கு ,இறைவன் மனித பிறவி கொடுப்பதன் நோக்கமே,அந்த மனிதன் முழு'விழிப்பு'தன்மை உண்டாகி,இறைவனோடு இரண்டற கலப்பதற்கே .இறைவனோட இரண்டற கலப்பதற்கு ,மனிதனுக்கு என்ன வேண்டும்?சித்தர்கள் காட்டிய வழியில் யோகத்தின்மூலம் பெறப்படுகிற ஒளி உடல் வேண்டும் .உடல் என்பது ஸ்தூலமாகும் .உயிர் என்பது சூட்சுமமாகும் .இந்த உயிரின் தன்மையை,யோகத்தின் மூலம்உடலுக்கு ஏற்ப்படுதினால் கிடைப்பது ஒளி உடல் ஆகும் .இதுவே சித்தர்களின் யோக ரகசியமாகும் .'யோகம் என்பது நம் உடலை கடந்து உயிரின் முழு 'விழிப்பு' தன்மையோடு ,இணைந்து இருப்பதாகும் .இந்தஉயிரின் அதே சூட்சும தன்மையை,நம்முடைய ஸ்தூல உடலுக்கும் ஏற்படுத்தும் போது,உயிரின் தன்மையை உடலும் அடைந்து ,ஒளி உடல் பெறுவதாகும் .'நம்முடைய உயிரின் பல சூட்சும பகுதிகளை,யோகத்தின் மூலம் நாம் இயக்கி,அந்த சூட்சும பகுதிகளோடு தொடர்பு கொள்ளும் போது இப்பிறவி என்பது, நமக்கு முதலில் கொடுக்கப்பட்ட பிறவி இல்லை என்பதுவும்,பல பிறவிகள் கடந்து வந்த நிலையையும்,அந்தபலப்பிறவிகளின் காரண காரிய கர்மவினைகளின்படியே நம்முடைய ஒவ்வொரு பிறவியின் அனுபவமும் இருக்கின்றது என்கிற உண்மையை உணரும் போது ,உயிர் தன்னுடைய இயல்பு தன்மையான 'விழிப்பு 'தன்மையைஅடைய துவங்குகிறது .
2016/04/05, 10:18 AM - தி. இரா. சந்தானம்: பிறவாமல் இருக்க வேண்டுமென்றால்,நாம் முதலில் இறவாமல் இருக்க வேண்டும்.அப்பொழுது தான் பிறவி என்னும் நிலை நமக்கு ஏற்படாது.இந்த நியதிக்கு மாறாக,உடலளவில் மரணத்தை அடைந்தவர்கள்,யாரும்'சித்தர்கள்'என்று குறிப்பிட முடியாதவர்கள் ஆகிறார்கள்.சித்
தர்கள் இன்றும் கூட இறப்பின் தொடர்புக்கே செல்லாமல்,இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.சித்தர்களும் நம்மை போலவே சரசரியான உடலோடு இவ்வுலகில் பிறந்தவர்களே.''அவர்களுக்கு ஏற்பட்ட உண்மை ஞானியரின் தொடர்பு,அவர்களைமெல்ல மெல்ல மரணமிலா நிலை வரை கொண்டு சென்று இருக்கிறது''சித்தர்களின் உடல் மிக உயர்ந்த ஒளியின் தன்மைக்கு ஏற்றவகையில் 'யோகத்தின்' மூலம் மாற்றப்பட்டுஇரு
க்கிறது.அவர்களின் உடல் ஒளி ஊடுருவும் தன்மையில் இருப்பதால்,ஒளி அவர்களின் உடலில் உள்ளே சென்று வெளியே போய் விடும்.''சுத்த சத்துவ உடல்''என்னும் நிலை,ஒளி ஊடுருவும் தன்மைக்கு மாற்றப்பட்டு இருக்கும்.இதன் காரணமாகவே சித்தர்களின்,உடல் நம்முடைய பார்வைக்கு தெரியாமல் மறைந்து இருக்கிறது.ஆனால் எந்தவிதமான குறைவும் அடையாமல்,நம்முட


ைய அருகிலேயே இருந்து வருபவர்கள் சித்தர்கள்.ஏன் ஒளி ஊடுருவும் தன்மைக்கு உடலை,மாற்றி அமைக்கிறார்கள் சித்தர்கள்

Wednesday, 30 August 2017

ஸ்ரீ நந்திகேஸ்வரர் அஷ்டகம்

ஸ்ரீ நந்திகேஸ்வரர் அஷ்டகம்



நந்திகேஸ்வர நந்திகேஸ்வர நந்திகேஸ்வர பாஹிமாம்

நந்திகேஸ்வர நந்திகேஸ்வர நந்திகேஸ்வர ரக்ஷமாம்



வேத பாதா ப்ரம்ம ரூபா சிவத்யானா பாஹிமாம்

துங்க சைலா தேவ தேவா சிவப்பிரியா ரக்ஷமாம்



விஷ்ணு ரூபா ப்ருத்வி ரூபா நீதி ஈஸ்வர பாஹிமாம்

வேதா சாரா மந்திர சாரா சாக்ஷாத் காரா ரக்ஷமாம்



ஸோம சூர்யா அக்னி லோசன நந்திகேஸ்வர பாஹிமாம்

பாபஹரணா பர்த்திவாசா சகல லோக ரக்ஷமாம்



சதானந்த சித்ஸ்வரூபா சின்மயேசா பாஹிமாம்

கைலாஸா கனகரூபா பண்டிதாயா ரக்ஷமாம்



பிரதோஷ காலா பரமேஸ்வரா பக்தபாலா பாஹிமாம்

நாடி போதக காலகண்டா கருணாகரா ரக்ஷமாம்



சகல தோஷா சகல பீடா தஹண நாமா பாஹிமாம்

சர்வ சத்ரு சர்வ ரோக நிவாரணா ரக்ஷமாம்



சித்த புருஷா சித்த நாயகா சேவிதாதி பாஹிமாம்

நடன ரூபா நாட்டியப் பிரியா ம்ருதங்க வாத்யா ரக்ஷமாம்



நாம் மேலே காண்பது நந்திகேஸ்வரர் அஷ்டகம் ஆகும்.  இது இறைவன் சிவபெருமானின் நேரடி சீடரும், வாகனமும் ஆகிய நந்திகேஸ்வரரை போற்றி புகழும் பாடல் ஆகும்.  ஒவ்வொரு பிரதோஷ காலத்திலும் மேற்கண்ட நந்திகேஸ்வரர் அஷ்டகத்தை பாராயணம் செய்து வந்தால் நந்தியின் அருளோடு சிவபெருமானின் அருளும் ஒருங்கே கிடைக்கும்.



தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

அகத்தியர் நாடி வழி கூறிய அருளுரை - வழிபாட்டிற்கு உரிய மலர்கள்

ஒருமுறை, நாடி வாசிக்க யாரும் இல்லாத பொழுது, "பூக்களில் எத்தனையோ விதங்கள் உள்ளது. அவைகளை பற்றிய விஷயங்களை சொல்லித்தர முடியுமா" என்று அகத்தியப் பெருமானிடம் வினவியபொழுது, அவர் மனம் மகிழ்ந்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவைகளை உங்கள் கவனத்திற்காக, கீழே தருகிறேன்.

மனிதர்களை படைத்த இறைவன், அவர்களுக்கு சந்தோஷத்தையும் கொடுத்தான். அதோடு மனிதர்களாலேயே துன்பங்களையும் தந்தான். பின்னர் மனிதர்களை வென்று நிம்மதியாக வாழ்வதற்கு பலமுறைகளையும், வழிகளையும் காட்டினான்.

இந்த வழிகாட்டுதலில் ஒன்றுதான் பக்தி. இதை பல பிரிவுகளாகப் பிரிக்கலாம்.  ஞான பக்தி, ஆசாரிய பக்தி, ஆண்டவனுக்கு அருட்பணி செய்கின்ற பக்தி, கடைசியாக, பிடித்தமான மலர்களால் ஆண்டவனை நினைத்து அர்ச்சனை செய்யும் பக்தி.  இந்த நான்கு வகை பக்திகளும் அவர் அவர்களது சூழ்நிலைக்கு ஏற்ப, நம்பிக்கைக்கு ஏற்ப செய்யப்படுவது.

ஞானபக்தி என்பது மிகப்பெரிய தவத்தினால் பெறப்படுவது.  இது எல்லோராலும் செய்யக்கூடியது அல்ல. அத்தனை வாய்ப்பு ஒரு சிலருக்கே ஏற்படும்.  ஆசாரியபக்தி என்பது ஆண்டவனை வழிபாடு செய்து பெறுவது. இதும் எல்லாவித மனிதர்களால் செய்யக் கூடியது அல்ல.

ஆண்டவனுக்கு நேரடியாக அருட்பணி செய்கிற பக்தி, இது கோவில் கட்டுவது, அன்னதானம் செய்வது, தம் தம் மத வழக்கத்துக்கு ஏற்ப, மனித நேயத்தை போற்றும் வகையில், நான்கு பேர்களுக்கு உதவிடும் வகையில் செய்யக் கூடிய, பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யக் கூடிய பக்தி.

இவை எல்லாம் தாண்டி நிற்கும் பக்திதான் மலர்களைக் கொண்டு நம்மைப் படைத்த ஆண்டவனுக்கு, அர்ச்சனை செய்து மனதார பிரார்த்தனை செய்வது.  இது ஒன்றுதான் சகலவிதமான மனிதர்களுக்கும் ஏற்ற பக்தி.  நிம்மதியை தரக் கூடிய பக்தி மாத்திரமல்ல, எந்த வித இடையூறும் இல்லாமல் நம் இஷ்டத்திற்கு எப்பொழுது வேண்டுமானாலும் இறைவனை அழைத்து பக்தியினால் காரியங்களை சாதித்துக் கொள்ளக் கூடியது.

இதற்கு மலர்கள் அவசியம். சரி எந்தெந்த மலர்கள் எந்தெந்த கிரகங்களுக்கு, இறைவனுக்கு ஏற்றது என்பதை நமது முன்னோர்கள் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். ஏனோ தானோ என்று சொல்லவில்லை.  ஒவ்வொன்றுக்கும் அடிப்படையான சூட்சுமத்தை வைத்து சொல்லி, இதை பின்னர் அனுபவ ரீதியாகவும் ஏற்றுக் கொண்ட பின்னர், மற்றவர்களும் பலன் பெற வேண்டும் என்ற நன்நோக்கத்தில் ஞானிகள் மூலம், ரிஷிகள் மூலம், வேதத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்கள்.

சூரியன்:- உங்கள் ஜாதகத்தில் ராசிக்கோ, லக்னத்திற்கோ 8, 12ம் வீட்டில் இருந்தால், "செந்தாமரைப்" பூவால் சூரியனை, ஞாயிறு தோறும் வழிபாட்டு வந்தால் உத்தியோகம், கண் சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளும் விறுவிறு என்று விலகிவிடும். வேறு எந்த மலரைக் கொண்டும் சூரியனை வழிபடக்கூடாது. அப்படி ஒரு வேளை செந்தாமரைப் பூ கிடைக்கவில்லை என்றால் தாமரை தண்டு இதழால் திரியிட்டு விளக்கேற்றி வருவது கூட நல்ல பலனைக் கொடுக்கும்.

சந்திரன்:- ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் கெட்ட கிரகங்களோடு சேர்ந்த சமயம் அவருக்கு சந்திர தசை அல்லது சந்திர புக்தி அல்லது சந்திர அந்தரம் நடந்து கொண்டிருந்தால் அந்த நபர் சந்திரனுக்கு உரிய வெண்மை நிறத்துடைய "அல்லி மலரை" வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும். இதனால் நீர் சம்பத்தப் பட்ட வியாதிகள் வெளிநாடு செல்ல முடியாமல் ஏற்படும் தடங்கல்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளிலிருந்து வெளியே வந்து விடலாம். "வெள்ளல்லி" மலர் கிடைக்காவிட்டால் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது நன்று.

செவ்வாய்:- ஒருவரது ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12இல் செவ்வாய் இருந்து செவ்வாய் தசையோ அல்லது புக்தி, அந்தரமோ நடை பெற்று - வியாதியினால், போட்டி, பொறாமையினால் முன்னேற முடியாமல் துன்பப்பட்டுக் கிடந்தால், அதிலிருந்து தப்பிக்கக்கூடிய ஒரே வழி "சண்பக" மலரால் - செவ்வாய் கிரகத்திற்கோ அல்லது முருகப் பெருமானையோ வழிபட்டால் அத்தனைப் பிரச்சினைகளிலிருந்தும் சட்டென்று விலகி வெளியே வந்து விடலாம்.

புதன்:- ஒருவரது ஜாதகத்தில் புதன் கெட்ட கிரகங்களோடு சேர்ந்து எந்த ராசியில் இருந்தாலும் தேவை அற்ற பாதிப்புகள் எற்ப்படத்தான் செய்யும். கோர்ட் விவகாரம், தோல் சம்பந்தமான வியாதிகள், மாமன் உறவுமுறை பகை, தொழில் நஷ்டம் ஆகியவை வரலாம். இதிலிருந்து விடுதலை பெற "வெண் காந்தள்" மலரை வைத்து புதன் கிழமை தோறும் பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமானது. சிறந்த பரிகாரமும் கூட.

குரு:- ஒருவரது ஜாதகத்தில் 3, 6, 8, 10, 12இல் குரு பகவான் இருந்து அதே சமயம் அவருக்கு குரு மகாதசை, புத்தி, அந்தரம் நடந்து கொண்டிருந்தால், குரு அனுகூலமாக மற்ற பிரார்த்தனைகள், பரிகாரங்கள் செய்வதை விட, குரு பகவானுக்கு பிரியமான "முல்லை" பூவால், வியாழன் தோரும் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வந்தால், பயம் இல்லாமல் வாழ்க்கையைக் கொண்டு செல்லலாம். தடைக் கற்களைப் படிக்கற்களாக மாற்றலாம்.

சுக்கிரன்:- ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன், 12ம் வீட்டில் மறைந்திருந்தாலும், பகை வீடான குரு வீட்டில் தனித்திருந்தாலும், சுக்கிர தோஷம் என்று பெயர்.  இந்த சுக்கிர தோஷம் போக வேண்டுமானால் "வெண் தாமரை" புஷ்பத்தினால், சுக்கிரனுக்கு வெள்ளி தோறும் மாலை சூட்டி, அர்ச்சனை செய்து வந்தால், சுக்கிரன் இரண்டு மடங்கு அனுகூலமாக மாறி சகல விதமான சௌபாக்கியங்களையும், கல்யாண சந்தோஷங்களையும் தருவார்.

சனி:- ஒருவரது ஜாதகத்தில் 2,4,7,8,12இல் சனி பகவான் இருந்தால் பல்வேறு பிரச்சினைகளால் கடுமையாகப் பாதிக்கப் படலாம். இதிலிருந்து ஒதுங்கி வாழ வேண்டுமானால் "கருங்குவளை" மலரால் சனீஸ்வரனுக்கு, அல்லது சனி கிரகத்திற்கு சனிக்கிழமை தோறும் அர்ச்சனை செய்துவரின் சனி பகவானின் அனுக்ரகத்திற்கு பாத்திரமாகலாம்.

ராகு:-  ஒருவரது ஜாதகத்தில் "ராகு" 2,4,5,7,8,12இல் இருந்தால், அவருக்கு ராகுவால் ஏதாவது தொந்தரவு இருந்து கொண்டே இருக்கும்.  இதனைத் தடுக்க "மந்தாரை" புஷ்பத்தால் முடிந்த பொழுதெல்லாம் அர்ச்சனை செய்து வந்தால், ராகுவினால் எந்தவித தொந்தரவும் கடைசிவரை இருக்காது.

கேது:- ஒருவரது ஜாதகத்தில் கேது பகவான் 2,4,5,7,8,12இல் தனித்து இருந்தாலும், மற்ற கிரகங்களோடு சேர்ந்து இருந்தாலும், கேது தோஷம் உண்டு.  இந்த தோஷத்தை நீக்க மிக சுலபமான வழி "செவ்வல்லி" மலரால் கேது கிரகத்திற்கு முடிந்த பொழுதெல்லாம் அர்ச்சனை செய்து வந்தால் போதும். கேது பகவானது பரிபூரண அனுக்ரகம் கிடைத்து விடும்.

இவை எல்லாம் எளிய, ஆனால் பலன் தரும் பரிகாரங்களாகும். மனிதர்கள், இதை நம்பி செய்து வந்து பலனடைய எமது ஆசிகள்