Tuesday, 30 April 2019

சித்தர் கேள்வி பதில் - பரிகாரம், சாட்சி பூத நாராயணன்

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*அகத்திய மஹரிஷிகள் அடியவர் கானகத்தின்உள் சென்று சித்தர்களுடன் உரையாடல் செய்த பதிவு*

*அடியவர் கேள்வி*:—
பொதுவாக பரிகாரம் எப்படி தற்போது செய்கின்றார்கள்?

*சித்தன் பதில்*:—-
மனிதன் என்ன செய்கிறான்? பூமி காரகனான செவ்வாயின் அதி தேவதையான சுப்ரமண்யனுக்கு அபிஷேகம் செய் என்றால், முருகருக்கும் வீட்டுக்கும் என்ன சம்பந்தம், என்று யோசித்துவிட்டு, சொன்னார் செய்கிறேன் என்று ஏனோ தானோ என்று செய்கிறான். அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், "ஒருவன் மிக கவனமாக ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து, உத்தமமான பொருட்களை வாங்கி சொன்ன பரிகாரத்தை செய்ய வேண்டும்", என்று யோசிப்பதில்லை.  இந்த *பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களுக்கும் பின்னால் எந்த கர்மா தடையாக நின்று, அவன் அடைய வேண்டியதை தடுக்கிறது, என்று எளிதாக காண முடியும்.* தவிர்க்கிற வழியையும், நிமித்த சாஸ்த்திரத்தினால் சரியா கணிக்கவும் முடியும்.

*அடியவர் கேளவி*:—-
உண்மையிலேயே ஆச்சர்யமாக இருக்கிறது! காலமாக இருப்பது சாட்சி பூத நாராயணன் என்றீர்களே! அதை சற்று விளக்க முடியுமா?

*சித்தன் பதில்*:—-
அனைத்து சாஸ்த்திரங்களும், நாராயணனை காக்கும் கடவுள் என்கிறது. காக்கும் சக்தி, அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கும். கவனிப்பது என்பதே சாட்சியாக மாறுகிறது. அதனால்தான் நாராயணன் அந்த வேலையை சிறப்பாக செய்வதினால், அவருக்கு (சாட்சி) பூத நாராயணன் என பெயர் வைத்தனர். பஞ்ச பூதமாக இருந்து அனைத்தையும் கவனித்து, சாட்சியாக இருக்கிறார், என்பதை மனிதருக்கு உணர்த்தவே, கோவில்களில் பூத நாராயணரின் சிற்பத்தில், அவர் கண்ணை முழுவதுமாக திறந்து பார்த்துக் கொண்டிருப்பது போல் வடிவமைத்தனர். அது ஒரு உவமை. உண்மையில், அவர் பார்வையிலிருந்து எதுவுமே தப்பிக்க முடியாது என்பதே உண்மை. அனைத்து தெய்வ திருமேனியிலும், பூணூல் அணிந்திருப்பதுபோல் வடிவமைத்துள்ளனரே!

*அடியவர் கேள்வி*:—-
சித்த மார்க்கம், இதற்கு என்ன விளக்கம் கூறுகிறது?

*சித்தன் பதில்*:—-
உனக்கு என்ன விளக்கம் தேவை? சாஸ்த்திரப்படி அமையும் விளக்கமா? அல்லது அது சுட்டிக் காட்டும் விளக்கமா?

*அடியவர் கேள்வி*:—-
சித்தர்களின் எளிய சுட்டிக்காட்டுதல் என்ன? என்று சற்று அழுத்தமாக கேள்வியை கேட்டேன்.

*சித்தன் பதில்*:—-
பூணூலை பற்றி மட்டும் கூறாமல், வேறு சில விஷயங்களையும் பற்றி கூறினால், அவை அனைத்தின் தாத்பர்யம், உனக்கு ஒரு விரிவான பார்வையை தருவிக்கும். கூறுகிறேன், என்றார்

*அடியவர்*:—-
மிக கவனமாக அவர் கூற வருவதை கவனிக்க தயாரானேன்.

சித்தன் பதில் தொடரும்....

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1