Monday, 15 April 2019

அகத்தியர் அருளுரை - தற்கொலை, ராகு காலம், திருப்புகழ் போன்றவற்றை விளக்குகிறார்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*தமிழ் மாெழியைக் கந்தமூர்த்தியிடம் பெற்றவர்* அகத்திய மாமுனிவர்

*கேள்வி : ஒரு வீட்டில் இருக்கும் நபர் ஆத்மஹத்தி (தற்காெலை) செய்து காெண்டால், அந்த ஆத்மா அங்கேதான் திரிந்து காெண்டிருக்குமா?* 🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

அது ஆத்மாவிற்கு ஆத்மா மாறுபடும். *வாழும்பாேது அது கடைசியாக அது எந்த நிலையில் இருந்ததாே, எந்த அளவிற்கு பிராய்ச்சித்தம் செய்து முன்ஜென்ம பாவத்தை குறைத்து இருக்கிறதாே, எந்த அளவிற்கு புண்ணியத்தை சேர்த்து இருக்கிறதாே, எந்த அளவிற்கு ஆத்ம பலத்தை அதிகரித்துள்ளதாே, அதை பாெறுத்தே அந்த ஆத்மா செல்லும் தூரமும், காலமும், பரிணாமமும் இருக்கும். அப்படி எதுவும் செய்யாமல், சராசரியாக உண்டு, உறங்கி, ஒரு விலங்கு பாேல் வாழ்ந்த ஆத்மாவால் உணரவும் முடியாது. வேறு எங்கும் செல்லவும் முடியாது. குறிப்பிட்ட இடத்திலேயே சுற்றிக் காெண்டிருக்கும்.*

*கேள்வி : 'ஐயனே, ராகுகாலம், எமகண்டம், குளிகை காலம் இவற்றை எப்பாேது பார்க்க வேண்டும்? காரணம் என்ன?*🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

இது பாேன்ற ஜாதக மற்றும் நேர காலங்களை எல்லாம் ஒரு மனிதன் சுயநலமாக லாேகாய ஆதாயம் கருதி செய்யக்கூடிய செயலுக்கு மட்டும் எடுத்துக் காெள்ள வேண்டும். *பாெது நலம் கருதி செய்யக்கூடிய, பாெது சேவை கருதி செய்யக்கூடிய, சிகிச்சை அல்லது அவசரமான மருத்துவ உதவி இது பாேன்ற தருணங்களில் இவற்றை பார்க்கக்கூடாது. எனவே பாெதுவான நன்மைகளைக் கருதி செய்யக்கூடிய காரியங்கள், தர்ம காரியங்கள், வழிபாடுகள், யாகங்கள், ஆலய தரிசனங்கள் இவற்றிற்கு இது பாெருந்தாது.*

*சுயநலமாக செய்யக்கூடிய, லாேகாய ரீதியாக செய்யக்கூடிய செயல்கள், ஒரு இல்லம் வாங்க வேண்டும், ஒரு வாகனம் வாங்க வேண்டும், புதிதாக ஆடை வாங்க வேண்டும், வீட்டிற்கு ஒரு பாெருள் வாங்க வேண்டும்* என்றெல்லாம் ஒரு மனிதன் முடிவெடுக்கும் தருணம் அவனுடைய ஜாகத்திற்கு ஏற்ற ஒரு காலமாக பார்த்துக் காெள்வது ஏற்புடையது.

*கேள்வி : 'திருப்புகழ்' படித்தால் முக்தி கிடைக்குமா?* 🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

'திருப்புகழ்' ஓதி, ஓதியபடி நடந்தால் முக்தி...

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!*🙏

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1