Saturday, 6 April 2019

கவிதை ஞானம்


", சத்தம் பிறக்குமிடம்
சதாசிவம்
இருக்கும் இடம்,
சித்தம் உதிக்கும் இடம்
சிவலிங்கம்
காணும் இடம்,.
அருவி மலை நடுவே
ஆயிரங்கால் மண்டபத்தில்
திரு நடனம் கண்டேன்
தரிசனமும் கண்டேன்,
உற்று உற்றுப் பார்க்க
ஒளிதரும் ஆனந்தம்!
நெற்றிக்கு நேரே
நிலைக்க வைத்து
அருள் புரிந்தார்,.
பொங்கி நின்ற மனமும்
பொதிந்து நின்ற மௌனமும்
கங்கையான மௌனமும்,
கதித்து நின்ற மௌனமும்
என்னதான் கற்றால் என்ன?
எதை எதையோ
அறிந்தால் என்ன?
உன்னை உய்விக்கும்
சற்குருவைக்காணாத பேர்
தன்னையே காணார்,
தன் பெயரும் அறியாதவரே!
குருநாதன் தாள் வாழி ",!!!!!
  ", ஓம் நமசிவய ",