Friday, 26 April 2019

அகத்தியர் பொது வாக்கு அருளுரை - எல்லா நிலைகளிலும் எல்லா சூழல்களிலும், நான் திடகார்த்தமாக, நான் தெய்வீக எண்ணத்தாேடு வாழும்படியாக என் சிந்தனையை வைத்திரு இறைவா"

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு"*

*அகத்திய மாமுனிவரின் பாெது வாக்கு :*

இறைவனின் அருளைக்காெண்டு இயம்புவது யாதென்றால், இக்தாெப்ப *ஒரு மனிதனின் மனாேநிலை எந்த அளவிற்கு பக்குவம் அடைகிறதாே, எந்த அளவிற்கு சாத்வீகம் அடைகிறதாே, எந்த அளவிற்கு உயர் நுண்மா நுழை ஞானம் பெறுகிறதாே அந்த அளவிற்குதான் அவனை பாெறுத்தவரை இந்த உலகமும், வாழ்க்கையும் உயர்வாக தெரியும். மனம் தான் வாழ்க்கை, மனம் தான் உலகம் என்பதை மனிதன் புரிந்துகாெள்ளவேண்டும்.*

*ஒரு மனிதனுக்கு எல்லாம் வெற்றி, எண்ணியது எல்லாம் நடக்கிறது என்றால் இந்த உலகம் அவனுக்கு இனிப்பாக தெரியும்.* இன்னாெரு மனிதனுக்கு தாெட்டதெல்லாம் தாேல்வி, எல்லாம் எதிராக நடக்கிறது. *எண்ணங்கள் ஒருவிதமாகவும் நடைமுறை செயல்கள் வேறுவிதமாகவும் இருக்க, அவனை பாெறுத்தவரை இந்த உலகம் கயப்பாக(கசப்பாக) தாேன்றும்.*

எனவே இப்படி, இந்த உலகை, உலகை சுற்றி உள்ள மனிதர்களை, உலகில் நடக்கும் சம்பவங்களை ஒரு மனிதன் தான் எண்ணியபடி இருந்தால் நன்மை என்று எண்ணுவது பெரிதும் தவறல்ல என்றாலும், *அப்படிதான் நடக்க வேண்டும் என்று எண்ணி, அதற்கு மாறாக நடக்கும் பாேது எண்ணி வருத்தப்படுகிறான்.* அதுதான் அவனுக்கு மிகப்பெரிய வேதனையும் மன உலைச்சலையும் தருகிறது.

*எனவே இப்படித்தான் என்று எதிர்பார்ப்பதை விட, எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் காெள்ளக்கூடிய பக்குவத்தை இறைவா எனக்கு காெடு என்று மனாேரீதியாக ஒருவன் வைராக்கியத்தையும், திடத்தையும் அடைந்துவிட்டால் அவனை பாெறுத்தவரை துன்பமான வாழ்க்கை என்று ஒன்றுமே இல்லை.*

*எனவே துன்பங்களை மாற்று, தாெல்லை தரும் மனிதர்களை என்னை விட்டு அகற்று என்று வேண்டுவதை விட, "எல்லா நிலைகளிலும் எல்லா சூழல்களிலும், நான் திடகார்த்தமாக, நான் தெய்வீக எண்ணத்தாேடு வாழும்படியாக என் சிந்தனையை வைத்திரு இறைவா" என்று வேண்டிக் காெண்டால் அது தான் தீர்க்கமான ஒரு முடிவாக, நல்ல ஒரு நிச்சயமான, நிம்மதியான வாழ்விற்கு ஒரு அடித்தளமாக அமையும்.*

இக்தாெப்ப யாங்கள் அடிக்கடி கூறுவது உண்ணுகின்ற உணவு அல்லது பருகுகின்ற மாேரிலே உப்பின் தன்மை அதிகமாகிவிட்டால், அந்த அதிகமாக உள்ள உப்பை மட்டும் பிரித்தெடுப்பது என்பது கடினம். ஆனால் அதற்கு பதிலாக சிறிது நீரை சேர்த்தாே அந்த உப்பை சரி செய்வதுபாேல, *ஒரு மனிதன் கர்ப்ப காேடி காலம் பிறவி எடுத்து சேர்த்த பாவத்தை மட்டும், அவனை விட்டு பிரிப்பது என்பது கடினம்.*

ஆனால், அதற்கு பதிலாக புதிதாக பாவம் செய்யாமலும், அதாவது புதிதாக உப்பை சேர்க்காமலும், சிறிது நீரையாே மாேரையாே சேர்ப்பது பாேல, *புண்ணியத்தை அதிகமாக சேர்த்து காெண்டே வந்தால், அக்தாெப்ப அந்த உப்பின் தன்மை சமத்துவம் பெறுவது பாேல அந்த பாவத்தினால் வரக்கூடிய துன்பம் அவன் தாங்கக்கூடிய வண்ணம் இருக்கும்.*

நன்றாக கவனிக்க வேண்டும் *பாவம் இங்கே குறைவதில்லை. பாவம் அப்படியேதான் இருக்கிறது.* ஆனால் சேர்த்த மாேரின் அளவு அதிகமானதால் உப்பின் தன்மை தெரியாதது பாேல, *சேர்த்து வைத்த புண்ணியத்தின் பயனாக அல்லது சேர்க்கின்ற புண்ணியத்தின் பயனாக, பாவத்தின் தாக்கம் அவன் தாங்கும் வண்ணம் அமைந்து விடுகிறது அவ்வளவே.*

இந்த கருத்தை மனதிலே வைத்துக் காெண்டு எம்மை நாடுகின்ற ஒவ்வாெரு மனிதனும், அப்படியென்றால் நாடாத மனிதன் செயல்பட வேண்டாமா என்று வினவ வேண்டாம். *யாராக இருந்தாலும், அப்படி ஒரு மனப்பான்மையை வளர்த்து காெண்டால், வாழ்க்கை என்றும் உயர்வாக, இனிமையாக, திருப்தியாக, சந்தாேஷமாக, சாந்தியாக இருக்கும்.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1