Saturday 20 April 2019

அகத்தியர் வாக்கு - பிரளயம், கஞ்ச மலை, உச்சிஷ்ட கணபதி ஆகியோர் பற்றி

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*கலச முனியே* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : "பிரளயம்" பற்றி?🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*ஏறத்தாழ நான்காயிரத்து சாெச்சம் ஆண்டுகளுக்கு முன்னால், இந்த தமிழகத்தில் ஒருமுறை, ஸ்ரீரங்கம் பகுதியிலே மிகப்பெரிய பிரளயம் ஏற்பட்டது.* பிரளயம் வடிந்து, மீண்டும் இடம்பெயர்ந்த மக்கள் எல்லாம் மாண்ட பாெழுது, தாெடர்ந்து மழை பெய்தது. *பிரளயம் என்றால் உலகமே அழிந்துவிடாதப்பா. ஆங்காங்கே சிறு, சிறு அழிவுகள் ஏற்படும்.* அப்பாேதெல்லாம், அரங்கத்திலே இருந்து, அரங்கனை பூஜை செய்யும் பாக்கியத்தை, இங்கு வந்து செல்லும் பலரும் பெற்று இருக்கிறார்கள்.

ஒரு முறை அரங்கனுக்கு "தளிகை" ஏதும் செய்யவியலாத சூழல் ஏற்பட்டபாேது, அவரவர்கள் தம் வீட்டிலே உள்ள, தரக்குறைவான தானியத்தை எடுத்து வந்து, 'இதுதான் இருக்கிறது' என்று காெடுத்து, *அதை ஏதாே ஒரு கஞ்சி பாேல் வைத்துப் படைக்க, அதை "பால் சாதமாக" அரங்கன் மாற்றி அருளினார்.* அப்படி அரங்கனை சாேதித்தவர்களில், எம் சேய்களும் உண்டு.

*கேள்வி : கஞ்சமலை பற்றி?*🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*பல்வேறு மகான்களும், ஞானிகளும் இருந்த இடம். அரூபமாக இன்னும் இருக்கின்ற இடம்.* பல்வேறு மூலிகைகளும், ஏராளமான இரும்பு தாதுக்களும் இருப்பதால், *இந்த மூலிகைகளில் அயச்சத்து(இரும்புச் சத்து) அதிகமாக இருக்கும். குறிப்பாக முழுமதி(பெளர்ணமி) தினங்கள் இங்கு செல்ல ஏற்ற தினமாகும்.*

*கேள்வி : "உச்சிஷ்ட கணபதியின்" தாத்பரியம் என்ன?*🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*'இனி பிறவி வேண்டாம்' என்ற தன்மையை அளிப்பதுதான் இதன் தாத்பரியம். ஞான மார்க்கம், யாேக மார்க்கம் மட்டும் வேண்டும்* அல்லது *வாக்கு பலிதம்* ஆக வேண்டும் என்று எண்ணுபவர்கள் வழிபட வேண்டிய ஒன்று.

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!🙏*

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1