Sunday, 7 April 2019

எனது இறை அனுபவம், தி. இரா. சந்தானம்

எனது இறை அனுபவம்

சதா இறை சிந்தனையில் இருப்பவர்கள் இறைவனை அடைய எண்ணி அமைதியாக தரையில்  பத்மாசனமிட்டு அமர்ந்து  எந்த சிந்தனையும் இல்லாமல் ஒரு புள்ளியில் உயிரை குவிக்கும் போது மனமது அடங்கி வாசி அது உரு ஏறி உள் ஒளியாய் அமர்ந்துள்ள இறைவனை காணும் நிலையில் மூச்சானது முழுவதும் அடங்கி உள்  சுவாசமாய்  ஓடி பசி தாகம் தூக்கமற்ற நிலையில் மேன்மை காண்கிறது.

இவ்விதமாக யாம் அமர்ந்து பழகும் நிலையில், இடது உள்ளங்காலில் மையப்பகுதியில் மிகுந்த எரிச்சல் ஏற்பட்டு ஒரு புள்ளியில் குத்துவது போன்ற உணர்வு ஏற்பட்டது. எனக்கு ஏற்கனவே முதுகு வலி உண்டு. அது தண்டு வடத்தில் ஏற்பட்ட கோளாறால் அவ்விதம் வலி ஏற்படும் . பல முறை  வாசி யோகத்தின் பின் பத்து நிமிடங்களிலேயே அது சரி ஆவது உண்டு. சில சமயம் சித்த மருத்துவ  குடிக்கும் மருந்தையும் லேகியதையும் உட்கொண்டு சரி செய்ததும் உண்டு. ஆனால் இம்முறை வாசி யோகத்திலும் சித்த மருத்துவ முறையிலும் அது சரி ஆகவே  இல்லை. பின்னர் தான் உணர்ந்தேன் அது தண்டு வடத்தில் உள்ள வலி அல்ல. வலது இடுப்பு பக்கம் உள்ள வலி என்றுணர்ந்தேன். அதனால் தான் தண்டு வட மருந்து பலன் அளிக்கவில்லை.

வாசி யோகத்தின் போது எவ்வித வலியாய் இருந்தாலும் அதனை கவனித்தால், அது சில கணங்களிலேயே மறைந்து விடும். அதனால் தான் நான் வாசி யோகத்தில் அமர்ந்தேன். கீழ் முதுகு வலியை கவனித்தேன். ஆனால் என்னை திசை திருப்புமாறு உள்ளங்காலில் ஏற்பட்ட வலி புதிதாக இருந்தது.

ஆனால் இது என்ன வலி என்று புரியவில்லை. மேலும் சிலர் சிறுநீரகததால் கல் , அல்லது மண்ணீரலில் கல் போன்றவை இருந்தால் கூட முது இடுப்பு பகுதியில் வலி ஏற்படுத்தும் என்று கூறினர். ஐயகோ இது வேறயா , இதற்க்கு நாம் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டுமே. ஸ்கேன் முடிவில் என்ன கூறுவார்களோ, அறுவை  சிகிச்சை செய்ய வேண்டுமோ அல்லது மண்ணீரலை  முழுவதுமாக  அகற்ற வேண்டுமோ. என்ன செய்வேன் என்று மனம் துடித்தேன்.

அப்போது மகா சித்தர் அகத்தியர் அய்யா அவர்கள் உள்ளிருந்து ஒரு எண்ணமாக வெளிப்பட்டு  கூறியதாவது

 " ஏனப்பா மனம் வருந்தி குழப்பி கொள்கிறாய், நான் உன்னிடத்தில்  உள்ள  போது என்னை மீறி என்ன நடந்து விட முடியும்.   யோகத்தின் போது உள்ளங்களில் ஏற்பட்ட உணர்வை கவனி - உன் நோய்க்கு அதில் தான் தீர்வு உள்ளது. நான் உனக்கு தீர்வை காட்டி கொடுத்தும் உன்னால் புரிந்து கொள்ள  முடியவில்லையா" என்று எண்ணம் வந்தது.

சத்தியமாக இது எனது மனதிலிருந்து என் மூளையை கொண்டு தோன்றிய எண்ணம் இல்லை. பல சமயம் அய்யாவின் உத்தரவு இவ்வாறு தான் மனதில் வரும் வரும் போது நாம் தான் அதனை கவனித்து, இது அய்யாவின் உத்தரவு என்று உணர்ந்து கொண்டு செயல் செய்ய வேண்டும்.

அப்போது தான் எங்கோ படித்தது ஞாபகம் வந்தது. உடலில் உள்ள எல்லா பகுதிகளும் இணைக்கும் நரம்புகளின் சங்கமம் கால்களில் உள்ளது. காஞ்சி பரமாச்சாரியார் மகா பெரியவா கூட தினமும் பாதங்களின் இரு புறங்களிலும் அமுக்கி கொடுத்து வந்தால் உடலில் பாதி சிக்கல்கள் இருக்காது என்று கூறி உள்ளதாக ஞாபகம். மேலும் உள்ளங்காலில் மேற்பகுதியில் தலை கழுத்து போன்றவைகளின் வர்ம புள்ளிகளும் நடுப்பகுதியில் வயிற்று சம்பந்தப்பட்ட புள்ளிகளும், உள்ளங்காலில்  கீழ் பகுதியில் இடுப்பிற்கு கீழ்  உள்ள பகுதிகளின் வர்மா புள்ளிகளும் இருக்கும் என்று படித்தகாக ஞாபகம். மேலும் வயிற்று பகுதியில் பிரச்சனை இருந்ததால் தான் காலின் நடுப்பகுதியில் வாசி யோகத்தின்  போது எரிச்சல் ஏற்பட்டது என்றும் புரிந்தது. மேலும் வலது பக்க கீழ் முதுகு வலிக்கு, இடது உள்ளங்காலில் வர்ம புள்ளி இருந்ததும் தெள்ள தெளிவாக புரிந்தது. நிச்சயம் இந்த இடது உள்ளங்காலில் ஏற்பட்ட வலிக்கும் வலது கீழ் இடுப்பு பகுதி வலிக்கும், வயிற்றில் கல் இருப்பதற்கும் ஏதோ சம்மந்தம் உள்ளது என்று, எல்லாம் ஒரு ஐந்து நிமிடத்தில் தெளிவாக புரிந்தது. பின்னர் அந்த உள்ளங்கால் பகுதியை கண்டு கை விரலால் அக்கு பிரஷர் என்ற முறைப்படி அழுத்தம் கொடுத்து  பார்த்தேன். என்னே ஆச்சரியம், முதுகு வலி ஐந்தே நிமிடங்களில் நன்றாக குறைந்தது. இவ்வாறாகவே தொடர்ந்து செய்து வந்தத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கத்தியின்றி ரத்தமின்றி மருந்தின்றி ஸ்கேன் இன்றி வெறும் கைகளால் அளித்த சிகிச்சை மிகுந்த பலனை கொடுத்தது.

எம்பெருமானார் அகத்திய மகரிஷி தம் குழந்தைகள் துடிப்பதை பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டார் என்பதற்கு இதுவே சிறந்த சான்று.

எனக்கோ எந்த மருத்துவமோ அக்கு பிரஷர் பயிற்சியோ எதுவுமே தெரியாது, தெரியவும் வேண்டியதில்லை, அய்யன் காட்டிய வழியில் சென்றால் சகலமும் சுபமாகும்.

அய்யன் புகழ் ஓங்குக

என்றும் இறை பணியில்

தி. இரா. சந்தானம்
கோவை : போன் : 9176012104

அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம்
பொகளூர், அன்னூர் to மேட்டுப்பாளையம் சாலை
கோவை மாவட்டம்


ஜீவ  நாடி அருள் வாக்கு கேட்பதற்கு குருஜி இறைசித்தர் 9585018295, முன்பதிவு செய்து கொண்டு வரவும் .