Wednesday, 10 April 2019

எந்த குருவிடம் சமர்ப்பித்தாலும், அந்த விண்ணப்பம், குருவழி அகத்தியப்பெருமானிடம்தான் சென்று சேரும். அவர் காணாத எந்த பிரார்த்தனையையும், இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை என்பதே உண்மை

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*அகத்திய மஹரிஷிகள் அடியவர் கானகத்தில் வாழும் சித்தரை கேட்ட கேள்வி*:—- குருமாரகள் தொடர்பை , மனித குலம் அறியாத சித்த ரகசியம் ஒன்றை அடியேனுக்கு விளம்ப வேண்டுகின்றேன்?

*சித்தன் பதில்*:— அனைத்து சித்தர்களும், தவசிகளும், ரிஷிகளும், முனிவர்களும், சித்த வித்யார்த்திகளும், தங்கள் தியானத்தின் முடிவில், மனிதர்களும் இவ்வளவு சிறப்பாக வாழ இறைவன் அருளியத்திற்கு, நன்றியை, *அகத்தியப் பெருமானிடம் தான் சமர்ப்பிக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?*

*அடியவர்*:- இந்த தகவல் அடியேன் அறியாத ஒன்று.

*சித்தன் பதில்*:—

*எந்த குருவிடம் சமர்ப்பித்தாலும், அந்த விண்ணப்பம், குருவழி அகத்தியப்பெருமானிடம்தான் சென்று சேரும். அவர் காணாத எந்த பிரார்த்தனையையும், இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை என்பதே உண்மை
, என்று உனக்குத் தெரியுமா?*

*அடியவர்*:— இந்த தகவலை கேட்டவுடன் மனத்தால், இரு கரம் கூப்பி அகத்தியரின் உயர்ந்த நிலையை நினைத்து வணங்கினேன். "அடடா! இப்படிப்பட்ட உயர்ந்த ஒரு சித்தரைப் பற்றி தெரிந்து கொள்ள, அவர் வழி நடக்க நமக்கு கிடைத்த மிகப் பெரிய வரமாக இந்த வாழ்க்கை அமைந்துள்ளதே" என்று பூரித்துப் போனேன்.

*அகத்திய மஹரிஷிகள் பாதம் வணங்க , அவர் வழி நடக்க என்ன பாக்கியம் பெற்றோம் நாம் அனைவரும்* )


*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*