Saturday, 20 April 2019

அகத்தியர் வாக்கு -தீபத்தின் முகங்கள்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*அகத்தியர் மாமுனிவர் என்பவர் யார்?*

*குரு முனியே* அகத்திய மாமுனிவர்.

*(சிலர் தவறுதலாக குறு முனி - குள்ள முனி  என்பர். இது மிகத் தவறு.)*

*கேள்வி : தீபத்தில் முகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாமா?🙏*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

பலமுறை உரைத்திருக்கிறாேம். *முகங்கள் அதிகமாக, அதிகமாக, தாேஷங்கள் குறையும். தீபத்தின் முகங்களுக்கும், ஜாதக பாவங்களுக்கும் தாெடர்பு உண்டு.*

*கேள்வி : 12 முக தீபத்தின் சிறப்புகளைப் பற்றி?*🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்) வாக்கு :*

சகல வதனங்களும் அதிலே அடங்கி இருப்பதால், அத்தருணம் பிரதானமாக ஒரு காேரிக்கையை வைத்து, ஒரு ஷஷ்டி திங்கள்(மாதம்)மன ஈடுபாட்டாேடு (வழிபாடு) செய்தால், அது இறைவன் அருளால் நிறைவேறும். *வீட்டில் ஏற்றுவதை விட, ஆலயத்தில் ஏற்றுவது சிறப்பு. ஒவ்வாெரு முறையும் புதிய மண் அகல் விளக்கை பயன்படுத்த வேண்டும்*.

*கேள்வி : என் உறவினர் ஒருவர்'தன் மனைவி, தன்னை மதிப்பதே இல்லை' என்று குறைபட்டுக் காெள்கிறார்?*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்) வாக்கு :*

இந்த உலகத்தில் அவனுக்கு மட்டும்தானா இந்த நிலை? *எத்தனையாே ஆண்கள், மனைவியை மதிப்பதில்லை.*

இதற்கு *நவகிரக காயத்ரி, அதிதெய்வ காயத்ரி, சப்த கன்னியர் மந்திரங்களை உருவேற்றி, வழிபாடு செய்யச் சாெல்.*

               🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!🙏*