Thursday, 4 April 2019

அகபூசை

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*அகத்திய மஹரிஷிகளின் அடியவரின் கேள்வி*
எளிய முறையில் அகபூசை விளக்கம் வேண்டுகின்றேன் ?

*சித்தன்* ஒரு மனிதனின் மார்பு பாகத்தை "ஹ்ருதய கமலம்" என்பார்கள். *த்யானத்தில், எவனொருவன், இறைவனை, தான் விரும்பிய ரூபத்தில் அங்கு அமர்த்தி மூச்சை உள்வாங்குகிறானோ, அவனுக்கு, ஒரு சில காலத்திலேயே, அவன் இருத்திய ரூபத்திலேயே இறைவன் அமர்ந்து இருப்பதை உணர்த்துவார், என்பது தெரியுமா?*
முடிந்தால், இறைவனின் எளிய ரூபமான "லிங்க ரூபத்திலேயே" முயற்சி செய்து பார். *மார்பில், லிங்க ரூபம் உள்ளிருந்து வெளியே அழுத்துவது போன்று ஒரு சில காலத்திலேயே உணரலாம்.* சுழிமுனை வழி சஹஸ்ராரம் சென்று பார்த்த பெரியவர்கள், தசவாசலில், ஒரு லிங்கம் தலைகீழாக அமர்ந்து, ஆத்மாவை கரை ஏற்ற காத்திருப்பதை உணர்ந்தனர். *அப்படின்னா! சிவபெருமானே, ஒவ்வொரு மனிதனையும் கரையேற்றி, தன்னையே வாகனமாக்கி, காத்திருக்கிறார், என்று கூறலாம் இல்லையா?"* என்று புன் சிரிப்புடன் நிறுத்தினார்.

*அடியவர்* சற்று நேரம் அமைதியாக, ஆனால் ஆச்சரியத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

சித்தன் பதில் தொடரும்....

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*