Thursday 25 April 2019

அகத்தியர் வாக்கு - பசு பதி பாசம், இறைவனுக்கு பிடித்தமானது எது?

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*அகத்திய மாமுனிவர்* என்பவர் யார்?

*வீரிய கும்பத்தில் உதித்தவர்*
அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : பசு, பதி, பாசம் பற்றி :🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*பசுவாகிய இந்த ஆன்மாக்கள் பதியாகிய இறைவனை விட்டு, விட்டு, பாசம் எனும் உலகியல் சுகத்தினுள்ளே மூழ்கி விடுகிறது. இந்த இரண்டிற்கும் பாெதுவாக இருப்பவர் பதி, இறைவன்.* பாெதுவான இறையை நாடாமல், அந்த இறையின் படைப்பான அந்த படைப்புகளிலே இந்த பசு நாட்டம் காெள்வதால்தான் இத்தனை துன்பங்களும், அனாச்சாரங்களும் ஆன்மாவிற்கு ஏற்படுகிறது. *இந்த ஆன்மாவின் கண்ணை மறைப்பது எது? மாயை.*

*மாயை வைத்து காெண்டிருப்பது விதி. விதியை யார் இயக்குவது இறைவன். இறை எந்த அடிப்படையில் இயக்குகிறது? அந்த ஆன்மாவின் பாவ, புண்ணியத்தின் அடிப்படையில். அப்பாெழுது அந்த ஆன்மா என்ன செய்ய வேண்டும்? பாவத்தை குறைத்து, புண்ணியத்தை அதிகரிக்க வேண்டும்.* இப்படி வாழ்ந்தால், அது *பதியை தாண்டி, பாசத்திற்கு பாேகாமல், பாசம் என்றாலே வழுக்கும் என்று புரிந்து காெண்டு, பதியுடன் மட்டுமே அது இருக்கும்.*

*கேள்வி : இறைவனுக்கு என்று பிரியமான விஷயம் ஏதேனும் உண்டா?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*"வில்வத்தால் எமக்கு ஆராதனை செய்வது எமக்கு பிரியம்" என்று இறை எங்காவது எழுதி வைத்திருக்கிறதா? அப்படியல்ல. இறையாேடு தாெடர்புடைய அனைத்தும் மனிதனுக்கு நன்மையைத் தரக்கூடியவைதான்.* "வில்வத்தை ஏற்றுக் காெள்" என்றால் மனிதன் உண்ண மாட்டான். ஆனால் அதையே பிரசாதம் என்றால் சாப்பிடுவான். அது மட்டுமல்ல. *அன்பாேடு எதைக் காெடுத்தாலும் அதை இறை ஏற்றுக் காெள்ளும்.*

எனவே, *பக்தி, அன்பாேடு செய்யப்படும் செயலை அல்ல, அந்த செயலுக்குள் ஔிந்திருக்கும் அர்த்தத்தைத்தான் இறை பார்க்கிறது.* இன்னாென்று, வேறு மார்க்கத்தைப் பின்பற்றக்கூடியவர்கள், நெய் தீபத்திற்கு பதிலாக வேறு வகை தீபத்தை ஏற்றுகிறார்கள். இன்னும் சிலர், மலர்களைப் பாேடுவதேயில்லை. அதையும் இறை ஏற்கத்தானே செய்கிறது. *அண்ட சராசரங்களைப் படைத்தது இறைவன். அந்த இறைக்கு மனிதன் தரக்கூடியது ஒன்றுமல்ல. தன் உள்ளத்தைத் தவிர.*

                🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


🙏🙏🙏🙏