Friday 5 April 2019

ஏன் சித்த மார்கத்தில் உள்ளவர்கள் அனைவரிடமும் இருந்து ஒதுங்கியே வாழ்கிறார்கள்?

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*


*அகத்தியர் அடியவரின் கேள்வி*
சித்தனிடம் பின்னர் கேட்பதற்காக விலக்கி வைத்திருந்த கேள்விகளில் ஒன்று *தலை கீழ் லிங்கம்*. இதை ஒரு சித்தர் கோவிலில் பார்த்திருக்கிறேன். ஆவுடை மட்டும் தான் மண்ணுக்கு மேலே தெரியும். பாணம், பூமிக்குள், புதைந்த விதத்தில் இருக்கும். அந்த லிங்கத்தை, அந்த விதமாக அமைத்ததே, ஒரு சித்தர்தான். அதை கண்டவுடன், இதன் அமைப்பே வித்யாசமாக இருக்கிறதே. இதன் வழி சித்த பெருமான் எதோ ஒரு செய்தி சொல்கிறாரே, என பல முறை யோசித்ததுண்டு. அந்த கேள்வியை அடியேன் இவரிடம் கேட்க்காமலேயே, கலந்துரையாடல் வழி மெதுவாக அந்த பெரியவர் விளக்கலானார்.

*சித்தன் பதில்*:- என்ன? அப்படி ஒரு லிங்கத்தை கண்டவுடன், நடந்த நிகழ்ச்சிகளை ஆராய்ச்சி செய்து சென்ற உனக்கு விடை கிடைத்தது. ஆனால், உன் உண்மையான கேள்விக்கு பதில் இதுவரை கிடைக்கவில்லை! அல்லவா?" என்று கூறி என்னை, மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

தலைகீழ் லிங்கத்தை பற்றி கூறும் முன் ஒரு சில விஷயங்களை தெரிவிக்க விரும்புகிறேன். இங்கு நடந்த கலந்துரையாடலை நீ வெளியிடும்பொழுது, வாசிக்கிற அனைவரும், இனி கூறப்போகிற விஷயத்தை அவர்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும். இரண்டு வருடமாக, தூது அனுப்பிய பின்தான் உனக்கு சந்திக்கவே அனுமதியளித்தோம். முதலில், விரிவாக எதையும் கூற வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தோம். இருப்பினும், *இந்த விஷயங்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்கிற உன் நல்ல எண்ணத்துக்கு மதிப்பளித்து, இத்தனை விரிவாக கூறினோம்.*

*அடியவர்*  தாங்களின்இந்த உரையாடல் அறிவுரையை படிக்கும் அனைவரும் புண்ணியம் செய்தவர்கள்.ஏன் சித்த மார்கத்தில் உள்ளவர்கள் அனைவரிடமும் இருந்து ஒதுங்கியே வாழ்கிறார்கள்?

*சித்தன் பதில்* :- சித்த மார்கத்தை தேர்ந்தெடுத்தவர்கள் அனைவரையும் "சித்த வித்யார்த்திகள்" எனத்தான் அழைப்பார்கள். இத்தனை தகவலை உன்னுடன் பகிர்ந்து கொண்டாலும், இன்னமும், நானும் ஒரு "வித்யார்த்திதான்". அப்படிப்பட்ட எண்ணம்தான் உயர்வை தரும். சாதாரண மனித வாழ்விலிருந்து, விலகி நின்று, சித்த மார்க்கத்தின் பாதையில், பயிற்சி செய்து, எண்ணங்களை தூய்மையாக்கி, ஒரு புள்ளியில் நின்று, தவத்தில் இருப்பவர்களை, பிறரின் எண்ண அலைகள் நிறையவே பாதிக்கும். அவர்கள் தவத்திற்கு, இடையூறாக இருக்கும். எல்லா மனிதர்களும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட கர்மாவில், எப்பொழுதேனும் ஒரு பெரியவரை சந்திக்க நேரலாம். அப்படி சந்தித்தபின், அவருடன் கலந்துரையாடியது, எண்ணங்களை பகிர்ந்து கொண்டது, நிறையவே மனதுக்கு இதமாக இருக்கும். தன்னையே மறந்து விடுவார்கள். பின்னர், அவரிடமிருந்து விடை பெற்று தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு வந்த பின், கிடைத்த வெளிச்சத்தை/ஞானத்தை தங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்தி முன்னேற முயற்சிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, சொல்லித்தந்தவரையே, நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படிப்பட்ட நினைப்பு, அவர்கள் தவத்துக்கு இடையூறாக இருக்கும். அவர்கள் செல்கிற சித்த மார்க்க வழியில் தடங்கலாக இருக்கும், அவர்களை பின்னுக்கு இழுக்கும். இந்த ஒரு காரணத்தினால்தான், சித்த மார்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள், எதுவும் பேசாமல், எல்லோரையும் விட்டு விலகியே இருக்கிறார்கள்.

சித்தன் பதில் தொடரும்.....



*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*