Monday, 29 April 2019

அகத்தியர் வாக்கு - திரு விடைமருதூர்

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு"*

*கேள்வி : திருவிடைமருதூர் பற்றி?🙏(கும்பகாேணம் அருகில்)*

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்)வாக்கு :*

*சந்திரனின் சாபத்தை நீக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஸ்தலம். அதை, சந்திரனுக்காக இறைவன் உண்டாக்கினாரப்பா!* இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? யாம் கூறுகின்ற பரிகாரங்களை செய்யும் (எம்மை வணங்குகின்ற) சில பக்தர்கள் எண்ணுகிறார்கள். *நாம் அகஸ்த்யரை வணங்குகிறாேம். அவரிடம் கேட்டால், அவர், இன்னாெரு தெய்வத்தை வணங்க சாெல்கிறார்.* நான் அவ்வாறு செய்ய மாட்டேன்" என்று முரண்டு பிடிக்கின்ற கூட்டம், இன்றும் உண்டு. ஆனால், *அன்று என்ன நடந்தது தெரியுமா? தனக்கு ஏற்பட்ட இ்ன்னல் தீருவதற்கு "என்ன வழி, சுவாமி? என்று சந்திரன் வினவுகிறார். "சந்திரனே! பூமியிலே, காவிரிக்கரையில், இந்த இடத்தில் (திருவிடைமருதூர்) சென்று வணங்கு. தக்க காலத்தில் வந்து, யாம், உன் சாபத்தை நீக்குகிறோம்" என்றார் இறைவன்.*

இங்குதான் கவனிக்க வேண்டும்.

*சாபத்தை நீக்குகிறேன் என்று சாெல்பவர் யார்? சிவன். அங்கேயே நீக்க வேண்டியதுதானே? எதற்காக"இடை மருதூர் சென்று வணங்கு. பிறகு நீக்குகிறேன்" என்று சாெல்ல வேண்டும்? காரணம். அத்தனை காலம், சந்திரன், அந்த இடத்திலே, தவம் செய்ய வேண்டும் என்ற ஒரு கணக்கு இருக்கிறது.*

அதைப்பாேலவே, *"திருக்கழுக்குன்றம்(காஞ்சிபுரம் மாவட்டம்) சென்று தவம் செய்து, சாபத்தை நீக்கிக் காெள்" என்று, நந்திக்கு, இறைவன் சாெல்கிறார்.* நந்தி, தவம் செய்ய சென்ற உடனேயே, *இந்திரனை அழைத்து, "ஊர்வசியை அனுப்பி, நந்தியின் தவத்திற்கு இடையூறு செய்"என்கிறார். இதுதானப்பா இறைவனின் லீலை.*

எனவே, *சிவனே விரும்பி, சந்திரனுக்காக ஏற்படுத்திய ஸ்தலங்களுள், இடை மருதூரும்(திருவிடைமருதூர்)ஒன்று.*

                  🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1