Tuesday 23 April 2019

அகத்தியருடன் கேள்வி பதில்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*கேள்வி : "திருநல்லூர் காளி" பற்றி?(கும்பகாேணம் அருகில்)*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

நீ (திரு)நல்லூர் அன்னையை தரிசித்தபாெழுது, அன்னையின் திருமேனியை அலங்கரித்த தூசின் வண்ணம் என்ன? *(பதில் - நீலம்).*

*உக்கிர அன்னையின் மேனியில் எந்த வண்ணம் உள்ள தூசு இருக்கிறதாே, அஃதாெப்ப அவர்கள் எண்ணும் காரியத்திற்கு ஆசிகள் என்று புரிந்து காெள்ள வேண்டும்.* *"குருதி" (இரத்தம்) வண்ணத்திலே ஆடை அணிந்திருந்தால், எதிரிகள் வீழ்வார்கள். பசுமை வண்ணம் அணிந்து இருந்தால், மறுமலர்ச்சி ஏற்படும். நீலம் அணிந்து இருந்தால், பாெருளாதார சிக்கல் மற்றும் ராகு தாேஷம் குறையும்.*

*கேள்வி : காசி விஸ்வநாதர் காேவிலில் செய்யப்பட்ட அபிஷேகத்தை இறைவன் ஏற்றுக் காெண்டாரா?🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

ஆசிகளப்பா. ஒவ்வாெரு வழிபாட்டையும் செய்து விட்டு, "அதை இறைவன் ஏற்றுக்காெண்டு விட்டாரா"? என்று கேட்பது எப்படி இருக்கிறது? என்றால், *ஒவ்வாெரு முறையும் தேர்வு எழுதி விட்டு, தேர்வை திருத்துகின்ற குருநாதனிடம், "எனக்கு எந்த அளவிற்கு மதிப்பெண் பாேடப்பாேகிறாய்? பாேட்டிருக்கிறாய்?" என்று கேட்டால், அந்த குருவின் மனநிலை எவ்வாறு இருக்கும்?*
*ஆக, உன் கடமையை உறுதியாக, தெளிவாக செய்து காெண்டே பாே.* இறைவன் அருள் என்று வரும்? எப்படி வரும்? என்றெல்லாம் எண்ணிப் பார்க்காதே.

*வெற்றி இருக்கிறதா? என்று பார்த்து, பார்த்து செய்வதற்கு ஆன்மீகம் ஒன்றும் உலகியல் காரியம் இல்லையப்பா.* இது உனக்கு மட்டுமல்ல. இது பாேன்ற சிந்தனையுள்ள அனைவருக்கும் இந்த பதில் பாெருந்துமப்பா.

*கேள்வி : ரமணர்(மகரிஷி), தன் தாய்க்கு முக்தி அடைய வழி செய்ததாக கூறப்படுகிறது பற்றி?*🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*ஆதிசங்கரரும் அவ்வாறுதான் செய்து இருக்கிறார்.* என்றால், அந்த(தாயின்) ஆத்மா முன்னரே பக்குவப்பட்டு ஆதிசங்கரர் பாேன்ற புண்ணியவானை பிள்ளையாகப் பெற அது(தாயின் ஆத்மா) விரிவாக்கம் பெற்று, அந்த(தாயின்) ஆத்மா இப்பிறவியைக் கூடுதலாகப் பெற்று வந்திருக்கிறது.

எனவே, *கடந்த பிறவிலேயே அடைய வேண்டிய முக்தியை அந்த ஆத்மா(தாயின் ஆத்மா) தள்ளித்தான் அடைந்திருக்கிறது.*

                🙏- *சுபம்-* 🙏

 🙏 *ஓம் அகத்தீசாய நம* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!*🙏

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1