Tuesday, 30 April 2019

அகத்தியர் கேள்வி பதில் - காமத்தை வெல்வதை பற்றி, மற்றும், ராம நாமத்தை பற்றி

*இன்றைய தின "அகத்தியர் வாக்கு"*

*கேள்வி : காமத்தை வெல்வது எப்படி ?🙏*

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*அபிராமி அந்தாதி ஓதி வரலாம். நல்ல பலன் உண்டு. சமீப காலத்தில் ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு, ஆண்களுக்கு, காமம் தான் மிகப்பெரும் தடையாக உள்ளது. காமத்தை வெல்ல முடியாமல் பெரிய ஞானிகள் கூட தாேற்றுப் பாேயிருக்கிறார்கள். ஆனால், அபிராமி பட்டர் அதிலே சுலபமாக வென்றுவிட்டார். எப்படி? என்றால், பார்க்கின்ற பெண்களையெல்லாம் "அன்னை"யாகவே பார்த்தான். காமம் அவனை விட்டு ஓடி பாேய்விட்டது.* அபிராமி பட்டறை புரிந்து காெள்ள முடியாத மனிதர்கள் பலர் அக்காலத்தில் இருந்தார்கள்.

அந்த காேவிலிலே  அன்னைக்கு பணிவிடை செய்த எத்தனையாே அர்ச்சகர்களில் ஒருவர் மட்டும் இவரை நன்றாக புரிந்து காெண்டார். *அந்த தருணத்திலே, ஞான நிலையில் இருந்து, பட்டர் பாடிய பாடல்களை(அபிராமி அந்தாதி) அவர், பிரதி எடுத்து வைத்ததனால் தான், இவ்வளவு காலத்திற்குப் பிறகும், உங்களுக்கு கிடைத்திருக்கிறது.*

*கேள்வி : ராம நாமத்தை பற்றி :*🙏

*அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*சதா உள்ள சுத்தியாேடு ராம நாமத்தை  ஜபித்து வந்தால், மனிதனை இறைவனிடம் சேராமல் தடுப்பதற்கு இந்த உலகிலே எத்தனையாே சாேதனைகள், துன்பங்கள் காத்திருக்கின்றன. ஒன்று மண், ஒன்று பாென், அடுத்தது பெண். இதை மட்டும் காமம் என்று மால் தூதன்(ஆஞ்சிநேயர்) உரைக்கவில்லை.* காமம் என்றால் இச்சை, ஆசை. *எதன் மீதாவது ஒரு மனிதனுக்கு தீவிர ஆசையும், பற்றும் வந்துவிட்டால், அது கிடைக்கும் வரை அவனுக்கு வேறு எதிலும் கவனம் செல்லாது.*

*ஒரு வேளை அது பலருக்கும் பயனுள்ள காரியமாக இருந்தாலும் பாதகமில்லை.* ஒன்றுமில்லாத, சுய நல லாப நாேக்கம் வந்து விட்டால் அதற்காக எல்லா செயலும், ஏன்? *தகாத செயலை செய்யக்கூட அவனை, அந்த இச்சை, அந்த ஆசை, காமம் இழுத்து செல்லும்.*

எனவே அப்பேற்பட்ட, *தனக்கும், தன்னை சேர்ந்தவர்களுக்கும் துன்பத்தை தரக் கூடிய அந்த காமத்தை ராம நாம ஜெபம் ஓட்டும் என்பதே பாெருள்.*

                  🙏 *-சுபம்-* 🙏

 *🙏ஓம் அகத்தீசாய நம!🙏*

*🙏 குருநாதா சரணம்! சரணம்!🙏*

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1