Tuesday, 9 April 2019

யாருக்கு சிறப்பான வாழ்க்கை?

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*


*அகத்திய மஹரிஷிகளின் அடியவர் கேள்வி*:—  யாருக்கு சிறப்பான வாழ்க்கை?


*சித்தன் பதில்*:— உண்ணும் முன் ஒருபிடி உணவெடுத்து, அத்தனை குருவையும், பித்ருக்களையும் நினைத்து பிரார்த்தித்து, அதை பிற உயிரினங்கள் உண்ணக் கொடுத்து, *பின் தான் உண்டால், அவனுக்கு அனைவரின் அருளும், ஆசிர்வாதமும் கிடைக்கும்.* பிற உயிரினங்கள் உண்டாலும், அவன் யாரை எல்லாம் நினைத்து அதை படைத்தானோ, அவர்களை, எங்கு எந்த ரூபத்தில் இருந்தாலும், அந்த தாத்பர்யம் சென்று சேரும். *அவனுக்கு சிறப்பான வாழ்க்கை அமையும்.*

சித்தன் பதில் தொடரும்...

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*