Tuesday, 2 April 2019

பிரார்த்தனையை சமர்ப்பிக்க கோவில்கள், மகான்களின் சமாதிகள், பல புண்ணிய இடங்கள் இருக்கிறது. எந்த அளவுக்கு நம் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, என எப்படி புரிந்து கொள்வது?

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*கேள்வி:-*  பிரார்த்தனையை சமர்ப்பிக்க கோவில்கள், மகான்களின் சமாதிகள், பல புண்ணிய இடங்கள் இருக்கிறது. எந்த அளவுக்கு நம் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, என எப்படி புரிந்து கொள்வது?

*சித்தன் பதில்:-* “தனிப்பட்ட வாழ்வின், பிரார்த்தனைகள் என்றால், அதை புரிந்து கொள்ள காலங்கள் ஆகும். *பிறருக்கென என்றால், ஒரு சில வேளை உடனேயே நம் கண் முன் நடப்பதை காணலாம். இதிலிருந்தே, எதற்கு, இறைவன் முக்கியத்துவம் கொடுத்து, உன்னை வழி நடத்துகிறான் என்று உணரலாம்.* பிரார்த்தனையை, மிக சிறந்த விஷயம் எனக் கூறக் காரணமே, *பிறருக்கு பிரார்த்திக்கும் நிலைமையில், ஒரு மனிதன் தன் தேவைகளை மறக்கிறான். அந்த தன்னை மறந்த நிலையில், இறைவனே இறங்கி வந்து அவன் தேவைகளை பூர்த்தி செய்து விடுவான். லோகம் க்ஷேமமாக இருக்கட்டும் என பிரார்த்திக்கிற பொழுது, அந்த பன்மையான பரந்த நிலையில், நீயும் இந்த உலகத்தில்தானே இருக்கிறாய். உன் தர்மத்துக்கு உட்பட்ட பிரார்த்தனைகளும், காலப்போக்கில் நிறைவேற்றப் படும்.*

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*