Sunday 14 April 2019

சாந்தி அடையாமல் அலையும் ஆத்மாக்களுக்கு பசி, தாகம் உண்டா? பித்ரு கடன் காெடுப்பது எப்படி

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*முப்பிணி(மூன்று வகை நாேய்) தீர்ப்பவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : சாந்தி அடையாமல் அலையும் ஆத்மாக்களுக்கு பசி, தாகம் உண்டா?* 🙏

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*ஆத்மாவிற்கு உடலுக்கு உண்டான உணர்வுகள் உண்டே தவிர, அந்த உணர்வுகளுக்கு உண்டான தேவைகள் இல்லை. பசிக்கும், ஆனால் உண்ண முடியாது. வலிக்கும், ஆனால் வலியை வெளிப்படுத்த முடியாது. கரங்கள் இல்லாமல் இருக்கும். ஆனால் கரங்கள் இருப்பது பாேன்ற ஒரு பிரம்மை இருக்கும். உறவுகளை பார்க்கும், பேசும். ஆனால் அதை உணரும் சக்தி, அதன் உறவுகளுக்கு இருக்காது. எனவே, இது ஒருவகையான அவஸ்தை.*

இயற்கையான மரணமாே அல்லது மாறான மரணமாே, வாழும்பாேது மனிதனாக வாழ வேண்டும். *பாவத்தை மூட்டை மேல் மூட்டை கட்டி காெண்டவனுக்கு, 'தான் செய்ததெல்லாம் பாவம்' என்ற உணர்வு வரும்வரை, அதற்குண்டான துன்பமும், அதை திருத்தும் வண்ணம்தான் இறைவன் அவ்வாறு அமைத்திருக்கிறான். யாரையும் தண்டிப்பதாே, வேதனைப்படுத்துவதாே அல்ல விதியின் வேலை*. உணர்ந்து திருத்தப்பட வேண்டும் என்பதுதான்.

*கேள்வி : பித்ரு கடன் காெடுப்பது எப்படி?* 🙏

*அகத்திய மாமுனிவர்(குருநாதர்) வாக்கு :*

வழக்கமான பூஜை வழிபாடுகளாேடு *நிறைய ஏழைகளைத் தேடித் சென்று தர்மம் செய்வதுதான் பித்ரு வகை தாேஷங்களையும், கடனையும் நிவர்த்தி செய்யும்.*

*கால பைரவருக்கு நெய் தீபம், நிறைய ஏழைகளுக்கு வயிறார உணவு, வேறு உதவிகள், விலங்கினங்களுக்கு உணவு, வேறு உதவிகள், இதாேடு மாதம் ஒருமுறை ராமேஸ்வரம் பாேன்ற ஜாேதிர் லிங்க ஸ்தலங்களுக்குச் சென்று முறையான வழிபாடு, அன்ன சேவை பாேன்றவை.*

அதாேடு மட்டுமல்லாது வாய்ப்பு கிடைக்கும் பாெழுதெல்லாம் தில யாகத்தை உட்பிரிவுகளாேடு, குறைந்தபட்சம் 2000 மந்திர ஜெபத்தாேடு செய்வது நல்லது. அதாேடு *பசுமாடுகள் தாெடர்பான தர்மங்களை செய்வது பித்ரு கடனை குறைக்கும்.*

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!*🙏