Friday, 5 April 2019

சித்தர்கள் சாபம், குரு சாபம்

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*

*அகத்திய மஹரிஷிகள் அடியவரின் கேள்வி*:- இந்த உலகம் இந்நாள் அறியாத ஜாதக ரகசியம் ஏதாவது ஒன்றை அடியேனுக்கு தெரிவிக்க பணிகின்றேன்?

*சித்தன் பதில்*:- சித்த மார்க்கம் என்பது, பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்கக் கூடிய செயல்களை அறவே விலக்குகிற ஒரு வழி. பிற உயிர்களுக்கு/எந்த ஜீவனுக்கும் ஊறு விளைவிக்கக் கூடிய மனநிலை உடையவர்கள் யாரும், தாங்களாக நிரந்தரமாக திருந்தும் முன், எட்டிக் கூட பார்க்காதீர்கள். உதாரணமாக, அசைவ உணவு உண்பவர்களை கூறலாம். குருவின் சாபத்துக்கு, ஏதேனும் ஒரு ஜென்மத்தில் ஒரு குருவுக்கு பணிவிடை செய்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம். *சித்தர்கள் சாபத்துக்கு, ஒரு பொழுதும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும், விமோசனம் கிடையாது. மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியது.* குருவின் சாபத்தை இறைவன் ஜாதகம் வழி காட்டிக் கொடுத்துவிடுவான். *சித்தர்கள் சாபத்தை ஜாதகத்தில் மறைத்துவிடுவான். இறைவனுக்கு தெரியும் இருந்தும், இன்னொரு சித்தனால்தான் அதை கண்டு பிடிக்க முடியும்.* ஒருவழியிலும் கண்டு பிடிக்க முடியாத அப்படிப்பட்ட சாபத்தை, சாதாரண மனிதன் ஏன் பெறவேண்டும்? குருவை குளிரவைத்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம், குரு சாபம் விலகிவிடும். பற்று இல்லாத சித்தனை எப்படி குளிர வைக்க முடியும்? என்று விடுதலை கிடைக்கும்?

சித்தன் பதில் தொடரும்...

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*