Tuesday, 28 April 2020

அகத்தியர் எனக்களித்த வாசி யோக தீட்சை


சில வருடங்கள் முன்பு எனக்கு அகத்தியர் ஜீவ நாடியில் குற்றாலத்துக்கு மேலே செண்பக அருவி சென்று. அங்கே இருந்து சில தூரத்தில் இருக்கும் எனது குகைக்கு வந்து எனது வாசி கொலை ஒரு முறை தொட்டு வணங்கி வா என்று நாடியில் உத்தரவு வந்தது. அப்போது தாமாகவே சில நண்பர்கள் அழைத்து சில ஆலயங்கள் சென்று விட்டு பின்னர் செண்பக அருவி குகைக்கு சென்று வரலாம் என்று திட்டமிட்டு சென்று வந்தோம். அது எங்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. அப்போது நாங்கள் அந்த குகள் எங்கே இருக்கும் என்றும் தேடி கொண்டு இருந்தோம். அப்போது ஒரு மனா நிலை சரியில்லாத ஒரு பெண் வந்து என்ன வேண்டும் என்று கேட்க, நாங்களும் அந்த குகையை தேடிக்கொண்டு இருப்பது பற்றி சொல்ல, அவளோ அது எனக்கு தெரியும் என்னை தொடர்ந்து வாருங்கள் என்று கூறி அழைத்து சென்றாள். மனா நிலை சரியில்லாத பெண்ணை நம்பி காட்டில் சென்று வழி தெரியாமல் மாட்டி கொண்டால் என்ன செய்வது என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் நாங்கள் அவளை தொடர்ந்து சென்றோம். 10 நிமிட நடை பயணத்திற்கு பிறகு அந்த குகை இருந்தது. சென்று பார்த்த பொது அங்கே மஹா அவதார் பாபாஜி இந்த சீடர் அங்கேயே தங்கி சமைத்து உண்டு பூஜை செய்து வசய்து வந்தார். அந்த குகைக்கு ஒரு இரும்பு கேட் பாதுகாப்பிற்காக போடப்பட்டு இருந்தது. எங்களை உள்ளே அழைத்தார். அற்புதமான காட்சி மகா அவதார் பாபாஜி அவர்களுக்கு அகத்தியர் வாசி யோகா தீட்சை இந்த குகையில் வைத்து தான் கொடுத்ததாகவும். தான் அவர் வழியில் வருவதால் இங்கே சில வருடமாக வசித்து த்யானம் செய்து வருவதாகவும் கூறினார். அங்கே அகத்தியர் பாபாஜி சிலைகள் குரு தட்சிணாமூர்த்தி மற்றும் சித்தர் சபை ஆகியவை இருந்தன. அகத்தியர் உபயோகித்த புனிதமான வாசி கோல் அங்கே இருந்தது. எனக்கு மட்டும் ஜீவா நாடியில் உத்தரவு ஆகி உள்ளதால் நான் மட்டும் வாசிக்கோலை தொட்டு வணங்கி வந்தேன். அதுவே வாசி யோக தீட்சையின் முதல் படி. மேலும் அந்த குகையில் 10 ஆதி நீள பாம்பு ஒன்று வசித்து வருவதாகவும். அவ்வப்போது இங்கே வந்து படுத்து செல்லும். யாரையும் தொந்தரவு செய்தது கிடையாது என்றும் அந்த இளம் துறவி உரைத்தார்.

2 comments:

  1. Nice .... நமது இந்து மதம் மற்றும் சித்தர்கள் மிகப் பெரிய பொக்கிஷம்

    ReplyDelete