Saturday 11 April 2020

தர்மதேவனான யமனின் யம சபை

🌷🕉️லோகபாலகர்களின் ஐந்து சபைகள்
🌻பதிவு 02
==================================
❤️தர்மதேவனான யமனின் யம சபை❤️
==================================

🕉️விஸ்வகர்மாவால் கட்டப்பட்ட யமனின் சபா மண்டபம்

🕉️யமனின் சபா மண்டபம்  நூறு யோஜனை பரப்பளவில் புடம் போட்ட தங்கமெனப் பிரகாசித்துக் கொண்டுள்ளது.

🕉️சூரியனைப் போன்றப் பிரகாசமுடைய யமசபை விரும்பியவற்றைக் கொடுக்கவல்லது.

🕉️அது மிகக் குளிராகவும் மிக வெப்பமாகவும் இல்லாமல் இதயத்தை மகிழ்ச்சியில் வைக்கிறது.

🕉️அந்தச் சபா மண்டபத்தில் துக்கமோ வயதால் ஏற்படும் பலவீனமோ தாகமோ பசியோ ஏற்படாது.

🕉️ஏற்றுக் கொள்ள முடியாத எந்தப் பொருளுக்கும் அங்கே இடம் கிடையாது. எந்த வகையான தீய உணர்வுகளும் அங்கே எழாது.

🕉முதுமை, சோர்வு போன்ற எத்தகைய கெடுதலும் இல்லாதது. தேவர் மனிதர்க்கான போகங்களும், ஐவகை உணவும், வாசமலர் மரங்களும் எக்காலமும் இங்கே உண்டு. ராஜரிஷிகளும் , பிரம்ம ரிஷிகளும் இங்கே உண்டு. யமனை வழிபடுவோர் இங்கு உள்ளனர். அச்சபையில் எங்கும் ஒலியும், ஒளியும், மணமும் நிறைந்துள்ளன.
(நாரத புராணம்)

🕉️தேவர்களாலும் மனிதர்களாலும் விரும்பப்படும் அனைத்துப் பொருட்களும் அந்த மாளிகையில் உள்ளன.

🕉️சுவை மிகுந்த இன்பத்துக்குகந்த அனைத்துப் பொருட்களும் அபரிமிதமாக அங்கே இருக்கின்றன. அந்த மாளிகையை அலங்கரிக்கும் மலர் மாலைகளின் நறுமணம் அலாதியானது. அங்கே அந்த மண்டபத்தைச் சுற்றி நிற்கும் மரங்கள் விரும்பும் கனியைக் கொடுக்கவல்லவை. அங்கே இனிமையான மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க குளிர்ந்த மற்றும் வெப்ப நீர்நிலைகள் உள்ளன.

🕉️அந்த மாளிகையில் அரச முனிகளும்
தூய்மை மிகுந்த பிரம்ம முனிவர்களும் மகிழ்ச்சியுடன் காத்திருந்து யம தர்மனை வழிபடுகின்றனர்.

🌼யயாதி
🌼நகுஷன்
🌼புரு
🌼மாந்தாத்ரி
🌼சோமகன்
🌼நிரிகன்
🌼அரசமுனி
🌼திரசதஸ்யு
🌼கிருதவீரியன்
🌼சௌதஸ்வஸ்
🌼அரிஷ்டநேமி
🌼சித்தன்
 🌼கிருதவேகன்
🌼கிரீடி
🌼நிமி
🌼பிரதார்த்தனன்
🌼சிபி
🌼மத்ஸ்யன்
🌼பிரிதுலாக்ஷன்
🌼பிரஹத்ரதன்
🌼பர்தான்
🌼மருதன்
🌼குசிகன்
🌼சங்கஸ்யன்
🌼சங்கிரிதி
🌼துருவன்
🌼சதுராஸ்வன்
🌼சதஸ்வொர்மி
🌼மன்னன் கார்த்தவீரியன்
🌼பரதன்
🌼சுரதன்
🌼சுனிதா
🌼நிசதன்
🌼நளன்
🌼திவோதாசன்
🌼சுமணஸ்
🌼அம்பரீச
🌼பகீரதன்
🌼வியாஸ்வன்
🌼வதரஸ்வ
🌼பிரிதுவேகன்
🌼பிரிஷதஸ்வன்
🌼வசுமனஸ்
🌼க்ஷூபன்
🌼சுமஹவள
🌼பிரிஷத்கு
🌼பிருஷசேனன்
🌼புருகுத்சன்
🌼த்வைஜன்
🌼ரதின்
🌼அர்ஷ்டிசேனன்
🌼துவிலீபன்
🌼உயர்ந்த
🌼ஆன்மா கொண்ட உசீநரன்
🌼அவுசிநரி
🌼புண்டரிகன்
🌼சர்யதி
🌼சரவன்
🌼சுச்சி
🌼அங்கன்
🌼ரிஷ்டன்
🌼வேணன்
🌼துஷ்மந்தன் {துஷ்யந்தன்}
🌼ஸ்ரீன்ஜெயா
🌼ஜெயா
🌼பாங்கசூரி
🌼சுனிதா
🌼நிஷாதா
🌼பஹிநரா
🌼கரந்தாமன்
🌼பால்ஹிகன்
🌼சுத்யும்னன்
🌼பலம்வாய்ந்த மது
🌼ஐலன்
🌼பூமியின் பலம் பொருந்திய மன்னன் மருதன்; கபோடன்
🌼திரிநகன்
🌼சகாதேவன்
🌼அர்ஜுனன்
🌼வியுசவன்
🌼சஸ்வன்
🌼கிரிஷ்வன்
🌼மன்னன் சசவிந்து
🌼தசரதனின் மகன் ராமன்
🌼லக்ஷ்மணன்
🌼பிரதார்த்தனன்
🌼அலர்கன்
🌼காக்ஷசேனன்
🌼கயன்
🌼கௌரஸ்வன்
🌼ஜமதக்னியின் மகன் ராமன் {பரசுராமன்}
🌼நபாகன்
🌼சகரன்
🌼பூரிதியும்னா
🌼மஹஸ்வன்
🌼பிரதாஸ்வன்
🌼ஜனகன்
🌼மன்னன்
🌼வைன்யன்
🌼வரிசேனன்
🌼புருஜித்
🌼ஜனமேஜயன்
🌼பிரம்மதத்தன்
🌼திரிகார்த்தன்
🌼மன்னன் உபரிசரன்
🌼இந்திரத்யும்னன்
🌼பீமாஜனு
🌼கௌரபிரிஷ்டன்
🌼நளன்
🌼கயன்
🌼பத்மன்
🌼மச்சுகுந்தன்
🌼பூரிதியும்ன
🌼பிரசேனஜித்
🌼அரிஷ்டநேமி
🌼சுத்யும்னன்
🌼பிரிதுலௌஸ்வன்
🌼அஷ்டகன்   
மேலும்....

⚜️மத்ஸ்ய குலத்தின் நூறு மன்னர்களும்

⚜️விபன் குலத்தில் இருந்து நூறு மன்னர்களும்

⚜️ஹய குலத்தில் இருந்து நூறு மன்னர்களும்

⚜️திருதராஷ்டிரன் என்ற பெயர் கொண்ட நூறு மன்னர்களும்

⚜️ஜனமேஜயன் என்ற பெயர் கொண்ட எண்பது மன்னர்களும்

⚜️பிரம்மதத்தன் என்ற பெயர் கொண்ட நூறு மன்னர்களும்

⚜️ஐரி என்ற பெயர் கொண்ட நூறு மன்னர்களும்

⚜️பீஷ்மன் என்ற பெயர் கொண்ட இருநூறுக்கும் அதிகமானவர்களும்

⚜️பீமன் என்ற பெயர் கொண்ட நூற்றுக்கும் அதிகமானவர்களும்

⚜️நூற்றுக்கணக்கான பிரதி விந்தியர்களும்

⚜️நூற்றுக்கணக்கான நாகர்களும்

⚜️நூற்றுக் கணக்கான பலாசர்களும்

⚜️நூற்றுக்கணக்கான கசன் மற்றும் குசன்களும்

⚜️மன்னர்களுக்கு மன்னனான ஸ்தாணு

⚜️பாண்டவர்களின் தந்தை பாண்டு

🌼உசங்கவன்
🌼சதரதன்
🌼தேவராஜன்
🌼ஜெயத்ரதன்
🌼தனது அமைச்சர்களுடன் கூடிய புத்திசாலி அரசமுனி விருஷதர்வன்

⚜சசவிந்து என்ற பெயர்கொண்ட ஆயிரம் பிற மன்னர்களும்

⚜பல குதிரை வேள்விகளைச் செய்து பிராமணர்களுக்கு கொடைகளை அளித்தவர்களும்

⚜இறந்த பின்பு அங்கே வந்து
 யமனுக்காக அந்தச் சபா மண்டபத்தில் காத்திருப்பவர்கள்.

👑அகத்தியர்

👑மதங்கர்

👑கலா

👑மிரித்யு (மரணம்)

👑வேள்விகளை நடத்துபவர்கள்

👑சித்தர்கள்

👑யோகிகள்(அக்னிஸ்வத, பெனாப, உஷாம்ப, ஸ்வதவத், வேர்ஹிஷதா வகை சார்ந்த)

👑பித்ருக்கள் வடிவம் உள்ள மற்றவர்கள்

👑காலச்சக்கரம்

👑வேள்வி நெய்யைச் சுமப்பவன் அக்னி

👑மனிதப் பிறப்பில் பாவம் செய்தவர்கள்

👑குளிர்கால சங்கராந்தியில் {தக்ஷிணாயனம் = ஆடி மாதம் துவங்கி மார்கழி மாதம் வரையில்} இறந்தவர்கள்

👑ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை எண்ணுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள யமனின் அதிகாரிகள்

🌳சிங்சபம்
🌳பலாசம்
🌳கசம்
🌳குச மரங்களும் செடிகளும் உடலெடுத்து அங்கே வந்து நீதி தேவனான யமனுக்காக அவனது அந்தச் சபாமண்டபத்தில் காத்திருந்து வழிபட்டனர்.

🍁யமனின் சபையில் இவர்களையும் தவிர்த்து பலரும் இருந்தார்கள்.

🍁அந்த மகிழ்ச்சிகரமான சபா மண்டபம் அதன் யமனின் விருப்பப்படி எங்கும் நகரும் தன்மை கொண்டு அகன்று விரிந்து இருந்தது.

🍁அந்த மண்டபம்  விஸ்வகர்மனால் கட்டப்பட்டது. விஸ்வகர்மனின் ஒளியால் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அது தனது அழகுக்காகப் புகழப்படுகிறது.

🍁தீவிர நோன்பு நோற்று அற்புதமான உறுதிகள் ஏற்று உண்மை பேசி அமைதியாக தூய புனிதமான செயல்களைச் செய்யும் சந்நியாசிகள் கறைகள் அற்ற உடை உடுத்தி தன்னொளியில் பிரகாசித்து வளையங்களாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு தங்கம் பளபளக்கும் காது குண்டலங்களுடன் அந்த சபைக்கு வந்து போகிறார்கள்.

🍁சிறப்பு மிகுந்த கந்தர்வர்களும் அப்சரஸ்களும் ஆடிக்கொண்டு அந்த அறை முழுவதையும். தங்கள் சிரிப்புச் சத்தத்துடன் சேர்த்து தங்கள் கருவிகளாலும் குரலாலும் இசையால் நிறைக்கின்றனர்.

🍁அற்புதமான நறுமணமும் இனிமையான சத்தங்களும் தெய்வீக மலர்களால் ஆன மாலைகளும் அந்த மாளிகையை அருளப்பட்டதாக இருந்தது.

🍁நூறாயிரக்கணக்கான தெய்வீக அழகும்
🍁பெரும் ஞானமும் கொண்ட அறம் சார்ந்த மனிதர்கள்
🍁படைக்கப்பட்டவர்களின் தலைவனான அந்தச் சிறப்பு மிகுந்த யமனுக்காக அந்த சபா மண்டபத்தில் காத்திருந்து வழிபடுகின்றனர்.

No comments:

Post a Comment