Friday, 24 April 2020

திருமயேந்திரப்பள்ளி

*நோய் தீர்க்கும் சிவாலயங்கள் 1*

திருமயேந்திரப்பள்ளி திருத்தலம் பற்றி காண்போம்

அருள்மிகு வடிவாம்பிகை சமேத திருமேனியழகர் திருக்கோயில்

தற்போது மகேந்திரப்பள்ளி கோவிலடி பாளையம் என அழைக்கப்படுகிறது

சூரியனும் சந்திரனும் ஒன்றாக இறைவனை வழிபடும் அபூர்வக் காட்சி இங்கு மட்டுமே காண முடியும்

இந்திரன் தன் சாபம் தீர இந்திர தீர்த்தம் ஏற்படுத்தி சுவாமியை வணங்கிய தலம்

இந்த இந்திர தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கிட தீராத வியாதிகள் தீரும்

ஞான சம்பந்தரால் பாடல் பெற்ற வடகரைத் தலம்

இங்கு அபூர்வமாக இரண்டு தல விருட்சங்கள் உள்ளன கண்ட மரம் தாழை

விநாரி விருட்சி என்ற சக்தி மலராக அம்மன் இந்த தளத்தில் பூத்துக் குலுங்கிய ஏதாவது ஐதீகம்

அதற்கு ஆதாரமாக தக்ஷிணாமூர்த்தி தன்னுடைய ஒரு காதில் விநாரி விருட்சி சூடியுள்ளார்

சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் பிரவேசிக்கிறார் அவர் ஒவ்வொரு மாதமும் பிரவேசிக்கும் பொழுது இங்கு வந்து சுவாமியை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம்

இறுதியில் பங்குனி மாதத்தில் இங்க வந்து சுவாமிகளுடைய பாதத்தை சரண் அடைவதாக ஐதீகம்

ஒவ்வொரு மாதபிறப்பிலும்  இங்கு வந்து சுவாமியை வழிபட கீழ்க்கண்ட வியாதிகள் தீரும்

சித்திரை மாதம் தோல்வியாதி தீரும் உஷ்ணசம்பந்தமான நோய்கள் தீரும்

வைகாசி மாதம் பால் பெருகும் தானம் செய்யவேண்டும் என்ற எண்ணம் மலரும்

ஆனிமாதம் பேச்சாற்றல் பெருகும் திருட்டு பயம் விலகும்

ஆடி மாதம் உத்தம குழந்தை பாக்கியம் கிட்டும் மன அமைதி கிடைக்கும்

ஆவணி மாதம் சொத்து பிரச்சனை தீரும் வயிற்றுக்கோளாறு அகலும்

புரட்டாசி மாதம் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கும் அலர்ஜி சம்பந்தமான நோய்கள் தீரும்

ஐப்பசி மாதம் மாலைக்கண் வியாதி தீரும் அழகு அபிவிருத்தியாகும்

கார்த்திகை மாதம் பித்ருக்கள் சாபம் நீங்கும்

மார்கழி மாதம் தாம்பத்திய உறவு பிரச்சனை தீரும் மருத்துவர்களுக்கு கைராசி பெருகும்

தை மாதம் நீர் கண்டங்கள் விலகும் உள்ளுறுப்புகள் பலம் பெறும்

மாசி மாதம் சுவையற்ற வாழ்க்கை பெரும் இளைப்பு நோய் நீங்கும்

பங்குனி மாதம் உயர் கல்வியில் சிறந்து விளங்குவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும்

மேற்கண்ட மாதப் பிறப்பில் இங்கு வந்து இந்திர தீர்த்தத்தில் நீராடி சுவாமியும் அம்பாளும் மனதார வழிபட அனைத்தும் நன்மையாகவே நடக்கும்

சீர்காழியில் இருந்து ஆச்சாள்புரம் வழியாக இத்திருத்தலத்தை அடையலாம்

சிவாயநம
ராஜா @ஈஸ்வர்
தருமபுரி

No comments:

Post a Comment